Blog Page 20

பதினொரு மொழிகளில் உருவாகும் இலங்கைத் திரைப்படம் ‘அகோரன் 2’

இலங்கையில் முதன் முறையாக தமிழ், சிங்களம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், பெங்காலி, போஜ்பூரி, கொரியன், ஹிந்தி மற்றும் சீன மொழி ஆகிய 11 மொழிகளில் தென்னிந்திய நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கும் பான் திரைப்படமாக அகோரன் 2 உருவாகியுள்ளது.

Jaffna Event Planner நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தினை அஜிதன். ஜே இயக்கியள்ளார். அஜீபன் ராஜ் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்ய திஷோன் விஜயமோகன் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அகோரன் 2 திரைப்படத்தில் ஜெனிபர் ஸாரா ஒப்பனைக் கலைஞராக பணியாற்றியுள்ளதுடன் ஆடை வடிவமைப்பாளராக ஹமிஷ் கேஷாகன் பணியாற்றியுள்ளார். சண்டைப் பயிற்சியாளர்களாக சுஜநீதன் ஸ்ரீகுமார், மற்றும் விதுனுவான் பெர்னாண்டோ ஆகியோர் பணியாற்றியுள்ளார்கள். மேலும் துணை இயக்குனர்களாக அவந்திகா ரணசிங்ஹே, வஜி வரன் மற்றும் ரி.சங்கீதன் ஆகியோர் பணியாற்றியுள்ளார்கள்.

மேலும் இந்தத் திரைப்படத்தில் ஐஷ்வர்யா யோகராஜா, சங்கீதன், சுஜநீதன் ஸ்ரீகுமார், வஜிவரன், ஹமிஷ் கேஷாகன், அனுஷன், தர்ஷன், சிவா, எஸ்.பி. நிதப்பன், ஜெனிபர் ஸாரா ஆகியோர் நடிகர்களாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

கடந்த வருடம் மார்ச் ஐந்தாம் திகதி நடிகை ஸபித்தா ரெட்டி மற்றும் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரால் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக எஸ்.எஸ். பிரதர்ஸ் விளங்குகிறது. அத்துடன் இந்தத் திரைப்படத்தில் எஸ். சிவனுஜன், அஜிதன். ஜே, வி. ராஜனர்தனன், ஆர்.கே. ரொஹான் போன்ற முக்கிய கலைஞர்களும் பணியாற்றியுள்ளார்கள்.

கடந்த வருடம் ஏப்ரல் 14 ஆம் திகதி பாடகர் வி.வி. பிரசன்னா மற்றும் மலையாளத் திரையுலக இயக்குனர் அனில் ஆகியோர் அகோரன் 2 திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து அகோரன் 2 திரைப்படத்தின் இரண்டாம் பார்வையை பாபநாசம் திரைப்படப் புகழ் ஜீது ஜோஸப் மற்றும் கே.ஜி.எப் திரைப்படத்தின் கலை இயக்குனர் சிவகுமார். ஜே மற்றும் வலிமை, அண்ணாத்த போன்ற திரைப்படங்களின் சண்டைப் பயிற்சியாளர் திலிப் சுப்பராயன் ஆகியோர் வெளியிட்டு வைத்தனர்.

மேலும் இயக்குனர் பொன் மாணிக்கவேல், கே.ஜி.எப். திரைப்படத்தின் கலை இயக்குனர் சிவகுமார் ஜே மற்றும் கே.ஜி.எப். திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் புவன் கௌடா ஆகியோர் படத்தின் மூன்றாவது பார்வையை வெளியிட்டு வைத்தார்கள். 2022 ஆம் ஆண்டின் வைகாசி மாதத்தில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகள் மற்றும் முன்னணி OTT தளங்கள் ஊடாக அகோரன் 2 வெளியாகவுள்ளது.

கொழும்பிலுள்ள பிரபல கொரிய உணவகங்கள்

இலங்கை என்ற தீவு நல்ல உணவுகளை சமைக்கும் அல்லது உண்ணும் நடைமுறைகளைக் கொண்ட ஒரு நாடாகும். நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் பல்வேறு வகையான உணவு வகைகளின் அடிப்படையில் எல்லா உணவுகளும் முன்னேற்றம் கண்டுள்ளன. பொதுவாக இது நம் நாட்டின் தலைநகருக்கு மிகவும் பொருந்தும். கொழும்பைச் சுற்றியுள்ள பிரசித்திபெற்ற உணவகங்களுல் சுவை நிறைந்த கொரிய உணவுகளும் அடங்குகின்றன.

கொழும்பில் கொரிய உணவகங்கள் இருக்கின்றன என்பது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். கொரிய உணவு ஆர்வலர்கள் அனைவரும் இந்த உணவகங்களில் உங்களுக்குப் பிடித்தமான கிம்ச்சி( Kimchi), பிபிம்பாப்(Bibimbap), டியோக்போக்கி (Tteokbokki)மற்றும் புல்கோகி (Bulgogi)போன்ற உணவு வகைகளைச் சாப்பிடலாம். அது தொடர்பான மேலதிக தகவல்களையம் அவ்வாறான உணவகங்களையும் தொடர்ந்து பாருங்கள்.

1. கேங்ஸ் கிட்சன் (Kang’s Kitchen)

கொழும்பிலுள்ள அனைவராலும் அறியப்பட்ட கொரிய உணவகமாக கேங்ஸ் கிட்சன் இருக்கும் என்பதால் இதற்கு அறிமுகம் தேவையில்லை என்று சொல்லலாம். இங்குள்ள ஜஜாங்மியோன் (கருப்பு நூடுல்ஸ்) மற்றும் டியோக்போக்கி (Tteokbokki) போன்ற உணவுகள் கேங்ஸ் கிட்சன் வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமானவை. மேலும் கேங்ஸ் கிட்சனில் வழங்கப்படும் எந்த உணவுகளையும் நீங்கள் குறையாகப் பார்க்க முடியாது.

முகவரி: 28/1, ஹோர்ட்டன் பிளேஸ், கொழும்பு 7
தொடர்புகளுக்கு: 0112 697 216
திறக்கும் நேரம்: திங்கள் முதல் சனி வரை 12 மணி – 2.30 மணி, மாலை 6 மணி – இரவு 9.30 வரை
(ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை)

2. ஹான் கூக் குவான் (Han Gook Gwan)

1991 ஆம் ஆண்டு முதல் கொரிய உணவுகளை வழங்கி வருபவர்தான் ஹான் கூக் குவான். வயதானவர், ஆனால் தங்கமானவர். உணவு உண்ண வறுகின்றவர்களிடையே பொதுவான ஒரு பாராட்டை ஹான் கூக் குவான் உணவகம் பெறுகின்றது. இந்த உணவகத்தின் உணவுகள் இலங்கையர் அனைவரினதும் பசியைப் போக்கி திருப்தியை தருகின்றன.

முகவரி: 25, ஸ்ரீ சம்புத்தத்வ ஜெயந்தி மாவத்தை, கொழும்பு 5
தொடர்புகளுக்கு: 0112 587 961
திறக்கும் நேரம்: மு.ப 11.30 – பி.ப 2.30 , பி.ப 5.30 – பி.ப 10.30 வரை

3. தி பிபிம் (The Bibim)

இந்த உணவகத்திற்கு பிரபலமான கொரிய உணவான பிபிம்பாப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த உணவானது ஒரு கிண்ணத்தில் சோறுடன் பல்வேறு காய்கறிகள், இறைச்சி மற்றும் வறுத்த முட்டையுடன் கூடிய உணவாக காணப்படும். இதன் சுவையின் அடிப்படையில் தி பிபிமில் அதிகம் விற்பனையாகும் உணவு வகைகளில் இதுவும் ஒன்று என்பதில் ஆச்சரியமில்லை. இங்கு தேர்வு செய்ய பல்வேறு வகையான இறைச்சி வகைகளும் உள்ளன.

முகவரி: 375, ஆர்.ஏ. டி மெல் மாவத்தை, கொழும்பு 3
தொடர்புகளுக்கு – 0767 584 406
திறக்கும் நேரம்: மு.ப 11 மணி முதல் பி.ப 11 மணி வரை.

4. அரிரங் 5 (Arirang 5th)

திம்பிரிகஸ்யாய சாலையில் வசதியாக அமைந்துள்ள மற்றொரு நன்கு வடிவமைக்கப்பட்ட கொரிய உணவகம் Arirang 5th ஆகும். Arirang 5th மெனுவில் எங்களுக்கு மிகவும் தனித்துவமாய் தென்பட்டது அவர்களின் செட் மெனு விருப்பத்தெரிவுகள் 2, 3 அல்லது 4 நபர்களுக்கான பகுதிகளாக உணவைப் பெற்றுக்கொள்ளும் வசதியாக இருப்பதுதான். அது குழுவாக சாப்பிடுவதற்கு மிகவும் பொருத்தமான மெனுவாக இருக்கிறது.

முகவரி: 181, திம்பிரிகஸ்யாய வீதி, கொழும்பு 5
தொடர்புகளுக்கு- 0115 882 661
திறக்கும் நேரம்: மு.ப 11.30 மணி முதல் பி.ப 9 மணி வரை.

5. கிம்ஸ் பெமிலி கொரியன் ரெஸ்டூரன்ட் (Kim’s Family Korean Restaurant)

உணவகத்தின் பெயரிலிருந்து ஒருவர் எண்ணம் தோன்றுவதைப் போல கிம்ஸ் பெமிலி கொரியன் ரெஸ்டூரன்டில் வீடு போன்றதொரு வரவேற்கத்தக்க வடிவமைப்பு அமைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் சுவையான ஜாப்சே அல்லது பிபிம்பாப்பை அனுபவிக்கும்போது அவர்கள் இனிமையான அனுபவத்தை பெறுவார்கள் என்பது உறுதி செய்யப்படுகிறது. ஜாப்சே அல்லது பிபிம்பாப் என்பன அங்கே உள்ள மெனுவின் பிரபலமான மற்றும் விரிவான இரு உணவுகளாகும்.

முகவரி: 14-14 ஆர்.ஏ. டி மெல் மாவத்தை, கொழும்பு 4
தொடர்புகளுக்கு: 0763 425 053
திறக்கும் நேரம்: திங்கள் முதல் சனி வரை மு.ப 11.30 மணி – பி.ப 9.00 ஞாயிற்றுக்கிழமை – மு.ப 11.30 – பி.ப 8.30 வரை

6. சியோல் ரெஸ்டூரன்ட் (Seoul Restaurant)

சியோல் ரெஸ்டூரன்ட் ஒரு சூப்பர் கொரிய உணவு விருந்தை வழங்குகின்ற உணவகம் ஆகும். அதேவேளை அவர்கள் பலவிதமான வறுத்த மற்றும் சூடான வெண்ணெய் உணவுகளை வழங்குவதன் மூலம் இலங்கை மக்களின் உணவு நுகர்வினை தொட்டுச் செல்கிறார்கள். இதுபோன்ற பல்வேறு முயட்சிகளை இந்த உணவகம் மேற்கொண்டுள்ளது. அத்தோடு அவர்கள் இறக்குமதி செய்யும் கொரிய பொருட்களை விற்கவும் முனைகிறார்கள். எனவே அவர்களுடன் நீங்களும் இணைந்திருங்கள்.
முகவரி: 375 ஆர். ஏ. டி மெல் மாவத்தை, கொழும்பு
தொடர்புகளுக்கு: 0117 021 215
திறக்கும் நேரம்: மு.ப 10 மணி முதல்- பி.ப மணி வரை

7. KBQ கொரியன் பார்பிக்யூ (KBQ Korean Barbecue)

மக்கள் கூட்டத்திற்குப் பிடித்த கொரியன் பார்பிக்யூ அல்லது KBQ கொரியன் பார்பிக்யூவை உண்ணும்போது ஏற்படும் சுவையில் மெய்மறந்து போக முடியும். இது நம்பமுடியாத ருசியைத் தருவதோடு இதிலிருக்கும் சுவையான மசாலாவானது எல்லா உணவுகளிலும் மசாலா சுவையை விரும்பும் இலங்கையர்களுக்கு ஏற்றதாக இருக்கும். கோழியை வித்தியாசமான முறையில் சுவைக்க வேண்டுமென்ற பலரின் ஆசையை இந்த உணவகம் நிச்சயம் போக்குமென்பற்கு உத்தரவாதம் தர முடியும்.

முகவரி: ஜன ஜெய சிட்டி மால் ராஜகிரிய (ஜேஜேசி மால்) ஜினதாச நியதபால மாவத்தை. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை
தொடர்புகளுக்கு: 0114 341 782
திறக்கும் நேரம்: மு.ப 9 மணி முதல் – பி.ப 10 மணி வரை.

8. ரோபாடா க்ரில் (Robata Grill)

Movenpick ஹோட்டலில் அமைந்துள்ள Robata Grill உணவகமானது தேர்ந்தெடுக்கப்பட்ட 7 ஆசிய உணவு வகைகளின் அற்புதமான தேர்வுகளைக்கொண்டு அறியப்படுகிறது. நான் தனிப்பட்ட முறையில் இரண்டு முறை ரோபாட்டாவுக்குச் சென்றிருக்கிறேன். அவர்களின் கொரிய உணவுக் கட்டணத்தைப் பொறுத்தவரை, அவர்களின் பல்கோகியை முயற்சித்ததால் நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள் என்று என்னால் கூற முடியும்.

9. ஹான்கூக் கிச்சன் (Hancook Kitchen)

சுற்றுப்புறத்தில் ஹான்கூக்கிற்கு இருக்கை இல்லா பற்றாக்குறையை ஒரு சுவையான கொரிய க்ரப் உணவானது ஈடுசெய்கிறது. இது கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கானது. அத்தோடு சில அசல் கொரிய உணவுகள் ஒருவரின் பசியை மிஞ்சிய சுவையான உணவுகள் என்று சொன்னால் அது மிகையாகாது.

முகவரி: 501/1/A புதிய கண்டி வீதி, தலங்கம
தொடர்புகளுக்கு: 0113 657 777
திறக்கும் நேரம்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை 12-10 மணி வiர் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டுள்ளது.

10. கொரியன் பிரைட் சிக்கன் ஹட் (Korean Fried Chicken Hut)

கொரியன் வறுத்த கோழி மற்றும் கிம்ச்சி சாலட் வேண்டுமா? அப்படியானால் கொரியன் பிரைட் சிக்கன் ஹட் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய உணவாகும். அவர்கள் ஒரு சில வரையறுக்கப்பட்ட கொரிய உணவுகளில் நிபுணத்துவம் பெற்றாலும் இது ஒரு தனிச்சிறப்புள்ள உணவாகும். அங்கு நீங்கள் திருப்தியான உணவைப் பெறுவீர்கள்.

எனவே, கொரிய உணவுச் சுவைத் தேடலுக்கு தீர்வைப் பெறுவதற்கான உணவகங்களின் பட்டியலை நாங்கள் உங்களுக்காக அறியத்தந்துள்ளோம் ஏதெனும் ஒரு கொரிய உணவகத்தை நாங்கள் தவறவிட்டோமா? உங்கள் கருத்துக்கள் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

ஹர்ஷினி பெர்னாண்டோ

மிரட்டும் பேய்முகமூடிகள்

இலங்கையில் மிகப் புராதன காலத்திலிருந்து உருவாக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வரும் பேய்மூகமுடிகள் நீங்கள் அறிந்ததொன்றே. ஆனால் அதன் வரலாற்றை நீங்கள் அறிந்ததுண்டா? அதைப்பற்றியே இந்த பதிவில் அறிந்துகொள்ள போகிறோம்.

கலாசார அல்லது இன வேறுபாட்டைப் பொருட்படுத்தாமல் முகமூடி என்பது உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சாதனமாகும். இது அணிபவரின் முகத்தை மறைக்கவும் உதவுகின்றது. பேய்முகமூடிகள் என்பது சிங்களத்தில் ‘யகா மாஸ்க்’ என்று கூறினால் அனைவருக்கும் தெரியும். இது இலங்கையர்களின் பழங்கால திருவிழாக்கள் மற்றும் கலாசார நடனங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட முகமூடியாகும். பேய் முகமூடிகளின் தாயகம் இலங்கை என்று பழங்கால வரலாறு கூறுகிறது. அதற்கான காரணம் அக்காலத்திலேயே இது பாரம்பரிய முகமூடி வடிவமைப்பாகவும் இலங்கையில் நடன சடங்குகளின் கலாசாரத்தின் முக்கிய ஒரு பகுதியாகவும் காணப்பட்டமைக்கான இலக்கிய சான்றுகள் உள்ளன. இந்தப் பேய் முகமூடியின் வரலாற்று பின்ணனியில் ஒரு கதை உள்ளது.

புராணங்களில் கூறப்படும் அரசன் சங்கபாலனும் அவரது மனைவி, மகாராணி அயுபாலாவும் இந்தியாவில் தம்பதியினராக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் ஆட்சி செய்த சங்கபால ராஜ்ஜியத்திற்கு எதிராக அயல் நாடு போர் தொடுத்தது. அந்த வேளையில் ராணி அயுபாலா கர்ப்பமாக இருந்தபோது தானொரு ‘முகமூடி நடனம்’ ஒன்றை பார்க்க வேண்டுமென்ற விசித்திரமான ஆசையை தனக்குள்ளே வளர்த்துக் கொண்டார். ஆனால் அவர்களுடைய முழு ராஜ்யத்திலுள்ள யாருக்குமே இந்த முகமூடி நடனம் பற்றி எதுவும் தெரியாது. இப்படியிருக்க ராணியின் ஆசையை உணர்ந்த சக்ரா எனும் கடவுள் சில முகமூடிகளையும் பாடல் வரிகளையும் கண்டுபிடித்து ஒரு தோட்டத்தில் வைத்தார். அதன் பிறகு இந்த முகமூடிகளை அணிந்து அந்த பாடலை பாடி முகமூடி நடனம் மக்களால் ஆடப்பட்டது. அந்த முகமூடி நடனத்தை ரசித்த பிறகு மகாராணி அயுபாலாவின் ஆசை நிறைவுற்றதாக கதையொன்றுமுள்ளது.

இந்த முகமூடிகள் பார்ப்பதற்கு தீயசக்தியின் உருவமொன்றை பிரதிபலித்தாலும் அதன் உண்மையான கருத்து தீமையைத் தடுக்கும் நோக்கம் கொண்டவையே என்பதாகும். அதாவது அக்காலத்தில் பேய்களால் (யக்காக்கள்) நோய்கள் ஏற்பட்டதாகவும் அந்த நோய்களை இந்த முகமூடி அணிந்து ஆடும் பிசாசு நடனம் எனப்படும் சடங்குகளால் குணப்படுத்தினர் என்றும் பழங்கதைகள் உரைக்கின்றன. இந்த சடங்கில்தான் பல்வேறு வகையான முகமூடிகள் தோற்றம் பெற்றன. இந்தப் பேய் முகமூடிகள் பலவிதமான தோற்றங்களைக் கொண்டிருப்பதால் ஒவ்வொரு தனித்துவமான பெயரைத் தாங்கியே பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட நோய்களைக் குறிக்கும் முகமூடிகள் ‘சன்னி மாஸ்க்’ என்று அழைக்கப்படுகின்றன. நோய் போன்றவற்றை குணப்படுத்த பெரஹெராக்கள் (மத ஊர்வலம்) சடங்குகளில் பயன்படுத்தப்படும் இந்த முகமூடி ‘ கர யக்கா’ என்று அழைக்கப்படுகிறது. அத்தோடு தலை ஆடை மற்றும் காதுகளுக்கு பாம்புகளுடன் கூடிய முகமூடி ‘ நாக ரக்ஷா’ அல்லது நாகப் பேய் என்று அழைக்கப்படுகிறது. பறவையின் அம்சங்களைக் கொண்ட முகமூடி ‘கருட ரக்ஷா’ , மயிலின் முகமூடி ‘மயூர ரக்ஷா’ (மயில் அரக்கன்) , தீப்பிழம்புகள் கொண்ட முகமூடி ‘கினி ரக்ஷா’ (தீ ஜுவாலையின் அரக்கன்), மரணத்தை குறிக்கும் முகமூடி ‘மரு ரக்ஷா’ , மற்றும் ‘ரத்னகூட ரக்ஷா’, ‘த்வி நாக ரக்ஷா’, ‘மல் குருலு ரக்ஷா’ என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன.

பொதுவாக இந்தப் பேய் முகமூடிகள் துடிப்பான வண்ணங்களில் தாமரை மலர்கள் வடிவில் வட்டமான காதுகள் மற்றும் இரண்டு தந்தங்கள், பெரிய குண்டான கண்கள், நீண்ட நாக்குகள் மற்றும் வெவ்வேறு வடிவான தலை அமைப்புகளோடு வேறுபட்ட பேய்களை சித்தரிக்கும் விதமாக உருவாக்கப்படுகின்றன. சிங்களத்தில் ‘கதுரு’ என்று அழைக்கப்படும் காஞ்சுரை(ஸ்ட்ரைக்னோஸ் நக்ஸ்-வோமிகா ) மரத்தினால் உருவாக்கப்படுகிறது. இவை முழுவதுமாக கையால் செதுக்கப்பட்டு வர்ணப்பூச்சு செய்யப்பட்டு சந்தைகளுக்கு விற்கப்படுகின்றன. மக்கள் இதை அதிகளவு வாங்கி வீடுகளின் வாசற்கதவின் மேலே பொருத்தி வைக்கின்றனர். இதற்கு காரணம் இந்த முகமூடிகளை வீட்டில் வைத்திருப்பது மற்றவர்கள் நம்மேல் வைக்கும் தீய கண் (கண்திருஷ்டி) மற்றும் கூறும் தீய வார்த்தைகளிலிருந்து பாதுகாக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.

இந்தப் பேய் முகமூடிகளுக்கு பிறப்பிடம் இலங்கை என்று நாம் முன்னரே கூறியது போல இலங்கையிலும் இந்த பேய் முகமூடிகளை மிகவும் விஷேடமாக தாயரிக்கும் பிரசித்திப் பெற்ற இடம் அம்பலாங்கொடையாகும். பல ஆண்டுகளாகவே அங்கு வாழும் மக்கள் சிக்கலான, வினோதமான மற்றும் வண்ணமயமான முகமூடிகளைத் தயாரிக்கும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் பங்குகொண்டுள்ள பேய் முகமூடிகள் ஆகும். அம்பலாங்கொடையின் பாரம்பரிய முகமூடி செதுக்குபவர்கள் முகமூடி நடனம் மற்றும் பழமையான நாட்டுப்புற பாடல்கள் என இரண்டிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதோடு பரம்பரை பரம்பரையாக மனப்பாடம் செய்துள்ள சடங்கு கவிதைகளையும் அவர்கள் வாசிப்பார்கள். அம்பலாங்கொடையைத் தவிர காலி போன்ற நாட்டின் பல முக்கிய பிரதேசங்களிலும் கைத்தொழிலொன்றாக பேய் முகமூடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

உலகெங்கிலும் உள்ள வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் கூட இறுதிச் சடங்குகள் மற்றும் கருவுறுதல் சடங்குகளில் முகமூடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. என்றாலும் பழங்காலத்திலேயே இந்த பேய் மூகமுடிகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டு படிப்படியாக போட்டிகளிலும் கலாசார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகளிலும் தவிர்க்க முடியாத பொருளாக மாறியுள்ளது. ஆகையால் இது இலங்கையை அடையளாப்படுத்தும் தனித்துவம் நிறைந்த மற்றும் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது என்பது முற்றிலும் உண்மை.

1000 ரூபாவில் கொழும்பில் ஜோடியாக என்ன செய்யலாம்!

இன்று உங்களுடைய சம்பள தினம் என்ற ஒரு எண்ணத்தை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் வங்கிக் கணக்கு மீதியை பார்த்து சற்று மகிழ்ச்சியடைவீர்கள். நான் பணக்காரன் ஆகிவிட்டேன் என்று மனதிற்குள் எண்ணிக்கொள்வீர்கள். திடீரென்று தொலைபேசிக்கட்டணம், போக்குவரத்துச் செலவுகள், நீங்கள் வாங்கவேண்டிய பாதணிகள், இரவில் ஊபர் ஈட்ஸில் நீங்கள் ஓர்டர் செய்த உணவுக்கான பில், பார் பில் இவையெல்லாம் கட்டிமுடிக்க நினைத்து கணக்கு பார்த்து முடிக்கும்போது மறுநாள் காலையில் அழுகையே வந்துவிடும்.

திடீரென்று நீங்கள் உடைந்து போய் விடுவீர்கள். இந்த மீதிப்பணத்தை வைத்து மாதம் முழுவதையும் எப்படியாவது ஓட்டிவிடவேண்டும் என்று நினைத்து நினைத்தே மீதிக் காலத்தை செலவழிக்காமல் விடுவீர்கள்.

கவலையை விடுங்கள், உங்கள் நாட்களை சேமிப்புடன் திருப்திகரமாக கொண்டு செல்ல நாங்கள் இருக்கிறோம். எங்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பொழுதுபோக்கான விடயங்களை 1000 ரூபாவிற்கு குறைவாக கொழும்பில் பெற்றுக்கொள்ள முடியும்.

1. இறால் வடையுடன் காலி முகத்திடலில் நடைப் பயணம்

இது ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும். இருநூறு ரூபாய்க்கும் குறைவாகச் செலவாகும் சூடான இறால் வடையை உண்ணும்போது உங்கள் தலை உச்சியில் கடல் காற்று வீசுகின்ற காலி முகத்திடலில் நீங்கள் கடைசியாக எப்போது நடந்தீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். சூரியன் மறைந்து கொண்டு செல்லும்போது புல்லில் உல்லாசமாக விளையாடும் குழந்தைகளின் குறும்புகளை கண்டு மகிழ முடியும். நிச்சயமாக அது ஒரு மறக்கமுடியாத மாலையாக இருக்கும்.

2. நெலும் பொகுனவை சுற்றி ஒரு நடைபவணி

விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகிலுள்ள நெலும் பொகுன கொழும்பில் உள்ள அழகான பகுதிகளில் ஒன்றாகும். பசுமைப் பாதையில் உள்ள அழகிய கலை ஓவியங்களை அங்கே பார்த்துக்கொண்டே அமைதியாக நடந்து செல்ல முடியும். அங்கே கம்பீரமாக தோற்றமளிக்கும் நெலும் பொகுனவில் புகைப்படம் எடுக்க முடியும். புகைப்பட ஆர்வலர்கள் தங்களை அழகாக புகைப்படங்கள் எடுக்க இங்கே செல்கிறார்கள். இதற்கு ஒரு ரூபாய் கூட செலவாகாது.

3. பெல்லன்வில பூங்காவில் சைக்கிள் ஓட்டம்

நீங்கள் கொழும்பில் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று எண்ணினால் பெல்லன்வில பூங்காவிற்குச் செல்லுங்கள். இரண்டு சைக்கிள்களை (ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய்) வாடகைக்கு எடுத்துக் கொண்டு உங்கள் துணையுடன் ஏரியைச் சுற்றி அழகாக சவாரி செய்து மகிழுங்கள். உடற்பயிற்சியில் ஈடுபட இது ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் சைக்கிள் ஓட்டி முடித்ததும் சுவையான உணவுக்காக அங்கே உள்ள உணவுக் கடை ஒன்றிற்கு செல்ல முடியும். இவை அனைத்தையும் 1000 ரூபாயை விட குறைவான செலவில் செய்து முடிக்க முடியும்.

4. கொழும்பு தேசிய அருங்காட்சியக சுற்றுப்பயணம்

பல்வேறு காலகட்டங்களின் தொல்பொருட்களால் களஞ்சியப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தை ஆராய்வதன் மூலம் நீங்கள் உங்கள் நேரத்தை பயனுள்ளதாக மாற்றியமைக்கலாம். நீங்கள் இருவரும் வரலாற்றை அறியும் ஆர்வமுள்ள மாணவர்களாக இருந்தால் இது உங்களுக்கு ஒரு சிறந்த இடமாகும்.

5. தியத்த உயனவில் தாவரக் கன்றுகளை வாங்குதல்

நீங்களும் உங்கள் துணையும் தோட்டமொன்றை அமைப்பதை விரும்புகிறீர்களா? பச்சையாக பசுமையுடன் தோட்டம் ஒன்றை அமைப்பதில் ஆர்வம் கொண்டுள்ளீர்களா? தியத்த உயனாவுக்குச் செல்லுங்கள், அங்கு தாவர விற்பனையாளர்கள் ஒவ்வொரு வார இறுதியிலும் வந்து தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்துகிறார்கள். சில சுவாரஸ்யமான சதைப்பற்றுள்ள தாவரங்கள் முதல் கவர்ச்சியான கண்கவர் பூக்கள் வரை நியாயமான விலையில் நினைக்கும் அனைத்தையும் அங்கே பெற்றுக்கொள்ளலாம்.

6. பப் ஒன்றில் மகிழ்ச்சியான நேரம்.

இலங்கையர்களான நாங்கள் மதுபானத்தை விரும்புகிறோம். ஆனால் பார் பில்கள் தூக்குக் கயிறுகள் போல காயங்களை ஏற்படுத்துகின்றன. மகிழ்ச்சியான மணித்துளிகள் உங்கள் வாழ்க்கையை சேமிக்கும். சில இடங்களில் ‘1 வாங்கினால் 1 இலவசம்’ என்ற சலுகைகளை வழங்குகிறார்கள். சில தேர்ந்தெடுக்கப்பட்ட காக்டெய்ல்களை இலவசமாகவும் வழங்குகின்றார்கள்.ஏனையவற்றில் பல்வேறு தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இரண்டு பீரினை 1,000 ரூபாய்க்கு கீழ் பெற்றுக்கொள்ளலாம். மேலும் நீங்கள் எந்த இடத்திற்குச் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து சுவாரஷ்யமான அனுபவங்களை பெற முடியும்.

7. தியத்த உயனவில் அன்னப்படகு சவாரி

தியத்த உயனவில் என்ன நடக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். உங்கள் காதலியுடன் ஏரியின் அலைகளில் மேலும் கீழும் படகில் துள்ளியவாறு பயணம் செய்வதில் ஏதோ ஒரு இனிமையான மற்றும் அமைதியான இன்பம் இருக்கிறது. நீங்கள் மனக்கசப்புகளிலிருந்து தப்பித்து உங்கள் துணையுடன் நேரத்தை செலவிட விரும்பினால் இது அதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

8. உங்கள் சொந்த மலர் பூச்செண்டை உருவாக்குங்கள்

டீன்ஸ் சாலை ஆரம்பம் முதல் இறுதி வரை பூக்கடைகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் விரும்பும் பலவிதமான கண்கவர் மலர்களைத் தேர்ந்தெடுத்து 1,000 ரூபாய்க்குள் எளிதாகக் கிடைக்கும் பூங்கொத்தை அமைத்து உங்கள் பணத்தையும் நேரத்தையும் சுவாரஷ்யமானதாக மாற்றலாம். இதன் மூலம் மலரைப் பற்றியும் அதன் அழகைப்பற்றியும் பரிமாறிக்கொள்ளலாம்

9. One Galle Face இல் ஒரு விளையாட்டு அனுபவம்

விளையாடும் ஆர்வம் உடையவர்கள் இங்கே ஒன்று கூட தயாராக இருங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய பரந்த அளவிலான கேம்களுடன் One Galle Face இல் உள்ள Ground Zero உங்கள் நண்பருடன் ஆரோக்கியமான போட்டியில் ஈடுபடும் ஒரு சுவாரஷ்யமான நேரத்தை உங்களுக்கு வழங்கும்.

10. கல்கிசை கடற்கரையில் வைன்

இங்கே ஒரு நபருக்கு சுமார் 1,000 ரூபாய் செலவாகும் என்றாலும் நீங்கள் செய்யக்கூடிய எளிமையான காதல் வெளிப்பயணங்களுக்கு இதுவும் சிறந்ததொரு இடம்தான். 2,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் சிவப்பு அல்லது வெள்ளை வயின் போத்தலை எடுத்து போர்வை மற்றும் சுற்றுலா பொருட்கூடையை எடுத்துக்கொண்டு சூரியன் மறைவதை பார்வையிட கல்கிசை கடற்கரையின் மணல் கரைக்கு செல்லுங்கள்.

11. மருதானை செகண்ட் ஹேண்ட் புத்தகக் கடை

புத்தகப்புழுக்களே நீங்கள் ஜாக்கிரதை! உண்மையிலேயே இங்கு 1,000 ரூபாய்க்கு மேல் செலவழிக்க மிகவும் ஆசையாக இருக்கும். மருதானையில் உள்ள கடைகளின் தூசி நிறைந்த அலுமாரிகளில் ஒரு விலையுயர்ந்த இரத்தினத்தை கண்டுபிடிப்பதில் நம்பமுடியாத திருப்தி உள்ளது. தேர்வு செய்ய அலுமாரிகளும் அதற்குள் குவியல்களும் அதிகம் உள்ளன. கடைகளை நடத்தும் தோழர்கள் உங்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்றுத்தர உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

12. Excel World இல் பந்துவீச்சு

இன்னும் சொல்ல வேண்டுமா? பந்துவீச்சு என்பது மிகவும் சுவாரஷ்யமானது. உற்சாகமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். உங்களின் நேரத்தை பயனுள்ளதாகவும் திருப்திகரமாகவும் மாற்ற பந்து வீச்சு உத்தரவாதம் அளிக்கிறது!

13. சல்சா நைட்ஸ்

The Irish மற்றும் Playtrix ஆகிய சமூக ஊடக பக்கங்களுடன் இணைந்திருங்கள். சில இரவுகளில் அவர்கள் சால்சா நடன இரவுகளை ஒழுங்கமைக்கின்றனர். அங்கு அனைத்து வயதினருமான மற்றும் அனுபவமான நடனக் கலைஞர்கள் உங்கள் நேரத்தை சிறப்பாக மாற்ற வருகிறார்கள். உங்கள் நண்பரை அல்லது காதலியை பிடித்து சில நடன அசைவுகளை நீங்களும் எளிதாக உருவாக்க முடியும். நீங்கள் வெட்கப்படுகிறீர்கள் என்று கவலை வேண்டாம். அங்குள்ளவர்கள் உங்களுக்கு நட்பாக இருப்பார்கள். மேலும் சில அடிப்படை நடன அசைவுகளை எப்படி செய்வது என்று உங்களுக்கு அவர்கள் கற்பிப்பார்கள்.

14. Crystal Shopping

ஆன்மிகத்துடன் வாழ விரும்புகின்றீர்களா? House of Siris இன் Stratford Avenue இல் அமைந்துள்ள சக்கர சமநிலையைக் காட்டும் ஆரா வாசிப்பு அனுபவங்களை பெற முடியும். உங்களை எவ்வாறு சமநிலைக்கு கொண்டு வருவது என்பது குறித்த இலவச ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் அவர்கள் உங்களுக்கு வழங்குவார்கள். 1,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் குளிர்ந்த டம்லட் படிகற்கள் உள்ளன. இருப்பினும் படிகத்தின் வகையை பொறுத்து அதன் விலை மாறுபடும். (Blue Lace Agate costs LKR 1,200, whereas Rose Quartz or Red Jasper costs LKR 400)

15. கார்னிவல் ஐஸ்கிரீம்

நம் அனைவருக்கும் பிடித்தமான கார்னிவல் ஐஸ்கிரீமை ருசித்து நாவின் சுவை அரும்புகளை திருப்தி படுத்த முடியும். இந்த கார்னிவெல்லில் மிகவும் நியாயமான விலையில் தேர்வு செய்ய பலவிதமான சுவைகளைக் கொண்ட ஐஸ்கிரீம்கள் உள்ளன. அழகான உட்புறத் தோற்றம், வர்ணஜாலம் என எங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களை அழகுபடுத்த இந்த கார்னிவல் காத்திருக்கிறது.

16. நடனம் அல்லது யோகா வகுப்பில் சேருங்கள்

புதிதாக ஒரு விடயத்தை முயற்சிப்பதில் எந்தத் தீங்கோ தவறோ கிடையது. சுவாரஷ்யமான நடன வகுப்பு அல்லது நிதானமான யோகா அமர்வை ஒரு கணம் முயற்சி செய்து பாருங்கள். யார் அறிவார்கள், இது உங்களுக்கு ஒரு புதிய பழக்கத்தின் தொடக்கமாகக் கூட இருக்கலாம். ஏராளமான யோகா பயிற்றுவிக்கும் நிலையங்கள் கொழும்பில் உள்ளன. ஒருவருக்கு 1,000 ரூபாய்க்கும் குறைவாகவே கட்டணம் அரவிடப்படுகின்றது. பெண்கள் மட்டும் என்றால் நடனக் கலைஞர் கியோஷி பெரேராவின் வகுப்பை முயற்சித்துப் பார்க்க முடியும். ஒரு வகுப்பில் லத்தீன், ஹிப் ஹாப், ஆப்ரோ, மூவ்மென்ட் மற்றும் பாரம்பரிய நடனம் என ஐந்து ஸ்டைல்கள் கற்பிக்கப் படுகின்றன. பெண்களுக்கு மட்டுமான வகுப்பில் அருமையான அசைவுகள் கற்றுத் தரப்படுகின்றன. மேலும் நீங்கள் அதிக வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால் அவர் உங்களுக்காகவே மாதந்தோறும் பல வகுப்புகளை மேற்கொள்ளவும் தயாராக இருக்கிறார்.

17. சாய்வாலாவில் தேநீர் கொண்டாட்டம்

சூடான ஆறுதல் தரும் தேநீரையும் சுவையான பேஸ்ட்ரியையும் மெரின் டிரைவில் பார்த்து சுவைத்து மகிழுங்கள். இந்த இடம் இரவில் ஒளிர்கின்ற சில இதமான புகைப்படங்களை எடுக்க உதவுகின்றது.

18. Caramel Pumpkin இல் காஃபி டேட்

காஃபி பிரியர்களே, Caramel Pumpkin இற்கு செல்லுங்கள் அங்கு அவர்கள் சுவையான காஃபி மற்றும் காஃபி அடிப்படையிலமைந்த பானங்களை நியாயமான விலையில் வழங்குகிறார்கள்.

19) தெஹிவளை மிருகக்காட்சிசாலை

நீங்களும் உங்கள் துணையும் விலங்குகள் மேல் ஆர்வமாக உள்ளீர்களா? தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு செல்லுங்கள். இப்போது இரவு நேர வருகை அனுமதியையும் வழங்குகிறார்கள். இப்போது நிலவுகின்ற வெயிலுடன் கூடிய கால நிலைக்கு மிகவும் சாதகமானதாக இந்த அனுமதி இருக்கிறது.

20. கோள்மண்டலத்தைப் பார்வையிடுங்கள்

“என்னை சந்திரனுக்கு பறக்க விடுங்கள், நட்சத்திரங்களுக்கு இடையில் விளையாட விடுங்கள்” என்ற ஃபிராங்க் சினாட்ராவின் பாடல் எல்லா காலத்திலும் அதிகம் கேட்கப்பட்ட காதல் பாடல்களில் ஒன்றாக இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை கோள்மண்டலத்தை பார்க்கும்போது புரிந்து கொள்வீர்கள். கோள்மண்டலம் நிச்சயமாக அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடமாகும். இது ஒரு தனித்துவமான மற்றும் ஒரு வகையான புதுவித அனுபவத்தை வழங்குகிறது.

இதோ, இப்படி எல்லா விடயங்களையும் இப்போது நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள்! உங்கள் அன்பை பகிர்ந்துகொள்ளும் உங்கள் துணையுடன் சேர்ந்து வரும் மாதத்தை அற்புதமான மாதமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தேர்ந்தெடுங்கள்!

கொழும்பிலுள்ள சலூன்கள்  

2022 ஆம் ஆண்டு மலர்வில் ‘புதிய ஆண்டில் புதிதாய் நான்‘ என்பது அனைவரின் உதடுகளிலிருந்தும் வெளிவரும் வார்த்தையாகும்மேலும் ஒரு ஒப்பணையைத் தொடர்ந்து நீங்கள் பெறமுடியும் என்ற  நம்பிக்கையின் அளவை வெறுமனே வார்த்தைகளால் ஒப்பிட முடியாதுஎனவேகொழும்பில் உள்ள சில பிரசித்திப் பெற்ற சலூன்களைப் பட்டியலிடுவதற்கான  வாய்ப்பை  பெற்றுள்ளோம்சில விஷேட மற்றும் அதிக சலுகைகளுக்கு நீங்களும் தகுதியானவர்கள் தான்.!  

 

  1. Chagall Colombo   சாகல் கொழும்பு

பார்க் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள சாகல் கொழும்பில் ஒரு ஆடம்பரமான அனுபவத்தில் திளைக்கலாம்!
விலாசம்: 33 பார்க் வீதிகொழும்பு 00200
தொலைபேசி இலக்கம்: 077 735 3177
Instagram: https://www.instagram.com/chagall_park.st/  
(முன்பதிவுகளுக்கு DM செய்யவும்) 

 

2. Ramani Fernando Salons  ரமணி ஃபெர்னான்டோ சலூன்ஸ் 

ரமணி பெர்னாண்டோ சலூன்ஸ் இலங்கை சந்தைக்கு புதியதல்லஅது தமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த  அனுபவத்தை வழங்கிவருகின்றதுமேலும் கொழும்பு முழுவதும் பல கிளைகளை அமைத்து  சேவை வழங்கி வருகின்றது. 

விலாசம் (பிரதான கிளை): 32 எலிபங்க் வீதிகொழும்பு 00500 
தொலைபேசி இலக்கம்: 011 258 2176
Instagram: https://www.instagram.com/ramanifernando.salons/ 

 

3. Mosh  மொஸ் 

2022 ஆம் ஆண்டிற்கான உங்களின் தீர்மான பட்டியலில் உங்களைப் பற்றிய சுய அன்பும் ஈடுபாடு கொள்வதும் அதிகமாக இருந்தால்மொஸ் ஒரு மிக முக்கியமான ஒப்பணை அனுபவத்தை ஏற்படுத்தி தரும் இடமாகவுள்ளது. 

விலாசம்: 49/1 வார்ட் ப்ளேஸ் கொழும்பு 00700 
தொலைபேசி இலக்கம் 011 269 0549 
Instagram: https://www.instagram.com/mosh.lk/ 

4. Capello Salons  கெபெல்லோ சலூன்ஸ் 

நீங்கள் முற்றிலும் தெய்வீக உணர்வை அனுபவித்து சலூனை விட்டு வெளியே வர விரும்பினால்உண்மையில் கெபெல்லோ சலூன்கள் தான் செல்ல வேண்டும்மேலும் அது உங்களை அழைப்பதற்காகவே உள்ளது.! 

விலாசம் : 24 விஜேராம மாவத்தை கொழும்பு 00700
தொலைபேசி இலக்கம்011 250 2729
Instagram: https://www.instagram.com/capellosalonslk/  

5. Salon KESS  சலூன் கெஸ்  

சலூன் கெஸ் தனித்துவமானவர்களுக்காகவே A தரத்திலான ஒப்பணை அனுபவத்தை வழங்குகிறதுநிச்சயம் இதன் மேல் நீங்கள் கொண்ட உங்கள் ஆர்வத்தை நாங்கள் தடுக்கமாட்டோம்

விலாசம் : 3ம் மாடி, 10 ரொஸ்மெட் ப்ளேஸ்கொழும்பு 00700
தொலைபேசி இலக்கம்: 011 267 6855
Instagram: https://www.instagram.com/kess_salon/  

 

6. The Cutting Station  த கட்டிங் ஸ்டேஷன்  

உங்கள் தலைமுடியை நன்றாக பராமரிப்பதற்கும் உங்களை ஆடம்பரமாக வைத்துகொள்வதற்கும்  கட்டிங் ஸ்டேஷன் உதவுகிறது! 

விலாசம்: 65/கிருல வீதிகொழும்பு 00500
தொலைபேசி இலக்கம்: 011 258 8769
Instagram: https://www.instagram.com/thecuttingstationsl/  

 

7. Rumours  ரூமர்ஸ் 

அனைத்து ரூமர்ஸ்களும் உண்மைதான்அவர்கள் உங்களுக்கு அதிவிஷேட ஒப்பணையை வழங்கி சிறந்த சேவை அனுபவத்தையும் வழங்குவார்கள்.  

விலாசம்: 467 யூனியன் வீதி கொழும்பு 00200
தொலைபேசி இலக்கம் : 011 266 9898 / 077 340 2076
Instagram: https://www.instagram.com/rumours_sl/ 

 

8. Salon Liyo  சலூன் லியோ 

சலூன் லியோவுடன் உங்களுக்குள்ளிருக்கும் சிங்கத்தை கட்டவிழ்த்து விடுங்கள். 2022 ஆம் ஆண்டிற்கான சரியான மனநிலையை ஏற்படுத்தி இவ் ஆண்டிற்கான உங்கள் எல்லா இலக்குகளையும் வெற்றிகொள்ள இதுவே சரியான தருணம் 

விலாசம்இல.224 A ஹைலெவல் வீதி கொழும்பு – மட்டகளப்பு அதிவேக பாதைநுகேகொட 10250
தொலைபேசி இலக்கம் : 077 388 5122
Instagram: https://www.instagram.com/liyo_dhanushka/  

 

9. Salon 7th Avenue  7த் அவென்யு சலூன்  

கொழும்பு சிட்டி சென்டருக்கு நீங்கள் ஷொப்பிங் செய்யும்போது 7த் அவென்யு சலூனிற்கு ஒரு தடவை விஜயம் செய்து பாருங்கள்உண்மையான மகிழ்ச்சி அனுவபத்தை பெற்றுக்கொள்வீர்கள் 

விலாசம்கொழும்பு சிட்டி சென்டர்இரண்டாம் மாடி, 137 சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை கொழும்பு 00200
தொலைபேசி இலக்கம் 011 432 3347 / 077 731 1229
Instagram: https://www.instagram.com/salon_7th_avenue/  

 

10. Scalp Hair and Beauty  ஸ்கால்ப் ஹேர் என்ட் பியூட்டி  

உங்கள் தலைமுடியை பராமரிப்பது தொடர்பில் நீங்கள் ஒருபோதும் குழப்பமடையக்கூடாதுஇதற்காக ஸ்காப் ஹேர் என்ட் பியூட்டியிற்கு விஜயம் செய்யுங்கள் 

விலாசம் : 55 குருப்பு வீதிகொழும்பு 00800
தொலைபேசி இலக்கம் 077 315 8182
Instagram: https://www.instagram.com/salonscalp_/  

 

11. Cheveux Salon 

எப்போதாவது ஒருமுறை வெகுமதி அளிப்பது குற்றமல்ல! Cheveux Salon இன் இரு பாலினருக்குமான  கிளை கொழும்பு நகர மையத்தில் அமைந்துள்ளது. 

விலாசம் ; பர்னஸ் பிளேஸ் கொழும்பு 00700
தொலைபேசி இலக்கம் 011 720 7008
Instagram: https://www.instagram.com/cheveuxlk/ 

 

12. Salon Looks  சலூன்  லுக்ஸ்  

 சலூனின்  பெயருக்கு ஏற்ப  அனைவரும் வாழ்கின்றனர்அவர்கள் உங்கள்  தோற்றத்தை மேம்படுத்த விரும்புகிறார்கள்மிகவும் திடமாக நம்பிக்கையான  ஆற்றலைப் பெற உங்களுக்கு உதவுகிறார்கள்! 

விலாசம்: 259 ஹைலெவல் வீதிமகரகமஇலங்கை
தொலைபேசி இலக்கம்– 0112 160 770 /  075 770 5308
Instagram: https://www.instagram.com/lookssl_salon/  

 

13. BC Lifestyle Studio  பிஸி லைஃப் ஸ்டைல் ஸ்டூடியோ 

அழகியல் துறையில் பிரித்தானிய அழகு சாதனப்பொருட்கள் முன்னோடியாகத் திகழ்கிறது. வாழ்நாள் முழுவதற்குமான ஒரு ஒப்பணை அனுபவத்தை வழங்குவதற்காக அவர்கள் இருக்கிறார்கள் என்பது சொல்லி புரியத் தேவையில்லை 

விலாசம்: One Galle Face, LK 1 A , சென்ட்ரல் வீதி கொழும்பு 00200
தொலைபேசி இலக்கம் – 0112 422 588
Instagram: https://www.instagram.com/bclifestylestudios/  

 

14. The Chopping Block  த சொப்பிங் ப்லொக்  

ஒரு சிறந்த ஒப்பணைக்காக  சொப்பிங் ப்லொக்கிற்குச் சென்றுஉங்களின் தனித்துவத்தை உணர்ந்து வெளியே வாருங்கள்! 

விலாசம்– 1, 43 மெயிட்லண்ட் க்ரெஸ் கொழும்பு 00700
தொலைபேசி இலக்கம் : 011 576 6516
Instagram: https://www.instagram.com/thechoppingblock__/  

 

15. Scissors Salon  சிசர்ஸ் சலூன் 

சிசர்ஸ் சலூன்சில காலமாக அழகு துறையில் சிறந்த போட்டியாளராக தம்மை அடையாளப்படுத்தி வருகிறதுஎனவே உங்கள் புதிய தோற்றத்திற்கு அவர்களுடன் கைகோர்ப்பதற்கு சிறிதும் தயக்கம் கொள்ளாதீர்கள் 

விலாசம்: 300 ஹெவ்லொக் வீதி கொழும்பு 00500
தொலைபேசி இலக்கம்011 430 8967 / 011 488 8295
Instagram: https://www.instagram.com/scissorslk/  

 

16. The Hair Studio  த ஹேர் ஸ்டூடியோ  

 ஹேர் ஸ்டூடியோ உங்கள் தலைமுடியை அழகாக மாற்றுவதற்கும் இந்த ஆண்டில் உங்களுக்கு சிறந்த அழகுணர்வை வழங்கவும் வசதியாக அமைந்துள்ளது 

விலாசம்: 2, 6 சபஹா லேன்கொழும்பு 00500
தொலைபேசி இலக்கம் 0771623097
Instagram: https://www.instagram.com/thehairstudio_byanusha/  

 

17. You by The Wax Museum  யு பை த வெக்ஸ் மியூசியம் 

கவலைப்பட வேண்டாம்ஏனென்றால் அவர்கள் உங்களை உண்மையில் ஒரு மெழுகு உருவமாக மாற்ற மாட்டார்கள்இருப்பினும்உங்கள் தலைமுடியை நன்கு பராமரித்துக்கொள்வார்கள்நீங்கள் ஒரு ஷெம்பு விளம்பரத்தில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவார்கள்! 

விலாசம்-25/4  ஃபெர்ஸ் லேன் கொஸ்வத்த வீதி 10100
தொலைபேசி இலக்கம்: 072742 2200
Instagram: https://www.instagram.com/you_by_thewaxmuseum/ 

 

18. Medusa Ceylon  மெதுஷா சலூன்  

பதற்றப்பட வேண்டாம்அவர்கள் உங்கள் தலைமுடியை பாம்புகள் நிறைந்த தலையாக மாற்ற மாட்டார்கள்ஆனால் அவர்கள் உங்கள் தலைமுடிக்கு தேவையானகவனிப்போடு நடத்துவார்கள்அது பாம்பு தோலைப் போலவே மிகவும் மென்மையாய் இருக்கும். 

விலாசம்ஆர்கேட் சுதந்திர சதுக்கம் , சுதந்திர சதுக்கம் கொழும்பு 00700 
தொலைபேசி இலக்கம்: 0115 616 161
Instagram: https://www.instagram.com/medusaceylon/ 

 

19. Base Hair and Nail Studio  பேஸ் ஹேர் என்ட் நெயில் ஸ்டூடியோ 

சற்று இளைப்பாருங்கள்உங்கள் தலைமுடிக்கு வாழ்நாள் முழுவதற்குமான ஆடம்பர சிகிச்சையை பேஸ் ஹேர் என்ட் நெயில் ஸ்டூடியோ உங்களுக்கு அளித்திடும் 

விலாசம்ஷொப் இலக்கம் 202, 2ம் மாடிகொழும்பு சிட்டி சென்டர், 137 சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தைகொழும்பு 2
தொலைபேசி இலக்கம்: 077 716 4499 011 711 2345
Instagram: https://www.instagram.com/base_hair_and_nail_studio/  

 

20. Christell Cutting Station கிறிஸ்டல் கட்டிங் ஸ்டேஷன்  

One Galle Face இல் ஒரு நாள்  முழுவதுமாக  ஷொப்பிங்  செய்த  பிறகுகிறிஸ்டெல் கட்டிங்  ஸ்டேஷனுக்கு  உங்கள்  பயணத்தை  தொடங்கலாம்ஏனெனில்  அவர்கள் உங்கள் தலைமுடியை  அழகாகவும், பளபளப்பாகவும்  மாற்றுகிறது.
(எங்கள் கருத்துக்களை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்று நம்புகிறேன்)  

விலாசம்One Galle Face   LK 1 A சென்ட்ரல் வீதி , கொழும்பு 00200 
தொலைபேசி இலக்கம் : 0117 499 299
Instagram: https://www.instagram.com/christellcuttingstation/  

 

 21. Gavin Ryan’s Salon & Spaகவின் ரெயான்ஸ் சலூன் என்ட் ஸ்பா  

நிறைவான கூந்தலை பெறுவது எப்படிஅதற்கான விடை கவின் ரெயான்ஸ் சலூனிடமே உள்ளது 

விலாசம்இல 08, ஆர்கெட் , சுதந்திர சதுக்கம் , கொழும்பு 
தொலைபேசி இலக்கம் : 077 300 0651
Instagram: https://www.instagram.com/gavinryansalon/ 

 

22. Leena Hari Salon லீனா ஹரி சலூன் 

உங்கள் தலைமுடியை பராமரிப்பதற்காகவே தனித்துவமான உத்திகளை கையாளும் லீனா ஹரி சலூன் இந்த ஆண்டில் நீங்கள் மிக அழகானவர் எனும் எண்ணத்தை உருவாக்கும் 

விலாசம்: 60 எட்மொன்டன் வீதிகொழும்பு 00500
தொலைபேசி இலக்கம்: 076223 4776
Instagram: https://www.instagram.com/leenaharipromakeup.hair.beauty/  

 

23. Tresses by Sameera  ட்ரெஸஸ் பை சமீரா 

ஒரு சிறந்த சலூனில் சேவை அனுபவத்தை பெற்றிடவும் எப்போதவது ஒருமுறை உங்களை நீங்களே மகிழ்விக்கவும் இங்கு செல்லலாம். 

விலாசம் : 158 , காலிவீதிகொழும்பு 04
தொலைபேசி இலக்கம்: 0766660405
Instagram: https://www.instagram.com/tresses_by_sameera/ 

  

24. The Rush Hair Salon  த ரஸ் ஹேர் சலூன் 

உங்கள் இரசனைக்கேற்றவொரு சலூனைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் தான்ஆனால் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய  ரஸ் ஹேர் சலூன் எப்போதும் தவறியதேயில்லை. 

விலாசம்கொழும்பு– மட்டகளப்பு அதிவேகவீதிநுகேகொடை
தொலைபேசி இலக்கம்– 011 219 9299
Instagram: https://www.instagram.com/the_rush_hair/  

 

25. JAAL salon  ஜால் சலூன்  

ஜால் சலூன் உங்களுக்கு சிறந்த சலூன் அனுபவத்தை வழங்க கடமைப்பட்டுள்ளதுஉங்கள் ஒவ்வொரு ஒப்பணைக்கு பிறகான ஒவ்வொரு நாளும் சிறந்த நாளாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள். 

விலாசம்இல. 15யு மெயின்ட்லேன்ட் க்ரெசென்ட் கொழும்பு 00700
தொலைபேசி இலக்கம்: 011 488 9898
Instagram: https://www.instagram.com/jaalsalon/  

 

26. Toni & Guy டொனி என்ட் காய் 

டொனி என்ட் காய் இற்கு ஒரு முறை விஜயம் செய்து பாருங்கள்அவர்கள் உங்கள் தலைமுடியை அழகாக மாற்றும் மாயாஜால வித்தையை காண்பீர்கள்உங்களுக்கு தேவையான ஒப்பணைகள் முழுமையாக பூர்த்தியானதன் பின்னர் எந்தவொரு குறையையும் நீங்கள் உணரமாட்டீர்கள் 

விலாசம்: 65b, R.G..  சேனாநாயக்க மாவத்தை கொழும்பு 00700
தொலைபேசி இலக்கம் 0112 102 015
Instagram: https://www.instagram.com/toniandguysl/ 

 

27. Mane Studio  மேனி ஸ்டூடியோ 

உங்கள் அலங்கார ஒப்பணைகளை மேனி ஸ்டூடியோவிடம் ஒப்படையுங்கள்இங்குள்ள நிபுணர்கள் உங்கள் தனித்துவத்தை உணரச்செய்யும் அழகுக்கலையை உங்களுக்கு வழங்குவார்கள் 

விலாசம்வைட் ஹவுஸ் ரெசிடென்ஸ், 265/2 R.A. டி மெல் மாவத்தை கொழும்பு 00300 
தொலைபேசி இலக்கம்: 077 306 6955
Instagram: https://www.instagram.com/manestudiosl/  

 

28. Naturals  நெச்சுரல்ஸ்  

இந்த யுனிசெக்ஸ் சலூன் உங்கள் மனதிற்குள்ளேயும் வெளிதோற்றத்திலும் உங்களை ராணி மற்றும் ராஜாக்களாக முழுமையாக உணரவைக்கும் 

விலாசம் : 290 ஜோர்ஜ் R .டி சில்வா மாவத்தை கொழும்பு 01300
தொலைபேசி இலக்கம்: 0112 444 160
Instagram: https://www.instagram.com/salonnaturals_unisex_salon/ 

 

29. Aweera Hair and Beauty அவீரா ஹேர் என்ட் பியூட்டி  

அவீரா ஹேர் எண்ட் பியூட்டி சலூனின் திறமையான நிபுணர்களின் கைகளால் உங்கள் இயற்கை அழகை மேம்படுத்திமென்மையான மற்றும் நிறைவான அழகிய கூந்தலைப் பெற்றிடுங்கள் 

விலாசம்இல. 220/1, செலோமன்பீரிஸ் வீதிதெஹிவளை–  மௌண்ட் லவண்யா  10350
தொலைபேசி இலக்கம் 0112727285/ 0771869676
Instagram: https://www.instagram.com/aweera_hairandbeauty/  

 

30. Salon Luminaire  சலூன் லுமினேய்ரி 

சலோன் லுமினேயரில் உள்ள நிபுணர்களின் மேஜிக் கைகளால் உங்களுக்கு செய்யப்பட்ட அலங்காரத்திற்குப் பிறகு வெளிப்படும் அழகிய உங்கள் கூந்தலை உங்கள் நண்பர்களுக்குக் காட்டுங்கள்! 

விலாசம்: 452 திம்பிரிகஸ்யாய வீதி கொழும்பு 00500
தொலைபேசி இலக்கம்: 0112 081 992
Instagram: https://www.instagram.com/salonluminaire/  

 

 

 

 

 

 

 

 

அண்ணன்-தங்கை அலப்பறைகள்

எந்த திரைப்படத்திலும் நாடகங்களிலும் ஏன் குறுந்திரைப்படங்கள் ரீல்ஸ் என எந்த ஊடக படைப்புகளை எடுத்துக் கொண்டாலும் அதிகம் குறும்பு நிறைந்ததாகவும் பாசம் பொங்கி வழிவதாகவும் சித்தரிக்கப்படும் உறவுகளில் அண்ணன்-தங்கை உறவும் ஒன்று. அண்ணனுக்காக தங்கை துடிப்பதும் தங்கைக்காக அண்ணன் துடிப்பதும் என பார்ப்பவர்களின் மனதினை கொத்தாக பறித்து சென்று விடுகிறது. இந்த கதாபாத்திரங்களின் பாசப் போராட்ட காவிய வசனங்கள். ஆனால் நிஜ வாழ்வில்… டொம் & ஜெரி கார்ட்டூன் தான். இதை வாசிக்கும் போது நீங்கள் நகைத்தாலும் உண்மை அதுவே. அதாவது திரைப்படத்தில் வருவது போல் “நீங்க நம்பலனாலும் அதான் நிசம்”. “சரி சிரித்தபடி வர்ணித்தது எல்லாம் போதும் தலைப்புக்கு வா!” என மனதில் திட்டி தீர்க்காதீர்கள்! தலைப்புக்கு போகலாம் வாருங்கள்.

பொதுவாக சகோதர பாசம் எதிர்பாலினராக இருக்கும் பந்தங்களுள் அதிகமாக இருக்கும். அதாவது அக்கா – தங்கையை விட அக்கா – தம்பி உறவில் பாசம் கூடுதலாக இருக்கும், அண்ணன்-தம்பி உறவை விட அண்ணன்-தங்கை உறவில் பாசம் அதிகம். பொறுமையாக கதையினை கேளுங்கள். பாசம் மட்டுமல்ல முட்டி கொள்ளும் அளவும் அதிகம் தான். அவர்களுள் வரும் சண்டைகளும் அவர்கள் செய்யும் அலப்பறைகளும் எண்ணிலடங்காதவை. இந்த பதிவில் அண்ணன் – தங்கை பந்தத்தில் உள்ள அலப்பறைகளை அலசுவோம் வாருங்கள்.

பாசமலர்கள் – எத்தனையோ அண்ணன்-தங்கை படங்கள் வந்தாலும் அந்த காலத்து சிவாஜி சாவித்திரியின் பாசமலர்கள் படத்தை தான் இன்று வரை நாம் அந்நியோன்யமாக இருக்கும் அண்ணன்-தங்கை உறவுகளை உருவகிக்க பயன்படுத்துகிறோம். அது ஏன்? சரி அதற்கான பதிலை தேடுவதற்கு முன் சமீபத்தில் வெளி வந்த ‘அண்ணாத்த’ படத்தினை சிந்தித்து பார்ப்போமா? திரையரங்குகள் காலியாக ஓரிருவர் மட்டும் அமர்ந்து பார்க்கும் படியாக அந்த திரைப்படம் மாறி விட்டது. இப்போது இதனை சொல்ல காரணம் அதிகளவிலான பாசத்தினையும் சென்டிமென்ட் வசனங்களையும் திரைப்படத்தில் எவ்வளவு பெரிய நடிகர் வந்து பேசினாலும் நமக்கு அலுத்து விடுகிறது. காமெடியாக தெரிகிறது. இப்போது தெரிகிறதா ஏன் நாம் பாசமலர்கள் படத்தினை உவமையாக கூறுகிறோம் என்று… ஏனெனில் நமக்கே தெரியும் அவ்வாறான அளவுகடந்த சென்டிமென்ட்டான அன்பு அண்ணன்-தங்கை எவருமே இல்லை. அது வெறும் கதை. அதனால் தான் நாம் அந்நியோன்யமான அண்ணன்-தங்கையை கண்டவுடன் “சரி… சரி… நடிக்காதிங்க” என கூறுவதற்கு பதிலாக “பாசமலர்கள் சிவாஜி-சாவித்திரியையே மிஞ்சிருவிங்க போலயே” என கூற தொடங்கி விட்டோம். இது ஓர் வகையில் வஞ்ச புகழ்ச்சி தான் என்பது கூட அறியாத அப்பாவிகளும் உண்டு.

ரிமோட் சண்டை – அதிகளவில் அண்ணன்-தங்கைக்கு இடையில் வருவது இந்த ரிமோட் சண்டை தான். அது ஏன்? இருவரும் எதிர்பாலினர் ஆகையால் அவர்களது இரசனையிலும் அதிகளவிலான வேறுபாடுகள் இருக்கும். அதுவும் இப்போது இருக்கும் சந்ததியினர் தொலைபேசி தொலைகாட்சி என மூழ்கி கிடக்கும் இயந்திர தாசர்கள். அதனால் சரியாக தங்கைக்கு பிடித்த சினிமா பாடல் போகும் போது அண்ணனுக்கு பிடித்த மெட்சில் இறுதி சுற்று போய்க் கொண்டிருக்கும். சரி அதன் பிறகு வீட்டில் அந்த ரிமோட் படும் அவஸ்தையினை சொல்லவா வேண்டும்.

காதலுக்கு தூது – அண்ணன் காதலுக்கு தங்கைகள் உதவி செய்ய மறுப்பதில்லை. ஆனால் அதற்கு பதில் தமக்கு பிடித்த விடயங்களை சன்மானமாக வாங்கி கொள்வார்கள். அதுவும் அதிகார தொனியுடன். இது இவ்வாறு இருந்தாலும் தங்கை யாரையும் காதலிப்பதாக இல்லை. இல்லை நட்போடு ஒரு ஆணோடு பழகுவது தெரிந்தால் கூட அந்த உறவினை முறிக்கும் எமனாக அண்ணன்கள் உருவெடுத்து விடுவார்கள். அதற்கு காரணத்தை கேட்டால் “அவன் என்ன மைன்ட் செட்ல இவளோட பழகுவானு எனக்கு தான் தெரியும்” என டயலோக் விடுவார்கள்.

அண்ணனுக்கு உடை இல்லை – இப்போது பெண்கள் அணியும் உடைகளாக அனைத்தும் மாறி வருகிறது. அதனால் அண்ணனின் உடைகளில் தனக்கு பொருத்தமாக அழகாக இருக்கும் உடைகளை கூட அவர்கள் விட்டு வைப்பதில்லை, எடுத்து அணிந்து விடுவார்கள். அதன் பின் அது அவர்களுக்கு தானாக சொந்தமாகி விடும். அது ஏனென்றால் அண்ணனின் மனநிலை அவ்வாறானது ஏனெனில் “இவ போட்டு வெளிய போன ட்ரஸ நான் எப்டி போட்டு போறது? என்ன அப்றம் பொம்பள புள்ள ட்ரஸ் போடுறேனு சொல்லுவாங்க” என கூறி சண்டையை தொடங்குவான். அண்ணனால் பலி வாங்கலின் பொருட்டு தங்கையின் உடையை அணிந்து செல்ல இயலாது. அதனாலோ என்னவோ இறுதியில் ஆடை பற்றாக்குறை வருவது அண்ணனுக்கே! இதனால் வாக்குவாதம் வருவதும் தங்கை அடி வாங்குவதும் காலப்போக்கில் அவளுக்கு பழகி போய் விடுகிறது அதனால் அடியும் வார்த்தையும் எந்தவொரு மாற்றமும் தரப்போவதில்லை.

சாப்பாட்டு சண்டை – ஒவ்வொரு வீட்டிலும் பெண் பிள்ளையை விட ஆண் பிள்ளைக்கு இறைச்சி, மீன், முட்டை அதிகமாக பரிமாறப்படுவது வழக்கம். அதற்கு மறைமுகமான காரணம் அந்த குடும்பத்துக்காக எதிர் வருங்காலங்களில் காலநிலை மாற்றம் பாராது அயராது உழைக்க இருப்பவன் அவன் தானே என்ற பரிதாபமும் பாசமும் கலந்த பெற்றோரின் மனநிலை. இது பெண் பிள்ளைகளுக்கு தெரிவதில்லை. அவர்கள் எனக்கு வேண்டும் என கேட்பதில்லை. “இருக்கத எல்லாம் அவன் தட்டுலயே வைக்றிங்க எனக்கும் வைங்க” என்று தான் கேட்பார்கள். இங்கு ஆரம்பமாகும் சண்டை கேலியில் வளர்ந்து சில சமயம் இருவரும் பட்னியாக உறங்கும் நிலை உருவாக காரணமாகிறது.

பெண்ணியம் பேசுவமா? – இன்றும் வீட்டில் பெண் பிள்ளை தான் வேலை செய்ய வேண்டும், பெண் பிள்ளைகள் மாலை ஆன பின் வெளியில் செல்ல அனுமதிக்கபடாமை என பல வழக்கங்கள் நடைமுறையில் உள்ளது. அண்ணனோடு பிறந்தாலே அந்த பெண் வாய் சண்டையில் திறன் படைத்தவளாக இருப்பாள். அவளிடம் இவற்றை நடைமுறைபடுத்த முயல்கையில் அரங்கேற இருக்கும் விவாதங்கள் பற்றி கூறவா வேண்டும். அதுவும் அவளுக்கு அவளுடைய அண்ணனை வேலை வாங்காமல் வளர்ப்பதும் மாலையில் வெளியில் அனுமதிப்பதும் வாதத்தில் வெற்றி பெறுவதற்கு முன் வைக்கப்படும் ஒப்பிடல் சாட்சிகளாக மாறி விடுகிறது. இறுதியில் அவள் பெண்ணியத்திற்கு தனியே குரல் கொடுத்து ஓய்ந்து போகும் அளவிற்கு அவளது அண்ணன் பெற்றோர் காதில் கேட்கும் கேட்காதபடி இருக்க ஐடியா கொடுத்து வைத்திருப்பான். இந்த சண்டையில் தோல்வி தங்கைக்கே. ஒரு வேளை அண்ணனை காக்கா பிடித்து முயன்றிருந்தால் வெற்றி பெறலாமோ என்னவோ!

அப்பாவும் தங்கையும் ஒரு கட்சி – அண்ணனுடன் ஏற்படும் சண்டைகளில் தோல்வி அடைவதாக தெரிந்தாலோ அல்லது அண்ணன் அதிகமாக கேலி செய்வதால் பொறுமை இழந்தாலோ உடனே அடி வாங்காமலயே கையை பிடித்து கொண்டு “அப்பா…. அண்ணா அடிக்றான்ப்பா…. ஐயோ அடிக்காத அண்ணா… வலிக்குது….” என முதலை கண்ணீர் வடித்து கதறியழுவார்கள். இதை அறியாத அப்பாவி அப்பாக்கள் அண்ணனை வெளுத்து வாங்குவார்கள். ஆமாம். அது ஏன் அப்பா? ஏனென்றால் அம்மாக்கு தான் மகளின் நாடகம் தெரியுமே. அது எவ்வாறெனில் ஒரு பெண்ணின் மனது ஒரு பெண்ணுக்கு தானே தெரியும்.

அண்ணனுக்கு பிடித்த சமையல் – அப்பாக்கள் எப்படி மகளின் கட்சியோ அம்மாக்கள் மகனின் கட்சி. அப்பாவை பகைத்தால் பொக்கெட் மணி கட் ஆகும் ஆனால் அம்மாவை பகைத்தால் உப்பு உரைப்பில்லாத சோறு தான். அம்மாக்களின் அதிகாரம் சமையலறை தானே. எப்போதும் வீட்டில் அம்மாக்களின் செல்ல மகன்களுக்கு பிடித்த சாப்பாடு தான் அனைவருக்கும் சமைக்கப்படும். இது தங்கைகளுக்கு பொறாமை தீயில் வாட்டி வதங்கிடும் சூழல் அமைத்து கொடுக்கும் ஆனால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது அப்பா அடித்த போது அம்மா அமைதியாய் இருந்தாற் போல் இப்போதும் அமைதியாய் சாப்பிட வேண்டியது தான்.

அண்ணனுக்கு சப்போர்ட் – அண்ணன் செய்கிற சிறிய சிறிய தவறுகளை எல்லாம் தவறில்லை என வாதிட்டு காப்பாற்றும் வக்கில்களாக அம்மாக்கள் மாறி விடுகிறார்கள். ஆனால் மகளின் தவறுகளை துப்பறிந்து கோர்த்து விடும் துப்பறிவாளர் ஆக செயற்படுகிறார்கள். இதற்கு காரணமாக பலவற்றை கூறலாம். ஆனால் தலைப்பு திசைமாறி சமூக சமத்துவம் பற்றி பேசுவதாக மாறி விடும்.

தங்கையின் தோழிகள் – தங்கையின் அழகான தோழிகளின் இலக்கத்தை திருட்டுதனமாக எடுத்து பேசி மாட்டிக் கொள்ளும் போது அண்ணனின் மூக்கு உடைக்கப்பட்டு அடிக்கடி பயமுற்று தங்கை கேட்பதை எல்லாம் செய்யும் அடிமையாக மாற்றப்படுகிறான். அதே போல் தங்கை அண்ணனின் நண்பர்களுடன் கதைத்தால்… அதற்கான வாய்ப்பு குறைவு தான் ஏனெனில் அவள் அவளது அண்ணனையே ஒரு பொருட்டாக மதிப்பதில்லை அவ்வாறு இருக்கையில் எப்படி?

அண்ணன் கல்யாணம் – தங்கையின் சிறகுகள் 25 இல் உடைக்கப்பட்டு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கல்யாண கூண்டுக்குள் தள்ளப்படுகிறது. ஆனால் அண்ணனுக்கு அவன் எப்போது அதைப் பற்றி சிந்திக்கிறானோ அப்போது தான். இது ஒவ்வொரு பெண் பிள்ளையும் பொறாமை கொள்ளும் விடயம். அத்தோடு அண்ணனின் காதலுக்கு எளிதில் பச்சை கொடி காட்டும் பெற்றோர் தங்கைகளின் காதலுக்கு ஒரு கையில் சிவப்பு கொடியும் ஒரு கையில் விஷ போத்தலும் ஆக காட்சியளிப்பார்கள். வாசிக்கையில் வேடிக்கையாக தோன்றலாம். ஆனால் இது நாம் சிந்தித்து மாற்ற வேண்டிய ஒன்று.

தங்கையை சைட் அடிப்போர்களுக்கு – அண்ணனிடம் வந்து தன்னிடம் வம்பு செய்யும் ஆடவர்கள் பற்றி புகார் அளிக்கையில் “நீ உன் வாய திற ஓடிருவான்” என கேலிக்கு உள்ளாக்கப்பட்டு தங்கை திரும்ப அனுப்ப படுகிறாள். ஆனாலும் தங்கையை விட்டு கொடுக்காது மறைமுகமாக அந்த ஆடவர்களை கண்டிப்பதும் உண்டு.

இவ்வாறாக அண்ணன் தங்கைகள் செய்யும் அலப்பறைகள் ஏராளம். எந்தளவுக்கு முரண்பாடுகளும் சண்டைகளும் சினமும் அதிகமாக உள்ளதோ, அதே அளவிலான பாசமும் பிணைப்பும் அவர்களிடையே உண்டு. ஒருவரை ஒருவர் எப்போதும் விட்டு கொடுக்க மாட்டார்கள். திருமணத்தின் பின் கூட தங்கைக்கு ஒரு துயரமென்றால் அண்ணனும், அண்ணனுக்கு ஒரு துயரமென்றால் தங்கையும் தான் முன் சென்று உதவுவது அதிகம். சகோதர பந்தங்கள் தொப்புள் கொடியினால் மட்டுமல்ல பாசத்தின் பிணைப்பாலும் உருவாகலாம். எது எவ்வாறு இருப்பினும் ஆரம்பத்தில் சொன்னது போல் அவர்கள் டொம் & ஜெரி என்ற கார்ட்டூன் கதாபாத்திரம் போன்றவர்களே. ஒருவர் இல்லாது இன்னொருவர் ஓர் நொடியினை கடத்தலும் கடினம் தான்.

கொழும்பில் நடக்கும் கிறிஸ்துமஸ் நிகழ்வுகள்

கொவிட் 19 தொற்றுநோய் கடந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நம்மிடமிருந்து பறித்துக்கொண்டமைக்கு   ஒரு கணம் மௌனமாய்  இருப்போமாக.! 

இவ் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை வரவேற்க அனைவரும் உற்சாகமாய் காத்திருக்கிறோம்உண்மையில் யார்தான் இப்படி இருக்க மாட்டார்கள்? 

கெரோல் கீதங்கள்பண்டிகைக்கால  உணவுகள்பரிசுகள்அழகான நினைவுகள் என இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை காலமானது பிரகாசமான விளக்குகள்மதுபானங்கள்ஷொப்பிங் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்துகிறது.

நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்எதிலிருந்து  தொடங்குவது என்பதில் உங்களுக்கு  குழப்பமாகொழும்பைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் நாடி உங்களுக்காகவே அறியத்தருகிறதுஇன்னும் பல தகவல்களை மேலும் இதில் உள்ளடக்குவோம் 

பொழுதுபோக்கு அம்சங்கள்  

லிடியா என்ட்  திலகா

எப்போது – டிசம்பர் 25 வரையில் பி.ப  மணி   பி.ப  8 மணி 
எங்கே – லொபிஹில்டன் கொழும்பு 

உங்களை மாயாஜால கிறிஸ்மஸ் உலகிற்கு கொண்டு செல்ல இசையை போன்றதொரு சிறப்பம்சம்  வேறெதுவும் இல்லை. கணவன் லிடியா மற்றும் அவரது மனைவி திலகா இருவரும் சேர்ந்து கொழும்பு ஹில்டன் லாபியில் வயலின் மற்றும் புல்லாங்குழலின் இனிமையான இசையோடு  பனிவீசும்  அதிசய  குளிர்கால உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றனர்  . 

Hilton Colombo Offers A Smashing 50% Off In Celebration Of 33 Years In Sri Lanka - Press Releases | Daily Mirror

தாஜ் சமுத்ராவில் சோரோ காலிபர் 

எப்போது – டிசம்பர் 23பி.ப  மணி   – பி.ப  8.30 மணி

இவ் வருட கிறிஸ்துமஸில் உங்கள் அன்புக்குரியவருடன் ஒரு  பானங்கள் மற்றும் இரவுணவு அருந்தும் பொது இப் பாடகர் குழுவின் ஆத்மார்த்தமான குரல்கள் உங்களை மகிழ்வூட்டும். 

Christmas cheers at the Taj Samudra! | Daily FT

ஹில்டன் கொழும்பில் சோரோ காலிபர்

எப்போது – டிசம்பர் 24
எங்கே – கொழும்பு ஹில்டன்  லொபி 

தாஜ் சமுத்திராவில் இந்த திறமையான பாடகர் குழுவின் நிகழ்வை நீங்கள் தவறவிட்டால் வருத்தப்பட தேவையில்லைகிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பொது ஹில்டன் கொழும்பு லாபியில் பானங்களையும்  உணவுகளையும் அனுபவித்துக் கொண்டே நிகழ்வை கண்டுகளிக்கலாம்.

Hilton Colombo  

சன்செட் ப்ளூவில் ஒரு மேரி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

எப்போது – டிசம்பர் 24
நேரடி இசை பி.ப  மணி முதல் (கோல்ட் ஸ்வெட் )
இரவுணவு – பி.ப  மணி   – மு.ப   மணி  

எப்போது – டிசம்பர் 25
நேரடி இசை –   பி. மணி முதல் (OIC)
மதிய உணவு – பி. 12 மணி  –  பி.2.30 மணி
இரவுணவு – பி. 7 மணி   – மு.ப   மணி


உங்கள் எண்ணத்திற்கு ஏற்றவாறு
உண்ணுங்கள்பருகுங்கள்நடனமாடுங்கள்மகிழ்ச்சியாக இருங்கள்! இசைக்குழுக்களுடன் இணைந்த  கிறிஸ்துமஸ் மரத்தைச் சுற்றியுள்ள  ருசியான பருவகால காக்டெய்ல்களின் நட்சத்திர வரிசையுடன்சன்செட் ப்ளூ இந்த ஆண்டு கிறுஸ்துமஸை வெகுவிமர்சையாக்குகிறது.

Hilton Colombo 

கிறிஸ்துமஸின்  12 நாட்கள்

எப்போது – பண்டிகை காலம் முழுவதும்
எங்கே – த லவ் பார்  

இவ்  ஆண்டின் மிக அற்புதமான நேரத்திற்காகவே அவர்கள் வரிசைப்படுத்தியுள்ள  கில்லர் தொடர் நிகழ்வுகளுக்கு (Killer series) The Love Bar இன் Facebook பக்கத்துடன் இணைந்திருங்கள்!அடுத்தது பெண்களுக்கானது! பி.2 மணி முதல் பி. 11 மணி வரை இலவச பானங்கள் மற்றும் அற்புதமான DJ இசையை அனுபவித்திடுங்கள்.

Busy nights at The Love Bar, one of Colombo's most favored drinking venues - Picture of The Love Bar, Colombo - Tripadvisor

ஃபங்கி ஃபெஸ்ட்

எப்போது – டிசம்பர் 17
எங்கே – ஃபெர்னிடம்  கேளுங்கள் 

இக் கொண்டாட்ட காலத்திற்கேற்ற சரியான நேரத்தில், சரினி மற்றும் கிளிஃபோர்ட் ஐசக்  சில  சிறந்த  ட்யூன்களை இசைக்கிறார்கள். இது நிச்சயமாக ஒரு பண்டிகை கொண்டாட்டம் நிறைந்த வெள்ளிக்கிழமையாக இருக்கும்! 

 

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்  

எப்போது – டிசம்பர் 24
எங்கே –  த  சில்லர்  ரூம்  

Dirty Dzn மற்றும் Mercue சில பண்டிகை ட்யூன்களை இசைப்பதால், இந்த கிறிஸ்துமஸ் நிகழ்வு  நிச்சயமாக மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும்! 

The Chiller Room (Colombo) - 2021 All You Need to Know BEFORE You Go (with Photos) - Tripadvisor 

 ரீடைல்  தெரோபி 

 கொழும்பு ஷொப்பிங் திருவிழா 

எங்கே – BMICH
எப்போது – டிசம்பர் 18 – டிசம்பர் 22, 
மு.ப   10   – பி. ப 10 மணி 

இவ் ஆண்டில்  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷொப்பிங் திருவிழாவில் 5 நாட்களும்  ஷொப்பிங்  செய்து மகிழுங்கள்! 

புதிதாக ஏதாவது ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால்   BMICH ஐப் பார்வையிடுங்கள்  அல்லது  நீங்கள் பரிசுகளை வாங்க வேண்டிய நபர்களின் மிகப்பெரிய பட்டியலைத் தெரிவு செய்யுங்கள்  

Lifestyle Exhibition-2017 at BMICH - Caption Story | Daily Mirror

 குழந்தைகள்

 Santa Chase

எப்போது – டிசம்பர் 20 – 24,
பி.ப  7 – பி.ப 9 மற்றும் டிசம்பர் 25,
பி.ப  12 – பி.ப 3 மற்றும் பி.ப  7 – பி.ப  9

எங்கே: ஹில்டன் கொழும்பில் லாபி மற்றும் கிரேஸ் கிச்சன் 

நீங்கள் அனைவரும் பெரியவர்களாக இருந்தாலும் சரி, இன்னும் சிறிய குழந்தையாக இருந்தாலும் சரி, சென்ட்டாவைப் பார்ப்பது உங்கள்  உற்சாகத்தை ஒருபோதும் குறைக்காது! ஹில்டன் கொழும்பில் உள்ள லாபி அல்லது கிரேஸ் கிச்சனுக்கு  உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். அல்லது இந்த ஆண்டு நீங்கள் குறும்பு செய்தீர்களா அல்லது நல்லவர்களாக இருந்தீர்களா என்பதைக் கண்டறிய உங்களை நீங்களே பரீட்சித்து பாருங்கள்  


கிட்ஸ் மஸ் 
எப்போது – டிசம்பர் 18
எங்கே – ஒன் கோல்  ஃபேஸ்  

இந்த ஆண்டு உங்கள் குழந்தைகளுக்கு உண்மையான விருந்தளிக்க கிறிஸ்மஸ் நடவடிக்கைகளில் இருந்து சிறப்பானவற்றை தேர்வு செய்யவும்! கிறிஸ்துமஸ் அட்டை தயாரிப்பது முதல் காகித கிறிஸ்துமஸ் மரங்கள் கட்டுவது வரை, ஒன் கேல் ஃபேஸ் அற்புதமான விளையாட்டு நிகழ்வுகளை  தயார் செய்து வைத்துள்ளது.  

இதோ மக்களே! இந்த கிறிஸ்துமஸ் விழா காலத்தில்  உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நீங்கள் ஈடுபடக்கூடிய அற்புதமான நிகழ்வுகள் மற்றும்  எதிர்வரவிருக்கும் நிகழ்வுகள்  எதையாவது  நாங்கள் தவறவிட்டோமா? அதனை உங்கள்  கருத்துகள் மூலம்  எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்! 

 

கசக்கும் பாகற்காய்; ஒளிந்திருக்கும் நன்மைகள்

கசப்பான பாகற்காயில் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யக்கூடிய பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது இரத்த சர்க்கரையை குறைப்பதோடு தொடர்புடையது என்றும், சில ஆய்வுகள் இது நீரிழிவு சிகிச்சையில் உதவும் என்று கூறுகின்றன.
கசப்பான பாகற்காய் ஒரு நிரப்பு அல்லது மாற்று மருந்தாக கருதப்படுகிறது. எனவே, கசப்பான பாகற்காயின் பயன்பாடு நீரிழிவு அல்லது வேறு எந்த மருத்துவ நிலையிலும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அங்கீகரிக்கப்படவில்லை.

கசப்பான பாகற்காய் மற்றும் நீரிழிவு பற்றி ஆராய்ச்சி என்ன சொல்கிறது?
பிட்டர் பாகற்காய் உடலின் இரத்த சர்க்கரையை குறைப்பதில் தொடர்புடையது. ஏனென்றால், கசப்பான பாகற்காய் இன்சுலின் போல செயல்படும் பண்புகளைக் கொண்டுள்ளது, இது குளுக்கோஸை ஆற்றலுக்காக செல்களுக்குள் கொண்டு வர உதவுகிறது.

கசப்பான பாகற்காயின் நுகர்வு உங்கள் செல்களில் குளுக்கோஸைப் பயன்படுத்தவும், அதை உங்கள் கல்லீரல், தசைகள் மற்றும் கொழுப்புக்கு நகர்த்தவும் உதவும். பாகற்காயின் உங்கள் இரத்த ஓட்டத்தில் முடிவடையும் குளுக்கோஸாக மாற்றுவதைத் தடுப்பதன் மூலம் உங்கள் உடலில் ஊட்டச்சத்துகளைத் தக்கவைக்க உதவலாம்.

கசப்பான பாகற்காய் இரத்த சர்க்கரையை நிர்வகிக்க முடியும் என்பதற்கான சான்றுகள் இருந்தபோதிலும், நீரிழிவு அல்லது நீரிழிவு நோய்க்கான அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை அல்லது மருந்து அல்ல.

 

பல ஆய்வுகள் கசப்பான பாகற்காய் மற்றும் நீரிழிவு நோயை ஆய்வு செய்துள்ளன. நீரிழிவு மேலாண்மைக்கு முலாம்பழத்தின் எந்த வடிவத்தையும் பயன்படுத்துவதற்கு முன்பு அதிக ஆராய்ச்சி நடத்த பரிந்துரைக்கப்படுகிறது.

கசப்பான முலாம்பழம் ஆரோக்கியமான மற்றும் மாறுபட்ட உணவின் ஒரு பகுதியாக உண்ணப்படலாம். உங்கள் இரவு உணவிற்கு அப்பால் கசப்பான முலாம்பழத்தை உட்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்

கசப்பான முலாம்பழத்தின் ஊட்டச்சத்து நன்மைகள்
காய்கறிகளின் பண்புகளைக் கொண்ட ஒரு பழமாக, பாகற்காயில் வைட்டமின் ஏ மற்றும் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இது மருத்துவ குணம் கொண்டதாக பல கலாச்சாரங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது

கசப்பான பாகற்காய் ஒரு வெப்பமண்டல காய்கறி ஆகும். இது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. இது அதன் கசப்பான சுவைக்காக அறியப்படுகிறது. பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக கருதப்படுகிறது. மிருதுவான தோல் கொண்ட சீன கசப்பான பாகற்காய் மற்றும் கூரான தோலைக் கொண்ட இந்திய கசப்பான பாகற்காய் உட்பட பல்வேறு வகையான காய்கறிகளை நீங்கள் காணலாம்.

கசப்பைக் குறைக்க பாகற்காயை குளிர்ந்த நீரில் பல மணி நேரம் ஊற வைக்கவும். வெட்டப்பட்ட பாகற்காயை ஒரு பெரிய கிண்ணத்தில் வைக்கவும், குளிர்ந்த நீரில் அதை மூடி வைக்கவும். பாகற்காயை 1 முதல் 3 மணி நேரம் ஊறவைக்க அனுமதிக்கவும், ஒவ்வொரு மணி நேரமும் தண்ணீரை மாற்றி, முடிந்தவரை கசப்பை நீக்கவும்.

பாகற்காயிலிருந்து கசப்பை நீக்கும் போது, ​​​​அதில் இருந்து கசப்பு சாறுகளை வெளியேற்றுவதற்கு உப்பு பெரிதும் உதவியாக இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், வெட்டப்பட்ட துண்டுகளை நிறைய உப்பு சேர்த்து தேய்க்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் துண்டுகளை மாற்றி, சமைப்பதற்கு முன் 20-30 நிமிடங்கள் இருக்க அனுமதிக்கவும்.

எண்ணம் போல் வாழ்க்கை

 

எண்ணம் போல் வாழ்க்கை
எண்ணம் போல் தான் வாழ்க்கை..!

அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கையல்ல. அமைவதை அழகாய் மாற்றுவதே வாழ்க்கை. அது உங்களின் எண்ணங்களில் தான் அடங்கியுள்ளது. உங்கள் எண்ணங்கள் நல்லதாக இருந்தால் நீங்களும் நல்ல பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் எண்ணங்கள் தீயதாக இருந்தால் நீங்கள் நல்ல பாதையை விட்டு விலகுகிறீர்கள் என்று அர்த்தம். ஒருவனுடைய நல் வாழ்க்கை அவனின் நல் எண்ணத்தில்தான் அடங்கியுள்ளது. எண்ணங்களில் நேர்மறையான எண்ணங்கள் எழுவதுமுண்டு. எதிர்மறையான எண்ணங்களும் எழுவதுண்டு. நேர்மறையான எண்ணங்கள் பலமான வலயம் போன்றது. எதிர்மறையான எண்ணங்கள் பயத்தை தரவல்லது ஆகவே எப்போதும் நேர்மறையாக சிந்தியுங்கள். நேர்மறை மற்றும் எதிர்மறையான எண்ணங்கள் என்றால் என்ன என்பதற்கு கீழுள்ள படத்தை பார்த்து இதோ ஒரு சிறிய உதாரணம்.

நீங்கள் எதுவாக நினைக்கிறீர்களோ அதுதான் உங்களுடைய உலகம். எதிர்மறையான எண்ணங்கள் நம்மை நிம்மதியாகவே வாழ விடாது. நேர்மறையான எண்ணங்கள் எவ்வளவு தான் நாங்கள் துயரத்தில் இருந்தாலும் நம்மை மகிழ்ச்சியாக வாழ வைக்கும். மேலுமொரு உதாரணத்தை பார்க்கலாம்.

இந்த படத்தில் இரு பக்கமும் இரு வேறு விதமான எண்ணங்கள் தென்படுகிறது.
எதிர்மறையான எண்ணத்தின் பக்கத்திலிருக்கும் தந்தை தன் மகனை பார்த்து ‘நீ நல்லா படிக்கலைனா கடைசில இப்படிதான் இருப்ப’ என்று வீதியைப் பெருக்கும் ஒரு தொழிலாழியை கை காட்டி சொல்கிறார். மற்ற பக்கத்தில் இருக்கும் தந்தை தன் மகனிடம் ‘ நீ நல்லா படிச்சா. இது போல இருக்கும் நிறையபேருக்கு நல்ல வாழ்க்கைய உருவாக்கி கொடுக்கலாம்’ என்று தன்னுடைய மகனின் மனதில் நல்ல சிந்தனையை விதைக்கிறார். நாம் மட்டும் நேர்மறையாக சிந்தித்தால் போதுமா? நம் குழந்தைகளுக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் அதைக் கற்றுத்தரவேண்டும்.
நல்ல சிந்தனைகளும்,குறிக்கோள்களும் நேர்மறையான எண்ணமிருப்பவர்களை சுற்றிக்கொண்டிருக்கும். அதாவது அவர்களைச் சுற்றியிருக்கும். ‘என்னால் முடியாது, வெற்றி கிடைக்காது’ என்றெல்லாம் தானே கணக்குப்போட்டு எண்ணிக்கொள்ளும் எதிர்மறையான எண்ணக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் தோல்விதான். நினைப்பு முழுக்க பயம் தான். நல்லதே நினைக்க நல்லதே நடக்கும் என்பதுபோல நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நீங்கள் விரும்பியதை உங்களை வந்து சேரும். உங்களால் முடியுமென்று எண்ணினால் நிச்சயம் முடியும். உங்களால் முடியாதென்று எண்ணினால் நிச்சயம் முடியாது தான். என்ன எண்ணுகிறோம் என்பதல்ல விஷயம். எப்படி எண்ணுகிறோம் என்பது தான் முக்கியம். உங்கள் எண்ணத்தை பொறுத்தே உங்கள் வாழ்க்கையும் அமைகிறது.நினைத்ததையும் என்றாவது ஒரு நாள் சாதித்து காட்டுவீர்கள் உங்கள் எண்ணங்கள் நேர்மறையானால்!

எண்ணிக்கை என்றுமே வாழ்க்கையை முடிவு செய்வதில்லை. எண்ணங்கள் தான் முடிவு செய்கிறது. எண்ணம் போலே வாழ்க்கை!

கொழும்பில் கிறிஸ்துமஸ் ஷொப்பிங்

பட்ஜெட் பட்டியல்

மஞ்சரி நுகெகொட (Manjari Nugegoda) (ரூபாய்500 இற்கும் அதிகமாக)

மஞ்சரி நுகெகொடயில் உள்ள மிகப் பெரிய ஷொப்பிங் நிலையமாகும். இங்கு வீட்டு பாவனை பொருட்கள் தொடக்கம் அலங்கார பொருட்களோடு ஆண், பெண் இரு பாலருக்குமான ஆடைகள் வரை கொள்வனவுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் இங்கு உங்கள் வீட்டுக்கு தேவையான அனைத்தையுமே கொள்வனவு செய்துக் கொள்ள முடியும். 

விலாசம்: 136, எஸ்.டி எஸ்.ஜெயசிங் மாவத்தை, நுகெகொட. 

மினிகுட் (Minigood) (ரூபாய்500 இற்கும் அதிகமாக)

 உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் க்யூட்டான பரிசுகளை அளிக்க விரும்பினால் மினிகுட் சரியான தேர்வாக இருக்கும். இங்கு க்யூட்டான அழகிய பரிசளிக்க கூடிய பொருட்கள் தொடக்கம் அழகுசாதன பொருட்கள் வரை உள்ளன. இவர்களது கிளைகள் ராஜகிரிய, தெஹிவள மற்றும் ஒன் கால் பேஃஸிலும் உள்ளது. 

பெவர்லி ஸ்ட்ரீட் (Beverly Street) (ரூபாய்500 இற்கும் அதிகமாக)

உங்கள் குடும்பத்துக்கு தேவையான ஷொப்பிங் செய்ய சிறந்த இடம் பெவர்லி ஸ்ட்ரீட் ஆகும். இங்கு ஆண், பெண் மற்றும் குழந்தைகளுக்கான டிரென்டி தயாரிப்புகள் உள்ளன. இதன் கிளைகள் பம்பலபிட்டிய மற்றும் ராஜகிரியவில் காணப்படுகின்றன. 

விலாசம்: 475/C, ஸ்ரீ ஜவர்த்தனபுர மாவத்தை, வெலிகட, ராஜகிரிய. 

பெக்டரி ஹவுட்லட் (The Factory Outlet) (ரூபாய்700 இற்கும் அதிகமாக) 

இங்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவின் பிரபலமான சாதாரண ஆடை ப்ராண்ட்கள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்துக் கொள்ளலாம். இதன் கிளைகள் ஜா-எல, கல்கிசை, பெலவத்த மற்றும் திம்பிரிகசாயவில் காணப்படுகின்றன. 

ஸ்டோரின் விலாசம்: 192, ஹெவ்லொக் வீதி, கொழும்பு. 

நோலிமிட் (NOLIMIT) (ரூபாய்700 இற்கும் அதிகமாக)

NOLIMIT | Shopping in Colombo 6, Sri Lanka

இலங்கையிலுள்ள பெரிய ப்ஃஷென் நிறுவனங்களில் நோலிமிட்டும் ஒன்றாகும். இதன் பெரிய ஸ்டோரானது பொரல்லையில் டி.எஸ்.சேனநாயக்க மாவத்தையில் அமைந்துள்ளது. இது உங்கள் பட்ஜெட்க்கு ஏற்ற தரமான பொருட்களை பெறக்கூடிய சிறந்த தெரிவாக இருக்கும். 

விலாசம்: டி.எஸ்.செனநாயக்க மாவத்தை, பொரல்ல.

த ப்ரான்ட்ஸ் வர்ஹவுஸ் (The Brands Warehouse) (ரூபாய்1,000 இற்கும் அதிகமாக)

வர்ஹவுஸ் பதினைந்து வருட கால அனுபவம் பெற்ற வோல்சேல் மார்க்கெட்டாகும். இங்கு உங்களுக்கு தேவையான ஆடைகளை உங்களது பட்ஜெட்டிற்குள் கொள்வனவு செய்துக் கொள்ளலாம். இங்கு ஆண் பெண் இருபாலருக்குமான ஆடைகளோடு குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் விளையாட்டு பொருட்களையும் உங்கள் அன்புக்குரியவருக்கு நீங்கள் பரிசாக வழங்குவதற்கான கிஃட் வௌச்சர்களையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்

விலாசம்: 25, காலி வீதி, வெள்ளவத்தை.

மினிசோ (Miniso) (ரூபாய்1,000 இற்கும் அதிகமாக)

ஜப்பானிய இலத்திரனிய, அழகுசாதன மற்றும் க்யூட்டான பரிசுப் பொருட்கள் என நல்ல தெரிவுகளை கொண்ட ஸ்டோராக மினிசோ திகழ்கிறது.  

விலாசம்: 525, யூனியன் ப்ளெஸ், கொழும்பு 02.

அப்டவுன் கென்டி (Uptown Kandy) (ரூபாய்1,000 இற்கும் மேலதிகமாக)

ஆண் பெண் இருவருக்குமான ஆடைகள், கைப்பைகள், காலணிகள் என அனைத்து வகையான பொருட்களையும் கொண்டுள்ள அப் டவுனானது உங்களுடைய கடைசி நிமிட கிறிஸ்துமஸ் ஷொப்பிங்கினை செய்யக் கூடிய இடமாகும். இங்கு ஷொப்பிங் செய்து களைப்படைந்தால் நீங்கள் அதே மாலில் உள்ள கஃபே இல் ரிப்ஃரெஷ் ஆகிக் கொள்ளலாம்.

விலாசம்: லிபர்டி ப்ளாஸா, இல. 14, இரண்டாம் மாடி, ஆர்.ஏ.டி மெல் மாவத்தை, கொழும்பு 03.

லேடி ஜே Lady J  (ரூபாய்850 இற்கும் மேலதிகமாக)

ஆண், பெண், குழந்தைகள் என அனைவருக்குமான ஆடைகளையும் கொள்வனவு செய்ய கூடிய இடமாகவும் உங்கள் குழந்தைகள் சென்டாவிடம் கேட்பதற்காக பட்டியலிட்டு வைத்துள்ள லிஸ்ட்டினை பூர்த்தி செய்யும் வகையில் கொள்வனவு செய்யக் கூடிய இடமாகவும் உங்கள் குடும்ப அங்கத்தவர்கள் ஒவ்வொருவருக்குமான பரிசினை கொள்வனவு செய்யக் கூடிய இடமாகவும் லேடி ஜே விளங்குகிறது. இவர்களது கிளைகள் பொரல்ல மற்றும் மஹரகமயில் உள்ளன. 

விலாசம்: 993, மருதானை வீதி, பொரல்ல.

ஸ்ப்ரிங் & சமர் (Spring and Summer) (ரூபாய்900 இற்கும் மேலதிகமாக)

உங்கள் வாழ்வில் மிகவும் முக்கியமான பெண்ணிற்கான பரிசினை தெரிவு செய்வதில் குழப்பம் கொண்டுள்ளீர்களா? அவ்வாறெனில் ஸ்ப்ரிங் என்ட் சமர் உங்களுக்கான சிறந்த தேர்வாக அமையும். இது இலங்கையின் பிரபலமான பெண்களுக்கான சிறந்த ப்ராண்ட்களில் ஒன்றாகும். இங்கு சாதாரண மற்றும் போஃர்மல் ஆடைகள் அனைத்தும் கிடைக்கின்றன. இவர்களது கிளைகள் நுகெகொட, வத்தளை, பாணந்துறை மற்றும் மஹரகமயில் உள்ளன

விலாசம்: 14/15A, ஆர்..டி மெல் மாவத்தை, கொழும்பு 05.

தி ஹவுட்லெட் ஸ்டோர் (The Outlet Store) (ரூபாய்1,000 இற்கும் அதிகமாக)

இங்கு ஆண் பெண் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், ஜுவலரிகள், வாசனை திரவியங்கள் மற்றும் கடிகாரங்களை கொள்வனவு செய்துக் கொள்ள முடியும்

விலாசம்: இல.142, பௌத்தலோக மாவத்தை, கொழும்பு 4.

Average 

ஹவுஸ் ஒப் பெஷன் (House of Fashion) (ரூபாய்1,500 இற்கும் அதிகமாக)

இலங்கையின் ப்ஃஷென் லேன்ட் மார்க்காகா திகழ்கிறது. உங்களது அனைத்து வகையான ஷொப்பிங் தேவைகளையும் நிறைவு செய்யக் கூடிய இடமாக திகழ்கிறது. இங்கு அனைத்துமே உங்களது பட்ஜெட்டிற்குள் கொள்வனவு செய்யக் கூடிய விலையில் கிடைக்கும். இவர்களது கிளைகள் பொரல்ல மற்றும் பம்பலபிட்டியில் உள்ளன. 

விலாசம்: 101, டி.எஸ்.செனநாயக்க மாவத்தை, கொழும்பு 8, பொரல்ல.

பெஷன் பக் (Fashion Bug) (ரூபாய்1,500 இற்கும் அதிகமாக)

இலங்கையின் ப்ஃஷென் முன்னோடி நிறுவனங்களில் இதவும் ஒன்று. இங்கு ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என அனைவருக்குமான தெரிவுகளை பெற முடியும். இவர்களது கிளைகள் மஹரகம, நுகெகொட, வெள்ளவத்தை, மொறட்டுவ, தெஹிவளைகல்கிசை, வத்தளை மற்றும் கொட்டாஞ்சேனையில் உள்ளன.  

கூல் ப்ளனட் (Cool Planet) (ரூபாய்1,500 இற்கும் அதிகமாக)

இங்கு வீட்டு பாவபை பாருட்கள், ஆடைகள் என அனைத்தும் கொள்வனவு செய்துக் கொள்ள முடியும். இங்குள்ள பொருட்களின் விலை அதற்கு பொருத்தமானதாகவே இருக்கும். கொழும்பில் பல இடங்களில் இவர்களது கிளைகள் காணப்படுகின்றன.  

விலாசம்: 61, இஸிபத்தன மாவத்தை, கொழும்பு 5.

அரியென்டி (Arienti) (ரூபாய்1,500 இற்கும் அதிகமாக)

இங்கு பெண்களுக்கான அழகாக வடிவமைக்கப்பட்ட ட்ரென்டியான பாவாடைகள், ஜம்ப் சூட் என அனைத்துமே கொள்வனவு செய்துக் கொள்ள முடியும்.

விலாசம்: 546, காலி வீதி, கொழும்பு 3.

ஜிப்ளொக் GFlock (ரூபாய்1,800 இற்கும் அதிகமாக)

புதிய மற்றும் காலத்திற்கேற்ப மாறிவரும் ட்ரென்ட்களுக்கு பொருத்தமான வகையில் வடிவமைக்கப்படும் ஆடைகளை இவர்கள் விநியோகிக்கின்றனர். நிகழ்கால ட்ரென்ட்க்கு ஏற்ற புதிய ஆடைகளை கொள்வனவு செய்துக் கொள்ளக்கூடிய ஆண் பெண் இருபாலருக்குமான சரியான தெரிவாக ஜிப்ஃளொக் விளங்குகிறது.  

விலாசம்: 299, காலி வீதி, கொள்ளுப்பிட்டி.

காட்டன் கலெக்ஷன் (Cotton Collection) (ரூபாய்2,000 இற்கும் அதிகமாக)

ட்ரென்டியான மாலை நேர நிகழ்வுகளுக்கான ஆடைகள், க்யூட்டான ஆடைகள், ஸ்டைலான ஆண் பெண் இருவருக்குமான ஆடைகளை இங்கு கொள்வனவு செய்துக் கொள்ள முடியும். அதுமட்டுமன்றி ஆடைகளோடு வீட்டு பாவனை பொருட்களும் இங்கு உண்டு.  

விலாசம்: 143, தர்மபால மாவத்தை, கொழும்பு 7.

ஹவுஸ் ஒப் கிப்ட்ஸ் (House of Gifts) (ரூபாய்650 இற்கும் அதிகமாக)

இங்கு டைனின் செட், கேக்ஸ் மற்றும் மலர்கள் மற்றும் பரிசளிக்க கூடிய பொருட்கள் என அனைத்துமே கொள்வனவுக்காக விநியோகிக்கப்பட்டுள்ளன. 

ஸ்டோரின் விலாசம்: 4A, பகத்தல வீதி, கொழும்பு 3.

லிபர்டி ப்ளாஸா (Liberty Plaza) (ரூபாய்1,000 இற்கும் அதிகமாக)

ஆடைகள் முதல் எலக்ட்ரானிக்ஸ் வரை அனைத்துமே இங்கு கொள்வனவு செய்துக் கொள்ளலாம். இங்கு புத்தகங்கள், வீட்டுப் பாவனை பொருட்கள், காலணிகள், வாசனை திரவியங்கள் மற்றும் கண்ணாடி போன்றவற்றை கொள்வனவு செய்துக் கொள்ளலாம். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கான ஜீனியஸ் மொபைல், ஆர்வமுள்ள கலைஞர்களுக்கான பென்ஹவுஸ் என பல உண்டு. உங்களுக்கு தேவையான ஸ்டேஷனரிகளை நீங்கள் கொள்வனவு செய்துக் கொள்ளலாம்.  பிரபலமான டெனிம் கடையான லெவியும் இங்கு அமைந்துள்ளது.

விலாசம்: ஆர்.ஏ.டி மெல் மாவத்தை, கொழும்பு 3.

மெரினோ மால் (Marino Mall) (ரூபாய்1,000 இற்கும் அதிகமாக)

மரினோ மால் என்பது கொழும்பின் மையத்தில் அமைந்துள்ள மற்றுமொரு ஷாப்பிங் சென்டராகும். இங்கு உங்கள் தேவைகளுக்கு ஏற்ற பல்வேறு பொருட்களை நீங்கள் கொள்வனவு செய்துக் கொள்ளலாம்.  உடைகள் மற்றும் வீட்டுப் பொருட்கள் முதல் தளபாடங்கள், அழகுசாதனப் பொருட்கள், காலணிகள், நகைகள், பொம்மைகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் வரை உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சரியான பரிசைக் தெரிவு செய்ய சிறந்ந இடமாகும். 

விலாசம்: No. 590, காலி வீதி, கொழும்பு 3.

கொழும்பு சிட்டி சென்டர் (Colombo City Centre) (ரூபாய்1,500 இற்கும் அதிகமாக)

ஆடைகள் முதல் இலத்திரனியல் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள், நகைகள், குழந்தை பராமரிப்பு, காலணிகள், பேஷன் பொருட்கள் மற்றும் உயர்தர பரிசுத் தெரிவுகள் வரை, உங்கள் அனைத்து ஷாப்பிங் தேவைகளுக்கும் கொழும்பு சிட்டி சென்டர் ஒரு தளமாக அமைகிறது. 

விலாசம்: 137, சர் ஜேம்ஸ் பிரிஸ் மாவத்தை, கொழும்பு 2.

The K-9 (ரூபாய்1,000 இற்கும் அதிகமாக)

உங்களுடைய செல்ல பிராணிகளான நாய், பூனை மற்றும் பறவைகளுக்கான பரிசுகளினை தெரிவு செய்யக் கூடிய ஓர் சிறந்த இடமாக The K-9 திகழ்கிறது. 

விலாசம்: 86, நாவல வீதி, நுகெகொட. 

பேர் ப்ஃட் (Barefoot) (ரூபாய்1,500 இற்கும் அதிகமாக)

பழைய காலத்து சின்னமான நெசவு பேர்ப்ஃட்டில் உங்களுடைய  ஷொப்பிங்கினை மகிழ்ச்சியானதாக மாற்றும். வீட்டுப் பொருட்கள், ஆடைகள், நகைகள், ஸ்டேஷனரி மற்றும் பொம்மைகள் போன்றவற்றை இங்கு கொள்வனவு செய்துக் கொள்ளலாம். 

ஸ்டோரின் விலாசம்: 704, காலி வீதி, கொழும்பு 3.

நைல்ஸ் ஸ்டோர் (Nils Store) (ரூபாய்1,500 இற்கும் அதிகமாக)

பெண்களுக்கான கம்ப்ஃர்ட்டான உயர் தர மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட மெக்ஸி கவுன்கள், கெஷுவல் ஆடைகள் மற்றும் போர்மல் ஆடைகளை இங்கு கொள்வனவு செய்துக் கொள்ளலாம். 

விலாசம்: இல. 216, ஹை லெவல் வீதி, நுகெகொட.

 

மிமோசா (Mimosa) (ரூபாய்1,500 இற்கும் அதிகமாக)

உங்களது தன்நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தக் கூடிய நல்ல தரமான பெண்ணியத்துடன் கூடிய நச்சென இருக்கக் கூடிய க்லாஸியான பெண்ணியத்தின் சாயலுடன் கூடிய ஆடைகளை மிமோசாவில் கொள்வனவு செய்துக் கொள்ளலாம். 

விலாசம்: 355, ஆர்..டி மெல் மாவத்தை, கொழும்பு 3.

சபான்ஸ் (Saffans) (ரூபாய்1,500 இற்கும் அதிகமாக)

தரத்திற்கேற்ற விலையுடன் கூடிய நல்ல மற்றும் நீண்ட காலம் பாவனைக்கு உட்படுத்தக் கூடிய ஆண், பெண் மற்றும் சிறுவர்களுக்கான காலணிகளோடு திருமணத்திற்கான காலணிகளையும் இங்கு கொள்வனவு செய்துக் கொள்ள முடியும். 

ப்ளக்ஷிப் ஸ்டோரின் விலாசம்: எஸ்.டி.எஸ்.ஜெயசிங் மாவத்தை, நுகெகொட.

செருப்பு (Sereppu) (ரூபாய்1,500 இற்கும் அதிகமாக)

பல தரப்பட்ட செருப்புகள் மற்றும் காலணிகளை தயாரிக்கின்ற ப்ராண்டாக இது விளங்குகிறது. இவர்களது கிளைகள் புதிய காலி வீதி, மொறட்டுவ ஆகிய இடங்களில் உள்ளன. அத்தோடு இவர்கள் ஒன்லைன் ஸ்டோரினையும் பேணி வருகின்றனர். 

விலாசம்: No. 86B/1, புதிய காலி வீதி, மொறட்டுவ.

நையிரா ஷூஸ் (Niera Shoes) (ரூபாய்1,500 இற்கும் அதிகமாக)

திருமணம், வேலைத் தளம் மற்றும் பார்டிகள் போன்ற எந்தவொரு சூழலுக்கும் ஏற்றவாறான காலணிகளை (சேன்டல்ஸ, டை-அப்ஸ், சப்பாத்து மற்றும் ஹீல்ஸ்) ஆகியவற்றை கொள்வனவு செய்துக் கொள்ளக் கூடிய இடமாக நையிரா ஷூஸ் திகழ்கிறது. உங்களுடைய காதலியை அழகான காலணிகளை பரிசளித்து சர்ப்ரைஸ் செய்யுங்கள். 

விலாசம்: 436/f,  கொட்டாவ வீதி, வல்கம-அதுருகிரிய வீதி.

மொன்டி (Mondy) (ரூபாய்1,500 இற்கும் அதிகமாக)

பெண்களுக்கான டிசன்ட்டான ப்ஃபோர்மல் ஆடைகளோடு காலணிகள் மற்றும் ஏனையவற்றை கொள்வனவு செய்துக் கொள்ளக் கூடிய இடமாக மொன்டி திகழ்கிறது. விலை சற்று அதிகமாக இருந்தாலும் அவற்றின் தரம் சிறப்பானவை

ப்ளக்ஷிப் ஸ்டோரின் விலாசம்: இல. 78, ஸ்ரீமத் அநகரிக தர்மபால மாவத்தை, கொழும்பு 3. 

மெஜஸ்டிக் சிட்டி (Majestic City) (ரூபாய்1,500 இற்கும் அதிகமாக)

சிறந்த, எளிதான மற்றும் நம்பகமான ஷாப்பிங் அனுபவத்திற்கு MC என்று  பலராலும் அறியப்படும் மெஜஸ்டிக் சிட்டி சிறந்த இடமாகும்.  இங்கு பிரபலமான பிராண்டுகளின் விற்பனை நிலையங்களோடு  நீங்கள் எதிர்பார்க்கும் சிறிய கடைகளும் உள்ளன. நீங்கள் Glow, ODEL, Mondy, Cotton Collection, Triumph, Hameedia போன்றவற்றில் ஆடைகளை கொள்வனவு செய்துக் கொள்ளலாம்.

அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களை கொள்வனவு செய்ய நீங்கள் பார்ஃப்யூமேரி, சென்ஸ் ஆகியவற்றிற்கும்  ஸ்டேஷனரி மற்றும் புத்தகங்களை கொள்வனவு செய்ய பென்ஹவுஸ், புக் சிட்டி மற்றும் யூனிக் கிரியேஷன்ஸ் ஆகியவற்றிற்கும் பிரவேசிக்கலாம். 

ஐபோன்கள், ஆப்பிள் தயாரிப்புகள் மற்றும் அவற்றின் பாகங்கள் பாகங்கள் i-Max இல் விற்கப்படுகின்றன. கேமரா மண்டலம், ரெட்லைன் டெக்னாலஜிஸ் போன்ற கடைகளில் மற்ற மின்னணு சாதனங்களை கொள்வனவு செய்துக் கொள்ளலாம். 

கிஃப்ட் கேட் கலெக்‌ஷன், ப்ரீட்டி திங்ஸ், தி பாட்டர் ஷாப் போன்ற அற்புதமான கிஃப்ட் ஸ்டோர்கள் MC இல் கொண்டுள்ளது.

சூப்பர்மார்க்கெட் ஷாப்பிங்கிற்கு, கார்கில்ஸ் ஃபுட் சிட்டி உம் காணப்படுகிறது. 

விலாசம்: 10, ஸ்டேஷன் வீதி, கொழும்பு 4. 

கெலி பெல்டர் (Kelly Felder) (ரூபாய்1,500 இற்கும் அதிகமாக)

பெண்கள் மற்றும் டினேஜர்ஸக்கான ட்ரென்டியான ஆடைகளை பெறக் கூடிய இடமாக கெலி பெல்டர் உள்ளது. இங்கு நீங்கள் ப்ஃஷென் மீது அதிகம் ஈடுபாடு கொண்டவருக்கான பரிசுகளை தெரிவு செய்துக் கொள்ளலாம். இவர்களது கிளைகள் கொழும்பில் பல இடங்களில் காணப்படுகின்றன. 

ஸ்டோரின் விலாசம்: 345, காலி வீதி, கொழும்பு 3, மற்றும் எஸ்.டி.எஸ் ஜெயசிங் மாவத்தை, நுகெகொட.

ப்ளஷ் மீ (Blush Me) (ரூபாய்1,500 இற்கும் அதிகமாக)

நல்ல சுய பராமரிப்பினை விரும்பும் ஒருவருக்கு பரிசினை தெரிவு செய்ய சிறந்த ஒன்லைன் ஸ்டோராக ப்ளஷ் மீ திகழ்கிறது. இங்கு ஆண், பெண் இருவருக்குமான பொடி க்யார், ஹேர் க்யார் என பல பெக்குகள் உள்ளன. அதுமட்டுமன்றி நெயில் க்யார் மற்றும் மேக்-அப் தயாரிப்புகளும் உண்டு. 

You can find them at www.blushme.lk

ரொமபோர் (Romafour) (ரூபாய்1,500 இற்கும் அதிகமாக)

உங்களுடைய அன்புக்குரியவர்களுக்கான பரிசினை தெரிவு செய்யக் கூடிய வகையிலான ஆண், பெண் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகளோடு பொருட்களை பட்ஜெட்க்கு ஏற்றவாறு விநியோகிக்கும் இடமாக ரொம்போர் விளங்குகிறது. 

விலாசம்: 04, 71, காலி வீதி, கொழும்பு 4. 

ஸிக் ஸாக் ஸ்டோர் (ZigZag Store)

ட்ரென்டியான மொடர்ன் ஆடைகள் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரே இடமாக இந்த ஸிக் ஸாக் திகழ்கிறது.  

விலாசம்: இல. 17, சார்ல்ஸ் ட்ரைவ், கொழும்பு 3. 

உயர் தரம்

ஜெஸா (Jezza) (ரூபாய்1,900 இற்கும் அதிகமாக)

பெண்களுக்கான ஆடைகள் முதல் டொப்ஸ் வரை சிறப்பான கலெக்ஷனை ஜெஸா கொண்டுள்ளது. 

விலாசம்: டபிள்யூ பி, தெஹிவளகல்கிசை

த பொடி ஷொப் (The Body Shop) (ரூபாய்1,900 இற்கும் அதிகமாக)

உங்களுக்கு நீங்களே பரிசளிக்க கூடிய சிறந்த மற்றும் நம்பகத்தன்மையுடைய தோல் பராமரிப்பு தயாரிப்புகளை பெறுவதற்கான சரியான தெரிவு த பொடி ஷொப் ஆகும். 

விலாசம்: 1/1, ப்ளடினம் ஒன் பில்டிங், பகத்தல வீதி, கொழும்பு 3.

ஜெனெல் (Genelle) (ரூபாய்2,000 இற்கும் அதிகமாக)

நீண்ட காலம் பாவிக்க கூடிய மற்றும் தரமான காலணிகளை ஸ்பொட் லைட் விநியோகிக்கின்றனர். இதன் விலை அதிகமாக இருந்தாலும் விலைக்கேற்ற மதிப்பினை கொண்டதாக இருக்கிறது. 

விலாசம்: இசிபத்தான மாவத்தை, கொழும்பு 5. 

ஸ்ப்லாஷ் (Splash) (ரூபாய்2,000 இற்கும் அதிகமாக)

ஆண், பெண், இளம் வயது குழுவினர் மற்றும் குழந்தைகளுக்கான ட்ரென்டியான கலெக்ஷன்ஸினை விநியோகிக்கும் தளமாக ஸ்ப்லாஷ் திகழ்கிறது. இங்கு ஆடைகளோடு காலணிகள் மற்றும் ஏனைய பொருட்களும் உண்டு. 

விலாசம்: 15, ப்ஃசல்ஸ் வீதி, கொழும்பு.

கையிலி ஏஞ்சல் (Kylie Angel) (ரூபாய்2,000 இற்கும் அதிகமாக)

போஃர்மல் மற்றும் பார்டிக்கான பல வடிவமைக்கப்பட்ட தரமான துணிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆடைகள் விநியோகிக்கப்படும் இடமாக திகழ்கிறது. இவர்களது கிளைகள் நுகெகொட மற்றும் ராஜகிரியவில் உள்ளது. 

ப்ளக்ஷிப் ஸ்டோரின் விலாசம்: 209, ஹை லெவல் வீதி, நுகெகொட.

 

கெலி பெல்டர் (Kelly Felder) (ரூபாய்2,000 இற்கும் அதிகமாக)

கொழும்பிலுள்ள இளம் பெண்களிடையே மிகப் பிரபலமான தெரிவாகவும் சாதாரண மற்றும் பார்டியில் அணியக்கூடிய ஆடைகள் கொள்வனவு செய்துக் கொள்ளக்கூடிய இடமாகவும் கெலி பெல்டர் திகழ்கிறது. 

ஸ்டோரின் விலாசம்: 345, காலி வீதி, கொழும்பு 3.

அவிரேட் Avirate (ரூபாய்2,000 இற்கும் அதிகமாக)

பெண்களுக்கான ஆடைகளை விநியோகிக்கும் இந்த உலகளாவிய ஃபேஷன் பிராண்ட் நாட்டின் முன்னணி ஆடை உற்பத்தியாளர்களில் ஒருவருக்கு சொந்தமானது மற்றும் அவராலே நிர்வகிக்கப்படுகிறது. 

ஸ்டோரின் விலாசம்: 30, மெயிட்லென்ட் க்ரசன்ட், கொழும்பு 7.

கெலரியா (Galleria) (ரூபாய்2,500 இற்கும் அதிகமாக)

பல்வேறுபட்ட சர்வதேச ப்ராண்களின் தயாரிப்புகளை கொள்வனவு செய்துக் கொள்ளக் கூடிய சிறந்த இடமாக கெலரியா திகழ்கிறது.

ப்ளக்ஷிப் ஸ்டோரின் விலாசம்: ஹெவ்லொக் வீதி, கொழும்பு 5.

ஸிக்மா ஜோன்ஸ் (Zigma Jones) (ரூபாய்2,500 இற்கும் அதிகமாக)  

உங்களுடைய சாதாரண ஆடை, உத்தியோக ஆடைகள் மற்றும் பார்டிகளுக்கு அணியக் கூடிய ஆடைகள் என உங்களுடைய ஒவ்வொரு ஆடை தேவையையும் பூர்த்தி செய்யக் கூடிய தளமாக ஸிக்மா ஜோன்ஸ் திகழ்கிறது. நீங்கள் ஸிக்மாவிலிருந்து கொள்வனவு செய்து பரிசளிக்கவுள்ள ஒவ்வொரு பரிசையுமே உங்களுடைய காதலிகள் நிச்சயம் விரும்புவார்கள். 

விலாசம்: No. 323, Colombo-Galle Main Road, Colombo 4.

குடும்பத்தோடு உங்கள் விடுமுறையை மறக்கமுடியாத அனுபவங்களாக மாற்றும் இடங்கள் சில உங்களுக்காக…!

நீங்கள் பெற்றோருக்குரிய வழக்கத்தை மாற்றி தனித்துவமான வழிகளைத் தேடும் அனுபவமுள்ள பெற்றோரா? அல்லது குழந்தைகளைப் பெற்ற நீங்கள் இவ் அனுபவத்திற்கு புதியவரா? உங்கள் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களோடு மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய குடும்ப உல்லாசப் பயணத்தைத் திட்டமிட முயற்சிக்கும் ஒரு இளைஞரா? எதுவாக இருந்தாலும் இனி கவலை வேண்டாம் – நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறோம். ஒவ்வொரு குடும்பமும் அனுபவிக்க வேண்டியதொன்று எத்தனையோ விடயங்கள் கொழும்பில் ஒவ்வொரு மூலையிலும் இருக்கின்றன. அவற்றை தேடியறியவேண்டும். குடும்பத்தோடு உங்கள் மகிழ்ச்சியான தருணங்களை நினைவுகளாக மாற்ற பெரியளவில் உல்லாசப்பயணங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியமில்லை. ஒரு குடும்பமாக அனுபவிக்கும் மகிழ்ச்சியானது எளிமையான விடயங்களிலும் அடங்கியிருக்கும்.
உங்கள் குடும்பத்தோடு உல்லாசப் பயணத்திற்காக கொழும்பை சுற்றிய எங்கள் பயணத்தில் நாம் கண்டறிந்த சிறந்த 10 இடங்கள் இதோ உங்களுக்காக..! படித்து மகிழுங்கள்!

கோல்ஃபேஸ் க்ரீன் (GALLE FACE GREEN)

கோல்ஃபேஸ் க்ரீன் என்பது கொழும்பு நகரத்தின் பிரபலமான இடமாகும். பல குடும்பங்களின் பொழுதுபோக்கு மற்றும் விருப்புத் தெரிவாக இது திகழ்கிறது. கடற்கரையை அண்மித்த பாதையில் பச்சைப்பசேலென படர்ந்து நீண்ட புற்றரையில் உலாப்போவதும் , கடலில் வீசும் பலத்த காற்றுக்கு உயரச் செல்லும் பட்டங்களும், dog-and-the-bone மற்றும் ஓடிப்பிடிப்பது போன்ற விளையாட்டுக்களும் குடும்ப பொழுதுபோக்கிற்கு ஏற்றதாக அமைகிறது. தொழினுட்பயுகத்திலும், சமூக ஊடகங்களிலிருந்தும் விடுபட்டு எளிமையான இன்பத்தை அனுபவிக்க இது ஒரு சிறந்த இடமாகும். கரைக்கு வரும் அலைகளில் உங்கள் கால்விரல்களை நனைத்துக்கொண்டே கடலுக்கு வெளியே இருக்கும் பாலம்போன்றதொரு நடைபாதையையும் பார்வையிடலாம். இருப்பினும் இங்கு கிடைக்கும் அனுபவம் தெரு உணவுகளின்றி முழுமையடையாது. இதன் மணமும் சுவையும் நம்மை ஈர்த்துவிடும்.
மாலைநேரங்களில் அதிகமான உணவுக்கடைகள் இருப்பதை நீங்கள் பார்க்கமுடியும். அதில் மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் பழமையான உணவு ‘நாண்’உணவு. கடலோரத்தில் அவர்கள் வறுத்த பார்பிக்யூ மற்றும் வறுத்த உணவு வகைகளான கடல் உணவுகள், டெவில்ல்ட் கிராம் மற்றும் பராட்டா போன்றவற்றை வழங்குகிறார்கள். நீங்கள் எடுத்துச் செல்வதற்காக வாங்கிய வாங்கிய உணவுகளை புல் மீது அமர்ந்த வண்ணம் அவற்றை உண்டு அனுபவிக்கலாம். அல்லது பிளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் மேசைகளுடன் கூடிய பெரிய கடையில் அமர்ந்து உண்டு மகிழலாம்.

சுதந்திர சதுக்கம் INDEPENDENCE SQUARE

கொழும்பு நகரின் ஒரு உன்னதமான அடையாளமாகத் திகழும் சுதந்திர சதுக்கம் சனி அல்லது ஞாயிறு விடுமுறைகளுக்கேற்ற பொழுதுபோக்கு இடமாக பெற்றோர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. சதுக்கத்தில் அல்லது அதற்கு அருகாமையிலுள்ள பாதையில் சைக்கிள் ஓட்டுவது, நிழல் தடங்களில் நடைபயிற்சி மற்றும் ஜாகிங் செய்தல், புல்வெளியில் பிக்னிக் செய்வது முதல் வெளிப்புற விளையாட்டுகள் வரை பல்வேறு வகையான குடும்ப செயல்பாடுகளுக்கு ஏற்ற இடமாக இது விளங்குகிறது. சுதந்திர நினைவு மண்டபத்தில் அதன் சின்னமான கற்சிங்க உருவ சிலைகளுக்கு மத்தியில் குடும்பங்களோடு சேர்ந்து அமர்ந்து இருக்கலாம். அல்லது சுற்றிப்பாரக்கவும் முடியும். கடந்த காலத்தில் தேசத்திற்கு சேவை செய்த மக்களை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்ட அதன் நினைவு அருங்காட்சியகத்தையும் அவர்கள் பார்வையிடலாம். மேலும், அதன் மூலைகளைச் சுற்றி ஆர்கேட் சுதந்திர சதுக்கம் காணப்படுகிறது. ஒரு காலனித்துவ கட்டிடம் இப்போது Mall ஆக மாற்றப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான கடைகள் மற்றும் உணவகங்கள் மற்றும் இங்குள்ள சினிமா மற்றும் நிலத்தடி கண்ணாடி பொருத்தப்பட்ட மீன்தொட்டிகள் (குழந்தைகள் இதை பார்வையிடவும் அதற்கருகில் நடக்கவும் விளையாடவும் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்) போன்றவை இப்பகுதியின் ஈர்ப்பை கூட்டி கொழும்பில் குடும்பத்திற்கான ஒரு முக்கிய இடமாக மாற்றம்பெற்றுள்ளது.

பூங்காக்கள் THE PARKS

1. விகாரமஹாதேவி பூங்காViharamahadevi Park

கொழும்பு போன்ற ஒரு நகரத்தில், விகாரமஹாதேவி பூங்கா போன்றதொரு பசுமை நிறைந்த மிகப்பெரிய பொது பூங்காவை கண்டறிந்து கொள்வது உண்மையில் மிகவும் தனித்துவமானதொன்றே. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சைக்கிள் ஓட்டுவதற்கும், ஓடி விளையாட அல்லது நடைப்பயிற்சி, ஜோகிங் போன்ற செயற்பாடுகளுக்காகவே பிரத்தியகமாக இங்கு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் ஏராளமான மரங்கள் படர்ந்த நிழலைத் தருவதுடன், மதிய மாலை நேரங்கள் குடும்ப சுற்றுலாவிற்கு ஏற்றதாக அமைகிறது.
குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து பல விளையாட்டுக்களை விளையாடும் போது அல்லது கதைகளைப் பகிர்ந்துகொள்ளும் போது, அல்லது நன்கு அழகுபடுத்தப்பட்ட புல்வெளி மற்றும் நீரூற்றுகள் வழியாக நிதானமாக உலாவும் போது கிடைக்கும் அனுபவம் மனதிற்கு இதமானது. உண்மையில் இவ்விடம் குடும்பத்தோடு செல்வதற்கு பயனுள்ளதாகவும் ஏற்றதாகவும் அமையும்.

2.பேர ஏரி பூங்கா Beira Lake Park

பேர ஏரிக்கு ஒரு சுவாரஸ்யமான கடந்த காலம் உண்டு. இன்று, அதன் நீர்ப்பக்கத்தில் அருகிலிருக்கும் நேரியல் பூங்கா, நகரத்தில் பசுமையின் வெளிப்பாட்டைக் கொண்டு காட்சியளிக்கிறது. ஏரி பகுதியில் அன்னப்பறவை மிதிபடகு சவாரி மற்றும் ஏரியின் நடுவில் ஒரு சிறிய தீவுடன் அமைந்த ஒரு தொங்கு பாலம் ஆகியவை அடங்கலாக இந்த பூங்கா விளங்குகிறது. குடும்பத்துடன், குறிப்பாக மாலை வேளைகளில் நிம்மதியாக நேரத்தை பயனுள்ளதாய் செலவிட இது ஒரு சிறந்த இடமாகும்.

3.பத்தேகன ஈரநிலப் பூங்கா Baddegana Wetland Park

நகரின் புறநகர்ப் பகுதியில் (ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில்) அமைந்துள்ள இந்த ஈரநிலப் பூங்கா கொழும்பு நகரத்திற்கு ஒரு புதிய வரவாகும். ஏனெனில் இது மிக அண்மையிலேயே பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. இயற்கை விரும்பும் ஆர்வலர்களுக்கு இது ஒரு சிறந்த இடமாகும். இங்கு இலங்கையின் ஈர மண்டலங்களில் வாழும் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களை பார்வையிடமுடியும். இது பல பறவைகள், பூச்சிகள் மற்றும் பாலூட்டிகளின் தாயகமாக கருதப்படுகிறது. அவற்றில் சில இலங்கைக்கு சொந்தமானவை. ஆகஸ்ட் முதல் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் பருவ காலத்தில் பல்வேறு வகையான பறவைகள் இங்கு புலம் பெயர்கின்றன. அதன் காரணமாகவே இந்த பூங்கா மிகவும் பிரபலமானதாக கருதப்படுகிறது.
வாத்து குளம், வேடர் நடை, புலம் பெயர்ந்த பறவைளின் நடை மற்றும் பட்டாம்பூச்சி நடை போன்ற இங்குள்ள குறிப்பிடத்தக்க சில இடங்கள் சிறு குழந்தைகளை கவரும் என்பதில் ஐயமில்லை. இந்த பூங்காவின் ஈர்ப்பானது குழந்தைகள் மட்டுமன்றி அவர்களின் பெற்றோருக்கும் சுற்றுச்சூழலைப் பற்றி அறிய வாய்ப்பளிக்கின்றது. பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள், தும்பிகள் மற்றும் ஏனைய பூச்சிகளை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்தும் படகு சவாரி போன்ற கல்விச் சுற்றுலாக்களும் இங்கு இடம்பெறுகின்றன.

4.தியத உயன Diyatha Uyana

கொழும்பு நகரின் புறநகர்ப் பகுதியில், தியவன்ன ஓயாவின் கரையில் அமைந்துள்ள இந்த நவீன பூங்கா, குடும்பத்துடன் சுற்றுலாவிற்கு வரும்போது ஏற்ற இடமாக தெரிவாகிறது. இது கொழும்பின் நகர்ப்புறத்தை விட்டு வெளியேவரும் அனுபவத்தை தரும் ஒரு நிதானமான இடமாகும். ஒரு மாலைப் பொழுதில் குடும்பங்கள் நடைபாதையில் உலாவ முடிவதோடு ஏரியில் அன்னப்பறவை படகு சவாரி செய்வதையும் தெரிவு செய்யலாம். உணவு விற்பனை நிலையங்கள், குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்கள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கு ஏற்ற சில மனதைக் கவரும் காட்சிகள் இங்கே உள்ளன. இங்கு பலவகையான அலங்கார மீன்களை பார்வையிடக்கூடிய மீன்தொட்டிகளும் உள்ளன. அத்தோடு பலவகையான பொருட்களும் இங்கு விற்கப்படுகின்றன. வார இறுதி நாட்களில் இங்கு சென்றால் ஷொப்பிங் செய்ய முடியும்.

புத்தகங்களே விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்..!

கண்ணால் காணும் உலகை விட கற்பனையால் உருவாகும் உலகு பிரம்மாண்டமானது. அத்தகைய பிரம்மாண்டம் நிறைந்த கற்பனை உலகை நம் மனக்கண் முன் தோன்றவைத்து புதியதொரு உணர்வை ஏற்படுத்தும் சக்தி நிச்சயம் புத்தகங்களுக்கு தான் உள்ளது. புத்தகம் ஒரு நல்ல நண்பனுக்கு இணையானது. தூசி தட்டி பூட்டி வைத்து பாதுகாக்கப்படுவதல்ல புத்தகம். பிரட்டிப் பாரத்து படித்து முடித்து பொக்கிஷம் என்று உணரசெய்வது தான் புத்தகம்.

மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே உன்னதமானது புத்தகங்கள்.
நேற்று, இன்று, நாளையென முக்காலமும் அறியச்செய்வது ஜோதிடமா? இல்லவே இல்லை. அவை புத்தகங்கள் தான். மனிதனின் வரலாற்றை அறியக்கூடிய இலக்கிய மூலாதாரங்களாகவும் நிகழ்காலத்தை பற்றி கூறும் நூல்களாகவும், எதிர்காலத்தை வளமாக்கும் ஆயுதமாகவும் திகழ்பவை இந்த புத்தகங்கள் தான். ‘அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும் மற்றும் புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளது.

வாசிக்கும் உரிமை, அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூலக உரிமை, உலகில் உள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் அவரவர் தாய்மொழியில் பெற்றுக்கொள்ளும் உரிமை, தத்தமது தாய் மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்துதல், புத்தகங்களுக்கும், வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் போன்ற பல கட்டளைகளை அனைத்து நாடுகளிலும் நிறைவேற்றுவதன் மூலம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விரிவாக்க முடியும்.

துப்பாக்கிகளை விட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்கள் என்கிறார் மார்ட்டின் லூதர்கிங். ஒரு நாட்டை கட்டியெழுப்பவோ சமூதாய சீர்கேடுகளை கட்டுப்படுத்தவோ புதிய கண்டுபிடிப்புகளை விளக்கவும் வலியுறுத்தவும் புத்தகங்கள் அவசியமாகிறது. எழுத்துப்புரட்சி நாட்டையும் இவ் உலகத்தையும் மாற்றியமைக்கும் வல்லமை படைத்தது. அத்தகைய புத்தகங்களை சேமித்து வைக்கும் களஞ்சியமாக திகழ்பவை நூலகங்கள். நாம் நூலகங்களை பயன்படுத்தவேண்டும். எத்தனையோ பல இடங்களுக்குச் செல்கிறோம். ஆனால் நம் எதிர்காலத்தையே மாற்றபோகும் புத்தகங்களின் இருப்பிடமான நூலகத்திற்கு செல்ல மறக்கிறோம். நூலகங்களுக்குச் செல்வதை வழக்கமாக்கிகொள்வது சாலச்சிறந்தது.

ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும், மிகப்பெரிய மனிதர்களை உருவாக்குவதற்கும், நாம் புது புது விடயங்களைக் கண்டறிவற்கும் நூல்கள் உதவும். ஆகவே நாம் சிறுவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தும் நல்ல புத்தகங்களை கற்றும் சமூகத்தில் சாதனையாளராக மாறுவோம்..!

தலை குனிந்து என்னைப் பார்..
தலைநிமிர்ந்து உன்னை வாழ வைக்கிறேன்..

இப்படிக்கு,
-புத்தகம்-

index.php