உணவை  நாடி நண்பர்களுடன் பொழுதை கழிக்க சிறந்த இடம் – Arthur’s Pizzeria

நண்பர்களுடன் பொழுதை கழிக்க சிறந்த இடம் – Arthur’s Pizzeria

2020 Jun 24

Open Time:

11am - 12pm

Address

110 Horton Pl, Colombo 07.

directions

Turn into Horton Place from Wijerama Mawatha, and Arthur's Pizzeria is located on the right side of the road.

Contact No

0117 955 955

Menu

 

வேலைப்பளுவிலிருந்து சற்று ஓய்வெடுப்பதற்காக Horton place யில் உள்ள Arthur’s Pizzeria க்கு சென்றேன். அங்கு மிகவும் பிரபலமான classic thin crust pizza மற்றும் இன்னும் சில உணவுகளையும் முயற்சிக்க முடிவு செய்தேன். நான் முயற்சித்த உணவுகள் மிகவும் பிடித்துப் போனமையால் மீண்டும் இங்கு வர வேண்டும் என முடிவு செய்தேன்.

Appetizers

Garlic Roast Paan (LKR 300)

 

இந்த Garlic bread யின் சுவை வெறுமையாகயிருந்தது. Garlic bread பூண்டின் தன்மைக் கொண்டிருந்தது. bread அதிகம் butter கொண்டு செய்யப்பட்டிருந்தமையால் மொறு மொறுப்பற்று காணப்பட்டது.

Mains

Chicken Nai Miris Pizza (LKR 1450)

Arthur’s Pizzeria வின் Chicken Nai Miris Pizza நிஜமாகவே அற்புதமாகயிருந்தது. Pizza யில் சிக்கன்,சீஸ் மற்றும் மிளகாய் ஆகியன முதலிடம் பிடித்திருந்தன. Pizza யின் ஒவ்வொரு துண்டுகளையும் ரசித்து உண்டேன். நீங்கள் சிக்கன் மற்றும் மசால சுவை பிரியர்களாக இருந்தால் மறக்காமல் Chicken Nai Miris Pizza வை முயற்சியுங்கள்.

Bacon Annasi Pizza (LKR 1600)

Bacon Annasi Pizza என சொல்லும் போது “இது என்ன…?” என்று நீங்கள் யோசிக்கலாம். அன்னாசி பழம் சாப்பிட விரும்பாதவர்கள் இந்த பெயரை கேட்டிருக்க வாய்ப்பில்லை ஆனால் நம்புங்கள் Pork நிறைய உள்ள இந்த Pizza வின் சுவை மிகவும் சிறந்தது.

Prawn Miris Pasta (LKR 880)

Arthur’s Pizzeria வின் Prawn Miris Pasta பெயருக்கு ஏற்றவாறே இறால் மற்றும் மசாலா கொண்டு தயாரிக்கப்பட்டது மேலும் இதில் சீஸ் , ஓலிவ் , புதிய மூலிகைகள் மற்றும் மிளகாய் முதலிடம் வகிக்கிறது. இந்த pasta மசாலாப் பொருட்களை அதிகம் விருப்புவோர்க்கு ஏற்றது.

Desserts

Chocolate Biscuit Pudding (LKR 320)

நான் இனிப்பு சுவையுள்ள உணவொன்றை சுவைக்க விரும்பியமையால் Arthur’s Pizzeria வின் Chocolate Biscuit Pudding யினை order செய்தேன். Chocolate sauce உடன் பரிமாறப்பட்ட இந்த Chocolate Biscuit Pudding யின் சுவை அலாதியானது. Arthur’s Pizzeria க்கு செல்லும் போது இந்த Chocolate Biscuit Pudding யினை மறக்காமல் முயற்சியுங்கள்.

Ambience

Arthur’s Pizzeria வில் அவர்களால் வரையப்பட்ட சொந்த படங்கள் காட்சிப்படுத்த பட்டுள்ளன. உட்புறமானது சிறிய ஔியுடன் இருள் சூழ்ந்ததாக உள்ளது. இங்கு வருகை தருபவர்களை விட ஊழியர்கள் குறைவாகவே உள்ளனர். காலப்போக்கில் இந்த நிலை மாறக் கூடும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here