2023 Apr 1
சகியே
கரைதேடு மென்னெஞ்சை-மீழ
மோகக் கடலிழுத்து
விழியேவிக் கொல்லுதல் முறையோ?
இதுவென்னத் தீம்பொய்
தகையே
உடற்கண்டும் சாகாத நீ
விழிசுட்டு செத்துப்போயின்
எரியாது விண்மீன்
புளிக்காதோ நந்தேன்?
கலையாத மேகமே
அணையாதத் தீபமே
உன்மத்தமானப் பின்னே
உன் மொத்தமானப்பின்னே
பொய்க்கூறி ஏது பெற
தேவையென்ன தூதுத் தற?
காணாதத் தாபமே
போலிப் பொய் சாயமே
என்னவேண்டும் சொல்
எண்ணம் மாறும் சில்
சினங்கொள்வேன்
பின்னுனைக் கொள்வேன்!
கண்ணாடிக்கேள்
கடலிடைக் கேள்
கொள்ளிக் கண்பட்டு
இரசங்கரைவதைச் சொல்லும்
விழிவழி மதியொழி
நுரைத் தொடலுன்னாலென்னும்
கொள் கொன்றுத் தின்!
போகட்டும் போ
பொய் தான் சொன்னாய்
அழகான பொய் சொன்னாய்
ஒறுப்புக் குறைப்பில்
குறைய வதைக்கப்படுவாய்
மெல்ல சிதைக்கப்படுவாய்!
நெஞ்சத்து யுவராணி!
மஞ்சத்து மஹராணி!
கருணையே கருணை
மிண்டைக் கண்டு மீழ்தலே கொடுமை
குற்றம் இழைக்காத போதும்
நிவ்வீர்தரு தண்டனைக்கு தலைச்சாய்க்கிறேன்
ஒறுப்பு விளம்பி
வதையுங்கள் சிதையுங்கள்
இவன் உங்களாட்சிக்குறியவன்!
கைதியே!
களவாணித் தேனியே!
நல்லதுன் ஒப்புதல்
உருக்கப்படும் உன்னுடல்
கன்னங்கடிக்கப்படுவாய்
உதட்டால் உதைக்கப்படுவாய்
தென்றல் கூடி வருமொரு வேளை
உடுத்திறள் சூழ் மாலை
மஞ்சமேடை
கயவனுன் உயிற்குடிப்பேன்
கடைசியாசைக் கட்டிலில் சொல்லலாம்!
ஒன்றுதான் உயிர் ராணியே
என்னாசையும் இருதய ஓசையும்
இங்கே
இப்பொழுதே
தண்டனையை இயக்குங்கள்
மழைக் காலமாதலால்
உடு உச்சிகொடுக்கும் காலம்
வெகு தொலைவில்………
– ஹஜன் அன்புநாதன்