‘Degree’ – Nadi Review

2022 Dec 19

2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி Hi Tamilஇனால் தயாரிக்கப்பட்டு அதன் youtube தளத்தில் வெளியான குறும்படம் தான் ‘Degree’. குறும்படம் ‘Degree’, Jana இயக்கத்தில் Piratheepan மற்றும் Vimal ஆகியோரால் காட்சிகளாக்கப்பட்டு Jana, Mowlee Ehamparanathan, Gobi, Sharmilan மற்றும் Shayanthan ஆகியோரின் நடிப்பினால் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான எடிட்டிங் வேலைகள் Anujan King மற்றும் Jathu Fxஇனால் மேற்க் கொள்ளப்பட்டுள்ளன.

இன்றைய சமூகத்தில் இளந்தலைமுறையினர் எதிர்க்கொள்கின்ற பெரும் சிக்கலுக்குரிய பிரச்சனை ஒன்றை இந்த குறும்படம் வெறும் 5நிமிடம் 45செக்கன்களில் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. இதை விட வேறு எந்த குறும்படத்தினாலும் Degree உடன் இளைஞர்கள் படும் அவலத்தை இவ்வளவு தெளிவாக கூற முடியாது. ஆரம்பத்தில் இரு நண்பர்கள் சந்தித்து கொள்ளும் காட்சியோடு ஆரம்பமாகும் இந்த குறும்படம் அவர்கள் application form சமர்ப்பிக்க போவதோடு நகர்கிறது. application நிரப்புவதற்க்கு பேனா இல்லாமல் பின் ஒரு வழிப்போக்கரிடம் சென்று பேனா கேட்பதில் வளர்கிறது கதையின் களம். அதன் பின் தோன்றி மறையும் ஒவ்வொரு காட்சிகளும் ‘Degree’ என்ற படத்தின் தலைப்புக்கு மிக பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இறுதியில் அந்த வழிப்போக்கன் யார் என்ற கேள்விக்கான விடையோடு குறும்படம் முடிகிறது.

இக் குறும்படத்தில் இசை,காட்சிகள் மற்றும் நடிப்பு என அனைத்தும் முழுமையான உணர்வினை அளித்திருந்த போதும், சிறு சிறு திருத்தங்களுக்கு உட்படுத்த வேண்டிய பகுதிகளும் உண்டு. கதாநாயகன் Degree முடித்து interview அட்டென்ட் செய்யும் போது, அங்கு உள்ள அதிகாரி “என் கம்பெனில வேலை செய்ற கடைசி அடிமட்ட ஆள் வரைக்கும் குறைஞ்சது ரெண்டு degreeஆவது வச்சு இருக்கோனும்! எதாச்சும் கம்பெனில வேல செஞ்ச experience இருக்கா?” என கேட்பார். இதைக் கேட்டவுடன் என் மனதில் “ஏய் எப்புட்றா!” என்ற இன்ஸ்டாகிராமில் வைரல் ஆன பையனின் dialogue தான் ஞாபகம் வருகிறது. எதார்த்தத்தை படமாக்க முடிவு செய்து விட்டு வசனத்தில் எதார்த்தத்தை வெளிக்காட்ட தவறிவிட்டனர். இரண்டு degree அதுவும் ஆரம்ப position க்கு, இரண்டு degreeயோடு experience உம் இருக்க வேண்டுமாம் ஒரு degree முடிக்கவே அவனவன் முடியாமல் இருக்கும் நிலையில், அந்த dialogue எனக்கு லாஜிக் இல்லாத ஒன்றாகவே தோன்றியது.

அடுத்து interviewக்காக போன இடங்களில் எல்லாம் file தூக்கி வீசப்படும் காட்சியும் லாஜிக் இல்லாததாகவே தோன்றியது. எந்த interviewயிலும் அவ்வாறு நடப்பது மிக அரிது. assignments submissionஇனின் போது papers வீசப்பட்டு அவற்றை எடுத்து வந்த mindsetஇல் இந்த காட்சியை எழுதி இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. அதற்கு பதிலாக காதநாயகன் தனது fileஐ தூக்கி எரிந்து கவலை கொள்வது போல் காட்சியினை அமைத்திருக்கலாம்.

எது எவ்வாறாக இருப்பினும் சமூக பிரச்சனையை இவ்வளவு எளிதாக தெளிவாக சொன்ன ‘Degree’ குறும்படம் என் மனதை வென்ற குறும்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. நீங்களும் ‘Degree’ குறும்படம் பற்றிய உங்களது கருத்துக்களை எங்களுடன் கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php