2021 Sep 15
ஒரு தீவிரமான உணர்ச்சி சீற்றம் ஒரு கொலைக்கு வழிவகுக்கும். இது ஒரு நபரின் அடக்கி வைத்திருந்த கோபத்தை திருப்திப்படுத்துகிறது என்றாலும், அதன் விளைவுகள் சிந்திக்கப்படுகின்றனவா? ஒரு குற்றவாளி மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறுவதால் சமூகத்தில் வசிக்க சட்டம் அனுமதிக்காது. இலங்கை சட்ட அமைப்பின் கீழ் கொலைக் குற்றம் எவ்வாறு ஆய்வு செய்யப்படுகிறது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. இந்த கட்டுரையின் நோக்கம், கொலையைப் பற்றி சிந்திப்பவர்களைத் திசை திருப்புவது அல்லது அவர்களை ஊக்குவிக்காமை ஆகும்.
சட்ட ஒளி என்பது சட்டம் தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைக்கும் மும்மொழி சட்டக் கலந்துரையாடலாகும். லத்தீன் மொழியில் “ignorantia legis neminem excusat” என்ற தொடர் விளக்கி நிற்பது, சட்டத்தினை புறக்கணிப்பது சட்டத்திலிருந்து மன்னிப்பு பெறுவதற்கான வழி அல்ல என்பதனையே ஆகும். அந்த வகையில் இலங்கை சட்ட மாணவர் சங்கத்தின் ப்ரோ போனோ குழுவானது நம் நாட்டு சட்டங்களினை எளிமையாக்குவதன் மூலம் பொது மக்களுக்கு அறிவூட்ட முற்படுகின்றது. அதன் ஐந்தாவது கலந்துரையாடல் கொலை குறித்து கவனம் செலுத்தியுள்ளது.
இந்தக் கலந்துரையாடலுக்கான குழுவானது பின்வரும் சட்டத்தரணிகளை உள்ளடக்கியிருக்கின்றது: திரு. சாலிய பீரிஸ் pc இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஆவார். திரு. நயந்த விஜேசுந்தர மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பயிற்சி செய்கிறார் மற்றும் திரு.திருக்குமரன் விஷ்வலிங்கம் நொத்தாரிசாகவும் சத்தியப்பிரமாண ஆணையாளராகவும் உள்ளார்,
கொலை என்றால் என்ன?
கொலை எனப்படுவது ஒரு தனிப்பட்ட நபருக்கு மரணத்தை விளைவிக்க வேண்டும் என்ற நோக்கதுடன் ஒருவரை கொலை செய்யும் செயல் ஆகும். இங்கு பாதிக்கப்பட்டவர் ஒரு நோயால் அவதியுறுகிறார் என்று கொலையாளி அல்லது குற்றவாளி அறிந்த பின்னரும் அவருக்கு காயம் ஏற்படுத்துவதன் மூலம் அவருக்கு மரணம் விளைவிக்கப்படும் என்று அறிந்திருப்பதால் அந்த செயலும் கொலையாகவே கருதப்படும். குற்றவாளியின் தெளிவு அல்லது அறிவு இங்கு முக்கியமான கூறாகும்.
கொல்லப்படுவதன் மூலம் இறந்த உடலை அடையாளம் காண்பதே கொலை என சமூகம் ஏற்றுக்கொள்கிறது. அவ்வாறிருக்கையில் இறந்த உடலொன்றை கண்டெடுக்காத போது குற்றவாளி எவ்வாறு கொலை குற்றத்திற்கு பொறுப்பாவர்?
இங்கு அந்தக் குற்றவாளி அந்த தவறை புரிந்துள்ளார் என்பதை சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க வேண்டும். அந்த வகையில் ஒரு கொலை குற்றத்தினை நிறுவுவதற்கு 3 காரணிகள் அவசியப்படுகின்றன. அவையாவன
1. ஒரு நபர் கொலை செய்யப்பட்டிருப்பது
2. மரணத்தை விளைவிக்க செய்யப்பட்ட செயலானது குற்றவாளியால் செய்யப்பட்டதாக இருத்தல்
3. குற்றவாளி கொலை செய்யவேண்டும் என்ற நோக்கதுடன் அல்லது கருத்துடன் இருத்தல். கொலை செய்யப்பட்டவரின் இறந்த உடலானது மிக சிறந்த சாட்சியாகும். சில சமயங்களில் கொலையாளி இறந்த உடலை அழிக்கக் கூடும். ஆனால் இறந்த உடல் இல்லை என்பதற்காக அந்தக் கொலைக் குற்றம் நடக்கவில்லை என மறுக்க முடியாது. சந்தர்ப்ப சாட்சிகள் வைத்து அந்தக் கொலையை நிரூபிக்க முடியும்.
கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தினை கொண்டதற்க்காக மட்டும் ஒருவர் எவ்வாறு கொலைக்கு பொறுப்பாக முடியும்?
கொலைக்குரிய மிக முக்கியமான அம்சம் நோக்கமாகும். அந்த வகையில் மரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலோ அல்லது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய உடல் காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலோ அல்லது ஒரு செயல் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தும் என்ற அறிவுடன் செய்யும் செயல் மரணம் விளைவிக்கும் குற்றம் என அறியப்படும்.
ஒரு நபருக்கு உடல் காயத்தை ஏற்படுத்தினால், அது மரணத்தை ஏற்படுத்தக்கூடும் அல்லது அந்த நபருக்கு மரணம் ஏற்படக்கூடும் என்ற அறிவுடன் இருந்தால், அவர் மரணம் விளைவிக்கும் குற்றம் செய்கிறார். மரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த செயல் செய்தால் இது கொலை ஆகும். உடல் காயத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஒருவருக்கு இயற்கையான மரணத்தை விளைவித்தலும் கொலைக் குற்றமாகவே கருதப்படும்.
கொலை செய்த ஒருவருக்கு இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அல்லது செயல்படுத்தப்பட்ட தண்டனை என்ன?
கொலைக்குற்றம் புரிந்தவருக்கு மரண தண்டனை என்றாலும் இலங்கையில் கடந்த 45 ஆண்டுகளாக அது சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை
கொலை செய்யப்பட்டவர் கைது செய்யப்படும்போது சட்டத்தின் கீழ் பின்பற்றப்படும் நடைமுறை என்ன?
ஒரு நபர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் போது, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். உயர்நீதிமன்றத்தால் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும்.
கொலை முயற்சி என்றால் என்ன? மற்றும் தண்டனை?
கொலை முயற்சிக்கான தண்டனை 10 ஆண்டுகள் மற்றும் அபராதம் ஆகும். நபர் காயமடைந்தால், காயத்தின் தீவிரத்தைப் பொறுத்து தண்டனை 20 ஆண்டுகள் வரை நீடிக்கும்.
பிரதிவாதி பாதிக்கப்பட்டவரைக் கொல்ல முயற்சித்தாலும், அந்த முயற்சி வெற்றிபெறாதபோதுதான் கொலை முயற்சி ஆகும். ஒரு நபர் இன்னொரு நபரை நோக்கி துப்பாக்கியைக் குறிவைக்கும்போது, அவர் அந்த குறியை தவறவிட்டால், இது கொலை முயற்சிக் குற்றமாகும்.
3வது நபர் ஒரு நண்பர் செய்த கொலைக்கான ஆதாரங்களை அழித்தால் அது ஒரு குற்றமா?
இது ஒரு குற்றத்திற்கு சமம், ஏனெனில் நீங்கள் நீதியைத் தடுக்கிறீர்கள்.
ஒரு குழு கொலை செய்யத் திட்டமிடும்போது, அவர்கள் அனைவரும் கொலைக்கு பொறுப்பாவார்களா? அவர்கள் அனைவரும் கொலை செய்யவில்லை, ஆனால் அவ்விடத்தில் இருந்திருக்கின்றார்கள் எனில் என்ன நடக்கும்?
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரு கொலை செய்ய திட்டமிட்டால் அது கொலைக்கான சதித்திட்டமாகும். கொலை செய்வதற்கான நோக்கத்தினை பகிர்ந்து கொண்டு திருடர் கூட்டம் ஒரு வங்கிக்கு சென்று காவலாளி மீது அதிகாரத்தை செலுத்தி ஒருவர் அவரை குத்துகின்ற போது அனைவரும் அதற்க்கு பொறுப்பாவார்கள்.
ஏஜி v பொட்டா நாஃபர், என்ற வழக்கில் சிறையில் உள்ள ஒருவரால் கொலை திட்டமிடப்பட்டது மற்றும் சிறைக்கு வெளியே தனிநபர்களால் செயல்படுத்தப்பட்டது. ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் இந்த திட்டம் நடைபெற்றது என்பதை நிரூபிக்க ஆதாரங்கள் இருந்தன. சதித்திட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கொலை குற்றத்திற்கு பொறுப்பாவார்கள்.
பங்கேற்ப்பாளர்களின் நோக்கத்தை சட்டம் பார்க்கிறது. எங்கு ஒரு குழு தங்களை ஒழுங்கமைத்துக் கொண்டு ஒருவர் மரத்தின் உச்சியில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கின்ற அதே சமயத்தில் மற்றுமொருவர் பாதிக்கப்பட்டவரை கடத்த அத்துடன் மற்றும் இருவர் பாதிக்கப்பட்டவரை பிடித்துக்கொண்டு இருக்க ஒருவர் அவரை கத்தியால் குத்தும் போது இதில் பங்கேற்று இருக்கும் அனைவரும் இதற்க்கு சமமாக பொறுப்பேற்ப்பதோடு தண்டனையும் சமமாக வழங்கப்படும். இவர்கள் அனைவரினதும் பங்கேற்பு கவனத்தில் கொள்ளப்படும்
காயம் மற்றும் கடுமையான காயம் கொலைக்கு சமமானதா? இதற்கிடையிலான வேறுபாடு?
இவையிரண்டும் ஒன்றல்ல இதன் முடிவுகளுக்கிடையில் வேறுபாடு உள்ளது?
தண்டனை சட்டக் கோவையில் பிரிவு 310 இற்கு அமைய ஒருவருடைய உடலுக்கு ஏதேனும் வலி, நோய் அல்லது குறைப்பாட்டினை உண்டாக்குவதைக் காயப்படுத்துதல் என்று கூறப்படும்.
தண்டனை சட்டக் கோவையில் பிரிவு 311 இற்கு அமைய கொடுங்காயம் என்று கூறப்படுவது யாதெனில்,
1. ஆண்மை இழக்கச்செய்தல்
2. நிரந்தரமாக, ஏதாவது ஒரு கண் பார்வையை இழக்கும்படி செய்தல்
3. காதில் ஒன்று செவிடாகும்படி செய்தல்
4. உடல் உறுப்புகள் ஒன்றை அல்லது இணைப்புகளில் ஒன்றைச் செயல்புரிய ஒட்டாமல் தடுத்தல்
5. உடல் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றினை அல்லது இணைப்புகளில் ஏதேனும் ஒன்றினை நிரந்தரமாகச் செயல் இழக்கும்படி செய்தல்
6. தலையை அல்லது முகத்தை நிரந்தரமாக உருக்குலைத்தல்
7. எலும்பு முறிவு அல்லது பல்லை உடைத்தல்
8. உயிருக்கு ஆபத்தை உண்டாக்க கூடிய காயம் அல்லது காயம் பட்டவருக்கு இருபது நாட்களுக்கு கொடுந்துன்பம் தரக்கூடிய காயம் அல்லது இருபது நாட்களுக்கு வழக்கமாகச் செய்யக்கூடிய வேலைகளைச் செய்யாமல் தடுக்கக்கூடிய காயம் ஆகியவையாகும்.
உங்கள் உடலுக்கு, அல்லது வேறொருவரின் உடல் அல்லது உங்கள் சொத்திற்க்கு அச்சுறுத்தல் இருக்கும்போது தற்காப்பிற்க்கு செய்யப்படும் செயல் கொலை குற்றத்திற்கு ஆளாகுமா?
நீங்கள் உங்கள் தற்காப்பு உரிமையை பயன்படுத்தும் போது ஒருவருக்கு மரணம் ஏற்படலாம் ஆனால் அதற்க்கு சில வரம்புகள் உள்ளன.அதே போன்று அந்தச் செயலை எதிர்த்து அரசாங்க அதிகாரிகளின் உதவியையும் பாதுகாப்பையும் நாடிப்பெறுவதற்கான அவகாசம் இருக்கும் போதும் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தல் ஆகாது. தற்காப்பு உரிமையை எல்லை மீறிப் பயன்படுத்தக்கூடாது. தற்காப்புக்ககாகத் தாக்க நேரிட்டால் அளவுக்கு மீறித் தீங்கு உண்டாக்கக் கூடாது. தன்னைத் காத்துக் கொள்ள எந்த அளவுக்குத் தாக்குதல் நடத்தல் வேண்டுமோ அதற்கு மேல் சென்று தாக்குதல் நடத்தக் கூடாது. எந்த அளவுக்குத் தாக்குதல் நடத்தல் வேண்டுமோ அதற்கு மேல் சென்று தாக்குதல் நடத்தினால் அது மரணம் விளைவிக்கும் குற்றமே தவிர கொலை ஆகாது
ஒரு நபர் ஒரு கொலைக்கு சாட்சியம் அளிக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
கொலை நடந்த இடத்தில் நீங்கள் பார்த்த அனைத்து விவரங்களையும் ஒரு குறிப்பில் எழுதி வைக்கவும். நீங்கள் எதிர்கொள்ளும் அதிர்ச்சி காரணமாக, முக்கியமான தகவல்களைத் தவறவிடும் போக்கு உள்ளது. இந்த தகவல்களை விரைவில் போலீசாருக்கு வழங்கவும்
கொலைக்கான நேரில் கண்ட சாட்சியை சட்ட கட்டமைப்பு எவ்வாறு பாதுகாக்கிறது?
பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சியாளர் பாதுகாப்பு சட்டம் பாதுகாப்புக்கான உரிமைகளை வகுக்கிறது. உங்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால், நீங்கள் காவல்துறை அல்லது பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சி அதிகார சபையிடம் உதவி பெறலாம்
அலிபி என்றால் என்ன, அது ஒரு கொலை விசாரணையில் எவ்வளவு முக்கியமானது?
ஒரு நபர் குற்றம் நடந்த இடத்தில் இல்லை, ஆனால் வேறு இடத்தில் இருந்திருக்கின்றார் என்று கூறும்போது அது ஒரு அலிபி ஆகும். இது ஒரு நபர் குற்றத்தைச் செய்வதற்கான வாய்ப்பை விலக்குகிறது.
ஒரு குழந்தை அல்லது டீனேஜர் கொலை செய்யும் சூழ்நிலையை சட்டம் எவ்வாறு பார்க்கிறது? ஒரு வயது வந்தவர் குழந்தைக்கு தெரியாமல் ஒருவரைக் கொலை செய்ய பயன்படுத்தும் நிகழ்வில் சட்டம் எவ்வாறு அத்தகைய சூழ்நிலையை பார்க்கும்?
ஒரு குழந்தை சட்டரீதியான வயது வரம்பை விட குறைவாக இருந்தால் பொறுப்பாக முடியாது. 12 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பொறுப்பாளிகள் ஆக முடியும், ஆனால் கொலை தொடர்பாக ஒரு குழந்தைக்கு மரண தண்டனை விதிக்க முடியாது. ஒரு வயது வந்தவர் ஒரு குழந்தையைப் பயன்படுத்தும் இடத்தில், வயது வந்தவர் குற்றத்திற்காக குற்றவாளி ஆவரே தவிர, குழந்தை அல்ல.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு கோர முடியுமா, அவர்கள் சிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமா?
ஆம் அவர்கள் சிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஒரு குற்றம் சமூகத்திற்கு எதிரான தவறு.
கொலை வழக்குகள் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கின்றன, மேலும் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிப்பதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படுகிறார். இங்கே என்ன நடக்கிறது?
சமூக ஊடகங்களும் வெகுஜன ஊடகங்களும் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரிந்ததைப் புகாரளிக்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர் சட்டத்திற்குள் செயல்பட்டாரா என்பதையும், இந்த நபர் கொலை குற்றவாளி என்பதில் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதா என்பதையும் நீதிமன்றம் ஆராய்கிறது. முதல் சுற்றிலேயே ஒன்றை முடிவெடுத்துவிடுவது ஒரு மனிதப் போக்கு, ஆனால் இது நீதிமன்றத்தில் நடக்காது.
சீனத் சாகீர்
ப்ரோ போனோ செயலாளர் 2020-2021
மொழிபெயர்த்தது – எம். திவாகரணி தன்னார்வ எழுத்தாளர் ப்ரோ போனோ
‘இலங்கையின் சட்ட மாணவர் சங்கம்’ என்ற எங்கள் யூடியூப் சேனலில் முழுமையான கலந்துரையாடல்’ மூன்று மொழிகளிலும் கிடைக்கிறது.