Blog Page 2

ஒன்லைன் ஷோப்பிங்ல உஷாரா இருக்கிங்களா?

ஒன்லைனில் உடைகள் வாங்குவதில் உள்ள சில சிக்கல்களை நாம் தெரிந்துகொள்வதும் , அவ்வாறான சிக்கல்களை எப்படியெல்லாம் தவிர்த்துக்கொள்வது என்பது பற்றியும் அறிந்துவைத்திருப்பதென்பது காலமாற்றத்தின் அவசியமாகும் .

அந்தவகையில் ஒன்லைன் ஷொப்பிங்கில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை ஆடைகளின் நிறம் . உடைகளின் புகைப்படங்களானது கணினி அல்லது கைபேசியின் தொடு திரையில் நாம் காணும் போது அதன் வண்ணங்கள் ஒவ்வொரு திரைக்கு ஏற்றவாறு மாறுபடும். அதுமட்டுமன்றி ஆடையை அழகாக காட்ட நிறுவனங்களும் போட்டோஷாப் போன்ற மென்பொருட்களில் புகைப்படங்களை மெருகேற்றுகிறது. இதனால் இணையத்தில் நாம் கண்ட வண்ணம் ஒரு விதமாகவும், அசல் ஆடை மற்றொரு விதமாகவும் கையில் எடுத்தவுடன் நமக்குத் தோன்றும் . இந்த பிரச்சினைகளை தவிர்க்கும் வண்ணம் சில விற்பனையாளர்கள் உடைகளின் ஒரிஜினல் புகைப்படத்தினை அல்லது வீடியோவினை தமது விற்பனை பக்கத்தில் இணைப்பதுண்டு . அதுமட்டுமன்றி ” due to digital photography colors may vary slightly” என்கிற வாசகத்தினை பதிவிட்டிருப்பார்கள் .

அடுத்த மிகப்பெரிய பிரச்சினைகளுள் ஒன்றுதான் ஆடைகளின் தரம் . விற்பனைக்காக காட்டப்பட்டிருக்கும் புகைப்படங்களில் உள்ள ஆடைகளின் துணி வகை அல்லது குவாலிட்டி அல்ல, அநேகமாக நம் கைகளுக்கு வந்து சேர்வது . இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சில இணையதளங்களில் அவர்களால் விற்பனை செய்யப்படும் உடைகளுக்கும் அதற்காக “sample picture”ஆக காட்டப்படும் மொடல் அணிந்திருக்கும் உடைகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் காணப்படும் . அநேகமாக மொடல்கள் அணிந்திருப்பது காஞ்சிபுரம் , சாப்ட் சில்க் (soft silk) , பனாரசி போன்ற தரமான புடவைகள் என்றால் , அந்த புகைப்படத்தைப் பார்த்து ஆசைப்பட்டு ஆர்டர் செய்த நமக்கு வந்து சேர்வது அதே நிறம் அதே வடிவமைப்பிலான லிச்சி சில்க் (lichi silk) புடவையாக இருக்கும் . இதற்காக நாம் விற்பனை இணையத்துடன் தர்க்கம் செய்ய முடியாது . ஏனெனில் அவர்கள் மிகவும் நுட்பத்துடன் இந்த விடயத்தினை கையாண்டிருப்பார்கள் . தரமான புடைவைகளை அணிந்திருக்கும் மொடல்களின் படங்களை, அதிகமாக குறிப்பிட்ட லிங்கில் இணைத்திருக்கும் இவர்கள் அச்சு அசலாக அதே போன்றிருக்கும் “லிச்சி சில்க்” பிராண்டை விரித்து வைத்த நிலையில் ஒரேயொரு புகைப்படத்தில் தரவேற்றியிருப்பார்கள் . அத்துடன் கீழே “ description “ எனும் இடத்தில “லிச்சி சில்க்” எனவும் குறிப்பிட்டிருப்பார்கள் . ஆனால் இந்த நுட்பம் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் புரிந்துவிடுவதில்லை . சாதாரணமாக நம் கண்ணில் படுவது மொடல்களின் புகைப்படம்தானே ? நாமும் வாங்கப்போவது அந்த புடவையாகத்தான் இருக்கும் என நினைத்துக்கொள்ளுவோம் .

இந்த சிக்கலை எப்படி இனம்காண்பது ? ஆம் இணையத்தில் அதிகமாக உடைகளை வாங்குபவர்கள் இந்த நுட்பத்தை சட்டெனெ புரிந்துகொள்வார்கள் . மொடல் அணிந்திருக்கும் புடவைக்கும் விரித்து வைத்திருக்கும் புடவைக்குமான பார்டரில் (border ) இந்த வித்தியாசத்தை கண்டுபிடித்துவிடலாம் . (உற்றுப்பார்க்கும்போது போர்டர்களில் எது அசல் , எது நகல் என்பதை காட்டிக்கொடுத்துவிடும் ) அதுமட்டுமன்றி லிச்சி சில்க் போன்ற வடநாட்டு தயாரிப்புக்கள் இலங்கை ரூபாயில் சுமார் 4000 – 5500 ரூபாவுக்குள் வாங்கிவிடலாம் . ஆனால் மொடல்கள் அணிந்திருக்கும் நான் மேலேகுறிப்பிட்ட காஞ்சிபுரம் , சாப்ட் சில்க் (soft silk) போன்றவை நம் நாட்டு பண மதிப்பில் ரூபா முப்பதாயிரத்தை தாண்டக்கூடியவை . ஆக, விலை பெறுமதியினை வைத்தும் நாம் கண்டுபிடித்துக்கொள்ளலாம் . குறிப்பிட்ட இணையத்தில் அந்த புடவையின் விலை 5500 ரூபாய் என குறிப்பிட்டிருந்தால் நீங்கள் அது சாதாரண லிச்சி புடவைகள் என்பதை ஊகித்து வாங்கிக்கொள்ளலாம் . (அந்த விலைக்கு அந்த புடவையின் பெறுமதி சரியானதே . வீணாக நாம் மாடல் படத்தைப்போன்றே நமக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனமாகவே இருக்கும் . )

இதே போன்ற பிரச்சினைகளை சல்வார் , டாப்ஸ் , குர்தாக்கள் , லெஹெங்கா போன்ற ஆடைகளை ஒன்லைனில் தேர்வு செய்யும்போதும் நிச்சயம் ஏற்படும் . இவ்வாறான ஆடைகளின் புகைப்படத்தில் ஏதோவொரு பாகத்தில் அதன் “original brand name” குறிப்பிடப்பட்டிருக்குமாயின் , அதன் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் மற்றைய புகைப்படங்களையும் உற்றுநோக்க வேண்டும் . அப்போது நம்மால் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் அசலுக்கு நகலுக்குமான வித்தியாசம் புரியும் . ஒரிஜினல் பிராண்டுக்கும் நாம் கொள்வனவு செய்யப்போகும் உடையின் புகைப்படத்திற்கு நிறைய வேறுபாடுகள் இருக்கும் . உதாரணமாக “nik’s palette” எனும் பிராண்ட் குர்தாவின் புகைப்படம் அங்கே இருந்து இலங்கை ரூபாயில் அதன் விலை ஐயாயிரம் என குறிப்பிடப்பட்டிருந்தால் நமக்கு வரப்போவது அதன் நகலே. ஏனெனில் nik’s ப்ராண்டின் இந்திய விலையே சுமார் இரண்டாயிரத்தை தாண்டும் . அப்படியிருக்கையில் நம் நாட்டின் நாணயபெருமதியில் ஷிப்பிங் எல்லாம் சேர்த்து ஐயாயிரம் ரூபாய்க்கு கிடப்பது சாத்தியமில்லை அல்லவா ?

அடுத்து அளவியல் (Sizing) எனும் சிக்கல் . அநேகமாக நாம் இந்திய ஆடைகளையே கொள்வனவு செய்பவர்களாக இருக்கின்றோம் . ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள நிலையான அளவு அட்டவணை (standard sizing chart) போல் இன்றளவும் இந்திய அளவு அட்டவணை என்ற ஒன்று இல்லை என கூறப்படுகின்றது . இந்தியாவில் S/M/L /XL என்றோ 38, 40,42,44….. என்ற குறியீட்டின் கீழ் தான் ஆடைகள் குறிக்கப்படுகிறது. நிலையான அளவு அட்டவணை இல்லாததால் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கு ஏற்ற முறையில் அளவை குறிப்பிட்டுக்கொள்கிறது. ஒரு பிராண்ட் ஆடையின் XL அளவு நமக்கு பொருத்தமாக இருந்தால் மற்றொரு பிராண்ட் ஆடையின் XL நமக்கு பொருந்துவதில்லை .

நிலையான அளவு அட்டவணை இருந்தாலுமே நம் நாடுகளை பொறுத்தவரையில் இது 60-80% பெண்களுக்கு மட்டுமே ஒத்துவரும். காரணம் ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் வெவ்வேறானதே. இந்திய உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் இதை பின்பற்றி ஆடைகளை உருவாக்கும் பட்சத்தில் அது பலருக்கும் பொருந்தக்கூடியதாக இருந்தாலும் , பெண்களும் தனது உடல் அளவை அட்டவணையின் அளவுடன் ஒப்பிட்டு பார்த்து என்ன அளவு ஆடை வாங்கினால் நமக்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது .

அதுமட்டுமன்றி சில உடைகள் புகைப்படத்தில் பார்க்கும்போது அதனை அணிந்திருக்கும் பெண்ணுக்கு மிக நன்றாக இருப்பதுபோல் நமக்கு அவ்வளவு நன்றாக இருக்காது . ஆகவே நம்முடைய உடல் வாகிற்கு எவ்வாறான உடைகள் பொருத்தமானதாக இருக்கும் என்பதை நாம் முதலில் தெரிந்துவைத்துக்கொண்டு அதற்கு ஏறறாற்போல் உடைகளை தெரிவு செய்வது நல்லது .

பிரியா ராமநாதன்

தந்தையர் தின பரிசுகள் கிடைக்கும் இடங்கள் எவை?

இலங்கையில் தந்தையர் தினம் வருவதற்கு  இன்னும் சில தினங்களே உள்ளன, எமது தந்தையர்கள் நம் மீது பொழிந்த அனைத்து அன்பு மற்றும் தியாகங்களுக்காக கூடுதல் சிறப்பை உறுதிப்படுத்த வேண்டிய தருணம் இது.

தந்தையர் தினத்திற்கான சரியான பரிசுகளை உங்கள் அப்பாவுக்கு எங்கு வாங்குவது என்பது குறித்த சிறிய வழிகாட்டி இதோ!

1. சிலோன் ஹேம்பர்ஸ் (Ceylon Hampers)

கிடைக்கக்கூடிய பொருட்கள் : டைகள், மேல்சட்டைகள், குவளைகள் மற்றும் பல. தொகுக்கப்பட்ட மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பரிசு பெட்டிகள், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப பரிசுப் பெட்டியை சுயமாக வடிவமைத்து வாங்கவும் முடியும்.

விலை : LKR 7,000 முதல்
தொலைபேசி : 0772 422 446
முகவரி : No. 10, 4th Cross Lane, Borupona Road, Ratmalana

பேஸ்புக் : @Ceylon Hampers
இன்ஸ்டாகிராம் : @ceylon_hampers_gifting
இணையத்தளம் : ceylonhampers.com/

2. தி பட்லர் (The Butler)

கிடைக்கக்கூடிய பொருட்கள் : டைகள், பணப்பைகள், பெல்ட்கள், காலணிகள் மற்றும் பல.

விலை : LKR 4,000 முதல்
தொலைபேசி : 0774 454 102
முகவரி : No. 203A, Bauddhaloka Mawatha, Colombo 07

பேஸ்புக் : @thebutlersl
இன்ஸ்டாகிராம் : @the.butler
இணையத்தளம் : www.thebutlersrilanka.com

3. லோவி சிலோன் (LOVI CEYLON)

கிடைக்கக்கூடிய பொருட்கள் : சாரம், மேல்சட்டைகள், சட்டைகள் மற்றும் பல

விலை : LKR 10,000 – 20,000
தொலைபேசி : 0769 097 000
முகவரி : 14, Reid Avenue, Colombo 07

பேஸ்புக் : @LOVI
இன்ஸ்டாகிராம் : @lovisarongs
இணையத்தளம் : www.lovisarongs.com

4. லெதர் கலக்‌ஷன் (Leather Collection)

கிடைக்கக்கூடிய பொருட்கள் : காலணிகள், தோல் பைகள் மற்றும் பணப்பைகள் (wallets)

விலை : LKR 10,000 முதல்
தொலைபேசி : 0115 886 116
முகவரி : No. 26, Flower Road, Colombo 07

பேஸ்புக் : @LeatherCollection
இன்ஸ்டாகிராம் : @leathercollectionsl
இணையத்தளம் : www.leathercollection.lk

5. லெதர் ஆர்ட்டிஷன்ஸ் (Leather Artisans)

கிடைக்கக்கூடிய பொருட்கள் : பணப்பைகள், கடன் அட்டை பைகள், பெல்ட்கள், கீ டேக்ஸ் மற்றும் பல

விலை : LKR 7,500-10,000
தொலைபேசி : 0775 847 986
முகவரி : 165/1, Park Road, Colombo 05

பேஸ்புக் : @Leather Artisans
இன்ஸ்டாகிராம் : @Leather.artisans

6.பெயார் புட்  (Barefoot)

கிடைக்கக்கூடிய பொருட்கள் : பாடிக் படைப்புகள், கைவினைப் பொருட்கள் மற்றும் ஆடைகள், குளியல் மற்றும் சரும பராமரிப்பு பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள்

விலை : LKR 5,000 முதல்
தொலைபேசி : 0112 589 305
முகவரி : No. 704, Galle Road, Colombo 03

பேஸ்புக் : @BAREFOOT
இன்ஸ்டாகிராம் : @barefootceylon
இணையத்தளம் : barefootceylon.com

7. டிசைன் கலெக்டிவ் ஸ்டோர் (The Design Collective Store)

கிடைக்கக்கூடிய பொருட்கள் : ஆடைகள், அணிகலன்கள், அழகு மற்றும் ஆரோக்கிய பொருட்கள்.

விலை : LKR 3,000 முதல்
தொலைபேசி : 0112 596 328
முகவரி : No. 28, Stratford Avenue, Colombo 06

பேஸ்புக் : @thedesigncollectivestore
இன்ஸ்டாகிராம் : @thedesigncollectivestore
இணையத்தளம் : www.thedesigncollectivestore.com

8. ஸ்பா சிலோன் (Spa Ceylon)

கிடைக்கக்கூடிய பொருட்கள் : சிறப்பு தந்தையர் தின பரிசு பெட்டிகள் மற்றும் ஈவ் டி (eau de) வாசனை திரவியங்கள்.

விலை : LKR 5,000 முதல்
தொலைபேசி : 0112 381 199 (One Galle Face)
முகவரி : அனைத்து கிளைகளும்

பேஸ்புக் : @SpaCeylonAyurveda
இன்ஸ்டாகிராம் : @spaceylonofficial
இணையத்தளம் : lk.spaceylon.com

9. லாமி ஸ்ரீலங்கா (Lamy Sri Lanka)

கிடைக்கக்கூடிய பொருட்கள் : வடிவமைப்பாளர் பேனாக்கள், மை மற்றும் குறிப்பேடுகள்.

விலை : LKR 10,000 முதல்
தொலைபேசி : 0768 252 525
முகவரி : No. 50, Galle Road, Colombo 04

பேஸ்புக் : @LAMYSriLanka
இன்ஸ்டாகிராம் : @lamysrilanka

10. WH (வெ.ஹவுஸ்) ஸ்ரீலங்கா (WH (Wear.House) Sri Lanka)

கிடைக்கக்கூடிய பொருட்கள் : மேல் சட்டைகள், கடன் அட்டை பைகள், தொப்பிகள், சன்கிளாஸ் பைகள் மற்றும் பல

விலை : LKR 5,000 முதல்
தொலைபேசி : 0112 023 899
முகவரி : No. 79, Dharmapala Mawatha, Colombo 03

பேஸ்புக் : @WH.Srilanka
இன்ஸ்டாகிராம் : @whsrilanka
இணையத்தளம் : www.wearhouse.lk

11. டோனி பெல்லே (Tony Pellè)

கிடைக்கக்கூடிய பொருள் : பாதணிகள்

விலை : LKR 10,000 முதல்
தொலைபேசி : 0772 827 272
முகவரி : No. 365, High Level Road, Nugegoda.

பேஸ்புக் : @TonyPelle
இன்ஸ்டாகிராம் : @tonypelle.lk
இணையத்தளம் : www.tonypelle.lk/En/#

12. விமலதர்மா & சன்ஸ் (Wimaladharma & Sons)

கிடைக்கக்கூடிய பொருட்கள் : பிரீமியம் பிராண்டட் கடிகாரங்கள்.

விலை : LKR 75,000 முதல்
தொலைபேசி : 0112 502 277 l 0771 412 652
முகவரி : No.278, Thimbirigasyaya Road, Colombo 05

பேஸ்புக் : @Wimaladharma&Sons
இன்ஸ்டாகிராம் : @wimaladharma_sons_watches
இணையத்தளம் : www.wimsons.com

13. க்ளீக் (Kleeq)

கிடைக்கக்கூடிய பொருட்கள் : வாகன பாகங்கள், மொபைல் பாகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பல.

விலை : LKR 4,000 முதல்
தொலைபேசி : 0762 663 397
முகவரி : No. 08, Nandimithra Place, Colombo 06

பேஸ்புக் : @Kleeq.lk
இன்ஸ்டாகிராம் : @kleeq.lk
இணையத்தளம் : kleeq.lk/

14. தி மக் ஷொட் (The Mugshot)

கிடைக்கக்கூடிய பொருட்கள் : குவளைகள், கோஸ்டர்கள், குடுவைகள், போத்தல்கள், கடிகாரங்கள், புகைப்பட சட்டங்கள் மற்றும் பரிசுப் பெட்டிகள் (தனிப்பயனாக்கக்கூடியது)

விலை : LKR 1,200 முதல்
தொலைபேசி : 0765 667 761
முகவரி : ஆன்லைன் அடிப்படையில் (வெள்ளவத்தையிலிருந்து எடுத்துக்கொள்ளும் வசதி கிடைக்கும்)

பேஸ்புக் : @themugshotlk
இன்ஸ்டாகிராம் : @ the_mugshotlk
இணையத்தளம் : www.themugshotlk.com

உங்கள் தந்தையருக்கு சிறந்த முறையில் சரியான பரிசைப் பெற இந்தப் பட்டியல் உதவும் என்று நம்புகிறோம். உங்களிடம் ஏதேனும் பரிந்துரைகள் உள்ளதா? கருத்துகளில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!

இலங்கை பௌதீகவியலாளர் பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசேர்

கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர்

பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் இலங்கையின் தலைசிறந்த பௌதீகவியலாளரும், கணிதவியலாளரும், இயற்பியல் ஆர்வலரும், தலை சிறந்த கோற்பாட்டாளரும் ஆவார். யாழ்ப்பாணம் நாவற்குழியை பிறப்பிடமாக கொண்ட சி.ஜெ.ஈ கணிதம் மற்றும் விஞ்ஞானத்துறைகளோடு நின்று விடாது தமிழிலும் தேர்ச்சி மிக்கவராகவும் தமிழ் இலக்கியத்தின் மீதும் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார்.
இன்றளவிலும் சி.ஜெ.ஈ நிறுவிய புரோத்தன்- இலத்திரன்களுக்கு இடையிலான ஆர்முடுகல் தேற்றம் எலிசியரின் தேற்றம் என்ற பெயரில் உலகளவில்   பௌதீகவியலில், நிறுவல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

1918 இல் நாவற்குழியில் திரு.திருமதி.ஜகோப் எலியேசர் தம்பதிகளுக்கு மகனாக பிறந்த சி.ஜெ.ஈ தன் ஆரம்ப கல்வியை பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியில் பெற்றதுடன் கேம்பிரிட்ஜ் தேசிய பரீட்சையில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்று பின்னாட்களில் கொழும்பு புனித ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். பின் கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியில் உயர்கல்வியை பெற்றதுடன் கணித பாடத்தில் முதற்தர சித்திகளுடன் பட்டப்படிப்பைப் முடித்தார். முதுகலை கல்விக்காக கலாநிதி போல் டிராக் இன் மேற்பார்வையின் கீழ் காந்த மின்னியல் சார்பில் தன் ஆய்வுகளை முன்வைத்து கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் முடித்தப் பின்னர் கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியில் விரிவுரையாளராக தன் பணியை தொடங்கினார். தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராகவும் அறிவியல் பீடத்தின் அதிபதியாகவும் கடமையாற்றியதுடன் இடைப்பட்டக் காலத்தில் ஜெனீவா மற்றும் லியன்னா நகரங்களில் அணு சக்தி என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியாக அழைக்கப்பட்டார். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் அணுகுண்டு தயாரிப்பில் பிரதானியாக இருந்த பேராசிரியர் ஜெ.ரொபர்ட் ஒப்பென்ஹைமர் உடன் இணைந்து கணிதவியலாளராக பணியாற்றினார்.
சிறிது காலம் முன்னோடி விஞ்ஞானத்திற்கான இலங்கை சங்கத்தின் தலைவராக இருந்ததுடன் யாழ் பல்கலைக்கழகத்தால் Dsc கௌரவப்பட்டம் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.பின்னர் மலாயா பல்கலைகழகத்திலும் ஆஸ்திரேலியா லா ட்ரொப் பல்கலைகழகத்திலும் கணிதவியல் பேராசிரியராக கடமையாற்றியதுடன் 1983 ஆம் ஆண்டில் பேராசிரியர் பணியிலிருந்து இளைப்பாறினார்.

சி.ஜெ.ஈ கோலாலம்பூரில் இடம்பெற்ற, முதல் உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் “சுழியம்” என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றை வெளியிட்டார். மேலும் இளைப்பாறிய காலங்களில் அவுஸ்த்ரேலிய தமிழ் சமூகத்துடன் சேர்ந்து தமிழுக்காக உழைத்ததுடன் அவுஸ்த்ரேலிய விக்டோரியா மாநிலத்தின் இலங்கை தமிழ் சம்மேளனத்தின் தலைவராகவும் பணியாற்றினார். இலங்கையில் தமிழினப் படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்த முக்கியமானத் தலைவர்களில் இவரும் ஒருவராவார். பின்னாட்களில் அவுஸ்திரேலிய தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த தமிழ் சங்கங்களின் சம்மேளனம் அமைத்த போது அதன் தலைவராகவும் கடமையாற்றினார்.
1997 ஆம் ஆண்டு தமிழீழத்திற்கான உயரிய விருதான தமிழீழத் தலைவர் பிரபாகரன் அவர்களினால் மாமனிதர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பின் இவர் ஆஸ்திரேலிய மக்களுக்காக ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அரசினால் அவுஸ்திரேலியாவின் உயரிய விருதான ஓடர் ஒஃப் அவுஸ்த்ரேலியா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேலும் பல்வேறு இயற்பியல், பௌதீகவியல்சார் ஆராய்ச்சிக்கட்டுரைகளை எழுதியதுடன், நவீன பௌதீகவியலுக்கான காந்த மின்னியல் கோற்பாடுகளை உள்ளடக்கிய நூலையும் வெளியிட்டார். தன் என்பத்து இரண்டாம் வயதில் 2001ஆம் ஆண்டு காலமான கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் அவர்களின் வாழ்க்கை வரலாறானது ‘A conquering scientist’ எனும் பெயரில் சி.ஜெ.ஈ வின் மனைவி ராணீ எலியெசர் அவர்களால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது

-பவித்ரா ராஜ்

இதனால தான் ஆண்களும் பெண்களும் வெவ்வேறு கழிவறை உபயோகிக்க சொல்றாங்களா?

வெள்ளைப்படுதல் பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் சிக்கல்களில் ஒன்றாக காணப்படினும், அதற்கான முறையான சிகிச்சையளிக்க தவறுகையில் பாரிய நோய்நிலைகளுக்கு முகங் கொடுக்க நேரிடும். சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பற்றிய சரியான புரிதல் இல்லமால் இருத்தலே, அவர்கள் வெள்ளைப்படுத்தலுக்கான சிகிச்சை பெறாமல் இருப்பதற்க்கான ஓர் காரணமாகும். இந்த பதிவினூடாக வெள்ளைப்படுதல் பற்றிய தேவையான தகவல்களை அறிந்துக் கொள்ளலாம்.

வெள்ளைப்படுதல் என்றால் என்ன?

இயற்கையாகவே கிருமிகள் மற்றும் நோய்த்தொற்றுகளில் இருந்து பிறப்புறுப்பை பாதுகாக்க கூடிய அமிலத்தன்மையுடைய நிறமற்ற பிசுபிசுப்புத் தன்மையுடைய திரவம் பெண்களின் பிறப்புறுப்பிலுள்ள செல்களின் சுவர்களில் சுரக்கும். இந்த திரவம் நிறமற்ற தன்மையுடன் வழமையாக ஒரு குறிப்பிட்ட அளவில் வெளியாகுவது சாதாரணமாகும். ஆனால் பிறப்புறுப்பில் கிருமி அல்லது நோய்த்தொற்றுக்கள் ஏற்படும் போது இந்த திரவமானது வழமையை விட அதிகமாக சுரக்க தொடங்கும். இதில் வழமைக்கு மாறான துர்நாற்றம் வீசுவதோடு நிறமற்ற தன்மை மாற்றமடைந்து வெள்ளை, இளஞ்சிவப்பு, மஞ்சள் அல்லது பச்சை நிறங்களில் வெளியாகும். இது வெள்ளைபடுதலில் கவனிக்க வேண்டிய அசாதாரண நிலையாகும்.

வெள்ளைப்படுதலுக்கு பின் மறைந்துள்ள காரணங்கள் என்ன?

முன்னர் குறிப்பிட்டது போல வெள்ளைப்படுதலை சாதாரண நிலை மற்றும் அசாதாரண நிலை என பிரித்து நோக்க முடியும். இவ்விரு நிலைகளுக்குமான காரணங்களை ஆராய்வோம்.வெள்ளைப்படுதலின் சாதாரண நிலை இது மாதவிலக்கு ஆரம்பித்த காலம் தொட்டு பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் காலம் வரை, ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் அதாவது சூலகத்திலிருந்து சூல் வெளியாகி கர்ப்பபையை வந்தடையும் காலப் பகுதி, பெண்கள் கருவுற்று இருக்கும் காலம்,உடலுறவில் ஈடுபடும் தருணங்கள்,வெள்ளைப்படுதலின் அசாதாரண நிலை,சுகாதாரமற்ற பழக்கவழக்கங்கள்,அசுத்தமான உள்ளாடைகளை அணிதல் மற்றும் பிறப்புறுப்பை முறையாக சுத்தம் செய்யாதிருத்தல். போன்றன கிருமி தொற்றுக்கு பாதையிடுகின்றன.ஆண்கள் உபயோகிக்கும் கழிப்பறையை உபயோகித்தல் [Trichomonas vaginalis] என்ற கிருமிகள் ஆணுறுப்பில் காணப்படுகின்றன. ஆண்கள் உபயோகித்து ஒழுங்காக சுத்தம் செய்யப்படாத கழிப்பறைகளை பெண்கள் உபயோகிப்பதனால் கிருமி தொற்றுக்குள்ளாகி வெள்ளைப்படுதல் தீவிரமடைகிறது.மருந்துகளை உட்கொள்ளல் -ஆன்டி பையோட்டிக், கருத்தடை மருந்துகள் போன்றவற்றை நீண்ட காலம் உபயோகித்தல்.நோய்நிலைகளுக்கு ஆளாகுதல் – பால்வினை நோய்கள், புற்று நோய்கள், கிருமி தொற்றுக்கள்.

வெள்ளைப்படுதலுக்கு தீர்வு என்ன?

சாதாரண வெள்ளைப்படுத்தலுக்கு கற்றாழை சாறு, நெல்லிக்காய் சாறு, எலுமிச்சம்பழச்சாறு, தோடம்பழச்சாறு போன்றவற்றை பருகி வருவதன் மூலம் மாற்றம் காண முடியும்.அசாதாரண வெள்ளைபடுத்தலுக்கு வைத்திய நிபுணர் ஒருவரை நாடி முறையான வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதே சிறந்த தீர்வாக அமையும்.பெண்கள் வெள்ளைப்படுதலை குறித்து ஒளிவுமறைவின்றி வைத்திய ஆலோசனை பெற முன்வர வேண்டும். இந்த பதிவினூடாக வெள்ளைப்படுதல் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கும் என நம்புகிறோம். நாங்கள் இந்த பதிவில் இணைக்க தவறிய வெள்ளைப்படுதல் பற்றிய தகவல்களையும் வெள்ளைப்படுதல் பற்றிய உங்கள் சொந்த அனுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

– பவித்ரா ராஜ்

அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன்
 | Alfred Jeyaratnam Wilson

நாடியின் மனிதர்களை நாடி பகுதியில் தொடர்ச்சியாக பல பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை பற்றிய பதிவுகளை வெளியிட்டு வருவதை காணலாம். அந்தவகையில் இந்த பதிவில் இலங்கையின் மிக முக்கியமான அரசியல் எழுத்தாளரான அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன்
 பற்றி தெரிந்து கொள்வோம்..!அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் அவர்கள் புகழ் பெற்ற இலங்கை தமிழ் கல்வியாளர், வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளர். இவர் 1928ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 04ஆம் திகதி கே.ஆர்.வில்சன் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவர் தனது பாடசாலை கல்வியை கொழும்பு றோயல் கல்லூரியில் பயின்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தையும் இலண்டன் பொருளியல் மற்றும் அரசறிவியல் பள்ளியில் தனது முனைவர் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். 

இவர் ஆரம்பத்தில் சில காலம் சிலோன் டெய்லி நியூஸ் பத்திரிகையின் தலையங்க எழுத்தாளராக பணி புரிந்தார். 1952ஆம் ஆண்டு பேராதனையிலுள்ள இலங்கை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசறிவியல் விரிவுரையாளராக தனது பணியை தொடங்கினார். அத்தோடு அரசியல் விஞ்ஞானத்தின் ஸ்தாபகப் பேராசிரியராக 1969 முதல் 1972 வரை இருந்தார். இவர் இங்கு 1952இலிருந்து 1972வரை இருபது வருட காலமாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின் பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தின் (UNB) ஃப்ரெடெரிக்டன் வளாகத்தில் அரசறிவியல் விரிவுரையாளாராக இணைந்து 1994 வரை பணிபுரிந்தார். 

இவர் 1955ஆம் ஆண்டு லண்டன் பொருளியல் மற்றும் அரசறிவியல் பள்ளியில் லெவர்ஹுல்ம் ஆராய்ச்சி அறிஞராகவும், 1964ஆம் ஆண்டிலிருந்து 1965ஆம் ஆண்டு வரை லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் அரசியல் ஆராய்ச்சியாளராகவும், 1970ஆம் ஆண்டிலிருந்து 1971ஆம் ஆண்டு வரை மெக்கில் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கூட்டாளராகவும், 1971ஆம் ஆண்டிலிருந்து 1972ஆம் ஆண்டு வரை மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சைமன் சீனியர் ஃபெலோவாகவும், 1977ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மூத்த ஆராய்ச்சியாளர் மற்றும் செயின்ட் ஆண்டனி கல்லூரி, ஆக்ஸ்போர்டில் மூத்த துணை உறுப்பினராகவும் இருந்தார். 1978ஆம் ஆண்டு தொடக்கம் 1983ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் அரசியலமைப்பு ஆலோசகராக இருந்தார். அமெரிக்க அரசத் திணைக்கள தெற்காசியாவின் வெளியுறவுத்துறை ஆலோசகராகவும் இருந்தார்.

A J வில்சன் அவர்களின் சில நூல்கள்..

வில்சன் அவர்கள் கனேடிய சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் (CIDA), கனடிய அகதிகள் ஆலோசனை வாரியம், பன்முக கலாச்சார அமைச்சகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள குடியேற்ற நீதிமன்றங்களிலும் பணியாற்றினார். தி ரவுண்ட் டேபிள், தி ஜர்னல் ஆஃப் காமன்வெல்த் அண்ட் காம்பரிட்டிவ் பாலிடிக்ஸ், தி சிலோன் ஜர்னல் ஆஃப் ஹிஸ்டரிகல் அண்ட் சோஷியல் ஸ்டடீஸ், ஏசியன் சர்வே மற்றும் தி பார்லிமெண்டேரியன் ஆகியவற்றின் ஆசிரியர் குழுவிலும் இவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இவர் Politics in Sri Lanka, Electoral Politics in an Emergent State, The Gaullist System in Asia, The States of South Asia, The Break-up of Sri Lanka, S. J. V. Chelvanayakam and the Crisis of Sri Lankan Tamil Nationalism, A Political Biography, Sri Lankan Tamil Nationalism, The Post-Colonial States of South Asia ஆகிய எட்டு புத்தகங்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரை பிரசுரங்களையும் எழுதியுள்ளார்.

A J வில்சன் அவர்கள் தந்தை செல்வா அவர்களின் மூன்றாம் நினைவு உரையை கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் ஆற்றிய போது..

அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் மகளான சுசிலி என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு மல்லிகா, மைதிலி எனும் இரண்டு மகள்களும் குமணன் என்ற மகனும் பிறந்தனர். 

அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் அவர்கள் தனது 71வயதில், 2000ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி அன்று டொராண்டோவிலுள்ள அவருடைய வீட்டில் தூக்கத்தில் இருந்த போது இதய செயலிழப்பால் உயிரிழந்தார்.

– பவித்ரா ராஜ்

பாலு மகேந்திரா – ஒரு காலப்பயணம் 

ஒளிப்பதிவு, திரைக்கதை மற்றும் இயக்கம் என மூன்று துறைகளிலும் விருது பெற்ற சிறப்புக்குரிய திரைப்பட வல்லுநர் பாலு மகேந்திரா. இந்திய சினிமா துறையில் திறமையான ஒருவராக அறியப்படும் இவர் ஒரு இலங்கையர். 1939ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி இலங்கையின் மட்டக்களப்பு அருகேயுள்ள அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த இவரது இயற்பெயர் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன். இவர் தனது பள்ளிப்படிப்பை மெதடிஸ்ட் மத்திய கல்லூரி மற்றும் செயின்ட் மைக்கேல்  தேசிய கல்லூரியில் பயின்றார். இவர் தனது வகுப்பாசிரியரால் திரைப்படங்களை நோக்கி ஈர்க்கப்பட்டமையால், செர்ஜி ஐசென்ஸ்டீன் இயக்கிய ‘Battleship Potemkin’ மற்றும் விட்டோரியோ டி சிகா இயக்கிய ‘Bicycle Thieves’ ஆகிய படங்களை பார்க்கும் சூழ்நிலை உருவானது. சத்யஜித்ரேய் இயக்கத்தில் வெளியான பதேர் பாஞ்சலி என்ற திரைப்படமும், டேவிட் லீனின் இயக்கத்தில் வெளியான ‘ப்ரிட்ஜ் ஒப் ரிவெர் க்வாய்’ திரைப்படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படும் போது அதனை இவர் பார்வையிட்டதும் பாலு மகேந்திராவினுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அவரை திரைப்படத்துறைக்குள் கால் பதிக்க தூண்டியது. 

சிறுவயதிலிருந்தே மகேந்திரா நுண்கலை மற்றும் இலக்கியத்தில் அதிகம் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவராக இருந்தார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், அவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பின் இலங்கை திரும்பிய அவர் கொழும்பில் நில அளவைத் துறையில் வரைவாளராக சிறிது காலம் பணிபுரிந்தார். அதே வேளை அவர் தியேன் அருவி என்ற தமிழ் இலக்கிய இதழைத் தொகுத்து வந்தார். கொழும்பில் ரேடியோ சிலோனில் அமெச்சூர் நாடகக் கலைஞராகப் பணிபுரிந்த அவர், சிங்கள நாடகக் குழுக்களுடன் தன் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டார். 

மகேந்திராவின் சினிமா மீதான ஆர்வம் அவரை இந்தியாவுக்குப் புறப்பட்டு 1966இல் புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிலையத்தில் சேர ஊக்குவித்தது. மற்ற துறைகளுக்கு இணைய முடியாமால் போக, அவர் ஒளிப்பதிவு துறையில் இணைந்தார். இந்த பயிற்சி நிலையத்தில் பிரெஞ்சு நியூ வேவ் இயக்கத்துடன் தொடர்புடைய பிரான்சுவா ட்ரூஃபாட் மற்றும் ஜீன்-லூக் கோடார்ட் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பை பெற்றதால், அவர் உலக சினிமாவை பற்றிய அறிய வாய்ப்பு உருவானது. 1969 இல் மகேந்திரா இங்கிருந்து தங்கப் பதக்கத்துடன் பட்டம் பெற்றார்

இவர் புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிலையத்திலிருந்து (FTII) வெளியான பின் இலங்கைத் தமிழ் சினிமாவுக்குள் நுழைவதற்காக எடுத்த ஆரம்ப கட்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. புனேயில் பயின்றுவிட்டு இலங்கை திரும்பி சிங்களப் படங்களில் சந்தர்ப்பம் வேண்டி இவர் தனது “செங்கோட்டை” என்ற படத்தை கொழும்பு – சவோய் திரையரங்கில் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு திரையிட்டும் காண்பித்திருக்கிறார். ‘நெல்லு’ படத்தின் இயக்குனரான ராமு காரியத்,  FTIIஇல் மகேந்திராவின் டிப்ளமோ படமான ‘எ வியூ ஃப்ரம் தி ஃபோர்ட்’ மூலம் ஈர்க்கப்பட்டார். அதன் பின்  ராமு காரியத் மகேந்திராவை ‘நெல்லு’ படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துக் கொண்டார். நெல்லு படத்தின் படப்பிடிப்பு 1971ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டிருந்தாலும் அதன் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் அதன் வெளியீட்டை மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தது. 1974ஆம் ஆண்டில் வெளியான ‘நெல்லு’ திரைப்படமானது சிறந்த ஒளிப்பதிவாளருக்கான கேரள மாநில திரைப்பட விருதை பாலு மகேந்திராவுக்கு பெற்றுக் கொடுத்தது. 

‘கோகிலா’ – 1977

‘நெல்லு’ திரைப்படம் வெளியாவதற்கிடையில் இயக்குனரான ராமு காரியத் தனது ‘மாயா’ என்ற அடுத்த திரைப்படத்திற்கு பாலு மகேந்திராவை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துக் கொண்டார். என்ன தான் பாலு மகேந்திரா நெல்லு மற்றும் மாயா திரைப்படங்களில் முதல் தடவை ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருந்தாலும் அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி முதலில் வெளியான திரைப்படம், 1972ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட P. N. மேனனின் ‘பணிமுடக்கு’ என்ற திரைப்படம் தான். இவற்றை தொடர்ந்து சாஸ்திரம் ஜெயிச்சு மனுஷ்யன் தோட்டு (1973), கலியுகம் (1973) மற்றும் சட்டகரி (1974) போன்ற மலையாளப் படங்களில் பணியாற்றினார். நெல்லு திரைப்படம் மட்டுமன்றி பிரயாணம் மற்றும் சுவண்ணா சந்தியாக்கள் ஆகிய திரைப்படங்களும் பாலு மகேந்திராவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற மாநில விருதை பெற்று தந்தது. 1971ஆம் ஆண்டு தொடக்கம் 1976 வரையான காலங்களில் சுமார் 20 திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் 1977ஆம் ஆண்டில் முக்கோண காதல் கதையை மையமாக கொண்ட ‘கோகிலா’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தின் மூலம் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தனது முதல் தேசிய விருதை வென்றார்.

‘முள்ளும் மலரும்’ படப்பிடிப்பில் – 1978

‘மூடு பனி’ – 1980

அதன் பின் 1978ஆம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியதோடு திரைக்கதை, எடிட்டிங் மற்றும் இயக்கம் ஆகிய பகுதிகளிலும் பங்களித்தார். முள்ளும் மலரும்  திரைப்படத்தின் பின் 1979ஆம் ஆண்டு தமிழில் தனது இயக்கத்தில் ‘அழியாத கோலங்கள்’ என்ற திரைப்படத்தை படைத்தார். இத்திரைப்படமானது கிராமிய பின்னணியில் வளரும் மூன்று பருவ வயது சிறுவர்களின் பாலுணர்வு சிக்கல்களை பேசும் கதை. இதனை இவரது சிறுவயது அனுபவங்கள் சிலவற்றை வைத்து எழுதியதாகவும் கூறப்படுகிறது. இதன் கருப்பொருள் அக்காலகட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், இத்திரைப்படம் அபார வெற்றி அடைந்தது. 1980ஆம் ஆண்டில் இவர் இயக்கிய மூன்றாவது படமான ‘மூடு பனி’, 1960இல் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படமான ‘சைக்கோ’ திரைப்படத்தை அடிப்படையாக கொண்டது. இதுவே இளையராஜாவும் பாலு மகேந்திராவும் ஒன்றாக இணைந்து பணியாற்றிய முதல் படமாகும். இந்த படத்திலிருந்து இவரின் வழக்கமான இசையமைப்பாளராக இளையராஜா மாறிவிட்டார்.
1982ஆம் ஆண்டில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் படமாக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’ மக்கள் மனதை வென்று திரையரங்குகளில் 300 நாட்கள் ஓடி பெரும் வெற்றியடைந்தது. இன்றும் பலருக்கு பிடித்த திரைப்படமாக ‘மூன்றாம் பிறை’ அழியா புகழோடு இடம் பிடித்துள்ளது. அதே ஆண்டில், எரிச் செகலின்  Man, Woman and Child என்ற நாவலை முன்னோடியாக கொண்டு மலையாளத்தில் ‘ஓலங்கள்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இது விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் இறுதியில் ஒலங்கள் மற்றும் மூன்றாம் பிறை இயக்கியதற்காக மகேந்திரா இரண்டு பிலிம்பேர் அவார்டுகளை வென்றார். 1983ஆம் ஆண்டில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் ‘மூன்றாம் பிறை’ திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து சிறந்த கதைக்கான பிலிம்பேர் பரிந்துரையைப் பெற்றதோடு, ஹிந்தி பார்வையாளர்களிடம் நன்கு அறியப்பட்ட இயக்குனராக மாறினார் பாலு மகேந்திரா. 

‘மூன்றாம் பிறை’ – 1983

1980களின் நடுப்பகுதியில் பாலு மகேந்திரா மிக முக்கிய திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். அதில் முதல் படம் 1984ஆம் ஆண்டு வெளியான ‘நீங்கள் கேட்டவை’. இது ஒரு முழுமையான கமர்ஷியல் படமாக மாறியது. பின்னர் பாலு மகேந்திரா, தன்னால் கமர்ஷியல் படங்களைத் தயாரிக்க முடியும் என்பதை விமர்சகர்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் படத்தைத் தயாரித்ததாகக் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு அவர் ரஜினிகாந்துடன் இணைந்து ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ திரைப்படத்தை உருவாக்கினார், இந்த திரைப்படம் தோல்வியடைந்தது. பின்னர் அவர் 1985ஆம் ஆண்டு வெளியான இவரின் மலையாளத் திரைப்படமான ‘யாத்ரா’வில் மம்முட்டியுடன் இணைந்து வன அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் 1977ஆம் ஆண்டு யோஜி யமடா இயக்கத்தில் வெளியான ஜப்பானிய திரைப்படமான ‘The Yellow Handkerchief’ தழுவலாகும். இந்தத் திரைப்படமானது திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடி ₹1.9 மில்லியன் வசூலை குவித்தது. அந்த ஆண்டில் அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படமாக சிறப்பு பெற்றது. இந்த நேரத்தில், அவர் 1986ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான ‘மலாயா மருதா’ இயக்குவதற்காக கிடைத்த வாய்ப்பை நிராகரித்தார். தீவிரமான படங்களை எடுக்கும் இயக்குனராக பெயர் பெற்றிருந்த மகேந்திரா, 1984ஆம் ஆண்டு ஹாலிவூட்டில் வெளியான அமெரிக்கத் திரைப்படமான ‘மிக்கி அண்ட் மௌட்’ திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு 1987ஆம் ஆண்டு வெளியான ‘ரெட்டை வால் குருவி’ என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை உருவாக்கப்பட்ட சிறந்த நகைச்சுவைப் படங்களில் ஒன்றாகக் இடம் பிடித்துள்ளது. இந்த திரைப்படம் அவரது எதிர்கால படங்களான மறுபடியும் (1993) மற்றும் சதி லீலாவதி (1995) போன்றவற்றிற்கு அடித்தளமாக அமைந்தது. பாலு மகேந்திரா தனது தாய், தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், தான் படைத்தவற்றுள் மிகக் குறைவான தவறுகள் மற்றும் சமரசங்களுடன் எடுக்கப்பட்ட தனது இரண்டு சிறந்த படங்களென குறிப்பிடும் திரைப்படங்களாக 1988ஆம் ஆண்டு வெளியான ‘வீடு’ மற்றும் 1989இல் வெளியான ‘சந்தியா ராகம்’ காணப்படுகிறது. இதில் ‘வீடு’ திரைப்படமானது இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. ‘சந்தியா ராகம்’ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த குடும்ப நலத் திரைப்படம் என்கிற விருதை வென்றது. 

‘வீடு’ – 1988

1992ஆம் ஆண்டு ‘வண்ண வண்ண பூக்கள்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படம் 100 நாட்கள் ஓடியதோடு 39வது தேசிய திரைப்பட விருதுகளில் “சிறந்த பிராந்திய திரைப்படம்” என்ற விருதை வென்றது. மகேந்திரா தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு நெருக்கமானதாக உணர்ந்தமையால் மகேஷ் பட்டின் ‘ஆர்த்’ என்ற திரைபடத்தை 1993ஆம் ஆண்டு தமிழில் ‘மறுபடியும்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டார். அதனை தொடர்ந்து 1995ஆம் ஆண்டு கமல்ஹாசனால் தயாரிக்கப்பட்ட ‘சதி லீலாவதி’ என்ற நகைச்சுவை திரைப்படத்தில் இயக்குனராக பணியாற்றினார். அடுத்த ஆண்டு அவர் தனது கன்னட படமான கோகிலாவின் ரீமேக்கான ‘அவுர் ஏக் பிரேம் கஹானி’ மூலம் பாலிவுட்டில் மீண்டும் கால் பதித்தார். அதன் பின் 1997ஆம் ஆண்டு வெளியான ‘ராமன் அப்துல்லா’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இது வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இரண்டு நண்பர்களுக்கு இடையிலான நட்பை பற்றிய கதையாகும். பல சிக்கல்களுக்கு பின் நிறைவு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி தோல்வியடைந்தது. 

இதன் பின் சினிமாவிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்ட பாலு மகேந்திரா, 2000களின் முற்பகுதியில் சன் டிவியில் வெளியான ‘கதை நேரம்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் பணியாற்றினார். இவரது ‘கதைநேரம்’ தமிழின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆக்கங்களை சின்னத்திரை வழியாக காட்சிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டுசென்றது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவெளிக்கு பின் 2003இல் ‘ஜூலி கணபதி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்த போதும் வசூலில் தோல்வியடைந்தது. அதன் பின் 2005ஆம் ஆண்டு ‘அது ஒரு கனா காலம்’ என்ற திரைப்படத்தை உருவாக்கினார். அதில் தனுஷ், ப்ரியாமணி ஆகியோர் நடித்திருந்தனர்.

‘தலைமுறைகள்’ – 2013

2007இல் இவர் சென்னையில் “சினிமா பட்டறை” என்ற பெயரில் திரைப்படப் பள்ளியைத் தொடங்கினார். இந்த பள்ளியானது ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் நடிப்பு போன்ற துறைகளில் அறிவையும் பயிற்சிகளையும் வழங்குகிறது. இன்று இது ‘பாலுமகேந்திரா சினிமா பட்டறை’ என்ற பெயரால் அறியப்படுகிறது.

‘தலைமுறைகள்’ படப்பிடிப்பில் – 2013

திரைப்படங்களிலிருந்து ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் 2013ஆம் ஆண்டு ‘தலைமுறைகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் தோன்றினார். அதுவரை காலமும் பிலிம் நெகட்டிவ் முறையில் தனது படைப்புகளை உருவாக்கிய பாலு மகேந்திரா, டிஜிட்டல் காமெரா ஒன்றில் படமாக்கிய முதல் முழுநீளத் திரைப்படம் தலைமுறைகள். இத்திரைப்படம் அவரது நடிப்பு திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது எனலாம். நடிப்பு மட்டுமின்றி, இப் படத்தின் திரைக்கதை, இயக்கம், எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு ஆகியவற்றிலும் பாலு மகேந்திரா பணியாற்றினார். இத்திரைப்படமானது ஒரு வயதான மனிதனுக்கும் அவரது பேரனுக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றிய படம். மகேந்திராவின் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றதன் மூலம் படம் நேர்மறையான விமர்சனங்களை தன்வசமாக்கி கொண்டது. ஆனால் வணிக ரீதியாக இந்தப் படம் தோல்வியடைந்தது. இத்திரைப்படம் 61வது தேசிய திரைப்பட விருதுகளில் தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான ‘நர்கிஸ் தத்’ விருதை வென்றது.


– பவித்ரா ராஜ் 

கொழும்பில் ‘Happy Hour’ கிடைக்கும் இடங்கள்!

நல்லதோ கெட்டதோ, சோகமோ கொண்டாட்டமோ எந்த நாளுமே நமக்கு குடிப்பதற்கு சிறப்பான நாள் தான். அதே வேளை நம் பணமும் தீர்ந்து விடக் கூடாதென்பதிலும் நாம் கவனமாக செயற்பட வேண்டும் இல்லையா?!

நாம் அனைவருமே எங்கு நல்ல ‘ஹாப்பி ஹௌர்’ சலுகை கிடைக்கும் என பலமுறை மொபைலில் தேடியிருப்போம். உங்கள் தேடலை இலகுவாக்க இதோ கொழும்பில் உள்ள பார் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் வழங்கப்படும் ‘ஹாப்பி ஹௌர்’ சலுகைகள் பற்றிய பட்டியல் உங்களுக்காக நாடியில்!

Chilled Out Lounges

•கமி மகி (Kami Maki)
முகவரி: 58A, ஹோர்டன் பிளேஸ், கொழும்பு 07
தொடர்புகளுக்கு: 0773 496 349
நேரம்: திங்கள் – வியாழன், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட 5 காக்டெய்ல்களை ரூபாய் 5000இற்கு வாங்கலாம்
Instagram: @kami_maki_colombo
Facebook: @KamiMakiColombo07

• மொன்சூன் (Monsoon)
முகவரி: 50/2, பார்க் ஸ்ட்ரீட் மியூஸ், கொழும்பு 02
தொடர்புகளுக்கு: 0763 365 835
நேரம்: தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரிங்க்ஸ்களில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்
Instagram: @monsooncolombo
Facebook: @monsooncolombo

• சில்லீஸ் (Chili’s at One Galle Face)
முகவரி: ஒன் கால் பேஸ் மால் – 1A, 02 சென்டர் ரோட், கொழும்பு 01
தொடர்புகளுக்கு: 0761 897 618
நேரம்: திங்கள் – வெள்ளி, மாலை 5 மணி முதல் 7 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரிங்க்ஸ்களில் மற்றும் காக்டெய்ல்களில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்
Instagram: @chilis.lk
Facebook: @ChilisSrilanka

• பிளேட்ரிக்ஸ் (Playtrix)
முகவரி: கொழும்பு சிட்டி சென்டர் – 137, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கொழும்பு 02
தொடர்புகளுக்கு: 0765 477 577
நேரம்: தினமும், மாலை 5 முதல் இரவு 7 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட பியர், ஸ்பிரிட்ஸ் மற்றும் காக்டெய்ல்களில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்
Instagram: @playtrixpub
Facebook: @playtrix.club

• த ஸ்டூவர்ட் & கோ பை சிட்ரஸ் (The Steuart & Co by Citrus)
முகவரி: இல. 45, ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01
தொடர்புகளுக்கு: 0777 669 036
நேரம்: திங்கள், மாலை 5.30 முதல் இரவு 9.30 வரை | செவ்வாய் – சனி, மாலை 5.30 முதல் 7.30 வரை | ஞாயிறு, காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட பெவெரேஜ்ஸ்களில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்
Instagram: @thesteuart_co
Facebook: @TheSteuartAndCo

• த பேய்லீஃப் (The Bayleaf)
முகவரி: 79, கிரிகோரிஸ் வீதி, கொழும்பு 07
தொடர்புகளுக்கு: 0112 695 920
நேரம்: தினமும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரை
சலுகை: லோக்கல் ஜின், ரம், ஓட்கா அல்லது அர்ராக் பாட்டிலை வாங்கினால் சேசர்கள் மற்றும் ஒரு பெரிய (12″) பீஸ்ஸா மார்கரிட்டா அல்லது பீஸ்ஸா பொல்லோநோவை இலவசம்.
Instagram: @bayleafrestaurant
Facebook: @Bayleaf-Restaurant

• கிரிஸ்டல் ஜெட் (Crystal Jade)
முகவரி: ஒன் கால் பேஸ் மால் – 1A, 02 சென்டர் ரோட், கொழும்பு 01
தொடர்புகளுக்கு: 0112 044 490
நேரம்: திங்கள் – வியாழன், மாலை 5 மணி முதல் 7 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட காக்டெய்ல்களில் 1 வாங்கினால் 1 இலவசம் | தேர்ந்தெடுக்கப்பட்ட ஒயின்களுக்கு 20% தள்ளுபடி
Instagram: @crystaljadelk
Facebook: @crystaljadelk

• த ஸ்டேஷன் (The Station)
முகவரி: 1/41, வாசல ரோட், தெஹிவளை
தொடர்புகளுக்கு: 0112 715 232
நேரம்: திங்கள் – வெள்ளி, மாலை 5 மணி முதல் 7 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட சில காக்டெய்ல்களில் 1 வாங்கினால் 1 இலவசம்
Instagram: @thestation.lk
Facebook: @thestationlk

• பட்லர்ஸ் (Butlers)
முகவரி: 33B, பார்க் ஸ்ட்ரீட், கொழும்பு 02
தொடர்புகளுக்கு: 0112 314 333
நேரம்: தினமும், மாலை 5 முதல் 6 மணி வரை
சலுகை: மக்ஸ் அல்லது பிட்சர் பியர் ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்
Instagram: @butlerspub
Facebook: @butlerspub

• சுகர் பிஸ்ட்ரோ (Sugar Bistro)
முகவரி: கிரேஸ்கேட் பௌலீவர்ட் – லொபி L1, காலி பிரதான வீதி, கொழும்பு 03
தொடர்புகளுக்கு: 0112 446 229
நேரம்: தினமும், மாலை 5 முதல் இரவு 7 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட ஒயின்கள், பீர்கள் மற்றும் காக்டெய்ல்களில் 1 வாங்கினால் 1 இலவசம்
Instagram: @sugarbistro
Facebook: @sugarbistroandwinebar

• சுகர் பீச் (Sugar Beach)
முகவரி: 43/11A, ஹோட்டல் வீதி, கல்கிசை
தொடர்புகளுக்கு: 0779 728 368 | 0763 883 497
நேரம்: தினமும், மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட காக்டெய்ல், ஒயின் மற்றும் பீர் ஆகியவற்றில் 1 வாங்கினால் 1 இலவசம்
Instagram: @sugarbeachlk
Facebook: @sugarbeachsl

• ஜங்க்யார்ட் பை த பார்ன் (Junkyard by the Barn)
முகவரி: 75, போகஹாவத்தை, கோவில் வீதி, தலவத்துகொட
தொடர்புகளுக்கு: 0707 944 945
நேரம்: தினமும், மாலை 5.30 முதல் இரவு 7.30 வரை
சலுகை: பீர் (கிளாஸ், பிட்சர் அல்லது டவர்) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒயின்களில் 1 வாங்கினால் 1 இலவசம்
Instagram: @junkyard.bythebarn
Facebook: @JunkYard.SL

• ஆல் ஸ்டார் (AllStar)
முகவரி: 117/1, ஸ்ரீமத் அனகாரிக தர்மபால மாவத்தை, கொழும்பு 07
தொடர்புகளுக்கு: 0112 441 162 | 0703 772 308
நேரம்: திங்கள் – வெள்ளி, மாலை 5 – 7 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட லைம் கிராஃப்ட் பீர், லைம் பிச்சர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட காக்டெய்ல் 1 வாங்கினால் 1 இலவசம்
Instagram: @allstarsrilanka
Facebook: @allstarsrilanka

• பிரிட்டிஷ் பப் ஃபிஷ் ‘என் சிப்ஸ் (British Pub Fish ‘N Chips)
முகவரி: One Galle Face Mall – 1A, 02 சென்டர் ரோட், கொழும்பு 01
தொடர்புகளுக்கு: 0714 520 072
நேரம்: ஞாயிறு – வியாழன், மாலை 4 மணி முதல் 7 மணி வரை | வெள்ளி – சனி, மாலை 5 மணி முதல் 7 மணி வரை
சலுகை: பீர் ஒன்று வாங்கினால் ஒன்று, காக்டெய்ல் மற்றும் லோக்கல் ஷாட்களுக்கு இலவச பைட்ஸ்
Instagram: @britishpubcolombo
Facebook: @BritishPubColombo

• ரெட் ட்வர்ப் அட் தி ஐரிஷ் (Red Dwarf at the Irish)
முகவரி: ஐரிஷ் பார் & கிரில் – 63, பார்க் ஸ்ட்ரீட், கொழும்பு 02
தொடர்புகளுக்கு: 0112 694 39
நேரம்: செவ்வாய் – சனி, மாலை 5 மணி முதல் 7 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட பீர், காக்டெய்ல் மற்றும் ஸ்பிரிட்களில் 1 வாங்கினால் 1 இலவசம்
Instagram: @reddwarflk
Facebook: @reddwarfcolombo

உயர்தர இடங்கள்

• பொட்டானிக் (Botanik)
முகவரி: No. 07, மருத்துவமனை வீதி, கொழும்பு 01
தொடர்புகளுக்கு: 0766 445 888
நேரம்: தினமும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட காக்டெய்ல் மற்றும் பீரில் 1 வாங்கினால் 1 இலவசம்
Instagram: @botanikbistrobar
Facebook: @botanikbistrobar

• த சில்லர் ரூம் (The Chiller Room)
முகவரி:32B, சர் மொஹமட் மக்கான் மார்க்கர் மாவத்தை, கொழும்பு 03
தொடர்புகளுக்கு l: 0778 050 330
நேரம்: புதன் – சனி, இரவு 7 மணி முதல் 10 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட ஒயின்கள், காக்டெயில்கள் மற்றும் ஷாட்களில் 1 வாங்கினால் 1 இலவசம்
Instagram: @thechillerroom
Facebook: @thechillerroomcmb

• காவா ஐலண்ட் பார் (Kava Island Bar)
முகவரி: 41 மெய்லண்ட் கிரெசென்ட், கொழும்பு 07
தொடர்புகளுக்கு: 0778 868 880
நேரம்: செவ்வாய் – ஞாயிறு, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட காக்டெய்ல்கள், ஒயின்கள் மற்றும் பீர்களில் 1 வாங்கினால் 1 இலவசம்
Instagram: @kavaislandbar
Facebook: @kavaislandbarsl

• ரியார் பார்+கிட்சன் (Rare Bar + Kitchen)
முகவரி: 20 பார்க் ஸ்ட்ரீட், கொழும்பு 02
தொடர்புகளுக்கு: 0115 673 000
நேரம்: ஞாயிறு – வியாழன், மாலை 5 முதல் 7:30 வரை | வெள்ளி – சனி, மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை
சலுகை: சிஃனேடுயர் காக்டெய்ல் 1 வாங்கினால் 1 இலவசம் | ஷாட்கள் மற்றும் பாட்டில்களுக்கு 20% தள்ளுபடி
Instagram: @rare_bar_kitchen
Facebook: @rarebarkitchen

• கேனல் ரோ (Level 4 at Canal Row)
முகவரி: 39 4/1, கேனல் ரோ, கொழும்பு 01
தொடர்புகளுக்கு: 0777 071 957
நேரம்: தினமும், மாலை 5 முதல் இரவு 7 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட காக்டெய்ல்களில் 1 வாங்கினால் 1 இலவசம்
Instagram: @level4sl
Facebook: @level4sl

• ஜென் கொழும்பு (Zen Colombo)
முகவரி: 115, ரோஸ்மீட் பிளேஸ், கொழும்பு 07
தொடர்புகளுக்கு: 0112 686 883
நேரம்: புதன்கிழமை, மாலை 6 மணி முதல் 7 மணி வரை
சலுகை: காக்டெய்ல் வெட்னிஸ்டே ; தேர்ந்தெடுக்கப்பட்ட காக்டெய்ல்களில் 1 வாங்கினால் 1 இலவசம்
Instagram: @zencolombo
Facebook: @zencolombo

• த கேர்வ் பார் (The Curve Bar)
முகவரி: 50/1, பார்க் ஸ்ட்ரீட், கொழும்பு 02
தொடர்புகளுக்கு: 0112 300 183
நேரம்: ஞாயிறு – வியாழன், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட காக்டெய்ல்களில் 1 வாங்கினால் 1 இலவசம்
Instagram: @thecurvebar
Facebook: @curvetapasbar

• ஃப்ளோட்ஸ் பப் (Floatz Pub at Marino Mall)
முகவரி: மரினோ மால் – 9வது மாடி, இல. 590, காலி பிரதான வீதி, கொழும்பு 03
தொடர்புகளுக்கு: 0763 407 808
நேரம்: சனிக்கிழமை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
சலுகை: பீர், ஷாட்ஸ், காக்டெய்ல் மற்றும் உணவுக்கான சிறப்பு விலைகள்
Instagram: @floatz_pub
Facebook: @FloatzPub

நட்சத்திர ஹோட்டல்கள்

• ப்ரீஸ் பார் (Breeze Bar at Cinnamon Grand)
முகவரி: சினமன் கிராண்ட் – 77, காலி வீதி, கொழும்பு 03
தொடர்புகளுக்கு: 0112 497 370
நேரம்: தினமும், மாலை 6 முதல் இரவு 8 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட காக்டெய்ல் மற்றும் ஷாட்களுக்கு 50% தள்ளுபடி
Instagram: @cinnamongrandcolombo
Facebook: @CinnamonGrandC

• ஹனி பீச் (Honey Beach Club at The Kingsbury)
முகவரி: கிங்ஸ்பரி – 48, ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01
தொடர்புகளுக்கு: 0771 087 720
நேரம்: தினமும், மாலை 5 முதல் இரவு 7 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட பீர் மற்றும் காக்டெய்ல்களில் 1 வாங்கினால் 1 இலவசம்
Instagram: @thekingsbury
Facebook: @TheKingsbury

• விஸ்டாஸ் பார் & மேன்ஷன் பார் (Vistas Bar and Mansion Bar at Mövenpick)
முகவரி: மூவ்ன் பிக் கொழும்பு – 24, ஸ்ரீமத் அனகாரிக தர்மபால மாவத்தை, கொழும்பு 03
தொடர்புகளுக்கு: 0117 450 450
நேரம்: விஸ்டாஸ் பார் – ஞாயிறு – வியாழன், மாலை 4 மணி முதல் 7 மணி வரை | வெள்ளி – சனி, மாலை 4 மணி முதல் 6 மணி வரை
 | மேன்ஷன் பார் – தினமும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட காக்டெய்ல், ஷாட்ஸ் மற்றும் டிராஃப்ட் பீர் ஆகியவற்றில் 1 வாங்கினால் 1 இலவசம்
Instagram: @movenpickcmb
Facebook: @movenpickcolombo

• கொலம்பார் (Colombar at Cinnamon Lakeside)
முகவரி: சினமன் லேக்சைட் கொழும்பு – 115, சர் சித்தம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 02
தொடர்புகளுக்கு: 0112 491 948
நேரம்: தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாட்கள், ஒயின்கள், காக்டெய்ல் மற்றும் பியர்களுக்கு 50% தள்ளுபடி
Instagram: @cinnamonlakeside
Facebook: @cinnamonlakeside

• யுமி (Yumi at Taj Samudra)
முகவரி: தாஜ் சமுத்ரா – இல. 25, காலி முகத்திடல் நிலைய வீதி, கொழும்பு 01 
தொடர்புகளுக்கு: 0112 446 622
நேரம்: தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை
சலுகை: கோல்டன் ஹவர்; தேர்ந்தெடுக்கப்பட்ட விஸ்கிகள், காக்னாக், ஜின், டெக்யுலா மற்றும் பீர் 1 வாங்கினால் 1 இலவசம்
 Instagram: @tajsamudracolombo
Facebook: @TajSamudraColombo

• ஒயாசிஸ் லவுஞ்ச் மற்றும் சீக்ரெட் கார்டன் (Oasis Lounge and Secret Garden at Ramada Colombo)
முகவரி: ரமடா கொழும்பு – 30, சர் மொஹமட் மக்கான் மார்க்கர் மாவத்தை, கொழும்பு 03
தொடர்புகளுக்கு: 0112 422 001
நேரம்: தினமும், மாலை 5.30 முதல் 6.30 வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட பீர், ஷாட்கள் மற்றும் காக்டெய்ல்களுக்கு 50% தள்ளுபடி
 Instagram: @ramadacolombo
Facebook: @ramadacolombo

• கிங் ஒப் த மாம்போ (King of the Mambo at Galle Face Hotel)
முகவரி: கால் பேஸ் ஹோட்டல் – 02, காலி வீதி, கொழும்பு 03
தொடர்புகளுக்கு l: 0772 227 389
நேரம்: ஞாயிறு – வியாழன், மாலை 5 மணி முதல் 7 மணி வரை
சலுகை:: காக்டெய்ல்களுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு
instagram: @kingofthemambo
Facebook: @KingOfTheMamboColombo

• கேபிடல் பார் & கிரில் (Capital Bar and Grill at Shangri-La)
முகவரி: ஷங்ரி-லா ஹோட்டல் – இல. 01, சென்டர் வீதி, காலி முகத்திடல், கொழும்பு 02
தொடர்புகளுக்கு: 0117 888 288
நேரம்: திங்கள் – வெள்ளி, மாலை 5.30 முதல் இரவு 7.30 வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட காக்டெய்ல் மற்றும் பீர்களில் 1 வாங்கினால் 1 இலவசம்
Instagram: @capitalbarandgrill
Facebook: @ShangriLaCMB

• கிளவுட் கஃபே (Cloud Cafe at Colombo Court Hotel and Spa)
முகவரி: 32, அல்ப்ரட் ஹவுஸ் அவன்யு, கொழும்பு 03
தொடர்புகளுக்கு: 0114 645 333
நேரம்: தினமும், மாலை 5.30 முதல் இரவு 7.30 வரை
சலுகை: தேர்ந்தெடுக்கப்பட்ட காக்டெய்ல் மற்றும் ஸ்பிரிட்களுக்கு 50% தள்ளுபடி
Instagram: @cloudcafe.lk
Facebook: CloudCafeBar

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். நாங்கள் ஏதேனும்  தவறவிட்டிருந்தால் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ள தயங்காதீர்கள்.

‘இனி பொறுப்புடன் குடித்து மகிழ்ந்திருப்போம்..!’

கொழும்பிலுள்ள ‘Dessert ஸ்பாட்ஸ்’

எவ்வளவு தான் வயிறு நிறைய சாப்பிட்டாலும், ஒரு ‘டெஸெர்ட்’ இல்லையென்றால் மனம் நிறையாது இல்லையா?!
உங்கள் ‘டெஸெர்ட்’ பசிக்கான அற்புதமான இனிப்பு விருந்தை கொழும்பு நகரின் சிறந்த இடங்களிலிருந்து லிஸ்ட்டு பண்ணி நாங்கள் தருகிறோம்!

1. Treats n Stuff – ட்ரீட் n ஸ்டஃப்

என்ன கிடைக்கும் : பிரௌனீஸ், பிரௌனீ கேக்குகள், சாக்லேட், பிஸ்கட்ஸ் மற்றும் பல..

விலை : LKR 500 – 5,000

முகவரி :
No. 5, Nandimithra Place,Colombo 06
No. 92, Hinniappuhamy Mawatha, Colombo 13
No. 988/A, Thalangama South, Pelawatte
Tel: 0777 877 166

திறக்கும் நேரம்:
9 am – 6 pm (Colombo 06)
9 am – 6 pm (Colombo 13)
9 am – 8 pm (Pelawatte)

டெலிவரி : Uber Eats இல் கிடைக்கும்.

Facebook: @TreatsnStuff
Instagram: @treatsnstuff
Website: treatsnstuff.com

2. Butter Boutique – பட்டர் புட்டீக்

என்ன கிடைக்கும் : கேக்குகள், சினமன் ரோல்ஸ், வஃபிள்ஸ்(waffles), குக்கீஸ், டார்ட்டுகள்(tarts) மற்றும் பல..

விலை : LKR 800 – 1,800

முகவரி : No. 70, Rosmead Place, Colombo 07

தொலைபேசி : 0112 690 028

திறக்கும் நேரம் : Daily, 7 am – 11 pm

டெலிவரி : Uber Eats இல் கிடைக்கும்.

Facebook: @ButterBoutique
Instagram: @butter_boutique

3. Crepe Runner – கிரேப் ரன்னர்

என்ன கிடைக்கும் : இனிப்பு மற்றும் காரசாரமான கிரேப் வகைகள்..

விலை : LKR 550 – 1,180

முகவரி : Crepe Runner, Marine Drive, Colombo 03

தொலைபேசி : 0772 260 037

திறக்கும் நேரம் : Tuesday to Sunday, 2 pm – 10 pm | Closed on Monday

டெலிவரி : Uber Eats இல் கிடைக்கும்.

Facebook: @creperunner
Instagram: @creperunner
Website: creperunner.lk

4. Indulge Desserts – இண்டல்ஜ் டெஸெர்ட்ஸ்

என்ன கிடைக்கும் : வஃபிள்ஸ்(Waffles), கிரேப்ஸ்(crepes), கேக்குகள் மற்றும் பல..

விலை : LKR 600 – LKR 3,080

முகவரி : No. 14, Marine Drive, Colombo 03

தொலைபேசி : 0117 460 008

திறக்கும் நேரம் : Daily 12 pm – 12 midnight

டெலிவரி : Uber Eats மற்றும் PickeMe Food இல் கிடைக்கும்.

Facebook: @IndulgeDessertsCo.
Instagram: @indulgedessertslk
Website: indulge.lk

5. Carnival Ice Cream – கார்னிவல் ஐஸ் க்றீம்

என்ன கிடைக்கும் : ஐஸ் க்றீம், வஃபிள்ஸ்(waffles), பிரௌனீஸ் மற்றும் பல..

விலை : LKR 300 – 2,500

தொலைபேசி : 0115 346 139

முகவரி : No. 263, Galle Main Road, Colombo 03

திறக்கும் நேரம் : Daily, 10 am – 12 am

டெலிவரி : Uber Eats மற்றும் PickMe Food இல் கிடைக்கும்.

Facebook: @CarnivalIceCream
Instagram: @carnival_icecream

6. Simply Strawberries by Jagro – சிம்ப்ளி ஸ்ட்ராபெர்ரிஸ் பை ஜாக்ரோ

என்ன கிடைக்கும் : கேக்குகள், ஐஸ் க்றீம், ஸ்ட்ராபெர்ரி வஃபிள்ஸ்(waffles) மற்றும் பல..

விலை : LKR 800 – 2,000

முகவரி :
No. 01, Maitland Place, Colombo 07
No. 143, Cotton Collection, Dharmapala Mawatha, Colombo 07
No. 610, Sri Jayawardanepura Mawatha, Kotte

தொலைபேசி :
0117 871 971 (Maitland Place outlet)
0763 288 663 (Cotton Collection, Dharmapala Mawatha)
0112 877 533 (Kotte outlet)

திறக்கும் நேரம் : Daily, 10 am – 10 pm

டெலிவரி : Uber Eats மற்றும் PickMe Food இல் கிடைக்கும்.

Facebook: @SimplyStrawberriesbyJagro
Instagram: @simplystrawberriesbyjagro
Website: www.jagrofresh.com/simply-strawberries

7. The Cake Factory – த கேக் ஃபாக்ட்ரீ

என்ன கிடைக்கும் : கேக்குகள், புடிங்ஸ், திறமிசு, மூஸ்(mousse), பன கோட்டா(panna cotta), வட்டலப்பம் மற்றும் பல..

விலை : LKR 2,500 – 10,000

முகவரி :
No. 91A, 5th Lane, Colombo 03
No. 25, Buthgamuwa Road, Rajagiriya

தொலைபேசி :
𝟢𝟣𝟣𝟤 𝟥𝟩𝟤 𝟥𝟤𝟤 | 0770 107 525 (Colombo 03 outlet)
0112 868 414 | 0777 382 510 (Rajagiriya outlet)

திறக்கும் நேரம் :
Colombo 03 – Monday to Saturday, 9 am – 6 pm | Sunday and Poya days, 10 am – 5 pm
Rajagiriya – Monday to Friday, 9 am – 5 pm | Saturday, 9 am – 4:30 pm | Closed on Sunday and Poya days

டெலிவரி : PickMe Food இல் கிடைக்கும்.

Facebook: @TheCakeFactory
Instagram: @thecakefactory.lk
Website: www.cakefactory.lk

8. Isle of Gelato – ஐல் ஆஃப் ஜெலாட்டோ

என்ன கிடைக்கும் : பல வகையான ஜெலாட்டோ மற்றும் சார்பேட், மினி ஜெலாட்டோ கேக்குகள் மற்றும் சாக்லட் ஜெலாட்டோ பாப்சிக்கல்ஸ்(popsicles)..

விலை : LKR 700 upwards

முகவரி : 3rd Floor, Food Studio, Colombo City Centre (CCC)

தொலைபேசி : 0777 712 732

திறக்கும் நேரம் : Daily, 10 am – 10 pm

டெலிவரி : Uber Eats இல் கிடைக்கும்.

Facebook: @isleofgeleato
Instagram: @isleofgelato

9. Chocoholics – சொக்கோஹாலிக்ஸ்

என்ன கிடைக்கும் : கிரேப்புகள், வஃபிள்ஸ்(waffles), பான்கேக்குகள்(pancakes), பிரௌனீஸ், சார்ரோஸ்(churros) மற்றும் பல..

விலை : LKR 1,000 – 6,000

தொலைபேசி : 0114 332 261

முகவரி : No. 506, Havelock Road, Colombo 05

திறக்கும் நேரம் : Daily, 11 am – 11 pm

டெலிவரி : Uber Eats மற்றும் PickMe Food இல் கிடைக்கும்..

Facebook: @Chocoholics.lk
Instagram: @chocoholics.lk

10. Skrumptious – ஸ்க்ரம்ஷஸ்

என்ன கிடைக்கும் : பிரௌனீஸ், புட்டிங் வகைகள், ஐஸ் க்றீம் மற்றும் பல..

விலை : LKR 850 – 7,500

முகவரி : No. 115, Jawatta Road, Colombo 05

தொலைபேசி : 0777 009 995

திறக்கும் நேரம் : Daily, 10 am – 10 pm

டெலிவரி : Uber Eats மற்றும் PickMe Food இல் கிடைக்கும்.

Facebook: @Skrumptious
Instagram: @skrumptious.lk

11. WAFL – வஃபிள்

என்ன கிடைக்கும் : பல ரக இனிப்பு மற்றும் உறைப்பான வஃபிள்ஸ்(waffles)

விலை : LKR 1,100 – 2,500

முகவரி : No. 47, 42nd Lane, Marine Drive, Wellawatta

தொலைபேசி : 0117 104 104

திறக்கும் நேரம் : Daily, 9 am – 12 midnight

டெலிவரி : Uber Eats மற்றும் PickMeFood இல் கிடைக்கும்.

Facebook: @WAFLSriLanka
Instagram: @wafl.srilanka

12. Jam Rolled Ice Cream – ஜாம் ரோல்டு ஐஸ் க்றீம்

என்ன கிடைக்கும் : ரோல்டு ஐஸ் க்றீம், வஃபிள்ஸ்(waffles), கிரேப் வகைகள் மற்றும் இனிப்பு டாக்கோ(sweet tacos)..

விலை : LKR 500 – 800

முகவரி : No. 56, Horton Place, Colombo 07

தொலைபேசி : 0767 766 765

திறக்கும் நேரம் : Daily, 2 pm – 11.45 pm

டெலிவரி : Uber Eats இல் கிடைக்கும்.

Facebook: @JAMRolledIceCream
Instagram: @jamcolombo

13. Epi-Q Express Gourmet – எபிக்யூர் எக்ஸ்பிரஸ் கௌர்மேட்

என்ன கிடைக்கும் : வஃபிள்ஸ்(waffles), பான் கேக்குகள்(pancakes), ஐஸ் க்றீம், புட்டிங், கிரேப் வகைகள் மற்றும் பல..

விலை : LKR 300 – 2,000

முகவரி : No. 106, Jawatte Road, Colombo 05

தொலைபேசி : 0777 300 438

திறக்கும் நேரம் : Monday to Thursday, 11.30 am – 11 pm | Friday, 2 pm – 12 midnight | Saturday to Sunday, 11.30 am – 12 midnight

டெலிவரி : Uber Eats மற்றும் PickeMe Food இல் கிடைக்கும்.

Facebook: @Epi-Q Expressgourmet
Instagram: @epiqexpressgourmet

அளவில்லாத ‘தித்திப்பின் திசை’யை நாங்க உங்களுக்கு காட்டியிருக்கிறோம்.. இனி என்ன..?! சும்மா இறங்கி ஜமாய்ச்சிடுங்க…!

உங்களுக்கு தெரிந்த அல்லது ரொம்ப பிடித்த வேறு இடங்கள் இருந்தால், அதை கமெண்டில் தெரிவிக்க மறக்காதீங்க!

இலங்கை பாம்புகள் : பாம்புக்கடியினை எப்படி சமாளிப்பது?!

ஒவ்வோர் ஆண்டும் மொத்தம் 80,000 இலங்கையர்கள் விஷப் பாம்புகளால் கடிக்கப்படுவதாகவும், அவர்களில் 400 பேர் இறப்பதாகவும் சமீபத்திய கணக்கெடுப்பு கோடிட்டுக் காட்டுகிறது. இறப்புக்கான காரணங்கள் சரியாகப் பதிவு செய்யப்படாததால் எண்ணிக்கை இதை விட சிலவேளை அதிகமாக இருக்கலாம். எவ்வாறாயினும் நமது மக்கள் தொகையின் விரைவான வளர்ச்சியுடன் இணைந்த புள்ளிவிவரங்கள் ஒரு விஷயத்தை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது. நாம் ஒவ்வொருவரும் பாம்புக்கடிக்கு அகப்படுவதற்கான வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே நாம் அனைவரும் பாம்புகள் பற்றிய அடிப்படை அறிவு மற்றும் முதலுதவி பற்றி அறிந்திருத்தல் அவசியம் ஆகிறது!

•கண்ணாடி விரியன் (Russell’s Viper)பெரும்பாலும் கண்ணாடி விரியனுக்கும் மலைப்பாம்புக்குமிடையில் குழப்பமேற்படலாம். இரண்டையும் இந்த சிறிய விவரங்களைக் கவனிப்பதன் மூலம் வேறுபடுத்தி அறியலாம். கண்ணாடி விரியன் விஷமற்றது. கண்ணாடி விரியன் அதன் உடலில் தனித்துவமான பழுப்பு நிறம், மற்றும் வட்டவடிவிலான patches களைக் கொண்டது, அதே சமயம் மலைப்பாம்பு உடலில் பெரிய புள்ளிகளைக் கொண்டது மற்றும் மழுங்கிய மூக்கினைக் கொண்டது.

•நாகப்பாம்பு (The Cobra)இது மிகப் பொதுவாக காணக்கூடிய ஒரு பாம்பு. தலையில் முகமூடி போன்ற வடிவத்தை காணக்கூடியதாய் இருக்கும். இதனை நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் பொதுவாக காணலாம். ஏன், கொழும்பு போன்ற நகரப்பகுதியில் கூட காணலாம்!

•கட்டு விரியன் (The Krait)கட்டு விரியன் (Krait) இல் இரண்டு இனங்கள் உள்ளன, அவை இரண்டும் அதிக விஷம் கொண்டது மற்றும் இரவில் அதிகமாக நடமாடும். Ceylon Krait பொதுவாக ஈர மண்டலத்தில் காணப்படுகிறது. கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள காடுகளில் வசிக்கும். அதே சமயம், Common Krait உலர் வலயத்தில் அதிகமாய் காணப்படுகிறது. பகல் நேரத்தில் மரக்கட்டைகள், மரத்துளைகள் மற்றும் கற்குவியல்களின் கீழ் ஒளிந்து இருக்கும்.

•சுருட்டைவிரியன் / புல் விரியன் (The Saw-Scaled Viper)மிகவும் பொதுவாக கடலோரப் பகுதிகளில் காணப்படும். இந்த சுருட்டை விரியனின் தலையில் பறவையின் காலடி போன்ற தனித்துவமான அம்சம் மூலம் அடையாளம் காண முடியும்.

•திமில்மூக்குக் குழிவிரியன் (The Hump-nosed Viper)மிதமான விஷத்தன்மை கொண்டது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் பிறகு ஒவ்வொரு ஆண்டும் 61,000 பாம்பு கடிகளும், 27% விஷக்கடிகளும், கொடிய அறிகுறி விளைவுகளும் இந்தப் பாம்பினால் ஏற்பட்டன என பதிவு செய்யப்பட்டுள்ளது.

உங்களை பாம்பு கடித்தால் என்ன நடக்கும்?

ஒருமுறை கடித்தால் விஷம் உங்கள் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. ஆனால் விஷம் உங்கள் இரத்த ஓட்டத்தினூடாக பயணிப்பது இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். எனவே இரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுவதற்குப் பதிலாக, நிணநீர் அமைப்பு (lymphatic system) எனப்படும் வேறுபட்ட திரவ போக்குவரத்து அமைப்பில் விஷம் பயணிக்கிறது.

நிணநீர் அமைப்பு வெகுதூரம் இரத்தத்தை விட வித்தியாசமாக நகரும். உங்கள் சுற்றோட்ட அமைப்பு செயலில் இருக்கும், இருந்தபோதிலும் நீங்கள் மயங்கியிருப்பீர்கள்.. ஆனால் நிணநீர் திரவங்கள் உங்கள் கை கால்களை அசைக்கும் போது மட்டுமே நகரும். ஆனால் விஷம் கடித்த இடம் வழியாக இரத்த ஓட்டத்தை அடையாமல், இறுதியில் அந்த தசை இயக்கத்தின் மூலம், கழுத்தின் அடிப்பகுதியில் உள்ள நரம்புகளுடன் இணைக்கப்பட்ட பெரிய lymphatic trunk களை இணைந்த பிறகு நிணநீர் திரவங்கள் இரத்தமாக மாறும். இந்த நேரத்தில், விஷமத்தன்மையானது கணிசமாக அதிகரிக்கும்.

இது பற்றி மற்றொரு கட்டுக் கதை உள்ளது, அதாவது நீங்கள் ஒருமுறை கடிபட்டால் நீங்கள் வாழ சில தருணங்கள் மட்டுமே உள்ளன என்பது! ஆனால் உண்மை என்னவென்றால், மருத்துவ பராமரிப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையில் 2 முதல் 8 மணி நேரம் வரை உயிரோடிருப்பார்கள். ஒரு மனிதனை 30 நிமிடங்களில் கொல்லும் அளவுக்கு விஷம் கொண்ட ஒரே பாம்பு Black Mamba – இலங்கையர்களான நமக்கு அதிர்ஷ்டவசமாக அவை இங்கு இல்லை, ஆப்பிரிக்காவில் மட்டுமே இவை காணப்படுகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் எடுக்க வேண்டிய சில முதலுதவி நடவடிக்கைகள் உள்ளன. இருப்பினும், அவர்கள் தற்செயலாக விஷம் இரத்த ஓட்டத்தை அடைந்து உடலின் செயல்முறையை முடக்கிவிடாமல் தடுப்பதற்கு மருத்துவமனைக்கு விரைவது சிறப்பானது.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்:

1. அசையாமல் இருக்கவும் – STAY STILL.
நாம் மேலே குறிப்பிட்டது போல், விஷம் இரத்த ஓட்டத்தில் நுழைவதற்கான ஒரே வழி, உங்கள் தசைகளை நகர்த்துவதன் மூலமும், நிணநீர் அமைப்பின் (lymphatic system) வழியாக விஷத்தை கடத்துவதன் மூலமும் ஆகும். எனவே, கடித்த மூட்டு முற்றிலும் அசையாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

2. அழுத்திக் கட்டுப் போடுதல் – Pressure Immobilization Bandaging.
இது மேலும் விஷம் பரவாமல் தடுக்க பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம் ஆகும். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், கடிபட்ட இடத்தில் கீழே மற்றும் மேலே சுமார் 10 செ.மீ. உறுதியாக அழுத்தமாக கட்டுதல். அடுத்து உறுதியாக மடிக்க மற்றொரு எலாஸ்டிக் ரோலர் பேண்டேஜை (elastic roller bandage) உங்கள் விரல்களிலிருந்து உங்கள் armpit வரை அல்லது உங்கள் கால் விரல்களிலிருந்து இடுப்பு வரை பயன்படுத்தவும். (கடிபட்ட இடம் எங்குள்ளது என்பதனைப் பொறுத்து). இது ஒரு சுளுக்கு கட்டு போல் உணர வேண்டும் – உறுதியான ஆனால் சிரமமானதாக மிக இறுக்கமாக இல்லாமலிருக்க வேண்டும்.

3. மூட்டுக்களை கட்டிடல் – Splint the limb.
உங்களை அறியாமல் மூட்டுகளை அசைக்கவோ அல்லது வளைக்கவோ மாட்டீர்கள் என்பதற்கு இது உத்தரவாதம் அளிக்கிறது.

என்ன செய்யக்கூடாது:

•காயத்தை வெட்டுவதன் மூலம் அல்லது அழுத்துவதன் மூலம் பாம்பு விஷத்தை வெளியேற்ற முயற்சிக்காதீர்கள். இது நிபுணர்களால் மாத்திரமே செய்யப்பட வேண்டிய மருத்துவ முறை.

•Tourniquet ஐ பயன்படுத்த முயற்சிக்காதீர்கள். ஏனெனில் இது இரத்த ஓட்டமின்மையை ஏற்படுத்தி மூட்டுக்கு சேதம் விளைவிக்கும். இறுதியில் necrosis ஏற்படும், இது தொற்றுக்களை கொண்டு வரும்.

•உங்கள் ஆடைகளை மாற்ற முயற்சிக்காதீர்கள், ஏனெனில் இயக்கத்தின் இந்த சிறிய நெளிவு கூட விஷத்தை பரவ தூண்டும்.

இறுதியாக, உங்களைக் கடித்த பாம்பை அடையாளம் காணும்போது, ​​பயன்படுத்தப்பட வேண்டிய anti-venom ஐ தீர்மானிக்க வேண்டியது அவசியம் தான். இருந்தாலும் எந்த வகையான பாம்பு உங்களைக் கடித்தது என்பதைக் கண்டறிய நேரத்தை வீணாக்காதீர்கள், அதிலிருந்து விடுபடும் முயற்சியில் நிச்சயமாக ஈடுபட வேண்டும் விரைவில் மருத்துவமனைக்குச் செல்லுங்கள்!

நாம் அன்றாடம் எல்லா வகையான விலங்குகளையும் சந்திக்கும் நாட்டில், இது போன்ற தகவல்களை உங்கள் விரல் நுனியில் வைத்திருப்பது ஒரு உயிரைக் காப்பாற்ற உகந்தது!

இலங்கை தாய்மாரின் 5 அவதாரங்கள்!

உலகமே அன்னையர் தினம் கொண்டாடுகிறது. ஈரைந்து மாதம் சுமந்து பெற்ற தாயைப் போற்றும் நாள். பொதுவாக அன்னையர் தினம் கொண்டாடப்படுவதே ஒரு வர்த்தக, வியாபார நோக்கம் என்றொரு கருத்து பரவலாக பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் என்னைப் பொறுத்தளவில், “தாயைப் போற்ற நாளொன்று தேவையில்லை, அவளைப் போற்றாத நாள், நாளேயில்லை”.

ஒரு உயிரை இந்த உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கும் ஒவ்வொரு தாயும் சிறந்த தாய் தான். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில், எமது தாய்மார்கள் வழமைக்கு மாறாக கொஞ்சம் வித்தியாசமானவர்கள், தனித்துவமிக்கவர்கள். பிள்ளைகளை பெற்று வளர்ப்பது முதல், அவர்களுக்காக ஓயாமல் உழைப்பது என, தனது வாழ்க்கையில் ஒரு தாய் பல பரிமாணங்களை கடந்து போகிறாள். பிள்ளைகளின் சிறுவயது முதலே, அவர்களின் நலனுக்காக தமது வாழ்வை அர்ப்பணித்த எமது இலங்கை அம்மாக்களை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

அக்கறையின் சிகரம்

அம்மாக்களை போல இந்த உலகில் வேறு எவராலும், உங்களைப் பற்றி அக்கறைப்பட முடியாது. பொதுவாகவே இலங்கை வீடுகளில் அம்மாக்கள் பிள்ளைகள் மீது அநியாயத்துக்கு அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். சில வீடுகளில் அம்மாக்கள், வளர்ந்த பின்னரும் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தவிர பிள்ளையின் உடல்நலன், போஷாக்கு மீது இலங்கை தாய்மார்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய அக்கறை உண்டு. சிறுவயது முதலே பிள்ளைகளின் உணவுப் பழக்கவழக்கத்தின் மீது மிகவும் கவனம் செலுத்துகிறவர்கள்.

அப்படி அக்கறையோடு அம்மாக்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்றாலோ, அல்லது எதிர்த்துப்பேசினாலோ, ஏற்படும் சேதாரத்துக்கு, எந்தக் கம்பெனியும் பொறுப்பேற்காது.  ‘அதிகமாக fizzy drinks குடிக்க கூடாது, சாக்லெட் சாப்பிட்டா பூச்சி வரும், காலையில் நேரத்துக்கு எழும்பி படி, சாப்பாட்டில் காய்கறி சேர்த்து சாப்பிடு’ முதல், ‘லேட்டா TV பார்க்காதே, வண்டியை speed ஆ ஓட்டாதே, ஹோட்டல்ல சாப்பிடாதே, கண்ட நாயோட சேராதே’ வரை, “உன் நல்லதுக்குதான் சொல்றேன்” என்று சொல்லி அனைத்தையும் சாதித்துக்கொள்ளும் வல்லமை மிக்கவர்கள், இந்த அக்கறையான அம்மாக்கள்.

Master-Chef மம்மிஸ்  – The Master-Chef Mothers

ஒரு மாஸ்டர் செஃப்புக்கு (Master-Chef), இருக்க வேண்டிய தகைமைகள் என்ன தெரியுமா? எறும்பைப்போல சுறுசுறுப்பு, பலதரப்பட்ட வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய வல்லமை (Multi-Tasking), விமர்சனங்களுக்கு முகங்கொடுத்தல் மற்றும் சமைப்பதில் அளப்பரிய வேட்கை. இது எல்லாமே இலங்கை தாய்மாருக்கு இருக்கிறதென்றால், நம்பமுடிகிறதா..?

விடியற்காலையில் எழுந்து முழுக்குடும்பத்துக்குமான காலையுணவை தயாரிப்பதிலிருந்து, இரவு தூங்கப்போகும் வரை ஓயாமல் உழைக்கிறார்கள் அம்மாக்கள். சமையல் பற்றி எத்தனை முறை, எவரென்ன குறை சொன்னாலும், தினமும் குடும்பத்துக்காக சமைப்பதை அவர்கள் எப்போதுமே நிறுத்திக்கொண்டதில்லை.  இலங்கை வீடுகளில் அம்மாமார் அவிக்கும் இடியப்பமும், சொதியும், தேங்காய்ப்பூ சம்பலும், அந்த பருப்பு கறியும், உறைப்பான குழம்பும் தரும் அந்த சுவை, உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் கிடைக்கவே கிடைக்காது.

அம்மா App

அம்மாக்கள் எம்மோடு இருக்கும் வரை alarm clocks, reminder apps, notepad, memos எதுவுமே தேவையில்லை. அப்படி ஒரு அபரிமிதமான ஞாபக சக்தி இருக்கிறது எமது அம்மாமாருக்கு. அதிலும் 8 மணிக்கு எழுப்பச் சொன்னால், 7 மணிக்கே வந்து, ‘8.30 ஆகிவிட்டது’ என்று கூறி நித்திரை விட்டு எழுப்பும் யுக்தியில் தேர்ச்சி பெற்றவர்கள் இலங்கை தாய்மார்கள்.

எங்காவது வெளியில் போகக் கிளம்பினால், ‘9 மணிக்கு முதல் வீட்ட நிக்கணும்’ என்ற அசரீரி, எங்கிருந்தாலும் கேட்டு விடும். அப்படியே வெளியே போனாலும், மணிக்கொரு முறை கண்டிப்பாக தொலைபேசியில் அழைப்பு வரும். சொன்ன நேரத்துக்கு சொன்ன விஷயம் நடக்கவில்லை என்றால், நீங்கள் க்ளோஸ்..! இப்படி ‘எந்த ரூட்ல போனாலும்’, அம்மா App இடமிருந்து அவ்வளவு இலகுவாக தப்பித்து விட முடியாது.
ஆனால், மின்சாரமில்லாத, தவறிழைக்காத, எவ்வித தடைகளுமற்ற, தொடர்ந்து இயங்கும் ஒரே App இவர்கள்தான்.

தோழி

இப்போது நாம் பெரியவர்களாகி விட்டோம். வாழ்க்கையில் ஒரு வளர்ச்சியை நோக்கி, தொழில் ரீதியாகவோ, கல்வி ரீதியாகவோ மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறோம். அப்படியிருக்கையில், ஒரு நாளுக்குள் எத்தனையோ சிக்கல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க நேரிடுகிறது. அளவற்ற மனக்குழப்பங்களுக்கும், மன இறுக்கத்துக்கும் ஆளாகிறோம். அப்படியான தருணத்தில் உங்கள் தாயோடு மனம்விட்டு பேசியிருக்கிறீர்களா?

ஆம்! தாய்மார்கள், வளர்ந்த குழந்தைகளுக்கு ஒரு நல்ல தோழியாக இருக்கிறார்கள். எந்த நேரத்திலும், எச்சந்தர்ப்பத்திலும் உங்களது மனக்கவலைகளுக்கு செவிசாய்க்கக் கூடிய ஒரே ஜீவன் தாயாகத்தான் இருக்க முடியும். நீங்கள் பேசுவது பற்றிய புரிதல் உங்கள் தாய்க்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும், அம்மாவோடு மனம்விட்டு பேசும்போது கிடைக்கும் ஆறுதலும் நிம்மதியும் எடுத்துரைக்க முடியாதது.

என்ன சொன்னாலும் சிலவேளைகளில், ‘ நான் அப்பவே சொன்னேன் தானே, நான் சொல்றதைக் கேள், நான் சொன்னால் சரியாதான் இருக்கும்’ என, தமது அட்வைஸ்களை அள்ளிக் குவிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்துவிடுவார்கள் கவனம்..

இடிதாங்கி

‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்யா..’ என்பது போல, நாம் என்ன சொன்னாலும், எவ்வளவு கோபத்தில் திட்டினாலும், சண்டை போட்டாலும்  தாங்கிக் கொள்கிறார்கள் அம்மாக்கள். பொதுவாக நாம் வெளியிலிருக்கும் கோபத்தை வீட்டிலே தான் காட்டுவோம். நாம் என்றால், குடும்பத்திலிருக்கும் அனைவருமே. ஆனால் எது நடந்தாலும் மறுகணமே மிக சகஜமாக, இயல்பாக அன்றாட வேலைகளை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் அம்மாக்கள். அவர்கள் எப்போதும் நம்மை குழைந்தைகளாகவே பார்க்கிறார்கள்.

தவிர, பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்கு எப்போதுமே வெளிநபர்கள் ஒரு தாயைத்தான் காரணம் காட்டுகிறார்கள். ‘தாய் வளர்ப்பு சரியில்லை’ என்று இலகுவாக சொல்லிக் கடந்துவிடுவார்கள். குடும்பப் பிரச்சினைகள், சமூகப் பொறுப்புக்கூறல்கள், சொந்தபந்தங்களின் சாடல்கள் என அனைத்தையும் முன்நின்று சமாளித்து, ஒரு இடிதாங்கியாகவும் தாய்மார்கள் இருந்து வருகிறார்கள் என்றால் மிகையாகாது.

கொழும்பிலுள்ள யோகா பயிற்சி இடங்கள்!

கொழும்பின் பரபரப்பில் சிக்கிக் கொள்வது என்பது எளிதானதல்ல! ஒரு போதும் இளைப்பாற முடியாது.. இந்த வேகமான இடத்தில் வசிப்பதால், நீங்கள் உங்களை எல்லா நேரங்களிலும் போ – போ – போ என்று முன்னோக்கி நகர்த்த முயற்சித்த வண்ணமாய் தான் இருப்பீர்கள். ஆனால் சில நேரங்களில் நீங்கள் உங்கள் பிஸியான வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டும் இல்லையா?! அங்கு தான் யோகா மாதிரியான விடயங்கள் வருகிறது.. சுவாசிக்கவும், உடலை நீட்டவும், அசைக்கவும், மனஅழுத்தத்தை வெளியேற்றவும் சரியான கொழும்பில் உள்ள சில இடங்கள் உங்களுக்காக இந்தக் கட்டுரையில். இது நிச்சயம் உங்களையும் உங்கள் மனதையும் மையப்படுத்தவும் உதவும்!

Body Bar

பல்வேறு நோக்கங்களுக்கான ஒரு ஸ்டுடியோவாகவும், முதன்முறை மரத்தால் கட்டமைக்கப்பட்ட ஸ்டுடியோவாகவும் இருப்பதால், Body Bar நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெறுமனே யோகாவுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், மிகவும் பயனுள்ள மற்றும் பழமையான, 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஸ்டுடியோக்களில் ஒன்றாக இது இருப்பதால், யோகாவுக்குச் செல்வதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாக இது கருதப்பட்ட போது எங்களுக்கு இதனை பரிந்துரைக்க சிறு சந்தேகம் கூட வரவில்லை. அங்கே யோகா தொகுப்புகள் மற்றும் தனி வகுப்புகள் வாடிக்கையாளரின் வசதிக்கமைய தொடர்பு கொண்டு வழங்கப்படுகின்றன. ஸ்டுடியோவில் air conditioning, கண்ணாடிகள், உயர்தர ஸ்டூடியோ வசதி, சுகாதாரமான கழிவறைகள், உடை மாற்றும் அறைகள் மற்றும் பரந்த வாகன நிறுத்துமிடம் போன்ற சிறந்த வசதிகள் உள்ளன.

வகுப்புகளின் தேதி மற்றும் நேரம்: வாரத்தின் அனைத்து நாட்களும்.
பெறக்கூடிய பேக்கேஜஸ்: நான்கு வகுப்புகளுக்கு, 1 மணிநேரம் 30 நிமிட கால அளவுடன் பயிற்றுவிப்பாளரைப் பொறுத்து.
மகப்பேறுக்கு முற்பட்ட யோகா : வழங்கப்படவில்லை.
நடத்தப்படும் மொழி: ஆங்கிலம்.
முகவரி: 3 ஜாவத்த அவென்யூ, கொழும்பு 05
தொடர்பு எண்: 0112505462.

Cinnamon Lakeside – Powerdrome
இவர்களின் உணவகங்களில் சமையலில் தரத்தை வழங்குவது சாதாரணமான ஒன்றாக இருந்தாலும், Cinnamon இன் மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்ட gym மேலும் சிறப்பானதாகும். இது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்கும் ஒட்டுமொத்த உடற்பயிற்சி, மற்றும் முக்கிய உடல் மற்றும் மன வலிமையில் கவனம் செலுத்தும் இடமாகிறது. மேலும் யோகா அவர்களின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாகும்.

உரிமம் பெற்ற US உபகரணங்கள், பயிற்சி பெற்ற பணியாளர்கள், லாக்கர் அறைகள், Steam மற்றும் sauna அறைகள் மற்றும் ஒரு விளையாட்டு கியர் ஸ்டோர் ஆகியவற்றை முழுமையாகக் கொண்டு, Powerdrome உங்களை உறுதியாகவும் மன அழுத்தமில்லாமல் வைத்திருக்கவும் உதவுகிறது!

வகுப்புகளின் தேதி மற்றும் நேரம்: திங்கள் மற்றும் வியாழன்
பெறக்கூடிய பேக்கேஜஸ்: தனி வகுப்புகள் காலை 6.30 முதல் காலை 7.30 வரை 
மகப்பேறுக்கு முற்பட்ட யோகா: வழங்கப்படவில்லை
நடத்தப்படும் மொழி: ஆங்கிலம்
முகவரி: 117 சார் சித்தம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 02.
தொடர்பு எண்: 0112491000

The Prana LoungePrana Lounge என்பது முழுமையான ஆரோக்கியம்! தன்னிலை அறிவைப் பெறுவதற்கான செயல்முறை, தன்னிலை மீட்பு நடவடிக்கை மற்றும் இளைப்பாறுகை ஆகியவற்றின் தளமாகும். அமைதியின் உண்மையான சோலையான கொழும்பின் Cinnamon Gardens மத்தியில் அழகிய பாரம்பரிய கட்டிடத்தில் அமையப்பட்டிருக்கும் இதில், குணப்படுத்துதல் மற்றும் குணப்படுத்துவதற்கான பல்வேறு நல்வாழ்வு சிகிச்சை முறைகளை வழங்குகிறார்கள்.

ஆரம்பநிலை மற்றும் இடைநிலையாளர்களுக்கான யோகா இரண்டு அனுபவம் வாய்ந்த மற்றும் நன்கு பயின்ற பயிற்சியாளர்களால் செய்யப்படுகிறது : Ms Mariam மற்றும் Ms Tara. அஷ்டாங்க, வின்யாச, ஹத, பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய, குழந்தைகளுக்கான யோகா, குண்டலினி யோகா மற்றும் பலவற்றை ஆராய பிராணா Lounge உதவுகிறது. அவர்கள் அனைவரும் Prana Lounge இல் சிறந்த நேரம் மற்றும் பலன்களைப் பெற்றதற்கான சான்றுகளுடன், ஒரே எண்ணம் கொண்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளனர். உங்கள் வயது மற்றும் உடற்தகுதி எதுவாக இருந்தாலும், உங்களுக்கு ஏற்ற வகுப்புகள் இங்கு உள்ளன. நீங்கள் உங்கள் வேலைக்கு முன் ஒரு அமர்வைப் பெற விரும்பினாலும் அல்லது நீண்ட நாட்களுக்குப் பிறகு அதைப் பயன்படுத்த விரும்பினாலும், அவர்களின் வகுப்புகள் காலை 6:30 முதல் மாலை 7:30 வரை தொடர்ந்து நடைபெறும்.

வகுப்புகளின் தேதி மற்றும் நேரம்: வாரம் முழுவதும்
பெறக்கூடிய பேக்கேஜஸ்: காலை 6.30 முதல் இரவு 7.30 வரை தனி வகுப்புகள்
மகப்பேறுக்கு முற்பட்ட யோகா : வழங்கப்படுகிறது
நடத்தப்படும் மொழி: ஆங்கிலம்
முகவரி: 60 ஹார்டன் பிளேஸ், கொழும்பு 07
தொடர்பு எண்: 0112684808

The Om Spaceஒரு அர்ப்பணிப்பான யோகா ஸ்டுடியோ! The Om Space 2014இல் தொடங்கப்பட்டது. இங்கு அனைத்து பயிற்சியாளர்களும் தகுதி வாய்ந்தவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள், மற்றும் அவர்களின் நிபுணத்துவத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஸ்டுடியோ ஒரு சாதாரணமான எளிய இடம் ஆனால் இது வெற்றிகரமான வகுப்பிற்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டுள்ளது. இது ஒரு fan-cooled, மற்றும் முற்றிலும் சுகாதாரமான மாற்றும் அறைகள் மற்றும் கழிவறைகளையும் கொண்டது.

வகுப்புகளின் தேதி மற்றும் நேரம்: காலை, திங்கள் முதல் வெள்ளி வரை
பெறக்கூடிய பேக்கேஜஸ்: தனி வகுப்புகள், ஆரம்பநிலை முதல் அனுபவம் வாய்ந்தவர்களுக்கான நிலைகள் கொண்ட வகுப்புகள்.
மகப்பேறுக்கு முற்பட்ட யோகா: வழங்கப்படுகிறது
நடத்தப்படும் மொழி: ஆங்கிலம்
முகவரி: The Royal Institute, 185/10 Havelock Road, கொழும்பு 5
தொடர்பு எண்: 0750783383

BarressentialNare ஒரு சான்றளிக்கப்பட்ட IBBFA Barre பயிற்றுவிப்பாளர் மற்றும் Esteemed Balanced Body institute உடன் Mat, Reformer & Trapeze Table பயிற்சியை முடித்துள்ளார். அதோடு அவர் ஸ்பெஷலிஸ்ட் Pre/Post Rehabilitation Pilates அத்துடன் Pre/Post Natal Pilates பயிற்சி பெற்றவர். இங்கு செல்வதால் நீங்கள் சிறந்த மற்றும் பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறோம்!

வகுப்புகளின் தேதி மற்றும் நேரம்: வாரம் முழுவதும்
பெறக்கூடிய பேக்கேஜஸ்: குழு பேக்கேஜஸ், சேர்க்கை பேக்கேஜஸ், private refining packages.
மகப்பேறுக்கு முற்பட்ட யோகாவின் கிடைக்கும் தன்மை: வழங்கப்படுகிறது
நடத்தப்படும் மொழி: ஆங்கிலம்
முகவரி: 514/3 திம்பிரிகஸ்யாய வீதி, கொழும்பு 05
தொடர்பு எண்: 0777778953

Astanka Yoga Mandir
Astanka Yoga Mandir (AYM) என்கிற சான்றளிக்கப்பட்ட யோகா ஷாலா ஆன்மீக பரம்பரையுடன் 1953ஆம் ஆண்டு முதலானதாகும். அவர்கள் யோகா வகுப்புகளை கொழும்பில் பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் 1987ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றனர். வழங்கப்படும் வகுப்புகளின் வரிசையில் ஹத யோகா, அஷ்டாங்க வின்யாச, தியானம், யோக ஆலோசனை மற்றும் தெரபி யோகா ஆகியவை அடங்கும். AYM இல் உள்ள அனைத்து யோகா பயிற்றுனர்களும் இந்தியாவில் பெங்களூரில் உள்ள S-VYASA யோகா பல்கலைக்கழகம், மற்றும் Astanka Yoga Mandir இல் இருந்து பயிற்சி பெற்று தகுதி பெற்றுள்ளனர். பல சர்வதேச இணைப்புகளான ஆசிய யோகா தெரபி அசோசியேஷன், யோகா தெரபியில் Global Consortium மற்றும் பலவற்றை கொண்டுள்ளனர். அத்துடன் மாநாடுகளையும் சீனா, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் செய்கிறார்கள். 

வகுப்புகளின் தேதி மற்றும் நேரம்: வாரம் முழுவதும்
பெறக்கூடிய பேக்கேஜஸ்: குழு தொகுப்புகள், தனி வகுப்புகள்
மகப்பேறுக்கு முற்பட்ட யோகா : வழங்கப்படவில்லை
நடத்தப்படும் மொழி: ஆங்கிலம், சிங்களம்
முகவரி: No 3 Ridgeway Pl, கொழும்பு 04
தொடர்பு எண்: 0777274859

Nanda Sri Hatha Yoga Instituteமூன்று வெவ்வேறு இடங்களில் வகுப்புகளைக் கொண்ட மிகவும் பரவலான யோகா ஸ்டுடியோக்களுக்கு மத்தியில், இந் நிறுவனம் மிகவும் பயனுள்ள ஹத யோகா வகுப்பை நடத்துகிறது. பிரபல யோகா ஆசிரியர் Nanda Siriwardene தலைமையில் இந்த சூப்பர் ஸ்டுடியோ உள்ளது. அவர் குரு Srikanth Abey இடமிருந்து அனைத்தையும் கற்றுக்கொண்டார், எனவே ஆரம்பநிலை முதல் மேம்பட்டவர்கள் வரை, யோகா சான்றிதழைத் தேடுபவர்கள் எனஅனைத்து நிலைகளிலும் சேர தயங்க வேண்டாம். அனைத்து 3 ஸ்டுடியோக்களிலும் சிறந்த வசதிகளான பார்க்கிங் இடம், குளிரூட்டப்பட்ட அறைகள், சுகாதாரமான உடை மாற்றும் அறைகள் மற்றும் கழிவறைகள் உள்ளன. அவர்கள் ‘பெண்களுக்கான பிரத்தியேக’ வகுப்பையும் வழங்குகிறார்கள்.

வகுப்புகளின் தேதி மற்றும் நேரம்: செவ்வாய், புதன், வியாழன், சனி, ஞாயிறு காலை 9 மணி முதல் இரவு 8.00 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்பு மற்றும் நிலையைப் பொறுத்தது.
பெறக்கூடிய பேக்கேஜஸ்: குழு, தனி வகுப்புகள்
மகப்பேறுக்கு முற்பட்ட யோகா : வழங்கப்படவில்லை
நடத்தப்படும் மொழி: ஆங்கிலம், சிங்களம்
முகவரி: Alfha Insitute Practical Training Hall, 137/1, நாவல வீதி, நுகேகொட.
தொடர்பு எண்: 0777 146 639.

Indian Cultural Centreஇந்த கலாச்சார மையம் வாராந்தம் யோகா வகுப்புகளை மலிவு விலையில் அதன் உச்ச நம்பகத்தன்மையையுடன் வழங்கி வருகிறது.

வகுப்புகளின் தேதி மற்றும் நேரம்: சனி மற்றும் ஞாயிறு காலை 7.30 முதல் மாலை 6.30 மணி வரை வகுப்பு மற்றும் மட்டம் (ஆரம்ப அல்லது மேம்பட்ட நிலை)
பெறக்கூடிய பேக்கேஜஸ்: குழு வகுப்புகள்
மகப்பேறுக்கு முற்பட்ட யோகா : வழங்கப்படவில்லை
நடத்தப்படும் மொழி: ஆங்கிலம், சிங்களம்
முகவரி: இந்திய கலாச்சார மையம், 16/2, Gregory’s Road, கொழும்பு 07
தொடர்பு எண்: 0112684698

Mantra Life CentreMantra Life Centre என்பது ஆரோக்கியமான நல்வாழ்வை ஊக்குவிக்கும் நோக்கமுடைய ஒரு அமைப்பாகும். சமூக நலம், சமூக சேவை நிகழ்வுகள், கல்வி பிரச்சாரங்கள், மற்றும் வளாகத்தில் வழக்கமான யோகா வகுப்புக்கள் ஆகியன நடத்துவதற்கு இந்த அமைப்பு ஆதரவை வழங்குகிறது. 

வகுப்புகளின் தேதி மற்றும் நேரம்: வாரம் முழுவதும்
கிடைக்கும் தொகுப்புகள்: குழு வகுப்புகள்
மகப்பேறுக்கு முற்பட்ட யோகாவின் கிடைக்கும் தன்மை: வழங்கப்படவில்லை
நடத்தப்பட்ட மொழி: ஆங்கிலம், சிங்களம்
முகவரி: 09, தந்த்ரி மாவத்தை, கோட்டே வீதி, எத்துல் கோட்டே, கொழும்பு
தொடர்பு எண்: 0112883356, 0711728981

 

யோகா பயிற்சி ஒரே நேரத்தில் உங்களை மையப்படுத்தவும், ஓய்வெடுக்கவும், அதிக அளவு கலோரிகளை எரிக்கவும் ஒரு சிறந்த வழியாகும். zenஇன் இறுதி நிலையை அடைவதற்கு நீங்கள் ஒரு மேம்பட்ட யோகியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்கள் இறுக்கமான தசைகளை நீட்டுதல், ஆழ்ந்த சுவாசப் பயிற்சி, மற்றும் உங்கள் மனம், உடல் மற்றும் ஆத்மாவுடன் இணைதல் ஆகியவை எப்படி உங்களை அதீத மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் என்பதை உணர்வீர்கள். உங்களின் ஆரோக்கியமான பயணத்தைத் தொடங்குவதற்கு இப்போதே பதிவு செய்யுங்கள்!

உலகின் தலை சிறந்த கட்டிடக்கலை – தஞ்சை பெருவுடையார் கோவில் உண்மைகள்!

கடைச்சோழ வம்சத்தில் உதித்த விஜயாலயன் பரம்பரையினர் வழியில் வந்த மாமன்னன் இராஜராஜன் 1003ம் ஆண்டுக்கும் 1010ம் ஆண்டுக்கும் இடையே எழுப்பிய தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரியகோயில் தமிழர்களின் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை அறிவுக்கு ஒரு உன்னத எடுத்துக்காட்டாக காலங்காலமாக திகழ்கிறது என்றால் மிகையில்லை. தென்னிந்திய கோயில்களில் மிகவும் பெரியதும், புகழ் பெற்றதுமான இக் கோயிலை ‘தட்சிண மேரு’ என்றழைக்கின்றனர். போர்களில் கிடைத்த வெற்றிகளை இறைவனுக்கு அர்பணிப்பதற்காகவே இராஜராஜன் இந்தக் கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது.

ராஜ ராஜ சோழன் ஓவியம்

இக் கோயிலின் கட்டுமானம் பொறியியல் துறையில் ஓர் அற்புதம் என்று போற்றப்படுகிறது. கண் எட்டிய தூரம் வரை மலைகளோ, குன்றுகளோ இல்லாத பெரும் செம்மண் சமவெளியே தஞ்சை. ஆனால் பெரும் கற்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டது எப்படி? இந்தக் கோவிலுக்கான கற்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? எப்படிக் கொண்டு வந்து சேர்த்தார்கள்? போன்ற கேள்விகள் மனதில் எழுவது இயல்பானதே. திருச்சிக்கு அருகே மாமலை என்றொரு மலை இருந்ததாகவும், அந்த மலையை முற்றிலும் அறுத்து எடுத்து, யானைகள் மூலம் கொண்டு வரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. புதுக்கோட்டை பகுதி மற்றும் திருக்கோவிலூர் என்ற ஊருக்கு அருகிலிருந்தும் கொண்டு வரப்பட்டதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன.

தஞ்சை பெரிய கோவில் லிங்கம்

லிங்கமாக வீற்றிருக்கும் பாறையை, குஜராத்தில் உள்ள சௌராஷ்ட்ரா என்ற இடத்தில், நர்மதா நதிக்கரையிலிருந்து கிட்டத்தட்ட இருநூற்று ஐம்பது டன் எடையுள்ள அந்த பாறையை, விந்திய மலைகளைக் கடந்து கொண்டு வந்ததாகக் கூறுகிறார்கள். இந்திய நிலப்பரப்பில் உள்ள ஆலயங்களிலேயே தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியே இரண்டாவது பெரிய நந்தி. நந்தியின் உயரம் 12 அடி, நீளம் 20 அடி. தஞ்சை நந்தியின் வேலைப்பாடும், கலை அழகும் தனித்துவமானது, பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரே கல்லில் செய்யப்பட்ட நந்தியே இது. மேலும், தஞ்சை கோவில் கட்டப்பட்டபோது வைக்கப்பட்ட நந்தி சிறு சேதாரம் அடைந்ததால் நாயக்கர் காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நந்தியே இது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தஞ்சை பெரிய கோவில் நந்தி

உலகின் பாரம்பரியச் சின்னமாகவும், தமிழகத்தின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி, அதில் பரு மணலை நிறைத்து, அதன்மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்து கொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது. தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக் கொள்ளுமாம். இதனை “zero settlement of foundation” என்கின்றனர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது. மேலும் தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல் என்பதால் அஸ்திவாரத்தில் இடப்பட்டிருக்கும் இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல என்றும், கோயிலின் அடியில் கிடைத்த இந்த மூன்று மடங்கு பெரிய பருமணலானது (மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல்) மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து தஞ்சைக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. ஐந்து முதல் ஆறு டன் எடையுள்ள ஒவ்வொரு கல்லையும் எப்படி உயர கொண்டு சென்றார்கள் என்கிற வியப்பு இன்றும் பலருக்கு இருக்கிறது அல்லவா? கோவிலின் உயரம் எவ்வளவு உயர்கிறதோ அந்த அளவிற்கு சுற்றிலும் மண்ணை சாய்வாக கொட்டி அந்த மலை போன்ற சாய்ந்த பகுதிகளில் கற்பாறைகளைக் கொண்டு செல்லும் ‘மண்சாரம்’ என்கிற சிஸ்டத்தின் பிரகாரம் இந்த கற்கள் மேலே கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இரண்டாம் உலகப் போரின்போது இக்கோயிலுக்குள் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட ஒரு படை அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த நுட்பமான கட்டிடக்கலையினை தன்னகத்தே கொண்டிருக்கும் தஞ்சை பிரதோட்ச்சவர் கோவில் பற்றிய மக்களின் தவறான கற்பிதங்களை இங்கே நாம் அவசியம் குறிப்பிட்டேயாக வேண்டும் . இன்றும் கூட, தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்வதால் துரதிருஷ்டம் வரும் என்று மக்கள் நம்புகிறார்கள் என்பதே வேதனையான விடயம் . ஆட்சியாளர்கள் கூட இந்த கோயிலுக்கு ஏதாவது நன்மை செய்தாலோ அல்லது திருத்த வேலைகளை செய்தாலோ, தங்களுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்கிற சென்டிமென் கொண்டவர்களாக இருப்பதுதான் வேடிக்கையின் உச்சம். தற்போது கோயிலின் ஒருசில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெரிய கோயிலின் வழிபாட்டு முறைகள் திட்டமிட்டு மாற்றப்படுவதாகவும், கோயில் கட்டுமானங்கள் சிதைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கோவிலை சுற்றியுள்ள அகழிகளில் உள்ள பாறைக் கற்கள் அந்தப் பகுதி மக்கள் சிலரால் தமது சொந்த கட்டுமானங்களுக்காக கொண்டுசெல்லப்படுவதும் கவலைக்குரியவொன்றே. அதுமட்டுமன்றி பெரியகோவில் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் சொல்லப்பட்டு வருகின்றது . ஏன் இவ்வாறான கட்டுக்கதைகள் உலவுகின்றன என சிந்தித்துப்பார்த்தால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விஞ்ஞான அறிவை இருட்டடிப்பு செய்வதன் மூலம் ஆதிக்கச் சிந்தனையாளர்கள் மூடத்தனங்களை பரப்பும் சுயநலம் அடங்கியுள்ளது என்பதும், பழமை குறித்த கதைகளை விஞ்ஞானம் மறுக்கும் போது, மக்கள் உண்மையை அறியவிடாமல் மூடத்தனங்களை ஊதிப் பெருக்குவது காரணமாக அமைவதையும் அவதானிக்கலாம்.

80 டன் எடை உள்ள தஞ்சை பெரிய கோவில் கோபுர கல்

இவ்வாறு தஞ்சை கோவில் பற்றி நிலவும் தவறான கருத்துக்களில் ஒன்றுதான் கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்பது. ஆனால் காலை நேரத்தில் கோபுரத்திற்குப் பின்பக்கமும், மாலை நேரத்தில் கோபுரத்தின் முன்பக்கமும் கோபுரத்தின் நிழல் தரையில் விழும் என்றும், விமான உயரத்தில் இருக்கும் கல் 80 டன் எடை கொண்ட ஒற்றைக் கல் என்கிற தவறான கருத்திற்கு , உயரே இருப்பது 80 டன் எடை உள்ள ஒரே கல் அல்ல என்றும் பல கற்களை ஒன்றாக ஒட்டி வைத்திருக்கும் நுட்பமான வேலைப்பாடான அவ்வமைப்பானது ஆரஞ்சு பழம் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருப்பதைப் போன்ற நுட்பமே அது என்றும், கோவிலில் உள்ள நந்தி வளர்கிறது என்பதோடு இரவு நேரத்தில் நந்தியானது எழுந்து மேய்வதற்குச் செல்கிறது என்றும் அப்படி மேய்ந்து வளராமல் இருப்பதற்காக முதுகில் கடப்பாரை கொண்டு ஆணி அடித்து வைத்திருக்கிறார்கள் என்கிற புரளிகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் அவையெல்லாம் தவறான கட்டுக்கதைகள் என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் மணிமாறன்.

உலகின் மிகச் சிறந்த பொக்கிஷங்களில் ஒன்றான இந்த கோவில், இனி வரும் தலைமுறையினர்களுக்கும் சரியான தகவலோடு அதன் பெருமைகள் கொண்டுசேர்க்கப்பட வேண்டும் என்கிற கடப்பாடு நம் ஒவ்வொருவருக்குமே உண்டு .

– ப்ரியா ராமநாதன்

index.php