Blog Page 26

ஆத்மா

ஆரம்பத்தில் சுதாகரை பார்க்க எல்லோரையும் போல சாதாரணமாக தான் தெரிந்தான். ஆனால் அவன் பின்னால் அவ்வளவு பெரிய பயங்கரம் இருக்கும் என்று நித்யா கனவில் கூட நினைத்திருக்கவில்லை.

நித்யா அவனை முதன் முதலில் சந்தித்தது ஒரு தனியார் ஆசிரியர் கருத்தரங்கு முகாமில் தான்.  அந்த முகாம் மத்தியமலை நாடான கண்டியில் அமைந்திருந்தது. மனதை கவரும் ரம்மியமான இடம். சுற்றிலும் அடர்ந்த மரங்களும், நீண்ட புல்வெளிகளும் சிலு சிலு வென காற்றுமாக அந்த இடம் அத்தனை அழகாக காட்சியளித்தது.

இளம் ஆசிரியர்களுக்கான ஒரு மாத கருத்தரங்கு முகாம் அங்கு நடைப்பெற்றது. இலங்கையின்  எல்லா மூலைகளிலும் இருந்தும் இளம் ஆசிரியர்கள் அந்த முகாமிற்கு வந்திருந்தனர்.  நித்யா சுதாவை அங்கு தான் சந்தித்தாள்.

நித்யா பிறந்தது வளர்ந்தது எல்லாம் கொழும்பில் தான். வீட்டின் இரண்டாவது பெண். மூத்தவள் வெளியூரில் திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறாள். நித்யா வீட்டின் செல்லப்பிள்ளை. துடிப்பும் அழகும் கொண்ட அவள் முகத்தில் எப்போதும்  புன்னகை வீட்டிருக்கும்.

பாடசாலை வாழ்க்கை முடிந்ததும் நித்யா ஆசிரியர் படிப்பில் பட்டம் பெற்றாள். படிப்பு முடிந்ததும் அதிஷ்டவசமாக அவள் படித்த பாடசாலையிலேயே அவளுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது.  பிடித்த வேலை  படித்த பாடசாலையிலேயே கிடைத்ததால் அவளும் அந்த தொழிலை மனமார செய்து வந்தாள். முதலாம் வருட முடிவில் தவணை விடுமுறையில் இந்த கருத்தரங்கிற்கான வாய்ப்பு அவளுக்கு கிடைத்திருந்தது. கண்டியில் அந்த முகாம் அமைந்திருந்த சூழல் பற்றி அவள் நன்கறிந்திருந்ததாள்: மகிழ்ச்சியோடு அதில் கலந்துக்கொண்டாள்.

அங்கு அவளுக்கு கிடைத்த புது நண்பர்களில் சுதாகரும் ஒருவன். சுதாகர் அமைதியான முகம், அளவான பேச்சு, மெலிந்த உயர்ந்த தேகம், ஒடுங்கிய தாடை என காட்சியளித்தான். பெரும்பாலும் அமைதியாகவே இருந்த அவனிடம் நித்யாவாக சென்று நட்பேற்படுத்திக்கொண்டாள்.

அந்த நட்பு அந்த முப்பது நாட்களில் காதலாக மாறும் என இருவரும் எதிர்ப்பார்க்கவில்லை.  நித்யா போன்ற ஒரு பெண்ணை சுதா அதற்கு முதல் சந்தித்திருக்கவில்லை. அவனது மௌனத்தை கலைத்து மகிழ்ச்சி உண்டாக்கினாள்.

நித்யாக்கு சுதா மீது ஒரு எதிர்பாரா அன்பு ஏற்பட்டது. அந்த கருத்தரங்களில் கிடைத்த நேரங்களில் இருவரும் மனம் விட்டு நிறைய பேசினர். ஒருரை ஒருவர் நன்கு தெரிந்துக்கொண்டனர்.  வார இறுதிகளில் அவர்களுக்கு வித விதமான விளையாட்டு போட்டிகள் இருந்தது. அவற்றில் எல்லாம் நித்யா கலக்கினாள். அந்த விஷயங்களில் சுதாகர் பார்வையாளனாவே இருந்தான்.  நித்யாவை ஊக்குவித்து மகிழ்ந்தான்.  இரவு நேரங்களில் இருந்த இசை கச்சேரியில் தான் நித்யா சுதாகரை கண்டு மிரண்டு போனால், சுதாகர் வயலின் வாசிப்பதில் மிகவும் தேர்ச்சிப்பெற்றெவன்.  அவன் வாசித்து முடித்ததும் அங்கிருந்த அத்தனைப்பேரும் மெய் சிலிர்த்து போயினர்.  படு திறமைசாளியாக இருந்தான். நித்யா அவனுடைய இசையை வெகுவாக ரசித்தாள். இருவரும் நிறைய நேரம் ஒன்றாக களித்தனர். இனம் புரியாத ஒரு உறவு அவர்களுக்குள் உருவாகியது.

சுதாகர் பற்றி நித்யா தெரிந்துக்கொண்டவரை அவளுக்கு அவன் மேல் பரிதாமே உண்டானது. சுதாகருக்கு பெற்றோர்  இறுதி கட்ட யுத்தத்தில் இறந்து போயினர்.  தன்னுடைய பதின்மூன்று வயதில் இருந்தே சிறுவர்கள் காப்பகத்தில்  வளர்ந்து வந்தான் சுதாகர். இசையின் மீதிருந்த ஆர்வத்தால் முறையாக சங்கீதம் படிக்க ஆரம்பித்தான். வயலின் அவனுக்கு பிடித்தமான வாத்தியமாக இருந்தது. அவன் வயலின் வகுப்புகளுக்கு போக ஆரம்பித்தான்.

சுதாகர் நித்யாவோடு பேசும் நேரங்களில் எல்லாம் மறக்காமல் சொல்லும் ஒரு பெயர் காளி. காளிதாஸ் சுதாகரின் உயிர் நண்பன். அவனுக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள இருப்பவன் அவன் தான். இசை மீதிருந்த ஆர்வத்தினால் சுதாகர் வயலினுக்கு சேர்ந்த போது தான் காளிதாசை சந்தித்தான்.  இருவரும் நேருக்கமான நண்பர்களாகிபோயினர்.  காளிதாசின் குடும்பம் சுதாகரை இன்னொரு மகனாக பார்த்து. சுதாகருக்கு காளிதாஸ் மூலமாக பெற்றோரும் ஒரு குட்டித்தங்கையும் கிடைத்தனர்.  அவர்களோடு தான் அவன் அதிக நேரம் களித்து வந்தான்.

காளிதாஸ் ஒரு விபத்தில் சிக்கியதில் கோமா நிலைக்கு சென்றுவிட்டிருந்தான். டாக்டர் அவனது நிலை இயல்புக்கு திரும்புவது சிரமம் என்று சொல்லிவிட்டார். அவனது குடும்பம் அவனை பார்த்துக்கொள்ள சிரமப்பட்டு கொண்டு இருக்க சுதாகர் அவனை தன்னோடு வைத்து பார்த்துக்கொண்டான். தன்னுடைய கடைசி காலம் வரை  அவனை தாய் நின்று பார்த்துக்கொள்வது அவனது கடமையென்றும் சொன்னான். அதனால் தனக்கு மனைவியாக வரும் பெண் முதலில் காளிதாசை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவனது ஒரே விருப்பமாக இருந்தது. சுதாகரை பற்றி நினைக்கையில் நித்யாவிற்கு பெருமையாக இருந்தது.

இருவருக்குமான கனவு ஒரு இசை பயிற்றுவிப்பு நிலையம் ஆரம்பிக்க வேண்டும் என்பதே. அதற்கான சேமிப்பு வேலைகளில் தான் இருப்பதாக  சுதாகர் சொன்னான். தான் ஆசிரியராகவும் அதே நேரம் ஒரு ஆன் லைன் வியாபாரத்திலும் ஈடுபட்டு தங்களது கனவுக்கு நிதி திறட்டிக்கொண்டு இருக்கிறேன் என்றான்.

காளிதாஸிடம் நித்யாவை  அறிமுகப்படுத்த ஆவலாக இருப்பதாக சுதாகர் சொல்லிக்கொண்டே இருப்பான். சுதாகர் சொல்லவதை கேட்க காளியை நேரில் பார்க்க அவளும் விரும்பினாள் .

கருத்தரங்கு நல்லபடியாக முடிவுக்கு வந்தது. இருவரும் ஒன்றாகவே கொழும்பு நோக்கி பேருந்தில் புறப்பட்டனர். பயணத்தின் போதும் சுதாகர் காளியை பற்றியே சொல்லிக்கொண்டு வந்தான். இருவரும் சென்று வந்த சுற்றுலாக்களின் படங்களை எடுத்துக்காட்டி அங்கு நடந்த சுவாரஷ்யமான கதைகளை சொல்லிக்கொண்டே வந்தான். இருவரும் இலங்கையின் பல மலைக்காடுகளுக்கு பயணப்பட்டு இருந்தனர். அந்த படங்களில் குறிப்பிட்ட ஒரு கடற்கரைக்கு முன்னால் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டி அந்த கடலில் இருவரும் குளித்துக்கொண்டு இருந்த போது தான் சுதாகர் கட்டுபாடு இன்று நீரில் மூழ்க நேரிட்டதாகவும் காளி அவனை காப்பாற்ற முயன்று அலையில் அடித்து செல்லப்பட்டான். அவனை உயிருடன் மீட்டெடுத்த போதும் இப்போது இருக்கும் நிலையில் தான் அவனை பார்க்கமுடிந்தது  அதை சொல்லிமுடிக்கும் போது அவனது கண்கள் கலங்கியது, நித்யா அவனை அனைத்துக்கொண்டாள்.  அந்த பேருந்து பயணத்தில் முதல் முத்தமும் பரிமாறியது.

இருவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றிருந்தனர். கிடைக்கும் நேரங்களில் எல்லாம் தொலைப்பேசி அழைப்புகள் பறந்தன. வார இறுதி அன்று சுதாகர் அறைக்கு நித்யா வருவதாகவும் காளியை சந்திப்பதாகவும் சொல்லி இருந்தாள்.  திட்டம் படியே வார இறுதியும் வந்தது. நித்யா சுதாகர் வீட்டுக்கு சென்றிருந்தாள். சுதாகர் வீடு நகரத்துக்கு புறத்தே கொஞ்சம் தூரமாக இருந்தது. பெரிய வளாகம் கொண்ட தனி வீடு அது. ஆள் நடமாட்டம் பெரிதாக இல்லாத அமைதியான இடம்.

வீடு நன்றாக பராமறிக்க பட்டு இருப்பது தெரிந்து. வீட்டின் ஹாலில் பெரிய சையில் ஒரு வயலின் வைக்கப்பட்டு இருந்தது. திரும்பும் இடமெல்லாம் இசை சம்பத்தப்பட்ட ஏதாவது ஒரு பொருள் இருந்தது அல்லது சுதாகர், காளிதாஸின் புகைப்படங்கள் இருந்தன. நித்யாவிற்கு வீடு மிகவும் பிடித்திருந்தது தன்னுடைய நண்பனுக்காக சுதாகர் எவ்வளது சிரமமெடுத்துக்கொண்டு இருக்கிறான் என்பதை அவள் உணர்ந்தாள்.

கடைசியாக காளிதாஸின் அறைக்குள் நுழைந்தார்கள். அறை முழுக்க ஏகப்பட்ட புகைப்படங்களும் மருந்து மாத்திரைகளும் கொட்டிக்கிடந்தது. அறையின் ஓரத்தில் இரண்டு படுக்கைகள் இருந்தது ஒன்று சுதாகருடையதாக இருக்க வேண்டும் மற்றயதில் ஒரு உருவம் அமைதியாக சலனமின்றி படுத்திருப்பது தெரிந்தது. கழுத்து வரைக்கும் போர்வை போற்றப்பட்டு வெளிச்சம் கண்ணைக்கூசாது இருக்க கண்ணில் ஒரு துணி போடப்பட்டு இருந்தது. நித்யாவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது. சுதாகரின் புகைப்படங்களில் எல்லாம் சிரித்தபடி உற்சாகத்தோடு இருக்கும் காளிதாஸ் இப்படி அசைவின்றி மரம் போல் சரிந்திருப்பதைப்பார்க்க மனம் நொந்தது.

சுதாகர் அருகில் சென்று காளியை அன்போடு அழைத்தான். நித்யா வந்திருப்பதாக சொன்னான். நித்யாவிற்கு தெரியும் அந்த அழைப்பு காளியை எதுவும் செய்யபோவது இல்லை ஆனால் தன் நண்பனை சுதாகர் அப்படி தான் பார்த்து வருகிறான் என்பதை அவள் அறிவாள். சுதாகர் காளியின் கண்ணில் மறைக்கப்பட்டு இருந்த அந்த சிவப்புத்துணியை எடுத்தான். நித்யாவின் கண்கள்  விரிந்தது மனம் படபடத்தது உடல் நடுக்கம் கொண்டது. காளியின் கண்கள் உண்மைக்கிடையாது. அது கைகளால் வரைந்த ஓவியம். அந்த உடலும் ஒரு உடல் கிடையாது. மரத்திலான ஒரு மனித பொம்மை அது. நித்யா பேயறைந்ததை போல பார்த்துக்கொண்டு இருந்தாள். சுதாகரிடம் எந்த மாற்றமும் இல்லை. அந்த பொம்மையை பார்த்து அவன் பேசிக்கொண்டு இருந்தான். நித்யாவை பார்த்து சொன்னான் ”காளிக்கு உன்ன பிடிச்சி இருக்குனு நினைக்குறேன் கண் சிமிட்டுறான்” என்று நித்யாவிற்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது மயங்கி கீழே சரிந்தாள்.

கண்விழித்த போது ஹாலில் உள்ள குஷனில் அவள் படுத்திருந்தாள். சுதாகர் அவளை குழந்தையை போல தட்டி எழுப்பினான். நித்யா அவள் பார்த்ததை நினைவு கூர்த்தாள். இதயம் அடித்துக்கொண்டது ஆனால் சுதாகரிடம் எந்த சலனும் இல்லை. அவன் சாதாரணமாக எப்பவும் போல இருந்தான். ”என்ன ஆச்சு நித்தி மார்னிங் சாப்பிடலயா?”  ”என்ன ஆச்சு மா?” என இயல்பாய் கேட்டான். அவள் கண்டது என்ன கனவு தானா என நினைத்தாள். அந்த அறைப்பக்கம் திரும்பி பார்த்தாள் அதன் கதவு லேசாக திறந்திருந்தது உள்ளே மெத்தையில் அவன் காளி என்று காட்டிய பொம்மை உறங்கிக்கொண்டு தான் இருந்தது. அப்படி திரும்பி சுதாகரை பார்த்தாள். அவன் அவளது பதிலுக்கு காத்திருந்தான். நித்யாவிற்கு ஒன்று மட்டும் விளங்கியது இது ஏதோ பெரிய விபரீதம் இதை பொருமையாக கையாள வேண்டும் என்று.

சுதாகரை சமாளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. வீட்டுக்கு வந்தாள், சுதாகரை தொலைப்பேசியில் அழைத்து கேட்டாள். உள்ளே அவள் பார்த்ததை பற்றி வினவினாள். சுதாகரின் பதிலில் அது ஒரு பொம்மை என்று எங்குமே புலப்படவில்லை, பதிலுக்கு அது தான் காளி, அவன் அப்படி தான் இருப்பான், இதெல்லாம் தெரிஞ்சி தானே நீ இங்க வந்த? உனக்கு என்ன ஆச்சு என நித்யாவை சந்தேகத்தோடு கேட்டான். நித்யா குழம்பினாள். அழுதாள். தான் காதலித்தவன் ஒரு மனநோயாளி என்பதை அவளுடைய மனதால் தாங்க முடியவில்லை.

நித்தியா நிதானித்தாள் கடுமையாக சிந்தனை வயப்பட்டாள். அவனுடைய இந்த நிலைக்கு என்ன காரணம் என யோசிக்கலானாள்.  சுதாகருடன் அவள் பழகியவரை அவளுக்கு  அவனிடம் அதுபோலான ஒரு அசாதரண உணர்வு ஒருக்கவில்லை. அவனை போல அன்பான ஒருவன் இருக்கவே முடியாது என்று எண்ணும் படி அவளை அவன் பார்த்து வந்தான். எல்லாம் சரியாக இருக்க இந்த விஷயம் மட்டும் ஏன் இப்படி என குழம்பினாள். எங்கோ எதிலோ ஒரு தவறு நடந்திருப்பது அவளுக்கு புரிந்தது.  சுதாகர் அவள் மீது வைத்திருந்த அன்பு பரிசுத்தமானது என்பது அவள் மனதுக்கு தெரியும். நித்யா மன உறுதியை ஏற்படுத்திக்கொண்டாள். சுதாகரின் இந்த பரிதாபமான நிலையில் இருந்து அவனை காப்பாற்றவேண்டும் என்று உறுதி கொண்டாள்.

நித்யா அடுத்த ஒரு மாத கால பகுதிக்குள்  சுதாகரின் வாழ்க்கை அவனது ரகசியங்கள் அறிய தனது முழு நேரத்தையும் செலவழித்தாள். அவர்கள் படித்த கல்லூரி, வேலை செய்த இடம், நண்பர்கள் என எல்லோரிடம் விசாரித்தாள், சுதாகர் அவனைப்பற்றியும் காளியை பற்றியும் சொன்ன எல்லாம் தகவலும் உண்மைத்தான். ஒன்றைத்தவிர, காளி இறந்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

காளிக்கு என்ன ஆனது? அந்த மரணத்தால் சுதாகருக்கு ஏன் இந்த நிலை வந்தது  என்பதை அறிய  காளி குடும்பத்தை தொடர்பு கொள்ள முனைத்தாள் அவள். பெரும் சிரமத்திற்கு பின் காளிதாஸின் குடும்பம் இருக்கும் இடத்தை கண்டறிந்தாள். காளியின் தங்கை அகல்யா நித்தியாவிற்கு நடந்ததை சொன்னாள்.

நீரில் மூழ்கி தத்தளித்த சுதாகரை காப்பாற்ற  காளி கடலில் குதித்தான். ஆனால் அவனாள் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. காளி மூன்று நாட்கள் மருத்துவமனையில்   சுயநினைவு இல்லாமல் கோமா நிலையில் கிடந்து பின் சிகிச்சை பலனளிக்காது  இறந்து போனான்.  அந்த சம்பவத்தின் பின் சுதாகர் பித்து பிடித்தவனை போல மாறிவிட்டதாகவும் காளியின் இறுதி சடங்கிற்கு கூட அவன் வரவில்லை என்றும் குறிப்பிட்டாள்.  இந்த சம்பவம் நடந்து ஒரு சில மாதங்களுக்கு அவன் அவர்களின் வீட்டு பக்கமே வரவில்லை என்றும் ஒரு நாள் வந்து காளி இன்னும் சாகவில்லை. அவன் நம்மோடு தான் இருக்கிறான், என்னால் அவனது இறுப்பை உணரமுடிகிறது என்று ஏதேதோ பிதற்றினான். ஏற்கனமே அவனது இறப்பால் மனமுடைந்த கிடந்த எங்களுக்கு சுதாகரின் புலம்பல் இன்னும் விரக்தியை உண்டுசெய்தது. நாங்கள் சுதா அண்ணாவை வெறுக்கவில்லை. மாறாக அவரது மனநிலை திடம் ஆக வேண்டும் என்று தான் நாங்களும் விரும்பினோம். ஆனால் சுதா அண்ணன் எங்களின் பார்வையில் இருந்தே ஒரேடியாக விலகிவிட்டார். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சுதா அண்ணாவுக்கு எங்களை தாண்டியும் சொல்லிக்கொள்ள ஆளில்லை.

பிறகு ஒரு நாள் என் நண்பனின் உதவியோடு அண்ணா இருக்கும் இடத்தை கண்டு கொண்டோம். ஆனால் அவரின் நிலையை பார்க்கவே பரிதாபமாக இருந்தது தனியே ஒரு அறை எடுத்து அந்த அறை முழுவதும்  காளியின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு, ஏதேதோ பூஜைகள், ஏதேதோ மாந்ரீக பொருட்களோடு ஒரு உருவ பொம்மையோடும் இருந்தான். தான் காளியை நெருங்கிவிட்டதாகவும் அவனது ஆத்மா தன்னோடு பேச ஆசைப்படுகிறது என்றும் சொல்லிக்கொண்டு இருந்தான்.  அவனை திட்டி அறிவுரை கூறி மறுபடி எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தோம். ஆனால் ஒரு சில நாட்களிலேயே அவன் மீண்டும் காணாமல் போய்விட்டான் அதற்கு பிறகு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன இப்போது நீங்கள் சொல்லும் வரை எங்களுக்கு சுதா அண்ணனை பற்றிய எந்த தகவலும் இருக்கவில்லை. அவர் எப்படி இருக்கிறார் என்று அன்பொழுக கேட்டாள். நித்யா அவளை சமாளித்துவிட்டு அங்கிருந்து வந்தாள்.

சுதாகரின் நிலைமையை முழுமையாக புரிந்துக்கொண்டாள் நித்யா. சுதாகர் காளி மீது கொண்டிருந்த அளவுக்கடந்த அன்பு அவனது இறப்பை ஏற்கவிடாது செய்துவிட்டதை புரிந்துக்கொண்டாள். கொழும்பில்  இருந்த தலைச்சிறந்த மனநிலை மருத்துவர் ஒருவரோடு சுதாகரை நெருங்கினாள். சுதாகர் எல்லாவற்றுக்கும் ஒத்துக்கொண்டான் ஆனால் காளி இறந்துவிட்டான் என்பதாக எதாவது சொன்னால் மட்டும் பைத்தியக்காரனை போல சத்தம் போட்டு கதறினான். அவனை பரிசோதித்த வைத்தியர் நித்யாவிடம் ஒன்றை மட்டும் தான் சொன்னார் சுதாகர் காளி இறந்து விட்டான் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும். அது உன்னால் தான் முடியும் என்றார்.

நித்யா முயன்றாள். தன்னுடைய முழுநேரத்தையும் இதற்காக செலவிட்டாள். அவனோடு இருந்து அவனுக்கு உண்மை எது மாயை எது என புரியவைத்தாள். அந்தமாதிரியான நேரங்களில் எல்லாம் சுதாகர் அவனது பொறுமையை இழந்தான். அழுதான், கத்தினான், அவளிடம் காளி உயிரோடு இல்லை என்பதை மட்டும் சொல்லாதே என கெஞ்சினான். சில நேரங்களில் நித்யாவை கை நீட்டி அடிக்கவும் செய்தான். நித்யா எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாள். சுதாகரை இயல்பு நிலைக்கு கொண்டு வர அவள் எந்த நிலைக்கு வேண்டுமானாலும் சொல்ல தயாராகினாள்.

ஒரு விடியற்காலை நித்யாவின் மொபைலுக்கு சுதாகரிடம் இருந்து அழைப்பு வந்தது. தொடர்ந்து வந்துக்கொண்டிருந்த அந்த அழைப்பால்  அவள் முழித்தாள்.  மொபைலை ஆன்சர் செய்து காதில் வைத்தால் மறுமுனையில் எந்த சத்தமும் இருக்கவில்லை. நித்யா பதறிப்போனாள் உடனடியாக புறப்பட்டு சுதாகர் வீடு சென்றாள். அவன் வீடு வந்தடையும் வரை அவனுக்கு அழைப்பை மேற்கொன்றாள் ஆனால் பதிலில்லை.  அவளிடம் இருந்து வீட்டின் இன்னொரு சாவியை பயன்படுத்தி கதவை திறந்தாள். உள்ளே அறைக்குள் சுதாகர் காளியின் பொம்மைக்கு அருகில் அவனது கையை கண்ணாடி துண்டினாள் கிழித்துக்கொண்டு ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்தான். பதறிப்போன நித்யா அவனை காப்பாற்றி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றாள்.  சிலமணி நேர போராட்டத்திற்கு பின் சுதாகர் சுயநினைவுக்கு திரும்பினான்.

சுதாகர் கண் முழித்ததுமே நித்யாவை அழைத்தான். அவளின் கைகளை பற்றிக்கொண்டு அவளிடம் ஒரு உண்மை சொல்லவேண்டும் என்று சொன்னான்.

மூன்று வருடத்தின் முன்னர் சுதாகர் அந்த கடலில் அவன் மூழ்கியபோது தன்னை காப்பாற்றியது காளி தான். ஆனால் அவன் சாக காரணமாக இருந்தது நான் தான் என்றான். நித்தியாவின் விழிகள் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தது.

சுதாகர் காளியை போல சிறந்த நீச்சல் தெரிந்தவன் இல்லை. ஆகவே அலை அவனை அடித்துக்கொண்டு சென்ற போது சுதாகர் முற்றிலுமாக கட்டுப்பாட்டை இழந்தான். அப்போது அவனை காப்பாற்ற காளி வந்தபோது தற்காப்பிற்காய் அவனை பிடித்துக்கொண்டு அவனை தள்ளி தான் வெளியே வர முயன்றேன். அது நான் வேண்டும் என்று செய்த செயல் அல்ல நீருக்குள் யார் மூழ்க நேர்ந்தாளும் நடக்கும் ஒரு தன்னிச்சையான நிகழ்வு. ஆனால் காளி அவன் தன்னை பிடித்துக்கொண்டாவது மேலே வரட்டும் என்று மூச்சைபிடித்து மூழ்கி தன் உயிரை மாய்த்துக்கொண்டான். நான் மட்டும் அன்று அவனை பிடித்து உள்ளே தள்ளாவிட்டால் இன்று அவன் உயிருடன் என்னோடு இருந்திருக்க கூடும். அவன் சிரித்த முகம் நின்று போனதற்கு நானே காரணம். நான் வாழும் வாழ்க்கை அவனுடையது என்று கதறி அழுதான்.  அதனால் தான் காளி இறந்ததை தான் மறக்க நினைத்து அவனுடன் வாழுவதாக நினைத்து அதையே உண்மையாக்கி கொண்டேன் என்றான்.

நித்யா அவனை அனைத்துக்கொண்டாள், கண்டிப்பாக அவன் தெரியாமல் செய்த செயல் தான் அது. நீ இயல்பு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே காளியுடைய ஆசையாகவும் இருக்கும் என்று கூறினாள். அவன் அவளை இறுக பற்றிக்கொண்டான். சுதாகர் சொன்ன விடயம் அவளுக்கு அதிர்ச்சி ஊட்டினாலும் அவன் பேச்சில் இருந்த தெளிவை பார்க்கும் போது அவனுக்கு உண்மை புரிந்துவிட்டது என்ற மகிழ்ச்சி உண்டாகியது. தன்னுடைய முயற்சி பயனளித்து விட்டதை நினைத்து அவள் கண்ணீர் மல்கினாள். சுதாகர் தன்னுடைய குற்ற உணர்ச்சியை வெளிப்பதியதால் அமைதியடைந்தான். நிஜ வாழ்கைக்கு வந்தான்.

அன்று மாலை சுதாகரை வீட்டுக்கு அழைத்துவரும் வழியில் அவன் சொன்ன ஒரு விடயம் இருவரையும் சிந்திக்க வைத்தது,  அதிகாலையில் தன்னுடைய வீட்டுக்கு வர எப்படி தோன்றியது என நித்தியாவை கேட்டான். அதற்கு அவள் அவனிடம் இருந்த வந்த அழைப்புக்கள் பற்றி குறிப்பிட்டாள்.  அதற்கு வாய்ப்பே இல்லை என்று சொன்ன சுதாகர் நேற்றைய நாள் இரவு தன்னுடைய மொபைல் மழையில் நனைந்துவிட்ட படியால் அதை கலட்டி காய வைத்துவிட்டு அதன் பின்னர் தன்னுடைய அறைக்கு சென்றதாக சொன்னான். அறையில் காளிக்கு அருகில் அமர்ந்திருந்த அவனுக்கு அந்த சம்பவத்தின் போது நடந்த நிகழ்வுகள் மனதில் வந்துக்கொண்டே இருந்ததாகவும் அது மிகப்பெரிய ரணத்தை ஏற்படுத்த, அதிகாலையில் தான் இந்த அசம்பாவிதம் நடந்தது என்றும் கூறினான். அப்படி என்றால்  அந்த அழைப்பு அது யார் செய்தது. இருவருக்குள்ளும் ஒரு குழப்பம் இருந்தது சுதாகரின் வீட்டை வந்தடைந்தனர். ஹாலில் அவன் சொன்னபடியே அவனது மொபைல் கலட்டி வைக்கப்பட்டு இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். சுதாகர்  காளியின் அறையை திறந்து பார்த்தான் அங்கே காளியாக அவன் நினைத்து வாழ்ந்து வந்த பொம்மை இருக்கவில்லை.  வெறும் மெத்தை மட்டுமே இருந்தது.

எழுத்து – மஹின் சுப்பிரமணியம்

இலங்கையில் இரத்தினக்கல் தொழிற்துறை

இரத்தினக்கல் தொழிற்துறையில் உலகளாவிய ரீதியில் இலங்கைக்கென்று தனித்துவமான செல்வாக்கு இருக்கின்றது. அதிலும் இலங்கைக்கே சிறப்பான நீலக்கல் இரத்தினங்களுக்கு வரலாற்று ரீதியாக உலகளவில் கேள்வி இருந்து வருகிறது. இவ்வாறாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் கனிய வளங்களே முக்கிய இடத்தைப்பெறுகின்றன. இவ்வாறான கனியவளங்களின் வரிசையில் காரியம், சுண்ணாம்புக் கற்கள், களிமண் வகைகள், கனிய மணல் வகைகள், இரும்புத்தாது, உப்பு மற்றும் இரத்தினக்கல் முதலியன இலங்கையின் முக்கிய கனிய வளங்களாக இருந்து வருகின்றன. இதில் இரத்தினக்கற்களே பிரதான வருவாய் ஈட்டும் கனிம வளமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கனிய வளங்களில் அதிக அந்தியச் செலாவணியை ஈட்டித் தரும் கனிய வளமாக இருக்கின்ற அதேவேளை இலங்கை நாட்டின் ஏற்றுமதிகளில் கனிய வளங்கள் மூன்று சதவீத பங்காக இருக்கின்றமை ஆச்சரியமே. சர்வதேச விற்பனை சந்தை வீதத்தில் இலங்கை  25%  பங்களிப்பை செய்வதுடன்,  அதன் மொத்த பெறுமதி  ஆண்டொன்றுக்கு  $350 மில்லியன் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. உலகில் இரத்தினக்கற்களை உற்பத்தி செய்யும் பிரதான நாடுகளான பிரேசில், பர்மா, தாய்லாந்து, தென்னாபிரிக்கா என்னும் நாடுகளின் வரிசையில் இலங்கை ஐந்தாவதாகவுள்ளது. இலங்கையின் இரத்தினக்கல் தொழில்துறையின் வரலாற்று பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் குறிப்புகளாக உண்மையில் ” Ceylon Sapphire ” இனூடா உலகின் பிரீமியம் வண்ணக் கல் என்ற அடையாள அங்கீகாரத்தை இலங்கைக்கு கொடுத்துள்ளன.

இவ்வாறு இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இரத்தினக்கற்களானது அதிகம் காணப்படும் பிரதேசமாக இரத்தினபுரி நகரம் காணப்படுகின்றது. இதனாலேயே தான் இலங்கையின் “இரத்தினத் தலைநகரம்” என இரத்தினபுரி அழைக்கப்படுகின்றது. இவை தவிர பண்டைய  காலத்தில் இருந்தே இலங்கையானது இரத்தினக்கற்களுக்குப் புகழ் பெற்ற நாடாக இருந்து வருகிறது.

கிரேக்க, அரேபிய, ரோம, சீன வர்த்தகர்கள் இலங்கையுடன் இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதனாலேயே இலங்கை ‘இரத்தினத் தீபம்’ என்ற பெயர் பெற்று விளங்கியது. அது மட்டும் அல்லாமல் “முடிவில்லாத சுவர்க்கம்” ,“புதையல் தீவு”, “இரத்தினத் தீபம்”, “ரத்தினக் கல் தீவு” , “ரத்னா த்வீபயா”,  என பல்வேறான பெயர்களை வெளிநாட்டவர்கள் பெயரிட்டார்கள். அத்தோடு வரலாற்று குறிப்பொன்றில் ” மேகமற்ற இரவின் மின்னும் நட்சத்திரங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட மினுமினுக்கும் வண்ணமயமான ரத்தினக் கற்களின் தீவு” என் இலங்கை சிறப்பிக்க பட்டுள்ளது. ஒரு வணிக வழிகாட்டி “எரித்ரியன் கடலின் பெரிப்ளஸ்” முதல் நூற்றாண்டில் இலங்கையின் வளங்களில் இரத்தினக்கல் பற்றிய குறிப்புகளை வழங்கியுள்ளதாக கருதப்படுகிறது.

அத்துடன் பண்டைய காலத்தில், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற சந்தைகளுடன் ஜப்பான் சந்தைகளிலும் இலங்கை இரத்தினக்கற்களுக்கு பெரும் கிராக்கி இருந்ததாக உள்ளூர் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இலங்கை, பர்மா மற்றும் காஷ்மீர் இரத்தினக்கற்களுக்கே உலகளாவிய ரீதியில் பெரும் கிராக்கி இருப்பதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுவதே. இலங்கையானது இரத்தினக் கற்களை மிகப் புராதன காலத்திலிருந்து வர்த்தகம் செய்து வருகின்றது. இந்நிலையில்  இலங்கை அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக இருப்பதால் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தல் கைத்தொழில் அபிவிருத்தி கனிய வளங்களை மேம்படுத்தி அதன் மூலம் உச்சகட்ட வருவாயை பெறுவதாக அமையும்.

2021 இந்த ஆண்டின் முதல் அரைப் பகுதியில் மட்டும் 48 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலும் இரத்தினக் கல் ஏற்றுமதி மூலம் இலங்கை ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, 35 வீத அதிகரிப்பாக இந்த வருமானம் அமைந்துள்ளது. 1991 இல் இரத்தினக் கற்களின் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு 5165 மில்லியன் ரூபா வருமானமாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.பிரேசிலுக்கு அடுத்தபடியாக  இலங்கை,   50 க்கும் மேற்பட்ட வகையான இரத்தினக் கற்களை உற்பத்தி செய்யும் நாடாக திகழ்கின்றது.

இத்தகைய பெறுமதி மிக்க  இரத்தினக்கற்கள் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் மலையடிவாரங்களிலுமே உருவாக்குகின்றன. இரத்தினபுரி இத்தகைய ஒரு மலையடி வாரத்தில் அமைந்துள்ள நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலத்தில் ஒக்பிட்டி, அலகா ஆகிய பிரதேசங்கள் இரத்தினக்கல் அகழ்தலில் முக்கியம் பெற்றன. அத்துடன் பத்தலை, அவிசாவளை, பெல்மதுளை, பலாங்கொடை, இறக்குவானை போன்ற இடங்களும் இரத்தினக்கற்கள் காணப்படும் இடங்களாக அறியப்பட்டு உள்ளன.

இரத்தினக் கற்கள் மண்பரப்பை தோண்டப்படுதலின் மூலமே பெறப்படுகின்றன. இவ்வாறு தோண்டப்படும் சுரங்கங்களை ‘இரத்தினக்கற் சுரங்கம்’ என்பர். இதற்கு நரம்புப் படை அல்லது நாளப்படை எனும் சரளைக் கற்படை பரப்பில் தான் தோண்டப்படும். நாளப்படை என்பது அழுத்தமான வட்டக் கற்களைக் கொண்டிருக்கும். நாளப்படை வரை தோண்டப்படும் போது நாளப்படை வந்ததும் துலாவின் உதவி கொண்டு சில தொழிலாளர்கள் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றுவர், வேறு சிலர் இரத்தினக்கற்கள் உள்ள நாளப்படை மண்ணை வெளியேற்றுவர். இவ்வாறு வெளியேற்றப்படும் படல மண் ‘இரத்தினக்கற் படலம்’ என அழைக்கப்படும். மேலே கொண்டுவரப்பட்ட இம்மண் அரிதட்டில் இடப்பட்டு கழுவப்படும். கழுவப்பட்ட பின் அடையாளம் காணப்பட்ட இரத்தினக் கற்களை, அழுத்தமான வட்டக் கற்களில் இருந்து பிரித்து எடுப்பர். இத்தகைய இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடும் தொழிலாளர்களில் பலர் கூலிக்கு வேலைசெய்வது கிடையாது. மாறாக இரத்தினக்கற்களால் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி இவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

இவ்வாறு நிலத்தில் இருந்து வெட்டி/ தோண்டி எடுக்கப்பட்ட இரத்தினக்கற்கள் செதுக்கி அழுத்தம் செய்யப்பட்டு முறையான வடிவம் கொடுக்கப்பட்ட பின்பே உபயோகிக்க அல்லது ஏற்றுமதி செய்ய ஏற்றனவாகின்றன. செதுக்கி அழுத்தம் செய்தலைப் ‘பட்டை தீட்டுதல்’ என்பர்.  பட்டை தீட்டுதலில் இன்றளவிலும் பழைமையான முறைகளே கையாளப்பட்டு வருகின்றன. இரத்தினக் கற்களை அகழ்தல், பட்டை தீட்டுதல், மினுக்குதல், வர்த்தகம் செய்தல் ஆகியவற்றிற்கு இலங்கையின் அரச இரத்தினக்கற் கூட்டுத்தாபனம் பொறுப்பாக இருந்து வருகின்ற அதே வேளை இரத்தினக்கல் அகழ்வினை ஊக்குவிக்கும் பொருட்டு பட்டை தீட்டும் பயிற்சி நெறிகள் இரத்தினபுரியிலும் அகலிய கொடையிலும் இக்கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொள்வனவு செய்யப்பட்ட இரத்தினக்கற்கள் ஆகாய மார்க்கத்திலோ அல்லது உரிமையாளரினால் சுமந்துகொண்டே அவற்றினை ஏற்றுமதிசெய்ய முடியும்.

இன்றுவரை சுமார் 200 தாதுக்கள் இரத்தினக்கல் வகைகளை சேர்ந்தனவாக  வகைப்படுத்தப்பட்டுள்ளன, இவ் வகைப்பாடானது கற்களின் அழகு, ஆயுள், அரிதான தன்மை முதனமையாக கொண்டு மேற்கொள்ளப்படும்.  இந்த ரத்தினங்களில், சுமார் 75 வகைகள் இலங்கையின் இரத்தினக்கல் சுரங்கங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரத்தினக்கற்களுக்கும் ஏனைய விலையுயர்ந்த கற்களுக்கும் இடையே பல தரப்பட்ட வேறுபாடுகள் உள்ளன. இரத்தினக்கல் நன்கு உறுதியான கல்லாகும் ( வைரமானது). இது துலக்கமானதும் பிரகாசம் பொருந்தியதுமானதாக புலப்படும். இரத்தினக் கற்களைச் செதுக்கி அழுத்தம் செய்யப்படுவதற்கு முன்னர் வெறுமனே அவை சாதாரண கற்களைப் போலவே தோற்றம் அளிக்கும். இரத்தினக்கற்கள் மழையினாலும் வெய்யிலினாலும் அல்லது ஏனைய இயற்கை காரணிகளாலும் பாதிப்புறுவன அல்ல. அதன் காரணமாகவே இவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆற்றுப்படுக்கைகளில் சேதமுறாது கிடைக்கின்றன.

இலங்கையில் இன்று காணப்படும் இரத்தினக்கற்களில் சபைர் என்ற நீலக்கல், ரூபி என்ற சிவப்புக்கல் என்பனவற்றைக் முக்கியமானதாகவும் அதிகம் அகழப்படும் கற்களாகவும் குறிப்பிடலாம். வைடூரியம் என்ற இரத்தினக்கல் றக்குவாணைப் பகுதியில் அகழப்படுகின்றது. புஷ்பராகம், தொறாம்த என்ற வெண்ணீலக் கற்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன. அத்துடன் பதுமராகம், துதிமல், செவ்வந்திக் கல் எனும் இரத்தினக்கற்களும் உள்ளன.

இலங்கையில் இரத்தினக்கல் அகழ்வுத்தொழில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அவ்வளவிற்கு இரத்தினக்கல் மெருகேற்றும் லேபிடரி தொழிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1970 களின் முற்பகுதி வரை, ஹனபோருவா என்ற பாரம்பரிய இயந்திரத்தைப் பயன்படுத்தியே இரத்தினங்களை வெட்டுவதும் மெருகூட்டுவதும் செய்யப்பட்டது. வெட்டப்பட்ட மற்றும் மெருகூட்டப்பட்ட கற்கள் மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இரத்தினக்கல் வெட்டும் இயந்திரங்கள் தற்காலத்தில்  நவீன இயந்திரங்களாக பெரிதும் மேம்பட்டுள்ளன. கற்களை அளவிடுதல், அறுத்தல் மற்றும் மெருகேற்றும் தொழில்முறைக்காக பல துணை இயந்திரங்கள் இப்போது பயன்படுத்தப்படுகின்றன.

2016ஆம் ஆண்டளவில் உலகிலேயே மிகப் பெரிய புளு ஸ்டார் சஃபையர் எனக் குறிப்பிடப்படும் நட்சத்திர நீலக்கல் ஒன்று இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திர நீலக் கற்களில் இதுவே மிகப் பெரியது என இலங்கையில் உள்ள இரத்தினயியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதியுயர் பெறுமதியிலான இவ் நட்சத்திர நீலக்கல் 1404.49 காரட்டுகள் எடை கொண்டது என கொழும்பிலுள்ள இரத்தினக்கற்கள் பற்றி ஆய்வு மற்றும் தரநிர்ணயம் செய்யும் மையம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

அத்துடன் அண்மைக்காலத்தில் இரத்தினபுரியில் இரத்தினகல் வியாபாரி ஒருவரின் வீட்டு தோட்டத்தில் கிணறு வெட்டும்போது, உலகின் மிக பெரிய நீலக்கல்லாக கருதப்படும் ஒரு இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 510 கிலோ எனவும்  ரத்தினங்களை அளவிடும் முறையில் கருதினால் சுமார் 25 லட்சம் காரட் வரை பெறுமதியுடையது என கருதப்படுகின்றது. வெளிர் ஊதா நிறத்தில் உள்ள இந்தக் கல்லின் மதிப்பு சர்வதேச சந்தையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றளவில் இலங்கையின் இரத்தினக்கலுக்கான முக்கியத்துவத்தை எடுத்து நோக்கினால், மறைந்த முன்னாள் பிரித்தானிய இளவரசி டயானாவுக்கு இளவரசர் சார்ல்ஸினால் அணிவிக்கப்பட்ட நிச்சயதார்த்த மோதிரம் இலங்கையின் பிரபலம் வாய்ந்த Ceylon Blue Sapphire  என அழைக்கப்படும் நீலக்கல் பொறிக்கப்பட்ட மோதிரமேயாகும். இலங்கையின் இரத்தினக் கற்களை வாங்குவதில் ஜப்பான், ஹொங்கொங், சுவிற்சலாந்து, சீனா போன்ற  நாடுகள் முன்னிலை ஆர்வம் காட்டுகின்ற அதேவேளே குவைத், டுபாய், சவுதிஅரேபியா, ஐக்கிய அமெரிக்கா, சிங்கப்பூர் என்பனவும் இலங்கையின் இரத்தினக் கற்களை விலைகொடுத்து வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றமை அறியக்கூடியதாக உள்ளது. அத்துடன் கிரேட் பிரிட்டனின் ராயல் மியூசியத்தில் விலைமதிப்பற்ற கண்காட்சிகளில் இலங்கையின் இரத்தினக் கற்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலங்களில் இரத்தினக்கல் எதுவுமே கிடைக்காத நாடான ஹொங்கொங் நகரம் உலகத்தின் பிரதான இரத்தினக்கல் வியாபார மத்திய நிலையமாக உருவாகி உள்ளது. இதற்குக் காரணம் ஆபிரிக்காவில் கிடைக்கும் இரத்தினக்கற்களே ஆகும். இவ்வாறு இருக்க எமது நாட்டிலேயே இரத்தினக்கல் அகழ்விற்கான. வளங்கள் இயற்கையாகவே கிடைக்கின்ற போது நாட்டின் மொத்த தேசிய வருமானத்தினை முறையான அணுகுமுறைகள் மூலம் மேம்படுத்த இயலும் என்பது தெளிவாகுகின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தனக்கல் பரவலாக உள்ள பிரதேசங்களில் அனுமதி இன்றி இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகள் பாரியளவில் இடம்பெற்று வருகின்றமை கண்டிக்கத்தக்கது. இயந்திரங்களை பயன்படுத்தி சுற்றாடலைப் பாதிக்கும் வகையில் இடம்பெற்று வருகின்ற இரத்தினக்கல் அகழ்வுகள் ஆபத்துக்குரியதென்பதை அகழ்வில் ஈடுபடுபவர்கள் உணரவேண்டியமை இன்றியமையாதது. பாராட்டத்தக்க விடயம் யாதெனில் பல நூற்றாண்டுகளாக, இலங்கையில் மிகக் குறைவான  இரத்தினக்கல் சுரங்க விபத்துக்களுக்கு பாரம்பரிய சுரங்க முறைகளே காரணமாகும். இலங்கையில் பொதுவாக பயன்படுத்தப்படும் இரத்தின சுரங்க முறை குழி தலை சுரங்க முறை,ப்ரஷ் பிளே பிளேஸர் சுரங்க முறை மற்றும் நதி தோண்டல் முறை ஆகியன இலங்கையில் பொதுவாக பயன்படுத்தப்படும் முறைகளாக அறியப்பட்டுள்ளது.

ஆயினும் கடந்த ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இரத்தினக்கல் அகழ்வு தொழிற்துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றமை கவலைக்குரியது. ஆயினும் அண்மைக் கால தகவலின் படி பயணத்தடை காலத்தில் பெண்களும் இரத்தினக்கல் அகழ்வு பணிகளில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரத்தினக்கற்கள் அகழ்வுத்தொழிற்றுறையில் மிக சிறந்த வரலாற்று அம்சங்களையும் இயற்கை வளங்களையும் ஒருங்கே கொண்ட இலங்கையானது இரத்தினக்கல் அகழ்வுத் தொழிலில் ஈடுபடும் அடிமட்ட தொழிலாளர்களுக்கு சரியான ஊதியங்களும் தொழில் பாதுகாப்பினையும் உறுதிசெய்தல் அவசியமானது. பெரும்பாலான ஊழியர்கள் மிகச்சிறிய ஒரு தொகையே நாள் கூலியாக பெறுகின்றனர் என்பது அனைவரும் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும்.

இரத்தினக்கல் அகழ்வு மற்றும் வர்த்தக முறைகளுக்காக  சுமார் 20,000 இரத்தினக்கல் தொழிலாளர்கள் பணிபுரிவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் சுமார் 5000 பேர் வைரம் வெட்டும் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர். இவ்வாறு பணியாற்றும் தொழிலாளர்களுக்கான உரிய சலுகைகள் கிடைப்பதை அரசு உறுதி செய்தல் அவசியம். அதே வேளை அபிவிருத்தி அடைந்து வரும் நாடான இலங்கையின் வளர்ச்சிக்கு இரத்தினக்கல் வர்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதின் நிச்சயத்தன்மை மற்றும் மேம்பாடு தொடர்பில் அக்கறை செலுத்துவது ம் இன்றியமையாதது.

பரு வகைகளும் சில அவதானங்களும்.

நீங்கள் எந்த வகையான முகப்பருவை அனுபவிக்கிறீர்கள் என்பதை கண்டறிவது வெற்றிகரமான சிகிச்சைக்கு முக்கியமாகும்.
முகப்பரு வகைகள்;

கரும்புள்ளிகள்.
வெண்புள்ளிகள்.
பருக்கள்.
கொப்புளங்கள்.
முடிச்சுகள்.
நீர்க்கட்டிகள்.

கரும்புள்ளிகள்
இது உங்கள் சருமத்தில் தோன்றும் கூந்தல் வேர்கள் காரணமாக தோன்றும் சிறிய புடைப்புகள் ஆகும். இந்த புடைப்புகள் கரும்புள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் மேற்பரப்பு கருமையாக அல்லது கருப்பு நிறமாக தெரிகிறது. கரும்புள்ளிகள் பொதுவாக முகத்தில் தோன்றும் ஒரு லேசான முகப்பரு, ஆனால் அவை சில உடல் பாகங்களிலும் தோன்றலாம்.

வெண்புள்ளிகள்
தோலில் சிறிய, வெள்ளை, உயர்த்தப்பட்ட புடைப்புகள். துளைகளில் எண்ணெய் மற்றும் தோல் சேகரிக்கும்போது அவை உருவாகின்றன. பெரும்பாலும் முகம், மார்பு மற்றும் முதுகில் ஏற்படும்.

கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் இரண்டுமே ஒரே விதத்தில் பராமரிக்க கூடியவையாகும். தொடர்ந்து முகம் கழுவுதல், அழுக்கை அகற்றுதல் முக்கியமாகும். முகத்தில் இயற்கையாக சுரக்கும் எண்ணைத்தன்மையும் தூசு மற்றும் அழுக்குகள்ள சருமத்தில் கலக்கும் பொழுது இவை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். இது மட்டுமின்றி முகத்தில் இறந்த செல்களும் கரும்புள்ளிகளாக மாற வாய்ப்புகள் உண்டு.

மாதம் ஒரு முறையாவது முகத்தை Chill up செய்து கொள்வது நல்லது. வீட்டிலேயே தனியாக ச்லேஅன் உப்பு செய்வதட்கான டூல்ஸ் தற்போது உண்டு என்றாலுமே சரியான முறையில் beauty parlour அல்லது Saloon மூலம் ச்லேஅன் உப்பு செய்துகொள்வது முகத்தில் உள்ள அனைத்து கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை ஒரே நேரத்தில் வெளியேற்ற உதவியளிக்கும்.

*ஓட்ஸ், தயிர் மற்றும் எலுமிச்சை
2 தேக்கரண்டி ஓட்ஸ்.
1 தேக்கரண்டி தயிர்.
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

தயிரில் ஓட்மீலை சில நிமிடங்கள் ஊறவைத்து மென்மையாக்கவும், பின்னர் இந்த பேஸ்டில் எலுமிச்சை சாற்றை கலக்கவும். முகமூடியை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.
ஓட்ஸ் உங்கள் சருமத்தை உரிப்பதற்கு உதவுகிறது மற்றும் கரும்புள்ளிகளில் லேசான சிராய்ப்பு போல செயல்படுகிறது. தயிரில் சருமத்தை சுத்தப்படுத்தும் லாக்டிக் அமிலம் உள்ளது, எலுமிச்சை சாறு சருமத்தை டன் செய்கிறது.

*ஆரஞ்சு சாறு மற்றும் ஜெலட்டின்
1/3 கப் புதிய ஆரஞ்சு சாறு அல்லது கூழ் 1 தேக்கரண்டி ஜெலட்டின் தூள்
மூன்றில் ஒரு பங்கு கப் தண்ணீரை 15 விநாடிகள் மைக்ரோவேவ் செய்து அதில் ஜெலட்டின் பொடியைச் சேர்க்கவும், பின்னர் ஆரஞ்சு சாறு சேர்க்கவும். கலக்கும் வரை கலக்கவும், பின்னர் உங்கள் புருவங்களை அல்லது கண்களைத் தொடாமல் உங்கள் முகத்தில் வைக்கவும்.
முகமூடியை சுமார் 15 நிமிடங்கள் முழுமையாக உலர வைக்கவும், பின்னர் மெதுவாக உரிக்கவும். குளிர்ந்த நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 1-2 முறை செய்யவும்.
ஆரஞ்சு சாறு சருமத்திற்கு ஏற்ற வைட்டமின் சி மற்றும் பிற நன்மை பயக்கும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது. ஆரஞ்சு சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் உங்கள் சருமத்தின் மேல் அடுக்கில் இருந்து இறந்த சரும செல்களை நீக்குகிறது.

*அரிசி மற்றும் முட்டை ஸ்க்ரப்
4 ஸ்பூன் சமைக்காத அரிசியை எடுத்து அரைத்து ஒரு முட்டையை எடுத்து, மஞ்சள் கருவை பிரித்து முட்டையின் வெள்ளையை அடிக்கவும். இப்போது இந்த முட்டையின் வெள்ளையில் அரிசி தூசியை கலந்து, இந்த கலவையை உங்கள் முகத்தை தேய்க்கவும், கரும்புள்ளிகள் அல்லது வெண்புள்ளிகள் உள்ள பகுதிகளில் கவனம் செலுத்தவும்.
2-3 நிமிடங்களுக்கு லேசான ஆனால் உறுதியான அழுத்தத்துடன் தேய்ப்பதைத் தொடரவும், 10 நிமிடங்களுக்குப் பிறகு ஈரமான பருத்தி துணியால் அகற்றி, அதிகப்படியான தண்ணீரில் கழுவவும்.

# சாலிசிலிக் அமிலத்துடன்(salicylic acid)சுத்தம் செய்யவும்.
பென்சாயில் பெராக்சைடுக்கு(benzoyl peroxide) பதிலாக, சாலிசிலிக் அமிலம் உள்ள ஓவர்-தி-கவுண்டர் (OTC) தயாரிப்புகளைத் தேடுங்கள்.
சாலிசிலிக் அமிலம் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளுக்கு சிகிச்சையளிக்க விரும்பப்படும் மூலப்பொருள் ஆகும். ஏனெனில் இது துளைகளை அடைக்கும் பொருட்களை உடைக்கிறது.
அதிகப்படியான எண்ணெய்,
இறந்த தோல் செல்கள்,
சாலிசிலிக் அமிலத்துடன் தினசரி க்ளென்சரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் கூடுதலாக இந்த கூறுகளை அகற்றலாம்:
தினசரி அழுக்கு
எண்ணெய்
ஒப்பனை(make up)

பருக்கள்
பரு என்பது ஒரு சிறிய கொப்புளம். செபாசியஸ் சுரப்பிகள் அல்லது எண்ணெய் சுரப்பிகள் அடைக்கப்பட்டு தொற்றுநோயாக மாறும் போது பருக்கள் உருவாகின்றன, இது வீக்கம், சிவப்பு புண்கள் நிறைந்திருக்கும். புள்ளிகள் அல்லது ஜிட்ஸ் என்றும் அழைக்கப்படும் பருக்கள் முகப்பருவின் ஒரு பகுதியாகும்.

முகப்பருவின் வளர்ச்சிக்கு பல காரணிகள் பங்களிக்கலாம், அவற்றுள்:
மரபியல்
உணவு
மன அழுத்தம்
ஹார்மோன் மாற்றங்கள்

தரமான மருத்துவ சிகிச்சைகள் முகப்பருவை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் வீட்டு சிகிச்சைகளையும் முயற்சி செய்யலாம், இருப்பினும் அவற்றின் செயல்திறன் குறித்து அதிக ஆராய்ச்சி தேவை.

எந்த வகையான முகப்பரு சிகிச்சையை நீங்கள் வீட்டில் மேற்கொள்ளும் பொழுதும் முதல் படியாக ஐஸ் கட்டிகள்(ice cubes) ஐ பருக்களின் மேல் லேசான அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் சருமத்தின் வெப்பத்தன்மை குறையும். கூடுதலாக பருக்கள் வெப்பம் காரணமாகவே உருவாகிறது. ஐஸ் கட்டிகள் உபயோகித்த பின்னர் பருக்களுக்கான பராமரிப்பை மேட்கொள்ளல் நல்லது.

தேயிலை( tea tree)

3-4 நிமிடங்கள் தேயிலையை நீரில் கொதிக்க விட்டு ஆரியதன் பின்னர் காட்டன் பால்ஸ் (cotton balls) மூலம் நனைத்து எடுத்து முகம் முழுவதும் தடவவும். அல்லது ஒரு ஸ்பிரே(spray bottle) பாட்டிலில் ஊற்றி முகத்தில் ஸ்பிரே(spray) செய்து கொள்ளலாம். திரவத்தை உலர விட்ட பின்னர் முகத்தை சாதாரண தண்ணீர் கொண்டு கழுவவும்.
கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

கொப்புளங்கள்
சீழ் கொண்ட தோலின் சிறிய வீக்கமடைந்த உயரம்; சீழ் நிரப்பப்பட்ட ஒரு கொப்புளம்.

கொப்புளங்களை உடைப்பதோ அமர்த்தி அதை சேத படுத்துவது மேலும் காயத்தை பெரிதடைய செய்யுமே தவிர அது தீர்வாகாது. மேலும் இவ்வாறு செய்வது கொப்புளத்தை குணப்படுத்தும் காலத்தை நீடிக்க செய்யும். எனவே நகங்கள் கொண்டோ வேறு பொருள் கொண்டோ அதை உடைக்க முயலாதீர்கள்.

உடனடி சிகிச்சைகள் தீர்வளிக்குமா என்ற கேள்விக்கு உருவாக்கம்
பதில் இல்லை அது சாத்தியமில்லை. ஆனால் வீக்கம் மற்றும் சிவத்தல் போன்றவற்றை தற்காலிகமாக மாற்ற முடியும். கொப்புளங்கள் வலி ஏட்படுத்தும் எனவே எப்பொழுதும் முகத்தை சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் ஐஸ் கட்டிகள் பாவனை செய்வது சருமத்துக்கு ஓய்வையளிக்கும். மேலும் சிகிச்சைகளை மேட்கொள்ளா, 4-5 நாட்களில் தீர்வு கிடைக்கலாம்.

முடிச்சுகள்
ஒரு முகப்பரு முடிச்சு உங்கள் தோலின் கீழ் ஒரு சிறிய பம்ப் போல் தெரிகிறது ஆகும். இது தோல் நிறமாக இருக்கலாம், ஆனால் சுற்றியுள்ள பகுதி மேலும் வீக்கமடைவதால் அது சிவப்பு நிறமாகவும் மாறும். குறைவான கடுமையான பருக்கள் போன்ற “தலை” அதற்கு இல்லை. தொடுகையில் வலி ஏட்படும்.

#நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உங்கள் துளைகளில் சிக்கியுள்ள பாக்டீரியாவைக் கொல்ல உதவும். மருந்து-வலிமை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide), இது மருந்தக வகைகளை விட அதிக செறிவு கொண்டது. பரிந்துரைக்கப்பட்ட வலிமை சாலிசிலிக் அமிலம் இறந்த சருமத்தை உலர மற்றும் முடிச்சில் சிக்கிய எண்ணெயை உலர்த்தும்.

தினமும் SPF 30 சன்ஸ்கிரீன் அணிய வேண்டும்.
மென்மையான சோப்பு அல்லது கிளென்சரை மட்டுமே பயன்படுத்தவும்.
முக ஸ்க்ரப்ஸ் மற்றும் முகமூடிகளை (facial masks) தவிர்க்கவும்.
முகம் கழுவும் பொழுது உங்கள் விரல் நுனியைப் பயன்படுத்துங்கள். மிகவும் கடினமாக தேய்க்க வேண்டாம்.
ஷேவிங் செய்யும் போது அதிக கவனம் தேவை.

நீர்க்கட்டிகள்
நீர்க்கட்டி என்பது சவ்வு போன்ற திசுக்களின் பாக்கெட் ஆகும், இதில் திரவம், காற்று அல்லது பிற பொருட்கள் உள்ளன. நீர்க்கட்டிகள் உங்கள் உடலில் அல்லது தோலின் கீழ் எங்கும் வளரலாம்.

# நீர்க்கட்டிகள் பெரும்பாலும் எந்த சிகிச்சையும் இல்லாமல் போய்விடும். நீர்க்கட்டி தானாகவே வெளியேறினால், அது திரும்பலாம். பெரும்பாலான நீர்க்கட்டிகள் பிரச்சினைகளை ஏற்படுத்தாது அல்லது சிகிச்சை தேவையில்லை. அவை வீக்கமடையும் அல்லது தொற்று இல்லாவிட்டால், அவை பெரும்பாலும் வலியைத் தருவதில்லை.

கடனட்டையின் நன்மை தீமை

நாடு என்ற ரீதியில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை முகம் கொடுத்த வண்ணம் இருக்கும் இத்தருணத்தில் அதிகமான கடன் அட்டை விளம்பரங்களை நாள் தோறும் பார்த்த வண்ணம் உள்ளோம். சுமார் 14 மில்லியன் வயது வந்தோர் சனத்தொகை கொண்ட எம் நாட்டில், 2020 செப்டெம்பர் மாதம் வரை 1.8 மில்லியன் கடனட்டை பாவணையாளர்கள் உள்ளனர் என மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது. எனினும் இது தொடர்பான விழிப்பூட்டலோ போதுமான அளவு விபரங்களோ மக்கள் மத்தியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே தருணத்தில் கடன் அட்டை என்பது ஒரு சூது, எமக்குத் தெரியாமலேயே எமது பணத்தைக் கடன் அட்டை என்ற போர்வைக்குள் சூறையாடுகின்றனர் போன்ற குற்றச்சாட்டுகளும் நாள் தோறும் வலுப்பெற்றுவருகின்றது என்பதைக் காணக்கூடியதாக உள்ளது. ஆகவே இவ் வகையான காரணிகளை விளக்கும் முகமாக இப் பதிவு அமையப்பெறும் என்பதோடு கடன் அட்டை தொடர்பான புரிதலை உங்கள் மத்தியில் அதிகரிக்கும் என நம்புகிறோம். மேலும் இப் பதிவானது கடன் அட்டையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுஅமையப்பெறவில்லை என்பதையும் தெரியத்தருகிறோம்.

பொதுவாக Credit Card இற்கும் Debit Card இற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. எவ்வாறு எமது கணக்குகளில் சேமிக்கப்பட்டு இருக்கும் பணத்தை Debit Card அல்லது ATM Card என்று கூறப்படும் அட்டையைப் பயன்படுத்தி பொருள் கொள்வனவையோ அல்லது ATM இயந்திரம் மூலம் பணம் பெற்றுக்கொள்வதற்கு பயன்படுத்துகின்றோமோ அவ்வாறே இக் கடன் அட்டைகளும் பயன்படும். எனினும் இக் கடனை அட்டையை உபயோகிப்பதற்கு எமது சொந்தப் பணம் கணக்குகளில் இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. வங்கியினால் எமது மாத சம்பளம், வணிக வருவாய், முன்னைய கடன்கள் ஒழுங்காகச் செலுத்தப்பட்டுள்ளதா போன்ற தரவுகள் ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் Credit Limit / கடன் வரம்பு வரையறுக்கப்படும். அவ் Credit Limit க்குள் எமது வணிக பரிவர்த்தனைகளை, அட்டைகளை மாத்திரம் உபயோகித்துச் செய்து கொள்ள முடியும். எனினும் Cash Limit என்பது ATM இயந்திரம் மூலம் பணம் பெற்றுக்கொள்ளும் உச்சக்கட்ட எல்லையாகும். இவை சராசரியாக Credit Limit இல் இருந்து 20% ஒதுக்கீடாகும். எனினும் Credit Card இல் இருந்து பணம் பெரும் போது குறிப்பிட்ட சதவீதம் பரிவர்த்தனை கட்டணமாக அறவிடப்படும்.

கடன் அட்டையின் பொதுவான பயன்களாக உணவகங்கள், ஹோட்டல்களில் கிடைக்கும் சலுகைகளுக்கு அப்பால் 0% தவணை முறை திட்டம் என்பது மக்களிடையே பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. உதாரணத்திற்கு நாம் 180,000 ரூபாய்க்கு வணிக பரிவர்த்தனை ஒன்றைச் செய்து அதனை 12 மாதம் 0% தவணைக்கட்டணத்திற்கு மாற்றும் பட்சத்தில் மேலதிக கட்டணம் எதுவும் இன்றி 15,000 ரூபாய் மாதம் படி 12 மாதங்களில் செலுத்த முடியும். எனினும் அதிகமான இலத்திரணியல் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் அவர்கள் வங்கிற்குச் செலுத்தவேண்டிய 2.5% – 3% பரிவர்த்தனை கட்டணத்தை எம்மிடம் இருந்து பெற்றுக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அங்காடி சந்தைகள் (Super Market) மற்றும் ஜவுளிக்கடைகள் (Clothing Shop) என்பன மேலதிக கட்டணங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறுவதில்லை என்பது வரவேற்கத்தக்கது. மேலும் அநேகமான வங்கிகள், 10,000 ரூபா அல்லது அதற்குமேலதிகமாக செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைகளையும் மாதாந்த தவணைக்கட்டணத்தில் செலுத்தும் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளனர். எனினும் மாதாந்த சலுகை கோரப்படும் காலத்திற்கு அமைய Handling Fee அதாவது கையாளுதல் கட்டணம் அறவிடப்படும்.

கடன் அட்டை பெறுவதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் 49 – 51 நாள் வட்டி இல்லாக் கடன். இதுதொடர்பான விழிப்பூட்டல் மக்களிடையே மிகக் குறைவாகக் காணப்படுவதோடு, இக் கோட்பாட்டை முழுமையாக விளங்காத பட்சத்தில் தான் செலவினத்துக்கு அதிகமான கட்டணங்களையும் வட்டியையும் வங்கிக்குச் செலுத்தும் சந்தர்ப்பத்திற்கு உள்வாங்கப்படுகிறது. மேலும் வங்கி முகாமையானோர்கள் இது தொடர்பான தெளிவான விபரங்களைத் தெரிவிப்பதற்கு முன்வருவது மிகக் குறைவு என்பதால் இது தொடர்பான புரிதலை நாம்பெற வேண்டும் என்பது மிக அவசியமாகும். பொதுவாக Statement Cycle அதாவது 30 நாள் காலப்பகுதிக்குள் நிகழ்ந்த அனைத்து பரிவர்த்தனைகளும் 30வது நாள் இறுதியில் Statement வாயிலாக வெளியிடப்படும். அவ் Statement வெளியிடப்பட்ட திகதியில் இருந்து 19 – 21 நாள் இறுதிக்குள் செலவு செய்த பணத்தை நீங்கள் முழுமையாகச் செலுத்தவேண்டும். தவறும் பட்சத்தில் தான் Late Payment Fee என்ற நிலையான கட்டணத்தையும் வட்டியையும் கட்ட உங்களுக்கு நேரிடும். மேலும் உங்களது 19ம் அல்லது 21ம் நாள் முடிவையே Due Date என்று சொல்வார்கள். எனினும் அந்த குறிப்பிட்ட 30 நாள் காலப்பகுதிக்குள் நீங்கள் நிகழ்த்திய மொத்த தொகையைக்கட்ட முடியாத பட்சத்தில் அதில் 2.5% Minimum Balance இனை மாத்திரமாவது கட்டுவதன் மூலம் Late Payment Fee இல் இருந்து உங்களை விடுவித்துக்கொள்ளலாம். எம்மில் அதிகமானோர் விடும் பெரும் தவறு இந்த Minimum Due இனை மாத்திரம் கட்டுவது என்பதுதான். ஆகவே நிர்ப்பந்திக்கப்பட்ட திகதியில், அக் குறிப்பிட்ட காலப்பகுதியில் நிழத்திய முழுத்தொகையையும் செலுத்தும் பட்சத்தில் மேலதிக பணம் வங்கிக்குச் செலுத்தும் சூழ்நிலையில் இருந்து எம்மை முழுமையாகக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்பதைத் தெரியத்தருகிறேன். வங்கியில் நேரடியாக பெரும் கடனை விட, திகதி தவறும் பட்சத்தில் நாம் வங்கிக்கு செலுத்த வேண்டிய வட்டி ஏற்றத்தால் இரண்டு மூன்று மடங்கு அதிகளவான கடன் சுமைக்குள் தள்ளப்படுகிறோம். ஆகவே முழுத்தொகையை உரிய காலப்பகுதியில் கட்டுவதன் மூலம் கடன் அட்டை மூலம் முழுப் பயனையும் பெற்றுக்கொள்ளலாம் என்பதைத் தெரியத்தருகிறோம்.

மேலும் இக் காலப்பகுதிகளில் சில வங்கிகள் வருடாந்த கட்டணத்தை ஆயுட்காலம் வரை முழுமையாக நிவர்த்தி செய்ததுள்ளதுடன் அதிகளவிலான Cash Back சலுகைகளையும் அறிமுகம் செய்து உள்ளது. மேலும் கடன் அட்டை அவசர நிலைமைகளில் நிதி ரீதியாக பெரியதோர் பக்க பலனாக இருக்கும் என்பதால் கடன் அட்டை பெறுவது சிறந்தது என்பது குறிப்பிடப்படுகிறது. அதே தருணத்தில் வருமானத்திற்கு அமைய தங்களது பணத்தையும் கடன் அட்டையையும் முகாமித்து கொள்ளுதல் அவசியமாகும். தவறும் பட்சத்தில் பெரியதோர் நிதிநெருக்கடிக்குள் உள்வாங்கப்படுவீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களும் பெண்களும்.

அதிகரிக்கும் சனத்தொகைக்கு தகுந்த வேலைவாய்ப்பு இன்மை அனைத்து நாடுகளிலும் நிலவும் பாரிய பிரச்சினையாக இருக்கும். அதேவேளை உள்நாட்டு வருமானங்கள் தாழ் நிலையில் இருப்பதால், இலங்கை முதலிய மனிதவளம் நிறைந்த நாடுகளில் வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தம் செல்வோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அத்துடன் இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் பங்கானது வெளிநாடுகளில் உழைக்கும் இலங்கையர்களின் மூலம் ஈட்டப்படுவது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தில், வெளிநாட்டு வருவாயின் மூலம் 54% கிடைக்கப்பெறுகிறது என இலங்கையின் வெளிநாட்டு பணியக தூதரக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக 2016 ஆம் ஆண்டு மட்டுமே,  வருமானம் சுமார் 566,260 மில்லியன் இலங்கை ரூபாய் என்பது அதிர்ச்சியூட்டும் தகவல். இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஆண்களும் பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வதற்கு பொருளாதாரமே பிரதான காரணமாகும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் என்பது ஒரு சிலருக்கு பிழைப்பு தொடர்பானது. இன்னொருவருக்கு பெருமையும் கனவும் தொடர்பானது. படித்து முடித்ததும் தம் கல்விக்கு தகுந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்வோர் பலர். அதே நேரம் நல்ல வாய்ப்புகளினாலும் உயர் ஊதியத்தினாலும்  இங்கே இருக்கும் பணியை நீங்கி செல்வோருமுண்டு. அத்தோடு திருமண உறவுகளின் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெறுவோரும் உண்டு ஆனாலும் இவற்றில் ஏதுமில்லாமல் வறுமையும் தாழ் வருமானமும் கொண்ட பெண்ணிற்கு, வெளிநாட்டில் வேலைவாய்ப்பு எனும் சந்தர்ப்பம் அமையும் போது குடும்பத்தினை நீங்கி வெளிநாட்டு பணிக்காக தொலைதூரம் செல்கின்றனர்.

விரும்பியோ விரும்பாமலோ கீழைத்தேயத்தை சேர்ந்த பெரும்பாலான பெண்களால் இவை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பணிக்காக வெளிநாடு செல்லும் பெண்களது தொகை சுமார் அண்ணளவாக 2 இலட்சம் பேர் என இலங்கை புள்ளி விபரவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் பெரும்பாலான பெண்கள் முறையாக தேர்ச்சியற்ற வீட்டு பணியாளர்களாக செல்லும் பெண்களாகவே இருக்கின்றனர்.

திருமணமான பெண்கள் முதற்கொண்டு திருமணமாகாத இளவயதிலிருப்போர் வரை பல்வேறு நிர்ப்பந்தங்கள் காரணமாக இந்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். குடும்பத்தை விட்டு செல்லுதல் என்பது மிகக் கடினமான முடிவு மட்டுமல்லாமல் உணர்ச்சி பூர்வமானதாகவும், பல்வேறு சவால்களை ஏற்றுக்கொள்வதாகவும், அடிமைத்தளைகளை விலக்கிவிட முடியாத சூழலாகவும் இருக்கிறது. இந்நிலையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் சிக்கல்களும் ஏராளம். குறித்த பெண் வேலைக்காக செல்லுமிடத்தில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் பிரச்சனைகள் ஒருபுறம், பணி நிமித்தம் பிற நாடுகளிற்கு தனியே புறப்படும் பெண் குறித்த சமுதாய கண்ணோட்ட பிரச்சினைகள் ஒருபுறம், இவற்றையும் தாண்டி குடும்ப தலைவியான பெண் குடும்பத்தை நீங்கி செல்லும் போது அவருடைய பிள்ளைகள் குடும்ப உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒருபுறம் என பல்வேறு கோணங்களில் இவற்றை அணுக இயலும். இலங்கைக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கூற்றுப்படி இலங்கையின் வடபகுதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களில் பலரும் குடும்பத்தலைவர்களாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களே.

இதிலும் குறிப்பாக வீட்டுப் பணி தொடர்பில் அமர்த்தப்படும் பெண்கள் மீதான உரிமை மீறல்கள் ஏராளம். வீ‌ட்டு வேலை‌க்காக செ‌ல்லு‌ம் பெ‌ண்களிற்கு இ‌த்தனை ம‌ணி நேர‌ம்தா‌ன் வேலை எ‌ன்‌றி‌ல்லாம‌ல் நா‌ள் முழுவது‌ம் வேலை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. ‌இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் என்னவென்றால் அவர்களிற்கு போ‌திய உணவும் அ‌ளி‌க்க‌ப்படாம‌ல், நிச்சயிக்கப்பட்ட சம்பளமும் அ‌ளி‌க்காம‌ல் பணிச்சுமைகளை திணிப்பதே.

வேலைத்தள சலுகை புறக்கணிப்புக்கள், சம்பள உரிமை மீறல்கள் முதலியவை மட்டும் அல்லாமல் அடித்தல், உதைத்தல், காயங்களை ஏற்படுத்தல், சூடு வைத்தல் முதலான உடல் சார்ந்த துன்புறுத்தல்களோடு திட்டுதல், தகாத வார்த்தைகளை பயன்படுத்தல், முதலான உள வன்முறைகளும் இடம்பெறுகின்றன. இவற்றிலும் மேலாக பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், பாலியல் உறவுக்காக வற்புறுத்தப்படல் போன்றவற்றையும் பெரும்பாலான எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வெளிநாட்டில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலை செய்யும் இலங்கை பெண்களில் ஏறத்தாழ 1,650 பெண்கள் உடல் ரீதியாகவும் பாலியல் ரீயதாகவும் முதலாளிகள் தங்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று புகார் அளித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திலிருந்து சமீபத்திய ஆய்வுத் தரவு காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவை மட்டும் அல்லாமல் நிச்சயிக்கப்படும் சம்பளங்கள் பெரிதும் வழங்கப்படுவதில்லை, போதியளவு உணவு மற்றும் ஆரோக்கியமும் சந்தேகத்திற்கிடமான நிலையில் அதிகமான பெண்கள் பணிக்காக நியமிக்கப்படும் வீட்டினை தாண்டி பிற இடங்களிற்கு செல்லுவதை முதலாளிகள் மறுக்கின்றனர். அத்துடன் அவர்களை தனி அறையில் பூட்டி வைத்து தொடர்ச்சியான துன்புறுத்தப்படுகின்றனர்.

வீ‌‌ட்டுப் பணிக்கு‌ச் சே‌ர்‌ந்தது‌ம், த‌ங்களது கடவுச்சிட்டை ஒ‌ப்படை‌த்து‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்பது பெரும்பாலான இடங்களில் மு‌க்‌கிய ‌நிப‌ந்தனையாக உ‌ள்ளது. இத்தருணங்களில் தமக்கான வன்முறைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் செய்வதற்கு கூட பல பெண்கள் முன்வர தயங்குகின்றனர். இவ்வாறான உரிமை மீறல்களின் பின் இப் ‌பிர‌ச்‌சினையை‌க் கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு ப‌ங்களாதேஷ், பா‌கி‌ஸ்தா‌ன் போ‌ன்ற நாடுக‌ள், த‌ங்க‌ள் நா‌ட்டு‌ப் பெ‌ண்கள வெ‌ளிநாடுகளு‌க்கு ‌வீ‌ட்டு வேலை செ‌ய்ய‌ப் போவதை தடை செ‌ய்து‌ள்ளது. இவை தவிர அண்மைக்காலங்களில் வெளிநாடுகளில் இறக்கும் இலங்கை தொழிலாளர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அண்ணளவாக ஆண்டொள்றிற்கு 200 தொடக்கம் 300 மரணங்கள் இவ்வாறு நிகழ்கின்றன.

ஜோ‌ர்டா‌ன், குவை‌த், லெபனா‌ன் சவூதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், ஓமான் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்கள் மிக மோசமாக நடத்தப்படுகின்றனர் என்ற செய்தி பொதுவாகவே தெரிவிக்கப்பட்டு வருவதாகும்போ‌ன்ற நாடுக‌ளிலு‌‌ம் பெ‌ண்க‌ளு‌க்கு இழை‌க்க‌ப்படு‌ம் கொடுமைக‌ள் அ‌திக‌ம் எ‌ன்ற போ‌திலு‌ம் சவு‌தி அரே‌பியாதா‌ன் இ‌தி‌ல் முத‌லிட‌த்‌தி‌ல் உ‌ள்ளது. இவை மட்டும் அல்லாமல் 2013 ஆம் ஆண்டில், சவுதி அரேபியாவில், இலங்கையை சேர்ந்த ஒரு இளம் வீட்டுப் பணிப்பெண்ணின் மரண தண்டனையை இரத்து செய்யக்கோரி இலங்கையின் தொடர்ச்சியான முறையீடுகளையும் புறக்கணித்ததோடு, அவரது பராமரிப்பில் இருந்த குழந்தை இறந்தமை குறித்த பெண்ணுடைய குற்றம் எனக்கூறி தலையை வெட்டி மரண தண்டனை அளிக்கப்பட்டது.

அது மட்டும் அல்லாது 2010 ஆம் ஆண்டில், இலங்கையை சேர்ந்த பெண் பணிப்பெண் ஒருவரால், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட வேலைகளிற்கு அதிகமாக பணிச்சுமை நிர்பந்திக்கப்படுவதாக முறைப்பாடு அளித்த பின், தொடர்புடைய சவுதி தம்பதியினர் அந்தப் பணிப்பெண்ணின் கைகள், கால்கள் மற்றும் நெற்றியில் 24 ஆணிகளைச் சம்மட்டியால் அடித்துச் சித்திரவதை செய்தனர். அதன் பின்னரே அந்தப் பணிப்பெண் வீடு திரும்பினார். அத்துடன் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார் என கூறி ஒரு இலங்கை பணிப்பெண்ணிற்கு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டு, பின் பல முறையீடுகழின் விளைவாக மூன்று ஆண்டு சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டது.

இலங்கையை சேர்ந்த பெண்கள் என்றல்லாமல் பல்வேறுபட்ட நாட்டு பெண்களும் பலதரப்பட்ட வகைகளில் வளைகுடா நாடுகளில் மட்டும் அல்லாமல் பிற நாடுகளிலும்அநீதிகளை எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர். உதாரணமாக அண்மையில் சிங்கப்பூரில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தை எடுத்துக்கொண்டால்,  24 வயதுடைய மியான்மாரை சேர்ந்த பெண்(பியாங்),  வீட்டு உரிமையாளர்களால் தொடர்ச்சியாக சித்ரவதைக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளார். பணி நாட்களில் கைபேசி பயன்படுத்தவோ விடுப்பு எடுக்கவோ அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன் சரியாக வேலை செய்வதில்லை, சுத்தமாக இல்லை, அதிகமாக சாப்பிடுகிறார், மெதுவாக வேலை செய்கிறார் என பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டதுடன் பழுதடைந்து வீசப்படும் உணவுகளை கூட அவர் உண்பதற்கு மறுக்கப்பட்டது. உடல் ரீதியான துன்புறுத்தல்களின் உச்சக்கட்டமாக 31 காயங்களும் உடலின் மேல்பரப்பில் 47 காயங்களும் ஏற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இவ்வாறான தொடர்ச்சியான சம்பவங்களின் பின்னராக கு‌றி‌ப்பாக சவு‌தி அரே‌பியா‌வி‌ற்கு ‌வீ‌ட்டு வேலை‌க்கு‌ச் செ‌ல்வதை நாடாதீர்கள் எ‌ன இ‌ந்‌தியா, இல‌ங்கை, நேபளா அரசுக‌ள் த‌ங்க‌ளது நா‌ட்டு ம‌க்களு‌க்கு அ‌றிவுறு‌த்‌தியு‌ள்ளன.  அத்துடன் குறித்த பணியாளர்கள்‌ பயணக் கடவுச்சிட்டை  த‌ங்க‌ள் வசமே வை‌த்துக் கொ‌ள்ளவு‌ம், ‌விரும்புகின்ற நேர‌த்‌தி‌ல் நா‌ட்டை ‌வி‌ட்டு சொந்த நாடு திரு‌ம்ப உ‌ரிமை அ‌ளி‌க்கு‌ம் வகை‌யி‌ல் ஐக்கிய அரபு நாடுகள் ச‌ட்ட ‌திரு‌‌த்த‌ம் கொ‌ண்டு வரவு‌ம் ம‌னித உ‌ரிமை அமை‌ப்புகளு‌ம் வ‌லியுறு‌த்‌தி வரு‌கி‌ன்றமை குறிப்பிடத்தக்கது. வெ‌ளிநாடுகளு‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் பெ‌ண்க‌ளி‌ன் பாதுகா‌ப்பை உறு‌தி செ‌ய்வது ஒ‌வ்வொரு நா‌ட்டி‌ன் கடமையா‌கிறது. மேலு‌ம், வெ‌ளிநாடுக‌ளி‌ல் இரு‌ந்து த‌ங்க‌ள் நா‌ட்டு‌க்கு வரு‌ம் பாதிக்கப்பட்ட பெ‌ண்க‌ளை பாதுகா‌க்க கடுமையான ச‌ட்ட‌ங்களை‌க் கொ‌ண்டு வர வே‌ண்டியது‌ம் அவ‌சிய‌ம் ஆகும்.

இவை மட்டும் அல்லாமல் இவ்வாறு பணி நிமித்தம் வெளியே செல்லும் பெண்கள் பெரிதும் மனரீதியான பாதிப்புக்களிற்குள் உட்படுகின்றனர். தனிப்பட்ட ரீதியில் பிறழ்வான விளைவுகளை எதிர்கொள்ளுவதோடு மட்டும் அல்லாமல் நாடு திரும்பும் பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் இடர்பாடுகளும் பல. குறித்த பெண்கள் குறித்த கண்ணோட்டங்கள், நடத்தை சார்ந்த எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற சந்தர்பங்கள் அவர்களுடைய உளவியலை மேலும் தாக்குகின்றது. அத்துடன் குடும்பங்களை நீங்கி வெளிநாடு செல்லும் பெண்தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த ஏனைய பெண்கள் பல்வேறான சுரண்டல்களிற்கும் உள்ளாகுகின்றனர். குறிப்பாக பராயமடையாத பெண்/ஆண் சிறுவர்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றார்கள்.

வேலைவாய்ப்பு பெற்றுச் செல்பவர்கள் அந்நாடுகளில் தவறிழைத்தால் அவர்களுக்குக்காக குரல்கொடுக்க வேலை வாய்ப்பு முகவர்கள் பின்னிக்கின்றனர். முறையாக பணியகங்களில் பதிவு செய்யாது பணி நிமித்தம் பயணங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்திலேயே பல்வேறான அவல நிலை உருவாகுகின்றது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் அண்மைக்காலங்களில் தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களின் எதிரொலி காரணமாக வெளிநாட்டு பணிப்பெண்களாக செல்லும் பெண்களது தொகை சடுதியாக குறைந்துள்ளது. ஆயினும் பணிப் பெண் அல்லாத பயிற்றப்பட்ட வேறு தொழில்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்ற பெண்களது தொகையில் அவ்வளவாக வீழ்ச்சிகள் ஏற்படவில்லை என தரவறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறான இன்னல்கள் மேலும் தொடராமலிருக்க அரச சட்டதிட்டங்களினால் மட்டுமே சாத்தியமற்றது. ஆக பணி நிமித்தம் வெளியே செல்லும் பெண்கள் அவர்களுடைய பாதுகாப்பு மற்றும் இதர அம்சங்களையும் உறுதி செய்தல் அவசியம். முதலாவதாக அரசு அங்கீகாரம் பெற்ற அயல்நாட்டு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் முகவர்களை மட்டுமே அணுகவேண்டும். அத்துடன் நாடுகின்ற முகவர்களுடைய இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் (Srilanka Bureau of foreign employment) அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் அனுமதிப்பத்திர இலக்கங்களோடு குறித்த முகவர் தொடர்பான பெயர், முகவரி, தொடர்பிலக்கம், அனுபவம் போன்றவற்றை உறுதிசெய்தல் நன்று.ஒருவர் வெளிநாட்டில் தொழில்புரிய செல்லும் முன்னர் அந்த தொழிற்துறை பற்றி ஆழமாக அறிந்திருத்தல் அவசியமாகும். முகவர்களோடு பணம் கொடுக்கல் வாங்கல் செய்கின்ற போது சட்ட ரீதியாக மேற்கொள்வது அவசியம்.

எந்தவித வேலையும் இல்லாமல், வாழ்க்கை நடத்துவதற்காக சம்பாதிப்பதற்கான மிகக் குறைவான வாய்ப்புகளே இலங்கையில் உள்ள நிலையிலேயே தான் பெண்கள் பிற நாடுகளினை நாடுகின்றனர். ஆக உள்நாட்டிலேயே அவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் போதிய ஊதியம் போன்றன ஊக்குவிக்கப்படுதல் நன்று. சமூக வலுவூட்டும் செயற்பாடுகள், பெண்களுடைய சுய பொருளாதார முயற்சி, போதிய கல்வியறிவை பெற்றுக்கொள்ளல் போன்றவற்றில் பெண்கள் முன்வருதல் இன்றியமையாததே. இலங்கை மட்டும் அல்லாமல் உலகின் எந்தவொரு பெண்ணும் தனக்கான உரிமைகளை பெறுவதோடு தனக்கான வாழ்வியல் பாதைகளை அமைத்துக் கொள்ளவும் தற்துணிவை வளர்த்துக்கொள்ளுதல் அவசியமானதாகும்.

முக முடியை அகற்றும் இலகு முறைகள்!

முக முடி பிரச்சினை சில பெண்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். எனவே, செலவழிக்காமல் சுலபமாக செய்யக்கூடிய வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பெண்கள் இந்தப் பிரச்சினையிலிருந்து வெளியேற உதவ ஒரு கட்டுரையை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

புள்ளிவிவரங்களின்படி, ஹிர்சுட்டிசம் – அசாதாரண பகுதிகளில் அதிகப்படியான கூந்தல் என்றும் அழைக்கப்படுகிறது – இது எல்லா வயதினரிலும் 5-10% பெண்களை பாதிக்கிறது. இருப்பினும், நாம் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், நாம் அனைவரும் அழகாக தோற்றமளிக்க அவ்வப்போது நம் முகத்தில் சாமணம் பயன்படுத்த வேண்டும். முக முடி அகற்றுவதற்கான இத்தகைய வலிமிகுந்த முறைகளைப் பயன்படுத்துவது எப்போதும் தேவையில்லை என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம் – குறிப்பாக உங்கள் சமையலறையில் மற்ற குறைவான வலி முறைகளைக் காணும்போது!

1.சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு

நீங்கள் செய்ய வேண்டியது 8-9 தேக்கரண்டி தண்ணீருடன் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலக்க வேண்டும். குமிழ்கள் தோன்ற ஆரம்பிக்கும் வரை இந்த கலவையை சூடாக்கவும், பின்னர் அதை குளிர்விக்கட்டும்.
ஒரு ஸ்பேட்டூலாவைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி சுமார் 20-25 நிமிடங்கள் வைக்கவும். வட்ட இயக்கத்தில் தேய்த்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இது எவ்வாறு இயங்குகிறது என்று யோசிக்கிறீர்களா? சரி, சர்க்கரை ஒரு இயற்கையான எக்ஸ்ஃபோலைட்டிங் முகவர், மற்றும் சூடான சர்க்கரை உங்கள் தலைமுடிக்கு ஒட்டிக்கொண்டிருக்கும், தோல் அல்ல. எலுமிச்சை சாறு சரும முடிக்கு இயற்கையான (மற்றும் மலிவான) ப்ளீச்சாக செயல்படுகிறது, மேலும் சருமத்தின் தொனியை ஒளிரச் செய்ய உதவுகிறது.

2.கிராம் மாவு மற்றும் ரோஸ் வாட்டர்

கிராம் மாவு சிறந்த எக்ஸ்ஃபோலைட்டிங் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் ரோஸ் வாட்டரின் நன்மையுடன் இணைந்தால் இது முடி வளர்ச்சியைத் தடுக்கிறது. முக முடிகளை அகற்ற இந்த எளிய வழியை இங்கே செய்வது எப்படி என்பதை அறிக!

ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி கிராம் மாவு 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் கலக்கவும். ஒரு பேஸ்ட்டை உருவாக்க நன்கு கலந்து உங்கள் முகத்தில் தடவவும், அதை முழுமையாக உலரவிட்டு, விரல்களால் தேய்த்து முக முடிகளை அகற்றவும். சிறந்த முடிவுகளுக்கு, இதை வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை செய்யவும்.

3. முட்டை மற்றும் சோள மாவு

இறந்த சரும செல்கள் மற்றும் முக முடிகளை அகற்ற முட்டை வெள்ளை ஒரு சிறந்த முகமூடியை உருவாக்குகிறது. இதில் சோள மாவுச் சேர்ப்பது முக முடிக்கு இந்த வீட்டு வைத்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த முகமூடியைத் தயாரிக்க, ஒரு முட்டையிலிருந்து வெள்ளை நிறத்தை அரை தேக்கரண்டி சோள மாவு மற்றும் ஒரு தேக்கரண்டி சர்க்கரையுடன் ஒரு பாத்திரத்தில் கலக்கவும். பேஸ்டின் சம அடுக்கை உங்கள் தோலில் தடவி அதை முழுமையாக உலர அனுமதிக்கவும். உலர்ந்ததும், முகமூடியின் ஒரு முனையை அவிழ்த்து, முக முடிகளை அகற்ற முடி வளர்ச்சியின் எதிர் திசையில் அதை உரிக்கவும்.

4. பப்பாளி மற்றும் மஞ்சள்

பப்பாளியில் பப்பேன் எனப்படும் என்சைம் உள்ளது, இது முக முடிகளை அகற்ற உதவும், மற்றும் மஞ்சள் சருமத்திற்கு ஆரோக்கியமான மற்றும் கதிரியக்க பளபளப்பை அளிக்கிறது, இதனால் முடி பளபளப்பை அதிகரிக்கும் இந்த வீட்டு வைத்தியம்.

பப்பாளி ஒரு துண்டு சிறிய துண்டுகளாக வெட்டி அவற்றை பிசைந்து பேஸ்ட் உருவாக்கவும், பின்னர் அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் சேர்க்கவும். நன்றாக கலந்து, உங்களுக்கு தேவையற்ற முடி வளர்ச்சி உள்ள பகுதிகளில் மட்டுமே பொருந்தும். சில நிமிடங்கள் மசாஜ் செய்து பின்னர் 15-20 நிமிடங்கள் இருக்கட்டும். மந்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். சிறந்த முடிவுகளுக்கு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வரலாம்.

5. முட்டை வெள்ளை மற்றும் கார்ன்ஸ்டார்ச்

முட்டை வெள்ளைடன் சோள மாவு மற்றும் சர்க்கரை ஒவ்வொன்றையும் ஒரு தேக்கரண்டி கலக்கவும். இந்த கலவையை நீங்கள் தேவையற்ற கூந்தல் உள்ள இடங்களில் தடவி உலர்ந்ததும் உரிக்கவும். மிகவும் எளிமையானது, இல்லையா?
முட்டையின் வெள்ளை ஒட்டும், மற்றும் சர்க்கரை மற்றும் சோள மாவுடன் இணைந்தால் தோலில் ஒரு மெல்லிய படம் உருவாகிறது. முட்டை வெள்ளை வைட்டமின் ஏ இருப்பதால் இது முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு ஏற்றதல்ல, இது பிரேக்அவுட்டுகளுக்கு வழிவகுக்கும்.

*முக முடிகளை அகற்றுவது சரியா?
#உடலில் தேவையற்ற கூந்தல் வரும்போது, ​​அதை அகற்ற முயற்சித்தால் முடி அடர்த்தியாகிவிடும் என்று நிறைய பேர் நம்புகிறார்கள். அது உண்மையல்ல, உங்கள் உடலின் எந்தப் பகுதியிலும் தேவையற்ற முடியை அகற்றுவது முற்றிலும் நல்லது.

*பெண்கள் முகத்தை மொட்டையடிக்க முடியுமா?
#பெண்களின் முக தோல் ஆண்களை விட மிகவும் மென்மையானது. உங்கள் முக முடி வளர்ச்சி எவ்வளவு அடர்த்தியாக இருந்தாலும், ஷேவிங் செய்வது சருமத்தை எரிச்சலடையச் செய்து, சருமப் பிரச்சினைகளுக்கு நிறைய வழிவகுக்கும்.

*எலுமிச்சை சாறு மயிர்க்கால்களை வெளுக்கிறதா?
#முக முடிகளை அகற்ற எலுமிச்சை சாறு நிறைய வீட்டு வைத்தியங்களில் சேர்க்கப்படுவதற்கான காரணம், இது மயிர்க்கால்களை வெளுக்கும் திறன் கொண்டது, இதனால் உங்கள் சருமம் பிரகாசமாக இருக்கும்.

இலங்கையில் தும்புக்கைத்தொழில்.

இன்றைய காலகட்டத்தில் தனிமனித வருமானம் குடும்ப வாழ்வாதாரம் போன்றன மாதாந்த பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துவது மட்டும் அல்லாமல் ஒரு நாட்டின் மொத்த தேசிய வருமானத்திலும் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றது. அவ்வகையில் நடுத்தர மற்றும் சுய தொழில் முயற்சிகள் இலங்கை பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த கொள்கை நோக்கங்களில் ஒரு முக்கியமான தந்திரோபாய அம்சமாக அடையாளங் காணப்பட்டிருக்கின்ற அதே வேளை இது பொருளாதார வளர்ச்சி, பிராந்திய அபிவிருத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வறுமைக்கான வலுவூட்டல் தொடர்பிலான மாற்றத்துக்கான ஒரு உந்துசக்தியாகவும் இருக்கின்றது.

இவ்வாறான சுய தொழில் முயற்சிகள் துறையானது பின்தங்கிய கிராமங்களை விருத்தி செய்யக்கூடியளவிலான பங்களிப்பினை வழங்கக்கூடிய ஒரு முயற்சியாகவே கருதப்படுகின்றது . இச்சிறிய நடுத்தர தொழில்முயற்சிகள் முதலீடு செய்வதற்கும் , பின்தங்கிய மற்றும் விருத்தி அடைந்த நோக்கி பிரதேசங்களுக்கு இடையிலான இடைவெளியினைக் குறைப்பதற்கான தூண்டுதலாகவும் விளங்குகின்றமையால் இது நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு நல்ல அடித்தளமாகவும் விளங்குகின்றது. அந்த வகையில் உள்ளூர் வளங்களை பயன்படுத்துவதன் மூலம் மனிதனுடைய தேவையைகளை பூர்த்தி செய்வதற்கு மனித முயற்சியில் மேற்கொள்ளப்படும் பொருளாதார முயற்சி கைத்தொழில் என்று கூறலாம். முன்னைய காலத்தில் விவசாயத்தை மையமாக கொண்டு விளங்கிய பொருளாதாரம் இன்று சுய கைத்தொழில் முயற்சிகளுக்கு கூடிய முக்கியத்தினை கொடுக்கின்றன.
இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் முக்கியத்துவம் பெறுகின்ற உள்ளூர் கைத்தொழில்களாக தும்புக் கைத்தொழில், சீமெந்துக் கைத்தொழில், சீனிக் கைத்தொழில், ஆடைக் கைத்தொழில், இறப்பர் பிளாஸ்டிக் சார் கைத்தொழில், பாரம்பரிய கைப்பணி கைத்தொழில் என்பவற்றைக் குறிப்பிட முடியும். அதிலும் முக்கியமாக தும்புக் கைத்தொழில் செய்கையானது முக்கியமான ஒரு கைத்தொழிலாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்தில் இருந்து உபகரணங்கள் இல்லாது கையினாலேயே தும்புசார் அனைத்து உற்பத்திகளையும் செய்து சந்தைப்படுத்தி வந்துள்ளனர். இப்போதும் இவ்வாறான பாரம்பரிய முறை நடைமுறையில் இருந்து வருகின்ற போதிலும் பெருமளவில் உபகரணங்களின் உதவியின் மூலம் தும்புக் கைத்தொழிலை மேற்கொள்ளுமளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

தும்புக் கைத்தொழில் முயற்சிகளுக்கான முறையான பயிற்சி நிலையங்கள் மற்றும் முறையான பயிற்சி முறைகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாக தொழில்சார் அனுபவங்களையும் யுக்திகளையும் தலைமுறைகளிற்கிடையில் கடத்துவதாகவே பரவலாக காணப்படுகிறது. எனினும் இன்றளவில் தும்பு கைத்தொழிலிற்கான கேள்வி அதிகரித்து வருகின்ற வகையில் பலர் இதில் நாட்டம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தும்புத் தொழில் என்பது தென்னந் தும்பை பிரதான மூலப் பொருளாகப் பயன்படுத்தி பல்வேறு யுக்திகளின் மூலம் ஆக்க பூர்வமானதாக மேற்கொள்ளப்படும் கைத்தொழில் ஆகும். தேங்காய் மட்டை அல்லது உரிமட்டைகளை பதப்படுத்துவதன் மூலம் தென்னந் தும்பைப் பெற்று அதில் இருந்து தும்பைப் பயன்படுத்தி பல பயன்பாடுகள் மிக்க முடிவுப்பொருட்களை உற்பத்தி செய்தல் வரையிலான செயற்பாடுகளை தும்புத் தொழில் என்பதற்குள் குறிப்பிட முடியும்.

தேங்காய்களில் இருந்து அதன் மட்டைகள் அகற்றப்படுதல், மட்டைகளில் தும்பை வேறுபடுத்தி அவற்றை பதப்படுத்தி அத்தும்பை பயன்படுத்தி, தும்புத்தடி, கயிறு மற்றும் கால்மிதி ஆகிய பொருட்களின் உற்பத்திகளை செய்து அதனை விற்பனை செய்யும் செயற்பாடுகள் போன்றன தும்பு தொழிலின் செயற்பாடுகளாய் அமைகிறது. தேங்காய்கள் விற்பனை செய்யப்படும் நோக்கோடு தென்னம் தோட்டங்களில் தேங்காய்கள் பெறப்பட்டு சந்தைக்கு கொண்டு செல்லப்படும். சந்தையில் தேங்காய்களில் உள்ள மட்டைகள், அலவாங்கு போன்ற ஆயுதத்தைக் கொண்டு தேங்காயில் இருந்து அகற்றப்படும். இச்செயற்பாடு “தேங்காய் உரித்தல்” என கூறப்படும். பின்னர் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். தேங்காயில் இருந்து அகற்றப்படும் உரிமட்டைகள் பிறிதாக சேகரிக்கப்படும்.
உரிமட்டைகள் சேகரிக்கப்பட்ட பின்னர் அதனை தும்புத் தொழில் மேற்கொள்பவர்களின் பிரயோகத்திற்காக தொழில்முனைவோரால் கொள்வனவு செய்யப்பட்டு அவற்றை உவர்ப்புத் தன்மை கொண்ட நீர் நிலைகளுக்கு அருகாமையில் கொண்டு சேகரிக்கப்படும். மட்டைகளை வாங்கிய தொழில் முனைவோர் நீர் நிலைகளின் கரைகளில் தேங்காய் மட்டைகளை புதைத்து விடுவார்கள். புதைக்கப்பட்ட மட்டைகள் நீர் நிலைகளின் கரைகளில் 6 மாதம் முதல் 1 வரும் வரை ஈரப்பதன் உள்ள நிலத்தின் அடியில் ஊறவிடப்படும். குறித்த மட்டைகள் 6 மாதம் தொடக்கம் 1 வருடம் வரை குறிப்பிட்ட பதத்தை அடைந்ததன் பின்னர். உரிமட்டைகளை மீண்டும் தோண்டி எடுத்து அவற்றை ஒவ்வொரு மட்டைகளாக பிரித்து எடுப்பார்கள்.

எல்லா மட்டைகளிலும் உள்ள தோலையும் தும்பையும் கையால் பிரித்து எடுப்பார்கள். தும்பில் இருந்து பிரித்தெடுக்கப்படும் தோல் வீடுகளில் பூ மரங்கள் வளர்க்கும் போது பசளைகளாக பயன்படுத்தல் போன்ற தேவைகளிற்காக விற்பனை செய்யப்படும். அதன் பின்னர் தும்பில் ஊறிக் கணப்படும் நீரை புளிந்து வெளியேற்றியபின் தும்பை மரக்கட்டை அல்லது சீமெந்து கொங்கிறீற்றுக் கட்டி ஒன்றில் வைத்து இரும்பு பொல் ஒன்றால் தட்டி அடித்து பதப்படுத்துவார்கள். இதனை அவர்கள் மட்டை தட்டல் என அழைப்பார்கள். இந்த செயற்பாடு சில இடங்களில் இயந்திரங்களைக் கொண்டும் செய்யப்படுகின்றது.

மட்டை தட்டிப் பதப்படுத்தி பெறப்படும் தும்பை உலரவிட்டு அடுத்த கட்ட உற்பத்திக்கான ஆயத்த தும்பாக மாற்றி அவற்றை சேகரித்து எடுப்பார்கள். இவ்வாறே தும்பு உற்பத்தி செய்முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் இயற்கை உற்பத்திப் பொருட்களுக்கான கேள்வி அதிகரித்தும் நிலையில் தாவர மூலப்பொருளான தும்பு மற்றும் தும்பிலிருந்து பெறப்படும் உற்பத்திப் பொருட்கள் மீதான கேள்வியும் அதிகரித்து வருகிறது. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தும்பானது தடித்த, நீளமான, தூய்மையான இழைகளைக் கொண்டிருப்பதாக உலக தும்புச் சந்தையில் கருதப்படுகிறது. இத்தும்பானது பெருமளவு மரபார்ந்த தும்புக் கைத்தொழில் நுட்பங்களைப் பின்பற்றியே உற்பத்தி செய்யப்படுகிறது.
இன்று கயிற்றிற்கான கேள்வி அதிகரித்து வருவது நாம் அறிந்த விடயமே. அந்த வகையில் தும்பு உற்பத்திப் பொருட்களில் முதன்மையாக விளங்குவது தும்பிலிருந்து திரிக்கப்பட்ட பலவகையான கயிறுகளேயாகும். இலங்கையின் தும்புத் தொழிற்துறையானது ஏறத்தாழ 35,000 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. இதில் ஏறத்தாழ 75-90% பெண்களாகவே உள்ளவர். கைத்தொழில் துறையில் பெண்களின் ஈடுபாடு இலங்கையில் அதிகமாக காணப்படுகிறது.

இதற்கு குளம், மடு,வாவி, குட்டை போன்ற நீர் நிலைகள் தும்புத் தொழிலின் முக்கிய செயற்பாடுகளான மட்டை புதைத்தல், தட்டல் போன்றவற்றுக்குத் தேவையான இயற்கைச் சூழலமைவையும் கொண்டுள்ளமை சிறப்பான விடயமே. கிராமிய சிறு குடிசைக் கைத்தொழில் திணைக்களத்தின் மூலம் கயிற்று திரிக்கும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டன. நெல் அறுவடை இயந்திரத்தின் அறிமுகத்திற்கு முன்னதான காலப்பகுதியில் நெல் அறுவடைக்குப் பயன்பட்ட கயிறுகளான உப்பட்டிக் கயிறு, வரிச்சிக் கயிறு, தேடாக்கயிறு போன்றன தும்பிலிருந்து தயாரித்து விற்பனை செய்யப்படுகிறன.

தும்பளையானது இலங்கையின் வடக்கு பகுதியிலுள்ள பருத்தித்துறைக்கு அண்மையில் ஒரு கிராமம் ஆகும். தும்பளை என்னும் பெயர் “தும்பு + அளை” என்பதிலிருந்து மருவி வந்திருக்க வேண்டும் எனும் கருத்துமுண்டு. அளை என்பது வாய்க்கால் அல்லது ஓடையைக் குறிக்கும் சொல்லாகும். பண்டைய காலத்தில் தும்புக் கைத்தொழிலே இக்கிராமத்தின் முதன்மைப் பொருளாதார நடவடிக்கையாக இருந்திருக்கலாமென சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தேங்காய் மட்டைகளிலிருந்து தும்பைப் பெறுவதற்கு அவற்றை நீரில் சில காலம் ஊற வைக்க வேண்டும். இதற்காக சிறு ஓடைகளை வெட்டி, நீர் பாய்ச்சி அதனுள் மட்டைகளைப் புதைத்து வைப்பது வழக்கமாகும்.

அது மட்டுமல்லாது மருதமுனையிலுள்ள பிரான்ஸ் சிற்றி என்னும் பிரதேசத்தில் சிறியளவிலான தும்புத் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டு தும்புப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இத்தொழிற்சாலையில் சுமார் 30 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அத்தோடு இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள வல்வெட்டித்துறை ஒரு முக்கிய துறைமுக, கப்பல் கட்டும் நகராக இருந்தமையால் இங்கே தும்பு மற்றும் கயிறு திரிக்கும் கைத்தொழில் ஒரு முக்கிய கைத்தொழிலாக பல நூற்றாண்டு காலமாக இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கச்சாய் தும்பு உற்பத்தி நிலையம், அல்லாரை தும்பு கைத்தொழில் உற்பத்தி நிலையம் கொழும்புத்துறை, பளை, முல்லைத்தீவு, வடமேல் மாகாணம், விருதோடை, கொகோ லங்கா தும்புக் கைத்தொழில் அமைப்பு, புத்தளம் போன்ற இடங்களிலும் தும்பு கைத்தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அங்குள்ள அநேகமான மக்களின் ஜீவநோபாய தொழிலாக தும்புக் கைத்தொழில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமே.

நாம் தினமும் எத்தனையோ விதமான பொருட்களை நுகர்கின்றோம் . அதில் பல வெளிநாடுகளில் இருந்து எமது பிரதேசத்திற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகின்றன . ஆனால் அப்பொருட்களை விட மிகவும் சிறந்த பொருட்கள் எம் தேசத்து முயற்சியாளர்களால் உருவாக்கப்படுகின்றன . உலகளாவிய ரீதியில் முண்ணனி வகிக்கும் வெளிநாட்டு வெற்றியாளர்களையும் , முயற்சியாளர்களையும் ஆச்சரியத்தோடு பாராட்டுகின்றோம் . ஆனால் கடுமையான அனுபவங்களை வெற்றிக்குரிய படியாகக் கொண்டு முன்னேறிய எத்தனையோ முயற்சியாளர்கள் எம் பிரதேசத்தில் உள்ளனர் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இவர்கள் திறமைசாலிகளாகவும் தாம் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் இருந்து விலகாதவர்களாகவும் , எமது தேசத்தின் வளங்களைக் கொண்டு நாம் நுகரும் பொருட்கள் உற்பத்தி செய்து சமூக நன்மை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இவர்களது முயற்சியானது நாம் அனைவராலும் பாராட்ட வேண்டியது அவசியமே.தும்புக் கைத்தொழிலுக்கென்று எமது சந்தையில் நிலவும் கேள்விக்கேற்ப அவை அபிவிருத்தி செய்யப்படவேண்டும். அக் கைத்தொழிலில் ஈடுபட்டுவருபவர்களுக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு பயிற்சிகள் வழங்கப்படும்போது ஏனையவர்களுக்கும் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் ஆர்வமும் ஏற்படும் அதன்போது தும்புக் கைத்தொழிலும் விருத்தியடையும். எமது நாட்டில் பல தொழில் பயிற்சி நிலையங்களில் பல வகையான தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டுவரும் வேளையில் எமது கிராமத்தில் எமது வீட்டிலிரு ந்தவாறே செய்யக்கூடிய ஒரு தொழிலான தும்புக்கைத்தொழிலை பயிற்சி நெறியில் சேர்த்துக்கொண்டால் பாரிய ஒரு ஊக்கமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.மேலும் சந்தைப்படுத்தல் முயற்சிகளில் கூடிய கவனம் எடுப்பதன் மூலம் இதற்கான கேள்வியை அதிகரித்துக் கொள்ள முடியும். அந்த வகையில், இலத்திரனியல் மயமான முறையில் இதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் உலகளாவிய ரீதியில் அதீத மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது . சிறுவர் முதல் முதியோர் வரையிலும் , தனி மனிதன் முதல் பாரிய நிறுவனங்கள் வரையிலும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பாவனை வியாபித்துள்ளது.சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை தமது வியாபார நடவடிக்கைகளை பன்னாட்டு நாடுகளிலும் விருத்தி செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம் பல விற்பனை வாய்ப்புக்களையும் வளங்களையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

அந்த இரவும் அவள் முகமும்.

பேய்க்கதைகள் அல்லது அது போலான அமானுஷ்ய கதைகளை உண்மையாக அனுபவித்தவர்களின் வாயிலாக கேட்கும் போது அதன் வீரியம் அதிகமாக இருக்கும். சில சமயம் புத்தகமோ திரைப்படமோ கூட  அதுபோலான  ஒரு உணர்வை தந்துவிடமுடியாது. அப்படி கேட்டு திகிலடைந்த ஒர் உண்மைக்கதை இது. அந்த சம்பவம் நடந்த போது அகல்யாவிற்கு வயது 20. (நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது.)

அந்த பல்கலைக்கழகத்தின் இரண்டு முகம்

எனக்கு பேய் பிசாசுகளில் நம்பிக்கை இல்லை. ஆனால் பயத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. நான் உண்மையாக பயப்படுவேன். என் இதயம் அடித்துக்கொண்டு நெஞ்சை பிளந்து வெளியே வந்துவிடுமோ என நான் நினைத்த சந்தர்ப்பம் மிக குறைவு. இந்த சம்பவம் அப்படியான ஒன்று.

வருடம் 2006. பாடசாலை வாழ்க்கை முடிந்ததுமே எனக்கு ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது அது யாருக்கும் கிடைக்காத ஒரு அறிய வாய்ப்பு. வேலைத்தளம் இருந்தது தலை நகர் கொழும்பில். நான் என் குடும்பத்தோடு வசித்தது கண்டியில். அது ஒரு பெரிய விடயம் இல்லைத்தான். ஆனால் ஒரு பெண் பிள்ளையை அப்படி தனியாக அனுப்ப முடியாது என வீட்டில் மறுப்பு தெரிவித்தார்கள். குடும்பத்திற்காக எனக்கு கொஞ்சமும் பிடிக்காத விஞ்ஞான பிரிவில் பல்கலைக்கழகம் சென்று என் மேற்படிப்பை தொடங்க பணிக்கப்பட்டேன். இரண்டு வருடங்கள் அங்கு சென்று ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டும் என்பதை அடியோடு வெறுத்தேன். அழுது அழுது வீங்கிய கண்களோடு என் முதல் நாள் காலேஜுக்கு வந்து சேர்ந்தேன். இந்த காலேஜ் வாழ்கை இல்லை என்றால் இப்போதுவரை அந்த மறக்க முடியாத இரவையும் அந்த திகில் உணர்வையும் மட்டுமே நான் இழந்திருப்பேன் என்று தோன்றுகிறது.

என்ன தான் எனக்கு பிடிக்காமல் நான் அந்த காலேஜை வந்தடைந்திருந்தாலும் அதன் ரம்மியமான தோற்றம் என் மனதுக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்தது. எங்கள் வீட்டில் இருந்து மூன்று மணி நேர தொலைவில் தான் அது இருந்தது. சுற்றிலும் இயற்கை காட்சிகளோடு ஒரு அழகிய வனத்துக்கு நடுவே அமைந்திருந்த மாளிகையை போல அந்த பல்கலைக்கழகம் காட்சி தந்தது. ஆனால் அங்கு பகலில் ரம்மியமாக காட்சியளித்த அனைத்தும் இரவில் பீதியை கிழப்பிவிடும் படி மாறிவிடும். சுற்றி இருக்கும் காட்டு மரங்கள் காற்றில் அசையும் சத்தம் ஒரு ஓலத்தை போல கேட்டுக்கொண்டே இருக்கும். நீண்ட பாழடைந்த காலேஜ் கட்டிடங்களும் இரவு நேரத்தில் அதில் ஒளிரும் மங்களான விளக்கொளியும் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். கட்டிடங்களுக்கு நடுவே இருக்கும் பாசி படிந்த அந்த குளம். அந்த குளத்தை பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும் அதில் மீன்கள் இருந்தை விட பாம்புகள் இருந்தது தான் அதிகம். இப்படியாக அங்கு இரவு நேரம் நடமாடுவதை மட்டும் நான் முற்றிலுமாக வெறுத்தேன்.

இதில் பெண்கள் தங்கும் விடுதி தான் ”ஹைய் லைட்”. அந்த சுற்று வட்டாரத்தில் பெண்கள் விடுதி மட்டும் தன்னந்தனியாக இருக்கும். அந்த கட்டிடத்திற்கு பின்னால் இருப்பது வெறும் காடு மட்டுமே. அங்கிருந்து பதினைந்து நிமிடங்கள் நடந்தால் இரவு உணவு வழங்கப்படும் அறை வரும். அதில் இருந்து இருபது நிமிடம் நடந்தால் கல்லூரி கட்டிடங்களை அடைய முடியும். ஆண்களின் விடுதி வேறு எங்கோ ஒரு திசையில் இருந்தது. சுருக்கமாக சத்தம் போட்டு கூப்பிட்டாலும் யார் காதிலும் விழாத தூரத்தில் நாங்கள் இருந்தோம்.

எங்களுக்கான அறை எண்கள் கொடுக்கப்பட்டு அவரவர் அறைகளுக்கு வந்து சேர்ந்தோம். அது ஒரு இரண்டு மாடி கட்டிடம். பிரதான அறைக்கதவை திறந்தால் நீண்ட கொரிடோர் இருக்கும் அதன் இருபக்கமும் அறைகள், எந்த அறைக்கும் கதவில்லை. ஒரு அறையில் நான்கு கட்டில்கள் அதாவது நால்வர் இருக்கலாம். மேல் மாடியும் இதே அமைப்பில் தான் இருக்கும்.

அவள் பெயர் அனுராதா

வகுப்புகள் ஆரம்பித்தன புது நண்பர்கள் புது சூழல். கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்திற்கு பழக்கப்பட்டவர்களாகிகொண்டிருந்தோம். அப்போது தான் அவளது பெயர் எங்கள் மத்தியில் அடிபட ஆரம்பித்தது. பார்த்த மாத்திரத்தில் அவளுக்கு ஏதே சொல்லப்படாத கதை இருக்கலாம் என அனுமானித்துவிட முடியும். குள்ளமாக எழும்பும் தோலுமாக  நீண்ட தாடையும் குழிவிழுந்த கண்களுமாக காட்சியளிப்பாள். மிக அமைதியானவள் யாரிடமும் பெரிதும் பேசாமல் தனித்தே இருப்பாள். படிப்பு, படிப்பு முடிந்தால் அறை. அவ்வளவு தான் அவள்.

அந்த பெண்கள் விடுதியில் மேல் மாடத்தில் தான் எனது அறை இருந்தது. எனக்கு இரண்டு அறைகள் தள்ளி அனுராதாவின் அறை. முதலில் கீழ் அறையில் இருப்பவர்கள் தான் அதை அவதானித்து சொன்னார்கள். அனுராதாவுக்கு இரவில் அடிக்கடி கழிப்பறை செல்லும் பழக்கம் இருந்தது. குறைந்தது பத்து தடவையாவது சென்று வருவாள். அந்த அறைகளின் வரிசையில் கழிப்பறை தான் கடைசி அறை. அனுராதாவின் அறையே தொடக்கத்தில் இருக்கும். இரவில் அவள் அந்த நீண்ட கொரிடேரில் ஒரு பக்கம் இருந்து மற்ற பக்கம் செல்லும் போது அந்த காலடி சத்தம் கீழ் தளத்தை சேர்ந்தவர்களுக்கு நன்றாக கேட்கும். பீதி அடைந்த அவர்கள் விடிந்ததும் இதை பற்றி மேல் மாடியில் இருக்கும் மற்ற பெண்களிடம் கேட்டபோது அவர்களும் அது அனுராதா தான், அவள் தான் அப்படி போய் வருகிறாள் என்பதை ஊர்ஜிதப்படுத்தினர். நான் முன்பே சொன்னது போல எங்கள் அறைகளுக்கு கதவில்லை. ஆகவே அவள் ஒவ்வோரு அறையாக கடந்து கழிவறை செல்வது மற்றைய அறையினருக்கும் நன்றாக தெரியும். அதற்கு பிறகு தான் நானும் அதை கவனித்தேன். அவள் செய்வது சற்று விசித்திரமாக தான் இருந்தது. பகலில் வகுப்பறையில் பேசிக்கொள்கையில் அது ஜாலியாக இருந்தாலும் இரவு சில சமயம் அவள் அப்படி உலாவருவதை பார்க்கையில் கொஞ்சம் பீதியாக தான் இருந்தது.

அந்த இரவு

அனுவின் அந்த செயல்பாட்டை சிலர் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை ஒரு சிலருக்கு அது மட்டும் தான் பேச்சாக இருந்தது. அதற்குள் அவளை பற்றி சில கட்டுக்கதைகள் கல்லூரியில் உலாவ ஆரம்பித்தது. அவள் கழிப்பறைக்கு சென்று தனியாக பேசுவதாகவும் அவளது அறையில் அவள் சில விசித்திரமான மாலை மணிகளை வைத்துக்கொண்டு பூஜைகளில் ஈடுபடுவதாகவும் பச்சை இறைச்சி உண்ணுவதாகவும் செய்திகள் வந்தது. அது வெறும் கட்டுக்கதைகள் தான். எனக்கும் அது மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை, சிரிப்பு தான் வந்தது. லூசுத்தனமாக இவர்கள் கட்டிவிடும் பொய்கள் அவை. ஆனால் அந்த கட்டுக்கதைகள் எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவு ஒரு கதை அன்றிரவு நடந்தேறியது.

அன்று எங்களுக்கு மரபணு சார்ந்த நோய்கள் பற்றி செமினார் நடந்தது. மிக நீண்ட அலுப்பூட்டும் அந்த செமினாரை முடித்துவிட்டு இரவு உணவு உண்டுவிட்டு எல்லோரும் எங்கள் விடுதிக்கு வந்து அயர்ந்து தூங்கிப்போனோம். நேரம் எப்படியும் நள்ளிரவை தாண்டியிருக்கும். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த எனக்கு ஏதோ அலறல் சத்தம் கேட்டது, அதை தொடர்ந்து பலமாக என்னை எனது “ரூம் மேட்” கலா அடித்து எழுப்பினால். பீதியில் அவள் கண்கள் பிதுக்கியிருந்தது. “அனு..அனு..” என வார்த்தைகளை இழுத்துக்கொண்டாள். பதறி போய் எழுந்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கொரிடேரில் மற்றைய அறை பெண்கள் அலறியபடி கத்திக்கொண்டு ஓடுவதை பார்க்க பயம் எனக்குள்ளும் தொற்றிக்கொண்டது. ஏதாவது பாம்பு புகுந்திருக்கும் என்று தான் முதலில் எண்ணினேன். எழுந்து வெளியே வந்து பார்த்தால் பின்னங்கால் பிடரியடிக்க எல்லோரும் படி வழியாக கீழ் தளத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள், அப்போது என்னை கடந்து ஓடிய பக்கத்து அறையின் சிங்கள பெண் உலறியபடி அனுராதாவுக்கு பேய் பிடித்திருக்கிறது, எங்கள கொல்ல பாக்கிறாள் என்று சென்னது என் காதில் விழுந்தது. அனுராதா என்ன செய்தால் யாருக்கு என்ன ஆனது என்று ஒன்றும் தெரியாது ஆனால் விபரீதமான ஒன்று நடந்துவிட்டதை நன்றாக உணரமுடிந்தது அவ்வளவு தான் அடுத்தகணம் நானும் என்னை அறியாமல் ஓட ஆரம்பித்தேன். எனக்கு பின்னால் இரண்டு பெண்கள். நாங்கள் தான் அந்த வரிசையில் கடைசியாக ஓடி வந்தோம். எங்கள் அறைகளில் ஒளிர்ந்த அந்த மங்கலான மஞ்சள் விளக்கில் ஒன்றும் உருப்படியாக தெரியவில்லை. படியை அடைய ஒருசில அடி தூரங்களே இருந்த வேலையில் அறைக்குள் இருந்து எனக்கு முன் அனுராதா வெளிப்பட்டாள். அவ்வளவு தான் மூச்சு நின்றதை போல் உணர்தேன். நல்ல வேளையாக அவள் என்னை பார்க்கவில்லை மாறாக கீழ் இறங்கும் படியையே அசையாது பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் நின்ற பாணியே பீதியை கிளப்பியது. ஏதோ ஒன்றுக்கு அவள் கட்டுப்பட்டதை போல அவள் நின்றாள். அடுத்த நொடி செய்வதறியாது பின்னால் இருந்த நான் எனக்கு லாவகமாக இருந்த அறைகளுக்குள் பாய்ந்து கட்டிலுக்கு கீழே ஒழிந்து கொண்டேன். சற்றைக்கெல்லாம் அந்த இடம் வெறிச்சோடியது. கீழ் தளத்தில் சத்தம் கேட்க ஆரம்பித்தது. இங்கிருந்து ஓடி சென்ற பெண்கள் கீழே உள்ள அறைகளுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டு இருந்தவர்களை எழுப்புயிருக்க கூடும். தரையோடு தரையாக படுத்திருந்த எனக்கு கீழ் தளத்தில் இருந்து வரும் சத்தத்தை நன்றாக கேட்க முடிந்தது. ஆனால் மேல் தளத்திலே சத்தமே இல்லை. இங்கு தன்னந்தனியாக மாட்டிக்கொண்டு இருப்பது நான் மட்டுமே. என் முதுகு தண்டு ஜில்லிட்டதை என்னால் உணர முடிந்தது. கீழ் தளத்தின் சத்தம் அடங்க ஆரம்பித்தது அப்படியென்றால் அவர்கள் விடுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் இப்போது அனுராதா நடமாடும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. என் வாயை கைகளால் பொத்திக்கொண்டு சுருங்கிப்போய் அந்த கட்டிலுக்கு அடியில் பதுக்கியிருந்தேன். நான் பதுங்கி இருந்த அறை இருட்டாக தான் இருந்தது, என் மூளை தெழிற்படுவது நின்றுபோய் இருக்க பயத்தின் வாசனையை மட்டுமே என்னால் அப்போது உணர முடிந்தது. என் வாழ்கையில் இப்படி ஒரு சந்தர்ப்பத்தை கனவிலும் நினைத்திறாதவள் நான். இப்போது வசந்தி அங்கும் இங்கும் நடக்கிறாள். கொரிடோரின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு அவள் நடந்து செல்லும் சத்தம் மட்டும் நன்றாக கேட்டது. நான் மூச்சு காட்டவில்லை. தப்பித்து வெளியே ஓடுவதை அப்போது நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அது உசிதமான செயலும் அல்ல. யாராவது உதவிக்கு வரவேண்டும் என்று மட்டுமே எதிர்ப்பார்த்தேன். எல்லா மத கடவுளின் பெயரும் என் வாய் உச்சரித்தது. அனுராதா நான் ஒளிந்திருக்கும் அந்த அறையை கடந்து செல்லும் போதெல்லாம் சத்தம் வழுக்கும். என் இதயம் வெடித்துவிடும் அளவு துடிக்கும். அந்த நிமிடம் என்னை வலுக்கட்டாயமாக இங்கே படிக்க செய்த என் பெற்றோரை நினைத்து கடிந்துக்கொண்டேன். ஒரு நிமிடம் அல்ல, பத்து நிமிடம் அல்ல அப்படியே மூச்சை பிடித்துக்கொண்டு 20 நிமிடங்கள் அந்த கட்டிலினடியில் இருந்தேன். ஒவ்வொரு நொடியும் யுகமாகவே கழிந்தது. வியர்வையில் என் உடல் குளிர்ந்தது. அனுராதா உலாத்துவதை நிறுத்தவில்லை. எனக்குள் நாளைய நாளை பற்றிய நம்பிக்கை மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.

அப்போது தான் அந்த சம்பவம் நடந்தேறியது. நான் பதுங்கிருந்த அறைக்கதவின் வாசலில் அனுராதாவின் கால்கள் தெரிந்தது. என் கதை முடிந்ததாக எண்ணினேன். அந்த இடத்திலேயே வெகு நேரமாக நின்றுக்கொண்டு இருந்தாள். அவள் என்ன செய்துக்கொண்டு இருக்கிறாள் என்று எனக்கு ஒன்றும் புலப்படவில்லை. எனக்கு தெரிந்தது எல்லாம் அவளது கண்ணங்கரிய கால்கள் மட்டுமே. மெல்ல அடியெடுத்து கட்டிலின் அருகில் வந்தாள். மூச்சு நின்று விடுவதை போல இருந்தது. என்னை அவள் வாசம் பிடித்திவிட்டாள் என்று எண்ணினேன். எந்த கணமும் அவள் என்னை குனிந்து பார்க்க கூடும். அப்படிப்பார்த்தால் என்ன செய்வது யோசிக்காமல் அவளை தாக்கவேண்டும். கைகளையும் கால்களையும் விறைப்பாக வைத்திருந்தேன். அவள் கட்டிலின் மேல் அமர்ந்தாள். அவளின் கனம் மொத்தில் தெரிந்தது. அவளுக்கு நேர் கீழே நான் மூச்சைப்பிடித்துக்கொண்டு இருந்தேன். அப்படியே எழுந்து ஓடிவிடுவமா, அல்லது தானாக வெளியே வந்து அவளை தாக்கலாமா என்று எண்ணங்கள் ஓடிக்கொண்டு இருக்க சிறிதும் எதிர்ப்பார்க்காத நேரம் அவள் அமர்ந்தபடியே தலைக்கீழாக என்னைப்பார்த்தாள். என் முகத்துக்கு நேர் எதிரே அவளது தலை. அவள் கண்கள் பிதுக்கிங்ப்போய் இருந்தது. முடி அலங்கோலமாய் இருந்தது. வழக்கத்தைவிட அவள் முகம் பிரகாசமாக இருந்தது வாயில் வாயில் ஒரு புன்னகையோடு என்னைத் தலைக்கீழாக பார்த்துக்கொண்டிருந்தாள். நான் உறைந்து போனேன். பிரேதம் போல் உணர்ந்தேன்.

அப்போது தான் தெய்வாதீனமாக வார்டனும் இரண்டு ஆடாவர்களும் சில பெண்களும் மேலேறி வந்தார்கள். அறைக்குள் புகுந்த அனுராதாவை பிடித்தார்கள். அவள் அவர்களை எதுவும் செய்யவில்லை மாறாக அவர்களோடு கீழிறங்கி சென்றுவிட்டாள். குத்துயிரும் குலையுயிருமாக வெளியேறி வந்தேன். என்னால் கட்டுப்படுத்தமுடியாமல் கண்களில் இருந்து நீர் வழிந்தோடியது. சரி என்ன தான் நடந்தது என்பதை கேட்டால், அனுராதா நடு இரவில் அவளது அறையில் படுத்திருந்த பெண் ஒருத்தியின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதாகவும் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவளை காப்பாற்ற வந்த மற்றவர்களை தாக்க முற்பட்டதாகவும் கூறினார்கள். நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வர, என் போன உயிரும் திரும்பி வந்தது.

மீண்டும் அனு

மார்கழி மாதம் ஆரம்பமானது. குளிர் பற்களை அதிரவைத்தது. அந்த சம்பவத்திற்கு பின்பு நாங்கள் மீண்டும் அனுராதாவை பார்க்க இரண்டு மாதங்களாயின. அந்த இரண்டு மாதமும் கல்லூரி முழுவதும் இது தான் பேச்சு. அதிலும் குறிப்பாக அந்த மேல் மாடியில் தனியாக சிக்கிய என்னிடம் கதை கேட்காதவர்கள் யாரும் இல்லை. நாட்கள் சென்றது அனுராதா பற்றி எந்த தகவலும் இல்லை அவளது செயல்களுக்கு அர்த்தமும் தெரியாமலேயே இருந்தது.

திடீர்ரென ஒரு நாள் எங்கள் பேராசிரியர். அனுராதா சிகிச்சை முடிவடைந்து மறுபடி வரப்போவதாகவும் மாணவர்கள் யாரும் அவளிடம் அன்றைய நாளை பற்றி எதுவும் விசாரிக்க வேண்டாம் என்றும் பணிவுடன் கேட்டுக்கொண்டார். இது அவளது வாழ்கை பிரச்சனை யாரும் அவளிடம் பிரிவு காட்டாது இயல்பாக பழகும் படி கூறினார். ஆனால் அனுராதா மறுபடி கல்லூரிக்கு வந்த அன்று யாராலும் அவ்வளவு சகஜமாக பழக முடியவில்லை. எனக்கு சற்று உறுத்தலாகவே இருந்தது. பொதுவாக யாரைவாது அப்படி தனிமைப்படுத்தப்படுவதை நான் விரும்புவதில்லை. நானே முன்வந்து அவளிடம் பேச்சு கொடுத்தேன். அனுராதாவிடம் ஒரு நல்ல மாற்றத்தை இனம் காண முடிந்தது. உள ரீதியாக அவள் மாற்றமடைந்திருக்கிறாள் என்பதை அவளது பேச்சில் அறிந்து கொண்டேன். அவளுக்கு அப்படி என்ன சிகிச்சை வழங்கப்பட்டது அவளுக்கு என்ன பிரச்சனை என்பது யாருக்கும் தெரியாது அவளிடம் கேட்கவும் முடியாது. ஏன் என்றால் அன்று நடந்தது பற்றி அவளுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. மற்றவர்கள் அவளிடம் தயக்கம் காட்ட நானே முன் வந்து அவளிடம் சிரித்து பேசினேன்.

மீதமிருந்த ஒரு வருடமும் அனுராதாவால் எந்த பிரச்சனையும் வரவில்லை. அவள் எல்லோரையும் போலவே இருந்தாள், திரிந்தாள். குறிப்பாக இரவு நேரம் அவள் அறை விட்டு வெளியேறுவதே இல்லை. நன்றாக படித்தாள். எங்கள் கல்லூரியில் சிறந்த மதிப்பெண்களுடன் பாஸ் ஆகியவர்களில் அவளும் ஒருத்தி. அன்றைய இரவு அவள் அப்படி நடந்து கொண்டது ஏன் அவளை அப்படி நடத்தியது எது என்று எனக்கு தெரியாது. ஆனால் தலை கீழாக தொங்கிக்கொண்டிருந்த அவளது தலையும், அந்த முகத்தையும் நான் எப்போதும் மறக்கப்போவதில்லை.

 

எழுத்து – மஹின் சுப்ரமணியம்.

“அலை” – குறுந்திரைப்படம் – நாடி Review

நம் பெற்றோர்களின் மீது நமக்கு எத்தனை ஆழமான அன்பு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர்களின் நிலைக்கு நாம் வருகின்றபோது, அதாவது ஒரு தந்தையாகவோ, தாயாகவோ நாம் மாறும் போது அவர்களின் அர்ப்பணிப்பை, அன்பை நம்மால் அதிகமாக புரிந்துகொள்ள முடியுகிறது.

பரந்து விரிந்த ஒரு கடற்கரை அதில் நின்றபடி எல்லையில்லாமல் விரிந்துகிடக்கின்ற கடலைப் பார்த்துக்கொண்டு, தனது மகனோடு நிற்கும் அந்த இளம் தந்தையின் நினைவுகள் அந்த அலைகளை போலவே ஆர்ப்பரிக்கின்றன. ஒரு தந்தையாக அவரது வாழ்க்கையின் அழுத்தத்தையும் ஒரு மகனாக தன்னுடைய தந்தையையும் நினைத்துப்பார்க்கிறார். அந்த நினைவுகளும் அவருடைய நிலையும் தான் இந்த கதை.

மூன்றரை நிமிடங்கள் ஓடக்கூடிய “அலை” என்ற இந்த குறும்படம் ஒரு தந்தையை பற்றி நினைத்துப் பார்க்கும் இன்னொரு தந்தையுடைய நிலையை கூறுகிறது. படத்தின் சிறப்பம்சம் அதன் நேரமும், ஒரே இடத்தில் படமாக்கப்பட்டு இருப்பதுமே ஆகும். இசை காட்சிக்கு வலு சேர்த்திருக்கிறது. ஒரு தந்தையாக வாழ்க்கை எத்தனை சுமைகளையும் அவமானங்களையும் தந்தாலும் தன்னுடைய மகனுக்கு வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுக்கும் தந்தையின் நிலையை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

கதை மாந்தர்கள் செவ்வனே தமது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.. இருப்பினும், படத்தின் கருவிலும், அதை சொல்லிய விதத்திலும் இன்னும் தெளிவு தேவைப்படுகிறது எனத் தோன்றுகிறது. தொழில்நுட்ப அம்சங்களிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். RS Ramani யின் காட்சியமைப்பு இக்குறும்படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறதென்றால் மிகையாகாது. மிக அற்புதமான ஒளிப்பதிவு. இனிவரும் அடுத்தடுத்த படைப்புகளில் மேலும் சிறப்பாக செயற்பட இயக்குனர் குரு T.K மற்றும் அவரது குழுவுக்கும் நாடியின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

நாடி Verdict – 63/100

Video Link – https://youtu.be/dq1zXry3ZTU

 

பாலியல் குற்றங்கள் – சட்ட ஒளி

சட்ட ஒளி என்பது சட்டம் தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைக்கும் மும்மொழி சட்டக் கலந்துரையாடலாகும். லத்தீன் மொழியில் ignorantia legis neminem excusatஎன்ற தொடர் விளக்கி நிற்பது, சட்டத்தினை புறக்கணிப்பது சட்டத்திலிருந்து   மன்னிப்பு பெறுவதற்கான வழி அல்ல   என்பதனையே ஆகும். அந்த வகையில் இலங்கை சட்ட மாணவர் சங்கத்தின் ப்ரோ போனோ குழுவானது நம் நாட்டு சட்டங்களினை எளிமையாக்குவதன் மூலம் பொது மக்களுக்கு அறிவூட்ட முற்படுகின்றது. அதன் நான்காவது கலந்துரையாடல் “பாலியல்   குற்றங்கள்” குறித்து கவனம்   செலுத்தியுள்ளது.

இந்தக் கலந்துரையாடலுக்கான குழுவானது பின்வரும் சட்டத்தரணிகளை      உள்ளடக்கியிருக்கின்றது: திரு. சீவலி அமிதிரிகள pc குற்றவியல் மற்றும் சிவில் சட்ட பயிற்சியில் மிகவும் ஆர்வமுடையவர், கொழும்பு சட்டக் கல்லூரி மற்றும் றோயல் நிறுவனத்தின் மூத்த விரிவுரையாளரும் ஆவார். திரு. அஸ்திக உபுல் தேவேந்திர, சட்டக் கல்லூரி அனுமதி பரீட்சைக்கான மூத்த விரிவுரையாளராகவும். சி எப் பி எஸ் சட்டப் பள்ளியின் மூத்த விரிவுரையாளராகவும் கடமையாற்றிய மூத்த சட்டத்தரணி ஆவார்.   பேராசிரியர் டாக்டர் சாந்தி சேகராஜசிங்கம் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் மூத்த விரிவுரையாளராவர்.

கற்பழிப்பு / வன்புணர்ச்சி குற்றத்தில் சம்மதம் என்று பொருள் கொள்ளப்படுவது யாது? நீதிமன்றத்தில் எவ்வகையான சம்மதம்  ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது

 ப- தண்டனைச் சட்டக் கோவையில் உள்ள பாலியல் குற்றங்களாவன, கற்பழிப்பு (s.363), முறையில்லாப்புணர்ச்சி (s.364A), இயற்கைக்கு மாறான புணர்ச்சி (s.365), ஆட்களுக்கு இடையில் மிக இழிவான செயல்கள் (s.365A), பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் (365B) மற்றும் பாலியல் பலாத்காரம் அல்லது தொந்தரவு (s.344) என்பன ஆகும்.  அந்த வகையில்   கற்பழிப்புக் குற்றத்தை வரையறுக்கும்  பிரிவிற்கு அமைய, கற்பழிப்பு என்பது  , ஒரு ஆண் அந்த பெண்ணின்  சம்மதமின்றி  அந்த பெண்ணுடன் உடலுறவு   கொள்ளுவதை எடுத்துரைக்கின்றது. கற்பழிப்பு / வன்புணர்ச்சி குற்றத்தில் சம்மதம் வழங்கப்படாமை ஒரு முக்கிய  அம்சமாகும்.  எனினும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சம்மதம் பெறப்பட்ட போதிலும் அது சம்மதமாக தகுதி பெறாது, உதாரணமாக சட்ட முறையாக அல்லது சட்ட முறையற்ற விதத்தில் ஒருவரை தடுத்து வைத்திருக்கும் போது கட்டாயப்படுத்தி பெறப்படும் சம்மதம் சட்டத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட   சம்மதமாகக் கருதப்பட மாட்டாது.  நீங்கள் ஒருவரை மிரட்டுவதன் மூலம், அல்லது அவரை  அச்சுறுத்தி  அல்லது  ஒருவருக்கு மரண பயத்தினை காட்டுவதோடு அல்லது ஊறு விளைவிக்கப்படும் என்ற பயத்தின் மூலம் பெறப்படும் சம்மதமானது பயத்தினால் அல்லது மிரட்டி  பெறப்பட்ட சம்மதமாகக் கருதப்படும். அவ்வாறான சம்மதங்கள் உடலுறவினை மேற்கொள்ளுவதுற்கு ஏற்ற சம்மதமாகக் கருதப்பட மாட்டாது.  அதே போல வேறோருவரால்  குடிபோதைக்கு அல்லது   போதை வஸ்த்தால்  தூண்டப்பட்டு அல்லது பெண் சித்த சுவாதீனமற்று காணப்படும் போது பெறப்படும் சம்மதம் சட்டதின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையான சம்மதமாகக் கருதப்பட மாட்டாது. சம்மதம் தெரிவிக்க முடியாத வயது குறைந்தவர்கள் உடலுறவுகளில் ஈடுபட்டதற்கான பல சம்பவங்கள் உள்ளன. இலங்கை சட்டத்தின் கீழ் பாலியல் செயற்பாடுகளுக்கு/ உடலுறவுக்கு  சம்மதம் தெரிவிக்கும்  வயதெல்லை 16ஆகக் காணப்படுகின்றது. நீங்கள் 16 வயதிற்குட்பட்டவராக இருந்தால், நீங்கள் சம்மதித்திருந்தாலும், அது     செல்லுபடியான சம்மதமாகக் கருதப்பட மாட்டாது.

வேறு விதமாகக் கூற வேண்டுமானால் சம்மதமானது தனி நபர் சுதந்திரத்தை சார்ந்திருக்க வேண்டுமா?

ப – முற்றிலும் சரி.  அந்த சம்மதமானது சுதந்திரமான, நேர்மையான, புரிந்துணர்வுடன் கொடுக்கப்பட்டதாகவும், அவள் எவ்விதமான செயலில் ஈடுபடுகின்றாள் என்பதை சம்மதம் வழங்கும் முதல் சிந்தித்து பார்த்துக் கொடுக்கப்பட்டதாகவும், இருக்க வேண்டும்.

சம்மதம் மற்றும் அனுமதித்தல் என்பவற்றுக்கிடையிலான வேறுபாட்டினை விளக்க முடியுமா?

  ப – இன்னோகா  கலகே  v கமல்  அத்தர்றாற்சி   என்ற வழக்கில் கௌரவ  நீதிபதி  அசோகா டி சில்வா, ஹரினேரியன் v ஸ்டேட்  வழக்கிலிருந்து மேற்கோள் காட்டி “தவிர்க்க முடியாத நிர்பந்தத்தினால்  தெரிவிக்கப்படும் சம்மதம் மற்றும்   எதிர்ப்பில்லாமல் அல்லது ஒருவரால் அச்சுறுத்தபட்டு  அல்லது மிரட்டி   சம்மதம் வாங்கும் பட்சத்தில் அது சம்மதமாக கருதப்பட மாட்டாது. ஒரு பெண் தன்னுடைய பாதுகாப்பு கருதி பாலியல் பலாத்காரத்திற்கு தானாக முன்வந்து சம்மதம் அளிப்பது மட்டும் போதுமானது அல்ல, அங்கு ஒரு பெண் அதனை எதிர்ப்பு தெரிவிக்காமைக்கும் சம்மதம் அளித்தமைக்கும் இடையில் வேறுபாடு காணப்படுகின்றது அதேவேளை ஒரு பெண் பயத்தின் காரணமாகவோ அல்லது மிரட்டப்படும் சந்தர்ப்பத்திலோ தன்னுடைய   உடலை சமர்ப்பிப்பது ஒப்புதல் இல்லை”. சம்மதம் என்பது உட்கிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ வழங்குவதையே குறிக்கும். இருப்பினும் ஒப்புதலுக்கும் சம்மதத்திற்கும் இடையில்  மிகத்  தெளிவான வேறுபாடு உள்ளது

கற்பழிப்புக்கான தண்டனை என்ன?

  ப – குறைந்தபட்ச தண்டனை 7 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகும். ஒரு அரசாங்க அதிகாரி   தனது அதிகாரத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஒரு கர்ப்பிணிப் பெண், 18 வயதிற்குட்பட்ட ஒரு பெண், மனநிலை சரியில்லாத அல்லது கும்பல் கற்பழிப்பு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கான தண்டனை 10 வருடத்திற்கு அதிகமாகவும் 20 வருடத்திற்குக் குறைவாகவும் காணப்படும்.  முறையில்லாப்புணர்ச்சியில் நடைபெறும் கற்பழிப்பிற்கு தண்டனை 15 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 20 வருடங்களுக்குக் குறைவாக இருக்கும்.

இலங்கை சட்டத்தின்படி, ஒரு ஆண் மீது பாலியல் பலாத்காரம் செய்ததற்கு ஒரு பெண்   பொறுப்பாக வாய்ப்பு உள்ளதா?

  ப – தண்டனை சட்டக் கோவையில் 363 பிரிவிற்கு அமைய தெளிவாக புலப்படுவது யாதெனில் இந்தக் குற்றமானது ஒரு ஆணால் ஒரு பெண் மீது செய்யப்படுவதே ஆகும்.  இந்த வரையறைகளுக்கமைய ஒரு பெண்ணால் ஒரு ஆண் கற்பழிக்கப்படுவதை எதிர்பார்க்க முடியாது என்று நான் கருதுகின்றேன்.

இலங்கையில்  திருமணத்திற்குள் கற்பழிப்பு என்பது   குற்றமாக உள்ளதா?

  ப – சமகால குற்றவியல் சட்டத்தின்படி, பிரிவு 363A ற்கு அமைய நீதிமன்றக்  கட்டளையின் கீழ் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழுகின்ற போது நடைபெறும் உடலுறவு மாத்திரமே  திருமணத்திற்குள் கற்பழிப்பு எனக் கொள்ளப்படும்

ஆனால் திருமணத்திற்குள் கற்பழிப்பு என்ற கருத்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது அல்லவா?

  ப – இது பல அதிகார வரம்புகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கருத்தாக உள்ளது காலப்போக்கில் சில கருத்துக்களும் மாற்றமடைய   வேண்டும். மேலும் இந்தக் குற்றத்தின் சில கூறுகள் எங்கள் சட்டத் தயாரிப்பாளர்களுக்கு விளக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனை குறித்து பொதுமக்களுக்கு நாம் அறிவூட்ட முடியுமா?

  ப – தண்டனை சட்டத்தின் பிரிவு 364 க்கு  ஏற்ப, ‘கற்பழிப்பு செய்தவர்    உட் பிரிவு  2 மற்றும்  3 இல் வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களைத் தவிர, 7 வருடங்களுக்கும் குறையாத மற்றும் 20 வருடத்திற்கு மிகாமல்  கடூழிய  சிறைத்தண்டனை மற்றும்   குற்றப்பணத்துடன்  மற்றும் எந்த ஆள் தொடர்பில் தவறு புரியப்பட்டதோ அந்த ஆளுக்கு விளைவிக்கப்பட்ட ஊறுகளுக்கு   நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொகை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்படும்.

நிறுவனக் கற்பழிப்புஎன்றால் என்ன என்பதை விளக்க முடியுமா?

  ப- ஒரு நபர் ஒரு நிறுவனத்தில் அதிகார நிலையில் இருக்கிறார் மற்றும் பாதிக்கப்பட்டவர் அந்த நிறுவனத்தில் உள்ளவர் எனும் போது, அத்தகைய ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தால், அது ஒரு நிறுவனக் கற்பழிப்பு என்று கருதப்படும்.

 நீர் – இங்கு அதிகாரத்தில் உள்ளவர் ஒப்புதல் பெறும்போது கூட, அது வலிதான சம்மதமாக இருக்காது.

பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன என்பதைப் பற்றி பொதுமக்களுக்கு நீங்கள் கற்பிக்க முடியுமா?

  ப-  தண்டனை சட்டத்தின் பிரிவு   365B வரையறைப்பதற்கு அமைய ஒருவர் பாலியல் அவா நிறைவுக்காக அவரது பிறப்புறுப்பை அல்லது மனித உடம்பில் ஏதேனும் வேறு பாகத்தை அல்லது ஏதேனும் சாதனத்தை வேறு எவரேனும் ஆளின் ஏதேனும் துவாரத்தில் அல்லது உடம்பின் ஏதேனும் பாகத்தில், மற்றவரின் சம்மதம் இல்லாமல் அல்லது பதினாறு வயதுக்குக் குறைவாக இருக்கும் போது அந்த நபரின் சம்மதத்துடனோ சம்மதமில்லாமலோ, அல்லது சட்டமுறையாக அல்லது சட்ட முறையற்ற விதத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது அந்த நபரின் சம்மதத்துடனோ அல்லது அவ் சம்மதமானது பலாத்காரத்தை அல்லது மிரட்டலை அல்லது தடுத்து வைக்கப்பட்டிருத்தல் என்று பயமுறுத்துவதன் மூலம் அல்லது மரணம் அல்லது ஊறுவிளைவிக்கப்படும் என்னும் பயத்தை ஏற்படுத்துவதன் மூலம் பெறப்படுமாயின், அதே போல வேறோருவரால்  குடிபோதைக்கு அல்லது   போதை வஸ்த்தால்  தூண்டப்பட்டு அல்லது பெண் சித்த சுவாதீனமற்று காணப்படும் போது சம்மதம்  பெறப்பட்டு  உள்ளவிடத்து  அது கற்பழிப்பாக அமையாத போதும் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்தை     புரிந்ததாக அமையும்.

ஒரு கும்பல் கற்பழிப்பு நடந்தால், அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சட்டம் எவ்வாறு தண்டனை அளிக்கிறது?

ப – கும்பல் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் அனைத்து பங்கேற்பாளர்களும், கும்பல் கற்பழிப்பு செயலில் பங்கேற்ற ஆதாரங்களின்படி, ஆதாரங்கள் நிறுவப்பட்டிருந்தால் அவர்கள் மீது குற்றம் சாட்டப்படும். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அல்லது சிலர் வெறுமனே ஆஜராகி, தீவிரமாக பங்கேற்க்காத பட்சத்தில் அத்தகைய நபர் கும்பல் பாலியல் பலாத்காரத்தில் குற்றவாளியாகக்  கருதப்பட  மாட்டார்.

ஆட்களுக்கிடையில் மிக இழிவான செயல்கள் செய்தல் என்றால் என்ன?

ப – தண்டனை சட்டத்தின் பிரிவு 365A க்கு ஏற்ப   பகிரங்கமாகவோ தனிமையிலோ இன்னுமோர் ஆளுடன் மிக்க இழிவான செயலைப் புரிகின்ற அல்லது அதனை புரிவதில் ஒரு திறத்தவராக இருக்கின்ற அல்லது எவரேனும் ஆளினால் புரியப்படுவதை  கூட்டிவைக்கின்ற கூட்டி வைக்க எத்தனிக்கின்ற ஆளெவரும்  குற்றவாளியாக  கருதப்படுவார்.

 ஆட்களுக்கிடையில் மிக இழிவான செயல்கள் பொது மற்றும் தனிப்பட்ட முறையில் செய்யப்படலாம். ஒரு நபர் மிகவும் அநாகரீகமாக நடந்துக் கொள்வது உதாரணமாக  ஒழுக்க நெறிகளுக்கு எதிராக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

முறையில்லாப் புணர்ச்சி என்றால் என்ன? அதனுடன் இணைக்கப்பட்டுள்ள தண்டனை என்ன?

ப – தண்டனை சட்டத்தின் பிரிவு 364A க்கு ஏற்ப   முறையில்லாப் புணர்ச்சி எனப்படுவது சந்ததியினர் அல்லது வளர்ப்பு பெற்றோர், பேரப் பிள்ளைகள், பாதி இரத்த உறவு சகோதர அல்லது சகோதரியின் இருவருள் ஒருவரின் சந்ததிகளுக்கு இடையில் உடலுறவு  கொள்ளலே ஆகும். இவ்வாறான உறவுகளுக்கிடையே உடலுறவு கொள்பவர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவதோடு அவர்கள் சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகளுக்கு குறையாத மற்றும் 20 வருடங்களுக்கு அதிகமாகாத கடூழிய சிறை தண்டனையாலும் அத்துடன் குற்றப்பணத்தாலும்   தண்டிக்கப்படுவர்.

பாதிக்கப்பட்டவர் சட்டத்தால் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறார்?

ப – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவுகளைக் கொண்ட காவல் நிலையங்கள் எங்களிடம் உள்ளன. பாதிக்கப்பட்ட பெண் ஒரு பெண் அதிகாரியுடன் பேச முடிந்ததற்கு நிம்மதியை உணருவார்.  விசாரணையின் போது கேமராவில் வீடியோ சாட்சியம்  சம்பந்தப்பட்டவர்களை மட்டுமே உள்ளடக்கி இருக்கும்.

ஆண்களுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்    பெண்கள் குறித்தும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த செயல் ஆணும் பெண்ணும் மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதால்   கடினமான சூழ்நிலையாகக் கருதப்படும்.

பாதிக்கப்பட்டவர் உளவியல் அதிர்ச்சியை எதிர்க்கொண்டால், பாதிக்கப்பட்டவருக்கு  பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இழப்பீடு மற்றும் உதவியை வழங்குகிறது.

ஒரு பெண் வழக்குத் தாக்கல்   செய்யக்கூடாது  அல்லது சாட்சியளிக்கக்கூடாது   என்று அச்சுறுத்தப்படலாம், அத்தகைய சந்தர்ப்பத்தில் தண்டனை மிகவும் கடுமையானது மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் சிறப்புக் காரணங்களால் மட்டுமே ஜாமீன் பெற முடியும்.

-சீனத் சாகீர்
(ப்ரோ போனோ செயலாளர் 2020-2021)

மொழிபெயர்த்தது – எம். திவாகரணி  

இலங்கையின் சட்ட மாணவர் சங்கம்என்ற யூடியூப் சேனலில்  முழுமையான கலந்துரையாடல்மூன்று மொழிகளிலும் கிடைக்கிறது.

The Viking

நியாயமான விலையில் கைவினைஞர் பர்கர்கள்

இலங்கை – அமெரிக்க இணைவு பர்கர்களின் சுவாரஸ்யமான மெனுவைத்தூண்டும் பார்வைக்குரிய ஒரு காம்போ. நாங்கள் உட்கொண்டவைகளில் இதோ,

பானங்கள்

குளிர் அழுத்தப்பட்ட சாறுகள் (மிளகாய் – அன்னாசி) LKR 400

இது இனிப்பான கோடைகால பானமாகும். நிறைய இடங்களில் முயற்சி செய்தும் இவர்களின் பானத்தில் உள்ள “அச்சரு-எக்ஸ்யூ” என்ற சுவை மிகவும் நடுநிலையாகவும், பானத்தின் essence நிலையாகவும் காணப்பட்டது.

குளிர் அழுத்தப்பட்ட சாறுகள் (சோர்சாப்) – LKR 400

சோர்சாப் பழத்தின் காட்சி அமைப்பு மற்றும் சுவை பார்ப்பதற்கு சுயவிவரம் இல்லாவிட்டாலும் நேரடியாக பழத்திலிருந்து புளிப்பைக் கரைக்கும் போது அதிலுள்ள கீரிம் தன்மையை வெளிப்படுத்துவதோடு அதன் தன்மையும் பேணப்படுகின்றது.

சாக்லேட் ஷேக் – LKR 450

முதல் பார்வையில், இது ரன்-ஆஃப் மில்க் சாக்லேட் ஷேக் போல் தெரிகிறது. இது ஓரு புடைப்பைக்கொண்ட மேசன் ஜாடியில் பரிமாறப்படுகிறது.(இங்கிலாந்தின் கொடி போல தோற்றமளிக்கும் Mason Jar). எங்கள் உள்ளூரில் கிடைக்கும் சாக்லேட் பிஸ்கட் ஐ குளிர்ந்த பாலில் மூழ்கிய சுவையை நினைவூட்டுகிறது. எந்த Munchies புத்தகத்திலும் இது முழுமையான விருப்பாக அமைகிறது.

ஸ்டாடர்

சிலோன் லோடட் பைரஸ் – (LKR 800)

எனது மதிப்பாய்வின்படி, பெரும்மபாலனோர் மதிப்பாய்வு ஓரு மனதாக இருந்ததோடு, உண்ட சுவையான உணவுகளில் இந்த டிஷ் vikings சமையலறையின் மிகவும் சிறந்த ஒன்றாகும். டிஷ் பொருத்தமான அளவிலான பகுதியைக்கொண்டிருந்தது. மேலும் காரமான special சீஸ் சாஸ் மற்றும் smoked மிளகாய்த்தூள் சவையூட்டலுடன் சுவை சமப்பட்டது.

சிக்கன் கராஜே (LKR 550)

முதலில் கடித்தபோது அமெரிக்க-இலங்கை காம்போ குழப்பமாக இருந்தாலும் ஒரியண்டல் விதமாக முயற்சி செய்தது ஓரு முன்னேற்றத்துக்குரியதாக உள்ளது. மேலும் டிஷ் இன் தன்மையை பார்க்கும்போது மென்மையான இறைச்சியை பரிமாறுவதற்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட BBQ சாஸ் போல் சராசரி தக்காளி சாஸை போல் ஒத்திருந்தது.

மாட்டிறைச்சி சடே (LKR 650)

டிஷ் காட்சி அளிக்கப்பட்ட விதம் பிரமிக்க வைத்தது. இந்த டிஷ் முழுவதுமாக முக்கிய சுவையாக வேர்க்கடலை சாஸ் ஐ கொண்டுள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பார்ப்பதற்கு பிரமிக்க வைத்தாலும் மாட்டிறைச்சி எதிர்பார்த்ததை விட கடுமையானதாகவும் மெல்லியதாகவும் இருந்திருந்தால் மேலும் சுவையை அதிகரித்திருக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகளும், கோல்ஸ்லாவும் மற்றும் மாட்டிறைச்சியுடன் பரிமாறும்போது சிறந்ததாக இருந்தது. மேலும் இந்த டிஷ் இற்கு மதிப்பை அளிக்கிறது.

மெயின்கள்
போடக் ( LKR 1200)

வாத்து பர்கர்கள் சிறந்தது கிடைப்பது மிகவும் அரிது, ஆனால் இந்த இடம் மிகவும் சிறப்பாக வாத்து பர்கர்கள் ஐ செய்கிறது. நன்கு பேக்(Bake) செய்யப்பட்ட பன்கள் மற்றும் இறைச்சி filling முதல் சிறப்பு கறி சாஸ் ஆகியவை ஒரு பரலோக உணர்வை ஏற்படுத்தியது. எப்படியென்றால் ஒரு சுவையான கேக் ஐ கடித்தது போல் இருந்தது.

கொடிய சேவல்(LKR 850)

சிறந்த அமெரிக்க-நாஷ்வின் முறையில் சிக்கன் பர்கர் அதன் முறுமுறுப்பான நன்கு பதப்படுத்தப்பட்ட பாட்டி(patty) காணப்பட்டது. Patty ஐ ஒருவேளை நன்கு fried பண்ணியிருந்தால் அதன் ஒரு சில சுவையை உணரமுடியாததால், கடினமான வெளிப்புறத்தைக்கொண்டிருந்தது.

நை மிஸ் மேக் என் சீஸ் (LKR 550)

மேக்ரோனிக்கு பதிலாக ஆரவாரத்துடன் சமைத்த மேக் என் சீஸ் ஒரு சுவாரஸ்யமான தேர்வு. அதனால் முதல் கடித்தால் நீங்கள் எதிர்பார்ப்பது ஒரு அதீத சுவை ஆனால் நை மிரிஸ் இன் சுவையானது உங்களுக்கு தொண்டையின் அடிப்பகுதியிலே வெளிப்படுத்தும். இந்த டிஷ் மிகவும் தனித்துவமான சுவை மற்றும் முறுமுறுப்பான தன்மைக்கொண்டிருக்கும். அதேபோல் கிரீமி spaghetti பற்றி கூறுவதாயின், விரும்பியது போல அமெரிக்க – இலங்கை முறையில் காணப்பட்டது.

The Hybrid -LKR 1400

ஒரே பர்கரில் இரு உலகத்திலும் சிறந்தது. மெதுவாக பிணைக்கப்பட்ட சமைத்த மாட்டிறைச்சியின் சுவை நிரப்பப்பட்டுள்ளது. Fries மற்றும் fresh காய்கறிகளிலுடன் பரிமாறப்படும் மனம் நிறைந்த ஒரு உணவாகும். கொடுக்கும் பணத்திற்கான மதிப்பை இந்த டிஷ் தருகின்றது. மாட்டிறைச்சி கோழியை விட அதிக இடத்தை எடுத்துக்கொண்டாலும் இரண்டும் நன்றாக சமநிலைப்படுத்துகின்றது

“Not-Really-Into-Meat” பர்கர் (சைவம் LKR 750)

இறைச்சி ஐ விரும்பியவர்களுக்கு முக்கியமாக அவர்களின் அக்கறை ஒரு சைவ பர்கர் ஐ மெனுவில் கண்டுபிடிப்பதாகும். இந்த உணவு மிகவும் அடர்த்தியான பர்கர் மற்றும் அமைப்பில் ஒரு falafel கலவையை ஒத்தத்தன்மையாகக்கொண்டது. இந்த உணவு அதன் கூறுகளுக்கேற்ப சுவையாக இருந்தாலும் ஒரே அனுபவத்தில் மனதிருப்திகரமாக உணவாக இருக்கவில்லை.

வைக்கிங் ஃப்ளூ (LKR 1250)

உணவு காட்சி அளிக்கும் விதமானது கவலை அளிக்கின்றது. பார்க்கும்போது வேலை செய்வதற்கு மிகக் குறைந்த இடத்தைக்கொண்டிருக்கிறது. ஆனால் முடிவடைந்த உணவின் தோற்றம் கவலைக்குரியதாக உள்ளது. டிஷ் ஒரு குறிப்பிடத்தக்க வகையில் தனித்து நிற்கவில்லை என்றாலும் ஒரே நேரத்தில் ஏமாற்றம் அடையவில்லை, கோழி இறைச்சி முழுமையாக பேக்(Bake) செய்யப்பட்டிருந்தது. Tender கோழி இறைச்சியின் ஒரு கிரீமி சீஸ் filling ஐ கொண்டிருந்தது. இந்த டிஷ் அதன் சுவைகளை நன்றாக வைத்திருந்தது.

சுற்றுப்புறம்

மிகவும் நகைச்சுவையான அழகியல் உள்துறை வடிவமைப்பில், எல்லோரும் திரும்பி வருவதற்கு இந்த ஸ்தாபனம் இரண்டு முக்கிய காரணங்களைக் கொண்டிருக்கும் – அவர்களின் வளர்ந்து வரும் மெனு மற்றும் மிகவும் நட்பு, ஆதரவு மற்றும் மரியாதைக்குரிய குழுவினர்!

இளைஞர்கள் அதிகம் விரும்பும் சத்தான சிற்றுண்டிகள் சில..

இன்றைய காலகட்டத்தில் இயந்திரமயமாக்கல் இன் ஊடாக நவீன உலகத்தில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள் தமக்குத் தேவையான ஒரு பீங்கான் ஆகாரத்தை கூட பெற்றுக்கொள்வதில் சோம்பேறியாக காணப்படுகின்றனர் இது அவர்களின் இயல்பா அல்லது மந்தமான நிலையின் அறிகுறியா என்று தெரியவில்லை ஆம் இத்தகைய உணவுகளை பெற்றுக்கொள்வது நேரமின்மையே இதற்கான முக்கிய காரணமாக அமைகின்றது ஆகையால் இவ்வாறான உணவு குறைபாட்டினை தவிர்த்துக்கொள்ள பல சத்தான சிற்றுண்டிகளை இன்றைய கால இளைஞர்கள் நேரத்துக்கு நேரம் எடுத்துக்கொள்கின்றனர்

protein bars

பொதுவாக நாளொன்றில் எமக்கு 3 வேளைகள் கட்டாயம் உணவு கொள்ள வேண்டும் எனினும் அதைத் தாண்டி நமக்கு பசிக்கின்ற சந்தர்ப்ப நேரம்தான் இத்தகைய பசி ஏற்படும் சந்தர்ப்பங்களில் நாம் அருகிலுள் cargills keels போன்ற supermarket களில் இந்த ப்ரோட்டின் பார்ஸ் இணை பெற்றுக்கொள்ளமுடியும் நிச்சயமாக இத்தகைய சிற்றுண்டிகள் உடலுக்கு போசாக்கானதாக அமையும் அதே நேரத்தில் சிறு பசிக்கு உகந்த சிற்றுண்டியாக கருதப்படுகிறது

Hummus and pita chips

10லிருந்து 12 கிராம் வரையிலான புரதச் சத்தினை இந்த சிற்றுண்டியின் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் இந்த சிற்றுண்டி ஆனது எந்த அளவிற்கு புரதச்சத்து மிக்கதோ அதே அளவிற்கு உங்களது சுவை நரம்புகளை வசியப்படுத்தும் தன்மையும் கொண்டது இது சிற்றுண்டியைJah’s Hummus இன்ஸ்டகிரம் பக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம் அதேவேளையில்
Keels, SPAR மற்றும் Arpico Thalawathugoda விழும் பெற்றுக்கொள்ளலாம்

வாழைப்பழம்

நிச்சயமாக இலங்கையர்கள் என்ற ரீதியில் நமது வாழ்வியலில் பின்னிப்பிணைந்த ஒரு பழமாக வலம் வருவது வாழைப்பழம் ஆகும் ஆம் எமது புதுவருட உணவு மேசை தொடக்கம்  விருந்தினர்களின் வீடு வரை இந்த வாழைப்பழம் இடம்பெறுகின்றது
கிட்டத்தட்ட வாழைப்பழத்தின் ஊடாக பொட்டாசியம் சேமிக்கப்படுகிறது மேலும் இந்த பழமானது நார்ச்சத்து உடையது குறிப்பாக ஒரு சுற்றுலாவின் போது நாம் அதிக களைப்படைந்து இருந்தால் 2 வாழைப்பழங்களை உட்கொள்வதன் ஊடாக இழந்த சக்தியை மீண்டும் பெறமுடியும்

Air-popped popcorn

popcorn என்பது ஒரு திரைப்படத்தை கண்டுகளிக்கும் போது அதிக அளவில் உட்கொள்ளும் சிற்றுண்டியாக காணப்பட்டாலும் ஒரு வாகனத்தை ஓட்டும்போது கூட எமது நாவிற்கு popcorn சுவையினை ருசிக்க நாவின் நரம்புகள் ஆசைப்படலாம் அத்தகைய நேரங்களில் அருகிலுள்ள SPAR மற்றும்  Keels போன்ற இடங்களில் பெற்றுக்கொள்ளலாம் மேலும் popcorn அதிக நார்ச்சத்து உடையது

Dry-roasted nuts

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் மனம் கவர்ந்த சிற்றுண்டியாக கருதப்படுவது இந்த நட்ஸ் வகைதான் குறிப்பாக  நட்ஸ் பக்கேஜ் ஒன்றில் பிஸ்தா முந்திரி காய்ந்த பேரிச்சபழம் என பல்வேறு நார்ச்சத்து இரும்புச்சத்து உடைய போசனை பொருட்கள் உள்ளடக்கப் பட்டுள்ளது இத்தகையDry-roasted nuts சிற்றுண்டி யை keels ல் பெற்றுக் கொள்ளலாம்

Hard-boiled eggs

பொதுவாக முட்டை என்று கூறினாலே சத்து என்ற பொருள்படும் அதேபோன்றுதான் அவித்த முட்டையினை உணவாக உட்கொள்வதன் மூலம் 7 கிராம் புரதச் சத்தினை பெற்றுக்கொள்ளமுடியும்

String cheese

String cheese சிறுவர்களுக்காக தயாரிக்கப்பட்டது என்ற எண்ணம் நம் அனைவர் மத்தியிலும் உள்ளது ஆயினும் அனைத்து வயதினரும் இந்த cheeseயை உட்கொள்ளலாம் பொதுவாக spar போன்ற super market ல் பெற்றுக்கொள்ளலாம்

இன்றைய காலகட்டத்தில junk foodsல் மூழ்கிக் கிடக்கும் நமது இளைஞர் சமுதாயம் அதிலிருந்து விடுபட்டு இத்தகைய போசனை மிக்க உணவின் பால் திரும்ப வேண்டும்.

index.php