2021 Sep 9
கான்யா டி அல்மேய்தா மிகவும் கவர்ச்சிகரமானவள். அவளுடைய சேவைகள் மிகவும் உண்மையானது மட்டுமன்றி நேர்மையானதாகும். பொதுநலவாய சிறுகதை போட்டியில் முதன்முதலில் வெற்றி பெற்ற முதல் இலங்கையவராவார். ஆசியாவிற்கான பிராந்திய பரிசை வெல்வதற்கான 6000க்கு மேற்பட்ட கட்டுரைகளிலிருந்து ‘ஐ கிளீன் த……. எனும் கட்டுரையின் மூலம் கான்யா டி அல்மேய்தா தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒரு தாயாகவும் ஒரு எழுத்தாளராகவும் அவள் அனுபவித்த அனுபவங்களை நாடியுடன் பகிர்ந்துள்ளார்.
எழுத்தாளராக உங்கள் வாழ்வின் ஆரம்பம் எவ்வாறு இருந்தது?
எனது இளமைக் காலத்திலிருந்து அதிகளவான நேரத்தை எழுதுவதிலேயே செலவிட்டுள்ளேன். நான் தரம் 6 கற்றுக் கொண்டிருக்கும் போது மெகி நிறுவனம் மெகி உணவுடன் இலவசமாக வழங்கிய சிறிய புத்தகங்கள் எனக்கு கிடைக்கப் பெற்றது. நான் செல்லுமிடமெல்லாம் மெகியின் மூலம் கிடைக்கப்பெற்ற புத்தகத்தை எடுத்துக் கொண்டு செல்வேன். எல்லாக் கதைகளையும் எல்லா நிகழ்வுகளையும் அதில் எழுதுவேன், அதிலிருந்து எனது எழுத்துப் பணி ஆரம்பமானது, அத்தோடு எழுதுவது எனது வழக்கமாகியது.
கொஞ்சம் பெரியவளாகிய பின்னர், நண்பர்களுடன் இணைந்து, அயலவர்கள் யாராவது சிறுகதைகள் எழுத எங்களை அழைத்தால், நாங்கள் அவர்களது வீடுகளுக்குச் சென்று கதைகளை எழுதி வழங்குவோம் என விளம்பரம் செய்ய ஆரம்பித்தோம்.
ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் அழைப்புக்கள் வரும் என தொலைபேசியில் அருகிலேயே காத்திருந்தேன். மிக பயனுள்ள சலுகையாக இருப்பினும் யாராருமே அழைப்பை ஏற்ப முன்வரவில்லை, அது மிகவும் கவலையளித்தது. இதுவே எழுத்தாளராக எனது முதற் தோல்வியாகும். மனிதர்கள் பெரிதாக வாசிப்பை விரும்புவதில்லை என அறிந்துக் கொண்டேன். இப்படியே சிறு வயதில் இருந்து எனது எழுத்துப் பணி ஆரம்பமானது.
எழுத்தாளராக உங்கள் வாழ்வைப் பற்றி கூறுங்கள்.
மேடு பள்ளங்களுடன் கூடிய ஓர் பயணமாகவே இருந்தது. ஆரம்பத்தில் பாடசாலை கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டேன். பின்னர் 30 களில் சட்டசபைகளுக்கான நாடகங்கள் எழுதினேன். 4 வருட இளங்கலைமானிப் பட்டப்படிப்பின் போது புனைகதைகள் மற்றும் இலக்கிய எழுத்தாக்கங்களை எழுத ஆரம்பித்தேன். அதிக நேரங்கள் ஊடகத் துறையில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததனால் பெரிதாக எழுத்துத்துறையில் ஈடுபட நேரமிருக்கவில்லை. புனைகதை என்பது மிகவும் விரிவானது என்பதோடு உலகம் முழுவதையும் உருவாக்கின்றது. ஊடகத்துறை என்பது என்னை உறுதியாக்கி ஊக்கமளிக்க ஓர் உயரிய இடம் என்றே நான் கருதுகிறேன்.
கொலம்பியாவில் நான் எனக்கான ஒரு இடத்தை கண்டுபிடிக்கும் வரை, என்னை பாடசாலை மற்றும் எல்லா இடங்களிலும் இருந்தும் தோல்வியையே சந்தித்தேன்.
அதுமட்டுமின்றி என்னை மேலதிக பட்டியலிலேயே(waiting list) சேர்த்தனர். என்னை ஏற்றுக் கொள்வதற்காகவும் அத்தோடு நிதி ரீதியான உதவிகளை பெற்றுத் தருவதற்காகவும் ஓர் பேராசிரியை எனக்காக போராடினாள். முழுமையாக மேலதிக வகுப்பிற்கான பணத்தைக் கூட செலுத்த முடியாது இருந்தேன். பேராசிரியை எனக்காக ஊக்குவிப்பு பணத்தை திணைக்களத்தின் மூலம் பெற்றுத்தர பெரும் முயற்சி எடுத்தார். மேலதிகமாக எழுத்துத் துறை சார்ந்த நிகழ்வுகளிலும் பணியாற்றினேன். இதுவும் ஓர் மேடுபள்ளங்கள் கூடிய பயணமாகவே இருந்தது. ஆயினும் தற்போது ஒரு எழுத்தாளராகுவதற்கான பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
2020 ஆம் ஆண்டில் பொதுநலவாய சிறுகதைப் போட்டியில் வெற்றியீட்டியது பற்றி கூற முடியுமா?
கிட்டத்தட்ட ஆறாயிரத்துக்கு மேற்பட்ட சிறுகதைகளிலிருந்து, என் சிறுகதையை தேர்ந்தெடுப்பது என்பது என்னைப் பொருத்தளவில் மிகையில்லா வெற்றி என்றே கூற வேண்டும். அதிலும் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவது என்பது மிகப்பெரிய சவாலான விடயமாகும். இறுதியில் அவர்கள் மேடையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை அறிவித்தனர்.
எனது பெயர் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் இருப்பதை கேள்விப்பட்ட எனது பெற்றோர், சகோதரி மற்றும் என்னை சார்ந்து இருப்போர் அனைவரும் ” இது தான் வெற்றி, இதன் பின்னர் எது நடந்தாலும் பரவாயில்லை” எனத் தெரிவித்தனர்.
இறுதியாக அவர்கள் வெற்றியாளரை அறிவிக்கும்போது, வெற்றியாளர் நான் தான் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அத்தோடு சில நிமிடங்கள் என்னை என்னாலேயே நம்ப முடியாதிருந்தது. அதுமட்டுமன்றி வெற்றியை ஏற்றுக்கொள்ள எனக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டது. அது ஓர் அற்புத உணர்வாகும்.
குடும்பத்தையும் அதேபோன்று உங்கள் பணியையும் ஒரே நேரத்தில் எவ்வாறு சமமாகக் கொண்டு சென்றீர்கள்?
மிகப்பெரிய ஒரு போராட்டமாகவே இருந்தது. மிக அண்மையில் நான் இன்ஸ்டாகிராமில் தொடராக ஒரு பெண் தாயின் துன்பத்தைப் பற்றி பதிவிட்டிருந்தார். அப்பதிவு என்னுள் சென்று என்னை தனிமைப்படுத்தியது என்றே கூற வேண்டும். ‘கவலைப்பட வேண்டாம்’, ‘குழந்தை நலமாகவே உள்ளது’ அத்தோடு ‘அவள் இருக்கிறாள்’, ஆனால் ‘நான் இருக்க மாட்டேன்’ என்பதே மிகவும் கொடிய வார்த்தைகள் என குறிப்பிட்டிருந்தாள். அவ்வார்த்தைகள் என் நினைவில் ஆழமாக பதியப்பட்டதோடு, அந்நேரம் என்னை பாதித்தது. இவ்வார்த்தைகள் மிகவும் உண்மையானது என கருதுகிறேன். என் மகன் பிறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை என்றே கூறவேண்டும். ஒவ்வொரு நாளும் அதை எண்ணியபடியே நாட்களை கழிக்கிறேன். உறுதுணையாக எனக்கிருக்கும் குடும்பத்தைப் போன்று அனைவருக்கும் அமைவதில்லை.
ஒரு தாய் முழுமையான ஆரோக்கியத்துடன்(உடல், உள ஆரோக்கியம்) இருக்கும் போதே சமூக ரீதியான சமூக ரீதியான பிரச்சினைகளை தீர்க்க முடியும். அத்தோடு எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு தாய் ஆதரவினை வழங்கும் போதே, குழந்தையும் அதே போன்ற ஆதரவினை வழங்குகிறது. இப்பண்புகள் குடும்பத்திலும் பிரதிபலிக்கப்படுகிறது. இப்பண்பு என்னை அதிகளவில் தாக்கத்தை செலுத்தியதோடு மிகவும் உறுதுணையாகவும் அமைந்தது.
உங்கள் எழுத்துக்கள் தனித்துவம் வாய்ந்ததாகவும் அதிக அளவில் தாக்கம் படுத்துவதாகவும் உள்ளது. அத்தோடு நீங்கள் கதாபாத்திரங்களை உருவாக்க எவ்வாறான உத்வேகத்தை பெற்றுக் கொண்டீர்கள்? வாழ்க்கையிலிருந்தா? அனுபவத்தின் மூலமாகவா?
எனது வாழ்விலிருந்தே நிறைய விடயங்களை பெற்றுக் கொண்டேன். என்னுடன் இருப்பவர்கள் எப்போதும் என்னைப் போன்ற ஒருவரையே கதைகளில் அவதானிக்கின்றனர். ஒரு புனைகதை எழுதும் போது, சூழல் மற்றும் அனுபவம் என்பன ஊக்குவிக்கும் ஓர் ஊடகமாக திகழ்கின்றது. அத்தோடு அதுவோர் தனியான கதையோட்டத்தை தன்னகப்படுத்துகின்றது.
நான் பார்க்கும் நபரை என் மனம் பின்பற்றுகிறது. அதனை என்னால் தடுக்க முடியாது. அதுமட்டுமன்றி அவர்களது நாள் எப்படி அமைகின்றது? அவர்கள் கடனில் இருக்கிறார்களா? தனிப்பட்ட மோதல்களை தவிர்த்துக் கொள்வதற்கான வழி இருக்கின்றதா? போன்ற கற்பனைகளில் இருந்து என்னால் வெளிவர முடியாமல் இருக்கின்றது. இவ்வாறான கதைகளை அடிக்கடி கேட்பதனால் இக்கதாபாத்திரங்கள் எங்கிருந்து உண்மையாகவே வருகின்றது என என்னால் அறிய முடியாமலும் இருக்கின்றது.
உங்கள் படைப்பாக்க செயல்முறை எவ்வாறு இருந்தது? அத்தோடு எவ்வாறான படைப்பாக்க தொகுதிகளை சமநிலைப்படுத்தி கொண்டு செல்ல வேண்டியிருந்தது?
ஆரம்பத்தில் மிகக் கடினமாக காணப்பட்டது. பின்னர் சமநிலைப்படுத்தி செல்லவேண்டிய படைப்புகளைப் பற்றி தெளிவுகளை அனுபவங்கள் மூலம் பெற்றுக் கொண்டேன். பெரிதாக படைப்புக்களை சமநிலைப்படுத்தியதில்லை. அத்தோடு சில வேளைகளில் நிறைவு செய்யப்படாமல் அப்படியே வைத்த சந்தர்ப்பங்களும் உண்டு.
இப்போது இச்சிறுகதையை நான் பெற்றுள்ளேன். அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளேன். அதன் அடிப்படையில் ஒரு படைப்பு செயல்முறையை வடிவமைப்பது எனக்கு எளிதாக இருந்தது. சிலவேளைகளில் எனக்கு தேவையான ஆக்கங்களை எழுதுவேன். அத்தோடு அடுத்த நாள் தேவையற்ற விடயங்கள் நீக்குவேன்.
யோசனைகளுக்கு பஞ்சமேற்பட்டதில்லை. அவ்யோசனைகளை கதை கருவோட்டத்தில் இணைத்து உயிரோட்டம் அளிப்பதே எனது ஆக்கங்களின் பிரதிபலிப்பாகும்.
எழுத்தாளர்களுக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனை யாது? மேலும் அதிகளவான வாசிப்போரை ஊக்குவிக்கலாம்?
வாசிப்பிற்கு நேரம் ஒதுக்காதவர்களே எழுதத் கஷ்டப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் வாசியுங்கள் என்பதே நான் வழங்கும் ஆலோசனையாகும். அரைப் பக்கம் வாசித்தாலே ஒரு வசனம் எழுத முடியும். வாசிப்பதிலும் எழுதுவதிலும் உள்ள மகிழ்ச்சியைக் யதார்த்தமற்ற இலக்குகள் ஒருபோதும் அறிவதில்லை. எனவே, குறைந்தபட்சம் வாசிக்க ஆரம்பிக்கவும், அப்பொழுதே அது உங்களை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதை அவதானிக்க முடியும். (ஒருபோதும் நான் ஆலோசனைகளைப் பின்பற்றுவதில்லை நான் அவ்விடத்திற்கு செல்லவே முற்படுகிறேன்)
உங்கள் எதிர்கால திட்டங்கள் யாது? அத்தோடு மற்றவர்கள் உங்களை எப்படி பின்பற்ற போகிறார்கள்?
இலங்கையில் பெண்கள் பிறந்த கதைகள் மற்றும் தாயாகிய சந்தர்ப்பம் பற்றி இருளிலுள்ள ஒளி (The Darkest Light) எனும் தலைப்பில் தகவல்களை திரட்டி ஒன்றிணைத்து எழுதலாம் என எத்தனித்துள்ளேன்.
இன்ஸ்டாகிராம் எனும் சமூகவலைத்தளத்தில் உயர் நிலையில் இருக்க தவறிவிட்டேன். @thedarkestlightpodcast எனும் தலைப்பில் என் பதிவுகளை வாசிக்கலாம். நான் மெதுவாக சிறுகதைத் தொகுப்பை எழுதி வெளியிடுவேன்.
thedarkestlightpodcast எனும் தலைப்பில் என் பதிவுகளை அவதானிக்கலாம்.