நாடி Review “Luv” நாடி Review

“Luv” நாடி Review

2023 Jan 2

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி, கிறிஸ்துமஸ் தினத்தன்று Damith Mendisஇன் இயக்கத்தில் Purnika Perera, Tharinda Dassanayake, Vaseegaran Visvanathan, Sasanka Thalagala, Tiyoshi Dematagoda, Chathurya Francisco மற்றும் Ryan De Silva ஆகியோரின் பங்களிப்பினால் உருவாக்கப்பட்டு Gasma YouTube தளத்தில் வெளியிடப்பட்ட Animated short film தான் ‘LUV’. நான்கு நிமிடங்கள் நாற்பத்தேழு செக்கன்கள் நீளமுடைய இந்த குறுந் திரைப்படம், குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் கிறிஸ்துமஸ் தினத்தில் குடும்பம் இன்றி தவிக்கும் சின்னஞ் சிறார்களின் மனநிலை பற்றி அழகாக படம்பிடித்து காட்டுகிறது.

இந்த Animated short filmஇல் உருவாக்கப்பட்டுள்ள காட்சிகள் ஒவ்வொன்றுமே குறிப்பாக சுவரில் கிறுக்கப்பட்டுள்ள ஓவியம் முதல் நிழல் வரை மிகவும் அழகாக, நுண்ணிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வருகின்ற கதாபாத்திரத்தின் ஒவ்வொரு உணர்வுகளும் மிகவும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இக் குறுந்திரைப்படத்தில் ஒலிக்கின்ற பின்னணி இசை காட்சிகளுக்கு பொருத்தமானவாறு அமைக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு பாராட்டுதலுக்குரிய விடயமாகும்.

மழலைகளுக்கும் அவர்களது பொம்மைகளுக்கும் இடையிலான ஆழமான உறவினை வெளிப்படுத்துவதனூடாக ‘LUV’ என்ற தலைப்புக்கும் கதைக்கும் இடையிலான பொருத்தம் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த கதைக்கும் கிறிஸ்துமஸுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. கிறிஸ்துமஸ் காலத்தில் இவ்வாறு ஆதரவற்ற சிறார்களுக்கு நம்மால் முடிந்த அல்லது நாம் பயன்படுத்தி நல்ல நிலையில் இருக்க கூடிய பொம்மைகளை பரிசளிப்பதால், அவர்கள் பெறுகின்ற சந்தோஷம் விலைமதிப்பில்லாதது என்பதை எமக்கு எடுத்துரைக்கிறது. இறுதியில் காட்டப்படுகின்ற இச் சிறார்களின் உணர்வுகளை படமாக்குவதோடு நின்று விடாது, அவர்களுக்கு களத்தில் இறங்கி உறவாக மாறிய ‘மனுஷத் தெரண’ இன் செயல் பாராட்டுதலுக்குரியது. நாமும் பரிதாப உணர்வினை வெளிப்படுத்துவதோடு நின்று விடாது ‘மனுஷத் தெரண’ உடன் இணைந்து அவர்களுக்கு உறவுகளாகுவோம்.

நாடி Verdict – 98/100

Video Link – https://youtu.be/gUGcTvJNB0c

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php