நாடி Review Bar Ceylon Nadi Review!

Bar Ceylon Nadi Review!

2022 Dec 23

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் திகதி ARC Mobiles தாயாரிப்பில் ARC Mobile Production youtube தளத்தில் வெளியான பாடல் தான் ‘BAR CEYLON ’. இந்தப் பாடல், Kings Rajan இனால் இசையமைக்கப்பட்டு Nikson இனால் பாடப்பட்டுள்ளது. இதற்க்கான வரிகள் Latheep Balasubramaniam இனால் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான காட்சிகள் Kathir இன் DIRECTION இனால் படமாக்கி நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் Kugan, Christina, Nila, Robert மற்றும் Aathi ஆகியோரின் கச்சிதமான நடிப்பினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

“ஆஹ் மச்சான் நான் பாரிஸ்ல இருந்து லத்தீப் கதைக்கிறேன். என்னெண்டு சொன்னா குகனுக்கும் நிலாக்கும் LOVE BREAKUP ஆகிட்டுடா. ஆள் சரியான UPSET. நான் அங்க அனுப்பி வைக்கிறேன் ஆள. நீங்க அவனை கொஞ்சம் OKAY ஆக்கி அனுப்புங்கோ.” என்ற LOVE BREAKUPக்காக சிலோனுக்கு குடிக்க வரும் பொருத்தமில்லாத ஒரு LOGIC உடன் ஆரம்பமாகிறது. இந்த dialogueஐ கேட்டவுடன் “பாரிஸ்ல குடிக்க இடம் இல்லையா என்ன?” என்ற கேள்வியே என் புத்திக்குள் உடன் தோன்றி மறைந்தது. அதன் பின் தொடரும் துள்ளல் இசையுடன் “யாரடி புள்ள நீ! கூறடி புள்ள நீ!” என்ற வரிகளுடன் பாடல் தொடர்கிறது. இந்த பாடலின் இசை மற்றும் வரிகள் ஆகியவற்றின் அமைப்பானது, இதனை கானா பாணியில் உருவாக்குவதற்க்காக குழுவினர் முயற்ச்சித்து உள்ளார்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறது இருப்பினும் அது சரியாக அமையவில்லையோ என்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம்.

எனக்கு இதன் இசையும் வரிகளும் அவ்வளவு திருப்தியளிக்கவில்லை ஆனால் பாடலில் உருவாக்கப்பட்டிருந்த காட்சியில் CHOREOGRAPHY சற்று திருப்தியளிக்க கூடியதாக இருந்தது. அந்த இசைக்கு ஏற்றவாறே நடன அசைவுகள் உருவாக்கப்பட்டிருந்தது. நடன கலைஞர்களும் தமது பங்கினை சிறப்பாக வழங்கியிருந்தனர். மீள் உருவாக்கப்பட்ட LOVE காட்சிகளின் BACKGROUND இன்னும் அழகாக EDIT செய்யப்பட்டிருக்கலாம் அல்லது இங்கே உள்ள வேறேதும் வெளிநாடு தன்மையில் இருக்க கூடிய இடங்களில் படம்பிடித்து இருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அந்த காட்சிகள் இன்னும் அழகானதாக இருந்திருக்கும்.

ஆங்காங்கே குறைகள் இருந்தாலும் இந்த பாடலுக்காக கலைஞர்கள் ஒவ்வொருவரும் எத்தனையோ இடர்களுக்கும் தடைகளுக்கும் மத்தியில் தமது பங்கினை அளித்துள்ளமை பாராட்டதக்கது. ‘BAR CEYLON’ பாடல் பற்றிய உங்களுடைய கருத்துகளை எங்களுடன் கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php