Blog Page 28

Savour Shangri-La – சேவர் ஷாங்ரி-லா

உணவு வகைகளை எப்போதும் விரும்பி அனுபவித்து உண்பவர்களுக்கும்,உணவு மீது அதீத விரும்பம் கொண்டவர்களுக்கும், தகுந்த வாய்ப்பை இங்கே பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.ஷங்ரி-லாவில் சாப்பிடுவதற்கு சலுகைகள் பல வழங்குகிறார்கள். அதுமட்டுமல்லாது ஷங்ரி-லா என்பது முற்றிலும் புதிய விநியோக தளமாகும். இது ஒரு தனித்துவமான மெனுவைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து விருந்தளிக்கக்கூடியதாகும். அவர்களின் வலைத்தளமான https:// savour.shangri-la.comhttps:// savour.shangri-la.com மூலம் நேரடியாக ஆர்டரை செய்து கொள்ளலாம் மற்றும் பலவிதமான appetisers, மெயின்கள், தின்பண்டங்கள் மற்றும் இனிப்பு வகைகளில் ஒன்றை தேர்வு செய்யலாம். ஆரோக்கியமான உணவு உட்கொள்ளபவர்களை ஈர்க்கும் வகையிலான சாலட் வகைகளும் உள்ளன. மேலும் கிழக்காசிய, இந்திய மற்றும் இலங்கை போன்ற நாட்டினை பிரதிபலிக்கினற ஏராளமான உணவு வகைகள் உள்ளன. இவற்றில் நாங்கள் இலகுவான மெனுவிலிருந்து தனித்துவமான மூன்று உணவு வகைகளை முயற்சித்தோம்.
அவற்றில்,

பிரதான உணவு உட்கொள்வதற்கு முன் உணவு வகைகள்.

காய்கறி ஸ்பிரிங் ரோல்ஸ் 5pcs ( LKR 900 )

காய்கறி ஸ்பிரிங் ரோல்ஸ் இன் காரமான தக்காளி சாஸ் ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு சிறந்த பகல்நேர சிற்றுண்டியாக இதை கருதலாம். இந்த ரோல்ஸ் ஐ பெரும்பாலானவர்கள் முயற்சித்ததோடு சற்றும் எதிர்பார்ப்புக்களுக்கு குறையாமல் மிருதுவான வெளிப்புற crispy, crunch மற்றும் துண்டாக்கப்பட்ட காய்கறிகளால் நிரப்பப்பட்டுள்ளது. ஸ்பிரிங் ரோல்ஸ் உள்ளேயும் வெளியேயும் சூடாக இருக்கும் போது பரிமாறவும் அப்போதுதான் அவற்றின் சுவையை நன்றாக உணரமுடியும்.

மெயின்கள்
முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த மிளகாயுடன் குங் பாவ் சிக்கன் ( LKR 1700)


குங் பாவ் சிக்கன் முட்டை, fried rice மற்றும் ப்ரோக்கோலியுடன் பரிமாறப்படுகிறது. இந்த காம்போ பசி மற்றும் சுவை இரண்டையும் திருப்திகரமாக நிறைவேற்றுகிறது. இந்த stir-fried கோழியில் உப்பு, இனிப்பு, காரம் மற்றும் சீனாவின் சுவையூட்டல் போன்ற அனைத்தையும் எளிமையாக வெளிக்கொண்டு வருகின்றது. முந்திரிப் பருப்புகள், வெங்காயம் மற்றும் மிளகாய் துண்டுகள் crunch ஆக காணப்படுகிறது. அத்துடன் fried rice இருந்தாலும் அதிகமாக முட்டைத்துண்டுகளை காணலாம்.

இனிப்பு வகைகள்

ஐவரி சாக்லேட் மூஸ் ( LKR 600 )


பெயரை கேட்கும்போது கவர்ச்சிகரமாக உள்ளது. இந்த டிஷ் ராஸ்பெர்ரி filling,மூஸ் மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட கேரமல் சாஸ் ஆகியவற்றினால் ஒன்றின் மேல் ஒன்றாக நிரப்பப்பட்டுள்ளது. மூஸ் மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட கேரமல் சாஸ் மிகவும் அடர்த்தியாகவும் கனமாகவும் இருக்கும் ஆனால் ராஸ்பெர்ரி filling காரணமாக இனிப்பை குறைத்து சரியான சமநிலையை தருகின்றது.

இது தவிர ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, உணவின் அனைத்து பகுதிகளும் தனித்தனியாக அலுமினியத் தாள்கள், கொள்கலன்கள் மற்றும் பிளாஸ்டிக் கோப்பைகளில் தொகுக்கப்பட்டுள்ளன . இதனால் உணவு உங்கள் வீட்டு வாசலுக்கு வரும்போது சூடாக இருக்கும் மற்றும் உணவை உண்பதற்கு இலகுவாக இருக்கும்.

புலமைச் சொத்துச் சட்டம்.

இன்று இலத்திரனியல் உலகமானது எமது வாழ்க்கையில் முக்கியமானதோர் பங்கினை வகித்து வருகின்றது. புலமைச் சொத்துச் சட்டமானது, எங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் இந்த உலகத்தை வழிப்படுத்த உதவுகின்ற பல சட்டக்  கட்டமைப்புகளில் ஒன்றாகும்.  சட்ட ஒளியானது மும்மொழியிலான சட்டக் கலந்துரையாடல்களின் ஒர் தொடராகும். “Ignorantia legis neminem excusat” எனும் இலத்தீன் சொற்தொடரானது  சட்டத்தினை அறிந்திராமை ஒரு சாக்குப்போக்கு அல்ல என்பதனைக் குறிக்கின்றது.  இலங்கை சட்ட மாணவர்கள் சங்கத்தின் ப்ரோ போனோ குழுவானது சட்டத்தினை இலகுபடுத்துவதன் மூலம் அவற்றை பொது மக்கள் விளங்கிக்  கொள்வதற்கான முயற்சியினை முன்னெடுத்து வருகின்றது. மூன்றாவது கலந்துரையாடலில், இந்நிகழ்ச்சியானது, ‘புலமைச் சட்டம்’ மீது  கவனத்தைச்  செலுத்தியது.

இக்கலந்துரையாடலானது புலமைச் சொத்துச் சட்டத்துறை தொடர்பாக சட்டத்தரணிகளாக பணி புரியும்: நீலகண்டன் அண்ட் நீலகண்டன் எனும் சட்ட நிறுவனத்தில் சுயாதீன சட்டத்தரணியாகக் கடமையாற்றும் மற்றும் வணிகச் சட்டத்தின் விருத்திக்கான நிறுவனத்தின் வருகைதரு விரிவுரையாளராக சேவையாற்றும்  மற்றும் LL.B. (Colombo), LL.M. (Singapore), MCIArb (UK), ACMA (UK), CGMA முதலான கல்வித்தகைமைகளையுடைய திரு.திஸ்யா வீரகொட மற்றும்  B.Sc (JPura) B.Sc (OUSL), LLM ( IP law) முதலான கல்வித்தகைமைகளை உடைய  சைபர் சட்டத்திற்கான பிளைமவுத் பல்கலைக்கழகம் மற்றும் IJTS இன் வருகைதரு விரிவுரையாளரும் சிலோன் சேம்பர் ஒப் கொமர்சின் சிரேஷ்ட சட்ட ஆலோசகரும் இலங்கை புலமைச் சொத்துச் சட்ட நிறுவனத்தின் தலைவருமான செல்வி. அபராஜிதா ஆரியதாச என்போரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

புலமைச் சொத்துச் சட்டம் என்றால் என்ன?

சொத்து எனும் விடயப்பொருளானது உங்களால் சொந்தமாக்கிக் கொள்ளக் கூடிய மற்றும் நீங்கள் வைத்துக்கொள்ளக்கூடிய பொருட்களாகும். இவை நீங்கள் காணக் கூடிய, தொடக்கூடிய மற்றும் உணரக்கூடிய தன்மையினை உடைய தொட்டுணரமுடியாதவைகளையும் கட்புலனாகாதவைகளால் பெறுமதி நிர்ணயிக்கப்படும் தொட்டுணரக்கூடியவைகளையும் உள்ளடக்கும்.  கோகோ கோலா என்ற பெயர் உலகில் நன்கு அறியப்பட்ட உற்பத்திப்  பொருளாகும். இதன் பெறுமதி மாத்திரம் இவற்றை நிர்ணயிப்பதில்லை. குறித்த அந்த வர்த்தக நாமத்தின் மீதுள்ள விசுவாசமும் இதனை நிர்ணயிக்கின்றது. வர்த்தக நாமம் ஒரு கட்டிபுலனாகாத சொத்து. புகைப்படங்கள் புலமைப் படைப்புகள் என்பதுடன் அதில் இருந்து பெறப்படும்  எந்தவொரு நிதிநலனும் அப்புகைப்படத்தை எடுத்த நபருக்கே சொந்தமானது. ஒரு எழுத்தாளர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர் அவர்களின் புத்தி, அறிவு, திறன் மற்றும் இயலுமையைப் பயன்படுத்தி ஒன்றை உருவாக்குகிறார்கள். நீங்கள் உருவாக்குவது பணமாக்கப்படலாம் என்பதுடன் இவை கட்புலனாகாத சொத்துகளாகக் கருதப்படுகின்றன.

சட்டத்தில் நாம் 5 வெவ்வேறு வகையான புலமைச் சொத்துக்களை இனங்காண்கிறோம் :

  1. பதிப்புரிமை
  2. வர்த்தக முத்திரை
  3. காப்புரிமை
  4. தொழில்துறை வடிவமைப்புகள்
  5. ரகசிய தகவல் மற்றும் வர்த்தக ரகசியங்கள்

புலமைச் சொத்துச் சட்டம் இலக்கிய, கலை மற்றும் அறிவியல் பணிகளைப் பாதுகாக்கிறது. மக்கள் அவர்கள் உருவாக்கியவற்றிலிருந்து பயனடையலாம். புலமைச் சொத்து இரண்டு பிரிவுகளாகப் பிரிகின்றது; ஒரு பிரிவுவானது தொழிற்துறைத் திட்டங்கள், விஞ்ஞானத் தாவரங்கள், காப்புரிமைகள், வர்த்தக நாமங்கள் மற்றும் வர்த்தக இலச்சினைகள் (தொழில்துறைச் சொத்து) போன்ற வர்த்தகத்துடன் தொடர்புடையவை. மற்றயப் பிரிவானது இலக்கியப் படைப்புகள், கலை மற்றும் அறிவியல் படைப்புகள், நாட்டுப்புறக் கதைகள், கணினி நிரல்கள், கட்டடக்கலைத் திட்டங்கள் மற்றும் வரைபடங்கள் போன்ற வெளியீட்டு உரிமை கொண்ட புலமைச்சார்  சொத்துக்களை உள்ளடக்கியதாகும். இவற்றுடன் தொடர்புடைய உரிமைகளும் உள்ளன; இவை நடிகர்களின் உரிமைகள், ஒளிபரப்பாளர்களின் உரிமைகள், ஒலி பொறியாளர்களின் உரிமைகள் போன்றவையாகும்.

புலமைச் சொத்துச் சட்டத்தின் முக்கியத்துவம் என்ன?

கண்டுபிடிப்பாளர்களுக்கும் நுகர்வோருக்கும் பொருளாதார உரிமைகளை வழங்குவதன் மூலமும் உண்மையான தயாரிப்புகளை கொள்வனவு செய்ய முடியும் என்பதை உறுதி செய்வதன் மூலமும் இந்த சட்டம் புதிய படைப்புகளைப் பாதுகாக்கிறது. புலமைச் சொத்துச் சட்டத்தினால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். ஒரு நாட்டின் செல்வத்தை நீங்கள் மதிப்பிடக்கூடிய ஒரு வழி, அவர்களிடம் உள்ள காப்புரிமைகளின் எண்ணிக்கையினால் ஆகும்.

புலமைச் சொத்தின் 5 வெவ்வேறு வகுப்புகளைப் பற்றி விரிவாகக் கூற முடியுமா?

பதிப்புரிமை – சட்டத்தில் நாம் மனதின் படைப்புகளை நேரடி படைப்புகள், கலை படைப்புகள் அல்லது அறிவியல் படைப்புகள் என்று கருதுகின்றோம். இலக்கியம், புகைப்படம், ஓவியங்கள், சிற்பம் அனைத்தும் பதிப்புரிமை பெறக்கூடிய படைப்புகளாக இருக்கும். தேசிய புலமைச் சொத்துக்கள் சட்டத்தின் பிரிவு 5 மற்றும் 6 ஆகியவை பதிப்புரிமை பெறக்கூடிய படைப்புகளை அங்கீகரிக்கின்றன. இந்தச் சட்டத்தின் பிரிவு 9, படைப்புகளை உருவாக்கியவரின் பொருளாதார உரிமைகளைப் பற்றிக் கூறுகிறது. இந்த பொருளாதார உரிமைகள் மற்றொரு நபருக்கு விற்கப்படலாம். பதிப்புரிமை வாழ்நாள் முழுவதுடன் 70 ஆண்டுகாலப்பகுதின் பின்னர் நிறைவடைகின்றது. மேலும் அதன் பின்னர் அது பொதுக் களத்திற்கு வரும்.

வர்த்தக முத்திரைகள் – இலச்சினைகள் பெறுமதி உடையதாக இருக்கும் பட்சத்தில் வர்த்தக முத்திரையாக அதனைப் பதிவு செய்யலாம். ஒரு இலச்சினை பதிவு செய்யப்பட்டிருந்தாலும் பதிவு செய்யப்படாவிட்டாலும், அதில் உரிமைகளும் இணைக்கப்பட்டுள்ளன. பதிவாளரின் அலுவலகத்திற்கு இலச்சினையை பதிவு செய்வதற்கு நீங்கள் பணம் செலுத்தும் வரை அவ்வர்த்தக முத்திரை அங்கீகரிக்கப்படும். ஒரு பதிவு காலாவதியாகும் போது எந்த உரிமைகளும் அதற்கில்லை என்பது அதன் அர்த்தமல்ல. பதிவு செய்யப்படாத இலச்சினைகளுக்கும் பாதுகாப்பு இருக்கும். அந்த குறிப்பிட்ட இலச்சினையை அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்த முடியாது. தேசிய புலமைச் சொத்துக்கள் தொடர்பாக வர்த்தக இலச்சினைகளுக்கான பதிவுப் புத்தகம் உள்ளது. அதில்  நீங்கள் முரண்பாடான அல்லது ஒத்த இலச்சினைகள் எவையெனும் உள்ளதா என இனங்காணலாம்.

காப்புரிமைகள் – இது புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றியது. புதுமை இருக்க வேண்டும் என்பதுடன் சிக்கலை தீர்க்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். காப்புரிமை பதிவு செய்யப்பட்டவுடன் அவர்களுக்கு 20 ஆண்டு காலம் கிடைக்கும். அத்தகைய காலம் காலாவதியான பிறகு, அது பொது களத்திற்கு வரும்.

தொழிற்துறை வடிவமைப்பு – இதில் உரிமைகள் மற்றும் நிபந்தனைகள் காப்புரிமைக்குரியவற்றை விட சற்றுக் குறைவானவையாக இருக்கும்.

புவியியல் குறிகாட்டிகள் – பாஸ்மதி அரிசி அல்லது ஷம்பேன் போன்றவை ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திலிருந்து வருகின்றன. கென்யாவிலிருந்து தேநீர் தயாரிக்கும் ஒருவர் அதை இலங்கை தேநீர் என்று கூற முடியாது. ஆஸ்திரேலியாவில் ஸ்பார்க்லிங் வயின் தயாரிக்கும் ஒருவர் அதனை ஷம்பேன் என்று கூற முடியாது.

ரகசிய தகவல் மற்றும் வர்த்தக ரகசியங்கள் – இதற்கான சிறந்த உதாரணம் கோகோ கோலா . இதன் செய்முறை எவருக்கும்தெரியாது. இது ஒரு வர்த்தக ரகசியம். அந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் அந்த ரகசியத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது உணவுத் தொழில்களுக்கு மட்டுமல்லாது வேறு பல தொழில்களுக்கும் பொருந்தக்கூடிய விடயமாகும்.

ஒரு நபர் தனது சொந்த படைப்பு அல்லது கண்டுபிடிப்பை பதிவு செய்ய விரும்பினால், அதற்காக பின்பற்றப்பட வேண்டிய செயன்முறை என்ன?

பாதுகாப்புக்கு 2 முறைகள் உள்ளன. ஒன்று கடுமையான தன்மை குறைந்த  “தொழிற்துறை வடிவமைப்புத் திட்டம்’, மற்றையது மிகவும் கடுமையான “காப்புரிமைத் திட்டம்”. அவை இரண்டு வெவ்வேறு பிரிவுகளுக்குகுட்டப்பட்டவை என்பதுடன் அவைகளுக்கான நிபந்தனைகளும்  வேறுபட்டவை. நீங்கள் புலமைச் சொத்துச் சட்டத்தைப் நோக்கும் போது, தொழிற்துறை வடிவமைப்புகள் அத்தியாயம் 3 இன் கீழ் உள்ளன, மேலும் அவற்றால் ஏதோவொரு புதுமை இருப்பதையும், அதில் ஒரு பயன்பாடு இருப்பதையும் மட்டுமே நிரூபிக்கப்பட  வேண்டும். நீங்கள் தேசிய புலமைச்  சொத்து காரியாலயத்திற்குச் செல்ல வேண்டும். இதில் 2 வகையான பயன்பாடுகள் உள்ளன. ஒன்று தொழிற்துறை வடிவமைப்பு என்பதுடன் மற்றையது காப்புரிமை ஆகும். உங்களுக்கு எது பொருந்தும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். காப்புரிமையைப் பொறுத்தவரையில், உங்கள் உரிமைக்கோரலை நீங்கள் கூற வேண்டும். ஏனென்றால் விடயங்கள் எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றன என்பதற்கான முழு வெளிப்பாட்டை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒருவருக்கு இதற்காக வழக்கறிஞர் ஒருவரின் உதவி தேவையா அல்லது அதை அவர் சொந்தமாக்கிக் கொள்ள முடியுமா?

காப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு உங்களுக்கு ஒரு காப்புரிமை வரைவுனரின் சேவைகள் தேவைப்படும். இலங்கையில் அவர்கள் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளைப் பார்த்தால் அவை தனிச்சிறப்பு வாய்ந்த வேலைகளாயுள்ளன.

புலமைச் சட்டத்தின் கீழ் எழுத்துப்பூர்வ வேலை தொடர்பான  திருட்டு பற்றி   கூறப்பட்டுள்ளதா?

இது என் கருத்தில் ஒரு நெறிமுறை உரிமை ஆகும். கணிசமான அளவு தகவல்கள் பிரதிசெய்யப்பட்டு நியாயமற்ற போட்டிக்கான சந்தர்ப்பம் உருவாகி இருந்தால், அது புலமைச் சொத்துச் சட்டங்களை மீறும் செயலாகும். அசல் எழுத்தாளரின் பெயர் குறிப்பிடப்படாவிட்டால் அது ஒரு திருட்டுக்கு காரணமாக இருக்கலாம்.

இசையைப் பொறுத்தவரை, பழைய பாடலின் வெவ்வேறு பதிப்புகளைக் காண்கிறோம். வரவிருக்கும் இசைக்கலைஞர்கள் தங்கள் சொந்த பாடலின் பதிப்பை எவ்வாறு உருவாக்க முடியும், அவ்வாறு செய்யும்போது அவர்கள் மற்றொருவரின் உரிமைகளை மீறுவார்களா?

நீங்கள் ஒரு பாடலை மீண்டும் உருவாக்குகிறீர்கள் என்றால், அது புலமைச் சொத்துச் சட்டத்தில் பிரிவு .9 இன் பொருளாதார உரிமைகளின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாய் இருக்கும். பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளரின் அனுமதி உங்களுக்கு தேவைப்படும்.

மாணிக்கம் மற்றும் நகைத் துறையில் புலமைச் சொத்துச் சட்டத்திற்கு பங்களிப்பு இருக்கிறதா?

நிச்சயமாக. இது பதிப்புரிமைச் சட்டத்தின் எல்லா விடயங்களுக்குள்ளும் அடங்கும்.

பொருட்களை வடிவமைத்தல் பற்றி நோக்கும் போது A-தர வகை மற்றும்  புலமைச் சொத்து உரிமைகளை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்க முடியுமா?

சில நேரங்களில் A-தரம்  அல்லது B-தரம் கொண்ட பைகள் பிரதிகள் அல்ல என்பதுடன் அவை அசல்களாய் இருப்பதுடன்  சில காரணங்களுக்காக உண்மையான உரிமையாளர் அதனை நிராகரிக்கலாம். இவை சந்தையைச்  சென்றடைகின்றன. இது ஒரு அசல் தயாரிப்பு. எனினும் சந்தைக்கு அவை வந்திருப்பது அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளூடாக அல்ல. இது க்ரே மார்க்கட் இறக்குமதி என்று அழைக்கப்படுகிறது.

உண்மையான வர்த்தக முத்திரையின் உரிமையாளர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். க்ரே மார்க்கட்டில் இருந்து இறக்குமதியை நிறுத்த முடியுமா? இல்லை, ஏனெனில் இது உண்மையான அசல் தயாரிப்பு. முகவர்களுடன் பிரத்தியேக பிராந்திய ஒப்பந்தங்கள் இல்லையென்றால், அந்த தயாரிப்புகள் சந்தையில் வருவதைத் தடுப்பது சற்று கடினம்.

கள்ளத் தயாரிப்புக்கு இதிலிருந்து வேறுபட்டது. இது ஒரே மாதிரியான பொருட்களாகத் தோன்றலாம் ஆனால் அது அசல் பொருட்டுகள் அல்ல. கள்ள நோட்டுகள் சட்டவிரோதமானவை.

இன்ஸ்டாகிராமில், மக்கள் இலங்கையில் தரம் வாய்ந்த  பொருட்களின் பிரதிகளை விற்பனை செய்வதைக் காண்கிறோம். அசல் பொருளின் விலையில் பிரதிகளை விற்க முடியுமா? அசல் விலையில் பிரதி வாங்கும் நுகர்வோருக்கு சட்ட ரீதியான நிவாரணம் உண்டா?

உள்ளூர் முகவர் இருந்தால், நீங்கள் அதற்கெதிராக முறைப்பாடு செய்யலாம்.

புலமைச் சொத்துச் சட்டத்தை மீறுவது குற்றவியல் பொறுப்புக்கு உட்பட்டதா?

சில நேரங்களில், ஆம். வர்த்தக முத்திரையை மீறுவது மிகவும் பொதுவான குற்றங்களில் ஒன்றாகும். புலமைச் சொத்து மீறல் ஒரு சிவில் மற்றும் குற்றவியல் பொறுப்புக்கு வழிவகுக்கும். எடுத்துக்காட்டு – நான் இயற்றிய  பாடலை யாராவது பிரதிசெய்து அதை விற்காமல் பணம் சம்பாதித்தால், இந்த குறுந்தகடுகளை அழிக்கவும், தடை உத்தரவைப் பெறவும் நான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செல்லலாம்.

புலமை சொத்துச் சட்டத்தை மீறுவதற்கான தீர்வுகள் யாவை?

முதலில் எங்கள் உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். அடுத்து நாம் ஒரு குற்றவியல் மற்றும் சிவில் நடவடிக்கையை தாக்கல் செய்யலாம். உங்கள் உரிமைகளை மீறிய நபரை நீங்கள் கைது செய்யலாம், தடை உத்தரவைப் பெறலாம் அல்லது சேதங்களைப் பெறலாம்.

உரிமையாளருக்கு உரிமைகளை கூறாமல் யாராவது பதிப்புரிமை பெற்ற படத்தைப் பயன்படுத்தினால் எவ்வாறான  சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்?

பதிப்புரிமைச் சட்டம் கூறுகின்ற படி, படைப்பானது அற்குரிய நன்மதிப்பின் நிமித்தம் கலைத் தகுதியைப் பொருட்படுத்தாமல் அது பாதுகாக்கப்படுகிறது. நீங்கள் புகைப்படம் எடுக்கும் தருணம், அது பாதுகாக்கப்படுகிறது.

அந்த நபரின் அனுமதியின்றி ஒரு சுய உருவப்படம் பயன்படுத்தப்பட்டால், அந்த நபர் புலமைச் சட்டத்தின் கீழ் அத்ற்கெதிராக  நடவடிக்கையொன்றை எடுக்க முடியுமா?

ஓதற்கு இரு பக்கங்கள்  உள்ளன. புகைப்படக்காரர் என் சார்பாக ஒரு புகைப்படம் எடுத்திருந்தால், நான் பதிப்புரிமை உரிமையாளராக இருப்பேன். அதன் இரண்டாவது பக்கத்தினை பொறுத்தவரையில் தனியுரிமையின் ஒரு கூறு அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் சுயவிவரப் படத்தை யாரும் எடுத்து விளம்பரத்திற்கு பயன்படுத்த முடியாது. இதற்கு படத்தில் உள்ள நபரின் அனுமதி உங்களுக்குத் தேவை.

மோனாலிசாவின் உருவப்படம் போன்ற படைப்பினை போன்ற பழங்கால கலைப் படைப்பை மீது வர்ணம் பூசவும் அதிலிருந்து லாபம் பெறவும் ஒருவரால் முடியுமா?

மோனாலிசா என்பது டா வின்சியின் உருவாக்கம் என்பதுடன் ஓவியர் நீண்ட காலத்திற்கு முன்பே இறந்துவிட்டதால் அதன் பதிப்புரிமை பாதுகாப்பு ஆயுட்காலம் காலாவதியானது. அது பொது களத்தின் ஒரு பகுதியாக மாறும். எனவே அதை வரைவது ஒரு பிரச்சனையாக இருக்காது. ஆனால் நீங்கள் ஒரு புதிய ஓவியத்தை எடுத்தால், பதிப்புரிமை இன்னும் செயலில் உள்ளது.

புலமைச் சொத்துப் பாதுகாப்புக்கு கால அவகாசம் உள்ளதா?

பொதுவாக வெளிப்பாடுகலயின், ஒரு எழுத்தாளருக்கு அது வாழ்நாளோடு 70 ஆண்டு கலப்பகுதிகள் சேர்ந்த கால எல்லை பொருந்தும். வர்த்தக முத்திரைகள் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் வரம்பற்ற காலத்திற்கு புதுப்பிக்கப்பட வேண்டும்.

Batman இலங்கையனாக இருந்திருந்தால்….

செப்டம்பர் 17,  நகைச்சுவையோடு வாழ்கின்ற, நகைச்சுவையை சுவாசிக்கின்ற மற்றும் நகைச்சுவை உலகத்தில் இருக்கிறவர்களுக்கு ஒரு மிக முக்கியமான தினமாகும். இந்த தினமானது மிகவும் பிரசித்தி பெற்ற DC என்டேர்டைன்மெண்ட் என்ற நிறுவனத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட batman day என்ற தினமாகும். இதற்கு சேர்ந்ததாக (dark night ) என்ற தினமும் காணப்படுகின்றது.

எமது ஞாபகங்களை மீட்டிப் பார்க்கும் போது இந்த வருடம் batman day ஆனது ஒரு மூன்றாவது நிகழ்வாகவும். இந்த batman day ஆனது பிரசித்தி அடைந்ததற்கு பிறகு, இந்த மகானினுடைய 75 வது ஞாபகர்த்தத்திற்காக தான் இந்த தினம் கொண்டாடப்படுகின்றது. இதனைக் கொண்டாடுவதற்காக புத்தக விற்பனையாளர்கள், அதே போல புத்தக நிலையங்கள் , பாடசாலைகள் , வாசிகசாலைகள் எல்லாவற்றையும் சேர்த்து ஒருங்கிணைந்து DC என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தால் மகிழ்வூட்டக்கூடிய , வியக்கத்தகுந்த மாதிரியான நிகழ்ச்சிகளை அல்லது நிகழ்வுகளை ஒருங்கிணைப்பர். அதாவது Caped crusader என்ற நபருக்காக, அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்து செய்வர். இந்த நிகழ்வுகளில் அவர்கள் இலவசமாக நகைச்சுவைப் புத்தகங்களை வழங்குதல், திறமையான பாடல் நிகழ்ச்சிகள், அதே போல் எவராலும் தவிர்க்க முடியாத செயல்களை எல்லாரும் கட்டாயமாக செய்தல், batman உடன் எடுக்கின்ற selfies போன்ற நிகழ்வுகளை இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இணைத்துக் கொண்டார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி நடக்கின்ற அதிஷ்டமான நாடுகளில் பார்க்கும் போது இந்த அனுபவத்தை கொண்டாடுகின்ற நாடுகளாக ஜெர்மன் , இஸ்ரேல் , ஜப்பான் , மெக்ஸிகோ , பெரு , தென் கொரியா , அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளை குறிப்பிடலாம். ஆனாலும் இலங்கை இந்த பட்டியலில் இல்லாதது கவலைக்கிடமான ஒன்றாக இருக்கின்றது .

untitled-1

அதே மாதிரி இந்த batman day இந்த பிரசித்தியைப் பார்க்கும் போது எனக்கொரு எண்ணம் தோன்றுகிறது. அது என்னவெனில் இந்த batman ஏன் ஒரு ஸ்ரீலங்கன் ஆக இருந்தால் என்ன என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.

1) මම බැට්මැන් ( மம Batman / நான் Batman )

இந்த batman எப்படி ஆரம்பமானதெனில் I am batman என்று தான் ஆரம்பம் ஆகும். இதை batman ஒரு சிங்களவராக ஒரு இலங்கையனாக இருந்தால் அது கட்டாயமாக எவ்வாறு ஆரம்பமாகுமெனில் ” මම බැට්මැන්” என்று தான் ஆரம்பமாகும். இலங்கையில் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் படங்கள் பார்த்திருக்கின்றோம். இது அவ்வளவு நகைச்சுவையாக இருந்தது. அதே மாதிரி நான் ஆசைப்பட்ட batman ஆனது ” මම බැට්මැන්” என்று சிங்களத்தால் சொல்வதைத் தான் மிகவும் விரும்புகிறேன்.

2) Batman ஆக நடிக்க சாத்தியமான நடிகர்கள்

அதாவது batman ஆக நடிப்பதற்காக நடிகன், நடிகைகளை நாம் பார்க்கும் போது இலங்கையில் நிறைய நடிகர், நடிகைகள் இருக்கிறார்கள். அதே போல் பார்க்கும் போது இந்த நடிகர்களில் யார் இந்த role ஐ நடிக்க பொருத்தமானவர் என்று யோசிக்கும் போது என் நினைவுக்கு வருவது  யார் எனில் Roshan Ranawana, Ranjan Ramanayake, Hemal Ranasinghe and Saranga Disasekara. ஆகும் .

1) ரொஷான் ரணவனவின் உயரம், திரட்சியான தசைநார் உடலமைப்பு இந்த இடத்துக்கு நன்றாக பொருந்தும். அவரது நடிப்புக்கு வரும்போது அவர் சிறந்த நாடகவாதி என்று நான் நினைக்கவில்லை, அது உண்மையில் பேட்மேனாக இருப்பதற்கு ஆதரவாக செயல்படும். மேலும், அவரது தோற்றம் உண்மையில் மிகவும் கண்ணியமானது, இது அவரை பேட்மேனாக அழைத்துச் செல்லும்.

2) ஹேமல் ரணசிங்க, நல்ல உடலமைப்பு, நல்ல தோற்றம், அவருடைய நடிப்பும் மோசமில்லை. ஹம். உண்மையில் பாத்திரத்திற்கு மோசமான அளவு பொருத்தமானதாக இல்லை. அவர் மொடல் மற்றும் தனிப்பட்ட முறையில், அவர் ஒரு சூட்டில் (ப்ரூஸ் வெய்னைப் போலவே) சூப்பர் கிளாசியாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அத்தோடு மறக்க வேண்டாம், அவர் ஒரு நடனக் கலைஞரும் கூட. இந்த விஷயத்தில் அவருக்காக ஏன் வேலை செய்கிறேன் என்பதை நான் பின்னர் விளக்குகிறேன்.

3) ரஞ்சன் ராமநாயக்க. நேர்மையாக, நான் பெரிய ரசிகன் அல்ல. ஆனால் உண்மையில் , நான் பல சிங்கள திரைப்படங்களை பார்ப்பதில்லை. எனவே அவர் அந்தளவு நடிப்பதை நான் பார்த்ததில்லை. இருப்பினும், நான் பார்த்தது. பதிவுக்காக (வான் ஷாட் வான்) என்ற திரைப்படத்தை நான் பார்த்தேன். பிறகு நான் நிறைய சிரித்தேன் என்றும் சொல்லலாம். அவரது நடன நகர்வுகளையும் நான் பார்த்திருக்கிறேன், அவர்கள் oh – so ஸ்ரீலங்கா ஆகும்.

4) கடைசியாக, குறைந்தது அது நம்மை சாரங்க திசசேகரவுடன் விட்டுச்செல்கிறது. அவருக்கு நன்றாக நடனமாட முடியும், மேலும் அவரால் நடிக்கவும் முடியும், ஆனால் அவர் பேட்மேனுக்கு மிகவும் பொருத்தமான ஒரு நடிகராக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

picsart_09-24-11-00-59

3) ஒவ்வொரு பேட்மேனுக்கும் ஒரு கெட்வுமன்.
செலினா கைல். இதயங்களை நொறுக்கும் வகையில் நடிப்பவர். பேட்மேனாக இருக்கக்கூடிய நடிகர்களைப் போலவே, கேட்வுமனாக நடிக்கும் நடிகைகளும், ஜாக்குலின் பெர்னாண்டஸ், பூஜா உமாஷங்கர், அனார்கலி அர்காஷா மற்றும் யுரேனி நோஷிகா ஆகியோராக இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

picsart_09-24-11-03-54

4)போக்குவரத்து

பேட்மேனில் பெரும்பாலான குற்றங்கள் கோதம் நகரத்தில் நடப்பதைப் பார்க்கும்போது, இலங்கையில் கோதம் நகரம் கொழும்பாக இருந்து, மேலும் பேட்மேனின் சவாரி எவ்வளவு ஆடம்பரமான மற்றும் மேம்படுத்தப்பட்டதாக இருந்தாலும், பேட்-மொபைல் ஒருபோதும் கொழும்பின் அசைக்க முடியாத போக்குவரத்திலிருந்து தப்பிக்க முடியாது.

5) நடன அளவு

பெட்மேன் நடனம்; கேப் சுற்றிலும், கேட்வுமனுடன் சிரித்துக் கொண்டே விளையாடும்போதும் பின்னணியில் உள்ள நிறைய பொதுமக்கள் பைலா பாடலுக்கு நகருவார்கள். ஆமாம், பேட்மேன் இலங்கையராக இருந்தால், ஹேமல் ரணசிங்க சரியானவராக இருப்பார்.

6) ஆல்ஃபிரட் தி பட்லர்

ஆல்ஃபிரட் பென்னிவொர்த் இல்லாமல், பேட்மேன் ஒருபோதும் பிரசித்தி பெற்றிருக்க மாட்டார். அவர் வழக்கமாக கிளாசிக் டெயில்கோட் அல்லது சூட் (டிவி தொடர்களில், கோதம் போன்றது) விளையாடுகிறார். சரி, பேட்மேன் இலங்கையராக இருந்தால், ஒரு ஆல்ஃபிரட் ஒரு சரோங் மற்றும் வெள்ளை குறுகிய சட்டை அணிந்திருப்பார். என்று எதிர்பார்க்கலாம்.

alonzo_fields_-_white_house_butler

7) நகைச்சுவையாளர்

டி.சி யுனிவர்ஸில் மிகவும் பயங்கரமான, வெறித்தனமான வில்லன்களில் ஒருவரான ஜோக்கர் பேட்மேனிலிருந்து சூப்பர்மேன் வரை அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி, அனைவரையும் பிடித்துக் கொண்ட ஒரு பாத்திரம். ஆனால், இந்த கட்டுரையின் பொருட்டு, ஜோக்கர் இலங்கையாக இருந்தால், அவரது கதாபாத்திரத்தில் நான் நடிப்பதைக் காணமுடியுமான நபர் பாண்டு சமரசிங்க ஆகும்.

thumb190_bandu_02

இலங்கையில் பிச்சைக்காரர்களின் உலகம்.

சிவாஜி திரைப்படத்தில் அமெரிக்காவில் இருந்து வரும் ரஜினி தனது ஊரினை பார்த்து வியந்து எல்லாம் மாறிவிட்டது, எனினும் இந்த நாட்டைவிட்டு பிச்சை கேட்கும் பரிதாப நிலை இன்னும் போகவில்லை என்று கூறுவார். அதுபோல இன்றைய காலகட்டத்தில் பிச்சைக்காரர்களின் உலகம் அதாவது அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள் என்ற கேள்வியை சற்று ஆராய எண்ணினோம்.

ஆம். “யாசகம் கேட்பவன் குதிரை மீது ஏறி வந்து கேட்டாலும், அவனுக்குக் கொடுங்கள்” என்பதும், “மேற்கை (அதாவது கொடுக்கும் கை),                         கீழ்க்கையை (வாங்கும் கையை)விடச் சிறந்தது” என்பதெல்லாம் வேதங்களின் உபதேசம்.

இப்போதெல்லாம், நமது நாட்டில் குடிகொண்டுள்ள பிச்சைக்காரர்கள் பின்பற்றும் Strategy நம்மை சற்று சிந்தித்துப் பார்க்க வைக்கின்றது. நல்ல உடல் வலிமையுடன் இருக்கும் எத்தனையோ பேர் நம் வீடுகளுக்கு வந்து பிச்சை கேட்பதைக் காணும்போது, ‘இது  ஒரு business ‘ என்று எண்ணத் தோன்றுகிறது.

முன்னைய காலங்களில் பிச்சைக்காரர்கள் தனித்தனியாக வருவார்கள். ஆனால், இப்போது மூன்று நான்கு பேர் ஒன்றாக இணைந்து வருகிறார்கள். அவர்கள் உறவினர்கள் தான் என்ற எண்ணம் நமக்குத் தோன்றும். ஆனால் அது உண்மைக்கு புறம்பானது. எங்கிருந்தெல்லாமோ வந்து, இங்குவந்து இணைந்து தொழில் புரிபவர்கள் என்று தான் கூற வேண்டும் . அதேவேளையில் மூவர் அல்லது நான்கு பேர் ஒரே நேரத்தில் , எதிர் வீடு, அடுத்த வீடு, அதற்கு எதிர்த்த நமது பக்கத்து வீடு ஆகியவற்றின் கதவைத் தட்டுகின்றார்கள். அத்தனை வீட்டிலிருந்தும் பணம் வரும்போது, “நாங்கள் மூனு பேர் அல்லது நாலு பேர்” என்கிறார்கள். நாலு பேர் சேர்ந்து வசூலித்த பணத்தை வாங்கிக்கொண்டு, அவர்களுக்குள் பிரித்துக் கொள்கிறார்கள்.

இன்னும் சில பிச்சைக்காரர்கள், நமக்குக் கடன் கொடுத்த கடன்காரர்கள் போல் நம் வீட்டுக் கதவை உடைக்கிறார்கள்! யாரோ எவரோ என்று அவசரமாக வந்து கதவைத் திறந்து பார்த்தால், நிற்பவர் பிச்சைக்காரர்! வீட்டுக்காரரின் முகத்தில் கோபம் தான் கொப்பளிக்கிறது; எனினும் பிச்சைக்காரர் பல்லை இளிக்கிறார்கள். இத்தைகய நேரத்தில் நமது mind voiceஇல் பல வார்த்தைகள் ஓடிக்கொண்டிருக்கும். மேலும் ஏன் பிச்சைக்காரர்களுக்கு இத்தகைய கர்வம் காணப்படுகின்றது என்ற கேள்வி நெடுங்காலமாக எனது மனதில் உலாவிக் கொண்டே இருந்தது. இதனை பற்றி ஆராயும்போது இந்தியாவில் அசாம் மாநிலத்தில் பிச்சைக்காரர் ஒருவருக்கு வருமான வரி செலுத்த தவறியதற்காக அவரது சொத்தினை மதிப்பீடு செய்து 75 இலட்சம் இந்திய ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த தகவலை கேட்டதிலிருந்து எனது செவி நரம்புகள் கூட என்னை ஏளனமாக பார்க்கின்றது.

சில வேலைகளில் பொது விழிகளில் நாம் அவதானித்து இருப்போம் ஒரே பிச்சைக்காரர் பேருந்து நிலையத்திலும் மத தளங்களிலும் சிறுவர் பூங்காக்களிலும் கடை வீதிகளிலும், குறிப்பிட்ட ஒரே நபரே இருப்பார் இத்தகைய விடயத்தை அவதானிக்கும்போது இது வறுமையின் பிடியின் காரணமாக அவர் கையேந்த வில்லை மாறாக இந்த பிச்சை எடுப்பதை தொழிலுக்காக கடுமையாக உழைக்கிறார் என்ற பிழையான எண்ணமே மனதில் தோன்றுகின்றது

நாம் செய்த தர்மம் என்பது ஏதேனும் ஒரு இக்கட்டான நிலைமையில் நமக்கு கை கொடுக்கும். எனினும் மேற்கூறிய சில மனிதர்களின் செயலின் காரணமாக உண்மையாகவே கஷ்டப்படக் கூடிய மனிதர்களுக்குக் கூட உதவி செய்ய இக்காலத்தில் மனம் இடம் கொடுப்பதில்லை. கொழும்பு நகர்களில் பிச்சைக்கார தொழிலை இல்லாதொழிப்பதற்காக வீதி சமிக்ஞைகளில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் இந்த பதிவினை வாசித்துக் கொண்டிருக்கும் போது கூட வீதிகளில் உங்களிடம் யாரேனும் ஒருவர் கையேந்தி கொண்டிருக்கலாம்.

சில பிச்சைக்காரர்களுக்கு நிரம்ப தைரியம்; கதவு திறந்திருந்தால், உரிமையோடு வீட்டுக்குள்ளேயே வந்துவிடுகின்றார்கள்! அவர்கள் தம் உரிமையை நிலைநாட்டுகின்றார்களாம்! ஒரு ரூபாய் கொடுத்தால், நம்மை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். அவர்களின் மனதிற்குள் நம்மை மகா கஞ்சன் என்றவாறு திட்டிக்கொண்டே செல்கின்றார்கள். இன்றைய காலத்தில் 20 ரூபாய் காசு கூட பிச்சைக்காரர்களுக்கு அதி குறைந்த பணமாக கருதிக் கொள்கிறார்கள்.

முக்கியமாக இந்த பிச்சை கொடுக்கும் சந்தர்ப்பங்களில் நம் மனதை கலங்க வைக்கும் தருணமாக அமைவது கைக்குழந்தைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் பிச்சை எடுப்பது. அந்த மழலை என்ன தவறு செய்தது? அந்த கண்களில் காணும் கவலையும் பசியும் சேர்ந்த பிம்பச் சாரல் எம் இதயத்தை கிழித்து அவர்களுக்கு உதவ முன்வர வைக்கின்றது. நிச்சயமாக அந்தக் குழந்தை அவர்களுடையதாக இருக்க வாய்ப்பே இல்லை. ஒரு தாய் ஒருபொழுதும் தன் குழந்தைக்கு முன் அவமானப்படுவதை விரும்பமாட்டார். மாறாக அந்த குழந்தை மாபியா குழுக்களால் கடத்தப்பட்டு இருக்கலாம். மேலும் இதனை தொழிலாக செய்யக்கூடிய வஞ்சகக்காரர்கள் இருக்கின்றார்கள் என்றால் அது கவலைக்குரிய விடயமே. ஆம் குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் குழந்தைகளை கடத்தி, அவர்களது உடல் உறுப்புகளை ஊனமாக்கி, நகர்புறங்களில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டுள்ளனர். மேலும் கைக்குழந்தைகளை நாள் வாடகைக்கு பெற்று குழந்தைகளுக்கான போலி வாடகை தாயையும் உருவாக்கி பிச்சை எடுக்க வைத்து அந்தப் பணத்தில் வாழ்கின்ற மனிதர்கள் பிணந்தின்னி கழுகுகள் என்று கூறவேண்டும். அதேவேளையில் தமது குடும்பத்தின் வறுமைக்காக தமது பிள்ளைகளை பிச்சை எடுக்க வாடகை குழந்தைகளாக அனுப்பும் குடும்பங்களையும் பிழை என்றே கூறவேண்டும். மேலும் பிச்சை எடுப்பதற்கான நவீன முறையாக சில நபர்கள் பணப்பையை தொலைத்து விட்டதாகவும், தான் ஊருக்கு செல்ல வேண்டும், அதற்கு உதவுமாறும் கூறி பணம் வசூலிக்கின்ற சம்பவங்கள் கொழும்பு நகர்புறங்களில் அதிகளவில் நிலவி வருகிறது. நிச்சயமாக இந்த குறிப்பிட்ட நபர்கள் பல மாதங்களாக ஊருக்கு செல்லாமலேயே பணம் வசூலித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்தக் கொரோனா காலப்பகுதியில் பல இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றது. இதற்கு முக்கிய காரணமாக பிச்சை எடுக்க வரும் நபர்களும் காரணமாக அமைகின்றனர். எவ்வாறு எனின் திருட்டு கோஷ்டிக்கு துப்பு சொல்லும் உளவாளிகளாக சில பிச்சைக்காரர்கள் சேவை புரிந்து வருகின்றனர். இவர்கள் பிச்சை எடுப்பது போன்று சில வீடுகளுக்கு சென்று நோட்டம் விட்டு அந்த தகவல்களை அந்த திருட்டு கும்பலுக்கு குறிப்பிட்ட தொகைக்கு கூறுகின்றனர். இதன் காரணமாக பல திருட்டு சம்பவங்கள் கொழும்பு புறநகர்களில் அதிகரித்து வருகின்றது. இந்த காலப்பகுதியில் முக்கியமாக வெள்ளவத்தை கரையோரங்கள், குறிப்பாக காதலர்கள் ஒன்றுகூடும் தளமாக காணப்படுகின்றது. காதலர்களோ தமது நேரத்தை தனது மனதிற்கு பிடித்தவருடன் செலவிடுவதற்கு ஒன்று கூடுகிறார்கள். எனினும் அவ்விடங்களில் சில நபர்கள் பிச்சைக்காரர்கள் என்ற பெயரில் அவர்களைத் தொந்தரவு செய்து பணம் பறிக்கிறார்கள். ஆம் அந்த காதலர்கள் காசு கொடுக்கும் வரை அந்தப் பிச்சைக்கார நபர்கள் அவ்விடத்தை விட்டு நகர மாட்டார்கள். இத்தகைய செயலின் காரணமாக இந்த யாசகம் கேட்பது என்பது வழிப்பறி என்ற விடயமாக மாறுகின்றது. ஆம் யார் தான் உண்மையான பிச்சைக்காரர்கள் என்பதை அறிந்து கொள்வது எப்படி தெரிந்து கொள்வது என்ற கேள்விக்கு விடை தெரியாது என்றே கூறவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் தள்ளாடும் வயதில் ஒரு வேளை உணவிற்காக கையேந்தும் முதியவர்களை பாவப்பட்டவர்கள். அவர்களை ஒரு போதும் பிச்சைக்காரர்கள் என்ற பெயரில் உள்ளடக்க கூடாது. நிச்சயமாக அவர்கள் இயலாதவர்கள். அத்தகைய இயலாத முதியவர்கள் நம்மிடம் கையேந்தும் போது ஒரு கனம் கூட யோசிக்காமல் உதவி செய்வதே சிறந்த பண்பாகும்.

இந்தப் பிச்சைக்காரர்கள் எவ்வாறு உருவாகின்றார்கள் என்று சற்று சிந்தித்துப் பார்த்தால் தன்னால் ஒன்றுமே முடியாது என்ற கட்டத்தில்தான் அவர்கள் தங்களது இயலாமையை சுட்டிக்காட்டி கையேந்திகிறார்கள். எனினும் பிச்சை எடுப்பதையே தொழிலாக எண்ணி, அதனை செய்ய முயற்சிப்பவர்களை நிச்சயமாக அவர்களை தண்டிக்கத்தான் வேண்டும். உலகிலேயே பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு ஒன்றை இனங்காண முடியுமா என்ற கேள்விக்கு விடையே இல்லை. ஒரே வித்தியாசம் தான் இலங்கையில் உள்நாட்டு மொழிகளில் பாட்டு பாடி பிச்சை கேட்பவர்களும் இருக்கிறார்கள், வெளிநாட்டில் ஆங்கில மொழியில் பாடல் பாடி பிச்சை கேட்கிறார்கள்.
என்றாவது ஒருநாள் நம்நாடு பிச்சைக்காரர்கள் இல்லாத ஒரு நாடாக மாறுமா என்ற கேள்விக்கு விடையானது கேள்விக்குறியே.

இலங்கை பத்திரிகை துறையின் சுருக்கமான மற்றும் துணிவான வரலாறு.

ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகை துறை என்பது மிக முக்கிய கூறுகளில் ஒன்றாகும். சில நூற்றாண்டுகளுக்கு முன் சென்று பார்த்தோமானால், செய்தி மற்றும் தகவல்கள் எவ்வாறு சமூகத்தின் அடிப்படை அம்சமாக விளங்கியுள்ளது என்பதனை அறியமுடிகின்றது. உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை பத்திரிகைத்துறை வரலாற்றில் சில முக்கியமான தருணங்களை அவதானிப்போம். அவை எவ்வாறு இன்று செய்திகளாக பயன்படுத்தப்படுகின்றன மற்றும் அவை எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவதானிப்போம்.

1737- ஒல்லாந்தர்கள் முதன்முதலில் பத்திரிகைகளை அச்சிடும் முதல் அச்சகத்தை இலங்கையில் நிறுவினர்.

1802- இலங்கையின் பத்திரிகை துறையின் ஆரம்பம் அரசு வர்த்தமானியை அச்சிடுவதுடன் ஆரம்பமாகியது. பிரித்தானிய அரசின் கீழ் பத்திரிகைகள், விடுமுறை அறிவிப்புக்கள், உத்தியோகங்களிலிருந்து ஓய்வு பெறல், மற்றும் நிர்வாக முடிவுகள் போன்றவற்றை அறிவிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது ஆயினும் இவை அதிகாரபூர்வமான பத்திரிகைகள் அல்ல.

1829ம் ஆண்டு, ஏப்ரல் மாதம்- பிரித்தானிய அரசாங்கம், கோல்புரூக் மற்றும் கேமரூன் ஆணைக்குழுவை பத்திரிகைகளை ஆரம்பிப்பதற்காக நியமித்தது.

1832ம் ஆண்டு, ஜனவரி மாதம், முதலாம் திகதி- த கொழும்பு ஜேனல் எனும் பத்திரிகை காலனித்துவ அரசாங்கத்தின் ஆதரவில் கீழ் வெளியிடப்பட்டது.

1833ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 31ஆம் திகதி- த கொழும்பு ஜேனல், அக்காலகட்டத்தில் பிரித்தானிய அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்ததால் அவ்வெளியீடு இடைநிறுத்தப்பட்டது. பத்திரிகை துறையை தனியார் மயப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே அது நிறுத்தப்பட்டது.

1834ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 4ஆம் திகதி- இலவச பத்திரிகைக்கான தெளிவான தேவையின் காரணமாக, ஜே. அக்லேன்ட் மற்றும் இ.ஜே. டார்லி ஆகியோர் இணைந்து த சண்டே ஒப்சவர் மற்றும் த கொமர்ஷியல் அட்வடைஸரை ஆரம்பித்தனர். த சண்டே ஒப்சவர் இன்றுவரை தொடர்ந்து வெளிவருகின்றது. ஆசிரியரான கிறிஸ்டொபர் இலியட் தலைமையின் கீழ், த ஒப்சவர் பத்திரிகை, அரசாங்கத்தை மிகவும் விமர்சிக்கும் ஒரு பத்திரிகையாக காணப்பட்டதுடன், காலனித்துவ அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையர்களின்  கருத்துக்களை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்றியது.

1841-  உதய தாரகை எனும் பத்திரிகை, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலம் வாரத்திற்கு இருமுறை வெளிவந்தது.

1860- முதல் சிங்கள வாராந்த பத்திரிகையான லங்காலோக, காலியில் வெளியிடப்பட்டது. இது ”மொழி”பத்திரிகையின் பிறப்புக்கு வழிவகுத்தது.

1948- இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இப்பத்திரிகை துறையானது ஏ.என்.சி.எல் மற்றும் டைம்ஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. இதில் ஏ.என்.சி.எல் பிற்காலத்தில் லேக்ஹவுஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1979- விஜயா செய்தித்தாள் (Wijeya Newspapers Limited-WNL) நிறுவனம் நிறுவப்பட்டது.

1981- உபாலி செய்தித்தாள் நிறுவனம் (Upali Newspapers Limited-UNL) ஆரம்பிக்கப்பட்டது.
ஏ.என்.சி.எல், விஜயா செய்தித்தாள் நிறுவனம்(WNL) ,உபாலி செய்தித்தாள் நிறுவனம் (UNL) அக்காலகட்டத்தில், இலங்கையில் மிகவும் பலம்வாய்ந்த செய்தித்தாள்களை வெளியிடும் குழுக்களாக திகழ்ந்ததன.

1994ம் ஆண்டு, நவம்பர் 12 ஆம் திகதி – தேர்தலின் அடிப்படையில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தை பொறுப்பேற்றபோது, மக்களின் அடிப்படை உரிமை மற்றும் பத்திரிகை சுதந்திரம் என்பவற்றை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்தார். பிற்காலங்களில் அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சிவில் யுத்தம் இடம்பெற்றபோது, முந்தைய அரசாங்கத்தால் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலாக்கப்பட்டது.

1998ம் ஆண்டு, ஜூன் மாதம், 5ஆம் திகதி- மீண்டும் தடைகள் அமுலாக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள், மோதல் இடம்பெறும் வலயத்திற்குள் உள்நுழைவது தடுக்கப்பட்டது.

2002- தகவல்கள் பரவுதல் கட்டுப்படுத்தப்பட்டு, புத்தகங்கள், காணொளிகள், சஞ்சிகைகள் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இத்தடை 2009 ஆம் ஆண்டு போர் முடிவடையும் வரை தொடர்ந்தது.

2011- லங்காதீப, ஞாயிற்றுக்கிழமை லங்காதீப சண்டே டைம்ஸ் போன்ற பல இலத்திரனியல் மற்றும் நிகழ்நிலை செய்தித்தாளாக ( online newspapers) அறிமுகப்படுத்தப்பட்டது.

2018 ஆம் ஆண்டு- சுதந்திர வெளியீட்டாளர்களால் காலை செய்தித்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுதந்திர வெளியீட்டாளர்களால் காலை ஒலிவடிவ செய்தித்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இலங்கையில் சஞ்சிகைகளில் பயணம் பத்திரிகை சுதந்திரம், பல தசாப்தங்கள் முதல் மாறிவரும் பத்திரிகை சுதந்திரத்தையும் கொடூரமான காலங்களில் இரக்கமற்ற முறையில் முன்னெடுக்கப்பட்ட தடைகள் வரை மிகத் தெளிவாக விளக்குகிறது. தகவல்களை பரப்புவதற்கான ஒருவழியாகவே ஆரம்பிக்கப்பட்டது. பிற்காலங்களில், உடனடியாக உண்மையை எடுத்துச் செல்வதற்கான ஊடகமாக தொழிற்பட்டது.

21 ஆம் நூற்றாண்டு உலகளவில் உள்ளூர் முறையிலிருந்து இருந்து டிஜிட்டல் முறைக்கு மாற்றமுற்றது. வளர்ந்து வரும் சமூக வலைத்தளமான ட்விட்டர், இலத்திரனியல் செய்தித்தாள்கள், ஒலி வடிவிலான செய்தித்தாள்கள், நிகழ்நிலை செய்தித்தளங்கள்(Online news sites) போன்ற மாற்றங்களின் காரணமாக இவை என் வீட்டு வாசல் வரை வளர்ச்சியடைந்துள்ளது. ‘பெரிய இலக்கு’ மற்றும் ‘அடுத்த தலையங்கம்’ போன்றவை பத்திரிகை துறையில் வாசகர்களையும் பார்வையாளர்களையும் பெருமளவில் ஈர்த்துள்ளது. இந்நிகழ்வு இன்று பத்திரிக்கைகள் இடையே எழுச்சியடைந்து, புத்துயிர் பெற்று, புது வடிவில் மாற்றமுற்றுள்ளது.

இலங்கையின் எதிர்கால பத்திரிகைத்துறையில், பார்வையாளர்களும் வாசகர்களுமே அதிகாரம் உடையவர்களாக இருப்பர். இருந்தபோதிலும் செய்தித்தாள்கள் தீவின் அனைத்து பக்கங்களிலும் பெருமளவில் வாசிக்கப்படுகின்றது. ஆயினும் இன்னும் எவ்வளவு காலம் அச்சிடப்பட்ட பத்திரிகைகள் நீடிக்கும் என்பதை கணிக்க கடினமாய் உள்ளது. இலங்கை, டிஜிட்டல் செய்தி கலாசாரத்தை தழுவிக் கொள்வதில் ஒரு பகுதியாக திகழ்கிறது அத்தோடு கால மாற்றத்திற்கேற்ப மேலும் முன்னேற்றமடையும்.

இரவு நேர சரும பராமரிப்பு.

உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் குறைபாடற்றதாகவும் இருக்க வேண்டுமென்றால், படுக்கைக்குச் செல்வதற்கு முன், பகலிலும் இரவிலும் அதை கவனித்துக்கொள்வது அவசியம். உங்கள் பகல்நேர தோல் பராமரிப்பு வழக்கத்தில் உள்ள தயாரிப்புகள் புற ஊதா கதிர்கள் மற்றும் பிற சுற்றுச்சூழல் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்கள் இரவுநேர தோல் பராமரிப்பு வழக்கத்தில் உள்ளவர்கள் விரைவாக குணமடைவதை உறுதி செய்வதற்காக தோல் செல்களை சரிசெய்கின்றனர். குறிப்பாக வயதான எதிர்ப்பு தயாரிப்புகள், உங்கள் உடல் ஓய்வில் இருக்கும்போது இரவில் சிறப்பாக செயல்படும். “அழகு தூக்கம்” என்ற சொல் மிகவும் பிரபலமடைய இது ஒரு காரணம். இரவில் ஒரு தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றுவது பல நன்மைகளைத் தரும். இது மிக முக்கியமான ஒன்று தோல் செல் மீளுருவாக்கம் துரிதப்படுத்துகிறது. ஆனால் நீங்கள் ஒரு இரவுநேர தோல் பராமரிப்பு வழக்கத்தைத் தொடங்க ஒரே காரணம் அல்ல, இங்கே அதிகம்.

கே. எனது இரவுநேர தோல் பராமரிப்பு வழக்கத்தில் நான் என்ன சேர்க்க வேண்டும்?
ப:- உங்கள் வழக்கமான சுத்திகரிப்பு, டோனிங் மற்றும் ஈரப்பதத்தைத் தவிர, சிறந்த முடிவுகளைப் பெற சீரம், கண் கிரீம்கள் மற்றும் ஒப்பனை நீக்கிகள் ஆகியவை அடங்கும்.

கே:- கூடுதல் தூக்கம் உங்களை இளமையாக பார்க்க வைக்கிறதா?
ப:- தூக்கம் உங்கள் உடலை தளர்த்தும், உங்கள் உடல் ஓய்வில் இருக்கும்போது, ​​திசு மற்றும் செல் பழுதுபார்க்கும் செயல்முறை செயல்படுத்தப்படுகிறது. நீங்கள் தூங்கும்போது கொலாஜன் தயாரிக்கப்படுகிறது, எனவே போதுமான தூக்கம் கிடைப்பது இளமையாக தோற்றமளிக்கும் சருமத்திற்கு முக்கியமாக இருக்கலாம்.

கே. அழகு தூக்கமாக எத்தனை மணி நேரம் கருதப்படுகிறது?
ப:- உங்கள் உடல், மனம் மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தூக்கம் ஒரு சிறந்த வழியாகும். அழகு தூக்கம், இந்த நாட்களில் பிரபலமாக அழைக்கப்படுவதால், குறைந்தது 7-8 மணி நேரம் இருக்க வேண்டும்.

1.பால்
பால் உங்கள் சருமத்திற்கு ஒரு சிறந்த மூலப்பொருள். இதை உலகம் முழுவதும் உள்ள பெண்கள் பயன்படுத்துகின்றனர். நீங்கள் தூங்குவதற்கு முன் தினமும் பால் தடவவும். பால் தொடர்ந்து பயன்படுத்துவதால் உங்கள் சருமம் இயற்கையாகவே பளபளக்கும்.

2.பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய் உங்கள் சருமத்திற்கு சிறந்தது. இது உங்களுக்கு அழகான இயற்கை பிரகாசத்தை அளிக்கிறது. முதலில், உங்கள் முகத்தை சுத்தம் செய்து, பாதாம் எண்ணெயை முழுவதும் தடவ வேண்டும். எண்ணெய் மசாஜ் விரல் நுனியில் மெதுவாகப் பயன்படுத்திய பின் இரவு முழுவதும் உங்கள் சருமத்தில் உறிஞ்சவும்.
அடுத்த நாள் காலையில், அதை ஒரு க்ளென்சர் மூலம் கழுவவும், பின்னர் ஒரு லேசான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். பாதாம் எண்ணெயுடன் உங்கள் சருமத்தை மசாஜ் செய்வது சருமத்தில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது, மேலும் இது புதியதாக இருக்கும். பாதாம் எண்ணெயில் தேங்காய் எண்ணெயைப் போலவே நீங்கள் 2-3 சொட்டு வைட்டமின் சி எண்ணெயையும் சேர்க்கலாம்.

3.பன்னீர்
ரோஸ்வாட்டர் சந்தேகத்திற்கு இடமின்றி அழகுக்கான ஒரு மாய மருந்து. இது எளிதில் கிடைக்கிறது. இப்போது, ​​நீங்கள் எண்ணெய், உலர்ந்த அல்லது கலவையான தோலைக் கொண்டிருந்தாலும், உங்கள் அழகு ஆட்சியில் ரோஸ் வாட்டரைச் சேர்க்கலாம். ஒரு காட்டன் பந்தை எடுத்து ரோஸ் வாட்டரில் நனைக்கவும். அடுத்து, அதை உங்கள் முகமெங்கும் தடவவும். ஒரே இரவில் உங்கள் தோலில் விட்டுவிட்டு, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இது உங்கள் சருமத்திற்கு சிறந்த பளபளப்பைக் கொடுக்கும், மேலும் உங்கள் சருமம் புதியதாகவும், மென்மையாகவும் இருக்கும்.

மேலும்பல பொருட்களை உபயோகித்து சருமத்தின் மேல் தடவுவதின் மூலம் மட்டும் சருமமானது ஆரோக்கியமாக போவது இல்லை.

தங்களின் தனிப்பட்ட கிரீம் அல்லது அழகு சாதன இரசாயன கலவைகள் போன்றவற்றை தினமும் இரவில் நீங்கள் உபயோகிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கலாம்,

ஆனாலும் தொடர்ந்து உபயோகிக்கும் பழக்கத்தை ஏதோ வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தவிர்க்கவும் அச்செயலானது உங்கள் சருமத்திற்கு ஓய்வை வழங்கும் தசை தளர்வாகி அன்று மட்டும் இயற்கை காற்றை உள்வாங்க கூடியதாக அமையும். இச் செயல் கண்டிப்பாக உங்கள் சருமத்திற்கு ஆறுதல் அளிக்கும்.

இரவில் நம் மேற்கெள்ள வேண்டிய சரும குறிப்புகள் என்னும் வகையில் நமக்கு படுக்கை என்பது முக்கியதுவம் வகிக்கிறது, தலையணை மற்றும் படுக்கை விரிப்பு சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் நன்று. நமது பொடுகு வியர்வை போன்றவற்றை தலையணை அல்லது படுக்கை விரிப்பில் படர கூடியவை. இவை சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். பருக்கள் கரும்புள்ளிகள் வர காரணம் அசுத்தமான படுக்கை மற்றும் தலையணை உறை தான். எனவே அவற்றை வாராந்தம் அல்லது மாதாந்தம் மாற்றி சுத்தமாக வைத்திருத்தல் சருமத்திற்கு நன்மை.

இவ்வாறான சிறு குறிப்புகளை தவறாது செய்து வந்தாலே சருமமானது பொழிவாகும் ஆரோக்கியமாகவும் தோற்றமளிக்கும். சருமம் தொடர்பான இரவு நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய குறிப்புகள் ஏன் முக்கியம் என்றால் நீண்ட நேரம் தொடர்ந்து இரவில் உறக்கம் நிகழுகையால் சருமமானது பல செயற்பாட்டுக்களை நிகழ்த்தும் நேரமாக அமைகின்றது. அந் நேரம் சருமத்திற்கு நாம் மிகவும் கவனம் செலுத்துதல் நன்று இவற்றின் பிரதிபளிப்பை காலை நமது சருமத்தில் தோற்றமளிக்க உளவகிக்கும்

முக்கியமாக இரவில் படுக்கை செல்லும் முன்னர் முகத்தை சுத்தம் செய்வது அவசியம். உறக்கத்திற்கு முன்பு ஏதோ ஒரு அழுக்கோ அல்லது இரசாயண கலவைகளோ அகற்ற படுவது நன்று. சுத்தமாக தங்களது பேஸ்வேச் அல்லது கிலேசன்சிங் பொருட்கள் கொண்டு தினமும் உறக்கத்திற்கு முன்பு சுத்தம் செய்து கொள்வது அவசியம்.

Besties அலப்பறைகள்.

நாம் எமது வாழ்க்கையில் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் வெவ்வேறு நபர்களுக்குப் பயந்து வாழும் நிலைமைகளில் இருந்துள்ளோம். குழந்தையாக இருக்கும்போது பெற்றோர்களுக்கும், மாணவனாக இருக்கும்போது ஆசிரியர்களுக்கும், தொழில் நிலையங்களில் முதலாளிகளுக்கும் அடிபணிந்து நடந்துள்ளோம். அவ்வாறானதொரு வரிசையிலேயே எமது இல்லற வாழ்க்கையையும் பயந்து வாழும் நிலைமைக்கு இந்த Boy Bestie / Girl Bestie நபர்கள் மாற்றியமைத்துள்ளனர் என்பதை வேதனையுடனும் மனவறுத்தத்துடனும் அறியத்தருகிறேன்!

நான் உண்மையாகவே 90s களில் பிறந்த ஒரு Typical 90s kid.
நானும் உங்களைப்போலவே இந்த Bestie என்றால் யார் என்று அறிய முடியாமல் திரிந்த நபர்களில் ஒருவர். நான் படித்த காலம் முதல் எனக்கு தெரிந்த ஒரே விடயம் Lover, Friend என்ற இரண்டு வெவ்வேறு விடயங்கள் மட்டுமே. ஆனால் இப்போது Lover, Bestie என்று இஷ்டத்துக்கு ஆளுக்கொன்று வைத்திருக்கின்றனர். Boy Bestie / Girl Bestie கலாச்சாரம், யாரால்? எப்போது? எதற்காக ஆரம்பிக்கப்பட்டதென்பதற்கான ஆதாரங்கள் இணையதளத்தால் கூட கண்டுபிடிக்க முடியாதுள்ளது. எவராக இருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, உண்மையாகவே இவர்கள் யார்? இவர்களுக்கு என்ன தான் வேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவோம்.

Bestie என்பது நண்பருக்கு மேலாகவும், வாழ்க்கைத் துணைக்குக் கீழும் இருக்கும் உறவு முறை என்றே அதிகமானோரால் வரைவிலக்கணப் படுத்தப்படுகிறது. ‘இதனைக் கொச்சைப்படுத்த என்ன இருக்கு?, Bestie என்றால் நண்பர் தானே’ என நீங்கள் மனதில் கேள்வி எழுப்புவது புரிகின்றது. இது சற்று குழப்பகரமான Concept ஆக இருந்தாலும் கூட, முடிந்த வரை அவர்களின் Concept என்னவென்பதை புள்ளிக்கோவைகளில் விளக்குகிறேன்.

* பொதுவாக இவர்கள் ஒரே பாலினத்தில் Bestie களை தெரிவு செய்யமாட்டார்கள். ஒரே பாலினத்திலிருந்தால் அவை வெறும் நண்பர்கள் எனவும், எதிர் பாலினத்திலிருந்தால் மட்டுமே அது Bestie என்றும் கண்மூடித்தனமாக நம்புவார்கள்.

* Lover இருந்தாலும் கூட Bestie உடனே அதிகமாக நேரம் செலவழிப்பதற்கு விரும்புவதாகவும், வாழ்க்கைத்துணை இல்லாவிடினும் பரவாயில்லை Bestie இல்லாமல் வாழவே முடியாது என்று வெற்று வீராப்புடன் கதைத்துத் திரிவார்கள்.

* கணவன்/மனைவியோடு பகிரங்கமாகச் சில விடையங்களைக் கதைப்பதற்கு கூச்சமாக இருப்பதால், தத்தமது Bestie களோடு கதைத்து, அவர்களை ஒரு முக்கிய பேச்சுத்துணையாக பாவித்துக்கொள்கிறார்கள்.

* உன்னுடன் விவாகரத்து ஆனாலும் பரவாயில்லை Bestie ஐ விட்டு விலகமாட்டேன் எனச் சற்றும் கூச்சமில்லாமல் சிலபேர் சொல்வதுண்டு.

* திருமணத்தின் பின்பு வாழ் நாள் முழுவதும் உன்னுடன் மாத்திரமே வாழப்போகிறேன் என்பதால் வாழ்வில் சற்று Variety தேவை என்பதற்காக நான் Bestie களுடன் பழகுகிறேன் எனக்கூறும் சந்தர்ப்பங்களும் உண்டு.

* தாம்பத்திய உறவுகள் பற்றிக்கதைத்து, சந்தேகம் தீர்த்துக்கொள்ளும் ஊடகமாகவும், சில சந்தர்ப்பங்களில் ஒத்திகை பார்க்கும் நபர்களாகவும் தங்களை மாற்றிக்கொள்வார்கள் என்றும் சில கதைகள் உண்டு.

இதற்குப் பின்பும் நீங்கள் இவர்களை ‘நண்பர்களே’ எனக் கருதினால் ‘ஓ மானிட ஜாதியே!! மனிதர்களே நீங்கள்!!’ என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளை உங்களுக்குச் சமர்ப்பணம் செய்வதை தவிர எனக்கு வேறுவழி கிடையாது.

நாம் எல்லோரும் எதிர்பால் நண்பர்களைக் கொண்டு இருப்பது அவசியமாகும். எனினும் அவர்கள் நல்ல நண்பர்களாக அல்லது துணையாக மாத்திரமே இருக்க வேண்டும் என்பதே என் கருத்து. நல்ல நண்பர் யார் என்பது தொடர்பில் விளக்கம் கூறும் கட்டுரை இதுவல்ல. ஆனால் Bestie என்ற போர்வைக்குள் திரிவுபட்ட Living together நடாத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே என் வாதம்.

இஸ்சோ

நகைச்சுவையான சூழலில் மலிவான Sea food.
கொழும்பில் வசிக்கும் கடல் உணவுப்பிரியர்களிடையே, சிறிது காலமாக பிரபல்யமாக இருப்பது கொல்லுப்பிட்டியில்‌‌ அமைந்துள்ள Isso எனும் உணவகம் .‌ அவர்கள் சமீபத்தில் தங்கள் மேல் தளத்தை ஒரு இனிமையான பார் ஒன்றை பொதுமக்களுக்குத் திறந்தனர். நாங்களும் அதைப் பார்க்கச் சென்றோம், நாங்கள் இதுவரை முயற்சிக்காத இசோ மெனுவில் புதிய உணவுகளைக் கண்டறிய மட்டுமே. இது எப்படி சென்றது என்று பார்க்கலாம்!

பானங்கள்

Red Smoothie (LKR 590)

ஒரு பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்தில் Red smoothie என்ற கலவையைப் பெறுவதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நல்ல ஆரோக்கியமான: காலை அருந்தக்கூடியது இப்பானம்.‌ இதன் அடர்த்தியும் உயர் தன்மையும் ஒரு சாப்பட்டிற்கு பதிலாக‌ வைக்கக்கூடியது‌. நல்ல சமநிலையை அளிக்கக்கூடிய இந்த பானம் உறுதியானது. பீட்ரூட் மற்றும் orange சுவைக்கு நன்றி. நல்ல உடல் சமநிலையை ஏற்படுத்தக்கூடிய உறுதியானதும் மற்றும் மண்வாசனைக்குரியதுமான இந்த பானத்தின் பீட்ரூட் மற்றும் orange சுவைக்கு நன்றி. கித்துலினால் இதற்கு இனிப்பு ஊட்டப்பட்டுள்ளதால் இது மிகவும் ஆரோக்கியமானது.

Lemonade (Orange and Lemongrass) (LKR 390)

தன்னுடைய menu இல் பல எலுமிச்சைசாறு பானங்களை இஸ்சோ கொண்டிருந்தது. நாங்கள் ராஸ்பெரி மற்றும் பஷென் பழங்கள் இருந்த ஒரு பானத்தை ருசித்து பார்க்க விரும்பினோம். ஆனால் அது இருக்காததால் பட்டியலிட்டிருந்த இதை முயற்சிக்க முடிவு செய்தோம்.

பசியைத்தூண்டும் உணவு வகைகள்( Appetizers)

1. Calamari Rings 2pcs (LKR 290)

இவை ஒவ்வொன்றும் சுமார் LKR 150 இற்கு ஒரு நல்ல ஒப்பந்தமாக இருந்தன. Coating சரியானதாக இருந்தாலும் Calamari இற்கு கொஞ்சம் சுவையும் இல்லை. Tarter சாஸ் சுவையைச் சேர்ந்தது, ஆனால் ஒரு டிஷ் அதன் சுவையூட்டிகளை மட்டுமே நம்ப வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதை மேம்படுத்தலாம்.

2. Crab Cakes 2pcs (LKR 490)

எங்களுக்கு ஒரு வெற்றியாளர் இருக்கிறார்! முதல் மிருதுவான கடியிலிருந்து சுவையானது. ஒரு திக்(Thicc) ( ஆமாம், நான் சொன்னேன்!)கூட பிரட்தூள்களில் நனைத்த Coating உடன் இந்த நண்டு Cake இறைச்சியால் நிரம்பியிருந்தது. நீங்கள் கடிக்கும்போது அது விழும். மாசாலாவின் லேசான சுவை உங்கள் சுவை மொட்டுகளுடன்(taste buds) விளையாடுகிறது, ஆனால் அந்த சுவையில் இறைச்சி சுவைக்காது. இவற்றில் 10 ஐ மிக்க மகிழ்ச்சியாக சாப்பிட்டிருக்கலாம், ஆனால் முழு மெனுவையும் பரிசீலனை செய்யவே பணம் பெறுகிறேன், ஆகையால் அடுத்த உணவிற்கு செல்லவேண்டிய கட்டாயம்.

3. Prawn and Avocado Salad (LKR 690)

புதிய கீரைகள் மற்றும் இறால் கொண்டு முதலிடம் வகிக்கின்றன. மெனுவில் உள்ள ஆரோக்கியமான விருப்பங்களில் ஒன்றான சாலட்டை ரசிப்பது மகிழ்ச்சியாக இருந்தபோதிலும், இதில் அதிக சுவையைச் சேர்க்க ஒரு சுவையூட்டியை நாங்கள் விரும்புகிறோம்.

மெயின்ஸ்

Isso Burger (LKR 990)

இது போன்ற ஒரு பர்கரை நான் சந்திக்கவில்லை. சாலட், சீஸ் மற்றும் முட்டையின் ஆரோக்கியமான உதவிக்கு நடுவில் ஒரு ஆழமான வறுத்து நொறுக்கப்பட்ட Coating செய்யப்பட்ட இறால் patty உங்களுக்கு காத்திருக்கிறது. ரொட்டி மென்மையானது அல்ல, ஆனால் அதன் உறுதியானது முழு உணவையும் சாஸ்கள் ஊறவைத்து சரிந்து விடாமல் தடுக்கிறது. ஒரு சுவாரஸ்யமான சுவையை உருவாக்கும் பல்வேறு அமைப்புகளின் வடிவமும் உள்ளது. நிச்சயமாக இதை பரிந்துரைக்கவும்.

Baked Crab (LKR 1990)

Issoவைப் பற்றி மிகவும் சுவாரஸ்யமானது என்னவென்றால் அவற்றின் விளக்கக்காட்சி மற்றும் உணவைத் தயாரிப்பதற்கான எதிர்பாராத முறைகள். இந்த டிஷ் இரண்டு நண்டு ஓடுகளை விளிம்பில் நிரப்பப்பட்ட இறைச்சியுடன் வறுக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பிசைந்த உருளைக்கிழங்கை அலங்கரிக்கும் சாலட் முதலிடத்தில் ஒரு பட்டாசு முழு குழுமத்தையும் நிறைவு செய்தது. விளக்கக்காட்சிக்கான சிறந்த மதிப்பெண்கள்! பிசைந்த உருளைக்கிழங்கு கிரீமி மற்றும் சீஸி. அமைப்பு மேம்படுத்தப்பட்டலாம். ஆனால் சுவை நன்றாக இருந்தது. நண்டு இறைச்சி ஒரு தனித்துவமான தயாரிப்பாக இருந்தது, எண்ணற்ற இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளுடன் உங்கள் நாக்கில் ஒரு டேங்கோ நடனமாடுகிறது. YUM!

Laksa Noodle Soup (LKR 990)

இது மிதமான காரமானதாக இருந்தது, எங்களை ஆச்சரியப்படுத்தியது, ஆனால் டிஷ் சுவைகளை அதிகமாக பாராட்ட வைத்தது. சாப்பிடுவது குழப்பமாக இருக்கும்போது (வழுக்கும் நூடுல்ஸ்), இது கடல் உணவு மற்றும் டோஃபு ஆகியவற்றின் தாராளமான உதவியைக் கொண்டிருந்தது, இது இனிப்பு , புளிப்பு மற்றும் காரமான குழம்பில் சுவையான Coating ருசித்தது. தங்கள் சுவை மொட்டுகளைக் குறைக்காமல் அனுபவிக்க விரும்புவோருக்கு, இது மிகச் சிறந்தது.

சுற்றுப்புறம்

ஊழியர்கள் தாழ்மையுடனும் உதவியாகவும் இருந்தார்கள். நாங்கள் உள்ளே நுழைந்தபோது ஒரே ஒரு பையன் மட்டுமே இருந்தான், ஆனால் அவர் ஒரு சிறந்த வேலையைச் செய்தார், ஒரே நேரத்தில் எங்கள் ஆர்டர்களை எடுத்துக்கொண்டார், சமையலறைக்கு தகவல் கொடுத்தார், இறால் பற்றிய எங்கள் மதிப்பாய்விற்காக காக்டெயல்களைத் தூண்டிவிட்டு சேவை செய்தார். இடம் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் வண்ணமயமானது, இது இரு தளங்களிலும் இயங்கும் ஒரு தீம். மேல் தளம் ஒரு பட்டியாக மாற்றப்பட்டுள்ளது, மங்கலான விளக்குகள் ஒரு காதல் சூழ்நிலையை உருவாக்குகின்றன, அதேசமயம் கீழ்தளம் உங்கள் குடும்ப நட்பு உணவு கூட்டாக உள்ளது.
பணத்திற்கு நல்ல மதிப்பு, Isso அவர்களின் உணவுகளை முழுமையாக்குவதற்கும் சிறந்த சேவையை வழங்குவதற்கும் ஒரு பயங்கர வேலை செய்கிறது. மீண்டும் செல்ல நாங்கள் காத்திருக்க முடியாது!

155 பேருந்தில் பயணிப்பதிலுள்ள சுவாரஷ்யங்கள்.

கொழும்பில் வாழும் அனைவருக்குமே 155  என்றவுடன் நினைவிற்கு வருவது 155 இலக்கமுடைய பேருந்தின் விம்பம் தான். இன்னும் சொல்லப் போனால் வெறும் விம்பம் மட்டுமே தோன்றுவது இல்லை. அத்தோடு அந்த பேருந்தில் பயணிக்கும் போது அவர்கள் ருசித்த அனுபவங்களும் சேர்ந்தே மலர்கிறது. “என்ன? பேருந்தில் ருசித்த அனுபவங்களா?” “அது எப்படி சாத்தியமாகும்! ஒருவர் தனது வாழ்நாளில் எத்தனையோ பேருந்துகளில் பயணித்து இருக்கும் போது அதில் இந்த 155 இலக்கமுடைய பேருந்தின் அனுபவம் மட்டும் எப்படி தெளிவாக நினைவில் இருக்கும்?” என உங்கள் மனதில் பல கேள்விகள் எழக்கூடும் ஆனால் இந்த 155 இலக்கமுடைய பேருந்தின் சிறப்பு தன்மையே அது தான். உங்கள் வாழ்நாளில் ஒரு தடவை நீங்கள் அந்த பேருந்துள் நுழைந்து பயணித்து வெளி வந்தாலே போதும். அந்த அனுபவத்தினை நீங்கள் வாழ்நாள் முழுதும் மறக்கவே மாட்டீர்கள். எவர் உங்களிடம் வந்து 155 என்ற இலக்கத்தினை கூறினாலும் உங்கள் புத்திக்குள் அந்த அனுபவங்கள் மின்னலொளி போல் வந்துச் செல்லும். இந்த பதிவினூடாக 155 இலக்கமுடைய பேருந்தில் நான் ருசித்த சில அனுபவங்கள் பற்றி உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளப் போகிறேன். சரி தோழர்களே பஸ் ரைட்டுக்கு தயாராகுங்கள்!

  1. 155 பஸ் ரூட்

மௌான்ட் லவேனியா, தெஹிவளை, பம்பலபிட்டிய, ரேஸ் கோர்ஸ், கொழும்பு கேம்பஸ், டவுன் ஹோல், மருதானை, ஹார்மர் ஸ்ட்ரீட், கொட்டஹேனா மற்றும் மோதர ஆகிய இடங்களில் காணப்படும் பேருந்து தரிப்பிடங்களில் ஒரு நிமிடம் நின்று பெருமூச்சு விட்டு ஓய்வெடுத்து மீண்டும் தன்னுள் மக்களை நிரப்பியும் சிலரை வெளி தள்ளியும் தன் பயணத்தை தொடர்கின்ற பேருந்து தான் இந்த 155.

  1. 155 இன் நேரமும் வேகமும்

உங்களை சரியான இடங்களில் கொண்டு சேர்ப்பதில் இந்த பேருந்து சிறப்பாக செயற்படுகிறது. ஆனால் சரியான நேரத்தில் போய் சேர்வோமா என்பது சற்று கேள்விகுறி தான். எனக்கு தெரிந்து நாம் இந்த பேருந்தினூடாக ஏதும் அவசர வேலையாக அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டிய மீட்டிங் ஏதும் இருக்குமாயின், கண்டிப்பாக நாம் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே வீட்டிலிருந்து வெளியேறி விட வேண்டும். “என்ன இரண்டு மணி நேரமா? அவ்வளவு மெதுவாகவா இந்த பேருந்து செல்லும்?” என்ற உங்களது கேள்விக்கு பதில் – இல்லை. இந்த பேருந்து மெதுவாக செல்லாது ரொம்ப மெதுவாக செல்லும்.

  1. பாலை வன நீர்

நாம் சும்மா தெருக்களில் நடந்து செல்லும் போதெல்லாம் அடிக்கடி நம் கண்களில் தென்படும் இந்த பேருந்து நமக்கு தேவையான நேரங்களில் கண்களில் தென்படுவதே இல்லை.   நமக்கு அவசரமான நேரங்களில் இந்த பேருந்தினை காண்பது பாலை வனத்தில் ஒரு துளி நீரினை கண்டெடுப்பது போன்று ஆகிவிடுகிறது. நாம் காத்திருந்து சோர்வடைந்து “இனி இதற்காக காத்திருப்பது சரி வராது.” என நினைத்து துக் துக் வண்டி எதையும் நிறுத்த போகும் பட்சத்தில் ஏதோ அவ்வளவு நேரம் நம்மை காக்க வைத்து ஒழிந்திருந்து வேடிக்கை பார்த்த குழந்தை போல் தூரத்திலிருந்து தலை காட்டும். “சரி வந்து விட்டது!” என அருகில் வரும் வரை பார்த்துக் கொண்டிருக்கையில் “ஒரு வேளை பஸ் ப்ரேக் டவுன் ஆகியிருக்கமோ?” என நினைக்கும் அளவிற்கு தவழ்ந்து வந்துக் கொண்டிருக்கும்.

  1. சன நெரிசல்

பல மணி நேரம் காத்திருந்து 155 பேருந்துக்குள் ஒரு வழியாக நுழையும் போது, பேருந்தை விட்டு வெளியே வரும் சனங்கள் ஒரு புறமும் உள்ளே செல்லும் அவசரத்தில் மற்றைய சனங்கள் இன்னொரு புறமும் என நெரித்து நம்மை கரும்பு மெஷின்க்குள் மாட்டிய கரும்பினை போல ஜூஸ் புழிந்து விடுவார்கள். ஒரு வேளை இந்த சன நெரிசலுக்குள் யாரேனும் கற்பிணி தாய்மார்கள் மாட்டிக் கொண்டால் அவர்களுக்கு அந்த இடத்திலேயே பிரசவம் ஆகி குழந்தையும் கையுமாக தான் பேருந்திற்குள் செல்வார்கள். இத்தனையும் தாண்டி சக்கையாகி பேருந்துக்குள் நுழைந்தால் இடமே இல்லாத இடத்தினை நோக்கி நகர சொல்லி கண்டக்டர் “இஸ்ஸர பயின்ட” என சத்தமிட்டுக் கொண்டிருப்பார். ஒரு வேளை நீங்கள் அதிர்ஷ்ட்டசாலியாக இருந்தால் நீங்கள் உள்ளே நுழைந்து எதாவது ஒரு சீட்டுக்கு அருகில் நிற்கும் போது அந்த நபர் இறங்கும் தரிப்பிடம் அருகிலிருக்கும் பட்சத்தில் அவர் தானாக எழுந்து இடம் தரக்கூடும். அவ்வாறு இல்லாவிட்டால் நசுங்கிய படியே பயணிக்க வேண்டியது தான்.

  1. இலவு காத்த கிளி

155 பேருந்திற்குள் இருந்த படி தரிப்பிடம் வரும் வரை காத்திருக்கும் உங்கள் கதையும் இலவு காத்த கிளியின் கதையும் ஒன்று தான். “பேருந்து நகர்கிறதா! இல்லை ஒரே இடத்தில் நிற்கிறதா!” என்ற சந்தேகம் உங்களுக்குள் துளிர் விட ஆரம்பிக்கும். “பேசாம நடந்தே போயிருக்கலாம்.” என தோன்றும். இன்னும் சொல்லப் போனால் நொடிக்கு இரு தடவை நீங்கள் பெருமூச்சு விடுவீர்கள். அட பாதியில் எதாவது ஒரு தரிப்பிடத்தில் இறங்கி TukTuk வண்டி ஏதாவது பிடிக்கலாமா என்று கூட நினைப்பீர்கள். உங்கள் உயிர் வியர்வையாக கரைவது உங்களுக்கு தெளிவாக தெரியும். ஒரு வேளை நீங்கள் பொறுமைசாலியாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு ஏதும் அவசர வேலைகள் இல்லையென்றாலோ நீங்கள் கூலாக பயணத்தை தொடர்வீர்கள் அவ்வாறு இல்லை என்றால் கடினம் தான்.

  1. பேருந்தும் மக்களும்

இவ்வாறாக நம்மை வாட்டி வதக்கி கொண்டிருக்கும் பேருந்துக்குள் கூலாக பயணிக்கும் சிலரும் உண்டு. வயதானவர்கள், காதலர்கள், மொபைலுக்கு அடிமையானவர்கள் மற்றும் வண்டி ஓட்டுநர் ஆகியோரே அந்த பட்டியலுக்கு சொந்தமானவர்கள். அவர்களுள் வண்டி ஓட்டுநர் அதாவது அந்த பேருந்தின் சாரதி இருக்காரே ரொம்ப கூலாக வருவார். காலை நேரத்தில் 155 இல் எப்படியோ பற்களை கடித்துக் கொண்டு பயணிக்கலாம். ஆனால் மாலை நேரங்களில் அதுவும் வேலை முடிந்து மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது பயணிப்பது என்பது கடினமான விடயம். மக்களது நெரிசல் ஒரு புறமும் சிலரது வியர்வையோடு கலந்த வாசனை திரவியங்களிலிருந்து வெளிவரும் ஒவ்வாத ஒரு வகை மணம் ஒரு புறமும் என உங்கள் குடலை நெஞ்சு வரை இழுத்து வந்து விடும். இந்த நெரிசலில் சில வியாபாரிகள் தனது வாய்களில் வெற்றிலை போட்டுக் கொண்டு எச்சிலை வாய்க்குள் வைத்த படி கூவி கூவி பொருட்களை சந்தைப்படுத்திக் கொண்டிருப்பார்கள். இவ்வாறாக பலரது செயல்களினால் 155 பேருந்து அனுபவம் உங்கள் நினைவுகளில் கல்லின் மேல் எழுத்தென எழுதப்பட்டு விடும்.

ஏற்கனவே 155 இல் பயணித்தவர்களுக்கு இந்த பதிவினை வாசிக்கும் போது அந்த அனுபவங்கள் நினைவிற்கு வந்துச் செல்லக் கூடும். ஆனால் இது வரை பயணிக்காதவர்களுக்கு ஏதோ விநோதமான ஒரு விடயத்தை பற்றி வாசிப்பது போலிருக்கும். எது எவ்வாறாக இருப்பினும் அனைவருமே அவர்களது வாழ்நாளில் ஒரு தடவையாவது இந்த பேருந்தில் பயணிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதுவும் ஒரு வகை சுவாரஷ்யமான அனுபவம் தான். நீங்கள் இதற்கு முன் 155 இல் பயணித்திருந்தால் உங்களது அனுபவத்தினை பற்றி கமன்ட் பொக்ஸினூடாக எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

ஐயையோ….. எனக்கு வாய் இல்லாம போச்சே.

தலையங்கத்தை பார்த்தவுடன் என்னடா இது என பார்க்க வந்திருக்கும் மக்களே, இந்த ஆக்கத்தில் வரும் பொருட்கள் உங்கள் daily வாழ்க்கையில் நீங்கள் உபயோகிப்பவையே. இக்கட்டுரையின் முடிவில் நீங்களே “அட ஆமா, இதுக்கு ஒருநாள் ஆச்சு லீவ் குடுக்கலாமே” என்று எண்ணினாலும் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. சரி அப்படி என்ன பொருட்கள் என்பதை பார்த்து விட்டு வருவோமே..

  1. வானொலி பெட்டி

இதிலென்னடா இருக்கு என்று நீங்கள் யோசிக்கலாம். சில வீடுகளில் காலையில் வேலை செய்யும்போது மட்டும் அந்த வானொலி பெட்டி ஒலிக்கும். ஒரு சில வீடுகளில் மாலை அல்லது இரவு நேரம் வரை. ஆனால் ஒரு சில வீடுகளில் மின்சாரம் உள்ளதா இல்லையா என்பதையே வானொலியை வைத்து தான் கண்டுபிடிப்பார்கள். அந்த அளவிற்கு இருக்கும் அதன் பாவனை. அப்பொழுது அந்த வானொலியை நினைக்கும் போது தோணும் அதுக்கு வாய் இல்லாமல் போச்சே என்று.

2. ஹெட் செட்

ஒரு சிலரின் ஹெட் செட்டை தொடவே அருவருப்பாக இருக்கும். மிகவும் அசுத்தமாக, பிய்ந்து, வளைந்து, அதை அவர்களால் மட்டுமே பாவிக்க கூடிய வகையில் இருக்கும். மேலும் அது 24/7 அவர்களின் காதிலேயே கிடக்கும். இதனாலேயே இதை பல அம்மாக்கள் செவிட்டு மெஷின் என்பார்கள். உண்மையில் பிழை என்னவோ அதை பாவிப்பவர் மேல் தான். ஆனால் அடிவாங்கியதோ என்னமோ அந்த ஹெட் செட் தான். அப்பொழுது தான் தோணும். வாய் இருந்தால் ஹெட் செட் கூட அழுமென்று.

3. தொலைபேசிஇது இன்று தொலைபேசியா அல்லது தொல்லைபேசியா என்ற சந்தேகம் இன்று பல வீடுகளில் உள்ளவர்களுக்கு உண்டு. அந்தளவிற்கு இதன் பாவனை அதிகரித்துள்ளது. முக்கியமாக சமூக வலைத்தளங்களில் இருக்கும் அனைவருமே சலிப்படைந்து கிடைக்கும் போது தொலைபேசியையே நாடிச் செல்கின்றனர். அப்படி போகும்போது அதில் போஸ்ட் பார்க்க போகின்றேன் என்று வீட்டில் இருக்கும் டேட்டா பாக்கேஜை தங்களை அறியாமலேயே முடித்துவிட்டு இருக்கும் போது தொலைபேசி நினைக்கும் “அப்பாடா, இனி இவன் என்னை வதைக்க மாட்டான் என்று. ” ஆனால் இல்லை சீக்கிரமே மொபைலில் ரீ-சார்ஜ் செய்து மீண்டும் மொபைலை நோண்ட தொடங்குவார்கள். அப்போது எங்கேயோ இருந்து அம்மா சொல்வது காதில் ஒலிக்கும், “அந்த போனுக்கு வாய் இருந்தால் அழும்னு.”

4. பேனை மூடிஎழுதினேன். எழுதுவேன். எழுதிக்கொண்டே இருப்பவர்களின் பேனையையும் பேனை மூடியையும் கொஞ்சம் எடுத்துப்பார்த்தால் தெரியும். நான் சொல்லும் முன்னே நீங்களே சொல்லிவிடுவீர்கள், வாய் இருந்தால் மூடி அழுமென்று. அந்தளவிற்கு அதை கடித்து, சப்பி, அதிலிருந்து வரும் பிளாஸ்டிக்கை பிய்ந்து அதிலும் ஓட்டை போட்டு, அப்பப்பா இனி ஒருவர் எக்காலத்திலும் அந்த பேனையால் எழுத முடியாதபடி செய்து விடுவார்கள். ஒருசில மூடிகளை என்னால் கற்பனை செய்யவே முடியவில்லை. அந்தளவுக்கு அதன் நிலைமை மிக கவலைக்கிடமாக இருக்கும்.

5. Snapchat

இதிலென்னடா இருக்கு? எல்லாரும் பாவிக்கும் ஒரு செயலியில் என்ன இருக்கப்போகிறது என்று கேட்கலாம். உண்மையிலேயே அந்த செயலி ரொம்ப பாவம். அதில் தன் முகத்தை காமெரா மூலமாக அழகுபடுத்துகிறேன் என்று சொல்லி 100 filterகலை பாவித்து snap chat ஐயே அழவைத்து விடுவார்கள். ஒரு கட்டத்தில் தங்கள் முகத்தையே தங்களால் பார்க்க முடியாதபடி செய்துவிடுகிறது. அப்படி இருந்தும் அதன் பாவனையை நிறுத்தாமல் அதை அழ வைப்பதே நம்மவர்களின் வேலையாக போய்விட்டது.

நிறவாதம் பற்றி பேசுகிறார் பிரபல மொடல் ஜீனு மஹாதேவன்.

மொடல் ஜீனு மகாதேவன் 2017 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அறிமுகமானார். இப்போது இவர் ஆண்களுடைய fashion weekற்காக உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டு இருக்கின்றார் .

இலங்கைப் பாரம்பரியத்துடன் கூடிய நோர்வே நாட்டைச் சேர்ந்த ஜீனு 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பஸ் ஒன்றில் ஒஸ்லோவில் உள்ள வீட்டுக்குச் செல்கின்ற போது தான் ஒரு மொடல் என கண்டுபிடித்துள்ளார். மொடலிங் என்பது ஒரு துறையாகவோ அல்லது தொழிலாகவோ அவருடைய மனதில் எப்போதுமே கடந்ததில்லை. ஓர் கணனி விஞ்ஞானியாக அல்லது வானியல் சம்பந்தமான தொழிலில் ஈடுபடவே அவர் விரும்பினார். இவர் தற்போது Versace , Givenchy , Alexander Mc Queen , Burberry போன்ற நிறுவனங்களுக்கு எல்லாம் மொடல் ஆக வேலை செய்கிறார். நீளம் கில் மற்றும் லட்சுமி மேனன் உட்பட பேஷன் தொழிலில் சாதித்துக்கொண்டிருக்கின்ற நிறைய தெற்காசியாவைச் சேர்ந்த ஆட்களில் ஜீனுவும் ஒருவர் தான். எனவே அவர் இப்போது மொடலிங் தொழில் வரலாற்றில் என்ன முகம் கொடுத்தார் என்பதை பற்றி இப்போது அவர் பேசியிருக்கிறார்.

முதல் சில நேரங்களில் அவர் அந்த இடத்தில் பொருத்தமில்லாதது போல் உணர்ந்தார். மேலும் “அங்கே கூடியளவு வெள்ளை நிறத்தவர்களும், குறைந்தளவு கருப்பு நிறத்தவர்களும் இருந்தார்கள், அத்தோடு நானும் இருந்தேன். எனவே நான் செல்லும் இடமெல்லாம் தனித்து நிற்பது போலவே உணர்ந்தேன்” என்றும் அதற்கு அவசியமில்லை என்றும் அவர் ஒரு பிரிட்டிஷ் வெளியீட்டிற்கு சொன்னார்.

இலங்கை மக்கள் உட்பட , தெற்காசிய சமூகத்திலிருந்து எந்தளவு தனிமைப்படுத்தல் மற்றும் பின்னடைவை சந்தித்தார் என்பதை அவர் விவரித்தார்.

வெள்ளை மற்றும் சாதாரண நிறமுடைய தோல்களைக்கொண்ட சருமத்தின் மீதான தெற்காசியாவினுடைய ஆவேசம் எப்போதுமே எமது சமுதாயத்தில் ஒரு அழுத்தமான பிரச்சினையாக இருக்கின்றது. அத்தோடு இது எங்கள் சாதாரண நிற கிரீம் விளம்பரங்களில் பிரதிபலிக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை
மொடல்ஸ் மற்றும் நடிகர்கள் மிகவும் சாதாரண நிற தோல்களை கொண்டிருந்தால் அவர்கள் மிகவும் கவர்ச்சிகரமானவர்களாக கருதப்படுகிறார்கள் . அந்தப் பிரச்சினை பற்றி அடிக்கடி பேசப்படாவிட்டாலும் கூட அது சமூகத்தில் மறைக்கப்பட்ட கருத்துக்கள் மூலம், நடவடிக்கைகள் மற்றும் எண்ணங்களில் இன்றும் நடைமுறையில் முன்னொரு போதும் இல்லாத அளவில் காணப்படுகிறது.

சர்வதேச மொடலிங் தொழிலில் முக்கியமான புள்ளியை உருவாக்கிக் கொண்டிருந்த ஜீனுவுக்கு இந்த நிகழ்வினுடைய பாரதூரமான விளைவு எல்லா வழியிலும் போய் சேர்ந்தது. கருப்பு நிறத்தோலையுடைய oru ஆன் மொடலாக இருக்கக் கூடாது என்று நம்பிய இந்திய மற்றும் இலங்கை மக்களினால் விமர்சனம் , நிறவாதம் மற்றும் எதிர்மறைக்கருத்துகளுக்கு அவர் முகம் கொடுத்தார்.

என்னுடைய பெற்றோர் முதலில் கொஞ்சம் பின்வாங்கினார்கள். ஏனெனில் என்னை யாரும் ஒரு மொடல் மெடீரியல் ஆக எடுக்க மாட்டார்கள் என்று, ஆனால் இப்போது எல்லாம் சரியாக இருக்கின்றது.

உண்மையில், ஜீனுவுக்கு கூடியளவு ஆதரவு கிடைத்தது ஐரோப்பிய பிரண்ட்ஸ் மற்றும் அங்குள்ள மக்களுடையதுமாகும். அவருடைய கருத்தானது நிறவாதம் முன்னையதைவிட தற்போது தெற்காசியாவில் கூடுதலாகவே இருக்கின்றது . ஆனால் அடுத்த நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தெற்காசியாவில் சற்று குறைந்த வேகத்திலே காணப்படுகின்றது என்பதாகும் .

நாங்களும் Jeenu போல் வர வேண்டும் என உணர்ந்த, குறிப்பாக இளம் கருப்பு நிற ஆசியா மக்களிடம் இருந்து வந்த நிறைய தனிப்பட்ட செய்திகளை Jeenu ஒப்பு கொண்டார். Jeenu போன்ற உத்வேகம் கொண்ட மனிதர்களோடு இணைந்து எல்லைகளை கடப்பது என்பது மாடலிங் உலகத்தில் தெற்கு ஆசியாவை இன்னும் பிரகாசிக்க செய்யும் நேரத்திற்கு வழி செய்யும்.

இலங்கையின் ஐந்து வகையான சமூக ஊடக பாவனையாளர்கள்.

இன்றைய நவீன தொடர்பாடல் உலகத்தில் சமூக ஊடகங்களில் கணக்கினை கொண்டிராத மக்களை அடையாளம் கானுவது மிகவும் கடினமான ஒரு விடயம்.
நாளொன்றில் Twitter, Facebook, Instagram, Snap chat என பல்வேறு சமூக ஊடகங்களில் எமது விரல்கள் சங்கமித்து கொண்டுதான் இருக்கிறது. ஏன் குழந்தை ஒன்று பிறந்தவுடன் குழந்தையின் பிறப்புச்சான்றிதலின் வெளியீட்டுக்கு மு Facebook account திறந்த சம்பவங்கள் ஏராளம். அதேவேளையில் பாப்பரசர் பிரான்ஸிஸ் அண்மையில் Instagram இணைந்து தனது அன்பையும் ஆசீர்வாதத்தையும்  பகிர்கிறார் என்பது இக் காலத்தில் இயல்பான விடயமே.
மேலும் சமூக ஊடகங்களின் மூலமாக பல்வேறு ஆக்கத்திறன் மிக்க ஆளுமையாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

அதேவேளையில் பொதுவாகவே சமூக ஊடகங்களில் இயல்பான பண்புகள் மற்றும் குறிபிட்ட வார்த்தை பிரயோகங்கள் அனைவராலும் பின்பற்றப்படுகிறது. ஆகவே எமது கண்ணோட்டத்தில் இலங்கை மக்களினால் பொதுவாக பின்பற்றப்படும் பண்புகளை அதேவேளையில் அதிகம் பகிறப்படும் நடவடிக்கைகள் சற்று அவதானத்தில் கொண்டு வர முயற்சித்தோம்.

  1. ஐயோ  என்னால் அது இயலாது.

நம் நண்பர்களின் வட்டத்தில் பொதுவாக ஒரு நாளில்  நடைபறும் அனைத்து விடயங்களையும் பகிரக் கூடியவர்களாக இருப்பார்கள். உதாரணமாக தனது அறையை சுத்தம் செய்வது தொடக்கம் தனது நண்பன் அல்லது நண்பியிடம் ஏற்பட்ட முரண்பாடுகளை பகிரக்கூடியவர்களாக இருப்பார்கள். இத்தைகய நண்பர்களுடன் அமர்ந்து உனக்கு என்ன தான் பிரச்சனை என்ற கேள்விகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் நிச்சயமாக எழுந்திருக்கும். இத்தைகய விடயங்கள அவர்கள் பதிவிடுவதற்கான காரணம், அனைவரது கவனத்தையும் தன்பால் ஈர்ப்பதற்காகவே அவர்கள் இத்தைகய செயல்களில் ஈடுபடுகின்றார்கள்.

2. அதிகமான பதிவுகளை பதிவிடும் சமூக ஊடக அங்கத்தவர்களும் அவர்களினால் பாதிக்கப்பட்டவர்கள்.

பார்ப்பவர்களை அதிகம் வெறுப்பிற்கு உள்ளாக்குவது போல் வேண்டுமென்றே அதிகம் பதிவிடுவார்கள். உதாரணமாக, “I ate hamsters for breakfast.” “நான் ஒரு நாயை நாளை திருமனம் செய்யப் போகின்றேன்.” இவ்வாறு பதிவிடுபவர்கள் விநோதம் என எண்ணி, பதிவிடும் சில பதிவுகள் பார்ப்பவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.

3. இல்லை இல்லை இவர் எனது தங்கச்சி/ அண்ணா போன்றவர்.

ஆம். நிச்சயமாக சகல காதலும் ஏதோ ஒரு நட்பு புள்ளியில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது. ஆயினும் இன்றைய காலத்தில் ஆண், பெண் இருபாலாரும் மிகவும் நெருக்கமாக பழகுகிறார்கள். அதேவேளையில் சமூக ஊடகங்களில் அவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் பார்பவர்களை அவர்கள் இருவரும் காதலர்கள் என எண்னுவதற்கு வழி வகுக்குகின்றது. எனினும் அவர்கள் பதிவிட்ட பதிவுகளின் அடிப்படையில்  நீங்கள் இருவரும் காதலர்களா என வினவினால் “இல்லவே இல்லை. அவர் எனக்கு ஒரு அண்ணனை போன்றவர், அல்லது அவள் என்னுடைய தங்கை போல ஒருத்தி” என பதில் கூறுவார்கள்.  மேலும் “இவர் என்னுடைய சிறந்த நண்பர்” என்று பதில் கூறுவார்கள்.

4. நான் அனைவருடனும் இணைந்தே இருப்பேன்.

ஆம். நிச்சயமாக இத்தகைய விடயங்கள் மனதிற்கு நெருடலாகத் தான் சில வேளைகளில் உணருவேன். ஏன் எனின் ஏதேனும் இரவு விருந்திற்கு சென்றால் நிச்சயமாக ஒரு நிழற் படத்தை எடுத்து சமூக ஊடகங்களில் அனைவரையும் Tag செய்து பதிவிடுவேன். எனினும் அப் பதிவினை கவனிக்கும் சிலர் நான் ஏதோ பந்தாவிற்காக செய்கின்றேன் என்று எண்ணுகிறார்கள். எனினும் நான் பதிவிடும்  நிழற்படங்கள் என் ஞாபகத்திற்காக மட்டுமே என்பதை நான் மட்டுமே அறிவேன்.

5. ஆகா ஆகா இந்த  கிரிக்கட் meme யை பார்.

இன்றைய காலகட்டத்தின் கிரிக்கட் பெரிதும் பேசும் பொருளாக மாறியுள்ளது. எனினும் நான் கிரிக்கட் பற்றி meme share செய்பவர்களை கணக்கில் கொள்ளவில்லை. இருப்பினும் நான் இன்றைய காலகட்டத்தில் கிரிக்கட் மீது உண்மையான காதல்களை கொண்ட  ரசிகர்களை பற்றித்தான் பேச போகின்றேன். ஆம் 2010 ல் நான் ஒரு மேலத்தேய இசைக் குழுவின் மீது அன்பு கொண்டிருந்தேன். அதன் காரணமாக அவர்களை பற்றி அதிகமான விடயங்களை share செய்திருக்கின்றேன். அதே போன்று நான் கிரிக்கட் மீது அன்பு கொண்ட இலங்கையர்களும் இன்றைய கிரிக்கட் நிலைமையை கண்டு பரிதவித்து meme share செய்கின்றேன். ஒரு கட்டத்தில் ரசிக்கும் படியாக meme கள் இருந்தாலும் இப்போது சலிப்பு தட்டிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

இத்தகைய விடயங்களை தவிர்த்து கொள்ள Facebook ல் unfollow செய்யக் கூடிய வாய்ப்பு உள்ளது அதேவேளையில் எமது நண்பர்களது பட்டியலில் இருந்தும் நம்மிடம் சேராத நபர்களை unfriend செய்யும் வாய்ப்பும் உள்ளது

உண்மையாகவே சமூக ஊடகங்கள் என்பது மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவே  உருவாக்கப்பட்டது. எனினும்  இன்றைய  காலகட்டத்தில்  பல்வேறு ரீதியில் சமூக ஊடகமானது தவறான முறையில் உபயோகிக்கப்படுகின்றது. எனினும் இந்த விடயம் தொடர்பில் அதிகளவில் நாம் கவலையடைய தேவையில்லை. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழ மொழிக்கேற்ப அளவுடன் சமூக ஊடகத்தை கையாண்டால் அனைத்து விடயங்களும் இனிதாய் அமையும்.

index.php