நாடி Review Dexter | Universal Boy Friend | Short Film

Dexter | Universal Boy Friend | Short Film

2021 Nov 10

ஒரு இளம் ஆணும் பெண்ணும் முதன் முறையாக ஒரு உணவகத்தில் சந்தித்துக் கொள்கின்றனர்.  அந்த இளைஞன் அந்த பெண்ணுக்கு ஒரு வருடகாலமாகப் பரிசுப்பொருட்களை அனுப்பி அவளை வியப்பில் ஆழ்த்தி வந்திருக்கிறான்.  ஒரு வழியாக இன்று தான் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்கின்றனர்.

அந்த பெண்ணுக்கு அவனைப் பற்றி எதுவும் தெரியாது இருக்க அந்த இளைஞன் அவனைப் பற்றி சொல்லும் விஷயத்தை கேட்டு அந்த பெண் அதிர்ச்சிக்குள்ளாகிறாள். அவன்  யார்? எங்கிருந்து வந்தவன்? அவள் அந்த பெண்ணிடம் என்ன சொன்னான்? அந்த பெண் அவனை ஏற்றுக்கொண்டாளா இல்லையா ? என்பது தான் மீதிக் கதை.

கதையின் பலமாக திரைக்கதையில் கையாளப்பட்டுள்ள திகில் காட்சிகளை சொல்லலாம்.  ஒரு பக்கம் காதலர்களின் சந்திப்பு  காட்டப்பட்டுக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் காட்டப்படும் அந்த வேற்றுகிரக வாசியின் காட்சிகள் எல்லாம் ஒரு வித திகில் உணர்வை ஏற்படுத்துகின்றன. அவன் யார்? என்ன நடக்கிறது என்ற கேள்வி படத்தின் இறுதி வரை பார்வையாளர்களிடம் இருந்துக் கொண்டே இருக்கிறது. குறைவான வசனங்களுடன் இரவு ஒளியில் அந்த காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டு உள்ளது பாராட்டத்தக்கது.

இது வித்தியசாமான முயற்சி என்ற போதும் கதையில் கூடுதல் தெளிவும், அழுத்தமும் இருந்திருந்தால் இன்னும் சுவாரஷ்யமாக இருந்திருக்கும்.   அத்தோடு கதையை சொல்ல இன்னும் குறைவான நேரத்தை எடுத்துக்கொண்டிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என தொழிநுட்பத்திலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. படத்தின் டப்பிங் மேலும் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.

தனது அடுத்த குறும்படத்தை மேலும் திறப்பாக செய்ய இயக்குனர் இலங்கோ பிரகலாதன் மற்றும் அவரது குழுவிற்கு வாழ்த்துக்கள்.

 

நாடி Verdict – 55/100

Video Link – https://youtu.be/DM44FW9CKJM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php