Blog Page 13

கலைவார் அவரெல்லாம் தொலைவார். வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்

நம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருப்பதை கண்டு ரசித்ததும் நம் கண்ணுக்கெட்டா தூரத்தில் இருப்பதை தொட்டுப்பார்க்க ஆசைப்படுகிறோம். அதனை அனுபவிக்க நினைக்கின்றோம். அதற்கு நிச்சயம் நாம் அவ்விடத்திற்கு சென்றுதான் பார்க்கவேண்டும். இந்தவொரு பயண ஆசையால் உருவானது தான் சுற்றுலா. பயணங்கள் தொடர்ந்தால் பணம் வரலாம் என்பதற்கு ஏற்றது போல் ஒரு நாட்டிற்கு பெருமளவு வருவாய் ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத் துறை திகழ்கிறது. இந்தவொரு மையக்கருத்தை கொண்டு உலக சுற்றுலா நிறுவனத்தின் ஏற்பாட்டின் கீழ் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி உலக சுற்றுலா தினமாக நினைவுகூறப்படுகிறது.

அதற்கமைய இன்று தான் உலக சுற்றுலா தினம்.

இருப்பிடத்தை விட்டு வேறொரு இடத்திற்கு ஓய்விற்காகவோ அல்லது வேறு நோக்கங்களிற்காகவோ சென்று தங்கி வருவதை சுற்றுலா என்று கூறுகிறோம். எதையாவது தேடி அலைந்து அதனை பார்த்து ரசிக்கும் போது கிடைக்கும் அந்தவொரு அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. இந்த உலகம் இவ்வளவு அழகானதா? என்று நம்மை வியக்க வைக்கிறது சுற்றுலாப் பயணம். அதுமட்டுமா? சுற்றுலாப் பயணத்தின்போது நமக்குள் மலர்ந்த அழகான நினைவுகளை ஆண்டுகள் கடந்து நினைத்து பார்த்தாலும் இனிக்கும்.

சுற்றுலாவிற்கு பெயர்போனவர்கள் வெள்ளையர்கள். இதனை நம் நாட்டிலேயே கண்கூடாக பார்க்கலாம். அவர்கள் ஏன் அதிக செலவு செய்து நம் நாட்டை வந்து பார்க்கிறார்கள் என்று சிலர் எண்ணிக்கொள்வது உண்டு. அவர்கள் தங்கள் மகிழ்ச்சிக்காக அல்லது உலகத்தை ரசிக்க அல்லது புதிய விடயங்களை தேடி பார்க்கவே பணத்தை செலவிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு இலாபம் இல்லையென்றாலும் இன்பம் கிடைக்கிறது. விலைமதிப்பற்ற அனுபவங்கள் கிடைக்கின்றன.

நாளும் சைக்கிளைப்போலே சுற்றுக்கொண்டிருக்கும் நம்மவர் களைத்து களைத்து பணத்தை சேர்த்து கடைசியில் சுற்றியிருக்கும் அழகான காட்சிகளை ரசிக்காமல் மண்ணோடு போகின்றனர். தம் கண்ணை மூடியே உலகத்தை காண்கின்றனர். ஆனால் சுற்றுலாப் பயணிகளோ தான் வாழும் இந்த உலகத்தை ரசிப்பதற்காக பணத்தை செலவிடுகின்றனர். கண்களை திறந்து இயற்கையை உணர்கின்றனர். புதிய நகர்வுகளால் தேடல்களை நோக்கி பயணிக்கின்றனர். ‘கலைவார் அவரெல்லாம் தொலைவார்.வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார். அவர் அடையும் புதையல் பெரிது.!’ என்று இன்னும் அழகாக தாமரையின் வரிகள் கூறுகின்றன.

சுற்றியிருக்கும் அழகை ரசித்து அனுபவிக்க புறப்படுவது சுற்றுலாப் பயணமாகிறது. அப்படியிருக்க நாம் காதுகளால் கேட்டு புத்தகங்களில் படித்து படங்களில் பார்க்கும் இடங்களை நேரே சென்று பார்த்தால் எப்படியிருக்கும்?. சிலசமயம் நாமே நினைத்திருப்போம். அதிலும் குறிப்பாக தமிழ் படங்களில் நாம் பார்க்கும் சில இடங்கள் எடிட்டிங் செய்யப்பட்டது என்றோ அல்லது சாதாரண ஒரு இடம் என்றோ நாம் நினைத்திருக்ககூடும். அதைவிட சிலசமயம் நம் வாழ்க்கையில் ஒருமுறையாவது அந்த இடத்திற்கு செல்லவேண்டும் என்று நினைத்திருப்போம். அப்படி உங்கள் ஆர்வத்தை தூண்டும் நீங்கள் திரைப்படங்களில் பார்த்த சில இடங்கள் பிரசித்திப்பெற்ற சுற்றுலா தளங்களாகும். அதனை உங்களுக்கு நியாகப்படுத்துகிறேன்.

உலகில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை இடங்களாக திகழ்பவை 7 உலக அதிசயங்கள் தான்.

ஜீன்ஸ் படத்தில் ‘பூவுக்குள் ஒழிந்திருக்கும்’ என்ற பாடலில் ஏழு உலக அதிசயங்களும் காட்டப்பட்டிருக்கும்.

·1 எந்திரன் படத்தில் ‘காதல் அணுக்கள்’ பாடல் பிரேசிலிலுள்ள லென்கோயிஸ் மரன்ஹென்ஸ் சர்வதேச பூங்காவாகும். அதே படத்தில் ‘கிளிமஞ்சரோ’ பாடல் பேருவில் உள்ள மச்சு பிச்சு இல் எடுக்கப்பட்டது.

·2 மாற்றான் திரைப்படத்தில் ‘நானி கோனி’ பாடலில் காட்டப்படுவது நோர்வேயின் ட்ரொல்ஸ்டிஜென், கீராஞ்சர் ஆகும்.

·3 ஐ திரைப்படத்தில் ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ பாடலில் சீனாவின் குய்லின் நகரம் காட்டப்பட்டிருக்கும்.

·4 ஆம்பள திரைப்படத்தில் ‘வா வா வா வெண்ணிலா’ பாடல் பிரசித்திபெற்ற ஓமானின் வாடி ஷாப் இல் எடுக்கப்பட்டது.

·5 ஆதவன் திரைப்படத்தின் ‘ஏனோ ஏனோ பனிதுளி’ பாடல் ஐயர்லாந்தின் ரெய்னிஸ்ட்ராங்கர் இல் எடுக்கப்பட்டது.

6. விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ‘ஓமானப் பெண்ணே’ பாடலில் மால்டா தீவின் இடங்கள் காட்டப்பட்டிருக்கும்.

7.24 திரைப்படத்தில் ‘நான் உன் அழகினிலே’ பாடலில் போலந்து நாட்டின் மோர்ஸ்கி ஓகோ-ஜகோபேன் காட்டப்பட்டிருக்கும்.

·8 பாய்ஸ் திரைப்படத்தின் ‘அலே அலே’ பாடலில் தஸ்மேனியாவின் ப்ரைட்ஸ்டொவ் எஸ்டேட் லாவெண்டர் பண்ணை காட்டப்பட்டிருக்கும்.

·9 அந்நியன் திரைப்படத்தின் ‘ஐயங்கார வீட்டு அழகே ‘ பாடலில் நெதர்லாந்தின் அம்ஸ்டார்டம் நகரின் பூங்கா காட்டப்பட்டிருக்கும்.

இப்படி இன்னும் ஏகப்பட்ட பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தளங்கள் தமிழ் பாடல்களிலும், படங்களிலும் காட்டப்பட்டிருக்கும். குறிப்பாக சில திரைப்படங்களில் நம்முடைய இலங்கை நாட்டின் பல அற்புதமான இடங்கள் காட்டப்பட்டிருக்கும்.
காக்க காக்க திரைப்படத்தில் காட்டப்படும் மரவீடு மற்றும் பாடல் காட்சிகள் மற்றும் க்ளைமக்ஸ் காட்சிகள் நுவரெலியாவில் கந்தே எல யில் எடுக்கப்பட்டது.
தேவதையை கண்டேன் திரைப்படத்தின் ‘அழகே பிரம்மனிடம்’ மற்றும் வாழ்த்துக்கள் திரைப்படத்தின் ‘எந்தன் வானமும்’ போன்ற பாடல்கள் நுவரெலியாவில் எடுக்கப்பட்டன.

புதிய முகம் , பார்திபன் கனவு ,கண்களால் கைது செய்,தீ , கண்ணத்தில் முத்தமிட்டால் போன்ற திரைப்படங்களில் கொழும்பு,தெய்வளை மிருகக்காட்சி சாலை,கந்தளான, நுவரெலியா,பேராதனை பூங்கா,சிகிரியா போன்ற பல இடங்கள் காட்டப்பட்டிருக்கும்.

பொய் திரைப்படத்தின் ஆரம்ப காட்சிகள் முதல் க்ளைமக்ஸ் காட்சிகள் வரை பெரும்பாலான காட்சிகள் மற்றும் ஆணிவேர் திரைப்படத்தின் முழு காட்சிகளும் இலங்கையின் பிரசித்தமான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

வேடன் திரைப்படத்தின் ‘என் காதலா’ பாடல் பொலன்னறுவை, தம்புள்ளை, கண்டி போன்ற இடங்களில் எடுக்கப்பட்டிருக்கும்.
உன்னை நினைத்து திரைப்படத்தின் ‘என்னை தாலாட்டும் சங்கீதம் பாடல், சிலம்பாட்டம் திரைப்படத்தின் ‘மச்சான் மச்சான்’, அபிமன்யூ திரைப்படத்தின் ‘தொடுவானம்’பான்ற பாடல்கள் கண்டி பேராதனை பூங்காவில் எடுக்கப்பட்டது.
ஹிப்பி என்ற தெலுங்கு படத்தின் ‘யெவதிவே யெவதிவே’ பாடல் காலியில் எடுக்கப்பட்டது.

ஆகவே இலங்கையில் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத்தளங்களுக்கு பஞ்சமேயில்லை என்றுதான் கூறவேண்டும். ‘Wonder Of Asia’ என்று வர்ணிக்கப்படும் நம் நாட்டை சுற்றிப் பார்க்க கடல்கடந்து பலரும் வருகின்றனர். இங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எப்போது நம் நாட்டை சுற்றிப் பார்க்க போகிறோம் ப்ரென்ட்ஸ்?

ஒரு நிமிடத்தில் எடுக்கப்படும் தவறான முடிவு – தற்கொலை!

தற்கொலைகள்!

தினம்தோறும் இது பற்றிய செய்திகளை ஊடகங்கள்வாயிலாகவும்  கண்கூடாகவும் கேட்டும்  கண்ணுற்றும் கடந்து வருகிறோம். “ஐயோ பாவம்”  என ஒரு கனம் பரிதாபப்பட்டு  அடுத்த கனமே அதை ஒரு மற்றுமோர் செய்தியாகவே மறந்தும் விடுகிறோம். நமக்கு வெறுமனே ஒரு செய்தியாக  மாத்திரமே இருக்கிற இந்த தற்கொலைகள்  சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும்  அவர்களது நண்பர்களுக்கும் ஏற்படுத்தும் தாக்கத்தினைப்பற்றி யாரும் அறிவதில்லை. ஏன் இந்த துன்பநிலை நிகழ்கிறது? தற்கொலை பற்றி நாம் நிறையவே அறிந்துவைத்திருக்கிறோம் ஆனால் அதை தடுப்பது பற்றியோ அது பற்றிய போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவது பற்றியோ எம்முடைய அறிவு எந்த அளவில்  உள்ளது.

 உலக அளவில் தற்கொலை பற்றிய பல ஆராய்ச்சிகள் இன்றுவரை நடாத்தப்பட்டு வந்திருக்கின்றன. அந்தவகையில் ஒருவர் தானாகவே வேண்டுமென்று தனது உயிரினை மாய்த்துக்கொள்வதே தற்கொலை எனப்பொதுவாக கூறப்பட்டாலும்  அறிவியல் பூர்வமாக அதனை வரையறை செய்வது அத்தனை எளிதானதல்ல எனக்கூறப்படுகிறது. மனிதர்கள்  ஏன்  வலிந்து மரணத்தை நாடுகிறார்கள்? அதற்கு உந்துதலாக அமையும் மனநிலைதான் என்ன?

 ஏனெனில் தற்கொலை செய்துகொள்வதென்பது  டார்வின் கூறும் “பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது”. மனித இனம் தவிர்த்து வேறு எந்த உயிரினங்களும் தற்கொலை செய்துகொள்வதில்லையாம். இந்தக் கட்டுரையினை எழுதிக்கொண்டிருக்கும் எனக்கு  இதை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு என நம் அனைவருக்குமே ஏதோ ஒரு தருணத்தில் “என்னடா வாழ்க்கையிது” என்ற சலிப்பு ஏற்பட்டிருக்கும் அல்லவா?  ஏன் நம்மில் பலருக்கு அந்த தருணத்தில் தற்கொலை எண்ணம்கூட தலைதூக்கியிருக்கக்கூடும். ஆனால்  நமக்கிருக்கும் பொறுப்புக்களும்  கடமைகளும் நம்முடைய அந்த எண்ணம்தனை அடுத்த நொடியே தவறு என உணரவைத்து மனதை மாற்றிக்கொண்டிருப்போம்.

தற்கொலை ஒரு தனிமனித  செயற்பாடு  என்றாலும்கூட அதன் வேர்கள்  சமூகப் பொருளாதாரக் காரணிகளிலேயே வேரூன்றியுள்ளது. எனவேதான் இதனை ஓர் தனிமனித நிகழ்வாக மட்டும் கருதாமல் ஒரு சமூக நிகழ்வாக பார்ப்பது அவசியம் எனக்கூறப்படுகிறது. ஏனெனில் காலங்காலமாக தற்கொலை என்ற நிகழ்வு நிகழ்ந்துகொண்டேதான் வருகிறது. தொன்மைக்காலம் தொட்டு இன்றைய நவீன யுகம்வரையில் இது தொடர்கிறது. பண்டைய சமுதாயத்தில் தற்கொலை என்ற விடையம் பலவிடையங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவும்  ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகவும்  ஏன் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட ஒன்றாகவும்கூட இருந்திருக்கிறது எனலாம்.

உதாரணமாக இந்திய சமுதாயத்தில் காணப்பட்ட உடன்கட்டை ஏறுதல் என்ற முறைமை வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டிருந்த ஓர் தற்கொலை வடிவமே. அதுபோலவே ஒரு ஆணினால் ஏமாற்றப்பட்ட  அல்லது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் இனி இந்த சமுதாயத்தில் வாழத் தகுதியற்றவர்கள் என்ற மனப்பான்மையுடன் வளர்க்கப்பட்டு அவர்களது பிரச்சினைக்கான தீர்வு தம் உயிரை மாய்த்துக்கொள்ளலே என்பது எழுதப்பட விதியாக இருந்து வந்திருக்கிறது. இந்த பாரம்பரியம்தனை  அண்மைக்காலம்வரையில்கூட நம் தமிழ் சினிமாக்கள் கட்டிக்காத்து வந்திருக்கின்றன என்றால்  மிகையில்லை. (பெரும்பாலான தமிழ் திரைப்படங்களை அவதானித்தால் புரியும் அதில் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் நிச்சயம்  சாகடிக்கப்பட்டுவிடுவாள்)

அதுமட்டுமன்றி பல தற்கொலைகள் அரசியல் ரீதியாகவும்  மத ரீதியாகவும் புனிதமாக்கப்பட்டன. பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்கள் கிராமிய தெய்வமாக்கப்பட்டமை  மற்றும் வரலாற்று ரீதியில் வேலுநாச்சியாரின் பெண்படைத்தளபதியான  குயிலி முதல் தற்கொலைப்படை பெண்ணாக மாறி ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கில் வெடி குண்டுகளோடு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டமை  என எண்ணிலடங்கா உதாரணங்களை எடுத்துக்காட்ட இயலும்.

இதனடிப்படையிலேயே தம்முடைய எதிர்ப்பினைத் தெரிவிக்கும் ஓர் அரசியல் ஆயுதமாக தற்கொலையினை பயன்படுத்துவது ஒரு பாரம்பரியமாக வளர்ந்து வந்திருக்கிறது என்றால் மிகையில்லை. இன்றுவரை தொடருமிதனை பொறுப்புணர்வுள்ளவர்கள் வன்மையாகக் கண்டிப்பதுமில்லை  . இவற்றை ஓர் தற்கொலை கலாசாரமாகவும்  ஆரோக்கியமற்ற போக்காகவும் கருதாது ஊடகங்கள் அவர்களை தியாகிகளாக சித்தரிப்பதும்  அரசு அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதன்றோ?

மத அடிப்படையில் தற்கொலை பற்றி நோக்கின்  எல்லா மதங்களுமே தற்கொலை கூடாது என்ற கூற்றினை முன்வைக்க முயன்றாலும்  அடிப்படையில் தெளிவற்ற சிக்கலான  ஓர் நிலையினையே மதங்களிலும் காணக்கூடியதாக உள்ளதெனலாம். பிரதான மதங்கள் அத்தனையுமே முரணான செய்திகளையே சொல்கின்றன. இந்துமதப் புராணங்களிலும்  இதிகாசங்களிலும் பல தற்கொலைகள் வீர மரணங்களாக கூறப்படுகிற அதேவேளையில் ஞானிகள் மோட்சம் பெரும் ஒரு வழிமுறையாகவும் தற்கொலைகள் கையாளப்பட்டுள்ளமையினை அறிய இயலும். இஸ்லாம் தற்கொலைகளை கூடாது எனக்கூறினாலும்  மதத்தினை பாதுகாக்கும்பொருட்டு தற்கொலைத் தாக்குதல்களில் (ஜிகாத்) ஈடுபடுவதென்பது புனிதமாக கருதப்படுவது இஸ்லாத்தின் நிலையினை சர்ச்சைக்குள்ளாகக்கூடியது.

விவிலியத்தின் அடிப்படையில் ஆரம்ப கிருஸ்தவ மதபோதகர்களால் தற்கொலைகள் நியாயப்படுத்தப்பட்டாலும்  பிற்காலத்தில் அது ஒரு பாவச் செயலாகக் கருதப்பட்டது. கடவுளுக்கு மட்டுமே உயிரைக் கொடுக்கவும் எடுக்கவும் உரிமை இருக்கிறது எனவே தற்கொலை கடவுளுக்கு எதிரானது என பின்னாளில் கிறிஸ்தவம் போதிக்கத் தொடங்கியது. பௌத்த  சமயத்தில்  தேரவாத பௌத்தத்தின் அடிப்படையில் உலகப் பற்றினைத் துறந்து  துக்கத்திலிருந்து விடுபடலாம். என்பது கோட்பாடு இதனடிப்படையில் இடர்கள் வரும்போது வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து விடுபட பல பௌத்தர்கள் சுலபமான ஓர் வழிமுறையாக தற்கொலையைக் கையாள்கின்றனர் என்கிறது ஆய்வுகள்.

 சரி  என்னென்ன காரணங்களுக்காக தற்கொலைகள் நிகழ்ந்தேறுகின்றன?

மன அழுத்தம், மனச் சிதைவு, வறுமை, கடன் சுமை, தீரா உடல் மற்றும் உளவியல் நோய்கள், அளவுகடந்த பேரச்சம், சமூக கலாசார அழுத்தங்கள், சமூக மதிப்பு குறைதல் (கௌரவக்  கேடு /சுயமரியாதை கெடல்) ஈடு செய்யமுடியாத இழப்பு  கடுமையான சித்திரவதைகள் மது மற்றும் போதைக்கு அடிமையாதல் தேர்வில் தோல்வி  பிடித்தமானவர்களுக்கு அன்பினை வெளிப்படுத்தவும்  மேலும் அவர்களுக்கு குற்றவுணர்வினை உண்டாக்கவும்  வாழத் தகுதியற்றவர் என்ற உணர்வு மேலிடுதல்   பொதுப் பிரச்சினைகளில் உணர்ச்சிவசப்பட்டு தன்னுடலுக்குத் தீ வைத்துக்கொள்லல் என ஏதோவொரு காரணத்திற்க்காக தற்கொலைகள் நிகழ்ந்தேறுகின்றனவெனலாம்.

எனினும் சட்டத்தின் பார்வையில் தற்கொலைகள் தண்டிக்கத்தக்க குற்றமாகவே கருதப்படுகிறது. தற்கொலையினை முயற்சிப்போர்க்கு சிறைத் தண்டனையோ  அல்லது அபராதமோ அந்தந்த நாட்டுச் சட்டங்களின் அடிப்படையில் விதிக்கப்படுவதுடன் தற்கொலைக்கு தூண்டுகோலாக அல்லது உடந்தையாக இருந்தவர்களும் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது . குழந்தைப் பருவத்தில் இருந்தே தோல்வியே கூடாது , எப்போதும் வெற்றியே பெறவேண்டும் என்றதோர் மனோநிலையில் வளர்க்கப்படுவதாலோ என்னவோ இன்றெல்லாம் முன்பைவிட தற்கொலைகள் மலிந்துவிட்டன .

 தற்கால சூழலைப் பொறுத்தவரையில் தற்கொலைக்கான காரணங்கள் மிகவும் அற்பமானவையாகக்கூட அமைந்துவிடுவதும்முண்டு. எனக்குத் தெரிந்தவொரு பெண் தீபாவளியன்று உறவினர்கள் வீட்டுக்கு வருவதாக சொல்லிவிட்டு அவர்கள் வராததால் சட்டென ஆதங்கப்பட்டு தூக்கு மாட்டி செத்துப்போனாள்.   சமீபத்திய பல மரணங்கள் இவ்வாறான அற்ப  காரணங்களுக்காகவே நிகழ்ந்துள்ளன என்றால் அது மிகையில்லை. அதுமட்டுமன்றி  நம்மில் பலர் சண்டையின்போதோ அல்லது பிரச்சினைகளிலிருந்து நழுவும் பொருட்டோ அடுத்தவர்களை மிரட்டும்பொருட்டு கழிவறைகளை சுத்தம் செய்யும் திரவங்களைக் குடிப்பது, மண்ணெண்ணெய், பெட்ரோல் போன்றவற்றை உடலில் ஊற்றிக்கொள்வது, தூக்குப் போட்டுக்கொள்வது போன்ற சில செயற்ப்பாடுகளில் ஈடுபடுவதுண்டு.  அடுத்தவர்களை அச்சப்படுத்தி தமது காரியத்தை சாதிப்பதே இவர்களது நோக்கமேயன்றி  மாறாக மரணம் அல்ல .

சிலர் பிளேடு, கத்தி  கண்ணாடித்துண்டு போன்றவற்றால் தமது உடல் பாகங்களில் காயத்தினை ஏற்படுத்திக்கொள்வதை கண்டிருப்போம். உண்மையில் இவர்களுக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணமே இருப்பதில்லையாம். ஆனால் இவர்கள் தாம் அனுபவிக்கும் கடுமையான உணர்வுக் கொந்தளிப்பிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுதலைபெற தம்மைத்தாமே காயப்படுத்தி வருத்திக்கொள்கின்றனராம்.

இது அவர்களது கவனத்தினை மனவேதனையிலிருந்து உடல் வேதனைக்கு திசை திருப்ப உதவுவதுடன் அடுத்தவர்களது அவதானத்தினையும்  கரிசனையையும் தம்மீது திசைதிருப்பிக்கொள்ள உதவுகிறதாம்.  சற்று யோசிக்காமல் அவசர கதியில் தற்கொலை முடிவினை எடுத்த பலர்  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படும்பொழுது  தாம் அவசரப்பட்டு எடுத்த முடிவுக்காக நொந்துபோய்  அழுவதுண்டு. எப்படியாவது தம்மைக் காப்பாற்றும்படி மருத்துவரிடம் கதறுவதுமுண்டு. தாம் மீண்டும் உயிர் பிழைத்துவிடக்கூடாதா என்ற எண்ணம் அந்த இறுதி போராட்டநிலையில் அவர்களுக்கு யதார்த்தத்தை புரியவைத்தாலும்  அநேகமாய் அது பலனற்றுப் போய்விடுகிறதெனலாம்.

சரி  தற்கொலைகளை எவ்வாறெல்லாம் தடுக்கலாம்?

உண்மையில் தற்க்கால சூழலைப் பொறுத்தவரையில் தற்கொலைக்கான காரணங்கள் என்பது  தங்கள் வாழ்வில்  ஏற்படும்  சில தவிர்க்கவியலாத சிக்கல்களை எதிர்கொள்ளும் திறனில்லாமை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் யாருக்குத்தான் பிரச்சினையில்லை? தன்மை மாறுபட்டாலும் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு பிரச்சினைகள். எனவே எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுண்டு என்று முதலில் நம்பவேண்டும் . முதலில் நம்மை நாமே நம்பியாகவேண்டும். பிரச்சினைகளை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாது மனதுக்குள்ளேயே பூட்டிவைத்து புழுங்கிக்கொண்டிராது  நமக்கு நெருக்கமான  நேர்மறையான சிந்தனையும்  நம்பிக்கையும் கொண்ட நபர்களிடம் நாம் அவற்றை மனம்விட்டுப் பகிர்ந்துகொள்ளும்போது  மன அழுத்தம் குறைந்து தற்கொலை எண்ணங்கள் இல்லாதொழிந்துவிடும்.

நமது பிரச்சினைகளை காதுகொடுத்து கேட்கவோ  ஆறுதல் சொல்லவோ சரியான ஆள் இருந்தாலே தற்கொலை எண்ணம் தடுக்கப்பட்டுவிடும். இழந்தவொன்றையோ தவற விட்ட ஒன்றையோ நினைத்து நினைத்து உருகிக்கொண்டிராது  அடுத்த இலக்கினை நோக்கி நகர்வதற்கு நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்  குழந்தைப் பருவத்திலிருந்தே சூழ்நிலைக்கேற்ப வாழுதல் தன்னம்பிக்கை  சிக்கல்களை எதிர்கொள்ளுதல்  தேவை ஏற்படின்  பிறருடைய உதவியை நாடுதல் போன்ற பண்புகளை குழந்தைகளிடம் நாம் விதைக்கவேண்டும்.

குறிப்பாக குழந்தைப் பருவம் முதல்  இளமைப் பருவம்வரை உள்ளவர்களுக்கு தற்கொலை ஒரு சமூக குற்றம் என்பதை உணர்த்தவேண்டியது நம் கடமை. தற்கொலை எண்ணங்களை தூண்டக்கூடிய சமூக, கலை ,குறிப்பாக திரைப்படங்கள்  பண்பாட்டுக்கு காரணிகளை கட்டுப்படுத்தியேயாகவேண்டும் . அரசுகள் தற்கொலைகளைத் தடுக்க இன்னும் கடுமையான சட்டங்களை இயற்றினால் நன்று  தனிப்பட்ட ரீதியில் தற்கொலை எண்ணம் மேலீடுவோர் முடிந்தவரையில் தனிமையை தவிர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் தற்கொலை செய்துகொள்ளும் மன நிலையில் உள்ளவர்களிடம்  எக்காரணம் கொண்டும் அவர்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் அவர்களுக்கு அலுப்படிக்கும்வகையில் அறிவுரை சொல்வது  அவர்களுடன் விவாதங்களில்  வாய்த்தர்க்கங்களில் ஈடுபடுதல் போன்றவற்றையும் தவிர்த்தல் நன்று  மட்டுமன்றி அவர்களை நாம் தொடர்ந்தும் கண்காணிப்புக்குள் வைத்துக்கொள்வது நல்லது. உயிரை மாய்த்துக்கொள்வது மட்டுமே எந்த ஒரு பிரச்சினைக்கும் நிரந்தரமான தீர்வு அல்ல என்பதை அவர்களுக்கு உணரச்  செய்தல் வேண்டும் . ஒவ்வொரு மனித உயிரும் விலை மதிப்பற்றது. தற்கொலை என்பது ஒரு நிமிடத்தில் எடுக்கப்படும் தவறான முடிவு. அந்த நிமிடங்களைக் கடந்துவிட்டால் பின்னாளில் அவர்களும் மிகப்பெரிய வெற்றியாளர்களாக மாறிவிடக்கூடும்.

எனவே தற்கொலை எதிர்ப்பை மக்கள் கருத்தாக மாற்றி  அதனைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதில் நாம் அனைவருக்குமே பொறுப்புண்டு இல்லையா?  ஒவ்வொருநாளும் தற்கொலை தடுப்பு நாளாக இருக்கவேண்டும். தற்கொலை செய்துகொள்ளாத ஒரு சமூகத்தை உருவாக்கவேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்குமே உள்ளது. தற்கொலைக்கான காரணங்களை நிவர்த்தி செய்து  அதற்க்கான மருத்துவ, மன, உள சிகிச்சைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது நமது கடமை.

எப்போது பிறக்கவேண்டும்  என்பதை நாம் தீர்மானிக்கவில்லை .அதுபோலவே  எப்போது இறக்கவேண்டும் என்பதையும் நாம் முடிவு செய்யக்கூடாது அல்லவா? தற்கொலை மிகப்பெரியதோர் கோழைத்தனம். முட்டாள்தனம். நம்முடைய வாழ்க்கைப் புத்தகத்தை சட்டென்று மூடிவிடும் உரிமை நமக்கு இல்லவேயில்லை. யார் கண்டது நம்முடைய வாழ்க்கை என்னும் நாவலின் அடுத்தப் பக்கத்தில் எப்பேர்பட்ட திருப்புமுனைகள் வெற்றிகள் நமக்காக காத்திருக்கின்றனவோ! பிறப்பது ஒருமுறை  அதில் எதற்க்காக இறப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்?

பெட்ரோல் – அறிவியல் தொழில்நுற்ப வளர்ச்சி முதல் அழிவு தரும் போர்கள் வரை!

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் பெட்ரோல்  மிக முக்கிய பங்கு வகிக்கின்றதெனலாம். ஒவ்வொரு தடவையும்  பெட்ரோலின்  விலை உயரும் போது அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இன்றைய நிலையில் பெட்ரோல் இல்லாத உலகத்தை கற்பனை செய்தே பார்க்க முடியாது. உலகத்தின் வேகமான இயக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் எரிசக்தியாய் திகழ்வது பெட்ரோல்தான். “திரவத் தங்கம்”  எனப்படும் பெட்ரோலை முன்வைத்துதான் உலகெங்கும் பல்வேறு போட்டிகளும் போர்களும் நடக்கின்றன என்றால் மிகையில்லை. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பெட்ரோல் உருவான வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.

“crude oil “ எனப்படும் கச்சா எண்ணெயினை சுத்திகரிப்பதன்மூலம் நமக்கு கிடைப்பதே பெட்ரோல். (இயற்கை வாயு, பெட்ரோல், பென்சீன், நாப்தா, மண்ணெண்ணெய், டீசல், தார் முதலான பல உட்பொருட்கள் கலந்திருக்கும்   கலப்பட எண்ணையே  கச்சா எண்ணெய். கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை பேரிடர் காரணமாக மண்ணில் புதையுண்டு இறந்த மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் உடல்கள் அழுகி (decompose) பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு பின்பு மண்ணில் உள்ள உப்புக்களுடன் சேர்ந்து வேதிவினைபுரிந்து நிலத்திற்கு அடியில் நிலவும் உயர் அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக அருகிலுள்ள பாறை வெடிப்புகளுக்குள் பாய்ந்து அடர் கருப்பு நிறத்தை கொண்ட எண்ணெய் வளங்களாக உருமாறுகின்றது. லத்தீன் சொல்லான ‘பெட்ரா’ என்பதற்கு கல் என்றும், ‘ஓலியம்’ என்பதற்கு எண்ணெய் என்றும் பொருள். அதன்படி, ‘பெட்ரோலியம்’ (Petroleum பெட்ரா+ஓலியம்) என்றால்  கல்லில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் என்பது பொருள்.

சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைய பாபிலோனியர்கள் (இன்றைய ஈராக் ) மிகப்பெரிய கட்டிடங்களை கட்டுவதற்காக ஆழமான அத்திவாரங்களை தோண்டும்போதே முதன்முதலில் இந்த crude oil  கண்டுபிடிக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.  எரிபொருளாக பயன்படும் என்பதனை   அறிந்திராத பாபிலோனியர்கள் அந்த கருப்பு நிற திரவத்தினை தமது கட்டிடங்களை கட்டுவதற்கான பசைபோலவே பயன்படுத்தினர்.

கச்சா எண்ணெய் சேர்த்து கட்டப்பட்ட சுவர்கள் கரையான்கள், எறும்புகள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதனை  அவதானித்த  பாபிலோனியர்கள் அதன் பின்னர் கச்சா எண்ணெயை வெகுநேரம் கொதிக்க வைத்து வற்றச் செய்து கிடைத்த  “Asphalt” எனும் பொருளை நிலத்திற்குள் மறையும் கட்டிடத்தின் அஸ்திவாரச் சுவர்களின் மீது சாயமாக  பூசியத்துடன் கப்பல்கலைக் கட்டவும் பயன்படுத்தினர். பாபிலோனியரைத் தொடர்ந்து பெட்ரோலைக் கண்டறிந்து பயன்படுத்தியவர்கள் சீனர்கள்.

உலகின் முதல் நவீன எண்ணெய்க் கிணறு கி.பி.347–ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. மூங்கில் கம்புகளின் உதவியுடன் துளையிடப்பட்ட அந்தக் கிணறு 800 அடி ஆழம் கொண்டதாக இருந்தது.நான்காயிரம்  ஆண்டுகளுக்கு முன்னர் மொசப்பத்தோமியினர் கச்சா வண்டல்களைப் பயன்படுத்தி நகைகள் செய்ததாகவும்  கிமு1550 – 1070 காலகட்டங்களில் எகிப்தில் மம்மிகளை பதப்படுத்துவதற்காக இந்த புற்றுமண்ணை  பயன்படுத்தியுள்ளனராம்.

எனினும் சமகால பெட்ரோலின் வரலாறு என்பது 18ம் நூற்றாண்டின் பிற்பகுதிகளிலேயே ஆரம்பமாகியதெனலாம். தொழிநுற்ப புரட்சியின் விளைவாக உலகம் முழுவதும் எரிசக்தியின் தேவை அதிகரிக்கவே நிலக்கரி பயன்பாட்டினைவிட வேறு எரிபொருட்களுக்கான  தேடல்கள் ஆரம்பித்தன.

1847ம் ஆண்டு, ஸ்காட்டிஷ் வேதியலாளர் ஜேம்ஸ் யங் (Scottish chemist James Young) என்பவர் பிரிட்டிஷ் நாட்டின் ஆல்ஃபிரெடன் (Alfreton) பகுதியிலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் கச்சா எண்ணெய் இருப்பதைக் கண்டுபிடித்து  ஆய்வு செய்து  அந்த எண்ணெயிலிருந்து விளக்கு எரிக்கும் திரவம் இயந்திரங்களுக்குப் பயன்படுத்தும் கிரீஸ் போன்றவற்றை உருவாக்கினார். பின்னர் அந்த எண்ணெய்களுக்கு பாராஃபின் எண்ணெய் (Paraffin Oil) எனப் பெயர்வைத்து காப்புரிமையும் (Patent Right) பெற்றார். பின், எட்வர்டு வில்லியம் பின்னி (Edward William Binney) எனும் புவியியலாளருடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கி தனது எண்ணெய்க் கண்டுபிடிப்புகளை விற்பனை செய்யத் தொடங்கினார்.

1853ம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த புவியியலாளர் ஆபிரஹாம் பினியோ ஜெஸ்னர் (Abraham Pineo Gesner) என்பவர் நிலக்கரியிலிருந்தும் நிலக்கீலிலிருந்தும் (Asphalt or Bitumen) ஒரு புதிய வகையான எரிபொருளைக் கண்டுபிடித்தார். அந்தப் புதிய கண்டுபிடிப்புதான் நாம் மண்ணெண்ணெய் என்று அழைக்கும் கெரோசின் (Kerosene). ஆபிரகாம் கெஸ்னர் தான் கண்டுபிடித்த எரிபொருளுக்கு `கெரோசின்’ எனப் பெயரிட்டார்.பின் கெரோசின் கேஸ்லைட் (Kerosene gaslight company) எனும் புதிய நிறுவனத்தைத் தொடங்கி விற்பனை செய்யத் தொடங்கினார். முந்தைய கண்டுபிடிப்புகளைக் காட்டிலும், கெஸ்னர் கண்டுபிடித்த கெரோசின் குறைந்த செலவில் மிக அதிக அளவிலான வெளிச்சத்தைக் கொடுத்ததால் மக்கள் கெரோசின் பயன்பாட்டை நோக்கி நகர்ந்தனர்.

இதனிடையே கச்சா எண்ணெயிலிருந்து மண்ணெண்ணெயைப் பிரித்தெடுக்கும் முறையை ஜப்பான் நாட்டை சேர்ந்த சில  வேதியலாளர்களும்  கண்டுபிடித்தனர். அந்தத் தொழில்நுட்பத்தை முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி (Muhammed Ibn Zakariya Al-Razi, கி.பி.865 – 925) என்ற ஈரான் வேதியியலாளர் மேம்படுத்தி பெட்ரோலை பிரித்தெடுத்தார். இதற்காக அலம்பிக் (alembic) என்ற ஒரு வகை வடிகலனை அவர் உருவாக்கினார். பெட்ரோலை அப்போது வெடித்து எரியும் நீர் என்று பெயரிட்டு அழைத்தனர். அந்த காலத்தில்  ராணுவத்தில் ஆயுதமாகவே இது பயன்படுத்தப்பட்டு வந்தது.

1859 இல்   எட்வின் டிரேக்    என்பவர் அமெரிக்காவில் உலகத்தின்  முதல்  நவீன  எண்ணைக்   கிணற்றினை தோண்டியதனைத்  தொடர்ந்து  அமேரிக்கா  முழுவதும்  எண்ணைக்கிணறுகளைத்தேடிய   பயணம் ஆரம்பமானது . அப்போதைய  காலகட்டத்தில்  உலகத்தின் அதிகமான  பெட்ரோல் தேவையினை  அமெரிக்காவே  பூர்த்தி  செய்தது . அப்போது  தொடங்கிய  அமெரிக்காவின்  பெட்ரோல் ஆதிக்கம்  இன்றுவரையில்  தொடர்ந்துகொண்டுதான்  இருக்கின்றது. அப்போதைய  அமெரிக்கா  மரத்திலாலான  பேரல்களிலேயே கெரோசினை உலகம் முழுக்க  ஏற்றுமதி செய்தனர்.  அதனாலேயே இன்றுவரையில் எண்ணெய் பேரல்களிலேயே கணக்கிடப்படுகின்றது .

என்னதான் பன்னெடுங்காலமாக கச்சா எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் 20ம் நூற்றாண்டில்தான் பெட்ரோல் மிக முக்கியப் பொருளாக மாறியது. காரணம், உலகில் நிகழ்ந்த இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகள். அவை ஜெர்மன் பொறியாளர் நிக்கோலஸ் அகஸ்ட்ஸ் ஆட்டோ, 1876 ம் ஆண்டில் கண்டுபிடித்த உள்ளெரி இன்ஜின் மற்றும் 1893ம் ஆண்டு ருடால்ப் டீசல் (Rudolf Diesel) கண்டுபிடித்த டீசல் இன்ஜின்.இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாகனப்பெருக்கம் மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்காக கச்சா எண்ணெயின் தேவை அசுர வேகத்தில் அதிகரித்தது.

பல நாடுகளிலும், 1930க்கு பிறகு பெட்ரோலியத்தின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. இன்றைய நிலையில் பெட்ரோலிய உற்பத்தியில் செளதி அரேபியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. ஈரான், ஈராக்   குவைத், சவூதி அரேபியா, வெனிசுலா போன்ற ஐந்து நாடுகள் இணைந்து ஒபெக் என்கிற அமைப்பினை உருவாக்கி பெட்ரோலிய விலையினை தமது கட்டுப்பாட்டினுள் வைத்துள்ளனர்   என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியாக கச்சா எண்ணெயிலிருந்து தோற்றம் பெற்ற பெட்ரோலியப்பொருட்கள்
20-ம் நூற்றாண்டிலிருந்து தற்போது வரை உலக வணிகம் மற்றும் உலக அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது. பன்னாட்டு பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள்  பெட்ரோலிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பெட்ரோல் இறக்குமதியை நம்பி இருக்கும் நாடுகள் அதன் வரிகள் என தற்கால பெட்ரோலின் வரலாறு எழுதப்பட்டு வருகிறது.அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி முதல் அழிவு தரும் போர்கள் வரை பெட்ரோலின் எல்லையும் வரலாறும் இன்றளவும் நீண்டுகொண்டே தான் செல்கிறது.

 

அருந்தும் பாலிலும் அரசியல்!

இன்று நமக்கான பால்மா  வகைகளுக்கு பெருத்த தட்டுப்பாடு நிலவும் நிலையில் பலரும் சமூக வலைத்தளங்களில் “பரவாயில்லை இனி நாம் பசுப்பாலுக்கு மாறுவோம் நல்லதுதானே” என கருத்திடுவதை பரவலாக    அவதானிக்கக்கூடியதாக உள்ளது  ஆனால்  இது எந்த அளவு சாத்தியம்?

இலங்கையின் பால் உற்பத்தி விகிதமானது மொத்த தேவையில் வெறும் 30% மட்டுமே இன்று நம் நகரங்களில் கிடைக்கும் ஒரு லீட்டர் பாலின் விலை நூற்றிஎழுபது ரூபா. சேகரிப்பு மையங்களில் வெறும் எழுபது ரூபாய்க்கு வாங்கப்படும் பால் நுகர்வோரிடத்தே நூற்றிஎழுபது ரூபாய்க்கு விற்கப்படுகிறது . இன்று நம் நாட்டு நிலவரப்படி ஒரு பசு  மாட்டின் விலை சுமார் இரண்டரை லட்சம் முதல் நான்கரை லட்சம் வரையில் எகிறிக்கொண்டிருக்கும் நிலையில்

 சாதாரண ஒரு விவசாயியோ  அல்லது தொழிலாளியோ அதனை வாங்கி பால் வணிகம் செய்யும் அளவிற்கு சாத்தியப்படுமா? உண்மையில் இலங்கையில் மாடு வளர்ப்புக்கானதேவை குறைக்கப்பததன்பின்னர் அந்த கலாசாரமே அழிக்கப்பட்டுவிட்டது எனலாம். ஒருகாலகட்டம்வரையில் பால் உற்பத்தி நம்நாட்டில்

தேவையான அளவில் இருந்ததாகவும் பின்னாளில் மக்கள் பால்மா பவுடர்களை நுகர்வத்தில் அதிக ஆர்வம்  காட்டவே உள்நாட்டில் இந்த மாடுவளர்க்கும் பாரம்பரியமும் தொழிலும் மெல்லமெல்ல அருகிவிட்டிருக்கின்றதெனலாம்.ஸ்ரீமா பண்டாரநாயக்காவின் ஆட்சியின்பின் வந்த ஜெயவர்த்தனாவின் ஆட்சியில் திறந்த பொருளாதாரம் என்கிற பெயரில் தாராளமாக இறக்கப்பட்ட பொருட்களில் பால்மா  பவுடர்களும்  உள்ளடங்கின.

மலிவான விலையில் இலகுவாக நினைத்த நேரத்தில் கிடைக்கக்கூடியதாக இருந்த பால்பவுடர் இலங்கை மக்களின் தேநீர் தேவையினையும் பால் தேவையினையும் (எந்தவித எதிர்கால பின்விளைவுகளையும் சிந்திக்காமல்) தீர்த்துவைத்தது எனலாம். எவ்வித தடையுமின்றி இறக்குமதி செய்யப்பட்ட பாலும்,  பாற்பொருட்களும்,  விளம்பரங்கள் மிக அதிகமாக செய்யப்பட்டு மக்கள் மனதில் ஊடுருவிக்கொண்டன.

 பால் இண்டஸ்ட்ரி என்பது அதிக வருமானம்  ஈட்டக்கூடியவொன்று என்கிறபோதிலும்   இலங்கையைப்பொறுத்தவரையில் உள்நாட்டு உற்பத்தி ஏனோ ஊக்குவிக்கப்படவில்லை என்றே கூறவேண்டும். அரசாங்கங்கள் எடுத்த தவறான முடிவுகளும்  சில தனிமனிதர்களின் மற்றும் அரசியல்வாதிகளின்  கமிஷன்களும் உள்ளூர் உற்பத்தியை முடக்கி வெளிநாட்டு இறக்குமதியை ஊக்குவித்தன என்று சொன்னாலும் தகும்.

  கடந்த அரசாங்கத்தில் உள்ளூர் பால் உற்பத்தி தொடர்பான பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு அதற்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு பின் பால் தொடர்பான எந்த உற்பத்தியை உள்நாட்டில் யார் தொடங்கினாலும் மிகக்குறைந்த வட்டியில் கடன் கொடுப்பது, மானியம் கொடுப்பது, ஆலோசனைகளை வழங்குவது போன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

ஆனால் அந்த திட்டங்கள் அடிமட்ட மக்களுக்கு கொண்டுசேர்க்கப்பட்டதா என்றால் இல்லை என்றே   கூறவேண்டும். இப்படியொரு திட்டம் இருப்பதே அநேகருக்கு தெரிந்திருக்கவில்லை. உண்மையில் இன்றைய நிலவரப்படிப்பார்த்தால் இறக்குமதியை முற்றுமுழுதாக ஒழித்துவிட்டு உள்ளூர் உற்பத்தியில் தங்கியிருப்போம் என முட்டாள்தனமாக facebookஇல் வேண்டுமானால் ஸ்டேட்டஸ் போடலாம். ஆனால் உண்மைநிலைமை எங்களுடைய மார்க்கெட்

டிமாண்டுக்கு ஏற்ற சப்ளை உள்ளூர் உற்பத்தியில் இப்போதைக்கு சாத்தியமில்லை  என்பதே. எனவேதான் இலங்கை போன்ற நாட்டில் பால்மாக்களை திடீரென தடைசெய்தாலோ பதுக்கி வைத்து விலையை அதிகரித்து விற்றாலோ அது பொதுமக்களை பெரிய அளவில் பாதிப்படையச் செய்வதுடன் பேசுபொருளாகவும் மாறிவிடுகிறது.

நாம் நம் வாழ்வியலில் பல ஆண்டுகள் சற்று பின்னோக்கிப்போவோமாயின்  ஊர்கள்தோறும் கிராமங்கள்தோறும் அநேகமாக அனேகரது வீட்டிலும் கால்நடை வளர்ப்பு என்பது சாதாரணமாக இருந்தவொன்று.  ஒரு குடும்பத்தின் பால் தேவையினை அவர்களது வீட்டில் இருக்கும் பசுவே தீர்த்துவிடும். அப்படியே பசுக்கள் இல்லாதவர்கள் அக்கம்பக்கத்தில் மாடு வளர்ப்போரிடம் பாலை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டனர்.

அவர்களுக்கெல்லாம் பவுடர் பாலின் அவசியம் அத்தியாவசியமாகவில்லை அப்போதெல்லாம். ஆனால் நிலைமை தற்போது தலைகீழ். நகரமயமாக்களில் விளைநிலங்கள் சுருங்கி கிராமப்புற பொருளாதாரம் என்பது தற்போது அதலபாதாளத்தில் சென்றுகொண்டிருக்கின்றது. வேளாண்மைத் தொழிலை நம்பி வீடுகளில் வளர்க்கப்பட்ட கால்நடைகளுக்கான உணவு தண்ணீர் பராமரிப்புச் செலவு என அனைத்துமே மெல்லமெல்ல கால்நடைவளர்ப்போர்க்கு சவாலாக மாறத்தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலை. இலங்கைபோன்ற பசுமை நிறைந்த நாட்டில் நாட்டு மாடு வளர்ப்பில் தாராளமாக ஈடுபடலாம் என நாம் நினைக்கக்கூடும் ஆனால் இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் யாரையும் அந்த தொழிலை நடத்தவிடாது என்பதே யதார்த்தம் .

                     இந்தியாவில்கூட சுமார் நூறுவகையான நாட்டு மாடுகளின் வகைகள் இருந்ததாகவும் பின்னாளில் அவை கொஞ்சம்கொஞ்சமாக அழிந்து தற்போது ஜெஸ்ஸி இன கலப்பு வகைகளே காணப்படுகிறது. வெண்மைப்புரட்சியின் பயனாக சுமார் நாற்பது ஆண்டுகளாக பால் உற்பத்தி மற்றும் இறைச்சி உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்குடன் வெளிநாட்டு மாடுகளின் இறக்குமதி அல்லது அவற்றின் கலப்பினங்கள் அங்கே ஏராளமாக  உருவாக்கப்பட்டன.

அன்றாடம் நாம் குடிக்கும் பாலில் உள்ள வர்த்தக சதிகள் சொல்லில் அடங்காதவை. செயற்கை கருவூட்டலால் காளைகளுக்கான அவசியம் குறைந்தது. போதாக்குறைக்கு மாடறுப்புக்கு தடை தொடர்பான போராட்டங்கள்  வேறு! இதனால் காளை   வளர்ப்பு என்பது அருகியது. மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டு  அவையெல்லாம் கட்டிடங்களாக மாறின மாட்டுத்தீவனங்கள் இறக்குமதியாயின.  இன்று இந்தியாவைப்போன்றே இலங்கையிலும் நாட்டு மாடுகளின் வகையறாக்கள் குறைந்து  Friesian , Jersy போன்ற வெளிநாட்டு மாடுகளின் ஆதிக்கமே அதிகஅளவில் தாக்கத்தினை செலுத்துகின்றன.

அழிந்தது நாட்டு மாடுகளின் இனமும்  நமது ஆரோக்கியமும் மட்டுமல்ல இதையொட்டியிருந்த சுயசார்பு பொருளாதாரமும்தான்! எளிய உணவாக இருந்த பால் மற்றும் பால்சார்ந்த உணவுப் பொருட்களும் சேர்ந்தே  அழிக்கப்பட்டன.  சிற்றூர்களில் முன்பெல்லாம் பெண்கள் பாலை தயிராக்கி கடைந்து வெண்ணை  நெய் எடுத்து விற்கும் வழக்கம் இருந்தது. வெண்ணை எடுத்தபின் கிடைக்கும் துணைப்பொருளான மோரையும்  விற்று வருமானம் ஈட்டமுடிந்தது.

சிறந்த வெயில்கால  பாணமாக விளங்கிய லாக்டிக் அமிலம் நிறைந்த நீர்மோர் மக்களுக்கு மலிவான விலையில் கிடைத்தது. இதில் மிகச்சிறப்பான தென்னவென்றால் இப்பொருளாதாரம் பெண்களின் கையில் இருந்ததுதான். எளிய பெண்களிடமிருந்து இந்த  சிறு வணிக பொருளாதாரம்  இன்றோ தட்டிப்பறிக்கப்பட்டு பெரும் வணிக நிறுவனங்களின் வசம் சென்றிருப்பதன் பின்னணியிலும் ஏராளமான அரசியல் உண்டென்றே கூறவேண்டும் !

சருமம் மற்றும் கூந்தல் பிரச்சினைகளுக்கு தினமொரு Fresh Juice.

அடர்ந்த கூந்தல் மற்றும் அழகான சருமத்தைப் பெறுவதற்கான வழிகளை தேடி தேடி ஆராயும் நீங்கள் இவை இரண்டிற்கும் தீர்வு காண தனித்தனியே முயற்சிகள் செய்யவேண்டியிருக்கும். ஆனால் ஒரே தீர்வின் மூலம் இவை இரண்டையுமே சரி செய்யமுடியுமா என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்திருப்பீர்களா? அப்படி சிந்தித்திருந்தால் இதற்கான எளிய வழியை நீங்கள் ஆராய்ந்திருப்பீர்களா?
உடலின் நல்லாரோக்கியம் தெளிவான குறைபாடற்ற தோல் மற்றும் அடர்த்தியான பளபளப்பான முடி ஆகிய அனைத்திற்குமான ஒரு பொதுத் தீர்வை பெற உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் அவசியம்.

அத்தகைய ஊட்டச்சத்துக்களை உடலுக்கு பெற்றுத்தரும் எளிதான வழிகளில் ஒன்று பழங்கள் மற்றும் காய்கறிகளின் சாறுகளாகும். அவை எண்ணற்ற விற்றமின்கள் தாதுக்கள், புரதக் கூறுகள் போன்றவற்றை கொண்டவை. பெரும்பாலான தோல் பிரச்சினைகள் மற்றும் முடி உதிர்தல் போன்றன ஊட்டச்சத்து குறைபாடுகள் அல்லது அதன் அமைப்பில் நச்சுகள் குவிவதாலேயே ஏற்படுகிறது. இதனால் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக காணப்படும் சாறுகள் இரத்தம், உடல் உறுப்புகள் மற்றும் சுரப்பிகளுக்கு புத்துயிர் அளிக்கின்றன. அவை நரம்புகளிலிற்கும் உறுதியை வழங்குவதோடு மனதுக்கும் உடலுக்கும் நன்மை பயக்கும். சாறுகள் உடலில் விரைவாகவும் எளிதாகவும் உள்நுழைந்து இரத்த ஓட்டத்தில் எளிதில் உறிஞ்சப்படுகின்றன. ஆகவே இதன் பலன் மிக விரைவிலேயே நம் உடலுக்கு கிடைக்கின்றது.

பழச்சாறு

பழச்சாறுகள் நீண்ட காலமாக இயற்கை மருத்துவத்தின் நம்பிக்கையாக இருந்து வருகின்றன. ஏனெனில் அவற்றின் சக்திவாய்ந்த சுத்திகரிப்பு மற்றும் நோய்களை குணப்படுத்தும் தன்மை உடலிலுள்ள நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்றி உடலை சுத்தப்படுத்தவும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகின்றன. புதிய பழச்சாறுகளை (Fresh Juice) எடுத்துக்கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. ஆரம்பகால முதிர்வு மற்றும் வயதான தோற்றத்தை தடுக்கிறது. தோல், முடி, கண்கள் மற்றும் நகங்களின் ஆரோக்கியத்தை உட்புறமாகவும், வெளிப்புறமாக பராமரிக்க உதவுகிறது.

ஆகவே முடி மற்றும் சருமப் பிரச்சினைகளுக்கு ஒரு முக்கிய தீர்வாக பழச்சாறுகள் அமைகின்றது. தினமொரு பழச்சாறை பருகிப்பாருங்கள் நாளடைவிலேயே வித்தியாசம் தென்படும். விலையுயர்ந்த முக அலங்காரங்கள் சிகிச்சைகளை விட இயற்கையான பழச்சாற்றை பருகினால் முக அழகை இயற்கையாகவும் எளிதாகவும் பெற்றிடலாம். அப்பிள், திராட்சை, தோடம்பழம், திராட்சைப்பழம், அன்னாசி, மாதுளை, மாம்பழம், ஆணைகொய்யா போன்ற பழச்சாறுகளை பருகலாம்.

பச்சைசாறு

காய்கறிகளிலிருந்து தயாரித்து பருகும் சாறுகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. காய்கறிகளை உண்ண விரும்பாதவர்கள் அதனை சாறாக அரைத்து பருகுவதால் முழுமையாக அதன் ஊட்டச்சத்துக்களை பெறலாம். பீட்ரூட், கரட், வெள்ளரி, தக்காளி, கீரை, முட்டைக்கோஸ், பாகற்காய் போன்றவற்றை பருகுவதால் சருமம் மற்றும் கூந்தல் தொடர்பான பல பிரச்சினைகளை போக்குகிறது. குறிப்பாக வெளிப்புறமாகவும், உட்புறமாகவும் சருமம் தொடர்பான குறைபாடுகளை நீக்குகிறது.

சிறிய அளவில் முதலில் பருகி பின்னர் படிப்படியாக பருகும் அளவை அதிகரிக்கலாம். புதிய சாறுகளுக்கு உங்கள் உடல் பழகியவுடன் தினமும் ஒரு ஜூஸ் தயாரித்து குடிக்கலாம். கீரை மற்றும் சோற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பச்சை சாறு என்சைம்கள் நிறைந்ததாக கூறப்படுகிறது.இதில் கீரை, புதினா, வோக்கோசு, செலரி, வெள்ளரி, எலுமிச்சை சாறு மற்றும் புதிய இஞ்சி போன்ற கீரைகள் அடங்கியிருக்கும். இதனை நம் நாட்டு வழக்கப்படி ‘kola Kenda’ என்று கூறுகின்றோம். இது உடலின் நச்சுத்தன்மையை அகற்றி ஊட்டச்சத்துக்களை பெற்றுத்தருகிறது. மேனியையும் பராமரிப்பதோடு கூந்தலுக்கும் உறுதியைத் தருகிறது. தோல் சம்பந்தமான நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.

Cold-pressed juice

குளிர் அழுத்தப்பட்ட சாறு அதாவது Cold-pressed juice ஒரு நீரியல் அழுத்தத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது.இவை பெரும்பாலும் சிறப்பு அங்காடிகள் மற்றும் உணவகங்களில் கிடைக்கப்பெறும். இவை புத்துணர்ச்சியான பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து அதிகபட்ச அளவு அனைத்து சாற்றையும் பிரித்தெடுக்க அதியுயர் அழுத்தத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. Cold-pressed juice களில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த குளிர்பானத்தில் சில வெண்ணிலா பீன்ஸ், கற்றாழை, நெல்லிக்காய் போன்றவையும் அல்லது கோடை காலத்திற்கேற்ற வெள்ளரி எலுமிச்சை சாறு போன்றவையும் இணைந்து காணப்படும்.
இவை அதிக விற்றமின்களையும் தாதுப்பொருட்களையும் கொண்டிருக்கின்றன.
நினைவிற் கொள்ளுங்கள்.

சாறுகளை தண்ணீரோடு கலந்து தயாரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். சாற்றை வேறுபிரித்தெடுத்த பிறகு அந்த உடனேயே அவற்றை பருகவேண்டும். இதனால் அனைத்து ஊட்டச்சத்துக்களும் அப்படியே முழுமையாக கிடைக்கும். பழம் அல்லது காய்கறி சாற்றை பெரும்பாலும் அதிகாலையில் பருகுவது அதி சிறந்த பலனைத்தரும். அதிகாலையில் பருக இயலாதவர்கள் காலையில் பருகலாம். உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெற்று அன்றைய நாள் உங்கள் சருமம் புதுப்பொலிவை பெறும். சாறு தயாரிக்கப் பயன்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மிகவும் புத்துணர்ச்சியானதாக இருக்க வேண்டும்.

எலுமிச்சை சாறு அல்லது தோடம்பழச் சாற்றை மேலதிக சுவைக்காக சேர்த்துக்கொள்ளலாம் ஆனால் உப்பு மற்றும் சர்க்கரை சேர்ப்பதை முடிந்தவரை தவிர்க்கவும். சர்க்கரை இல்லாமல் பருகும் பழச்சாறுகள் கலோரிகளை கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. பழச்சாறுகள் மற்றும் காய்கறிசாறுகள் தயாரிக்கப்படும் பாத்திரங்கள் அலுமினியம் அல்லது அதற்கு ஒத்த தாக்கத்தை ஏற்படுத்தும் பொருட்களாக இருக்கக்கூடாது. உணவுக் கட்டுப்பாடுகளுடன் உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தால் உங்களுக்காக அனுமதிக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் குறித்து உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற மறக்காதீர்கள். சிறந்த பலனை பெற்றிட தினமொரு Fresh Juice பருகுங்கள்..!

மக்களின் பிரச்சினைகளும் அரசியல் கோமாளிகளும்!

உலக முழுவதையும் வாட்டி வதைத்த கொவிட்தொற்று நோயினால் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட வல்லரசு நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் ஒருவகையில் அந்த நெருக்கடியில் மீண்டெழுந்தன. இலங்கை போன்ற சிறிய நாடுகள் இன்னும் மீள முடியாத நெருக்கடிக்குள் சிக்குண்டு தவிக்கின்றன.

அரச தலைவர்களின் தவறான முடிவுகள் எடுக்க வேண்டிய முடிவுகளை உரிய நேரத்தில் எடுக்காதமையில் இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையைக் கூட வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆட்சியில் இருந்த அரசியல் தலைவர்களால் தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்பதால் ஆட்சியாளர்களையும் மாற்றியுள்ளனர். தற்போது ஆட்சியிலுள்ள புதிய ஜனாதிபதியின் கீழ் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைத்து. மக்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழ முடியும் என பாரிய எதிர்பார்ப்பில் இன்றும் காத்திருக்கின்றனர்.

மக்களால் ஆட்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் அந்த மக்களுக்காக ஆட்சியாளர்கள் எதனையும் செய்வதே கிடையாது. மாறாக தங்களுடைய அரசியல் இலாபத்தையும் அதிகாரத்தை பாதுகாப்பதற்குமான செயற்பாடுகளை மாத்திரமே முன்னெடுப்பார்கள். இது சாதாரண நிலைமைகளில் மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாத போதும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு தங்களால் வாழவே முடியாத நிலையில் இருக்கும் போது தங்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு ஏதேனும் ஒரு தீர்வை வழங்குவார்கள் என்பது மக்களின் சாதாரண எதிர்பார்ப்பாகவே உள்ளன.பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு அனைத்து கட்சிகளும் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும் என மதத் தலைவர்கள் துறைசார் நிபுணர்கள் என ஒட்டுமொத்த நாடுமே கோரிக்கைவிடுத்தன விடுக்கின்றன. மக்களின் வாக்கை மாத்திரம் எதிர்பார்க்கும் அரசியல்வாதிகள் மக்களின் கோரிக்கைகயை கவனத்தில் கொள்ளாது நெருக்கடியையும் சூழ்நிலையையும் பயன்படுத்தி எவ்வாறு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்வது என்ற குறுகிய அரசியல் நோக்கத்துடனே செயற்படுகின்றனர்.

பொருளாதார நெருக்கடியை பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகள் அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு தீர்வை வழங்குவதற்கு அப்பால் தனித் தனி குழுவாக பிரிந்து ஆட்சியை அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்வதற்காக புதிய கட்சிகளை உருவாக்கி தங்களுடைய அரசியல் பயணத்தை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்குவது என்பதை ஆராய்வதை விடுத்து யாரை எல்லாம் பிரித்தெடுத்து புதிய கட்சிகளை ஆரம்பித்து அடுத்தத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பதற்கான வெல்லோட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மூன்று புதிய அரசியல் கூட்டணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஆளுந்தரப்பிலிருந்து பிரிந்துச் சென்றவர்களே இவ்வாறு மூன்று புதிய அரசியல் கூட்டணிகளை ஸ்தாபித்துள்ளனர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையில் மேலவை இலங்கை கூட்டணி டளஸ் அழகப்பெரும தலைமையில் சுதந்திர மக்கள் கூட்டணி மற்றும் குமார் வெல்கம தலைமையில் நவ லங்கா சுதந்திர கட்சி என மூன்று கட்சிகளை ஸ்தாபித்துள்ளனர். இவர்கள் இந்த புதிய கட்சிகளை எதற்காக உருவாக்கினார்கள் என்பது இதுவரை மக்களுக்கு புரியவே இல்லை.

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு புதிய கட்சிகள் உருவாக்குவதனால் என்ன பயன் கிடைக்கும், கட்சிகள் உருவாக்குவதினால் மக்களின் பட்டினிச் சாவு குறையுமா? பொருட்களின் விலைகளை குறைக்க முடியுமா? அந்நிய செலாவணியை ஈட்ட முடியுமா? தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமா? என்பதே மக்களின் தற்போதைய கேள்வியாகவுள்ளன.

மக்களை பட்டினியால் கொலை செய்துவிட்டு தங்களுக்கு தேவையான அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் மிக கீழ்த்தரமான அரசியலையே இலங்கை அரசியல்வாதிகள் முன்னெடுத்துவருகின்றனர். நாட்டை மீட்க மக்கள் என்னதான் போராட்டங்கள் நடத்தினாலும் அரசியல்வாதிகள் மாறாதவரை இந்த நாட்டை யாராலும் காப்பற்றவே முடியாது என்பதை ஒவ்வொரு முறையும் எங்களுடைய அரசியல் கோமாளிகள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர்.
உலக முழுவதும் இலங்கையின் நிலைமையை உண்ணிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கும் போது மக்களையும் நாட்டையும் காப்பாற்றுவதை விடுத்து தங்களுடைய எதிர்கால அரசியல் அதிகாரத்தை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்பதிலையே இலங்கை அரசியல்வாதிகள் மும்முரமாக இருக்கின்றனர்.

நாட்டில் போக்கு பற்றாக்குறை, வறுமை, பட்டினிச்சாவு என மக்கள் ஒவ்வொரு பிரச்சினைகளாக அனுபவித்துக்கொண்டிருக்கும் போது, புதிய கட்சிகளை உருவாக்குவதால் நாட்டுக்கு என்ன பிரயோசனம் இருக்கின்றது. என்னதான் நாங்கள் தவறிழைத்தாலும் மக்கள் எங்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவார்கள் என்ற அதீத நம்பிக்கையிலேயே அரசியல்வாதிகள் இவ்வாறு அரசியல் கோமாளிகளாக இருக்கின்றனர்.

சர்வக்கட்சிக்கு அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்து இதுவரை எந்தவொரு கட்சியும் அதற்கு இணங்கவில்லை. மாறாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்வதற்காக மாத்திரமே அனைத்து அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்துவருகின்றன. அரசாங்கத்துடன் இணைந்தால் புதிய அமைச்சுகள் வேண்டும் அல்லது உயர் பதவிகள் வேண்டும் என நிபந்தனைகளுடனே பல அரசியல்வாதிகள் அரசாங்கத்தில் இணைவதற்கு காத்திருக்கின்றனர்.இதற்காக பலரை இணைத்துக்கொண்டு புதிய அரசியல் கட்சிகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை பார்க்கும் போது இவர்கள் அரசியலுக்கு பொருத்தமானவரா என்றே கேள்வி எழுப்ப தோன்றுகிறது. நெருக்கடியின் போது தங்களுடைய சுயலாபங்களை ஓரங்கட்டிவிட்டு  மக்களுக்காக ஒன்றிணையும் அரசியல்வாதிகளை இலங்கையில் எப்போதும் காணகிடைத்ததே கிடையாது. இனியும் காண கிடைக்குமா என்பதும் சந்தேகமானது. மக்கள் எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்பதை மறந்துவிட்டு நெருக்கடியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் அரசியல்வாதிகளால் தங்களை தெரிவு செய்த மக்களின் வழிகளையும் அவர்களின் துன்பத்தையும் ஒருபோதும் அறிந்துகொள்ளவே முடியாது.

உலகின் ஓட்டத்தை தீர்மானிக்கும் மருத்துவ அரசியல்!

உயிரைக்காக்கும் மருத்துவம் எப்படி சிறந்த சேவையாக மனிதநேயமிக்க தொழிலாக கருதப்படுகின்றதோ அதுபோலவே அதுமிகப்பெரும் வருமானம் ஈட்டும் வழியாகவும் இருக்கின்றது. பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாகிவிட்ட இன்றைய கோப்ரேட் உலகில் மருத்துவமும் மிகப்பெரும் பணம் கொழிக்கும் வணிகமாக மாறியிருக்கின்றது என்பதுதான் உண்மை. “தனியொருவன்” திரைப்படத்தில் உயிர்காக்கும் மருந்தை விலைகுறைவாக மக்களுக்கு கொடுக்க முடிவெடுக்கும்   மருந்துநிறுவன முதலாளியை வில்லனாக வரும் அரவிந்தசாமி கொன்றுவிடுவார்.

இதன்பின்னணியில் இருக்கும் “சர்வதேச  மெடிக்கல் மாஃபியா  நெட்ஒர்க் ” என்கிறவொன்றை அந்த படத்தில் வெளிச்சம்போட்டு காட்டியிருப்பார்கள். எயிட்ஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதன்மூலம் மருத்துவ வல்லரசாக அமேரிக்கா மாறியதுபோல  கொரோனாவை வைத்து சீனாவும் வல்லரசு திட்டம் தீட்டுகிறதா என்கிற கேள்வி நம் அனைவரிடமும் ஏற்பட்டு வருடங்கள் இரண்டு கடந்துவிட்டன!

ஜவுளித் தொழிலில் பயன்படுத்தப்படும் சில குறிப்பிட்ட சாயங்களுக்கு நோய்களைக்குணப்படுத்தும் தன்மை இருப்பதை ஜெர்மன் விஞ்ஞானி “Paul Ehrlich ” கண்டுபிடித்ததைத்தொடர்ந்து சாயப்பட்டறைகளெல்லாம் மருந்து நிறுவனங்களாக புதிய அவதாரம் ஏற்றன. 1920ஆம் ஆண்டுக்குப்பின்  ஏற்பட்ட தொழில்நுற்ப புரட்சி  “அலோபதி” மருத்துவத்தை அசைக்கமுடியாத சக்தியாக மாற்றியது. ” Big pharma” என்பது  உலகத்திலுள்ள மிகப்பெரிய மருத்துவ நிறுவனம்.  (மருத்துவ நிறுவனங்கள் , அரசியல்வாதிகள்  NGO நிறுவனங்கள் கைகோர்த்து செயற்படும் ஒரு ரகசிய குழு என்கிற கருத்தும்கூட உண்டு) .

இந்த குழுவினருக்கு தலைமை தாங்குவது  1930களில் தொடங்கி  மருந்து உலகில் ஆதிக்கம் செலுத்திவரும் நிறுவனம் அமெரிக்காவின் “Rockfellers foundation”. இந்த நிறுவனம் ஐநூற்றுக்கும்   மேற்பட்ட மருத்துவ நிறுவனங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு   உலக பொருளாதாரத்தை தனது கண் அசைவுகளில்  ஆட்டிப்படைத்துவருகின்றதென்றால் மிகையில்லை. Johnson & Jonson   Roche, Merck  போன்றவை அப்படிக்கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களுள் முக்கியமானவை. மருந்து வியாபாரத்தில் Rockfellers ஐ மீறி எந்தவொரு மருந்து நிறுவனமும் தலையெடுத்துவிடமுடியாது. அப்படி தலையெடுக்க நினைத்தால் தனக்குள்ள அரசியல் செல்வாக்கினைக்கொண்டு அவர்களை மூர்க்கமாக   அழித்துவிடுவார்கள்  என்று கூறப்படுகிறது.

அந்த அளவிற்கு மருந்து வியாபாரத்தில் தன்னுடைய ஆக்டோபஸ் கரங்களை பரவவிட்டிருக்கிறது Rockfellers foundation. “நம்மை எப்போதும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் மக்களை சாந்தப்படுத்துவதற்கு ஆயுதங்களைவிட மருந்தே சாதகமானது” என அறிவித்தவர் Rockfeller (நிறுவனத்தின் ஸ்தாபகர்)  . அமேரிக்கா உலகின் அசைக்கமுடியாத வல்லரசாக மாறியதற்கு இந்த மருந்து மாஃபியாக்களும்  ஒரு காரணம். இந்த பரகாசுர மருந்து வியாபாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்ட NGO க்கள் மூலமாக தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஆப்பிரிக்கா போன்ற  ஏழை நாடுகளில் உருவாக்குகின்றார்கள்.

இவர்களின் தகிடுதத்தங்களை  அம்பலப்படுத்தும்   எதிர்தரப்பொன்றும் செயற்படாமலில்லை. எய்ட்ஸ் முதற்கொண்டு கேன்சர்வரை எப்படி உயிர்கொல்லும் நோய்களை ஆதாரமாக வைத்து மருந்து   மாஃபியாக்கள் கொழிக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது அந்த அமைப்பு. “சர்வதேச சதிக்கோட்பாடு” என்ற பெயரில் பல்வேறு பிரபலங்களின் முகத்திரையை கிழித்தெறிந்திருக்கிறது. கணனி உலகின் முடிசூடா மன்னனாகவும்  உலகின் மிகப்பெரிய பணக்காரராகவும் இருக்கும் பில்கேட்ஸ்  மருந்து மாஃபியாக்களின் தூதுவராக செயற்படுகின்றார் என்று குற்றம்சாட்டுகிறது அவ்வமைப்பு.

உலகின் சக்திவாய்ந்த மருந்து நிறுவனங்களான novartis , pfizer ,  போன்ற நிறுவனங்களில் பில்கேட்ஸ் பல பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருக்கின்றார். சோவியத் யூனியன் உச்சத்தில் இருந்த காலத்தில் தங்களுடைய லாபசதவீதம் குறைந்துபோனதை உணர்ந்த மருந்து மாஃபியாக்கள்  பில்கேட்ஸ் அறக்கட்டளையை ஒரு கேடயமாக பயன்படுத்த தொடங்கியதாக கூறப்படுகின்றது.

பில்கேட்ஸ் அன்ட் மெலிண்டா  கேட் அறக்கட்டளையின் (BILL & MELINDA GATES FOUNDATION ) வேலை என்னவென்றால்  ஏழை  நாடுகளில் அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டும். மக்கள் தொகையை கட்டுப்படுத்துகின்றோம்  போலியோவை ஒழிக்கின்றோம் என்கிறபெயரில் ஏழை நாடுகளுக்குள் நுழையும் பில்கேட்ஸ் & மெலிண்டா  கேட்ஸ் அறக்கட்டளை அரசாங்கங்களை பின்னுக்குத்தள்ளி அந்த இடங்களில் அமெரிக்க மாஃபியாக்களுக்கு வேண்டப்பட்ட தனியார் நிறுவனங்களை கொண்டுவருவது என கூறப்படுகிறது.

மருந்து மாஃபியாக்களுக்கு சாதகமாக செயற்படுவதில் அமெரிக்காவின் Forbes, Rockfellers போன்ற மற்ற அறக்கட்டளைகளை பின்னுக்குத்தள்ளிவிட்டுவிட்டு ஏகபோகமாக வளர்ந்துவருகிறது பில்கேட்ஸ் அறக்கட்டளை. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புதிய மருந்துகளை சோதித்துப்பார்க்கும் சோதனைச்சாலைகளாக  மூன்றாம் உலக  நாடுகளை பில்கேட்ஸ் அறக்கட்டளை பயன்படுத்துவதாக கூறப்படுகின்றது. காரணம் மேற்கத்தைய நாடுகளில் மனிதர்களின் உடம்பில் மருந்தை செலுத்தி சோதனைகளை மேற்கொள்வதற்கு கட்டுப்பாடுகள் மிகமிக அதிகம். 2010ஆம் ஆண்டு முதன்முதலில் புதிய மருந்துகளின் சோதனைகளை ஆப்பிரிக்காவில் ஆரம்பித்தது பில்கேட்ஸ் அறக்கட்டளை.

 “GlaxoSmithKline” நிறுவனத்தின் மலேரியா தடுப்பூசி ஐய்யாயிரத்துக்கும்   அதிகமான ஆபிரிக்க குழந்தைகளின்மீது பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததாக சர்ச்சைகள் வெடித்திருந்தாலும் பரிசோதனை மாபெரும் வெற்றிபெற்றதாக பிரசாரம் செய்யப்பட்டது. உலகம் முழுவதிலும் அந்த மருந்தை விநியோகம் செய்யும் உரிமத்தை GlaxoSmithKline நிறுவனத்திற்கு வாங்கிக்கொடுத்து பில்கேட்ஸ் அறக்கட்டளை.

புதிய மருந்துகளை பரிசோதித்துப்பார்க்கும் சோதனை எலிகளாக மட்டுமல்லாமல்  விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கும் மருந்துகளை வியாபாரம் செய்யும் சந்தையாகவும் ஏழை நாடுகளை பில்கேட்ஸ் அறக்கட்டளை பயன்படுத்துகிறது என்கிற விமர்சனமும் உண்டு. இதற்கு உதாரணமாக அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட “Norflam” ஐ ஆபிரிக்காவில் வியாபாரம் செய்த கதையை சொல்லலாம். கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதால் கிட்டத்தட்ட முப்பதாயிரம்பேருக்குமேல் வழக்குத்தொடுக்கப்பட்டதால் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட இந்த மருந்தை ஆபிரிக்க நாடுகளில் பிரச்சாரம்  செய்து விற்றுக்கொடுத்தவர் பில்கேட்ஸின் மனைவி மெலிண்டா.

சர்வதேச அளவில் பெரும் எதிர்ப்புக்களை சந்தித்த மருந்துகளை ஆப்பிரிக்காவுக்கு அடுத்து அவர்கள் தள்ளிவிடுவது இந்தியாவில்தான்.2010இல் பில்கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனம் “PATH” எனப்படும் அரசுசாரா நிறுவனத்துடன் சேர்ந்து HPV (HUMAN PAPILLOMA VIRUS) என்கிற கர்ப்பப்பை தடுப்பூசிகளை இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய பழங்குடி சிறுமிகளுக்கு செலுத்தியதில் பல சிறுமிகள் உயிரிழந்ததுடன்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு வாழ்நாள் முழுவதிலுமான பக்க விளைவுகள் ஏற்பட்டன. எனினும் இதற்காக பில்கேட்ஸ் அறக்கட்டளைமீது எந்தவிதமான கிரிமினல் வழக்கும் தொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .

தனக்குத் தேவையான 80% மருந்துகளை அமேரிக்கா இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்துகொள்கின்றது. ஆம்  அசைக்கமுடியாத வல்லரசு என மார்தட்டிக்கொள்ளும் அமேரிக்கா தன்னுடைய தேவையில் வெறுமனே 20% மருந்தை மட்டுமே உற்பத்தி செய்கின்றது. உலக மருத்துவ சந்தையில் அசைக்கமுடியாத சக்தியாக இருக்கும் அமேரிக்கா மருந்துகளை தனது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யாததன் பின்னணி என்ன? உலகிலேயே அதிகமான காப்புரிமைகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் ஏன் மருந்துகளை உற்பத்தி செய்வதில்லை? காரணம் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்தான்! எங்கே மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் அந்த பகுதியில் உள்ள நிலம் நீர், காற்று முதலியன மிகவும் மாசடையும்.

சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மட்டுமல்லாது அந்தப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் குறைந்துவிடும் என்பது ஆய்வுகளின் முடிவு. சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் மருந்து உற்பத்தி செய்யவேண்டும் என்றால் அதிக செலவும் பிடிக்கும் . மருந்து மாஃபியாக்களைக்கொண்டு உலகையே ஆட்டுவிக்கும் அமேரிக்கா சொந்த நாட்டில் மருந்து தயாரிக்காமல் இருப்பதன் பின்னணி இதுதான்.

அமெரிக்கர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பு மருந்து தயாரித்துத் தரும்படியும் அதற்கு ஈடாக பல பில்லியன் டொலர்கள் கொட்டிக்கொடுக்கப்படும் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரொனால்ட் ட்ரம்ப் ஜேர்மனிய மருந்துக்கம்பனியுடன் பேரம்பேசியதை அந்த மருந்து நிறுவனம் அம்பலப்படுத்தியதுடன்  தாம் தயாரிக்கும் மருந்து உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும்  அதில் எந்தவித லாபநோக்கமும் தமக்கு தேவையில்லை என்பதை அந்த நிறுவனமும் ஜெர்மன் அதிபரும் குறிப்பிட்டிருந்தமை இங்கே சுட்டிக்காட்டப்படவேண்டியவொன்று.

சரி  ஏன் இத்தனை வல்லமை பொருந்திய அமெரிக்க மருந்து  நிறுவனங்கள் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதில் அத்தனை சுணக்கம் காட்டியது?   அந்த நிறுவனங்கள் நினைத்திருந்தால் எப்போதோ கொரோனாவிற்கான தடுப்பு  மருந்தை கண்டுபிடித்திருக்கலாம். ஆனால்  வழக்கம்போலவே  லாபத்தைமட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயற்பட்டமைதான் உலகம் தற்போது அனுபவிக்கும் இக்கட்டுக்கு பெரும்காரணம் என அமெரிக்க தத்துவஞானியொருவர் கூறியுள்ளமை கவனிக்கத்தக்கது. லாபநோக்கிலிருந்து மருத்துநிறுவனங்கள் மக்கள் நலனில் அக்கறை  காட்டாதவரை இந்தநிலை தொடரும். உலகத்தையே  சுடுகாடாக  மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு வைரஸ் பரவிக்கொண்டிருக்கின்றது என தெரிந்தும்  எப்படி மருந்து மாஃபியாக்கள் மெத்தனமாக இருந்தார்கள் என்கிற கேள்வி எழுகிறது.

அங்குதான் மார்க்கெட் என்கிற சூத்திரம் ஒளிந்திருக்கின்றது. ஆம் மார்க்கெட் “டிமாண்ட்“ செய்யாத ஒன்றைய மருந்து மாஃபியாக்கள் தயாரிக்கமாட்டார்கள். ஒருகட்டத்துக்குமேல் உலகம் முழுவதிலுமே கொரோனா தடுப்பு மருந்திற்கான தேவை எகிறிக்கொண்டிருக்கின்றது என தெரிந்திருந்தும் அந்த மருந்தை கண்டுபிடிப்பதில் தாமதம்    ஒருவேளை முன்னமே கண்டுபிடித்திருந்தாலும் அதனை ரகசியமாக பதுக்கி வைத்திருந்தமைக்கும் காரணம் என்ன? இதற்குமுன்னால் ஒருபெரிய பொருளாதார கணக்கிருக்கிறது.

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கவேண்டும் என்றால் ஆராச்சிக்கு  பல பில்லியன் டொலர்கள் கொடுக்கப்படவேண்டும் என அமெரிக்க அரசாங்கத்திற்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் மருந்து நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன . இதனை உடனடியாக ஏற்க அமெரிக்க அரசாங்கம் முரண்டுபிடித்தமையும் தடுப்பு மருந்து தயாரிக்க அவ்வளவாய் ஆர்வம் காட்டாமல் இருந்தமைக்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. அலோபதி மருத்துவத்தின் தாயகம் என போற்றப்படும் மேற்குலக நாடுகளும் அமெரிக்காவும் தங்களுடைய வியாபாரத்திற்காக உலகமக்கள் உயிருடன் விளையாடியிருக்கின்றார்களா என்ற  விமர்சனத்திற்கு என்ன பதில்?

என்னதான் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இன்றைய 90% மக்களின்  நம்பிக்கையை பெற்ற மருத்துவமுறை என்றால் அது அலோபதிதான். போலியோ மற்றும் சின்னம்மை இல்லாத உலகை உருவாக்கியதில் அலோபதி மருத்துவத்திற்கு இருக்கும் பங்கை யாரும் மறுத்துவிடவியலாது. ஆனால் அதனை மூலதனமாக கொண்டு மேற்கொள்ளப்படும் மோசடிகள்தான் விமர்சனத்திற்குள்ளாகின்றன. எனினும் முட்டாள்தனமாக அலோபதி மருத்துவமுறையை எதிர்த்து பிரச்சாரம் செய்து மக்களின் உயிருடன் விளையாடும் ஒரு கூட்டமும் இருந்துவருகின்றது. காலங்காலமாக  குழந்தைகளுக்கு போடும் தடுப்பூசிகளுக்குக்கூட எதிர்ப்பைக்காட்டுபவர்கள்  இவர்கள். மருத்துவ மாஃபியா என்கிறவொன்று  எவ்வளவுக்கெவ்வளவு  ஆபத்தானதோ அதைவிட  ஆபத்தானவர்கள் இப்படி அலோபதி மருத்துவத்திற்கான எதிர்பிரச்சாரம் செய்பவர்களும் என்பதையும் நாம் கருத்திற்கொள்வது நன்று!

பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் T20 உலகக் கிண்ண அணியை அறிவிப்பு செய்தது பாகிஸ்தான்!

டுபாயில் நடைபெற்ற ஆசிய கிண்ண தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. ஆரம்பத்தில் சரிந்த இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்று கிண்ணத்தை ஆறாவது தடவையாக கைப்பற்றியது. இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் உட்பட  பாகிஸ்தான் அணி வாரியம் என்பன மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இந் நிலையில் இந்த தோல்வி குறித்து அணித்தலைவர் பாபர் அசாம் கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது போட்டியில் ஆரம்ப 8 ஓவர்களிலும் வலுவான நிலையில் பாகிஸ்தான் அணி இருந்தது. இந்த ஆதிக்கத்தினை ராஜபக்ஷ,வனிந்து ஹசரங்க மற்றும் சமிக்க கருணாரட்ன அவர்களுடனான இணைப்பாட்டம் இல்லாமல் செய்துவிட்டன. இலங்கை அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ராஜபக்சவின் இணைப்பாட்டங்கள் நன்றாக இருந்தன. உண்மையான ஆடுகளமாக அன்று டுபாய் இருந்தது அத்தோடு எப்போதும் போலவே சிறப்பாக இருந்தது என்றார். பாகிஸ்தானின் இந்த தோல்விக்கு துடுப்பாட்டம் மிக மோசமாக இருந்ததோடு களத்தடுப்பும் காரணம் என கூறினார். எங்களுடைய ஆளுமைக்கு ஏற்றாற்போல் தாங்கள் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை. எங்களுடைய ஆரம்பம் சிறப்பாக இருந்தும்..

கடைசி 15 தொடக்கம் 20 வரையிலான ஓவர்களில் எதிரணிக்கு ஓட்டங்களை மேலதிகமாக வாரி வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் பந்துவீச்சு சிறப்பாக நிறைவடையவில்லை. எங்களுடைய களத்தடுப்பு ஒழுங்காக அமையவில்லை  என்றாலும்  சில   தவறுகளினால் தோல்வியைத் தழுவினோம். ரிஸ்வான், நவாஸ் மற்றும் நசீம் ஆகியோர் நேர்மறையாக இருக்கின்றனர். ஏற்ற இறக்கங்கள் இருந்த போதும் நாம் சரியாக செயற்பட்டிருந்தால் சரியாக அமைந்து இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதவேளை பாகிஸ்தானின் ஆசிய கிண்ண தோல்வியைத் தான் பொறுப்பேற்பதாக அணியின் உதவி தலைவர் சதாப் கான் தெரிவித்துள்ளார். அதாவது போட்டியின் திருப்புமுனையாக அமைந்த பானுகவின் இரண்டு பிடியெடுப்புக்களை சதாப் கான் தவறவிட்டிருந்தார். பாகிஸ்தான் அணியின் சிறந்த களத்தடப்பாளர்களில் ஒருவரான சதாப் இவ்வாறு இரண்டு பிடியெடுப்புக்களை தவறவிட்டமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

பிடியெடுப்புக்களை எடுத்தால் வெற்றி பெற முடியும். ஆனால் போட்டியில் முக்கிய பிடியெடுப்புக்களை தவறவிட்டேன் மற்றும் அணியின் தோல்விக்கு முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். எனது அணியின் தோல்விக்கு நான்தான் காரணம் என சதாப் கான் தெரிவித்துள்ளார். நஷீம் ஷா, ஹரீஸ் ரவூப் ஆகிய இருவரினதும் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததோடு முஹம்மத் ரிஸ்வானும் சிறந்த துடுப்பாட்டத்தை வழங்கியிருந்தார். ஒட்டுமொத்த அணியும் இயன்றவரை முயற்சித்தது என்று  அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந் நிலையில் அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக்கிண்ண போட்டியில் பங்குபற்றும் அணிகளின் அட்டவணைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது தகுதிகான் சுற்றில் அணி A யில்  இலங்கை,நமீபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன. குழு B ல்  மேற்கிந்திய தீவுகள், ஸ்கொட்லாந்து,ஐயர்லாந்தூ  மற்றும் சிம்பாபே அணிகள் மோதவுள்ளன.

சுப்பர் 12 சுற்றில் குழு ஒன்றில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், அணியுடன் தகுதிகான் சுற்றில்  தெரிவு செய்யப்படும் இரண்டு அணிகள் இணையவுள்ளது.சுப்பர் 12 இன் குழு 2 இல்  இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் தகுதிகான் சுற்றில்  தெரிவுசெய்யப்படும் இரண்டு அணிகள்   இணையவுள்ளன.

தகுதிககான் சுற்று ஒக்டோபர் 16 தொடக்கம் 21 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.சுப்பர் 12 சுற்று ஒக்டோபர் 22 தொடக்கம் நவம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய T20  உத்தியோகபூர்வமாக அணிகளை அறிவித்து வருகின்றது. இதுவரையில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், நமீபியா  ஆகிய அணிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பை செய்துள்ளனர்.

2024 T20 உலகக்கிண்ணத்தில் 20 அணிகள் பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்திலே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் மே.தீவுகளில் 2024 டி20 உலகக் கிண்ண போட்டிகள் நடைபெற உள்ளது.இ்ப் போட்டிக்கு 12 அணிகள் நேரடியாகதத் தகுதி பெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் இந்த வருடம் நடைபெறும் டி20 உலகக்கிண்ணப் போட்டியில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் 8 அணிகள்  அடுத்த உலகக் கிண்ணத்துக்கு நேரடியாகத் தகுதி பெறும்.

போட்டியை நடத்தும் நாடுகளான அமெரிக்காவும், மேற்கிந்தியத்  தீவுகளும்  நேரடித் தகுதியை அடைந்துள்ளன. எஞ்சியுள்ள இரண்டு அணிகள் தரவரிசைப்படி தெரிவாகும். ஒருவேளை மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் 8 இடங்களில் இடம்பெற்றால் தரவரிசையின் அடிப்படையில் மூன்று அணிகள் தெரிவு செய்யப்படும்.ஏனைய 8 அணிகளும் தகுதிச் சுற்றின் அடிப்படையில் தேர்வாகவுள்ளன. T20 உலகக் கிண்ணப் போட்டியில் 20 அணிகள் பங்கேற்பது இதுவே முதல் தடவையாகும்.

இந்த முறை நடக்கவிருக்கின்ற T20  உலகக்கிண்ண அணிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்து வருகின்ற நிலையில் பாகிஸ்தான் அணி சற்று தடுமாற்றம் அடைந்துள்ளது.ஆசியாக்கிண்ண  இறுதிப்போட்டி தோல்வியின் பின்னர் அந்த தொடரில் சிறப்பாக விளையாடாத பக்ஹர் சமான்  அணியிலிருந்து விளக்கப்பட்டுள்ளார்.  இந் நிலையில் தற்போது  15 பேர் கொண்ட உத்தியோகபூர்வ அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில்,பாபர் அசாம்(அணித் தலைவர்),சதாப் கான் (உதவித் தலைவர்),முஹம்மத் ரிஸ்வான்(விக்கெட் காப்பாளர்),ஆசிப் அலி,கைதர் அலி, ஹரீஸ்  ரவூப்,இப்திகார் அஹ்மத் ,குஷ்தில் ஷாஹ்,முஹம்மத் ஹஸ்னய்ன்,முஹம்மத் நவாஸ்,முஹம்மத் வஸீம்,நஸீம் ஷாஹ்,ஷஹீன் அப்ரிடி,ஷான் மக்ஷுட்,உஸ்மான் காதிர்  இதில்  உள்ளடங்குகின்றனர்.

17 வருடங்களின் பின்னர் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 7 T20 போட்டிகளைக் கொண்ட தொடராக இது அமையவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை கராச்சி மற்றும்  லாகூரில் இடம்பெறவுள்ளது. ஆசியாக் கிண்ணத்தில் பிரகாசிக்க தவறிய பாகிஸ்தான் அணத் தலைவர் பாபர் அசாம் T20 தரவரிசையில் முதலிடத்திலிருந்து மூன்றாம் இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளார். எனவே எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ள T20 தொடருக்கான   பயிற்சி ஆட்டமாக இது அமையவுள்ளது. இதில் பாபர் அசாம் உட்பட பாகிஸ்தான் அணி மீண்டெழுந்து வந்து பிரகாசிக்க வேண்டும் என்பதே அனைத்து இரசிகர்களினதும் எதிர்பார்ப்பாகும்.

-அப்ரா அன்சார்

மேக்கப்பை ஹைலைட்டாக்கும் Lipsticks!

பெண்கள் வெளியில் செல்லும் போது தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள மேக்கப் செய்வதுவிட்டு தான் வெளியில் செல்கிறார்கள் என்பது பலர் சொல்லும் கருத்து. மேக்கப் என்றாலே பெண்கள் தான் என்றவொரு வழக்கமான பேச்சும் இருக்கிறது. இது என்னவோ உண்மைதான் ஆனால் திருமணம் போன்ற முக்கிய வைபவங்களுக்கு அழகுநிலையங்களுக்கு சென்று மேக்கப் செய்துகொள்வது பெண்களின் ஒரு பழக்கம். இது இல்லாமல் சாதாரணமாக வெளியில் செல்லும்போது சிம்பிளாக க்ரீமை பூசி,கண்மை தீட்டி ஒரு பொட்டுவைத்து கொஞ்சம் வழக்கம் போல லைட்டாக லிப்ஸ்டிக்கை பூசிக்கொண்டு சென்றாலும் பார்ப்பவர் கண்ணுக்கு நாம் மேக்கப் செய்தது போலத்தான் தெரியும். நாம் சிம்பிளாக தயாராகி இருந்தாலும் நம்முடைய முக லுக்கை எடுப்பாக காட்டுவது லிப்ஸ்டிக் தான். சாதாரணமாக லிப்ஸ்டிக் மட்டும் போட்டாலே நாம் மேக்கப் செய்துவிட்டு வந்து இருக்கின்றோம் என்று பலரும் நையாண்டி பேசுவார். ஆக மேக்கப்பில் மிக முக்கியமானதொன்று லிப்ஸ்டிக் என்பது பெண்களுக்கே நன்றாக தெரியும்.

என்னதான் நன்றாக மேக்கப் செய்தாலும் உதடுகள் பார்ப்பதற்கு கருமையாக அல்லது வரண்டதாக அல்லது சிதைவுகளாக காணப்பட்டால் அந்த மேக்கப்பிற்கே மதிப்பு இல்லாமல் போய்விடும். இதற்காகத்தான் மேக்கப் செய்தால் லிப்ஸ்டிக் போடுவது கட்டாயமாகிவிட்டது. மேக்கப் போடாமலேயே சிலருடைய எளிமையான முகத்தையும் எடுப்பாக காட்டுவது லிப்ஸ்டிக்ஸ் தான். அதிலும் லிப்ஸ்டிக் போடுவதற்கே பெண்கள் சிரமப்படுகிறார்கள். போட்ட லிப்ஸ்டிக் குறுகிய நேரத்திலே அழிந்துபோவது லிப்ஸ்டிக்கை எப்படி பூசுவது என்று தெரியாமல் இருப்பது. என்ன லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவது என்ன லிப்ஸ்டிக் நமக்கு மேட்ச் ஆகும் என்று பல பிரச்சினைகள் அவர்களுக்கு.இது போன்ற அனைத்திற்கும் தீர்வாகவே நவீனமயமான இக் காலத்தில் சந்தையில் பல பிரத்தியேக லிப்ஸ்டிக்குகள் கிடைக்கின்றன. அவை பற்றி அறிந்து கொள்வோம்.
மேட் ஃபினிஷ் (Matt Finish)

தற்காலத்தில் பெண்கள் பெரும்பாலும் விரும்புவது மேட் ஃபினிஷ் லிப்ஸ்டிக்குகளைத் தான். இதை பூசிக்கொண்டால் எளிமையாக இருப்பதோடு உதடுகளும் அழகான நிறத்தையும் தோற்றத்தையும் பெறும். சாதாரணமாக மேக்கப் செய்தது போன்று லுக்கைத் தரும். பளபளப்பான மற்றும் ஹெவியான லிப்ஸ்டிக்குகளை விரும்பாத பெண்களுக்க இது ஏற்றது. மேட் ஃபினிஷ் லிப்ஸ்டிக்குகள் பெரும்பாலும் அடர் நிறங்களிலேயே கிடைக்கப்பெறும். இவை நீண்டநேரம் அழியாமலும் இருக்கும். உதடுகளில் சிறிதளவு லிப் பாமை தடவிவிட்டு 15 நிமிடங்களுக்குப் பிறகு மேட் லிப்ஸ்டிக் போடுவதனால் உதடுகள் வரண்டு போகாமல் பாதுகாக்கலாம். லிப் பாமும் இணைந்ததான சில மேட் ஃபினிஷ் லிப்ஸ்டிக்குகளும் சந்தையில் கிடைக்கப்படுகின்றன.க்ரேயோன்ஸ் (Crayons)
ஈஸியாகவும், நேர்த்தியாகவும் போடக்கூடிய லிப்ஸ்டிக் வகைகள் க்ரேயான்ஸ் லிப்ஸ்டிக் வகைகள் தான். இவை பெரும்பாலும் பென்சில் வடிவிலேயே அமைந்திருக்கும். மிகவும் தனித்துவமான நிறங்களாகளைக் கொண்டவையே சந்தையில் விற்கப்படுகின்றன. பளிச் நிறத்தையும், அடர் நிறத்தையும் விரும்புபவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.ஒரு தடவை பூசினாலே போதும் உதடுகளை மிகவும் அழகாகக் காட்டுவதோடு அழியாமலிருக்கும். க்ரேயோன் லிப்ஸ்டிக்குகள் மேட்ஃபினிஷ்,க்ரீம்,லிப் லைனர் போன்ற பல ரகங்களில் கிடைக்கப்பெறுகின்றன. க்ரேயான்ஸ் லிப்ஸ்டிக்குகளை பென்சிலை பயன்படுத்தி வர்ணம் தீட்டுவது போல உதடுகளுக்கு பயன்படுத்த எளிதாக இருக்கும். இதன் மற்றுமொரு நன்மையென்னவென்றால் எவ்வித நிறமங்குதல்களும் இன்றி இதனை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தலாம்.பீல்ஓஃப் (Peel Off)
லிப்ஸ்டிக்கை உதடுகளில் சரியாக பூசத் தெரியாதவர்களுக்கு பீல்ஓஃப் லிப்ஸ்டிக்குகள் சரியான தெரிவாகும். இப்போது டிரென்டாக அனைவரும் தெரிவு செய்யும் ஒரு லிப்ஸ்டிக்குகளாக இவை திகழ்கின்றன. இது ஜெல் போன்று காணப்படும் தேவையான அளவு அதனை எடுத்து பூசிக்கொள்ளலாம். இதில் மற்றுமொரு விஷேடம் என்னவென்றால் இதனை பூசி சிறிது நேரம் காயவிட்ட பின்பு இலகுவாக உதட்டிலிருந்து உரித்தெடுக்கமுடியும்.இவ்வாறு பிரித்தெடுத்தால் அதன் வர்ணம் உதட்டில் ஒட்டியிருப்பதை காணலாம். இது உதட்டிலிருந்து தனித்துத் தெரியாமல் உதட்டின் நிறத்தை ஒத்ததாக காணப்படும். அதாவது இயற்கையாகவே உள்ள உதட்டின் நிறமாக காட்சியளிக்கும். இதில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் நீண்டநேரத்திற்கு அழியாமல் அப்படியே இருக்கும்.க்ளொஸி (Glossy)
க்ளொஸி லிப்ஸ்டிக்குகள் பொதுவாக பளீச் போன்ற பளபளப்பைத் தரும். இந்த வகை லிப்ஸ்டிக்கிலுள்ள லுமினஸ் ஃபெக்டர் உதடுகளை மினுமினுப்புடனும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும். இந்த க்ளொஸி லிப்ஸ்டிக்குகளை போட்டுக்கொள்வதால் மெல்லிய உதடுகள் சற்று பெரியதாகவும் எடுப்பாகவும் தெரியும். இவை திரவ வடிவிலும் ஸ்டிக் வடிவிலும் கிடைக்கின்றன. இதன் நெகிழ்வுதன்மை சற்று அதிகம் என்பதால் உணவு உண்ணும்போது அல்லது நீண்ட நேரம் சென்றால் அழிந்துவிடும். 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மீண்டும் பயன்படுத்தும் தேவை ஏற்படும். இருப்பினும் சில க்ளொஸி லிப்ஸ்டிக்குகள் 24 மணிநேரம் நிலைத்துநிற்கும் தன்மை கொண்டவை. இவை சற்று விலை அதிகம். வரண்ட உதடுகளைக் கொண்டவர்களுக்கு க்ளொஸி லிப்ஸ்டிக்குகள் பொருத்தமான தீர்வாகும்.

 

கொழும்பில் சைக்கிள் வாங்க வேண்டிய பொருத்தமான இடங்கள்

கொழும்பில் சைக்கிள் வாங்கக் கூடிய இடங்கள்

உடல் நலத்திற்கும் வங்கி கணக்கிற்கும் நன்மை சேர்க்க கூடிய முதலீடு தான் சைக்கிள். அதுவும் தற்போதைய சூழலில் நம்மை காக்க கூடிய ஓர் பொருளாகவும் சைக்கிள் உள்ளது. உங்கள் வாழ்வை இலகுவானதாகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்றக் கூடிய நல்ல சைக்கிள்களை கொள்வனவு செய்யக்கூடிய இடங்களின் பட்டியல் அடங்கிய இந்த பகுதி உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம். ஹெல்மட் அணிய மறக்க வேண்டாம்!

ஒபன் ரோவ் ஹீக்யூப் (Open Road Equipe)
விலாசம்: 3, ஃபைஃப் வீதி, கொழும்பு 05
தொடர்புகளுக்கு: 0117 268 877
சமூக வலைத்தளம்: ப்பேஸ் புக் – @openroadequipe
இன்ஸ்டாகிராம் – @openroadequipe
ஆரம்ப விலை அடல்ட் பைக்: LKR. 410,000 | கிட்ஸ் பைக்: LKR. 90,000

டோமாஹாக் சைக்கிள் (Tomahawk Bicycles)
விலாசம்: 245/B, காலி வீதி, கொழும்பு 04
தொடர்புகளுக்கு: 0112 507 307
இணையதளம்: www.tomahawkbike.com
சமூக வலைத்தளம்: ப்பேஸ் புக் – @tomahawkbicyclesofficial
இன்ஸ்டாகிராம் – @tomahawkbicyclesofficial
ஆரம்ப விலை அடல்ட் பைக்: LKR. 55,000 | கிட்ஸ் பைக்: LKR. 20,000

ராலேய்க் ஷோரூம் (Raleigh Showroom)
விலாசம்: ஆனந்த ராஜகருணா மாவத்தை, கொழும்பு 01
தொடர்புகளுக்கு: 0112 695 566
ஆரம்ப விலை அடல்ட் பைக்: LKR. 175,000 | கிட்ஸ் பைக்: LKR. 45,000

RF ட்ரேடிங் (RF Trading)
விலாசம்: 10/9, ஸ்டீவர்ட் வீதி, கொழும்பு 02
தொடர்புகளுக்கு: 0775 336 192
ஆரம்ப விலை அடல்ட் பைக்: LKR. 72,500 | கிட்ஸ் பைக்: LKR. 20,500

J.P.VAAZ
விலாசம்: 64, டாம் வீதி , கொழும்பு 12
தொடர்புகளுக்கு: 0752 113 002
இணையதளம்: jpvaaz-import-export-company.business.site
ஆரம்ப விலை; அடல்ட் பைக்: LKR. 50,000 | கிட்ஸ் பைக்: LKR. 15,000

சூரியாகே பைக் ஷொப் (Suriyage Bike Shop)
விலாசம்: 524, மருதானை வீதி, கொழும்பு 10
தொடர்புகளுக்கு: 0112 691 505
இணையதளம்: suriyage.com
சமூக வலைத்தளம்: ப்பேஸ் புக் – @bikeshopsrilanka
ஆரம்ப விலை; அடல்ட் பைக்: LKR. 48,000 | கிட்ஸ் பைக்: LKR. 18,200

DSI பைக்ஸ் (DSI Bikes)
விலாசம்: 225A, காலி வீதி, கொழும்பு 03
தொடர்புகளுக்கு: 0112 505 733/0332 256 984
இணையதளம்: dsibike.com
சமூக வலைத்தளம்: ப்பேஸ் புக் – @dsibike
இன்ஸ்டாகிராம் – @dsi.bike
ஆரம்ப விலை; அடல்ட் பைக்: LKR. 58,700 | கிட்ஸ் பைக்: LKR. 24,000

சிங்கர்.lk (SINGER.lk) (ஒன்லைன்)
விலாசம்: இல. 112, ஹெவ்லொக் வீதி, கொழும்பு 05
தொடர்புகளுக்கு: 0115 400 400
இணையதளம்: singersl.com/outdoor-products/bicycles
சமூக வலைத்தளம்: ப்பேஸ் புக் – @SingerSL
இன்ஸ்டாகிராம் – @singer_srilanka
ஆரம்ப விலை; அடல்ட் பைக்: LKR. 35,399

ப்ரோ பைக் (Pro Bike)
விலாசம்: 367, ஹொரகஹகந்த லேன், தலங்கம வடக்கு, கொஸ்வத்த, பத்தரமுல்ல
தொடர்புகளுக்கு: 0714 545 309
சமூக வலைத்தளம்: ப்பேஸ் புக் – @probike.lk
ஆரம்ப விலை; அடல்ட் பைக்: LKR. 215,000 | கிட்ஸ் பைக்: LKR. 65,000

பொரல்ல சைக்கிள் பசார் (Borella Cycle Bazaar)
விலாசம்: 58, டாக்டர் டேனிஸ்டர் டி சில்வா மாவத்தை, கொழும்பு 08
தொடர்புகளுக்கு: 0112 670 039
இணையதளம்: borellacyclebazaar.business.site
சமூக வலைத்தளம்: ப்பேஸ் புக் – @borella cycle bazaar
ஆரம்ப விலை; அடல்ட் பைக்: LKR. 50,000 | கிட்ஸ் பைக் : LKR. 18,000

இந்த பட்டியல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். நாங்கள் ஏதேனும் ஒன்றை தவறவிட்டிருந்தால் கமன்ட் மூலம் எங்களுக்கு தெரிவியுங்கள்..!

சங்கி மங்கி அடங்கோ.. அண்ணனுக்கு HAPPY BIRTHDAY ங்கோ 

ஒரு சிலர் பேசும்போது சிரிப்பு வரும். ஒரு சிலரோட செய்கைகளால சிரிப்பு
வரும். ஆனா இவரப் பார்த்தாலே சிரிப்பு வரும். அப்படியொரு காமடியன் தான்
வைகைப்புயல் வடிவேலு. பிரபலமான காமெடியனு இவர சொல்றத விட தமிழ்
சினிமாவோட முக்கிய கதாநாயகன் அப்படினு கூட சொல்லலாம். எல்லோராலும் எல்லாரையும்  ஈஸியா அழ வைக்க முடியும். ஆனா அவங்கள சிரிக்கவைக்கிறது
கொஞ்சம் கஷ்டம் தான்.  ஆன எல்லோரையுமே  அசால்ட்டா சிரிக்க வைக்க
நம்ம அண்ணனால மட்டும் தான முடியும். அழுகுறவங்க கூட அவரோட காமெடி
சீன்கள பார்த்தா அவங்கள அறியாமலேயே சிரிச்சிடுவாங்க.
காமடி கிங் மீம்ஸ் GOD அடையாளப்படுத்தப்படுற அடையாளப்படுத்தப்படுற நம்ம அண்ணனுக்கு மட்டும்தான பிரபலமான செல்லபெயர்கள் அதிகம்.
நேசமணி-(ஃப்ரன்ட்ஸ்), வெளவால்-(மிஸ்டர்) சுனா பானா (கண்ணாத்தாள்),
சுமோ (ஆறு),ஏகாம்பரம் (மருதமலை), டெலக்ஸ் பாண்டியன்
(என்னம்மா கண்ணு), கைபுள்ள (வின்னர்), இசக்கி (தேவர் மகன்)
சுடலை (வெற்றிகொடி கட்டு) ,அலார்ட் ஆறுமுகம்(வெடிகுண்டு
முருகேசன்) இந்த மாதிரி அண்ணன் நடிச்ச திரைப்படத்துக்குள்ளேயே அவருக்கு
செல்ல பெயர வச்சி அண்ணன அடையாளப்படுத்துறது மட்டுமல்ல நம்ம
நண்பர்களுக்கே இந்த பெயர்கள எல்லாம் வச்சி நாங்களும் கூப்பிட்டு இருப்பம்.

அண்ணனோட இந்த பெயருக்கெல்லாம் தனி காமெடி சீன்களே இருக்கு. ஒரு
நிமிஷம் நீங்களே நினைச்சு சொல்லி பாருங்க. கண்டிப்பா சிரிச்சிடுவீங்க. சரி
என்னடா திடிர்னு வைகைப் புயல பற்றி பேசுறோம்னு யோசிக்கிறீங்களா? அதுக்கு
ஒரு காரணம் இருக்கு. அத அவரோட ஸ்டைல்லயே சொல்லனும்னா சங்கி
மங்கி அடங்கோ.. அண்ணனுக்கு HAPPY BIRTHDAY ங்கோ!
ஒரு திரைப்படத்துல ஹுரோக்கு இருக்குற அதே வரவேற்பு அதே திடைப்படத்துல
ஒரு நகைச்சுவையாளருக்கு இருக்கு அப்படினு சொன்னா நிச்சயம அது நம்ம
அண்ணன் வடிவேலுக்கு தான் என் ன தோற்றம்?என்ன அசைவு? என்ன நடை?

என்ன உடை? என்ன பேச்சு? என்ன நடிப்பு? இவரோட ஒவ்வொரு அசைவுமே
நிச்சயம்  நம்மள எப்படியாச்சும் சிரிக்கவச்சிடும். எதாச்சு செண்டிமென்ட்சீன்ல
நம்ம அண்ணன் வந்துட்டாருனு வைங்க அந்த சீனே காமெடிசீனா மாறிடும்.
என்னதான்  மொக்க படமா இருந்தாலும அந்த படத்துல வடிவேலு இருக்காரு
அப்படினா அவரோட நகைச்சுவைய பார்க்குறதுக்குனே ஏகப்பட்ட ரசிகர்கள்
இருக்காங்க. படத்துல எங்கயாச்சும் அவரு திடிர்னு வந்துட்டாருனு வைங்க
நம்ம பசங்க எல்லாம் ‘வந்துட்டாயா வந்துட்டயா அப்படினு குதிக்க
ஆரம்பிச்சிடுவாங்க வடிவேலு அப்படிங்குற அந்த பெயருக்கு இருக்குற மௌஸ்
அப்படி.

1960 செப்டம்பர் 12 மதுரையில அண்ணன் வடிவேலு பிறந்தாரு. அவரோட
அப்பா கண்ணாடி வெட்டும் தொழில செய்றவரு. நம்ம அண்ணனுக்கு 7 சகோதரங்க.
கூட பொறந்தவங்க எல்லாருமே தக தகனு கலரா இருக்கப்போ இவரு மட்டும்
கருப்பா கலையா இருப்பாரு. இருந்தாலும் அவருக்கு அதெல்லாம கவலையே
கிடையாது. சின்ன வயதிலேயே அடிக்கடி அப்பா கூட போய் வேலை பார்ப்பாரு.
அங்க களைப்பா இருந்தா திடிர் திடிர்னு அங்க வேலை செய்றவங்களுக்கு
சில ஜோக்ஸ் எல்லாம்  எடுத்து விடுவாராம். வேலை செய்யும்போது இவரோட
காமெடி கதைகள கேட்டு தான்  நிறைய பேர களைப்பாறுவங்களாம்.
கொஞ்சம் வளர்ந்ததும்  நாடகம் நடிக்குறதுல ஆர்வம  வரவும் நாடகம்
கற்றுகொள்ள ஆரம்பிச்சாரு.
தன்னோட நண்பர்களோட சேர்ந்து பக்கத்து ஊருக்கு
நாடகம் பண்ண போனாரு. அப்போதான் எதிர்பாராம அவரோட அப்பாக்கு
ஹார்ட்அட்டேக் வரவும் அவர காப்பாத்த முடியாம போயிருச்சு. அப்பாவோட
சம்பாதியத்த மட்டும் நம்பியிருந்த மொத்த குடும்பமும் இப்போ என்ன செய்றதுனே
தெரியாம தள்ளாடிட்டு இருந்தாங்க. அப்போ தன்னோட பள்ளி படிப்பை பாதிலேயே
நிறுத்தி அப்பா போன அதே வேலைக்கு போய  பணம் சம்பாதிக்க ஆரம்பிடிச்சாரு
ஆனா தொடர்ந்து நாடகம் பண்ணுவாரு. ஒரு கல்யாணதுக்கு நம்ம அண்ணன்
போயிருந்தபோ அங்க நடிகர் ராஜ்கிரண்  சேரும் வந்திருக்காரு.

அவர பார்த்ததும்  எப்படியாவது போய் பேசனும்னு ஒரு வழியா ராஜ் கிரண் நம்ம அண்ணன் நெருங்கிட்டாரு. உனக்கு என்ன தெரியும்?  அப்படினு ராஜ்கிரண்
சேர் நம்ம அண்ணன பார்த்து கேக்க அதுக்கு நம்ம அண்ணன்
ஏதோ கொஞ்சம் நடிக்க தெரியும் ‘அப்படினு சொல்ல’சரி அப்போ
உடனே சென்னைக்கு வந்துடு’ அப்படினு ராஜ்கிரண் சேர்
சொல்லிட்டு அங்க இருந்து போய்ட்டாரு சென்னைக்கு போனா எதாச்சும்
சாதிச்சிடலாம அப்படினு யோசிச்சு கையில காசில்லாம வீட்டில இருந்த
இரண்டு பாத்திரங்கள 100 ரூபாய்க்கு அடகுவைச்சிட்டு 20 ரூபா பிடிப்பு
போக 80 ரூபாவோட சென்னைக்கு போக ரெடியாகிட்டாரு.
குறுக்கே வந்த ஒரு லொறிய நிறுத்தி சென்னைக்கு போக லிஃப்ட் கேட்டு
15 ரூபாய்க்கு விலை பேசி லொறிக்கு மேலே பயணம் செஞ்சிட்டு இருக்கபோ
கையிலிருந்த பணம் காத்தோட பறந்துபோக களைப்புல நம்ம அண்ணன் நல்லா
தூங்கிட்டாரு. திடிர்னு லொறிய நிறுத்தி அந்த லொறி டிரைவர் நம்ம அண்ணன
சாப்பிட கூப்பிட்டபோ கையில சுத்தமா காசே இல்லாம எனக்கு பாசிக்கலனு
அங்கேயே இருந்துட்டாரு. சரி பரவாயில்லை அப்படினு அந்த லொறி டிரைவர்
நம்ம அண்ணன கையோட கூட்டிபோய அவருக்கு சாப்பிட வாங்கி கொடுக்குறாரு.
நம்ம அண்ணன் கிட்ட பணம் இல்லனு தெரிஞ்சும் அவர பாதியிலேயே விட்டுவிடாம
லொறி டிரைவர  அவர் கையிலிருந்த 5 ரூபாவ கொடுத்து அண்ணன தாம்பரம்
பஸ் ஸ்டோப்புக்கு கொண்டு போய்  விடுறாரு.

நடிக்க தானே வந்தோம  அப்படினு சரியா போய்  AVM வாசல்லயே
நிற்க  அங்கயிருந்த வோட்ச்மேன்  நீங்க எல்லாம் இங்க நிக்க கூடாதுனு சொல்ல  ஐயா நான் நடிக்க வந்துருக்கேன்!. நல்லா நடிச்சு காட்டுவேன் அப்படினு
சொன்னபடி ஊருல கத்துகிட்ட மொத்த வித்தையயும்
அவரு முன்னாடி இறக்கிட்டாரு. நீ ரொம்ப நல்லாவே காமெடியா நடிக்கிற.
உனக்கு நல்ல எதிர்காலம  இருக்கு அப்படினு கதவை திறக்குறாரு. அங்க
போய  ராஜ் கிரண் சாரயும் பார்த்து பேசி அவருடைய அலுவலகத்துலேயே ஒரு
உதவியாளரா வேலை பார்க்குறாரு.
அதுக்கு அப்பறமா டி. ராஜேந்தரின் சாரோட ‘என் தங்கை கல்யாணி’
படத்துல ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலமா தமிழ் சினிமாக்குள
நம்ம அண்ணன் நுழைஞ்சிறாரு . இதற்கு அடுத்ததா ராஜ்கிரண்
சாரோட ‘என் ராசாவின் மனசிலே’ படத்துல நடிச்சு ‘போடா போடா’ புன்னாக்கு
என்ற பாட்டு மூலமா ரொம்பவே பிரபலமாகிட்டாரு. இப்படித்தான் அவரோடய
முதல் சினிமா பயணம் ஆரம்பமாகிச்சு.

அதை தொடர்ந்து காதலன் திரைப்படத்துல முக்கிய காமெடியனாக தன்னை
அடையாளப்படுத்தி முதல்வன்,வின்னர், ப்ரெண்ட்ஸ் உட்பட 300 இற்கு மேற்பட்ட
திரைப்படங்கள நடிச்சு இன்றைக்கு தமிழ் சினிமாவோட அசைக்கமுடியாத
கதாநாயகனா திகழ்றாரு!ஏகப்பட்ட விருதுகளையும் வென்று எடுத்து
‘தி காமெடி கிங்’ ஆக மகுடம் சூடியிருக்கிறாரு. ‘வைகை பாயும் மதுரையிலிருந்து
வந்ததொரு புயல்’ அப்படினுபெருமைப்படுத்தி அவர ‘வைகைபுயல் வடிவேலு’ என்ற பட்டத்தோடு அழைக்குது தமிழ் சினிமா.
என்னதான் ரொம்ப கஷ்டப்பட்டு வாய்ப்பு தேடி அலைஞ்சு வந்தாலும் ; இன்னைக்கு
வடிவேலு அப்படினா தெரியாத யாருமே இருக்கமாட்டாங்க அவர போல அவர
பார்த்து நிறைய பேர் காமெடி பண்ண கத்துகுறாங்களே தவிர அவருடைய
இடத்த நிரப்ப இப்ப வரைக்கும் யாராலையுமே முடியல. சில பேர் தங்களோட
வாழ்கைல உபயோகப்படுத்துற வசனங்களையே மறந்துருவாங்க. ஆனா
நம்ம அண்ணன் ஒவ்வொரு படத்திலயும் பேசுற ஏதாச்சு ஒரு வசனம் சரி ஹிட்
ஆகாம போகாதுனு கூட சொல்லலாம். அழகாக சொல்ல போன நாம
நம்மளோட வாழ்க்கைல எதாவது சந்தர்ப்பத்துல இவரோட வசனம்  ஏதாச்சும்
ஒன்னாவது சொல்லாம இருந்திருக்கமாட்டோம்.

‘எத பண்ணாலும  ப்ளேன்  பண்ணி பண்ணனும் ப்ளேன் பண்ணாம பண்ணா இப்படித்தான்  என்ன வச்சி காமடி கீமடி பண்ணலயே ,நெக்ஸ்ட்டு ரெஸ்ட்டு
வேணா வலிக்குது அழுந்துருவேன், இது வாலிப வயசு  ஆணியே புடுங்க வேணாம்
ரிஸ்க் எடுக்குறது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடறமாதிரி
இப்படி இன்னும் சொல்லிகிட்டே போகலாம்.
இவர மீம் GOD சொல்றதுக்கு காரணமே இவரோட காமடிய
வச்சி தான்  நிறைய மீம் க்ரியேட்டர்ஸ் வாழ்ந்துகொண்டு இருக்காங்க இதெல்லாம்
உங்களோட வசனங்கள். இதுக்கெல்லாம்உங்களில் உழைப்பு இருக்கு னு
போய்  நம்ம அண்ணன் கிட்ட கேட்டபோ ‘அடப்போங்கய்யா’! என்னால முடிஞ்சத
ஏதோ நா பண்ணிகிட்டு இருக்கேன். என்ன வச்சி அவங்க பண்றாங்களா சிம்பிள்.
அவ்ளோதான. அத பொருட்படுத்தாம ஜோலியா பதில் சொல்லியிருக்காரு
நம்ம அண்ணன்.

நாம எங்கிருந்து வந்தோங்கிறத விட  எப்படி வரோங்கிறத விட எப்படி வாழ்ரோங்கிறத தான் முக்கியம். படம் பாக்குறவங்கள
மட்டும் மல்லாம படம் எடுக்குறவங்கள  கூட நம்ம அண்ணன் அவரோட
காமெடில சிரிக்கவச்சிடுவாரு. எப்பயுமே அவர பார்த்தாலே சிரிக்க வைக்குற
LEGEND வருத்தமில்லா வாலிபர் சங்க தலைவர் எங்கள் அண்ணண் வருத்தங்கள்
இல்லாம பல்லாண்டு வாழ சங்கம் சார்பாக வாழ்த்து தெரிவிக்கிறோம்.!

துர்நாற்றம் வீசுவது கழிவுகளிலா ? சமூகத்திலா ?

நாகரீகமானவோர் சமூகத்திலேயே  வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்ற எண்ணத்தினை நாம் கொண்டிருந்தாலும்  அதனை அசைத்துப்பார்க்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மத்தியில் இன்னுமே உண்டு! அவ்வாறான விடையமொன்றுதான் கடந்தவாரம் இணையத்தில் பரவியிருந்த ஓர் துப்புரவுத் தொழிலாளியின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காணொளி! தாம் செய்யும் தொழிலை மேற்கோள்காட்டி எங்கெல்லாம் தம்மை தாழ்த்துகிறார்கள்  எப்படியெல்லாம் மனிதத் தன்மையே இல்லாமல் நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அக்காணொளியில் சுட்டிக்காட்டியிருந்தமையே இக்கட்டுரை எழுதப்படுவதன் பிரதான நோக்கம்.
குப்பை வண்டி!

ஆம்  தெருவில் ஓரம்கட்டி குப்பைகளை அள்ளும்வரையில்  காத்திருக்கும் வண்டிகளை ஓட்டிவரும் அத்தனைபேரும்  அந்த குப்பைவண்டியினை நடந்தும் கடந்தும் செல்லும் அத்தனைபேரும் தம் மூக்கைப்பிடித்து அருவருத்தபடியேதான் செல்வதுண்டு ! ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள்  தாம் செய்யும் ஒரு தொழிலை சுற்றியுள்ள அனைவரும் மூக்கைப்பிடித்து அருவறுத்து பார்க்கும்போது அந்த தொழிலாளர்களின் மனநிலை எவ்வளவு நொந்துபோகக்கூடும்? தன்னைத்தானே தாழ்வாக அவமானமாக எண்ணக்கூடும் அல்லவா?

ஆம்!அது குப்பைதான்  நாற்றம்தான் அசிங்கம்தான்! ஆனால் அது அவனின் அசிங்கள் அல்ல. நமது அசிங்கம்  நமது நாற்றம்  நமது குப்பை! குப்பைகளையும் கண்ட கழிவுகளையும் உரிய முறையிலன்றி கண்ட கண்ட இடத்தில கொட்டிச் செல்லும் நமது அறிவீனம். நமது நாற்றத்தைப்போக்க அவன் நாரவேண்டும். நம்மை சுத்தமாக்கிக்கொள்ள அவன் அழுக்காகவேண்டும். நாம் அழகாக ஆரோக்யமாக இருக்க அவன் அசிங்கமாக ஆரோக்கியம் கெட்டவனாக மாறவேண்டும். ஆனால் நாம் அவனை நம் மூக்கைப்பிடித்துக்கொண்டு அருவருப்பாக பார்ப்போம்!
அதுதானே உண்மை ? இதன்பின்னிருக்கும் ஆழமான சாதியக்கூறுகளும் வறுமையும் பல  வலிகள்  நிறைந்தவை என்பதை எப்போதாவது நாம் சிந்தித்திருப்போமா? அசுத்தப்படுத்தும் நாங்கள் சுத்தமானவர்கள்  சுத்தப்படுத்தும் அவர்கள் அசுத்தமானவர்கள் என்கிற பொதுப்புத்தியில் சாதி, நிறம், தொழில், வர்க்கம் என அத்தனையும் அடங்கியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? அப்படி அவர்களை நாம் கேவலமாக பார்ப்போமாயின்  இன்றிலிருந்து நாமே நம் குப்பைகளை அகற்றி  கழிவுகளையெல்லாம் கழிவிவிட தயாராக இருப்போமா? ஒரே ஒருநாள் அவன் அவனது வேலைக்கு லீவு போட்டால் அன்று அவன் மிக சுத்தமானவனாகத்தான் இருப்பான். ஆனால் நாம்தான் நாறிப்போவோம்!

மனித வாழ்வின் அசுத்தம்தான் உலகத்திலேயே மிகப்பெரிய நதியாக இருக்கவேண்டும் அது அனைத்து நகரங்களிலும் சலனமில்லாது ஓடிக்கொண்டிருக்கிறது. அதனைக்கடந்து செல்கையில் நமக்கு ஏற்படும்  அருவருப்பு அதில் இறங்கி நிற்கும் மனிதர்கள்மீதும் படிந்துவிடுகின்றதென்பதே நிதர்சனம். ஆனால் அந்த அசுத்த நதியில் கலந்திருப்பது நமது மிச்சங்கள்தான் என்பதை அடியோடு மறந்து முகம் சுளித்துக் கடந்துவிடுகின்றோம். தாவரங்கள் கழிவுகளை வெளியிடுவதில்லை. சுத்தத்தின் அடையாளமாய் உயர்ந்த பிறவியாக கடைசிவரை இருந்துவிட்டு போய்விடுகின்றன.

பறவைகளும் விலங்குகளும் தம் கழிவுகளை இயற்கையோடு மறுசுழற்சி செய்துவிடுகின்றன. அறிவிலும் பிறப்பிலும் சிறந்தவன் என சொல்லிக்கொள்ளும் மனிதன் மட்டும் இவ்விடயத்தில்  செயலற்று நிற்கின்றான். மனித கழிவுகள்  மருத்துவமனைக் கழிவுகள்,  தொழிற்சாலைக் கழிவுகள்  என பலவகை அசுத்த மிச்சங்கள் ஒன்றாகக்கலந்து கருமைநிற நதியாக நகரங்களின் வழியே ஓடி இறுதியில் கடலில் சங்கமித்துவிடுகின்றன.

இதனால் இயற்கைக்கு   ஏற்படும்  பாதக விளைவுகளும் துர்வாடையும் மனிதப்பிறவியை ஓர் பாவப்பட்ட பிறவியாக சாட்சிபடுத்திவிடுகின்றன. சாக்கடை நீர் காலில் பட்டுவிடக்கூடாதே என்பதற்காக பார்த்துப்பார்த்து ஒதுங்கி நடக்கும் நாமும் மனிதர்கள்தான்  பல்லாயிரக்கணக்கான மக்களின் கழிவுகளை சுமந்துகொண்டு தேங்கி நிற்கும் சாக்கடையை எவ்வித சலனமும் இன்றி உள்ளே இறங்கி தொழில் தர்மத்தினை காக்க துன்பங்களை அனுபவிக்கும் அவர்களும் மனிதர்கள்தான்! ஆனால்  அவர்களுக்கு “மனிதன் ” என்ற அடையாளத்தைக்கூட கொடுக்கமறுக்கிறது இந்த சமூகம். மொத்தத்தில் இந்த சமூகம் தன தூய்மையை காப்பாற்றிக்கொள்ள சாதியை  வறுமையை பயன்படுத்தி ஒரு பெரும் மக்கள்கூட்டத்தினையே அடிமைப்படுத்தி இவ்வுலகின்  விளிம்பிற்க்கே  தள்ளிவிட்டிருக்கிறது என்றால் அதுதான் உண்மை.
பணியின் விளைவு பிணி !

மலம் மற்றும் கழிவகற்றும் பணியாளர்கள் தங்களது வாழ்விடங்கள் சார்ந்தும்  பணி சார்ந்தும் டெங்கு, வயிற்றுப்போக்கு, சுவாசக்கோளாறு, சத்துக்குறைபாடு என ரக ரகமான  நோய்களுக்கும்  பஞ்சமேயின்றி ஆளாகின்றனர்.  குழந்தைப் பருவத்திலேயே பல சிசுக்களின் இறப்பிற்கு இவர்களின் வாழ்விடங்கள் காரணம் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றபோதிலும் சொல்லிவைத்தாற்போல்  எல்லா தேசங்களிலும் எல்லா அரசுகளும் பெரும்பாலும் குப்பை மேடுகளில்தான் சேரிகளை அமைக்க அனுமதியளிக்கின்றதோ? நகரத்தின் கழிவுகளை நாளெல்லாம் சுமப்பவர்களுக்கு அதன்மீதே குடியிருக்க நேருவதை கண்டுகொள்ளாத அரசுகளை என்னவென்பது?

செத்துப்போன எலிகள்  பூனைகள் போன்ற பிராணிகளின் தசைகள் மக்கிச் சிதைந்து அரைகுறையாய் மிதந்துகொண்டிருக்கும் பாதாளச் சாக்கடையில் நகர மக்களின் மலமும் சிறுநீரும் மற்றும்பல அசுத்தங்களை கரைந்துகூடியிருக்கும் அசுத்த நீரில் தலை நனைய காது மூக்கு துவாரங்களில் நீர் நுழைய அவரகளது உடல்   மற்றும் உளவியலில் ஏற்படும் தாக்கங்கள் எழுத்தில் வடிக்கக்கூடியவைதானா? இணையத்தில் வாசித்தவோர் தகவலின்படி ஒரு கிராம் மனிதக்கழிவில் ஏறக்குறைய 10 கோடி வைரஸ்கள்  10 லட்சம் வகையிலான பற்றீரியாக்கள் ஆயிரம்  ஒட்டுண்ணி  முட்டைகள் இருக்கின்றனவாம்.
சளி, இருமல், மூளைக்காய்ச்சல்  வயிற்றுக்கோளாறுகள், சிறுநீரக செயலிழப்பு, ரத்தசோகை போன்றவற்றை ஏற்படுத்தும் “E coli”  வயிற்றுபோக்குகாரணமான “Bacillus” போன்ற ஏராளமான பற்றீரியாக்கள்  shigellosis, salmonella  போன்ற தோள் நோய்களை உருவாக்கும் பூஞ்சைகளும் உள்ள கழிவுநீரில் இறங்கவேண்டியிருக்கும் மனிதர்களின் உடல்நிலை என்னவாகக்கூடும்?

நம்மைச் சுற்றியுள்ள மாந்தர்களின் பலர் இத்தகைய இழிவுகளுடன் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கும் சம காலத்தில் சுய மரியாதையுடன் கூடிய நிறைவான வாழ்வு நம் சமூகத்துக்கு சாத்தியம்தானா? நாம் ஆரோக்யமான ஓர் சூழ்நிலையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோமா? இதற்கும் நமக்கும் தொடர்பில்லை எனக்கூறி இனியும் நாம் ஒதுங்கி வாழ்தலென்பது தகுமா?
இனி குப்பை வண்டிகளை கடந்து செல்லும் சில நொடிகளில்  குப்பைகளை  அள்ளி வண்டிகளில் நிரப்பிக்கொண்டிருப்பவர்களையோ அல்லது சாக்கடைகளை சுத்தம் செய்துகொண்டிருப்பவர்களையோ நாம் கட்டியணைத்துக் கொண்டாட வேண்டாம்  கை கொடுத்துப்பாராட்ட வேண்டாம். ஆனால்  மூக்கைப் பொத்தாமல் முகத்தை சுழித்து அஷ்டகோணலாக்காமல் செல்லுவோமே அதுபோதும்! நாற்றம் அடித்தால் அந்த சில நொடிகள் மூச்சு விடாமல் அடக்கிக்கொண்டாவது கடந்து செல்வோமாக  நிச்சயம் செத்துவிடமாட்டோம் பல மனித மனங்களைவிட அவன் உடலோ அல்லது அந்த குப்பைகளோ  ஒன்றும் அவ்வளவாய் நாற்றமடித்துவிடாது.

இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு நம்முடைய மனமாற்றம் மட்டுமல்ல நிச்சயம் இவர்களுக்கான மாற்றுத் தொழில்கள் அறிமுகப்படுத்தப்படவேண்டும். சாதியக் கண்ணோட்டம் முற்றுமுழுதாக இல்லாதொழிக்கப்படவேண்டும்  கழிவகற்றல்களுக்கு முற்றுமுழுதாக இயந்திரங்களை மாத்திரமே பயன்படுத்தும் நிலை வரவேண்டும். பொதுவாகவே உழைப்பு என்பது போற்றப்படும் பொது விதிக்கு மாறாக உழைப்பு இழிவு படுத்தப்படுவது இங்கு மட்டுமே. குறிப்பிட்ட மக்கள் குழு மட்டுமே கட்டாயமாக ஈடுபடுத்தப்படும் இத்தொழிலை ஒழிப்பதென்பது வெறுமனே இழிவு ஒழித்தல் மட்டுமன்று மாறாக சாதி ஒழிப்பும் இணைந்ததே!  இது சாத்தியமாவது எப்போது ???

index.php