Blog Page 33

உயிரினங்கள் உருவாகியது எப்படி? – டார்வினின் கூர்ப்புக் கொள்கை

உலகம் எவ்வாறு தோன்றியது என்பதற்கு பல அறிஞர்களினால் பல கருதுகோள்கள் எடுத்துரைக்கப்பட்டாலும், நிச்சயமாக இவ்வாறு தான் நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதற்கு, சான்றுகள் எதுவும் எவரிடமும் கிடையாது என்பதே உண்மை. இந்தப் பிரபஞ்சத்தை பொருத்த மட்டில், படைப்புக் கொள்கை மற்றும் பரிணாமக் கொள்கை என இரு பிரதானமான கோட்பாடுகள் உள்ளன. இரு கொள்கைகளை மையமாகக் கொண்டே இவ்வுலகம் பயணிக்கின்றது என்பது யாவரும் அறிந்ததே.

இந்து சமயத்தை பொருத்தளவில் இப் பிரபஞ்சம் உட்பட அனைத்து உயிரினங்களும் பிரம்மாவினாலேயே உருவாக்கப்பட்டது என்பதாகவும், பிரம்மா என்ற கடவுள், மஹா விஷ்ணு அல்லது சிவபெருமானால் படைக்கப்பட்டவர் என்பதாகவும், பல வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. அதே போன்று இஸ்லாம் மதத்தில் மனிதர்களுக்காகவே உலகம் படைக்கப்பட்டதாகவும், மனிதர்கள் யாவரும் களிமண்ணினால் படைக்கப்பட்டார்கள் எனவும், ஆதம் அடியவர்களின் விலா எழும்பில் இருந்து அவ்வா என்ற பெண்மணி படைக்கப்பட்டார் என்றும் முஸ்லிம்களின் வேதம் என கருதப்படும் திருக்குர்-ஆன் சுட்டிக்காட்டுகின்றது. மேலும் கிறிஸ்தவ மதத்தின் புனித பைபிளை பொருத்தமட்டில், உலகம் 6000 ஆண்டுகளுக்கும் முன்னர் படைக்கப்பட்டது எனவும், மூன்று தினங்களுக்குப் பின்னர் தாவரங்கள் படைக்கப்பட்டதாகவும் ஐந்தாவது ஆறாவது நாட்களில் பறவைகள், மீன்கள், விலங்குகள் போன்றன முறையே தோன்றியதாகவும் ஏழாவது நாள் முடிவில் கழி உருண்டையை உபயோகித்து ஆதம் என்ற மனிதன் படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதுவே உலகில் பெரும்பான்மை மக்களால் நம்பப்படும் படைப்புக் கொள்கை.

இதற்கு முற்றிலும் எதிர்மாறாக பரிணாமக் கொள்கை விளங்குகின்றது. சுருங்கச் சொன்னால், ஓர் உயிரினம் எதேச்சையாக தோன்றியதாகவும், அதன் இயற்கை தேர்வுக்கு அமைய, அதன் சூழல் மற்றும் வாழ்வாதார தேவைகளைக் கருத்திற்கொண்டு இசைவாக்கம் அடைந்து, வெவ்வேறு உயிரினங்களாக மாற்றம் பெற்றன என்பதே பரிணாமக் கொள்கை. உயிரினங்களை வகைப்படுத்திய விஞ்ஞானிகளாக போற்றப்படும் கரோலஸ் லினேயஸ் முதல், ஜோன் பப்டிஸ்ட் வரை இக் கூர்ப்புக் கொள்கையை ஆதரித்து பல சான்றுகள் முன்வைக்கப்பட்டாலும், ஒரு உயிரினத்திடம் இருந்து மற்றொரு உயிரினம் உருவாகுவதற்கு இடை நடுவில் சில உயிரினங்கள் காணாமல் போய் உள்ளதாகக் கூறப்படும் விளக்கம், இக் கோட்பாட்டிற்கு பாரியதோர் பின்னடைவைக் கொடுத்தது.

இக் கோட்பாடு நிலவிய 19 ஆம் நுற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கடவுள் என்பவரே அதிகம் சக்தி வாய்ந்தவர் என அனைத்து மதங்களினாலும் நம்பப்பட்டது. அனேகமான ஐரோப்பிய நாடுகள் கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கத்தின் கீழ் விளங்கியதால், கூர்ப்புக் கொள்கைக்கு எவ்வித ஆதரவும் வழங்கப்படவில்லை. இக் காலப்பகுதியில் தான் இங்கிலாந்து நாட்டில், கூர்ப்புக் கொள்கையின் தந்தையென பிற்காலத்தில் கருதப்பட்ட, சார்ல்ஸ் டார்வின் பிறந்தார். பெற்றோர் சார்ல்ஸ் டார்வினை ஓர் பாதிரியாராக ஆக்குவதில் ஆர்வம் காண்பித்தனர். இக் காலப்பகுதியில் புனித பைபிளில் குறிப்பிட்ட படைப்புக் கொள்கைக்கு ஆதாரம் தேடும் பயணத்தில் ஈடுபடுகிறார் டார்வின். இப் பயணத்தின் மூலமாகத் தான் பாதிரியாரகிப்போகவிருந்த இவர், இயற்பியல், தாவரவியல் விஞ்ஞானியாக மாறுகின்றார். இப் பயணமானது பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்களை கடல் மார்க்கத்தினாலும், 3200 கிலோ மீட்டர்கள் தரை வழியினாலும், சுமார் 5 ஆண்டுகளுக்கு அமைந்திருந்தது. 2500 பக்கங்களுக்கு மேல் குறிப்புகள் எடுத்ததுடன், சுமார் 5000 க்கும் அதிகமான எலும்புகளையும் டார்வின் சேகரித்தார். இவை எல்லாவற்றையும் தீவிரமாக ஆராய்ந்த டார்வின் இப் பிரபஞ்சம் அனைத்தும் ஓர் உயிரினிடத்தில் இருந்து உருவாகியது என்பதை இவ்வுலகுக்கு எடுத்துரைத்தார்.

இந்த உலகில் வாழத்தகுதியானவைகள் மாத்திரமே வாழ்கின்றன, மீதம் இருப்பவைகள் அனைத்தும் இறக்கின்றன என்பதாகவும், இறந்த போன உயிரினங்களுக்கும் தற்போது வாழும் உயிரினங்களுக்குமிடையில், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை தத்தெடுக்கும் இயல்பானது ஒர் பொதுவான பண்பாக திகழ்கிறது. அவ்வாறு தம்மைத் தாமே மாற்றிக்கொள்வதற்காக உயிரினங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளை எடுத்துக் கொள்வதாகவும், அப்படி மாற்றிக்கொண்ட உயிரினங்கள் தங்களது அடுத்த சந்ததிக்கு மரபணு வழியாக இச் செய்தியினை பரிமாற்றிக்கொள்கின்றன என்பதாகவும் சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கை கூறுகின்றது.

இலங்கையில் தேயிலைப் பயிர்ச்செய்கை

இலங்கையில் வாழ்ந்து கொண்டு தேநீரை வெறுப்பவர்கள் கண்டிப்பாக இருக்க முடியாது. பிளேன் டீ முதல், ஐஸ் டீ வரை வெவ்வேறு ரகமான தேநீரை இன்று நாம் சுவைக்கின்றோம். எமது நாட்டின் பல தேயிலை தயாரிப்புகளை இன்று நாம் எமது விருப்பத்தேர்வுக்கேற்ப கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கிறது. அப்படி உற்சாகமூட்டும் பானமாக விளங்குவது தொடக்கம், நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய அம்சமாக தேயிலை விளங்குகின்றது என்றால் அது கண்டிப்பாக மிகையாகாது.

தேயிலைப் பயிர்ச்செய்கை, இலங்கையில் கிட்டத்தட்ட 200 ஆண்டு வரலாற்றைக் கொண்டது. 1824 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ காலப்பகுதியில், முதன் முதலாக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாக பல வரலாற்றுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. ஆரம்ப காலத்தில் இவை பேராதனை தாவரவியல் பூங்காவில் கண்காட்சிக்காக வரவழைக்கப்பட்டதாகவும், 1839 ஆம் ஆண்டில் இந்தியாவின் அஸ்ஸாம் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களிலிருந்து கொண்டு வந்த தேயிலை வகை, எமது நாட்டில் விளையக்கூடியவையா என்ற பரிசோதனையின் நிமித்தம் பயிரிடப்பட்டதாகவும் பல சுவாரஸ்யமான பின்னணி கதைகள் உண்டு.

ஜேம்ஸ் டெய்லர் என்ற ஸ்கொட்லாந்து நாட்டவர், தேயிலைப் பயிர்ச்செய்கையை மற்றொரு பரிமாணத்திற்கு ஈட்டிச்சென்றார். அதுவரை சிறியளவில் மேற்கொள்ளப்பட்ட தேயிலைப் பயிர்ச்செய்கை, இவரது காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையாக உருவெடுத்து வணிகமயமானது. மேலும் இதனை விருத்தி செய்யும் நோக்கத்தில் 1866 ஆம் ஆண்டளவில் தேயிலை பயிர்ச்செய்கையின் நுட்பங்களை அறிந்துகொள்வதற்காக இந்தியா சென்று வந்த இவர், கண்டிக்கு அருகேயுள்ள ‘லூல்கந்துரை’ என்ற இடத்தில், 19 ஏக்கர் விசாலமான தேயிலைத்தோட்டம் ஒன்றை முதன்முதலில் நிறுவினார். காலப்போக்கில் அவ் இடத்திலே, 1872 ஆம் ஆண்டு முதலாவது தேயிலைத் தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1875 ஆம் ஆண்டளவில் லண்டனில் நடைபெற்ற தேயிலை கொள்வனவு ஏலத்திற்கு இலங்கையில் இருந்து முதன் முதலாக தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது.

1867களில் கண்டியில் 19 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட இப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, நுவரெலியா, டிம்புள, உடபுஸ்ஸெல்லாவ மற்றும் ஊவா முதல் தென்மாகாணம் வரை வளர்ச்சி கண்டது. இதன் விளைவாக இலங்கை உலகின் 19% தேயிலைக் கிராக்கியை நிவர்த்தி செய்ததுடன், உலகில் அதிகம் தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்தது. 2019 ஆம் ஆண்டில், அண்ணளவாக 300,000 மெற்றிக் டொன் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் பெருமதி 1.5 $ பில்லியனுக்கும் அதிகமாக விளங்குவதோடு, GDP என்று கூறப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% பங்கை வகிக்கின்றது. மேலும் இப் பயிர்ச்செய்கை மூலம் கிட்டத்தட்ட 10 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக இது விளங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குளிரான காலநிலை, மழை வீழ்ச்சி போன்ற காரணிகள் தேயிலையின் தரம், சுவை மற்றும் வாசனைக்கு அதிகம் தாக்கம் செலுத்தும் அம்சங்களாக விளங்குகின்றன. பொதுவாக ஊவா மாகாணங்களில் விளையும் தேயிலை, வித்தியாசமான பருவகால காரணிகள் கொண்டடங்குவதுடன், இவை ஜேர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அதிகம் பகிரப்படுகின்றன. கடின நிறம் மிகுந்த தேயிலை வகைககள் ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளிலும், தாழ் மலைப்பிரதேசங்களில் பெறப்படும் தேயிலை வகைகள் அதிகமாக மேற்காசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையும் ஏற்றமதி செய்யப்படுவதுடன், இத் தேயிலை வகைகளுக்கே உலகளாவிய ரீதியில் அதிக கிராக்கி உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தேயிலையின் கனவளவிற்கு அமைய Dust, BOP, BOPF மற்றும் OP என, தர நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் குறைவான தரமாக கருதப்படும் Dust என்று அழைக்கப்படும் தேயிலையே இலங்கையில் அதிகமானோர் நுகர்வதாகும். அப்படிப் பார்த்தால், எமது நாட்டிலே விளையும் தரமான தேயிலையின் உண்மையான சுவை, இலங்கையர்களுக்கு தெரியாது என்பதே கசப்பான உண்மை. தேயிலை இவ்வாறாக தர நிர்ணயம் செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதனால்தான், நம் நாட்டு தேயிலைக்கு உலகளவில் இன்றும் கிராக்கி உண்டு. மேலும் இலங்கையில் விளையும் அனைத்து தேயிலைகளிலும் மெதெய்ல் ப்ரோமைட் என்ற சேதன பதார்த்தம் நீக்கப்படுவதனால், ‘Ozon free tea’ என்று உலகளவில் போற்றப்படுகின்றது.

எஞ்சிய உணவுகளை நன்கொடையாக வழங்கக்கூடிய இடங்கள்

‘ஈவது விலக்கேல்’

உணவு என்பது, உயிர்வாழ்வதற்கான ஒரு ஒருங்கிணைந்த கூறு, நாகரிகத்தின் ஒரு மூலக்கல்லாக, இயற்கை அருட்கொடையின் ஒரு வழியாக உள்ளது. பசி என்பது நம்மில் பெரும்பாலோர் அறியாதது அதிர்ஷ்டம், ஆனால் இது இலங்கையில் பலரின் வாழ்க்கையை பாதிக்கும் ஒரு பிரச்சினை. தினமும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள். ஆகவே இன்று பசியை வேரறுக்க சேவை நோக்கோடு செயல்படுபவர்களையும், அதில் நாம் எவ்வாறு பங்கேற்க முடியும் என்பதையும் பார்ப்போம்.

உணவு மிச்சங்கள் என்பது நாம் அனைவரும் அவ்வப்போது சமாளிக்க வேண்டிய ஒன்று. குறிப்பாக வைபவங்கள் மற்றும் விருந்து நிகழ்வுகளின் பிறகு, நீங்கள் தூக்கி எறியப் போகும் உணவை சேகரித்து, வழங்கக்கூடிய சில நிறுவனங்கள் உள்ளன!

ரொபின் ஹூட் ஆர்மி (Robin hood army)

மிகவும் பிரபலமான அமைப்புகளில் ஒன்றான ரொபின் ஹூட் ஆர்மி ஒரு சர்வதேச தன்னார்வ அமைப்பாகும், இது பசியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கோடு செயல்படுகிறது. ரொபின் ஹூட் ஆர்மி இலங்கையிலுள்ள உணவகங்களுடன் (Restaurants) இணைந்து, உணவு தேவைப்படுபவர்களுக்கு எஞ்சியவற்றை சேகரித்து விநியோகிக்கிறது. இவர்கள் பொதுமக்களிடமிருந்து எஞ்சிய உணவுகளை எடுப்பதில்லை என்றாலும், இவர்களோடு சேவையாற்ற பொதுமக்களிடமிருந்து உதவிகள் தொடர்ந்து தேவைப்படுகிறது. எனவே தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகிறார்கள்! அவர்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார்கள், எனவே அவற்றை பற்றிய மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வலைதளம்- https://robinhoodarmy.com/
ஃபேஸ்புக் – https://www.facebook.com/groups/RHASL
இன்ஸ்டாகிராம்- @rha_srilanka
இயங்கும் இடங்கள்- கொழும்பு, மட்டக்களப்பு

**எஞ்சியவற்றை ஏற்றுக்கொள்ளாத நிறைய வேறு தொண்டு நிறுவனங்கள் உண்டு. இவர்களுக்கும் சில உதவிகள் நிச்சயம் தேவைப்படுகிறது.**
ஜன சுவா பல (jana suwa bala)

இது ஒவ்வொரு வாரமும் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் இலவச மதிய உணவை வழங்கும் தன்னார்வலர்கள் குழுவால் நடத்தப்படுகிறது. ஜன சுவா பல, உணவு உதவி தேவைப்படுபவர்களுக்கு உணவு வழங்கி அளப்பரிய நற்சேவையை செய்து வருகிறது. மேலும் உங்கள் எந்தவொரு உதவியும் அவர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது.

தொலைபேசி எண்- 0772 561 321
மின்னஞ்சல் முகவரி- janasuwa.apeksha@gmail.com
ஃபேஸ்புக் – https://www.facebook.com/JanaSuwaBala
இயங்கும் இடம்- மஹரகம

சிறிலங்காதர சொசைட்டி (Sri Lankadhara Society)

இது உணவு நன்கொடைகள் உட்பட மனிதாபிமான சேவைகளை வழங்கும் ஒரு அமைப்பு. நீங்கள் தயாராக சமைத்த அல்லது பொதி செய்யப்பட்ட உணவைக் கொண்டு வரலாம் அல்லது லங்காதர சமையலறைகள் அவற்றைத் தயாரிப்பதற்கான செலவுகளைச் நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம்.

தொலைபேசி எண்- 0112 588 838
மின்னஞ்சல் முகவரி- info@srilankadhara.org
வலைதளம்- https://srilankadhara.org/
இயங்கும் இடம்- கொழும்பு

மிருகங்களுக்கு உணவுகளை வழங்குமிடங்கள்

நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட, பல வளர்ப்பு விலங்குகள் இவர்களிடம் உள்ளன. பசி என்று எடுத்தால், அவை பெரும்பாலும் இதே சூழ்நிலைகளை தான் எதிர்கொள்கின்றன, ஒவ்வொரு நாளும் உணவைக் கண்டுபிடிக்க போராடுகின்றன. இலங்கையில் உணவு நன்கொடைகளையும் நிதியுதவியையும் ஏற்றுக் கொள்ளும் ஏராளமான நிறுவனங்கள் மற்றும் பராமரிப்பிடங்கள் உள்ளன.

விலங்குகள் நலன் மற்றும் பாதுகாப்பு சங்கம் (Animal Welfare and Protection Association)

விலங்குகள் நலன் மற்றும் பாதுகாப்பு சங்கம் (AWPA) என்பது ஒரு சான்றளிக்கப்பட்ட தன்னார்வ அமைப்பாகும். இது விலங்குகள் எதிர்கொள்ளும் துன்பகரமான நிலைமைகளிலிருந்து அவற்றை மீட்டெடுத்து, பராமரிக்கும் ஒரு அமைப்பாகும். உணஉப்பி பொதிகளை நன்கொடையாக வழங்குவதன் மூலமோ, உலர்ந்த ரேஷன்களை வழங்குவதன் மூலமோ அல்லது சமைத்த உணவை வழங்குவதன் மூலமோ நீங்கள் இவர்களுக்கு உதவலாம்.

தொலைபேசி எண்- 0112 587 116
வலைதளம்- http://www.awpasl.org
பேஸ்புக்- https://www.facebook.com/awpasl.org/
இன்ஸ்டாகிராம்- @awpasl

பவ் பவ் மிருக நலன் அமைப்பு (Baw Baw Animal Welfare Organisation)

தெரு விலங்குகளை பராமரிப்பதற்காக, உங்கள் உதவியினை நீங்கள் இந்த அமைப்புக்கு வழங்கலாம் இது தவறிய நாய்கள் மற்றும் பூனைகளை மீட்பது, பசுக்களை ஸ்பேயிங் மற்றும் நியூட்ரிங் திட்டங்களிலிருந்து காப்பாற்றுவதுடன், அவற்றின் பசிக்கு உணவளிக்கிறது. இவர்களின் தன்னார்வலர் குழு, நாடு முழுவதும் வாயில்லா பிராணிகளுக்கு உணவளிக்கும் திட்டத்தினை செயல்படுத்துகின்றனர்.

தொலைபேசி எண்-0719 159 992
மின்னஞ்சல் முகவரி- Bawbaw.US@gmail.com
வலைதளம்- https://www.bawbaw.org/
பேஸ்புக்- https://www.facebook.com/bawbaw.lk
இன்ஸ்ட்ரகிராம்-@bawbaw_sl
இயங்கும் இடம்- கடவத்தை

பேராசிரியர். அழகய்யா துரைராஜா

இலங்கையின் கல்வி மட்டம் ஏனைய தெற்காசிய நாடுகளை விட உயர்ந்து விளங்குகின்றது என்பது யாவரும் அறிந்ததே. அத்தகைய கல்வி முறைமை எமது நாட்டில் பல கல்விமான்களை உருவாக்கியுள்ளது என்றால் மிகையாகாது. அந்த வகையில் இலங்கை பொறியியல் துறையில் பாரியதோர் மாற்றத்தினை ஏற்படுத்திய மாமனிதர், பேராசிரியர் துரைராஜா பற்றிய ஒரு குறும் பார்வை..

அழகய்யா துரைராஜா அவர்கள் யாழ்ப்பாணத்தின் கம்பர் மலை என்ற இடத்தில், 1934 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும், உயர் கல்வியை பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியிலும் பயின்றார். இவ்விரு பாடசாலைகளுக்கும் பெருமை தேடி தந்த ஆளுமையாக இன்றும் கருதப்படுகின்றார். உயர் தரத்தில் கணிதப் பிரிவை தேர்ந்தெடுத்த இவர், 1953 ஆம் ஆண்டு கொழும்பில் இயங்கி வந்த சிலோன் பல்கலைகழகத்தின் குடிமுறைப் பொறியியல் பட்டப்படிப்பில் இணைந்து கொண்டார். 1957 ஆம் ஆண்டு தனது படிப்பை முடித்து பட்டம் பெற்றதுடன், 1958 ஆண்டு மேற்படி பல்கலைகழகத்திலேயே பயிற்றுவிப்பாளராகவும் பொதுப்பணித்துறை திணைக்களத்தில் இளம் உதவி பொறியியலாளராகவும் பணி புரிந்தார்.

இவர் தான் பெற்றுக்கொண்ட இளமானி பட்டத்துடன் நின்றுவிடாது, கென்னத். எச். ரொஸ்கோ (Kenneth. H. Roscoe) என்ற அறிவியலாளரின் ஆராய்ச்சிக்கு உதவுவதற்காக, கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்திற்கு புலமைப் பரிசில் மூலம் சென்றார். 1958 முதல் 1961 வரை மண்ணின் வெட்டு பண்புகள் தொடர்பில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவர், 1962 இவ் ஆராய்ச்சிக்காக PhD பட்டம் பெற்றார். மணல் சார் பொறியியலில் கற்பிக்கப்படும் Clam Clay விதி, துரைராஜா அவர்களின் தேற்றத்தில் இருந்தே பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சிறிது காலம் இங்கிலாந்திலேயே பணி புரிந்த இவர், பின்னர் சிலோன் பல்கலைகழகத்தின் பேராசிரியராகவும் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் வாடர்லூ பல்கலைகழகங்களின் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார். மேலும் இவர் பேராதனை மற்றும் திறந்த பல்கலைகழகத்தின் பொறியியல் துறை பீடாதிபதியாகவும் கடமையாற்றினார். நம் நாட்டில் போர் உச்சம் கொண்ட 1988 ஆண்டளவில் யாழ் பல்கலைகழகத்தின் துணை வேந்தராக தெரிவு செய்யப்பட்டு, வட மாகாண மாணவர்களின் கல்விக்கு அக்காலத்தில் பெரிதளவு தோள் கொடுத்தார். இவரின் வேண்டுகோளுக்கிணங்கவே கிளிநொச்சி நகரில் யாழ் பல்கலைகழகத்தின் பொறியியல் பீடம் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் யாழ் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ‘பேராசிரியர் அழகய்யா துரைராஜா’ என்ற பெயரில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றது.

இவரின் பொற்காலமாக திகழ்ந்தது, பேராதனை பல்கலைகழகத்தின் பொறியியல் பீடாதிபதியாக திகழ்ந்த காலமேயாகும். இவரது காலப்பகுதியிலேயே பொறியியல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இவரது மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்ட ‘அக்பர் பாலம்’ இவரின் கட்டுமான சிறப்பியல்பின் ஓர் அங்கம் என அனைவராலும் இன்றுவரை போற்றப்படுகின்றது. தற்கால தொழில்நுட்ப வசதியமைப்புகளில் கூட, இப் பாலம் கட்டப்பட்டிருக்கும் நுட்பம் வேறு எவராலும் சரியாக கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப் பாலம் பேராதனைப் பல்கலைகழகத்தில் பொறியியல் துறையில் பட்டம் பெற்று வெளியேறிய முதலாவது மாணவர் குழுவினால் கட்டப்பட்டதாகும். இப் பாலம் ஒற்றைத் தூணினால் கட்டப்பட்டிருப்பதோடு, மகாவலி கங்கைக்கு மேலாக செல்லும் பகுதிக்கு குறுக்காக, எவ் வித தூணும் அமைக்கப்படவில்லை என்பது பார்ப்பவரை இன்றும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்குகிறது. மேலும் இப் பாலத்தின் நடுப்பகுதியில் பயணிக்கும் போது, பாலத்தில் சிறியதோர் நடுக்கம் காணப்படுவது என்பது இதன் சிறப்பியல்பாகும். மணல் தொடர்பிலான பொறியியலில் தேர்ச்சி பெற்ற பேராசிரியர் அழகய்யா துரைராஜா, பிரித்தானியாவின் தேசிய விஞ்ஞான கலைக்கூடம் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் சக உறுப்பினராக இருந்ததுடன், இலங்கையின் தேசிய விஞ்ஞான கலைக்கூடம் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் தலைவராகவும் பணிபுரிந்தவராவார். பொறியியல் துறையின் பிதாமகனாக கருதப்பட்ட பேராசான், 1994 ஆண்டு இயற்கையை நாடினார்.

 

இலங்கையில் வாகன விபத்துகள் – ஐக்கிய நாடுகள் சாலை பாதுகாப்பு வாரம்

ஐக்கிய நாடுகளின் 6 வது பாதைகள் பாதுகாப்பு வாரத்தின், Streets for Life – ‘வாழ்கைக்காக வீதிகள்’ என்ற வாசகத்திற்கு இணங்க, இவ் வருடம் மே மாதம் 17 முதல் 23 என்ற காலப் பகுதியில், நகர வீதிகளில் 30km/h வேகத்தில் வாகனங்கள் பயணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகிறது.

பருவ கால மாற்றம் மற்றும் நாட்டின் கல்வி துறை சார் விடயங்கள் தொடர்பான அபிவிருத்திக்கு ஆதரவு வழங்கும் வகையிலும், தெரு விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களை தவிர்க்கும் நோக்கிலும், 30km/h பயணிப்பதே உலக பாதைகளை பாதுகாப்பு வாரத்தின் முக்கிய நோக்கமாகும். 2007 இல் உலக சுகாதார அமைப்பினால் நடாத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் அமர்வில், இவ் உலக பாதைகள் பாதுகாப்பு வாரம் முன்னெடுப்பதாக ஐக்கிய நாடுகளின் நிறைவேற்று அதிகாரிகளினால் முடிவெடுக்கப்பட்டது.

ஏன் இத்தகைய வாரமானது நம் அனைவரினாலும் அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்ற கேள்வி எழலாம். இவ் வாரமானது இந்த தசாப்தத்தின் (2021-2030) மிகச்சிறந்த நடவடிக்கை என்று வர்ணிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளினால், உலகில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துக்களை தவிர்பதற்காக மிக முக்கியமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இதன் மூலமாக ஒரு நாட்டின் சாலை விதிகளில் கட்டாய கவனம் செலுத்த வலியுறுத்தப்படுகிறது. அது மட்டுமல்லாது இதன்மூலமாக போக்குவரத்து துறையினால், நமது சூழல் எத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகின்றது என்பது பற்றிய விழிப்புணர்வினை மக்களுக்கு புகட்டி, சைக்கிள் மூலமாகவும், அதைவேளையில் நடை பயணத்தின் மூலமாக நகரத்திற்கு உள்ளேயான போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்கள் அளிக்கப்படுகின்றது.

இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களும் தனது தேவையின் நிமித்தம் வெளியில் செல்ல நேரிடுகிறது. மனிதனி்ன் வேலைகளை இலகுவாக்குவதற்கே போக்குவரத்து துறையானது அறிமுகம் செய்யப்பட்டது. இப் போக்குவரத்து துறையில் மாட்டு வண்டி தொடக்கம் Rolce Royce கார் வரை அனைத்தும் வீதிகளிளேயே பயணிக்கின்றன. நாளொன்றுக்கு கொழும்பு வீதிகளில் மட்டும் 300,000 வாகனங்கள் பயணிக்கின்றன. இதற்கிணங்க சற்று சிந்தித்து பார்த்தால், 1 பில்லியன் வாகனங்கள் ஒரே நேரத்தில் உலகில் பயணிக்கின்றன. 6000 இற்கும் அதிகமான வீதி விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதில் கிட்டத்தட்ட நாளொனறுக்கு 3700 பேர் உயிரிழக்கின்றனர். இலங்கையில் சராசரியாக 10 நிமிடத்துக்கு ஒரு முறை வீதி விபத்து ஒன்று இடம்பெறுகின்றது. நாளொன்றுக்கே எட்டு பேர் வீதி விபத்துக்களால் இறக்கின்றனர் என்பது கவலைக்குரிய விடயமே.

வீதி விபத்து என்பது ஒரு செக்கனில் நடக்கக் கூடிய விடயமே எனினும், அவ் விபத்தினால் எதிர் கொள்ளக் கூடிய பாதிப்புக்கள் எண்ணிலடங்காதவையாகி விடுகின்றன. அளவுக்கதிகமான வேகம் , மது அருந்தி வாகனம் செலுத்துதல், பாதசாரிகளின் கவனக்குறைவு போன்ற பல காரணிகள் வீதி விபத்திற்கு வழி வகுக்கின்றன. வீதி விபத்துக்களால் ஏற்படும் இறப்புக்கள், ஊன முற்றோர்; மற்றும் காயமுற்றோர், இதன் காரணமாக ஏற்படும் உடல் உறுப்பு மற்றும் பொருளாதார இழப்பானது, ஒரு தனிக் குடும்பத்தை மட்டுமின்றி ஒரு சந்ததியை கூட சிலவேளைகளில் பாதிக்கின்றது. வியத்தின் பின், எஞ்சிய வாழ்நாளில் அவர்களை பராமரிப்பதற்காக அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் கடுமையான சிரமத்தினை எதிர்நோக்குகின்றனர். இந் நிலையின் சங்கிலி விளைவாக, குடும்ப வருமானம் மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரம் மற்றும் உற்பத்தித்திறனும் வீழ்ச்சியடையுமளவுக்கு இதன் பாதிப்புகள் தொடர்கின்றன.

பெரும்பாலான வீதி விபத்துகள் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே ஏற்படுகின்றன. இதனால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய பாதசாரிகள், துவிச்சக்கர வண்டி மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள், பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர் குறிப்பிடத்தக்கது. வீதி விபத்துக்கள் ஏன் ஏற்படுகி்ன்றது அதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளையும் சரியாக உணர்ந்து விழிப்புடன் செயற்படுவதன் மூலம் வீதி விபத்துக்களைக் குறைக்கலாம்.

குறிப்பாக அதி கூடிய வேகம் விபத்துக்களுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பதோடு, விபத்து ஏற்படுமிடத்து பாதிப்பையும் அதிகரிக்கும். உதாரணமாக 100kmph வேகத்தில் வாகனத்தினை செலுத்தி மரத்தில் மோதுவதற்கும், 40kmph ல் வேகத்தில் மரத்தில் மோதுவதற்குமான வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். குறிப்பாக பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்ற பாதசரிகள் அதிகரித்த இடங்களில் வேகக்கட்டுப்பாடு மிகவும் அவசியமாகின்றது. குடி போதையில் வாகனம் செலுத்துதல் சாரதிகளை மட்டுமின்றி ஏனையவர்களையும் பாதிக்கின்றது. தொலைபேசியை பேசிக்கொண்டு அல்லது கையாண்ட வண்ணம் வாகனம் செலுத்துதல், உடல்நிலை குன்றிய நிலையிலோ தூக்க நிலையிலோ வாகனம் செலுத்துதல் ஆகியவை சாரதியின் கவனத்தைக் குறைத்து விபத்துக்கு வழிகோலும்.

இவற்றைவிட வீதிச் சட்ட ஓழுங்குகளை மீறுதல், வீதிகளின் தரக்குறைவு மற்றும் வாகனங்களின் குறைபாடு காரணமாகவும் பல விபத்துகள் ஏற்படுகின்றன. தலைக்கவசம், ஆசனப்பட்டி போன்றவை கட்டாயமாக அணியப்பட வேண்டியவை. வாகனம் வைத்திருப்பவர்கள், வாகனத்தின் டயரின் தரத்தினை கண்டிப்பாக கவனத்திற் கொள்ளவேண்டும். இவை விபத்துகளின் போது பலத்த காயம் மற்றும் உயிரிழப்புக்கான சந்தர்ப்பத்தை வெகுவாக குறைக்கின்றன.

ஒரு நகர வீதியில் நாம் மட்டும் பயணிப்பது இல்லை. ஒரு சமூகம், நாட்டின் எதிர்கால சந்ததி என பல்வேறு தரப்பட்ட தனித்தனி உடல்கள் பல பயணிக்கின்றன. ஒரு சாரதியின் அல்லது பாதசாரியின் கவனக் குறைவால் ஒரு மனிதனின் வாழ்க்கை, ஒரு நொடியில் மாற்றமடைகிறது. எனவே நாட்டின் சாலை விதிகளை சரிவரக் கடைப்பிடித்து, வேகத்தை கட்டுப்படுத்தி, நல் வாழ்வுக்கான பாதையில் 30km/h இல் நிதானமாக பயணிப்போம்.

வீட்டுத்தோட்டம் செய்வதற்கு அடிப்படை டிப்ஸ்

வீட்டுத்தோட்டம் உங்கள் உடலுக்கு மட்டுமன்றி மனதுக்கும் ஆரோக்கியமான பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. வீட்டுக்கு வெளியில் உள்ள முற்றம் அல்லது பின் பகுதியில் அல்லது வீட்டினுள் உள்ள சிறிய பகுதிகளில் என இடவசதிக்கு ஏற்றவாறு வீட்டுத்தோட்டம் அமைக்கலாம். பச்சை பசேலென பசுமை போர்த்திய இலைகள் நிறைந்த தாவரங்களும் அழகிய பல வண்ண நிற பூக்களும், நீங்கள் அமைதியற்று இருக்கும் சந்தர்ப்பங்களில் மன அமைதியினை தரக்கூடியது. அதுமட்டுமன்றி உங்களது ஓய்வான நேரங்களை இயற்கையோடு கழிக்கும் சந்தர்ப்பத்தினையும் வீட்டுத்தோட்டம் ஏற்படுத்தி தருகிறது. வீட்டுத்தோட்டத்தினை பேணி பாதுகாத்து பராமரிக்கும் போது உங்களுள் தானாகவே பொறுப்பும் பொறுமையும் துளிர்விட தொடங்கி விடும். வீட்டுத்தோட்டத்தினை அமைப்பது பற்றிய சில உதவிக் குறிப்புகள் மற்றும் ட்ரிக்ஸ்களை நீங்கள் இப் பதிவில் காணலாம்.

சிறிய, குறைவான அளவு பராமரிப்பு தேவையுடைய தாவரங்களை தெரிவு செய்யுங்கள்

பயிரிடும் தாவரங்களை கொல்லக்கூடாது என்பதே முக்கிய நோக்கம். கற்றாழை, அலோ வேரா, சான்சேவியா (பாம்பு தாவரம்), இசட் இசட் தாவரம், பீஸ் லில்லி மற்றும் போத்தோஸ் (பண தாவரம்) ஆகியவை மிகவும் இலகுவாக வளர்க்கக் கூடியவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு குறைந்த அளவிலான ஒளி மற்றும் நீர் போதுமானது. ஆகையால் நாம் அதிகளவிலான கவனத்தினை செலுத்தி பராமரிக்க தேவையில்லை. இவை வீட்டுத்தோட்டம் ஒன்றை தொடங்குவதற்கு சிறந்த தொடக்க தாவரங்களாக இருக்கும். சமையலறை மூலிகைகள் மற்றும் கீரை, தக்காளி, மிளகாய் போன்ற காய்கறிகளையும் முயற்சி செய்யலாம். ஆனால் ஒரு சில தாவரங்களுடன் தொடங்குவது முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு தொடங்குவதனால் நீர்ப்பாசன அட்டவணைகள் மற்றும் பராமரிப்பைக் கண்காணிப்பதற்கென பெரிதாக கவனம் செலுத்த வேண்டி இருக்காது.

ஔி தான் எல்லாமே!

வீட்டுத்தோட்டம் என்று வரும்போது சுற்றுச்சூழல் மிக முக்கியமானது. வீட்டுத்தோட்டத்திற்கான சரியான இடத்தினை ஔி மற்றும் ஈரப்பதத்தின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து தெரிவு செய்யுங்கள். சூரிய ஒளி தான் உங்கள் வீட்டில் நீங்கள் வளர்க்கவிருக்கும் தாவரக்குழந்தைகள் தமக்கான உணவினை பெற்றுக் கொள்ளும் ஒரே ஓர் வழி. அவ்வாறு சரியானளவு சூரிய ஔி கிடைப்பதால் அவர்கள் ஆரோக்கியமான, நறுமணமுள்ள அழகான குழந்தைகளாக வளர்ந்து செழிப்பார்கள். வீட்டு தாவரங்கள் நிழல் அல்லது மறைமுகமாக கிடைக்க கூடிய சூரிய ஒளியை விரும்புகின்றன. மேலும் பல வகையான கற்றாழை, சதைப்பற்றுள்ள காய்கறிகள் மற்றும் பூச்செடிகள் போன்றன, பால்கனியில் அல்லது முற்றத்தில் கிடைக்கக் கூடிய பிரகாசமான நேரடி சூரிய ஒளியை விரும்புகின்றன. நீங்கள் தத்தெடுக்க விரும்பும் தாவரக்குழந்தைகளை பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருத்தல் வேண்டும். உங்கள் தாவரத்தின் ஔித் தேவைகளை அறிய சிறிது ஆராய்ச்சி செய்யுங்கள்.

சரியான தாங்கிகளை தெரிவு செய்தல்

ஒரு தாவர நெர்சரியில் இருந்து தாவரங்கள் அல்லது நாற்றுகளை வாங்குவது வீட்டுத்தோட்டத்தினை தொடங்குவதற்கான எளிதான வழியாக இருக்கலாம். அவை வீட்டிற்கு வந்ததும், அவற்றிற்கான சாடி அல்லது நிலத்திற்கு மாற்றப்பட வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளின் உலர்ந்த விதைகளையும் நீங்கள் பயிரிடலாம். இது நிலையானது, மலிவானது மற்றும் நம்பமுடியாத அளவிற்கு திருப்தி அளிக்க கூடியது. விதைகளை ஈரமான பருத்தி அல்லது துணியில் வைத்து, அவை முளைக்கும் வரை சூரிய ஒளியில் இருந்து விலக்கி பராமரிக்கவும். அதன் பின்னர் அது ஒரு நாற்றாக வளர ஒரு சாடியில் பயிரிடுங்கள். வேர் வளர்ச்சிக்கு இடமளிக்கும் வகையில் தாவரம் வளர்ந்து வரும் தற்போதைய பானையை விட, 2-4 அங்குல பெரிய கொள்கலனைத் தேர்வு செய்யவும். வேர் அழுகலைத் தடுக்க எப்போதும் கீழே வடிகால் துளைகளைக் கொண்ட கொள்கலன்களைத் தேர்ந்தெடுங்கள்.

உங்கள் மண்ணை தயார்படுத்துங்கள்

வீட்டுத்தோட்டத்திற்கான மண்ணை பொறுத்தவரை, நீங்கள் ஒரு தாவர நாற்றங்கால் அல்லது கோகோ கரி மற்றும் ஆர்கானிக் உரம் கலந்த தோட்ட மண்ணிலிருந்து ஒரு சாடி மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் மண்ணை அவ்வப்போது தளர்த்தவும், காற்றோட்டம் புகக்கூடிய வகையில் பராமரிக்க, நேரத்திற்கு நேரம் அவதானித்து சாடியில் தாவரத்தின் வேர்கள் சேதப்படாத வகையில் துளைகள் இடுங்கள். நீங்கள் அவற்றை நேரடியாக தரையில் நடுவதற்கு முடிவு செய்திருந்தால், மண்ணைத் தளர்த்தி, ஆர்கானிக் உரங்களை மண்ணோடு சேர்த்து உங்கள் தாவரத்திற்கான மண்ணை தயார் செய்யவும்.

தேவைப்படும்போது மட்டும் நீர் பாய்ச்சவும்

விரலினைக் கொண்டு மண்ணின் ஈரப்பதத்தினை பரிசோதனை செய்யுங்கள். உங்கள் விரலின் முதல் ரேகை வரை மண்ணுள் இடுங்கள். முதல் அங்குலத்திலிருந்து அல்லது அங்குல அரை வரை மண் வறண்டிருந்தால் தண்ணீர் பாய்ச்சவும். ஈரமான இலைகள் பூஞ்சையை ஏற்படுத்துவதால் இலைகளைத் தவிர்த்து, தாவரத்தின் அடிப்பகுதியை நோக்கி நீர்ப்பாய்ச்சவும். இலைகளில் பழுப்பு நிற பகுதிகள் இருக்கின்றனவா என அவதானியுங்கள் ஏனெனில் இது மோசமான நீர்ப்பாசனத்தின் அறிகுறியாகும். மேலும், வழக்கமான நீர்ப்பாசன சுழற்சிகளில் அவதானமாக இருக்கவும். காலையில் ஒரு ஸ்பிரிட்ஸருடன் இலைகளை லேசாக ஈரலிப்பாக வைத்திருக்கவும்.

உங்கள் தாவரத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

நீங்கள் வளர்க்கும் ஒவ்வொரு தாவரத்திற்கும் உயிர் உண்டு. அவற்றினை உறவுகளாக பராமரியுங்கள். உங்கள் தாவரங்களைக் கேளுங்கள். அவர்களைக் கவனித்துப் பேசுங்கள். உங்கள் தாவரத்தின் தன்மை, நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் அட்டவணைகளின் பதிவைப் பராமரிக்க தவறாதீர்கள். இது உங்கள் தாவரத்தின் தேவைகளை நன்கு புரிந்துகொள்ளவும், மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் உதவும். உங்கள் தாவரத்தை அன்புடனும் அக்கறையுடனும் அரவணைத்து பராமரியுங்கள். பொறுமையாக இருத்தல் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான உறவுகளை எவ்வாறு வலு செய்கின்றதோ, அதே போல் உங்கள் தாவரங்கள் வளர்வதற்கான நேரம் மற்றும் இடத்தினை அளியுங்கள்.

சிவனொளிபாதமலை – Adam’s Peak

இலங்கையிலுள்ள முக்கிய நான்கு சமயத்தவர்களினதும் புனிதத் தலமாக சிவனொளி பாத மலை திகழ்கிறது. சிறப்பு மிக்க சிவனொளிபாத மலையை இலங்கை வாழ் பௌத்தர்கள் புத்தரின் பாதம் அங்கே பதிந்துள்ளதால் ஸ்ரீ பாத என்றும் , இந்துக்கள் சிவனொளிபாத மலை என்றும், கிறிஸ்தவர்கள் அட்மஸ்பீக் என்றும், முஸ்லிம்கள் பாவாத மலை என்றும் வெவ்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்.

இந்த மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையேயான எல்லையில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 7359 அடி உயரமானதாகும். இந்த மலையுச்சியில் காணப்படுகின்ற 1.8 மீட்டர் அளவான பாறை, பௌத்தர்களால் கௌதம புத்தரின் காலடிச் சுவடாகவும், இந்துக்களால் சிவனின் காலடிச் சுவடாகவும், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களைப் பொறுத்தவரையில் ஆதாமின் காலடிச் சுவடெனவும் கருதப்பட்டு வருகின்றது.

இந்த மலையிலிருந்து பார்த்தால் கொழும்பு மற்றும் பேருவளை கலங்கரை விளக்கங்களைக் காண முடியும். சிவனொளிபாதமலையின் 2021க்கான யாத்திரை காலம் 2020 மார்கழியில் ஆரம்பிக்கப்பட்டது. பருவகாலம் ஆரம்பித்துவிட்டால் யாத்திரிகள் வெவ்வேறு இடங்களிலிருந்து இங்கு வருவார்கள். பொதுவாக யாத்திரிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இரவிலே படி ஏறத்துவங்கினால், ஏறி முடிக்கும் போது ஏறத்தாழ காலையில் சூரிய உதயத்தைக் காண முடியும். மேலும் இந்த மலை பல ஆறுகளின் நதிமூலம். இலங்கையின் நீண்ட நதியான மகாவலி கங்கை, களு கங்கை, களனி கங்கை உள்ளிட்ட பல ஆறுகள் ஊற்றெடுப்பது இந்த மலையில் தான்.

மத நம்பிக்கைகள்

இலங்கையில் வாழுகின்ற நான்கு மத்ததவர்களும் பொதுவாக வழிபடுகின்ற தலமாக இந்த சிவனொளிபாதமலை இருக்கின்றது. அங்கே இருக்கின்ற பாதடித்தளம் தொடர்பாக பல்வேறுபட்ட மத நம்பிக்கைகள் காணப்பட்டாலும், இலங்கையிலுள்ள யாத்திரிகள் இறை தரிசனத்தை எதிர்பார்த்து அங்கே செல்கின்றனர்.

பௌத்தர்கள் புத்தரின் பாதம் அங்கே பதிந்துள்ளதால் “ஸ்ரீ பாத” என்றும், இந்து மதத்தினரைப் பொறுத்தவரையில் இந்த பாதடித்தளம் சிவபெருமானின் பாதம் எனவும் கருதி இதனை “சிவனொளிபாதமலை ” என்றும் அழைக்கின்றனர்.

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நம்பிக்கையின் படி, உலகின் முதல் மனிதனாகிய ஆதம் ஐ சுவர்க்கத்திலிருந்து உலகத்திற்கு அனுப்பிய போது, உலகத்தில் முதலாவதாக கால் பதித்தது இங்கு தானென்று நம்பகின்றனர். எனவே கிறிஸ்தவர்கள் இதனை “அடம்ஸ்பீக்” என்றும் முஸ்லிம்கள் “பாவாதமலை” என்றும் அழைக்கின்றனர்.

இப்படி அனைவராலும் அரும்பெரும் புனிதத்தலமாக போற்றப்படும் சிவனொளிபாத மலையானது, இந்த நான்கு மதங்களின் ஒற்றுமைச் சின்னமாக திகழ்கிறது.

 

அதிகரித்துவரும் தற்கொலைகளும் – அதன் காரணிகளும்

இலங்கை மக்கள் எப்போதும் மகிழ்ச்சியானவர்கள், கொண்டாட்டங்களை ஆதரிப்பவர்கள் என்று பிற நாட்டவர்கள் பெருமளவில் நம்புகிறார்கள். எம்மக்கள் இலகுவில் திருப்தியடைய மாட்டார்கள்.. ஆனால் மகிழ்ச்சியடைந்து விடுவார்கள்! அத்தகைய மனிதர்கள் வாழும் இதே நிலத்தில் தான், வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் பல தற்கொலைகளும் நிகழ்ந்திருக்கின்றன. இலங்கையில் கடந்த காலத்தில் நிகழ்ந்த தற்கொலை தொடர்பான புள்ளிவிபரங்களையும், அதற்கு தாக்கம் செலுத்தும் காரணிகளையும் பற்றி சற்று கவனம் செலுத்துவோமா?

சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் 100,000 நபர்களில் 9 பேரும், 1970களில் 19 பேரும், 1980களில் உச்சகட்டமாக ஒரு இலட்சம் நபரிற்கு 33 பேர் தற்கொலை செய்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அதில் அதிகமாக விவசாயிகளும், முறையே நாள் கூலித்தொழிலாளர்கள், பெண் தலை குடும்பங்கள் மற்றும் வெளிநாட்டில் பணி புரியும் குடும்பங்களாகும். இதற்கு முக்கிய காரணமாக அக்காலப்பகுதியில் அதிகளவிலான கிருமிநாசினிகளின் பயன்பாடுகளாகும். பிற்பாடு அரசாங்கத்தினால் கொடிய கிருமிநாசினிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. இதன் விளைவாக 1995 – 2015 காலப்பகுதி வரை 93,000 உயிர்கள் காப்பற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. பிராந்திய வீதம் இலட்சத்திற்கு 13.2 ஆக காணப்பட்ட போதிலும், 2016 அறிக்கைப்படி இலங்கையில் தற்கொலை 16.6 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் அதிகமானோர் 26 – 30 வயதுக்கு உட்பட்டோரும், 70 வயதிற்கு அப்பாற்பட்டவர்கள் எனவும், அதிலும் ஆண்களே அதிகம் என்றும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

WHO இன் அறிக்கை படி உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒருவர், அதாவது வருடத்திற்கு 800,000 பேர் தற்கொலை மூலம் மரணிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இலங்கையில் தற்கொலை இறப்புகள் குறைவாக இருப்பினும் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகளவாகவே காணப்படுகின்றது. இது மத்திய கிழக்கு மற்றும் தென் அமெரிக்கா நாடுகளை விட அபாயகரமான வரிசையில் உள்ளது என்பது வேதனையளிக்கக்கூடிய விடயமாகும். எனினும் முதல் நிலை நாடுகளாக கருதப்படும் அவுஸ்திரேலியா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம், சுவிஸர்லாந்து மற்றும் சுவீடன் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை சிறந்து விளங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போது இலங்கையை பொருத்தமட்டில் 45/100,000 என விகிதத்தில் இருந்து, தற்கொலைக்கு முயன்றோரின் இறப்பு விகிதம் 14/100,000 என்ற விகிதத்திற்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் இளம்பருவ மற்றும் சிறுவர் மனநலன் தொடர்பான சிரேஷ்ட வைத்தியரான ஜயமால் டீ சொய்சா கூறுகையில்,
‘விதிக் கட்டமைப்புகள் விருத்தியடைந்த பின், தற்கொலைக்கு முயன்ற நபரை சிகிச்சை அளிக்கும் போது, மருத்துவ ரீதியான அணுகுமுறையில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தியமையேயாகும். பொதுவாக இவ்வாறான சந்தர்பங்களில் உட்கொண்ட நஞ்சினை வெளியே எடுப்பதிலேயே கவனம் செலுத்துவோம். ஆனால் தற்போது இதயத்தை முடியுமான வரை இயங்க வைப்பதிலும், பின்னர் ஏனைய சிகிச்சைகளை படிமுறையின் அடிப்படையில் வழங்குவதையும் செய்துவருகிறோம்’ என கருத்து தெரிவித்தார்.

20 வீதமானோர் திருமணம் சார் பிரச்சனைகளாலும், 8 வீதத்தினோர் மன நிலை குறைப்பாட்டினாலும், 12 வீதமானோர் நாள்பட்ட வலியினாலும், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மதுபோதையினால் தற்கொலை செய்வதாகவும் கருத்துக்கணிப்புகளில் கூறப்படுகின்றது.

எம் நாட்டை பொருத்தளவில் இளைஞர் மட்டதினாலான தற்கொலைகள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாக பரீட்சை நோக்கமாகக் கொண்ட கல்வி முறை, துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைவஸ்து பாவனையாகும். இதனால் ஒரு மாணவன் தனக்கு ஏற்பட்ட மன விரக்தி மற்றும் சோர்விற்கான மூலங்களை அறிந்து அதற்கான தீர்வினை வகுக்காமல், தற்கொலையை மாத்திரம் ஓர் தீர்வாக கருதுகிறான். இதனடிப்படையில் 7 தொடக்கம் 9 வரையான ஆண்டு மாணவர்களுக்கு இரு தசாப்தங்களாக தற்கொலை தொடர்பான விழிப்பூட்டல்கள் வழங்கப்பட்டாலும் 15 – 25 வயதுடையவர்களே இலங்கையில் அதிகம் தற்கொலை செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது செல்வந்த நாடுகளை ஒப்பிடுகையில் இரு மடங்காகும்.

இது தொடர்பில் ஜயமால் டீ சொய்சா கூறுகையில், ‘YouTube இல் தற்கொலை சார்பான பல விடயங்கள் உள்ளன. மிக பிரபல்யமான பல பாடல்களில் போதைப்பொருள், தற்கொலை மற்றும் வன்முறைகள் தொடர்பிலேயே அதிகம் காண்பிக்கப்படுகின்றன. ஆகவே இவை அனைத்தையும் மாற்றி அமைப்பதற்கு இதுவே சிறந்த தருணம்’ என தெரிவித்தார்.

நாம் தற்கொலையை தீர்வாக எண்ணும் ஓர் கலாச்சாரத்திலே வாழ்ந்து வருகின்றோம். எமது சிந்தனைகளை மாற்றி அமைப்பதோடு, நாம் வாழும் கலாச்சாரத்தையும் மாற்றி அமைக்கும் கடமை எம் எல்லோருக்கும் உண்டு. தற்கொலை செய்யும் முறையில் கூர்ப்பு கண்ட எம் மக்கள், தீர்வை நோக்கி பயணிக்கவில்லை என்பதே உண்மை. ஆகவே, தற்கொலையை இருளுக்கான விடிவாக எப்போதும் கருதாமல், எச் சூழ்நிலையிலும் தெளிவான சிந்தனையுடன் எமது வாழ்க்கையை நடாத்திச் செல்வோம்.

‘வாழ்க்கை வாழ்வதற்கே’

கொழும்பில் கர்ப்பகால மற்றும் குழந்தை பராமரிப்புப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள்

பெற்றோர்கள் ஒருபோதும் விட்டுகொடுத்து சமாளித்து போகாத ஒரு விடயம், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது அனைவரும் அறிந்ததே. இங்கு இலங்கையில் கர்ப்பகாலம் மற்றும் தாய்மையின் ஒவ்வொரு அம்சத்தையும் விஷேடமானதாகவே, தாயும் குடும்பமும் பார்க்கின்றனர். நீங்கள் ஒரு குழந்தையை எதிர்பார்க்கின்றீர்கள் என்றால், குழந்தை வயிற்றில் இருக்கும்போதே குழந்தைக்கும், தாய்க்கும் தேவையான பொருட்களை வாங்கி சேகரித்து வைக்க தோன்றும்..அப்படி கர்ப்பகாலத்தில், தாய்க்கும் குழந்தைக்கும் தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளும் போது, ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமான பல தேர்வுகள் இருக்கும். தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு பொருட்கள் மற்றும் தயாரிப்புகள், கொழுப்பில் எங்கெங்கு கிடைக்கிறது என்று, இப் பதிவில் நாம் பார்க்கலாம்.

பம்பினோ லங்கா (Bambino Lanka)

தொலைபேசி- 0771319613
முகவரி- 83, காலி வீதி, கொழும்பு 04.
திறக்கும் நேரம் – (திங்கள் முதல் சனிக்கிழமை வரை) முற்பகல் 9.00 முதல் பிற்பகல் 8.00 வரை, ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 முதல் பிற்பகல் 6.00 வரை.

பம்பினோ லங்கா, பிளிப்ஸ் அவென்ட் (philips avent), அவீனோ (aveeno), டொமி டிப்பி (tommee toppeee), சிக்கோ (chicco) மற்றும் பல சர்வதேச பிரான்ட்களின் (brand) தயாரிப்புக்களை கிடைக்கும் இடமாகும். அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் இது பற்றிய ஏராளமான விளம்பரங்களை காணக்கூடியதாக இருக்கிறது.

கிட்ஸ் கெயார்.எல்.கே (kidzcare.lk)

தொலைபேசி – 0777 444 334 / 0712 444 334
முகவரி – 256, திம்பிரிகஸ்ஸாயாய வீதி, கொழும்பு 05.
திறக்கும் நேரம் – (திங்கள் முதல் வெள்ளி வரை) முற்பகல் 9.00 முதல் பிற்பகல் 9.00 வரை (சனிக்கிழமை) முற்பகல் 9.00 முதல் பிற்பகல் 8.00 வரை (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 9.00 முதல் பிற்பகல் 6.00 வரை.
வலைதளம் – www.kidzcare.lk

2000 ரூபாவுக்கு மேலே ஆர்டர் (order) செய்யும் பொருட்களுக்கு வெறும் ரூபா.100/= உடன், கொழும்பு மற்றும் புறநகரங்களுக்கும் 24 மணிநேரத்தில் டெலிவரி சேவை வழங்குகிறது கிட்ஸ் கெயார். இவர்களது வலைதளங்களில் இவர்களின் தயாரிப்பு பொருட்கள் பற்றி விரிவாகக் காணலாம். இருப்பினும் நீங்கள் கடையை பார்வையிட விரும்பினால், இவர்களின் பிரதான கிளை கொழும்பு 05 இல் உள்ளது. மேலும் மாலபே (malabe) இலும் உள்ளது.

புளூம்ஸ் அன்ட் பட்டஃபிளைஸ் (blooms and butterflies)

தொலைபேசி – 0112 680 334
முகவரி – 69/1 எல்விட்டிகல மாவத்த, பொரளை.
திறக்கும் நேரம் – முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 8.00 வரை.
வளையத்தளம் – www.bloomsandbutterflies.lk

பொரளை மற்றும் தெஹிவளையில் புதிதாக திறக்கப்பட்ட கடைகளும், ஜா எல பகுதியில் இவர்களின் பழைய கடையும் காணப்படுகிறது. புளூம்ஸ் அன்ட் பட்டஃபிளைஸ் தற்போது அனேகமானவர்களுக்கு இலகுவாக அணுகக் கூடியது. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த தேர்வுகள் பல உள்ளது. கட்டயாமாக உங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும்..

க்ளோனெஸ்டர்.கொம் (khloenstler.com)

வலைதளம் – www.khloenestler.com

அனைத்து சந்தர்ப்பங்களிலும் கர்ப்பிணி பெண்களுக்கான உடைகளை பெற்றுக்கொள்ளும் ஒரு இணையத்தள விற்பனைக்கூடம் (online store). இங்கு அனைவரின் விருப்பங்களுக்கும் பொருந்த கூடிய வகையில் ஆடைகளைத் தெரிவு செய்யக்கூடியதாய் இருக்கும். இன்னும் அதிகமான தேர்வுகளுக்கு அவர்களின் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தை பார்க்கவும்.

எலிகன்ட் ஸ்மோக்கஸ் (elegant smockers)

தொலைபேசி – 0722 264 444
முகவரி – 323B, ஹவ்லொக் வீதி, கொழும்பு 06.
திறக்கும் நேரம் – முற்பகல் 9.30 – பிற்பகல்7.55 வரை.
வலைதளம் – www.elegantsmockers.com

எலிகன்ட் ஸ்மோக்கஸிற்க்கு ஹவ்லொக் வீதியில் உள்ள கடையை தவிர்த்து, இன்னும் 2 கிளைகள் கண்டி சிட்டி சென்டர் (Kandy city centre) 3 ஆவது மாடியிலும், ஒன் கோல்ஃபேசில் (One Galle face mall) 4 ஆவது மாடியிலும் அமைந்துள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தைக்கான அத்தியாவசியப் பொருட்களிலிருந்து. குழந்தைக்கு தேவையான தளபாடங்கள் வரை இங்கு காணப்படுகிறது. இங்கு உள்ள நேர்த்தியான பொருட்கள், குழந்தைகள் மற்றும் அம்மாக்கள் இருவரையும் கவரும் வகையில் மிகக் கவர்ச்சிகரமாக அமைக்கப்பட்டுள்ளது.

பேபி கெயார் (Baby care)

தொலைபேசி – 0112 769 501
முகவரி – 153, ஹைய் லெவல் வீதி, நுகேகொட.
திறக்கும் நேரம் – முற்பகல் 10.00 – பிற்பகல் 7.30 வரை.
வலைதளம் – www.babycare.lk

பேபி கெயார் குழந்தைகளுக்கான அனைத்தையும் வாங்க கூடியதான ஒரு வலைதளம். இங்கு குழந்தைகளுக்கு மட்டுமன்றி, கர்ப்பிணி பெண்களுக்குமான அனைத்தும் கிடைக்கும். நீங்கள் வலைதளம் மூலம் கொள்வனவு செய்ய விருப்பமில்லதவராகவோ அல்லது பொருட்களை தொட்டுணர்ந்து கொள்வனவு செய்ய விரும்பினாலோ, உங்களுக்காகவே அவர்கள் ஒன் கோல்ஃபேசிலும் (One Galle face), நுகேகொடயிலும் கடைகளை வைத்துள்ளனர்.

கூல் கிட்ஸ் (cool kidz)

தொலைபேசி – 0112 689 682
முகவரி – 159, கெஸ்டல் தெரு, கொழும்பு 08.
திறக்கும் நேரம் – (திங்கள் முதல் வெள்ளி வரை) முற்பகல் 9.00 – பிற்பகல் 9.00 வரை.
வளைத்தளம் – www.coolkidz.lk

குழந்தைகளுக்கான தள்ளு வண்டிகள், உணவளிக்கும் நாற்காலிகள், விளையாட்டு பேனாக்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் வரை அனைத்தும் இங்கு கிடைக்கும். அது மட்டுமன்றி, கர்ப்பிணி தாய்மார்களுக்கான உள்ளாடைகள், தலையாணைகள் போன்ற தேவைகளையும் இது வழங்குவதன் மூலம் தாய்மார்களின் இதயபூர்வமான தெரிவாக அமைகிறது. அதுமட்டுமன்றி, நீங்கள் ஃபார்லின் (farlin) தயாரிப்புப் பொருட்களை விரும்புவீர்கள் என்றால், கூல் கிட்ஸ் தான் உங்களுக்கான சரியான தேர்வு.

பேபி பெயார் புடிக் (baby bear boutique)

தொலைபேசி – 0773 506 965
முகவரி – 35, பாகொட வீதி, நுகேகொட.
திறக்கும் நேரம் – (செவ்வாய் கிழமை – சனிக்கிழமை) முற்பகல் 10.00 – பிற்பகல் 8.00 (ஞாயிற்றுக்கிழமை – திங்கட்கிழமை) முற்பகல் 10.00 – பிற்பகல் 6.00 வரை.

ஒன் கோல்ஃபேசில் (one Galle face) புதிதாக திறந்த பேபி பெயார் புடிக், குழந்தைகளுக்கு தேவையான நேர்த்தியான பொருட்களை கொண்டுள்ளது. குழந்தைகளை கவரக்கூடிய வகையில் வண்ணமயமான விளையாட்டுப் பொருட்களை கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி, கர்ப்பகாலத்துக்கு தேவையானவை பொருட்களும் இவர்களிடம் கிடைக்கும்.

மதர் கெயார் (Mother Care)

தொலைபேசி – 0115 882 882
முகவரி- 7, ஆர்.ஏ.டி மாவத்தை, கொழும்பு 05.
திறக்கும் நேரம் – முற்பகல் 10.00- பிற்பகல் 8.00 வரை.

உயர் தரமான மற்றும் உண்மையான பொருட்களை வழங்கும் மதர்கெயார் என்பது ஒரு உலகளாவிய பிராண்டாகும் (Brand). இது சலசலப்பான டுப்ளிகேஷன் சாலையில், மிகப்பிரம்மாண்டமான வீரப்பனை நிலையமாகக் காணப்படுகிறது.

இதுதான் எமது கொழும்பு நகரில், கர்ப்பகால மற்றும் குழந்தை பராமரிப்புப் பொருட்களை வாங்கக் கூடிய இடங்கள். நாங்கள் தவறவிட்ட ஏதாவது கடை இருக்கிறதா? அதை உங்கள் கருத்துகளில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!

சிகிரியாவும் சர்ச்சைகளும்..

சிகிரியா மலைக்குன்று மற்றும் அதன் ஓவியங்கள், இலங்கையின் இருப்பிடத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரிதாக வித்துட்டுள்ளது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் விடயமாகும். இது உலகின் 8 ஆவது அதிசயமாக திகழ்வதோடு ஆசியாவின் பாதுகாக்கப்பட்ட சிறந்த மத்திய நகரமாகவும் போற்றப்படுகிறது.

இலங்கை இராசதானியின் அரசனாக விளங்கிய துட்டகைமுனு மன்னன், அவனது 2வது மனைவியின் பிள்ளையான காசியப்பனை மகுடம் சூட்டாமல் தனது மற்றொரு மகனான முகலனை அரசனாக்குவதில் மும்முரம் காட்டி வந்தார். இதனை அறிந்த காசியப்பன், தனது தந்தையை கொலை செய்து ஆட்சி பீடம் ஏறினான். இதனை கண்டு அஞ்சிய முகலன் இந்தியாவிற்கு தப்பி ஓடி தன் உயிரை காப்பாற்றிகொண்டான். இலங்கையை விட்டு சென்றாலும் இச் சிம்மாசனத்திற்கு எப்போதும் ஆபத்து இருக்கும் எனக் கருதி, எதிரிகளின் படையெடுப்புகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, இத்தகைய பாதுகாப்பு மிக்கதோர் கோட்டை ஒன்று கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. எனினும் சிலர் இது காசியபப்பனின் தந்தையான துட்டகைமுனு காலத்திலேயே கட்டப்பட்டதாகவும் அவரின் இறப்பின் பின்னர் இது காசியப்பனால் மீள்நிர்மாணிக்கப்பட்டு தலைநகரமாக முடி சூட்டப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

தந்தையை நேரடியாக கொலை செய்யாவிடினும் இறப்பிற்கு மறைமுகமான காரணமாக விளங்கிய காசியப்பன், குற்ற உணர்வுடன் இருந்ததோடு மக்களின் பயங்கர எதிர்ப்புக்கு ஆளானான். இந்தியாவிற்கு தப்பிச்சென்ற முகலன் காசியப்பனுக்கு எதிராக படை திரட்டி சிகிரியாவை கைப்பற்றினான். இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் காசியப்பன் தன் குரல்வளையை கத்தியால் வெட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து முகலன் அநுராதபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்ததுடன், சிகிரியா மலைக்குன்று புத்த மதத்தை கற்பிக்கும் பாசறையாக விளங்கியது. பின்னர் ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலத்தில் 1831ஆம் ஆண்டு பிரித்தானியா படையின் மேஜராக விளங்கிய ஜொனதன் போப்ஸ் என்பவரினால், அவர் பொலன்னறுவையில் இருந்து வரும் வழியில் அடர்ந்த காட்டுப்பகுதியில், கலை அம்சம் அனைத்தும் பொருந்திய இக் குகை கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் படிக் கற்கள் எதுவும் இல்லாமையினால் உச்சியில் என்ன இருந்தது என்பதை அறிவதற்கு பல வருடங்கள் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னரே, மேலத்தேய நாடுகளுக்கு சிகிரியாவின் கலை அம்சம் பற்றிய செய்திகள் பரவ ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து 1982 ஆம் ஆண்டு, UNESCO இன் பாரம்பரியமிக்க புராதன தளங்களில் ஒன்றாக பரிந்துரைக்கப்பட்டது. இவ் வரலாறுகளை நாம் சிறு வயது முதல் பல மூலங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். இனி சிகிரியாவின் பின்னணியில் இருக்கும் மர்மங்கள் பற்றி சற்று ஆராய்வோம்.

இதன் அடிப்படியையில் சிகிரியா கோட்டையை கட்டியது லங்காதிபதி ராவணேஷ்வரன் என்று அழைக்கப்படும் ராவணன் என்று ‘ராவணன் வதன்’ என்ற புத்தகத்தில் கூறப்படுவதோடு, 1600 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டதாகவும் சில தொல்பொருள் ஆய்வாளர்களினால் கூறப்படுகின்றது. மேலும் இவை ராவணின் தந்தை விஷ்னவாஸ் காலத்தில் கட்டப்பட்டதாகவும் சில ஆதாரங்கள் உள்ளன. இக் கோட்டையானது, 30 மில்லியனிற்கும் அதிகமான செங்கற்களை கொண்டு அமையப்பெற்றதோடு, மிக அரிய வகையான மாபிள்களை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ் மாபிள்களின் நிறை ஏறத்தாள 20 கிலோ கிராம் என்றும், இவை இலங்கையில் இருந்து பெறப்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் இல்லையென்றும் கூறப்படுகின்றது. சிகிரியா குகையின் படிகள் 100 ஆண்டுகளுக்கு முன்னரே அமைக்கப் பெற்றதாகவும் அதற்கு முன்பு ஏறுவதற்கு எவ் வகையான வழிமுறைகளும் கையாளப்படவில்லை என்றே பலரால் கூறப்படுகின்றது. ஆகையால் இப் பாரிய பளிங்குகள் மற்றும் மில்லியன் கணக்கான செங்கற்கள் எவ்வாறு மேலே கொண்டு செல்லப்பட்டன என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என்பதே உண்மை. எனினும் இதனை கட்டுவதற்கு தேவையான களிமண் மற்றும் மூலப்பொருட்கள் அங்கு இருந்ததாகவும், பளிங்குகள் மற்றும் தொழிலாளர்கள் ராவணின் புஷ்பக விமானத்தின் உதவியுடன் மலை உச்சிக்கு கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அக்காலத்தில் புஷ்பக விமானத்தை தரையிறக்க, நான்கு தரையிருக்கும் நிலையங்கள் உலகில் அமைக்கப்பெற்றதாகவும், அதில் ஒன்று சிகிரியா குன்று என்றும் கூறப்படுகின்றது. இதனை உறுதி செய்யும் வகையில் சிகிரியா குன்றுக்கு அண்மையில் பிதுரங்கல என்ற மலை நிறுவப்பட்டதாகவும், இவை இரண்டினதும் உயரம் 660 அடி எனவும், அதன் வடிவம் புஷ்பக விமானத்தின் வடிவத்தை ஒத்து அமையப்பெற்றுள்ளதோடு, இது எதிரிகளை திசைதிருப்பும் யுக்தியாகவும் கருதப்படுகிறது. மேலும் ராவணன் இரவு நேரங்களிலேயே அதிகமாக இங்கு வருவதாகவும், அதன் அடிப்படையில் சிகிரியா குகை ஒளியூட்டப்பட்டதற்கான பல எச்சங்கள் இன்னும் காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிகிரியா கலை அம்சத்திற்கும் அதன் கட்டுமான யுக்திகளிற்கும் பெயர்பெற்ற ஓர் இடமாகும். இங்கு 500க்கும் மேற்பட்ட குகை ஓவியங்கள் கண்ணாடி போன்ற பளிங்குகளில் வரையப்பட்டுள்ளன. இவை இயற்கையாக கிடைக்கும் தேன், சாம்பல் மற்றும் மரப்பட்டைகளை கொண்டு வரையப்பட்டதாக கூறப்படுகின்றது. இவ் ஓவியங்கள் அனைத்தும் இந்தியாவில் இருக்கும் அஜந்தா ஓவியத்தின் இயல்புகளை கொண்டுள்ளதோடு, சிகிரியா ஓவியத்தில் இருக்கும் பெண்கள் ராவணன் காலத்தில் பணி புரியும் பெண்கள் எனக்கருதப்படும் எக்ஸாஸ் இனத்தை ஒத்தவர்கள் எனவும் சான்றுதல்கள் நிரூபிக்கின்றன. இக் குகைக்கு பிரதான நுழைவாயில் தவிர்ந்து மேலும் மூன்று துணை வாயில்கள் காணப்படுவதோடு, அவை இரு சிறு குன்றுகளை வைத்து அமைக்கப்பட்டுள்ளன. இக் குன்று வழியாக இருவர் மாத்திரமே ஒரு தருணத்தில் நுழைய முடியும் என்பதோடு, அக்காலத்தில் இத் துணை வாயில்களை காப்பதற்கு 10 வீரர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சிகிரியாவின் பிரதான நுழைவாயிலில், மூன்று விரல்களைக் கொண்ட சிங்கத்தின் பாதங்கள் காணப்படுகின்றது. முற்காலத்தில் இவை நான்கு விரல்களை கொண்டிருந்ததாகவும், அது தமிழ் வரலாற்றில் பிரபலமாக கருதப்பட்ட ‘யாளி’ என்ற மிருகத்தின் பாதத்தின் ஒத்த வடிவத்தை கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

21ஆம் நூற்றாண்டில் கூட சிகிரியாவை ஒத்த நீர்ப்பாசண அதிசயங்களை நிழத்துவது கடினம். இங்கு 90x68x7 அடி பரிமாணத்தைக்கொண்ட ஓர் குளம் உள்ளது. இக்குளமானது கோடைக் காலத்தில் வற்றிப்போகாமலும் மழைக்காலத்தில் நிரம்பி வழியாமலும் இருக்கும் என்பதே, அதன் சிறப்பியல்பாகும். மேலும் இக் குளம் Scooping தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அகழப்பட்டதாகவும், இதில் 3500 Ton களிற்கும் அதிகமான Granite பெறப்பட்டதாகவும் கணிக்கப்படுகிறது. மேலும் அதன் வாயில்களில் பல சிறு குளங்கள் அமைந்துள்ளன. இதற்கு தேவையான நீர் சிகிரியாவிற்கு அருகாமையில் இருக்கும், ‘வாவ’ என்ற ஏரியிலிருந்து பெறப்படுகின்றது. அதில் சில, தரைமட்டத்திலும் 4 அடி ஆழத்திலும், எதிரிகளை திசைதிருப்புவதற்கு பயன்பட்டுள்ளது. மேலும் இக் குகை உச்சியில் 2295 Ton கொண்ட பாரியதோர் பாரை ஒன்று இருப்பதாகவும் அவை சிறு கற் தூண்களில் மேல் வைக்கப்பட்டுள்ளதாகவும், ராவணனால் மாத்திரமே இவ்வகையாக மேலே வைக்க முடியும் எனவும், எதிரிகள் வரும் பட்சத்தில் தூணை தட்டிவிடுவதன் மூலம் எதிரிகளின் மேல் அவை விழுந்து எதிரிகள் தாக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.

கொழும்பில் PCR மற்றும் Rapid Antigen பரிசோதனைகள் செய்யக் கூடிய இடங்கள்

கொவிட் – 19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி வீட்டினுள்ளே இருப்பதையும் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்வதையும் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கொவிட் – 19 தொற்று உங்களுக்கு இருப்பதற்கான அறிகுறிகள் தென்படும் போது கொவிட் – 19 மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளை செய்து கொள்ளக் கூடிய இடங்களின் பட்டியலினை இப்பதிவினில் காணலாம்.

1. ஆஸிரி சென்ட்ரல் வைத்தியசாலை (Asiri Central Hospital)

கொழும்பு 10 இல் உள்ள நோரிஸ் சென்ட்ரல் வீதியில் அமைந்துள்ள ஆஸிரி சென்ட்ரல் வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ள முடியும். பரிசோதனை செய்ய செல்லும் போது தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டினை கொண்டு செல்ல மறவாதீர்கள். கீழ் வரும் ஏதேனும் ஒரு வழியின் மூலம் பரிசோதனையை மேற்கொள்ளக் கூடிய நேரம் மற்றும் முன்பதிவினை செய்து கொள்ளலாம்.

Website – https://bit.ly/3e2mCgu
Telephone – 0114 665 500

2. ஆஸிரி சர்ஜிகல் வைத்தியசாலை (Asiri Surgical Hospital)

கொழும்பு 05 இல் கிரிமண்டல மாவத்தை வீதியில் அமைந்துள்ள ஆஸிரி சர்ஜிகல் வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை செய்துக் கொள்ள முடியும். பரிசோதனை செய்ய செல்லும் போது தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டினை கொண்டு செல்ல மறவாதீர்கள். கீழ் வரும் ஏதேனும் ஒரு வழியின் மூலம் பரிசோதனையை மேற்கொள்ளக் கூடிய நேரம் மற்றும் முன்பதிவினை செய்து கொள்ளலாம்.

Website – https://bit.ly/3u5QKx3
Telephone – 0114 524 400

3. டர்டன்ஸ் வைத்தியசாலை (Durdans Hospital)

கொழும்பு 03 இல் உள்ள அல்ஃபிரட் ப்ளேஸில் அமைந்துள்ள டர்டன்ஸ் வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ள முடியும். பரிசோதனை செய்ய செல்லும் போது தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டினை கட்டாயம் கொண்டு செல்ல மறவாதீர்கள். கீழ் வரும் ஏதேனும் ஒரு வழியின் மூலம் பரிசோதனையை மேற்கொள்ளக் கூடிய நேரம் மற்றும் முன்பதிவினை செய்து கொள்ளலாம்.

Website – https://bit.ly/3nzNKGN
Telephone – 0112 140 000

4. லங்கா வைத்தியசாலை (Lanka Hospitals)

கொழும்பு 05 இல் உள்ள எல்விட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள லங்கா வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ள முடியும். கீழுள்ள இணையத்தின் மூலம், பரிசோதனையை மேற்கொள்ளக் கூடிய நேரம் மற்றும் முன்பதிவினை செய்து கொள்ளலாம்.

Website – https://bit.ly/32Zl6p1
Telephone – 0115 430 000

5. மெல்ஸ்ட்டா லெபோரட்ரிஸ் (Melsta Laboratories Pvt. Ltd)

கொழும்பு 03 இல் உள்ள கீதாஞ்சலி ப்ளேஸில் அமைந்துள்ள மெல்ஸ்ட்டா லெபோரட்ரிஸ் (Pvt) Ltdயில் பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ள முடியும். இவர்கள் கொழும்பு 01இலிருந்து 15வரையான பகுதிகளுக்கு வீட்டிற்கு சென்று பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். கீழுள்ள இணையத்தின் மூலம் பரிசோதனையை மேற்கொள்ளக் கூடிய நேரம் மற்றும் முன்பதிவினை செய்து கொள்ளலாம்.

Website – https://bit.ly/3nHHsoQ
Telephone – 0115 660 660

6. நவலோகா வைத்தியசாலை (Nawaloka Hospital)

கொழும்பு 02 இல் அமைந்துள்ள நவலோகா வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை செய்துக் கொள்ள முடியும். பரிசோதனை செய்ய செல்லும் போது தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டினை கொண்டு செல்ல மறவாதீர்கள். இங்கு நீங்கள் உங்கள் வாகனத்தில் இருந்தவாறே பரிசோதனையை செய்து கொள்ள முடியும்.கீழ் வரும் ஏதேனும் ஒரு வழியின் மூலம் பரிசோதனையை மேற்கொள்ளக் கூடிய நேரம் மற்றும் முன்பதிவினை செய்து கொள்ளலாம்.

Website – https://bit.ly/3gUnCoO
Telephone – 0115 777 888

7. கிங்ஸ் வைத்தியசாலை (Kings Hospital)

கொழும்பு 05 இல் உள்ள கிறீன் பார்க் வீதியில் அமைந்துள்ள கிங்ஸ் வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ள முடியும். பரிசோதனை செய்ய செல்லும் போது தேசிய அடையாள அட்டையினை கொண்டு செல்ல மறவாதீர்கள். கீழுள்ள இணையத்தின் மூலம் பரிசோதனையை மேற்கொள்ளக் கூடிய நேரம் மற்றும் முன்பதிவினை செய்து கொள்ளலாம்.

Website – https://bit.ly/3u8LZ5Q
Telephone – 0117 743 743

8. ஃபோர்ட் டயக்னோஸ்டிக்ஸ் (Forte Diagnostics (Pvt) Ltd)

கொழும்பு 05 இல் உள்ள போட்ஜூ வீதியில் அமைந்துள்ள ஃபோர்ட் டயக்னோஸ்டிக்ஸ் (Pvt) Ltdஇல் பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ள முடியும். கீழுள்ள இணையத்தின் மூலம் பரிசோதனையை மேற்கொள்ளக் கூடிய நேரம் மற்றும் முன்பதிவினை செய்து கொள்ளலாம்.

Website – https://bit.ly/3t394Wl
Telephone – 0117 565 565

9. CDEM வைத்தியசாலை (CDEM Hospital)

CDEM வைத்தியசாலை பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ள முடியும். கீழுள்ள இணையத்தின் மூலம் பரிசோதனையை மேற்கொள்ளக் கூடிய நேரம் மற்றும் முன்பதிவினை செய்துக் கொள்ளலாம்.

Website – https://bit.ly/3tagRSi
Telephone – 0117 463 600

10. நைன்வெல்ஸ் வைத்தியசாலை (Ninewells Hospital)

நாரஹென்பிட்டியவில் அமைந்துள்ள நைன்வெல்ஸ் வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ள முடியும். பரிசோதனை செய்ய செல்லும் போது தேசிய அடையாள அட்டையினை கொண்டு செல்ல மறவாதீர்கள். கீழுள்ள இணையத்தின் மூலம் பரிசோதனையை மேற்கொள்ளக் கூடிய நேரம் மற்றும் முன்பதிவினை செய்து கொள்ளலாம்.

Website – https://bit.ly/3t3YvlN
Telephone – 0114 520 999

11. ஹேமாஸ் வைத்தியசாலை (Hemas Hospital)

வத்தளை மற்றும் தலவத்துகொட ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஹேமாஸ் வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ள முடியும். நீங்கள் நேரடியாக வைத்தியசாலைக்கு சென்றோ அல்லது அவர்களது ஹோம் க்யார் சேவையின் மூலமோ பி.சி.ஆர் பரிசோதனையினை மேற்கொள்ள முடியம். இன்றே உங்களுக்கான ஹோம் க்யார் சேவைக்கான முன்பதிவினை கீழுள்ள தொலைபேசி எண்ணின் மூலம் பதிவு செய்யுங்கள்.

Telephone – 0117 888 888

கொழும்பிலுள்ள எந்தவொரு வைத்தியசாலையினையும் தொடர்பு கொண்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கான முன்பதிவுகளை செய்து கொள்ளலாம் என நுகேகொடையில் உள்ள பொது சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

இந்தப் பதிவில் உள்ள வைத்தியசாலைகளை தவிர உங்களுக்கு தெரிந்த வேறெந்த வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் மற்றும் ரெபிட் ஆன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என கமன்ட் பொக்ஸில் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

கிரேப் ரன்னர் கஃபே – Crepe Runner Café

மிகவும் பழக்கமான கடலோரப் பகுதி மெரைன் டிரைவில் அமைந்திருக்கும் கிரேப் ரன்னர் (crape runner) என்பது ஒரு அழகான சிறிய உணவகமாகும், மேலும் நமது இலங்கை சூரிய அஸ்தமனங்களின் பரந்த காட்சிகளை ரசிக்க சரியான இடமாக இது அமைகிறது. இனிப்பு மற்றும் சுவையான கிரேப்ஸின் (crepes) மாறுபட்ட வரம்பைக் கொண்ட கிரேப் ரன்னர் என்பது இலங்கை ஆன்மாவின் கலவையுடன் பாரம்பரிய பிரெஞ்ச் (french) தெரு உணவு வகைகளின் இணைவாகும். இது ஏராளமான வகையிலான கிரேப்ஸ் (crepes), ஃப்ரைஸ் (fries) மற்றும் பானங்களை உங்களுக்கு வழங்குகின்றது. ஏராளமான தேர்வுகள் மற்றும் திருப்திகாரமான சேவையென உங்களை மகிழ்விக்கிறது.

லைம் மோஜிடோ – Lime mojito – 250 LKR

மோஜிடோ (mojito) குளிர்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஒரு பானமாகும், இது கடுமையான வெப்பத்தை வெல்ல ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இது உங்கள் சராசரி மோஜிடோவிலிருந்து வேறுபட்டது, இது சோடாவுடன் தயாரிக்கப்படுகிறது. இது கூடுதல் பிஸி கிக் (fizzy kick) உங்களுக்கு வழங்குகிறது. இதில் புதினாவின் இலைகள் உள்ளன. அதிக இனிப்பாக இருக்காது, சிட்ரிக் சுவையை விரும்புவோருக்கு இது சரியானது.

நினைவில் கொள்ளுங்கள், இது ஒரு வர்ஜின்-மோஜிடோ (virgin mojito), எனவே இந்த கலவை உங்கள் குழந்தைகளைத் தூண்ட கூடிய சுவையை கொண்டது.

வெனிலா க்ரன்ச் மில்க் ஷேக் – vanila curuch milkshake – 400 LKR

மில்க் ஷேக்கில் கிரன்ச் (crunch) சேர்க்கப்படுகிறது. இதில் முக்கியமான ஷோரன்னரான (showrunner), வெனிலா சுவையிலிருந்து விலகிச் செல்லக்கூடாது என்பதற்காக மிகச் சரியான அளவீடுகளில் சேர்க்கப்படுகிறது.

இருப்பினும், மில்க் ஷேக் பால் பக்கத்தை நோக்கி அதிகமாகச் செல்கிறது, மேலும் நாம் கற்பனை செய்யுமளவுக்கு செறிவாகவும் இல்லை. ஆயினும்கூட, இந்த இனிப்பு மற்றும் புத்துணர்ச்சி ஒரு மாதிரியாக திருப்திப்படுத்துகிறது. விலைக்கு முழுமையாக மதிப்புள்ளது.

ஹோட் சாக்லேட் – hot chocolate – 400 LKR

கிரேப் ரன்னரில்( crape runner) உள்ள ஊழியர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு உன்னதமான பானம். அவர்களின் சிறந்த விற்பனை பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது சூடான சாக்லேட்டில் தயாரிக்கப்பட்டது. கிரீமியான, சூடான உருகிய சாக்லேட், பாலில் கலந்து வேறு லெவல் சுவையை தருகிறது. அதைத் தொடர்ந்து ஒரு நுரை அடுக்குடன் ஒரு மிகச்சிறந்த மார்ஷ்மெல்லோவுடன் கலவையை நிறைவு செய்கிறது.

லோடட் பிரைஸ் – சீஸ் ஆன் பிரைஸ் – loaded fries-cheese on fires – 450 LKR

பிரஞ்சு பொரியல்களின் (fries) மலையின் மேல் தூறப்பட்ட வெள்ளை சாஸ், சீஸ் மற்றும் மசாலாப் பொருட்களின் உச்சக்கட்டம் இந்த சீஸ் ஆன் பிரைஸ் (cheese on fries) ஆகும். இந்த டிஷ் ஒரு இனிமையான திருப்தியான, நிறைவான அனுபவத்தை அளிக்கிறது. இதில் மிளகாய், ஆர்கனோ மற்றும் பிற மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. வெள்ளை சாஸ் மற்றும் சீஸ் ஆகியவை, இதில் ஒரு மிருதுவான இனிப்பு சுவையை அளிக்கிறது. இது நிச்சயமாக ஒரு தனித்துவமான உணவாகும்.

செவரி கிரேப்ஸ் – மின்ஸ்ட் சிக்கன் savory crepes-minced chicken – 400 LKR

இது கோழி, மூலிகைகள் மற்றும் சீஸ் ஆகியவற்றின் அபாரமான சேர்க்கையாகும். இந்த சுவையான கிரேப் (crepe) தரம் மற்றும் அளவு அடிப்படையில் உன்னதமான திருப்தி அளிக்கிறது. உருகிய சூடான உயர்தர சீஸ், மசாலா, ஊறுகாய் மற்றும் நொறுங்கிய வெங்காயத் துண்டுகளால் சமைத்த மென்மையான கோழி ஆகியவற்றின் பருமனான அடுக்குகளால் மூடப்பட்டிருக்கும். சீஸ், உலர் பொருட்களை ஒன்றாக இணைத்து இனிமையின் நுட்பமான சுவையைக் கொண்டுவருகிறது.

செவரி கிரேப்ஸ் – சீஸ் ஃபேண்டஸி – savory crepes-cheese fantasy – 400 LKR

“சீஸ் ஃபேண்டஸி” என்ற பெயர், இந்த டிஷ் மூன்று சீஸ் காம்போவை கொண்டது என்பதனாலாகும். இந்த உணவில் வெட்டப்பட்ட வெங்காயம் மற்றும் ஊறுகாய் ஆகியவை கெட்ச்அப் (ketchup) தூறலுடன் பரிமாறப்பட்டுள்ளது. கிரேப் (crepe) மெல்லியதாகவும், மிருதுவாகவும் இருக்கிறது.

கிலசிக் சுவிட் கிரேப்ஸ்-நட்டெல்லா ஆன்ட் ஓரியோ – classic sweet crepes- nutella and oreo – 450 LKR

நட்டெல்லா மற்றும் ஓரியோ கிரேப் (crepe), நீங்கள் அவசியம் முயற்சிக்க வேண்டிய ஒரு டெஸெர்ட் ஆகும். இடையில் வெட்டப்பட்ட நொறுங்கிய ஓரியோ (oreo) குக்கீகளின் சிறிய துகள்களுடன், நட்டெல்லாவின் (nutella) தாராளமான பரவலைப் பெறுவது, 100% சுவைக்கு உத்தரவாதம். இந்த உன்னதமான கிரேப் (crepe) அனைத்து குக்கீ-கிரீம் வெறியர்களுக்கும் ஏற்றது.

கொம்போ சுவிட் கிரேப்ஸ் – நட்டெல்லா+கிட் கேட்+ஸ்டோபெரி – combo sweet crepes- nutella+kit kat+strawberry – 500 LKR

ஒரு நல்ல சாக்லேட் மற்றும் ஸ்ட்ராபெரி காம்போவை விரும்புவோருக்கு, நட்டெல்லா + கிட்கேட் + ஸ்டோபெரி கிரேப் ஒரு சிறந்த விருந்தக்க அமைந்துவிடும். இது அதிக இனிப்பு நிறைந்த கலவையாகத் தோன்றினாலும், ஸ்டோபெர்ரிகள் இனிப்பை சரியான அளவு குறைத்து, அந்த punchy மற்றும் பழ சுவையைக் கொண்டுவருவதால், இந்த நட்டெல்லா மற்றும் கிட்கேட் கிரேப், அதிரடியான சுவையை அளிக்கிறது.

சுற்றுச் சூழல் (Ambience)

கிரேப் ரன்னர் (crepe runner) ஒரு இனிமையான, அழகான சூழலை வழங்குகிறது. இது மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்திலான, பிரகாசமான விளக்குகளோடு இயங்குகிறது. ஒருபுறம் நீங்கள் கடலின் பார்வையில் ஊறலாம், மறுபுறம், வெள்ளை மார்பிள் கவுண்டர் டாப்புடன் ( countertop) திறந்த சமையலறை இருப்பதைக் காணலாம். சிறிய இடம் மற்றும் அழகான இருக்கை பகுதிகளைக் கொண்டுள்ளது.

குறிப்பு – மின்ஸ்ட் சிக்கன் savory crepes இனை, ஹோட் சாக்லேட்டுடன் சேர்த்து சுவைத்துப் பாருங்கள். சூடான ஹோட் சாக்லேட் பானமும், சிறிது சிறிதாக வெட்டப்பட்ட கோழித்துண்டுகளும் சேர்ந்து, இனிப்பும் உறைப்பும் கலந்த அந்த சுவை, அற்புதமாக இருக்கும்.

index.php