2023 Mar 16
தேவை முடிந்த இலைகளைஉதிர்த்து
இயற்கையை புதுமைசெய்யும் காடு
தவசிகள் தவநிலமாய்
அமைதியால் அமைந்த காட்டில்
அமைதி கெடுக்க கூவும் குயில்
ரீங்காரமிட்டு வலவும் வண்டினம்
புகைத்தல் புற்றுநோய்க்காரணி
கத்திசொல்லந்த கானக விருட்சமிடை
பனி கசிகிறது பர்வத அந்தரத்தில்
ஏனிந்த போராட்டம்?
சூரியக்கீற்றுகள் தரைத்தொட!
பாதி இருள் பாதி பகல்
வருடமுழுவதும் அடவி ஆட்சி
காடாழ்பவன் கடவுளோ?
கடவுள் கவிஞனோ?
தட்டான் தாவி திரிகிறது
பச்சோந்தி நிறங்கள் தொலைக்கிறது
மரம்விட்டு மரம்தாவ தவளை
இலைகள் சேர்த்த தண்ணீர் கவிழ்கிறது
தண்ணீரோடு மனமும்!
சருகுகள் தரைக்கூட்டும்
மலைக்குருவி பீலிக்கூடை
கிளை வடிந்து
குட்டை சொட்டும் நீர் சொட்டு
மீண்டுமோர் அமைதிக்கேடு
குளிர்மை
தேக சுத்திகரிப்பு
மரம்விடும் மூச்சு
பாவம் கழுவும் மாருதம்!
தேட தேட புதையல்கள்
கவிதைகளின் பிறப்பிடங்கள்
நான் என்னை நீங்கினேன்
மழைச்சோலைத் தூங்கினே
-அஜன் அன்புநாதன்