2021 Sep 13
உணவின் சுவை என்பது நவரசங்களும் நாவில் நடனமாடி சமிபாட்டு தொகுதியில் சமிபாடு ஆகவேண்டும் என்பது சில உணவுப் பிரியர்களின் ஆத்மார்த்த கருத்தாகும். அந்த வகையில் BBQ சுவையினை நமது நாவின் சுவை நரம்புகள் சுவைத்திட உகந்த இடமாக கொழும்பு 5ல் இன்றைய காலத்தில் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவகமாக Whistling Hog உருமாறியுள்ளது. அதேவேளையில் இங்கு BYOB வசதிகளும் உள்ளன.
Starters
எப்பொழுதும் நாம் ஒரு முழு நிறை உணவினை உட்கொள்ள முன்னர் பசி உணர்வினை தூண்ட ஆரம்ப உணவுகளை Menu ல் தெரிவு செய்வது வழக்கம். அந்த வகையில் மிகவும் சுவைமிக்க ஆரம்ப உணவுகளை Whistling Hog தன்னகத்தே கொண்டுள்ளது.
Dragon Wings (LKR 700)
உணவகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட “Great Balls of Fire” என்ற sauce ஊடாக நன்கு பதப்படுத்தப்பட்டு, இரண்டு மணித்தியாலங்கள் விறகில் வேக விடப்பட்டு தயாரிக்கப்படுகின்றது. அதேவேளையில் குறிப்பாக அந்த sauce ஆனது அதிகூடிய மிளகாய் உடைய சுவையும் மேலும் சிறிதளவு வினாகிரி சுவையினை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
Bacon Cheese Toast (LKR 650)
Cheese உடன் கலந்த Bacon பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆனது toast செய்யப்பட்டு சீஸ் உருகி வழியும் வண்ணம் காட்சிதரும் அதேவேளையில், காட்சிக்கு ஏற்ப சுவையும் மிகவும் அருமையாக இருக்கும்.
Garlic Bread (LKR 300)
பூண்டின் சுவையினை அனைவரும் உணவில் சேர்த்துக்கொள்ள விருப்பப்படுவார்கள். அந்த வகையில் இங்கு பரிமாரப்படும் Garlic Bread ஆனது வழமையாக இலங்கையில் தயாரிக்கப்படும் Garlic Bread சாயலில் இருந்து சற்று மாறுபட்டது. இங்கு பட்டர் உடன் சேர்த்து Garlic Bread பரிமாறப்படுகிறது. நிச்சயமாக இந்த உணவகத்தில் சுவைத்துப் பார்க்கக் கூடிய ஒரு உணவாக Whistling Hogன் Garlic Bread விளங்குகிறது.
Country Slaw (LKR 350)
Country Slaw என்பது ஒருவகையான சாலட் side dish ஆகும். குறிப்பாக இங்கு பரிமாரப்படும் Country Slawல் உள்ள சிவப்பு கோவா மற்றும் கேரட் என்பன வித்தியாசமான முறையில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதேவேளையில் mayonnaise உடன் சாலட் சேரும்பொழுது நாவில் எண்ணிலடங்கா சுவைகள் உணரப்படும்.
Disco Fries (LKR 300)
ஏனோ தெரியவில்லை. சிறுபிள்ளைத்தனமாக எனக்கு டிஸ்கோ பிரைஸ் பிடித்திருந்தது. குறிப்பாக அதன் crunch ஆன தன்மையினை சுவைத்த பொழுதுகள் இன்னும் என் நினைவலைகளில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. மேலும் அதற்கு மேலாக தூவிய மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்ந்த சுவையினை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
Mains
Rack of Baby Back Ribs (LKR 1,700 – 2,400)
இந்த உணவு வகையினை சுவைக்கும் பொழுது நாம் மெய்மறந்து BBQ இறைச்சி மற்றும் அதனுடன் சங்கமித்த sauce ன் சுவையுடன் மூழ்கி விடுவோம். அதேவேளையில் இங்கு பறிமாறப்படும் Portion இன் அளவும் நன்கு போதுமானது
Smoked Chicken (LKR 500 – 1,800)
Smoked Chicken இனை நாம் மெனுவில் இங்கு தெரிவு செய்தால் நமக்கு விருந்தாக மாறிவிடும். ஆம் விறகில் சமைக்கப்பட்ட chicken உம் அதன் juicy ஆன தன்மையும் நம் நாவில் நவரசத்தை நடனமாட முயற்ச்சிக்கும்.
Big Momma (LKR 5,090)
குறிப்பாக இவ் உணவு வகையினை நான்கு பேர் பரிமாறலாம். நான்கு பேருக்கு தாராளமாக இது போதுமானது. மேலும் இவ்வுணவு தெரிவில் two pork chops, half a smoked chicken, a rack of baby back ribs, four sausages என்பன உள்ளடங்குகின்றன மேலும் நாம் sausages ல் garlic/kochchi என்பதை தெரிவு செய்து கொள்ளலாம்.
உங்களுக்கு தெரியுமா?
பரிமாறப்படும் உணவு வகைளின் பெயர்கள் அமெரிக்க இசைக் கலைஞர்
Elvis Presley அவர்களின் பாடல்களில் இருந்து மருவி வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் இந்த உணவகத்திற்கு வரலாமா?
நிச்சயமாக Whistling Hog உணவகத்தின் BBQ சுவைக்காக இங்கு மீண்டும் வரலாம்.
அதேவேளையில் உணவகத்தில் covid 19 பாதுகாப்பு முறைகளை பின்பற்றி முறையாக உணவு பரிமாறப்படுகிறது.
TIP- Rack of Baby Back Ribs மற்றும் Smoked Chicken – அதேவேளையில் Smoked Chicken உடன் side dish ஆக Country Slaw. வேறு ரகத்தில் சுவை நிச்சயமாக அமையும்.