2023 Mar 14
அடை மொழியே
தங்க ரதமே
ரத சில்லே
சில்லின் வளைவே
வளைவின் வடிவே
வடிவான மலரே
மலர் தேனே
தேனின் இனிப்பே
இனிக்கும் குரலே
குரல் எனும் இசையே
இசையின் இலக்கணமே
இலக்கண வழுவே
வழுக்கும் இடையே
இடை இளைத்தவளே
இளைய கண்ணே
கண்ணே கனிதிரட்டே
கனிவிளையும் கொடியே
கொடி கழுத்தே
கழுத்தோரக் கூந்தலே
கூந்தலின் பால் இச்சையே
இச்சையின் உச்சமேஉல்லாச ஊர்வலமே
ஊர் மெச்சும் உதடே
உதட்டின் கீழ் மச்சமே
உருகுதடி உள்ளம்
மனதோரம் வெள்ளம்
புத்தி கிரக்கமடி
முத்தம் வேண்டுமடி
சித்தம் கரையுமுன்னே
முத்திரை முன்னூறு தா!
முன்னூறு தாண்டுமெனில்
மூச்செடுக்க நொடி மூன்று தா!
-அஜன் அன்புநாதன்