Uncategorized ‘தொலையுறே நானே’ பாடல் காணொளியின் – Nadi Review

‘தொலையுறே நானே’ பாடல் காணொளியின் – Nadi Review

2023 Mar 3

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி 11A TALES Production, Dhwaja stambha productions மற்றும் Mhokshas films தாயாரிப்பில் Julius Gnanagar youtube தளத்தில் வெளியான பாடல் தான் ‘தொலையுறே நானே’. இந்தப் பாடல், Lucian Julius இனால் இசையமைக்கப்பட்டு Lucian Julius மற்றும் Ramya Thayaparan இனால் பாடப்பட்டுள்ளது. இதற்க்கான வரிகள் Lucian Julius இனால் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான காட்சிகள் Chris Leuman இன் DIRECTION இனால் படமாக்கப்பட்டு, Vidursha Vaishali இன் கச்சிதமான நடிப்பினால் நிறைவு செய்யப்பட்டுள்ளது.May be an image of 1 person, beard and text

இப்பாடலுக்கான காணொளியானது ஒரு பாடகன் கிட்டாருடன் நிற்கும் பின் புற shot உடன் ஆரம்பமாகிறது. அதன் பின் “வெள்ளை பூவே என்னை தாக்கினாய் மெல்ல..” என்ற வரிகளுடன் பாடல் மலர்கிறது. பாடலின் காணொளி முழுவதும் காதலர்கள் தனித் தனியாகவும் ஒன்றாகவும் என இரு நிலைகளும் கலந்த காட்சிகளோடு முழுமைப்ப்படுத்தப்பட்டுள்ளது. பாடல் வரிகளை விட அதற்காக உருவாக்கப்பட்ட இசை அதிகம் ரசிக்கும்படியாக இருந்தது. பாடல் ஆரம்பமானதும் முடிந்ததும் தெரியாத அளவுக்கு ஏதோ youtube ad வந்து சென்றது போல் தோன்றியது காரணம் பாடலில் காட்டப்பட்டிருந்த காட்சிகள்.

நடந்து செல்வதிலும் அமர்ந்திருந்து கை காட்டி கதைப்பதிலும், பரிசு அளிப்பதிலும் மற்றும் தனித் தனியே நிற்பதிலும் என காணொளி சட்டென முடிந்து விட்டது. எப்படி சேர்ந்தார்கள், எங்கு காதல் மலர்ந்தது, எப்படி முறிந்தது, இறுதியில் என்ன தான் முடிவு என எந்த கேள்விக்கும் பதில்லில்லாமல் போனமையால், இக் காணொளி உணர்வுகளை சிறிதும் தொடவில்லை. காணொளியின்றி பாடலை மட்டும் கேட்ட போது கூட மனம் சற்று இசைக்குள் சென்று வந்தமையை உணர முடிந்தது.

பாடலின் இசையில் குறை காணும்படியாக ஏதும் தோன்றவில்லை ஆனால் பாடலின் வரிகளை இன்னும் சற்று அழகான வார்த்தைகளை கோர்த்து எழுதியிருக்கலாம். பாடலுக்கான காணொளியில் ஒரு story line உருவாக்கியிருந்தால், பார்வையாளர்களுக்கு பாடலின் உணர்வுகளை எளிதாக கொண்டு சேர்த்திருக்க முடியும் என்பது என் கருத்து. கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் நடிப்பிலும் இன்னும் சற்று அதிகமான effort இருந்திருக்கலாம். எது எவ்வாறிருப்பினும் இப்பாடலை படைத்து வெளியிட கலைஞர்கள் செய்த முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும்.லூசியன் ஜூலியஸின் UNTOLD SCAR 'தொலையுறே நானே' பாடல்

“தொலையுறே நானே…”என்ற காதல் பிரிவின் வலி கூற உருவாக்கப்பட்ட  இப்பாடலின் “எந்தன் கண் முன் உதிரும் பூவாய் மாறி,
இதயத்துள் முள் சூடினாய்!” என்ற வரிகள் என் மனதில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டன. இப்பாடலில் உங்கள் மனம் கவர்ந்த வரிகளை எங்களுடன் கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Rating- 7.5/10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php