Macro-கதைகள் சிலோன் to ஸ்ரீ லங்கா

சிலோன் to ஸ்ரீ லங்கா

2021 Sep 24

கடந்த ஒரு வாரமாக நான் இந்த ஏர்போர்ட்டில் தான் இருக்கிறேன். இங்கு தான் சாப்பிடுகிறேன், தூங்குகிறேன், நடை போடுகிறேன் மற்ற எல்லாம். என்னையும் என்னோடு அந்த விமானத்தில் வந்த மற்றவர்களையும் பார்க்கும் போதெல்லாம் ஏதோ வேற்றுகிரக வாசியை பார்ப்பதை போலவே பார்க்கிறார்கள்.

எங்களை என்று நான் சொல்வது மொத்தம் முப்பது பேரை. நாங்கள் கடத்தல் காரர்களோ அல்லது தீவிர வாதிகளோ இல்லை. இலங்கையில் இருந்து லண்டன் நோக்கி பயணப்பட்ட சாதாரண விமான பயணிகள். எங்கள் பயண பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புறப்பட்ட மூன்று மணி நேரத்தில் மீண்டும் இலங்கை விமான நிலையத்துக்கே திரும்பினோம்.

ஆனால் இந்த திருப்பம் பண்டாரநாயக்க விமான நிலையத்தையே பீதி அடைய வைத்துள்ளது. முழு உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதற்கு காரணம் நாங்கள் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன் மாநகரம் கிளம்பியது செப்டம்பர் 5, 1970.

கடந்த ஒரு வாரமாக நான் இந்த ஏர்போர்ட்டில் தான் இருக்கிறேன். இங்கு தான் சாப்பிடுகிறேன், தூங்குகிறேன், நடை போடுகிறேன் மற்ற எல்லாம். என்னையும் என்னோடு அந்த விமானத்தில் வந்த மற்றவர்களையும் பார்க்கும் போதெல்லாம் ஏதோ வேற்றுகிரக வாசியை பார்ப்பதை போலவே பார்க்கிறார்கள்.

ஐம்பத்தியொரு வருடங்கள் கழித்து வந்து இறங்கி இருக்கிறோம். என்னுடைய மனமே இதை இன்னும் ஏற்க மறுக்கிறது. பிறகு உங்களை மட்டும் நான் எப்படி நம்ப சொல்வது. அண்டத்தில் காணப்படுவதாக சொல்லப்படும் ஏதோ துளை தான் இதற்கு காரணமாம். ”வார்ம் ஹோல்” என்று சொல்கிறார்கள். பெரும்பாலும் அண்ட வெளியில் தோன்றும் அது மிக அரிதாக வானத்தில் தோன்றி இருக்கிறது. அப்போது பார்த்து அதில் சிக்கி கொண்டடிருக்கிறோம் .

இது விஞ்ஞானத்தின் வேலையா அல்லது ஏதும் துர் சக்தியின் வேலையா என்று தெரியவில்லை. அனால் நாங்கள் 1970ஐ சேர்ந்தவர்கள். அப்போது எனக்கு 18 வயது இப்போதும் அதே வயது தான். பார்க்க அப்படியே தான் இருக்கிறேன். அனால் என்னை தவிர அனைத்தும் மாறிவிட்டது.

நாங்கள் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த போது ஒரு இடத்தில் ஏதோ கடும் ஊதா நிறத்திலான ஒரு ஒளி எங்களை ஊடுருவி சென்றதை உணர்ந்தோம். ஒரு சில நொடிகள் தான் அதை பார்க்க கூடியதாக இருந்தது அனால் நிஜ வாழ்வில் 51 வருடங்கள் கடந்து விட்டன.

அந்த சில நிமிட பயணத்தை பற்றி கடந்த ஒரு வாரமாக எங்களை கேட்டு நச்சரித்து வருகிறார்கள். ஏதேதோ விஞ்ஞானிகள் ஏதேதோ பத்திரிக்கைகள் என கேள்வி கேட்டு துளைத்துவிட்டார்கள். எங்கள் ஒவ்வொருவரையும் ஏகப்பட்ட பரிசோதனைகளுக்கு உற்படுத்தினார்கள்.

இது ஒரு புறம் இருக்க எங்கள் உறவுகளை தேடும் பணியும் இன்னும் தொடர்கிறது. ஏன் என்றால் எழுபதுகளிலேயே நாங்கள் தொலைந்துவிட்டதாக அறிவிக்க பட்டுவிட்டது. நடு கடலில் விழுந்து மூழ்கி இருப்போம் என்று முடிவு கட்டிவிட்டார்களாம். யாரைக்கேட்டு செய்தார்களோ. அதனால் சரியான உறவுகளிடம் நாங்கள் ஒப்படைக்க படும் வரை இந்த விமானநிலையத்திலேயே எங்களுக்கு ஒரு இடம் கொடுத்துவிட்டார்கள்.

என்னால் இந்த காலமாற்றத்தை கூட ஏற்க முடியும் அனால் எம்.ஜி.ஆர் இறந்து விட்டார் என்பதை போலான செய்திகளை தான் தாங்கி கொள்ள முடியவில்லை.
அத்தோடு இந்த “ஸ்ரீ லங்கா” என்ற புதுப்பெயரும் பிடிக்கவில்லை. “சிலோன்”எவ்வளவோ மேல்.

என் குடும்பம் என்ன ஆனது என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. என் தாய் அறுபத்தி ஆறாம் ஆண்டு இறந்தார் . பிறகு சித்தி வந்தாள். அவளை நான் அடியோடு வெறுத்தேன். அவளை பார்க்கவே பிடிக்காது இருந்தேன். எனக்கு பெரிதாக அவள் ஏதும் தீங்கு செய்துவிடவில்லை, அனால் என்னை விட அவளுக்கு இரண்டு வயது தான் அதிகம். இந்த ஒரே காரணம் தான்.

சிலோனில் நிலைமை சரி இல்லை. யுத்தம் பெரிய நிலையை எட்டலாம் என்று என்னை என் தந்தை லண்டனில் பொருளியல் பட்டம் படிக்க அனுப்பினார். இப்போது நான் இங்கு நிற்கிறேன். எனக்கு பொருளியல் அறவே பிடிக்காது அத்தோடு வெளிநாட்டு பயணத்தையும் அடியோடு வெறுத்தேன். அப்பா என்னை அடித்து துவைத்து அனுப்பி வைத்தார். அனால் இப்போது இந்த அசம்பாவிதத்தால் நான் காப்பாற்ற பட்டதாகவே உணர்கிறேன். கொஞ்சம் நிம்மதியாக இருகிறது.

எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். என்னை எப்படியோ கண்டுபிடித்து விட்டான். நேற்று அவனோடு தொலைபேசியில் பேசினேன். நான் போக இருந்த லண்டனில் தான் இப்போது அவன் இருக்கிறான். இருவரும் ஏதேதோ பேசினோம் .
கடைசியாக அழைப்பை துண்டிக்கும் முன் அடுத்த மாதம் அவனுடைய 66வது வயது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடுகிறானாம் முடிந்தால் வந்துவிட்டு போக சொன்னான்.

நான் கூட பரவாயில்லை. விமானத்தில் எனக்கு பக்கத்து சீட்டு பாபு அண்ணா ரொம்ப பாவம். அவருடைய 2 வயது பெண் குழந்தைக்கு இப்போது அவரை விட வயது அதிகமாம்.இன்னும் 28 பேர் இருக்கிரார்கள். ஒவ்வருவர்க்கும் ஒவ்வொரு கதை.

நான் 51 வருடங்களை இழந்து விட்டேனா அல்லது கடந்து விட்டேனா என்று புரியவில்லை, எதுவாக இருந்தால் தான் என்ன எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்லவேண்டும் என்று நினைத்துகொண்டு விமானநிலையத்தில் எங்களுக்கு ஒதுக்கபட்ட இடத்தில் இருக்கும் ஒரு கதிரையில் அமர்ந்தேன்.

எனது தோல் பையிக்குள் கையை விட்டு துழாவினான், பயணத்தின் போது வாங்கி வைத்த மாரி பிஸ்கட் இருந்தது. எடுத்து திகதி பார்த்தேன் ” Best before 20 Dec 1980 ” என்று அச்சிடபட்டு இருந்தது. ருசி பார்த்தேன் கெடாமல் நன்றாக இருந்தது. ஆனால் வந்திறங்கியது செப்டம்பர் 20, 2021.

ஐம்பத்தியொரு வருடங்கள் கழித்து வந்து இறங்கி இருக்கிறோம். என்னுடைய மனமே இதை இன்னும் ஏற்க மறுக்கிறது. பிறகு உங்களை மட்டும் நான் எப்படி நம்ப சொல்வது. அண்டத்தில் காணப்படுவதாக சொல்லப்படும் ஏதோ துளை தான் இதற்கு காரணமாம். ”வார்ம் ஹோல்” என்று சொல்கிறார்கள். பெரும்பாலும் அண்ட வெளியில் தோன்றும் அது, மிக அரிதாக வானத்தில் தோன்றி இருக்கிறது. அப்போது பார்த்து அதில் சிக்கி கொண்டடிருக்கிறோம் .

இது விஞ்ஞானத்தின் வேலையா அல்லது ஏதும் துர் சக்தியின் வேலையா என்று தெரியவில்லை. ஆனால் நாங்கள் 1970ஐ சேர்ந்தவர்கள். அப்போது எனக்கு 18 வயது இப்போதும் அதே வயது தான். பார்க்க அப்படியே தான் இருக்கிறேன். ஆனால் என்னை தவிர அனைத்தும் மாறிவிட்டது.

நாங்கள் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த போது ஒரு இடத்தில் ஏதோ கடும் ஊதா நிறத்திலான ஒரு ஒளி எங்களை ஊடுருவி சென்றதை உணர்ந்தோம். ஒரு சில நொடிகள் தான் அதை பார்க்க கூடியதாக இருந்தது. ஆனால் நிஜ வாழ்வில் 51 வருடங்கள் கடந்து விட்டன.

அந்த சில நிமிட பயணத்தை பற்றி கடந்த ஒரு வாரமாக எங்களை கேட்டு நச்சரித்து வருகிறார்கள். ஏதேதோ விஞ்ஞானிகள், ஏதேதோ பத்திரிக்கைகள் என கேள்வி கேட்டு துளைத்துவிட்டார்கள். எங்கள் ஒவ்வொருவரையும் ஏகப்பட்ட பரிசோதனைகளுக்கு உற்படுத்தினார்கள்.

இது ஒரு புறம் இருக்க எங்கள் உறவுகளை தேடும் பணியும் இன்னும் தொடர்கிறது. ஏன் என்றால் எழுபதுகளிலேயே நாங்கள் தொலைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. நடு கடலில் விழுந்து மூழ்கி இருப்போம் என்று முடிவு கட்டிவிட்டார்களாம். யாரைக்கேட்டு செய்தார்களோ?. அதனால் சரியான உறவுகளிடம் நாங்கள் ஒப்படைக்கப்படும் வரை இந்த விமானநிலையத்திலேயே எங்களுக்கு ஒரு இடம் கொடுத்துவிட்டார்கள்.

என்னால் இந்த காலமாற்றத்தை கூட ஏற்க முடியும். ஆனால் எம்.ஜி.ஆர் இறந்து விட்டார் என்பதை போலான செய்திகளை தான் தாங்கி கொள்ள முடியவில்லை.
அத்தோடு இந்த “ஸ்ரீ லங்கா” என்ற புதுப்பெயரும் பிடிக்கவில்லை. “சிலோன்”எவ்வளவோ மேல்.

என் குடும்பம் என்ன ஆனது என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. என் தாய் அறுபத்தி ஆறாம் ஆண்டு இறந்தார் . பிறகு சித்தி வந்தாள். அவளை நான் அடியோடு வெறுத்தேன். அவளை பார்க்கவே பிடிக்காது இருந்தேன். எனக்கு பெரிதாக அவள் ஏதும் தீங்கு செய்துவிடவில்லை, ஆனால் என்னை விட அவளுக்கு இரண்டு வயது தான் அதிகம். இந்த ஒரே காரணம் தான்.

சிலோனில் நிலைமை சரி இல்லை. யுத்தம் பெரிய நிலையை எட்டலாம் என்று என்னை என் தந்தை லண்டனில் பொருளியல் பட்டம் படிக்க அனுப்பினார். இப்போது நான் இங்கு நிற்கிறேன். எனக்கு பொருளியல் அறவே பிடிக்காது அத்தோடு வெளிநாட்டு பயணத்தையும் அடியோடு வெறுத்தேன். அப்பா என்னை அடித்து துவைத்து அனுப்பி வைத்தார். அனால் இப்போது இந்த அசம்பாவிதத்தால் நான் காப்பாற்ற பட்டதாகவே உணர்கிறேன். கொஞ்சம் நிம்மதியாக இருகிறது.

எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். என்னை எப்படியோ கண்டுபிடித்து விட்டான். நேற்று அவனோடு தொலைபேசியில் பேசினேன். நான் போக இருந்த லண்டனில் தான் இப்போது அவன் இருக்கிறான். இருவரும் ஏதேதோ பேசினோம் .
கடைசியாக அழைப்பை துண்டிக்கும் முன் அடுத்த மாதம் அவனுடைய 66வது வயது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடுகிறானாம். முடிந்தால் வந்துவிட்டு போக சொன்னான்.

நான் கூட பரவாயில்லை. விமானத்தில் எனக்கு பக்கத்து சீட்டு பாபு அண்ணா ரொம்ப பாவம். அவருடைய 2 வயது பெண் குழந்தைக்கு இப்போது அவரை விட வயது அதிகமாம். இன்னும் 28 பேர் இருக்கிரார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை.

நான் 51 வருடங்களை இழந்து விட்டேனா அல்லது கடந்து விட்டேனா என்று புரியவில்லை, எதுவாக இருந்தால் தான் என்ன எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்லவேண்டும் என்று நினைத்துகொண்டு விமானநிலையத்தில் எங்களுக்கு ஒதுக்கபட்ட இடத்தில் இருக்கும் ஒரு கதிரையில் அமர்ந்தேன்.

எனது தோல் பையிக்குள் கையை விட்டு துழாவினான், பயணத்தின் போது வாங்கி வைத்த மாரி பிஸ்கட் இருந்தது. எடுத்து திகதி பார்த்தேன் ” Best before 20 Dec 1980 ” என்று அச்சிடபட்டு இருந்தது. ருசி பார்த்தேன். கெடாமல் நன்றாக இருந்தது.

 

எழுத்து – மஹின் சுப்பிரமணியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php