Blog Page 12

கனவுகளின் காதலன் இவர் ! சரித்திர நாயகன் இவர் !

‘இளைஞர்களே கனவு காணுங்கள்’ இந்த ஒரு வசனம் தான் அன்றிலிருந்து இன்றுவரை அனைவருக்கும் உந்து சக்தியாய் அமைகின்றது. ‘அக்னிச் சிறகுகள்’ இந்த ஒரு புத்தகம் தான் அன்றிலிருந்து இன்றுவரை பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாய் விளங்குகின்றது. ‘அறிவியல் மேதை டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம்’ இந்த ஒரு பெயர் தான் அன்றும் இன்றும் என்றும் அனைவருக்கும் ஆசானாய் இருக்கிறது. ஆம் மாமேதை அப்துல்கலாம் ஐயாவிற்கு இன்று பிறந்தநாள்!

இராமேஸ்வரத்தில் பிறந்த முத்தொன்று பாரதத்தின் அரிய சொத்தான காலம் அது. அறிவியலின் வழிகாட்டியாய் அறநெறியின் முன்மாதிரியாய் தேசத்தின் தலைவனாய், சிறந்த ஆசானாய், கனவுகளின் கதாநாயகனாய், எளிமையின் அடையாளமாய், ஏவுகணையின் அடித்தளமாய் வாழ்ந்து மறைந்த அவரின் பெயரும் புகழும் காலமிருக்கும் வரை காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். காலம் கடந்த மாமேதையின் கடந்தகால சுவடுகளை புரட்டி பார்க்கவேண்டிய தருணமிது.

கனவுகளின் காதலன் பிறந்தார்

தமிழ்நாட்டிலேயுள்ள அழகிய கிராமமான இராமேஸ்வரத்தில்   1931 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி ஜைனுலாப்தீனுக்கும் ஆஷியம்மாவுக்கும் மகனாக அப்துல் கலாம் பிறந்தார். ஏழ்மையான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த இவர்  அந்த ஊரிலுள்ள ஆரம்பப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். இராமேஸ்வரத்திலுள்ள சிவன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு இலவசமாக கணித பாடம் படித்துக்கொடுப்பார்கள். இதற்காகவே அப்துல் கலாம் அவர்கள் அவருடைய சிறுவயதில் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிடுவார்.

பின்னர் மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுபடுவார். அதன் பின்னர் புகையிரத நிலையத்திற்கு சென்று அங்கு ரயிலில் வரும் பத்திரிகைகளை வாங்கிக்கொண்டு வீடு வீடாக விநியோகம் செய்ய செல்வார்;. அவரின் குடும்பம் வறுமையில் வாடுகின்றது என்பதால் குடும்பத்தின் சுமையை குறைக்க தினமும் காலை ஆறு மணியிலிருந்து எட்டு மணிவரை செய்தித்தாள் விநியோகம் செய்ய சென்றுவிடுவார். பின்னர் வீட்டிற்கு வந்து பழைய கஞ்சைக் குடித்து பசியாறிவிட்டு பாடசாலைக்கு செல்வார். பள்ளி முடிந்து வந்ததும் காலையில் பத்திரிகை போட்ட வீடுகளுக்குச் சென்று பணத்தை பெற்று அதை வீட்டிற்கு கொடுப்பார். பின்னரே படிக்க ஆரம்பிப்பார். பாடசாலையில் சராசரி மாணவனாகவே அப்துல் கலாம் படித்தார். இப்படித்தான் கலாமின் பாடசாலை நாட்கள் நகர்ந்தன.

கலாமும்  கல்லூரியும்

பள்ளிப் படிப்பை முடித்ததும் அப்துல் கலாம் திருச்சிராப்பள்ளியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் தனது உயர்படிப்பை தொடர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போது விடுதியில் தங்கிப் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வறுமையில் இருந்த அப்துல் கலாம் உணவையும் காசுகொடுத்தே அங்கிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. மாதத்திற்கே உணவிற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டபோது அசைவத்திற்கு 18 ரூபாய், சைவத்திற்கு 14 ரூபாய் என்றவுடன் வறுமையின் காரணமாக அந்த நான்கு ரூபாவை மிச்சப்படுத்திக்கொள்ள நினைத்து இஸ்லாமியராக இருந்தாலும் அசைவ உணவுகளை விடுத்து சைவ உணவு உண்பதை வழக்கமாக்கினார்.

இப்படி நகர்ந்துகொண்டிருக்கும் போது ஒரு முறை பெரும்புயல் தோன்றி ஊரில் அவருடைய வீடு, வீட்டுக்கூரைகள்,பொருட்கள் எல்லாம் காற்றிலே சூரையாடப்பட்டது. அப்துல் கலாமை வீட்டுக்கு வரும்படி பெற்றோர் அழைத்தபோது வீட்டிற்கு செல்ல கையில் சுத்தமாக காசு இல்லாததால் அவர் பரிசாக பெற்ற புத்தகமொன்றை விற்பதற்காக அங்கிருந்த ஒரு கடைக்கு சென்றார். அந்தப் புத்தகத்தின் விலை 400 ரூபாய். அதைப் பெற்றுக்கொண்டு பணம் தரும்படி கேட்டார். அந்தப் புத்தகத்தில் ‘நீ ஒரு மிகச்சிறந்த மாணவன்’ என்ற குறிப்போடு மிகப்பெரிய கல்வியாளரின் கையெழுத்திடப்பட்டு இருந்தது.

இதைப் பார்த்த கடைக்காரர் வியந்து போனார். ‘இது மிகச்சிறந்த புத்தகம். அதுவும் நீ பரிசாய் பெற்றது. இதை ஏன் விற்கிறாய்?’ என்று கேட்டார் அந்த கடைக்காரர். அதற்கு அப்துல் கலாம் ‘என் ஊரில் ஏற்பட்ட புயலால் என்னுடைய வீடு தாக்கப்பட்டுள்ளது. நான் உடனடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும். என்னுடைய கையில் பணமில்லை’ என்றார். அதைக் கேட்ட கடைக்காரர் நீ ஊருக்கு செல்ல எவ்வளவு செலவாகும் என்று அப்துல் கலாமிடம் கேட்க அதற்கு அப்துல் கலாம் 60 ரூபாய் என்றவுடன் அந்த புத்தகத்தை பெற்று 60 ரூபாய் பணத்தையும் கொடுத்தவுடன் அப்துல் கலாம் ஊரிற்குச் சென்றார்.

பின்னர் ஒருமுறை அந்தப் பணத்தைக் கொடுத்து அந்த கடைக்காரரிடமிருந்து புத்தகத்தை திரும்ப பெற்றுள்ளார். என்னதான் கஷ்டமும்,வறுமையும் சூழ்ந்தாலும் அப்துல் கலாம் அவருடைய கல்வியை கைவிடவில்லை. இரவு, பகல் பாராது அயராது படித்து வகுப்பிலேயே சிறந்த மாணவனாய் திகழ்ந்தார்.

கலாமும் ஏவுகணையும்

1954 ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்ற பின்னர் அவரால் இயற்பியல் துறையில் ஆர்வம் காட்ட முடியவில்லை. இந்த துறையில் பணியாற்றுவதை விட அவருக்கு விண்வெளித் துறையில் பணியாற்றுவதே மிகவும் பிடித்திருந்தது. பிடிக்காத துறையில் சலிப்போடு பணியாற்றுவதை விட பிடித்த துறையில் சோர்வின்றி பணியாற்றலாம் என்று எண்ணி  1955 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வு குறித்த பொறியியல் கற்கையை  சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் ஆரம்பித்தார். அவருடைய அறிவாற்றலாலும், திறமையாலும் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

இதற்கு பின்னர் 1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார் அப்துல்கலாம். அவருடைய அயராத முயற்சியால் ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார்.இதன் பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO)  தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர் துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.

பின்னர் SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-ஐ என்ற துணைக்கோளை 1980 ஆம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இந்த ஒரு சாதனை முழு பாரதத்திற்குமே பெருமை சேர்த்தது. இந்த ஒரு சாதனையை நிகழ்த்திய அப்துல் கலாமிற்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு ‘பொக்ரான் அணு ஆயுத சோதனையில்’ முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏவுகணையின் தந்தை ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். இதனால் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார் அப்துல் கலாம் அவர்கள்.

கலாமும்  குடியரசு பதவியும்

விஞ்ஞானத் துறையில் நுழைந்து விண்வெளித் துறையில் சாதித்த அப்துல் கலாம் தேசத்தின் முக்கிய பதவியை பொறுப்பேற்று அதிலும் சிறப்பாய் கடமையாற்றினார். 2002 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதி அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு தேசத்தின் குடியரசுத்தலைவராக பதவியேற்றார். 2002 இலிருந்து 2007 வரை தொடர்ந்து 5 வருடங்கள் பாரத நாட்டின் குடியரசுத்தலைவராக தன்னுடைய கடமையையும் எளிமையாகவும், மக்களின் சேவகனாகவும் சிறப்பாக பணிபுரிந்தார்.

கலாமும்  கௌரவ விருதுகளும்

1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான ‘பத்ம பூஷன்’ விருது, 1990 ஆம் ஆண்டு ‘பத்ம விபூஷன்’ விருது, 1997 ஆம் ஆண்டு ‘பாரத ரத்னா’ விருது ஆகிய கௌரவ விருதுகளை வழங்கி இந்திய அரசு அவரை கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1997 ஆம் ஆண்டு தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விரது, 1998 ஆம் ஆண்டு வீர் சவர்கார் விருது, 2000 ஆம் ஆண்டு ராமானுஜன் விருது, 2007 ஆம் ஆண்டு அறிவியல் கௌரவ டாக்டர் பட்டம் மற்றும் கிங் சார்லஸ் ii பட்டம், 2008 ஆம் ஆண்டு பொறியியல் டாக்டர் பட்டம், 2009 ஆம் ஆண்டு சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது மற்றும் ஹூவர் மெடல், 2010 ஆம் ஆண்டு பொறியியல் டாக்டர் பட்டம், 2012 ஆம் ஆண்டு சட்டங்களின் டாக்டர் மற்றும் சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது ஆகிய விருதுகளும், கௌரவங்களும் அப்துல் கலாமிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கலாமும்  மாணவர்களும்

உயர்ந்த பதவிகளை எல்லாம் வகித்தாலும் குணத்தாலும் பண்பாலும் அப்துல் கலாம் மிகவும் எளிமையானவர். அவருக்கு எப்போதும் மாணவர்களுடன் உரையாடுவதே விருப்பம். குடியரசு மாளிகைக்கு மாணவர்களை வரவழைத்து அவர்களை சந்தித்து உரையாடும் பழக்கத்தினை வைத்திருந்த அவர் ஒருமுறை பார்வை இழந்த மாணவரை சந்தித்து உரையாடினார். அந்த அளவிற்கு மாணவர்களுடன் உரையாடுவது அவருக்கு பிடித்த ஒன்று. மாணவர்களே எதிர்கால இந்தியாவின் அசைக்க முடியாத சக்தி என்பது அப்துல் கலாமின் நம்பிக்கை.

இதனால் ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடுவதே அவருக்கு பிடித்த செயல். ஒரு முறை இவ்வாறு மாணவர்களுக்கு முன் சொற்பொழிவாற்றி பின் மாணவர்களுடன் கலந்துரையாடும் போது ஒரு மாணவன் எழுந்து ‘ஐயா! நீங்கள் கனவு காணுங்கள் என்று கூறி இருக்கிறீர்கள். ஆனால் நான் கனவு காண முடியாமல் என்னுடைய இலக்கை அடைய நிறைய பிரச்சினைகள் வருகிறது. இப்படியிருக்கும் போது நான் எப்படி என் இலக்கை அடைவது என்று அவன் அப்துல் கலாமை பார்த்து கேட்டபோது அதற்கு அப்துல் கலாம் ஒரு குட்டி கதை சொன்னார்.

ஒரு காட்டில் நிறைய பறவைகள் சேர்ந்து இரை தேட ஆரம்பிக்கும் போது கருமேகம் சூழ்ந்து திடிரென்று மழை பெய்யத் துவங்குகின்றது. மழை பெய்ய ஆரம்பித்தவுடன் பறவைகள் எல்லாம் தன்னுடைய கூட்டை நோக்கி பறக்க விளைந்தன. ஆனால் அங்கிருந்த ஒரு கழுகு மட்டும் தன்னுடைய கூட்டை நோக்கி பறக்காமல் மேல்நோக்கி பறக்க ஆரம்பிக்கின்றது. கழுகின் இந்த செயலைப் பார்த்த மற்ற பறவைகள் இது என்ன இந்த முட்டாள் கழுகு கூட்டிற்கு செல்லாமல் மேல்நோக்கி பறக்கின்றது என்று தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கின்றன. இதை சிறிதும் காதில் வாங்காத கழுகு மேல்நோக்கி பறந்துக் கொண்டே இருந்தது. அது மேகத்தை தாண்டி போனவுடன் அங்கு ஏதேனும் இரை கிடைக்கிறதா என்பதை பார்க்கவே கழுகு மேல்நோக்கி பறந்தது. மேகத்தை தாண்டியவுடன் அங்கு மழை பெய்யாது என்பதை அறிந்த கழுகு மேல்நோக்கி பறந்து நினைத்தவாறே இரையை பெற்று தன்னுடைய இலக்கை அடைந்தது. மழை பெய்தால் ஒரு பறவையால் பறப்பது என்பது கடினமாக இருக்கும்.

அந்த மழைத்துளிகள் பறவையின் இறக்கையில் பட்டால் பயங்கரமாக வலிக்கும் ஆனால் அதை சிறிதும் பொருட்படுத்தாத கழுகு மேல்நோக்கி பறந்து அதன் இலக்கை அடைந்தது. இவ்வாறு இந்த கதையை கூறி முடித்த அப்துல் கலாம் அந்த மாணவனுக்கு ‘அந்த கழுகைப் போல மனஉறுதியும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தடங்கல் வந்தாலும் சோர்வடையாது முயற்சி செய்தால் நிச்சயம் இலக்கை அடையலாம். கனவு காணுங்கள் அதை அடைய இடைவிடாது முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உங்கள் இலக்கை அடைவீர்கள்’ என்று கூறி முடித்தார்.

கலாமும்  ‘அக்னி சிறகுகளும்’

அப்துல் கலாமிற்கு புத்தகங்கள் வாசிப்பது எப்படி பிடிக்குமோ அதைப்போலவே எழுதுவதும் பிடிக்கும். ‘அக்னி சிறகுகள்’, ‘இந்தியா 2020’, ‘எழுச்சி தீபங்கள்’,’அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை’ போன்ற புத்தகங்களை எழுதியிருக்கிறார்.  அதிலும் அவர் எழுதிய ‘அக்னிச் சிறகுகள்’ என்னும் புத்தகம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் இன்று வரை கொண்டாடப்படுகிறது. அப்துல் கலாம் அவர்களின் அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட சுயசரிதை புத்தகமே ‘அக்னிச் சிறகுகள்’ ஆகும்.

அப்துல் கலாம் அவர்கள் தான் எழுதிய அக்னிச் சிறகுகள் புத்தகத்தில் தன்னுடைய வாழ்வில் நடந்த முக்கியமான சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.இப்புத்தகம் தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மலையாளம், ஒரியா, மராத்தி, சீனம் உள்ளிட்ட 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? அப்துல் கலாம் மறைந்தவுடன் அவர் எழுதிய ‘அக்னிச் சிறகுகள்’ புத்தகம் அனைத்துமே காட்டுத்தீயாய் விற்பனையாகியுள்ளது.

கலாமும் மரங்களும்

அப்துல் கலாம் இயற்கையை விரும்புபவர். மரங்கள் நடுவது அவருக்கு பிடித்தமான ஒன்று. ஒரு மரம், ஆண்டுக்கு 20 கிலோ கார்பனை உட்கொண்டு, 14 கிலோ ஒட்சிசனை உற்பத்தி செய்கிறது. நமது நாட்டிலுள்ள 100 கோடி மக்களும், ஆளுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் மொத்தத்தில் நம்மால் ஒரு பில்லியன் மரங்களை வளர்க்க முடியும். அப்படி வளர்த்தால், நாட்டின் தட்ப வெப்ப நிலையே மாறி உலகிற்கே வழிகாட்டியாக இந்தியா மாறும் என்று ஒரு முறை அப்துல் கலாம் சொன்னார்.

இந்தியாவில் 1,000 கோடி மரங்களை நட்டு வளர்க்கும் திட்டத்தை, இளைஞர்கள், மாணவர்களை வைத்து ஆரம்பித்தார் அப்துல் கலாம். ஒவ்வொரு மனிதனும் மானுடனாக வேண்டுமானால், வாழ்நாளில் 10 மரங்களையாவது வளர்க்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். மரம் நடுதல் தொடர்பான பல நிகழ்வுகளில் அப்துல் கலாம் கலந்துகொண்டுள்ளார். ஏகப்பட்ட மரங்களையும் தன் கைகளால் நட்டு வைத்துள்ளார்.

‘மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்ற கருத்தை திரைப்படங்கள் வழியாக கூறுங்களேன்’ என்று அப்துல் கலாம் அவருடைய நண்பரான காமெடி நாயகன் மற்றும் சின்னக்கலைவாணர் விவேக்கிடம் கூறினார். இதனால் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற கலாமின் லட்சியத்தை விவேக் தனது கனவாகவே எடுத்து செய்தார்.அப்போது பிறந்ததுதான் ‘பசுமைக் கலாம்’. அவர் 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டதும் கடலூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விவேக்கை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் அப்துல் கலாம்.

கனவுகளின் காதலன்  கலாம்

‘கனவு என்பது நீங்கள் தூங்கும்போது வருவதல்ல. உங்களைத் தூங்கவிடாமல் செய்வது எதுவோ அதுவே கனவு’ என்று கூறிய அப்துல் கலாமும் இந்தியாவை வல்லரசாக மாற்ற வேண்டும் என்று அப்பொழுதே கனவு கண்டார். ‘இந்தியா விஷன் 2022’ எனும் அவருடைய புத்தகத்தை வெளியிட்டிருந்தார்.  வேளாண்மை, கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் இந்தியா அதீத வளர்ச்சி அடைய வேண்டும். நாட்டில் வறுமை ஒழிய வேண்டும். இதுதான் கலாம் கண்ட கனவு. இளைஞர்களே கனவு காணுங்கள் என்று கற்றுக்கொடுத்த அவரை கனவுகளும் காதலிக்கின்றன.

கனவுகளின் காதலன் மறைந்தார்

வாழும் போது நமக்கு பிடித்ததை செய்யும் போதே நிம்மதி கிடைக்கும். அப்படியில்லை என்றால் பிடித்ததை செய்துவிட்டு இறந்தால் நிம்மதி கிடைக்கும். தன் வாழ்நாள் முழுவதும் தன் மனதிற்கு பிடித்த விடயங்களை செய்து தனக்கு பிடித்ததை செய்துகொண்டிருக்கும் போதே நிம்மதியாக மறைந்தார் மாமேதை அப்துல் கலாம். ஆம் ஜூலை 27, 2015 ஆம் ஆண்டு மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் நகரில் உள்ள ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினாராக சென்ற கலாம்.

அந்த கல்லூரி மாணவர்களிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்தார். அதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டார் எனும் சோக செய்திதான் கிடைத்தது. அவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் கண்கலங்க வைத்தது. குழந்தைகள்,மாணவர்கள்,இளைஞர்கள் என அனைவருமே மாமேதையை பிரிந்ததில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவருக்கு பிரியா விடையளித்தனர். அவர் மறைந்த அன்று இந்தியா முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

அப்துல் கலாமின் மணிமண்டபம் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகிலே பேக்கரும்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தில் வாயில் ‘இந்தியாகேட்’ போன்று அமைக்கப்பட்டிருக்கும். மேலும் அந்த கட்டிடமானது ‘ராஷ்டிர பவன்’ போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த நினைவிடத்தில் அவரது பல புகைப்படங்கள், அவற்றினை பற்றிய குறிப்புக்கள் மற்றும் அவருடைய வீணை வைத்த சிலை அமைப்பட்டிருக்கிறது. மேலும் கலாம் வாழ்ந்து மறைந்த அவரது சொந்த வீடு மக்களின் பார்வைக்காக கலாம் இல்லம் எனும் பெயரில் காட்சியமாக மாறியுள்ளது

 கலாமின் பொன்மொழிகள் இதோ உங்கள் நெகிழ்ச்சிக்காக!

அழகை பற்றி கனவு காணாதீர்கள் அது உங்களின் கடமையை பாழாக்கும். கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்!

ஒரு முறை வந்தால் அது கனவு.இரு முறை வந்தால் அது ஆசை.பல முறை வந்தால் அது இலட்சியம்.

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.. ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்..!

வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்.

வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் – நழுவ விடாதிருங்கள்,

ஒரு கடமை – நிறைவேற்றுங்கள்

ஒரு இலட்சியம் – சாதியுங்கள்

ஒரு சோகம் – தாங்கிக்கொள்ளுங்கள்

ஒரு போராட்டம் – வென்று காட்டுங்கள்

ஒரு பயணம் – நடத்தி முடியுங்கள்

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

வெற்றியின் ரகசியம் என்ன? சரியான முடிவுகள். சரியான முடிவுகளை நீங்கள் எவ்வாறு எடுக்கிறீர்கள்? அனுபவம் மூலம். அனுபவத்தை நீங்கள் எவ்வாறு பெறுகிறீர்கள்? தவறான முடிவுகள் மூலம்.

நீங்கள் புகழுடன் பிறந்தால் அது ஒரு விபத்து. நீங்கள் புகழுடன் இறந்தால்அது ஒரு சாதனை.

மனிதனுக்கு கஷ்டங்கள் தேவையானது, ஏனெனில் வெற்றியை அனுபவிப்பதற்கு அவை அவசியமானது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு அவசியம் – பொதி செய்யப்பட்ட உணவுகளுக்கு தரம் அவசியம்

நாம் உயிர் வாழ வளி நீர் உணவு ஆகியவை அத்தியாவசியமானவை. இவற்றை நம் அன்றாட வாழ்விலிருந்து பிரித்துவிட முடியாது. அதிலும் உணவிற்கு முக்கிய பங்கு இருக்கின்றது. மூன்று வேளை நாம் உண்ணும் உணவு தான் நம் உடலை பாதுகாக்கவும் நம் உடல் ஆரோக்கியத்திற்கும் ஆணிவேராய் திகழ்கிறது. ஒரு மனிதனுக்கு உணவு என்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அவன் உட்கொள்ளும் உணவின் தரமும் மிக முக்கியமாகின்றது. பொதி செய்யப்பட்ட உணவுகள் மக்களிடையே பெரும்பாலும் நுகரப்படுகின்றன. இவ்வகையான உணவைத் தெரிவு செய்து உட்கொள்ளும் போது அதன் உற்பத்தி மற்றும் காலாவதியாகும் திகதி தரம் நிறம் சுவை மணம் விலை என்பவற்றைக் கவனத்திற் கொள்ளவேண்டியது மிகமுக்கியம். நம்முடைய வாழ்க்கைக்கு உணவு எவ்வாறு அவசியமானதொன்றாகிறதோ அதைப் போலவே அவை தரமானதென்பதை நிரூபிக்கும் தரநிர்ணயமும் அவசியமாகிறது.

தர நிர்ணயம் என்பது நாம் கொள்வனவு செய்யும் உணவு தரமானது என்பதை பரிசோதித்து சான்றிதழ் வழங்குவதாகும். உணவின் தரமென்பது நிச்சயம் கருத்திற் கொள்ளவேண்டும் என்பதற்காகவே சர்வதேச தர நிர்ணய தினம் நினைவுகூரப்படுகிறது.ஒக்டோபர் 14 ஆம் திகதியாகிய இன்று தான் சர்வதேச தர நிர்ணய தினமாகும். தர நிர்ணயம் பற்றிய அறிவை பொதுமக்களுக்கு வழங்கி சமூதாயத்தில் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதே இத் தினத்தின் முக்கிய நோக்கமாகும். தரப்படுத்தலை எளிதாக்குவதில் கவனம் செலுத்தும் ஒரு சர்வதேச அமைப்பை உருவாக்க முடிவு செய்து 1946 ஆம் ஆண்டு 25 நாடுகளின் பிரதிநிதிகள் இணைந்து லண்டனில் ஒன்று கூடி ஒக்டோபர் 14 ஆம் திகதியை சர்வதேச தர நிர்ணய தினமாக தேர்ந்தெடுத்தனர்.

இதனடிப்படையில் உலகளாவிய ரீதியில் மக்களின் ஆரோக்கியத்தைக் கவனத்திற் கொண்டு உணவுப் பாதுகாப்புத் தொடர்பான கண்காணிப்பு சுகாதார அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இயங்கி வருவதோடு அனைத்துலக உணவு பாதுகாப்பு நிறுவனம் உலக வள மையம் உலக உணவு திட்டம் அமைப்பு உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் அனைத்துலக உணவு தகவல் ஆலோசனை நிறுவனம் போன்ற அமைப்புகள் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு சுகாதாரம் முதலியனவற்றை எடுத்துரைக்கின்றன.

நிலைத்தன்மை உயிரியற் பல்வகைமை காலநிலை மாற்றம் ஊட்டச்சத்து பொருளாதாரம் மக்கள்தொகை வளர்ச்சி நீர் வழங்கல் மற்றும் உணவுக்கான அணுகுமுறைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளையும் கருத்திற்கொண்டு இவ்வமைப்புகள் மக்களின் நலன் கருதி பல்வேறு வகையிலான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.

சிறந்த தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (I.S.O.) அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம் (I.E.C) அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (I.T.U.) ஆகிய நிறுவனங்களின் வழிமுறைகளுக்கு உட்பட்டு உலகத் தரங்களை உருவாக்கப் பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவையைப் பாராட்டவும் பொருள்கள் மற்றும் சேவைகளில் விளங்க வேண்டிய சீர்மைத் தன்மையின் அவசியத்தை உலகளாவிய ரீதியில் வலியுறுத்தவும் ஏற்ற நாளாகத் திகழ்கிறது.

தரச்சான்றிதழானது உணவு பற்றிய சரியான விபரங்கள் கிடைக்கப்பெற்ற பின்னரும் அந்த உணவு வகைகளைப் பல்வேறு ஆய்வுபடுத்தலுக்கு உட்படுத்தியப் பின்னரும் தான் இத்தரச் சான்றிதழ் உணவுச் சுட்டிகளில் பொறிக்கப்படுகின்றன. குறிப்பாக நாம் இன்று துரித உணவுகளையே அதிகளவு பயன்படுத்துகிறோம். அதற்கமைய தரநிர்ணயம் பற்றி அறிந்து அதனை வாங்கும் முன் தரச்சான்றிதழ்கள் பொறிக்கப்பட்டுள்ளனவா? என்று பார்த்துவிட்டு வாங்குவது அவசியமாகும்.

அவற்றை நாம் அலட்சியப்படுத்தினால் அது தனிமனித ஆரோக்கியத்தை மட்டுமல்லாது ஒரு சமூதாயத்தின் ஆரோக்கியத்தையே பாதிக்கும். ஆகவே தரப்படுத்தல் என்பது நாம் கருத்திற்கொள்ள வேண்டும். ISO,SLS என்பன பொதி செய்யப்பட்ட உணவுகளில் பொறிக்கப்படும் தரச்சான்றிதழ்களுக்கு உதாரணமாகும்.

ISO என்றால் என்ன?

ISO என்பது தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பாகும். அதன் விரிவாக்கம் International Organization for Standardization என்பதாகும்.
நீங்கள் கொள்வனவு செய்யும் உணவுப்பொதியல் இவ்வாறு ISO முத்திரை பொறிக்கப்பட்டிருப்பின் குறித்த பொருள் சர்வதேச ரீதியாக தரநிர்ணயப்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

SLS என்றால் என்ன?

SLSI (Sri Lanka Standards Institution) என்பது தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பின் துணைநிறுவனமாக இலங்கையில் உள்ள தரச்சான்றிதழ் அமைப்பாகும். அவ் அமைப்பினாலேயே உணவுப்பொருட்களுக்கு SLS சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆகையால் SLS முத்திரை பொறிக்கபட்டிருப்பின் அவ் உணவானது தரச்சான்றிதழ் பெற்றுள்ளது என அறியலாம்.

இனிமேல் நீங்கள் பொதி செய்யப்பட்ட உணவுகளை கொள்வனவு செய்யும் போது அவை ISO அல்லது SLS சான்றிதழ் பொறிக்கப்பட்டுள்ளனவையா என்று கவனித்தப் பாருங்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எவ்வாறு உணவு அவசியமோ அதேபோல் ஆரோக்கியமான உணவுக்கு தரம் அவசியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அதிகரிக்கும் ஆடம்பரத் திருமணங்கள்!

ஒருகாலகட்டம்வரையில் ஆடம்பரம் என்பது ஒரு சமூக குற்றமாகவே  கருதப்பட்டது. ஆனால் இன்றோ ஆடம்பரம் யார் மனதையும் உறுத்துவதாகத் தெரியவில்லை. தினம் தினம் பல ஆடம்பரத் திருமணங்களை சமூகம் பார்த்துப்பார்த்து அவை இயல்பான ஒன்றாகிவிட்டது. இதனால்தானோ என்னவோ  இன்று திருமணத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் பலரது (குறிப்பாக மணமகளாக மாறவிருக்கும் பெண்களுக்கு) எண்ணமும் நாமும் ஆடம்பரமாக திருமணம் செய்துகொள்ளவேண்டும் எனும் ஆசை அதன் பின்விளைவுகளை அறியாமலேயே ஏற்பட்டுவிடுகின்றது.

நுகர்வுக் கலாசாரத்தின் எல்லையில்லா உச்சத்தை எட்டும் ஆசையில் நடத்தப்படும் திருமணங்களின் முக்கிய நோக்கம் சமூக அந்தஸ்தை நிலை நிறுத்தும் அம்சமாகிவிட்டது.திருமண நாளை ஒரு மறக்க முடியாத ஆடம்பரக் கொண்டாட்டமாக மாற்றுவதற்கு, ஆடம்பர மண்டபம், பிரம்மாண்ட விருந்து, மலைக்க வைக்கும் மேடை அலங்காரம், விலைகூடிய அழைப்பிதழ்கள், உடைகள், நகைகள், கேளிக்கை நிகழ்வுகள் என எதையும் விட்டு வைப்பதில்லை.

போதாக்குறைக்கு சம்பந்தமேயில்லாமல் அண்மைக்காலமாக நம்முடைய பாரம்பரிய திருமணங்களுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் வடநாட்டு ஆடை அலங்காரங்கள் உற்பட  சங்கீர், மெகந்தி என பலவகையான மேலதிக கொண்டாட்டங்கள் என்பவற்றையும் குறிப்பிட்டேயாகவேண்டும்.  இந்த ஒரு நாள் கொண்டாட்டத்திற்கு செய்யும் செலவில் ஒரு சொந்த வீட்டையே வாங்கிவிடமுடியும்!

ஆடம்பர திருமண மோகம் நிறைய நடுத்தர குடும்பங்களை மீளா கடனில் தள்ளி,வாழ்க்கையைச் சுமையாக மாற்றியுள்ளது.வாழ்வில் ஒருமுறை நடக்கும் திருமணம் பலரின் வாழ்வில் பெரும் கடன் சுமையைக் கொண்டு வரும் ஒன்றாக இருக்கிறது என்பது மறுக்கமுடியாத யதார்த்தமாக உள்ளது. ஊர் கூடிஉறவுகள் கூடி மகிழும் கல்யாணம் உறவுகளையும் நட்பு வட்டாரத்தையும் பலப்படுத்துவதற்கு பதிலாக ஊரின் முன் பணபலத்தை நிரூபிக்கும் விதமாக இருக்கின்றன.

இன்று திருமண விழாக்கள் பல லட்சங்கள் கோடிகளை கரைத்து வருகிறது. திருமணங்கள் உறவுகளின் ஒற்றுமை அடையாளமாக இருந்த காலமெல்லாம் கடந்து வீண் செலவுகளும், ஆடம்பரமும் காண்பிக்கும் சமூக அந்தஸ்திற்கான அடையாளமாக திசை திருப்பி விட்டன. யானையைப் பார்த்து பூனை போட்டி போட்ட கதையாக பணக்கார சமூகம் செய்யும்  விரயம் போல நடுத்தர மக்களும் கல்யாணச் செலவுகள் செய்யும் போது கல்யாணக் கடன்கள் அவர்களை காணாமல் போக வைக்கின்றன.

கல்யாணம் மகிழ்ச்சியான சம்பவம் என்ற நிலையில் இருந்து கட்டாய கடன் வாங்கி நடத்தும் நிலைக்கு இன்றைய நடுத்தர குடும்பத்தினர் தள்ளப்பட்டு வருகின்றனர். மேல் தட்டு மக்கள் தவிர பெரும்பான்மையான நடுத்தர மக்கள் கல்யாணக் கடனை அடைக்க சொத்துக்கள் விற்பதும், வட்டிக்குப் பணம் வாங்கி பல ஆண்டுகள் கடனைச் செலுத்துவதில் காலம் தள்ளுவதும் தொடர் கதையாகி வருகிறது.

திருமண செலவுகளைக் கேட்டால் மயக்கமே வரும் அளவிற்கு இருக்கிறது. திருமண மண்டபத்திற்கான நாளொன்றிற்கான வாடகை இன்று பல இலட்சங்களை தாண்டியுள்ளது. அதிலும் நட்சத்திர விடுதிகள் என்றால் சொல்லவே வேண்டாம். மண்டபங்களின் வாடகை, சாப்பாட்டுச் செலவிற்கு நிகராக அதிகரித்து வருகின்றன.  அதேபோல திருமண அழைப்பிதழ்கள்  கல்யாண அழைப்பிதழாக இருப்பதற்கு பதில் பணத்தின் பலத்தை திருமண அழைப்பிதழ்கள்களில் காட்டி வருகின்றனர். ஒரு பத்திரிகையின் விலை ரூ 10 என்றாலும் ரூ. 1000 என்றாலும் கல்யாணத்திற்கு வர வேண்டும் என நினைப்பவர்கள் வரத் தான் போகிறார்கள்.

இதில் எதற்கு வீண் விரயம்? ஒரு நாள் சில மணி நேரங்கள் கட்டிக்கொள்ளும் கல்யாண பட்டுப் புடவைக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து அதை மீண்டும் கட்டிக்கொள்ள முடியாமல் பத்திரமாக வீட்டு பீரோவில் தூங்க வைப்பதால் நம் பணமும் தூங்க வைக்கப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். சேலைகள் மட்டுமல்ல ஆண்கள் அணியும் ஆடம்பர  ஆடைகளும் அன்று ஒரு நாள் அணிந்த மாதிரி போட்டோவில்தான் பார்க்க முடியுமே தவிர இதர நாட்களில் அணிய முடியாத நிலையில் இருக்கின்றன. எனவே உடைகள் லட்சணமாக இருந்தால் போதும். பல லட்சத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

நம் விருந்தில் உறவினர்களும் ஊரும் வியக்க வேண்டும் என வகைவகையான உணவுகள் மூலம் சுமார் 15% உணவு உற்பத்தி, திருமணம் போன்ற விழாக்களில் வீணாகக் கொட்டப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  முன்பெல்லாம் தோழிகளும் உறவுகளில் உள்ள பெண்களும் தான் மேக்கப் செய்வார்கள். இன்றோ திருமணங்களுக்கு மேக்கப் ஸ்பெஷலிஸ்ட்களுக்கு கட்டணமாக சில ஆயிரம் தொடங்கி சில லட்சங்கள் வரை வழங்கப்படுகிறது. அதிலும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே பேஷியல் உற்பட அனைத்திற்குமான ஒத்திகைகள் ஆரம்பிக்கப்பட்டு பணம் வாரியிறைக்கபட ஆரம்பித்துவிடும்.  இது தவிர கல்யாணத்திற்கு வரும் பெண்கள் யார் விரும்பினாலும் அவர்களுக்கு மெகந்தி வைத்துவிட ஒரு மேக்கப் குழுவே களத்தில் இறக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் திருமணங்கள் என்பது மிகப் பெரிய சந்தையாக உருவெடுத்து, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். திருமணங்களுக்கான மேட்ரிமோனியல் இணையதளங்கள் தொடங்கி மேக்-அப், புகைப்படங்கள் மற்றும் வீடியோ, கேட்டரிங் சேவைகள், மலர் அலங்காரங்கள், விளக்குகள், நகைகள், ஆடைகள் வாங்குவது, இசை நிகழ்ச்சி நடத்துபவர்கள் என திருமண சந்தை 40-50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலானது என ஆய்வுகள் கூறுகின்றன.  பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் குறித்து முடிவும் திட்டமிடலையும் செய்து வந்தது மனமக்களின் குடும்ப உறுப்பினர்கள்.

ஆனால் இப்போது ஒரு திருமண நிகழ்வை முழுமையாக திட்டமிடுவது என்பது மிகப்பெரிய தொழில்.  திருமண மண்டபம் புக் செய்வதில் தொடங்கி எந்த மாதிரியான பூக்கள் மண்டபத்திற்குள் எப்படி நுழைய வேண்டும், புகைப்படக் கலைஞர்களை புக் செய்வது, தீம் வெட்டிங்க்ஸ், திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஜூஸ் கொடுப்பது, சுத்தம் செய்ய பணியாளர்களை அமர்த்துவது. திருமண ஆல்பம் வரை அனைத்தையும் ஒருங்கிணைப்பதுதான் வெட்டிங் பிளானர்களின் வேலை.  எதையும் திட்டமிட்டு முடிக்கும் அளவிற்கு முன்பைப்போல யாருக்கும் நேரமோ , உறவினர் பலமோ இல்லாததால் இன்று அனேகரது தேர்வு இந்த வெட்டிங் பிளானர்ஸ்தான்  என்றாலும் மிகையில்லை.

 உறவுகள் ஊர் பெருமைக்கு ஆடம்பரம் செய்து திருமணம் நடத்தி கடனில் வாழ்வதைக் காட்டிலும் நம் தகுதிக்கு ஏற்றது போல நம் நிம்மதியைப் பாதிக்காத வகையில் எளிமையாகத் திருமணம் நடத்துவதே புத்திசாலித்தனம். கடன் மரண தணடனையை விட கொடுமையானது. யார் மூலம் கடன் என பின்னாளில் சண்டை போடுவதைக் காட்டிலும் கடன் ஏற்படாமல் சிக்கனமாக வாழ்வது நிரந்தர நிம்மதியைத் தரும். ஆடம்பர செலவுகள் செய்வதைக் காட்டிலும், திருமண தினத்தன்று நம்மால் முடிந்த அளவு  உடல் குறைபாடு உடையவர்களுக்கு  ஆதரவற்றோர் இல்லத்திற்கு உணவும் உடையும் கொடுத்து அவர்களின் மகிழ்ச்சிக்கு வழியாக இருக்கலாம்.

என் அவர்கள் அல்லது என் இவர்கள் By அன்புநாதன் ஹஜன்


அடடா குட் மார்னிங்க்

மன்னிக்கவும் குட் ஈவினிங்!
உள்ளே வந்துவிடுங்கள்
தாழிடவேண்டும்
இப்போதெல்லாம் முன்பிருந்ததாய்
வீட்டுக்கதவு
திறந்தே கிடப்பது கிடையாது
திருட்டுப்பயம்!

குட் ஈவினிங்க்!

கடைசி ஒரு வழியாய்
ஹ்ம்ம்
பொருளேதுமற்ற வீட்டில்
திருட்டுக்கென்ன பயம்?

நவீனத் திருடர்கள்

பொருட் திருடுவதில்லை

மாறாய்?

கருத்திருடுகிறார்

என்றால்?

பேசுவர்
நகைப்பர்
அன்புத்திறப்புக் கொண்டு
திருடிக் கழன்று விடுவர்
அமைதியை

கவனம்!

மீண்டும் மன்னிப்பீர்

ஏன்?

விருந்தாளியிடம்
விசனம்

இருக்கட்டும் ஒரு புறம்

யாரிவர்கள்
புது முகங்கள்!

அதோ அந்த மூலையில்

சார்ல்ஸ் புகோஸ்கியின்
பிளேஷர் ஆப் த டேம்ன்
படித்துக்கொண்டிருக்குமவன்
தனிமையோடு தாம்பத்தியம் பூண்டவன்!
தனிமையென்றால்
அலாதி இஷ்டம்
அந்த மூலையும் புகோஸ்கியும்
அத்துனை இஷ்டம்

இவனொரு இவன்!

இளையராஜாவின் பழைய பாட்டுக்கு
பாதியுடைந்த பழைய கிட்டாரை
பத்து முறை டியூன் செய்து
எட்டுக்கட்டையில் ஏடாகுடம் செய்வான்
எதாவது கேட்டால்
இது தான் இசையென்று
இயற்றி இலக்கணஞ் சொல்வான்

வெளியில் மழையாடும் அவனா?

சுவாதீனமற்றவொரு மடையன்!
வெயிலில் குளிர் காய்வான்;
மழையில் வெயில் காய்வான்
குருவியோடு பேசுமவன்
மனிதரிடத்து மௌனி
மோன நிலைக் கேனை

நாயைக் கொஞ்சுவதும்

பூனையிடம் கெஞ்சுவதும்
இவனுக்கு இதுதான் வேலை
அலைக்கு தலைமூழ்கும்
ஆறறிவு அதுகளை விட
ஐந்தறிவு இவர்களின் கண்
கொள்ளைப் பிரியமிவனுக்கு

பொல்லாதவன் அவன்

அம்பேத்கர் என்பான்
பெரியார் என்பான்
கார்ல்ஸ் மார்க்ஸும் சேசுவேராவும்
தோளுக்குத் தோளான
தோழர் என்பான்
அறைக்குள்ளே கத்தித் திரியுமவன்
சமூகத்திடம் ஊமைக் கோழை!

அடடா
அவன் துஞ்சும் அழகை விழிக்க
கெஞ்சும் என் தமிழ்
இக்கல்லுளி மங்கந்தான்
நெடுநாள் என்னோடு கழித்தவன்
சிரிப்பான்
காதலிப்பான்
கோபிப்பான்
அழுவான்
எரிந்து விழுவான்
இப்போதெல்லாம்
செய்வான் என்பதை விட
செய்தான் எனச்சொல்லல் பொருந்தும்
தோற்று சலித்த நம் தலைவன்
ஏதோவோர் சீன நூல் படித்து
தெளிந்து சயனிக்கிறான்
என்ன மண்ணோ
சென்னோ ஏதோ அதன் பெயர்

அந்த அறையில்

உத்தரத்தில் ஊசலாடுமவனை
தயவு செய்து தொல்லை செய்யாதீர்
தயவு செய்து!
உலகம் பிடிக்காமல்
கயிற்றில் தொங்கியவன்
அமைதிக்காய் ஆடிக்கொண்டிருக்கின்றான்
அறுந்து விடும் அக்கயிறு
அறும் வரை தொல்லை செய்யாதீர்
அறுந்து விழுந்ததும்
கழுத்தைப் பார்க்காமல்
மனத்தைப் பாரும்
அங்குதான் அதிகம் காயப்பட்டிருக்கும்!

வேறாரோ இருப்பதாய் தானே
இடக்கரடக்கல் இயற்றிச் சொன்னீர்!

அது அப்படித்தான்

என் அவர்கள் அல்லது
என் இவர்கள்
தடாகத் தாமரையின்
தளரா இலைமேல்
நின்று நிலை கொளாது
தடுமாறும் தண்ணீர் துகள்கள்!

புதிதாய் அவதரிப்பதும்

அவதரித்து மாய்வதும்
மாயாது திரிபதும்
அவர் வேலை!
அடிக்கடி செத்து
அடிக்கடி பிறப்பார்கள்!
வேறோர் முறை வந்தால்
வேறரோ இருப்பார்கள்!

ஒருக்கிண்ணப் பாலை

ஒருமித்துக் குடித்தப் பூனை
கருவாட்டுப் பானை நோக்குவதாய்
குறு குறுவென பார்க்கிறீர்
நோக்கம் அறிவேன்!

என்னைப்பற்றி சொல்லவில்லையா?

ஹா ஹா
ஒரு வகையில் சொல்லிவிட்டேன்
நான் தான் இவர்கள்!
விளங்கக் கூறின்
தேவையான போது
தேவையான இவரணிந்துக் கொள்வேன்!

அஃது நிமித்தமே
என்னவரென்று அவர் விழித்தேன்!
புரிந்ததா?

நன்றி!

– அன்புநாதன் ஹஜன்

‘நான்
என் சூழல்
என்னை மாற்றியிருக்கிறது மாற்ற விழைகிறது.
நானும் போக்கிற்காய் மாறிக்கொண்டேதான் இருக்கிறேன்.
என்னோடு என் அவர்கள் அல்லது என் இவர்களும் மாறிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
நாங்கள் எங்களை பிரதிபலித்து
நாங்கள் எங்களை மருவி
நாங்கள் எங்களை ஆசுவாப்படுத்திக் கொள்கிறோம்.
இக்கவிதை எங்கள் நிலைப்பாட்டைப் பற்றிய ஒரு படைப்பு.’

🎭🌍
வாசிக்க இக்கோர்ப்பினை தொடரவும் ♥️.
https://hajananbunathan.blogspot.com/2022/10/blog-post.html

மனித எண்ணங்களை மதிப்போம் மன நலம் காப்போம்!

ஒருவர் தேவையற்ற மனக்குழப்பங்கள், நடந்த பிரச்சினைகள் அதனால் ஏற்பட்ட மன அழுத்தங்களின் காரணமாக அதிகமாக யோசிக்கும் போது அவர்களின் மனநலன் பாதிக்கப்படுகிறது. இது ஒரு வகையான மோசமான நோயாகும். ஒருவருக்கு ஏற்படும் மனநல பிரச்சினை அவரின் பசி, தூக்கம், நிம்மதி, சிரிப்பு, அழுகை, குணம் என அனைத்தையும் பாதிக்கிறது. ஆகவே ஒரு மனிதனுக்கு தன்னுடைய உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அவனுடைய மனநலனும் முக்கியமாகின்றது.

இதனை வலியுறுத்துவதற்காகவே ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 10 ஆகிய இன்றைய தினத்தில் உலக மனநல தினம் நினைவுகூரப்படுகிறது. உலகெங்கிலும் மனநல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வை ஏற்படுத்தவும், இந்த சமூதாயத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் மனநலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இன்றை தினத்தின் நோக்கமாகும். இதனை கருத்திற்கொண்டு எமது அன்பான வாசகர்களுக்கு மனநலன் தொடர்பாக மனதில் எழும் கேள்விகளுக்கும்,குழப்பங்களுக்கும் தீர்வை வழங்கி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இக் கட்டுரை உதவியாக இருக்கும்.

மனநல பாதிப்பு என்றால் என்ன?
ஒருவருக்கு ஏற்படும் உள ரீதியான மாற்றங்களும் அதனால் ஏற்படும் உடல் ரீதியான நடவடிக்கைகளும் மன நல பாதிப்பு என்றாகிறது. எவர் ஒருவர் தனது சுய ஆற்றலை அறிந்து, அவரது அன்றாட வாழ்வில் ஏற்படும் மன கசப்புகளை சமாளித்து, ஆக்கப்பூர்வமாக உழைத்து, சமுதாயத்தில் சிறந்த பங்கினை வகிக்கின்றாரோ அவரே மனநலனுடன் இருப்பவர் என்பது உலக சுகாதார அமைப்பின் கருத்து. இதற்கு மாறாக ஒருவரின் செயல்கள் இந்த சமூதாயத்திற்கு புறம்பாகவோ, சக மனிதனுக்கு புறம்பாகவோ காணப்படுமாயின் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அர்த்தமாகிறது.

ஒருவருக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் அவரை மனநலமற்ற நோயாளியாய் மாற்றுகிறது. இதனை அலட்சியப்படுத்தினால் ஆபத்து தான்.
ஒருவருடைய மனநலன் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
நான் ஏற்கனவே சொன்னது போல ஒருவருக்கு உளரீதியாக ஏற்படும் அளவுக்குமீரிய சிந்தனைகள் தான் அவருக்கு மன நல பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்தோடு கசப்பான சம்பவங்கள், துஷ்பிரயோகங்கள், அதிர்ச்சி, சமூகத்தில் புறக்கணிப்பு, சமூக நிகழ்வுகள்,வறுமை, தனிமை,பாகுபாடு, சமத்துவமின்மை, நீண்டகாலமாக தீராத பிரச்சினைகள், சோகம்,வெறுப்பு, அதிகமான பயம், அளவு கடந்த யோசனைகள், அதிக நேரம் கைபேசி பயன்படுத்துவது, தூங்கமல் அதிக நேரம் விழித்திருப்பது, சரியாக சாப்பிடாதது இப்படி ஏகப்பட்ட காரணிகள் ஒருவரின் மனநலனை பாதிக்கின்றன.

இதனால் உடல்,உள நோய்கள், தூக்கமின்மை, பசியெடுக்காமை, வேலைகளை ஒழுங்காக செய்யமுடியாமை போன்ற பல அசம்பாவிதங்களை அனுபவிக்க நேரிடும்.
மனநல பாதிப்பால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் யார்?

உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் மனநல நோயால் பாதிக்கப்படுகின்றனர். இப்படிப் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பான்மையான பிரிவினர் குழந்தைகளும், வயதானவர்களும் தான். குழந்தைகளும்,வயதானவர்களும் கிட்டதட்ட ஒரே மாதிரியானவர்கள். அவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பது அவர்களின் நடவடிக்கையிலேயே தெரிந்துவிடும்.
வளரிளம் பருவத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறனும்,ஆற்றலும் வளர்ந்துகொண்டிருக்கும். அப்படிப்பட்ட இந்த பருவத்தில் அவர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்பானது அவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கும். குறிப்பாக சொல்லபோனால் இன்று நவீனமுறை கற்றல் என்ற பெயரில் அதிகளவான நேரம் கைபேசிகளை குழந்தைகள் பயன்படுத்துவதால் அவர்கள் அதற்குள் கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாகிக்கொண்டிருக்கின்றனர் என்பது பெற்றோர்களாகிய நீங்கள் அறிய வேண்டிய ஒன்று.

கைபேசிகளுக்கு அடிமையாவதால் குழந்தைகளின் கற்பனைத்திறன்,பேச்சுத் திறன், கற்றல், ஆற்றல் போன்றவை முடக்கப்படுகின்றன. இதனால் அவர்களுடைய குணாதிசயங்களில் மாற்றம் ஏற்படுகிறது. உதாரணமாகச் சொன்னால் ஒரு குழந்தை அதிக நேரம் கைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் போது அதை பறித்து வைத்து படி யென்று சொன்னால் திடுக்கென்று கோபம் வந்துவிடும். இது போன்ற சம்பவங்கள் பலர் வீட்டில் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆகவே குழந்தைகளின் மனநலனின் கவனம் செலுத்தவேண்டியது மிக மிக முக்கியம்.
வயதானவர்களைப் பொருத்தமட்டில் மிக இலகுவாகவே இவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு விடுகிறது. முதுமை என்பது காலங்களை கடந்து வந்து கடைசி காலத்தில் எஞ்சியிருக்கும் சொற்ப காலங்களை மகிழ்ச்சியாக எண்ணி வாழ கிடைத்தது.
இருந்தாலும் வயது முதிர்வு காரணமாக நோய்கள், உடல் மற்றும் உள ரீதியான சோர்வுகள் ஏற்படும். இது இயல்பானதொன்றே. இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்பானது பெரும்பாலும் சுற்றி இருப்பவர்களினாலேயே ஏற்படுகிறது. வயதானவர்களை கவனிக்காமல் அவர்களை தனித்துவிடுதல், அவர்கள் பிள்ளைகளால் கைவிடப்படுதல், அவர்களை இல்லங்களில் கொண்டு சேர்த்தல், மனம் நோகும்படி பேசுதல், அவர்களை புறக்கணித்தல் போன்ற நடவடிக்கைகளினால் மூத்த குடிமக்கள் மனநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு உடல் சம்பந்தமான வேறு நோய்கள் ஏற்பட்டு வாழ்க்கை மீதான நம்பிக்கை இழக்கப்படுகிறது. ஆகவே குடும்பத்தினர் அனைவரும் இது பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும்.

மனநலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம்?
உடல் நோய் என்பது உடலோடு சம்பந்தப்பட்டது. கை வலி, கால் வலி, இடுப்பு வலி இவற்றையெல்லாம் மிக விரைவிலேயே குணப்படுத்திவிடலாம். ஆனால் உள நோய் என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. இதனை அலட்சியம் செய்தால் பின்னாளில் ஏற்படும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு நாம் முகங்கொடுக்க நேரிடும். இதனை குணப்படுத்த முடியாமலும் போய்விடும். ஆகவே மனநலன் என்பது அவசியமாக நாம் கருத்திற்கொண்டு பாதுகாக்க வேண்டிய ஒன்றாகும். நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நமது சிந்தனை, உணர்வுகள், நடத்தை ஆகியவற்றை தீர்மானிப்பது மனநலம் தான். உடல் நலம் பாதிக்கப்பட்டால் மனநலன் பாதிக்கப்படும்.

ஆது போலத்தான் மன நலன் பாதிக்கப்பட்டால் உடல் நலமும் பாதிக்கப்படும். மூளை பாதிப்பு, இதய நோய்கள், ப்ரஸர் போன்ற நோய்கள் இதன் மூலம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே இதனை அலட்சியப்படுத்த முடியாது.
தற்கொலை செய்து கொள்வது கூட மனநல பாதிப்பின் உச்ச கட்டமாகும். நொடிக்கு ஒருவர் எங்கோ தற்கொலை செய்துகொண்டுதான் இருக்கிறார். வருடத்தில் 8 லட்ச பேர் தற்கொலை செய்து தன்னுயிரை இழக்கின்றனர். ஆதாவது மன நோய் ஒருவர் தற்கொலை செய்யுமளவிற்கு தீவரமான நோய் என்பதே உண்மை. ஆகவே மன நல நோய் குறித்து மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

மனநல பாதிப்பை எவ்வாறு குணப்படுத்துவது?
மனநல நோயால்; பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது சாலச்சிறந்தது. உளவியல் ஆலோசகர்கள், உளவியலாளர்கள், மன நல மருத்துவர்கள், சிறப்பு பயிற்சியாளர்கள் போன்ற மனநல பணியாளர்களை அணுகுவதன் மூலம் மனநல பாதிப்பை குறைக்கலாம்.
உளவியளாளர்கள் உளவியல் ஆலோசனைகளை வழங்குவார்கள். உளவியல் ஆலோசனை என்பது ஒரு கலந்துரையாடல் போன்றது. ஒவ்வொரு மனிதனும் அவரவர் பிரச்சனைகளை எதிர்கொள்ள வலிமையுள்ளவர்கள். அவ்வலிமையை மேலும் பலப்படுத்துவதே உளவியல் ஆலோசனையின் குறிக்கோள் ஆகும். நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தைரியமாக முகங்கொடுத்து அந்த பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக்கொள்ள செய்யப்படும் உளவியல் பூர்வமான உதவியையே உளவியல் ஆலோசனையின் பயனாகும்.

உளவியலாளர்களை சந்திக்க செல்வதென்பதில் பலருக்கு தயக்கமிருக்கும். நம்மை பைத்தியக்காரர்கள் என்று ஊர் சொல்லும் என்றெல்லாம் கூட நினைப்பர். உண்மையில் யார் யாருக்கு தங்களுடைய மனநிலை பாதிப்பை குறைப்பதில் அக்கறை இருக்கிறதோ அவர்கள் இதனை நிச்சயம் புறக்கணிக்கமாட்டார்கள். ஆகவே வருடத்திற்கு ஒருமுறையாவது மனநல ஆலோசகரிடம் பரிசோதனை மேற்கொள்ளவும்.
வரும் முன் காப்போம் என்பதற்கு இணங்க ஒருவருக்கு மன நல பாதிப்பு ஏற்படாமல் இருக்க பின்வரும் நடவடிக்கைகளை பின்பற்றலாம்.

நல்ல உறக்கம்
பிரச்சினைகளை யோசித்து தூங்காமல் விடிய விடிய விழித்திருப்பது உடலையும்,உள்ளத்தையும் பாதிக்கும். நிம்மதியான தூக்கமே பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். ஆகவே நேரத்திற்கு தூங்கி நேரத்திற்கு எழும்புவதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஆரோக்கியமான உணவு
மன அழுத்தங்களினால் சிலர் உணவை புறக்கணிக்கின்றனர். இது முற்றிலும் தவறு. ஏதாவது பிரச்சினை வந்தால் அதை எதிர்கொள்ள முதலில் உடலில் தெம்பு இருக்க வேண்டும். அதற்காகவாவது நாம் கவலைகளை புறந்தள்ளிவிட்டு நன்றாக சாப்பிடவேண்டும்.’உணவே மருந்து’ என்பதால் ஆரோக்கியமான உணவுகளை அவசியம் மூன்று நேரமும் உட்கொள்ளவேண்டும்.உடற்பயிற்சி
உள்ளத்தை பலப்படுத்த உதவுவது உடற்பயிற்சி. நீங்கள் உடற்பயிற்சி செய்யும் பொழுது உங்கள் கவனம் முழுவதும் அதில் தான் இருக்கும். வேறு பிரச்சினைகளும் எந்த சிந்தனைகளும் உங்களுக்கு வராது. உடலை மட்டுமல்ல உடற்பயிற்சி மனதையும் பலப்படுத்தும் முக்கிய பகுதியாகும்.

நேர்மறையான எண்ணங்கள்
என்னதான் பிரச்சினைகள் நம்மை சுற்றி நிகழ்ந்தாலும் எப்போதும் நேர்மறையான கருத்துக்களை உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். இவ்வாறு நேர்மறையாக சிந்திப்பதால் நிச்சயம் உங்கள் எண்ணத்திற்கு அனைத்துமே  நல்லதாகத்தான் நடக்கும்.

மனம் விட்டு பேசுங்கள்
ஒரு பிரச்சினையை மனம் விட்டு பேசும் போது நிச்சயம் அதற்கு ஒரு தீர்வு காணலாம். நம் மனதிற்கு பிடித்தவர்களிடம் நம் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ளும்போது நம் மனதில் உள்ள சுமைகள் குறையும். ஆகவே மனம் விட்டு பேசுவதென்பது மனநலனை ஒரு விதத்தில் பாதுகாக்கும்.

.

பிம்பங்களற்ற தனிமை – ‘எல்லோருமே இருக்கிறார்கள்’

ஒவ்வொரு நொடியும்
ஊசியால் குத்திக்கொல்லும்
இப்படியொரு வேதனையை
தந்தவர்களைதான் நேசித்தோம்
என்பது காலம் கடந்த ஞானம்!

எல்லோருமே இருக்கிறார்கள்,
ஒரு நாளில் ஒரு ஆளாவது
நலம் விசாரிக்கிறார்கள்,
ஒரு நாளில் ஒரு ஆளாவது
குறுஞ்செய்தி அனுப்பிவிடுகிறார்கள்,
இதெல்லாம் நான் தனிமையில்
இல்லை என்பதற்கான சாட்சிகள்!!

இருந்தும்,
ஏன் இப்படியொரு தனிமை
என்னை மூடிக்கொண்டதாய்
என்னை நானே ஏமாற்றுகிறேன்?
வெறுமையாக உள்ள
என் விரல்களின் இடுக்குகளை
ஏன் பார்த்துக் கொண்டே
காலம் கடத்துகின்றேன்?

குழப்பங்களில் மட்டுமே
என் வாழ்க்கை நகர்கிறது,
என்னை குழப்பங்களுக்குள்
திட்டமிட்டு தள்ளியவர்கள்
என்னவோ நிம்மதியாக வாழ்வை
நகர்த்திகின்றார்கள்!!

அஹ்ஸன் அப்தர்

‘வித்துக்கள்’ – நாடி Review

பதினாறாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்து சங்கிலி மன்னனால் சுமார் 700 கத்தோலிக்கர்கள் படுகொலை செய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தை திரைப்படமாக தந்திருக்கிறது இலங்கைத் திரைப்படமான வித்துக்கள். மூன்று மொழிகளிலும் வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படம் பதினாறாம் நூற்றாண்டுக்குரிய சூழல் அமைப்புடன் கடும் மனித உழைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் பரதவர் சமூகத்தைச் சேர்ந்தவர்ளே இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட கத்தோலிக்க சமூகத்தினவர் ஆவர்.
போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்னர் சமூகத்தின் கீழ் சாதியினராக நடத்தப்பட்ட இந்த மக்களுக்கு பொதுவெளியில் நடமாட மற்றும் இந்துக்கோவில்களுக்குள் சென்று கடவுளை வணங்க அனுமதி இருக்கவில்லை. சமூகத்தில் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் இருந்த மக்களின் அவல நிலையை திரைப்படத்தில் சிறந்த முறையில் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். மேலும் அன்பும் ஆதரவும் சமவுரிமையும் கிடைத்த கத்தோலிக்க சமயத்தை பயபக்தியுடன் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் காட்சிகள் சிறந்த முறையில் வடிவமைக்பட்டுள்ளன.

சஞ்சய நிர்மல் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் பாதிரியர் பிரசாத் ஹர்ஷன் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திரைப்படத்தில் மறைந்த நடிகர் தர்ஷன் தர்மராஜ் யாழ்ப்பாணத்து சங்கிலி அரசனாக நடித்திருப்பதுடன் யாழ்ப்பாணத்து இளவரசியாக நிரஞ்சனி ஷன்முகராஜா நடித்துள்ளார். கிங் ரத்னம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர் தர்ஷன் நடித்த இறுதித் திரைப்படமாக இந்தத் திரைப்படம் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

பதினாறாம் நூற்றாண்டு எனும்போது குறித்த பகுதியை நியாயப்படுத்தும் வகையில் அவர்களுடைய ஆடை மற்றும் வாழ்வியல் அம்சங்கள் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பரதவர் சமூகத்திற்கு இருந்த உணவுப்பஞ்சம் மற்றும் அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் என்பன படத்தில் காட்டப்பட்டுள்ள விதத்தைத் பார்க்கும்போது கிட்டத்தட்ட உண்மையாக நடந்த மன்னார் படுகொலை சம்பவத்தை ஒப்புவிப்பது போலவே இருக்கிறது.

இலங்கையின் ஒட்டுமொத்த கலைஞர்களிலும் மிக முக்கியமான கலைஞரான தர்ஷனின் இழப்பு உள்நாட்டு சினிமா துறையினரை ஆழ்ந்த கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது. தமிழ் மக்களின் அன்பைப் பெற வேண்டும் என்ற பேரவா தர்ஷனுக்கு இருந்ததாகவும் தான் ராஜாவாக நடிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு என்றும் வித்துக்கள் திரைப்படத்தில் யாழ்ப்பாணத்து இளவரசியாக நடித்துள்ள புகழ்பெற்ற நடிகை நிராஞ்சனி ஷன்முகராஜா தெரிவித்தார்.

படத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய நிரஞ்சனி “இறந்து சாம்பலாகிய நடிகர் தர்ஷன் வித்துக்கள் என்ற இந்தத் திரைப்படத்தின் மூலம் இன்று மீண்டும் பிறந்துள்ளதாகவே நான் கருதுகிறேன். அவரின் புகழை இன்று அவர் இறந்த பிறகே பேசுகின்றார்கள். இந்தத் திரைப்படத்தின் மூலம் தர்ஷனின் புகழ் மேலோங்கப் போகின்றது. ஆனால் அதைப் பார்க்க தர்ஷன் இன்று உயிரோடு இல்லை” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் பேரும் புகழும் நல்ல அங்கீகாரமும் கிடைக்கின்ற ஒரு நாட்டில் சிறந்ததொரு கலைஞனாக மீண்டும் தர்ஷன் பிறக்க வேண்டும் என்று கண்ணீருடன் கூறினார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐந்தாம் மஹிந்தன் கதாபாத்திரத்தில் நடித்த ஷாம் பெர்ணாண்டோ இந்தத் திரைப்படத்தில் பாதிரியராக நடித்துள்ளார். இந்தியாவின் கொச்சியில் இருந்த கத்தோலிக்க சமயத்தை மன்னார் மக்களுக்கு எத்திவைக்கும் கதாபாத்திரமாக அவர் இருக்கிறார். கதையின் உயிரோட்டத்தை தாங்கிச் செல்லும் ஷாம் பெர்ணாண்டோ உள்ளிட்ட மூன்று பாதிரியர் கதாபாத்திரங்கள் தமது பணியை சிறப்பாகச் செய்துள்ளனர். திரைப்பட பாணி மற்றும் கதை சொல்லும் அமைப்பைத் தாண்டி கதைக்களம் சிறந்தமுறையில் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையை குடியேற்ற நாடுகளாக மாற்றி அந்நியர்கள் நம் நாட்டு பிரஜைகளுக்கு செய்த அட்டுழியங்களையே நமது வரலாற்று கல்வி முறைகள் அடிக்கோடிட்டு காட்டியுள்ளன. அதற்கு மாற்றமாக இந்தத் திரைப்படத்தில் நம்நாட்டு மன்னர் செய்த ஒரு மாபெரும் அநீதியை எடுத்துக் காட்டுகின்றது.

இந்து சமயத்தில் தமக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்காத சந்தர்ப்பத்தில் கத்தோலிக்க சமயத்தை ஏற்றுக்கொண்ட மக்களின் சமய பக்தி மிகச் சிறப்பாக வடிவமைக்கப்ட்டுள்ளது. வலுக்கட்டாயமாக சிலையினை வணங்கச் சொல்லும்போது தொடர்ந்து நடைபெறும் விடயங்களை கண்களை கல்லாக உறைய வைக்கிறது. இறுதியில் கொன்று குவிக்கப்பட்ட மனிதப் பிணக்குவியல்களின் காட்சிகள் இதயத்தை கண்ணீரால் நனைத்து விடும்.

சமயங்கள் தொடர்புபடும் இந்தத் திரைப்படத்தில் எந்தவொரு இடத்திலும் இந்து மற்றும் கத்தோலிக்க சமயங்களுக்கு இழிவை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்படாமல் இருந்தது திரைப்படத்தின் பலம் என்றே கூற வேண்டும். யாழ்பாணத்து இளவரசி கத்தோலிக்க சமயத்தினால் கவரப்படுதல் மற்றும் இந்து சமயத்திற்கும் கத்தோலிக்க சமயத்திற்கும் இடையில் உள்ள ஒற்றுமைகள் குறித்து தனது தங்கையிடம் உரையாடும் காட்சிகள் இதற்கு சான்று ஆகும்.
வித்துக்கள் திரைப்படம் சொல்ல மறந்த வரலாறு ஒன்றை தெளிவுபடுத்தும் ஒரு திரைப்படம். படத்தில் என்டர்டெய்ன்மென்ட் என்பதைத் தாண்டி கத்தோலிக்க பிரஜைகளுக்கு சங்கிலி மன்னன் செய்த அநீதிகளை நூற்றாண்டுகள் கடந்தாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்ற முயற்சி பாராட்டத்தக்கது. இவ்வாறே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிலும் 300 இற்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்கள் கொல்லப்பட்டார்கள். மன்னார் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்ட அத்தனை கத்தோலிக்க பிரஜைகளுக்கும் நாடியின் ஊடகக்குழு சார்பாக அஞ்சலிகள்.

வளையல்களும் மருத்துவமும்!

கையின் வளையல் காது குளிர கானம் பாட!

வளையல்கள் அணிவது என்பது பெண்களுக்கு பிடித்தமானவொன்று. தவழும் குழந்தை முதல் தள்ளாடும் பாட்டி வரை அனைவருமே அணியும் ஆபரணமாகத் திகழ்கிறது இந்த வளையல்கள். அதிலும் இளம் பெண்களுக்கு இன்றியமையாத அலங்கார ஆபரணமாகவும் வளையல்கள் திகழ்கின்றன. சின்ன பெண்கள் குமரிப் பெண்கள்,இளம் பெண்கள், திருமணமான பெண்கள் என அனைவரும் கொஞ்சம் ட்ரெடிசனலாக ஒரு சாரியோ, தாவனிப்பாவடையோ அல்லது ஒரு சல்வாரோ அணிந்தால் அதற்கு பொருத்தமான வளையல்கள் அணிவதை எப்போதும் மறக்க மாட்டார்கள்.

வளையல்கள் அணியும் இந்த வழக்கமானது பழங்காலத்திலிருந்து பண்பாடாய் பாரம்பரியமாய் பின்பற்றிவரும் ஒரு பழக்கமாயிற்று. ஆரிய நாகரிக காலந்தொட்டு எகிப்தியர்கள், கிரேக்கர்கள்  பழங்குடி மக்களும் தங்களுக்கேற்றாற் போல் வளையல்களை அணிந்துள்ளனர் என்பது ஒரு முக்கிய கருத்தாகும்.

பொதுவாக சுமங்கலி பெண்கள் ஒவ்வொருவரின் கையிலும் வளையல் பூட்டியிருக்க வேண்டுமென்பது நம் தாத்தா பாட்டி காலத்திலிருந்து செவிவழி கேட்டுவந்த ஒரு மரபாயிற்று. ஒரு இல்லாள் காப்பு பூட்டிய கையோடு பானை சோற்றை குடும்ப உறுப்பினர்களுக்கு பகிருவாள் என்றால் அந்த வீட்டில் அன்னத்திற்கு பஞ்சம் இருக்காது என்பர். ஆகவே வளையல்கள் அணிவது அன்று முதல் இன்று வரை நடைமுறையில் இருக்கும் கலாச்சாரம் என்பதை நாம் மறுக்கமுடியாது.

வளையல்கள் பல்வேறுபட்ட பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் வகைகள் ஏராளம். தங்க வளையல், வைர வளையல், பிளட்டின வளையல், மரகத வளையல், முத்து வளையல், பவள வலையல், நவரத்தின வளையல், வெள்ளி வளையல், அலுமினிய வளையல், பித்தளை வளையல்,அரக்கு வளையல், ரப்பர் வளையல், மர வளையல், கம்பி வளையல், கண்ணாடி வளையல்,கடாஸ்,கங்கனங்கள்,பட்டை வளையல், மெஷின் கட்டிங் வளையல்,கெட்டி வளையல்,சிமெரட்ரிகல் வடிவ வளையல் என இப்படி வளையல்களின் வகைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.நாம் அணியும் வளையல்களின் வகைகளைத் தாண்டி நமக்கே தெரியாமல் இருக்கும் வளையள்களின் வகைகள் இன்னும் ஏராயமாக இருக்கின்றன என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். இவற்றில் சிலவற்றை நாம் அறிந்திருக்கவும்கூடும்.அணிந்திருக்கவும் கூடும்.
அழகு,அலங்காரம், ஆபரணம் என்பதை தாண்டி வளையல்கள் அணிவதால் பெண்களுக்கு பல மருத்துவ குணநலன்கள் கிடைக்கின்றன என்பது அறிவியல் கூறும் உண்மை.

வளையல்களும் மருத்துவமும்.

வளையல்கள் அணிந்ததும் அவை நாடி நரம்போடு உரசும்போது உடலின் ரத்த ஓட்டமும் இதயத் துடிப்பும் சீராக நடைபெறும்.
வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ள எழும்பும் ஓசையானது மனதிற்குள்ளும் நம்மை சுற்றியும் எப்போதும் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி மூளையை சுறுசுறுப்பாக செயற்பட வைக்கிறது.

(வளையல்களின் தயாரிக்கப்பட்ட பொருளை அடிப்படையாக கொண்டே வளையோசை அமைகின்றது. தூய உலோகங்களால் தயாரிக்கப்படும் வளையல்கள் ‘கல கல’ வென ஓசை எழுப்புவன. செயற்கை பொருள் வளையல்கள் வேறுவிதமான ஓசை எழுப்புவன. உதாரணமாக தங்க வளையல்கள் எழுப்பும் ஓசைக்கும் பிளாஸ்டிக் வளையல்கள் எழுப்பும் ஓசைக்கும் வித்தியாசமிருக்கிறது.இதனை பொருத்தே அதன் வளையோசை அமைகிறது.)

கைநிறைய வளையல்கள் அணிவதால் ரத்த அழுத்தம் ஏற்படாது. மேலும் மாதவிடாய் காலம் சீராக அமையும்.

செம்பு வளையல்கள் உடலின் கொழுப்பை குறைக்கவல்லன. பருமனானவர்களுக்கு இவ்வகை வளையல்கள் பொருத்தமானது.

கணமான வளையல்களை அணிவதால் கையிலிருக்கும் அழுத்தப்புள்ளிக்கு நன்மை தரும்.

தங்க வளையல்கள் அணிவதால் இயற்கையாகவே உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

கண்ணாடி வளையல்கள் அணிந்துகொள்வது பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

கண்ணாடி வளையல்களும் கர்ப்பிணி பெண்களும்

கண்ணாடி வளையல்கள் அதிக ஓசை எழுப்புவன. பொதுவாக இதனை கர்ப்பிணிப் பெண்கள் வளைகாப்பின் போது அணிந்துகொள்வார்கள்.இதனால் வயிற்றில் சுமக்கும் குழந்தைகளின் காதுகளுக்கு இந்த கண்ணாடி வளையோசைகள் கடத்தப்படும். அந்த ஒலியை எப்போதும் குழந்தைகள் கேட்டுக்கொண்டிருப்பதால் அதன் புலன்கள் அசைந்த வண்ணமிருக்கும். கர்ப்பப்பைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை இந்த வளையல்கள் அதிகரிக்கும். குழந்தையின் மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீக தன்மை மற்றும் சைதன்யம் போன்ற தன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன.

வளையல்களைப் பற்றி மேலும் சில..

வளையல்கள் பொதுவாக வட்ட வடிவிலேயே காணப்படும். இருப்பினும் தற்போது நீள்வட்ட வடிவம், சதுர வடிவம் மற்றும் ஸ்க்ரு போட்டு மூடும் உருளை வடிவமென பல்வேறு வடிவமைப்புகளில் வளையல்கள் சந்தையில் கிடைக்கின்றன. என்றபோதும் வட்ட வடிவ வளையல்கள் அணிவதே பராம்பரியமும். நம் கைக்கு அழகும் கூட.
பாரம்பரிய வளையல்கள் தற்கால நவீன ரசணைக்கேற்ப மினுமினுக்கும் கல் பொதிக்கப்பட்டு, கண்ணாடிச் சில்லுகள், மணிகள், ஜிமிக்கி, ஜிகினா போன்றவற்றை இணைத்து அலங்கரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுகின்றன. தற்காலங்களில் இரும்பு அல்லது ஸ்டீலில் செய்யப்பட்ட கடா வளையல்களையே பெரும்பாலானோர் விரும்பி அணிகின்றனர்.

அணியும் ஆடைக்கு ஏற்றவாறு ஒரே நிறத்தில் அதிக எண்ணிக்கையிலான வளையல்கள் அணிவதும் இப்போது வழக்கத்தில் உள்ளது. இவை பெரும்பாலும் பிளாஸ்டிக் வளையல்கள் தான். ஒற்றை நிறத்தில் இது போன்ற வளையல்களை கையில் அடுக்கடுக்கடுக்காக போட்டால் பார்ப்பதற்கு எடுப்பாக இருக்கும். பார்க்க அழகாகவும்,கண்களை கவரும் விதமாக இருந்தாலும் பிளாஸ்டிக் வளையல்கள் அணிவதால் பயனேதும் இல்லை.

வளையல்களுக்கு பிரசித்தமான நாடு இந்தியா. உலகிலேயே அதிகளவிலான வளையல்கள் உற்பத்தியாகும் இடம் இந்தியாவின் உத்திர பிரதசத்திலுள்ள மொராதாபாத் நகரம் தான்.


ஆசிரியர் பணியே அறப்பணி.! அதற்கே உன்னை அர்ப்பணி.!

ஒரு மனிதனுக்கு கல்வியைப் புகட்டி அவனின் அறிவுக்கண்ணை திறப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள். இதனால் தான் ‘எழுத்தறிவித்தவன் இறைவன்’ என்று ஒளவையும் சொன்னார்.மாதா,பிதா,குரு,தெய்வம் என்று நாம் கற்ற கோட்பாடு கூட குருவிற்கு பின் தான் தெய்வம் என்ற உண்மையை எடுத்துரைக்கிறது.
தான் கற்றதை பிறருக்கு கற்பித்தல் என்றவொரு உயர்ந்த நோக்கத்தோடு சேவை செய்யும் ஆசிரியர் சேவை என்பது மகத்தானதொரு சேவை. கல்வியெனும் கருவியை இயக்க ஆசான் எனும் காரண கர்த்தா தேவை. இந்த சமூகத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் மருத்துவரோ,பொறியியலாளரோ விஞ்ஞானியோ,மேதையோ வக்கிலோ எவராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் உருவாக்குவது ஆசிரியர் எனும் அந்த கர்த்தா தானே.

ஒரு நல்ல ஆசான் ஒரு நல்ல மாணவனை மட்டுமல்ல நாட்டிற்கு ஒரு நல்ல பிரஜையை உருவாக்கி கொடுக்கிறார். பாமரனைக் கூட பண்டிதனாக்கும் திறமை ஆசிரியருக்குண்டு என்பதில் மாற்று கருத்து இல்லை.
புத்தகத்தில் இருந்து கற்றுக்கொள்வதை விட ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொள்வதே பலருக்கும் புரியும். இதைத்தான் ‘குருவின் அருளால் சீடன் நூல்களின்றியே அறிஞன் ஆகிறான்..’ எனும் சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியானது அழகாக எடுத்துரைக்கிறது.ஒவ்வொரு சிறுவனும் நாளைய இளைஞனாக ஒவ்வொரு இளைஞனும் நாட்டின் தலைவனாக ஆசிரியர் எனும் ஊன்றுகோல் அவசியம்.கல்வி எனும் உளிகொண்டு மாணவரெனும் கல்லை செதுக்கி எடுத்து சிற்பமாக்கும் சிற்பிகளே ஆசிரியர்கள். தாயின் கருவறையில் நம் வாழ்க்கை தொடங்கினாலும் ஆசிரியரின் வகுப்பறையிலேயே நம் வாழ்க்கை செதுக்கப்படுகின்றது. அங்கே தான் நாம் உருவாக்கப்படுகிறோம். தாய்க்கு தன் மகன் மட்டுமே பிள்ளையென்றால் ஆசிரியருக்கு வகுப்பறையிலுள்ள அனைத்து மாணவருமே தம் பிள்ளைகள் தான். ஒவ்வொரு மாணவனும் தன் நாளைத் தொடங்குவது பள்ளிப் படிப்பில் தான். ஆசிரியர் இல்லாதவிடத்து பள்ளிகளுக்கு இடமேது?. ஆக ஒரு மாணவன் பள்ளியில் பயில முதற் காரணம் ஆசான்கள் தான்.

ஒரு பிள்ளை சிறந்தவனாக பெற்றோரின் அன்பும் கண்டிப்பும் அவசியம். அதுபோலவே ஆசிரியர்களும். அவர்கள் தாயைப்போல அன்பு காட்டுவதுண்டு. தந்தையைப்போல கண்டிப்பதுமுண்டு. ‘முடியைப் பெற்றவன் அரியணையேறுவான். அடியைப் பெற்றவன் மேடையேறுவான் என்பது என் கருத்து.அதற்காகத்தான் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்கின்றனர். அவர்கள் அறிவுரைகள் கூறுவதும, தட்டிக்கொடுப்பதும் தவறு செய்தால் எம்மை கண்டிப்பதும் நம் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றுவதற்கேயாகும். மாணவர்களின் அறிவுப்பசியைத் தீர்க்க ஆசிரியர்கள் ஆற்றும்சேவை அளப்பரியது.

ஆசானை மதிக்கத் தெரிந்தவன் நல்லொழுக்கம் உடையவனாக போற்றப்படுகிறான். குருவை நிந்தனை செய்பவன் தான் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் தாழ்ந்தவன் ஆகிறான். ஒரு மாணவனின் திறமையை அவனால் கண்டறியமுடியாமல் போகுமிடத்து அம் மாணவனிற்கு கல்வி போதிக்கும் ஆசிரியரே அதனையறிந்துகொண்டு அவன் திறமையை வளர்க்க அவனை ஊக்கப்படுத்துகின்றார். அவனை மென்மேலும் உயர்ந்த இடத்தை அடையச் செய்கின்றார். அதுமட்டுமன்றி கல்வியையும் மாணவர்களுக்கு புரியும்படி எளிமையான முறையில் போதித்து மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்துகின்றார்.

தம் வாழ்நாளை மாணவர்கள் முன்னேற்றத்திற்காக செலவிடும் ஆசிரியர்தொழிலிற்கும் ஆசிரியர்களுக்கும் நாம் என்றும் தலைவணங்கவேண்டுமல்லவா? இதனை வலியுறுத்தியே ஆசிரியரியர்களின் அர்ப்பணிப்பை போற்றி அவர்களுக்கு நன்றிசெலுத்தும் முகமாக உலகெங்கும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு நாடுகளுக்கும் இத்தினமானது வேறுபடுகிறது என்றாலும் இலங்கையில் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதியான இன்று தான் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு சாமான்ய மனிதனையும் சாதனையாளருக்கும் அனைத்து ஆசிரியர பெருந்தகைகளுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

அப்படி என்னதான் இருக்கு இந்த Balmain T-shirt ல ?

அப்படி என்னதான் இருக்கு இந்த Balmain T-shirt ல ?

பொதுவாக பிரபலங்கள் தமது லுக்கை தன் ரசிகர்களுக்கு காட்ட விரும்ப ஒரு புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதியிடுவது உண்டு. ஒரு முறை நான் என் இன்ஸ்டா பக்கத்தை மேலே கீழே என்று தட்டி தட்டி பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு நடிகரின் புகைப்படத்தை பார்த்தேன். ‘அடடே நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன்’ அப்படியென்று ஒரு பார்வை பார்த்துவிட்டு அவரின் ஸ்மார்ட் லுக் புகைப்படத்திற்கு ஒரு லைக்கை போட்டு அடுத்த கட்டத்தை கடக்கும் போது தான் திடிரென்று மீண்டும் அவரின் படத்தை சென்று பார்த்தேன்.

கவனித்து பார்த்தபோது தான் எனக்கு ஒன்று நினைவிற்கு வந்தது. ‘இந்த T -SHIRT  எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே’ அப்படி என்று யோசித்துக் கொண்டிருந்த வேளைதான் ‘எங்க தல தோனியும் இது போல தான உடுத்திருந்தாரு’ என்று யோசித்துகொண்டே இன்ஸ்டாவை விட்டு இணையத்திற்கு கொஞ்சம் தாவினேன். இணையத்தில் இந்த டிசேர்ட்டை பற்றி தேடிப் பார்த்தபோது தான் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. celebrities இன் வைரலான டீசேர்ட்டாக இது இணையத்தையே வலம் வந்து கொண்டிருந்தது.

கோலிவுட்டிலிருந்து ஹோலிவுட் வரை எல்லாம் பிரபலங்களும் இந்த ‘Balmain Paris’ Brand டிசேர்ட்டை தான் போட்டு மாஸாக தங்களை காட்டிக்கொள்கிறார்கள். ‘அப்படி என்னதான்யா இருக்கு இந்த Balmain T-Shirt ல’ என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். என் கேள்விக்கு பதில் Google அண்ணா கூட ரெடியாக இருந்தார்.

சாருக்கான், சல்மான் கான், தலதோனி, விராட் கோலி, அல்லு அர்ஜூன், தனுஷ், சிம்பு, விக்னேஸ் சிவன் என இன்னும் பல பிரபலங்கள் இந்த பால்மெய்ன் டிசேர்ட்டை அணிந்து தங்களுடைய மாஸை காட்டியுள்ளனர். இதனுடைய பெறுமதி கிட்டதட்ட 558 டொலர்களாகும். அதன் இலங்கைப் பெறுமதி Rs 203110.00 அதாவது அந்த ஒரு டிசேர்ட்டின் பெறுமதி இரண்டு லட்சம் என்பது கேட்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது? இப்போது புரிகிறதா ஏன் அதை பிரபலங்கள் அணிந்து மாஸ் லுக் காட்டுகிறார்கள் என்று. உண்மையில் இந்த பெயருக்கு பின்னால் இருக்கும் வரலாற்றை பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்காகவே இந்த கட்டுரை. ஆகவே தொடர்ந்து படியுங்கள்.+

யார் அந்த Balmain போஸ்?

பியர் அலெக்ஸாண்டர் க்ளாடியஸ் பால்மெய்ன் (Pierre Alexandre Claudius Balmain) இவர் தான் பால்மெய்ன் என்ற பெயருக்கு சொந்தக்காரர். ஒரு ப்ரேண்ட் ஒட்டுமொத்த உலகத்தையே ஆள்கிறது என்றால் அதன் மூல கர்த்தாவும் இவர்தான். காரணம் கர்த்தாவும் இவர் தான். 1914 பிரான்ஸில் பால்மெய்ன் பிறந்தார். அவருடைய அப்பா கதவு ஜன்னல்களுக்கு பயன்படுத்தப்படும் அலங்கார திரைச்சீலைகள் மற்றும் ஸ்க்ரீன்களை விற்பனை செய்பவர். அவருடைய அம்மாவும் சகோதரியும் பொட்டிக் வைத்திருந்தனர்.

1921 இல் சரியாக பால்மெய்னுக்கு ஆறு வயதாகும் போது அவரின் தந்தை இறந்துவிட்டார். இந்நிலையில் குடும்ப சுமையை குறைக்க பள்ளி முடிந்ததும் அம்மா மற்றும் சகோதரியோடு இணைந்து பொட்டிக்கில் வேலை செய்தார். காலங்கள் கடந்ததும் 1921 ஆம் ஆண்டு இவர் இகோல் டெஸ் பியூக்ஸ் – ஆர்ட்ஸ் (Ecole des Beaux – Arts) என்னும் பிரபல ஆர்ட் ஸ்கூலில் ஆர்க்கிடெக்ச்சர் படிப்பில் சேர்ந்தார். பகுதி நேரமாக பிரபல பிரான்ஸ் Fashion Designer ரொபர்ட் பிக்யூட்டிடம் உடை அலங்கார ஓவியராக பணி புரிந்தார்.

பால்மெய்னுக்கு ஆர்வம் முழுதும் ஃபேஷன் மற்றும் உடை அலங்கார வடிவமைப்பில் தான் இருந்தது. இதனால் படிப்பை பாதியில் விட்டு பிரிட்டிஷ் Fashion Designerஎட்வர்ட் மோலினியூக்ஸிடம் முழுநேர உதவியாளராக இணைந்து தன் இலட்சிய பயணத்தை ஆரம்பித்தார்.

இந்த சமயத்தில் 2ஆம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கட்டாயத்தின் பேரில் பிரெஞ்சு விமானப் படையில் முன்கள வீரராக சிறிதுகாலம் பணிபுரிந்தார். போர் நிறைவுக்கு வந்ததும் மீண்டும் தன் ஃபேஷன் உலகுக்கு நுழைந்தார்.
மிகவும் பிரபலமான ப்ரேண்ட் டிசைனர் லூசியன் லிலாங்கை (Lucien Lelong) தெரிவு செய்து அவருடைய பெயரிலேயே சொந்த ஃபெஷன் ஷோரூமை ஆரம்பித்து ‘ப்ரெஞ்ச் ஃபேஷன் தந்தை’ என்று பிரபலமானார்.

ஆவா கார்ட்னர், ப்ரிஜட் பார்டோ, ஹோப் போர்டோகரேரோ மற்றும் தாய்லாந்தின் ராணி சிரிகட் ஆகியோருக்கு ஆடைவடிவமைப்பாளர் ஆனார். 1951 இல் வெளியாகி ப்ளோக் பஸ்டர் ஹிட் அடித்த ‘ No Highway In The Sky’ ஹொலிவூட் திரைப்படத்தில் நடிகை மார்லின் டீட்ரிச் பால்மெய்ன் ஆடைகளைதான் அணிந்திருந்தார்.
அதிலும் குறிப்பாக உலகப்புகழ் மைக்கல் ஜாக்சன் கூட பால்மெய்ன் ஆடைகளை அணிந்திருக்கிறார் என்றால் அன்று முதல் இன்று வரை நீடித்திருக்கும் இந்த ப்ராண்டின் பெயருக்கு அதாவது பால்மெய்னின் பெயருக்கு இருக்கும் மதிப்பு எத்தனை கோடிகளாக இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.

பால்மெய்ன் ஆடைகள் ஏன் இவ்வளவு Costly?

ஆடைகளை அழகுக்காக அணிவது ஒரு ரகம் என்றால் அதன் ப்ராண்டுக்காக அணிவது மற்றொரு ரகம். அப்படி பிரபலமாகியது தான் இந்த பால்மெய்ன் ஆடைகள். ஆடை மட்டுமல்லாது சப்பாத்து, கைப்பை, தொப்பி, பெல்ட் போன்ற பலவும் பால்மெய்ன் நிறுவனத்தினால் தயாரிக்கப்படுகின்றன.
1945 இல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட இந்த ப்ராண்ட் பாரிஸை தலைமையாகக் கொண்டு இயங்கி வருவதால் ‘பால்மெய்ன் பாரிஸ்’ என்று உத்தியோகப்பூர்வ பெயரைப் பெற்றது. இவர்களுடைய ஆடைகள் நம்மை போன்ற சாதாரணமானவர்களுக்காக அல்ல. உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் பிரசித்தி பெற்ற நட்சத்திரங்களுக்கும், பிரபலங்களுக்கும், பணக்காரர்களுக்காகவுமே இவர்கள் பிரத்தியேகமாக தயாரிக்கின்றனர்.

அதிலும் வியக்கவைக்கும் விடயம் ஒன்று இருக்கிறது. பால்மெய்ன் தங்களுடைய ப்ராண்டுகளை எந்த விலையில் எந்த ஸ்டார் அணிகிறார் அவருக்கு இருக்கும் செல்வாக்கு என்ன என்பதைனையே கண்காணிப்பதற்காகவே ஒரு தனிக் குழுவே பால்மெய்ன் நிறுவனத்திற்கு இருக்கிறது என்பது ஆச்சரியப்படவைக்கிறது. அதனால் தான் இந்த ப்ராண்டுகளை இவ்வளவு விலை கொடுத்து வாங்குகின்றனர்.
இந்த வகை ப்ரேண்டை இவ்வளவு விலை கொடுத்து அணிந்தாலே பெருமை என்பது தான் இந்த உலகில் பால்மெய்ன் நிலைநிறுத்தி வைத்துள்ள வியாபார தந்திரம்..!

கருப்பு அல்கலைன்!

இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் fit ஆன வீரர் பார்த்த உடனே கவரக்கூடியவர். இந்திய தொலைக்காட்சிகளில் விளம்பரங்களுக்கு இவருக்கு என்று தனி இடம் உண்டு. உலக கிரிக்கெட் வட்டாரங்களில் இன்று இவர் ஒரு சிம்மசொப்பனம் கூட முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி.தன் உடல் ஆரோக்கியத்தினை மெருகேற்றவும் தொடர்ந்து பராமரிக்கவும் தனது சுறுசுறுப்பினை அதிகரிக்க தொடர்ந்து தனது உடலில் நீர் சத்து அற்றுபோகாமல் இருக்க அவர் அடிக்கடி நீர் அருந்துவது உண்டு.

அவர் மட்டுமல்ல குறிப்பாக ஸ்ருதிஹாசன் மல்லிகா அரோரா தினேஷ் கார்த்திக் போன்ற இந்திய பிரபலங்கள் கூட அவர்கள் நீர் அருந்துவதை பற்றியும்
அதன் அவசியத்தை பற்றியும் பல கருத்துக்களை தமது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். என்னடா இது நாங்களும் தான் தினசரி தண்ணீர் குடிக்கிறோம்.இதலாம் ஒரு செய்தியா சொல்றாங்க. இந்த பிரபலங்கள் குடிக்கிற தண்ணீரில் மட்டும் அப்படி என்ன இருக்குநம் உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு ஆற்றக்கூடியது நீர் அந்த நீரை எப்படி குடிக்க வேண்டும் என்று அறிந்து வைத்திருப்பது கட்டாயமாகும் இதைப் பற்றிய அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் மேலும் அவர்கள் எந்த நீரை குறிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதில் மிக முக்கியமான ஒன்று குறிப்பிட்ட பிரபலங்கள் கூறும் கருப்பு அல்கலைன்!

கருப்பு அல்கலைனா அப்படின்னா என்ன? 

கருப்பு அல்கலையனை பற்றி கூறுவதற்கு முதலில் நாம் தண்ணீர் என்றால் என்ன? ஏன் நாம் நீர் அருந்த வேண்டும். தினமும் நாம் பருகும் தண்ணீரின் அளவு என்ன? நாம் தண்ணீர் அருந்துவதற்கான காரணம் என்ன? என்பதை முதலில் பார்த்து விடலாம்.
நீர் என்ற வாய்ப்பாட்டினால் விவரிக்கப்படும் ஒரு வேதியல் சேர்மம் தன்மைகளாக நிறமற்றது மணமற்றது பாத்திரம் கொண்டுள்ள வடிவத்தை கொள்ளக்கூடியது. ஒளிபுகும் தன்மையை கொண்டது புவியின் பெரும்பாலான பகுதி நீரினாலேயே நிரம்பியுள்ளது இந்நீர் அதன் தன்மையை பொருத்தும் தட்பவெட்ப அழுத்தத்தில் அது நீராக இருந்தாலும் திட நிலையில் அது பனிக்கட்டியாகவும் வாயு நிலையில் நீராவியாகவும் காணப்படுகின்றது.

மலை வடிவில் இது பூமியில் வீழ்படிவாகவும் மூடுபடியாகவும் தூசு படலமாகவும் உள்ளது நீரில் 97 சதவீதம் பகுதி உவர் நீர் சமுத்திரங்களாகவும் சதவிகிதம் பணி ஆறுகள் ஆகவும் 0.6% பகுதி ஏனைய நில மேலோட்ட நீர் நிலைகளான ஆறுகள் ஏரிகள் குளம் குட்டைகளிலும் காணப்படுகின்றது மேலும் நீர் நீர் துருவ பணி காவிகளிலும் பணி ஆறுகளிலும் ஏரிகளிலும் சிறை பட்டினமாகவும் ஏன்? புவியின் தண்ணீரில் ஒரு சிறிய அளவு உயிர்களின் உடல்களில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் கூட கூறப்படுகின்றது. இது தண்ணீர் பற்றிய ஒரு சிறிய அறிமுகமே.

நாம் எமது தலைப்பிற்கு வருவோம் “குடிநீர்” குடிநீர் என்பது மனிதர்களாலும் ஏனை விலங்குகளாலும் உட்கொள்ளப்பட்டால் எவ்வகை பாதிப்பும் ஏற்படுத்தாத நீர் ஆகும் எமது உடலில் 50 சதவீதத்திற்கும் மேலாக நீர் சத்து காணப்படுகின்றது. நாம் எமது உடல் உழைப்பை அதிகரிக்கும் போது உடலில் உள்ள நீர் வியர்வை வழியாக 300ML – 350 ML, மேலும் சிறுநீர் ஊடாக 1L – 2L, மலம் வழியாக 100Ml- 350 ml வரையும் சுவாசம் வழியாக 250 – 350ml வரையும் மொத்தமாக நாளொன்றுக்கு 1.5 l – 3l நீர்ச்சத்து உடலில் இருந்து வெளியேறுகின்றது. இதனால் உடல் சோர்வடைவதை போல உணர்வோம் இந்த நிலைமையை சீரமைக்கவும் எமது உடல் பாகங்கள் சிறப்பாக செயல்படவும் மூளை வினைத்திறனுடன் செயல்படவும் உடல் சமநிலை பேணவும் மற்றும் குறிப்பாக சமீபாடை சீரமைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு நாம் நாள்தோறும் உடலுக்குத் தேவையான அளவு நீரை பருகுதல் மிக மிக அவசியமானதாகும்.

இவ்வாறு நாம் பருகும் நீரின் அளவு பற்றி அறிந்திருப்பதும் கட்டாயமாகும். பொதுவான சமூக கருத்தாக ஒரு சாதாரண மனிதன் 8 தொடக்கம் 10 குவளை(glass) நீர் அருந்த வேண்டும் என்பது பொதுவான கருத்து ஆனால் உண்மையில் இதற்கு குறிப்பிட்ட எந்த அளவுக்கு திட்டமும் இல்லை நீர் அருந்துவது வயது, சூழல் காலநிலை, உடல் தொழில் படும் அளவு, உடல் ஆரோக்கியத்திற்கு தகுந்தாற்போல் நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் நீரின் அளவும் மாறுபடும். பொதுவாக 18 வயதை பூர்த்தி செய்த ஆரோக்கியமான மனிதன் 2L – 3L நீர் தினசரி பருக வேண்டியது அவசியம்.

அதுவும் காலை எழுந்தவுடன் 2-3 குவளைகள் நீர் அருந்துவது உடலுக்கும் மனதிற்கும் பெரிதும் நன்மை பயக்கும் மேலும் உடற்பயிற்சி செய்யும் போது விரைவாக எமது உடம்பு நீரினை இழப்பதனால் உடற்பயிற்சிக்கு முன்பு முன்னும் பின்னும் நீர் அருந்துவது கட்டாயம். ஆனால் நம் அனைவரும் செய்யும் (செய்யத் தகாத) காரியம் சாப்பிடும் போது நீர் அருந்துவது. இந்த பழக்கம் உடலுக்கு பெரிதும் தீங்கு விளைவிக்கக் கூடியது காரணம் இந்த செயற்பாடு நாம் உண்ணும் உணவின் செரிமானத்தையும் சமீபாட்டினையும் சிக்கலுக்கு உள்ளாக்குவது ஆகும். அதிலும் மிகக் குளிர்ந்த நீரை (ice water)பருகுவது மிக மிக மோசமான பழக்கம்.

கருப்பு அல்கலைன் தண்ணீர் என்றால் அது கருப்பு நிறத்தில் உள்ள தண்ணீர் உண்மையில் மிக சிறப்பு வாய்ந்தது தான். நம்முடைய உடலை அதிக நீரேற்றத்துடன் வைத்திருக்கக் கூடியது. அது எப்படி என்று கேட்டால் இதில் PH பெருமானம் மிக அதிகம் பொதுவாக PH(POWER OFF HYDROGEN ION CONCERN)பெருமானம் 1 தொடக்கம் 6 வரையானது அமில தன்மையை குறிப்பது. 8 தொடக்கம் 14 வகையானது காரத்தன்மையை குறிக்கும்.

சரியாக PH பெருமானம் 7 என்பது நடுநிலை (NEUTRAL) தன்மையை குறிக்க கூடியது. நாம் சாதாரணமாக அருந்தும் நீரின் PH பெருமானம்நடுநிலைத் தன்மையை (NEUTRAL) காட்டக் கூடியது. (மழை நீரின் PH பெருமானம் 5.6 இதைவிட பி எச்
பெரும்பாலும் குறைந்தால் அது அமில மலையாக கொள்ளப்படும். மனித உடலில் பி எஸ் பெருமானம் 7.4 இதைவிட PH பெருமானம் அதிகரித்தால் மனிதன் உயிர் வாழ்வது கடினமாகும். எனவே இதன் மூலம் PH பெருமானத்தின் முக்கியத்துவம் உங்களுக்கு விளங்கக் கூடியதாக இருக்கும்.

ஆனால் இந்தக் கறுப்பு அல்கலைன் நீரின் pH பெறுமானம் 8 க்கு மேல் இருப்பதனால் இதனை கறுப்பு அல்கலைன் என்று அழைக்கின்றனர். இந்த நீரின் அமிலத்தன்மை குறைவதனால் எமக்கு சமிபாடு சீராக அமையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கறுப்பு அல்கலைன் குடித்தால் சமிபாடு எப்படி சீராக நடக்கும்? நாம் சாப்பிடும் போது நமது உணவுச் சமிபாடு சீராக அமைவதற்காக நமது வயிற்றில் gastric juice என்ற ஒரு juice சுரக்கும். இந்த juice இன் pH பெறுமானம் 1.5 தொடக்கம் 3.5 வரை இருக்கும். அதாவது அமிலத்தன்மை கொண்டது. இதுதான் நமது சமிபாட்டை சீர் செய்யக் கூடியது. நாம் சரியாக சாப்பிடாமல் அல்லது குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடாமல் இருக்கும் போது இந்த juice மிக அதிகமாக சுரக்கிறது. இதன் காரணமாகத்தான் சமிபாட்டு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் காரத்தன்மையான கறுப்பு அல்கலைன் நீரை நாம் குடிக்கும் போது வயிற்று எரிச்சல் சமப்படுத்தப்படும்.

ஒரு ஆராய்ச்சி கறுப்பு அல்கலைன் நீர் பருகுவோரிற்கும் சாதாரண நீர்  பருகுவதற்குமான blood viscosity வேறுபடுவதாக கூறுகின்றது. Blood viscosity என்பது நமது உடலுக்கு oxygenஐ சீராக எல்லா பாகங்களுக்கும் குருதியின் மூலம் கடத்துவதாகும்.

இப்படி சீராக ஒட்சிசன் பரவும் போது நாம் உற்சாகத்தில் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இயங்கலாம். இதற்காகவே விளையாட்டு வீரர்கள் அதிகமாக குறிப்பிட்ட நீரை உபயோகிக்கின்றனர். மேலும் black water நீரில் 70க்கும் மேற்பட்ட கனிமங்கள் காணப்படுவதாக கூறுகின்றனர். குறிப்பாக Strontium, Sulphate, Silica, Vanadium, Zinc, Prebiotics, Probiotics போன்ற கனிமங்கள் சாதாரண நீரை விட கூடுதலாக காணப்படுகின்றது. ஆகவே இந்த 70 கனிமங்கள் அதிகமாக காணப்படுவதால் எங்களுடைய உடலில் METABOLISM சீராக நடக்கின்றது. அதாவது METABOLISM இற்கு உதவக்கூடிய Mg, Cr, Zn, Fe, K, Na, Cu, Co என்பன black water இல் இருப்பதால் metabolism தரமாகவும் சரியாகவும் நடைபெறுவதாக கூறுகின்றனர்.

மேலும் நச்சு நீக்கம் (DETOXIFICATION) நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் நச்சுக்கள் போன்றவற்றை எமது உடலில் இருந்து உடற்கழிவுகள் மூலம் வெளியேற்ற இந்த கறுப்பு அல்கலைன் உதவுவதாகவும் கூறப்படுகின்றது.

அடுத்ததாக (SUPERIOR HYDRATION), நான் முன்பு கூறியது போலவே எமது உடலில் உள்ள நீரானது சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேறிவிடும். இந்த சந்தர்ப்பத்தில் உடலுக்கு அதிகமான தண்ணீர் தேவைப்படும். அப்பொழுது இந்தக் கருப்பு அல்கலைன் பருகினால் சீக்கிரமாக hydration நடந்து சீக்கிரமாக வினைத்திறலுடன் செயற்படலாம். இதனாலும் கூட விளையாட்டு வீர வீராங்கனைகள் இந்தக் கருப்பு அல்கலைன் நீரை உபயோகம் செய்கின்றனர்.

அடடா இவ்வளவு சிறப்புகள் நிறைந்த நீரா அப்போ நாமும் இந்த நீரையே இனி குடிக்கலாமா..? அவசியமே இல்லை நான் இவ்வளவு நேரம் கூறிய அனைத்துப் பயன்களுமே நாம் சாதாரணமாக குடிக்கும் நீரில் காணப்படுகின்றது. அப்படி மேற்கூறிய metabolism, hydration என்பன நமக்குக் கிடைக்க வேண்டும் என்றால் நாம் ஒழுங்கான உணவருந்தும், சரியான நீர் அருந்தும் பழக்கத்துடன் இருப்பதே போதுமானது.

KPMG லிட்ரோவுக்கு வழங்கிய கணக்காய்வு மறுப்பு: அரசாங்க கணக்காய்வு அதிபரிடம் கையளிப்பு

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் லிட்ரோ காஸ் லங்கா லிமிடட் மற்றும் லிட்ரோ காஸ் டேர்மினல் லங்கா பிரைவேட் லிமிடட் ஆகிய கம்பனிகள் அரசியலமைப்பு மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிவிப்பைப் புறக்கணித்து தனியார் நிறுவனத்தின் ஊடாக கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) கவனத்தில் எடுத்துக்கொண்டதன் விளைவாக தற்போது தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் ஊடாக கணக்காய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்துடன் அரசியலமைப்புக்கு முரணாக தனியார் கணக்காய்வு நிறுவனம் ஒன்றின் ஊடாக லிட்ரோ காஸ் நிறுவனங்கள் மேற்கொண்ட கணக்காய்வு அறிக்கைகளை செல்லுபடியற்றதாக பிரகடனம் செய்து அவை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் கூட்டுத்தாபன சட்டத்தினால் நிறுவப்பட்டுள்ளது. இது 2003 இல் தனியார்மயமாக்கப்பட்டு பின்னர் 2009 இல் மீண்டும் அரசுடைமையாக்கப்பட்டது. கணக்காய்வாளர் தலைமையதிபதியின் நியதிச்சட்ட முறையில் லிட்ரோ காஸ் நிறுவனங்களை கணக்காய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளதுடன் அதுதொடர்பான விசாரணைகள் கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த இரு நிறுவனங்கள் தொடர்பான கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள கணக்காய்வாளர் நாயகத்துக்கு எவ்வித தடையும் இல்லையென சட்டமா அதிபர் ஊடாக ஆலோசனை பெறப்பட்டிருக்கிறது.

இந்த நிலைப்பாடு கணக்காய்வாளர் நாயகத்தினால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் பணிப்பாளர் சபையின் தீர்மானத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு KPMG என்ற தனியார் நிறுவனத்தின் ஊடாக கணக்காய்வு நடவடிக்கைகளை குறித்த நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. KPMG எனப்படுவது 144 நாடுகளில் செயற்படும் ஒரு சர்வதேச கணக்காய்வு நிறுவனம் ஆகும்.

இந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரித்த ஹேரத்திடம் நாங்கள் வினவியபோது லிட்ரோ நிறுவனங்களின் பிரதிநிதிகளை மீண்டும் விசாரணைக்கு அழைத்ததாக தெரிவித்தார். KPMG நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கைகளை நிராகரிப்பதுடன் அவர்களை தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கீழ் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும் அதன் அடிப்படையில் தற்போது லிட்ரோ நிறுவனங்கள் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் ஊடாக கணக்காய்வுகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“லிட்ரோ காஸ் கம்பனியாது தேசிய கணக்காய்வு அலுவலகமான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கணக்காய்வை நிராகரித்ததன் மூலமும் பொறுப்பு முயற்சி ஒன்றிற்காக பாராளுமன்றத்தின் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முன் ஆஜராக நிராகரித்ததாலுமே இந்த பிரச்சினைகள் ஆரம்பித்தன,” என தெரிவித்தார்.  இது தொடர்பில் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் தலையீட்டுடன் அரசாங்க பொறுப்பு முயற்சிகளில் பொதுவாக எழுகின்ற உரிமை தொடர்பான பிரச்சினைக்கு ஒரு தீர்வைப் பெற முடிந்தது என்றும் அந்த விடயம் அரசாங்க பொறுப்பு முயற்சிகளில் இது தொடர்பில் முக்கியமான முன்னுதாரணம் ஒன்றாக முன்மொழிவு செய்யப்பட்டதால்தான் கோப் விசேட அறிக்கை முன்வைக்க தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தினை அடுத்து கணக்காய்வாளர் தலைமையதிபதியின் கணக்காய்வுக்கு உட்பட்டது. இவ்வாறு கணக்காய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வேளையில் 2020 ஆண்டில் லிட்ரோ நிறுவனங்கள் 20 ஆவது திருத்தச் சட்டத்தினி கீழ் தனியார் கண்ணகாய்வாளர் ஒருவரை நியமிப்பது என்பது சட்டத்திற்கு முரணானது என்பதை சட்டமா அதிபர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் சிங்களப் பிரதியில் ‘கம்பனிகளுக்கு சொந்தமான கம்பனிகள்’ என்று குறிப்பிடப்பட்டுள்துடன் இதன் ஆங்கில்பிரதியில் ‘கூட்டுத்தாபனங்ககு சொந்தமான கம்பனிகள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் சிங்களப்பிரதியில் ‘கூட்டுத்தாபனங்களுக்கு சொந்தமாக கம்பனிகள்’ என திருத்தப்பட்டிருந்தாலும் அதனை பொருள்கோடல் செய்த சட்டத்தரணிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாகவே மேற்சொன்ன விடயம் உறுதிப்படுத்தப்படுகின்றது.

அந்த அடிப்படையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு அமைவாக லிட்ரோ நிறுவனம் தனியார் கணக்காய்வாளர் ஒருவரை நாட முடியாது. அரசியலமைப்புக்கான 20 ஆவது சீர்திருத்தத்தின் சிங்களப் பிரதியில் கூட்டுத்தாபனங்களுக்கு சொந்தமான கம்பெனிகள் என எழுதப்பட்டிருந்தாலும் அதனை பொருள்கோடல் செய்த சட்டத்தரணிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக இந்நிறுவனங்களை தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் ஊடாக கணக்காய்வுக்கு உட்படுத்த முடியும் என புரிந்துகொள்ள முடிகின்றது. தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தேசிய கணக்காய்வு நிறுவனம் லிட்ரோ காஸ் நிறுவனங்களில் கணக்காய்வு மேற்கொண்டு வருகின்றது.

இவ்விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்துரை வினவப்பட்டபோது மேற்படி லிட்ரோ நிறுவனங்களின் கணக்காய்வை மேற்கொள்வதற்கு தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வாளர் தலைமையதிபதிக்கு தடைகள் கிடையாது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் மேற்சொன்ன விடயங்கள் தொடர்பில் திறைசேரியின் செயலாளர் இலங்கை காபப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் லிட்ரோ நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ  நிறுவனங்களின்  வருடாந்த அறிக்கைகள் குறித்த திகதியில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை என அரசாங்க பொறுப்பு முயற்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. மேலும் அரசாங்க பொறுப்பு முயற்சிகளுக்கான பிரதம நிர்வாக அலுவலக அதிகாரியின் ஊடாக குறித்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிடப்பட்டது.

தேசிய கணக்காய்வு அலுவலகத்திடம் இது தொடர்பாக நாம் வினவியபோது இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கணக்காய்வு நடவடிக்கைகள் கணக்காய்வாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பதையும் அதில் 99.94 வீத உரிமையைக் கொண்ட லிட்ரோ காஸ் லங்கா லிமிடட் மற்றும் 100 வீத உரிமையைக் கொண்ட லிட்ரோ டேர்மினல் லங்கா லிமிடட் ஆகிய நிறுவனங்கள் மாத்திரம் தனியார் நிறுவனங்களினால் கணக்காய்வுகளை மேற்கொண்டமை அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது என்பதை அடையாளப்படுத்தியது.

இந்நிலையில் அரசாங்கம் சார்பில் தங்கள் நிறுவனத்தை கணக்காய்வு மேற்கொள்ளத் தேவையில்லை என்று லிட்ரோ காஸ் நிறுவனம் தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பணிப்பாளர் சபையின் ஊடாக எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் ஊடாக கணக்காய்வை மேற்கொள்வதற்கு சட்டரீதியாக எவ்வித தடையும் இல்லை  என லிட்ரோ காஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

தனியார் கணக்காய்வு நிறுவனம் மூலம் சிறந்த முறையில் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவிக்கின்ற போதிலும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் லிட்ரோ நிறுவனம் என்பவற்றிற்கு நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு அபிப்பிராயம் வழங்கும்போது முணைப்பழியுள்ள அபிப்ராயமே (Unqualified Opinion) 2018 தொடக்கம் 2020 வரை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தற்போதைய கணக்காய்வு நடவடிக்கைகள் தொடர்பாக அறிந்துகொள்ள நாம் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது கம்பனியின் கணக்காய்வு நடவடிக்கைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பதால் அது தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்க முடியாது என்று தெரிவித்தார்கள்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த தேசிய கணக்காய்வு  அலுவலகம் ”அரசாங்கத்திற்கு 50 சதவீதம் பகிர்வு உள்ள கம்பனிகள் தனியார் கணக்காய்வு நிறுவனங்கள் மூலம் கணக்காய்வுகளை மேற்கொள்ள முடியாது. அந்த அடிப்படையில் லிட்ரோ காஸ் நிறுவனங்களை கணக்காய்வு மேற்கொள்ளும் தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கே உள்ளது. அரசியலமைப்பு மற்றும் சிங்களப் பிரதி மற்றும் ஆங்கிலப்பிரதிகளில் சிறியதொரு முரண்பாடு காரணமாக குறித்த கோரிக்கைகள் சுமார் இரண்டு வருடங்கள் நிலுவையில் இருந்தன. தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி லிட்ரோ காஸ் நிறுவனங்களின் கணக்காய்வு நடவடிக்கைகளை தேசிய கணக்காய்வு அலுவலகம் மேற்கொள்கின்றது” என தெரிவித்தது.

அத்துடன் 2017 மற்றும் 2018 நிதி ஆண்டுகளில் லிட்ரோ நிறுவனங்களின் கணக்காய்வு தொடர்பான நிதி அறிக்கைகளை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தவிசாளருக்கு சட்டமா அதிபர் ஊடாக வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தவிசாளர் வேண்டியுள்ளார். அரசாங்கம் மற்றும் தனியார் கணக்காய்வு நிறுவனங்களினாலும் சமர்பிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி சட்டமா அதிபர் வழங்கும் பதிலை பிரதம கணக்கீட்டு அலுவலர் ஊடாக கம்பனிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கு குழு வலியுறுத்தப்பட்டது.

மேற்குறித்த கணக்காய்வு நடவடிக்கைகளை ஆராயும்போது லிட்ரோ நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 பேர் மாத்திரமே என்பதும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. சட்டப்படி 5 பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது தெரியவந்தது. மேலும் இயக்குநர்கள் குழு உறுப்பினர்களை நிதி அமைச்சு நியமிப்பதால் கூட்டுறவுக் குழுவானது தாய் நிறுவனத்தின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இயக்குநர்கள் குழுவை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியது. மேலும் கூட்டுறவுத் தலைவர் நிதி அமைச்சின் செயலாளரை பரிந்துரைத்தார்.

அஹ்ஸன் அப்தர்

index.php