நாடி Review தொடு வானம் பாடல் காணொளி – Nadi Review

தொடு வானம் பாடல் காணொளி – Nadi Review

2023 Mar 13

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி Healthier Society (ஆரோக்கியமான சமுதாயம்) தாயாரிப்பில் T.Thuvarakan youtube தளத்தில் வெளியான பாடல் தான் ‘தொடு வானம்’. இந்தப் பாடல், T.Thuvarakan இனால் இசையமைக்கப்பட்டு Afra Lateeif, Sivathasan Sineka மற்றும் Joseph Benadict Anthony Jerisonஇனால் பாடப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான Mixing மற்றும் Mastering ஆனது Dilan Perera (Next Generation Music Studio) அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதற்க்கான வரிகள் Sunthararajan Dinusha Gayathri இனால் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான Cinematography மற்றும் Editing Luxman Kabilesh (Cinevilla photography) அவர்களால் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இப் பாடலின் காணொளியானது,
“அப்பாவி மக்களின் அறியாமையை பயன்படுத்தி,
அநியாயங்களும், அழுக்குகளோடும் ஆக்கிரமித்து
ஆட்டிப்படைக்கும் தீய சமுதாயத்தை தீயிலிட்டு எரித்து,
ஆரோக்கியமான சமுதாயம் ஆணிவேராய் நிலைத்திட
அணிதிரண்டு ஆர்பரிப்போம்”

என்ற புரட்சி சிந்தனைமிக்க கவிவரிகளோடு ஆரம்பமாகிறது.

இக்கவிவரிகளை தொடர்ந்து இசை எழ “பொருளால் நிறைந்த பூமி தன்னை, பொத்த காடாக மாற்றுகிறார்!” என பாடலின் வரிகள் பிறக்கிறது. இப் பாடலின் இசையும் வரிகளும் ஆரம்பத்தில் சற்று பிண்ணிப்பிணையாதிருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தினாலும் நொடிகள் மெல்ல நகர நகர இசையும் வரிகளும் பிரிக்க முடியாதபடி பிண்ணிப்பிணைந்து கொண்டதை உணர முடிகிறது. பாடல்களுக்கு அழியா புகழும் அசைக்க முடியா கனமும் தருவது அதில் கலந்திருக்கும் உணர்வுகளின் மெய் தன்மை தான். இப்பாடலை பாடியவர்கள் இப்பாடலின் வரிகளோடு வாழ்ந்து விட்டார்கள் என்று கூறுமளவிற்கு உணர்வுபூர்வமான ஒரு படைப்பாக இப்பாடல் மாறி நிற்கிறது.

பாடலுக்கான காணொளி மிகவும் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ள விதமானது கண்களை விட செவிகள் பாடலில் அதிக ஈடுபாட்டினை கொண்டிருக்க அடித்தளமாக அமைகிறது. கடற்கரையில் எடுக்கப்பட்டிருந்த சில காட்சிகள் பாடலின் வரிகளின் வலி மற்றும் கொந்தளிப்புக்கு, ஓயாது கரை மோதி கடல் சென்று மீண்டும் கரை மோதும் அலைகளை எடுத்துக்காட்டாக காண்பிப்பது போன்ற விம்பத்தை ஏற்படுத்துகிறது.

எத்தனை தடைகள் நேர்ந்தாலும் தம் படைப்புகள் மூலமாக பல மனங்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் ஊட்டும் உணர்வுபூர்வமான படைப்புகளில் ஒன்றாக இப்பாடலும் இடம்பிடித்துள்ளது என்றால் மிகையாகாது. தற்போது சோர்ந்து இருக்கும் உள்ளங்களை எழுப்பி கரம் கொடுத்து அழைத்து செல்வது போன்ற கருப்பொருளோடு பாடப்பட்டுள்ள இப்பாடலில் “நண்பா நீ விழித்திடு! நம் இருளை அழித்திடு! தொடுவானம் உனக்கடா…! தோல்விகள் எதற்கடா…?” என்ற வரிகள் என் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டன. இப்பாடலில் உங்கள் மனதை கவர்ந்த வரிகளை எங்களோடு கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Rating 7/10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php