2021 Feb 9
ஆதி தனை சரி வர கணக்கிட முடியாதளவு பழமையான மொழியே தமிழ்மொழி. இன்று வரை இதில் காணப்படும் பல முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாதவையாகவே விளங்குகின்றன. “தமிழ் என்றவுடன் நா தித்திக்கும், செவிகள் சுகம் காணும்” என பல புலவர்கள் பாரட்டி சீராட்டி வளர்த்த மொழி நம் தமிழ் மொழி. இம்மொழி தனை தாய்மொழியாக கொண்டோரும் சரி, தமிழ் மேல் கொண்ட காதலால் தமிழ் மொழி தனை பயின்றோரும் சரி இன்று வரை இவ்வளவு தான் தமிழ் என அளந்து விட முடியாதளவிற்கு பெரும் சமுத்திரமாகவே தமிழ்மொழி திகழ்கிறது. இன்று வரையில் நாம் அறிந்திராத பல சொற்கள் தமிழ் மொழியில் காணப்படுகின்றன. இந்த பதிவின் மூலம் சில அரிய தமிழ்ச் சொற்களை உங்களுக்கு அறியத் தரவுள்ளோம்.
நாம் இன்று இலத்திரனியல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆங்கில மொழியில் சமூக வலைதளங்களுக்கான பெயர்கள் கூறப்பட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. நம்மில் அநேகமானோருக்கு தமிழ் மொழியில் அவற்றிற்கான பெயர் இருப்பது தெரியாது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் சமூக வலைதளங்களுக்கான தமிழ் பெயர்களை அறிவோம்,
WhatsApp – புலனம்
YouTube – வலையொளி
Instagram – படவரி
We chat – அளாவி
Messenger – பற்றியம்
Twitter – கீச்சகம்
Telegram – தொலைவரி
Skype – காயலை
மேற்கூறப்பட்டவை மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்டவையே. அம் மாநாட்டில் வெளியிடப்பட்ட இன்னும் சில நுட்பவியல் கலைச் சொற்களையும் அறிவோம்.
Bluetooth – ஊடலை
Wi Fi – அருகலை
Hotspot – பகிரலை
Broadband – ஆலலை
Online – இயங்கலை
Offline – முடக்கலை
Thumb drive – விரலி
Hard disk – வன்தட்டு
GPS – தடங்காட்டி
CCTV – மறைகாணி
OCR – எழுத்துணரி
LED – ஒளிர்விமுனை
3D – முத்திரட்சி
2D – இருதிரட்சி
Projector – ஒளிவீச்சி
Printer – அச்சுப்பொறி
Scanner – வருடி
Smart phone – திறன்பேசி
Sim card – செறிவட்டை
Charger – மின்னூக்கி
Digital – எண்மின்
Cyber – மின்வெளி
Router – திசைவி
Selfie – தம் படம் – சுயஉரு – சுயப்பு
Thumbnail – சிறுபடம்
Meme – போன்மி
Print Screen – திரைப் பிடிப்பு
Inkjet – மைவீச்சு
Laser – சீரொளி