நாடி Review “பந்து” – குறும்படம் – நாடி Reveiw

“பந்து” – குறும்படம் – நாடி Reveiw

2021 Aug 16

வெளிநாட்டில் சிறுவர்கள் மூவர் இணைந்து  பந்து விளையாடும் ரம்யமான சூழலுடன் படம் ஆரம்பமாகிறது. சிறுவர்கள் விளையாடும் பந்தானது ஓர் ஓரமாக செல்கிறது, அதனை பணக்கார இளைஞன் அவதானிக்கிறான். அவ் அவதானிப்பதிலிருந்து நினைவு மீட்டப்பட்டு, படம் ஆரம்பிக்கிறது.

பந்தொன்றை வாங்குவதை தீராத வேட்கையாக கொண்ட ஆசையை அடிப்படையாகக்  கொண்டு உண்மைச் சம்பவத்தின் பிரதிபலிப்பாகவே, இப்படம் அமைகிறது. யாழ்ப்பாண கிராம சூழலின் மண் வாசனையுடன் கலந்து யாழ்ப்பாண பேச்சு வழக்கில், வறுமையின் கோரப்பிடியில் வாழும் அண்ணன், தம்பியை மையமாகக் கொண்டே படம் சூழல்கிறது. பந்து எனும் பெயருக்கேற்ப பந்தாய் சுழன்று, இலங்கையின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் சிறுவர்களது ஆசையை அபரிதமாய், அழகாய், ஆழமாய் முன்வைக்கிறது.

பாடசாலை செல்லும் போது, தினமும் அம்மா கொடுக்கும் கைப்பணத்தை, தம்பி பந்து ஒன்றை வாங்குவதற்காக சேமித்து வருகிறான். தினமும் பாடசாலை சென்று வருகின்ற வழியில் அமைந்திருக்கின்ற ஒரு கடையில் பந்தின் விலையை தம்பி விசாரித்து வருகிறான். அப்பந்தின் விலை ரூபாய் 85/= என்கிறார் கடைக்காரர்.  இதன் மூலம் தீரா வேட்கையை  அழகான முறையில் விவரித்துள்ளார் கதாசிரியர்களான மதி. சதாவும் யாழ் நிலவன் ஷாம்சனும்,
ஒருவழியாக அவன் ஆசைப்பட்ட 85/=ரூபாய் பந்தை வாங்குவதற்கு தேவையான பணத்தை சேகரித்து, கொண்டு வந்து கொடுத்து பந்தை வாங்க முயற்சிக்கிறான், கடைக்காரர் பந்தின் விலை 90/= ரூபாய் என்கிறார். வழமையாக ஒவ்வொரு படத்திலும் எடுத்துக்காட்டப்படும் நிகழ்வாக தெரிந்தாலும், இலங்கையின் நாளாந்த செலவினத்தையும், பொருட்களின் விலை ஏற்றத்தையும்,  ஆசைப்படும் பொருளை வாங்க எத்தனிக்கும் ஒவ்வோர் சிறுவர்களது  நிலையையும் எடுத்துக்காட்டி தனித்துத் தனித்துவமாய் சமூகப் பிரச்சினையை தெளிவாக, எளிமையாக தெரிவிக்கிறது எனலாம்.

இறுதியில் அவனது சேமிப்பு அவனது அண்ணனுக்கு அன்பளிப்பாக வழங்கப்படுகிறது. இறுதியில் அவனது ஆசை எந்த அளவில் நிறைவேறுகிறது என்பது என்பதை மீதிக்கதை சுருக்கமாகவும் மிக அழகாகவும் விளக்குகிறது. சூழலின் மிதமான அம்சங்களோடு, பொருந்திச் செல்கிறது இசை. அது மட்டுமன்றி, அவ்வப்போது இது இலங்கையில் எடுக்கப்பட்ட படமா என ஒளிப்பதிவு மற்றும் படப்பிடிப்பு அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கின்றது. பந்து, பந்து போன்றே சுழன்று காட்சி மாற்றங்களை தத்ரூபமாய் எடுத்துக்காட்டுகின்றது. அவ் இளைஞன் பெரியவனாகி அச்சம்பவத்தை நினைவூட்டுவது சுவாரஸ்யம் கலந்த யதார்த்தமாய் அமைகிறது.

Nadi Verdict – 65 / 100
Video Link  – https://youtu.be/FuSKJZkgya8

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php