2020 Oct 19
நவபிரசாதம் 03
சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1/2 கப்
பாசிப்பருப்பு – 3 மேசைக்கரண்டி
வெல்லம் – 3/4 கப் (பொடியாக்கியது)
தண்ணீர் 4 கப்
நெய் – 4 மேசைக்கரண்டி
உலர் திராட்சை (ப்ளம்ஸ்) – 15
முந்திரி – 10
ஏலக்காய் – 2 (தட்டியது)
கிராம்பு – 2 (தட்டியது)
செய்முறை
முதலில் அரிசியை சுத்தமாக கழுவி நீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின் ஒரு குக்கரில் 1 மேசைக்கரண்டி நெய் ஊற்றி நெய் உருகியதும் பாசிப்பருப்பினை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
அதன் பின் அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி அரிசியை போட்டு குக்கரை மூடிக் கொள்ளவும்.
குக்கரிலிருந்து முதல் விசில் வரை அதிகப்படியான நெருப்பினில் வைத்து அதன பின் தீயை குறைத்து இரண்டாவது விசில் வந்தவுடன் குக்கரை இறக்கிக் கொள்ளவும்.
இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு கரைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின் அரிசி போட்டு வைத்த குக்கரை திறந்து வெல்லப் பாகு, தட்டி வைத்த கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து 3யிலிருந்து 4நிமிடங்களுக்கு பொங்கலை கிளறி விடவும்.
இன்னொரு பாத்திரத்தில் மீதமாகயிருக்கும் நெய்யினை ஊற்றி நெய் உருகியதும் முந்திரி மற்றும் உலர் திராட்சை (ப்ளம்ஸ்) ஆகியவற்றை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
இறுதியாக வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையினை குக்கரில் உள்ள பொங்கலில் ஊற்றி நன்றாக கிளறிக் கொள்ளவும்.
இப்போது பூஜைக்கு வைப்பதற்கான சுவையான சக்கரைப் பொங்கல் தயார்.