Blog Page 3

Hand Bag Secrets – உங்க Hand Bag ஐ அழகாக்கும் ரகசியங்கள்..!

உங்கள் கைப்பையில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லையா? இந்த உதவிக்குறிப்புகள் உங்கள் பணப்பையை ஒழுங்கமைக்கவும், கைப்பையின் குழப்பத்தை ஒருமுறை வெல்லவும் உதவும்!

உங்கள் பணப்பையில் என்ன இருக்கிறது?

விஷயம் என்னவென்றால், பிஸியாக இருக்கும் பெண்களாகிய நாம், வேலைக்காகவும், நம் குழந்தைகளுக்காகவும், வாழ்க்கையின் அனைத்து ஆச்சரியங்கள் மற்றும் அவசர நிலைகளுக்கும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாங்கள் சிறப்பாக தோற்றமளிக்க விரும்புகிறோம், எங்களை சிறப்பாக உணரவும், எந்தவொரு சிக்கலைத் தீர்க்கவும் தயாராக இருக்க விரும்புகிறோம். ஆனால் நமக்குத் தேவையான அனைத்தையும் சுமக்கத் தொடங்கும் போது ​​தயாராக இருப்பதைக் காட்டிலும் ஒழுங்கற்றதாகவும் குழப்பமானதாகவும் உணர ஆரம்பிக்கிறோம்.

குறிப்பிட தேவையில்லை, கூடுதல் எடையை சுமப்பது நம் ஆரோக்கியத்திற்கு சிறந்ததல்ல. அந்த அதிக கனமான பணப்பை, முதுகு மற்றும் கழுத்து திரிபு, மோசமான தோரணை மற்றும் எண்ணற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

ஏன் இவ்வளவு தொந்தரவு?

அதிக சாமான் எடை உங்களுக்கு தொந்தரவாக இருக்கிறது என்றால், மாற்றத்திற்கான நேரம் இது!
நமது பணப்பையை வெளியே எடுத்து, இந்த படிகளை கடந்து ஒருமுறை நம் பைகளை சுத்தம் செய்து ஒழுங்கமைப்போம்.. வாங்க!

உங்கள் பணப்பையில் நீங்கள் வைத்திருக்க வேண்டிய பொருட்கள்:

1. ஒரு சிறிய பையில் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ செட் (hands free / headphones) கொண்ட செல்போன்.

2. கை துடைப்பான்கள் (wet wipes, wet tissues), தனித்தனியாக தொகுக்கப்பட்டவை, பேனா மற்றும் சிறிய நோட்பேட் (mini notebook, pen).

3. உறையுடன் சன்கிளாஸ்கள் (glass with case).

4. ஒரு லிப் பாம்/ லிப்ஸ்டிக் (lip balm or lipstick), நெயில் ஃபைல், பவுடர் (powder) போன்றவற்றைக் கொண்ட மேக்கப் பை.

5. ஆஸ்பிரின், மருந்து, பேண்ட்-எய்ட் மற்றும் மகளிருக்கான மருத்துவத் தேவைகள் (tablets and medicines which are needed).

6. கிரெடிட்/ டெபிட் கார்டுகள் (credit card, debit card), பணம் மற்றும் ஐடியுடன் வாலட் (pouch with money and Identity cards).

7. காப்பீட்டு அட்டைகள் மற்றும் வேறு அவசியமான கார்டுகள். வேறு அவசியமான கார்டுகள்.

உங்க Hand Bag ஐ ஒழுங்கமைத்துக்கொள்ளுங்க.
நீங்கள் வரிசைப்படுத்தும்போது ஒவ்வொரு பொருளையும் துடைக்கவும். வெளிப்புறத்தில் ஒட்டும் அல்லது அழுக்காக இருக்கும் எந்தவொரு பொருளையும் உங்கள் பையில் மீண்டும் வைக்க வேண்டாம்.

உங்கள் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ இயர்பட்களை (airpods) சேமிக்க ஒரு சிறிய பையைப் பயன்படுத்தவும், அவற்றை உங்கள் செல்போனில் பாக்கெட்டில் வைக்கவும்.

உங்கள் பர்ஸ் அல்லது பணப்பையில் உள்ள உள் விசைச் சங்கிலியில் கிளிப் (key chains) மூலம் உங்கள் சாவிகளைப் பாதுகாக்கவும். நீங்கள் வேலை மற்றும் வீட்டிற்கு தனித்தனி முக்கிய சங்கிலிகளை உருவாக்க விரும்பலாம், மேலும் ஒவ்வொரு பயணத்திற்கும் உங்களுக்குத் தேவையான சாவிகளை மட்டும் எடுத்துச் செல்லவும்.

உங்கள் பையில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் மேக்கப்பை அலசவும். நீங்கள் ஒரு நாள் முழுவதும் வெளியே செல்கிறீர்கள் மற்றும் உங்களுக்கு டச்-அப்கள் (touch ups) தேவைப்பட்டால், அன்றைய தினம் உங்கள் பர்ஸில் செருக கூடுதல் பையைத் தயார் செய்யவும்.

மாதவிடாயின் போது உங்கள் பையில் தூக்கி எறிய கூடிய, பெண்களுக்கான சுகாதார தயாரிப்புகளுக்கு ஒரு தனி பையை தயார் செய்யவும்.

கம்(gum), புதினா(mint), பல் துலக்குதல், பற்பசை (tooth paste tooth brush) ஆகியவை பையின் எடையை அதிகரிக்கின்றன, மேலும் கசிவு மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஒரு சிறிய கொள்கலனில் ஒரு வகை கம் அல்லது ப்ரீத் ஃப்ரெஷ்னரைத் (breath freshener) தேர்ந்தெடுத்து, அதை உங்கள் பையில் ஒரு சிறிய மாத்திரை கொள்கலனில், ஒரு பேண்ட்-எய்ட் மற்றும் கை துடைப்பான்களுடன் (wet wipes) சேர்த்துக்கொள்ளவும்.

உள்ளமைக்கப்பட்ட பேனா ஹோல்டருடன் நோட் பேடைப் பயன்படுத்தவும், பயன்பாட்டில் இல்லாதபோது உங்கள் பேனாவை எப்போதும் மூடி வைக்கவும்.

ஒவ்வொரு இரவிலும் உங்கள் பணப்பையில் இருந்து ரசீதுகளை உடனடியாக அகற்றவும் அல்லது அவற்றை ஆவணப்படுத்தவும் சேமிக்கவும்.. உங்கள் மொபைலில் புகைப்படங்களை எடுக்கவும்.
ரசீதுகளை எடுத்துச் செல்வது உங்கள் பணப்பையில் “குப்பை” சேர்ப்பது மட்டுமல்லாமல், தவறான கைகளில் தவறாகப் பயன்படுத்த கூடிய கிரெடிட் கார்டு தகவலைக் கொண்டிருக்கலாம்.

வாரத்திற்கு ஒருமுறை உங்கள் பணப்பையை சுத்தம் செய்யுங்கள்.
வாரத்திற்கு ஒருமுறை உங்கள் பணப்பையை சுத்தம் செய்ய நேரத்தை அமைக்கவும். நீங்கள் வாரந்தோறும் செய்தால், முழு செயல்முறையும் எளிமையாகவும் சமாளிக்கக்கூடியதாகவும் இருக்கும். உண்மையில், பெரும்பாலும் சுத்தமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பணப்பையில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மறுசீரமைக்க ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

அடர் வண்ணங்கள், வேடிக்கையான மற்றும் எளிய வடிவமைப்பிற்குச் செல்லவும்.
வெளிர் நிற பைகளை விட அடர் நிற பைகள் கறை மற்றும் கீறல்களை மிக எளிதாக மறைக்கும். நீங்கள் கருப்பு அல்லது பழுப்பு நிறத்துடன் ஒட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை – Gold டோன்கள், சாம்பல் மற்றும் நடுநிலை வண்ணங்கள் அல்லது வேடிக்கையான வடிவங்களில் ஏராளமான அழகான பர்ஸ்கள் நீண்ட காலத்திற்கு அழகாக இருக்கும். வெளிர் நிற பைகள் விரைவாக அழுக்காகி, உங்கள் பையின் ஆயுளைக் குறைக்கும்.

சுவிட்ஸர்லாந்து எப்படி கறுப்பு பணத்தின் நிலமானது? – சுவிஸ் Bank இன் கதை!

உலகின் மிக அழகான நாடுகளில் சுவிட்ஸர்லாந்தும் ஓன்று. வருடத்தில் எட்டு மாதங்கள் வெண்பனி மலைச் சிகரங்களால் சூழப்பட்டிருக்கும் இந்த சின்னஞ் சிறிய நாட்டின் பத்து சதவீத நிலப்பகுதிகள் மட்டுமே விவசாயம் செய்வதற்கு உகந்தது. சுமார் எட்டு கோடிக்கும் குறைவான மக்கள் தொகையினைக் கொண்ட இந்த நாட்டில் சில இயந்திரங்கள், நுண்ணிய இயந்திர பகுதிகள், கைக்கடிகாரங்கள், ஆடைகள் போன்றவை சிறிய அளவில் உற்பத்தி செய்யப்பட, உணவுப் பொருட்கள், பெட்ரோல், மின்சாரம் உட்பட அனைத்து அடிப்படை தேவைகளும் இறக்குமதியை நம்பியே உள்ளது. இங்கே நிதி சேவையும் சுற்றுலாவும் தான் நாட்டுக்கு மிகப்பெரிய வருமானத்தினை ஈட்டிக்கொடுக்கும் பொக்கிஷங்களாக உள்ளன என்றால் மிகையில்லை. இந்த தேசத்தின் மொத்த தொழிலாளர்களில் 71 சதவீதத்தினர் வங்கித் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

உலகின் முதலீடுகளுக்கு மிகப் பாதுகாப்பானது எனப்படும் ட்ரிபிள் ஏ சான்று பெற்ற மீச்சுவல் பெனிபிட் நிறுவனங்களில் 28 சதவீதத்திற்கு மேல் சுவிட்சர்லாந்திலேயே உள்ளது. வங்கித் தொழில் சுவிஸ் நாட்டின் தேசிய தொழில். இந்த வங்கிகளில் அந்நிய நாட்டினரின் கணக்குகள் சேவிங்ஸ், கரண்ட் அக்கௌன்ட் என்று பிரிவுகளெல்லாம் இருக்காதாம். குறிப்பிட்ட அளவிற்குமேல் ஏற்றுக்கொள்ளப்படும் பணமெல்லாம் “wealth management”, அதாவது சொத்து நிர்வாகம் என்ற அடிப்படையில் ஏற்கப்படுகின்றனவாம். சில வங்கிகளில் மாத்திரம் ஓன்று அல்லது ஒன்றரை சதவீத வட்டி கொடுக்கப்பட, சில வங்கிகளில் அந்த வட்டி வீதம் கூட கொடுக்கப்படுவதில்லை. எல்லா வங்கிகளிலும் பணத்தை பாதுகாக்க கட்டணம் அறவிடப்படும். இதுதான் சுவிஸ் வங்கிகளின் பிரதான வருமானம் என்பதால் இந்த கட்டணங்கள் கூட ஒரே மாதிரியானவையாக இருப்பதில்லை. வங்கிகளின் மொத்த இருப்பு நாட்டின் செல்வமாக மதிப்பிடப்படுவதால் உலக அரங்கில் சுவிஸும் பண வலிமை மிகுந்த நாடாக மதிக்கப்படுகின்றது.

சுவிஸ் ஐரோப்பாவின் நடுப்பகுதியில் அமைந்தாலும் அது ஐரோப்பிய யூனியனில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் பட்டியலிலும் இடம்பெற விரும்பாமல் தனித்திருந்தாலும், கடந்த 2002ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர் பட்டியலில் இணைந்துகொண்டது. இரண்டாம் உலகப் போரின்போது எந்த அணியுடனும் சேராமல் நடுநிலை வகித்ததுடன், ஜெர்மனி இங்கிலாந்து என இரண்டு நாடுகளுக்குமே ஆயுதம் விற்று இருந்தது சுவிஸ். அசையாத பாறை போல தன் நடுநிலையினை தொடர்ந்தும் நிலை நாட்டியதனால் முதலீடுகளுக்கு நம்பிக்கையான இடம் என்கிற பெயரைப் பெற்றது. இதனால் உலகின் பல பகுதிகளிலிருந்தும் யுத்த காலத்தில் பலர் தங்கள் சேமிப்புகளை பாதுகாப்பு காரணங்களுக்காக சுவிஸ் வங்கிகளில் கொண்டுவந்து குவிக்கத் தொடங்கினராம். இதை பயன்படுத்தி தமது நாட்டின் வருமானத்தினை அதிகரிக்க சுவிஸ் அரசு வங்கிகளுக்கான சில சிறப்பான சட்டங்களை இயற்றியது.

சுவிஸ் சட்டப்படி வங்கி கணக்குகள் பற்றிய விபரங்கள் படு ரகசியமாக பாதுகாத்து வைக்கப்படும். இதற்காக 1934ஆம் ஆண்டு சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி வாடிக்கையாளர்களின் கணக்கு பற்றிய விபரங்களின் ரகசியத்தினை பாதுகாக்க தவறும் வங்கியினருக்கு கடுமையான ஜெயில் தண்டனை வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் சேமிக்கும் பணத்தின் நதி மூலம் ரிஷி மூலம் இங்கு பார்க்கப்படுவதில்லை. பிற நாடுகளில் சட்டத்திற்கு புறம்பான பணமாக இருந்தாலும் சுவிஸ் வந்துவிட்டால் அது குற்றப்பணமாக என்பது பார்க்கப்படாது. எனினும் இப்படிப்பட்ட வசதிகளை வழங்குவதன் மூலம் தமது நாட்டுக்கு ஏமாற்றுக்காரர்களின் புகலிடம் என்கிற அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதனையும் அவர்களது சட்டப்பிரிவு உறுதி செய்கின்றது. அதன்படி சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் எவரேனும் கடுமையான கிரிமினல் குற்றவாளி என சுவிஸ் நீதிபதி ஒருவர் தீர்ப்பளிப்பாராயின் நிச்சயம் குறிப்பிட்ட நபரின் வங்கிக்கணக்கு விவரம் வெளியிடப்படும். ஆனால் இதுவரையில் இந்த சட்டப்பிரிவு பயன்படுத்தப்படவேயில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

– ப்ரியா ராமநாதன்.

அச்சுறுத்தல்களை சந்திக்கும் முத்துராஜவெல சரணாலயம்

முத்துராஜவெலவில் சுமார் 5000 ஹெக்டேயருக்கும் மேற்பட்ட மதிப்புமிக்க சதுப்பு நிலைங்களை அழிப்பதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளதாக முத்துராஜவெல பாதுகாப்பு அமைப்பின் தலைவர் அனில் ஜயமஹா குற்றம் சாட்டுகின்றார்.
அவர், ‘முத்துராஜவெலயில் சுமார் 5000 ஹெக்டேயருக்கும் மேற்பட்ட மதிப்புமிக்க சதுப்புநிலங்களை அழிக்க அனுமதித்த போது அரசாங்கத்தின் திறமையின்மையை நாங்கள் அடையாளம் கண்டோம்’என்று குறிப்பிடுகின்றார்.

‘இந்த சரணாலயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதியளிக்காத வகையில், இலங்கையில் உள்ள சுற்றுச்சூழல் சட்டங்கள், மக்களின் வாழ்வாதாரத்திற்கு சுற்றுச்சூழல் அமைப்புகளின் விலைமதிப்பற்ற பங்களிப்பு ஆகியவை அடையாளம் காணப்படவேண்டும்’என்றும் வலியுறுத்தினார்.

இவரது கூற்றை வலுப்படுத்தும் வகையில் 5000 ஹெக்டயருக்கும் மேற்பட்ட வனாந்தரப் பகுதி முத்துராஜவல சரணாலய நிலப்பகுதிக்கு சொந்தமான ஒன்றாக இருக்கின்ற போதிலும் 1285 ஹெக்டயர் நிலப்பகுதி மாத்திரமே சரணாலயத்திற்கு சொந்தமானதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க கணக்குள் பற்றிய குழுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக குடியிருப்புகள், காளான்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், தீவிபத்துகள் மற்றும் மணல் அள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விதமான சட்டவிரோத ஆக்கிரமிப்புகளால் முத்துராஜவல சரணாலய நிலப்பரப்பு குறைந்து வருகிறது. 1992 இல் மீள் வரைபு செய்யப்பட்ட முத்துராஜவெல பெருந்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்தப் பரப்பில் முக்காற்பங்கு ஏற்கனவே இழக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முத்துராஜவெல சதுப்புநிலம், விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 1996ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதியன்று சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டின் ஆசிய ஈரநிலக் குழுவால் நாட்டில் உள்ள 41 சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களில் ஒன்றாகவும் இது பெயரிடப்பட்டது.

இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் ஆய்வின்படி, முத்துராஜவெலவில் 209 வகையான விலங்குகள் மற்றும் பூச்சிகள் மற்றும் 194 இனங்கள் உள்ளன. மரங்கள், 40 வகையான மீன்கள், 31 வகையான ஊர்வனங்கள், 102 வகையான பறவைகள் மற்றும் 48 வகையான பட்டாம்பூச்சிகள் உயிர் வாழ்கின்றன.

இலங்கையின் சுற்றுலா கைத்தொழிலுக்கு பாரியபங்களிப்புகளை வழங்குகின்ற இந்த சரணாலயத்தின் பெரும்பாலான பகுதிகள் துண்டாடப்பட்டு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்ற நிலைமை தொடர்கின்றமை குறித்து தற்போது அரசாங்க கணக்குகள் பற்றிய குழு கவனம் செலுத்தியுள்ளது.

அதனடிப்படையில், அக்குழுவானது, ‘இலங்கைக்கு மட்டுமே சொந்தமான கண்டல் தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்களைக் கொண்ட இந்த சரணாலயம் மனித செயற்பாடுகளால் அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளது. எனவே அங்கே இடம்பெறும் மனித செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’என்று வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு கட்டளையிட்டுள்ளது.

ஆய்வறிக்கைகளின் பிரகாரம் தொழிற்சாலைகள் மற்றும் விலங்குப் பண்ணைகளில் இருந்து வெளிவிடப்படும் கழிவுகள் கால்வாய்கள் ஊடாக நீர்கொழும்பு களப்பில் கலப்பதனால் வனாந்தரச் சூழல் மாசடைந்து மீன்களின் இனப்பெருக்கம் தடைப்படுகின்றதோடு அரிய வகை மீன் இனங்கள் உயிரிழந்துள்ளன என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வனாந்தரச் சூழலில் சட்டவிரோத மதுபான வியாபாரம் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சதுப்பு நிலங்களை நிரப்புதல் என்பவற்றினால் முத்துராஜவல சரணாலயம் பொலிவிழந்து காணப்படுவதாக அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

காடுகளுக்கு தீவைத்தல் மற்றும் வீதி நிர்மாணிப்பு என்பவற்றினால் பறவைகள் மற்றும் விலங்குகள் இடம்பெயர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் வேறு இடங்களில் இருந்து வரும் பறவைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் அவ்வதிகாரிகள் குறிப்பிடுகின்றார்கள்.

இதேநேரம், சூழலியலாளர் பஸ்லின் மொஹமட் ‘முத்துராஜவல என்பது ஒரு சதுப்பு நிலம் என்பதன் அடிப்படையில் இயற்கையாகவே வெள்ளப் பெருக்கை தடுக்கும் சூழல் அமைப்பை கொண்டுள்ளது. கொழும்புநகரில் உள்ள கழிவுநீர் முத்துராஜவல வனப்பகுதியில் கலந்து விடுவதால் வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கின்றன’ என்று குறிப்பிட்டார்.

மேலும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் நெடுஞ்சாலை முத்துராஜவல வனப்பகுதியினை நிலப்பகுதியை துண்டாடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தை அண்மித்துள்ள தொழிற்சாலைகள் முத்துராஜவல வனப்பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக அபகிரிக்கும் நிலைமை இருப்பதுடன் இந்தவிடயம் தொடர்பில் அரசாங்கம் மௌனம் காப்பதாகவும் பஸ்லின் சுட்டிக்காட்டுகின்றார்.

6000 ஹெக்டெயருக்கும் அதிகமான முத்துராஜவல சுற்றுச்சூழல் மற்றும் சரணாலயப் பகுதியில் உள்ளடங்கியுள்ள அரச மற்றும் தனியார் காணிகள் சரியான முறையில் இன்னமும் அடையாளம் காணப்படாதிருப்பதுடன், இவற்றைவிரைவில் அடையாளம் காண்பதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அசமந்தப் போக்குடன் செயற்படுகின்றமை கள ஆய்வின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக காணிகள் அளவிடப்படுதல், வாழிடங்களுக்காக நிரப்பப்படுதல் தொடர்பில் காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, கமநல சேவைகள் திணைக்களதில் பல்வேறு முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அந்நிறுவனங்களிடத்தில் கோரிய போதும் அதற்குரிய பதில்கள் வழங்கப்படவில்லை.

இதேவேளை, தனியார் நிறுவனம் ஒன்றினால் சுமார் 1200 ஏக்கர் பரப்பளவுகொண்ட காணி அபகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் வனப்பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவது வனாந்தரப் பகுதிக்கு அழிவை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

வனாந்தரப் பகுதிக்கு அழிவை ஏற்படுத்தும் சட்டவிரோத நில அபகரிப்புக்கள் தொடர்பில் கணக்காய்வாளர் அலுவலகமும் கவனம் செலுத்தியுள்ளனது. குறித்த அலுவலகமானது, வனாந்தரப்பகுதியில் இணைக்க வேண்டிய பகுதிகளை அடையாளமிடும் நோக்குடன் வர்த்தமானிக்கு அமைய 1285 ஹெக்டெயர் நிலப்பரப்பின் எல்லையின் அளவைப் பணிகளை நிறைவு செய்துள்ளதோடு எல்லைகளை அடையாளமிடும் பணிகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

1996ஆம் ஆண்டு 947/13 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய முத்துராஜவல சரணாலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதும், இதுவரை இதற்கான எல்லைகள் முறையாக இதுவரை வரையறுக்கப்படவில்லை.

அத்துடன், முத்துராஜவல சூழல் கட்டமைப்பு 2569 ஹெக்டெயர் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபைஅடையாளம் கண்டுள்ளநிலையில், 1285 ஹெக்டெயர் மாத்திரம் எவ்வாறுசரணாலயமாகஅடையாளம் காணப்பட்டுள்ளது என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. மேலும் 1990 ஒக்டோபர் 15ஆம் திகதி இலங்கை இணைந்து கொண்ட ரம்ஸா சமவாயத்துக்கு அமைய இந்தச் சதுப்பு நில வலயத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் இலங்கைக்கு உள்ளது.

அதனடிப்படையில், முத்துராஜவலசரணாலயத்தின் அழிவினை தடுப்பதற்காக வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு கீழ் அதன் நிருவாகத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் பாதுகாக்கப்பட்ட இயற்கை பூங்காவாக முத்துராஜவல சரணாலயத்தை அறிவிக்க வேண்டும் என்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு பரிந்துரைவழங்கியுள்ளது.

அத்துடன், முத்துராஜவல சரணாலயத்தை பாதுகாப்பதற்குப் பொறுப்பு வாய்ந்த சகல தரப்பினரையும் உள்ளடக்கிய ஒன்றிணைந்த குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக உயிர் பல்வகைமை தொடர்பில் ஆய்வுகள் மற்றும் அவற்றின் முடிவுகள் வனஜீவராசிகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கிடையில் உரியநேரத்தில் பகிரப்படவேண்டும் என்றும், இதில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று அரசாங்க பொதுக்கணக்குகள் பற்றிய குழு வலியுறுத்தியுள்ளது.

முத்துராஜவல பகுதியில் நடக்கின்ற துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு அரசாங்க மட்டத்தில் போதுமானளவு கொள்கைகள் இருக்கின்ற போதிலும் அவை முறையாக அமுல்படுத்தப்படுவதில்லை என ஏர்த் லங்கா இளைஞர் வலையமைப்பின் இணை ஸ்தாபகர் சுதர்ஷ டீ சில்வா தெரிவிக்கின்றார்.

‘முத்துராஜவலவனப்பகுதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் இலங்கை மட்டும் அல்லாமல் ஏனைய நாடுகளுக்கும் அது சூழல் அடிப்படையில் ஆபத்தை ஏற்படுத்தும். வளிமாசு மற்றும் நீர் மாசு உட்பட இடம்பெயரும் பறவைகளின் இனப்பெருக்கம் மற்றும் இருப்பு என்பவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.’ என்றுஅவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-அஹ்ஸன் அப்தர்

புனல் Short Flim – Nadi Review

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி Arsath Sanan தயாரிப்பில் MUTUR FILM ACADEMY youtube தளத்தில் வெளியான குறுந் திரைப்படம் தான் ‘புனல்’. இக்குறுந் திரைப்படமானது Arsath Sanan மற்றும் உதவி இயக்குனர் Rasly Akthaf இனால் இயக்கப்பட்டுள்ளது. இதற்க்கான cinematography Ahsan இனால் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இக்குறுந் திரைப்படத்திற்க்கான எடிட்டிங் வேலைகள் Ahsan இனால் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

இக்குறுந்திரைப்படமானது பொழுது புலரும் காட்சியோடு ஆரம்பமாகிறது. அதனை தொடர்ந்து ஒரு நடுத்தர வயதுடைய பெண் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருக்கும் காட்சி தொடர்கிறது. வேலையின் நடுவே அழைப்பேசி வந்தவுடன் பாத்திரங்களை கழுவுவதற்க்காக திறந்து வைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாயினை மூட மறந்து அழைப்பேசியில் மூழ்கி போகிறார். அடுத்த காட்சியில் ஒரு சிறுவன் குளிப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் பக்கெட்டில் நிறைந்த பின்னும் தண்ணீர் குழாயினை மூடாது அதில் விளையாடிக் கொண்டிருக்கிறான். அடுத்த காட்சியில் நடுத்தர வயதுடைய ஒரு ஆண் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கும் போது தனது அலுவலக தோழனைக் கண்டவுடன் நீர் டியூபினை கீழே போட்டு விட்டு கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். அவர்கள் கலந்துரையாடும் போது மூன்று நாட்கள் குடும்பமாக கண்டி நோக்கி பிரயாணம் செய்ய திட்டமிட்டிருப்பதும் பகிரப்படுகிறது.

இப்போது ஆரம்பத்தில் காட்டப்பட்ட நடுத்தர வயதுடைய பெண், சிறுவன் மற்றும் இறுதியாக காட்டப்பட்ட ஆண் என மூவரும் ஒரே வாகனத்தில் ஏறி கண்டி நோக்கி பயணிக்க தொடங்குகின்றனர். ஆமாம் உங்கள் கணிப்பு சரி! மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பயண வழியில் பசிக்காக உணவும் தாகத்துக்காக தண்ணீர் போத்தலும் வாங்கி ஓர் இடத்தில் அமர்ந்து உண்ண ஆரம்பிக்கின்றனர். உணவில் காரம் அதிகமாக இருந்தமையால் அதை ஒரு கடியுடன் அப்பாவிடம் கொடுத்து விட்டு சிறுவன் தண்ணீர் போத்தலோடு ஓரமாக செல்கிறான். தண்ணீர் போத்தலை திறந்து கையினை கழுவிக் கொண்டிருக்கிறான். அதுவும் முக்கால்வாசி தண்ணீர் முடியும் வரை. இதை கண்டு கதையோடு கதையாக தண்ணீரை விரயம் செய்த அப்பா திட்டி கையை துடைக்க பேப்பர் உபயோகித்திருக்கலாம் என சொல்ல, மகனை திட்டுவதை சகித்துக் கொள்ள முடியாத அம்மா சமாதனம் செய்து அந்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க என அந்த காட்சி அங்கேயே நிறைவடைகிறது.

மீண்டும் மூவரும் பயணத்தை தொடர்கின்றனர். பயணத்தின் வழியில் தனது பழைய நண்பர் ஒருவரை இனங்கண்டு கதைத்துக் கொண்டிருக்கும் போது அவரது எதிர்பாராத அழைப்பினை அவர்களின் வாகனம் திசை மாறுகிறது. அவர்கள் மூவரும் எங்கு சென்றனர்? அங்கு அவர்கள் கண்ட காட்சிகள் என்ன? அங்கு அவர்களுக்கு என்ன நேர்ந்தது? இது தான் மீதி கதை. நான் எதிர்பாராத திருப்பங்களை கொண்டதாக இவர்களது மீதி கதை அமைந்திருந்தது. இறுதி காட்சியின் போது இணைக்கப்பட்டிருந்த பாடல் என் வாழ்வில் இதுவரை நான் காணாத சோக உணர்வொன்றை வித்திட்டு மறைந்துக் கொண்டது. அதன் ஒவ்வொரு வரிகளுமே ஆழமான வலிகளின் பிரதிபலிப்பு. அந்த பாடலின் இசை, அதை பாடியவர் என அனைத்துமே மிகவும் நேர்த்தியாக இருந்தது. சில நிமிடங்களுக்கு மனதில் ஆழ்ந்த சோகத்தை தவிர வேறெதுவுமே நிலைக்கொண்டிராதபடி அந்த பாடல் அமைக்கப்பட்டிருந்தது.

மொத்தமாக 13 நிமிடம் 16 வினாடிகள் நீளமுடைய இக்குறுந்திரைப்படத்தில் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்திருந்தது ஆனால் ஒலிப்பதிவில் இன்னும் சற்று அதிகமான முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கலாம். வசனங்களை இன்னும் யதார்த்தமான நடையில் எழுதியிருக்கலாம். மிகவும் சிறப்பாக எதிர்பாராத திருப்புமுனைகளோடு நேர்த்தியாக கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்ற பாடல் வர்ணிக்க வார்த்தைகள் அற்ற அருமையான படைப்பு. கதாபாத்திரங்களின் நடிப்பு சிறப்பானதாக அமைந்திருந்தது. இக்குழுவினரின் ஒவ்வொரு படைப்புமே அருமையான படைப்புகளாக வெளிவரும் இம்முயற்சி விடாது தொடர நாடி சார்பாக வாழ்த்துக்கள். நீங்களும் இக்குறுந்திரைப்படத்தை பார்த்து இறுதி காட்சி பற்றிய உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

8.5/10

கோடை காலத்திற்கு ஏற்ற ஆரோக்யமான ஜூஸ் வகைகள்!

அடிக்கிற வெயில் மண்டைய மட்டுமா பிளக்குது? நாக்கு வறண்டு உடம்பெல்லாம் தகதகன்னு கொதிக்கிறமாதிரி இருக்கிறப்போ ஜில்லுனு பிரிட்ஜில இருந்து இரசாயனம் கலந்த கூல் ரிங்க  எடுத்து குடிச்சா ஆரோக்கியமா இருக்குமா என்ன? அதுக்கு பதிலா ஆரோக்கியமா ஏதாவது குடிச்சா? வாங்க  இந்த கோடை காலத்திற்கு ஏற்ற மாதிரி சில ஜூஸ் வகைகளை எப்படி தயாரிக்கிறதுன்னு  இன்னிக்கு பார்க்கலாம்…

தர்பூசணி  ஜூஸ்

தர்பூசணி என்பது இந்த கோடை காலத்தில் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஓன்று. அதிகமான நீர் சத்தினையும் நார் சத்தினையும் மினரல்களையும் கொண்ட தர்பூசணியுடன்    ஒரு சில பொருட்களை சேர்த்து ஜூஸ் தயாரிக்கும்போது உடல் ஆரோக்கியத்திற்கும் சரும பொலிவிற்கும் மிகுந்த பலனளிக்கக்கூடியதாக இருக்கும். விதைகளை அகற்றிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிவைத்திருக்கும் தர்பூசணியினை, தேவையான அளவு சீனி, எலுமிச்சை சாறு, சிறிய துண்டு இஞ்சி, உப்பு சிறிதளவு  இட்டு நன்கு மிக்சியில் அடித்து வடித்தெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் டம்ளரில் ஐஸ் கட்டிகளுடன்  ஏற்கனவே ஊரவித்திருக்கும் கசகசாவினை (கசகசா உடலுக்கு நல்ல குளிர்ச்சியினை கொடுக்கக்கூடியது) இட்டு அதற்குமேல் வடிகட்டி வைத்திருக்கும் ஜூஸினை ஊற்றி அருந்திப்பாருங்கள் சுவையும் ஆரோக்கியமும் சேர்ந்தே உங்களை ஈர்த்தெடுக்கும்.

full-filled jars on chopping board

கறிவேப்பிலை ஜூஸ்

தலை மயிர் உதிர்வு, ஹீமோகுளோபின் குறைபாடு போன்றவற்றுக்கு மிகச் சிறந்த எளிய தீர்வுதான் இந்த கறிவேப்பிலை ஜூஸ். கழுவி  சுத்தப்படுத்திய கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் கலந்து கறிவேப்பிலை நன்கு மசிந்து அறையும்வரையில் அரைத்துக்கொள்ளவேண்டும் . பின்பு தேவையான அளவிற்க்கு இன்னும் நீரூற்றி  வடித்தெடுத்து இனிப்புச் சுவை சேர்க்காமல் அருந்துவதென்பது  மிகச்சிறந்த பலனைக்  கொடுக்கக்கூடியது . உடல் எடையினை குறைக்க முயற்சி செய்பவர்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸினை அருந்துவது நல்லது. two clear glass bottles with lime juice on white wooden table

நெல்லிக்காய் ஜூஸ் (ஆம்லா ஜூஸ் )

நம்முடைய சருமத்திற்கும் தலை முடிக்கும் மிகுந்த ஊட்டதினை அளிக்கக்கூடிய  மருத்துவ  பயன்மிக்கதொரு  ஜூஸ்  வகைதான்  இந்த பெரிய நெல்லிக்காய் ஜூஸ். விதைகளை நீக்கி பொடியாக நறுக்கிவைத்திருக்கும் பெரிய நெல்லிக்காய் துண்டுகளுடன், கொஞ்சம் கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு, கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து மிகக்சியில் நன்கு அரைத்தெடுத்து வடிகட்டியபின் ஐஸ் கட்டிகள் கலந்து அப்படியே குடிக்கலாம் அப்போதுதான் அதன் மருத்துவ பலன்  நமக்கு முழுமையாக கிடைக்கும். ஆனால் கொஞ்சம் இனிப்பாக இருந்தால்தான்  பிடிக்கும் என்று  நினைப்பவர்கள்   நாட்டு சர்க்கரை அல்லது  தேன்  கலந்து குடிக்கலாம்.  (வெள்ளை நிற சீனியை இந்த ஜூஸிற்கு முழுமையாக தவிர்த்துவிடுங்கள்)

green and white plastic cup with black straw

பீட்ரூட் ஜூஸ்

இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் நிறைந்ததுதான் இந்த பீட். துண்டுகளாக நறுக்கிவைத்துக்கொண்ட பீட்ரூட்டுடன், எலுமிச்சை, உப்பு, பனங் கல்கண்டு, இஞ்சி துண்டு, தேவையான அளவு தண்ணீர் கலந்து அரைத்து வடிகட்டி ஐஸ் கலந்து பரிமாறலாம். (வடிகட்டிய சக்கையைக்கூட வீசாமல் முகத்திற்கு பூசிக்கொள்ளலாம்)

red beverage in mason jars

காரட் ஆரஞ்சு ஜூஸ்

நன்கு சுத்தப்படுத்தி துண்டுகளாக வெட்டிக்கொள்ளப்பட்ட கேரட்டுடன், ஆரஞ்சுப் பழங்களை முழுமையாக விதைகளை நீக்கிவிட்டு (விதைகள் கசப்பு தன்மையை கொடுக்கக்கூடியவை என்பதால் அதனை நீக்கிவிடுவது அவசியம்) சேர்த்து தண்ணீர் கலந்து நன்றாக மிக்சியில் அடித்தெடுத்து தேன் அல்லது சிவப்பு சீனி கலந்து அருந்தலாம்.sliced orange fruit and green leaves on brown wooden table

வெள்ளரிக்காய் ஜூஸ்

வெள்ளரிக்காயை தோலினை சீவி சுத்தப்படுத்தி, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.மிக்சியில் நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டு,சிறிய துண்டு  இஞ்சி, எலுமிச்சை சாறு , நான்கைந்து புதினா இலைகள்  எலுமிச்சை சாறு, கொஞ்சம் மிளகுத்தூள்  மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து  வடிகட்டி அருந்தலாம்!round green fruit

எலுமிச்சை புதினா ஜூஸ்

வெறுமனே எலுமிச்சையினை மாத்திரம் பிழிந்து அருந்தாமல், எலுமிச்சை புதினா கைப்பிடியளவு, சிறிய துண்டு இஞ்சி, சர்க்கரை, கொஞ்சம் மிளகுத்தூள்  கலந்து அரைத்தெடுத்து வடிகட்டி ஐஸ் கட்டிகளை இட்டு குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அதிகப்படியாக வழங்கும்.a bottle of lemonade and a glass of lemonade on a cutting board

இஞ்சியின் காரமும், எலுமிச்சையின் புளிப்பும் ஒரு புதுவிதமான புதுமையான சுவையினை தரக்கூடியது. மேலும் எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. வெதுவெதுப்பான நீரில் அரை பாதி எலுமிச்சை சாறு பிழிந்து 2-3 முறை தினமும் குடிப்பது ஜீரண மண்டலத்திற்கும், இதயம், கண் போன்ற உறுப்புகளுக்கும் நல்லது என உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்து, ஃப்ரீ ரேடிக்கல்களை சேதப்படுத்தாமல் செல்களைப் பாதுகாக்க உதவுகின்றதாம்.  இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு பக்கவாதம் மற்றும் இருதய நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது. இதனால்தான் நாம் எந்த ஜூஸ் வகைகளை செய்யும்போதும் சுவைக்காக மட்டுமன்றி ஆரோக்கியத்திற்காகவும் அதில் கொஞ்சம் எலுமிச்சையினை கலந்துவிடுகின்றோம்.

-ப்ரியா ராமநாதன்

“விட்னஸ்” திரைப்படம் பற்றி ஓர் பார்வை!

மலக்குழி  மரணங்கள் என்னும் சமகால அநீதிக்கு எதிரான குரலே  இயக்குநர்   தீபக் அவர்களது ‘விட்னஸ்’ திரைப்படம். “Sony Liv OTT “ தளத்தில் வெளியாகி  பலரது  கவனத்தினை   ஈர்த்த, நம் மனசாட்சியை   உலுக்கக்கூடிய  சமூகம் சார்ந்த ஓர்  நல்ல திரைப்படம்.Witness, On SonyLIV, Is A Compelling Social Drama Powered By Great  Storytelling

 மலக்குழியில் இறங்க நிர்பந்திக்கப்பட்டு உயிரிழந்த தன் மகனின் மரணத்திற்கு நியாயம் கேட்க அதிகாரத்தை எதிர்க்கும் தாயின் போராட்டம்தான் கதையின் கரு.

மனித கழிவுகளை மனிதனே அள்ளும் சாதியக்கொடுமை இந்தியாவில் காலம் காலமாக தொடர்ந்து வரும் ஓன்று. இந்த நவீன காலத்திலும் பல்வேறு தூமைப்பணியாளர்கள்  பாதுகாப்பில்லாத காரணத்தினாலும், விஷவாயு தாக்குதலினாலும் தொடர் இறப்புகளை சந்தித்தே வருகின்றனர். உயிருக்கு  பாதுக்கப்பில்லாத இந்த வேலையில் கூட  மிகவும் சொற்பமான  சம்பளமே அவர்களுக்கு  வழங்கப்படுகிறது. இதுபோன்ற சமூக அவலங்களை பற்றி கூறும் சில படங்கள் சமகாலங்களில் வெளிவருவதென்பது மிகவும் ஆரோக்கியமான ஓன்று.

கதையின் பிரகாரம்,  

கணவனை இழந்த தூய்மைப் பணியாளரான இந்திராணி (நடிகை ரோஹினி)தனது மகன் பார்த்திபனுடன் வாழ்ந்து வருகிறார். தன்னைப்போல தன் சாதியில் உள்ள மற்றையவர்களைப்போல தன் மகனும் ஒரு தூய்மைப்பணியாளனாக  வந்துவிடக்கூடாது என்பதில்  உறுதியாக   இருக்கும் இந்திராணி தன் மகனை பொத்திப்பொத்தி வளர்க்கிறார் .தன் மகனை  நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று கனவு காண்கிறார். Witness Movie Review: A highly impactful, multi-layered social commentary-  Cinema express

இந்த உலகமே தனக்கு தன் மகன் மட்டும்தான்  என்று தனது முழு வாழ்கையினையும் மகனுக்காகவே அர்ப்பணித்து வாழும் ஓர் தாய் அவள். ஒருநாள் இந்திராணி இல்லாத  சமயத்தில் அவரது மகன் பார்த்திபன் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சாக்கடையை  சுத்தம் செய்ய  கட்டாயப்படுத்தப்பட்டு மலக்குழியில் இறக்கி விடப்படவே  விஷ வாயு தாக்கத்தினால்  இறந்து விடுகிறார். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் தமது   பண பலத்தினால், காவல்துறையினரை தமக்கு சாதகமாக்கிக்கொள்ளவே  பார்த்திபனை குடிகாரனாக சித்தரித்து வழக்கை தவறாக  திசைதிருப்ப முயல்கின்றனர் காவல்துறையினர்.Watch Full Movie Online in HD on Sony LIV

பார்த்திபன் இறந்துபோனது  தெரிய வர, உடைந்து போகிறார் இந்திராணி. இதற்கு காரணமானவர்களை தண்டிக்க சட்டத்தின்   துணை கொண்டு அதிகாரத்தை எதிர்க்கத் துணியும் அவரது போராட்டம் இறுதியில் வென்றதா? இல்லையா? என்பதே கதை. உயர் அதிகாரிகளின் அழுத்தங்கள் எப்படி இருக்கின்றன, அதை எதிர்த்தால் என்ன மாதிரியான பிரச்னைகளை தொழிலாளர்கள் சந்திக்க நேரிடும் என்பதெல்லாம் காட்சிகளினூடே சொல்லியிருக்கும் விதம் நயக்கத்தக்கது. மலக்குழி மரணங்கள், அதன் மீதான அதிகார வர்க்கத்தின் அலட்சியப்போக்கு, அதற்கு காரணமான  சாதிய வேர், சுவாரஸ்யமான நீதிமன்ற உரையாடல்கள், எதிர்பாராத க்ளைமாக்ஸ் என அழுத்தமான திரைக்கதையால்  அதிகார வர்க்கத்திற்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது ‘விட்னஸ்” திரைப்படம். Witness Movie (2022) | Release Date, Review, Cast, Trailer, Watch Online at  SonyLIV - Gadgets 360

ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை பிறகு வேகம் எடுக்கிறது. ஒரு சமூக அவலத்தை வணிகத்தனம் இல்லாமல் அழுத்தமான கதை, கதாபாத்திரங்களோடு மனதை தொடும்படி கொடுத்திருக்கும் விட்னஸ் குழுவினர்கள் பாராட்டுக்களுக்குறியவர்கள்  .  அசுரன், ஜெய் பீம், போன்ற படங்களின் வரிசையில் இந்த திரைப்படம் நமக்கு ஒரு படிப்பினை கற்றுக்கொடுக்கும் என்ற கருத்திற்கு யாருக்கும் மாற்று சிந்தனை இருக்கப்போவதில்லை.Witness (2022) Movie: Cast | Trailer | OTT | Release Date | Songs - News  Bugz

 

-ப்ரியா ராமநாதன்

Lion dates இன் வரலாறு!

Dates …! பேரீச்சம்பழம் எனக்கூறியதுமே சட்டென நமக்கு நினைவுக்குவரும் brand எது ? கண்டிப்பாக அது “Lion dates” என்பதாகத்தான் இருக்கும் . நமக்கு மட்டுமல்ல இந்தியாவின் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, என தென் இந்தியா முழுவதிலும் சுமார் 80 சதவீத மார்க்கெட்டினை தன்னுடைய கைக்குள் வைத்திருக்கும் ஒரே நிறுவனம் lion dates impex Pvt Lld!

இந்த மாபெரும் நிறுவனத்தினை எஸ். பொன்னுத்துரை என்கிற ஒரு தனி மனிதர் கட்டியெழுப்பிய வெற்றிக்கதையினையே இந்தவாரம் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
திருச்சிப் பக்கத்திலுள்ள ஓர் குக்கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் பொன்னுத்துரை .அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அநேகர் இலங்கைக்கு குடிபெயர்ந்து அங்கே சிலகாலம் சம்பாதித்துவிட்டு மீண்டும் இந்தியா திரும்பும் வழக்கம் இருந்து.Get Inspired !!!!!!!: Inspiring Personality - Mr.P.Ponnudurai, Lion Dates

“கொழும்புச் சம்பாத்தியம்” என அதற்கு பெயர். இலங்கை சென்றால் தம் வாழ்க்கைத்தரமும் வறுமையும் மாறும் என எண்ணி பொன்னுத்துரை குடும்பமும் புலம்பெயர, தன்னுடைய பள்ளிப்படிப்பினை இலங்கையிலேயே தொடர்ந்தார் பொன்னுத்துரை .பள்ளியில் இருந்து வந்ததும், மளிகைக்கடை ஒன்றில் பொட்டலம் கட்டும் வேலை பார்க்கின்றார் பொன்னுத்துரை.

நாட்கள் நகர்ந்தனவேயொழிய அவர்களது வாழ்க்கை மாறவில்லை. அதேநேரம், இலங்கை அரசும் இந்தியாவில் இருந்து வந்தவர்களை மீண்டும் இந்தியாவிற்கே சென்றுவிடுமாறு வற்புறுத்தியது. இதனால் 1974ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பினர் பொன்னுத்துரை குடும்பத்தினர். பள்ளிப்படிப்பினை நிறுத்திவிட்டு திருச்சியில் உள்ள ஓர் மாளிகைக்கடையில் மாதம் எண்பத்தைந்து ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் பொன்னுத்துரை, சில வருடங்கள் ஓட இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் குறைந்த சம்பளத்திற்கு அதிக வேலை பார்ப்பது ? நாமே சொந்தமாக ஓர் மளிகைக்கடை வைக்கலாமே என முடிவெடுகின்றார்.

எனினும் எல்லாவற்றுக்கும் முதலீடு வேண்டுமே? வங்கிகளில் கடனுக்காக அலைய, கடன் மறுக்கப்படுகின்றது. எனினும் தெரிந்த வக்கீல் ஒருவர் வங்கி மேலதிகாரியிடம் பொன்னுத்துரை பற்றி நல்ல விதமாக சிபாரிசு செய்ய ரூபாய் நான்காயிரம் கடனாக கிடைக்கின்றது. ஒருவாறு மளிகைக்கடை ஒன்றினை ஆரம்பித்தாயிற்று. மாதங்கள் சில உருண்டோட, அந்தோ பரிதாபம்!கடை நஷ்டத்தில் இயங்குவது புரிந்தது, மென்மேலும் நஷ்டம் மென்மேலும் கடன் என்கிற நிலையில் கடையினை மூடிவிடுகின்றார் பொன்னுத்துரை.

அந்த நேரத்தில் தான் சபீனா பவுடர் டிஸ்ட்ரிபியூட்டர் தேவை என்கிற விளம்பரம் வருகின்றது பத்திரிகையில். உடனே அதற்கு முயற்சிக்க அதிஷ்டவசமாக அந்த டிஸ்ட்ரிபியூட்டர் உரிமை இவருக்கே கிடைத்துவிடுகின்றது. அதேநேரத்தில் திருச்சியில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் மாதம் எண்ணூறு ரூபாய் சம்பளத்திற்கு ஜுனியர் அசிஸ்டன்ட் வேலையும் கிடைக்கவே, இரண்டு தொழிலையும் செய்துகொண்டு ஒருவாறு மளிகைக்கடை மூலம் வந்த கடன்களையெல்லாம் அடைத்துவிடுகின்றார்.

அப்போதுதான் அவரது வாழ்வில் ஓர் திருப்புமுனை ஏற்படுகின்றது. திருச்சி சாலையோரம் ஒன்றில் தள்ளுவண்டியில் பேரீச்சசம்பழங்களை மலைபோல் ஒருவர் குவித்து வைத்துக்கொண்டு கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தார். அந்த பழங்கள் பார்க்கவே பிசுபிசுப்பாக ஏராளமான ஈக்கள் மொய்த்தவண்ணம் காணப்பட்டன. Souq Mubarakiya | Kuwait City, Kuwait | Attractions - Lonely Planet

உடனே பொன்னுத்துரை அந்த தள்ளுவண்டிக்காரரிடம் சென்று ” ஏங்க இப்படி ஈ மொய்க்க மொய்க்க பழங்களை தூசியில் வைத்து விற்பதைவிட , அவற்றை பக்கற்றுக்களில் போட்டு விற்கலாம்தானே?” என கேற்க, அந்த தள்ளுவண்டிக்காரருக்கோ செம கடுப்பு போலும்” இதவேர வேலையில்லாம பக்கற்றுக்களில் போட்டுக்கொடுக்கணுமா? இவ்வளவு சொல்லுறியே வேணும்னா நீயே பாக்கட் பண்ணித்தா என எரிச்சலுடன் கிண்டலாக கூற அந்த நொடிகளில் பொன்னுத்துரை மனதில் ஓர் மின்னல் பளிச்சிட, நான் ஏன் இவற்றை பாக்கட் பண்ணி கடைக்கு கடை விநியோகிக்கக்கூடாது? எப்படியும் Premium Vector | The man had a new idea an idea in the form of an electric light bulb the man held up his finger

சபீனாவை கடைக்கு கடை டிஸ்ட்ரிபூட் பண்ணத்தான் வேண்டும் அதோடு சேர்த்து இந்த பேரீச்சசம்பழம் பக்கற்றுக்களையும் போட்டுவிடலாம் என திட்டம் தீட்டிக்கொண்டு 1978ஆம் ஆண்டு முதன்முதலாக அவற்றை விற்க ஆரம்பிக்கின்றார். இவரிடம் பேரீச்சம் பக்கற்றுக்களை வாங்கிய கடைக்காரர்கள் சேல்ஸ் நன்றாக போவதை அவதானித்து இன்னும் அதிகமான பக்கற்றுக்களை கொண்டுவந்து போடும்படி சொல்லுகின்றனர்.

விடுவாரா நம் பொன்னுத்துரை? காலையிலும் மாலையிலும் சபீனாவையும், பேரீச்சம் பக்கற்றுக்களையும் டிஸ்ட்ரிபூட் பண்ணுவது, இதற்கு நடுவில் அரசு வேலை, இரவு மீண்டும் பக்கற்றுக்களை தயார் செய்வது என அயராது உழைக்கின்றார். கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம் சூடுபிடிக்க ஒருநாளைக்கு ஐநூறு கடைக்கு ஆர்டர் கொடுக்கும் அளவிற்கு வியாபாரம் பெருகுகின்றது.

இப்போது அவர் துணிச்சலாக ஒரு முடிவெடுகின்றார். அதாவது அரச வேலையை கைவிட்டுவிட்டு முழுநேரமாக பேரீச்சம் பிசினஸில் இறங்குகின்றார். அன்றைய காலகட்டத்தில் துணிந்து ஒருவர் அரச வேலையை விடுவது என்பது எவ்வளவு ரிஸ்க் இல்லையா? ஆனால் வெற்றியாளர்கள் எப்போதுமே ரிஸ்க் எடுக்க தயங்காதவர்கள் என்பதற்கு பொன்னுத்துரையும் ஓர் உதாரணம் நமக்கு!

இதுநாள்வரை பழங்களை பாக்கட் பண்ணி கொடுத்துக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கு அவர் பெயர் ஒன்றினை வைத்திருக்கவில்லை. இனி முழுநேர தொழிலாக அதை செய்ய தீர்மானித்தபின் தன்னுடைய தொழிலுக்கு ஓர் ” brand name” அவசியம் என்பதை உணர்கின்றார். இருப்பதிலேயே இரும்புச் சத்து அதிகம் உள்ள ஒரேயொரு பழம் பேரீச்சம் பழம். சத்து நிறைந்த வலிமையான ஓர் உணவுப்பொருளை நான் பக்கற்றுக்களில் போட்டு விற்கிறேன், எனவே அதற்க்கான பெயரும் வலிமையுடன் தொடர்புடையதாக இருக்கவேண்டும் என எண்ணி, இந்த உலகத்திலேயே வலிமையானது எது என யோசிக்கின்றார். Lion DesertKing Dates Pack 250 grams - Reviews | Nutrition | Ingredients | Benefits | Recipes - GoToChef

உடனே சிங்கம்தான் அவரது மனதில் வந்து நிற்கின்றது. அடுத்த நொடியே “lion dates” என பெயரை முடிவு செய்துவிடுகின்றார். நேரவிரயமும் பண விரயமும் இன்றி பெயரை தேர்வு செய்தாயிற்று , ஆனால் இப்பொது லோகோ ? குறைந்தது பத்தாயிரம் பிரின்ட் ஆர்டர் கொடுத்தால்தான் குறைந்த விலையில் பிரிண்ட்களை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அவ்வளவு பணம் கையில் இல்லை, மேலும் ஒரே முறையில் அவ்வளவு பிரிண்ட் தேவையும்படாது. என்ன செய்யலாம்?

யோசித்தவருக்கு ஓர் ஐடியா! அது தேர்தல் காலம் . தேர்தலில் ஓர் அரசியல் கட்சியின் சின்னம் சிங்கம். அவர்களிடம் அச்சடிக்கப்பட்டு எஞ்சிய ஏராளமான பிரின்ட்களை பெற்றுவந்து , அதில் உள்ள சிங்கங்களை வெட்டி ஒட்டிவிடுகின்றார் தன் பேரீச்சை பக்கற்றுக்களில். கொஞ்சம் கஞ்சத்தனமாக இன்று நமக்கு தோன்றினாலும், என்னவொரு சிறப்பான மாற்றி யோசனை பார்த்தீர்களா?

அடுத்து தமிழ்நாடு முழுவதும் விற்பனையை அதிகப்படுத்த முடிவுசெய்து , வானொலியில் முதன்முதலாக Lion dates விளம்பரங்களை கொடுக்கின்றார். இதன்மூலம் வியாபாரம் இன்னும் பெருகுகின்றது. மாதம் ஐம்பதாயிரம் வருமானம் வருமளவிற்கு நிறுவனம் வளர்ந்து நின்றது.Lion Dates Syrup - 100% natural | Hindi Version | Lion Dates - YouTube
இதனையடுத்து தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, என தன் பிசினஸை விரிவுபடுத்தியவர், மும்பையிலும் கால்தடம் பதிக்கும் முகமாகவும், பேரீச்சை பழங்களை மொத்தமாக கொள்வனவு செய்யும் வகையில் அதற்கான ஏஜென்ட்களை சந்திக்கும் எண்ணத்துடனும் மும்பை பயணமானார். ஆனால் அங்கே அவர் ஓர் பிரச்சினையை எதிர்கொள்கின்றார்.

என்னவெனில், பொன்னுத்துரைக்கு தமிழ் மட்டுமே தெரியும் ஹிந்தியோ, ஆங்கிலமோ அறவே அறிந்திராதவர் அவர். மும்பையில் பெரும் கஷ்டதிற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகுகின்றார். எனினும் ஒருவாறு தன்னை தயார் படுத்திகொண்டு ஏஜென்ட்களை சந்திக்கின்றார். இவரது நல்லநேரமோ என்னவோ அங்கே ஒரு ஏஜென்டுக்கு தமிழ் தெரிந்திருக்க, அவர்மூலம் பெரிய ஆர்டர் ஒன்றும் கிடைக்கின்றது.

ஒருவேளை குறிப்பிட்ட அந்த ஏஜென்ட்க்கு தமிழ் தெரிந்திராவிடின் எவ்வளவு பெரிய ஆர்டரை நாம் இழந்திருக்கக்கூடும் என எண்ணிய பொன்னுத்துரைக்கு அப்போதுதான் இன்னொரு மொழியின் அருமை புரிகின்றது . ஒரேயொரு மொழியை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டமுடியாது . நாம் மிகப்பெரிய அளவில் வளர வேண்டுமாயின் , மிகப்பெரிய வெற்றிகளை ஈட்ட வேண்டுமாயின் கண்டிப்பாக இரண்டு மூன்று மொழிகளையாவது தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என உணர்ந்திருந்த பொன்னுத்துரை ஊர் திரும்பியதும் ஒரு ஆங்கில ஆசிரியரை நியமித்து ஆங்கிலம் கற்றுக்கொள்கின்றார்.

1995 ஆண்டு மஸ்கர்ட் அரசிடமிருந்து பொன்னுத்துரைக்கு ஓர் அழைப்பு வருகின்றது . மஸ்கட்டில் உள்ள ஓர் பெரிய நிறுவனம் பேரீச்சசம்பழத்திலிருந்து ஒரு சிரப் தயாரித்திருந்தது. தாம் தயாரித்த அந்த சிரப்பினை உலகத்தில் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் மார்க்கெட் செய்யவே அவர்கள் பொன்னுத்துரையை நாடினர் . அவரும் சிரப்பினை பரீட்சித்து பார்த்துவிட்டு இந்தியாவில் அதனை விற்பனையில் இறக்குகின்றார். மூன்று வருடங்களின்பின் அந்த மஸ்கட் நிறுவனம் ஏதோ சில காரணங்களால் மூடப்பட , அங்கே வேலை பார்த்த முக்கியமான சிலரை அழைத்து வந்து தானே சிரப் தயாரித்து விற்பனையில் விடுகின்றார் . அதுதான் ” lion dates syrup!Lion Dates Jam with Mango Pulp - Buy Dates Jam and Get Dates Halwa Fre

ஈரான் , எகிப்து , சவூதி , துனீஷியா , அல்ஜீரியா , ஜோர்டான் , மஸ்கட் என பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுக்கு பத்தாயிரத்துக்கும் அதிகமான டன் பேரீச்சம் பழங்களை இறக்குமதி செய்து “lion” எனும் brand nameஇல் lion jam, Lion kashmir honey, lion arabian dates, lion deserving dates, lion halwa, lion deseedeed dates என பல்வேறு தயாரிப்புகளாக விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் முன்னூறு கோடி.Lion Dates | Home delivery | Order online | Bharati Nager undefined Chennai

எனினும் இந்த வருமானதையெல்லாம் தாண்டி தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுப்பது என்னவென்றால், என்னதான் தொழில்நுற்பம் வளர்ச்சியடைந்தாலும் இன்னும் பேரீச்சம் பழங்களில் இருந்து விதைகளை அகற்ற எந்தவொரு இயந்திரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. மெனுவலாகத்தான் இன்றுவரையில் இந்த விடயம் நடைபெறுகின்றது என்பதால் தன்னால் ஏராளமான கிராமப்புற பெண்களுகும் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிகிறது என்கிறார் பொன்னுத்துரை.

ஒரு சாதாரண தள்ளுவண்டியில் விற்பனையான பேரீச்சம் பழத்தை உலகம் முழுக்க விற்பனை செய்யக்கூடிய ஓர் பிராண்டாக மாற்றிய பொன்னுத்துரை இந்த தொழில் சுமார் நாற்பது வருடங்களுக்குமேல், போட்டி நிறுவனங்களில் இருந்து தனித்து தெரியவும், விற்பனையில் நிலைத்து நிற்கவும் காரணம் அவரது நிறுவனத்தின் தரமும் நேர்மையும் என்றால் மிகையில்லை. கெட்டுப்போன பழங்களை டன் கணக்கில் கடலில் கொட்டியிருக்கின்றோமே தவிர ஒருமுறை கூட விற்பனைக்கு விட்டதில்லை. இதுதான் எங்கள் வெற்றியின் ரகசியம் என்றுகூறும் பொன்னுத்துரையின் பிசினஸ் அனுபவம் நமக்கும் ஓர் பாடமாக அமையக்கூடும் அல்லவா?

ஆட்டிசம் என்பது ஒரு நோயல்ல… அதுவொரு மனோநிலை!

ஆட்டிசம்..

எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் இருக்கின்றான். தற்போது அவனுக்கு பதிமூன்று வயதாகின்றது. அவனது தாயாரின் கூற்றுப்படி பிறக்கும்போது அவன் எந்தவித நோய் அறிகுறிகளுமின்றி ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவனது ஒரு வயதில் மிகப்பிரபலமான ஓர் அரச வைத்தியசாலையில் அவனுக்கு போடப்பட்ட தடுப்பூசியின் பின்னரே அவனது நடத்தையில் மாறுதல் ஏற்பட்டதாகவும், அங்கே போடப்பட்ட தடுப்பூசியே தனது மகனின் இந்த நிலைக்கு காரணம் எனவும் இன்றுவரையில் குற்றம்சாட்டிக்கொண்டேயிருப்பார். தடுப்பூசியால் ஆட்டிசம் வருவதற்குச் சாத்தியமில்லை என்று பல ஆராய்ச்சிகள் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்ற போதிலும் இவாறான கருத்துக்கள் எப்படி மக்கள் மத்தியில் உலவுகின்றன?blue plastic tube with black string

ஆம் நம்மில் பலருக்கு இன்னுமே முழுமையாக புரியாத அல்லது அது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத ஓர் விடயம்தான் இந்த ஆட்டிசம். இவ்வாறான போதிய விழிப்புணர்வின்மையினை போக்கவும் ஆட்டிசத்தினால் பாதிக்கப்படும் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய தெளிவினை ஏற்படுத்துவதற்காகவுமே ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் திகதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது.two man laughing at each other

தற்போது உலகம் முழுவதும் வெகு வேகமாக அதிகரித்து வரும் குறைபாடுகளில் ஆட்டிசம் மிக முக்கியமானது. குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடே பொதுவாக ஆட்டிசம் எனப்படுகின்றது. இது ஏற்படுவதற்கான காரணங்களாக மரபணு, சாதகமற்ற சுற்றுச்சூழல் போன்றவை காரணங்களாகக் கூறப்பட்டாலும், சரியான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றே கூற வேண்டும்.boy holding block toy

குறிப்பாக ஆட்டிச பாதிப்பானது குழந்தைகளது ஒரு வயது முதல் மூன்று வயதிற்குள் பெரும்பாலும் கண்டறியப்படக்கூடியது. ஆட்டிசத்திற்குள்ளான பல குழந்தைகள் அறிவாற்றல் குறைவானவராகவும், சிலர் சராசரியை விட அதிக அறிவாற்றல் உடையவராகவும் காணப்படுவர் என்பதனால் பெற்றோர்களின் சரியான கவனிப்பின் மூலம் அவர்களை திறமைசாலிகளாக மாற்றமுடியும் என்கின்றனர் நிபுணர்கள். பல குறைபாடுகளை உடையவர்களாக இந்த குழந்தைகள் இருக்கின்றபோதிலும் அதே குழந்தைகளிடம் ஏதோவொரு அதீத திறனும் சேர்ந்தே இருக்கும் என்பதனால் சிறந்த பயிற்சியின் மூலமும் பெற்றோரின் சிரத்தையினாலுமே அந்தத் திறன் வெளிக்கொணரப்படவேண்டும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.A portrait of mother hugging her grown up son with Down syndrome, motherhood concept.

ஆய்வகப் பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியாத இந்நிலையானது குழந்தையின் வளர்ச்சிப்படிநிலைகள், நடத்தைகளைச் சார்ந்தே கண்டறியப்படுகிறது. இலங்கையில்கூட பிரசவத்தின் பின்னர் ஒரு சிறு புத்தகம்போன்ற குறிப்பேட்டினை கொடுத்தனுப்புவார்கள் அதில் பிறந்த ஒரு குழந்தை அதன் வளர்ச்சிப் படிநிலைகளில் அடுத்தடுத்த மாதங்களில் என்னென்ன செய்யவேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.topless person carrying children

(அதில் கூறப்பட்டிருக்கும் விடயங்களிலிருந்து ஏதேனும் மாற்றம் ஏற்படுமாயின் நாம் கட்டாயம் வைத்தியரை அணுகவேண்டும் என அந்த குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்) அதாவது பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வளர்ச்சி இருக்கும் தாயின் முகம் பார்த்து சிரிப்பது, எழுந்து அமர்வது, விரும்பிய பொருளை சுட்டிக்காட்டுவது, பேசுவது என குறிப்பிட்ட மாதங்களில் இந்த வளர்ச்சி தானாக இருக்கவேண்டும். இதையும் மீறி சில குழந்தைகள் பேசத் தெரியாமல் இருப்பார்கள்.woman in gray sweater carrying girl in blue denim jacket

தவிர ஆறு மாதங்களாகியும் தாய் முகம் பார்த்து சிரிக்காமல் குழந்தை இருத்தல், தாயின் கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் இருத்தல், 12 மாதங்களான பின்பும் மழலைச் சப்தங்கள் செய்யாமலிருந்தல், ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல் 18 மாதங்களில் பேசினாலும் ஒரே சப்தத்தையோ, சொல்லையோ திரும்ப திரும்பச் சொல்லுதல், தன் தேவைகளை வெளிப்படுத்த முடியாமை போன்றவை ஆரம்ப அறிகுறிகளாகவும் 18 – 24 மாதங்களில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல், தனியாகவே இருப்பது, கைகளை உதறிக் கொண்டே இருப்பது , ஒரு பொருளையோ, நபரையோ சுட்டிக்காட்ட இயலாமை, கதை கேட்பதில் விருப்பமின்மை தூக்கமின்மை, தூங்கும் நேரம் குறைவு, கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும் வலியை உணராதிருத்தல் போன்றவையும் அடுத்தகட்ட அறிகுறிகளாகும்.kid wearing deadpool shirt

குழந்தை பிறந்த 24 மாதங்களில் பரிசோதனை செய்தால், குழந்தைக்கு ஆட்டிசம் உண்டா, இல்லையா என்பதை அறியலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் அவர்களுக்கான பயிற்சியை எளிதில் தொடங்கிவிடலாம் என்றும், இரண்டு வயதுக்குள் அடையாளம் கண்டுகொண்டால் குணப்படுத்துவது எளிது என்றும் கூறுகின்றனர் நிபுணர்கள். ஆரம்ப அறிகுறிகளையும், மருத்துவரின் அறிவுறுத்தலையும் அலட்சியம் செய்து, நோயை ஏற்க மறுப்பதும், காலம் தாழ்த்துவதும், காத்துக்கொண்டே இருப்பதும், குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தடைகளாக மாறும். எனவே, ஆரம்பத்திலேயே இந்த நிலையினை கண்டறிந்து பயிற்சியும் முயற்சியும் கொண்டு ஆட்டிசத்தையும் வென்று நம் குழந்தைகளை சிறந்த நிலைக்கு கொண்டுவரும் பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்குமே உண்டு என்பதை உணர்வோமாக.two babies and woman sitting on sofa while holding baby and watching on tablet

விழியேவிக் கொல்லுதல் முறையோ!

சகியே

கரைதேடு மென்னெஞ்சை-மீழ

மோகக் கடலிழுத்து

விழியேவிக் கொல்லுதல் முறையோ?woman with brown hair and brown eyes

இதுவென்னத் தீம்பொய்

தகையே

உடற்கண்டும் சாகாத நீ

விழிசுட்டு செத்துப்போயின்

எரியாது விண்மீன்

புளிக்காதோ நந்தேன்?

கலையாத மேகமே

அணையாதத் தீபமே

உன்மத்தமானப் பின்னே

உன் மொத்தமானப்பின்னேwoman in blue shirt standing on water during daytime

 

பொய்க்கூறி ஏது பெற

தேவையென்ன தூதுத் தற?

காணாதத் தாபமே

      போலிப் பொய் சாயமே person holding sun in the sky

என்னவேண்டும் சொல்

எண்ணம் மாறும் சில்

சினங்கொள்வேன்

பின்னுனைக் கொள்வேன்!man in black and white adidas crew neck t-shirt

கண்ணாடிக்கேள்

கடலிடைக் கேள்

கொள்ளிக் கண்பட்டு

இரசங்கரைவதைச் சொல்லும்

 

விழிவழி மதியொழி

நுரைத் தொடலுன்னாலென்னும்

கொள் கொன்றுத் தின்! man and woman kissing under the sun

போகட்டும் போ

பொய் தான் சொன்னாய்

அழகான பொய் சொன்னாய்

ஒறுப்புக் குறைப்பில்shallow focus of a woman's sad eyes

 

குறைய வதைக்கப்படுவாய்

மெல்ல சிதைக்கப்படுவாய்!

நெஞ்சத்து யுவராணி!

மஞ்சத்து மஹராணி!woman in white dress standing on brown soil

 

கருணையே கருணை

மிண்டைக் கண்டு மீழ்தலே கொடுமை


குற்றம் இழைக்காத போதும்

நிவ்வீர்தரு தண்டனைக்கு தலைச்சாய்க்கிறேன்

ஒறுப்பு விளம்பி

வதையுங்கள் சிதையுங்கள்

இவன் உங்களாட்சிக்குறியவன்!

கைதியே!

களவாணித் தேனியே!

நல்லதுன் ஒப்புதல்

உருக்கப்படும் உன்னுடல்

கன்னங்கடிக்கப்படுவாய்a woman stares into a man's eyes lovingly

 

உதட்டால் உதைக்கப்படுவாய்

தென்றல் கூடி வருமொரு வேளை

உடுத்திறள் சூழ் மாலை

மஞ்சமேடை

கயவனுன் உயிற்குடிப்பேன்

கடைசியாசைக் கட்டிலில் சொல்லலாம்!man and woman kissing each other

ஒன்றுதான் உயிர் ராணியே

என்னாசையும் இருதய ஓசையும்

இங்கே

இப்பொழுதே

தண்டனையை இயக்குங்கள்

மழைக் காலமாதலால்

உடு உச்சிகொடுக்கும் காலம்

வெகு தொலைவில்………woman touch rainy glass

– ஹஜன் அன்புநாதன்

சரித்திர நாவல்களின் நாயகன் சாண்டில்யன்!

‘‘ஒரு படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மவுசு இருக்கும். ஆனால், நான் எழுதும் புத்தகங்களுக்கு 500 ஆண்டுகள் மவுசு இருக்கும். அதனால்தான் நான் எழுத்துத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்’

– சாண்டில்யன்-

‘சாண்டில்யனுடைய ‘கடல் புறா’ நாவலைப் படித்தபிறகுதான், நான் நீண்ட கடல் பயணம் செய்ய விரும்பினேன்’

-விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்- (ஆனந்த விகடன்)

இந்த டிஜிட்டல் யுகத்திலும் அன்றுதொட்டு இன்றுவரையில் எத்தனையோ எழுத்தாளர்கள் சரித்திர நாவல்களை எழுதிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் ஒருவர் இறந்தபிறகும் அவரது சரித்திர நாவல்களுக்கு ஓர் தனித்துவமான அங்கீகாரம் இருக்கிறது என்றால் அது சாண்டில்யனுக்கு மட்டும்தான். எத்தனை முறை மறுபதிப்பு செய்யப்பட்டாலும் அவருடைய நாவல்களுக்கு என்று தனிப்பட்ட வாசகர்கள் உண்டு. அவற்றை வெளியிடும் பதிப்பகத்தாருக்கும் ஒருபோதும் விற்பனை குறைவதில்லை.

கல்கியின் பொன்னியின் செல்வன் என்கிற மிகப்பிரபலமான ஜனரஞ்சகமான புதினத்திற்கு மத்தியில் கடல் புறா (மூன்று பாகங்கள் ), மலைவாசல் , யவன ராணி (இரண்டு பாகங்கள்), ஜல தீபம் (3 பாகங்கள்), ராஜ முத்திரை (2 பாகங்கள்) போன்ற மிகப் பிரபலமான சரித்திர நாவல்களையும் விஜய மகாதேவி (3 பாகங்கள்)பல்லவ திலகம், விலை ராணி,மன்னன் மகள்,ராஜ திலகம், கன்னி மாடம்,சேரன் செல்வி,கவர்ந்த கண்கள், ஜீவ பூமி, மஞ்சள் ஆறு,மூங்கில் கோட்டை,சித்தரஞ்சனி,மோகினி வனம், இந்திர குமாரி, இளைய ராணி, நீள்விழி, நாக தீபம், வசந்த காலம்,பாண்டியன் பவனி, நாகதேவி,நீல வல்லி,ராஜ யோகம்,மோகனச் சிலை,மலை அரசி,கடல் ராணி, ஜலமோகினி,மங்கலதேவி,அவனி சுந்தரி,உதய பானு,ராஜ்யஸ்ரீ,ராஜ பேரிகை, நிலமங்கை, சந்திரமதி,ராணா ஹமீர், அலை அரசி, கடல் வேந்தன், பாலைவனத்துப் புஷ்பம்,சாந்நதீபம்,மண்மலர்,மாதவியின் மனம்,பல்லவ பீடம்,நீலரதி என இவர் எழுதிய வரலாற்றுப் புதினங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவரது மேற்கூறிய தொடர்களில் பெண்கள் பற்றிய வருணைகள் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. சிலர் இதை ஆபாச எழுத்து எனவும் கூறினார்கள். அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் ‘சாண்டில்யன்’ எழுதிக் குவித்துக் கொண்டேயிருந்தார்அதிகமான நூல்களை எழுதிய இந்திய எழுத்தாளர்களில் ஒருவர் என்கிற பெருமையும் சாண்டில்யருக்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் ) - நூற்றோட்டம் - கருத்துக்களம்

சாண்டில்யன் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் ‘குமுதம்’ வார இதழின் விற்பனையில் தேக்கம் ஏற்படும்போதெல்லாம் இவரது ஏதேனும் தொடர்களை அறிவித்து, அதன் விற்பனையை அதிகரிக்கச் செய்வார்களாம். அப்படிப்பட்ட சாண்டில்யரின் வாழ்க்கை வரலாற்றினை சற்றுப்பார்ப்போமாயின், இவர் தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையை சேர்ந்த திருஇந்தளூர் எனும் இடத்தில 1910ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி, டி.ஆர்.சடகோபன் ஐயங்காருக்கும், பூங்கோதைவல்லி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர்.

சாண்டில்யனின் இயற்பெயர் எஸ்.பாஷ்யம் என்பது அநேகர் அறியாதவொன்றுதான் போலும் . கல்லூரியில் ‘இன்டர்மீடியட்’ படிப்பினை முடித்த அவருக்கிருந்த தேசிய இயக்க ஈடுபாடு காரணமாக காங்கிரஸ் இயக்கத்தில் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டிருந்தார். வெ.சாமிநாதசர்மா, கல்கி போன்றோருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக ஆனந்தவிகடன், நவசக்தி போன்ற புதினங்களில் சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார். அதுவரை காலமும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்துகொண்டிருந்த நீதிமன்ற வழக்குகளை நல்ல தமிழில் சுதேசமித்திரனில் எழுதியதால், சாண்டில்யன் திறமை பலராலும் பேசப்பட்டதுடன், 1937இல் மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேட்டி கண்டு எழுதும் அளவிற்கு அவருக்கு வாய்ப்புக்கள் உருவாகின.

சாண்டில்யனின் மதிப்புணர்ந்த நிர்வாகம், அவரை உதவி ஆசிரியராகப் பதவி உயர்வு அளித்தது. எனினும் பின்னாளில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக, மீண்டும் நிருபர் பதவி தரப்பட்டது. இதனால் கோபமடைந்த சாண்டில்யன், அந்தப் பதவியிலிருந்து விலகி ‘ஹிந்துஸ்தான்’ வார இதழில் சேர்ந்தார்.
சினிமா மற்றும் நாடகம் பார்ப்பதில் மிகுந்த ஈடுபாடுடைய சாண்டில்யருக்கு ‘ஹிந்துஸ்தானி’ல் பணியாற்றியபோதுதான் திரைப்படத்துறையின் தொடர்பு கிட்டியது.

சுவர்க்க சீமா (1945), என் வீடு (1953) ஆகிய இரு திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுத உதவியதுடன், பிற்காலத்தில் தனது திரைப்படத்துறை அனுபவங்களை சினிமா வளர்ந்த கதை (1985) என்ற புத்தகமாக வெளியிட்டார். பெர்த் ஆஃப் நியூஸ்பேப்பர் என்ற ஆவணப்படம் ஒன்றினையும் தயாரித்து வெளியிட்டுள்ளார் .பின்னாளில் குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தபோதும் அவரால் அதில் அவர் வெற்றி பெறவியளவில்லை என்றே கூறவேண்டும்.

சரித்திரக்கதை சக்ரவர்த்தி சாண்டில்யன், ‘சீனத்துச் சிங்காரி’ என்ற தொடரை ‘குமுதம்’ வார இதழில் எழுதத் தொடங்கியபோது திடீரென நோய்வாய்ப்பட்டார். மரணப்படுக்கையிலும் அந்தக் கதையை எழுதிக்கொண்டிருந்தவர் கதையின் முடிவினை எழுதாமலேயே அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனளிக்காமல், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி இறையடி எய்தினார். 2009ல் தமிழக அரசு சாண்டில்யன் உட்பட்ட 28 எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கவும் அவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கவும் முன்வந்து சம்பந்தப்பட்ட வாரிசுகளிடம் ஒப்புதல் கேட்ட போது, சாண்டில்யனின் வாரிசுகள் அவரது நூல்களை நாட்டுடைமையாக்குவதற்கு மறுத்து விட்டனர் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இந்த ரமழான் சீசனில் கொழும்பின் இப்தார் சலுகைகளுக்கான வழிகாட்டி

புனித ரமழான் மாதம் பிரார்த்தனை பிரதிபலிப்பு மற்றும் சுய ஒழுக்கம் ஆகியவற்றின் முக்கிய மதிப்புகளுடன் நம்மீது உள்ளது. ரமழானின் மிகத் தெளிவான அம்சம் உணவு மற்றும் பானங்களை சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை தவிர்ப்பது  ஆசீர்வதிக்கப்பட்ட மாதம் உலகளவில் ஒத்ததாக இருந்தால் – அது இஃப்தார். அது சரி, இப்தார் – முஸ்லிம்கள் தங்கள் தினசரி ரமழான் நோன்பை சூரிய அஸ்தமனத்தில் முடிக்கும் மாலை உணவு – உணவகங்கள் மற்றும் பிற உணவகங்கள் பலவிதமான உணவுகளுடன் சில அருமையான பருவகால மெனுக்களை வழங்கும் நேரம்.

இப்தார்களை அனைவரும் அனுபவிக்கலாம்- எனவே நோன்புக்குப் பிறகு அல்லது அதற்குப் பிறகும் சில சுவையான விருந்துகளுடன் கூடிய இடங்களை இங்கே பார்க்கலாம்!

 இப்தார் buffets மற்றும் இப்தார் பக்ஸ் இரண்டையும் வழங்குகிறது.

 

  1. Cinnamon Grand Colombo

விலை (இஃப்தார் buffet)

  • Plates Restaurant – ஒரு நபருக்கு LKR 7,500 nett
  • Lagoon Restaurant – ஒரு நபருக்கு LKR 7,500 net
  • நேரம்: மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை
  • முகவரி: 77, காலி வீதி, கொழும்பு 03
  • தொலைபேசி: 0112 437 437

இன்ஸ்டாகிராம்: @cinnamongrandcolombo

பேஸ்புக்: @CinnamonGrandC

இணையதளம்: www.cinnamonhotels.com/cinnamongrandcolombo

 

  1. Cinnamon Lakeside Colombo

விலை (இஃப்தார் buffet): ஒரு நபருக்கு LKR 7,500நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை

முகவரி: 115, சார் சித்தம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு 02

தொலைபேசி: 0112 491 000

இன்ஸ்டாகிராம்: @cinnamonlakeside

பேஸ்புக்: @cinnamonlakeside

இணையதளம்: www.cinnamonhotels.com/cinnamonlakesidecolombo

 

 

  1. Shangri-La Colombo
  • விலை (இஃப்தார் buffet): ஒரு நபருக்கு LKR 8,250 nett
  • நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை
  • முகவரி: Shangri-La Hotel – No. 01, Centre Road, காலி முகம், கொழும்பு 02
  • தொலைபேசி:  0117 888 288

இன்ஸ்டாகிராம்: @shangrilacolombo

பேஸ்புக்: @ShangriLaCMB

இணையதளம்: www.shangri-la.com/en/colombo/shangrila

 

  1. Hilton Colombo Residencies

விலை (இஃப்தார் buffet):

  • ஞாயிறு முதல் வியாழன் வரை – ஒரு நபருக்கு LKR 6,400 nett
  • வெள்ளி முதல் சனி வரை – ஒரு நபருக்கு LKR 6,800 nett
  • நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை
  • முகவரி: 200, யூனியன் பிளேஸ், கொழும்பு 02
  • தொலைபேசி:  0115 344 644

இன்ஸ்டாகிராம்: @hiltoncmbresidences

பேஸ்புக்: @hiltoncmbresidences

இணையதளம்: www.hilton.com/en/hotels/coljttw-hilton-colombo-residences

 

  1. Kingsbury Colombo
  • விலை (இஃப்தார் buffet): ஒரு நபருக்கு LKR 6,800 nett
  • நேரம்: மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை | இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை
  • முகவரி: 48, ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01
  • தொலைபேசி:  0112 421 221

இன்ஸ்டாகிராம்: @thekingsbury

பேஸ்புக்: @TheKingsbury

இணையதளம்: www.thekingsburyhotel.com/

 

  1. The Verandah at Galle Face Hotel 
  • விலை: A la carte menu
  • நேரம்: மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை
  • முகவரி: Galle Face Hotel, 02, காலி வீதி, கொழும்பு 02
  • தொலைபேசி:  0777 222 135 | 0112 541 010

இன்ஸ்டாகிராம்: @gallefacehotel

பேஸ்புக்: @gallefacehotel

இணையதளம்: www.gallefacehotel.com/

 

  1. Chambers Restaurant

விலை:

  • இஃப்தார் (dine-in) menu – LKR 9,200 (இருவருக்கு)
  • இஃப்தார் combo packs
  • Kebab Platter – LKR 7,100 nett
  • Shawarma Platter – LKR 5,400 nett
  • நேரம்: மாலை 6.30 மணி முதல்
  • முகவரி: 48 D, பார்க் ஸ்ட்ரீட், கொழும்பு 02
  • தொலைபேசி:  0772 100 009

இன்ஸ்டாகிராம்: @chambersrestaurants

பேஸ்புக்: @chamberscolombo

 

  1. Mandarina Colombo
  • விலை (இஃப்தார் buffet): ஒரு நபருக்கு LKR 5,500 nett
  • நேரம்: மாலை 6 மணி முதல்
  • முகவரி: 433, A2, கொழும்பு 03
  • தொலைபேசி:  0703 367 122 | 0711 343 313

இன்ஸ்டாகிராம்: @mandarinacolombo

பேஸ்புக்: @Mandarina.Colombo

இணையதளம்: www.mandarinacolombo.com

 

  1. Ramada Colombo
  • விலை (இஃப்தார் buffet): ஒரு நபருக்கு LKR 5,900 nett
  • நேரம்: மாலை 6 மணி முதல்
  • முகவரி: No. 30, சார் மொஹமட் மக்கன் மார்க்கர் மாவத்தை, கொழும்பு 03
  • தொலைபேசி:  0777 864 864

இன்ஸ்டாகிராம்: @ramadacolombo

பேஸ்புக்: @ramadacolombo

இணையதளம்: www.ramadacolombo.com

 

  1. Galadari Hotel
  • விலை (இஃப்தார் buffet): ஒரு நபருக்கு LKR 4,450 ++
  • நேரம்: மாலை 6.30 மணி முதல்
  • முகவரி: 64, லோட்டஸ் வீதி, கொழும்பு 01
  • தொலைபேசி:  0112 544 544 (Ext. 328)

இன்ஸ்டாகிராம்: @galadarihotel

பேஸ்புக்: @GaladariHotel

இணையதளம்: www.galadarihotel.lk

 

  1. Eastern Wok

விலை:

  • திங்கள் முதல் வியாழன் வரை (இஃப்தார் combo packs)
  • இருவருக்கு LKR 2,700
  • நான்கு பேருக்கு LKR 4,500
  • ஆறு பேருக்கு LKR 6,400
  • வெள்ளி முதல் ஞாயிறு வரை (இஃப்தார் buffet) – ஒரு நபருக்கு LKR 3,900 nett
  • நேரம்:
  • Set menu – மாலை 6 மணி முதல்
  • Buffet – மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
  • முகவரி:  38, வழுகாராம வீதி, கொழும்பு 03
  • தொலைபேசி:  0112 576 276 | 0777 039 329

இன்ஸ்டாகிராம்: @easternwok

பேஸ்புக்: @EasternWok

 

  1. Arabian Nights
  • விலை (இஃப்தார் buffet): ஒரு நபருக்கு LKR 3,650 nett
  • நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை
  • முகவரி: 377, காலி வீதி, கொழும்பு 03
  • தொலைபேசி:  0112 301 031

இன்ஸ்டாகிராம் @arabianknights_lk

பேஸ்புக்: @arabianknightslk

இணையதளம்: www.arabianknights.lk

 

  1. Courtyard by Marriott Colombo
  • விலை (இஃப்தார் buffet): ஒரு நபருக்கு LKR 6,600
  • நேரம்:  மாலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை
  • முகவரி: Colombo City Centre – 137, முத்தையா வீதி, கொழும்பு 02
  • தொலைபேசி:  0117 734 400

இன்ஸ்டாகிராம் @courtyardcolombo

பேஸ்புக்: @CourtyardColombo

இணையதளம்: www.marriott.com/en-us/hotels/cmbcy-courtyard-colombo/

 

  1. Marine Grill
  • விலை (இஃப்தார் buffet):
  • திங்கள் முதல் வியாழன் வரை – ஒரு நபருக்கு LKR 3,990 nett
  • வெள்ளி முதல் ஞாயிறு வரை – ஒரு நபருக்கு LKR 4,800 nett
  • நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
  • முகவரி: No. 25, ஸ்டேஷன் அவென்யூ, மரைன் டிரைவ், கொழும்பு 06
  • தொலைபேசி:  0777 300 686 | 0112 364 727

இன்ஸ்டாகிராம் @marinegrill

பேஸ்புக்: @MarinegrillLK

 

Offering exclusively இஃப்தார் packs

 

  1. Mitsis Delicacies

விலை (இஃப்தார் combo packs):

  • Package 01 – இருவருக்கு LKR 7,500
  • Package 02 – நான்கு பேருக்கு LKR 14,500
  • Package 03 – நான்கு பேருக்கு LKR 11,000
  • Package 04 – ஆறு பேருக்கு LKR 14,000
  • நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை
  • முகவரி: 34 A, பகதலே வீதி, கொழும்பு 03
  • தொலைபேசி:  0777 163 090

இன்ஸ்டாகிராம் @mitsisdelicacies

பேஸ்புக்: @mitsis.delicacies

இணையதளம்: mitsis.lk

 

  1. Burley’s

விலை (இஃப்தார் combo packs):

  • Family Colombo – நான்கு பேருக்கு LKR 10,450
  • Double Combo – இருவருக்கு LKR 5,100
  • Classic Combo – ஒரு நபருக்கு LKR 1,700
  • Solo Combo – ஒரு நபருக்கு LKR 2,650

 

  • நேரம்: மாலை 4 மணி முதல்
  • முகவரி: 32, காலி வீதி, கொழும்பு 04
  • தொலைபேசி:  0114 670 670

இன்ஸ்டாகிராம் @burleysfoods

பேஸ்புக்: @burleysfoods

 

  1. Street Burger
  • விலை (combo packs):
  • Combo 1 – LKR 2,590 (dine-in and takeaway) | LKR 3,490 (UberEats மற்றும் PickMe Foods)
  • Combo 2 – LKR 1,990 (dine-in and takeaway)
  • நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை
  • முகவரி:  34, ரம்யா வீதி, கொழும்பு 04
  • தொலைபேசி:  0773 477 733

இன்ஸ்டாகிராம் @streetburgersl

பேஸ்புக்: @StreetBurgerSL

 

  1. Chanas
  • விலை (இஃப்தார் combo pack): நான்கு பேருக்கு LKR 9,900
  • நேரம்: மாலை 4 மணி முதல் (முன் பதிவு செய்ய வேண்டும்)
  • முகவரி: இல. 54, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை, கொழும்பு 06
  • தொலைபேசி:  0117 939 788

இன்ஸ்டாகிராம் @chanas.lk

பேஸ்புக்: @chanas.lk

இணையதளம்: www.chanas.lk

 

  1. Waters Edge

விலை (இஃப்தார் combo pack):

  • இறால் / மட்டன் – நான்கு பேருக்கு LKR 11, 950 nett
  • கோழி – நான்கு பேருக்கு LKR 9,950 nett
  • Vegetable – நான்கு பேருக்கு LKR 7,950 nett
  • நேரம்: டெலிவரிக்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்டர் செய்யப்பட வேண்டும்
  • முகவரி: 316, எத்துல் கோட்டே வீதி, பத்தரமுல்ல
  • தொலைபேசி:  0706 003 344

இன்ஸ்டாகிராம் @watersedgesl

பேஸ்புக்: @WatersEdgeSL

இணையதளம்: www.watersedge.lk

 

  1. Hotel MaRadha
  • விலை (இஃப்தார் combo pack): LKR 2,900 nett
  • நேரம்: மாலை 3 மணி முதல்
  • முகவரி: 31, St. Kildas Lane, Marine Drive, கொழும்பு 03
  • தொலைபேசி:  0706 543 223

இன்ஸ்டாகிராம் @hotelmaradha

பேஸ்புக்: @HotelMaRadha

இணையதளம்: maradha.lk

 

  1. Mohim
  • விலை (இஃப்தார் combo pack): ஒரு நபருக்கு LKR 3,000 (இறைச்சிக்கு LKR 1,000 கூடுதல் கட்டணம்)
  • நேரம்: ஆர்டர்கள் 24 மணி நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது அதிகாலையில் செய்யப்பட வேண்டும்
  • முகவரி: Cloud kitchen
  • தொலைபேசி:  0766 916 680

இன்ஸ்டாகிராம் @mohim.lk

பேஸ்புக்: @Mohim

இணையதளம்: mohim.lk

 

  1. Paan Paan
  • விலை (இஃப்தார் combo pack): LKR 750
  • நேரம்: முந்தைய நாள் மாலை 3 மணிக்கு முன் ஆர்டர் செய்யப்பட வேண்டும்
  • முகவரி: அனைத்து விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்
  • தொலைபேசி:  0117 500 226 (general hotline)

இன்ஸ்டாகிராம் @paanpaanlk

பேஸ்புக்: @PaanPaan.lk

இணையதளம்: paanpaan.com

 

  1. Bakeamazing

விலை (இஃப்தார் combo pack):

  • Platter 1 – LKR 5,000
  • Platter 2 – LKR 6,000
  • Platter 3 – LKR 6,000
  • Exotic platter – LKR 10,000
  • Exotic platter – LKR 11,000
  • Exotic platter – LKR 12,000
  • Exotic platter – LKR 13,500
  • நேரம்: டெலிவரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஆர்டர் செய்யப்பட வேண்டும்
  • முகவரி: 8A, 1வது லேன், பெபிலியான வீதி, நெடிமால, தெஹிவளை
  • தொலைபேசி:  0777 932 526
  • இன்ஸ்டாகிராம் @bakeamazing
  • பேஸ்புக்: @Bakeamazing
  1. Indian Affair

விலை (இஃப்தார் combo pack):

  • Combo 1 – இருவருக்கு LKR 3,500
  • Combo 2 – ஐந்து பேருக்கு LKR 8,500
  • நேரம்: டெலிவரிக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்டர் செய்யப்பட வேண்டும்
  • முகவரி: அனைத்து விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்
  • தொலைபேசி:  0740 204 160 (general hotline)

இன்ஸ்டாகிராம் @indianaffairlk

பேஸ்புக்: @indianaffairlk

 

எனவே இந்த ரமழான் 2023 இல் கொழும்பில் எங்கள் இப்தார் விருப்பங்களின் பட்டியல் உங்களிடம் உள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் நீங்கள் அனுபவிக்கும் பல மகிழ்ச்சியான உணவுகளுக்கு இது அடிப்படையாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த இடங்களில் ஏதேனும் ஒன்றை முயற்சித்தீர்களா? உங்களுக்குப் பிடித்தது எது? நாம் தவறவிட்ட ஏதேனும் உள்ளதா? கீழே உள்ள கருத்துகள் பிரிவில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!

கடைசிச் சீம்பாற் துளிகள்!

கடைசிச் சீம்பாற் துளிகள்!

மாசக் கடசி

மஞ்சக்கவுறடவு

சோறு பொங்க என்ன செய்ய 

 

புருசேந்திங்க ஏத விக்க

கடன் வாங்கி ஒலவைக்க

கடந்தார யாருயில்ல

ஊருக்குள்ள நம்மலாட்டம்

 

கடங்காரன் யாருமில்ல

சீனி வள்ளி சுட்டுருக்கு

தொட்டுக்கத் தொவயருக்கு

விருந்தா நெனச்சுக்கப்பு

இப்பதிக்கு கடிச்சுக்கப்பு

கொள்ளையில கொடி விட்டு

கோணலா வளஞ்சோடி

கொத்தாப் பூப் பூத்து

வெளஞ்ச கெழங்குப்பு

வெந்து கொழஞ்சக் கெழங்குப்பு

வெரசா மெல்லு

தண்ணி குடி

கோழி கறியிண்ணு

கருத்தாக கடி

பத்தோ பதனஞ்சோ

இன்னும் கொஞ்ச நேரம்…

ஒங்கொப்பன் வருவான்

 

தள்ளாடி வருவான்

கள்ளாடி புத்திக் கெட்டு

தள்ளாடி வருவான்

செனமாடா வந்திடிப்பான்

மானங்கெட்டு சண்டழுப்பான்

ஈரங்கெட்டு என்னடிப்பான்

சோறுலன்னு ரெம்படிப்பான்

ஆத்தா என்ன யெண்ணி

கோவங் கொதிச்சாலும்

வீராப்பு கொள்ளாத

வேட்டித் தூக்கி நிக்காத…….

                                                                                      தொடரும்!

– ஹஜன் அன்புநாதன்-

index.php