Blog Page 19

கால் பாதங்களை பராமரிக்க புதிய டிப்ஸ்

உடலின் அஸ்திவாரமாக இருப்பதற்காக, நம் பாதங்கள் பெரும்பாலும் எல்லாவற்றிலும் மிகவும் புறக்கணிக்கப்பட்ட உடல் பகுதியாகும். நாம் வழக்கமாக நமது உடலின் மற்ற பகுதிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், பராமரிப்பதற்கும் கவனம் செலுத்துகிறோம், எனவே நம் கால்களை ஏன் செய்யக்கூடாது?

சரியான கவனிப்பு இல்லாமல் உங்கள் பாதங்கள் நீண்ட நேரம் செல்லும் போது, (fungus)பூஞ்சை தொற்று, (bacteria)பாக்டீரியா பிரச்சனைகள், வீக்கம், வலி, வெடிப்பு தோல், துர்நாற்றம் மற்றும் பல போன்ற சில குறிப்பிடத்தக்க விளைவுகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்டவசமாக, தினசரி கால் பராமரிப்பு வழக்கத்தை உருவாக்கிக்கொள்வதன் மூலம் நீங்கள் சிக்கலை எளிதாக சரிசெய்யலாம். கீழே பட்டியலிடப்பட்டுள்ள பயனுள்ள வழிகாட்டி உங்களுக்கு இரண்டாவது இயல்பாய் மாறும் என்று நம்புகிறோம், எனவே இது இறுதியில் டியோடரண்ட் போடுவது அல்லது உங்கள் தலைமுடியைக் கழுவுவது போன்ற ஒரு பழக்கமாக மாறும்.

கால்களுக்கு என்ன வகையான அடிப்படை பராமரிப்பு தேவை?

பல் துலக்காமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டீர்கள் என்பது போல, உங்கள் கால்களைக் கவனிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது. வெட்டுக்கள், புண்கள், வீக்கம் மற்றும் பாதிக்கப்பட்ட கால் நகங்கள் உள்ளதா என தினமும் அவற்றைச் சரிபார்க்கவும். வெதுவெதுப்பான நீரில் அவற்றை நன்கு சுத்தம் செய்யுங்கள், ஆனால் அவற்றை ஊறவைப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை உலரக்கூடும்.

லோஷன், கிரீம் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி மூலம் அவற்றை தினமும் ஈரப்படுத்தவும். உங்கள் கால்விரல்களுக்கு இடையில் மாய்ஸ்சரைசரை தேங்கி நிக்கும் படி விட வேண்டாம். தொற்றுநோயைத் தடுக்க தோலை உலர வைக்க வேண்டும்.

வாழைப்பழத்தின் மந்திரம்.

வாழைப்பழம் ஒரு வெப்பமண்டல பழமாகும், இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது எந்த தொந்தரவும் இல்லாமல் சூப்பர் கிராக் கால்களை குணப்படுத்த உதவுகிறது.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது

  1. ஒரு பழுத்த வாழைப்பழத்தை மிக்ஸியில் அடிக்கவும்
  2. பேஸ்ட்டை உங்கள் கால்களில் சமமாக தடவவும்.
  3. 10 நிமிடம் உலர வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

வாரத்திற்கு ஒரு முறை இந்த தீர்வை முயற்சிக்கவும், விரும்பிய முடிவை அடையவும்.

துப்புரவு ஊசியைப் பயன்படுத்தி அழுக்கை சுத்தம் செய்யவும்.

கால்களுக்கு அழுக்கை சுத்தம் செய்யும் ஊசியை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது பிளாக்ஹெட் ரிமூவரின் (blackheads remover) எதிர் முனையைப் பயன்படுத்தி கால் நகங்களின் பக்கங்களிலும், குறிப்பாக கட்டைவிரல்களிலும் உள்ள அனைத்து அழுக்குகளையும் சுத்தம் செய்யலாம். உங்கள் நகங்களுக்குள் குத்தாமல் இருக்க மிகவும் கவனமாக இருங்கள்.

துருப்பிடிக்காத எஃகு(steel) ஆணி இடையகத்தின் கூர்மையான முனையையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

துருப்பிடித்த அழுக்கு துப்புரவு ஊசிகளைத் தவிர்க்கவும், எப்போதும் சுத்தமான மற்றும் துருப்பிடிக்காத எஃகு ஒன்றைப் பயன்படுத்தவும். இது எந்த பூஞ்சை( fungus) தொற்றுகளிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும்.

பாக்டீரியா எதிர்ப்பு தீர்வைப் (anti-fungal liquid) பயன்படுத்தி பாதங்களை சுத்தம் செய்யவும்.

நீங்கள் நீண்ட நேரம் காலணிகள் அல்லது செருப்புகளை அணிந்து கொண்டிருப்பவராக இருந்தால், நான்கு சொட்டு கிருமி நாசினி திரவத்தை தண்ணீரில் விடுவதன் மூலம் தயாரிக்கப்பட்ட பாக்டீரியா எதிர்ப்பு திரவத்தை அவ்வப்போது உங்கள் பாதங்களில் ஊற வைக்க வேண்டும். இதைப் பின்பற்றி உங்கள் பாதங்களை பாக்டீரியா எதிர்ப்பு சோப்புடன் சுத்தப்படுத்தவும்.

Pumice stone(பியூமிஸ் கல்)
(அழகுசாதனப் பொருட்கள் கடைகளில் கிடைக்கும்)

பியூமிஸ் ஸ்டோன் என்பது இயற்கையான எரிமலைக் கல் ஆகும், இது உங்கள் கால்களில் இருந்து இறந்த சருமம் மற்றும் கால்சஸ்களை அகற்ற உதவும்.

முறை,
பியூமிஸ் கல்லை வெதுவெதுப்பான நீரில் நனைக்கவும். உங்கள் கால்களை 10 நிமிடங்களுக்கு வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அவற்றை மென்மையாக்கலாம்.

இறந்த சருமத்தை (dead cells) அகற்ற உங்கள் பாதத்தைச் சுற்றி கல்லை வட்டமாக அல்லது பக்கவாட்டில் நகர்த்தவும். சருமத்தின் மேல் அடுக்கை அகற்றுவதில் கவனம் செலுத்துங்கள், இறந்த சருமத்தின் முழுப் பகுதியையும் அகற்றாது, இது ஆரோக்கியமான செல் வருவாயை ஊக்குவிக்க உதவும்.

உங்கள் பாதங்களை மென்மையாக்க உதவும் லோஷன் அல்லது எண்ணெயைத் தடவவும். காயம் அல்லது புண் பகுதிகளில் ஒருபோதும் பியூமிஸ் கல்லைப் பயன்படுத்த வேண்டாம்.

 

பாலியல் தொழிலாளர்களின் பரிதாப வாழ்க்கை

எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நான் இப்படி ஆகவேண்டும் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. டாக்டர் ஆகணும் வக்கீல்   ஆகணும்னு கனவு கண்டவர்கள் கூட படிக்க பணம் இல்லாமல் இந்த தொழிலுக்குள் பலவந்தமாக வந்திருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. பணம் தான் வாழ்க்கை என்ற சமூக கட்டமைப்பு அதனை பல தீய வழிகளிலும் சம்பாதிக்க ஊக்குவிக்க ஆரம்பித்து விட்டது. தனது சுயநலத்திற்காக பெண்களின் பொருளாதாரத்தை காரணங்காட்டி இத்தொழிலில் தள்ளிவிட்ட அவர்களை பயன்படுத்திக் கொண்ட  ஆண் வர்க்கம் எல்லாருமே சமூகத்தில் நல்லதொரு பெயரோடு உலாவும் போது பாவம் இவர்கள் மாத்திரம் சமூகத்தில் தீண்டத்தகாதவர்களாக பல கெட்ட  பெயர்களோடு வாழ்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் பாலியல் தொழிலாளர்களும் ஓர் மனிதர்களே அவர்களுக்குள்ளும் ஓர் மனது இருக்கிறது.  அதற்குள் உடலின் காயத்தின் வலிகளும் உள்ளத்தின் சொல்லமுடியா வலிகளும் இருக்கும் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களிடம் போய் வரும் ஆண்களை நாம் சமூகத்தில் ஒதுக்கி வைப்பதில்லை. இவர்களை மட்டுமே ஒதுக்கி வைத்து விடுகிறோம். தீண்டத்தகாதவர்கள் என நாம் ஒதுக்கி வைக்கும் பாலியல் தொழிலாளர்களின் பரிதாப நிலையை பற்றிதான் நாம் இந்த கட்டுரையில் பார்க்கவுள்ளோம்.

பாலியல் தொழிலாளர்களில் பலர் திருந்தி வாழ நினைத்தாலும் சமூகம் அவர்களை வாழவிடுவதில்லை. பாலியல் தொழிலாளர்கள் உருவாகுவதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். பாலியல் தொழிலாளிகள் ஒவ்வொருவருக்கும் ஓர் மோசமான பிண்னணி இருக்கும். ஓர் சில கதைகளை கள ஆய்வுக்காக சேகரித்திருந்தோம். அவற்றினை பார்வையிட்டு அவர்களது வாழ்க்கையை பாதுகாக்க சட்ட ரீதியான உதவியை நாடுவதற்கான செயற்பாடுகளை நாம் தெரிந்து கொண்டு அவர்களை பாதுகாக்க அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவேண்டும் என்பதே எனது வேண்டுகோள் !

கதை 1

கிட்டத்தட்ட இந்த சம்பவம் இடம்பெற்று 6 தொடக்கம் 7 வருடங்கள் இருக்கும். இந்த   கதையினை எம்மிடம் பகிர்ந்தவரின் நண்பர் ஒருவரே இந்த கதையினை எம்மோடுபகிர்ந்தவருக்கு சொல்லியிருந்தார்.

அந்த  ஒருவர் தனது நண்பர்களோடு கொழும்பிற்கு சுற்றுலாவிற்கு சென்றிருந்தார். அந்தநேரத்தில் அங்கே வந்திருந்தவர்களில் ஒருவன் மிகவும் அவலட்சணமாக காணப்பட்டான். பார்ப்பதற்கு மிகவும் அருவருக்கத்தக்க முகத்தினை கொண்டமையால் முப்பது வயது ஆகியும்  அவனை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. யாரும் தன்னை விரும்பவில்லை என்றதால் அவனாகவே பெண்ணை விலை கொடுத்து வாங்கி தனது ஆசையை தீர்த்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறான். அதனால் அன்று அனைவரும் குடிப்பதற்கு ஒன்று கூடும் முன்னரே தனக்கு இன்றிரவு ஒரு பெண் அதுவும் பதினாறு வயது பெண்ணாக தொழிலில் அனுபவம் இல்லாத புதிய பெண்ணாக  வேண்டும் என்ற விசித்திரமான கோரிக்கையை முன்வைத்தான். இதனால் நண்பர்களும் அவன் ஆசையினை நிவர்த்தி செய்ய வேண்டும் என நினைத்து அவன் கேட்டமாதிரி இத்தொழில் செய்ய விடுதி வைத்திருக்கும் ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு தங்களது தேவையை பற்றி சொல்லவும் அவளும் சரி கொண்டு வந்து விடுகிறேன் என ஓர் இரவுக்கான பணத்தொகையை பேசி முடித்தவுடன் ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க ஓர் அழகான சிறுமியை கொண்டு வந்து நிறுத்துகிறாள்.

அவளது முகத்தில் தெரிந்த அச்சமும் பதற்றமும் அவளாக இந்த தொழிலுக்கு வரவில்லை என்பதனை உணர்த்தியிருந்த வேளையில் அந்த கூட்டிக் கொண்டு வந்த அந்த நடுத்தர வயது பெண்மணி அவளை கொண்டு வந்து விடவும் தன்னோடு இன்று இரவு தங்க போறவன் யார் என பார்த்ததும் அவள் மறுத்து பின்வாங்குகின்றாள்.  அவன் அவலட்சண முகத்தினை பார்த்ததும் அவனோடு போக மறுக்கிறாள். அந்த பெண்மணி கட்டாயப்படுத்தவும் இதில் இருக்கும் யாருடனும் போகிறேன். ஆனால் அவனோடு போகமாட்டேன் என அழுகிறாள். அந்த நேரம் அந்த நடுத்தர வயது பெண் அவள் வேலைக்கு புதிது அதுதான் அழுகிறாள் அவளை சமாதானப்படுத்தி கூட்டி வருகிறேன் எனக் கூறி கூட்டிக் கொண்டு போனவள் சில மணிநேரத்தில் அவளோடு திரும்ப வந்து   அவளை அவனோடு விட்டு செல்லவும் மற்றவர்கள் அனைவருக்கும் குழப்பம் அழுது அடம்பிடித்தவள் எப்படி உடனே சம்மதித்தாள் என்பதே பிறகு அதை அறிந்து கொள்ள அடுத்த நாளும் அந்த ஒருவர் அவளை கூப்பிட்டு உண்மையை தெரிந்து கொள்ள விரும்புகிறார்.

மீண்டும் கூப்பிட்டு அவளிடம் விசாரிக்கும் போது அவள் ஆடைத்தொழிச்சாலையொன்றில் வேலை செய்ததாகவும் அங்கே ஏதோ ஒன்றினை உடைத்து விட்டதால் அங்கிருந்து வேலையை விட்டு நின்று வேலை தேடும் போது அந்த பெண்ணை கூட்டி வந்தவர் அவளுக்கு நிறைய சம்பளம் தருகிறேன் வா என ஆசை வார்த்தை காட்டி ஒரு நாள் ஒரு அறையில் ஒரு பையனோடு விட்டு அதனை வீடியோவில் பதிவு செய்து நீ இந்த வேலையை செய்தால் பணம் தருவோம் செய்யாவிட்டால் இதனை இணையத்தளத்தில் பதிவு செய்வோம். உன் குடும்பத்தின் நிலையை புரிந்து கொண்டு செயற்படு என மிரட்டவும் அவள் பயந்து போய் இத்தொழிலில் சேர்ந்து கொண்டாள். அவள் இத்தொழிலை செய்ய மறுக்கும் போது அந்த வீடியோவை காரணங்காட்டி மிரட்டி அவளை செய்ய வைப்பதாக கூறினாள். அன்று அவளுக்கான பணத்தினை கொடுத்து அனுப்பி விட்டார்கள். அவளை காப்பாற்ற முடியாமல் திரும்பி வந்து விட்டார்கள்.

கதை 2

அதிகமாக மொடலிங் துறைக்கு செல்லும் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகளவில் காணப்படுவதனால் அத்துறையில் ஈடுபடும் பெண்கள் அனைவரையும் சமூகம் வித்தியாசமாக நடத்த முற்படுகிறது. அவர்களுக்கு வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் அவர்கள் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் பலர் செயற்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் மொடலிங்  துறைக்கு சென்று பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண் ஒருவரின் கதை தான் இது அவர் ஆரம்பத்தில் இத்துறைக்கு வரும் போது அவருக்கு 3 பிள்ளைகள் இருந்தார்கள். கணவன் விட்டு சென்றதனால் அவர் பிள்ளைகளை வளர்க்க இத்துறைக்குள் சென்றார். அங்கே உள்ளவர்கள் அவரை பேரம் பேச ஆரம்பித்து விட்டார்களாம். அவர்களுக்கு இணங்கி போனால் தான் வாய்ப்புக்களும் கிடைக்கும் என்பதனால் பொருளாதாரப்பிரச்சினையை சரிப்படுத்த வேறு வழியில்லாமல் பாலியல் தொழிலையும் சேர்த்தே செய்ய ஆரம்பித்தார். அவரின் மனதில் குற்ற உணர்ச்சியே மேலோங்கி காணப்பட்டது. இந்த மொடலிங் துறைக்கு வாற பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அவர்கள் சுயத்தோடும் மற்றவர் போல சுயமரியாதையுடனும் வாழ்வது கடினம் என அவர் கூறியிருந்தார்.

பாலியல் தொழிலானது சட்டபூர்வமாக தொழிலாக்கப்படவில்லை என்றாலும் இலங்கையில் மொடலிங் துறைகள் மசாஷ் சென்ரர்கள் போன்றவற்றில் அதுவும் ஒரு பக்கம் நடாத்துவதற்கு எம் பெண்கள் தூண்டப்படுகிறார்கள். கொரோனா காலத்தில் எல்லோருக்கும் நிவாரணம் கொடுத்தும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை கொண்டு நடாத்த போராடினார்கள்.  அந்த வேளையில் பாலியல் தொழிலாளர்கள் தமது தொழிலை இழந்து உணவுக்காக கஷ்டப்பட்டார்கள். சமூகத்தில் இவர்களும் மனிதர்கள் தான் என உணர்ந்து யாரும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

பணத்திற்காக உடலை விற்பது என்பது அத்தனை கொடிய ரணமான ஒன்று ஏதோ ஓர் காரணத்திற்காக இந்த தொழிலில் தள்ளப்பட்டவர்களுக்காக அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் இருப்பது வேதனைக்குரியதே வேலை செய்யும் இடங்களிலும் கல்வி கற்கும் இடங்களிலும் கூட அநேகமாக இந்த பாலியல் சுரண்டல்கள் நடைபெற்று வருகிறது. நல்லதொரு தொழிலில் இருந்தும் அதனை தக்க வைக்க பாலியல் இலஞ்சம் பெறும் முதலாளிவர்க்கத்தினர்களுக்கு எதிராக பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயல்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் அவர்களுக்கான பாதுகாப்பினை பெற்றுக் கொடுக்க அரசாங்கத்தால் முடியும்.

அதுமாத்திரமன்றி சட்டப்படி சித்திரவதையில் இருந்து விடுதலை பெற அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் பாலியல் தொழிலாளர்களால் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் இருந்து இலகுவில் வெளிவரவோ சட்டத்தின் பாதுகாப்பினை பெறவோ முடிவதில்லை ஏனென்றால் பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்படவில்லை என்பதனால் அவர்களால் தங்களுக்கு இளைக்கப்படும் கொடுமைகளை வெளியில் சொல்லவோ தமக்கான பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளவோ முடிவதில்லை.அதுவே அவர்களை வைத்து தொழில் செய்யும் புரோக்கர்மார்களுக்கு வாய்ப்பாக மாறிவிடுகிறது.

இவ்வாறு தினம் தினம் அவர்களுக்கு ஓர் சோகக்கதை இருக்கும் என பாலியல் தொழிலாளி ஒருவர் கூறியுள்ளார். மேலும் அவர்கள் கூறிய துன்பியல் அனுபவங்களாக  அங்கே வருபவர்கள் மனிதர்களாகவே இருக்க மாட்டார்கள் பலர் குடித்துவிட்டு போதையில் வருவார்கள். போதையில் மிருகத்தினை போல நடந்து கொள்வார்கள். இரவுகளில் தூக்கமே இருக்காது. கொடுத்த காசுக்கு விடிய விடிய அவர்களால் கொடுமைகளை சகிச்சுக்க நேரிடும். எங்களுக்கு குடும்பமோ நல்ல நண்பர்களோ யாரும் கூட இருக்க மாட்டார்கள். அனைவரும் எங்களை ஒதுக்கி வைத்தபின்னர் அன்பென்பது என்னவென்றே அவர்களுக்கு அறிய வாய்ப்பிருக்காது.  அவர்களோடு பேசுபவர்கள்  அவர்களோடு வேலை செய்பவர்களாகவும் வாடிக்கையாளர்களாகவும் தான் இருப்பார்கள். அதை தவிர அவர்கள் கஷ்டங்களைபகிர்ந்து கொள்ள யாருமே கூட இருக்கமாட்டார்கள். மிக அவலங்கள் நிறைந்தது நான் அவர்களது வாழ்க்கை அவர்களுக்கான அடிமை வாழ்வியலில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்க நேர்கிறது.  பெண்கள், சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் சுரண்டல் மிரட்டல்கள், பொருளாதார பிண்ணனி போன்ற பல காரணங்கள் அவர்களை இந்த தொழிலுக்குள் தள்ளிவிடுகின்றன. எனவே அவற்றினை தடுப்பதற்காக நாம் சமூகத்தில் அவர்களுக்கு ஆரம்பத்தில் பிரச்சினை வரும்போதே அவர்களை காப்பாற்றி நல்ல பாதையினை காட்டி உதவி செய்ய வேண்டும்.

பிரியா நடேசன்

பாடசாலை கிரிக்கட்டும் இலங்கை அணியும்!

கிரிக்கெட் என்றவுடனே பேட்டையும் போலையும் சுமந்துகொண்டு மைதானத்திற்கு ஓடும் மாணவர்களின் ஓட்டத்திற்கு பின்னால் கிரிக்கெட் வீரராக வேண்டுமென்ற கனவும் ஓடிக்கொண்டிருக்கிறது. கிரிக்கெட் என்றாலே யாருக்குதான் பிடிக்காது?அதிலும் சில மாணவர்களுக்கு கற்பதைவிட கிரிக்கெட் விளையாடுவதில் தான் ஆர்வம் அதிகம். ஆகவே இந்த கட்டுரையில் பாடசாலை கிரிக்கெட் இன் முக்கியத்துவம்? ஏன் அது இலங்கை கிரிக்கெட் அணிக்கு அவசியம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். அதற்கு முன் நீங்கள் வாசிக்கும் ஆர்வத்தை இன்னும் கொஞ்சம் தூண்டுவதற்கு கிரிக்கட்டை பற்றி சுவாரஸ்யமான அறிமுகத்தை தருகிறோம்.

கிரிக்கெட் விளையாட்டைக் குறித்து கிடைத்திருக்கும் மிகப் பழமையான குறிப்பு 1598ம் சேர்ந்தது என்பது பீட்டர் வின் தாமஸ் இன் கருத்தாகும். எனினும் பதினேழாம் நூற்றாண்டுகளிலேயே கிரிக்கெட் ஒரு விளையாட்டாக விளையாடப்பட்டிருக்க வேண்டும் என்பது பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல குறிப்புகளின் மூலம் தெரிய வருகிறது.எந்த நூற்றாண்டாக இருந்தாலும் மட்டையையும் பந்தையும் வைத்து 11 பேரை இணைத்துகொண்டு ஒரு விளையாட்டை உருவாக்கி அதற்கு கிரிக்கெட் எனும் பெயரை வைத்து கிரிக்கெட்டின் தாயகமாக விளங்குவது இங்கிலாந்து என்பது அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். அந்த காலத்திலிருந்து தற்போது வரையில் உலகெங்கும் கோடிக்கணக்கான வருவாயை ஈட்டும் இந்த கிரிக்கெட் விளையாட்டிற்கு தெற்காசிய நாடுகளில் மதிப்பும் மரியாதையும் அதிகம்தான். அப்படிப்பட்ட நாடுகளில் நாமும் ஒருவர்.

இலங்கையிலும் கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கென்று ஒரு தனிமரியாதையே இருக்கின்றது. இதற்கொரு விடயத்தை எடுத்துக்காட்டலாம்.அதாவது காற்பந்து எவ்வளவு பெரிய சர்வதேச போட்டியென்று அனைவருக்கும் கூறத்தேவையில்லை. இலங்கையைப் பொருத்தவரையில் காற்பந்து தேசியமட்டத்திலேயே விளையாடப்படுகிறது. ஆனால் இலங்கை கிரிக்கெட் என்பது சர்வதேச அளவில் அறியப்பட்டதொன்றாகும். அது மட்டுமன்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியும் ஒரு போட்டியாளராக தம்மை பதிவுபடுத்திக்கொண்டன. ஆகவே இலங்கையில் தவிர்க்கமுடியாத ஒரு விளையாட்டாக கிரிக்கெட் கருதப்படுகிறது.இலங்கையின் கிரிக்கெட் அணிக்கு ஒருவர் தயாராகும் போது அவர் ஆரம்பித்திலிருந்தே தம்மை தயார்படுத்திக்கொள்ளவேண்டும். அதற்கான சரியான அடித்தளம் தான் பாடசாலை கிரிக்கெட் பயிற்சி மற்றும் போட்டிகள்.

பாடசாலையில் கிரிக்கெட் தொடர்பான பயிற்சிகளோ அல்லது போட்டிகளோ மாணவர்களுக்கு கிரிக்கெட்டின் அடிப்படைகளை கற்றுக்கொடுக்கிறது.தேசிய அணிக்கு தகுதிபெறுவதற்கான அடிப்படை பயிற்சியே பாடசாலையில் தான் ஆரம்பிக்கின்றது. எந்த விளையாட்டை எடுத்துக்கொண்டாலும் ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம். அது கிரிக்கெட்டோ அல்லது வேறு விளையாட்டாகவோ இருக்கலாம். ஒழுக்கத்தை மீறும் பட்சத்தில் அந்த விளையாட்டின் மேல் நாம்கொண்டிருக்கும் மரியாதை தழும்பலடையும். கிரிக்கெட் அணியில் எப்படிப்பட்ட வீரர்களென்றாலும் இருக்கலாம். ஆனால் இலங்கை கிரிக்கெட் அணியில் இருக்கும் வீரர்களுக்கென்று ஒரு மரியாதையும் ஒழுக்கமும் இருக்கவேண்டும். ஏனெனில் இவர்கள் தனிப்பட்ட பெயருக்காக விளையாடுவதில்லை. தன் தாய் நாட்டிற்காக விளையாடவேண்டியது. இலங்கை கிரிக்கெட் அணிக்கென்ற ஒரு ஒழுக்கமும் கிரிக்கெட் விளையாட்டிற்கென்ற ஒரு மரியாதையையும் முதலில் பாடசாலைகளே கற்றுக்கொடுக்கின்றன.

பலமான அணியென்பது அனுபவத்தையும், திறமையையும், ஆர்வத்தையும், விடாமுயற்சியையும் கொண்ட வீரர்களால் கட்டியெழுப்பப்படுவது. நம்மிடம் பலவீனமொன்று இருந்தர்லும் கூட அதை மறைத்து நம் பலத்தை மட்டுமே காட்டவேண்டும்.அப்போது தான் நேருக்கு நேர் மோதப்போகும் எதிரணிக்கு பயம் வரும். இது இலங்கை அணிக்கும் பொருந்தும். இந்த துணிவு சிறுவயதிலிருந்தே வீரர்களிடமிருந்தால் எதற்கும் அஞ்சத்தேவையில்லை. இந்த துணிவை ஏற்படுத்தும் வாய்ப்பை பாடசாலைகள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டியது அவசியம். எதிரே வரும் பந்தை கண்டு துடுப்பாட்ட வீரர் அஞ்சக்கூடாது. பந்தை விளாச காத்திருக்கும் பேட்டை கண்டு பந்து வீச்சாளர் பயப்படக்கூடாது. இதுவே ஒரு கிரிக்கெட் வீரருக்கு அடிப்படையான தைரியத்திற்கு தேவையான ஒன்று. எதனையும் பயமின்றி எதிர்கொள்ளும் ஒரு தைரியம் சக வீரரிற்குள்ளும் வரவேண்டும். இந்த தைரியத்தை ஆரம்பத்திலேயே உருவாக்க வேண்டியது நிச்சயம் பாடசாலைகள் தான்.

எந்தவொரு துறையாக இருந்தாலும் ஆர்வமென்ற ஒன்று இல்லாதவிடத்து எதையும் செய்யமுடியாது அது விளையாட்டுத்துறையாகவும் இருக்கலாம். கிரிக்கெட்டும் அப்படித்தான். ஆர்வமுள்ளவர்கள் கிரிக்கெட்டில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக்கொள்வார்கள். இப்படி ஆர்வமுள்ள திறமையான மாணவர்களுக்கு நிச்சயம் வாய்ப்பளிக்கவேண்டும். முதலில் பாடசாலைகளுக்குள் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் மாணவர்களின் திறமையை காட்ட வாய்ப்புகொடுக்கவேண்டும். அதில் நன்றாக விளையாடியவர்களை இணைத்து கொண்டு பாடசாலைக்கென்ற ஒரு பலமான கிரிக்கெட் அணியை உருவாக்கவேண்டும். இந்த அணியை கொண்டு மற்ற பாடசாலைகளுக்கிடையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கெடுக்கச்செய்யவேண்டும். இதில் நன்றாக விளையாடுபவர்களை இணைத்து குழுவொன்றாக்கி மாவட்ட ரீதியாகவும் பின் மாகாணரீதியாகவும் போட்டிகளை நடாத்தி அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரவேண்டும். இதன் மூலமாக இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப மன்றத்திற்கு இப்படி கிரிக்கெட்டில் திறமையான மாணவர்கள் இலங்கையில் இருக்கின்றனர் என்பதைக் காட்டவேண்டும்.

பாடசாலைப் பருவம் உற்சாகமானது. அந்த பருவத்தில் விளையாடுவது தான் பயிற்சியைப் பெற்றுத்தருகிறது. பயிற்சியே வெற்றிக்காக ஒரு மனிதனை தயார்ப்படுத்துகிறது. இடைவிடாத பயிற்சியையும் விடாமுயற்சியையும் பெற்றுத்தருவது பாடசாலை விளையாட்டுகாலம் தான். ஒரு விளையாட்டிற்கு வீரமும் அதேசமயம் விவேகமும் இருக்கவேண்டும்.பாடசாலை விளையாட்டு போட்டிகளின் ஆரம்பத்தில் இதை நாங்கள் கற்றுக்கொள்கின்றோம். ஆகவே பாடசாலை கிரிக்கெட் என்பது இலங்கை அணிக்கு ஏன் அவசியமென்பது இப்போது புரிந்திருக்கும்.

மேலும் ஒரு முக்கிய விடயம் ஒன்றை இந்த சமூகமும் அரசாங்கமும் புரிந்துகொள்ளவேண்டும். வாய்ப்போ, தெரிவோ அனைவருக்கும் வழங்கப்படவேண்டிய சமமானதொன்று. விளையாட்டு என்பது தகுதிக்கோ தன்மானத்திற்கு வழங்கப்படுவதில்லை. திறமை என்பது நிறம்,மதம்,மொழி பார்த்து வருவதில்லை என்ற ஆழமான நியாயத்தை முதலில் அனைவரும் தெரிந்துகொள்வேண்டும். இலங்கையில் மலையகம் மற்றும் வேறு மாகணங்களை உள்ளடக்கிய வெளிப்பிரதேசங்களில் எத்தனையோ திறமையான மாணவர்கள் ஏதோ ஒரு மூலையில் கனவுகளை புதைந்து ஒளிந்துகிடக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் முதலில் மாவட்ட மட்டம் பின் மாகாண மட்டம் அதற்குபின் தேசிய மட்டத்தில் விளையாடும் ஒரு வாய்ப்பை ஏன் தரக்கூடாது? ஆளுமையும் அதிகாரத்தையும் ஆட்டிப்படைத்து ஆடும் ஆட்டம் என்பது உண்மையில் விளையாட்டேயல்ல. இங்கு திறமைக்கே முதலிடம் தரப்படவேண்டும்.

1996,மார்ச்,17 ஆம் திகதியை இலங்கை கிரிக்கெட் அணி மறக்காது. காரணம் அந்த நாளே இலங்கை அணி உலகக்கோப்பையை வென்றது. சுமார் 25 ஆண்டுகளைக் கடந்தும் இந்த உலகக்கோப்பையை பற்றி பேசிக்கொண்டிருக்கிற சமூகம் இன்னொரு உலகக்கோப்பையை சொந்தமாக்க என்ன செய்யவேண்டும் என்பதை மறந்துவிடுகிறது. அப்போது விளையாடிய இலங்கை அணி வீரர்களின் தனித்திறமை, ஈடுபாடு, பற்று, விடாமுயற்சியே வெற்றிக்கு வித்திட்டது. ஆனால் தற்போது இவையெல்லாம் சற்று குறைந்துவிட்டது என்பதே பலரின் கண்ணோட்டம்.இந்த கண்ணோட்டத்தை மாற்றுவதற்காகவாவது வீரர்கள் ஆரம்ப நிலையிலிருந்தே தயாராகவேண்டும்.அந்த ஆரம்பநிலை பாடசாலையிலிருந்தே உருவாகவேண்டுமென்பதே முக்கியம்.

ஆகவே பாடசாலைக் கல்வியில் கிரிக்கெட்டைப் போலவே ஏனைய விளையாட்டுகளுக்கும் மேற்கூறிய எல்லாமே தேவைப்படுகிறது. இதை தவிர பாடசாலையில் விளையாட்டு என்பது ஏன் அவசியம் என்பதற்கு பொதுவான காரணங்களும் உள்ளன. அதாவது விளையாட்டு கல்வியையும்,அறிவையும் போலவே வலிமையானதொன்று. பலமிழந்தவர்களை கூட விளையாட்டுக்கள் பலமாக்குகின்றது. நம் உடலை சீராக வைத்திருப்பதில் பெரும் பங்கு விளையாட்டிற்கு உண்டு. விளையாட்டு என்பது குழுஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத்தன்மை, நட்புணர்வு, உற்சாகம் போன்ற மனபலத்தை தருகிறது. அதுமட்டுமன்றி நாம் விளையாடும் போது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் உப்புகள் வியர்வையாக வெளியேறுகின்றன. அதிக வியர்வை நீராவியாகும் போது நம் உடல் குளிர்ந்து உடல் வெப்பம் சீராகின்றது. நம் உடல் பருமனைக் குறைக்க உதவும் ‘டாப்மைன்’ என்ற சுரக்கும் பொருள் மூளையில் சுரக்கின்றது.ஆகவே விளையாட்டு என்பது உடல் பலத்தையும் தருமொன்றாக கருதப்படுகிறது. இது எந்த விளையாட்டாகவும் இருக்கலாம். இதனால் கற்றலைப்போலவே விளையாட்டிற்கும் பாடசாலைகள் முக்கியத்துவம் தரவேண்டும்.
தேசத்தின் பலமான அணிக்கான அடித்தளமே பாடசாலைகள் தான்.!

நீங்கள் பயன்படுத்தும் கைபேசி உங்கள் நண்பனா? எதிரியா?

பண்டைய காலத்தில் தகவல் பரிமாற்றத்திற்கு தந்தி, கடிதம்,வானொலி எனப்பல ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டபோதும் இவற்றை தாண்டியும் தகவல் பரிமாற்றத்தை உன்னத வளர்ச்சியடையச் செய்ததுதான் இன்று நீங்கள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் கைப்பேசிதான். இயந்திரத்தை மனிதனாக்க மனிதன் இயந்திரமாய் சிந்திக்கிறான். ஒட்டுமொத்த உலகத்தையுமே வெறும் 150 கிராம் பெட்டிக்குள் அடக்கிவிட மனிதனால் இயன்றதென்றால் இவ்வுலகம் சிறியதல்ல. மனிதனின் அறிவு பெரிது என்றே கூறவேண்டும். மனிதன் அறிவால் ஆக்கப்பட்டவைக்கு அழிவென்பது கிடையாது. இதனையே ‘கருவில் பிறக்கும் எல்லாம் மரிக்கும். அறிவில் பிறந்தது மரிப்பதேயில்லை’ என கவிஞர் வைரமுத்து கூறுகிறார். அதுபோலத்தான் மனிதன் அறிவில் பிறந்த கைபேசிகளும் மேலும் மேலும் வளர்ச்சியடையுமே தவிர அழியாது.

தொழினுட்பம் வளர்ச்சியடைவது தவறல்ல. ஆனால் தொழினுட்பமே வாழ்க்கையாகிவிடக்கூடாது. நம் தாத்தா பாட்டிகள் வாழ்ந்த அக்காலத்தில் ஊருக்கு ஒரு தொலைக்காட்சி வீதிக்கு ஒரு தொலைபேசியென இருந்துவந்தது. ஆனால் இன்று தொலைக்காட்சியில்லாத வீடுகளுமில்லை. தொலைபேசியைப் பயன்படுத்தா மனிதனும் இல்லை. நீங்கள் கைபேசியை பயன்படுத்தியபோது நாம் ஏனையவர்களுடன் செலவிடும் நேரத்தை காட்டிலும் கைபேசிகளுடனே அதிக நேரத்தை செலவிடுகிறோம் என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா? எதற்கு பயன்படுத்த வேண்டும், எதனை செய்யக்கூடாது என்பதே அறியாமல் அவரவர் சுயவிருப்பின் படி கைபேசியை பயன்படுத்ததொடங்கிவிட்டோம்.

அன்று தகவல் பரிமாற்றத்தில் காதுகேளாதவருக்கும் வாய்பேச இயலாதவருக்கும் ஏதாவது செய்யவேண்டுமென கிரஹம்பெல் சிந்தித்த காரணத்தால் கண்டுபிடிக்கப்பட்ட படைப்பு தான் இந்த தொலைபேசி. ஆனால் இன்று இதன் பாவனையால் மனிதன் கண்கள் இருந்தும் குருடனாய்,காதுகள் இருந்தும் செவிடனாய்,பேசத் தெரிந்தும் ஊமையாய் மாறிவிட்டான். இருந்த இடத்திலிருந்தே அனைத்தையும் அறியச்செய்யும் தொலைபேசிதான் இன்று மனிதனுக்கு உற்றநண்பன். ஏனெனில் மனிதன் தன் வாழ்நாளில் அதிக நேரத்தை தொலைபேசிகளுடனே செலவிடுகிறான்.

அழைப்பினை மேற்கொள்ளவும் குறுந்தகவல் பரிமாற்றத்துக்குமே அக்காலத்தில் கைபேசி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இன்று ஒவ்வொருவரும் தனக்கு ஏற்றாற்போல கைபேசியை பயன்படுத்துகின்றனர். காரணம் என்ன தெரியுமா? பட்டுனிலிருந்து ஸ்மார்ட் கைப்பேசிக்கு தொழில்நுட்பம் வளர்ந்தது தான். உண்மையிலயே இந்த பட்டுன் போன் நம்மிடமிருக்கும் போது எந்த பிரச்சினையும் இல்லை. தேவைக்கு மட்டுமே பயன்படும். அத்தோடு அழைப்புகளை ஏற்படுத்தவும் குறுஞ்செய்தி அனுப்பவும் முடிவதோடு எவரும் இலகுவாக பயன்படுத்தலாம். விலையும் குறைவு. கீழே விழுந்தாலும் கூட உபயோகப்படுத்தலாம். ஆனால் இந்த ஸ்மார்ட் போன்கள்; செய்யும் வேலைகள் ஒன்றா இரண்டா? அழைப்புகளில் செவிகளால் கேட்டு நிகழ்ந்த உரையாடல் இப்போது முகம்பார்த்து உரையாடுவதாகிற்று. ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் அதற்கு மறுசெய்தி வர காலதாமதமாகும் நிலை சென்று உடனுக்குடன் கணநேரத்தில் ‘டக் டக்’ என்று குறுஞ்செய்திகள் பகிரப்படுகின்றன. வெறும் 32 ஜி.பி தேக்க அளவை வைத்துக்கொண்டு எக்கச்செக்க செயலிகள் இருக்கும். குறிப்பாக ஸ்மார்ட் போனிலிருந்து பிரசித்தி பெற்ற கெமரா தொழில்நுட்பம் வந்ததால் இடமே நிறைந்து போகுமளவிற்கு புகைப்படங்கள் வேறு. அதிலும் தன் முகத்தை தானே பார்த்த வண்ணம் படம்பிடிக்கும் தொழில்நுட்பத்தின் மற்றுமொரு எந்திர சிந்தனை தான் செல்பி. அதுவரை பின்னால் இருந்த கெமரா முன்னால் வந்தது தான் இதற்கு காரணம். அதைத்தான் குசழவெ ஊயஅநசய என்று சொல்கிறோம்.சிலர் நல்ல தரமான புகைப்படங்களை எடுப்பதற்காகவே புகைப்படத்திற்கென தயாரிக்கப்படும் கைபேசிகளை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். அப்படியே வாங்கினாலும் அதில் அழகு செயலிகள் கட்டாயமாக இருக்கும். சிலர் அதற்காகவே ஐந்தாறு செயலிகள் வைத்திருப்பார்கள்.

கைபேசியினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என நாம் எடுத்துக்கொண்டால் தொடர்பாடலுக்கு மிகச்சிறந்த ஊடகமாக கைபேசிகள் திகழ்கின்றன என்று கூறலாம்;. அவசர நிலைகளில் இருக்கும்போது நேரடியாக செல்லாமலே அழைப்பினை ஏற்படுத்திக்கொள்ளமுடியும். அத்தோடு ஒரு நபருடன் கைபேசியில் கதைக்காமலும் கூட எழுத்து,குரல்,புகைப்படம் மற்றும் கானொலிகள் மூலம் தகவலை மிக விரைவில் இலகுவாகப் பரிமாரிக்கொள்ளலாம். கைபேசியினால் அனைவரும் ஏதாவது ஒரு முறையில் ஒன்றோடொன்று தொடர்புபட்ட வண்ணம் இருப்பதால் உலகம் பூகோளமயமாக்கப்பட்டு ஒரு வலையமைப்பு எனும் குடையின் கீழ் அடங்கிவிட்டது.

ஆயினும் தீமைகளும் இதில் அடங்கியுள்ளது. அந்தவகையில் தீமைகளைப் பற்றி பேசும் முன் உங்களிடன் நான் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். நண்பர்களே! நீங்கள் கைபேசியை கட்டுப்படுத்துகிறீர்களா? அல்லது கைபேசி உங்களை கட்டுபடுத்துகிறதா? சிந்தித்துப்பாருங்கள். உண்மையில் நீங்கள் பயன்படுத்தும் உங்கள் கைபேசி தான் உங்களைக் கட்டுப்படுத்துகிறது. உங்களைப் பற்றி நீங்கள் அறிந்ததை விட அதிகமாய் உங்கள் கைப்பேசி அறிந்துகொள்கிறது. நீங்கள் அலைபேசியில் பயன்படுத்தும் ஒவ்வொரு வலைத்தளங்களும் ஒவ்வொரு செயலிகள் உங்களைப்பற்றிய தரவுகளை சேமிக்கிறது. சிலசமயம் நீங்கள் பயன்படுத்தும் கைபேசியே உங்களுக்கு எமனாகிவிடுகிறது. அதுமட்டுமன்றி கைபேசி பாவனையால் மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. பல தீய பழக்கங்களுக்கு இளைஞர்கள் உட்படுகின்றனர். தவறான அழைப்புகள் தவறான குறுஞ்செய்திகள் போன்ற போலி தகவல்கள் கைபேசிக்கு வந்தடைவதால் சிலசமயங்களில் நாம் ஏமாற்றமடைய ஏற்படவாய்ப்புமுள்ளது. அதுமட்டுமன்றி நம் கைபேசி இதன் மூலம் செய்யப்படுகிறது.

அத்தோடு கைப்பேசியை அதிக மணிநேரம் பயன்படுத்துவது கண்களை சேதமாக்கும். குனிந்த நிலையில் அலைப்பேசியை வெகு நேரம் பயன்படுத்துவது முதுகு தண்டு மற்றும் பின்புற கழுத்துப்பகுதிக்கு அபாயம் விளைவிக்கின்றது. அதுமட்டுமா? கைபேசி கையிலிருந்தால் தூக்கம் வராது சிலருக்கு பசியே வராது. ஆகவே இக் கைபேசிகள் உளத்தையும் உடலையும் பாதிக்கின்றன என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நீங்கள் கண்களால் பார்க்கும் காதால் கேட்கும் சமூக சீர்கேடுகளெல்லாம் பெரும்பாலும் அலைபேசி பாவணையால்தான் நிகழ்கிறது. அதிலும் சிறுவர்கள் தற்காலங்களில் பெரும்பாலும் கைபேசிகளில் விளையாடுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர்.அதற்கு பெயர் போனது தான் சிறுவர்கள் விளையாடும் குசநந குசைந விளையாட்டு.இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். இவ் விளையாட்டினால் நிறைய சிறுவர்களின் வாழக்கை சீர்கேடாகியுள்ளமையை நாங்கள் செய்திகளின் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது. அழுத பிள்ளை பால் குடிக்கும் என்பது பழமொழி. ஆனால் இப்போதுள்ள குழந்தை கைபேசியை பார்த்தால் தான் அழுகையையே நிறுத்துகின்றது. நீங்கள் அதிக நேரம் கைபேசியை பயன்படுத்தினால் உங்கள் குழந்தைகள் அதனைப் பார்த்து கைபேசியை பயன்படுத்த பழகிவிடுவார்கள். ஆகவே இவை குறித்து கவனம் செலுத்துங்கள். உங்களைப் பார்த்தே அடுத்த தலைமுறையினர் கற்றுக்கொள்கின்றனர் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஆகவே பாலும் நீரும் சேர்ந்திருக்க வேறுபிரித்தறிந்து பாலை உண்ணும் அன்னப்பட்சிப்போலவே மனிதர்களாகிய நாமும் நல்லன எது தீயன எதுவென அறிந்து செயலாற்றுவது சிறப்பு. நன்மைக்காக மட்டும் கைபேசியை பயன்படுத்தினோமானால் பயனைப் பெறலாம். ஆகவே கைபேசி பாவனையாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் தீயவற்றை ஒதுக்கி நல்ல விடயத்திற்கு மட்டும் பயன்படுத்துவோமாக…

சுவஸ்திகா ராஜ்பிரகாஷ்

பள பளப்பான முகத்திற்கு சில டிப்ஸ்

உங்கள் மந்தமான சருமத்தை பொலிவாக்குவதற்கான வழியைத் தேடுகிறீர்களா? ஆம் எனில், இந்தக் கட்டுரையை ஒரு குறிப்புப் பொருளாகப் பயன்படுத்தலாம். சமநிலையற்ற உணவு, சரியான தோல் பராமரிப்பு இல்லாமை, தூக்கமின்மை, அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் பல போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மந்தமான சருமத்தை ஏற்படுத்தும் பொதுவான காரணிகள்.

இந்த காரணிகள் அனைத்தும் உங்கள் சருமத்தின் நிலையை எதிர்மறையாக பாதிக்கிறது. ஆனால் நீங்கள் தூங்கும் போது உங்கள் சருமம் அந்த பளபளப்பை பெற சில வழிகள் உள்ளன.

ஒரே இரவில் பளபளப்பான சருமத்தைப் பெறுவதற்கான தந்திரம், நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் சரியான விஷயங்களைச் செய்வதுதான்.

சன் மற்றும் ஸ்கின்டோ: UVA மற்றும் UVB கதிர்கள் இரண்டையும் தடுக்கும் குறைந்தபட்சம் 15 SPF கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.  சுருக்கங்கள்,வயதுப் புள்ளிகள் மற்றும் பிற தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், உங்கள் தோலை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க வேண்டும். லேபிளில் ‘நான்காமெடோஜெனிக்’ (noncomedogenic) அல்லது ‘நோனாக்னெஜெனிக்’ (nonacnegenic )என்று இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இதனால் தயாரிப்பு துளைகளைத் (pores) தடுக்காது.

வெளியில் மேகமூட்டமாக இருந்தாலும் அல்லது குளிராக இருந்தாலும் sunscreen தவிர்க்கவும். நீங்கள் கடற்கரைக்கு அல்லது பனி அல்லது பனி போன்ற பிரதிபலிப்பு மேற்பரப்புகளுக்குச் செல்கிறீர்கள் என்றால், குறைந்தது 30 SPF உடன் இன்னும் சில சன்ஸ்கிரீன்கள் (sunscreen) பயன்படுத்தவும்.

உங்கள் நீரேற்றத்தை பராமரிக்கவும்( hydration). தினமும் நிறைய தண்ணீர் குடிக்கவும், குறைந்தது 8 கிளாஸ்கள் அதிகமாக இல்லை என்றால். மேலும், தர்பூசணி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி, திராட்சைப்பழம் மற்றும் பாகற்காய் போன்ற அதிக நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள்.

பருக்கள் அதிக அளவில் வீக்கம், சிவத்தல் மற்றும் வடுக்கள் கூட ஏற்படலாம். பரு வருவதை உணர்கிறீர்களா? ரோஸ் வாட்டரால் அந்தப் பகுதியை சுத்தம் செய்து, குளிர்ந்த கிரீன் டீ பேக்கை( green tea pack) 10 நிமிடங்கள் வைக்கவும். மேலும், நீங்கள் கண்ணாடிகள் அல்லது சன்கிளாஸ்களை அணிந்தால், உங்கள் கண்கள் மற்றும் மூக்கைச் சுற்றியுள்ள துளைகளில் எண்ணெய் (oily face)அடைவதைத் தடுக்க அவற்றை அடிக்கடி சுத்தம் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நம்மில் பெரும்பாலோர் அடிக்கடி கவனிக்காத ஒளிரும் சரும ரகசியம், உங்கள் குளிக்கும் நேரம் ஆரோக்கியமான, கதிரியக்க சருமத்தை அடைய உண்மையில் உதவும்! அதிக நேரம் குளிப்பதும், அதுவும் சூடாக இருப்பதும், நிச்சயமாய் நிதானமாகவும், சோர்வான நாளுக்குப் பிறகு ஓய்வெடுக்கவும் சிறந்த யோசனையாகும், ஆனால் அது உங்கள் சருமத்திற்கு எந்த நன்மையும் செய்யாது. நீண்ட மற்றும் நீராவி மழை(hot shower/hot bath) தோலில் இருந்து இயற்கையான (பாதுகாப்பு) எண்ணெய்களை அகற்றி,சாருமத்தை உலர்ந்த மற்றும் மந்தமானதாக(dull skin) ஆக்குகிறது.

உங்கள் குளிக்கும் நேரத்தை அதிகபட்சமாக 10-12 நிமிடங்கள் வரை வைத்து, சூடாக விட குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் சருமம் ஈரமாக இருக்கும் போது முகத்தில் மாய்ஸ்சரைசரைப்( moisturizer) பயன்படுத்துங்கள், இதனால் ஈரப்பதம் பூட்டப்படும். இந்த வழியில், உங்கள் தோல் எந்த ஈரப்பதத்தையும் இழக்காது மற்றும் நீங்கள் குளிக்கும்போது ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

முதுமை என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத பகுதியாகும். வயதான சருமமும் அப்படித்தான். வயதான செயல்முறையை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்க தேவையான ஊட்டச்சத்து மற்றும் நீரேற்றத்தை வழங்க உதவும் ஒரு தோல் பராமரிப்பு வழக்கத்தை நீங்கள் பின்பற்றலாம்.

கொழும்பில் உள்ள தாய்லாந்து உணவகங்கள்

கொழும்பில் உணவுக்கென்றே சில இடங்கள் பிரசித்திபெற்று வருகின்றன. அந்தவகையில் தாய்லாந்து உணவுக்கென்றே பிரசித்திபெற்ற இடங்கள் பல கொழும்பு நகரில் உள்ளன என்றால் அதில் ஆச்சரியமில்லை. சுவையான Tom Yum முதல் கிளாசிக் Pad Thai வரை அனைத்து விதமான தாய் உணவுகளையும் நீங்கள் ருசிக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்த பட்டியல் உங்களுக்குதான்.

Krua Thai by Dao

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள லிட்டில் ஹோல் இன் த வோல் (little hole-in-the-wall) என்ற அடைமொழியால் அறியப்படும் Krua Thai உணவகம் உங்கள் பணத்தை முழுவதுமிழக்காமல் உண்மையான தாய் உணவின் சுவையை ருசித்து மகிழும் வாய்ப்பை உங்களுக்கு தருகின்றது. இங்கு கிடைக்கும் உணவோ அல்லது இந்த ரம்மியமான சூழலோ நிச்சயம் நீங்கள் யாரோ ஒருவரின் சமையலறையில் இருந்து சாப்பிடுவதைப் போலவே உணர்வீர்கள். 1000 ரூபாய்க்கு மிகவும் திருப்திகரமான தாய் உணவை ருசிக்கவேண்டுமெனில் இவ்விடத்தை பரிந்துரை செய்கிறோம்.

துரித அழைப்பு – 0779 603 760
விலாசம் – 10 பாம் க்ரூவ் , கொழும்பு 03
திறந்திருக்கும் நேரம் – மு.ப 11.30 இலிருந்து பி.ப 3.30 வரை, பி.ப 6.30 இலிருந்து 10.00 மணிவரை

Instagram – @daokruathaidaoskitchen

Quick Thai

பெலவத்தை மற்றும் கொழும்பு 5 ஐ தளங்களாகக்கொண்டு இரு விற்பனை நிலையங்களை அமைத்து Quick Thai மனதைக் கவரும் அலங்காரம் மற்றும் சாதாரண விலையில் சுவையான உணவு என அனைத்திலும் தனித்துவமாக விளங்குகின்றது. 1500 ரூபாய் செலவில் நீங்கள் ஒரு நேர்த்தியான உணவை அனுபவிக்க முடியும்.

துரித அழைப்பு – 0112 073 353
விலாசம் – பத்தரமுல்லை- பன்னிபிடிய வீதி, ஸ்ரீ ஜயவர்தன புறக்கோட்டை
திறந்திருக்கும் நேரம் – மு.ப 11.00 இலிருந்து பி.ப 10.30 வரை

Instagram @quickthaisrilanka

Facebook – @QuickThaiSL

Thai Heritage Food Truck

கொழும்பில் புட் ட்ரக் உணவுமுறை என்பது பிரபலமடைந்து வருகிறது. அந்த வரிசையில் உள்ள பிரபல Thai Heritage Food Truck ஐ ஹெவ்லாக் சாலையில் நீங்கள் பார்க்கலாம். மதியம் 12 மணி முதல் 3.30 மணி வரையிலும் மீண்டும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் இது திறந்திருக்கும்.நீங்கள் 1000 ரூபாவை செலுத்தி உங்கள் தாய் உணவுப் பிரியத்தை தீர்த்து வைக்கலாம். குறிப்பாக அவர்களின் Pad Thai உணவு உண்மையிலேயே அருமைதான்.

துரித அழைப்பு – 0777 003 688
விலாசம் – 381 ஹாவ்லொக் வீதி, கொழும்பு 06

Instagram – @thaiheritagetruck

Facebook – @thaiheritagefoodtruck

Thai Express MC Food Court

தாய் ஸ்பெஷல் கொத்து, அல்லது தாய் ஃப்ரைட் ரைஸ் போன்ற தவிர்க்க முடியாத சில தர் உணவுகளுக்கு சிறந்த தெரிவு Thai Express உணவகம். மெஜஸ்டிக் சிட்டி, கிரெஸ்கட் மற்றும் லிபர்ட்டி ப்ளாசா போன்றவற்றில் இவ் உணவகம் அமைந்துள்ளது. இங்கு கிடைக்கும் உணவுகளைப் பற்றிய குழப்பம் இருக்கலாம். ஆனால் அவர்களின் சேவை மிகவும் வேகமாகவும், நேர்த்தியாகவும், நட்பாகவும் இருக்கும். நீங்கள் இலங்கையிலேயே தயாரிக்கப்படும் தாய்லாந்து உணவை விரும்புகிறீர்கள் என்றால், உங்களுக்கான இடம் இதோ.

துரித அழைப்பு – 0112 438 300
விலாசம் – மெஜஸ்டிக் சிட்டி. க்ரெஸ்கட், லிபர்டி ப்ளாசா பூட் கோர்ட்
திறந்திருக்கும் நேரம் – மு.ப 10.00 இலிருந்து பி.ப 10.00 வரை (அனைத்து கிளைகளும்)

Laksa Noodle Bar

திம்பிரிகஸ்யாயவில் அமைந்துள்ள Laksa Noodle Bar என்பது புதிதாகப்பட்ட மற்றும் சிறந்த சேவையை வழங்கிவரும் ஒரு சிறிய உணவகமாகும். Thai Woon Sen நூடுல்ஸ் மற்றும் Pad Thai ஆகியவற்றை உள்ளடக்கிய இன்னும் பல தெற்காசிய நூடுல்ஸ்களுடன், அநேக தெரிவுகளை வழங்குகின்றது. ஒரு உணவுக்காக அண்ணளவான விலை 1500 ரூபாய் வரையிலிருக்கும்.

துரித அழைப்பு – 0112 559 799
விலாசம் – 179 திம்பிரிகஸ்யாய வீதி, கொழும்பு 05
திறந்திருக்கும் நேரம் – பி.ப 12.30 இலிருந்து பி.ப 3.00 வரை, பி.ப 6.00 இலிருந்து பி.ப 9.00 வரை

Instagram – @laksanoodlebar.lk

Facebook – @laksanoodlebar.lk

Monsoon

பார்க் ஸ்ட்ரீட் மியூஸில் அமைந்துள்ள Monsoon உயர்தர தெற்காசிய உணவுகளில் நிபுணத்துவம் பெற்ற சிறந்த தாய் உணவகமாகும்.குடும்பம் அல்லது நண்பர்களிடையே பகிர்ந்துண்ணுவதற்கு ஏற்ற ஏரளமான உயர்தர தாய் உணவு வகைகளை உங்களுக்கு வழங்குகிறது. அவர்களின் சரோங் இறால் மிகவும் சுவையாக இருக்கும். எனவே இதை முயற்சிக்க மறக்காதீர்கள்!

துரித அழைப்பு – 0112 302 449
விலாசம் – 50, 2 பார்க் வீதி, மியவ்ஸ், கொழும்பு 02
திறந்திருக்கும் நேரம் – பி.ப 12.00 இலிருந்து பி.ப 11.00 வரை

Instagram – @monsooncolombo

Facebook – @monsooncolombo

Café Beverly

ராஜகிரியவில் அமைந்துள்ள பெவர்லி Beverly Street ஆடை வளாக பகுதியிலி உள்ள Café Beverly சில கலாச்சார மற்றும் தாய் உணவுகளையும் வழங்குகிறது. Sweet ChilI Wings முதல் கடலுணவு கேக்குகள் வரை தாயுணவு ருசிகளை அனுபவித்திட Café Beverly சரியான இடமாகும்.

கபே பெவர்லி சில சுவையான தாய்களைப் பெறுவதற்கு மிகவும் நிதானமான விருப்பமாகும்.

துரித அழைப்பு – 0112 888 686
விலாசம் -475/C, ஸ்ரீ ஜயவர்தன மாவத்தை, கோட்டை 101
திறந்திருக்கும் நேரம் – மு.ப 11.00 இலிருந்து பி.ப 11.00 வரை

Instagram – @cafe.beverly

Facebook – @CafeBeverly

Thai Cuisine Boulevard

மிகவும் பிரத்தியேகமான தாய் உணவகளை வழங்கிவரும் பம்பலப்பிட்டியவில் அமைந்துள்ள Thai Cuisine Boulevard உணவகம் மனதை ஈர்க்கக்கூடிய உணவு, சேவை மற்றும் சுற்றுப்புறத்தை வழங்குகின்றது. உயர்தர சமையற் பொருட்கள் மற்றும் தாய் மண்ணின் சுவைகள் மாறாத இந்த இடம் தாய் உணவு பிரியர்களுக்கான ஒரு டேட் நைட்டுக்கு ஏற்ற இடமாகும்.

துரித அழைப்பு -0112 055 425
விலாசம் – 33 குயின்ஸ் வீதி கொழும்பு 03
திறந்திருக்கும் நேரம் – மு.ப 11.00 இலிருந்து பி.ப 10.30 வரை

Instagram – @thai.boulevard

Facebook – @theboulevardsrilanka

Nara Thai

2006 ஆம் ஆணடிலிருந்து இன்று வரை தாய்லாந்தின் சிறந்த உணவகங்களில் ஒன்றாகக் கருதப்படும் நாரா தாய் ஒரு தனித்துவமான உணவு வகைகளை அதன் வாடிக்கையாளருக்கு வழங்கி வருகின்றது. ஒவ்வொன்றும் தாய்லாந்திலிருந்தே இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களைக் கொண்டு உணவுகள் தயாரிக்கப்பட்டு அதன் வாடிக்கையாளர்களுக்கு உண்மையான தாய் உணவை உண்ட அனுபவத்தை உறுதி செய்கிறது. Anchan Iced Tea போன்ற தனித்துவமான இன்னும் பல ஈர்த்த வண்ணமேயுள்ளது.

துரித அழைப்பு – 0112 577 655
விலாசம் – 31 டீல் ப்ளேஸ் கொழும்பு 03
திறந்திருக்கும் நேரம் – பி.ப 12.00 இலிருந்து பி.ப 11.00 வரை

Instagram – @narathaisrilanka

Facebook – @narathaisl

Royal Thai Cinnamon Lakeside

Royal Thai சினமன் குளப்பகுதியில் அமைந்துள்ள ஒரு உயர்தர உணவகமாகும். ஒரு உயர்தர சுற்றுப்புறச் சேவையையும் நட்சத்திர சேவையையும் இதுகொண்டுள்ளது. குழுவாக இணைந்த கொண்டாட்டங்கள் அல்லது உங்களை நீங்களே உபசரிக்க நினைக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற Royal Thai உணவகத்தின் உணவின் தரம் பல ஆண்டுகளக்கும் மேலா தனித்து நிற்கின்றது. மேலும் அவர்களின் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும், நீங்கள் தாய் உணவை விரும்புகிறீர்களோ இல்லையோ.

துரித அழைப்பு – 0112 491 945
விலாசம் – இன்ஸைட் சினமன் லேக் சைட்
திறந்திருக்கும் நேரம் – ஒரு நாளில் 24 மணித்தியாலமும் திறந்திருக்கும்.

Robata Grill and Lounge

முன்னர் ஜப்பானிய உணவகமாக இருந்த ரோபாடா இப்போது மேலும் ஆறு வகையான ஆசிய உணவு வகைககளையும் மேலும் ஆறு வகையான ஆசிய உணவு வகைகளுக்கு அதன் வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமாக வழங்கிவருகின்றது. ஆழஎநnpiஉம கொழும்பில் அமைந்துள்ள அவற்றின் உணவுத் தெரிவு மற்றும் விலையைக் கருத்தில் கொள்ளும்போது பகுதியளவிலேயே மிகவும் தாராளமாக இருக்கும். மேலும் 1500 ரூபாய்க்கு நீங்கள் நம்பமுடியாத உணவை அனுபவிக்க முடியும்

துரித அழைப்பு – 0117 450 450
விலாசம் – யு2இ ஸ்ரீமத் அநாகரிக தர்மபால மாவத்தை கொழும்பு 07
திறந்திருக்கும் நேரம் – பி.ப 12.00 இலிருந்து பி.ப 3.00 வரை, பி.ப 7 இலிருந்து பி.ப 11.00 வரை

Instagram – @robatagrill

Facebook – @Robata-Grill-and-Lounge

Nom Nom Thai

மாயா அவென்யூவில் அமைந்துள்ள இந்த உணவகம், தெற்காசிய சுவையுடன் இணைந்த தாய்லாந்து உணவுகளையும் வழங்குகிறது. இவர்களின் சுவை உங்களின் சுவை மொட்டுக்களைத் தூண்டிவிடுவதும், மேலும் பல தெரிவுகளை நீங்கள் தேர்ந்தெடுத்து அனுபவிப்பீர்கள் என்பதும் நிச்சயம். பகுதி அளவுகள் மிகப் பெரியவை மற்றும் உணவுக்கான விலை 1500 ரூபாயாகும்.
துரித அழைப்பு – 0112 559 050
விலாசம் – 58 மாயா அவன்யூ கொழும்பு 06
திறந்திருக்கும் நேரம் – மு.ப 11.00 இலிருந்து பி.ப 3.00 வரை, பி.ப 6.00 இலிருந்து பி.ப 11.00 வரை

Instagram – @nomnomthaisl

Facebook – @NomNomThaiSL

Ban Thai Seafood Restaurant

இவ் உணவகம் உண்மையான தாய் சுவையுடன் கூடிய உணவை ருசிக்க விரும்பும் உணவு பிரியர்களுக்கு ஏற்ற இடமாகும். Ban Thai மெனுக்களில் ஏராளமான கடல் உணவுகளுடன் மாறுபட்ட சுவைகளை அனுபவத்திடவும் ஏராளமான உணவுத்தெரிவுகளுக்கான மெனுவை தேர்ந்தெடுக்கும் அனைவருக்கும் தனித்துவமானதொரு அனுபவத்தை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உணவின் அளவைப் பொறுத்து விலைகள் மாறுபடலாம். ஆனாலும் ஒரு முறை உணவுக்கு 1500-2000 ரூபாய் வரை செலுத்தவேண்டும்.

துரித அழைப்பு – 0112 576 676
விலாசம் – 31ஃ5 இ சீ அவனியூ கொழும்பு 03
திறந்திருக்கும் நேரம் – மு.ப 10.00 இலிருந்து பி.ப 11.00 வரை

Siam House Restaurant

சியாம் ஹவுஸ் கொழும்பில் உள்ள மிகவும் பழமையான தாய்லாந்து உணவகங்களில் ஒன்றாகும். மேலும் இது பல ஆண்டுகளாக தாய்லாந்து உணவை அனுபவித்திட என்னும் இலங்கையர்களுக்கு இணையற்ற வழிகளில் உதவிசெய்திடும் மதிப்புமிக்கதொன்றாகும்.உணவுக்கான விலை ரூபாய் 1500.

துரித அழைப்பு – 0112 595 966

விலாசம் – 17இ மெல்போர்ன் அவன்யூ கொழும்பு
திறந்திருக்கும் நேரம் – மு.ப 11.00 இலிருந்து பி.ப 11.30 வரை

Facebook – @Siam-House-Thai-Restaurant

Jack Tree

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஜெக் ட்ரீ உணவகம் கொழும்பில் தாய்லாந்து உணவுகளுக்கான மையப்புள்ளியாக உள்ளது. தமது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான தாய் உணவுத் தெரிவுகளை வழங்கும் இவ் உணவகம் பிரத்தியேக தாய் உணவு சுவைகளை வழங்கி வாடிக்கையாளர்கள் மனதை ஈர்க்க ஒருபோதும் தவறியதில்லை. உணவு வகைகளைப் பொறுத்தே விலைகளும் உண்டு. உணவுக்கான விலை அண்ணளவாக 1000-2000 வரையில் இருக்கும்.

துரித அழைப்பு– 0117 620 620
விலாசம் – 289இ ஹை லெவல் வீதி கொழும்பு 03
திறந்திருக்கும் நேரம் – மு.ப 11.30 இலிருந்து பி.ப 10.30 வரை

Facebook – @JackTreeSriLanka

Lan Tao Cafe & Fusion Restaurant

குடும்பத்தோடு இணைந்து தாய் உணவுகளை ருசித்திட ஏற்ற இடம் ; Lan Tao cafe. நட்பான சேவை, இதமான சுற்றுசூழல் என இந்த உணவகம் உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. விலை அண்ணளவாக 1000-2000 ரூபாய் வரையில்.

துரித அழைப்பு – 0112 584 514
விலாசம் – 47இ திம்பிரிகஸ்யாய வீதி, கொழும்பு 05
திறந்திருக்கும் நேரம் – மு.ப 9.00 இலிருந்து பி.ப 11.00 வரை

Instagram – @lantaocafe

Facebook – @lantaocafe

Mama Thai Cuisine

மமா தாய் உணவகம் அசல் தாய் உணவு சுவைகளை வகைகளை உங்களுக்கு வழங்குகிறது. இந்த உணவகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் அதன் சுவையான உணவுகள் நிச்சயம் உங்கள் இதயத்தை கவர்ந்துவிடும். விலை அண்ணளவாக 1000-2000 ரூபாய் வரையிலாகும்.
துரித அழைப்பு – 0756 795 995
விலாசம் – 95இ ஹொஸ்பிடல் வீதி, களுபோவில,தெஹிவளை
திறந்திருக்கும் நேரம் – மு.ப 11.00 இலிருந்து பி.ப 11.00 வரை

Instagram – @mamathaicuisine

பருத்தித்துறை முதல் தேவந்திர முனை வரை பிரம்மாண்ட சைக்கிளோட்டம்!

சைக்கிள் ஓட்டும் கலாசாரமென்பது கொழும்பு நகரில் மிகவும் அரிதாக காணக்கூடியதொன்றாகவே இருந்துவருகிறது. இதனை மாற்றியமைத்து இலங்கை மக்களின் சைக்கிள் ஓட்டும் ஆர்வத்தை தூண்டி அதில் அவர்கள் முழுமையாக ஈடுபாட்டை வழங்கவேண்டும் என்பதன் அடிப்படையில் பல சைக்கிள் ஓட்ட மைதானங்கள், பூங்காக்களில் சைக்கிளோட்டப்பாதைகள் போன்றன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இலக்கை அடைய ஒருவர் தன்னுடைய வாழ்வையும் அர்ப்பணிக்கிறார் என்றால் அவர்தான் சைக்கிள் ஓட்டும் ஆர்வலர் யசாஸ் ஹெவகே. அவருடைய விடாமுயற்சியையும் சைக்கிளோட்டத்தில் அவரின் முழுமையான ஈடுபாட்டையும் சிலர் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு சைக்கிளோட்ட கலாசாரத்தை தாமும் பின்பற்றுகின்றனர்.

“Race the Pearl” எனும் கருப்பொருளை மையமாகக்கொண்ட சைக்கிளோட்ட பந்தயத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திய பெருமை யசாஸ் அவர்களையே சாரும். ஸ்பின்னரால் ஏற்பாடு செய்யப்பட்ட “Race the Pearl” 24 மணிநேர சைக்கிள் ஓட்ட சவாலாகும்.இவ் ஆண்டு சைக்கிளோட்டத்தின் நான்காவது பாகத்தை 2022 பெப்ரவரி மாதம் கடந்த 6 ஆம் திகதி அவர்கள் நிறைவுசெய்தனர்.உடலூனமுற்ற குழந்தைகளுக்காக 10000 சக்கரநாற்காலிகளை பெற்றுக்கொடுக்கவேண்டுமென்ற “Wheels For Wheel Foundation” எனும் அறக்கட்டளையின் நோக்கத்தை ஆதரிப்பதே இந் நிகழ்வின் முக்கிய குறிக்கோளாகும்.

எனவே, ‘Race the Pearl” என்றால் என்ன?

சுருக்கமாக கூறுவதானால் ‘Race the Pearl” என்பது பருத்தித்துறை முதல் தேவந்திர முனை வரையில் சைக்கிள் ஓட்ட ஆர்வலர்களின் சைக்கிளோட்ட பந்தய நிகழ்வாகும். மேடு,பள்ளம் மற்றும் தரிசு நிலங்களையும் கடக்கும் சுமார் 600 கிலோ மீற்றர் சமதளத்தில் 24 மணி நேரத்திற்குள் பயணம் செய்து இந்தப் பந்தயத்தை முடிக்கவேண்டும். இதில் பங்கேற்பவர்கள் தங்கள் சைக்கிளை ‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என்று வர்ணிக்கப்படும் இலங்கை தீவை சுற்றி ஓட்டும் முயற்சியில் ஈடுபடும்போது தீவிர உடல் மற்றும் மன சவால்களை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும்.

இந்த ஆண்டு 6 பெண்கள் உட்பட 100 பேர் கலந்து கொண்டதோடு நம் நாட்டைத் தவிர இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, மெக்சிகோ, கிர்கிஸ்தான், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய ஏழு நாடுகளிலிருந்தும் பங்கேற்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர். இவ் ஆண்டு ஓட்டப் பந்தயத்தில் 22 தனிநபர் ஓட்டுனர்களும், 78 ரிலே ஓட்டுனர்களும் இணைந்து 16 அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டனர். இவ் ஓட்டுனர்களுக்கு ஒத்துழைப்பை வழங்க 32 குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 24 மணிநேர முழுவதும் அவர்கள் பயணம் செய்தனர்.

இந்த பந்தயத்தில் சைக்கிள் ஓட்டுபவர்கள் தங்கள் பயணத்தை வேகமாக நிறைவு செய்வதற்காக தங்களை ரீசார்ஜ் செய்துகொள்ளவேண்டியது அவசியம் என்பதற்காக இவ் ஓட்டப்பயணத்தில் 3 நிறுத்த இடங்கள் (Pitstop) ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இந்த சவாலை முடித்துகாட்ட 24-hour Solo, 24-hour Ultra Challenge, 2 Day Challenge (32 hours) மற்றும் ரிலே டீம் (2 முதல் 5 உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு) ஆகிய சவால்களில் ஒன்றை பங்கேற்பாளர்கள் தெரிவு செய்யலாம்.

  • சவாலை வெற்றிகரமாக முடித்துகாட்டிய சிறந்த சைக்கிள் ஓட்டுனர்களின் பட்டியல் இங்கே.

தனி நபர் பயணம்

செல்வடோர் லோபஸ் (மெக்சிகோ) – 25:27:06

சுமேதா ரத்நாயக்க (பெண், இலங்கை) –  27:45:50

எக்னஸ் செஃபோர்ட் (பெண், அமெரிக்கா) – 27:58:49

அல்ட்ரா-வகை

ருவான் ஜெயமன்ன (இலங்கை) – 22:11:20
ப்ரேன்சியோஸட கம்ப்ட்டேர் (பிரான்ஸ்) – 22:24:29
சமன் பெரேரா (இலங்கை) – 23:57:57

டீம் ரிலே பிரிவில் 11 அணிகள் வெற்றி பெற்றன

களனி சைக்கிள் ஓட்டம் – 18:06:08
பன் பீ சைக்கிளோட்டம் – 19:06:43
பெடல் எமிசி – 19:30:19

Race The Pearl Sri Lanka என்பது Race Across America எனும் அமெரிக்காவின் மதிப்புமிக்க நிகழ்விற்கு தகுதியுடைய ஒரு நிகழ்வாகும். வெற்றிகரமாக நிறைவு செய்த பந்தயத்தின் 4 ஆம் பாகத்தை தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் 5, 2022 அன்று அதன் 5 ஆம் பாகத்தை ஆரம்பிப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். மேலதிக விபரங்களுக்கு, www.racethepearl.com என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

சைக்கிளோட்ட பந்தயத்தின் 4 வது பாகத்தில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் இந்த நிகழ்வானது இலங்கையில் உள்ள ஏனைய சைக்கிள் ஓட்டுனர்களுக்கும் சவால்கள் நிறைந்த மறக்க முடியாத ஒரு சைக்கிளோட்ட அனுபவத்தைப் பெற்றுத்தரும் என்று நம்புகிறோம்!

 

கொழும்பில் டேட்டிங் செய்ய சரியான இடங்கள்

இது ஒரு டேட்டிங் இரவு! மற்றவர்களை விட கொஞ்சம் கலக்கலாகத் தெரிவதற்கு உங்களுக்கேற்ற ஒரு ஆடையைத் தெரிவு செய்துவிட்டீர்கள். உங்கள் சிகையலங்காரத்தை சிறப்பாக்க சலூனுக்கும் சென்றீர்கள். ஆமாம். நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?

நீங்கள் உங்கள் முதல் டேட்டிங் இற்கு செல்கிறீர்களா, அல்லது உங்கள் காதல் வருடவிழாவைக் கொண்டாட சரியான இடம் தேடுகிறீர்களா? இந்த கவலைத் தேவையில்லை. டேட்டிங் செய்ய கொழும்பைச் சுற்றியிருக்கும் பிரசித்தி பெற்ற இடங்களின் பட்டியலை நாங்கள் உங்களுக்காகவே தொகுத்துகாட்டியுள்ளோம்.

லண்டன் க்ரில்- சினமன் க்ரேன்ட்.

அருமையான இரவுணவை ருசித்து அழகான காதலை ஆடம்பரமாய் கொண்டாடிட சிறந்த இடம்! வருடவிழா போன்ற ஒரு நிகழ்வை நீங்கள் கொண்டாட விரும்பினால் இது ஒரு சரியான தெரிவு. மாமிச உணவுகளுக்கு தனக்கென்ற ஒரு பெயரை தக்கவைத்துள்ளனர். கடலுணவும் மிகச் சிறப்பாக இருக்கும். அதிலும் குறிப்பாக உங்கள் மேசையிலேயே தயாரிக்கப்படும் இரால் பிஸ்க் உங்கள் மiதை கவர்ந்திடும். செங்கல் பதித்த உற்புர சுவரோடு மிக அழகாக பழங்கால வடிவில் அமைக்கப்பட்டு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த இடம் ஒரு பழங்கால உணர்வை உங்களுக்கு வழங்குகின்றது. சிறந்த உணவு,சிறந்த சூழல் மற்றும் சிறந்த நிறுவனமான இதில் நாங்கள் தொலைந்துவிட்டோம்.

விலாசம் – 77 காலி வீதி, சினமன் க்ரேன்ட்.

திறந்திருக்கும் நேரம்- பி.ப 7 மணியிலிருந்து 11 மணிவரை

இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம் – ரூ.6000 இற்கு மேல்

ரொபாடா க்ரில் என்ட் லோஜ் – மூவ்என்பிக் கொழும்பு

7 வகையான ஆசிய உணவு வகைகள், சாதாரண விலை, நட்சத்திர சேவை மற்றும் நம்பமுடியாத வசதியான சுற்றுபுறசூழலோடு அமையப்பெற்றுள்ள ரோபாட்டாவைப் பற்றி பாராட்ட வார்த்தைகளே இல்லை.மங்கலான ஒளி விளக்குகள் மற்றும் தனியார் பகுதிகள் தம்பதிகளுக்கு போதுமான மற்றும் அதிக தனிமையை வழங்குகின்றன, மேலும் இங்கு கிடைக்கும் உணவு முற்றிலும் சுவையாக இருக்கும்!
விலாசம் – 2ம் மாடி, 24, ஸ்ரீமத் அநாகரிக தர்மபால மாவத்தை, கொழும்பு 03

திறந்நதிருக்கும் நேரம் – பி.ப 12 – பி.ப 3 , பி.ப 7 – பி.ப 11 (கடைசி ஓர்டர்)
இருவருக்கான கட்டணம்: ரூ 2500 இற்கு மேல்

டின்டெகல் கொழும்பு

டின்டெகல் மிகவும் தனித்துவமான இடமாகும். மனதைக் கவரும் வகையில் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. மெழுகுவர்த்தி ஒளியில் டேட்டிங் செய்ய மற்றொரு சிறந்த இடம் இதுவே!

விலாசம்: 65 ரோஸ்மெட் ப்ளேஸ், கொழும்பு 07
திறந்திருக்கும் நேரம் : மு.ப 6.30 இலிருந்து பி.ப 10.30 வரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.8000

நிஹோன்பஸி (யகிடோரி கார்டன் என்ட் ஹொன்டென்)

இலங்கையில் சிறந்த ஜப்பானிய உணவு வகைகளை வழங்கும் சிறந்த ஜப்பானிய உணவகங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. நேர்த்தியான Yakitori Garden மற்றும் Nihonbashi Honten ஆகியவற்றிற்கு இடையே ஒன்றை நீங்கள் தெரிவு செய்யலாம் – இரண்டும் உங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. Yakitori Garden கோழியுணவுகளுக்கான பிரத்தியேக மெனுவை உள்ளடக்கியது. Honten இன் Zen rock தோட்டம் மற்றும் Sushi Bar ஐ உள்ளடக்கிய மூங்கிலகளால் அலங்கரிக்கப்பட்ட சுற்றுப்புறம் மனதிற்கு அமைதியை உருவாக்கும்.

விலாசம்: 11 கோல் ஃபேஸ் டெர்ரஸ், கொழும்பு 03
திறந்திருக்கும் நேரம் : பி.ப 12 இலிருந்து பி.ப 2.30 வரை , பி.ப 6 இலிருந்து பி.ப 10.30 வரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.6000 முதல்

த கோல்ட்ப்ளொக்

கொழும்பைச் சுற்றியுள்ள இத்தாலிய உணவுகளை அனுபவிக்க சிறந்த இடங்களில் இதுவும் ஒன்று.அனைத்து தக்காளி மற்றும் பெல் பெப்பர்ஸ் மற்றும் டேங்கி சாஸ்கள் உடன் இறுதியாக ஒரு இன்பத்தை அனுபவித்திட Wine உம் உள்ளது.’காதல் விடயத்தில் இத்தாலியர்களை மிஞ்சியவர்கள் இல்லை’ என்ற பழமொழியின் ஆழத்தையும் இதன் மூலம் நாம் அனைவரும் அறிவோம்.

விலாசம் : 5 ஆம் மாடி, த கோல்ட்ப்ளொக், 101ஃ11 ஹூனுபிட்டிய லேக் வீதி,
திறந்திருக்கும் நேரம் : பி.ப 12 இலிருந்து பி.ப 11 மணி வரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.2500 முதல்

ப்ரீஸ் பர்ராகுடா

பல ஆண்டுகளாக கொழும்பு உணவுக் காட்சியில் நிலையான பெயர்களில் ஒன்றாக திகழ்கிறது Breeze Barracuda என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. Galle Face Green இல் ப்யூஷன் மெனுவையும் சிறந்த கடற்கரை அனுபவத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

விலாசம் : இல 10 , கோல் பேஸ் ட்ரைவ், கொழும்பு 03
திறந்திருக்கும் நேரம் : திங்கள் – வியாழன்: பி.ப 3 மணியிலிருந்து பி.ப 1 மணி வரை, வெள்ளி மற்றும் சனிக்கிழமை: பி.ப 12 மணியிலிருந்து 2 மணிவரை, ஞாயிற்றுகிழமை: பி.ப 12 மணியிலிருந்து மு.ப 1 மணிவரை.
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.4000

கிங் ஒஃப் த மெம்போ

கியூபா-மத்தியதரைக் கடல் உணவுகள் முதல் அழகான சூரிய அஸ்தமனம் வரை அனைத்தையும் பெற்றுத்தரும் ஒரே இடமாகத் திகழும் இந்த இடம் ஒரு சிறந்த டேட்டிங் அனுபவத்தை பெற்றுத்தரும் இடமாகும். நீங்கள் எப்பொழுதும் ஒரு காக்டெய்ல் அல்லது இரண்டு காக்டெய்ல்கள் மூலம் நிறைவுபெறலாம்.
வாரம் முழுவதும் மகிழ்ச்சியான நேரத்தை உங்களுக்குப் பெற்றுத்தர அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

விலாசம்: காலி பிரதான வீதி கொழும்பு 03
திறந்திருக்கும் நேரம் : பி.ப 3 மணியிலிருந்து மு.ப 2 மணிவரை(வாரநாட்கள்) , பி.ப 12 மணியிலிருந்து மு.ப 2 மணிவரை (வாரஇறுதி நாட்கள்)
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.3000 முதல்

Fiftykay Orchids at the Edge

சிறந்த இராப்பொழுது டேட்டிங் அனுவபவத்திற்கான இடத்தை தேடுகிறீர்களா? அப்படியென்றால் குகைவலமயல Fiftykay Orchids ஐ நீங்கள் தவற விடக்கூடாது.சுற்றிலும்கொடிகளால் நிறைந்த கண்ணாடியால் சூழப்பட்ட பெட்டியினுள்ளே உணவருந்தலாம். நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஆர்க்கிட்ஸுக்கு மட்டுமென்று ஒரு அருங்காட்சியகம் உள்ளது! இந்த இடம் ஒரு சிறந்த இடம் என்பதை நீங்கள் சென்று பார்த்தே உணரமுடியும்.
விலாசம்: 316 பன்னிபிடிய வீதி ஸ்ரீ ஜயவர்தன புறக்கோட்டை
திறந்திருக்கும் நேரம்:இரவுணவுக்காக
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.12000 முதல்

த்ரீ ப்ரதர்ஸ் இட்டாலியன் பிஸ்ட்ரோ

மரத்திலான அடுப்புகள், செங்கற் சுவர்கள் மற்றும் வரிசையாக அடுக்கப்பட்ட றiநெ போத்தல்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட இத்தாலியன் அனுபவத்தை தருமிடமாகத் திகழ்கிறது.

சமையலில் இருந்து அழகான விளக்குகள் வரை அனைத்தும் காதலுணர்வை ஏற்படுத்துகின்றன. இப்போதே இந்த இடத்திற்கு சென்று பாருங்கள்!

விலாசம்: 180 பார்க் வீதி, கொழும்பு 05
திறந்திருக்கும் நேரம்: பி.ப 12 மணியிலிருந்து பி.ப 3 மணிவரை, பி.ப 6 மணியிலிருந்து பி.ப 11 மணிவரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.2500 முதல

The Embazzy
வசதியாகவும் கவர்ச்சியாகவும் அமைந்திருக்கும் இந்த மலர்களால் சூழ்;ந்த பாதை பார்வையை ஈர்க்கிறது. இங்கு தயாரிக்கப்படும் உணவுகளும் அவர்களின் சேவைகளும் மிகவும் சிறப்பாக இருக்கும். ஒருமுறை சென்று பார்ப்பதன் மூலம் நீங்களே தெரிந்துகொள்ளுவீர்கள். தனித்துவமான சூழலுக்காகவே மேல் மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சாதாரண டேட்டிங் இற்கு இவ்விடம் பரிந்துரைக்கப்படுகிறது.
விலாசம்: 76/1 ப்ளவர் வீதி கொழும்பு 07
விலாசம்: மு.ப 7 மணியிலிருந்து மு.ப 12 மணிவரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.4500 முதல்
Virticle by Jetwing
29 மாடிகளோடு அமையப்பெற்ற கொழும்பில் அமைதியான அனுபவத்தை தருமிடத்திற்கு சென்று நீங்கள் உங்கள் அன்பானவருக்கொரு ஆழமான கவனிப்பை வழங்கலாம். இந்த இடம் சிறந்த உணவு மற்றும் ஒரு தீவிர காதல் அனுபவத்தையும் பெற்றுத்தரும். மேலும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
விலாசம்: எக்ஸஸ் சௌத் டவர், 278/4, யூனியன் வீதி, கொழும்பு 02

திறந்திருக்கும் நேரம்: திங்கள்- மு.ப 11 மணியிலிருந்து பி.ப 11 மணிவரை , செவ்வாய்,புதன்,வியாழன், ஞாயிறு பி.ப 5 மணியிலிருந்து பி.ப 11 மணிவரை , வெள்ளி மற்றும் சனி பி.ப 5 மணியிலிருந்து- மு.ப 12 மணிவரை

இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.6000

WARD7

கொழும்பின் மையத்தில் உள்ள புகழ்பெற்ற rooftop resto-bar கொழும்பின் சுற்றுப்புற அழகிய காட்சியை உங்கள் பார்வைக்கு தருகிறது. இந்த அழகிய காட்சிகளுடன் சூரியன் அஸ்தமனமாகும் வேளை குளிர்ந்த நீச்சல் அனுபவத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

விலாசம்: 57 வார்ட் ப்ளேஸ் கொழும்பு 07
திறந்திருக்கும் நேரம் – மு.ப 10 மணியிலிருந்து மு.ப 1 மணிவரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.6000

Rocco’s

நிச்சயமாக ஒரு வசதியான பீட்சா உணவுக்காக டேட்டிங் செல்ல வேண்டிய இடம் இதுவாகத்தான் இருக்கும்.’இத்தாலியன்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நீங்கள் நினைக்கும் அனைத்தையும் இவர்கள் கொண்டிருக்கிறார்கள். wood-fired பீட்சா, பாஸ்தா மற்றும் பல இத்தாலியன் உணவுகளையும் கொண்டிருக்கிறார்கள். பல விதவிதமான தனித்துவ உணவுகளை உள்ளடக்கிய மெனுவை வழங்கி நம்பகான நற்பெயரோடு திகழ்கிறது.

விலாசம்: 615 யு நாவல வீதி ராஜகிரிய

திறந்திருக்கும் நேரம் – மு.ப 11 மணியிலிருந்து பி.ப 10 மணிவரை (திங்கள்- வியாழன் வரை) மு.ப 11 மணியிலிருந்து பி.ப 11 மணிவரை (வெள்ளி முதல் ஞாயிறு வரை)
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.2000 முதல்

Central – Shangri-La Colombo

இரு இரண்டாம் தர நிலை -தனியார் அறைகளுடன், சென்ட்ரல் ஒரு நெருக்கமான டேட்டிங் கொண்டாட்டத்திற்கு ஏற்றது. ஜப்பானிய, இந்திய, மேற்கத்திய மற்றும் தென்கிழக்காசிய போன்ற இடங்களின் உணவுகள் முதல் சர்வதேசதர உணவு வகைகள் வரை ஏராளமான சுவைகளுடன் கூடிய காதல் மாலைப்பொழுதொன்றை இங்கு நீங்கள் அனுபவிக்கலாம்.

விலாசம் – 2, 1 கொழும்பு- காலி – ஹம்பாந்தோட்டை வெல்லவாய அதிவேக வீதி கொழும்பு 02

திறந்திருக்கும் நேரம் – மு.ப 12 மணிமுதல் பிஇப 11 மணிவரை

இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.10000 முதல்

Central – Shangri-La Colombo

பெய்ஜிங்கின் பாரம்பரிய சிஹேயுவான் வீடுகளால் ஈர்க்கப்பட்டு, நவீன ஆடம்பரத்துடன் இணைந்த ஷாங் அரண்மனை, நீங்களும் உங்கள் துணையோடு சுவையான உணவுகளை ருசித்து மறக்கமுடியாத ஒரு டேட்டிங் அனுபவத்தை பெற ஏற்றதாகும்.

திறந்திருக்கும் நேரம் – செவ்வாய் – ஞாயிறு: பகலுணவு மு.ப 12 மணியிலிருந்து பிஇப 3 மணிவரை, இரவுணவு பி.ப 6.30 மணியிலிருந்து பிஇப 11 மணிவரை
வார இறுதியில் பி.ப 12 மணியிலிருந்து பி.ப 3 மணிவரை

இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.4000 முதல்

Capitol Bar and Grill – Shangri-La Colombo

தனித்துவமானதொரு சூழலை வழங்கி ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்போடு காணப்படும் கெபிடல் பார் மற்றும் கிரில் நெருக்கமான அனுபவத்திற்கு ஏற்றதாக இருக்கும். அவர்கள் மிகச்சிறந்த ஸ்டீக்ஸ் மற்றும் பிற இறைச்சியுணவுகளை liverly bar உடன் பரிபூரணமாக பரிமாறுகிறார்கள்!

திறந்திருக்கும் நேரம் – திங்கள் முதல் சனி வரை மு.ப 6.30 இலிருந்து பி.ப 11 மணிவரை

இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.4000 முதல்

Plates

பிளேட்ஸில் நீங்கள் டேட்டிங் செய்வதன் மூலம் தற்காலத்திற்கேற்ற உட்புறச்சூழலில் கலாச்சார பாரம்பரிய உணவுகளையும் சுவைத்திடலாம்.

உங்கள் உணவை நிறைவுசெய்யும் தனித்துவமான பானங்கள் – உங்கள் டேட்டிங் இற்கான சிறந்த வழியாகும்.

விலாசம்: 77 காலிவீதி, கொழும்பு 03
திறந்திருக்கும் நேரம் – புபே மு.ப 6 மணியிலிருந்து பி.ப 11 மணிவரை (வார இறுதியில்) A’ la Carte  டைனிங் மு.ப 11 மணியிலிருந்து பி.ப 11 மணிவரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.5000 முதல்

The Gallery Cafe

பாரடைஸ் வீதியிலமைந்துள்ள, கேலரி கெபே, கலைப்படைப்புகள் மற்றும் சிறந்த உணவுகளின் கலவையுடன், உங்கள் டேட்டிங் இற்கேற்ற அழகான கட்டடக்கலை ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட உணவகம்! கேலரி கெபே நம் நாட்டு மற்றும் சர்வதேச உணவு வகைகளையும் வழங்குகிறது.

விலாசம் – 2 எல்ப்ரெட் ஹவுஸ் வீதி கொழும்;பு 03
திறந்திருக்கும் நேரம் – மு.ப 10 மணியிலிருந்து 12 மணிவரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.5000 முதல்

The Breeze Bar

தி ப்ரீஸ் பாரில் சில காக்டெயில்கள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளுடன் அமைதியான, நிதானமான மற்றும் தனிப்பட்ட தருணத்தை அனுபவித்து மகிழலாம்!
விலாசம்- 77 காலிவீதி கொழும்பு 03

திறந்திருக்கும் நேரம் – மு.ப 10 மணியிலிருந்து மு.ப 12 மணிவரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.3000 முதல்

Ministry Of Crab

நண்டு இறைச்சியின் மூலம் உங்கள் டேட்டிங் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். இது புதிய கடல் உணவு அனுபவத்தைப் தரக்கூடியது! வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவமனையில் அமைந்துள்ள, மினிஸ்ட்ரீ ஒப் க்ரேப் எல்லாவிதத்திலும் உற்சாகத்தைப் பெற்றுத்தருகிறது. மறக்கமுடியாத டேட்டிங் அனுபவத்தோடு ஒரு சிறந்த நாளைக் கொண்டாட இது ஒரு அற்புதமான இடமாகும்.

விலாசம் – ஹோல்ட் டட்ச் ஹொஸ்பிடல் கொம்ப்லெக்ஸ் 04 ஹொஸ்பிடல் ஸ்ட்ரீட் கொழும்பு 01

திறந்திருக்கும் நேரம் – சீடிங் டைம்ஸ் பகலுணவு பி.ப 12 – பி.ப 3.30 வரை இரவுணவு பி.ப 5 மணிமுதல் பி.ப 8.30 மணிவரை

இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.14000 முதல்

Kuuraku

சுஷி ரோல்ஸ் ஐ அனுபவிக்க வேண்டுமா? குராகு என்பது அற்புதமான சுவையுடனான ஜப்பானிய உணவுகளைக் கொண்ட இடமாகும் . இதனை சிறிய ஜப்பான் என்றும் கூறலாம். வெளிநாட்டில் டேட்டிங் செய்த அனுபவத்தை பெறவேண்டுமா? அதற்கான சிறந்;த தெரிவு நிச்சயம் குராகு தான்.

திறந்திருக்கும் நேரம் – திங்கள்- புதன்கிழமை பி.ப 12 மணியிலிருந்து பி.ப 10.30 வரை வியாழக்கிழமை சனிக்கிழமை பி.ப 12 மணியிலிருந்து பி.ப11 மணிவரை
ஞாயிறு பி.ப 6 மணியிலிருந்து பி.ப 11 மணிவரை மு.ப 12 மணிவரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.2000 முதல்

Monsoon at Park Street Mews

சில பிரத்தியேக தென்கிழக்கு ஆசிய உணவு வகைகளை அனுபவித்திட ஆசையாக உள்ளதா? நீங்கள் உங்கள் துணையும் சேர்ந்து மான்சூனுடன் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய் மற்றும் வியட்நாம் சுவைகளில் கொஞ்சம் சாகசமாக உணவுகளை ருசிக்கும் டேட்டிங் அனுபவமிது.

விலாசம் – 50, 2 பார்க் வீதி Mews 00200

திறந்திருக்கும் நேரம் – ஞாயிறு வியாழன் பி.ப 12 மணிவரை பி.பூ மணிவரை வெள்ளி சனி பி.ப 12 மணியிலிருந்து பி.ப 11.30 மணிவரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.4000 முதல்

Table by Taru

டேபிள் பை தரு என்பது கொழும்பில் உள்ள சூடான டேட்டிங் தளமாகும். உயர்ந்த உணவகம் என்பதால் விலை சற்று அதிகம் தான். ஒரு விஷேட நிகழ்வைக் கொண்டாட வேண்டுமெனில் அதற்காக டேபிள் பை தருவை நாங்கள் பரிந்துரைக்கிறோம்!

விலாசம் – லேக் லொட்ஜ் 20 எல்விஸ் டெர்ரஸ் கொழும்பு 3

திறந்திருக்கும் நேரம் – காலையுணவு மற்றும் பகலுணவு மு.ப 8 மணியிலிருந்து பிஇப 2 மணிவரை இரவுணவு பி.ப 7 மணியிலிருந்து பி.ப 10 மணிவரை

இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.8000 முதல்

Crystal Jade at One Galle Face

மிச்செலின் நட்சத்திர ஜோடிகளுக்கு மிச்செலின் நட்சத்திர உணவகம்! கிரிஸ்டல் ஜேடில் சில உண்மையான சீன சுவையான உணவுகளை உங்கள் துணையோடு ருசித்து மகிழுங்கள்!

விலாசம் – 1 ய கோல் பேஸ் சென்டர் வீதி கொழும்பு 02

திறந்திருக்கும் நேரம் – மு.ப 11 மணியிலிருந்து பி.ப 9.30 மணியிலிருந்து

இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.5000 முதல்

Botanik Rooftop Bistro and Bar

மாலை மங்கும் வேளையில் கொழும்பு நகரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே புத்துணர்ச்சியூட்டும் காக்டெய்லைப் பருகி, உங்கள் அன்புக்குரியவருடன் இதமான குளிர்காற்றை அனுபவிக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இது உங்களுக்காக.

விலாசம் – 7 ஹொஸ்பிடல் வீதி கொழும்பு 01

திறந்திருக்கும் நேரம் – செவ்வாய், புதன், ஞாயிறு – பி.ப 5 மணியிலிருந்து மு.ப 12 மணிவரை, வெள்ளி சனி பி.ப 5 மணியிலிருந்து மு.ப 1 மணிவரை (திங்கட்கிழமையில் மூடப்பட்டுள்ளது.)

இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.4000 முதல்

Rare at Residence

சிறந்த உணவோடு ரேர் எட் ரெசிடென்ஸ் மூலம் உங்கள் துணையுடன் நேர்த்தியான டேட்டிங் இல் இணைந்திடுங்கள்.

விலாசம் – இல 20 பார்க் வீதி கொழும்பு 02

திறந்திருக்கும் நேரம் – காலையுணவு, பகலுணவு, மு.ப 7 மணியிலிருந்து பி.ப 11 மணிவரை

இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.5000 முதல்

Zen Japanese Restaurant

உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான அழகிய சூழலில் ஜப்பானிய சுவைகளை அனுபவித்திடுங்கள்.

zen ஜப்பானிய உணவகம் உங்களுக்கான சிறந்த காதலுக்கான டேட்டிங் இரவை வழங்குவதை உறுதி செய்கிறது.!

விலாசம் – 115 ரோஸ்மெட் ப்ளேஸ் கொழும்பு 07
திறந்திருக்கும் நேரம் – பகலுணவு பி.ப 12 மணிவரை பி.ப 2.30 வரை , பி.ப 6 மணியிலிருந்து பி.ப 10 மணிவரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.4000 முதல்

Sugar Beach

கடற்கரைத் டேட்டிங் என்பது ஒவ்வொரு தம்பதிகளும் அனுபவிக்க வேண்டிய ஒன்று – சில சிறந்த உணவுகளுடன் உங்கள் பசியைத் திருப்திப்படுத்தும் போது உங்கள் துணையுடன் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக்கொண்டே காதலை ரசிப்பதை விட சிறந்தது எது?

விலாசம்- 43/11A பீச் , ஹொட்டல் வீதி, 10350

திறந்திருக்கும் நேரம் – திங்கள் – வெள்ளி மு.ப 10 மணியிலிருந்து மு.ப 12 மணிவரை சனி மற்றும் ஞாயிறு மு.ப 9 மணியிலிருந்து மு.ப 12 மணிவரை

இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.4000 முதல்

Revolution Colombo

நீங்கள் ஒரு காக்டெய்ல் பருகும்போது சில சிறந்த மெக்சிகன் உணவுகளையும் ருசிக்கலாம். டிஜுவானா ஈர்க்கப்பட்ட உட்புறத்தில் திளைத்து ஒரு கவர்ச்சியான உணவு அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் டேட்டிங் இற்கான இடமிது.

விலாசம்: ட்ரில்லியம் ஹொட்டல் ரூஃப் டொப் , 7 டொரிங்டன் அவனியூ, கொழும்பு 07
திறந்திருக்கும் நேரம் – திங்கள் – ஞாயிறு மு.ப 11 மணியிலிருந்து மு.ப 2 மணிவரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.5000 முதல்

Bombay Borough

அவர்களின் கில்லர் காக்டெயில்கள், சுவையான இந்திய உணவுகள் மற்றும் கண்களை கவரும் அழகிய காட்சிகளோடு டீழஅடியல டீழசழரபா நிச்சயமாக உங்கள் துணையுடன் சேர்ந்து நீங்கள் பார்க்கக்கூடிய hழவ ளிழவள களில் ஒன்றாகும்!

விலாசம்- டு1இ ஒன் கோல் ஃபேஸ் மோல் கொழும்பு – காலி பிரதான வீதி கொழும்பு
திறந்திருக்கும் நேரம் – திங்கள் – ஞாயிறு பி.ப 12 மணியிலிருந்து பி.ப 10 மணிவரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.6000 முதல்

Bakery At The Lake

உங்கள் அழகியுடன் விரைவானதொரு இன்பமான டேட்டிங் செல்ல ஒரு அழகான இடத்தைத் தேடுகிறீர்களா? வாட்டர்ஸ் எட்ஜில் உள்ள ஏரியில் உள்ள பேக்கரி நிச்சயம் உங்களுக்கு அந்த அனுபவத்தை தரும்.

விலாசம் – கிம்புலாவெல ஜங்ஷன், தளவதுகொட ஸ்ரீ ஜயவர்தன புறகோட்டை
திறந்திருக்கும் நேரம் – திங்கள் – ஞாயிறு முப 6 மணியிலிருந்து பி.ப 9 மணிவரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.3000 முதல்

Lago Italian Bistro

கொஞ்சம் ஷொப்பிங் டேட்டிங்கை இன்னும் காரசாரமாக மாற்ற வேண்டுமா? ஷொப்பிங்கிலிருந்து சிறிது ஓய்வு எடுத்து, லாகோ இத்தாலியன் பிஸ்ட்ரோவில் சில அயல்நாட்டு இத்தாலிய உணவு வகைகளை அனுபவித்திடுங்கள்.
விலாசம் – கீழ் மாடி, 137 சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை கொழும்பு 2
திறந்திருக்கும் நேரம் – திங்கள் – ஞாயிறு மு.ப 11.30 மணியிலிருந்து பி.ப 10 மணிவரை

இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.5000 முதல்

Barefoot Garden Cafe

வெயில் நாட்களில் சில சுவையான உணவுகளுடன் குளிர்ந்த தேநீர் (அல்லது குளிர்ந்த பீர்) டேட்டிங்கிற்காக உங்களை அழைக்கிறது. டீயசநகழழவ புயசனநn ஊயகந கட்டாயம் ஒருமுறையாவது நீங்கள் சென்று பார்க்க வேண்டிய இடம்!

விலாசம் – 704 காலிவீதி கொழும்பு 03
திறந்திருக்கும் நேரம் – திங்கள் – ஞாயிறு மு.ப 10 மணியிலிருந்து பி.ப 6 மணிவரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.3000 முதல்

Cafe Ivy

நீங்கள் இருவரும் சோர்வான, நீண்ட வார அனுபவத்தில்; இருந்திருக்கிறீர்கள? ஓய்வெடுக்கவும் காதலை பகிரவும் ஒரு இடம் தேவையா? ஊயகந ஐஎல உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவருக்குமான சிறந்த இடம்!

திறந்திருக்கும் நேரம் – திங்கள் – வெள்ளி மு.ப 11 மணிமுதல் பி.ப 10 மணிவரை சனி மற்றும் ஞாயிறு மு.ப 8 மணியிலிருந்து பி.ப 10 மணிவரை

இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.3000 முதல்

Kimbula Cafe

டேட்டிங் இன்னும் சிறப்பாக வேண்டுமா? ஆம், பெயரிலேயே குறிப்பிடப்படுவது போலவே, பழமையான கிம்புலா பனிஸ் வௌ;வேறு சுவைகள் மற்றும் மாறுபாடுகளை உள்ளடக்கிய அவர்களின் சுவையான தயாரிப்புகள் நிச்சயமாக உங்கள் மனதைக் கவரும்!

விலாசம் : 35 டி.ஸ்.ஃபொன்சேகா வீதி கொழும்பு 05
திறந்திருக்கும் நேரம் – புதன் – ஞாயிறு மு.ப 9 மணியிலிருந்து பி.ப 9 மணிவரை
திங்கள் மு.ப 9 மணியிலிருந்து பி.ப 5 மணிவரை (செவ்வாய் கிழமைகளில் மூடப்பட்டுள்ளது)

இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.4000 முதல்

Uncle’s Colombo

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் துணையுடன் இணைந்து பானத்தை அருந்துவதோடு டேட்டிங் செய்ய விரும்புகிறீர்களா? சிறந்த அழகான குளிர்ச்சியான இடத்தைத் தேடுகிறீர்களா? அப்படியென்றால் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம் Uncle’s தான்!

விலாசம் : 48C பார்க் வீதி கொழும்பு 02
திறந்திருக்கும் நேரம் – திங்கள் – ஞாயிறு பி.ப 5 மணியிலிருந்து மு.ப 12 மணிவரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.4000 முதல்

Cafe 1959

உங்கள் டேட்;டிங் உடன் ஓய்வெடுக்கவும், அன்பை தனிமையில் பகிர்ந்து கொள்ளவும் இனிமையாக உரையாடல்களில் ஈடுபடவும் பழமையான இடங்களைத் தேடுகிறீர்களா? Cafe 1959 ஐ ஏன் நீங்கள் தெரிவு செய்யக்கூடாது?
விலாசம்: 746 காலிவீதி கொழும்பு 4
திறந்திருக்கும் நேரம்- திங்கள் – ஞாயிறு மு.ப 9 மணியிலிருந்து பி.ப 9 மணிவரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.4000 முதல்

Giovanni’s Pesto Pizza

நீங்களும் உங்கள் துணையும் கொழும்பு நகரத்தில் உள்ள மிகவும் சுவையான பீட்சாவை அனுபவிக்க ஒரு சிறிய இடத்தைத் தேடுகிறீர்கள் என்றால், புழைஎயnni’ள தான் செல்ல வேண்டிய இடம்! பழமையான உட்புறம் மற்றும் அழகிய சூழலோடு இத்தாலிய பீட்;சா மற்றும் ஒரு கிளாஸ் றiநெ உடன் இங்கு டேட்டிங் செய்வது உண்மையிலேயே சொர்க்கம் தான்.

விலாசம்- 145 திம்பிரிகஸ்யாய வீதி கொழும்பு 05
திறந்திருக்கும் நேரம்- திங்கள் – வியாழன் மு.ப 4.30 மணியிலிருந்து பி.ப 11 மணிவரை வெள்ளி – சனி பி.ப 4 மணியிலிருந்து பி.ப 11 மணிவரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.4500 முதல்

The Bayleaf

தற்போது Harpo’s முன்னணியில் இருப்பதால், உங்கள் அடுத்த நாள் இரவைக் கழிக்க நீங்கள் தேடும் உணவகமாக The Bayleaf  கொழும்பு 7
திறந்திருக்கும் நேரம்- திங்கள் – ஞாயிறு மு.ப 11 மணியிலிருந்து பி.ப 11 மணிவரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.4500 முதல்

Kiku Colombo

ஒரு அழகான மற்றும் வசதியான டேட்டிங்கில் எப்போதும் தவற விடக்கூடாது. Kiku Colombo முதல் டேட்டிங்கிற்கான ஒரு சிறந்த இடமாகும். நீங்கள் அதற்கு பொருத்தமாக இருந்தால், முமைர நிச்சயமாக நீங்கள் சென்று பார்க்க வேண்டிய ஒரு விருப்பத்தெரிவாகும். ஏனெனில் அவர்களிடம் சுவையான ஆரோக்கியமான உணவுகள் உள்ளன!

விலாசம்- லாயர்ட்ஸ் வீதி கொழும்பு 5
திறந்திருக்கும் நேரம்- செவ்வாய் – ஞாயிறு மு.ப 9 மணியிலிருந்து பி.ப 9 மணிவரை (திங்கட்கிழமைகளில் மூடப்பட்டுள்ளது)
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.3500 முதல்

Dolce Italia

கொழும்பில் உண்மையான இத்தாலிய தயாரிப்புகள் மக்கள் விரும்பத்தக்கவை. எனவே, உங்கள் துணையுடன் மகிழ்வதற்கு நல்ல இத்தாலிய உணவுகள் உள்ள இடத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், Dolce Italia 
இற்கு நிச்சயம் நீங்கள் செல்ல வேண்டும்!
விலாசம்- 5 ஸ்கெல்டன் வீதி கொழும்பு 5
திறந்திருக்கும் நேரம்- திங்கள் – ஞாயிறு மு.ப 7 மணியிலிருந்து பி.ப 11 மணிவரை

இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.4000 முதல்

The Bavarian German Restaurant

கொழும்பில் உள்ள கவர்ச்சியான hot spots களில் ஒன்று, உங்களுக்கும் உங்கள் துணைக்கும் தகுதியான விருந்தை வழங்குவதற்காக, அவர்களின் அற்புதமான உணவுகளுக்கு பெயர் பெற்ற The Bavarian கூடுதலாக, நீங்கள் இருவரும் இறைச்சி பிரியர்களாக இருந்தால், அவர்களின் மாமிசங்கள் தவறாமல் ருசிக்க வேண்டும்!

விலாசம்- 11 கோல் பேஸ் டெர்ரஸ் கொழும்பு 3

திறந்திருக்கும் நேரம்- ஞாயிறு மற்றும் திங்கள் – பி.ப 12 மணியிலிருந்து பி.ப 3 மணிவரை , பி.ப 6 மணியிலிருந்து பி.ப 11 மணிவரை செவ்வாய், வெள்ளி சனி பி.ப 12 மணியிலிருந்து பி.ப 3 மணிவரை பி.ப 6 மணியிலிருந்து மு.ப 12 மணிவரை புதன் பி.ப 12 மணியிலிரந்து பி.ப 3 மணிவரை வியாழன் பி.ப 12 மணியிலிருந்து பி.ப 3 மணிவரை பி.ப 6 மணியிலிருந்து 7 மணிவரை

இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.5000 முதல்

Coffee and Company

ஒரு வசதியான உட்புறத்தில் கையில் தேநீருடன் தனிமையான உரையாடலை மேற்கொள்ளும் சரியான டேட்டிங்கிற்கு ஏற் இடம் போல் தெரிகிறது, இல்லையா? உங்கள் காதலியுடன் இதமடைய Coffee and Company இற்குச் செல்லுங்கள்!

விலாசம்: 37ஃ3 பெட்;ரீஸ் வீதி, கொழும்பு 3
திறந்திருக்கும் நேரம்: திங்கள் – ஞாயிறு மு.ப 8 முதல் பி.ப 11 மணிவரை
இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.3000 முதல்

Irish Bar and Grill

Irish Bar and Grill இல் உங்களின் காலுடன் கொஞ்சம் மகிழ்ந்திடுங்கள்.
விலாசம் : 63 பார்க் வீதி கொழும்பு 2

திறந்திருக்கும் நேரம்: ஞாயிறு வியாழன் பி.ப 12 மணியிலிருந்து பி.ப 11 மணிவரை வெள்ளி மற்றும் சனி பி.ப 12 மணியிலிருந்து பி.ப 2 மணிவரை

இருவருக்கான மதிப்பீட்டு கட்டணம்: ரூ.5000 முதல்

எங்கள் பட்டியலை இத்தோடு நிறைவு செய்துகொள்கிறோம். இந்த தகவல்கள் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எங்களுடைய இந்தப் பதிவகளில் உங்களுக்குப் பிடித்த டேட்டிங் இடங்கள் ஏதேனும் ஒன்றை நாங்கள் தவறவிட்டிருந்தால் தயங்காமல் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!

உலகெங்கும் ஒலிக்கும் வானொலியின் தினம் இன்று..!

பண்டைய காலத்தில் தகவல் தொடர்பாடல் என்பது தீயை மூட்டுதல்,கூக்குரலிடுதல், பறவைகள் வாயிலாக கடிதங்களை அனுப்பிவைத்தல் என்றெல்லாம் பல முறைகளில் இடம்பெற்றது. தொழினுட்பத்தின் அசுர வேகத்தின் காரணமாக தகவல் பரிமாற்றமென்பது பத்திரிகை,வானொலி, தொலைக்காட்சி, வலைத்தளங்கள் என படிப்படியாக வேறொரு பரிணாம வளர்ச்சியை நோக்கி பயணம் செய்துகொண்டிருக்கின்றது. அப்படியிருக்க ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை செவிகளுக்கு விருந்துகொடுத்து செய்திகளை எடுத்துக்கூற மற்றும் தகவல்களைப் பரிமாற்ற உருவாக்கப்பட்ட செவிப்புல சாதனம் தான் வானொலி.

நம் தாத்தா பாட்டி காலத்தில் தொலைக்காட்சியில்லையென்றாலும் வீட்டுக்கொரு வானொலி இருந்திருக்கும். அதிலும் ஊரில் வானொலிப்பெட்டியை எவர் வைத்திருந்தாலும் அவர்கள் பணக்காரர்கள் என்று கூறும் அளவிற்கு வானொலியின் மதிப்பு அந்தகாலத்திலேயே இருந்துவந்துள்ளது. படித்த பண்டிதனாக இருக்கட்டும் படிக்காத பாமரருக்கு கூட ஒலி மூலம் செய்திகளை கூறி அவர்களுக்கும் தகவல்களை பரிமாற்றுகிறது. அதுமட்டுமன்றி முந்தைய காலங்களில் இயற்கை பேரழிவுகளோ அல்லது போர் அறிவிப்புகளோ எந்தவொரு சம்பவமாக இருந்தாலும் மிகவும் விரைவில் ஒலி மூலம் மக்களுக்கு அறியத்தருவது வானொலிதான். அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினையளிக்கும் சாதனமே வானொலி என்பதில் ஐயமில்லை.ஆகவே வானொலி தொடர்பாடலுக்கு கிடைத்த மகத்தான ஒன்று என்றே கூறவேண்டும்.

இதை உணர்ந்துகொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ 2011 ஆம் ஆண்டில் பெப்ரவரி 13 ஆம் திகதியை உலக வானொலி தினமாக பிரகடனப்படுத்தியது. இதற்கு அடுத்து ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் 2012 ஆம் ஆண்டு சர்வதேச தினமாக அன்றைய தினம் அங்கீகரிக்கப்பட்டது. வானொலி ஒளிபரப்பாளர்களிடையே சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், தகவல்களை அணுகுவதற்கும், சுதந்திரமான பேச்சுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த வானொலி தினம் நினைவுகூறப்படுகிறது.

குக்லீல்மோ மார்க்கோணியால் 1895 ஆம் ஆண்டு வானொலி கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் இது கம்பியிலா தந்தி என்று அழைக்கப்பட்டதோடு மோர்ஸ் குறியீட்டை பரிமாற்றம் செய்ய வானொலி அலைகள் பயன்படுத்தப்பட்டது. வானொலிகள் மக்களின் வாழ்வோடு பின்ணிப்பிணைந்துவிட்டதென்றே கூறவேண்டும். வேலைக்குச் செல்லும் வழியிலும், வீடுகளிலும், அலுவலகங்களிலும் எந்தவொரு நிலைமைகளிலும் வானொலிகள் தகவல் பரிமாற்றும் அறிவுக்கான ஊன்றுகோலாகவும் அமைகிறது. மனித உரிமைகளினைப் பாதுகாப்பதற்கான சக்தியாக விளங்குவதோடு பேசப்படாத பிரச்சினைகளையும் எடுத்துக்கூறி மக்களின் குரலாக சமூகத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும் வானொலிகள் உண்மையிலேயே சக்திவாய்ந்த ஊடகங்கள் தான். நேயர்களது கருத்துக்களுக்கு செவிசாய்த்து அவர்களுக்கான கருத்துபரிமாற்ற தளமாக இவை அமைகின்றன.

ஐக்கிய நாடுகளின் ஆய்வின்படி உலகம் முழுவதிலும் சுமார் 44000 வானொலி நிலையங்கள் இயங்குவதாகவும், வளர்ந்துவரும் நாடுகளில் சுமார் 75 சதவீதமானளவு வீடுகளில் வானொலி அணுகல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இலங்கையில் 1921 ஆம் ஆண்டு எட்வர்ட் ஹபர் (நுனறயசன ர்யிநச) என்பவரினால் ‘இலங்கை வானொலி சேவை’ ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 1922 ஆம் ஆண்டு ‘இலங்கை வானொலி’ என்ற நாமத்தோடு வானொலிச் சேவை விஸ்தரிக்கப்பட்டது. இதுவே ஆசியாவின் முதல் வானொலி நிலையமாகத் திகழ்கிறது. இதற்கடுத்து 1925 ஆம் ஆண்டு ‘கொழும்பு வானொலி’ என்று அதிகாரப்பூர்வமாக்கப்பட்டு 1949 களில் மீண்டும் இலங்கை வானொலியாக அரச திணைக்களத்தின் கீழ் இயங்கியதைத் தொடர்ந்து 1972 ஆம் ஆண்டு ‘இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்’ என்று பெயர் மாற்றம் பெற்று தற்போது இலங்கை அரசாங்கத்தின் ஊடக தகவல் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு தரமான வானொலி சேவை என்பது சிறந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதாகும். பொழுதுபோக்கு அம்சங்களையும் தாண்டி சாதாரண சமூகத்தில் மற்றும் தங்களது பிரதேசத்தில் இடம்பெறும் முக்கிய பிரச்சனைகளினையும் மக்கள் துயர்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பினை உருவாக்கும் வகையில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்படவேண்டும்.

சமூகவலைத்தளங்களின் பாவணை அதிகரிப்பினால் அந்த காலத்தில் பயன்பட்ட சில அரியவகை கண்டுபிடிப்புகளை மனிதன் மறந்தவண்ணமிருக்கிறான். வானொலிகளின் ஒலியலைகளிளும் நிகழ்ச்சிகளில் கேட்கும் குரல்களிலும் உணரப்படும் ஈர்ப்பை அனுபவிக்காது சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். இதனால் வனொலியை கேட்கும் இளைஞர் சமுதாயம் குன்றிய வண்ணமேயுள்ளது. ஆகையால் மனித வாழ்வின் முக்கிய அங்கமாக இருந்த வானொலியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரவேண்டும். இன்றைய தினம் உலக வானொலி தினம் ‘என்பதை நண்பர்களோடும், அனைவரோடும் பகிர்ந்துகொள்ளுங்கள். இந்த நாளில் வானொலியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை கேட்டு மகிழுங்கள்..!

பாலியல் விளையாட்டுப் பொருட்கள் (Sex Toys): ஆலோசனை மற்றும் வழிகாட்டல்

நீங்களும் உங்கள் இணையரும் படுக்கையறையில் புதிய வகையான சாகசங்களை மேற்கொள்ள தயாராக உள்ளீர்களா? அல்லது நீங்கள் தனிமையில் இருக்கின்றபோதிலும் ஒன்றிணைய தயாராக இல்லையா? ஆனால் இன்னும் கூச்சத்தை உணர்கிறீர்களா?

அப்படியென்றால் பாலியல் உபயோகப் பொருட்களின் உலகிற்குள் நுழைந்துகொள்ளுங்கள், இது இலங்கை சமூகத்தில் தடைசெய்யப்பட்ட தலைப்புதான், அதனால் என்ன? பாலியல் உபயோகப் பொருட்கள் (பாலுறவுகள் அல்லது பெரியவர்களுக்கான பொருட்கள்) உடலுறவு அல்லது சுய இன்பத்தின்போது இன்பத்தை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன. பாதுகாப்பாக உபயோகிக்கப்படும் வரை, அவற்றைப் பயன்படுத்துவது நல்லது.

மக்கள் பாலியல் உபயோகப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு சிலருக்கு, பாலியல் உபயோகப் பொருட்களைப் பயன்படுத்துவது சுகத்தின் உச்சத்தை அடைவதற்கான எளிதான அல்லது ஒரேயொரு வழியாகக்கூட இருக்கலாம். சிலர் சுய இன்பத்திற்கான கூடுதல் கருவியாக இதைப் பயன்படுத்துகின்றனர், மற்றவர்கள் தங்கள் இணையருடன் உடலுறவை மேற்கொள்ளும் போது அவற்றைப் பயன்படுத்துகின்றனர். சில பாலியல் உபயோகப் பொருட்கள் திருநங்கைகள் மற்றும் பாலினத்தை அடையாளம் காணாத நபர்களுக்கு உதவுகின்றது. பாலியல் உபயோகப் பொருட்கள் மாற்றுத்திறனாளிகள் அல்லது குறைந்த செயல்திறனுள்ளவர்கள் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட உதவுகின்றன. பாலியல் உபயோகப் பொருட்கள் இல்லையெனில் உடலுறவு என்பது அவர்களுக்கு சவாலானதாக இருக்கும். அவை விறைப்புச் செயலிழப்பு, பிறப்புறுப்பு விழிப்புணர்வுக் கோளாறு, ஹைபோஆக்டிவ் செக்ஸ் கோளாறு மற்றும் உடலியல் கோளாறு போன்ற சில நோய்களின் அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன. மாதவிடாய் நிறுத்தம் மற்றும் ஒரு சில பிறப்புறுப்பு கோளாறுகள் என்பன உடலில் குறைந்த பாலியல் உணர்வுகளை ஏற்படுத்துகின்ற போதிலும் பாலியல் உபயோகப் பொருட்கள் இந்த பக்க விளைவுகளையும் சமாளிக்க உதவுகின்றன.

இனி தொடங்குவோம்..!

பாலியல் விளையாட்டுப் பொருட்கள் அல்லது உபயோகப் பொருட்கள் பல உள்ளன. உங்கள் தேவையை நன்கு ஆராய்வதன் மூலமாக அல்லது உங்கள் இணையருடன் மனம் விட்டு நேர்பட உரையாடுவதன் மூலம் சரியான ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். அவற்றில் குறிப்பாக மிகவும் பிரபலமான சில பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளது.

Vibrators

இது மிகவும் பிரபலமான ஒன்றாகும். இவ் அதிர்வு இயந்திரம் ஒரு மோட்டாரால் உருவாக்கப்பட்டது. இவை பல்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் வடிவமைப்புகளில் கிடைக்கின்றன. பெரும்பாலான பெண்கள் ஜி-ஸ்பொட்டில் தூண்டுதலைக் காட்டிலும் கிளிட்டோரலில் இருந்து உச்சக்கட்டத்தை அடைகிறார்கள். அத்துடன் இந்த அதிர்வுகள் கிளிட்டோரலின் இரண்டு அல்லது ஒன்றை தூண்டும் திறனைக் கொண்டுள்ளன.

Penis Rings

இது தனி அல்லது இரண்டு தடவைக்கு ஏற்றது. இது ஆண்குறியின் அடிப்பகுதியில் அழுத்தம் கொடுக்கிறது, ஆண்குறியின் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் விறைப்புத்தன்மையை வலுவாகவும் நீண்டதாகவும் வைத்திருக்க உதவுகிறது.

Dildos

தீவிர உட் தூண்டுதலை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. யோனி அல்லது குதவழியில் பயன்படுத்த முடியும். இவை வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் இருக்கின்றன. மேலும் அவை பொதுவாக புரோஸ்ட்ரேட் அல்லது ஜி-ஸ்பாட்டைத் தூண்டும் வகையில் வளைந்திருக்கும். வைப்ரேட்டர்களைப் போலல்லாமல் இது நீங்கள் நகர்த்தும்போது மட்டுமே வேலை செய்யும்.

Penis Pumps

பம்பிங் சிலிண்டரில் காற்றழுத்தம் குறைகிறது மற்றும் வெற்றிடத்தை உருவாக்கும் போது ஆண்குறி விரிவடைகிறது. இதன் விளைவாக முழுமையான சக்திவாய்ந்த மற்றும் நீடித்த விறைப்புத்தன்மை ஏற்படுகிறது.

Butt Plugs

இது நரம்பு முடிவுகளைத் தூண்டுவதற்கும் நீடிப்பதற்கும் இவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை வாய்வழி உடலுறவு அல்லது அதிக நடைமுறை அணுகுமுறையில் பயன்படுத்தப்படலாம். இது அச்சுறுத்தலாக உள்ளது என்ற எண்ணம் இருந்தபோதிலும் இவை உண்மையில் செருகுவதற்கு எளிதானது மற்றும் பயன்படுத்த பாதுகாப்பானது.

Anal Beads 

இது ஆசனவாயில் செருகப்பட்ட அளவில் அமையப்பெற்ற பந்துகளின் தொடர் (சிறப்பு நோக்கத்திற்காக இல்லை). ஸ்பிங்க்டர் தசைகள் சுருங்கி ஒவ்வொரு மணியையும் சுற்றி ஓய்வெடுக்கின்றனஇ இது ஒரு தீவிர உணர்வை அளிக்கிறது. உண்மையான சிலிர்ப்பு அதை அகற்றும்போது ஏற்படுகிறது. அது அனைத்து நரம்பு முடிவுகளையும் தூண்டுகிறதுஇ இது மிகவும் சக்திவாய்ந்த உணர்ச்சியை உருவாக்குகிறது.

Bondage/BDSM Toys

லேசான அடிமைத்தனத்திலிருந்து தீவிர விளையாட்டு வரைஇ அனைவருக்கும் இங்கே ஏதோ இருக்கிறது. மரச்சாமான்கள், கௌவிகள், ஹூட்கள், முகமூடிகள், கண்மூடித்தனங்கள், உறிஞ்சிகள், கட்டுப்பாடுகள், அடிமை காலர்கள், அடிக்கும் கருவிகள் மற்றும் கைவிலங்குகள் ஆகியவை இதில் அடங்கும். ஸ்ட்ராட்போர்ட் அவென்யூவில் உள்ள மிட்நைட் திவாஸில், வாங்குவதற்கு முன் அவற்றைப் பற்றிய உடல் உணர்வைப் பெற விரும்பினால் அவற்றில் பலவற்றைக் காட்சிக்கு வைக்க முயற்சிக்கவும். நீங்கள் alibaba.com இல் ஆர்டர் செய்யவும் முயற்சி செய்யலாம்.

Strap-ons

ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் கிடைக்கும். இது மற்ற பணிகளைத் தொடர கைகளை சுதந்திரமாக வைத்திருக்கும் போது டில்டோஸின் அனைத்து உணர்வுகளையும் வழங்குகிறது.

Role Play

பாலியல் வாழ்க்கையில் தங்களை சிறிது சிறிதாக ஈடுபடுத்துவது பற்றி சிந்திக்கும் தம்பதிகளுக்கு ரோல் ப்ளே ஒரு சிறந்த தொடக்கப் புள்ளியாக இருக்கும். இதன் சிறந்த அம்சம் என்னவென்றால்இ உங்களுக்கு எப்போதும் பொருட்கள் அல்லது விரிவான ஆடைகள் தேவையில்லை. மிட்நைட் திவாஸ் சில ஆடை உத்வேகத்திற்காக உங்களுக்கு சரியான காட்சியை உருவாக்க உதவும். சிறியதாகவும் மெதுவாகவும் இதனை தொடங்கலாம்.

நீங்கள் ஒன்லைனில் அல்லது நேரடியாக ஷொப்பிங் செய்ய Midnight Divas மற்றும் விரும்பினாலும் மேலே குறிப்பிட்டுள்ளபடி Alibaba.com ஆகியவை உங்கள் ஆர்வத்தைத் தூண்டும் பல வகையான பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளன. இதற்கு உதவியாக பல இணையத்தளங்கள் இருந்தாலும் சில பொருட்களை வாங்குவது சற்று கடினமானதாக இருக்கலாம். தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பாலியல் உபயோகப் பொருட்களை வைத்திருப்பதற்கு எதிராக எந்தச் சட்டமும் இல்லை. என்றாலும் விமான நிலையங்கள் மூலமாகவோ அல்லது சில சமயங்களில் பொதிகள் மூலமாகவோ அத்தகைய பொருட்களைக் கொண்டு வருவது பறிமுதல் செய்யப்பட அல்லது சங்கடமான நிலைமைகள் இடம்பெற வழிவகுக்கும்

உங்கள் துணையுடன் உரையாடுவது

விளையாட்டில் உபயோகப் பொருட்களை அறிமுகப்படுத்தும் போது தொடர்பாடல் வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் அவற்றைப் பயன்படுத்தாதபோது அதைக் கொண்டு வருவது அருவருப்பாக இருக்கலாம். இத் தலைப்பைப் பற்றி விவாதிக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய 5 முக்கிய குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.

• உங்கள் ஆசைகளை ஒரு கோரிக்கையாகத் தெரிவிக்கவும்இ புகார் அல்ல – புகாராக அல்லாமல் நேர்மறையாக உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
• நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளுங்கள் – நேர்மை முக்கியமானது. உங்கள் ஆசைகளை வெளிப்படையாக தெரிவிக்க தயங்காதீர்கள். இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை.
• வெளிப்படையாக இருங்கள் ஆனால் சமரசம் செய்ய தயாராக இருங்கள் – இங்கே நீங்கள் இருவரே இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
• ஒன்றாக ஒரு உபயோகப் பொருளைத்தேடுங்கள் – இந்த வழியின் மூலம் இரு தரப்பினரும் நெருக்கமாக இணைக்கப்படுவார்கள். மேலும் இது ஒரு வேடிக்கையான பிணைப்பு அனுபவமாக இருக்கும். நீங்கள் கடைக்குச் செல்லலாம் அல்லது ஒன்லைனில் பெற்றுக்கொள்ளலாம்.

பாதுகாப்பு

பாலியல் செயல்பாடு UTI நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் செக்ஸ் உபயோகப் பொருட்கள் தொற்றுநோயைப் பரப்பும் என்று உங்களுக்குத் தெரியுமா? STD உள்ள ஒருவர் பாலியல் உபயோகப் பொருட்களை பகிர்ந்து கொண்டால், அப்பொருளின் ஊடாக தொற்றுகள் பரவலாம். பயன்பாட்டிற்குப் பிறகு எப்போதும் உங்கள் உபயோகப் பொருட்களை லேசான சவர்க்காரம் மற்றும் தண்ணீரில் கழுவவும். உபயோகப் பொருட்களைக் கொண்டு உடலுறவு கொள்வதற்கும் அதே முன்னெச்சரிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். பொருட்களில் ஆணுறையைப் பயன்படுத்துவது சிறந்தது. அவற்றை அவ்வாறு சுத்தமாக வைத்திருப்பதோடு தொற்றுநோய்களைத் தடுக்கலாம்.
உங்கள் ஆசனவாயில் பாலியல் உபயோகப் பொருட்களை பயன்படுத்தினால் நிறைய லூப் பயன்படுத்துவது முக்கியம். குத பிளவுகள் சிறிய நுண்ணிய காயங்களாக ஆகும். அவை மலத்தில் இருக்கும் பக்றீரியாவிலிருந்து தொற்றுநோயை ஏறபடுத்தலாம். ஆசனவாயில் செருகப்பட்ட செக்ஸ் உபயோகப் பொருட்களை ஒருபோதும் கழுவாமல் அல்லது ஆணுறையை மாற்றாமல் யோனிக்குள் செருக வேண்டாம். உபயோகப் பொருட்களை உள்ளே செல்வதைத் தடுக்க அதன் அடிப்பகுதி அகலமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏதாவது நடந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். எந்தவொரு செக்ஸ் உபயோகப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்னரும் நீர் சார்ந்த லூப் ஒரு பாதுகாப்பான தெரிவாகும். சிலிக்கன் பாலியல் உபயோகப் பொருட்களுடன் சிலிக்கான் லூப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பாலியல் உபயோகப் பொருளை பயன்படுத்துவது என் கன்னித்தன்மையை பாதிக்குமா?

கரு வளையத்தை சிதைக்கும் போது நீங்கள் உங்கள் கன்னித்தன்மையை இழக்கிறீர்கள் என்பது ஒரு கட்டுக்கதை. டம்போனைச் செருகுவது அல்லது குதிரை சவாரி செய்வது போன்ற பிற நடவடிக்கைகள் கருவளையத்தை பாதிக்கலாம் அல்லது நீங்கள் கன்னித் திரை ஒன்று இல்லாமல் கூட பிறந்திருக்கலாம். உங்கள் கன்னித்தன்மையை இழப்பது நீங்கள் முதல் முறையாக உடலுறவு கொள்வதைக் குறிக்கிறது. ஆக்கிரமிப்பு பொருட்களை டில்டோஸ் மற்றும் சில வைப்ரேட்டர்கள் (யோனிக்குள் செல்லும் அனைத்தும், அடிப்படையில்) உங்கள் கருவளையத்தை சிதைக்கலாம். ஒரு சாதனம் மூலம் ஊடுருவல் பற்றிய யோசனை உங்களைத் தொந்தரவு செய்தால், நீங்கள் எப்போதும் கிளிட்டோரல் வைப்ரேட்டர்களை முயற்சி செய்யலாம் மற்றும் ஊடுருவல் இல்லாமல் ரசிக்கக்கூடிய பல உபயோகப் பொருட்களும் உள்ளன.

பாலியல் உபயோகப் பொருளை அதிகமாக பயன்படுத்துவது என்னை காயப்படுத்துமா அல்லது சேதத்தை ஏற்படுத்துமா?

இல்லை. உங்கள் பெண்குறி மூலம் உணர்வை இழக்கவோ சேதமாகவோ மாட்டாது. இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு நீங்கள் உணர்ச்சியற்றதாக உணர ஆரம்பித்தால், சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது உங்கள் கால் மரத்துப் போவதைப் போன்றது. இரத்த ஓட்டம் மீண்டும் தொடங்கியவுடன் நீங்கள் மீண்டும் நன்றாக உணர்வீர்கள்.

எனது பாலியல் உபயோகப் பொருளை எப்போது மாற்ற வேண்டும்?

உபயோகப் பொருளில் வெளிப்புற அடுக்குக்கு சேதம் ஏற்படுவது மிகவும் வெளிப்படையான அறிகுறியாகும். அது உடைந்து, கிழிந்து, விரிசல் ஏற்பட்டால் அல்லது வித்தியாசமாக சமதளமாக உணர்ந்தால்இ அதை அகற்றுவதற்கான நேரம் இது என்பதை உணரவேண்டும்.

ஒரு பாலியல் உபயோகப் பொருள் என்னை அல்லது என் துணையை காயப்படுத்துமா?

நல்ல தரமான உபயோகப் பொருள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இருப்பினும் இரு தரப்பினரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உங்கள் உபயோகப் பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிவது முக்கியம். அழுக்கு நிறைந்த முன்பே பயன்படுத்திய பாலியல் உபயோகப் பொருட்களைத் தவிர்க்கவும். ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் உங்களுடையதை எப்போதும் சுத்தம் செய்து உடலுறவு கொள்ளும்போது அதிக மசகு எண்ணெய் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு அமர்விலும் நீங்கள் விரும்புவதைப் பற்றி உங்கள் துணையுடன் உரையாடுவதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் ஏன் பாலியல் உபயோகப் பொருட்களை பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியமல்லஇ அது உங்களுக்கும் உங்கள் துணைகளுக்கும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் தடைகளை சிறிது காலம் மறந்து மகிழுங்கள்! மகிழ்ச்சியாக ஷொப்பிங் செய்திடுங்கள்!

கொழும்பு நகரின் காதல் கொண்டாட்டங்கள்

இது பெப்ரவரி, இந்த மாதத்தில் என்ன ஸ்பெஷல் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. நீங்கள் ஒரு பார்ட்டியில் காதலர் தினத்தை கொண்டாட விரும்பும் இளம் ஜோடியாக இருந்தாலும் சரி, அல்லது இந்த சிறப்பு நிறைந்த  நாளில் அமைதியான சூழலில் ஒருவருக்கொருவர் சகவாசத்தை அனுபவிக்க விரும்பும் வயதான ஜோடியாக இருந்தாலும் சரி, நாங்கள் உங்களுக்கு வழி சொல்கிறோம்! ஏன் நீங்கள் மிங்கிளாகக் காத்திருக்கும் ஒரு சிங்கிளாகக் கூட இருக்கலாம்! நீங்கள் இந்த நாளில் மகிழ்ச்சியடையக் கூடிய விருந்து நிகழ்ச்சிகளை  தொடர்ந்து பாருங்கள்.

  • விருந்துகள்

Wild Wild Love (வைல்ட் வைல்ட் லவ்)

DJ ஆதி, MoonKillex, The Music Director  மற்றும் Star Burn X ஆகியோர் இணைந்து கலக்கவிருக்கும் வைல்ட் காதல் கொண்டாட்டமிது.

நடைபெறவிருக்கும் இடம் –  The Chiller Room and Ask for Fern

திகதி – பெப்ரவரி 10 ஆம் தேதி
நேரம் – இரவு 8 மணியிலிருந்து
விலை – முன்பதிவு கட்டணம் ரூ 2,500
ஆடை- கருப்புநிற ஆடைகள்
முன்பதிவுகள்/மேலதிக விபரங்களுக்கு 0779 798 708 / 0779 201 266

The Love Circle (தி லவ் சேர்கிள்)

Hitch, Dirty DZN, Henricus, Lunatics, Romaine Wills மற்றும் பல சிறப்பு கலைஞர்கள் பங்குபற்றும் இந்நிகழ்வில் நீங்களும் கலந்துகொண்டு அவர்களுடன் இணைந்து கொண்டாடிடு மகிழுங்கள்.

நடைபெறும் இடம்- The Love Bar

திகதி – பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை

முன்பதிவுகள்/மேலதிக விபரங்களுக்கு 0778 597 766

Rhythms and Blues (ரிதம்ஸ் என்ட் ப்ளுஸ்)

பளபளக்கும் wine நிரம்பிய க்ளாஸ் பிரத்தியேகமாக பெண்களுக்காகவே ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது. Ricardo Deen, Capital C, The Music Director மற்றும் Rekko ஆகியோர் சிறப்பு கலைஞர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

நடைபெறும் இடம் – Rhythms and Blue

திகதி – பெப்ரவரி 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதிவரை

விலை- ஆண்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.2000 மற்றும் பெண்களுக்கு இலவசம்!

முன்பதிவுகள்/மேலதிக விபரங்களுக்கு – குறுஞ்செய்தியாகவோ அல்லது அழைப்பினூடாகவோ 0773 601 555 Rhythms and Blue ஐ தொடர்புகொள்ளலாம்.

Hugs and Roses (ஹக்ஸ் என்ட் ரோசஸ்)

இந்த காதலர் தின உற்சாகத்தில் கொண்டாட்டங்களுடன் நீங்களும் இணையுங்கள். FRETZ வழங்கும் இந்தக் கொண்டாட்டத்தில் தினேஷ் கமகே, நதீமல் பெரேரா, ரொமைன் வில்லிஸ், தனித் ஸ்ரீ மற்றும் சானுக மோரா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

நடைபெறும் இடம்- Oii by The Villuwa (நீர்கொழும்பு)
திகதி – பெப்ரவரி 13 திகதி
நேரம்- இரவு 7 மணிமுதல்
விலை- கட்டணச்சீட்டின் விலை ரூ.3000 மற்றும் ரூ.5000 ( ரூ 5,000 கட்டணச்சீட்டு – பெண்களுக்கு இலவசம். அதிகபட்சம் 2 பேர்)

  • The Kingsbury (த கிங்ஸ்பெரி)

Honey Beach Club (ஹனி பீச் க்ளப்)

வசீகர ஆடையால் உங்களை அலங்கரித்து உங்கள் காதலியின் கரம்பிடித்திழுத்து ழுhஅந இசைக்குழுவின் மெல்லிசைக்கு இருவரும் இணைந்து நடனமாடி அன்றிரவை அழகான தருணமாக்கிடுங்கள்..!

நடைபெறும் இடம்- Honey Beach Club
திகதி – பெப்ரவரி 14 ஆம் திகதி
நேரம்- இரவு 7 மணிமுதல்
விலை- ஒருவருக்கான கட்டணம் ரூ.3000 (மீளப்பெறலாம்)
ஆடை- சாதரணஆடை
முன்பதிவுகள்/மேலதிக விபரங்களுக்கு- 0770 134 894/0771 087 736

Sky Lounge (ஸ்கை லோஜ்)

கிங்ஸ்பரியின் Sky Lounge உங்களுக்கு எதிர்பாரததொரு காதலர் தின அனுபவத்தை தருகிறது.

நடைபெறும் இடம்- The Sky Lounge
திகதி – பெப்ரவரி 14 ஆம் திகதி
நேரம்- இரவு 7 மணிமுதல்
விலை- ஒருவருக்கான கட்டணம் 5,000 (மீளப்பெறலாம்)
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு- 0770 134 894 / 0771 087 736

  • Dining (டைனிங்)

Cinnamon Lakeside (சினமன் லேக்சைட்)

‘லவ் இன் தி சிட்டி’ என்ற கருப்பொருளை வட்டமிட்டு, சினமன் லேக்சைடில் நேர்த்தியான இரவு உணவு பபேயுடன் ஒரு காதல் உணவு அனுபவத்தை பெற்றிடுங்கள்.

நடைபெறும் இடம்- The Dining Room
திகதி – பெப்ரவரி 14 ஆம் திகதி
நேரம்- இரவு 7 மணிமுதல் 11 மணிவரை
விலை- ஒரு ஜோடிக்கு ரூ 8000
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு- 0112 491 930

Pool Terrace (பூல் டெரர்ஸ்)

உள்ளே சாப்பிடுவது உங்கள் வருப்பம் இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம், ஏனெனில் சினமன் லேக்சைட் நட்சத்திரங்களின் கீழ் ஒரு காதல் இரவு உணவு மற்றும் ஒரு கிளாஸ் குமிழியுடன் ஈடுபடுவதற்கான விருப்பத்தையும் வழங்குகிறது.

நடைபெறும் இடம் – The Pool Terrace
திகதி- பெப்ரவரி 14 ஆம் திகதி
நேரம்- இரவு 7 மணிமுதல் 11 மணிவரை
விலை- ஒரு ஜோடிக்கு ரூ 14000
மேலதிக தொடர்புகளுக்கு – 0713 723 957 / 0717 875 688

  • Cinnamon Grand Colombo (சினமன் க்ரேன்ட் கொழும்பு)

இந்த காதலர் தினத்தில் ‘லவ் இன் தி சிட்டி’ என்ற கருப்பொருளைக் கொண்டு கொழும்பு Cinnamon Grand ஒழுங்கு செய்துள்ள டைனிங் அனுபவமானது உங்களுக்கு மறக்கமுடியாத அனுவத்தை பெற்றுத்தரும்.

Breeze Bar (ப்ரீஸ் பார்)

அங்குள்ள நீர் தடாகத்தினருகில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள காதலர் தின சிறப்பு காக்டெய்ல்களை பருகிக்கொண்டே மெழுகுவர்த்தி இரவு உணவை அனுபவித்து மகிழலாம்.

நடைபெறும் இடம் – The Breeze Bar
திகதி- பெப்ரவரி 14 ஆம் திகதி
நேரம்- இரவு 7 மணியிலிருந்து 11 மணிவரை
விலை- ஒரு நபருக்கான கட்டணம் ரூ 6000
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0112 497 370 / 0777 902 940

Plates (ப்ளேட்ஸ்)

சிறப்பு புபே, காதலுணர்வை மெருகூட்டும் இனிப்புனவுகளின் தொகுப்பு, சுவை நிறைந்த மாக்டெயில்கள் மற்றும் கவர்ச்சிகரமான அலங்காரங்கள் உடனே நேரடி இனிய இசையை ஆகியவை உங்கள் மாலை பொழுதை அழகாக்கிடும்.

நடைபெறும் இடம் – Plates
திகதி- பெப்ரவரி 14 ஆம் திகதி
நேரம்- இரவு 7 மணியிலிருந்து 11 மணிவரை
விலை- ஒரு நபருக்கான கட்டணம் ரூ.4,200
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0112 497 377 / 0773 956 319

Coffee Stop (காபி ஸ்டொப்)

உங்களுக்கும் உங்களின் அன்புக்குரியவர்க்கும் ஒரு இனிமையான விருந்து காத்திருக்கிறது.

நடைபெறும் இடம் – Coffee Stop
திகதி- பெப்ரவரி 13 மற்றும் 14 ஆம் திகதி
நேரம்- காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணிவரை
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0112 497 382 / 0773 956 325

The London Grill (த லண்டன் க்ரில்)

7-கோர்ஸ் gourmet feast விருந்து மற்றும் bubbly யுடன் கூடிய சிறந்த உணவு அனுபவத்தை பெற்றுத்தருகிறது.

நடைபெறும் இடம் – The London Grill
திகதி- பெப்ரவரி 14 ஆம் திகதி
நேரம்- இரவு 7 மணியிலிருந்து இரவு 11 மணிவரை
விலை- ஒரு நபருக்கான கட்டணம் ரூ.9,500
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0112 497 379 / 0773 956 322

  • Taj Samudra Colombo (தாஜ் சமுத்ரா கொழும்பு)

The Lattice (த லெட்டிஸ்)

கொழும்பு தாஜ் சமுத்ராவின் சுவையான தேநீர் புபே விருந்துடன் காதலர் தினத்தைக் கொண்டாடி மகிழுங்கள்.

நடைபெறும் இடம் – The Lattice
திகதி- பெப்ரவரி 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை
நேரம்- மாலை 3.30 மணியிலிருந்து 6 மணிவரை
விலை- ஒரு நபருக்கான கட்டணம் ரூ.2,950
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0112 446 622

Poolside (பூல் சைட்)

தாஜ் சமுத்ராவின் நீர் தடாகமருகில் ஏற்பாடுசெய்யப்படவுள்ள சிறப்பு காதல் விருந்துக்கொண்டாட்டத்தில் கலந்து அன்பை பகிர்ந்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு காதல் ஜோடிகளுக்கும் தனித்தனியாக இருக்கைகள் மற்றும் ரோஜா பூங்கொத்து, சொக்லேட்ஸ் மற்றும் காக்டெய்ல் ஆகியவையும் வழங்கப்படும்.

நடைபெறும் இடம் – Poolside
திகதி – பெப்ரவரி 14 ஆம் திகதி
நேரம்- மாலை 3.30 மணியிலிருந்து 6 மணிவரை
விலை- ஒரு ஜோடிக்கான கட்டணம் ரூ.19,999
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0112 446 622

Ports of Call (போர்ட்ஸ் ஒப் கோல்)

Ports of Call இனால் ஏற்பாடு செய்யப்படும் சுவையான மற்றும் ஆடம்பரமான இரவு உணவு புபேயில் கலந்துகொள்ளுங்கள். பளபளப்பான wine அல்லது சிவப்பு அல்லது வெள்ளை wine ஆகியவற்றுடன் சுவையான உணவு விருந்தை அனுபவித்திடுங்கள். அழகான காதலை கொண்டாடி மகிழ்ந்திட நேரலை பொழுதுபோக்கு அம்சங்களும் காத்திருக்கின்றன.

நடைபெறும் இடம் – Ports of Call
திகதி – பெப்ரவரி 14 ஆம் திகதி
விலை- ஒரு ஜோடிக்கான கட்டணம் ரூ.5,950
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0112 446 622

Marino Beach (மெரினோ பீச்)

Tides Restaurant டைட்ஸ் ரெஸ்டூரன்ட்
இரவு உணவு மற்றும் பெண்களுக்காக வழங்கப்படும் ரோஜா மலர்கள் மற்றும் சொக்லேட்டுகள் இணைந்த சிறப்பு பரிசோடு காதலர் தினத்தை கொண்டாடுங்கள்.

நடைபெறும் இடம் – Tides Restaurant
திகதி – பெப்ரவரி 14 ஆம் திகதி
நேரம் – இரவு 7 மணிமுதல் 10.30 மணிவரை
விலை- ஒரு ஜோடிக்கான கட்டணம் ரூ.3,750
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0762 454 809

  • Paradise Road  (பெரடைஸ் ரோட்)

Gallery Cafe (கெலரி கெபே)

Gallery Cafe ஒழுங்கு செய்துள்ள இனிப்பு வகைகள், திறமையாக வடிவமைக்கப்பட்ட காக்டெயில்கள் மற்றும் curated wine menu ஆகியவை அடங்கிய சிறப்பான மெழுகுவர்த்தி இரவு அனுபவத்தை பெற்றிடுங்கள்.

நடைபெறும் இடம் – Gallery Café
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0760 543 388

Paradise Road Tintagel Colombo (பெரடைஸ் ரோட் டின்டெகல் கொழும்பு)

உங்கள் அன்புக்குரியவருடன் இணைந்து மகிழ பிரத்தியேகமாக வடிவமைக்கப்படும் Valentine high tea தேநீர் விருந்து.

நடைபெறும் இடம் -Paradise Road Tintagel Colombo

திகதி – பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0768 006 699

  • Movenpick (மூவென்பிக்)

Matterhorn (மெட்டர்ஹோர்ன்)

உங்கள் இருவரையும் சுவையான உணவுப் பயணத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட நேர்த்தியான 5-course இரவுணவு அனுபவமிது. two glasses of bubbly மற்றும் சுவையான platter of canapés  உடன் மாலைப்பொழுதை வரவேற்றிடுங்கள்.

நடைபெறும் இடம் -Matterhorn

திகதி – பெப்ரவரி 14
நேரம் – இரவு 7 மணியிலிருந்து
விலை – ஒரு ஜோடிக்கான கட்டணம் ரூ15,000
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0117 450 450

Vistas விஸ்டாஸ்

Vistas இல் அமைந்துள்ள நட்சத்திரங்களின் கீழ் உணவருந்துவதற்கான அழகிய தருணமிது. 5-course இரவு உணவு மற்றும் ஒரு கிளாஸ் bubbly உடன் உங்களை மகிழ்விக்க அவர்கள் தயாராக இருக்கின்றனர்.
நடைபெறும் இடம் – Vistas
திகதி – பெப்ரவரி 14
நேரம் – இரவு 7 மணியிலிருந்து
விலை – ஒரு ஜோடிக்கான கட்டணம் ரூ12,000
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0117 450 450

AYU

உங்கள் அன்புக்குரியவருடன் மகிழ்ச்சியாகவும் ஆடம்பரமாகவும் சர்வதேச புஃபேயை அனுபவித்திடுங்கள்.

நடைபெறும் இடம் – AYU
திகதி – பெப்ரவரி 14
நேரம்- இரவு 7 மணியிலிருந்து 10.30 மணிவரை
விலை – ஒரு நபருக்கான கட்டணம் ரூ 3,300 10 5 நபர்களைக் கொண்ட குழுவிற்கு wine வழங்கப்படும்.
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0117 450 450

Robata Grill (ரொபாடா க்ரில்)

நீங்கள் நெருக்கமான சூழ்நிலையை அடைந்து அதில் மூழ்கும்போது இங்கே வழங்கப்படும் ஆசிய உணவுகள் உங்கள் உணவு ஆசைகளையும் பூர்த்தி செய்யும்.

நடைபெறும் இடம்- Robata Grill
திகதி- பெப்ரவரி 14
நேரம்- இரவு 7 மணி முதல்
விலை – ஒரு ஜோடிக்கான கட்டணம் ரூ5,000
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0117 450 450

Mansion Grill and Bar (மென்சன் க்ரில் என்ட் பார்)

உங்கள் அன்புக்குரியவருடன் 3-tiered platter காதல் தேநீரை பருகி மகிழ்ந்திடுங்கள்
நடைபெறும் இடம் – Mansion
திகதி- பெப்ரவரி 17 ஆம் திகதிவரை
விலை – ஒரு நபருக்கான கட்டணம் ரூ3,000
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0117 450 450

  • Galadari Hotel (கலதாரி ஹோட்டல்)

Coffee shop

Kizmet இசைக்குழுவின் live இசை நிகழ்வோடு சிறப்பு கலைஞர் Roger Menezes கலந்துகொள்ளும் காதலர் தின இரவுணவு கொண்டாட்டத்தில் நீங்களும் இணைந்திருங்கள்.

நடைபெறும் இடம் -Coffee shop

திகதி- பெப்ரவரி 14
நேரம் – இரவு 7 மணி முதல்
விலை – ஒரு நபருக்கான கட்டணம் ரூ3800
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு 0112 544 544

Lobby

காதலர்களுக்காகவே பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சிறப்பு தேநீர் புபே.

நடைபெறும் இடம் – Lobby
திகதி- பெப்ரவரி 13
நேரம் – மாலை 3.30 மணி முதல் 6 மணி வரை
விலை – ஒரு நபருக்கான கட்டணம் ரூ 2,790

முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு 0112 544 544

Galle Face Hotel (கோல் பேஸ் ஹொட்டல்)

பியானோ இசைக் கலைஞர் Adari Daria மெல்லிய தன் பியானோ இசையால் மனதை வருடும்போது The Chequerboard இல் உள்ள நட்சத்திரங்களின் கீழ் காதலுணர்வு தோன்றும். இந்தியப் பெருங்கடலைக் காணும் காட்சியோடு The Chequerboard அல்லது The Verandah வில் சர்வதேச தரத்திலான இரவு உணவு புபேவை அனுபவித்திடுங்கள். மேலும் உங்களை வரவேற்றிடும் முகமாக வழங்கப்படும் உபசாரத்தில் பளபளப்பான wine நிரம்பிய க்ளாஸ், ரோஜா மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட காதலர் குக்கீஸ்கள் ஆகியவை அடங்கும்.

நடைபெறும் இடம் -The Chequerboard or The Verandah

திகதி – பெப்ரவரி 14
விலை- ஒரு ஜோடிக்கான கட்டணம் ரூ 9900
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0112 541 010 / 0773 710 761

Caramel Pumpkin (கெரமல் பம்ப்கின்)

ஆச்சரியங்கள், நேரலை இசை, பரிசுகள், அழகான புகைப்பட பூத், விருந்துகள் மற்றும் விஷேட காதலர் தின மெனு போன்றவற்றை கொண்ட மறக்கமுடியாத இரவை அனுபவித்திடுங்கள்.

நடைபெறும் இடம் – Caramel Pumpkin
திகதி – பெப்ரவரி 14
நேரம்- இரவு 7 மணியிலிருந்து இரவு 10 மணிவரை
விலை- ஒரு ஜோடிக்கான கட்டணம் ரூ 5500 பெப்ரவரி 14
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0712 383 838

Nuga Rosmead

காதலர் தினத்தில் அன்பைப் பகிர்ந்து கொண்டாட Nuga Rosmead ஏற்பாடு செய்திருக்கும் பளபளப்பான wine நிரம்பிய இரு க்ளாஸ்கள், chocolate-dipped berries, chocolate பொருட்கள் மற்றும் ஒரு ரோஜா மலரை உள்ளடக்கிய மெழுகுவர்த்தி இரவுணவில் கலந்துகொள்ளுங்கள்.

நடைபெறும் இடம் – Nuga Rosmead

நேரம்- இரவு 7 மணியிலிருந்து
விலை- இருவரை உள்ளடக்கிய ஒரு மேசைக்கான குறைந்த கட்டணம் ரூ 6,000

முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – – 0773 445 377

  • Ramada by Wyndham Colombo

லொபி

இந்த காதலர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவருடன் சேர்ந்து பகலில் சிறந்த டேட்டிங் அனுபவத்தோடு தேநீர் புபேவில் கலந்துகொண்டு மகிழ்ந்திடுங்கள். முன்பதிவுகளை மேற்கொண்டு காதலுணர்வு கலந்த இரவுணவை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றிடுங்கள்.

நடைபெறும் இடம் -Lobby, Ramada by Wyndham Colombo

திகதி- பெப்ரவரி 12 ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை
நேரம்- மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரை
விலை- ஒரு நபருக்கான கட்டணம் ரூ.2200
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0777 864 864

Gardenia (கார்டினியா)

நள்ளிரவில் ஒரு காக்டெய்ல் வரவேற்போடு நேரடி இசையுடன் சர்வதேச இரவுணவு புபே இங்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த புபே உங்களுக்கானதல்ல என்று தோன்றினால் நீங்கள் இன்னும் தனிப்பட்ட ஒன்றை விரும்புகிறீர்கள். அப்படியென்றால் பளபளப்பான இரு wine க்ளாஸ் உடனான candlelit 5-course இரவுணவை ஏன் நீங்கள் தெரிவு செய்யக்கூடாது?

நடைபெறும் இடம் – Gardenia restaurant, poolside or Secret Garden
திகதி- பெப்ரவரி 14 ஆம் திகதி
நேரம்- இரவு 7 மணியிலிருந்து
விலை- ஒரு நபருக்கான கட்டணம் ரூ3,500 (புபே இற்கு) மற்றும் ஒரு ஜோடிக்கான கட்டணம் ரூ8000 (5-course dinner)
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0777 864 864

Me Colombo (மீ கொழும்பு)

உங்கள் அன்புக்குரியவருக்கு 5-course  candlelit நடவை காதல் இரவுணவு அனுபவத்தை அளித்திடுங்கள்.
நடைபெறும் இடம் -My Bar Rooftop Lounge

திகதி- பெப்ரவரி 14 ஆம் திகதி
விலை- ஒரு ஜோடிக்கான கட்டணம் ரூ 15000
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0711 293 173 / 0712 731 434 / 0117 654 321

  • Mount Lavinia Hotel (மௌன்ட் லவன்யா ஹொட்டல்)

உங்கள் அன்புக்குரியவருடன் இணைந்து மகிழ்வதற்கு 5-course காதல் இரவுணவை உங்களுக்காகவே மௌன்ட் லவன்யா ஹொட்டல் ஏற்பாடு செய்துள்ளது.

நடைபெறும் இடம் – Mount Lavinia Hotel

திகதி- பெப்ரவரி 14 ஆம் திகதி

முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு – 0773 112 399 (முன்பதிவுகள் பெப்ரவரி 10 ஆம் திகதியிலிருந்து)

Waters Edge (வோட்டர்ஸ் எட்ஜ்)

நீங்கள் தனியாளாகவோ அல்லது புதிதாக இணைந்திருந்தாலோ அல்லது உங்கள் துணையுடன் பல தசாப்தங்களைக் கடந்திருந்தாலும் பரவாயில்லை. இந்த காதலர் தினத்தில் வாட்டர்ஸ் எட்ஜில் வேடிக்கையான கொண்டாட்டங்கள் பல உங்கள் அனைவருக்காகவும் காத்திருக்கிறது.

திகதி- பெப்ரவரி 14 ஆம் திகதி
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு- 0773 587 419

High Tea Platter (ஹை டீ ப்ளேட்டர்)

நேரம்- மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரை
விலை- இரு நபர்களுக்கான கட்டணம் ரூ.4750

Picnic Date  (பிக்னிக் டேட்)

சிறப்பு பிக்னிக் சலுகையை அனுபவித்து மகிழுங்கள்
நேரம்- இரவு 6 மணியிலிருந்து 9 மணிவரை
விலை- இரு நபர்களுக்கான கட்டணம் ரூ 4200

Pranzo (ப்ரான்ஸோ)

வரவேற்பு பானம் மற்றும் பிரத்தியேக இரவுணவு புபே ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
நேரம்- இரவு 7 மணியிலிருந்து
விலை- ஒரு நபருக்கான கட்டணம் ரூ 4500

Fiftykay Orchids

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவருக்கும் பளபளப்பான wine க்ளாஸ் மற்றும் பிரத்தியேக உணவு மெனுவை உள்ளடக்கியஒரு சிறந்த உணவு அனுபவத்தை வழங்குகிறது.

நேரம்- இரவு 7.30 மணியிலிருந்து 10.30 மணிவரை
விலை- ஒரு நபருக்கான கட்டணம் 14,750

Kobe

இந்தக் காதலர் தினத்தில் ஜப்பானிய உணவின் சுவையை அனுபவிக்க உணர்கிறீர்களா? அப்படியென்றால் இவர்களின் பிரத்தியேக ஜப்பானிய செட் மெனுவை நீங்கள் ஏன் முயற்சி செய்யக்கூடாது?

நேரம்- இரவு 7 மணிமுதல்

விலை- ஒரு நபருக்கான கட்டணம் ரூ 8500

At the Floating Restaurant

இங்கு வரவேற்பு பானமாக பளபளக்கும் wine மற்றும் ஒரு சிறப்பு இரவுணவு புபேயும் வழங்கப்படுகிறது.

இயற்கை எழில் கொஞ்சும் ஏரிகாட்சியுடனான விருந்துபசாரம் இது.
நேரம்- மாலை 6 மணியமுதல்
விலை- ஒரு நபருக்கான கட்டணம் ரூ 4250

Colombo Court Hotel and Spa (கொழும்பு கோர்ட் ஹொட்டல் என்ட் ஸ்பா)

wine மற்றும் காதலனுபவத்துடனான அழகான அனைத்து விடயங்களையும் அனுபவிக்க கொழும்பு கோர்ட் ஹோட்டல் மற்றும் ஸ்பாவிற்கு சென்றிடுங்கள்.

இலவச சிவப்பு அல்லது வெள்ளை wine மற்றும் சமையல்கலை வல்லுனர்களின் பிரத்தியேக 5-course செட் மெனு, உங்கள் இதயத்தை ஈர்க்கும் Sankha Bee இன் நேரடி இசைநிகழ்வு மற்றும் இன்னும் பல ஆச்சரியங்கள் இடம்பெறவிருக்கும். காதலர்தின சிறப்புணவு கொண்டாட்டத்தை நிச்சயம் நீங்கள் தவறவிடமாட்டீர்கள் அல்லவா?

நடைபெறும் இடம் -Amber Poolside

நேரம்- இரவு 7 மணிமுதல்
விலை- ஒரு ஜோடிக்கு ரூ 9900
முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு- 0770 058 779

  • Shangri-La Colombo  (சங்கரில்லா கொழும்பு)

Sapphye Lounge

காதலர் தினத்தை முன்னிட்டு Sapphye Lounge இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நேரடி பாரம்பரிய வசீகர இசையோடு மதிய தேநீர் அனுபவத்தை நீங்களும் அனுபவிக்கலாம்.

நடைபெறும் இடம் – Sapphyr Lounge

திகதி- பெப்ரவரி 14 ஆம் திகதிவரை
நேரம்- மாலை 3 மணியிலிருந்து 5 மணிவரை
விலை- ஒரு நபருக்கான கட்டணம் ரூ 2,800

Capital Bar and Grill (கெபிடல் பார் என்ட் க்ரில்)

அவர்களின் அழகுமிகுந்த சூழலில் 4-course செட் மெனுவை அனுபவித்து காதலைக் கொண்டாடிடுங்கள். காதலர் தின சிறப்பு காக்டெய்ல்களையும் நீங்கள் தெரிவுசெய்யலாம்.

நடைபெறும் இடம் – Capital Bar and Grill

திகதி- பெப்ரவரி 14 ஆம் திகதி

விலை- ஒரு நபருக்கான கட்டணம் ரூ 9,500

Central Restaurant

‘காதல்’ எனும் கருப்பொருளைக்கொண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கும் இரவு உணவு புபேவில் கலந்து மகிழுங்கள்.

நடைபெறும் இடம் – Central Restaurant

விலை- ஒரு நபருக்கான கட்டணம் ரூ 4,900 (love draw ஐ உள்ளடக்கியது )

முன்பதிவுகள் / மேலதிக விபரங்களுக்கு- 0117 888 288

ஏனைய நிகழ்வுகள்

Nuga Rosmead (நுகா ரொஸ்மேட்)

இந்த காதலர் தினத்தில் ‘பெப்ரவரி மாத முழு நிலவில் அன்பை பெற்றுக்கொள்ளுதல்: மூச்சுப்பயிற்சி மற்றும் இயக்க அசைவுகளின் மூலம் அகத்தை குணமாக வைத்திருப்பதற்கானவொரு பயணமிது’ என்ற தலைப்பின் கீழ் நுகாவினால் சிறப்பு பயிற்சிப் பட்டறை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. நடாஷா யாதவாரா மற்றும் ஷிபானி ரெபாய் ஆகியோர் குணநலனை மையமாகக்கொண்ட தியானம், மூச்சுப்பயிற்சி மற்றும் இயக்கஅசைவுகள் போன்றவற்றை மேற்கொள்ள உங்களுக்கு வழிகாட்டியாக செயற்படுவார்கள்.

நடைபெறும் இடம்- Nuga Rosmead
திகதி- பெப்ரவரி 12 ஆம் திகதி
நேரம்- மாலை 5.30
முன்பதிவுகள் ஃ மேலதிக விபரங்களுக்கு – Nuga Rosmead இன் Instagram பக்கத்தில் தொடர்புகொள்ளவும்.

நாம் ஏதாவது நிகழ்வுகளை தவறவிட்டோமா? இது பற்றி கீழே தெரியப்படுத்துங்கள்.

அக்குளின் கருமையை போக்க இலகுவான வழிமுறைகள்

உடலின் மற்ற பாகங்களைப் போலவே அக்குள்களின் தோலும் கருமையாகவோ அல்லது நிறம் மாற்றமாகவோ இருக்கலாம். மற்ற தோலை விட கருமையாக இருக்கும் அக்குள் தோல் சிலரை ஸ்லீவ்லெஸ், ஷர்ட் அணிவதிலிருந்தும் பொது இடங்களில் குளியல் உடைகளை அணிவதிலிருந்தும் விளையாட்டுக்களில் பங்கேற்பதிலிருந்தும் விலகியிருக்குடம் மனநிலையை ஏற்படுத்துகின்றது. அக்குள் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் இருப்பதைப் போலவே அதற்கு பல்வேறு சிகிச்சை முறைகளும் இருக்கின்றன.

அக்குள் கருமையாக இருப்பதற்கான காரணங்கள்
• டியோட்ரண்டுகள் (Deodorant) மற்றும் ஆன்டிஸ்பெர்ஸ்பிரண்ட்களில் (Antiperspirant) இரசாயன எரிச்சல்.
• ஷேவிங்கினால் ஏற்படும் எரிச்சல் மற்றும் சிராய்ப்பு.
• அரிதாக தோல் உரிதல் காரணமாக இறந்த சரும செல்கள் குவிதல் (dead cells).
• இறுக்கமான ஆடைகளால் ஏற்படும் உராய்வு.
• மெலனின் (melanin) அதிகரிப்பு போன்ற ஹைப்பர் பிக்மென்டேஷன்.

நீங்கள் வெண்மையான அக்குள்களை விரும்பினால் அக்குள் கருமைக்கான சில அடிப்படை காரணங்களைத் தீர்க்க நீங்கள் எடுக்கக்கூடிய முதற்படிகளை தொடர்ந்து வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
• உங்கள் டியோட்ரண்ட் அல்லது ஆண்டிபெர்ஸ்பிரண்டை மாற்றவும். வேறு பிராண்டைத் தேடுங்கள்.
• பேக்கிங் சோடா அல்லது ஆப்பிள் சைடர் வினிகர் போன்ற இயற்கையான மாற்று வழிகளை தேடி அடைந்துகொள்ளுங்கள்.

எக்ஸ்போலியேட் (Exfoliant)

வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை அக்குளில் மென்மையான ஸ்க்ரப் (scrub) அல்லது எக்ஸ்போலியண்ட் ஒன்றை பயன்படுத்தவும். அக்குள் தோல் மெல்லியதாகவும் மென்மையாகவும் இருப்பதால் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்காக வடிவமைக்கப்பட்ட எக்ஸ்போலியண்ட்டை தேர்ந்தெடுங்கள். நீங்கள் பேஸ் எக்ஸ்போலியண்ட்டையும் பயன்படுத்தலாம்.

  • அக்குள் கருமைக்கு இயற்கை வைத்தியம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கைத் துருவி அரைத்த உருளைக்கிழங்கிலிருந்து சாற்றைப் பிழிந்து அந்தச் சாற்றை உங்கள் அக்குள்களில் தடவவும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் அக்குள்களை குளிர்ந்த நீரில் கழுவவும்.

பால், பண்ணீர் (Rose Water) மற்றும் தோடம்பழத் தோல்

பால், பண்ணீர் (Rose Water) மற்றும் தோடம்பழத் தோல் என்பவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மேசைக்கரண்டி பால் மற்றும் ஒரு மேசைக்கரண்டி பண்ணீருடன் போதுமான அளவு தூலாக்கிய தோடம்பழத் தோலுடன் கலந்து கெட்டியான பேஸ்ட் ஒன்றை உருவாக்குங்கள். பேஸ்ட்டைக் கொண்டு உங்கள் அக்குள்களை மெதுவாக ஸ்க்ரப் செய்து பின்னர் பதினைந்து நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இதை பின்தொடருங்கள்.

எலுமிச்சை

எலுமிச்சையின் கனமான துண்டுகளை வெட்டி அந்தத் துண்டுகளை உங்கள் அக்குள்களில் தேய்க்கவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் அக்குள்களை குளிர்ந்த நீரில் கழுவி உலர்த்திய பின்னர் மாய்ஸ்சரஸ் (Moisturizer) ஒன்றை பயன்படுத்தவும்.

மஞ்சள் மற்றும் எலுமிச்சை

ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு மேசைக்கரண்டி எலுமிச்சை சாற்றை போதுமான மஞ்சளுடன் கலந்து பேஸ்ட் ஒன்றை தயாரிக்கவும். பேஸ்ட்டை உங்கள் அக்குள்களில் சம அளவில் தடவவும். முப்பது நிமிடங்களுக்குப் பிறகு பேஸ்ட்டை கழுவவும்.

முட்டையின் மஞ்சள் கரு எண்ணெய்

தூங்குவதற்கு முன்னர் முட்டையின் மஞ்சள் கரு எண்ணெய்யை உங்கள் அக்குள்களில் தடவி மசாஜ் செய்யவும். மறுநாள் காலையில் உங்கள் அக்குள்களை டிழனல றயளா அல்லது சவர்க்காரத்தினால் கழுவவும்.

தேயிலை எண்ணெய்

தேயிலை எண்ணெய். ஒரு சிறிய ஸ்ப்ரே பாட்டிலில் 8 அவுன்ஸ் தண்ணீருடன் 5 துளிகள் தேயிலை எண்ணெயை கலக்கவும். ஒவ்வொரு நாளும் குளித்து உலர்த்திய பிறகு கலவையை உங்கள் அக்குள்களில் தெளிக்கவும். இயற்கையாக உலர விடவும்.

வெள்ளரிகள்

வெள்ளரி என்பது சிறந்த பளிச்சிடும் பண்புகளுடன் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் அதன் வலிமை நிறைந்துள்ளது. சில வெள்ளரிக்காய் துண்டுகளை உங்கள் கருமையான அக்குளில் இரண்டு நிமிடங்களுக்கு தேய்த்துவிட்டு பத்து நிமிடங்கள் வரை காத்திருங்கள். அதன் பின்னர் தண்ணீரில் கழுவவும். நீங்கள் தினமும் முறையாக ஒரு முறை இதைச் செய்தால் அக்குள் சருமத்தின் கருமையை குறைக்க முடியும் என்பதுடன் இது ஒரு சிறந்த தெரிவாக அமையும்.

index.php