நாடி Review “விட்னஸ்” திரைப்படம் பற்றி ஓர் பார்வை!

“விட்னஸ்” திரைப்படம் பற்றி ஓர் பார்வை!

2023 Apr 5

மலக்குழி  மரணங்கள் என்னும் சமகால அநீதிக்கு எதிரான குரலே  இயக்குநர்   தீபக் அவர்களது ‘விட்னஸ்’ திரைப்படம். “Sony Liv OTT “ தளத்தில் வெளியாகி  பலரது  கவனத்தினை   ஈர்த்த, நம் மனசாட்சியை   உலுக்கக்கூடிய  சமூகம் சார்ந்த ஓர்  நல்ல திரைப்படம்.Witness, On SonyLIV, Is A Compelling Social Drama Powered By Great  Storytelling

 மலக்குழியில் இறங்க நிர்பந்திக்கப்பட்டு உயிரிழந்த தன் மகனின் மரணத்திற்கு நியாயம் கேட்க அதிகாரத்தை எதிர்க்கும் தாயின் போராட்டம்தான் கதையின் கரு.

மனித கழிவுகளை மனிதனே அள்ளும் சாதியக்கொடுமை இந்தியாவில் காலம் காலமாக தொடர்ந்து வரும் ஓன்று. இந்த நவீன காலத்திலும் பல்வேறு தூமைப்பணியாளர்கள்  பாதுகாப்பில்லாத காரணத்தினாலும், விஷவாயு தாக்குதலினாலும் தொடர் இறப்புகளை சந்தித்தே வருகின்றனர். உயிருக்கு  பாதுக்கப்பில்லாத இந்த வேலையில் கூட  மிகவும் சொற்பமான  சம்பளமே அவர்களுக்கு  வழங்கப்படுகிறது. இதுபோன்ற சமூக அவலங்களை பற்றி கூறும் சில படங்கள் சமகாலங்களில் வெளிவருவதென்பது மிகவும் ஆரோக்கியமான ஓன்று.

கதையின் பிரகாரம்,  

கணவனை இழந்த தூய்மைப் பணியாளரான இந்திராணி (நடிகை ரோஹினி)தனது மகன் பார்த்திபனுடன் வாழ்ந்து வருகிறார். தன்னைப்போல தன் சாதியில் உள்ள மற்றையவர்களைப்போல தன் மகனும் ஒரு தூய்மைப்பணியாளனாக  வந்துவிடக்கூடாது என்பதில்  உறுதியாக   இருக்கும் இந்திராணி தன் மகனை பொத்திப்பொத்தி வளர்க்கிறார் .தன் மகனை  நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று கனவு காண்கிறார். Witness Movie Review: A highly impactful, multi-layered social commentary-  Cinema express

இந்த உலகமே தனக்கு தன் மகன் மட்டும்தான்  என்று தனது முழு வாழ்கையினையும் மகனுக்காகவே அர்ப்பணித்து வாழும் ஓர் தாய் அவள். ஒருநாள் இந்திராணி இல்லாத  சமயத்தில் அவரது மகன் பார்த்திபன் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சாக்கடையை  சுத்தம் செய்ய  கட்டாயப்படுத்தப்பட்டு மலக்குழியில் இறக்கி விடப்படவே  விஷ வாயு தாக்கத்தினால்  இறந்து விடுகிறார். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் தமது   பண பலத்தினால், காவல்துறையினரை தமக்கு சாதகமாக்கிக்கொள்ளவே  பார்த்திபனை குடிகாரனாக சித்தரித்து வழக்கை தவறாக  திசைதிருப்ப முயல்கின்றனர் காவல்துறையினர்.Watch Full Movie Online in HD on Sony LIV

பார்த்திபன் இறந்துபோனது  தெரிய வர, உடைந்து போகிறார் இந்திராணி. இதற்கு காரணமானவர்களை தண்டிக்க சட்டத்தின்   துணை கொண்டு அதிகாரத்தை எதிர்க்கத் துணியும் அவரது போராட்டம் இறுதியில் வென்றதா? இல்லையா? என்பதே கதை. உயர் அதிகாரிகளின் அழுத்தங்கள் எப்படி இருக்கின்றன, அதை எதிர்த்தால் என்ன மாதிரியான பிரச்னைகளை தொழிலாளர்கள் சந்திக்க நேரிடும் என்பதெல்லாம் காட்சிகளினூடே சொல்லியிருக்கும் விதம் நயக்கத்தக்கது. மலக்குழி மரணங்கள், அதன் மீதான அதிகார வர்க்கத்தின் அலட்சியப்போக்கு, அதற்கு காரணமான  சாதிய வேர், சுவாரஸ்யமான நீதிமன்ற உரையாடல்கள், எதிர்பாராத க்ளைமாக்ஸ் என அழுத்தமான திரைக்கதையால்  அதிகார வர்க்கத்திற்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது ‘விட்னஸ்” திரைப்படம். Witness Movie (2022) | Release Date, Review, Cast, Trailer, Watch Online at  SonyLIV - Gadgets 360

ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை பிறகு வேகம் எடுக்கிறது. ஒரு சமூக அவலத்தை வணிகத்தனம் இல்லாமல் அழுத்தமான கதை, கதாபாத்திரங்களோடு மனதை தொடும்படி கொடுத்திருக்கும் விட்னஸ் குழுவினர்கள் பாராட்டுக்களுக்குறியவர்கள்  .  அசுரன், ஜெய் பீம், போன்ற படங்களின் வரிசையில் இந்த திரைப்படம் நமக்கு ஒரு படிப்பினை கற்றுக்கொடுக்கும் என்ற கருத்திற்கு யாருக்கும் மாற்று சிந்தனை இருக்கப்போவதில்லை.Witness (2022) Movie: Cast | Trailer | OTT | Release Date | Songs - News  Bugz

 

-ப்ரியா ராமநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php