Blog Page 8

கிறிஸ்துமஸ் மரங்களை உத்தியோக பூர்வமாக அகற்றிய நாள் இன்று!

கிறிஸ்மஸ் என்றாலே நம் நினைவுக்கு வரும் விடயங்களில் ஒன்றுதான் கிறிஸ்மஸ் மரங்கள். பண்டிகை ஆரம்பிக்கும் அடையாளமாக எல்லா வீடுகளிலும் இந்த மரம் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுவிடும் என்பது நாம் அறிந்தவொன்றுதான் ஆனால் இப்படி அலங்கரிக்கப்பட்ட மரத்தினை மீண்டும் கழட்டி அப்புறப்படுத்துவதற்கான நாள் ஒன்றும் இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பெருக்குத் தெரிந்திருக்கும் ?

ஆம் ஒவ்வொருவருடமும் ஜனவரி ஆறாம் திகதியே இவ்வாறான கிறிஸ்மஸ் மரங்கள் அப்புறப்படுத்துவதற்கான தினம் (national take down the Christmas tree day). சரி ,இனி இந்த கிறிஸ்மஸ் மரத்தின் வரலாற்றினை சற்று பார்த்துவிடுவோமா ? ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த “போனிபேஸ்” என்றொருவர், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பல மூடநம்பிக்கைகள் இருந்ததை எதிர்த்துவந்தார் . ஊர் ஊராகச் சென்று இதற்காக பிரச்சாரம் செய்துவந்த அவர், ஓக் மரம் ஒன்றை மக்கள் வழிபடுவதைக் கண்டு கடுங்கோபம் கொண்டு , அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார்.

அந்த மரம் மீண்டும் துளிர்த்து விடாமல் இருக்க அந்த மரத்தின் வேர்ப்பகுதியையும் அங்கிருந்து பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தினார். ஆனால் மரம் இருந்த அதே இடத்திலிருந்து அடுத்த சில தினங்களிலேயே ஓக் மரக்கன்று முளைத்து விறுவிறுவென்று வளர்ந்து ஓராண்டு காலத்துக்குள்ளாக முன்பிருந்த மரத்தைப்போலவே கம்பீரமாக எழுந்து நின்றதைக் கண்ட மக்கள் அதை இயேசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின் அடையாளமாக பார்க்கத் தொடங்கினர். போனிபேஸ் மீண்டும் அவ்வழியே சென்றபோது தாம் வெட்டிப்போட்ட இடத்தில் புதிய மரத்தைக் கண்டு வியந்து அதனடியில் முழங்காலிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். இதனால் கிறிஸ்தவ வழிபாட்டில் பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரம் ‘உயிர்ப்பின் அடையாளமாக’ இடம்பெறத் தொடங்கியது.

அன்று முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையில் முக்கிய அங்கமாக மாறி விட்டதாகவும், இதனால் ஜெர்மனியே கிறிஸ்துமஸ் மரத்தின் பிறப்பிடம் என்னும் சிறப்புப் பெருமையைப் பெறுவதாகவும் சொல்லப்படுகிறது. இங்கிலாந்து அரசி விக்டோரியா அடிக்கடி ஜெர்மனி நாட்டுக்குப் பயணம் செய்வதுண்டு. அவருக்கு ஜெர்மனி நாட்டு இளவரசர் ஆல்பர்ட் உடன் காதல் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொண்ட இருவரும் இங்கிலாந்து திரும்பினார்கள். 1841-ல் அரசர் ஆல்பர்ட் ஒரு அலங்காரம் செய்த மரத்தை இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் மாளிகையில் வைத்து விழா கொண்டாடினார். அதுவே கிறிஸ்துமஸ் மரத்தின் இங்கிலாந்து பிரவேசம் என்ற கதையும் உண்டு.

1521-ல் பிரான்ஸ் இளவரசி ஹெலீனாதனது திருமணத்துக்குப்பிறகு ஒரு கிறிஸ்துமஸ்மரத்தை பாரீஸ் நகருக்குகொண்டு வந்து விழா கொண்டாடியதே அந்நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்துமஸ் மரம் நுழைந்ததன் முதல் நிகழ்வாக தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மானியர்கள் தான் கிறிஸ்துமஸ் மரத்தைமுதலில் வீடுகளுக்குள்ளும் அனுமதித்தவர்கள்.
இவை ஒருபுறமிருக்க, 15-ம் நூற்றாண்டுகளில் டிசம்பர் 24-ம் நாளை ஆதாம், ஏவாள்தினமாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது. விலக்கப்பட்ட மரத்தின் கனியைத் தின்றதால் பாவத்துக்குள் தள்ளப்பட்ட ஏதேன் காலத்தை நினைவுகூரும் விதமாக மரத்தை ஆப்பிள் போன்ற பழங்களால் அலங்கரித்து அந்த நாளைக் கொண்டாடி வந்தார்கள் என்றும், இதுவே பிறகு கிறிஸ்துமஸ் மரமாக மாறியது என்றும் தகவல்கள் உள்ளன.

“Luv” நாடி Review

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி, கிறிஸ்துமஸ் தினத்தன்று Damith Mendisஇன் இயக்கத்தில் Purnika Perera, Tharinda Dassanayake, Vaseegaran Visvanathan, Sasanka Thalagala, Tiyoshi Dematagoda, Chathurya Francisco மற்றும் Ryan De Silva ஆகியோரின் பங்களிப்பினால் உருவாக்கப்பட்டு Gasma YouTube தளத்தில் வெளியிடப்பட்ட Animated short film தான் ‘LUV’. நான்கு நிமிடங்கள் நாற்பத்தேழு செக்கன்கள் நீளமுடைய இந்த குறுந் திரைப்படம், குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் கிறிஸ்துமஸ் தினத்தில் குடும்பம் இன்றி தவிக்கும் சின்னஞ் சிறார்களின் மனநிலை பற்றி அழகாக படம்பிடித்து காட்டுகிறது.

இந்த Animated short filmஇல் உருவாக்கப்பட்டுள்ள காட்சிகள் ஒவ்வொன்றுமே குறிப்பாக சுவரில் கிறுக்கப்பட்டுள்ள ஓவியம் முதல் நிழல் வரை மிகவும் அழகாக, நுண்ணிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வருகின்ற கதாபாத்திரத்தின் ஒவ்வொரு உணர்வுகளும் மிகவும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இக் குறுந்திரைப்படத்தில் ஒலிக்கின்ற பின்னணி இசை காட்சிகளுக்கு பொருத்தமானவாறு அமைக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு பாராட்டுதலுக்குரிய விடயமாகும்.

மழலைகளுக்கும் அவர்களது பொம்மைகளுக்கும் இடையிலான ஆழமான உறவினை வெளிப்படுத்துவதனூடாக ‘LUV’ என்ற தலைப்புக்கும் கதைக்கும் இடையிலான பொருத்தம் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த கதைக்கும் கிறிஸ்துமஸுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. கிறிஸ்துமஸ் காலத்தில் இவ்வாறு ஆதரவற்ற சிறார்களுக்கு நம்மால் முடிந்த அல்லது நாம் பயன்படுத்தி நல்ல நிலையில் இருக்க கூடிய பொம்மைகளை பரிசளிப்பதால், அவர்கள் பெறுகின்ற சந்தோஷம் விலைமதிப்பில்லாதது என்பதை எமக்கு எடுத்துரைக்கிறது. இறுதியில் காட்டப்படுகின்ற இச் சிறார்களின் உணர்வுகளை படமாக்குவதோடு நின்று விடாது, அவர்களுக்கு களத்தில் இறங்கி உறவாக மாறிய ‘மனுஷத் தெரண’ இன் செயல் பாராட்டுதலுக்குரியது. நாமும் பரிதாப உணர்வினை வெளிப்படுத்துவதோடு நின்று விடாது ‘மனுஷத் தெரண’ உடன் இணைந்து அவர்களுக்கு உறவுகளாகுவோம்.

நாடி Verdict – 98/100

Video Link – https://youtu.be/gUGcTvJNB0c

சூழல் உயிர்ப்பல்வகைமையில் தங்கியிருக்கும் இலங்கை பெண்களின் பொருளாதாரமும் சவால்களும்.

ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடான இலங்கையில் பெண் தொழிலாளர்கள் தேசிய பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகிக்கின்றனர். பெருந்தோட்டத்துறை, விவசாயத்துறை, சேவைத்துறை, கைத்தொழில் துறை என்று அனைத்து தொழில்துறைகளிலும் பெண்களின் வகிபாகம் உயர்ந்து காணப்படுகின்றது. அதிலும் சூழல் சார்ந்து தொழில் புரியும் பெருந்தோட்டத்துறை மற்றும் விவசாயத்துறையில் ஒப்பீட்டளவில் ஆண்களை விடவும் அதிகமாக பெண்களே தொழில் புரிகின்றனர்.

அந்தவகையில் சூழலில் தங்கியிருக்கும் பெண்களின் பொருளாதாரமானது மாறிவரும் சூழல் சமநிலையால் பல்வேறு தாக்கங்களை எதிர்கொண்டுள்ளது. இது உயிர்ப்பல்வகைமையின் இழப்பிலும், காலநிலை மாற்றம் உள்ளிட்ட விடயங்களிலும் நேரடியாக தொடர்புப் பட்டதாகும். எனவே நிலைபேறான விதத்தில் பெண்களின் பொருளாதாரத்தை சூழலுடன் இணைத்து பாதுகாப்பதற்கான திட்டங்கள் வகுப்பது அவசியமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச உயிர்ப்பல்வகைமை மாநாடானது (COP 15) சீனாவின் தலைமையுடன் கனடாவின் மொன்ட்ரியல் நகரில் இடம்பெற்றது. இதன்போது அனைத்து ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளும் பங்குபற்றி 2030 ஆம் ஆண்டில் அடைய எதிர்ப்பார்க்கப்படும் இலக்குகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளன. உயிரியல் பன்முகத்தன்மை குறித்த சர்வதேச வரைபை கடந்த வருட ஜூன் மாதம் கென்யாவின் தலைநகர் நைரோபியில் ஒன்று கூடி நாடுகள் கலந்துரையாடின.

அந்தவகையில் பெற்றுக்கொள்ளப்பட்ட அபிப்பிராயங்கள், ஆலோசனைகள் என்பவற்றின் அடிப்படையில் மொன்ட்ரியல் மாநாடு பல்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டு இறுதி வரைபை பூர்த்திச் செய்தது. இவ்வரைபின் படி 2030 ஆம் ஆண்டில் 30 சதவீதமான நிலப்பரப்பு, சமுத்திரங்கள், கரையோரப் பிரதேசங்கள், நன்னீர் ஆகியவற்றை பாதுகாப்பதற்கும், தீங்கு விளைவிக்கும் விடயங்களுக்கான அரச மானியங்களை 500பில்லியன் அமேரிக்க டொலர்கள் வரை குறைப்பதற்கும், உணவு கழிவுகளை பாதியாக குறைப்பதற்கும் உடன்பாடு எட்டப்பட்டது.

அந்தவகையில் இந்த வரைபானது 04 இலக்குகளின் கீழ் 23 நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தப் பட்டியலில் 22ஆவது நோக்கமானது பால்நிலை சமத்துவம், சம பங்கீடு மற்றும் முடிவெடுப்பதில் பெண்களுக்குச் சமமான அதிகாரமளிப்பு என்பவற்றை மையமாகக் கொண்டது. மேலும் இளைஞர்கள், பழங்குடி சமூகங்கள், சிறுபான்மைச் சமூகங்கள் ஆகிய குழுக்களுக்கும் சூழல் வளங்களை அவற்றின் மீதான உரிமையை உறுதி செய்வதை 22 ஆவது இலக்கு முக்கியத்துவமளிக்கின்றது.

அதனடிப்படையில் இலங்கையில் பெண்கள் சூழல் சார்ந்த வளங்களுடனான அணுகல் சவால் நிறைந்துள்ளமையை காணமுடிகின்றது. பல்வேறு விதமான சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியாக அவர்களுக்கான மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. சூழல் வளங்களை சார்ந்து அவர்கள் தமது நாளாந்த வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டிருந்தாலும் அவ்வளங்கள் மீதான முழுமையான உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அதேபோல் வளப்பகிர்வில் ஒரு சமமற்ற தன்மை பெண்களுக்கும், சிறுபான்மை இனங்களுக்கும் இடையில் பேணப்படுகின்றது.

உதாரணமாக பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்களில் பெரும்பான்மையானோர் தேயிலை, இறப்பர், மற்றும் தென்னை ஆகிய பெருந்தோட்ட தொழில்துறைகளிலேயே தமது அன்றாட வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டுள்ளனர். இவர்களில் கணிசமானோர் பெண் தொழிலாளர்களாவர். இவர்களின் முழுமையான பொருளாதார ஆதாரங்கள் உயிர்ப்பல்வகைமையில் தங்கியுள்ளது. ஆனாலும் இம்மக்களை ஒரு சிறுபான்மை இனக்குழுவாக அடையாளப்பபடுத்தப்படுவதன் காரணமாகவும், அவர்களில் பெரும்பாலான தொழிலாளர்கள் பெண்களாக காணப்படுவதாலும் தொடர்ச்சியாக அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

இலங்கையில் மத்திய மலைநாட்டிலும், தென்பகுதிகளிலும் சிதறி வாழும் மலையகத் தொழிலாளர்கள் 100 சதவீதம் இயற்கை தேயிலை, இறப்பர், தென்னை ஆகிய பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைகளில் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரச காணிகளில் தனியார் குத்தகைக்கு எடுத்து பயிர் செய்யப்படும் இந்த பெருந்தோட்டங்களில் நிலவுரிமையானது இதுவரை இந்த பெண்களுக்கும், சிறுபான்மைச் சமூகங்களுக்கும் வழங்கப்படவில்லை. அந்நிய நிலத்தில் இவர்கள் தொடர்ந்து கூலிகளாகவே தொழில் புரிகின்றனர்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச உயிர்ப்பல்வகைமை வரைபானது தனது 4 இலக்குகளில் பெண்கள், மற்றும் சிறுபான்மை குழுக்களுக்கான வளப்பங்கீடு சமமானதாகவும், நிலைபேறானதாகவும் இருக்க வேண்டியதை உறுதி செய்வதை அடிப்படையாக கொண்டதாகும். எனவே இம்மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுற்றாடல்துறை அமைச்சர் கலந்து கொண்டார். எனவே இங்கு எடுக்கப்பட்ட முடிவுகளில் இலங்கை அரசும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நிர்ப்பந்தத்தை கொண்டுள்ளமை உணரப்பட வேண்டும். மேலும் பொதுவாகவே அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் இவ்வாறான சூழல் சமநிலை இன்மை பிரச்சினைகளும் உள்ளுர் சமூகங்களின் அன்றாட சவால்களும் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கும். அந்தவகையில் தான் இலங்கையிலும் பெண்களுக்கு உயிர்ப்பல்வகைமையின் வளப்பங்கீடும், சம அதிகாரமும் வழங்கப்படுவதில்லை. நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி தேசிய வேலைத்திட்டங்கள் திட்டமிடப்படும் போது சூழல் சார்ந்தும், சிறுபான்மை குழுக்கள் மற்றும் பெண்கள் சார்ந்தும் கவனமெடுப்பது ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

குறிப்பாக இலங்கையின் வடக்கு – கிழக்கு பிரதேசங்கள் 30 வருடகால உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களாகும். இப்பிரதேசங்களில் பெரும்பாலும் தமிழ் சிறுபான்மையினரே வாழ்கின்றனர். இவர்களின் சமூக, பொருளாதார அடிப்படைகள் யுத்தத்தின் காரணமாக சிதைவடைந்துள்ளன. இங்கு இன்று அதிகமான பெண் தலைமைக் குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கான நிலவுரிமையானது முழுமையாக உறுதிச்செய்யப்படவில்லை. மறுபுறம் தொடர் யுத்தத்தின் காரணமாக உயிர்ப்பல்வகைமையும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் வனங்கள் யுத்தத்தின் காரணமாக அதிகமான உயிர்ப்பல்வகைமை இழப்பை எதிர்கொண்டன.

எனவே இங்குள்ள சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்தையும், பிரதேசத்தின் பல்லுயிர் பாதுகாப்பையும் ஒருமிக்க பாதுகாப்பதற்கான திட்டங்களை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் பல்லுயிர் மாநாடு (COP15) இன் இலக்கு 04 இல் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி இந்த இழப்புக்களை மீள்கட்டமைக்க தேவையான நிதி, தொழில்நுட்பம், ஒத்துழைப்பு என்பவை தொகுக்கப்பட்டு பரிமாறக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு என்பதையும் இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆந்த வாய்ப்புக்களை பயன்படுத்துவதற்கான மூலோபாய திட்டங்களை வகுக்க வேண்டும்.

அதேபோல் CBD (COP15) மாநாட்டின் முக்கியமான இலக்குகளில் ஒன்று கரையோரப் பிரதேசங்களை பாதுகாப்பதாகும். இலங்கையை பொருத்தவரை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ளது. மேலும் கடல்சார் மீன்பிடித் தொழில்துறையில் கணிசமான பெண் தொழிலாளர்கள் தொழில்புரிகின்றனர். அவர்கள் பெரும்பாலானோர் தமது அன்றாட வாழ்வாதாரத்துக்கு கடற்றொழிலை நம்பி இருப்போர். அவர்களின் வளங்கள் என்று எதுவும் இல்லை. ஆனால் இயற்கை வளங்களை தமது சொத்தாக வைத்திருக்கும் முதலாளிமார் வளங்கள் மீதான ஆதிக்கத்தைச் செலுத்துகின்றனர். இவர்களின் நோக்கம் மிகை இலாபம் பெறுவதாக மட்டுமே உள்ளது. உயிர்ப்பல்வகைமையின் பாதுகாப்போ, சிறுபான்மை குழுக்கள் மற்றும் பெண்கள் மீதான கரிசனையோ இல்லை. மேலும் COP15 முன்வைத்திருக்கும் 23 நோக்கங்களில் முதன்மையான நோக்கமாக கடல்சார் பாதுகாப்பு காணப்படுகின்றது. இதனை விசேட கவனமெடுத்து 2030 ஆம் ஆண்டுக்குள் கரையோர பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் மீனவ சமூகங்களின் பெண்களுக்கான வளப்பங்கீட்டினை சமாந்தரமாக்குவதங்கான தேசிய வேலைத்திட்டத்தை இலங்கை துரிதப்படுத்த வேண்டும்.

மேலும் GENDER FOR BIODIVERSITY சர்வதேச அமைப்பின் பிரதிநிதி திருமதி. மிருனாளினி ராய் அவர்களை இவ்விடயம் சார்பாக நேர்காணல் செய்தபோது அவர் கூறியதாவது “நைரோபி மாநாட்டில் குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே பெண்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் CBD வரைபை ஏற்றுக் கொண்டன. அதில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை மொன்ட்ரீயல் மாநாட்டில் பெண்கள் தொடர்பான இலக்காக உள்ள நோக்கத்தை (TARGET 22) அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது ஒரு ஆரோக்கியமான விடயமாகும். முக்கியமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கை விடயத்திலும் பெண்களுக்கான வளப்பங்கீடு, சமவாய்ப்புகள் என்பது உறுதி செய்யப்பட வேண்டும்” என்றார்.

இவற்றை தொகுத்து நோக்கும் போது சர்வதேச சுற்றுச்சூழல் வரைபை CBD (COP15) இலங்கையும் ஏற்றுக்கொண்டுள்ள அடிப்படையில் அங்கு குறிப்பிடப்பட்டுள்ள 23 நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தேசியக் கொள்கைத் திட்டம் ஒன்றை வடிவமைக்க வேண்டும். ஒரு முக்கியமான உயிர்ப்பல்வகைமை வலயம் என்ற ரீதியில் இலங்கையின் முன்னேற்றமானது ஆசியாவுக்கான வளமாக அமையும்.

அருள்கார்க்கி

கருக்கலைப்பு

திருமணமாகி கருவுற்றிருக்கும் ஓர் பெண் தன்னுடைய தனிப்பட்ட தொழில்முறை குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து “இப்போதைக்கு குழந்தை வேண்டாம்” என தன்னுடைய கருவைக்கலைப்பதும் அவள் எடுக்கும் அந்த முடிவு எந்தவித நெருடல்களிற்கோ , குற்றவுணர்விற்கோ  சமய சமூக அச்சத்திற்கோ உள்ளாகவேண்டிய ஓன்று அல்ல என்பதுபோல் மருத்துவ துறை சார்பாக எடுத்துரைப்பதுபோல் அமைந்த ஓர் மலையாளத் திரைப்படம்தான் சாரா! காலங்காலமாக கரு ஓன்று அழிக்கப்படுவது மகா பாவம் என்பதுபோலவும் அது ஓர் கொலைக்கு சமம் அப்படி கலைக்கும் பெண்ணானவள் ஒழுக்கக்கேடானவள் என்பதுபோலவும் மட்டுமே சித்தரிக்கப்பட்டு வந்த திரைப்படங்களை பார்த்துவளர்ந்த எனக்கு இந்த திரைப்படம் பெரிதும் மாறுபட்டதாக இவ்வாறான ஓர் நடவடிக்கைக்குப் பின்னாலிருக்கும் ஓர் பெண் சார்பான நியாயத்தை உணர்த்துவதாகவும் அமைந்ததால் இந்த திரைப்படம் பற்றி இங்கே குறிப்பிட்டிருந்தேன்.

கரு கலைப்பு தொடர்பான சட்டங்களும் பண்பாட்டு நோக்கங்களும் உலகம் முழுவதும் வேறுபடுகின்றன. கருக்கலைப்புக்கு எதிரானவர்கள் கருவோ, முளையமோ முதிர் கருவோ மனித உயிருக்குச் சமமானதென்று வாதிடுகின்றனர். கருக்கலைப்பு ஆதரவாளர்கள் கருவை வளரவிடுவதும் அழிப்பதும் அதனை சுமக்கும் பெண்ணின் உரிமை என வாதிட்டு வருகின்றனர் கருக்கலைப்புக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தும் உலக நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது என்கிறபோதிலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தாய் இறப்புக்கான மூன்றாவது பொதுவான காரணியாக பாதுகாப்பற்ற கருக் கலைப்பு என்பது நம் நாட்டில் ஏற்படுவது மிகப்பெரிய முரண். நம் நாட்டில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு காரணமாக 10 முதல் 13 வீதமான தாய்மார்கள் உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதனடிப்படையிலேயே இலங்கையில் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியம் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு துறை சார்ந்தோரால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றபோதிலும் , அதில் சில நடைமுறைச் சிக்கல்களை மத ரீதியில் எதிர்கொண்டதினால் இலங்கை அரசு இதுதொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் அமுல்படுத்தவில்லை என்றே கூறவேண்டியுள்ளது . எனக்கு தெரிந்த ஓர் பெண் வழக்கறிஞரிடம் இதுபற்றி நான் வினவியபோது , அவர் கூறியதாவது இலங்கையின் சட்டப்பிரகாரம் ( Section 303/ 304/305/306 of the Penal Code )ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தைத் தவிர, வேண்டுமென்றே கரு கலைப்பினை ஏற்படுத்துபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அத்தோடு அவ்வாறு கருக்கலைப்பு செய்யப்பட்டவர் ஒரு சிறுமி என்பது உறுதிப்படுத்தப்பட்டால், தண்டனை ஏழு ஆண்டுகளாக அதிகரிக்கலாம். அதேபோல் கருக்கலைப்பு செய்பவருக்கும், கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்ணுக்கும் இதே தண்டனைகள் வழங்கப்படும் எனச் சட்டம் சொல்கின்றது. பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்களுக்குக் கருக்கலைப்பு செய்வதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என பலர் இன்று அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது . சில வருடங்களுக்கு முன் இலங்கையின் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்பிரகாரம் பாலியல் துஷ்பிரயோகம் , 16 வயதுக்கு கீழ் கர்ப்பம் தரித்தல் ( பாலியல் வன்முறை), 12-ஆம் வாரம் கருவில் தீவிர குறைப்பாடு (serious foetal impairments) போன்ற சந்தர்ப்பங்களில் கருக்கலைப்புக்கு அனுமதியளிக்கும் வகையில் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர மருத்துவர்கள் குழுவொன்றினால் பரிந்துரைகள் செய்யப்பட்டதுடன் இவ்வாறான கருக் கலைப்புக்கான சட்டரீதியான அணுமைதியினை அரச மருத்துவமனைகளுக்கு மட்டுமாவது கொடுக்கும்போது முறைகேடுகள் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் போவதோடு இவ்வாறான நடவடிக்கைகளை ஊக்குவிப்பது போலவும் அமையாது என சட்டமருத்துவர்களால் எடுத்துரைக்கப்பட்டது எனினும் பௌத்தம்  கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மத தலைவர்கள் எந்தவொரு காரணங்களுக்காகவும் கருக்கலைப்பு என்பது சட்ட ரீதியாக அனுமதிக்க முடியாது எனவும் மத அடிப்படையில் அது தவறான செயல் எனவும் கடும் எதிர்ப்பினை தெரிவித்தமையினால் சுகாதாரத் துறையின் இந்த பரிந்துரையானது இன்றுவரையில் இழுபறி நிலையிலேயே உள்ளதெனலாம் .

உண்மையில் இவ்வாறான சட்ட மூலங்கள் அதன் பின்விளைவுகள் பற்றி ஆராயப்படாமல் , மத அடிப்படையில் மட்டும் நோக்கப்படுவதென்பது கரு கலைப்பு விடயத்தில் போலி மருத்துவர்களையும் , போலியான நாட்டு வைத்தியர்களையும் உருவாக்குவதுடன் , சட்டத்திற்கு புறம்பான கருக்கலைப்புக்களை ஊக்குவித்து அதன்மூலம் உயிர் இழப்புக்களுக்கு வித்திடும் என்பதும் மறுக்கவியலாது உண்மை .
அநேகமான வளர்ந்த நாடுகளில் , பொதுவாக ஒவ்வொரு நாட்டினதும் சட்ட நடைமுறைக்கு உட்பட்டு, மருத்துவத்தில் பாதுகாப்பான முறைகளைக் கையாண்டு கருக்கலைப்பு செய்யப்படுகின்றது. அது அந்தந்த நாட்டு மக்களது கண்ணோட்டத்தில் மனித உரிமை பேணலாகவும் , பெண் சுதந்திரமாகவும் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

உண்மையில் இந்த கருக்கலைப்பு பிரச்சினையானது இன்று நேற்றல்ல நீண்ட வரலாற்றினையே கொண்டது முற்காலத்தில் பலவகையான முறைகள் மூலம் கருக்கலைப்புச் செய்து வந்தனர். கருக்கலைக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தல், கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தல், மற்றும் பல மரபு சார்ந்த முறைகள் என்பன இவற்றுள் அடங்கும். தற்கால மருத்துவத்தில், மருந்துகள் கொடுப்பதினாலும், அறுவைச் சிகிச்சை மூலமும் கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன. கருக்கலைப்பு செய்வதனால் சில பின்விளைவுகளும் பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் . அதாவது தாய்மாருக்கு கருப்பையில் கட்டிகள் அல்லது நீர்க்கட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாம். இவை உடனே ஏற்படாவிடினும் நீண்டகால இடைவெளியில்கூட உருவாகும் வாய்ப்புக்கள் அதிகம்.

அடுத்த குழந்தை கருப்பையில் தங்குவதில் பிரச்சினை ஏற்படலாம் எனக்கூறப்படுவதோடு , கருக்கலைப்பு செய்வதால் கர்ப்பப்பை வாய் சுருங்கி அடுத்தாக பெற்றெடுக்கும் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது . குறிப்பிட்ட பெண்ணானவள் ரத்தசோகை ரத்தப்போக்கு போன்றவைக்கும் உள்ளாக நேரிடும்.

Bar Ceylon Nadi Review!

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் திகதி ARC Mobiles தாயாரிப்பில் ARC Mobile Production youtube தளத்தில் வெளியான பாடல் தான் ‘BAR CEYLON ’. இந்தப் பாடல், Kings Rajan இனால் இசையமைக்கப்பட்டு Nikson இனால் பாடப்பட்டுள்ளது. இதற்க்கான வரிகள் Latheep Balasubramaniam இனால் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான காட்சிகள் Kathir இன் DIRECTION இனால் படமாக்கி நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் Kugan, Christina, Nila, Robert மற்றும் Aathi ஆகியோரின் கச்சிதமான நடிப்பினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

“ஆஹ் மச்சான் நான் பாரிஸ்ல இருந்து லத்தீப் கதைக்கிறேன். என்னெண்டு சொன்னா குகனுக்கும் நிலாக்கும் LOVE BREAKUP ஆகிட்டுடா. ஆள் சரியான UPSET. நான் அங்க அனுப்பி வைக்கிறேன் ஆள. நீங்க அவனை கொஞ்சம் OKAY ஆக்கி அனுப்புங்கோ.” என்ற LOVE BREAKUPக்காக சிலோனுக்கு குடிக்க வரும் பொருத்தமில்லாத ஒரு LOGIC உடன் ஆரம்பமாகிறது. இந்த dialogueஐ கேட்டவுடன் “பாரிஸ்ல குடிக்க இடம் இல்லையா என்ன?” என்ற கேள்வியே என் புத்திக்குள் உடன் தோன்றி மறைந்தது. அதன் பின் தொடரும் துள்ளல் இசையுடன் “யாரடி புள்ள நீ! கூறடி புள்ள நீ!” என்ற வரிகளுடன் பாடல் தொடர்கிறது. இந்த பாடலின் இசை மற்றும் வரிகள் ஆகியவற்றின் அமைப்பானது, இதனை கானா பாணியில் உருவாக்குவதற்க்காக குழுவினர் முயற்ச்சித்து உள்ளார்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறது இருப்பினும் அது சரியாக அமையவில்லையோ என்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம்.

எனக்கு இதன் இசையும் வரிகளும் அவ்வளவு திருப்தியளிக்கவில்லை ஆனால் பாடலில் உருவாக்கப்பட்டிருந்த காட்சியில் CHOREOGRAPHY சற்று திருப்தியளிக்க கூடியதாக இருந்தது. அந்த இசைக்கு ஏற்றவாறே நடன அசைவுகள் உருவாக்கப்பட்டிருந்தது. நடன கலைஞர்களும் தமது பங்கினை சிறப்பாக வழங்கியிருந்தனர். மீள் உருவாக்கப்பட்ட LOVE காட்சிகளின் BACKGROUND இன்னும் அழகாக EDIT செய்யப்பட்டிருக்கலாம் அல்லது இங்கே உள்ள வேறேதும் வெளிநாடு தன்மையில் இருக்க கூடிய இடங்களில் படம்பிடித்து இருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அந்த காட்சிகள் இன்னும் அழகானதாக இருந்திருக்கும்.

ஆங்காங்கே குறைகள் இருந்தாலும் இந்த பாடலுக்காக கலைஞர்கள் ஒவ்வொருவரும் எத்தனையோ இடர்களுக்கும் தடைகளுக்கும் மத்தியில் தமது பங்கினை அளித்துள்ளமை பாராட்டதக்கது. ‘BAR CEYLON’ பாடல் பற்றிய உங்களுடைய கருத்துகளை எங்களுடன் கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்

கொழும்பில் கிறிஸ்மஸ் நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள்!

கிறிஸ்மஸ் நெருங்கிவிட்டது! எனவே விடுமுறை உணர்வைத் தழுவி கொண்டாட வேண்டிய நேரம் இது – அது ஒரு நெருக்கமான இரவு உணவு கிறிஸ்மஸ் பாஷ் அல்லது குடும்ப விஷயம். உங்கள் தேர்வை எடுங்கள், ஒரு முழுப் பட்டியலை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்!

 

  • 12 Days to Christmas

திகதி: 13 டிசம்பர் 2022

இடம்: Pool Terrace, Cinnamon Lakeside கொழும்பு (115, சார் சித்தம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 2)

நேரம்: மாலை 6:30 மணி முதல்

விலை: LKR 5,000 (நுழைவாயிலில்)

மேலதிக தகவல்களுக்கு: 0775 808 879

 

  • Christmas Carols by the Soul Sounds Academy Choir

திகதி: 14 டிசம்பர் 2022

இடம்: Paradise Road Tintagel கொழும்பு (65, Rosmead பிளேஸ், கொழும்பு 7)

நேரம்: இரவு 7.30 மணி முதல்

விலை: நுழைவு இலவசம் (எல்லா F&Bகளும் ஹிட்டனில் கிடைக்கும் விலைகளுக்கு உட்பட்டது)

முன்பதிவுகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு: 076 800 66 99 | 0112 460 2060

 

  • Quiz Night

திகதி: 15 டிசம்பர் 2022

இடம்: செண்டினரி பார், சிங்கலீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (SSC) (35, மைட்லாண்ட் பிளேஸ், கொழும்பு 7)

நேரம்: மாலை 6.30 மணி முதல்

மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 0112 724 7200

 

  • Christmas Crescendo with Voice Print

திகதி: 15 டிசம்பர் 2022

இடம்: ஹனி பீச் கிளப், The Kingsbury (48, ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு, இலங்கை, 00100)

நேரம்: மாலை 7 மணி முதல்

விலை: LKR 4,900 nett – ஒரு நபருக்கு (இரவு Buffet உணவு உட்பட)

முன்பதிவுகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு: 0769 718 216

 

  • Jingle Bells Colombo

திகதி: 16 டிசம்பர் 2022

இடம்: Zouk கொழும்பு (206, ஹெவ்லொக் வீதி, கொழும்பு 5)

நேரம்: மாலை 7 மணி முதல்

விலை:  லேடீஸ் LKR 1,500 (LKR 2,000 வாயிலில்)

ஜெண்ட்ஸ் LKR 2,000 (LKR 3,000 வாயிலில்)

முன்பதிவுகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு: 0766 171 013

 

  • Open Season 2 (A live multilingual comedy and musical night to remember this Christmas) 

திகதி: 16 டிசம்பர் 2022

இடம்: Hatch Works (14, சார் பரோன் ஜெயதிலக மாவத்தை, 00100, கொழும்பு, இலங்கை)

நேரம்: மாலை 6 மணி

விலை: LKR 2,000 (LKR 3,000 வாயிலில்)

முன்பதிவுகளுக்கு: tickets.lk

மேலும் தகவலுக்கு: 0771 314 343 | 0775 314 343

 

திகதி: 16 டிசம்பர் 2022

இடம்: Cafe 1959 (746, காலி வீதி, கொழும்பு 4)

நேரம்: மாலை 7 மணி முதல்

விலை: LKR 4,500 (BYOB)

முன்பதிவுகளுக்கு: இந்தப் படிவத்தை நிரப்பவும்

மேலதிக தகவல்களுக்கு: 0776 924 816

 

  • Colombo Comedy Rumble

திகதி: 16 டிசம்பர் 2022

இடம்: டிரேஸ் எக்ஸ்பர்ட் சிட்டி (AC19, கொழும்பு 00100)

நேரம்: மாலை 7 மணி முதல்

விலை: LKR 3,500 | LKR 5,000 (விஐபி)

முன்பதிவுக்கு: mytickets.lk/event/colombo-comedy-rumble/741

மேலும் தகவலுக்கு: 0710 949 039 | 0766 723 054 | 0712 358 749

 

  • Fairway Colombo Street Food Festival

திகதிகள்: 16 – 18 டிசம்பர் 2022

இடம்: மருத்துவமனை வீதி, கொழும்பு 01

நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை

மேலதிக தகவல்களுக்கு: 0778 880 606

 

  • Santastic Fest – Richard Christmas Shopping Festival

திகதி: 16 – 24 டிசம்பர் 2022

இடம்: இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம் (SLECC) (12, McCallum சாலை, கொழும்பு 01000)

நேரம்: காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை

விலை: LKR 100

 

  • Family Christmas Concert by the Symphony Orchestra of Sri Lanka

திகதி: 16 – 17 டிசம்பர் 2022

இடம்: பிஷப்ஸ் கல்லூரி ஆடிட்டோரியம் (11, பெரஹெர மாவத்தை, கொழும்பு 3)

நேரம்: மாலை 7 மணி முதல்

விலை: LKR 1,500 (பால்கனி – முன்பதிவு செய்யப்படாதது) | LKR 2,000 | LKR 2,500 | LKR 3,000 | LKR 5,000 | LKR 7,500 (முன்பதிவு செய்யப்பட்டது)

முன்பதிவுகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு: 0740 670 202

 

  • Christmas Carols with Choro Calibre Choir and Music by X Calibre

திகதி: 17 டிசம்பர் 2022

இடம்: சிங்கலீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (SSC) (35, மைட்லண்ட் பிளேஸ், கொழும்பு 7)

நேரம்: மாலை 7 மணி முதல்

மேலதிக தகவல்களுக்கு: 0117 247 200

 

  • Carols at the Beach Park

திகதி: 18 டிசம்பர் 2022

இடம்: The Beach Park – கொழும்பு போர்ட் சிட்டி

நேரம்: மாலை 5:30 மணி முதல்

டிக்கெட்டுகள்: LKR 1,000 (நுழைவு மற்றும் கரோல்ஸ் மட்டும்) | LKR 4,500 (அனைத்தையும் உள்ளடக்கியது, அதனுடன் பானங்கள் மற்றும் BBQ)

முன்பதிவுகள் மற்றும் மேலதிக தகவலுக்கு: 0757 000 500 (WhatsApp)

 

  • Jingles – A Christmas Festival

திகதி: 18 டிசம்பர் 2022

இடம்: கொழும்பு ரேஸ்கோர்ஸ் கார் பார்க் (Reid அவென்யூ, கொழும்பு 7)

நேரம்: மாலை 5 மணி முதல்

விலை: LKR 1,000

முன்பதிவுகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு: 0767 591 311 | 0761 447 840

 

  • A Christmas Chorus (A Christmas concert with Choro Calibre Choir and X Calibre)

திகதி: 20 டிசம்பர் 2022

இடம்: Pool Terrace, Cinnamon Lakeside கொழும்பு (115, சார் சித்தம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 00200)

நேரம்: மாலை 6.30 மணி முதல்

விலை: LKR 2,000

முன்பதிவுகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு: 0112 491 000 | 0712 491 491

 

  • A Night Out with the Colombo Wind Orchestra

திகதி: 20 மற்றும் 22 டிசம்பர் 2022

இடம்: L.A.B, ஹில்டன் கொழும்பு (2, சித்தம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 00200, இலங்கை)

நேரம்: இரவு 8 மணி முதல்

விலை: நுழைவு இலவசம் (எல்லா F&Bகளும் ஹிட்டனில் கிடைக்கும் விலைகளுக்கு உட்பட்டது)

முன்பதிவுகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு: 0112 492 492

 

  • Colombo Shopping Festival

திகதி: 20 – 24 டிசம்பர் 2022

இடம்: BMICH கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம் (பௌத்தலோக மாவத்தை, கொழும்பு 7)

நேரம்: காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை

மேலும் தகவலுக்கு: 0777 287 072 | 0771 038 055 | 0779 484 624

 

  • Christmas Eve with Damian and D-Zone

திகதி: 24 டிசம்பர் 2022

இடம்: சிங்கள விளையாட்டுக் கழகம் (SSC) (35, மைட்லண்ட் பிளேஸ், கொழும்பு 7)

நேரம்: இரவு 7:30 மணி முதல்

மேலதிக தகவல்களுக்கு: 0117 247 200

எங்கள் பட்டியல் உங்கள் கிறிஸ்மஸ் சீசன் லொக்கெட் மற்றும் லோடெட் என்று நம்புகிறோம். நாங்கள் எந்த நிகழ்வுகளையும் தவறவிட்டோமா?

கருத்துகளில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!

 

ஒத்திவைக்கப்பட்டது (POSTPONED)

 

  • X’MAS X-CITEMENT with Infinity at Havelock Grounds

திகதி: 17 டிசம்பர் 2022

நேரம்: மாலை 6.30 மணி முதல்

விலை: LKR 2,000/- (முன் விற்பனை)

LKR 4,000/- (விஐபி மேசை – 8 பேருக்கு)

ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு: https://mytickets.lk/event/x-mas-xcitement/732

மேலதிக தகவல்களுக்கு: 0777 359 508 / 0716 806 852

 

இளைஞர்களின் கணினி அறிவு முக்கியத்துவம்!

இன்றைய நவீன உலகில் அனைத்தும் இயந்திரமயமாகி விட்டன. இன்று உலகில் எங்கும் இயந்திரம் எதிலும் இயந்திரம் என்ற அளவில் இயந்திரங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதில் மிக முக்கியமானது கணினி என்றால் மிகையாகாது.

கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் இன்றைய அறிவியல் தகவல் வளர்ச்சி உலகத்தை ஒரு சிற்றூராக மாற்றிவிட்டது. தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம் நம்வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தகவல் தொடர்புச் சாதனங்களால் ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூட உடனுக்குடன் மற்றோரிடத்தில் அறிய முடிகிறது. இவற்றில் கணினியின் பங்கு அளப்பரியது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுப்பிடிப்பான கணினி, சில நொடிகளில் மில்லியன் கணக்குகளைச் செய்து காட்டும். இதை முறையாக இயக்கினால் மனித மூளையைப்போன்று நுண்ணறிவுத் திறனோடு வேலைச் செய்யும். கணினி இன்று எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

1946இல் அறிமுகப்படுத்தப்பட்ட ENIAC (Electronic Numerical Integrator and Computer) என்ற கணினிதான் உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி (first general-purpose electronic computer). அது அமெரிக்க ராணுவம் பீரங்கி குண்டுகள் செல்லும் பாதையைக் கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்டது. ENIAC பிரம்மாண்டமான ஒரு கணினி. அதன் எடை 27,000 கிலோகிராமுக்கு (60,000 பவுண்டுகளுக்கு) மேல் இருந்தது; அது ஒரு பெரிய அறையையே நிரப்பக்கூடியதாக இருந்தது. தரவைச் செயலாக்க (To process data), ENIAC சுமார் 18,000 வெற்றிடக் குழாய்களைப் (vacuum tubes) பயன்படுத்தியது. இதில் ஒவ்வொரு குழாயும் ஒரு சிறிய பல்பின் அளவு இருக்கும். அந்தக் குழாய்கள் எளிதில் தீர்ந்துபோனதால் (burned out) தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்க வேண்டியிருந்தது.

பாரிசு நகரை சார்ந்த பிளேஸ் பாஸ்கல் என்னும் அறிஞர் கணக்கிடும் கருவியைக் கண்டறிந்தார். கி.பி. 1833 இல் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ் பாப்பேஜ் கணினியை முதலில் வடிவமைத்தார். ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்லேஸ் என்பவர் கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால், முதல் செயல் திட்ட வரைவாளர் எனப் போற்றப்பட்டார். மின்னியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, ஹார்வார்டு பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் ஹோவார்டு ஜாக்கன் என்பவரை ஐ.பி.எம். பொறியாளர் துணையுடன் எண்ணிலக்கக் கணினியைக் கண்டறித் தூண்டியது. இதற்கு ஹார்வார்டு மார்க்-1 எனப் பெயரிட்டனர். தற்போது அமெரிக்காவும் ஜப்பானும் மீத்திறன் கணினியை உருவாக்கப் போட்டியிடுகின்றன.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாகக் கணினியிலும் புதுமையான அமைப்புகள் தோன்றிய வண்ணம் உள்ளன. இன்றைய நிலையில், பல்லூடக வசதிகொண்ட கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி முதலிய கணினிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. கணினியைப் பயன்படுத்துவோரின் தேவை அதிகரிக்க அதிகரிக்க கணினியின் வளர்ச்சியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இதனுடன் இணையத்தளமும் இணைக்கப்பட்டுள்ளதால் தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் பெறமுடிகிறது.

இன்றைய காலகட்டத்தில் அங்கும் கணினி எதிலும் கணினி என்ற அளவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்று பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கல்விக் கூடங்கள் போன்றவற்றில் பாடம் புகட்டுவதற்காக கணினியையே பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாது சில்லறை கடைகள் முதல் பெரிய காரியாலயங்கள் வரை அனைத்திலும் வேலைகள் செய்வதற்கு கணினியே துணை நிற்கிறது.

இவ்வாறு கணினியின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டு செல்லும் இன்றைய காலகட்டத்தில் அவற்றை முறையாகப் பாவிக்கவும் கையாளவும் தெரிந்திருக்க வேண்டியது மிக முக்கியம். அதுவும் கணினி அறிவு இன்றைய இளைஞர்களுக்கு மிக முக்கிய தேவை ஒன்றாக உள்ளது. கணினியை எவ்வாறு பயன்படுத்துவது, இயக்குவது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் அதை இன்றைய இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் பல்வேறு சவால்களுக்கு அவர்கள் முகங்கொடுக்க நேரிடுகிறது.

இன்று கணினி குறும்பர்/ஹேக்கர்(hacker)களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்த நிலையில் உள்ளது. ஹேக்கர்கள் பாவனையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களது தகவல்களை கடத்தி பிறருக்கு அனுப்புகின்றனர். இதில் அவர்களின் தனிப்பட்ட தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், முக்கிய ஆவணங்கள் என்பன உள்ளடங்கும். இவ்வாறு ஹேக்கர்கள் தகவல்களை திருடி பயனாளிகளை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்கின்றனர். அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்காத பட்சத்தில் தகவல்களை வெளியிட்டு விடுவதாக பயமுறுத்துகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மேலும், வங்கிக் கணக்குகள், வியாபாரக் கணக்குகள் போன்றவற்றை ஹேக் செய்து பல லட்சம் ரூபாய்களையும் கொள்ளை அடிக்கின்றனர்.மேலும் இது போன்று பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கான மிக முக்கிய காரணம் கணினியை எவ்வாறு உபயோகிப்பது என்ற அறிவு இல்லாமையே ஆகும்‌. கணினியை எவ்வாறு கையால்வது, எவ்வாறு இயக்குவது, தகவல்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தெரியாததால் தால் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் கடத்தப்படுகின்றன.

மேலும், பல இளைஞர்கள் கணினியை முறையாக பாவிக்கத் தெரியாது பாவிப்பதால் பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுப்பதோடு, தற்கொலைகளும் செய்து கொண்டுள்ளனர். இவ்வாறான இள வயது மரணங்களை தடுக்க வேண்டும் எனில், கணினி பற்றிய அறிவு அவசியம் ஆகும்.இன்று கணினி பற்றி பல்வேறு இடங்களில் கற்றுக் கொடுக்கிறார்கள். அதை சரிவர கற்று கணினியை பாவிப்பதால் கணினியால் ஏற்படும் விளைவுகளை தடுக்கலாம்.

எனவே, இன்றைய இளைஞர் சமூகத்திற்கு கணினி அறிவு மிக முக்கியமான ஒன்றாகும்.

F. முனீரா

கொழும்பில் கிறிஸ்மஸ் பரிசு கிடைக்கும் இடங்கள் 2022!

கிறிஸ்மஸ் என்பது கொடுப்பதற்கான சீசன் அதன் அர்த்தம் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆம் கிறிஸ்மஸ் பரிசுகளுக்கான வெறித்தனமான வேட்டை தொடங்குகிறது.

டிசம்பர் மாதத்தின் போது நமது பெரும்பாலான பாக்கெட்டுகளை காலி செய்வதில் பெயர் போனது என்றாலும் சில வழிகாட்டுதலுக்காக சில கிஃப்ட் இன்ஸ்போஸ் மற்றும் மலிவு விலையில் பரிசு விருப்பங்களை வைத்திருப்பது உதவியாக அது இருக்கலாம். பயப்படாதே அதையே நாங்கள் சரியாகத்தான் உங்களுக்காக இங்கே பெற்றுள்ளோம் எனவே படிக்கவும்! மற்றும் மகிழ்ச்சியான ஷாப்பிங்!

 

  1. பெயர்: House of Gifts

விலை வரம்பு: LKR 100 க்கு மேல்

தொலைபேசி: 0714 516 385

முகவரி: இல 06, பகதலே வீதி, கொழும்பு 03

பிரபலமான பொருட்கள்: மெழுகுவர்த்திகள், மேசைப் பாத்திரங்கள், சீஸ் பலகைகள்

 

முகநூல்: @thehogifts

இன்ஸ்டாகிராம்: @houseofgifts.lk

இணையத்தளம்: www.houseofgifts.lk

 

  1. பெயர்: Who We Are

விலை வரம்பு: LKR 100 க்கு மேல்

தொலைபேசி: 0765 444 474

முகவரி: இல. 97, புத்கமுவ வீதி, ராஜகிரிய

பிரபலமான பொருட்கள்: அட்டைகள், அட்வென்ட் காலெண்டர்கள், கேன் பரிசு பைகள்

முகநூல்: @whowearelk

இன்ஸ்டாகிராம்: @whowearelk

இணையதளம்: whoweare.lk/

 

  1. பெயர்: Candle House Ceylon

விலை வரம்பு: LKR 150 க்கு மேல்

தொலைபேசி: விசாரணைகளுக்கு நேரடி செய்தி அனுப்பவும்.

மின்னஞ்சல்: hello@candlehouseceylon.com

முகவரி: ஆன்லைன் ஸ்டோர்

பிரபலமான பொருட்கள்: வாசனை மெழுகுவர்த்திகள்

 

முகநூல்: @candlehouseceylon

இன்ஸ்டாகிராம்: @candlehouseceylon

இணையதளம்: candlehouseceylon.com

 

  1. பெயர்: Eco Kade

விலை வரம்பு: LKR 200 க்கு மேல்

தொலைபேசி: 0768 621 306

முகவரி: ரொட்ரிகோ லேன், தெஹிவளை.

பிரபலமான பொருட்கள்: இயற்கைக்கு பாதிப்பில்லாத கோப்பைகள் மற்றும் ஸ்ட்ராக்கள்

 

 

முகநூல்: @Eco-Kade

இன்ஸ்டாகிராம்: @eco_kade

இணையதளம்: www.ecokade.com/

 

  1. பெயர்: Buds ‘N’ Plants

விலை வரம்பு: LKR 350 க்கு மேல்

தொலைபேசி: 0778 787 456

முகவரி: இல 04, வூட்லண்ட் அவென்யூ, கொழும்பு

பிரபலமான பொருட்கள்: தனிப்பயனாக்கப்பட்ட பானைகள் கொண்ட தாவரங்கள்

முகநூல்: @budsnplants

இன்ஸ்டாகிராம்: @budsnplants

 

  1. பெயர்: Ms Soapy Suds

விலை வரம்பு: LKR 450 க்கு மேல்

தொலைபேசி: 0777 891 507

முகவரி: ஆன்லைன் ஸ்டோர்

பிரபலமான பொருட்கள்: அனைத்து இயற்கை சோப்

முகநூல்: @MsSoapySuds

இன்ஸ்டாகிராம்: @ms_soapy_suds

இணையதளம்: thedesigncollectivestore.com/designers/ms-soapy-suds

 

  1. பெயர்: Sustainablee

விலை வரம்பு: LKR 500 க்கு மேல்

தொலைபேசி: 0773 840 515

முகவரி: ஆன்லைன் ஸ்டோர்

பிரபலமான பொருட்கள்: போத்தல் பைகள், தனிப்பயனாக்கக்கூடிய பரிசுப் பொதிகள் (ஹோம்வேர் பரிசுகள், போர்ட்டபிள் டிராவல் கிட்கள்)

முகநூல்: @sustainableeyours

இன்ஸ்டாகிராம்: @sustainableeyours

இணையதளம்: www.sustainableeyours.com/

 

  1. பெயர்: Amberry

விலை வரம்பு: LKR 750 க்கு மேல்

தொலைபேசி: 0774 543 542

முகவரி: 74, கல்விஹார வீதி, தெஹிவளை-கல்கிசை

பிரபலமான பொருட்கள்: தனிப்பயனாக்கப்பட்ட மர கஃப்லிங்க்ஸ், போ-டைகள்

முகநூல்: @amberrysrilanka

இன்ஸ்டாகிராம்: @amberrysrilanka

இணையதளம்: amberry.business.site

 

  1. பெயர்: Selyn Fair Trade

விலை வரம்பு: LKR 800 க்கு மேல்

தொலைபேசி: 0112 596 838

முகவரி: இல. 102, ஃபைஃப் வீதி, கொழும்பு 05

பிரபலமான பொருட்கள்: மேசைத் துணி, நாப்கின்கள், குஷன் கவர்கள்

முகநூல்: @selynfairtrade

இன்ஸ்டாகிராம்: @selynfairtrade

இணையதளம்: selyn.lk/

 

  1. பெயர்: Shoelace Studio

விலை வரம்பு: LKR 850 க்கு மேல்

தொலைபேசி: 0773 516 606

முகவரி: Tribe, L – 2, One Galle Face

பிரபலமான பொருட்கள்: கஸ்ட்டொம் ஒர்னமெண்ட்ஸ், ஆணி மற்றும் சரம் கலை, சுவர் கலை

முகநூல்: @shoelacestudio

இன்ஸ்டாகிராம்: @shoelace_studio

 

  1. பெயர்: Cozy Linen Sri Lanka

விலை வரம்பு: LKR 950 க்கு மேல்

தொலைபேசி: 0777 879 888 | 0765 382 332

முகவரி: குயின்ஸ் வீதி, கொழும்பு 03 (டிவைன் பேக்கரி எதிரில்)

பிரபலமான பொருட்கள்: மெத்தைகள், மேசைப் பாத்திரங்கள்

முகநூல்: @cozylinen

இன்ஸ்டாகிராம்: @cozylinensrilanka

 

  1. பெயர்: Cane Couture

விலை வரம்பு: LKR 1,000 க்கு மேல்

தொலைபேசி: 0765 499 930

முகவரி: 761/1, உடவத்த வீதி, மாலபே

பிரபலமான பொருட்கள்: குஷன் கேஸ்கள், கேன் திசு பெட்டிகள்

முகநூல்: @canecouture.lk

இன்ஸ்டாகிராம்: @canecouture

 

  1. பெயர்: Lassana Flora

விலை வரம்பு: LKR 1,000 க்கு மேல்

தொலைபேசி: 0112 001 122

முகவரி: 279C, நாவல வீதி, நாவல, ராஜகிரிய

பிரபலமான பொருட்கள்: கேக்குகள், பூ ஏற்பாடுகள், பழ கூடைகள், கௌர்மெட் ஹம்பெர்ஸ்

முகநூல்: @lassanaflora

இன்ஸ்டாகிராம்: @lassana_flora

இணையதளம்: lassana.com

 

  1. பெயர்: Barefoot

விலை வரம்பு: LKR 1,000 க்கு மேல்

தொலைபேசி: 0112 589 305

முகவரி: இல. 704, காலி பிரதான வீதி, கொழும்பு 03

பிரபலமான பொருட்கள்: பட்டிக் கிரியேஷன், கைவினைப்பொருட்கள் மற்றும் ஆடைகள்

முகநூல்: @barefootceylon

இன்ஸ்டாகிராம்: @barefootceylon

இணையதளம்: https://barefootshoponline.com/

 

  1. பெயர்: Tayo Bear

விலை வரம்பு: LKR 1,000 க்கு மேல்

தொலைபேசி: 0771 992 907

முகவரி: இல. 71, 2 கிரிகோரிஸ் வீதி, கொழும்பு 07

பிரபலமான பொருட்கள்: நாய் அட்வென்ட் காலெண்டர்கள், கிறிஸ்மஸ் பெட்டி, பிறந்தநாள் பெட்டி

முகநூல்: @tayobearSl

இன்ஸ்டாகிராம்: @tayobear

இணையதளம்: www.tayobear.com

 

  1. பெயர்: The Mugshot LK

விலை வரம்பு: LKR 1,300 க்கு மேல்

தொலைபேசி: 0765 667 761

முகவரி: பரகும்பா பிளேஸ், வெள்ளவத்தை, கொழும்பு 06

பிரபலமான பொருட்கள்: பரிசுப் பெட்டிகள் (தனிப்பயனாக்கப்பட்ட மக்ஃஸ், குறிப்பேடுகள், மெழுகுவர்த்திகள்) – தனித்தனியாகவும் விற்கப்படுகின்றன.

முகநூல்: @themugshotlk

இன்ஸ்டாகிராம்: @the_mugshotlk

இணையதளம்: themugshotlk.com

 

  1. பெயர்: Wishque

விலை வரம்பு: LKR 1,500 க்கு மேல்

தொலைபேசி: 0712 128 888

முகவரி: இல 374, ஹைலெவல் வீதி, கங்கொடவில, நுகேகொட.

பிரபலமான பொருட்கள்: கேக்குகள், கிப்ட் ஹம்பெர்ஸ் (சாக்லேட்டுகள், அத்தியாவசிய பொருட்கள், இனிப்புகள்), ஃபிலவர்ஸ்

முகநூல்: @wishqueshop

இன்ஸ்டாகிராம்: @wishqueshop

இணையதளம்: www.wishque.com

 

  1. பெயர்: Sweet Thingiez

விலை வரம்பு: LKR 1,700 க்கு மேல்

தொலைபேசி: 0706 625 625

முகவரி: ஆன்லைன் ஸ்டோர்

பிரபலமான பொருட்கள்: ஸ்டேஷனேரி பரிசுப் பொதிகள்

முகநூல்: @SweetThingiez

இன்ஸ்டாகிராம்: @sweetthingiez

 

  1. பெயர்: Spa Ceylon

விலை வரம்பு: LKR 3,000 க்கு மேல்

தொலைபேசி: 0112 381 199 (One Galle Face)

முகவரி: அனைத்து கிளைகள்

பிரபலமான பொருட்கள்: தோல் பராமரிப்பு பரிசு மூட்டைகள், அட்வென்ட் காலெண்டர்கள்

முகநூல்: @SpaCeylonAyurveda

இன்ஸ்டாகிராம்: @spaceylonofficial

இணையதளம்: lk.spaceylon.com/

 

  1. பெயர்: Basketeer

விலை வரம்பு: LKR 3,500 க்கு மேல்

தொலைபேசி: 0761 711 388

முகவரி: 68/5A, பதிலியதுடுவ வீதி, வத்தளை

பிரபலமான பொருட்கள்: தனிப்பயனாக்கப்பட்ட பரிசுப் பெட்டிகள் (மக்ஃஸ், மெழுகுவர்த்திகள், டீ, ஸ்பா சிலோன் எண்ணெய்கள்)

முகநூல்:  @BasketeerSriLanka

இன்ஸ்டாகிராம்: @basketeersrilanka

இணையதளம்: basketeer.lk/

 

  1. பெயர்: Luvessence

விலை வரம்பு: LKR 3,900 க்கு மேல்

தொலைபேசி: 0112 083 134 (OGF அவுட்லெட்) | 0776 584 848 (ஹாட்லைன்)

முகவரி: LG – 29, One Galle Face Mall, கொழும்பு

பிரபலமான பொருட்கள்: அட்வென்ட் காலெண்டர்கள், பரிசு மூட்டைகள் (வாசனை திரவியங்கள், பாடி லோஷன், லிப் பாம்)

முகநூல்: @LuvEsence

இன்ஸ்டாகிராம்: @luvesence_

இணையதளம்: https://www.luvesence.com

 

  1. பெயர்: Isla

விலை வரம்பு: LKR 5,000 க்கு மேல்

தொலைபேசி: 0777 297 635

முகவரி: ஆன்லைன் ஸ்டோர்

பிரபலமான பொருட்கள்: சலவை கூடைகள், சுவர் அலமாரிகள், கேன் கட்டப்பட்ட சுவர் கண்ணாடிகள்

முகநூல்: @isla.lk

இன்ஸ்டாகிராம்: @isla_lk

 

  1. பெயர்: Kapruka

விலை வரம்பு: LKR 5,000 க்கு மேல்

தொலைபேசி: 0117 551 111 (ஹாட்லைன்)

முகவரி: 237/22, விஜயகுமாரதுங்க மாவத்தை, கொழும்பு 05

பிரபலமான பொருட்கள்: கிப்ட் ஹம்பெர்ஸ் (அத்தியாவசிய பொருட்கள், பழங்கள்), பூக்கள்

முகநூல்: @kaprukafans

இன்ஸ்டாகிராம்: @kapruka

இணையதளம்: https://www.kapruka.com

 

  1. பெயர்: Ceylon Hampers

விலை வரம்பு: LKR 5,000 க்கு மேல்

தொலைபேசி: 0772 422 446

முகவரி: 273, காலி வீதி, தெஹிவளை-கல்கிசை

பிரபலமான பொருட்கள்: தனிப்பயனாக்கப்பட்ட பரிசுப் பெட்டிகள் (உணவுப் பொருட்கள், உடல் பராமரிப்பு, மக்ஃஸ், குறிப்பேடுகள்)

தனிப்பட்ட மற்றும் கார்ப்பரேட் பரிசுகள்

முகநூல்: @ceylonhamperss

இன்ஸ்டாகிராம்: @ceylon_hampers_gifting

இணையதளம்: https://ceylonhampers.com

 

  1. பெயர்: Boxalate

விலை வரம்பு: LKR 5500 க்கு மேல்

தொலைபேசி: 0775 806 688 (தனிப்பட்டவர்களுக்கு) | 0777 674 735 (கார்ப்பரேட்டுகளுக்கு)

முகவரி: 37/1, ஜெயசெவன மாவத்தை, தெஹிவளை-கல்கிசை

பிரபலமான பொருட்கள்: தனிப்பயனாக்கப்பட்ட பரிசு பெட்டிகள் (சாக்லேட்டுகள், தின்பண்டங்கள், வாசனை திரவியங்கள், குறிப்பேடுகள்)

தனிப்பட்ட மற்றும் கார்ப்பரேட் பரிசுகள்

முகநூல்: @Boxalate

இன்ஸ்டாகிராம்: @boxalate.lk

 

  1. பெயர்: Leather Collection

விலை வரம்பு: LKR 10,000 க்கு மேல்

தொலைபேசி: 0115 886 116

முகவரி: இல. 26, ஃபிலவர் வீதி, கொழும்பு 07

பிரபலமான பொருட்கள்: உடைகள், காலணிகள், பைகள்

 

முகநூல்: @leathercollectionsl

இன்ஸ்டாகிராம்: @leathercollectionsl

இணையதளம்: https://www.leathercollection.lk

 

  1. பெயர்: Cotton + Paper

விலை வரம்பு: LKR 12,000 க்கு மேல்

தொலைபேசி: 0772 896 969

முகவரி: 30, டாக்டர் லெஸ்டர், சர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை

பிரபலமான பொருட்கள்: டைரிகள், ப்லான்னேர்ஸ், வாழ்த்து அட்டைகள்

 

முகநூல்: @cottonandpaper

இன்ஸ்டாகிராம்: @cottonandpaper.colombo

 

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சரியான பரிசைப் பெற இந்தப் பட்டியல் உதவும் என்று நாம் நம்புகிறோம்.  ஏதேனும் பரிந்துரைகள் உள்ளதா? இருப்பின் கருத்துக்களை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

 

ஆக்கம் Shuara Jaldin

 

கொழும்பில் கிறிஸ்துமஸ் சாப்பாட்டு இடங்கள் 2022!

Shangri-La Colombo
Capital Bar & Grill
நிகழ்வு: Christmas Eve 4 – Course Dinner
திகதி: 24 டிசம்பர்
நேரம்: மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை
விலை: LKR 19,500 ++ (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0117 887 288

Shang Palace
நிகழ்வு: All You Can Eat Chinese – Yum Cha Lunch Buffet
திகதிகள்: 24 – 25 டிசம்பர்
நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை
விலை: LKR 6,588 ++ (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0117 887 288

The Central
1. நிகழ்வு: Christmas Eve Dinner and Christmas Day Brunch
திகதிகள்: 24 – 25 டிசம்பர்
நேரம்: மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை (டிசம்பர் 24) | மதியம் 12.30 மணி முதல் 3.30 மணி வரை (டிசம்பர் 25)
விலை: LKR 12,500 ++ (ஒரு நபருக்கு) | LKR 6,250 ++ (4 முதல் 12 வயது வரையிலான குழந்தைக்கு)
முன்பதிவுகளுக்கு: 0117 887 288

2. நிகழ்வு: Christmas Day Dinner
திகதிகள்: 25 டிசம்பர்
நேரம்: மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை (டிசம்பர் 25)
விலை: LKR 9,500 ++ (ஒரு நபருக்கு) | LKR 4,750 ++ (4 முதல் 12 வயது வரையிலான குழந்தைக்கு)
முன்பதிவுகளுக்கு: 0117 887 288

2.
1. நிகழ்வு: Christmas Brunch
திகதி: 25 டிசம்பர்
நேரம்: காலை 11.30 மணி முதல் மாலை 3 மணி வரை
விலை: LKR 12,500 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0112 541 010

2. நிகழ்வு: Christmas Eve High Tea
திகதி: 24 டிசம்பர்
நேரம்: மாலை 4 மணி முதல் 6 மணி வரை
விலை: LKR 4,990 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0112 541 010

3. நிகழ்வு: Christmas Eve Dinner
திகதி: 24 டிசம்பர்
நேரம்: இரவு 7.30 மணி முதல் 11 மணி வரை
விலை: LKR 11,500 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0112 541 010

4. நிகழ்வு: Christmas Day Dinner
திகதி: 25 டிசம்பர்
நேரம்: மாலை 7 மணி முதல் 10.30 மணி வரை
விலை: LKR 7,900 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0112 541 010

3.Hilton Colombo
Emperor’s Wok
நிகழ்வு: Christmas Eve Dinner, Christmas Day Lunch and Dinner
திகதிகள்: 24 – 25 டிசம்பர்
நேரம்: இரவு 7 மணி முதல் 11 மணி வரை (24 டிசம்பர்) | மதியம் 12 முதல் 3 மணி வரை (டிசம்பர் 25)
விலை: LKR 22,888 nett (இருவருக்கான செட் மெனு)
முன்பதிவுகளுக்கு: shop.hiltoncolombo1.com/Events/Christmas-Festive-Tickets
மேலதிக தகவல்களுக்கு: 0112 492 492

Graze Kitchen
நிகழ்வு: Christmas Eve Dinner and Christmas Day Buffet
திகதி: 24 – 25 டிசம்பர்
நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை (25 டிசம்பர்) | இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை (24, 25 டிசம்பர்)
விலை: LKR 12,888 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0112 492 492

Sunset Blue
1. நிகழ்வு: Christmas Eve Dinner
திகதி: 24 டிசம்பர்
நேரம்: மாலை 7 மணி முதல்
விலை: LKR 9,888 nett (ஒரு நபருக்கு – செட் மெனு)
முன்பதிவுகளுக்கு: 0112 492 492

2. நிகழ்வு: Christmas Day Dinner
திகதி: 25 டிசம்பர்
நேரம்: மாலை 7 மணி முதல்
விலை: LKR 10,688 nett (ஒரு நபருக்கு – செட் மெனு)
முன்பதிவுகளுக்கு: 0112 492 492

4. Jetwing Colombo
Restaurant ‘57
1. நிகழ்வு: Christmas High Tea
திகதி: 1 – 31 டிசம்பர்
விலை: LKR 3,600 nett (per platter – serves two)
நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை
முன்பதிவுக்கு: 0707 542 418 (கனிஷ்க) | 0707 110 979 (இஷினி)

2. நிகழ்வு: Christmas Eve Dinner
திகதி: 24 டிசம்பர்
விலை: LKR 6,500 nett (ஒரு நபருக்கு)
நேரம்: மாலை 7 மணி முதல்
முன்பதிவுக்கு: 0707 542 418 (கனிஷ்க) | 0707 110 979 (இஷினி)

3. நிகழ்வு: Christmas Day 3-Course Lunch
திகதி: 25 டிசம்பர்
விலை: LKR 6,500 nett (ஒரு நபருக்கு)
நேரம்: மதியம் 12:30 மணி முதல்
முன்பதிவுக்கு: 0707 542 418 (கனிஷ்க) | 0707 110 979 (இஷினி)

Ward 7 Restobar
நிகழ்வு: Christmas High Tea
திகதி: 1 – 31 டிசம்பர்
விலை: LKR 5,200 nett (per platter – serves two)
நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை
முன்பதிவுக்கு: 0707 542 418 (கனிஷ்க) | 0707 110 979 (இஷினி)

5. Rare Bar + Kitchen
1. நிகழ்வு: Christmas Eve Dinner
திகதி: 24 டிசம்பர்
விலை: LKR 15,900 nett (ஒரு நபருக்கு)
நேரம்: மாலை 7 மணி முதல் 11 மணி வரை
முன்பதிவுக்கு: 0766 205 675 | 0115 673 000

2. நிகழ்வு: Christmas Day Brunch
திகதி: 25 டிசம்பர்
விலை: LKR 8,900 nett (ஒரு நபருக்கு)
நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை
முன்பதிவுக்கு: 0766 205 675 | 0115 673 000

6. Cinnamon Grand
Tea Lounge
நிகழ்வு: Grand Christmas High Tea
திகதிகள்: 15 – 25 டிசம்பர்
நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை
விலை: LKR 8,800 nett (high tea platter for two)
முன்பதிவுகளுக்கு: 0112 437 437

Plates
1. நிகழ்வு: Christmas Eve Dinner and Christmas Day Lunch Buffet
திகதிகள்: 24 – 25 டிசம்பர்
நேரம்: இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை (24 டிசம்பர்) | மதியம் 12 முதல் 3 மணி வரை (டிசம்பர் 25)
விலை: LKR 11,000 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0112 437 437

2. நிகழ்வு: Christmas Day Dinner Buffet
திகதி: 25 டிசம்பர்
நேரம்: இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை
விலை: LKR 9,000 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0765 604 972

Noodles
நிகழ்வு: All You Can Eat Far Eastern Family Style Menu
திகதிகள்: 24 – 25 டிசம்பர்
நேரம்: இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை (24 டிசம்பர்) | மதியம் 12 முதல் 3 மணி வரை (டிசம்பர் 25)
விலை: LKR 7,500 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0765 604 972

Cheers Pub
1. நிகழ்வு: Traditional Christmas Carvery Buffet
திகதிகள்: 24 – 25 டிசம்பர்
நேரம்: இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை
விலை: LKR 8,500 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0112 497 373

2. நிகழ்வு: British Style Christmas Carvery Buffet
திகதி: 25 டிசம்பர்
நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை
விலை: LKR 8,500 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0112 497 373

Nuga Gama
நிகழ்வு: Authentic Srilankan Buffet with Festive Specialities
திகதிகள்: 24 – 25 டிசம்பர்
நேரம்: மாலை 7 மணி முதல் 11 மணி வரை
விலை: LKR 7,500 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0765 604 972

London Grill
நிகழ்வு: Curated 7- Course Meal at London Grill
திகதிகள்: 24 – 25 டிசம்பர்
நேரம்: இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை
விலை: LKR 18,000 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0765 604 972

இடம்: Seafood Buffet
திகதி: 25 டிசம்பர்
நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை
விலை: LKR 6,200 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0112 497 371

7.
1. நிகழ்வு: Christmas Eve Dinner and Christmas Day Lunch Buffet
திகதிகள்: 24 – 25 டிசம்பர்
நேரம்: மாலை 6.30 மணி முதல் நள்ளிரவு வரை (24 டிசம்பர்) | மதியம் 12 முதல் 3 மணி வரை (டிசம்பர் 25)
விலை: LKR 11,000 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0112 491 000

2. நிகழ்வு: Christmas Day Dinner Buffet
திகதி: 25 டிசம்பர்
நேரம்: மாலை 6.30 மணி முதல் நள்ளிரவு வரை
விலை: LKR 8,500 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0112 491 000

8. Cinnamon Red
Flavoured
1. நிகழ்வு: Christmas Eve Dinner and Christmas Day Dinner Buffet
திகதிகள்: 24 – 25 டிசம்பர்
நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை
விலை: LKR 7,500 LKR nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0112 145 145

2. நிகழ்வு: Christmas Day Lunch Buffet
திகதி: 25 டிசம்பர்
நேரம்: மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை
விலை: LKR 5,500 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0112 145 145

Cloud Red
நிகழ்வு: Festivi-Teas and Treats
திகதிகள்: டிசம்பர் 1 – 30
நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை
விலை: LKR 3,500 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0703 145 175

9. ME Colombo
MY Dining
1. நிகழ்வு: Christmas Eve Dinner
திகதி: 24 டிசம்பர்
நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை
விலை: LKR 9,000 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 071 273 1434 (F&B Manager) | 0117 654 321 | 0712 134 444

2. நிகழ்வு: Christmas Day Lunch
திகதி: 25 டிசம்பர்
நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை
விலை: LKR 5,500 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 071 273 1434 (F&B Manager) | 0117 654 321 | 0712 134 444

10. Taj Samudra
Ports of Call
1. நிகழ்வு: Traditional Christmas Day Brunch and Dinner
திகதி: 25 டிசம்பர்
நேரம்: காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை | இரவு 7.30 மணி முதல் 11 மணி வரை
விலை: LKR 7,950 nett (ஒரு நபருக்கு) | LKR 3,950 nett (5 முதல் 12 வயது வரையிலான குழந்தைக்கு)
முன்பதிவுகளுக்கு: 0112 446 622

2. நிகழ்வு: Christmas Brunch with Unlimited Beer
திகதி: 25 டிசம்பர்
நேரம்: காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை
விலை: LKR 8,950 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0112 446 622

3. நிகழ்வு: Christmas Brunch with Wine
திகதி: 25 டிசம்பர்
நேரம்: காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை
விலை: LKR 10,950 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0112 446 622

4. நிகழ்வு: Christmas Brunch with Unlimited Bubblies
திகதி: 25 டிசம்பர்
நேரம்: காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை
விலை: LKR 13,950 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0112 446 622

11. Galadari Hotel
Lobby Bar
நிகழ்வு: Christmas High Tea
திகதிகள்: 16 – 18 டிசம்பர்
நேரம்: மாலை 3.30 முதல் 6 மணி வரை
விலை: LKR 5,486 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0112 544 544

The Coffee Shop

1. நிகழ்வு: Christmas Eve Dinner
திகதி: 24 டிசம்பர்
நேரம்: இரவு 7.30 மணி முதல் 11 மணி வரை
விலை: LKR 9,900 nett (ஒரு நபருக்கு) | LKR 5,500 nett (ஒரு குழந்தைக்கு 5 முதல் 10 வயது வரை)
முன்பதிவுகளுக்கு: 0112 544 544

2. நிகழ்வு: Lunch with Santa
திகதி: 25 டிசம்பர்
நேரம்: மதியம் 12 மணி முதல்
விலை: LKR 9,900 nett (ஒரு நபருக்கு) | LKR 5,500 nett (ஒரு குழந்தைக்கு 5 முதல் 10 வயது வரை)
முன்பதிவுகளுக்கு: 0112 544 544

3. நிகழ்வு: Christmas Day Dinner Buffet
திகதி: 25 டிசம்பர்
நேரம்: இரவு 7.30 மணி முதல்
விலை: LKR 8,900 nett (ஒரு நபருக்கு) | LKR 4,900 nett (ஒரு குழந்தைக்கு 5 முதல் 10 வயது வரை)
முன்பதிவுகளுக்கு: 0112 544 544

12. Radisson hotel
Rooftop Lounge
நிகழ்வு: Christmas Lunch
திகதி: 25 டிசம்பர்
நேரம்: காலை 11 மணி முதல்
விலை: LKR 7,500 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0705 258 888

13. Hotel MaRadha
The Royal Code
நிகழ்வு: Christmas Lunch
நேரம்: மதியம் 12 மணி முதல்
திகதி: 25 டிசம்பர்
விலை: LKR 5,800 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0706 543 220

14. Movenpick Hotel Colombo
Vistas Rooftop Bar
நிகழ்வு: Christmas Eve Rock with The Kingdom
திகதி: 24 டிசம்பர்
நேரம்: இரவு 8 மணி முதல்
விலை: LKR 5,000 nett (ஒரு நபருக்கு – LKR 3,000 F&B இல் மீட்டெடுக்கலாம்)
முன்பதிவுகளுக்கு: 0764 014 738 | 0766 995 707

AYU Restaurant
1. நிகழ்வு: Christmas Eve Dinner
திகதி: 24 டிசம்பர்
விலை: LKR 9,500 nett (ஒரு நபருக்கு) | LKR 5,500 nett (12 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு)
நேரம்: மாலை 7 மணி முதல் 10.30 மணி வரை
முன்பதிவுக்கு: 0112 745 0450

2. நிகழ்வு: Christmas Day Brunch
திகதி: 25 டிசம்பர்
விலை: LKR 9,500 nett (ஒரு நபருக்கு) | LKR 5,500 nett (12 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு)
நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை
முன்பதிவுக்கு: 0112 745 0450

3. நிகழ்வு: Christmas Day Dinner
திகதி: 25 டிசம்பர்
விலை: LKR 8,500 nett (ஒரு நபருக்கு) | LKR 4,900 nett (12 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு)
நேரம்: மாலை 7 மணி முதல் 10.30 மணி வரை
முன்பதிவுக்கு: 0112 745 0450

15. Ramada Colombo
Gardenia restaurant
நிகழ்வு: Christmas Eve Dinner (Gala Dinner Buffet)
திகதி: 24 டிசம்பர்
விலை: LKR 7,900 nett (ஒரு நபருக்கு)
நேரம்: மாலை 7 மணி முதல்
முன்பதிவுக்கு: 0112 422 001 | 0777 864 864

16. Mandarina Colombo
Magnolia Banquet Hall
நிகழ்வு: Christmas Eve Dinner Buffet
திகதி: 24 டிசம்பர்
விலை: LKR 7,800 nett (ஒரு நபருக்கு)
நேரம்: இரவு 8 மணி முதல்
முன்பதிவுக்கு: 0702 583 523 | 0701 752 554 | 0112 550 660

On the Eleventh
1. நிகழ்வு: Christmas Day Lunch Buffet
திகதி: 25 டிசம்பர்
விலை: LKR 6,000 nett (ஒரு நபருக்கு)
நேரம்: மதியம் 12.30 முதல் 2.30 வரை
முன்பதிவுக்கு: 0702 583 523 | 0701 752 554 | 0112 550 660

2. நிகழ்வு: Christmas Day High Tea Buffet
விலை: LKR 3,800 nett (ஒரு நபருக்கு)
நேரம்: மாலை 3.30 முதல் 5.30 வரை
முன்பதிவுக்கு: 0702 583 523 | 0701 752 554 | 0112 550 660

3. நிகழ்வு: Christmas Day Chinese Dinner Buffet
திகதி: 25 டிசம்பர்
விலை: LKR 4,350 nett (ஒரு நபருக்கு)
நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை
முன்பதிவுக்கு: 0702 583 523 | 0701 752 554 | 0112 550 660

17. Garton’s Ark
நிகழ்வு: Christmas Eve and Christmas Day Dinner
திகதிகள்: 24 – 25 டிசம்பர்
நேரம்: மாலை 7 மணி முதல் 11 மணி வரை
விலை: LKR 7,000 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0768 000 600

Shangri-La
Christmas Crib Decorating
இடம்: Adventure zone
திகதி: டிசம்பர் 25
நேரம்: மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை
முன்பதிவுகள்: 0117933633

Christmas Scavenger Hunt
இடம்: Adventure zone
திகதி: டிசம்பர் 25
நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரை
முன்பதிவுகள்: 0117933633

Cinnamon Grand
À La Carte and Seafood Market
இடம்: Lagoon
திகதி: 24 டிசம்பர்
நேரம்: இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை
விலை: À la carte விலைகள் மாறுபடலாம்
முன்பதிவுகளுக்கு: 0765 604 972

À La Carte Authentic South Indian Menu
இடம்: Chutneys
திகதி: 24 டிசம்பர்
நேரம்: இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை
விலை: À la carte விலைகள் மாறுபடலாம்
முன்பதிவுகளுக்கு: 0765 604 972

A La Carte Authentic South Indian Menu
இடம்: Chutneys
திகதி: டிசம்பர் 25
நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை
விலை: உங்கள் ஆர்டரைப் பொறுத்தது
முன்பதிவுகளுக்கு: 0765604972

A la Carte and Seafood market
இடம்: Lagoon
திகதி: டிசம்பர் 25
நேரம்: மாலை 7 மணி முதல் நள்ளிரவு வரை
விலை: ஆர்டரைப் பொறுத்தது
முன்பதிவுகளுக்கு: 0765604972

 

A Merry Sunset Soiree
இடம்: Cloud Red
திகதி: 15 – 30 டிசம்பர்
நேரம்: மாலை 5 மணி முதல் 11.45 மணி வரை
விலை: ஆர்டரைப் பொறுத்தது
முன்பதிவுகளுக்கு: 07003145175

● Vivanta Colombo, Airport Garden
X-Mas Eve Dinner
திகதி: 24 டிசம்பர்
நேரம்: மாலை 7 மணி முதல் 10.30 மணி வரை
விலை: LKR 8,500 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0115 440 000

Brunch
திகதி: 25 டிசம்பர்
நேரம்: காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை
விலை: LKR 7,500 nett (ஒரு நபருக்கு)
முன்பதிவுகளுக்கு: 0115 440 000

‘Degree’ – Nadi Review

2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி Hi Tamilஇனால் தயாரிக்கப்பட்டு அதன் youtube தளத்தில் வெளியான குறும்படம் தான் ‘Degree’. குறும்படம் ‘Degree’, Jana இயக்கத்தில் Piratheepan மற்றும் Vimal ஆகியோரால் காட்சிகளாக்கப்பட்டு Jana, Mowlee Ehamparanathan, Gobi, Sharmilan மற்றும் Shayanthan ஆகியோரின் நடிப்பினால் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான எடிட்டிங் வேலைகள் Anujan King மற்றும் Jathu Fxஇனால் மேற்க் கொள்ளப்பட்டுள்ளன.

இன்றைய சமூகத்தில் இளந்தலைமுறையினர் எதிர்க்கொள்கின்ற பெரும் சிக்கலுக்குரிய பிரச்சனை ஒன்றை இந்த குறும்படம் வெறும் 5நிமிடம் 45செக்கன்களில் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. இதை விட வேறு எந்த குறும்படத்தினாலும் Degree உடன் இளைஞர்கள் படும் அவலத்தை இவ்வளவு தெளிவாக கூற முடியாது. ஆரம்பத்தில் இரு நண்பர்கள் சந்தித்து கொள்ளும் காட்சியோடு ஆரம்பமாகும் இந்த குறும்படம் அவர்கள் application form சமர்ப்பிக்க போவதோடு நகர்கிறது. application நிரப்புவதற்க்கு பேனா இல்லாமல் பின் ஒரு வழிப்போக்கரிடம் சென்று பேனா கேட்பதில் வளர்கிறது கதையின் களம். அதன் பின் தோன்றி மறையும் ஒவ்வொரு காட்சிகளும் ‘Degree’ என்ற படத்தின் தலைப்புக்கு மிக பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இறுதியில் அந்த வழிப்போக்கன் யார் என்ற கேள்விக்கான விடையோடு குறும்படம் முடிகிறது.

இக் குறும்படத்தில் இசை,காட்சிகள் மற்றும் நடிப்பு என அனைத்தும் முழுமையான உணர்வினை அளித்திருந்த போதும், சிறு சிறு திருத்தங்களுக்கு உட்படுத்த வேண்டிய பகுதிகளும் உண்டு. கதாநாயகன் Degree முடித்து interview அட்டென்ட் செய்யும் போது, அங்கு உள்ள அதிகாரி “என் கம்பெனில வேலை செய்ற கடைசி அடிமட்ட ஆள் வரைக்கும் குறைஞ்சது ரெண்டு degreeஆவது வச்சு இருக்கோனும்! எதாச்சும் கம்பெனில வேல செஞ்ச experience இருக்கா?” என கேட்பார். இதைக் கேட்டவுடன் என் மனதில் “ஏய் எப்புட்றா!” என்ற இன்ஸ்டாகிராமில் வைரல் ஆன பையனின் dialogue தான் ஞாபகம் வருகிறது. எதார்த்தத்தை படமாக்க முடிவு செய்து விட்டு வசனத்தில் எதார்த்தத்தை வெளிக்காட்ட தவறிவிட்டனர். இரண்டு degree அதுவும் ஆரம்ப position க்கு, இரண்டு degreeயோடு experience உம் இருக்க வேண்டுமாம் ஒரு degree முடிக்கவே அவனவன் முடியாமல் இருக்கும் நிலையில், அந்த dialogue எனக்கு லாஜிக் இல்லாத ஒன்றாகவே தோன்றியது.

அடுத்து interviewக்காக போன இடங்களில் எல்லாம் file தூக்கி வீசப்படும் காட்சியும் லாஜிக் இல்லாததாகவே தோன்றியது. எந்த interviewயிலும் அவ்வாறு நடப்பது மிக அரிது. assignments submissionஇனின் போது papers வீசப்பட்டு அவற்றை எடுத்து வந்த mindsetஇல் இந்த காட்சியை எழுதி இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. அதற்கு பதிலாக காதநாயகன் தனது fileஐ தூக்கி எரிந்து கவலை கொள்வது போல் காட்சியினை அமைத்திருக்கலாம்.

எது எவ்வாறாக இருப்பினும் சமூக பிரச்சனையை இவ்வளவு எளிதாக தெளிவாக சொன்ன ‘Degree’ குறும்படம் என் மனதை வென்ற குறும்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. நீங்களும் ‘Degree’ குறும்படம் பற்றிய உங்களது கருத்துக்களை எங்களுடன் கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

வீணடிக்கப்பட்ட மக்கள் பணம் தேசிய லொத்தர் சபையின்  பொறுப்பற்ற செலவு!!

ரூ.3.87 கோடி செலவில் கலையகம்: ஆனால் ரூபவாஹினியில் ஒளிப்பதிவு செய்ய ரூ.214.7 பில்லியன் செலவு
பொறுப்புக்கூற முடிவெடுத்த பணிப்பாளர் சபை இல்லை
அரசாங்க நிறுவனங்களைப் பொறுப்பக்கூற வைக்கசட்ட விதிமுறைகள் உள்ளனவா?

அரச நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் சேவையாற்றும் அதிகாரிகளால் காலத்துக்குக் காலம் எடுக்கப்படும் தீர்மானங்களால் அரச நிதிக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுவதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) முன்னாள் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான அபிவிருத்தி லொத்தர் சபையின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் பற்றி ஆராயும் வகையில் கோப் குழு பாராளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் (10) கூடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அபிவிருத்தி லொத்தர் சீட்டிழுப்பு நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்யும் நோக்கில் 38.75 மில்லியன் ரூபாய் செலவு செய்து 2010 ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகளை ஆரம்பித்த கலையகத்தை உரிய நோக்கத்திற்காக 2015 முதல் இதுவரை பயன்படுத்தாமை தொடர்பில் குழுவின் அவதானம் செலுத்தப்பட்டது. மேலும், இதே நோக்கத்திற்காக அவ்வாறான நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்வதற்கு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில்  2146.82 மில்லியன் ரூபா பணம் செலுத்தியமை தொடர்பிலும் குழு வினவியது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினால் மானிய விலையில் ஒளிப்பதிவு செய்வதால் இந்தக் கலையகம் தேவையில்லை எனவும், அதனை கேட்போர் கூடமாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அபிவிருத்தி லொத்தர் சபையின் அதிகாரிகள்  தெரிவித்தனர்.

இதன்போது கோப் குழுவின் முன்னாள் தலைவர் கருத்துத் தெரிவிக்கும் போது

வெவ்வேறு தலைவர்கள் மற்றும் பணிப்பாளார் சபைகளின் தேவைக்கு ஏற்ப இவ்வாறான திட்டங்களை ஆரம்பிப்பதால் பாரிய நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும், அவ்வாறான திட்டங்கள் முறையாக உள்வாங்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் முறையான அறிக்கையொன்றை அமைச்சின் செயலாளர் ஊடாக குழுவுக்கு சமர்ப்பிக்குமாறும் முன்னாள் கோப் தலைவர் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக வொக்க்ஷோல் வீதியில் இலக்கம் 234 எனும் கட்டடத்தை வாடகை அடிப்படையில் சபைக்கு பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை அபிவிருத்தி லொத்தர் சபையினால் ஒருதலைப்பட்சமாக மீறியதால் சபைக்குக் கிடைக்கவேண்டிய  5,700,000 ரூபாய் நிதியை 14 ஆண்டுகளாக அறவிட முடியாமல் இருப்பது தொடர்பிலும் குழுவின் அவதானம் செலுத்தப்பட்டது.

அபிவிருத்தி லொத்தர் சபை வர்த்தக அமைச்சின் கீழ் இருந்த போது மேற்படி கட்டடம் வர்த்தக அமைச்சினால் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், தமது சபைக்கு கட்டடம் தேவைப்படுவதால் மேற்படி கட்டடத்தை பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சு அறிவித்ததாக சபை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, அமைச்சின் இடைக்கால குத்தகையின் கீழ் இந்தக் கட்டடத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சபையினால் இந்தக் கட்டடத்தை பயன்படுத்தும் போது மேலதிக நிதி செலவிடப்படுவதால் ஒப்பந்தத்தை இரத்துச் செய்ததாகவும், கட்டடத்துக்கான அடிப்படை கட்டணம் வர்த்தக அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் இங்கு புலப்பட்டது. அதற்கமைய உரிய நிதியை பெற்றுக்கொள்வைத்து தொடர்பில் அமைச்சின் செயலாளரின் அவதானிப்புக்களை கோரியுள்ளதாகவும் இதற்காக அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் தற்பொழுது கிடைத்துள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

2015 மே மதம் 25 ஆம் திகதி இலக்கம் பி.ஈ.டி/01/2015 எனும் அரசாங்க முயற்சியாண்மை சுற்றுநிருபத்துக்கு அமைய தகைமைகளை பூர்த்தி செய்யாத போக்குவரத்து உரிமை அற்ற அதிகாரிகள் 08 பேருக்கு உத்தியோகபூர்வ வாகனங்களை ஒதுக்கியமை மற்றும் எரிபொருள் மணியத்துக்காக 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் 2,590,545 ரூபா நிதி வழங்கியமை தொடர்பில் கோப் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

அபிவிருத்தி லொத்தர் சபை ஜனாதிபதி செயலகத்தின் கீழ்இருந்த போது வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் வாகனங்கள் வழங்கப்பட்டதாகவும், பின்னர் அவ்வாறான வாகனங்களை வழங்குவதை நிறுத்துமாறு அமைச்சு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்தி உரிய அனைத்து ஆவணங்களுடன் அறிக்கையொன்றை குழுவிற்கு அனுப்புமாறு கோப் குழுவின் தலைவர், நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார்.

2008 ஆம் ஆண்டில் முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக 8,095,000 ரூபா பெறுமதியான கெப் வாகனமொன்றை சபையின் தலைவரால் பெற்று அதனை சபையின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அன்று முதல் அந்த வாகனம் காணாமல் போயுள்ளமை தொடர்பில் கோப் குழு நீண்ட நேரம் வினவியது.

அந்த வாகனத்துக்காக முகவர் நிறுவனத்துக்கு கொடுப்பனவு செய்யாமை காரணமாக அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்ததால் அபிவிருத்தி லொத்தர் சபையினால் அந்நிறுவனத்துக்கு சுமார் 16,190,000 ரூபா செலுத்தவேண்டி ஏற்பட்டது. இந்த வழக்குக்காக சபையினால் மேற்கொள்ளப்பட்ட சட்டத்தரணிகள் கொடுப்பனவு உள்ளிட்ட 2018 டிசம்பர் 31 ஆம் திகதி வரையான முழு நட்டம் 26,634,185 ரூபாவாகும்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய இந்தக் நட்டத்தை அறவிடுவதற்கு சிவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இதன்போது சபையின் தலைவர் தெரிவித்தார்.

இந்த நட்டம் தொடர்பி்ல் தேசிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம் வினவிய போது

தேசிய லொத்தர் சபையினால் 2010 ஆம் ஆண்டின் போது ரூபா 38,752,448 தொகை செலவில் லொத்தர் சீட்டிழுப்பை ஒலிப்பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளுக்காக கலையரங்கமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்த போதிலும் அந்த கலையரங்கம் உரிய நடவடிக்கைகளுக்காக

பயன்படுத்தப்படாதிருந் ததுடன் கலையரங்கத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பாக ஆய்வு செய்து ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் மூலம் 2012 ஐூன் மாதத்தின் போது

வழங்கப்பட்ட சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கும்  சபை நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. அதன் பிரகாரம் சபைக்குச் சொந்தமான கலையரங்கம் பயன்படுத்தப்படாமல் லொத்தர் சீட்டிழுப்புக்கள் தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுவதற்காக மீளாய்வாண்டின் போது ரூபா 36,850,000 தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தப்பட்டிருந்ததுடன் சபையின் கலையரங்கம் சபையின் விரிவுரை மண்டபமாக பயன்படுத்தப்பட்டிருந் ததாக 2015 ஆம் ஆண்டின் கணக்காய்வாளர் அறிக்கை குறிப்பிடுகின்றது

முறையான பிரகாரம் கொள்வனவுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு கொள்வனவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையும், குறித்த காலப்பகுதியில் லொத்தர் சீட்டுக்களை அச்சிடுவதற்காக உடன்படிக்கை கைச்சாத்திடப்படாமை போன்ற காரணங்களினால் அச்சிடல்

நடவடிக்கைகளிலிருந்து சபைக்கு ரூபா 6,093,297 தொகையான நட்டம் ஏற்பட்டிருந்ததாகவும்

 ஒன்றிணைந்த தகவல் முறைமையொன்றை ஏற்படுத்துவதற்காக மீளாய்வாண்டின் போது கூட்டுமொத்தமாக ரூபா 3,472,393 தொகை செலவிடப்பட்டிருந்த போதிலும், பின்னர் அந்த செயற்பாடுகள் இரத்துச் செய்யப்பட்டமையினால் இந்த செலவினம் பயனற்ற செலவினமொன்றாகியிருந்ததாக கணக்காய்வாளர் தலைமை அதிபதி தெரிவித்தார்.

லொத்தர் விற்பனை செய்வோரிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரூபா 26,691,000 தொகை நிர்ணயிக்கப்பட்டதன் பிரகாரம் சபைக்கு நேரடியாக கிடைக்க கூடிய ரூபா 184,100 ஆன வட்டி வருமானமொன்று இழக்கப்பட்டிருந்ததுடன் இந்த லொத்தர் சீட்டுக்களின் பரிசுக்காக வழங்கப்பட்ட வேண்டிய வண்டியின் பெறுமதி லொத்தர் சீட்டு வருமானத்தின் 47 சதவீதமான ரூபா 12,697,755 ஆக இருந்த போதிலும், வழங்கப்பட்ட வண்டியின் பெறுமதி 67 சதவீதமான ரூபா 18,000,000 ஆக இருந்தமையால் நிர்ணயிக்கப்பட்ட பரிசுத்தொகையை மிகைத்து ரூபா 5,305,245 செலவிடப்பட்டுள்ளதாக 2017 ஆம் ஆண்டின்  கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த சீட்டிழுப்பிற்காக அச்சிடப்பட்ட மொத்த லொத்தர் சீட்டுக்கள் விற்பனை செய்வதற்கு முன்னர் சீட்டிழுப்பு நடாத்தப்பட்டமையால் எஞ்சிய 7204 லொத்தர் சீட்டுக்களுக்குரிய அச்சிடல் கிரயமான ரூபா 396,220 தொகை சிக்கனமற்ற செலவினமொன்றாக கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டதாக கணக்காய்வு அறிக்கை குறிப்பிடுகின்றது.அதாவது 32 ஆவது கொழும்பு எயார்போட் சுபர் டிரோ லொத்தர் சீட்டிழுப்பிற்கு செல்லுபடியான ரூபா 627,750 பெறுமதியான காணாமல் போன 135 லொத்தர் சீட்டுக்களின் பெறுமதியை அறவிடுவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் தேசிய லொத்தர் சபையினால்  எடுக்கப்பட்டிருக்கவில்லையெனவும்,சபைக்கு எதிராக 6 வெளிநபர்களினால் வேலை இடைநிறுத்தியமை சபைக்கு வழங்கிய சேவைகளுக்கான கொடுப்பனவு செய்யாமை இரத்துச் செய்யப்பட்ட வெகுமதி உரித்துக்கு கடன் வழங்கப்பட்டமை போன்ற காரணங்களின் அடிப்படையில் 84,905,330 இழப்பீடாக கோரி 6 நீதிமன்றங்களால் வழக்கு தொடரப்பட்டுளளதாகவும் அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் அரசிற்குரிய 02 காணிகளில் சுற்றுலா விடுதிகள் நிர்மாணிக்கப்பட்டு பேணப்படாதிருந்த போதிலும் அக் காணியின் உரித்தினை சட்டரீதியாக கையேற்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில லை அதேவேளை, 2003 ஜூன் 02 ஆந் திகதி பீஈடீ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின்பிரகாரம் சபைக்குச் சொந்தமான வளங்கள் அமைச்சிற்கோஅல்லது ஏனைய அரசாங்க நிறுவனங்களுக்கோ வழங்க முடியாதிருந்த போதிலும் அதற்கு முரணாக சபையின் 08 உத்தியோகத்தர்கள் நிதியமைச்சிற்காக 2017 ஜனவரி முதல் விடுவிக்கப்பட்டிருந்தனர். மேலும், அந்த உத்தியோகத்தருக்கு சபையிலிருந்து செலுத்தப்பட்ட ஊழியர் ஊதியம் மற்றும் ஊக்குவிப்பு படியான ரூபா 1,589,656 தொகையினை மீளளிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை என குறித்த கணக்காய்வு அலுவலகம் தெரிவித்தது.

2015 ஆம் ஆண்டின் கணக்காய்வாளர் அறிக்கையின் படி,    

2014 2015
தேசிய லொத்தர்  சபையின் மொத்த இலாப 44% 43%
தேசிய இலாப விகிதம் 19% 19%
நடைமுறை விகிதம்: 1:1.5 1:1.6

2017 ஆம் ஆண்டின் கணக்காய்வாளர் அறிக்கையின் படி

2016 2017
மொத்த இலாபம் 13.02% 12.36%
தேறிய இலாபம்/நட்டம் 2.05% 0.83%
நடைமுறைச் சொத்து விகிதம் 1.34:1 1.65:1
விரைவுச் சொத்து விகிதம்

 

1.31:1 1.61:1

2018  ஆம்  ஆண்டின் கணக்காய்வாளர் அறிக்கையின்  படி 

2017 2018
மொத்த இலாபம் : 12.36% 13.04%
தேறிய இலாபம்/நட்டம் 

சதவீதம்:

 

0.83% 0.67%
நடைமுறைச் சொத்து

விகிதம் :

 

1.65:1 1.75:1
விரைவுச் சொத்து விகிதம் : 1.61:1 1.73:1

இது சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவிடம் நாம் வினவினோம்,

மொத்த நட்டம் எவ்வளவு என்பதை சரியாக உறுதியாக என்னால் கூற முடியாது. குறிப்பிடும் அளவுக்கு பாரிய அளவிலான நட்டங்கள் எட்டப்படவில்லை என கருதுகிறேன். அவர்களிடம் இருந்த பெரிய பிரச்சினை தான் கள்ள டிக்கட் விநியோகித்தது.அதாவது ஒரே இலக்கத்தை கொண்ட பல டிக்கட்கள் அச்சிடப்பட்டிருந்தன. அதில் சாதாரணமாக 8-12 சதவீதமான டிக்கட்கள் கள்ள டிக்கட்களாகவே இருந்தது.

மறுபக்கத்தில் பார்க்கும்போது  வருமான ரீதியில் குறிப்பிடும் அளவுக்கு எந்த வளர்ச்சியும் காணப்படவில்லை. நிறைய வகையான டிக்கட்கள் வைக்கப்பட்டாலும் அதில் வருமானம் போதியளவில் இல்லை.

புதிதாக டிக்கட்கள் அச்சிடப்பட்டாலும் வருமானம் ஒரே அளவிலேயே காணப்பட்டது. இவர்களது Budjet குறிப்பிட முடியாதளவு அதிகரித்திருந்தது.

 குறிப்பாக டிக்கட் அச்சிடும் இடம் சம்பந்தமாக பிரச்சினையொன்றும் இருந்தது. அதாவது  குறைந்த விலைக்கான கோரிக்கையில் தானா வழங்கப்படுகிறது சம்பந்தமாக பிரச்சினைகள் இணங்காணப்பட்டது.

குறிப்பாக ஒரே இலக்கத்தில் அச்சிடப்பட்டதும்  அதற்கான பரிசுகள் வழங்கப்படாததுமே இங்கு பிரதான மோசடியாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க தெரிவித்தார்.

இந்த நட்டம் குறித்து தேசிய லொத்தர் சபையின் தலைவரை  தொடர்புகொண்டு  நாம் வினவினோம்,

 தேசிய லொத்தர் சபையில் எந்த இழப்புக்களும் பாரியளவில் இல்லை என தலைவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக , தேசிய லொத்தர் சபையில் டிக்கெட்டுகளை அச்சிடும் போது மோசடிகள் ஏற்பட்டதாக எம்மிடம் கூறினார் அது சம்பந்தமாக  தேசிய லொத்தர் சபையின் தலைவரிடம் நாம் வினவினோம்.

எங்களது மகஜன சம்பத எனும் டிக்கட் அதிகமான விற்பனைக்குரியது. அது எழு நாட்களும் விற்பனை செய்யப்படுகின்றது. சுமார் 1.1 மில்லியன் தினந்தோறும் விற்பனைகள் நிகழ்கின்றன. 2018 இல் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டு குறைந்த வருமானம் ஈட்டக்கூடிய அரச நிறுவனங்களுக்கு வருமானம் ஈட்டும் நோக்கில் State Printing Corporation (SPC) அதற்கு வழங்கப்பட்டது.

நாட்டின் பொருளாதார சிக்கலினால் காலப்போக்கில் அச்சிடுவதற்கு  கடதாசி கொண்டு வர முடியாமல் போனது. இதனை தொடர்ந்தே எமக்கு அச்சிடுவதில் பிரச்சினைகள் உருவாகின. அதை தொடர்ந்து தனியார் நிறுவனங்களுக்கு அச்சிடும் திட்டம் வழங்கப்பட்டது. அவர்கள் எங்களுக்கு உரிய நேரத்தில் டிக்கட்டுகளை வழங்குகின்றனர். இதை தொடர்ந்து SPC, அரசாங்கத்துடன் பிரச்சினையை தீர்பதற்கான வழிமுறைகளை ஆலோசனை மூலம் பெற்றிருப்பதாக நான் அறிவேன்.

இதை தொடர்ந்து வாகனம் மற்றும் கட்டிடம் சம்பந்தமாக 2015 -2018 காலப்பகுதிக்குள் இடம்பெற்ற நட்டம் தொடர்பில் வினவினோம் அது தொடர்பில் தங்களுக்கு போதிய தகவல் தெரியாது எனவும்,பெரிதளவான நட்டம் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தர்.

அரசாங்க நிறுவனங்களைப் பொறுப்புக்கூற வைக்க சட்ட விதிமுறைகள் உள்ளனவா என சட்டத்தரணி  ருடானி சாஹிரிடம் வினவிய போது,

அரச நிறுவனங்களை பொறுப்புக்கூற வைப்பதற்கான சட்ட விதிமுறைகள் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அங்கீகாரம் இருக்கின்றது. சட்டத்திலும் அதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.  அரச நிறுவனங்களின் மோசடியொன்றை குற்றப்பதிவிடுவதற்கான வழிமுறைகளாக முதலில் குறிப்பட்ட நிறுவனத்துக்கு எதிராக இலஞ்ச ஊழல்(Bribary Comission) ஆணையகத்தில் முறைப்பாடு ஒன்றை இட்டு அதன் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID ) முறைப்பாடு செய்து அதன் பின்னர் குறிப்பிட்ட மோசடிக்கு பொருத்தமான நீதிமன்றம் வரை வழக்கை கொண்டு செல்லலாம். குறிப்பாக உச்ச நீதிமன்றம் (Supreme court ) வரை கொண்டு செல்ல முடியும் என சட்டத்தரணி சாஹிர் தெரிவித்தார்.

           -அப்ரா அன்ஸார்

திருமணத்திற்குப் பின் பெண்களின் தொழில் செய்யும் உரிமை!

திருமணதிற்குப்பின்னும் பெண் வேலைக்குப்போவதால்தான் குடும்ப உறவுகள் சீர்குலைகின்றனவென்றும்  குழந்தைகளுக்கு அன்பு கிடைக்காது அவர்கள் தவறான பாதைக்கு கொண்டுசெல்லப்படுகிறார்கள் என்றும் சமுதாயம் நலிவுறுகிறதென்றும் நம்மில் பலர் நினைப்பதுண்டு. அவர்களது கூற்றுக்களில் உண்மை இல்லாமல் இல்லை. பிரச்சினைகள் எம்முன் உள்ளன. ஆனால் இவர்கள் பெண்களுக்கு முன் வைக்கும் தீர்வுகள் தான் இன்றைய காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. பரிசீலிக்கப்பட வேண்டியவை. பல ஆண்டுகளாக குடும்பம் சார்ந்த வேலைகளையே தனது கடமைகளாக செய்து வந்த பெண் சம அந்தஸ்துடன் குடும்பத்திற்கு அப்பால் உள்ள உலகத்திலுள்ளும் தனது பங்களிப்பை செய்யவிழையும் போது குடும்பம் பல பிரச்சினைகள் எதிர்நோக்கும்.

காலங்காலமாக பெண்களது கைகளில் இருந்த சமையறை குடும்பம் என்பன மற்றவர்களுக்கும் பங்கிடப்படும் போது அவ்வேலைகளில் குறைபாடும் நேர்த்தியின்மையும் ஏற்படுவது தவிர்க்க முடியாது. அதுவே நிரந்தரமானதல்ல. அதற்கான தீர்வுகள் வைக்கப்பட்டு நடைமுறைக்கு வரும்போது பிரச்சினைகளும் மறைந்து போகும் இல்லையா? ஒழுக்கம் குழந்தை வளர்ப்பு, குடும்ப நலனில் அக்கறை, தியாகம், சேவை போன்றவையெல்லாம் ஒரு குடும்ப கட்டமைப்புக்கு தேவையானதென்றால் அது கணவனுக்கும் தேவையான ஒன்றே ஒரு ஆண் இதையெல்லாம் செய்துகொண்டே தன ஆளுமையையும், அறிவாற்றலையும், இன்னபல திறமைகளையும் வெளிப்படுத்திக்கொள்ளவும் மென்மேலும் வளர்த்துக்கொள்ளவும் உரிமை இருக்கும்போது ஒரு பெண்ணுக்கு அத்தகைய திறமைகள் இருப்பதில் என்ன தவறிருக்க முடியும்? எல்லா குடும்பங்களிலும் கணவன் தன மனைவின் ஆளுமைக்கும் சேர்த்தே செலவழிப்பான் என்றில்லையே? ஏனெனில் பல குடும்பங்களில் மனைவியின் அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட பணம் கொடுக்காத கணவர்கள் இருப்பதில்லையா?

ஒரு தாயினால்தான் தன் குழந்தையினை பராமரிக்க முடியும் என்பது மறுக்கவியலாது உண்மைதான். அதில் எந்தவித மாற்றுக்கருத்துக்குமே இடமில்லை. ஆனால் எல்லா தாய்மார்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லையே? இதற்கு பெண் வேலையை விட்டு விடுவது மட்டும்தான் தீர்வாக இருக்க முடியுமா? நாம் ஏன் இதற்கான மாற்றுத்தீர்வுகளை யோசிக்கக்கூடாது? பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும் இல்லையா? பொதுவாகவே பிரசவத்திற்குப்பின் மூன்று மாதகால சம்பளத்துடன் கூடிய விடுமுறை நம் அனைவருக்குமே சட்டரீதியில் கிடைக்கக்கூடியது. ஆனால் ஒரு குழந்தைக்கு ஆறு மாதங்கள்வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படவேண்டும் என்பது வைத்தியர்களின் பரிந்துரையாக இருக்கின்றபோது நம்முடைய தொழிலாளர் சட்டம் திருத்தியமாக்கப்படவேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.

இந்த மூன்றுமாதகால விடுமுறை கட்டாயம் ஆறுமாதகாலமாக மாற்றியமைக்கப்படவேண்டியது அவசியமானவொன்றல்லவா? ஆறு மாதங்களுக்குப்பின் குழந்தையை பராமரிக்க பெண்ணின் தாயாரோ மாமியாரோ அல்லது சகோதரியோ யாரேனும் ஒரு மிகச் சிறந்த நபர் இருப்பாராயின் அவள் தன் உத்தியோகத்தை தொடர்வதில் சிக்கலென்ன? மேலும் ஒரு குழந்தையுடன் முழுநேரமும் அதன் பெற்றோர்கள் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. குழந்தை வளர்ப்பினைப்பற்றி பேசும் பல மருத்துவர்கள் “spend quality time “என்றுதான் குறிப்பிடுகிறார்களேயொழிய முழு நேரமும் குழந்தையை சுற்றிச் சுற்றி வந்து சுயமாக அதனை எதையுமே செய்யவிடாது எல்லாவற்றுக்கும் உங்களையே எதிர்பார்க்கும் ஒன்றாக அதனை மாற்றிவிடாதீர்கள் என்கிறார்கள். நாம் குழந்தையுடன் செலவழிக்கும் நேரம் எத்தகைய தரமுடியாது என்பது மிக மிக முக்கியமானது.

குழந்தையுடன் நேரம் செலவழிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு , அதனோடு அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பிப்போமாயின் அது எப்படி சரியானதாகும்? ஏனெனில் அந்த நேரத்தில் நாம் குழந்தையுடன்தான் இருப்போமாயினும் அதன் ஆளுமையை வளர்க்கும் அல்லது அதன் மனோநிலையோடு ஒன்றிப்போகும் எந்தவொன்றையுமே நாம் அவ்விடத்தே செய்யவில்லையே? நமக்கு ஒரு நாளில் ஒரு மணிநேரம்தான் குழந்தையுடன் பகிர்ந்துகொள்ள முடியுமாயின் இடையிடையே குழந்தையோடு பேச்சுக்கொடுத்துக்கொண்டே மற்ற வேலைகளை செய்துகொண்டிராது அந்த ஒரு மணிநேரமும் குழந்தையோடு விளையாட அல்லது நேருக்கு நேர் அமர்ந்துகொண்டு பிரமாண்டமான அபிநயங்களோடு கதைகளைக்கூற முழுமையாக அந்த நேரத்தினை அவர்களோடு பகிர்ந்துகொள்ளுவோமாயின் எந்தக்குழந்தையுமே சூழ்நிலையை புரிந்துகொள்ளும் இல்லையா?

வேலைக்குப்போகும் அம்மாக்கள் செய்யக்கூடாத இன்னொன்றையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் நம்முடைய குழந்தையை சரியாக பார்த்துக்கொள்ள முடியவில்லை அதனுடன் போதுமான நேரத்தினை செலவிடமுடியவில்லை என்ற குற்றவுணர்ச்சி மேலோங்க அது கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து அதை ஒரு “வீணடிக்கப்பட்ட” குழந்தையாக மாற்றிவிடாதீர்கள். பிறகு குழந்தையின் குளறுபடி தாளாமல் “உனக்காகத்தானே நான் வேலைக்குப் போகிறேன் ” என சுயபச்சாபத்துடன் கெஞ்சுவீர்களேயாயின் “நானா உன்னை வேலைக்குப் போகச் சொன்னேன்?” என அது உங்களிடமே எதிர்கேள்வி கேட்க ஆரம்பித்துவிடும்.

இந்த தனி ரக அவஸ்தையை கெட்டிக்காரத்தனமாக கையாளக்கற்றுக்கொள்ளுங்கள் ஒருபோதும் தான் ஒதுக்கப்படுகிறோம் தன்னை கவனிக்க ஆளில்லை என்பதுபோன்ற எண்ணங்கள் குழந்தைகள் மனதில் வளரும் வகையில் நேரமின்மை என்ற ஒன்றை காரணம்காட்டி அவர்களை கவனிக்கத் தவறாதீர்கள். இப்பிரச்சினை ஒரு சமுதாயப் பிரச்சினை. தனிப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தின் பிரச்சினையாக கருத முடியாது. குடும்ப அமைப்புகளை பேணுவதற்கு பெண்களை மீண்டும் வீட்டில் மட்டும் உழைப்பை வழங்குவதற்காக அதாவது தனது குடும்பத்தைக் காக்கும் பணி பெண்ணினது அதற்காக அவள் வீட்டுக்குள் போயிருந்து வேலையைக் கவனிப்பதுதான் வழி என்ற கருத்தை ஒருபோதும் ஏற்க முடியாது இல்லையா?

“நான் நல்ல சம்பாத்தியத்தில் இருக்கிறேன் அதனால் என் மனைவி வேலைக்குப்போய்த்தான் சம்பாதிக்கவேண்டும் என்ற அவசியம் இங்கில்லை” என்று கூறும் கணவர்கள் ஒரு ரகம் என்றால் “வேலைக்கு போய் சம்பாதிப்பதால்தானே இந்த திமிர் அந்த வேலை இல்லாவிட்டால் என்னையும் என் குடும்பத்தையும் இவள் மதிப்பாள் ” என்ற குரூர நோக்கில் மனைவிக்கு தடை சொல்லும் கணவர்கள் இன்னொரு ரகம் “நீ ஏன் இன்னும் வேலைக்குப் போய் கஷ்டப்படணும்? நிம்மதியா வீட்ல இருந்து வேலை செஞ்சிட்டு டிவி பார்த்துகிட்டு இருக்கலாமே? என்பது அன்பார்ந்த இன்னுமோர் ரகம். (இதனால்தானோ என்னவோ, லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் ஆண்களைக்காட்டிலும் திறமையான பல பெண்கள் “சன் டிவி, விஜய் டிவி, zee தமிழ் போன்றவற்றில் புதைந்துபோய் கிடக்கிறார்கள்.)

இன்னும் சிலர் இருக்கின்றனர் ” ஏன் ஆபீஸ் போய்த்தான் ஆத்ம திருப்தி அடைய வேண்டுமா? வீட்டுக்குள்ளேயே இருந்து கூடை பின்னுதல் எம்பிராய்டரிங் , பூ வேலைப்பாடு செய்தல் , தையல் வேலை செய்தல் , வானம், பூ , நிலா, பெண்மை என விதவிதமான தலைப்புக்களில் கவிதையெழுதி வாரப்பத்திரிகைகளுக்கு அனுப்பிவைத்தல் போன்ற வேலைகளை செய்து தனது சுயம் அழியாமல் பார்த்துக்கொள்ளக்கூடாதா? என்பதுபோன்ற கேள்விகளை எழுப்புவது எரிச்சலுக்குரியது. அப்படியே வேலையை விடுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் உறவினர்களிடமோ நண்பர்களிடமோ விடயத்தை பகிர்ந்துகொண்டால் ” வேலையா குடும்பமான்னு பார்த்தா குடும்பம்தான் முக்கியம் பேசாம புருஷன் சொல்றத கேட்டு புத்திசாலித்தனமா வாழ்க்கையை காப்பாத்திக்க” என்ற அறிவுரைதான் அதிகமாக வந்து சேரும்.

ஆனால் இவர்கள் எல்லோருமே ஒன்றை மறந்துவிடுகிறார்கள் பெண்கள் வேலைக்குச் செல்வது சம்பாத்தியம் தொடர்பானது மட்டுமல்ல அது அவளுக்கு தன்னம்பிக்கையை தருகிறது தன குடும்பத்தின் பொருளாதார தேவைகளை தன்னாலும் பகிர்ந்துகொள்ள முடிகிறது என்ற மன நிறைவினைத் தருகிறது. சமையல், வீட்டு வேலை என்று தன்னுடைய திறமைகளை நான்கு சுவருக்குள்ளேயே முடக்கிக்கொள்ளாமல் ,அவற்றை வெளிப்படுத்த உதவுகிறது. சுய மரியாதையைக் கொடுக்கிறது மண வாழ்வில் ஏதேனும் சந்தர்ப்பத்தில் குடும்பத்தை தனியாளாக சமாளிக்க நேரின் குறைந்த பட்சம் பொருளாதார பிரச்சினையிலிருந்தாவது தப்பிக்க முடிகிறது.

பெண்கள் வேலைக்குச் செல்லும்போது அவர்களுக்கு கிடைக்கும் பல வெளி உலக அனுபவங்களால் குடும்பத்தில் ஏட்படும் சில சிக்கல்களைக்கூட சமாளிக்கும் திறன் அவர்களுக்கு இயல்பாகவே ஏற்படுகிறது தம்முடைய அன்றாட வாழ்க்கையைப்பற்றி நன்றாக திட்டமிட கற்றுக்கொள்கிறார்கள். காலை முதல் இரவு நித்திரைக்குச் செல்லும்வரை ஒவ்வொரு வேலையையும் நன்கு திட்டமிட்டு அந்தந்த நேரத்தில் செய்துமுடிக்கவேண்டும் என்ற உத்வேகம் அவர்களுக்கு ஏற்பட்டு அவ்வாறே செய்து முடிக்கும் ஆற்றல் வளர்கிறது. இதனால் திட்டமிடுதல் சுறுசுறுப்பாக செயட்படுத்தல், தன வேலைகளை விரைந்து முடிக்க சிந்தித்தால் போன்ற சிறப்புக்கள் அவர்களிடம் உருவாகும்.

நெருக்கடியான நேரங்களில் விரைந்து செயட்பட, தகவல் தொடர்பு கொள்ளும் முறைமை மாற்றுவழிமுறைகளை தேர்ந்தெடுத்தல் என பல பண்புகள் இயல்பாகவே இவர்களிடம் ஏற்படும் வேலை பார்க்குமிடத்தில் பலதரப்பட்ட பணியாளர்களுடன் பழக நேருவதால் ,குழு மனப்பான்மை , விட்டுக்கொடுத்தல் , அனுசரிதல் ,வெவ்வேறு குணாதிசயங்களுடன் கூடிய மனிதர்களை சந்திக்க நேருகையில் ஒவ்வொருவரிடமும் எப்படி பழக வேண்டும் என்ற பக்குவம் போன்றனவெல்லாம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏட்படுகிறது.

குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காக இல்லாமல் படித்த படிப்பு வீணாகக்கூடாதே என்று பணிக்கு செல்லும் பெண்களைக் கேளுங்கள் வேலையை விடுவார்களா என்று? நிச்சயம் மாட்டார்கள். “அலுவலகத்திலும் நிமிரமுடியாத அளவுக்கு வேலை வீட்டிலும் வேலை, நேரமே இல்லை” என ஆயிரம்தான் புலம்பினாலும் வேலையை விடமாட்டார்கள் . ஏன் ? வேலைக்கு போகவேண்டும் என்ற கட்டாயமும் அவர்களுக்கு இருப்பதில்லை ஆனாலும் வேலையை கைவிடமாட்டார்கள். “அலுவலகம் சென்றால் ஒரே வேலை வீட்டில் இருந்தால் ஆயிரம் வேலை” என நகைச்சுவையாகக்கூட சிலர் சொல்வதைக் கேட்டதுண்டு

சில பெண்களுக்கு வேலையை விட சுய கெளரவம் தடுக்கிறது. அதுமட்டுமன்றி தானாகவே உருவாக்கிவிட்டுக்கொண்ட பொருளாதார நிர்பந்தங்கள் அவர்களுக்கு எந்தவித சாய்ஸ்சையும் கொடுப்பதில்லை வீட்டில் ஆபிஸ் சிந்தனை ஆபீசில் வீட்டு சிந்தனை என குழம்பிக்கொண்டிருக்கும் பெண்களும் இல்லாமலில்லை. எது எவ்வாறாயினும் வேலைக்கு போவதும் போகாததும் பெண்களை பொறுத்ததாக இருக்கவேண்டும். இதில் ஆண்கள் தலையிடக்கூடாது. விரும்பி வேலைக்கு போகும் எந்தப்பெண்ணும் அதை பாரமாக நினைக்கமாட்டாள் எனவே அப்படிப்பட்ட பெண்ணுக்கு கணவர் ஏன் தடையிடுவானேன்?

index.php