சட்ட ஒளி என்பது சட்டம் தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைக்கும் மும்மொழி சட்டக் கலந்துரையாடலாகும். லத்தீன் மொழியில் “ignorantia legis neminem excusat” என்ற தொடர் விளக்கி நிற்பது, சட்டத்தினை புறக்கணிப்பது சட்டத்திலிருந்து மன்னிப்பு பெறுவதற்கான வழி அல்ல என்பதனையே ஆகும். அந்த வகையில் இலங்கை சட்ட மாணவர் சங்கத்தின் ப்ரோ போனோ குழுவானது நம் நாட்டு சட்டங்களினை எளிமையாக்குவதன் மூலம் பொது மக்களுக்கு அறிவூட்ட முற்படுகின்றது. அதன் ஐந்தாவது கலந்துரையாடல் கொலை குறித்து கவனம் செலுத்தியுள்ளது.
இந்தக் கலந்துரையாடலுக்கான குழுவானது பின்வரும் சட்டத்தரணிகளை உள்ளடக்கியிருக்கின்றது: திரு. சாலியபீரிஸ் pc இலங்கைசட்டத்தரணிகள்சங்கத்தின்தலைவர்ஆவார். திரு. நயந்தவிஜேசுந்தரமேல்முறையீட்டுநீதிமன்றத்தில்பயிற்சிசெய்கிறார்மற்றும்திரு.திருக்குமரன்விஷ்வலிங்கம்நொத்தாரிசாகவும்சத்தியப்பிரமாணஆணையாளராகவும்உள்ளார்,
கொலைஎன்றால்என்ன?
கொலை எனப்படுவது ஒரு தனிப்பட்ட நபருக்கு மரணத்தை விளைவிக்க வேண்டும் என்ற நோக்கதுடன் ஒருவரை கொலை செய்யும் செயல் ஆகும். இங்கு பாதிக்கப்பட்டவர் ஒரு நோயால் அவதியுறுகிறார் என்று கொலையாளி அல்லது குற்றவாளி அறிந்த பின்னரும் அவருக்கு காயம் ஏற்படுத்துவதன் மூலம் அவருக்கு மரணம் விளைவிக்கப்படும் என்று அறிந்திருப்பதால் அந்த செயலும் கொலையாகவே கருதப்படும். குற்றவாளியின் தெளிவு அல்லது அறிவு இங்கு முக்கியமான கூறாகும்.
இங்கு அந்தக் குற்றவாளி அந்த தவறை புரிந்துள்ளார் என்பதை சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க வேண்டும். அந்த வகையில் ஒரு கொலை குற்றத்தினை நிறுவுவதற்கு 3 காரணிகள் அவசியப்படுகின்றன. அவையாவன
1. ஒரு நபர் கொலை செய்யப்பட்டிருப்பது
2. மரணத்தை விளைவிக்க செய்யப்பட்ட செயலானது குற்றவாளியால் செய்யப்பட்டதாக இருத்தல்
3. குற்றவாளி கொலை செய்யவேண்டும் என்ற நோக்கதுடன் அல்லது கருத்துடன் இருத்தல். கொலை செய்யப்பட்டவரின் இறந்த உடலானது மிக சிறந்த சாட்சியாகும். சில சமயங்களில் கொலையாளி இறந்த உடலை அழிக்கக் கூடும். ஆனால் இறந்த உடல் இல்லை என்பதற்காக அந்தக் கொலைக் குற்றம் நடக்கவில்லை என மறுக்க முடியாது. சந்தர்ப்ப சாட்சிகள் வைத்து அந்தக் கொலையை நிரூபிக்க முடியும்.
கொலைக்குரிய மிக முக்கியமான அம்சம் நோக்கமாகும். அந்த வகையில் மரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலோ அல்லது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய உடல் காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலோ அல்லது ஒரு செயல் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தும் என்ற அறிவுடன் செய்யும் செயல் மரணம் விளைவிக்கும் குற்றம் என அறியப்படும்.
ஒரு நபருக்கு உடல் காயத்தை ஏற்படுத்தினால், அது மரணத்தை ஏற்படுத்தக்கூடும் அல்லது அந்த நபருக்கு மரணம் ஏற்படக்கூடும் என்ற அறிவுடன் இருந்தால், அவர் மரணம் விளைவிக்கும் குற்றம் செய்கிறார். மரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த செயல் செய்தால் இது கொலை ஆகும். உடல் காயத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஒருவருக்கு இயற்கையான மரணத்தை விளைவித்தலும் கொலைக் குற்றமாகவே கருதப்படும்.
ஒரு நபர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் போது, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். உயர்நீதிமன்றத்தால் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும்.
கொலைமுயற்சிஎன்றால்என்ன? மற்றும்தண்டனை?
கொலை முயற்சிக்கான தண்டனை 10 ஆண்டுகள் மற்றும் அபராதம் ஆகும். நபர் காயமடைந்தால், காயத்தின் தீவிரத்தைப் பொறுத்து தண்டனை 20 ஆண்டுகள் வரை நீடிக்கும்.
பிரதிவாதி பாதிக்கப்பட்டவரைக் கொல்ல முயற்சித்தாலும், அந்த முயற்சி வெற்றிபெறாதபோதுதான் கொலை முயற்சி ஆகும். ஒரு நபர் இன்னொரு நபரை நோக்கி துப்பாக்கியைக் குறிவைக்கும்போது, அவர் அந்த குறியை தவறவிட்டால், இது கொலை முயற்சிக் குற்றமாகும்.
3வது நபர் ஒரு நண்பர் செய்த கொலைக்கான ஆதாரங்களை அழித்தால் அது ஒரு குற்றமா?
இது ஒரு குற்றத்திற்கு சமம், ஏனெனில் நீங்கள் நீதியைத் தடுக்கிறீர்கள்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரு கொலை செய்ய திட்டமிட்டால் அது கொலைக்கான சதித்திட்டமாகும். கொலை செய்வதற்கான நோக்கத்தினை பகிர்ந்து கொண்டு திருடர் கூட்டம் ஒரு வங்கிக்கு சென்று காவலாளி மீது அதிகாரத்தை செலுத்தி ஒருவர் அவரை குத்துகின்ற போது அனைவரும் அதற்க்கு பொறுப்பாவார்கள்.
ஏஜி v பொட்டாநாஃபர், என்ற வழக்கில் சிறையில் உள்ள ஒருவரால் கொலை திட்டமிடப்பட்டது மற்றும் சிறைக்கு வெளியே தனிநபர்களால் செயல்படுத்தப்பட்டது. ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் இந்த திட்டம் நடைபெற்றது என்பதை நிரூபிக்க ஆதாரங்கள் இருந்தன. சதித்திட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கொலை குற்றத்திற்கு பொறுப்பாவார்கள்.
பங்கேற்ப்பாளர்களின் நோக்கத்தை சட்டம் பார்க்கிறது. எங்கு ஒரு குழு தங்களை ஒழுங்கமைத்துக் கொண்டு ஒருவர் மரத்தின் உச்சியில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கின்ற அதே சமயத்தில் மற்றுமொருவர் பாதிக்கப்பட்டவரை கடத்த அத்துடன் மற்றும் இருவர் பாதிக்கப்பட்டவரை பிடித்துக்கொண்டு இருக்க ஒருவர் அவரை கத்தியால் குத்தும் போது இதில் பங்கேற்று இருக்கும் அனைவரும் இதற்க்கு சமமாக பொறுப்பேற்ப்பதோடு தண்டனையும் சமமாக வழங்கப்படும். இவர்கள் அனைவரினதும் பங்கேற்பு கவனத்தில் கொள்ளப்படும்
இவையிரண்டும் ஒன்றல்ல இதன் முடிவுகளுக்கிடையில் வேறுபாடு உள்ளது?
தண்டனை சட்டக் கோவையில் பிரிவு 310 இற்கு அமைய ஒருவருடைய உடலுக்கு ஏதேனும் வலி, நோய் அல்லது குறைப்பாட்டினை உண்டாக்குவதைக் காயப்படுத்துதல் என்று கூறப்படும்.
தண்டனை சட்டக் கோவையில் பிரிவு 311 இற்கு அமைய கொடுங்காயம் என்று கூறப்படுவது யாதெனில்,
1. ஆண்மை இழக்கச்செய்தல்
2. நிரந்தரமாக, ஏதாவது ஒரு கண் பார்வையை இழக்கும்படி செய்தல்
3. காதில் ஒன்று செவிடாகும்படி செய்தல்
4. உடல் உறுப்புகள் ஒன்றை அல்லது இணைப்புகளில் ஒன்றைச் செயல்புரிய ஒட்டாமல் தடுத்தல்
5. உடல் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றினை அல்லது இணைப்புகளில் ஏதேனும் ஒன்றினை நிரந்தரமாகச் செயல் இழக்கும்படி செய்தல்
6. தலையை அல்லது முகத்தை நிரந்தரமாக உருக்குலைத்தல்
7. எலும்பு முறிவு அல்லது பல்லை உடைத்தல்
8. உயிருக்கு ஆபத்தை உண்டாக்க கூடிய காயம் அல்லது காயம் பட்டவருக்கு இருபது நாட்களுக்கு கொடுந்துன்பம் தரக்கூடிய காயம் அல்லது இருபது நாட்களுக்கு வழக்கமாகச் செய்யக்கூடிய வேலைகளைச் செய்யாமல் தடுக்கக்கூடிய காயம் ஆகியவையாகும்.
நீங்கள் உங்கள் தற்காப்பு உரிமையை பயன்படுத்தும் போது ஒருவருக்கு மரணம் ஏற்படலாம் ஆனால் அதற்க்கு சில வரம்புகள் உள்ளன.அதே போன்று அந்தச் செயலை எதிர்த்து அரசாங்க அதிகாரிகளின் உதவியையும் பாதுகாப்பையும் நாடிப்பெறுவதற்கான அவகாசம் இருக்கும் போதும் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தல் ஆகாது. தற்காப்பு உரிமையை எல்லை மீறிப் பயன்படுத்தக்கூடாது. தற்காப்புக்ககாகத் தாக்க நேரிட்டால் அளவுக்கு மீறித் தீங்கு உண்டாக்கக் கூடாது. தன்னைத் காத்துக் கொள்ள எந்த அளவுக்குத் தாக்குதல் நடத்தல் வேண்டுமோ அதற்கு மேல் சென்று தாக்குதல் நடத்தக் கூடாது. எந்த அளவுக்குத் தாக்குதல் நடத்தல் வேண்டுமோ அதற்கு மேல் சென்று தாக்குதல் நடத்தினால் அது மரணம் விளைவிக்கும் குற்றமே தவிர கொலை ஆகாது
கொலை நடந்த இடத்தில் நீங்கள் பார்த்த அனைத்து விவரங்களையும் ஒரு குறிப்பில் எழுதி வைக்கவும். நீங்கள் எதிர்கொள்ளும் அதிர்ச்சி காரணமாக, முக்கியமான தகவல்களைத் தவறவிடும் போக்கு உள்ளது. இந்த தகவல்களை விரைவில் போலீசாருக்கு வழங்கவும்
பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சியாளர் பாதுகாப்பு சட்டம் பாதுகாப்புக்கான உரிமைகளை வகுக்கிறது. உங்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால், நீங்கள் காவல்துறை அல்லது பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சி அதிகார சபையிடம் உதவி பெறலாம்
ஒரு நபர் குற்றம் நடந்த இடத்தில் இல்லை, ஆனால் வேறு இடத்தில் இருந்திருக்கின்றார் என்று கூறும்போது அது ஒரு அலிபி ஆகும். இது ஒரு நபர் குற்றத்தைச் செய்வதற்கான வாய்ப்பை விலக்குகிறது.
ஒரு குழந்தை சட்டரீதியான வயது வரம்பை விட குறைவாக இருந்தால் பொறுப்பாக முடியாது. 12 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பொறுப்பாளிகள் ஆக முடியும், ஆனால் கொலை தொடர்பாக ஒரு குழந்தைக்கு மரண தண்டனை விதிக்க முடியாது. ஒரு வயது வந்தவர் ஒரு குழந்தையைப் பயன்படுத்தும் இடத்தில், வயது வந்தவர் குற்றத்திற்காக குற்றவாளி ஆவரே தவிர, குழந்தை அல்ல.
சமூக ஊடகங்களும் வெகுஜன ஊடகங்களும் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரிந்ததைப் புகாரளிக்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர் சட்டத்திற்குள் செயல்பட்டாரா என்பதையும், இந்த நபர் கொலை குற்றவாளி என்பதில் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதா என்பதையும் நீதிமன்றம் ஆராய்கிறது. முதல் சுற்றிலேயே ஒன்றை முடிவெடுத்துவிடுவது ஒரு மனிதப் போக்கு, ஆனால் இது நீதிமன்றத்தில் நடக்காது.
சீனத் சாகீர்
ப்ரோ போனோ செயலாளர் 2020-2021
மொழிபெயர்த்தது – எம். திவாகரணி தன்னார்வ எழுத்தாளர் ப்ரோ போனோ
விபரீதம் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அது இங்கு தான், இப்படி தான், இவருக்கு தான் நடக்கும் என்று கணிக்க முடியாடு. நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு அதற்கு கிடையாது. நம் வாழ்க்கையின் மீதும் நம் உறவுகளின் மீதும் நாம் தான் கவனத்தோடு இருக்கவேண்டும், கண்ணிமைப்போல் காக்கவேண்டும் என்பதை இந்த குறும்படம் சொல்கிறது.
சங்கீதா தரம் எட்டில் கல்வி கற்கும் சிறுமி. ஒரு காலை வேலை பாடாசாலைக்கு கிளம்ப தயாராகிறாள். ஆசையாக அவளது பொம்மையை எடுத்து வைக்கிறாள். அப்பா அவசரமாக வேலைக்கு கிளம்பிக்கொண்டு இருக்க, அம்மாவும் அவரது வீட்டு வேலையில் மும்முரமாக இருக்கிறார். சங்கீதா அவளது பொம்மையை காட்டி அது எப்படி இருக்கிறது என்று கேட்கிறாள். அவளையும், அவள் பொம்மையையும் கவனிக்கும் நிலையில் அவளது பெற்றோர்கள் இல்லை.
சங்கீதா பாடசாலைக்கு செல்லும் வழியில் அவளது பொம்மையை ஒரு இடத்தில் தவறவிட்டு விடுகிறாள். அதை திரும்பி எடுக்க அவளால் முடியவில்லை. முயன்று முயன்று தோற்றுவிடுகிறாள். அருகில் இருக்கும் குடிசையை பார்க்கிறாள் அங்கு சென்று உதவி கேட்க எத்தனிக்கிறாள். இதற்கு பிறகு அவளுக்கு நடக்கும் சம்பவங்கள் தான் மீதிக்கதை.
திரைக்கதை ஒருவித “சஸ்பென்ஸ்” உடன் நகர்கிறது. என்ன நடந்திருக்கும் என்ற பததைப்பு படம் நெடுகிலும் காணப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பேசும் படங்கள் சில சமயங்களில் முகம் சுழிக்க வைத்துவிடுகின்றன. ஆனால் இந்த குறும்படம் அதை மிகவும் நாசுக்கான விதத்தில் கையாண்டிருக்கிறது.
இது போன்ற சம்பவங்களை மையப்படுத்திய கதைகளில் அதன் முடிவு பெரும்பாலும் துன்பியல் உணர்வோடு முடிவடைந்துவிடும். ஆனால் அதை தாண்டிய வாழ்க்கை இருக்கிறது, அதை நாம் கடந்துவரவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் இறுதிகாட்சிகள் அருமை.
படத்தின் கதை, திரைக்கதை, மற்றும் படத்தொகுப்பு, ஒளிப்பதிவு என எல்லாவற்றிலும் மேலதிக கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக டப்பிங் சரியான முறையில் பதிவு செய்தல் வேண்டும். வருங்கால படங்களில் அதை கற்றுக்கொண்டு சினிமா தரத்தை மேம்படுத்திக்கொள்ள உழைப்பது படக்குழுவின் அவசியம்.
கதாப்பாத்திரங்களாக நடித்திருக்கும் அனைவரும் அவர்களது பங்கை முடிந்தவரை நன்றாக செய்திருக்கிறார்கள். மைய கதாப்பாத்திரமாக நடித்திருக்கும் சிறுமி அதை மேலும் சிறப்பாக செய்திருக்கிறார். திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள விதமும் படத்திற்கு வலு சேர்க்கிறது. மேலும் சிறப்பான படங்களை செய்ய இயக்குனர் மகிழ்ச்சிகரன் மற்றும் படக்குழுக்கு வாழ்த்துக்கள்.
உணவின் சுவை என்பது நவரசங்களும் நாவில் நடனமாடி சமிபாட்டு தொகுதியில் சமிபாடு ஆகவேண்டும் என்பது சில உணவுப் பிரியர்களின் ஆத்மார்த்த கருத்தாகும். அந்த வகையில் BBQ சுவையினை நமது நாவின் சுவை நரம்புகள் சுவைத்திட உகந்த இடமாக கொழும்பு 5ல் இன்றைய காலத்தில் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவகமாக Whistling Hog உருமாறியுள்ளது. அதேவேளையில் இங்கு BYOB வசதிகளும் உள்ளன.
Starters
எப்பொழுதும் நாம் ஒரு முழு நிறை உணவினை உட்கொள்ள முன்னர் பசி உணர்வினை தூண்ட ஆரம்ப உணவுகளை Menu ல் தெரிவு செய்வது வழக்கம். அந்த வகையில் மிகவும் சுவைமிக்க ஆரம்ப உணவுகளை Whistling Hog தன்னகத்தே கொண்டுள்ளது.
Dragon Wings (LKR 700) உணவகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட “Great Balls of Fire” என்ற sauce ஊடாக நன்கு பதப்படுத்தப்பட்டு, இரண்டு மணித்தியாலங்கள் விறகில் வேக விடப்பட்டு தயாரிக்கப்படுகின்றது. அதேவேளையில் குறிப்பாக அந்த sauce ஆனது அதிகூடிய மிளகாய் உடைய சுவையும் மேலும் சிறிதளவு வினாகிரி சுவையினை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
Bacon Cheese Toast (LKR 650) Cheese உடன் கலந்த Bacon பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆனது toast செய்யப்பட்டு சீஸ் உருகி வழியும் வண்ணம் காட்சிதரும் அதேவேளையில், காட்சிக்கு ஏற்ப சுவையும் மிகவும் அருமையாக இருக்கும்.
Garlic Bread (LKR 300) பூண்டின் சுவையினை அனைவரும் உணவில் சேர்த்துக்கொள்ள விருப்பப்படுவார்கள். அந்த வகையில் இங்கு பரிமாரப்படும் Garlic Bread ஆனது வழமையாக இலங்கையில் தயாரிக்கப்படும் Garlic Bread சாயலில் இருந்து சற்று மாறுபட்டது. இங்கு பட்டர் உடன் சேர்த்து Garlic Bread பரிமாறப்படுகிறது. நிச்சயமாக இந்த உணவகத்தில் சுவைத்துப் பார்க்கக் கூடிய ஒரு உணவாக Whistling Hogன் Garlic Bread விளங்குகிறது.
Country Slaw (LKR 350)
Country Slaw என்பது ஒருவகையான சாலட் side dish ஆகும். குறிப்பாக இங்கு பரிமாரப்படும் Country Slawல் உள்ள சிவப்பு கோவா மற்றும் கேரட் என்பன வித்தியாசமான முறையில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதேவேளையில் mayonnaise உடன் சாலட் சேரும்பொழுது நாவில் எண்ணிலடங்கா சுவைகள் உணரப்படும்.
Disco Fries (LKR 300)
ஏனோ தெரியவில்லை. சிறுபிள்ளைத்தனமாக எனக்கு டிஸ்கோ பிரைஸ் பிடித்திருந்தது. குறிப்பாக அதன் crunch ஆன தன்மையினை சுவைத்த பொழுதுகள் இன்னும் என் நினைவலைகளில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. மேலும் அதற்கு மேலாக தூவிய மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்ந்த சுவையினை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
Mains Rack of Baby Back Ribs (LKR 1,700 – 2,400)
இந்த உணவு வகையினை சுவைக்கும் பொழுது நாம் மெய்மறந்து BBQ இறைச்சி மற்றும் அதனுடன் சங்கமித்த sauce ன் சுவையுடன் மூழ்கி விடுவோம். அதேவேளையில் இங்கு பறிமாறப்படும் Portion இன் அளவும் நன்கு போதுமானது
Smoked Chicken (LKR 500 – 1,800)
Smoked Chicken இனை நாம் மெனுவில் இங்கு தெரிவு செய்தால் நமக்கு விருந்தாக மாறிவிடும். ஆம் விறகில் சமைக்கப்பட்ட chicken உம் அதன் juicy ஆன தன்மையும் நம் நாவில் நவரசத்தை நடனமாட முயற்ச்சிக்கும்.
Big Momma (LKR 5,090)
குறிப்பாக இவ் உணவு வகையினை நான்கு பேர் பரிமாறலாம். நான்கு பேருக்கு தாராளமாக இது போதுமானது. மேலும் இவ்வுணவு தெரிவில் two pork chops, half a smoked chicken, a rack of baby back ribs, four sausages என்பன உள்ளடங்குகின்றன மேலும் நாம் sausages ல் garlic/kochchi என்பதை தெரிவு செய்து கொள்ளலாம்.
உங்களுக்கு தெரியுமா?
பரிமாறப்படும் உணவு வகைளின் பெயர்கள் அமெரிக்க இசைக் கலைஞர்
Elvis Presley அவர்களின் பாடல்களில் இருந்து மருவி வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் இந்த உணவகத்திற்கு வரலாமா?
நிச்சயமாக Whistling Hog உணவகத்தின் BBQ சுவைக்காக இங்கு மீண்டும் வரலாம்.
அதேவேளையில் உணவகத்தில் covid 19 பாதுகாப்பு முறைகளை பின்பற்றி முறையாக உணவு பரிமாறப்படுகிறது.
TIP- Rack of Baby Back Ribs மற்றும் Smoked Chicken – அதேவேளையில் Smoked Chicken உடன் side dish ஆக Country Slaw. வேறு ரகத்தில் சுவை நிச்சயமாக அமையும்.
பெரும்பாலான பெண்கள் புடவைகளை விரும்புகிறார்கள் என்ற உண்மையை நாங்கள் நன்கு அறிவோம், ஆனால் சில நேரங்களில் அவர்கள் துணிகள், பராமரிப்பு, பாணிகள் போன்ற சில முக்கியமான உண்மைகளை அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். கிட்டத்தட்ட அனைத்து தொடர்புடைய தலைப்புகளிலும் நாங்கள் அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.
புடவைகள் அம்மாக்கள் மற்றும் அத்தைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட காலம் கடந்துவிட்டது. இப்போது போக்குகள் மற்றும் ஃபேஷன் மாற்றத்துடன், அவர்கள் இளம் கூட்டத்தினரிடையே மிகப்பெரிய மோகம். செக்ஸி ப்ளோஸ் டாப்ஸுடன் அணியும்போது, சேலை மிகவும் சூடாகவும், வேறு எந்த ஆடைகளிலும் நடக்கும்.
இந்த சந்தை பரந்த அளவிலான அழகான புடவைகளை வழங்குகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நிறம், வடிவமைப்பு மற்றும் வெட்டுக்களில் டிசைனர் பிளவுசுகள் உங்கள் புடவை ஆடைக்கு ஒரு புதிய தோற்றத்தைக் கொடுக்கும்.
புடவை பல வழிகளில் எளிதில் வடிவமைக்கக்கூடிய ஒரு பல்துறை ஆடை. ஒவ்வொரு பாணியிலான திரைச்சீலை உங்களுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது, இது உங்கள் புடவையில் உங்கள் வளைவுகளை மேம்படுத்தி, நீங்கள் ஏற்கனவே இருப்பதை விட இன்னும் அற்புதமாக தோற்றமளிக்கும்.
புடவைகள் வெவ்வேறு துணிகள் மற்றும் அற்புதமான வண்ணங்களில் வருகின்றன. நீங்கள் ஒரு சாதாரண நிகழ்விற்காக ஒரு பாரம்பரிய புடவையுடன் செல்லலாம் அல்லது ஒரு நவீன புடவை தோற்றத்திற்கு ஒரு வடிவமைப்பாளர் புடவையை அணியலாம். உங்கள் சேலையின் தோற்றம் நீங்கள் கலந்து கொள்ள விரும்பும் நிகழ்வு மற்றும் துணி தேர்வு ஆகியவற்றைப் பொறுத்தது.
நீங்கள் சரியான பாகங்கள் மூலம் ஸ்டைலான நவநாகரீக தோற்றத்தை உருவாக்கலாம். ரவிக்கை தேர்வு கூட ஒரு கவர்ச்சியான தோற்றத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சேலையில் எப்படி நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்கான 5 குறிப்புகள் பற்றி மேலும் அறிய படிக்கவும்.
1. உங்கள் தோற்றத்தை உயர்த்த சரியான துணியை தேர்வு செய்யவும்.
புடவைகள் சாடின், பருத்தி, பட்டு (Satin, Cotton, Silk)மற்றும் பலவகை துணிகளில் வருகின்றன. பருத்தி நேர்த்தியாகவும் மிருதுவாகவும் தோற்றமளிக்கும் அதே வேளையில் அது வேகமாக மடிந்து, ஒவ்வொரு சலவை செய்தபிறகும் மென்மையாக இஸ்திரி (ironing) செய்யப்பட வேண்டும்.
நீங்கள் வழக்கமான உடைகளை விரும்பினால், சிஃப்பான், ரேயான், ஜார்ஜெட் (Chiffon, Rayon, Georgette) மற்றும் பிற துணிகளை நிர்வகிக்க எளிதானது(materials that are easy to manage) என்பதால் நீங்கள் தேர்வு செய்யலாம். துணியைச் சரியாகப் பெறுவது உங்கள் புடவையை அற்புதத்துடன் எடுத்துச் செல்ல உதவும்.
2. ஒரு குறிப்பிட்ட நிறத்தைத் தேர்ந்தெடுப்பது.
உங்களை அற்புதமாகத் தோற்றுவிக்கும்.புடவைகள் கருப்பு, சாம்பல், நீலம், தங்கம், இளஞ்சிவப்பு, மெரூன், ஓம்ப்ரே மற்றும் பல வண்ணங்களில் வருகின்றன. நீல & பிரவுன், ரெட் ஏஞ்சல், பிளாக் & கிரே, கிரே கோல்ட் மற்றும் பிற அழகான எல்லைகளைக் கொண்ட வண்ணங்களின் கலவையையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
பிரகாசமான நிறங்கள் ஒரு நபரின் தோற்றத்தை அதிகரிக்கின்றன, அதனால்தான் இத்தகைய புடவைகள் திருமணங்கள் அல்லது சமூகக் கூட்டங்களில் அணியப்படுகின்றன. நுட்பமான அல்லது மெல்லிய நிறங்கள் ஒரு நவநாகரீக தோற்றத்தை பராமரிக்கும் போது கவனம் செலுத்தும் அணுகுமுறையை சித்தரிக்கின்றன.
3. ரவிக்கையில் சரியான விஷயங்களைப் பெறுதல்.
உங்கள் புடவையை பூர்த்தி செய்யும் பிளவுசைத் தேர்ந்தெடுப்பது உங்கள் தோற்றத்தை உயர்த்துவதற்கான சிறந்த குறிப்புகளில் ஒன்றாக எளிதாகக் கருதப்படலாம். நீங்கள் ரவிக்கைக்கு அதே சேலையின் நிறத்தை தேர்வு செய்யலாம் அல்லது சேலையின் நிறத்துடன் பொருந்தக்கூடிய மென்மையான வண்ணங்களுக்கு செல்லலாம். உங்கள் சேலையின் ஒட்டுமொத்த தோற்றத்திற்கு ஒரு அற்புதமான விளைவைக் கொண்டுவருவதற்கு நீங்கள் முறை அடிப்படையிலான பிளவுசுகளைப் பெறலாம்.
4. டிரைப்பிங் (drape) – உங்கள் புடவையின் தோற்றத்தை ஆக்கவும், அழிக்கவும் முடியும். புடவையை எப்படி ஸ்டைல் செய்வது என்று யோசிக்கிறீர்களா?
புடவை அணிவதில் டிரைப்பிங் ஒரு முக்கியமான பகுதியாகும். பட்டர்பிளை, ஃப்ரண்ட் பல்லு, லெஹெங்கா ஸ்டைல் (Butterfly, Front Pallu, Lehenga Style) மற்றும் பிற டிராப்பிங் ஸ்டைல்கள் உங்கள் தோற்றத்தை தடையின்றி மேம்படுத்தலாம்.
புடவையை நேர்த்தியாக ப்ளீட்(pleasts) செய்வதற்கும், உங்கள் விருப்பப்படி உங்கள் புடவையை ஸ்டைல் செய்ய சரியான முறையில் பின்(pin) செய்வதற்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.
5. உங்கள் சேலையை அழகான துணைக்கருவிகளுடன்(accessories, shoes, jewelry, handbags) பூர்த்தி செய்யவும். அணிகலங்கள் (accessories) உங்கள் தோற்றத்தை நிறைவு செய்கின்றன. இருப்பினும், அணுகல் என்பது நீங்கள் அணிந்திருக்கும் சேலை வகையைப் பொறுத்தது. நீங்கள் திருமணங்கள் அல்லது சமூகக் கூட்டங்களுக்கு கனமான சேலை அணிந்திருந்தால், நீங்கள் எளிதாக கனமான பாகங்கள் பயன்படுத்தலாம். ஆனால், நீங்கள் தினசரி உடுத்தும் புடவைகளைத் தேர்வு செய்கிறீர்கள் என்றால், உங்கள் தோற்றத்தை சமநிலைப்படுத்த ஒளி பாகங்கள்(light weight jewels or accessories) தேர்வு செய்ய வேண்டும்.
இன்று பரவலாக தன்னை தானே மாய்த்துக்கொள்வோரது தொகைகள் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றது. உலகளாவிய ரீதியில் கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை மூல மரண சதவீதமானது 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 15 வயது முதல் 40 வயது வரை ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலான மரணங்கள் தற்கொலை காரணமாகவே நிகழ்கின்றன. அதிலும் உலகளாவிய ரீதியில் அதிகளவு தற்கொலைகள் இடம்பெறும் நாடுகள் எனும் பட்டியலில் நான்காவது இடமாக இலங்கையே காணப்படுகின்றதென உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கையில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் 28.8 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இவற்றில் பெரிதும் மன உளைச்சல் மற்றும் போதை வஸ்து பாவனையினாலேயே பலர் இறக்கின்றனர்.
வாழ்க்கையின் ஒரு சிறு அலை, ஒரு சிறு சவால், ஒரு சிறு ஏமாற்றம் இன்றைய இளம் தலைமுறையினரை ஏன் உயிரை மாய்க்கச் செய்கின்றது? உளவியல் ரீதியாக ‘Resilience’ என இவை குறிப்பிடப்படுகின்றது. நவீன உலகில் நாகரீக போர்வையின் கீழ் வாழும் நாம், கைபேசிகளையும், கணிணிகளையும் மட்டுமே உற்ற நண்பர்களாகவும் துணையாகவும் பார்க்கிறோம். இந் நிலையில் இன்பம் துன்பம் சந்தேகம் தோல்வி வெற்றி என அனைத்து உணர்வுகளையும் அனைத்து நிகழ்வுகளையும் பகிரும் திண்ணையாக தொழில்நுட்பமே காணப்படும் போது மனிதத்துவத்தின் மகத்துவம் மனிதர்களிடையே அருகிப்போய் விட்டது. சுமித்ரயோ அமைப்பின் ஆய்வின்படி இலங்கையில் வடமேல் மாகாணத்திலேயே அதிகமான தற்கொலைகள் இடம்பெறுகின்றன.
அத்துடன், தற்கொலை மூன்று வகை என “எமில்ட் துர்கைம்” குறிப்பிட்டுள்ளார். அதாவது, தனது இனத்தின் மீதான ஆழமான பற்று காரணமாக செய்து கொள்ளும் தற்கொலை, ஒரு மனிதன் தான் சார்ந்த சமூகத்தை விட்டு தனிமைப்படுத்தப் படுவதால் ஏற்படும் மனவெழுச்சி காரணமாக தற்கொலைக்குத் தூண்டப்படல், எதிர்கால வாழ்க்கை நிச்சயமற்ற நிலையில் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களுக்கு ஏற்று வாழத் தெரியாமல் தற்கொலை செய்தல் என குறிப்பிட்டுள்ளார். தற்கொலை என்பது ஒரு நோயாகவே அணுகப்படுகின்றது.
ஆண்டுதோறும், அக்டோபர் 10-ஆம் திகதி, உலக மனநல ஆரோக்ய நாள் கடைபிடித்து வரும் நிலையில், இன்னும் மன உளவியலின் உச்சகட்ட தாக்கமான தற்கொலைகள் தொடர்பில் இன்னும் சமூக அளவிலோ தனிப்பட்ட மக்கள் மனதிலோ போதியளவு தெளிவு குறைவாக காணப்படுகின்றமை கவலைக்குரியது. மனவியல் தொடர்பிலான பிரச்சினை என்று அணுகும்போது பல்வேறான சிக்கல் மிகுந்த அமைப்பாகவே மனிதனது உளவியல் அமைகின்றது. பண்டைய காலங்களில் படையெடுப்புக்களின் போது நாட்டின் மக்களை காப்பதற்காக வீரர்கள் தாமாக முன்வந்து உயிரை மாய்த்துக்கொண்டனர். தன்னைச் சார்ந்தவர்களது நலனுக்காக தம் உயிரை அர்பணிக்குமளவு மன உறுதி கொண்டவர்கள் காலம் கடந்து போய் தன் சுயம் சார்ந்த உறுதித்தன்மை இழந்த மரணத்தேடல்கள் நெருடலுக்காகும் அம்சமாக காணப்படுகின்றது.
இதன் அடிப்படையில் அணுகும் போது பரீட்சையில் சித்தி பெறாத ஒரு சில மாணவர்கள் அடுத்தகட்ட நகர்தலுக்கான திராணியிழந்து மரணத்தை தேடுகின்றனர். ஆயினும் அதே பரீட்சையில் சித்தியடையாத அதே குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இருக்கும் ஏனைய பல மாணவர்கள் இவ் விபரீத முடிவினை நாடாமல் தமது வாழ்வியலுக்கான வளம் மிக்க பாதைகளை தேடிச் செல்கின்றனர். ஏன் இந்த முற்று முழுதான வேறுபாடென்பதை நாம் ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயம். தற்கொலை என்பது உணர்ச்சி வசப்பட்ட நிலை. மன அழுத்தத்தின் இறுதிக்கட்டமாக, ஒரு நபர் கடுமையான மனநல கோளாறால், அதாவது ஸ்கிசோஃப்ரினியா, அல்சைமர் மற்றும் டிமென்ஷியாவால் பாதிக்கப்படும் போது தம் உயிரை மாய்த்துக்கொள்ள முற்படுகின்றனர். ஒரு மனிதன் தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளும் நிலைக்குப் போகிறான் என்றால் அவன் எவ்வளவு மனவேதனை மற்றும் மன உளைச்சல் அடைந்திருப்பான் என்று அணுக வேண்டியது அவசியம்.
இவ்வாறு மனதின் சுமைகளால் அல்லல்பட்டு அவதியுறுகையில் அச்சு மையை இறக்கி வைப்பதற்கான வெளிகள் பலருக்கு கிடைப்பதே இல்லை. உலகில், ஒரு வருடத்தில் 8,00,000 தற்கொலை மரணங்கள் நிகழ்கின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நிச்சயமாக இல்லை, ஒவ்வொரு 40 நொடிகளிற்கும் ஒரு தற்கொலை மரணம் பதிவு செய்யப்படுகின்றது. தற்கொலை மரணங்கள் இவ்வாறு இருக்க தற்கொலைக்கான முயற்சிகள் இதிலும் 25 மடங்கு அதிகமாகவே இருக்கின்றது. எம்முடைய பார்வையில் தற்கொலைகளின் பின்னணியில் ஏதோ ஒரு குறிப்பிட்ட காரணம் இருக்கின்றமை போல தோற்றமளிக்கின்ற, போதிலும் ஒவ்வொரு தற்கொலையின் பின்னணியிலும் பல்வேறு உயிரியல், உளவியல் மற்றும் சமூக காரணிகள் உள்ளன.
இலங்கையில் இடம்பெறும் தற்கொலைகள் என்று நோக்குகின்ற போது அண்மையில் குறிப்பாக மட்டக்களப்பின் அழகுக்கு பெயர் போன கல்லடிப் பாலம், இப்போது தற்கொலை மரணங்கள் அடிக்கடி நிகழும் இடமாக மாறியிருக்கிறது. கல்லடிப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த 63 தற்கொலைகளில், 14 தற்கொலைகள் கல்லடிப் பாலத்தில் இடம்பெற்றதாக மட்டக்களப்பு மாநகரசபை மேயர் ரி.சரவணபவன் தெரிவிக்கின்றார்.
மன பலவீனம் உடையவர்கள் மட்டுமே தற்கொலை முடிவுகளிற்கு தூண்டப்படுகின்றார்கள் எனும் சமுதாய எண்ணக்கரு எதிர்மறையானதே. மாறாக மனதளவில் திண்ணமுடையவர்களும் இம்முடிவை நாடுகின்றனர். இவ்வாறான தற்கொலை மரணங்களுக்கான காரணங்களை சற்று விரிவாக நோக்கினால், சிறுவயதில் ஏற்படுகின்ற இன்னல்கள் மனதளவில் உறுதியற்ற நிலையையும் விருத்தியையும் ஏற்படுத்தி விடுகின்றன. அவ்வகையில் வறுமை, பாடசாலை இடை விலகல் அல்லது விலக்கப்படல், பெற்றோருக்கு இடையே பிரச்னைகள், அதன் காரணமாக பெற்றோரது உறவு முறிதல், நண்பர்களோடு கருத்து முரண்பாடு, பிரச்னைகள், நட்பு முறிவு, இளவயது காதல் தோல்வி. போதைப்பழக்கத்துக்கு அடிமையாதல் போன்றன இளமையிலேயே மரணத்தை நோக்கி பயணிப்பதற்காக தூண்டப்படுகின்றது.
இவை தவிர குடும்பத்தில் யாராவது தற்கொலை செய்துகொண்டால் அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் அவரது குறித்த குடும்பத்தை சேர்ந்த பலரையும் தற்கொலைக்கு தூண்டுகின்றமை ஆபத்தானது. இவை மட்டும் அல்லாமல் பல்வேறு பட்ட உளவியல் தாக்கங்கள் பெருமளவு தற்கொலை மரணங்களுக்கான பின்னணியாக இருக்கின்ற அதேவேளை இச் சமூக பொருளாதார பின்னணிகள் பலரை தற்கொலைக்கு தூண்டுவதாக அமைகின்றது. தற்கொலை எண்ணம் 100இல் 17 பேருக்கு தோன்றக்கூடியதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மேலும் பெண்களை விட ஆண்கள் தான் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நோக்கினால், பிறரால் ஒதுக்கி வைக்கப்படும், கேலி கிண்டல் மற்றும் நையாண்டிக்குட்படுதல், ஏதாவதொரு காரணத்தின் பொருட்டு பிறரது விமர்சனங்களிற்கு உள்ளாதல், உறவினர்கள் மற்றும் குடும்பத்தவர்களது புறக்கணிப்பு போன்ற பல காரணங்களால் தம்மை தாமே தாழ்வாக எண்ணிக் கொள்ளுதலும் தனிமை விரும்பிகளாக மாறுதலும் விரக்திக்குள் தள்ளுகின்றது. இதன் காரணமாக மனதளவில் மேலும் மேலும் ஏற்படும் அழுத்தங்கள் ஒரு கட்டத்தில் தாங்க இயலாத நிலையில் அடுத்த கட்ட நகர்வு குறித்த பயம் மற்றும் இயலாமையினால் தன்னை மரணித்துக்கொள்ள முயல்கின்றனர். குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான ஒற்றுமையின்மை, கணவன் மனைவி பிரிவு, சந்தேகம், குடும்பப் பிணக்குகள், பாலியல் ரீதியிலான தாக்கம், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவின்மை போன்றனவற்றாலும் இப்படியான முடிவினை நாடுகின்றனர்.
இவ்வாறிருக்க தற்கொலைக்கு முயல்வோரை நாம் எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது எனும் ஐயம் தொடர்பான தெளிவு பலருக்கு இருப்பதில்லை. ஒரு சராசரி மனிதனின் எண்ண அலைகளுக்கும் தற்கொலை எண்ணம் உடைய ஒருவரின் சிந்தனைக்குமிடையில் அதிகளவான வேறுபாடுகள் உள்ளன. ஒருவர் தற்கொலை செய்துகொள்ளப் போகிறார் என்பதற்கான ஆரம்ப அறிகுறிகளாக குறித்த நபர் பதற்றமாக இருப்பது, எதிலுமே ஈடுபாடு காண்பிக்காமல் இருப்பதுடன் அவர்களுக்கு நெருக்கமான பிடித்த அம்சங்களில் நாட்டமின்றி இருத்தல், விடைபெறுவது போன்ற தொனியிலும் விரக்தியான முறையிலும் கருத்துக்களை வெளிப்படுத்தல், எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகளற்றுப்போய் இருத்தல், இப்படியான நிலையில் இருப்பவர்களை கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
இந் நிலையில் இவர்களிற்கு தேவைப்படுவதெல்லாம் ஒரு ஆறுதல், தம்மை தாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு துணை, துயரை பகிர்ந்து கொள்ள புரிதலுடனான தோழமை அவ்வளவே. எவ்வாறான சூழ்நிலையில் தற்கொலைகளை நாடுபவர்கள் கூட ஒரு நிமிடம் தாமதித்தால் அவ் எண்ணப்பாங்கை அகற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்துடன் தற்கொலைகளை குறைப்பதற்கான மிக உயர்ந்த தீர்வாக நெருக்கமான உறவுகளுடனான நேரப்பகிர்வே அமையும். உறவுகளுக்காக நேரம் ஒதுக்குதல் என்பது ஒரு உயிரை வாழவைக்கும் செயற்பாடு என்பதை மக்கள் ஒவ்வொருவரும் உணர்தல் அவசியம். நம்பிக்கையான கருத்துக்களை பகிர்தல், நேர்மறையான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தல், பாதிக்கப்பட்டவரை தனிமையில் விடாமல் இருத்தல் போன்றவற்றை கைக்கொள்ளல் சிறந்தது.
தற்கொலை எண்ணத்தை அகற்றுவதற்கு பிரதானமாக குறித்த எண்ணத்திற்கான காரணங்களை அறிந்து அகற்றல் அவசியம். இளைஞர்களை தற்கொலை செய்து கொள்வதிலிருந்து தடுக்கும் விதமாக பல தொண்டுநிறுவனங்களும் அவர்களுக்கு ஆலோசனை, அறிவுரை, ஆறுதல் கூறி அவர்கள்தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்த முயன்று வருகின்றன. இலங்கையில் தற்கொலைகளை தடுக்கும் நோக்குடன் சுமித்ரயோ என்ற அமைப்பு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ் அமைப்பின் பணிகள் என்று நோக்குகின்ற போது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுபவர்கள் இந்த அமைப்பின் உதவியை நாடும் பட்சத்தில் அவர்களுக்கு உளவள ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் என்பன வழங்கப்படும். நாடளாவிய ரீதியில் அனைத்து மாகாணங்களிலும் சுமித்திரயோவின் தற்கொலை தடுப்பு சேவைகள் வழங்கப்படுவதால் 0112 674 436 இவ்விலக்கத்தின் மூலம் நெருக்கடி நிலையில் தொடர்பு கொள்ள இயலும்.
இவை மட்டும் அல்லாமல் சாந்திகம், வல்லமை, தேவைநாடும் மகளிர் அமைப்பு, National institute of Mental health, Global and Cultural Mental Health Unit (GCMHU), Centre for Mental Health, Suicide First Aid Guideline Srilanka, போன்ற அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை நேரிலோ அல்லது தொலைபேசி ஊடாகவோ நாடுவதன் மூலம் உளவள ஆலோசனைகளை பெறமுடியும் என்பதோடு1333 என்ற இலக்கத்தின் ஊடாக CCC Foundation Srilanka என்ற உளவள சேவை நிலையத்தையும் தொடர்பு கொண்டு வழிகாட்டல்களை பெற இயலும். அத்துடன் 1926 என்ற இலக்கத்திற்கு அழைப்பதின் மூலம் (NIMH) National Mental Health Helpline மூலம் தற்கொலை தடுப்பு தொடர்பான உடனடி உதவியை பெற இயலும்.
உலகில் விலைமதிப்பற்றதாகக் கருதப்படும் முக்கியமானவற்றுள் ஒன்று மனித உயிர். ஆக ஒவ்வொரு தனிமனிதனும் எவ்வாறான சூழ்நிலையையும் தாண்டி பயணிக்க இயலுமளவிற்கு தன்னைத்தானே வலுப்படுத்திக் கொள்ளுதல் இன்றியமையாதது. அத்துடன் ‘நடக்காது’, ‘கிடைக்காது’, ‘முடியாது’ ‘இயலாது’, ‘நான் இதற்கு தகுதியற்றவன்’ என்பது போன்ற எதிர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். நேர்மறையான எண்ணமுள்ள மனிதர்களுடனிருப்பதோடு நம்பிக்கையானவர்களிடம் வாழ்வியல் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலும் ஆரோக்கியமானது. அத்துடன் மன அழுத்தங்களை குறைக்கும் வகையிலான இசை, இயற்கை முதலானவற்றை ரசித்தலோடு பல புதிய பழக்கங்களை பொருத்திக் கொள்ளுதலும் நன்று. வாழ்க்கையில் ஏற்படும் கவலைகள் துன்பங்களையும் கடந்து வாழ்க்கையை சுவாரஸ்யமானதாக அமைக்க இளைஞர்கள் முன்வருதல் சிறப்பு.
மொத்தம் அறுபத்தி எட்டு நாட்கள் அவள் வீட்டுக்கு மீண்டும் மீண்டும் டெலிவரி செய்துவிட்டான். சிறியதோ, பெரியதோ, விலை கூடியதோ, குறைந்ததோ, ஏதோ ஒரு பொதியோடு தினமும் அந்த வீட்டு முன்னால் சென்று நிற்பான். ஒரு நாளேனும் அந்த வீட்டுக்கு ஏதாவது ஒரு பொருளை விநியோகம் செய்யாது அந்த பாதையை கடந்ததில்லை அவன்.
சந்துரு ஒரு “டெலிவரி ஏஜெண்ட்” ஆக வேலைக்கு சேர்ந்து இன்றோடு ஐந்து மாதங்கள் கடந்துவிட்டது. பதுளையில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் அவன். மெலிந்த உயர்ந்த தேகத்துடனும், குறுந்தாடியுடனும், துறுதுறுவென காட்சியளிப்பான். ஊரில் அவனுடைய பாட்டியோடு சண்டை போட்டு வேலை தேடி கொழும்பு புறப்பட்டு வந்தான். கொழும்புக்கு வந்த போது கொவிட் காரணத்தினால் அரசாங்கம் இரண்டாம் கட்ட ஊரடங்கை அறிவித்திருந்தது. அந்த நேரத்தில் எந்த வேலையும் அவனுக்கு கிடைக்கவில்லை. ஊருக்கு திரும்பி போக கூடாது என்ற வைராக்கியம் மட்டும் அவனுள் இருந்தது. அவனது பள்ளி நண்பனின் உதவியுடம் எப்படியோ கொஞ்ச காலம் தாக்குபிடித்தான்.
சந்துருவின் பாட்டி வள்ளிக்கு அவன் எப்போதும் அவளுடனேயே இருக்க வேண்டும் என்ற ஆசை. அவனுக்கு பெற்றோர் இல்லை. அவனை சிறுவயது முதல் வளர்த்தது பாட்டி தான். அவனுக்கு இருபது வயது ஆரம்பித்ததில் இருந்தே பெண் பார்க்க ஆரம்பித்திருந்தாள். சந்துருக்கு சொந்ததிலேயே ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் முடித்து வைக்க நினைத்தாள். ஆனால் அவனுக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.
சந்துருவிற்கு நிறைய கனவுகள் இருந்தது. அவனது ஊரின் குறுக்கு மறுக்கான பாதைகளில் தன்னுடைய சொந்த ஆட்டோவில் ராஜா போல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சவாரி செய்ய வேண்டும் என ஆசைப்பட்டான். கொஞ்சம் அதிகமாக அதில் ஒரு வெள்ளைக்கார பெண் இவனை பார்த்து காதல் வயப்பட்ட இருவரும் திருமண பந்ததில் இனைவதாகவும் அவனுக்கு கனவுகள் இருந்தது. ஆனால் பாட்டி எல்லாத்தையும் தொம்சம் செய்துவிடுவாள் போல இருந்தது. அதனால் பாட்டியோடு சண்டை பிடித்து கொழும்பு வந்து சேர்ந்தான்.
பாட்டி அவனுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைத்துவிட்டது என்று தெரிந்ததும் தைய தக்கா என்று குதித்தாள், பேரன் பெரிய இடத்து வேலைக்கு போகிறான் என்று தம்பட்டமடித்தாள். அவனது குட்டி கிராமத்தை பொருத்தமட்டில் வீட்டில் யாராவது கொழும்பில் வேலை செய்கிறார்கள் என்பதே அவர்களுக்கு பெருமையான விடயம் தான்.
சந்துருக்கு முதல் இரண்டு மாதம் கொடுக்கப்பட்ட பாதை கொழும்புக்குள் தான் இருந்தது. ஆனால் மூன்றாவது மாதம் கம்பனியால் அவனுக்கு நீர்கொழும்பு பகுதியில் அறை ஒதுக்கப்பட்டது. நீர்கொழும்பு செல்லும் பிரதான வீதியை சுற்றியுள்ள பாதை அவனுக்கான விநியோக பாதையாக மாற்றப்பட்டது.
சந்துருவின் வேலைக்குட்பட்ட இடங்கள் பெரும்பாலும் நீண்ட கடற்கரைகளை ஒட்டிய அழகிய இடங்களாகவே காட்சியளித்தன. அதன் ரம்மியமான தெருக்களில் வண்டியோட்டி அலைவதை அவன் பெரிதும் விரும்பினான். இலங்கையின் மத்திய மலைநாட்டில் பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ தெரியவில்லை அவனுக்கு கடலின் மீது அளாதியான ஈர்ப்பு இருந்தது. கடல் எப்பொழுதும் அவனுக்கு ஆச்சரியத்தையும் அமைதியையும் தந்தது.
சுற்றுலா பயணிகள் வந்து தங்கும் விடுதிகள், ரெஸ்டாரண்டுகள் அந்த இடத்தில் அதிகம் இருந்தது. அந்த மாதிரியான கடைகளில் சென்று பாலின் விலையை கேட்டால் தேனின் விலையை சொல்வார்கள். ஆகவே அவன் அந்த பக்கம் செல்வதே இல்லை.
தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு விநியோகம் செய்யவேண்டிய பொருட்கள் அவனுக்கு கிடக்கும். ஒரு பெரிய மூட்டையில் அதை போட்டுக்கொண்டு கம்பனி ஸ்கூட்டியில் விநியோகம் செய்ய கிளம்புவான். எப்படியும் மாலை வரை அவனுக்கு வேலை இருக்கும்.
சந்துருக்கு அந்த வேலை பிடித்து போனதுக்கு சில காரணங்கள் இருந்தது. அந்தந்த பொதிகளுக்கு உரிமையானவர்கள் அதை பெற்றுக்கொள்ளும் போது அவர்களிடம் இருக்கும் ஆவல், மகிழ்ச்சி என்பனவற்றை அவன் மிகவும் இரசிப்பான். மகிழ்ச்சியோடு அவனுக்கு நன்றி சொல்லும் சிலரை பார்க்கும் போது ஏதோ தானே அவர்களுக்கு அதை வாங்கி கொடுத்ததை போல உணர்வான். கிறிஸ்துமஸ் இரவுகளில் “சாண்டாகிளாஸ்” ஒரு மூட்டையில் பரிசுகளை எடுத்துக்கொண்டு வலம் வருவதை போல தன்னை சில சமயம் நினைத்துக்கொள்வான். ஆனால் பகல் பொழுதுகளில் உச்சி வெயிலில் வண்டி ஓட்டுவதை நினைக்கும் போது மட்டும் தான் கொஞ்சம் வெறுப்பாக இருக்கும்.
ஒரு சிலருக்கு தொடர்ந்து பொருட்கள் வந்துக்கொண்டே இருக்கும். அது போன்ற நபர்களுடன் அவனுக்கு நல்ல உறவு ஏற்பட்டு இருந்தது. தேவாலயத்துக்கு அருகே இருக்கும் தாரிக்கா என்ற சிங்கள பெண்; அவளது காணாமல் போன தம்பியை போல அவன் இருக்கிறான் என்று அன்பாக சொல்லுவாள், அக்கறையுடன் பேசுவாள். கடற்கரைக்கு அருகே இருக்கும் டாக்டர் கணேஷன் வீடு ; டாக்டர் பேச ஆரம்பித்தால் அவனை விடுவதே இல்லை. வாரத்துக்கு ஒருமுறை அவனுக்கு விடுமுறை கிடைக்கும் போது டாக்டர் வீட்டுக்கு தான் செல்லுவான். மிஸ்டர் அண்ட் மிஸிஸ் குணபால ; அவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்து ஏதாவது அனுப்புவார்கள், உதவிக்கு யாரும் இல்லாததால் சில நேரங்களில் சந்துரு தான் அரிசி பருப்பு போன்றவற்றை வாங்கி கொடுப்பான். சூப்பர் மாடல் சில்மி ; எப்போதும் அவன் கன்னத்தை கிள்ளி தான் பேசுவாள் . இவர்கள் எல்லோரும் அவனுக்கு நண்பர்கள் போல தான். வாரம் இரு முறையாவது அவர்களுக்கு ஏதாவது பொதிகள் வரும். சில நேரங்களில் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து உபசரித்த சந்தர்பங்களும் உண்டு. சந்துருவும் அதே போல யாருடனும் இலகுவாக பேசி ஒட்டிக்கொள்ளும் பழக்கம் உடையவன்.
சந்துருவின் இந்த வாடிக்கையாளர்கள் எல்லாவற்றிலும் இருந்து மாறுப்பட்ட வாடிக்கையாளர் தான் இலக்கம் 81 வீட்டில் வசிக்கும் ஆருத்ரா. ஆள் நடமாட்டமே இல்லாத அமைதியான ரிச்சர்ட் தெருவின் கடைசி வீடு அது. முதல் இரண்டு மூன்று நாட்கள் அந்த வீட்டு முகவரிக்கு டெலிவரி வந்த போது அவன் பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை. ஒரு நாள் விடாமல் இது தொடர்ந்த போது தான் அவனுக்கு அசாதாரணாமக பட்டது. எப்போதும் பகல் உணவுக்கு முன் அவன் அந்த வீட்டு கார்லிங் பெல்லை தட்டி விடுவான். அந்த பெண் அப்போது தான் தூங்கி எழுந்து வெளியே வந்து பொருளை வாங்கிச்செல்வாள். தினமும் அவள் வீட்டுக்கு ஏதாவது விநியோகம் செய்வது மட்டுமல்லாது அவளை எழுப்பி விடும் வேலையும் அவன் தான் செய்து வந்தான்.
ஆருத்ரா பார்ப்பதற்கு அழகாகவும் பெரிய இடத்து பெண்ணாகவும் தெரிந்தாள். நல்ல உயரம், கட்டையாக வெட்டப்பட்ட கூந்தல், வசீகரமான பார்வை என காட்சியளித்தாளும் எப்போதும் அவள் முகத்தில் ஒரு சோகம் ஒட்டிக்கொண்டே இருக்கும். அவளுக்கு வரும் பொதிகளின் மூலம் அவள் பெயர் ஆருத்ரா என்பதை அறிந்துக்கொண்டான். ஆனால் அதைத்தாண்டி அவள் பற்றிய எதுவுமே அவனுக்கு தெரியவில்லை.
அந்த வீட்டில் அவளுடன் இருப்பது யார்? எப்போதும் அவள் முகம் வாடி இருப்பது ஏன்? தினமும் அவளுக்கு ஆடர்கள் வருவது ஏன்? அந்த ஆடர்களில் இருப்பது என்ன? போன்ற கேள்விகள் அவனிடம் இருந்தது. அவனது அறையில் தங்கும் சக நண்பனோடு இதைப்பற்றி கேட்டபோது அவள் ஏதாவது ஆன்லைன் பிஸினஸ் செய்ய கூடும். ஆன்லைனில் குறைந்தவிலையில் பொருட்களை வாங்கி அதை நல்ல லாபத்திற்கு வெளியில் விற்பார்கள். அவளும் அப்படித்தான் ஏதாவது செய்வாள் என்று சொன்னான். ஆனாலும் சந்துருவிற்கு ஏதோ தவறாகவே பட்டது.
குறிப்பாக அன்றொரு நாள் அவள் நடந்துக்கொண்ட விதம் அவனை மேலும் சிந்திக்க வைத்தது. வழக்காம அன்றைய நாளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய பொருட்கள் கம்பனிக்கு வரும் போதே அதை பெற்றுக்கொள்ள வேண்டியவர்களுக்கு மின்னஞ்சலும், குறுஞ்செய்தியும் சென்றுவிடும். ஆதே போல வாடிக்கையாளர்களின் மொபைல் இலக்கம் டெலிவரி ஏஜெண்ட்களுக்கும், டெலிவரி ஏஜெண்ட்களின் மொபைல் இலக்கம் வாடிக்கையாளர்களுக்கும் பகிரப்படும்.
அன்று அவன் விநியோக பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பும் போது அதிசயமாக ஒன்றை கவனித்தான். அந்த பெண்ணிற்கு எந்த பொருளும் வந்திருக்கவில்லை. அவன் வழக்கம் போல விநியோகம் செய்திக்கொண்டிருந்த போது பகல் வேலையை தாண்டி அவனுக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அழைப்பில் பேசியது அவள் தான்.
ஏன் இன்னும் வரவில்லை? எனக்கு இன்று எந்த பார்சலும் வருவதாக ஏன் குருஞ்செய்தி வரவில்லை என்று கொஞ்சம் அதட்டலாக கேட்டாள். அவள் அப்போது தான் எழுந்திருக்கவேண்டும் என்று நினைத்தான். அன்று அவளுக்கு பொருள் எதுவும் வந்திருக்கவில்லை அது தான் கொண்டு வரவில்லை, நீங்கள் ஏதேனும் ஆர்டர் செய்திருந்தீர்கள் என்றால் அது நாளை வரலாம் என்று கூறினான். அதற்கு அவள் இன்று அந்த பொருள் வீட்டுக்கு வரும் என்று ஆன்லைனில் காட்டியதாக சொன்னாள், சந்துரு அமைதியாக அந்த மாதிரி சில நேரங்களில் நடக்கும் எங்காவது தாமதம் ஏற்பட்டு இருக்கலாம் இது போன்றான சூழ்நிலமைகளில் பெரும்பாலும் மறுநாள் அந்த பொருள் வீடு தேடி வந்துவிடும் என்று சொன்னான். அவள் அடங்கவில்லை. குழந்தைகளுக்கு ஒரு பொருளை வாங்கி கொடுப்பதாக கூறிவிட்டு பிறகு மறுக்கும் போது அவர்கள் நடந்துக்கொள்வதை போல இருந்தது அவளது பேச்சு. எப்படியோ அவளை சமாளித்து அழைப்பை துண்டித்தான். அவனுக்கு வினோதமாக இருந்தது இரண்டு மாதங்களுக்கு மேலாக ஒரு நாள் விடாமல் அவளுக்கு பொருட்களை அவன் டெலிவரி செய்திருக்க, இந்த ஒரு நாளுக்கு அவள் இப்படி நடந்துக்கொள்வது அவனுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. அவனது அறை நண்பன் சொன்னது போல ஏதேனும் வாங்கி விற்கும் தொழில் தான் செய்கிறாளோ என்று சந்தேகித்தான்.
மறுநாள் அவன் சொன்னது போலவே அவளுக்கான பொருள் வந்தது. அதை எடுத்துக்கொண்டு அன்று வழக்கத்துக்கு மாறாகவே சீக்கிரமாக சென்று அவள் வீட்டு வாசலில் நின்றான். எப்போதும் வாசலில் நின்று இரண்டு, மூன்று கால் கொடுத்தால் போதும் அவள் வெளியே வந்துவிடுவாள். ஆனால் இன்று பல முறை முயற்சி செய்தும் அவள் அழைப்பை ஏற்கவில்லை. முதல் முறையாக அந்த கேட்டை தாண்டி உள்ளே நுழையும் தருணம் வந்தது. நீண்ட முற்றம். வீட்டின் கதவு மட்டும் மண் பாதை. இரண்டு பக்கமும் கவனிக்கப்படாமல் வளர்ந்து கிடந்த செடி கொடிகள். கதவுக்கு நேர் மேலே ஒரு மல்லிகை பந்தல் சுற்றிக்கொண்டிருந்தது. அந்த வீட்டுக்கு அழைப்பு மணி போன்ற ஒன்று இருப்பதாக தெரியவில்லை. கதவை தட்டுப்பார்த்தான். எந்த பதிலும் இல்லை. மீண்டும் மீண்டும் தட்டினான் எந்த சலனமும் இல்லை, நேற்று பொருள் வராததற்கு அவ்வளவு பேசினாள் இன்று ஆளை காணவில்லை என நினைத்துக்கொண்டான். கிளம்பலாம் என தயாரானான் அப்போது தான் அவனுக்கு அந்த கதவு பூட்டப்படாது திறந்திருப்பது தெரிந்தது.
மெல்ல கதவை தள்ள அது திறந்துக்கொண்டது. வீடு முழுக்க ஏராளமான பொருட்கள் அலங்கோலமாக பரப்பி கிடந்தது, பராமறிக்கப்படாமல் குப்பையாக இருந்தது. ஹாலில் ஒரு சோபாவும் அது முன்னால் இருந்த சிறிய மேசையில் ஒரு லாப் டாப் திறந்த நிலையிலும் இருந்து. அதற்கு பக்கத்தில் காலியான ஒரு விஷ்கி பாட்டி விழுந்து கிடந்தது. ஸ்ரீ அவளை அழைத்து பார்த்தான் எந்த பதிலும் இல்லை. ஏதோ தவறாக உணர்ந்தான். இந்த இரண்டு மாதத்தில் இப்படி நடப்பது இது தான் முதன் முறை.
மெல்ல உள்ளே எட்டிப்பார்த்தான் அவனுக்கு பகீர் என்றது. உள்ளே படுக்கை அறைக்கு போகும் வழியில் இரண்டு கால்கள் தரையில் கிடப்பதைப்பார்த்தான். ஒரு கனம் தாமத்தித்தான் மறுகணம் உள்ளே சென்று பார்த்தான் அங்கே அந்த பெண் மயங்கிய கிடந்தாள். அவளிடம் நெருங்கி பார்த்தான். மூச்சு இருந்தது. அவள் மூக்க முட்ட குடித்திருக்க கூடும் விஷ்கி வாடை குப்பென்று அடித்தது. அவள் பெயரை சொல்லி அழைத்தான் அவளிடம் மாற்றமில்லை அவளை அப்படியே விட்டு போக மனமில்லை. அவளை தட்டி எழுப்பினான். அவள் உடலில் நடுக்கம் தெரிந்தது. அவள் கண்களை திறந்தாள் ஆனால் கண்கள் மேலே மேலே சென்றன . சந்துருவிற்கு பயமாக இருந்தது. அவனது டெலிவரி மூட்டையை அப்படியே வைத்துவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு அவன் வாடிக்கையாக சொல்லும் டாக்டர் கனேஷன் வீட்டுக்கு பறந்தான். டாக்டரிடம் நிலைமையை சொல்லி அவரை வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தான். இருவருமாக அவளை பிடித்து சோபாவில் வைத்தனர். டாக்டர் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார். ஆனால் அவளால் பேசவோ எழுந்து நிற்கவோ முடியவில்லை.
டாக்டர் அவளை ஆராய்ந்தார். அவள் உடல் நிலை மிக மோசமாக இருக்கிறது. மிக பலவீனமாக இருக்கிறாள் அவளை அருகில் இருந்து யாராவது பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறினார். இருவரும் அவளை குஷனில் படுக்க வைத்துவிட்டு சென்றனர். டாக்டர் அவள் எழும்பியவிடன் அவளை தன்னிடம் மருந்தெடுக்க வரும் படி அவளிடம் சொல்லிவிடு என கூறினார். அவளுக்கு வந்த டெலிவரி பொருளை அங்கேயே வைத்துவிட்டு கிளம்பினான் அவன்.
அந்த வீட்டுக்குள் அவன் பார்த்த சில விஷயங்கள் அவனை உருத்திக்கொண்டே இருந்தது. வீடு முழுக்க அவன் கண்ட குப்பைகள் எல்லம் அவளுக்கு வந்த பார்சல்களின் கவர்கள் தான், அத்தோடு அந்த வீட்டில் அங்கும் இங்குமாய் அலங்கோலமாய் இருந்த அனைத்து பொருட்கள் அவளுக்கு சந்துரு விநியோகம் செய்த பொருட்கள் தான். அவற்றை அவன் பார்த்த போது அதில் குழந்தைகளுக்கான பொருட்களும் பெரியவர்களுக்கான பொருட்களும் கலந்திருந்தது. ஆனால் அதில் அவளுக்கு தேவையான எதும் இருப்பதாக அவன் காணவில்லை. சந்துருவிற்கு அது வினோதமாக தெரிந்தது. அவளுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என யோசித்துக்கொண்டே இருந்தான். அவன் தினமும் வித்தியாசமான மனிதர்களை சந்திக்கிறான் ஆனால் இந்த பெண் அவனை சற்று சிந்திக்க வைத்தாள். பகல் உணவு உற்கொள்ளும் வேலை அவளது இலக்கத்தை வாட்சப்பில் போட்டு பார்த்தான். அதில் அவளது படம் காட்டியது. அவள் ஒரு ஆடவனோடும் ஒரு சிறுவனோடும் இருக்கும் படத்தை போட்டிருந்தாள். சந்துரு என்றும் பார்க்காத ஒரு சிரிப்பு அவள் முகத்தில் இருந்தது. மகிழ்ச்சியானவளாக தெரிந்தாள். அந்த படத்தில் இருப்பது அவளது கணவனும் குழந்தையுமாக தான் இருக்க வேண்டும் அப்படி என்றால் அவர்கள் இப்போது எங்கே. கேள்விகள் நிறைய உண்டானது.
மாலை வேலை அவன் வண்டியோட்டிக்கொண்டிருக்கும் போது அவளிடம் இருந்து அழைப்பு வந்தது. சடார் என்று பிரேக் அடித்து வண்டியை நிறுத்தினான். ஆருத்ரா அமைதியான குரலில் வீட்டுக்கு வந்துவிட்டு போனது நீங்களா என்றாள். சந்துரு தயங்கியபடி ஆம் என்றான். என்ன நடந்தது என்பதை பற்றி கேட்க அவன் நடந்த எல்லாவற்றையும் சொன்னான். ஆருத்ரா அமைதியாக இருந்தாள். சந்துரு பயந்தான். யாரை கேட்டு இதையெல்லாம் செய்தாய் என திட்டிவிடுவாளா என்று நினைத்தான். நீண்ட அமைதிக்கு பின் அவளிடம் இருந்து “தேங்கஸ்” என்று பதில் வந்தது. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளை டாக்டரிடம் சென்று பார்க்குமாறு சொன்ன போது அவள் தான் பார்த்துக்கொள்வதாக கூறி அழைப்பை துண்டித்தாள்.
மறுநாள் எப்போதும் போல அவளுக்கான பொதியை எடுத்துக்கொண்டு அவள் வீட்டு வாசலில் நின்று அழைத்தான். அவள் வெளியே வந்தாள். பொதியை பெற்றுக்கொண்டு நன்றி சொன்னாள். சிறிய அமைதிக்கு பின் நேற்று டாக்டர் இவ்வளவு தூரம் வந்திருக்கிறாரே அவருக்கு கொடுக்க உங்களுக்கு ஏதும் பணம் தேவையா? என்றாள் அவன் அப்படி எதுவும் தேவை இல்லை அவர் உங்களை போலவே தன்னுடைய வாடிக்கையான கஸ்டமர் தான் என்றான். அவள் சிரித்தாள். சந்துரு எதிர்ப்பார்க்காத ஒரு விடயத்தை சொன்னாள். அவனை வீட்டுக்கு வந்து டீ குடிக்க அழைத்தாள். அவன் மகிழ்ச்சியோடு கண்டிப்பாக வருகிறேன் ஆனால் இன்று இல்லை நாளை வருகிறேன், இன்று டெலிவரிக்கு பொருட்கள் அதிகாக இருக்கிறது என்றான். புன்னகையுடன் விடைப்பெற்று சென்றான்.
அன்று இரவெல்லாம் அவளது நினைவாக இருந்தான் சந்துரு. எப்படியாவது அவளை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என நினைத்தான். இன்று அவளது முகத்தில் அவன் பார்த்த அந்த புன்னகையை மீண்டும் பார்க்க நினைத்தான். அவளது வசீகரமான முகம் அவனது நினைவுகளில் வந்து வந்து மறைந்தது.
மறுநாள் எப்போதும் போல அவளது வீட்டுக்கு சென்றான். இந்த முறை ஒரு விருந்தினராக செல்கிறான். அவளுக்கு ஒரு பெரிய பிஸ்கட் பாக்கெட்டும் கொஞ்சம் பழமும் வாங்கிச்சென்றான். அவனை உள்ளே அழைத்து உபசரித்தாள் அவள். ஹால் கொஞ்சம் துப்பரவாக இருந்தது. அவனுக்கு காப்பி போட்டு குடுத்தாள்.இருவரும் மிக சாதாரணமான விஷங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
மெல்ல தைரியத்தை வரவழைத்துக்கொண்டு குழந்தையும் கணவனும் இப்போது எங்கே எனக்கேட்டான். அவள் அமைதியாக இருந்தாள். சம்மந்தமே இல்லாத வேறு எதையோ சொல்ல ஆரம்பித்தாள் . ”என்னுடைய பத்தாவது வயதில் நாங்கள் குடும்பமாக கனடா சென்று செட்டில் ஆகிவிட்டோம். தாத்தா பாட்டி மற்றும் சொந்தகங்கள் மட்டும் இங்க ஊரில் இருக்கார்கள். என்றாவது ஒரு முறை நாங்கள் அவர்களை பார்க்க வருவோம். இந்த முறை அம்மா, அப்பா இரண்டு பேரும் வரவில்லை. பதிலால நானும் என் கணவரும் மகன் ஹர்ஷனும் வந்தோம். அந்த நேரம் தான் இங்கே கோவிட் கொஞ்சம் வீரியமாக ஆரம்பித்திருந்தது என்னுடைய கணவனும், மகனும் கொரோனா பாஸிட்டிவ் ஆனார்கள்….”
அவள் அமைதியானாள். பிறகு மெல்ல நடந்ததை சொன்னாள்.
“அவர்களை காப்பாற்ற முடியவில்லை”
சந்துரு செய்வதறியாது அமைதியாக இருந்தான். அவளது நிலை தாங்கிக்கொள்ளும் பக்குவம் அவனிடம் இருக்கவில்லை. எதை சொல்லி அவளை தேற்றுவது என்றும் அவன் அறியவில்லை.
எனக்கு மறுபடி கனடா சொல்ல விசா கிடைக்கவில்லை. அங்கே நாங்கள் இருக்கும் குடியிருப்பிலும் நோய் தொற்று அதிகமானாதால் நாட்டுக்குள் யாரையும் அவர்கள் எடுக்கவில்லை. இன்று, நாளை என்று நான்கு மாதம் ஆகிவிட்டது. என்னால் ஊரிலும் இருக்க முடியவில்லை. அங்கு ஏகப்பட்ட பிரச்சனை. சொந்தங்களுடன் என்னால் சமாளிக்க முடியவில்லை அது தான் நான் கிளம்பிவிட்டேன் யாருக்கும் சொல்லாமல் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளம்பி வெகு தூரமாக இங்கு வந்து சேர்ந்தேன். ஆன்லைனில் தேடி இந்த வீட்டை பிடித்தேன். இன்றோ நாளையோ எனக்கு விமானம் கிடைத்துவிட்டால் நான் கிளம்பிவிடுவேன். எங்கு போனாலும் இந்த வேதனையில் இருந்து என்னால் மீள முடியாது. இருந்தாளும் எனக்கு இப்பொழுது என் அம்மா, அப்பாவிடன் போகவேண்டும்.
அவளது கண்கள் கலங்கியது. அமைதியாக இருந்துவிட்டு மேலும் பேசினாள்.
“இந்த ஆடர் எல்லாம் என்னுடைய கணவனுக்கும் ஹரிஸ்கும் பிடித்தமான பொருட்கள் தினமும் எதையாவது ஆடர் செய்வேன். இதோட இருக்கும் போது எனக்கு அவர்களுடன்இருப்பது போல இருக்கும்.”
இப்போது அந்த அறைமுழுதும் நிறம்பி இருந்த விளையாட்டு பொருட்கள், ஓவியங்கள், புத்தகங்களை பார்க்கும் போது சந்துருக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவன் அமைதியாக இருந்தான். என்ன சொல்லுவதென்றே அவனுக்கு தெரியவில்லை.
ஆருத்ரா தன்னைத்தேத்திக்கொண்டு சந்துரு பற்றி கேட்டாள். சந்துரு அவனது பாட்டி பற்றியும் அவன் ஊரை பற்றியும் சொல்ல ஆரம்பித்தான். பாட்டி அவனை கல்யாணம் கட்டிக்கொள்ள செய்த செயல்களையும் அவன் தப்பித்து இங்கு ஓடி வந்து வேலைப்பார்ப்பதையும் சொல்லிய போது ஆருத்ரா சிரித்தாள். கண்டிப்பாக ஒரு நாள் அந்த பாட்டியை சந்திக்கவேண்டும் என்றாள். சந்துரு தனக்கு மீண்டும் ஊருக்கு போவது தான் ஆசை. எல்லாம் ஒரு ஆட்டோ வாங்க காசு சேரும் வரைக்கும் தான். சேர்ந்த அடுத்த நொடி என் ஊருக்கு பறந்துவிடுவேன் என்று சொன்னான். அத்தோடு அவனது ஊர் மக்கள், உணவு, கோவில் திருவிழா, ஆறு, கிடங்கு, நீர் வீழ்ச்சி என அவன் இந்த ஐந்து மாதமாக இழந்தவற்றின் அருமைகளை சொல்லிக்கொண்டே வந்தான். அவளை அன்போடு ஊருக்கு அழைத்தான். அவளை கம்பனியின் முதலாளி அம்மா என்று சொன்னால் போது ஊரே கவனிக்கும் என்றான். ஆருத்ரா அவன் பேச்சை மிகவும் விரும்பினாள்.
நாட்கள் செல்ல செல்ல ஆருத்ராவுக்கும் சந்துருக்குமான பழக்கம் அதிகரித்தது. தினமும் அவளுக்கான டெலிவரியை எடுத்து வரும் போது அவளுடன் கொஞ்ச நேரம் சொலவிட்டு செல்லுவான். ஆருத்ரா பெரும்பாலும் சமைப்பதில்லை. நூடில்ஸ் அல்லது கடையில் ஆடர் செய்து தான் உண்டு வருகிறாள் என்பதை தெரிந்துக்கொண்டதும்; ஒரு நாள் தானே சமையளில் இறங்கினான். அவர்கள் ஊருக்கே உரிய கறிசோறு செய்துக்கொடுத்தான். ஆருத்ரா அத்தனை மாதத்திற்கு பிறகு ஒரு நல்ல விருந்து உண்டதாக சொன்னாள். காரம் மட்டும் கொஞ்சம் பார்த்து போடு என்னால் அதை மட்டும் தான் தாங்க முடியவில்லை என்று சிரித்தாள்.
சந்துரு ஆருத்ராவிற்கு நீர்கொழும்பின் விசேஷங்கள் காட்டினான். அவளை பைக்கில் அழைத்துக்கொண்டு முக்கியமான இடங்களை பார்வையிட கூட்டி சென்றான். அவன் எப்போது வந்து நடைப்போடும் கடற்கரைக்கு கூட்டி சென்றான். அவள் மகன் ஹர்சனுக்கும் கடற்கரை மிகவும் மிடிக்கும் வார இறுதியானாலே பீச்சுக்கு அழைத்து போகும் படி அடம்பிடிப்பான் என்றாள். போகும் இடங்களில் எதைப்பார்த்தாலும் அவளது நினைவுகள் இழந்த அவள் குடும்பத்தையே தொடர்பு படுத்திக்கொண்டு இருந்தது. ஆருத்ரா சந்துருவை அங்கிருந்த ஃபை ஸ்டார் ஹாட்டல்களுக்கு சாப்பிட கூட்டிச்சென்றாள். அவன் வாழ்நாளில் பாத்திராத உணவு வகைகளை வாங்கி கொடுத்து உண்ணவும் பழக்கினாள். அவர்கள் சாப்பிட்ட உணவுக்கான பில்லை பார்க்கும் போது அவனுக்கு தலைச்சுற்றியது. இருவரும் நீர்க்கொழுப்பின் புராதான தேவாலயத்துக்கு போய் திரும்பும் போது ஆருத்ரா அவனிடம் மனமுவந்து நன்றி சொன்னாள். இப்படியாக தன்னால் முடிந்த அளவு ஆருத்ராவுடன் நேரத்தை செலவளித்தான்
மூன்று மாதங்கள் ஓடிப்போனது. குளிர்க்காலம் ஆரம்பித்திருந்தது. அன்று சந்துரு மிகுந்த மகிழ்ச்சியுடனும் அதே சமயம் ஒரு வித குழப்பத்துடனும் இருந்தான். அவனது மகிழ்ச்சிக்கு காரணம் அவன் ஊருக்கு கிளம்புவது. அதுவும் ஆருத்ராவுடன் கிளம்புவது. கண்டிப்பாக இந்த பயணம் அவளது மனக்காயங்களில் இருந்து அவளை கொஞ்சம் வெளியில் கொண்டு வரலாம் என அவன் நம்பினான். அத்தோடு பல மாதங்களுக்கு பிறகு ஊரையும் அவனது பாட்டியையும் காணப்போகும் மகிழ்ச்சியும் இருந்தது. ஆனால் அவனது மனக்குழப்பத்துக்கு காரணம் வேறுமாறியாக இருந்தது.
ஆருத்ரவுடன் அவன் பழகிய இந்த மூன்று மாதங்கள் கண்டிப்பாக அவனது வாழ்வின் மறக்க முடியாத நாட்கள் தான். ஆருத்ராவிற்கு ஸ்ரீ எப்படி ஒரு உறவாக தோழனாக இருந்தானோ அதே போல ஊரை விட்டு பிரிந்து வந்த அவனுக்கு ஆருத்ராவும் ஒரு உறவாக தான் இருந்தாள். அவளிடத்தே மிகப்பெரிய மரியாதையும் அன்பும் அவன் கொண்டிருந்தான். ஆனால் ஒரு சில சம்பவங்கள் அவனை கொஞ்சம் குழப்பியது. அன்றொரு நாள் அவள் டீவி பார்த்துக்கொண்டிருந்த போது அவனது தோழில் சாய்ந்து தலை பதித்தது அவனை கொஞ்சம் நெருடியது. அதே போல் ஒரு நாள் திடீர் என எனக்கு விசா வரக்கூடாது என்று தோன்றுவதாக அவள் சொன்னதை அவனால் புரிந்த கொள்ள முடியவில்லை. ஆருத்ராவின் அந்த மாற்றமும் அவள் காட்டிய அன்பும் அவனை கொஞ்சம் குழம்ப வைத்தது. இது பற்றி அவன் டாக்டரிடம் கூறிய போது அவர் மேலும் குழப்பினார். காதலுக்கு வயதில்லை தான் ஆனால் அதை சுற்றி இருப்பவர்கள் பார்க்கும் விதத்தில் வித்தியாசம் இருக்கிறது என்றார். அவன் நிறைய யோசித்தான். எது எப்படியே அவனை நம்பி ஊருக்கு வரும் அவளை மகிழ்விக்க வேண்டியது அவனது கடமை என்று நினைத்துக்கொண்டான்.
அவன் ஊருக்கு கிளம்புவதாக முடிவானதும் இரண்டு நாட்கள் அவனால் ஆருத்ராவை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. விடுமுறைக்கு முன்னதாக அவன் செய்து முடிக்கவேண்டிய வேலைகள் நிறைய இருந்தது. எல்லாம் முடித்துவிட்டு அவளை காண வந்தான். எப்போதும் போல உரிமையோடு வீட்டின் உள்ளே நுழைந்த போது அங்கே யாரோ இரண்டு ஆடவர்கள் அமர்ந்திருந்ததை பார்த்தான். சற்று திகைத்துபோனான். அவர்கள் சந்துருவை கண்டு யார் நீ? என்பதை போல பாத்தார்கள். அவன் தாடு மாறி நிற்கவே உள்ளே இருந்து ஆருத்ரா வெளியே வந்தாள். அவள் ஸ்ரீயை பார்த்ததும் தடுமாறினாள். அவனை பார்த்து திருப்பி கொடுக்க பொதியொன்றும் இல்லை என்றாள். சந்துருவிற்கு புரியவில்லை. ஆனால் அவனை அந்த இடத்தில் அவள் விரும்பவில்லை என்பதை புரிந்துக்கொண்டான். அவன் வெளியேறியதும் உள்ளே இருப்பவர்களிடம் அவள் நான் ஆன்லைனில் ஒரு பொருளை ஆடர் செய்தேன் அது பிடிக்கவில்லை எனவே ரிடர்ன் ஆப்ஷன் கொடுத்திருந்தேன் ஆனால் இப்போது மனதை மாற்றிக்கொண்டேன் என்றாள். வெளியே வந்த சந்துரு வாசலில் இருந்த இரண்டு ஆடவர் சொறுப்பை அப்போது தான் கவனித்தான்.
அமைதியாக வண்டியை எடுத்து புறப்பட்டான். மிகுந்த யோசையோடு எங்கே என்று தெரியாமல் சென்ற அந்த பயணம் கடற்கரையை சென்றடைந்தது. மணல் தரையில் அமர்ந்து கடலையே வெரித்துப்பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. சூரியன் மறையும் நேரம் வானம் நீண்ட சிவப்பு மற்றும் மஞ்சளிலான நிறக்கோடுகளை வானில் பறப்பியிருந்தது. ஆருத்ராவிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. அவனை வீட்டுக்கு வரசொல்லி அழைத்தாள் அவளது பேச்சில் ஒரு தளம்பல் தெரிந்தது.
ஆருத்ரா சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தாள். நீண்ட அமைதிக்கு பின் பேச ஆரம்பித்தாள்.நீ சென்ற மறுநாள் எனக்கு கனடா எம்பஸியிலிருந்து அழைப்பு வந்தது. அடுத்த வாரத்தில் எனக்கு பயணம் உறுதியாகிவிடும் ஆகையால் என்னை தயாராக இருக்கும் படி சொன்னார்கள்.
அதை கேட்டு சந்துரு பதில் எதுவும் சொல்ல முடியாமல் இருந்தான், இத்தனை நாள் அவள் ஆசைப்பட்ட விடயம் கிடைத்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாளும் அதை கொண்டாடும் மனநிலை இருவருக்கும் இல்லை.
அத்தோடு நேற்று காலை என்னுடைய இருப்பிடத்தையும் என் கணவனின் நண்பர்கள் கண்டு கொண்டு விட்டார்கள், நேற்று நீ வரும் போது இருந்தது அவர்கள் தான், என் நிலையை கண்டு அவர்கள் மிகவும் வருந்தினார்கள் அடுத்த கிழமை நான் போகும் மட்டும் என்னை அவர்களது கொழும்பு வீட்டு வந்திருக்கும் படி கேட்டுக்கொண்டனர்.
சந்துரு சிரித்துக்கொண்டே சொன்னான் அப்படி என்றால் இருவரும் ஒரே நேரத்தில் தான் பயணிக்க போகிறோம் ஆனால் வேறு வேறு திசையில் என்று. ஆருத்ரா அமைதியானாள். அவள் தலை குனிந்திருந்தது. சந்துரு அடுத்த முறை இலங்கை வரும்ப்போது கண்டிப்பாக எங்கள் ஊருக்கு வரவேண்டும் என்றான் அப்பாவியாக. ஆருத்ராவின் கண்களில் நீர் பொத்துக்கொண்டது. அவள் சந்துருவை கட்டி அனைத்து விம்மி விம்மி அழுதாள். , சந்துருவுக்கு கண்கள் கலங்கியது. அவனும் அவளை அனைத்துக்கொண்டான்.
அன்றிரவு சந்துரு “நைட் மெயில்” ரயிலில் பதுளை நோக்கி பயணமானான். அவன் திரும்பி நீர்கொழுப்பு வரும்போது அங்கே ஆருத்ரா இருக்க போவதில்லை. அந்த வீட்டை எந்த சீண்டலும் இல்லாமல் அவன் கடக்கநேரிடும். அவன் பயணித்த அதேவேளை அவளும் கொழும்பில் உள்ள அவளது கணவனின் நண்பன் வீட்டு பயணமானாள். அவளது கணவனின் நண்பனும் அவர் மனைவியும் வந்து அவளை அழைத்துச்சென்றனர். அதை தூரத்தில் இருந்து பார்த்தபின் தான் சந்துரு ரயில் நிலையத்துக்கு பயணமானான். ரயிலில் அவனது பக்கத்து சீட்டு காலியாக இருந்தது. ஆருத்ராவுக்காக அவன் எடுத்து வைத்திருந்த டிக்கட்டும் அவன் கைக்குள் இருந்தது.
கான்யா டி அல்மேய்தா மிகவும் கவர்ச்சிகரமானவள். அவளுடைய சேவைகள் மிகவும் உண்மையானது மட்டுமன்றி நேர்மையானதாகும். பொதுநலவாய சிறுகதை போட்டியில் முதன்முதலில் வெற்றி பெற்ற முதல் இலங்கையவராவார். ஆசியாவிற்கான பிராந்திய பரிசை வெல்வதற்கான 6000க்கு மேற்பட்ட கட்டுரைகளிலிருந்து ‘ஐ கிளீன் த……. எனும் கட்டுரையின் மூலம் கான்யா டி அல்மேய்தா தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒரு தாயாகவும் ஒரு எழுத்தாளராகவும் அவள் அனுபவித்த அனுபவங்களை நாடியுடன் பகிர்ந்துள்ளார்.
எழுத்தாளராக உங்கள் வாழ்வின் ஆரம்பம் எவ்வாறு இருந்தது?
எனது இளமைக் காலத்திலிருந்து அதிகளவான நேரத்தை எழுதுவதிலேயே செலவிட்டுள்ளேன். நான் தரம் 6 கற்றுக் கொண்டிருக்கும் போது மெகி நிறுவனம் மெகி உணவுடன் இலவசமாக வழங்கிய சிறிய புத்தகங்கள் எனக்கு கிடைக்கப் பெற்றது. நான் செல்லுமிடமெல்லாம் மெகியின் மூலம் கிடைக்கப்பெற்ற புத்தகத்தை எடுத்துக் கொண்டு செல்வேன். எல்லாக் கதைகளையும் எல்லா நிகழ்வுகளையும் அதில் எழுதுவேன், அதிலிருந்து எனது எழுத்துப் பணி ஆரம்பமானது, அத்தோடு எழுதுவது எனது வழக்கமாகியது.
கொஞ்சம் பெரியவளாகிய பின்னர், நண்பர்களுடன் இணைந்து, அயலவர்கள் யாராவது சிறுகதைகள் எழுத எங்களை அழைத்தால், நாங்கள் அவர்களது வீடுகளுக்குச் சென்று கதைகளை எழுதி வழங்குவோம் என விளம்பரம் செய்ய ஆரம்பித்தோம்.
ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் அழைப்புக்கள் வரும் என தொலைபேசியில் அருகிலேயே காத்திருந்தேன். மிக பயனுள்ள சலுகையாக இருப்பினும் யாராருமே அழைப்பை ஏற்ப முன்வரவில்லை, அது மிகவும் கவலையளித்தது. இதுவே எழுத்தாளராக எனது முதற் தோல்வியாகும். மனிதர்கள் பெரிதாக வாசிப்பை விரும்புவதில்லை என அறிந்துக் கொண்டேன். இப்படியே சிறு வயதில் இருந்து எனது எழுத்துப் பணி ஆரம்பமானது.
எழுத்தாளராக உங்கள் வாழ்வைப் பற்றி கூறுங்கள்.
மேடு பள்ளங்களுடன் கூடிய ஓர் பயணமாகவே இருந்தது. ஆரம்பத்தில் பாடசாலை கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டேன். பின்னர் 30 களில் சட்டசபைகளுக்கான நாடகங்கள் எழுதினேன். 4 வருட இளங்கலைமானிப் பட்டப்படிப்பின் போது புனைகதைகள் மற்றும் இலக்கிய எழுத்தாக்கங்களை எழுத ஆரம்பித்தேன். அதிக நேரங்கள் ஊடகத் துறையில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததனால் பெரிதாக எழுத்துத்துறையில் ஈடுபட நேரமிருக்கவில்லை. புனைகதை என்பது மிகவும் விரிவானது என்பதோடு உலகம் முழுவதையும் உருவாக்கின்றது. ஊடகத்துறை என்பது என்னை உறுதியாக்கி ஊக்கமளிக்க ஓர் உயரிய இடம் என்றே நான் கருதுகிறேன்.
கொலம்பியாவில் நான் எனக்கான ஒரு இடத்தை கண்டுபிடிக்கும் வரை, என்னை பாடசாலை மற்றும் எல்லா இடங்களிலும் இருந்தும் தோல்வியையே சந்தித்தேன்.
அதுமட்டுமின்றி என்னை மேலதிக பட்டியலிலேயே(waiting list) சேர்த்தனர். என்னை ஏற்றுக் கொள்வதற்காகவும் அத்தோடு நிதி ரீதியான உதவிகளை பெற்றுத் தருவதற்காகவும் ஓர் பேராசிரியை எனக்காக போராடினாள். முழுமையாக மேலதிக வகுப்பிற்கான பணத்தைக் கூட செலுத்த முடியாது இருந்தேன். பேராசிரியை எனக்காக ஊக்குவிப்பு பணத்தை திணைக்களத்தின் மூலம் பெற்றுத்தர பெரும் முயற்சி எடுத்தார். மேலதிகமாக எழுத்துத் துறை சார்ந்த நிகழ்வுகளிலும் பணியாற்றினேன். இதுவும் ஓர் மேடுபள்ளங்கள் கூடிய பயணமாகவே இருந்தது. ஆயினும் தற்போது ஒரு எழுத்தாளராகுவதற்கான பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
2020 ஆம் ஆண்டில் பொதுநலவாய சிறுகதைப் போட்டியில் வெற்றியீட்டியது பற்றி கூற முடியுமா?
கிட்டத்தட்ட ஆறாயிரத்துக்கு மேற்பட்ட சிறுகதைகளிலிருந்து, என் சிறுகதையை தேர்ந்தெடுப்பது என்பது என்னைப் பொருத்தளவில் மிகையில்லா வெற்றி என்றே கூற வேண்டும். அதிலும் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவது என்பது மிகப்பெரிய சவாலான விடயமாகும். இறுதியில் அவர்கள் மேடையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை அறிவித்தனர்.
எனது பெயர் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் இருப்பதை கேள்விப்பட்ட எனது பெற்றோர், சகோதரி மற்றும் என்னை சார்ந்து இருப்போர் அனைவரும் ” இது தான் வெற்றி, இதன் பின்னர் எது நடந்தாலும் பரவாயில்லை” எனத் தெரிவித்தனர்.
இறுதியாக அவர்கள் வெற்றியாளரை அறிவிக்கும்போது, வெற்றியாளர் நான் தான் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அத்தோடு சில நிமிடங்கள் என்னை என்னாலேயே நம்ப முடியாதிருந்தது. அதுமட்டுமன்றி வெற்றியை ஏற்றுக்கொள்ள எனக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டது. அது ஓர் அற்புத உணர்வாகும்.
குடும்பத்தையும் அதேபோன்று உங்கள் பணியையும் ஒரே நேரத்தில் எவ்வாறு சமமாகக் கொண்டு சென்றீர்கள்?
மிகப்பெரிய ஒரு போராட்டமாகவே இருந்தது. மிக அண்மையில் நான் இன்ஸ்டாகிராமில் தொடராக ஒரு பெண் தாயின் துன்பத்தைப் பற்றி பதிவிட்டிருந்தார். அப்பதிவு என்னுள் சென்று என்னை தனிமைப்படுத்தியது என்றே கூற வேண்டும். ‘கவலைப்பட வேண்டாம்’, ‘குழந்தை நலமாகவே உள்ளது’ அத்தோடு ‘அவள் இருக்கிறாள்’, ஆனால் ‘நான் இருக்க மாட்டேன்’ என்பதே மிகவும் கொடிய வார்த்தைகள் என குறிப்பிட்டிருந்தாள். அவ்வார்த்தைகள் என் நினைவில் ஆழமாக பதியப்பட்டதோடு, அந்நேரம் என்னை பாதித்தது. இவ்வார்த்தைகள் மிகவும் உண்மையானது என கருதுகிறேன். என் மகன் பிறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை என்றே கூறவேண்டும். ஒவ்வொரு நாளும் அதை எண்ணியபடியே நாட்களை கழிக்கிறேன். உறுதுணையாக எனக்கிருக்கும் குடும்பத்தைப் போன்று அனைவருக்கும் அமைவதில்லை.
ஒரு தாய் முழுமையான ஆரோக்கியத்துடன்(உடல், உள ஆரோக்கியம்) இருக்கும் போதே சமூக ரீதியான சமூக ரீதியான பிரச்சினைகளை தீர்க்க முடியும். அத்தோடு எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு தாய் ஆதரவினை வழங்கும் போதே, குழந்தையும் அதே போன்ற ஆதரவினை வழங்குகிறது. இப்பண்புகள் குடும்பத்திலும் பிரதிபலிக்கப்படுகிறது. இப்பண்பு என்னை அதிகளவில் தாக்கத்தை செலுத்தியதோடு மிகவும் உறுதுணையாகவும் அமைந்தது.
உங்கள் எழுத்துக்கள் தனித்துவம் வாய்ந்ததாகவும் அதிக அளவில் தாக்கம் படுத்துவதாகவும் உள்ளது. அத்தோடு நீங்கள் கதாபாத்திரங்களை உருவாக்க எவ்வாறான உத்வேகத்தை பெற்றுக் கொண்டீர்கள்? வாழ்க்கையிலிருந்தா? அனுபவத்தின் மூலமாகவா?
எனது வாழ்விலிருந்தே நிறைய விடயங்களை பெற்றுக் கொண்டேன். என்னுடன் இருப்பவர்கள் எப்போதும் என்னைப் போன்ற ஒருவரையே கதைகளில் அவதானிக்கின்றனர். ஒரு புனைகதை எழுதும் போது, சூழல் மற்றும் அனுபவம் என்பன ஊக்குவிக்கும் ஓர் ஊடகமாக திகழ்கின்றது. அத்தோடு அதுவோர் தனியான கதையோட்டத்தை தன்னகப்படுத்துகின்றது.
நான் பார்க்கும் நபரை என் மனம் பின்பற்றுகிறது. அதனை என்னால் தடுக்க முடியாது. அதுமட்டுமன்றி அவர்களது நாள் எப்படி அமைகின்றது? அவர்கள் கடனில் இருக்கிறார்களா? தனிப்பட்ட மோதல்களை தவிர்த்துக் கொள்வதற்கான வழி இருக்கின்றதா? போன்ற கற்பனைகளில் இருந்து என்னால் வெளிவர முடியாமல் இருக்கின்றது. இவ்வாறான கதைகளை அடிக்கடி கேட்பதனால் இக்கதாபாத்திரங்கள் எங்கிருந்து உண்மையாகவே வருகின்றது என என்னால் அறிய முடியாமலும் இருக்கின்றது.
உங்கள் படைப்பாக்க செயல்முறை எவ்வாறு இருந்தது? அத்தோடு எவ்வாறான படைப்பாக்க தொகுதிகளை சமநிலைப்படுத்தி கொண்டு செல்ல வேண்டியிருந்தது?
ஆரம்பத்தில் மிகக் கடினமாக காணப்பட்டது. பின்னர் சமநிலைப்படுத்தி செல்லவேண்டிய படைப்புகளைப் பற்றி தெளிவுகளை அனுபவங்கள் மூலம் பெற்றுக் கொண்டேன். பெரிதாக படைப்புக்களை சமநிலைப்படுத்தியதில்லை. அத்தோடு சில வேளைகளில் நிறைவு செய்யப்படாமல் அப்படியே வைத்த சந்தர்ப்பங்களும் உண்டு.
இப்போது இச்சிறுகதையை நான் பெற்றுள்ளேன். அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளேன். அதன் அடிப்படையில் ஒரு படைப்பு செயல்முறையை வடிவமைப்பது எனக்கு எளிதாக இருந்தது. சிலவேளைகளில் எனக்கு தேவையான ஆக்கங்களை எழுதுவேன். அத்தோடு அடுத்த நாள் தேவையற்ற விடயங்கள் நீக்குவேன்.
யோசனைகளுக்கு பஞ்சமேற்பட்டதில்லை. அவ்யோசனைகளை கதை கருவோட்டத்தில் இணைத்து உயிரோட்டம் அளிப்பதே எனது ஆக்கங்களின் பிரதிபலிப்பாகும்.
எழுத்தாளர்களுக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனை யாது? மேலும் அதிகளவான வாசிப்போரை ஊக்குவிக்கலாம்?
வாசிப்பிற்கு நேரம் ஒதுக்காதவர்களே எழுதத் கஷ்டப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் வாசியுங்கள் என்பதே நான் வழங்கும் ஆலோசனையாகும். அரைப் பக்கம் வாசித்தாலே ஒரு வசனம் எழுத முடியும். வாசிப்பதிலும் எழுதுவதிலும் உள்ள மகிழ்ச்சியைக் யதார்த்தமற்ற இலக்குகள் ஒருபோதும் அறிவதில்லை. எனவே, குறைந்தபட்சம் வாசிக்க ஆரம்பிக்கவும், அப்பொழுதே அது உங்களை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதை அவதானிக்க முடியும். (ஒருபோதும் நான் ஆலோசனைகளைப் பின்பற்றுவதில்லை நான் அவ்விடத்திற்கு செல்லவே முற்படுகிறேன்)
உங்கள் எதிர்கால திட்டங்கள் யாது? அத்தோடு மற்றவர்கள் உங்களை எப்படி பின்பற்ற போகிறார்கள்?
இலங்கையில் பெண்கள் பிறந்த கதைகள் மற்றும் தாயாகிய சந்தர்ப்பம் பற்றி இருளிலுள்ள ஒளி (The Darkest Light) எனும் தலைப்பில் தகவல்களை திரட்டி ஒன்றிணைத்து எழுதலாம் என எத்தனித்துள்ளேன்.
இன்ஸ்டாகிராம் எனும் சமூகவலைத்தளத்தில் உயர் நிலையில் இருக்க தவறிவிட்டேன். @thedarkestlightpodcast எனும் தலைப்பில் என் பதிவுகளை வாசிக்கலாம். நான் மெதுவாக சிறுகதைத் தொகுப்பை எழுதி வெளியிடுவேன்.
thedarkestlightpodcast எனும் தலைப்பில் என் பதிவுகளை அவதானிக்கலாம்.
கொரோனா வைரஸ் இவ் உலகையே இயங்க விடாமல் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. எனினும் இக் கொடிய நோயினால் அரங்கேறிய நல்ல விடயங்களில் ஒன்று தான் இந்த வீட்டில் இருந்தவரான வேலை. அதாவது Work From Home, மற்றையது இணைய வழிக் கல்வி முறைமை. என்னதான் Google Forms இல் தவணைப் பரீட்சை நடந்தாலும், படிக்கிறவன் எப்படியும் Pass ஆகிடுவான், படிக்காதவன் இப்படியாவது Pass ஆகட்டும் என்று கூறிக்கொண்டு பலர் இக் கல்வி முறைமையை வழிமொழிகின்றனர். எனினும் பாரிய பின்விளைவு இதனால் எதிர்காலத்தில் எதிர்நோக்க நேரிடும் என்ற அச்சம் எவரிடமும் இல்லை என்பது வேதனை அளிக்கிறது . அது ஒரு புறம் இருக்க, இவ் இணையக்கல்வி முறைமையை வெற்றிகரமாக மாற்றுவதற்கு நாம் செய்யக் கூடிய மற்றும் செய்யக்கூடாத சில விடயங்கள் தொடர்பான ஓர் பார்வை இதோ….
வகுப்பிற்கு முன்னரான முன் ஆயத்தம்
பாடசாலைக்கு Late ஆ போய் பார்த்து இருப்பீர்கள். ஆனால் Zoom Class க்கு கூட late ஆகி வந்து ஆசிரியர்களுக்கு shock கொடுக்கும் வழக்கம் நாள் தோறும் நடந்து கொண்டே இருக்கின்றது என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆகவே இதற்காவது உரிய நேரத்தில் Join ஆகி தங்களது நேரம் தவறாமையை ஆசிரியர்களுக்குக் காண்பிப்பது அவசியமாகும். மேலும் தங்களது Phone, Laptop மற்றும் Tab களை Full Charge இல் வைத்து பாடங்களுக்குச் செல்வது சால சிறந்தது. காலையில் நேரத்துடன் எழும்புவது சிறிது கடினமான விடயமாக மாறி விட்டதால் எம்முடைய Default Alarm Clock ஆன தாய் தந்தையர்களிடம் உரிய நேரத்தில் எழுப்புவதற்கு உபதேசித்து உறங்கச் செல்லல் வரவேற்கத்தக்கது.
ஆசிரியர்களுக்கு ஒத்துழைத்தல்
அதிகமான பாடங்கள் காலை வேலைகளில் நடப்பதால் ஒலி மாசு ஏற்ப்படுவதற்கான சாத்தியம் அதிகம். பாண் விற்கும் Tune வண்டி முதல் குப்பை சேகரிக்க வரும் நபர் வரை அனைவரும் இதற்குப் பங்காளியாக ஆகிவிடுவார்கள். ஆகவே பொறுப்பு மிக்க மாணவர்களாக Mute இல் வைத்து விட்டு பாடத்தில் கவனம் செலுத்துதல் மிகச் சிறந்தது. மேலும் அநேகமான ஆசிரியர்கள் இத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் வித்துவான்களாக இல்லாதிருப்பதால் தொழில்நுட்ப வேண்டுகோள்கள் தேவைப்படின் செய்து கொடுத்தல் அவசியமாகும்.
மோசமான தொடர்புகள்
நீங்கள் நினைக்கும் தொடர்பு இது கிடையாது 😉 வலையமைப்பு சிக்கலினால் ஏற்படும் மோசமான தொடர்புகளை இது குறிக்கும். ஆகவே அதற்கு ஸ்திரமான தீர்வு எவரினாலும் இதுவரை வழங்க முடியாதுள்ளதால் பொறுமையே பெருமை என்று நினைத்துக்கொண்டு அமைதி காக்கவும். பெயர் குறிப்பிட முடியாத குறிப்பிட்டதொரு தொலைத் தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர் எனின் நீங்கள், உங்களை அவர்கள் அதிகம் சோதிப்பார்கள். ஆகவே கடுப்பேற்றும் சந்தர்ப்பங்களில் 10 முதல் 1 வரை எண்களை பின் புறமாக எண்ணி கோபத்தை அடக்கிக் கொள்ளவும்.
சிறந்த சுற்றுச் சூழலை உருவாக்கிக்கொள்ளல்
கல்வி பயில்வதற்குக் கல்வி கற்கும் சூழல் மிக முக்கியமான காரணியாக மாறியுள்ளது. ஆகவே நாம் அதற்கு உகந்த சூழலைத் தேர்வு செய்வதில் எந்த ஒரு பார பட்சத்தையும் பார்க்கக் கூடாது. அரை நித்திரையுடன் கட்டிலில் இருந்தவாறான கல்வி ஒரு போதும் பயனுள்ளதாக மாறப்போவதில்லை. முடியுமானவரை உரங்கள் பிரதேசத்திலிருந்து விலகிச் சென்று அமைதியாகப் பாடத்தில் மாத்திரம் கவனம் செலுத்தும் முகமாகவும், வெளி தகராறுகள் இல்லாத இடமொன்றைத் தெரிவு செய்து செல்லல் அவசியமாகும்.
உரிய நேரத்தில் செய்து முடித்தல்
என்ன தான் போதியளவு நேரம் முன்னராகவே வரையறுக்கப்பட்டாலும் கடைசி நிமிடத்தில் முடிப்பதில் நாம் கில்லாடிகள். இறுதி தருணம் வரை இழுத்தடிப்பதால் பதற்றத்திற்கும் அதிகமான தவறுகளை நீங்கள் நிகழ்த்திடவும் இது வித்திடும். ஆகவே முடியுமானவரை உரிய நேரத்திற்கு முன்னராகவே செய்து முடிக்க முயற்சிக்க வேண்டும். அதே தருணத்தில் காலம் தாமதித்து விட்டு, அடித்தது அழிந்து போய்விட்டது, அயல் வீட்டுக்காரருக்கு கொரோனா என்று வெகுளி கதை கதைக்காமல் உண்மையை ஏற்றுக்கொள்ளுதல் சிறந்தது.
கைப்பேசி பாவனையைக் குறைத்துக்கொள்ளல்
இணைய வழிக்கல்வியின் புற்றுநோய் என்று வர்ணிக்கப்படுகிறது. இதனால் தான் நேர் முக வகுப்புகள் Physical முறையில் நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் விழிப்புணர்வு மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டாலும் சமூக வலைத்தளங்களில் மாணவர்கள் தங்களது கவனத்தைச் சிதறடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே அனைவரும் தான் செய்வது சரியா தவறா என்று சுய விசாரணை செய்து எம் நலம் கருதி இவற்றிலிருந்து முடியுமான வரை விலகி பாடங்களில் கவனம் செலுத்தல் மிக அவசியமாகும்.
கருத்துறைக்க அஞ்சாதே ! !
நேர் முக வகுப்புகள் போலவே கேள்வி கேட்பதற்கோ, உங்களுடைய சந்தேகங்களைத் தீர்ப்பதற்கோ பின் வாங்க வேண்டாம். கொரோனாவினால் சுமார் 1.5 வருடங்கள் இந்த முறைமைக்குப் பழகிவிட்டோம். தொழில்நுட்பம் எவ்வளவு வெகுவாக வளர்ந்தாலும் நேர்முக வகுப்பிற்கு ஒரு போதும் நிகர் ஆகாது. ஆகவே முடியுமான வரை நேர் முக வகுப்புகள் போலவே சூழலை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
இவை அனைத்தும் முற்று முழுதாக எங்களுடைய தனிப்பட்ட கருத்து என்பதால் இவற்றை விடச் சிறந்த Tips இருப்பின் அதனை நாங்களும் அறிவதற்கு ஆவலாக உள்ளோம். ஆகவே கீழேயுள்ள Comments section மூலம் உங்கள் கருத்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுங்கள். இணையக் கல்வி முறைமை என்பது சற்று சலிப்புத்தட்டும் விடயாமாக இருந்தாலும் தங்களுடைய அறிவை விருத்தி செய்வதில் எவ்வித பார பட்சமும் பார்த்தல் கூடாது. ஆகவே முடியுமானவரை உங்கள் அறிவை கூட்டிக்கொள்வதுடன் கொரோனாவிற்கு எதிரான பயணத்தில் சமூகப் பொறுப்பு மிக்க குடிமகனாக வாழக் கற்றுக்கொள்வோம்.
உலகின் முதல் பெண் பிரதம மந்திரி, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்கள் 1960களில் இலங்கை சோஷலிச குடியரசின் பிரதம மந்திரி பதவியினை ஏற்றுக் கொண்டார். இதனால் உலகின் முதல் பெண் பிரதம மந்திரியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் ஒரு சிறந்த அரசியல்வாதி ஆவார். 1960 – 1965 , 1970 – 1977 மற்றும் 1994 – 2000 போன்ற காலகட்டத்தில் மூன்று முறை இவர் பிரதம மந்திரி பதவியில் இருந்தவர் ஆவர்.
கண்டிய பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்த பண்டாரநாயக்க, கத்தோலிக்க மற்றும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் கல்வி கற்றார், ஆனால் பௌத்தராக இருந்து சிங்களம் மற்றும் ஆங்கில மொழியிலே பேசினார். மேல்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றதன் பிறகு, அவர் திருமணம் செய்து குடும்பத்தை வளர்ப்பதற்கு முன், பல்வேறு சமூக நிகழ்ச்சிகளுக்காக பணியாற்றினார். இவர் பிரதமராக இருந்த முதல் 11 ஆண்டுகளில் அவர் இலங்கையின் வெளியுறவு அமைச்சராகவும், அணி சேரா நாடுகளின் தலைவராகவும் இருந்தார். இவருடைய ஆட்சிக்காலத்தில், அரசியல் பங்களிப்பு, இராஜதந்திரம், சர்வதேச உறவில் இவருடைய பங்கு என்பது எல்லாரும் அறிந்த ஒன்றாகும். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக பணியாற்றியவர். இவருடைய கணவன் சாலமன் பண்டாரநாயக்க கொல்லப்பட்ட பின் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
மூன்று காலகட்டங்களில் பிரதம மந்திரியாக இருந்த இவர், 1960 – 1965 ஆம் ஆண்டு பதவியேற்று நிர்வகிக்கும் போது, இலங்கையின் முடியாக பிரித்தானிய இளவரசரே காணப்பட்டார். மேலும் ஆளுநராக ஒலிவர் குணத்திலேக்க இருந்தார். பின்பு 1965 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் கட்சி தோல்வியடைந்து 1970 வரை எதிர்கட்சித் தலைவராக இருந்து கட்சியை வழிநடாத்தினார்.
பிறகு 1970 இல் பொதுத் தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டுச்சேர்ந்து தேர்தலில் பெரும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மீண்டும் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த 70-77 காலகட்டமானது பிரித்தானிய முடியின் கீழ்பட்ட ஆட்சியாகவும் இருந்தது. மற்றும் பெயரளவு ஜனாதிபதியாக வில்லியம் கொபல்லாவ பதவி வகித்து இருந்தார். இந்தக் காலகட்டத்தில் இவருடைய சமூகப்பணி எனும் போது இலங்கையின் கிராமப்புற பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார்.
மேலும் இவரின் நிர்வாகத்தில் இவர் பிரிட்டிஷ் சோசலிச குடியரசாக இருந்த இலங்கையை, இலங்கை சோஷலிச குடியரசாக மாற்ற முயன்றார். அதாவது கல்வி, வங்கி, தொழில், ஊடகம், வர்த்தகம் போன்ற துறைகளை தேசியமயமாக்குவதினூடாக இலங்கையை ஒரு சோஷலிச குடியரசாக மாற்ற முயன்றார். அதே போல் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஆங்கிலமே இலங்கையின் நிர்வாக மொழியாக இருந்தது. ஆங்கிலத்தில் இருந்த நிர்வாக மொழியை சிங்கள மொழிக்கு மாற்றியதால் இலங்கை தமிழ் மக்களிடமிருந்து இவர் அதிருப்தியை பெற்றுக் கொண்டார்.
எனவே 1960 -1965 மற்றும் 1970 – 1977 இவர் இரண்டு முறை பிரதமராக இருந்த கால கட்டத்தில் இலங்கை பொருளாதாரத்தை மூடிய பொருளாதாரமாக மாற்றினார். இலங்கையை ஒரு சுயபூர்த்தி நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இவர் மூடிய பொருளாதாரக் கொள்கையை இலங்கையில் கடைபிடித்தார். மூடிய பொருளாதாரம் எனும் போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து நுகரப்படுகின்ற அனைத்து பொருட்களையும் கட்டுப்படுத்தி இலங்கையுடைய வர்த்தகம், கல்வி, மற்றும் இளம் கைத்தொழிலாளர்களை ஊக்குவித்து இலங்கையுடைய பொருளாதாரத்தை முன்னேற்றுவதாகும்.
ஆனால் இவர் கொண்டுவந்த மூடிய பொருளாதாரக் கொள்கையானது இலங்கையில் பெரியளவு பணவீக்கம், உணவுத் தட்டுப்பாடு மற்றும் தரமில்லாத ஆடைகள் என்றவாறு இலங்கையின் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் மோசமான நிலையை உருவாக்கியது. மேலும் மக்களுடைய கொள்வனவுச் சக்தியும் குறைவானதாகவே இருந்தது. மேலும் சிங்களத் தேசியவாதக் கொள்கை அதிகரித்ததால் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே அதிருப்தித் தன்மையும் இருந்து கொண்டே இருந்தது. எனவே இக்கால கட்டத்தில் 1972ஆம் ஆண்டில் 1ஆம் குடியரசுஅரசியலமைப்பை உருவாக்கினார். மேலும் 1975ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க, இலங்கை மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகத்தை உருவாக்கினார். மேலும் இலங்கை அமைச்சரவையில் பணியாற்றும் முதல் பெண் மந்திரியை நியமித்தார்.
அதே போல் வெளிநாடுகளில் அதிகம் பேச்சுவார்த்தை நடத்துபவராகவும், அணி சேரா நாடுகளின் தலைவராகவும் இருந்து இவர் பங்கு வகித்தார். பின்பு பொதுத் தேர்தலில் படுதோல்வி அடைந்து அந்த இடத்துக்கு 1978 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜயவர்தன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். எனவே ஜே. ஆர் உடைய ஆட்சிக்காலத்திலிருந்து அதாவது 1980 களில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்கள், அவருடைய ஆட்சிக் காலத்தில் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக அவருடைய பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. இவரை அரசாங்கத்தில் இணையவிடாமல் 7 ஆண்டுகள் தடை செய்து வைத்தனர். திரும்பவும் 1986 களில் அவர் தனது கட்சியுடன் இணைந்து கொண்டார். அந்த நேரத்தில் இந்தியாவினுடைய அமைதிப்படை இலங்கையின் அதிகாரத்தில் தலையிடுவதாகவும், மற்றும் அதிகாரத்தை மீறுவதாகவும் அவர்களுக்கு இலங்கையில் போரில் தலையிடுவதற்கான அனுமதியை எதிர்த்து நின்றனர். திரும்பவும் 1989 முதல் 1994 வரை சட்டமன்றத்தில் எதிர்கட்சியினுடைய தலைவராகவே இருந்து வந்தார்.
பிறகு 1994 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவினுடைய மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று அவருடைய ஆட்சியின் கீழ் மூன்றாவது முறையாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு வரையில் ஆட்சியிலும் இருந்தார். இவர் அரசியலில் பாலின சமத்துவத்தை கொண்டு வந்த போதிலும் சட்டமன்றத்தில் பெண்களுக்கான வகிபாகமாக 25 % ஒதுக்கினார். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியதத்துவம் வகிக்கின்றனர்.
COVID-19 இன் எழுச்சியும் பரவலும் பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்பித்தன. நீங்கள் வாழ்ந்த நல்ல வாழ்க்கையை உணர, செய்த அனைத்து நல்ல செயல்களிலும் மகிழ்ச்சியாக உணருங்கள் மற்றும் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையைப் பிரதிபலிக்கவும் விலைமதிப்பற்றது. நாளை என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாததால், உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமான செயல்களால் நிரப்ப முயற்சி செய்யுங்கள். மேலும், உங்களை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைப் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும். COVID-19 சேவைகள், பல்வேறு உதவி மையங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வழியாக அணுகக்கூடிய கண்டறியும் கருவிகள் வழங்கும் இடங்களின் பட்டியல் இங்கே உள்ளது, இது தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் மருத்துவத்தின் தரவு சார்ந்த எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது. சுத்தம் மற்றும் சுத்திகரிப்பு தேவை முன்னோடி சுத்தம்- COVID-19 க்கு எதிரான சிறப்பு கிருமிநாசினி சேவைகள்
சுத்தம் மற்றும் சுத்திகரிப்பு தேவைகளுக்கு
முன்னோடி சுத்தம்- COVID-19 க்கு எதிரான சிறப்பு கிருமிநாசினி சேவைகள்
இலங்கையில் COVID-19 க்கு எதிராக சிறப்பு கிருமிநாசினி சேவைகளைத் தொடங்கிய முதல் தனியார் துப்புரவு நிறுவனம் இதுவாகும். அவர்களின் சேவைகளில் வணிக மற்றும் குடியிருப்பு சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் ஆகியவை அடங்கும். கோவிட் -19 கிருமிநாசினி செயல்முறைக்கு WHO பரிந்துரைத்த நடைமுறைகளை முன்னோடி துப்புரவு பின்பற்றுகிறது. கிருமிநாசினி செயல்முறைக்கு நிறுவனம் உயர் தொழில்நுட்ப சக்தி தெளிப்பான் இயந்திரங்கள், மூடுபனி ஊதுகுழல்கள் மற்றும் ULV மோசடி/மூடுபனி அணுக்கருவிகளைப் பயன்படுத்துகிறது.
தொலைபேசி: 0719 700 500
மின்னஞ்சல்: info@pioneers.lk
முகவரி: எண் 75, அவிசாவெல சாலை, மகாபுத்கமுவ, அங்கோட, இலங்கை இணையதளம்: www.pioneers.lk பிரிட்டானியா துப்புரவு சேவைகள்
பிரிட்டானியா துப்புரவு சேவைகள்
அவர்களின் பயிற்சி பெற்ற நிபுணர்கள், 70% ஆல்கஹால் அடிப்படையிலான தீர்வுகள் மற்றும் 24 மணி நேர மறுமொழி நேரம் ஆகியவை உங்கள் வீடு அல்லது அலுவலகத்திற்கு COVID-19 இல்லாத சூழலை உறுதி செய்யும்.
இது உங்கள் இதயத் துடிப்பு மற்றும் உங்கள் இரத்தத்தில் ஆக்ஸிஜனின் செறிவு அளவிடும். இது நோயாளிகளுக்கு இரத்த ஓட்டத்தில் போதுமான ஆக்ஸிஜனைப் பெறுவதை உறுதி செய்கிறது. நீங்கள் நுரையீரல் நோய் அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருந்தால் அதைக் கண்காணிக்க வேண்டியது அவசியம். கீழே பட்டியலிடப்பட்டுள்ள இடங்களிலிருந்து நீங்கள் ஒரு ஆக்சிமீட்டரை வாங்கலாம்.
Protecto Sri Lanka
துடிப்பு ஆக்சிமீட்டர்கள், முகக் கவசங்கள் மற்றும் முகமூடிகள் போன்ற உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) அனைத்தையும் வழங்குகிறது. பூட்டுதலின் போது அவர்கள் நாடளாவிய விநியோகத்தை வழங்குகிறார்கள்.
டராஸில் நீங்கள் துடிப்பு ஆக்ஸிமீட்டர்களைக் காணலாம். நீங்கள் தராஸ் இணையதளம் வழியாக ஷாப்பிங் செய்யலாம் அல்லது டராஸ் செயலியை கூகுள் ப்ளே வழியாக டவுன்ஸ்டாப் பொருட்களை டெலிவரி செய்யலாம்.
வாங்குவதற்கான இணைப்பு- https://www.daraz.lk/pulse-oximeters/
இணையதளம்: https://www.daraz.lk/
மருந்தகத்தின் வலைத்தளம் ஆக்ஸிமீட்டர்களைப் பற்றிய தெளிவான தகவலை வழங்குகிறது, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான எளிதான வழிமுறைகளுடன், தயாரிப்புகளையும் பட்டியலிடுகிறது.
உங்கள் ஆன்லைன் மருந்தகம் மூலம் ஆர்டர் செய்வதன் மூலம் உங்கள் வீட்டு வாசலில் ஒரு ஆக்ஸிமீட்டரைப் பெறலாம். நீங்கள் அவர்களின் இணையதளத்தில் ஒரு மருந்து அல்லது கடையை பதிவேற்றலாம்.
நீங்கள் ஷாப்பிங் செய்யலாம், உங்கள் மருந்துகளை பதிவேற்றலாம் மற்றும் உங்கள் வீட்டு வாசலில் வழங்கலாம் அல்லது இலவச ஆலோசனைக்கு பதிவு செய்யலாம். இந்த மருந்தகம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கிடைக்கும். கொழும்பிலும் புறநகரிலும் 24 மணி நேரத்திற்குள் ஆர்டர்கள் வழங்கப்படும்.
வாடிக்கையாளர் ஆதரவு: 0117 774 774 (8:00 AM TO 8:00 PM)
இணையதளம்: https://mymed.lk/
Laughs – C.M.C. Pharmacy
இங்கேயும் மருந்துகள் ஆன்லைனில் கிடைக்கின்றன! உங்கள் மருந்தை உடனடியாக வழங்கக்கூடிய மருந்தக விற்பனையாளர்களின் பட்டியலை அவர்கள் வழங்குகிறார்கள்.
உங்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், தோல் மருத்துவ ஏற்பாடுகள், மருத்துவ சாதனங்கள், கூடுதல் மற்றும் கால்நடை பொருட்கள். கொழும்பு மாவட்டத்திற்குள் டெலிவரி இலவசமாக வழங்கப்படுகிறது.
மருத்துவமனைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்கள்
லங்கா மருத்துவமனை
லங்கா மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள நான்கு சொகுசு விடுதிகளில் (Cinnamon Red – Colombo 07, Pearl City – Bambalapitiya, Pearl Grand – Bambalapitiya, and Best Western – Kirulapone) லெவல் ஒன் கேர் வழங்குகிறது. நீங்கள் அறிகுறியற்றவராக அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்டிருந்தால், மேம்பட்ட உயர் சார்பு பராமரிப்புடன் சிறப்பு ஆலோசகர்களின் கீழ் 24/7 மருத்துவ மற்றும் நர்சிங் கவனிப்பை நீங்கள் பெறலாம்.
மருத்துவ ரீதியாக மோசமடைந்து வரும் நோயாளிகளுக்கு நிலை இரண்டு பராமரிப்புக்காக, அதிக சார்பு வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோவிட் -19 சிகிச்சை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகளும் அவர்களிடம் உள்ளன. ஊழியர்கள் நோயாளிகளைப் பராமரிக்க நன்கு பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் மேற்பார்வையிடப்படுகிறார்கள்.
லெவல் த்ரீ கேர் ஒரு நோக்கம்-கட்டப்பட்ட கோவிட் -19 ஐசியு, முக்கியமான பராமரிப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், வென்டிலேட்டர் ஆதரவு, 24 மணி நேர கண்காணிப்பு, அதிக ஓட்டம் ஆக்ஸிஜன், அனைத்து விசாரணைகள் மற்றும் மருந்துகளையும் உள்ளடக்கியது.
தொலைபேசி: 0115 430 000
மின்னஞ்சல்: covidiccopr@lankahospitals.com
Hotel Cinnamon Red, Colombo 07: Phone- 0112 145 145, WhatsApp- 0701 560 745
Hotel Pearl City Bambalapitiya: Phone- 0772 313 331, WhatsApp- 0701 560 765
Hotel Best Western Kirulapone: Phone- 0768 568 157, WhatsApp- 0701 560 744
இணையதளம்: https://www.lankahospitals.com/en/
ஆசிரி மத்திய மருத்துவமனை – இடைநிலை பராமரிப்பு மையம்
இலங்கையின் புகழ்பெற்ற பேஷன் தொழிற்துறையில், நிலையானத்தன்மை, பாரம்பரியமாக முன்னுரிமை அளிக்கப்படவில்லை. இருப்பினும்,
யதார்த்தமான நுகர்வு, நெறிமுறை உற்பத்தி, மீள்சுழற்சி மற்றும்
up-cycling ஆகியவை இப்போது முக்கிய போக்கில் காணப்படுகிறது. ஹவுஸ் ஆஃப் லோனாலி சில தந்திரங்களை பாதுகாப்பாகவும், இரகசியமாகவும் வைத்துள்ளது.
தயாரிப்பு(Brand) தலைமை வடிவமைப்பாளரும், நிறுவனருமான லோனாலி ரோட்ரிகோ என்பவர், எனக்கு up-cycling என்பதை உணர்ச்சிப்பூர்வமாக விளக்கினார். அதாவது up-cycling என்பது உயர்தர பொருட்களை உற்பத்தி செய்ய கழிவுப்பொருட்களை மீண்டும் உருவாக்கும் செயல்முறையை குறிக்கிறது. இந்த செயல்முறையின் மூலம், ஹவுஸ் ஆஃப் லோனாலி நிராகரிக்கப்பட்ட அல்லது பயன்படுத்தப்படாத பொருட்களை கொண்டு நேர்த்தியான ஆடைகளாக மாற்றுகின்றது, மற்றும் சிறந்த தோற்றத்தைக் கொண்ட நபர்களுக்கு மிகவும் ஏற்றது.
பொதுவான உலகில் ஊடுருவியுள்ள தயாரிப்பின்(Brand)
வடிவமைப்புக்கள், பல்துறை மற்றும் இலங்கையின் காலநிலைக்கு பொருந்தக்கூடிய வகையில் உள்ளது. அதுமட்டுமல்லாது பிரமமிக்கமான தோற்றத்திற்கான மலர் அச்சிடப்பட்ட tube ஆடைகள், ஹான்ஸா சட்டைகள் மற்றும் தலைகீழ் அச்சிலான ஆடைகள் ஆகியவற்றைக் காட்டிலும், ஹவுஸ் ஆஃப் லோனாலி அதன் காலணிகளின் தரத்திலும் , வடிவமைப்பிலும் புகழ்பெற்றது. அதன் லேபிள் பிரபலமான, நாகரிகமான மற்றும் நடைமுறையிலான கைப்பைகளுக்கு அதிகமான பெருக்கம் உள்ளதோடு அவை இணைக்கப்படுகிறது. இருப்பினும், அனுபவம் மற்றும் ஆர்வமுள்ள வடிவமைப்பாளருக்கும் பெண்களின் ஆடை மற்றும் அணிகலன் தயாரிப்பது ஒரு பனிப்பாறையின் முறையில் ஒன்றாகும்.
வழக்கத்திற்கு மாறான வடிவமைப்பு வேலைகளுடன், லேபிள் விரைவில் ஆண்ஆடைகள் மற்றும் குழந்தைகளின் தரத்தைக்கொண்டு ரெயின்கோவுடன் Rainwear சேகரிப்பையும் தொடங்கவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக ஒன்றுசேர்க்கப்பட்ட ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் பிற்பகுதியில் Mercedes-Benz பேஷன் வீக் அபிவிருத்தி ஏற்பட்டது.
எனது உரையாடலின் போது, இந்த உலகளாவிய தயாரிப்பிற்கு(Brand) பின்னால் உள்ள Powerhouse உடனான ஒரு கிளை இங்கிலாந்தில் நிறுவப்பட்டுள்ளது. இவற்றில் புரிந்துகொண்ட விடயம் என்னவென்றால் நிலையான பேஷன் பெரும்பாலும் தவறான நம்பிக்கைகளால் மூழ்கியுள்ளது.
லோனாலி பணிவுடன் கூறியது, மற்ற நிலையான நடைமுறைகளை போல் இல்லாமல் up-cycling பேஷனைத் தேர்ந்தெடுப்பது உங்களின் சௌகரியம் மற்றும் மலிவு ஆகியவற்றில் உடன்பாடு செய்வதாக அர்த்தமல்ல என்பதை உறுதியாக கூறினார். உண்மையில் புதிய மற்றும் நாகரீகமான தோற்றத்தை வழங்குவதற்காக ஸ்டைலிஸ்டிக் முறையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட உயர்தர பொருட்களை மட்டுமே நீங்கள் பெறலாம். இங்குள்ள வெகுமதி என்னவென்றால், துணிகளைத் தயாரித்தல் மற்றும் தயாரிப்பதற்குப் பின்னால் உள்ள அனைத்து செயல்முறைகளும் முற்றிலும் நெறிமுறையானவை, புகழ்பெற்ற ஹீரோக்களால் ஆடைத்துறையில் அபிவிருத்தி பரவலாக்கப்பட்டது.
லோனாலியுடனான உரையாடலின் போது, எதிர்காலத்தில் தயாரிப்பிற்கு(brand) என்ன திட்டத்தை எதிர்பார்க்கலாம்? அதற்கு அவர்கள் இளம், திறமையான அச்சுக்கலை கலைஞரின் படைப்பிலான ரெயின்கோட் சேகரிப்பையும் உள்ளடக்கிய கண்ணை பிரமிக்கும் ஒன்றிணைப்பு உட்பட அற்புதமான இரண்டு தயாரிப்புக்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.
இந்த அற்புதமான, நாகரீகமான ஆடைகள் கிடைக்ககூடிய இடம், ஹவுஸ் ஆஃப் லோனாலி கடையிலிருந்து நேரடியாக பொருட்களை நேரடியாக வாங்கவோ அல்லது விநியோகித்தல் மூலமாகவோ பெறலாம். மிக பணிவுடன் ஆர்டர்கள் Facebook மற்றும் Instagram சுயவிவரங்கள்(Profiles) மூலம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
ஹவுஸ் ஆஃப் லோனாலி இலங்கையில் நிலையான பேஷன் நீண்ட காலத்திற்கு நிலைக்க சர்வதேச சந்தையில் உள்ளூர் வடிவமைப்புக்களின் ஈர்ப்பு மற்றும் ஈர்ப்பினூடாக ஏற்பட்ட தாக்கத்தினால் இது முக்கிய இடத்தை வகிக்கின்றது.
மேலும் ஆடை, காலணிகள் மற்றும் ஆபரணங்கள் பார்க்க இன்றே www.lonali.com இற்குச் செல்லவும்.