கவிதைகள் கடைசிச் சீம்பாற் துளிகள்!

கடைசிச் சீம்பாற் துளிகள்!

2023 Mar 29

கடைசிச் சீம்பாற் துளிகள்!

மாசக் கடசி

மஞ்சக்கவுறடவு

சோறு பொங்க என்ன செய்ய 

 

புருசேந்திங்க ஏத விக்க

கடன் வாங்கி ஒலவைக்க

கடந்தார யாருயில்ல

ஊருக்குள்ள நம்மலாட்டம்

 

கடங்காரன் யாருமில்ல

சீனி வள்ளி சுட்டுருக்கு

தொட்டுக்கத் தொவயருக்கு

விருந்தா நெனச்சுக்கப்பு

இப்பதிக்கு கடிச்சுக்கப்பு

கொள்ளையில கொடி விட்டு

கோணலா வளஞ்சோடி

கொத்தாப் பூப் பூத்து

வெளஞ்ச கெழங்குப்பு

வெந்து கொழஞ்சக் கெழங்குப்பு

வெரசா மெல்லு

தண்ணி குடி

கோழி கறியிண்ணு

கருத்தாக கடி

பத்தோ பதனஞ்சோ

இன்னும் கொஞ்ச நேரம்…

ஒங்கொப்பன் வருவான்

 

தள்ளாடி வருவான்

கள்ளாடி புத்திக் கெட்டு

தள்ளாடி வருவான்

செனமாடா வந்திடிப்பான்

மானங்கெட்டு சண்டழுப்பான்

ஈரங்கெட்டு என்னடிப்பான்

சோறுலன்னு ரெம்படிப்பான்

ஆத்தா என்ன யெண்ணி

கோவங் கொதிச்சாலும்

வீராப்பு கொள்ளாத

வேட்டித் தூக்கி நிக்காத…….

                                                                                      தொடரும்!

– ஹஜன் அன்புநாதன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php