அறிவியலை நாடி இலங்கை பாம்புகள் : பாம்புக்கடியினை எப்படி சமாளிப்பது?!

இலங்கை பாம்புகள் : பாம்புக்கடியினை எப்படி சமாளிப்பது?!

2023 May 15

ஒவ்வோர் ஆண்டும் மொத்தம் 80,000 இலங்கையர்கள் விஷப் பாம்புகளால் கடிக்கப்படுவதாகவும், அவர்களில் 400 பேர் இறப்பதாகவும் சமீபத்திய கணக்கெடுப்பு கோடிட்டுக் காட்டுகிறது. இறப்புக்கான காரணங்கள் சரியாகப் பதிவு செய்யப்படாததால் எண்ணிக்கை இதை விட சிலவேளை அதிகமாக இருக்கலாம். எவ்வாறாயினும் நமது மக்கள் தொகையின் விரைவான வளர்ச்சியுடன் இணைந்த புள்ளிவிவரங்கள் ஒரு விஷயத்தை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது. நாம் ஒவ்வொருவரும் பாம்புக்கடிக்கு அகப்படுவதற்கான வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே நாம் அனைவரும் பாம்புகள் பற்றிய அடிப்படை அறிவு மற்றும் முதலுதவி பற்றி அறிந்திருத்தல் அவசியம் ஆகிறது!

•கண்ணாடி விரியன் (Russell’s Viper)பெரும்பாலும் கண்ணாடி விரியனுக்கும் மலைப்பாம்புக்குமிடையில் குழப்பமேற்படலாம். இரண்டையும் இந்த சிறிய விவரங்களைக் கவனிப்பதன் மூலம் வேறுபடுத்தி அறியலாம். கண்ணாடி விரியன் விஷமற்றது. கண்ணாடி விரியன் அதன் உடலில் தனித்துவமான பழுப்பு நிறம், மற்றும் வட்டவடிவிலான patches களைக் கொண்டது, அதே சமயம் மலைப்பாம்பு உடலில் பெரிய புள்ளிகளைக் கொண்டது மற்றும் மழுங்கிய மூக்கினைக் கொண்டது.

•நாகப்பாம்பு (The Cobra)இது மிகப் பொதுவாக காணக்கூடிய ஒரு பாம்பு. தலையில் முகமூடி போன்ற வடிவத்தை காணக்கூடியதாய் இருக்கும். இதனை நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் பொதுவாக காணலாம். ஏன், கொழும்பு போன்ற நகரப்பகுதியில் கூட காணலாம்!

•கட்டு விரியன் (The Krait)கட்டு விரியன் (Krait) இல் இரண்டு இனங்கள் உள்ளன, அவை இரண்டும் அதிக விஷம் கொண்டது மற்றும் இரவில் அதிகமாக நடமாடும். Ceylon Krait பொதுவாக ஈர மண்டலத்தில் காணப்படுகிறது. கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள காடுகளில் வசிக்கும். அதே சமயம், Common Krait உலர் வலயத்தில் அதிகமாய் காணப்படுகிறது. பகல் நேரத்தில் மரக்கட்டைகள், மரத்துளைகள் மற்றும் கற்குவியல்களின் கீழ் ஒளிந்து இருக்கும்.

•சுருட்டைவிரியன் / புல் விரியன் (The Saw-Scaled Viper)மிகவும் பொதுவாக கடலோரப் பகுதிகளில் காணப்படும். இந்த சுருட்டை விரியனின் தலையில் பறவையின் காலடி போன்ற தனித்துவமான அம்சம் மூலம் அடையாளம் காண முடியும்.

•திமில்மூக்குக் குழிவிரியன் (The Hump-nosed Viper)மிதமான விஷத்தன்மை கொண்டது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் பிறகு ஒவ்வொரு ஆண்டும் 61,000 பாம்பு கடிகளும், 27% விஷக்கடிகளும், கொடிய அறிகுறி விளைவுகளும் இந்தப் பாம்பினால் ஏற்பட்டன என பதிவு செய்யப்பட்டுள்ளது.

உங்களை பாம்பு கடித்தால் என்ன நடக்கும்?

ஒருமுறை கடித்தால் விஷம் உங்கள் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. ஆனால் விஷம் உங்கள் இரத்த ஓட்டத்தினூடாக பயணிப்பது இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். எனவே இரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுவதற்குப் பதிலாக, நிணநீர் அமைப்பு (lymphatic system) எனப்படும் வேறுபட்ட திரவ போக்குவரத்து அமைப்பில் விஷம் பயணிக்கிறது.

நிணநீர் அமைப்பு வெகுதூரம் இரத்தத்தை விட வித்தியாசமாக நகரும். உங்கள் சுற்றோட்ட அமைப்பு செயலில் இருக்கும், இருந்தபோதிலும் நீங்கள் மயங்கியிருப்பீர்கள்.. ஆனால் நிணநீர் திரவங்கள் உங்கள் கை கால்களை அசைக்கும் போது மட்டுமே நகரும். ஆனால் விஷம் கடித்த இடம் வழியாக இரத்த ஓட்டத்தை அடையாமல், இறுதியில் அந்த தசை இயக்கத்தின் மூலம், கழுத்தின் அடிப்பகுதியில் உள்ள நரம்புகளுடன் இணைக்கப்பட்ட பெரிய lymphatic trunk களை இணைந்த பிறகு நிணநீர் திரவங்கள் இரத்தமாக மாறும். இந்த நேரத்தில், விஷமத்தன்மையானது கணிசமாக அதிகரிக்கும்.

இது பற்றி மற்றொரு கட்டுக் கதை உள்ளது, அதாவது நீங்கள் ஒருமுறை கடிபட்டால் நீங்கள் வாழ சில தருணங்கள் மட்டுமே உள்ளன என்பது! ஆனால் உண்மை என்னவென்றால், மருத்துவ பராமரிப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையில் 2 முதல் 8 மணி நேரம் வரை உயிரோடிருப்பார்கள். ஒரு மனிதனை 30 நிமிடங்களில் கொல்லும் அளவுக்கு விஷம் கொண்ட ஒரே பாம்பு Black Mamba – இலங்கையர்களான நமக்கு அதிர்ஷ்டவசமாக அவை இங்கு இல்லை, ஆப்பிரிக்காவில் மட்டுமே இவை காணப்படுகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் எடுக்க வேண்டிய சில முதலுதவி நடவடிக்கைகள் உள்ளன. இருப்பினும், அவர்கள் தற்செயலாக விஷம் இரத்த ஓட்டத்தை அடைந்து உடலின் செயல்முறையை முடக்கிவிடாமல் தடுப்பதற்கு மருத்துவமனைக்கு விரைவது சிறப்பானது.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்:

1. அசையாமல் இருக்கவும் – STAY STILL.
நாம் மேலே குறிப்பிட்டது போல், விஷம் இரத்த ஓட்டத்தில் நுழைவதற்கான ஒரே வழி, உங்கள் தசைகளை நகர்த்துவதன் மூலமும், நிணநீர் அமைப்பின் (lymphatic system) வழியாக விஷத்தை கடத்துவதன் மூலமும் ஆகும். எனவே, கடித்த மூட்டு முற்றிலும் அசையாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

2. அழுத்திக் கட்டுப் போடுதல் – Pressure Immobilization Bandaging.
இது மேலும் விஷம் பரவாமல் தடுக்க பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம் ஆகும். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், கடிபட்ட இடத்தில் கீழே மற்றும் மேலே சுமார் 10 செ.மீ. உறுதியாக அழுத்தமாக கட்டுதல். அடுத்து உறுதியாக மடிக்க மற்றொரு எலாஸ்டிக் ரோலர் பேண்டேஜை (elastic roller bandage) உங்கள் விரல்களிலிருந்து உங்கள் armpit வரை அல்லது உங்கள் கால் விரல்களிலிருந்து இடுப்பு வரை பயன்படுத்தவும். (கடிபட்ட இடம் எங்குள்ளது என்பதனைப் பொறுத்து). இது ஒரு சுளுக்கு கட்டு போல் உணர வேண்டும் – உறுதியான ஆனால் சிரமமானதாக மிக இறுக்கமாக இல்லாமலிருக்க வேண்டும்.

3. மூட்டுக்களை கட்டிடல் – Splint the limb.
உங்களை அறியாமல் மூட்டுகளை அசைக்கவோ அல்லது வளைக்கவோ மாட்டீர்கள் என்பதற்கு இது உத்தரவாதம் அளிக்கிறது.

என்ன செய்யக்கூடாது:

•காயத்தை வெட்டுவதன் மூலம் அல்லது அழுத்துவதன் மூலம் பாம்பு விஷத்தை வெளியேற்ற முயற்சிக்காதீர்கள். இது நிபுணர்களால் மாத்திரமே செய்யப்பட வேண்டிய மருத்துவ முறை.

•Tourniquet ஐ பயன்படுத்த முயற்சிக்காதீர்கள். ஏனெனில் இது இரத்த ஓட்டமின்மையை ஏற்படுத்தி மூட்டுக்கு சேதம் விளைவிக்கும். இறுதியில் necrosis ஏற்படும், இது தொற்றுக்களை கொண்டு வரும்.

•உங்கள் ஆடைகளை மாற்ற முயற்சிக்காதீர்கள், ஏனெனில் இயக்கத்தின் இந்த சிறிய நெளிவு கூட விஷத்தை பரவ தூண்டும்.

இறுதியாக, உங்களைக் கடித்த பாம்பை அடையாளம் காணும்போது, ​​பயன்படுத்தப்பட வேண்டிய anti-venom ஐ தீர்மானிக்க வேண்டியது அவசியம் தான். இருந்தாலும் எந்த வகையான பாம்பு உங்களைக் கடித்தது என்பதைக் கண்டறிய நேரத்தை வீணாக்காதீர்கள், அதிலிருந்து விடுபடும் முயற்சியில் நிச்சயமாக ஈடுபட வேண்டும் விரைவில் மருத்துவமனைக்குச் செல்லுங்கள்!

நாம் அன்றாடம் எல்லா வகையான விலங்குகளையும் சந்திக்கும் நாட்டில், இது போன்ற தகவல்களை உங்கள் விரல் நுனியில் வைத்திருப்பது ஒரு உயிரைக் காப்பாற்ற உகந்தது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php