உணவை  நாடி வேலை பளுவை இனிமையாக்க…! – A Minute by Tuk Tuk

வேலை பளுவை இனிமையாக்க…! – A Minute by Tuk Tuk

2020 Jun 24

Open Time:

10am to 11pm

Address

1A, 02 Centre Rd, Colombo

directions

Located at One Galle Face

Contact No

0112 324 020

Menu

One galle face shopping center யில் அமைந்துள்ள A minute by tuk tuk உணவகத்திற்கு சென்றிருந்தோம். காலியில் உள்ள A minute by tuk tuk உணவகத்திலும் பார்க்க கொழும்பு A minute by tuk tuk உணவகத்தில் வித்தியாசமான அனுபவத்தை பெற முடிந்தது. இலங்கை கலாச்சார உணவுகளை சுவைக்க விரும்பினால் நீங்கள் செல்லக் கூடிய சிறந்த உணவகங்களில் இதுவும் ஒன்றாகும்.

 

DRINKS

The Health Nut (LKR 750)

 

Alcohol பயன்படுத்தாதவர்களுக்கு Health nut mocktail பொருத்தமானது. இந்த mocktail லில் சற்று இனிப்பு சுவை உள்ளதால் இலகுவாக சுவைக்கலாம். உடல்நலம் குறித்து அக்கறை கொண்டவர்களுக்கும் சரியான உணவை விரும்புவோர்க்கும் Health nut mocktai மிகவும் ஏற்றது.

 

Smirkin Gimlet (LKR 950) Simkrin Gimlet என்பது lychee யில் தயாரிக்கப்படும் ஒரு பானமாகும். இது gin யின் சுவையை கொண்டது. இந்த எளிமையான பானம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

 

Jack to a King (LKR 950)

அடுத்து நாங்கள் முயற்சித்த பானம் மதுவின் சுவை கலந்த பானமாகும். இலங்கை முறைப்படியான ஓர் பானத்தை சுவைக்க விரும்புபவர்களுக்கு இந்த பானம் பொருத்தமானது. இந்த பானம் நடுத்தர அளவிலான தேங்காயில் பரிமாறப்படுகிறது. மது மற்றும் தண்ணீர் கலந்த இந்த பானம் எங்களுக்கு பழக்கமான மற்றும் வித்தியாசமான அனுபவத்தை அளித்தது. இருப்பினும் இந்த பானம் வெவ்வேறு கலவைகளின் சுவையாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

 

Starters

Aunty Aida’s Mutton Soup (LKR 950)

நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது வீட்டில் ஆட்டுக்கால் சூப் குடித்தது உண்டா…? இந்த சூப்பை நாங்கள் முயற்சித்த போது வீட்டில் சூப் குடிப்பது போல் உணர்ந்தோம். Roast பாணுடன் பரிமாறப்படும் இந்த சூப்பானது மசாலா,ஆட்டிறைச்சி,பயறு வகைகளுடன் தயாரிக்கப்படுகிறது.

Mains

Taka Taka (Crab) (LKR 1400)

அடுத்து நாங்கள் முயற்சித்தது நண்டு கொத்து. Oven யில் bake செய்யப்பட்ட இந்த உணவு அனைவருக்கும் பிடித்ததாக இருக்காது ஏனெனில் இதில் கொழுப்பும் காரமும் சற்று அதிகமாக உள்ளது.

It’s a Wrap (1200)

அடுத்து நாங்கள் முயற்சித்தது ஒரு சைவ உணவு. இது Pulled pork என்று அழைக்கப்படும் அமெரிக்க barbecue உணவை அடிப்படையாக கொண்டது. இதில் பன்றியிறைச்சிக்கு பதிலாக பலாப்பழம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அவகோடா பழத்திலிருந்து தயாரிக்கப்படும் சம்பல் ஒன்றும் பரிமாறப்படுகிறது.

Dessert

Mangoficient (LKR 800)

Mangoficient ஒரு dessert ஆகும். Sorbet dessert கள் பொதுவாக frozen fruitகளில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன ஆனால் இந்த பழுத்த மாம்பழ grill sobert dessert மிகவும் மென்மையானது.

Ambience

One galle face யில் உள்ள A minute by tuk tuk உணவகத்தின் கலைப்படைப்புகள் மற்றும் அலங்கார தாவரங்களாலான இயற்கைச் சூழல் ஓய்வெடுக்கவும் நிதானமாக சாப்பிடவும் சிறந்த இடமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here