2021 Apr 20
உலகம் முழுதும் ஏப்ரல் மாதமானது Autism நோய்க்கான மாதமாக கருதப்படுகின்றது. பல்வேறு நாடுகளில் autism தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
ஓட்டிசம் (Autism) என்றால் என்ன?
Autism என்பதை மருத்துவ மொழியில் ASD (autism spectrum disorder) என்று கூறுவார்கள். Autism என்பது “குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு வளர்ச்சியில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு” ஆகும். முக்கியமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதுவொரு நோயல்ல ஒரு குறைபாடாகும்.
பொதுவாக இக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சமூகத்தில் மற்றவர்களுடன் இயல்பாக பழகுதல், அவர்களின் இயல்பான நடத்தைகள், மற்றும் தொடர்பாடல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள கடினமாக உணருவார்கள். இந்தச் செயற்பாட்டுத் திறன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் இருந்தும் சற்று வேறுபடும்.
இன்றைய நவீன காலத்தை பொருத்தவரையில் Autism குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குறிப்பாக அமெரிக்காவில் 59 பேரில் ஒருவருக்கு இந்தக் குறைபாடு உள்ளது.
இன்றைய காலகட்டத்தை பொருத்தவரையில் தமது autism குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோரே முக்கிய காரணமாக உள்ளனர். இன்றைய தலைமுறை குழந்தைகள் பெற்றோரின் அரவணைப்பிற்காக ஏங்கும் நிலை உருவாகியுள்ளது. முன்னைய காலங்களில் அழுது கொண்டிருக்கும் பிள்ளைகளை சமாதானப்படுத்த தாய் கதை கூறுவாள், ஆயினும் இன்றைய காலததில் கையடக்க தொலைபேசியே அழுத பிள்ளையினை சமாளிக்கிறது. சிறு வயதில் பெற்றோருடனான தொடர்பு தடை பட்டு தனிமையும், கையடக்கத் தொலைபேசியும் அந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கு துணையாக நிற்கின்றன. இது autism குழந்தைகளின் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைகிறது.
பலர் ஓட்டிசம் பற்றி கேள்விப்பட்டிருப்பர். ஆனால் எத்தனை பேருக்கு அது ஒருவரையும் அவரின் குடும்பத்தினரையும் எங்ஙனம் பாதிக்கிறது என்பது பற்றித் தெரியும். தனது குழந்தை மற்றைய குழந்தை போல் இயல்பாக இல்லை என்பது பத்து மாதம் சுமந்த தாயிற்கு மரணத்தை விட கடும் வேதனையான ஒரு விடயமாக இருக்கும். ஓட்டிசம் உடையோர் முகத் தோற்றத்தில் வித்தியாசம் இன்றி நம்மை போன்றே பெரும்பாலும் இருப்பார்கள். எனவே எப்படி அவர்களை அடையாளம் காணலாம் என்பது முக்கியம்.
உலகில் மிகவும் பிரபல்யமான நபர்களும் இக் குறைபாட்டினால் பாதிக்கபட்டவர்கள் தான் என்று கூறினால் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒன்றாக சுவாசிக்க வேண்டி ஏற்படும். ஆம், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பில் கேட்ஸ், மைக்கேல் ஜாச்சன் போன்றவர்கள், உலகின் பல அரிய மேதைகளும் இந்த குறைபாடு உள்ளவர்கள் தான். ஆனால் அறிவுக்கூர்மைக்கும், இந்தக் குறைபாட்டுக்கும் தொடர்பில்லை. இந்த பாதிப்புள்ள ஒரு சிலரால் பேச முடியாமலும், சைகை மூலமாக மட்டுமே தொடர்புகொள்ள முடிவதாகவும் இருப்பதும் உண்டு.
Autism குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மூன்று குணயியல்புகள் கொண்டிருப்பார்கள்.அவர்களுக்கு இலகுவாக பழகுவதில் சிரமம் இருக்கும். அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட காரியத்தினை மீண்டும் மீண்டும் செய்யும் குணஇயல்பு கொண்டிருப்பதால், தமது நாளாந்த செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படும் போது அதனுடன் பயணிக்க மிகவும் கடினமாக உணர்வார்கள். அவர்களது குறைந்த மொழியாற்றலால் மற்றவர்களுடன் தமது எண்ணங்களையும் உணர்வுகளையும் பறிமாற்றிக் கொள்வதில் சிரமம் அடைவார்கள்.
தற்போது autism னை முற்றாக குணமாக்கும் முறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே ASD பற்றிய தாக்கம், அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அக் குழந்தைகளுக்கான தீர்வுகள் என autism தொடர்பான புரிந்துணர்வுகள் இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதனைப் பற்றிய தவறான கண்ணோட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும். சரியானதும் பொருத்தமானதும், autism குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் வழங்கப்படும் ஆதரவே மிகப் பெரிய பக்க பலமாக அமையும்.
காலத்திற்கேற்ற உதவியும், ஆதரவுமே ASD குறைபாடு உடையோரின் வாழ்வினை முன்னேற்றும். ASD பற்றிய விழிப்புணர்வும் அவர்களை சக மனிதராக நோக்கும் கண்ணோட்டமும் அனைவரது மத்தியிலும் தோன்றும் போதே இது சாத்தியமாகும்.
autism தொடர்பான அறிவும் விழிப்புணர்வும் இலங்கையில் இருந்தாலும் அதன் வளர்ச்சி வீதம் மிகவும் மந்த கதியிலே முன்னேறி வருகிறது. ஒரு ஆய்வில் இலங்கையில் 93 குழந்தைகளில் ஒரு குழந்தை இக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, இலங்கையில் 18 முதல் 24 மாதங்களிற்கு உட்பட்ட குழந்தைகளே இவ்வாறு பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் இந்த குறைபாட்டினால் பாதிப்படைந்த குழந்தைகளுக்காக வேண்டி பல்வேறு தனியார் தொண்டாற்றும் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சமூக தொண்டாற்றும் நிறுவனங்கள் தமது கடமைகளை உரிய முறையில் முன்னெடுத்து வருகின்றன.
Daddys Lanka Autism Centre
17 வருடங்களுக்கு மேலாக விஷேட தேவையுடைய குழந்தைகளை பராமரிப்பதில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மேலும் இலங்கையில் இருந்து மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியில் இவர்களது சேவை வியாபித்துக் காணப்படுகிறது.
முகவரி – 14/3A Pangiriwatta Mawatha, Nugegoda
தொடர்புகளுக்கு – 071 681 2524
info@daddyslanka.org
OSILMO Special Education & Research Center for Autistic Children
Autism குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான உரிய சூழலினை அமைத்து கொடுப்பதும் எவ்வாறு ஒரு ஆரோக்கியமுள்ள குழந்தைக்கு எத்தகைய உரிமையுள்ளதோ அதே போன்று இக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் சம உரிமை வழங்கவேண்டும் என்ற கொள்கையுடன் இயங்கும் நிறுவனமாக திகழ்கிறது.
முகவரி – 9 Horana Rd, Piliyandala
தொடர்புகளுக்கு -0112 702 53
Reach Beyond – Autism & Child Development Center
இலாப நோக்கம் அற்று விஷேட தேவையுடைய குறிப்பிட்ட தாய்மார்களினால் ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.
முகவரி – 14/7 Tickell Rd, Colombo 08
தொடர்புகளுக்கு- 077 732 7120
Senehasa Education Resource Research & Information Centre
Autism குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கனவினை நனவாக்க இயங்கும் ஒரு நிறுவனமாக திகழ்கின்றது.
முகவரி – Matha Rd, mannintown
தொடர்புகளுக்கு- 0112 698 760
“ஓட்டிசம் என்பது ஒரு நோயல்ல அது இறைவனால் வழங்கப்பட்ட ஒரு விஷேட திறமையாகும்”