உணவை  நாடி கொழும்பில் கொத்து

கொழும்பில் கொத்து

2021 Sep 20

உணவு என்பது நவரசமும் நாவில் நடனமாடி சமிபாட்டு தொகுதியில் சமாதி ஆகவேண்டும் என்ற உணவு பிரியனின் கருத்துக்கு ஏற்ப இலங்கையர் என்ற வகையில் நமது தேசிய உணவு அரிசிச் சோறா அல்லது சிக்கன் கொத்து ரொட்டியா என்று  எவரேனும் வினவினால்,  இது hypothetical question என்ற பதில் பெரும்பாலும் வரும் ஏனெனில் கொத்துரொட்டி என்பது நமது உணவு என்ற உணர்வுடன் சங்கமித்து புத நாவில் நிலை கொண்டுவிட்டது. ஆம், இன்று மிகக் குறைந்த விலையே 550 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கின்றது. இத்தகைய நிலையினை நோக்கி இந்த கொத்துரொட்டி மாற காரணம் அதன் சுவை நமது இலங்கையர் மத்தியில் இடம் பிடித்ததே ஆகும்.

கொத்து ரொட்டியின் பிறப்பிடம் இலங்கை என்ற ரீதியில் கொழும்பில் கொத்து ரொட்டியை சுவைக்கக் கூடிய முக்கிய ஐந்து இடங்களைப் பற்றி நாம் பார்க்க போகிறோம்.

MACHAN RESTAURANT
கடுவளையில் அமையப்பெற்றிருக்கும் மச்சான் ரெஸ்டாரண்டில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவாக அமைவது wok chicken kothu ஆகும். அதாவது வழமையாகவே கொத்து செய்யும் முறையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு உணவு செய்யும் முறையைக் கொண்டு இது இடம்பெறுகின்றது. பொதுவாகவே சிலரிடம் kothu வின் சுவை எவ்வாறு அமையும்  என்று கேட்டால் நிச்சயமாக கொத்து மாஸ்டர் அடுப்பு கல்லில் கொத்துவதில் தான் உள்ளது என்று கூறுவார்கள். ஆயினும் இங்கு கொத்து தயாரிக்கும் முறையானது தாட்சியில்  அமையப் பெறுகின்றது.
எனினும் வழமையான கொத்தின் சுவைக்கு ஈடாகவே இதன் சுவையும் இடம்பெறுகின்றது. ஒரு மாலை நேரத்தில் காரசாரமாக ஒரு உணவு உட்கொள்ள வேண்டும் எனில் நிச்சயமாக நீங்கள் இங்கு Wok Chicken kothu இனை try செய்து பார்க்கலாம்.

No 27,New kandy rd Bandarawaththa, Kaduwela 10640
0112 489 992

THE CHEF CEYLON

ஒரு ஜூஸி வகையிலான கொத்து இனை சுவைக்க உகந்த இடம் என்று இந்த ரெஸ்டூரண்ட்டை பரிந்துரைக்கலாம். இங்கு உள்ள சிக்கன் கொத்துவின் சிக்கன் சுவை, நாவில் பரபரவென்று உணர்வினை ஏற்படுத்தியது. ஆம், அதன் சுவையினை லேயர் லேயராக சுவைக்கக் கூடிய பாக்கியம் எனக்கு கிட்டியது. நிச்சயமாக கொடுக்கின்ற காசுக்கு மிகவும் worth ஆன கொத்தாக இது இடம்பெறுகின்றது. அதேவேளையில் இங்கு உள்ள சிக்கன் சீஸ் கொத்து மற்றும் சிக்கன் சீஸ் மசாலா கொத்து  வகைகளை ஒரு வார்த்தையில் விவரிக்க வேண்டுமாயின்.. “Vera level  ” என்று கூறலாம்.

324 Colombo – Galle Main Rd, Colombo 06
0112 360 356

KOTTU LABS

கொழும்பு நகரில் கொத்துக்கு என்று பெயர் போன இடமாக இந்த ரெஸ்டூரண்ட் கூறலாம். மேலும் இங்கு அதிகளவிலான combo offerகள் வழங்கப்படும். பெரும்பாலான இடங்களை விட இங்கு பரிமாறப்படும் கொத்து ரொட்டி சற்று கனமாகவே காணப்படும். எனினும் இந்த கொத்து ரொட்டியின் உள்ளீடுகளின்  காரணமாக வேறு ரகத்திலான சுவையினை சுவைக்கக் கூடிய சந்தர்ப்பம் எமக்கு கிட்டுகிறது.

31, D. M. Colombage Mawatha, Nawala Rd, Nugegoda 10250
077 668 0000

THE CHARIOT – BAMBALAPITIYA

மிக அண்மையில் நீங்கள் சுவைத்த ஒரு வித்தியாசமான கொத்துரொட்டி என்ன? என்ற கேள்வியை எவரேனும் வினவினால் நிச்சயமாக எனது பதில் chariot இன் Chicken kothu தான். நிச்சயமாக சிலர் கூறுவதை நாம் கேட்டு இருக்கலாம் “ஏதோ இவன் பன்றான் யா”. அந்த வாக்கியத்திற்கு ஒரே உதாரணம் இவர்களின் சிக்கன் கொத்து. தான் இதுவரை எனது நாவு அந்த சிக்கன் கொத்தின் சுவை இலக்கணத்தை புரியாமல் தவிக்கின்றது என்றே கூறலாம்.

0117 777 770

DINDIGUL THALAPAKKATI

பிரியாணிக்கு உலகளவில் பெயர் போன இடத்தில் வித்தியாசமாக நாம் கொத்துரொட்டி சுவைத்து பார்க்க முயற்சி செய்தோம். எனினும் இந்த முயற்சி தவறா சரியா என்ற அச்சம் ஆரம்பத்தில் இருந்த போதும், இறுதியில் வித்தியாசமான இலங்கையில் இந்த ஸ்டைலில் நான் எங்குமே கொத்துரொட்டியினை சுவைக்கவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. அதேவேளையில் முற்றிலும் இலங்கையிலிருந்து மாறுபட்ட ஒரு கொத்துரொட்டியாக தலப்பாகட்டி இன் கொத்தினை கூறலாம். ஒரு முறை சுவைத்துப் பார்க்க, நிச்சயமாக முயற்சித்துப் பார்க்கலாம்.

No 8 De Fonseka Pl, Colombo 00400
0114 878 787

இன்று கடலை விடப் பெரிதாக உணவு வகைகள் உலகில் காணப்பட்ட போதும் இலங்கையர்கள் என்ற ரீதியில் எமது நாவிலிருந்து ஒரு போதும் இந்த கொத்து ரொட்டியின் சுவை யினை யாராலும் மறக்க முடியாது

காலங்கள் மாற மாற koththu ரொட்டியும் Chesse Kottu, cheese masala, chilli cheese masala, chicken palandi, beef kothu, mutton kothu, egg Kottu, prawn Kottu, crab Kottu என்று மெருகேற்றிக் கொண்டே செல்லும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php