Blog Page 35

பேருந்து (LEAVE HER SPACE) – நாடி Review

ஒரு நாளின் பொழுது விடிந்ததும் ஒரு பெண்ணானவள் தனது கல்வித் தேவை மற்றும் குடும்பத் தேவையின் நிமித்தம் வெளியில் செல்கிறாள். இதில் பெரும்பாலான Middle class பெண்களை பொருத்தவரையில், பொது போக்குவரத்து துறையினை நாடியே அவர்களின் பயணம் அன்றாடம் ஆரம்பமாகிறது. சமூகத்திற்கு அது ஒரு சாதரணமான பயணம் எனினும், பெண்களை பொருத்தவரையில் அந்ந பொது வழிப் போக்குவரத்து ஒரு யுத்த களமாகவே இருந்து வருகிறது. ஆம்! பொது வழிப் போக்குவரத்தில், அதிலும் முக்கியமாக பேருந்தில் பயணிக்கும் பெண்கள் எதிர் கொள்ளும் இன்னல்களும் அசோகரியங்களும் எண்ணிலடங்காதவை. அவ்வின்னல்களை வெளிச்சமிட்டுக் காட்டும் மற்றுமொரு படைப்பே இந்த ‘பேருந்து’.

கடந்த 2020 August மாதம் 07 திகதி YouTube தளத்தில், Ruvutharan Santhirapillai அவர்களின் இயக்கத்தில் பேருந்து குறுந்திரைப்படம் வெளியானது. இதில் Shainuja, Tharindi, Jevon, Krishan என பலர் நடித்துள்னர். மேலும் இத் திரைப்படத்திற்கான ஔிப்பதிவு Ajay Raminath. அதேவேளையில் பின்னணி இசை Bharanaven Jeyakumar, Editing – படத்தொகுப்பு Yazir Nizardeen மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக ஏதோ ஒரு தமிழ் திரைப்படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். ஒரு சாதாரண பெண் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு ஆணால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுவாள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவள், “இங்க வாங்க Sir! நாங்க Middle class பொண்ணுங்க. எங்களால Three wheelerல எல்லாம் போக முடியாது, நீங்க என்னதான் உரசினாலும் இதே பஸ்ல தான் போய் ஆகணும்” என்ற மனதை கலங்கடிக்கும் வசனம் இடம்பெற்றிருக்கும். அவ் வசனங்களின் தவிப்பையும், வலியையும் பேருந்து குறும் திரைப்படத்தில் நடித்த Shainuja வசனமே இன்றி தனது நடிப்பில் வெளிக்காட்டி இருப்பது மிகவும் பாராட்டக்கூடிய விடயமாகும். அந்த பெண்ணின் தவிப்பை அவாதானித்துக் கொண்டிருக்கும் சிறுவன், தன் தாயிடம் வினவும் கேள்விகளை, ‘பஸ்ஸில் இருக்கும் எவரேனும் ஒருவர் அந்த ஆணிடம் கேட்கவில்லை’ என்பது, தற்காலத்தில் நம் மக்களின் சமூக அக்கறை Social Media வில் Post போடுவதோடு முடிந்து போய்விடுகிறது என்பதையே சுட்டிகாட்டுகிறது. கதையில் வரும் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கும் நடிகர்கள், இந்தப்படத்திற்கு மிகப்பெரும் பலம். தமது நடிப்பாற்றலை எங்கே, எப்போது, எப்படி வெளிப்படுத்த வேண்டுமோ, அதை சரியாக புரிந்து கொண்டு செய்திருக்கிறார்கள். துணைப்பாத்திரங்களாக நடித்தவர்கள் கூட, அங்காங்கே தமது முகபாவனைகளால் score செய்கிறார்கள்.

சிறுவன் கேள்விகளை கேட்கும் காட்சிகளில், வசனங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். முக்கியமாக இறுதிக் காட்சி உட்பட மற்றைய காட்சிகளில் வரும் வசனங்கள் வலுவாக இருப்பினும், போதியளவு யதார்த்தமாக அமையவில்லை. அது தவிர பெரும்பாலான இடங்களில் பின்னணி குரல் dubbing Sync ஆகவில்லை என்றே கூற வேண்டும். இயக்குனர் Dubbing செய்யும்போது கூடிய கவனம் செலுத்தியிருக்கலாம். குறும்படத்தின் காட்சிகள், பின்ணனி ஒலி, Dubbing குரல் ஆகிய மூன்றும், சில இடங்களில் சரிவர நெறியாளப்படவில்லையோ என்று தோன்றுகிறது. ஆனால் குறும்படத்தின் ஆரம்பத்தில் வரும் வானொலிக் குரல், கனகச்சிதமாக அமைந்திருக்கிறது. தவிர பெரும்பாலான இடங்களில் பின்னணி ஒலி சிறப்பாக அமைந்திருக்கிறது.

படத்தின் காட்சியமைப்புகளில் ஔிப்பதிவாளரை பாராட்டியே ஆக வேண்டும். ஒரு பஸ்ஸில் எத்தகைய காட்சியமைப்புக்களை செய்ய முடியுமோ, அவ்வளவு நேர்த்தியாக காட்சியமைத்து தனது வேலையை சிறப்பாக செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். எடிட்டிங் திறம்பட செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக படம் முழுவதும் B&W, அதாவது கருப்பு வெள்ளையில் இருப்பது, குறும்படத்திற்கான Mood ஐ முதல் Frame இல் இருந்தே Set செய்கிறது. தவிர, பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சமூக அவலங்கள் தொடர்பான விடயங்களில் நாம் எந்தளவுக்கு பின்தங்கியுள்ளோம் என்பதை அந்த கலர் tone உணர்த்துகிறது. அதேவேளையில், பேரளவில் நிகழும் ஓர் சமூக அவலத்தினை, வெறும் நான்கு நிமிடங்களில் வெளிக்கொணர்ந்த இயக்குனருக்கும் படத்தொகுப்பாளருக்கும் பாராட்டுக்களை வழங்கியே ஆக வேண்டும்.

இலங்கையில் ஒவ்வொரு 90 நிமிடத்திற்கு ஒருமுறை, ஒரு பெண் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு இலக்காகிறாள் என்பது வேதனையே! அவ்வாறான தருணங்களில் ‘நமக்கென்ன?’ என்று இருக்காமல், ‘ஏன்?’ என்ற கேள்வியினை எழுப்ப வேண்டும், என்ற உன்னத சமூகக் கருத்து இந்த படத்தில் வெளிப்படுகிறது.

நாடி Verdict – 73/100
‘பேருந்து’ – இனி பெண்களின் வழியில்..
குறும்பட Link – https://youtu.be/cylrzONdjto

கொழும்பில் ‘பார்க் அண்ட் ரைட்’ பஸ் சேவை – Park And Ride City Bus in Colombo

இலங்கையின் வீதிகளில் நாளாந்தம் வாகனங்களின் எண்ணிக்கை கதி வீச்சில் அதிகரிப்பதன் விளைவாக இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக கொழும்பு மாநகரில் வாகன நெரிசல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அனைத்திலும் இவ்வாறான வாகன நெரிசல் காணப்பட்டாலும், ஏன் எமது நாட்டில் இந்த நிலமை  ஏற்பட்டுள்ளது என்பதை நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

நாட்டின் போக்குவரத்துத்துறையை பொருத்த வரையில், வாகன நெரிசல் பெரும் நெருக்கடி தரும் காரணியாக அமைந்துள்ளது. பெருந்தெருக்களில் பயணிக்கும் வாகனங்களின் வேகம், மணிக்கு கிலோ மீற்றர் அளவில் குறைவது, நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைய வாய்ப்பிருக்கிறது.

குறிப்பாக, வாகன நெரிசல் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். உதாரணமாக ஜப்பானில் டோக்கியோ நகரினை நாம் எடுத்துக் கொண்டால் அங்கு கொழும்பினை போன்று வாகன நெரிசலினை காணவே முடியாது. ஏனெனில் அங்கு மக்கள் தங்களது பிரத்தியேக வாகனங்களை தவிர்த்து மாறாக பொது போக்குவரத்து துறையினை நாடுகின்றனர். ஆம், நகரங்களுக்கிடையான இலகு விமான சேவைகள் போன்று சொகுசு பஸ் சேவைகளையும் பொதுமக்கள் பயணத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக கொழும்பு நகரைப் பொருத்த வரையில் நாளொன்றுக்கு 250,000 வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன. ஆகவே உள் நுழையும் வாகனங்கள் அதிகரிக்க வாகன நெரிசலும் தவிர்க முடியாத ஒரு விடயமாக மாறுகின்றது. எனவே வாகன நெரிசலை கட்டுப்படுத்த வீதிகள் அகலப்படுத்தப்படுகிறது. எனினும் இது ஓர் தற்காலிக தீர்வே அன்றி, உறுதியாக இச் செயன்முறையினால் வாகன நெரிசலை முற்றாக கட்டுப்படுத்த முடியும் எனக் கூற முடியாது. உதாரணமாக 60 பேர் ஒரு பஸ்ஸில் பயணிக்கின்றனர். மாறாக 60 பேரும் தனித்தனி வாகனங்களில் பயணித்தால், அங்கு 60 வாகனங்கள் வீதியில் பயணிக்கின்றன. இதுவே வாகன நெரிசலின் மையப் புள்ளியாகும்.

கொழும்பு நகரை அண்டியதாக PARK AND RIDE CITY BUS சேவை, கடந்த  ஜனவரி மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை போக்குவரத்து சபையினூடாக இந்த திட்டம் முன்னெடுத்து செல்லப்படுகிறது.  கொட்டாவ, மாக்கும்புர பஸ் போக்குவரத்து நிலையத்தை மையமாகக் கொண்டு, காலை 6.00 மணி முதல் இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்படும். இதற்காக 64 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சினால் வாகன நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இத் திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. சொந்த வாகனங்களில் வருபவர்கள் தமது வாகனங்களை தரிப்பிடங்களில் நிறுத்திவிட்டு பாதுகாப்பாக பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேவேளையில் பயணிகள் தமது சொந்த வாகனங்களை நிறுத்துவதற்காக வேண்டி, ஐந்து வாகன தரிப்பிட நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

1.Makumbura-Kottawa
2.Thalangama SLTB Dipot
3.Bastian Mawatha
4.138 Bus route
5.Nugegoda

அதேவேளையில் பிரதான இரண்டு பேருந்து வழிகளில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பேருந்து வழி 01

Makumbura-Kottawa தொடக்கம் pettah technical Junction ஊடாக Rajagiriya மற்றும் Pelawatta வீதிகளில் பயணம் செய்து, மீண்டும் Kottawa மேருந்து நிலையத்தை அடையும்.

பேருந்து வழி 02

Makumbura-Kottawa தொடக்கம் Nugegoda, Highlevel  வீதிகளினுடாக Narahenpita, Jawatte, Town Hall, Union Place போன்ற பேருந்து தரிப்பிடங்களை கடந்து Galle face ல் இருந்து Kollupitiya, Highlevel வீதிகளினூடாக மீள Makumbura-Kottawa பேருந்து நிலையத்தை அடையும்.

இந்த சேவையின் மேலதிக தகவலினை பெற்றுக் கெள்ள செயலி (app) ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியூடாக பேருந்தின் GPS Tracking மற்றும் தற்சமயம் ஒரு பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கிறார்கள் என்பதனை கூட அறியமுடியும். மேலும் இப் பேருந்துகளுக்கு சாதாரண பேருந்து கட்டணங்களில் இருந்து இரட்டிப்பு மடங்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

குறித்த பேருந்துகளில்  Wifi வசதி அமைக்கப்பட்டுள்ளதோடு, மேலும் கொழும்பிற்குள் நுழையும் 5 பிரவேச வழிகளிலும் புதிய பஸ் சேவைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலையிலிருந்து லீவு எடுப்பதற்கு சொல்லப்படும் பொய்கள் மற்றும் சாக்குப்போக்குகள்

தற்போதைய இளைஞர்கள் முதல் முதியோர் வரை வாழ்க்கையில் கடினமான விடயம் என கருதுவது காலையில் நேரத்துடன் எழும்புவதாகும். அதிலும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை Alarm வைத்து எழும்பி, Office இல் 8 – 9 மணித்தியாலங்கள்  வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பதே பலருக்கு மன உலைச்சலை உண்டாக்குகின்றது. அதையும் தாண்டி ‘எல்லாவற்றையும் விட தூக்கம் தான்டா முக்கியம்’ என கூறி விடுமுறை எடுப்பது, எம்மில் சில நபர்களுக்கு புதிதான ஓர் விடயமல்ல. அது போன்று விடுமுறை எடுக்கும் நபர்கள், தங்களது Office க்கு சொல்லக்கூடிய சிறந்த சில காரணங்கள் இதோ,

*Funerals மற்றும் Wedding*

மன்னன் படத்தில் ரஜினிகாந்த் கையாண்ட யுக்தியை போல் விடுமுறைக்கு காரணமாக, உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைப்பதும் குடும்பத்தில் வயதான முதியவர் ஒருவரை இறக்க வைப்பதும் அதிகமானோர் சொல்லும் ஓர் விடயமாகும். எனினும் உணர்வு மிகுந்த எம் மக்களுக்கு திருமணம் மற்றும் திடீர் மரணம் என்பது உணர்வுடன் கலந்த ஓர் விடயமாகும். எனினும் இக் காரணத்தை அதிகமானோர் தவறாக பயன்படுத்துவதால், இவ் விடயத்துக்கு  உரித்தான மகிமை குறைந்து விடுகின்றது. ஆகவே இதை உகந்த படி உபயோகித்து தத்தமது நற் பெயர்களை பாதுகாத்துக் கொள்ளவும்.

*கடவுள் பக்தி சார்ந்த யுக்திகள்*

கடவுள் மற்றும் பக்தி சார்ந்த விடயங்கள் பலருக்கு வாழ்வியலுக்கும் அப்பாற்பட்ட ஓர் விடயம் ஆகும். ஆகவே கடவுள் சார்ந்த கிரியைகளுக்கு அதற்கான மகிமை எப்பொழுதும் உண்டு. ஆகையால், இதனை வைத்து சாக்குபோக்கு கூறவதனால் இவற்றிற்கு எதிராக கேள்வி எழுப்பப்படுவது அரிது. இவை ஒரு புறம் இருக்க, எப்போதும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு வழிபடாத ஓர் நபர், விடுமுறைக்கு மாத்திரம் கடவுளை பின்பற்றுவது தான் சகித்துகொள்ள முடியாத ஓர் விடயமாகும்.

*Doctor Appointments அல்லது நோய்வாய்ப்படுதல்*

பாடசாலை காலம் முதல் Office வாழ்க்கை வரை அதிகமான Leave letter களில் கூறப்பட்ட ஓர் வாக்கியம் “சுகயீனம் காரணமாக சமூகமளிக்க முடியவில்லை” மற்றும் ‘Due to sickness I couldn’t attend’ ஆகிய வசனங்கள் ஆகும். இச் சாக்கு போக்குகள் புளித்து போன விடயங்களாக இருந்தாலும், நிலையான காரணங்களாக விளங்குவதனால் பொய்யாக இருப்பினும், எவராலும் மறுப்பு தெரிவிக்க முடியாது. பரவலாக கூறப்படும் Food Poisoning மற்றும் இருமலாக இருப்பின், பெண்கள் Dull Make Up என்ற பெயரில் Eyebrow பென்சிலை சற்று அதிகமாக உபயோகித்துக்கொள்வதும் ஆண்கள் அடிக்கடி கழிவறை சென்று காலம் கழிப்பதையும் யுக்திகளாக கொண்டுள்ளனர் . மேலும் கொரோனா காலம் காரணமாக இருமல் காய்ச்சலுக்கு சற்று மதிப்பு இருப்பதால் அதிகமானோர் பயந்து போய் விடுமுறையளிக்கிறார்கள்.

*அவசர குடும்ப பொறுப்புக்கள்*

பிள்ளைகள் கொண்ட குடும்பஸ்தர்கள் அதிகம் சொல்லும் காரணம். ஆகவே இது உண்மையாக இருப்பதற்கான நிகழ்தகவு கூடுதலாக இருப்பதனால் இதற்கு ஓர் தனி மரியாதை உண்டு. மேலும் இதை சற்று உயிரோட்டமுடையதாக கருதுவதற்கு சொல்லும் வேகத்தை குறைத்தும், சொல்லும் தொனியில் சிறு கலக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளவும்.

*நாடக விபத்து*

சாதாரண ஒரு நபரினால் விபத்தை ஓர் பொய் காரணமாக சொல்லமுடியாது. கதை, திரைக்கதை, வசனம் ஆகிய மூன்றும் இரத்தத்தில் ஊறிய ஒரு நபரிற்கே இவ்வாறான கதைகளை கூற முடியும். இச் சந்தர்பங்களில் அதிகமான குறுக்கு கேள்விகள் கேட்கப்படுவதால் சற்று உஷாராக பதிலளிக்கவேண்டும். ஆகையால் மற்றவர்கள் நம்பக்கூடிய மாதிரி இக் காரணத்தை உபயோகித்துக்கொள்வது சிறந்தது.

*நம்பப்படக் கூடிய இதர கதைகள்*

பொதுவாக 90s Kids சிறந்து விளங்கும் ஓர் Area. ‘இப்படியெல்லாம் காரணம் வருமாடா?’ என்று அதிகாரியை சற்று ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும் விதமாக காரணங்கள் காணப்படும். Passport Office முதல் Driving License Exam வரை பொய்களை அடுக்கி வைத்துக் கொண்டே போகலாம். எனினும் நிராகரிப்பதற்கு வலுவான தடயங்கள் இல்லாததால், எப்பொழும் வெற்றியை கொடுக்கும் யுக்தியாகவே இது கருதப்படுகிறது.

இலங்கையில் Autism குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள்

உலகம் முழுதும் ஏப்ரல் மாதமானது Autism நோய்க்கான மாதமாக கருதப்படுகின்றது. பல்வேறு நாடுகளில் autism தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள்  நடைபெற்று வருகின்றன.

ஓட்டிசம் (Autism) என்றால் என்ன?

Autism என்பதை மருத்துவ மொழியில்  ASD (autism spectrum disorder) என்று கூறுவார்கள். Autism என்பது “குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு வளர்ச்சியில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு” ஆகும். முக்கியமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதுவொரு நோயல்ல ஒரு குறைபாடாகும்.

பொதுவாக இக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சமூகத்தில் மற்றவர்களுடன் இயல்பாக பழகுதல், அவர்களின் இயல்பான  நடத்தைகள், மற்றும் தொடர்பாடல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள கடினமாக உணருவார்கள். இந்தச் செயற்பாட்டுத் திறன்  குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் இருந்தும் சற்று வேறுபடும்.

இன்றைய நவீன காலத்தை பொருத்தவரையில்  Autism குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குறிப்பாக அமெரிக்காவில்    59 பேரில் ஒருவருக்கு இந்தக் குறைபாடு உள்ளது.

இன்றைய காலகட்டத்தை பொருத்தவரையில் தமது autism குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு  பெற்றோரே முக்கிய காரணமாக உள்ளனர். இன்றைய தலைமுறை குழந்தைகள் பெற்றோரின் அரவணைப்பிற்காக ஏங்கும் நிலை உருவாகியுள்ளது.  முன்னைய காலங்களில் அழுது கொண்டிருக்கும் பிள்ளைகளை சமாதானப்படுத்த தாய் கதை கூறுவாள், ஆயினும் இன்றைய காலததில் கையடக்க தொலைபேசியே  அழுத பிள்ளையினை சமாளிக்கிறது. சிறு வயதில் பெற்றோருடனான தொடர்பு தடை பட்டு தனிமையும், கையடக்கத் தொலைபேசியும் அந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கு துணையாக நிற்கின்றன. இது autism குழந்தைகளின் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய  காரணமாக அமைகிறது.

பலர் ஓட்டிசம் பற்றி கேள்விப்பட்டிருப்பர். ஆனால் எத்தனை பேருக்கு அது ஒருவரையும் அவரின் குடும்பத்தினரையும் எங்ஙனம் பாதிக்கிறது என்பது பற்றித் தெரியும். தனது குழந்தை மற்றைய குழந்தை போல் இயல்பாக இல்லை என்பது பத்து மாதம் சுமந்த தாயிற்கு மரணத்தை விட கடும் வேதனையான ஒரு விடயமாக இருக்கும். ஓட்டிசம் உடையோர் முகத் தோற்றத்தில் வித்தியாசம் இன்றி நம்மை போன்றே பெரும்பாலும் இருப்பார்கள். எனவே எப்படி அவர்களை அடையாளம் காணலாம் என்பது முக்கியம்.

உலகில் மிகவும் பிரபல்யமான நபர்களும் இக் குறைபாட்டினால் பாதிக்கபட்டவர்கள் தான் என்று கூறினால் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒன்றாக சுவாசிக்க வேண்டி ஏற்படும். ஆம், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பில் கேட்ஸ், மைக்கேல் ஜாச்சன் போன்றவர்கள்,  உலகின் பல அரிய  மேதைகளும் இந்த குறைபாடு உள்ளவர்கள் தான். ஆனால் அறிவுக்கூர்மைக்கும், இந்தக் குறைபாட்டுக்கும் தொடர்பில்லை. இந்த  பாதிப்புள்ள ஒரு சிலரால் பேச முடியாமலும், சைகை மூலமாக மட்டுமே தொடர்புகொள்ள முடிவதாகவும் இருப்பதும் உண்டு.

Autism குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மூன்று குணயியல்புகள் கொண்டிருப்பார்கள்.அவர்களுக்கு இலகுவாக பழகுவதில் சிரமம் இருக்கும். அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட காரியத்தினை மீண்டும் மீண்டும் செய்யும் குணஇயல்பு கொண்டிருப்பதால், தமது நாளாந்த செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படும் போது அதனுடன் பயணிக்க மிகவும் கடினமாக உணர்வார்கள்.  அவர்களது குறைந்த மொழியாற்றலால் மற்றவர்களுடன் தமது எண்ணங்களையும் உணர்வுகளையும் பறிமாற்றிக் கொள்வதில் சிரமம் அடைவார்கள்.

தற்போது autism னை  முற்றாக  குணமாக்கும் முறைகள்  கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே ASD பற்றிய தாக்கம், அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அக் குழந்தைகளுக்கான தீர்வுகள் என autism தொடர்பான புரிந்துணர்வுகள் இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதனைப் பற்றிய தவறான கண்ணோட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும். சரியானதும் பொருத்தமானதும், autism குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால்  வழங்கப்படும் ஆதரவே மிகப் பெரிய பக்க பலமாக அமையும்.

காலத்திற்கேற்ற உதவியும், ஆதரவுமே ASD குறைபாடு உடையோரின் வாழ்வினை முன்னேற்றும். ASD பற்றிய விழிப்புணர்வும் அவர்களை சக மனிதராக நோக்கும் கண்ணோட்டமும்  அனைவரது மத்தியிலும் தோன்றும் போதே  இது சாத்தியமாகும்.

autism தொடர்பான அறிவும் விழிப்புணர்வும் இலங்கையில் இருந்தாலும் அதன் வளர்ச்சி வீதம் மிகவும் மந்த கதியிலே முன்னேறி வருகிறது. ஒரு ஆய்வில் இலங்கையில் 93 குழந்தைகளில் ஒரு குழந்தை இக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.  குறிப்பாக, இலங்கையில் 18 முதல் 24 மாதங்களிற்கு உட்பட்ட குழந்தைகளே இவ்வாறு பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் இந்த குறைபாட்டினால் பாதிப்படைந்த குழந்தைகளுக்காக வேண்டி பல்வேறு தனியார் தொண்டாற்றும் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சமூக தொண்டாற்றும் நிறுவனங்கள் தமது கடமைகளை உரிய முறையில் முன்னெடுத்து வருகின்றன.

Daddys Lanka Autism Centre

17 வருடங்களுக்கு மேலாக விஷேட தேவையுடைய குழந்தைகளை பராமரிப்பதில்  தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மேலும் இலங்கையில் இருந்து மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியில் இவர்களது சேவை வியாபித்துக் காணப்படுகிறது.

முகவரி               – 14/3A Pangiriwatta Mawatha, Nugegoda

தொடர்புகளுக்கு – 071 681 2524

info@daddyslanka.org

OSILMO Special Education & Research Center for Autistic Children

Autism குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான உரிய சூழலினை அமைத்து கொடுப்பதும் எவ்வாறு ஒரு ஆரோக்கியமுள்ள குழந்தைக்கு எத்தகைய உரிமையுள்ளதோ அதே போன்று இக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் சம உரிமை வழங்கவேண்டும் என்ற கொள்கையுடன் இயங்கும் நிறுவனமாக திகழ்கிறது.

முகவரி               – 9 Horana Rd, Piliyandala

தொடர்புகளுக்கு -0112 702 53

Reach Beyond – Autism & Child Development Center

இலாப நோக்கம் அற்று விஷேட தேவையுடைய குறிப்பிட்ட தாய்மார்களினால் ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

முகவரி              – 14/7 Tickell Rd, Colombo 08

தொடர்புகளுக்கு- 077 732 7120

Senehasa Education Resource Research & Information Centre

Autism குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கனவினை நனவாக்க இயங்கும் ஒரு நிறுவனமாக திகழ்கின்றது.

முகவரி              – Matha Rd, mannintown

தொடர்புகளுக்கு- 0112 698 760

“ஓட்டிசம் என்பது ஒரு நோயல்ல அது இறைவனால் வழங்கப்பட்ட ஒரு விஷேட திறமையாகும்”

“நாங்க பொடியன்மார்” – நாடி Review

எரியும் உரிமை எனும் விழிப்புணர்வு பாடலினை தொடர்ந்து, பொடியன்மார் YouTube தளத்தின் புதிய படைப்பாக 14.04.2021 சித்திரை புத்தாண்டு வெளியீடாக இளைஞர்களை கவரும் வண்ணத்தில் “நாங்க பொடியன்மார்” பாடல் வெளியாகியுள்ளது.

Sana Fairose ன் இசையில் Baga, Shafee, Amaan மற்றும் Sana ஆகியோரின் குரல்களில் இப் பாடல் பதிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப் பாடலுக்கான காட்சிகளில் Rifkhan, Dusanthan, Mubasshir,Pramil, Ammar என இன்னும் பலர் நடித்துள்ளனர். அதே வேளையில் பாடலுக்கான வரிகள் Baga, Ramzin, Sana ஆகியோரின் கை வண்ணத்தில் இடம் பெற்றுள்ளது. எடிட்டிங் Paralox Media. மேலும் பாடலுக்கான ஔிப்பதிவினை Ramzin Haniffa மேற் கொண்டுள்ளார். இந்த பாடல் Baga வின் இயக்கத்தினால் உருவாக்கம் பெற்றுள்ளது. 04 நிமிடங்கள் பாடலின் முழு காலநேரமாக காணப்படுகிறது.

Techno இசையில் ஆரம்பமாகும் இந்த பாடலின் tune அனைவருக்கும் இலகுவில் பிடித்துவிடும். எனினும் சில இடங்களில் பாடலின் சில வரிகள் பாடல் இசையுடன் சரிவர ஒத்துப்போகவில்லை என்று தான் கூறவேண்டும். பாடலின் வரிகள் கொஞ்சம் சுமாராகவே இருக்கின்றது. நட்பை பற்றி கூறும் இவ் வகையான பாடலின் வரிகள், எந்நேரமும் முனுமுனுக்கும் வகையிலான பிடிப்பான வரிகளாக இருந்திருந்தால் பெரும்பலமாக அமைந்திருக்கும்.

பாடலில் இடம் பெறும் Rap பகுதி மிகவும் பாரட்டத்தக்க வகையில் அமைந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் சற்று மெதுவாக சென்றபாடலுக்கு எங்கிருந்தோ ஒரு energy கிடைப்பது போல இருக்கிறது. எனினும் அந்த Rap portion, பாடலின் மெட்டுக்கேற்றவாறு அமைத்திருக்கலாமோ! என்ற எண்ணம், பாடலை தொடர்ந்து சில முறை கேட்கும் போது மனதில் எழுகிறது.

இசையை பொருத்தவரையில் பாராட்டக் கூடிய நிறைய அம்சங்கள் பாடலில் அடங்கியுள்ளது. இசையமைப்பாளர் இந்த பாடலுக்கான Audience இளைஞர்கள் தான் என்பதை நன்றாக புரிந்து கொண்டு நூறு சதவீதம் இந்த பாடலுக்காக உழைத்திருக்கிறார். அதேவேளையில் பல இடங்களில் ‘விசில் ஓசையுடன்’ கூடிய இசை, கேட்பவருக்கு உற்சாகமூட்டுகிறது.

பாடலின் காட்சிகளில் எது தேவையோ, அதை சரியாக திரையில் காண்பித்திருக்கிறார்கள். colorful ஆகவும், நேர்த்தியாகவும் இருக்கின்றன பாடலின் காட்சிகள். தரமான ஒளிப்பதிவு, உண்மையில் பாராட்டத்தக்கது. ஆனால் வீடியோவில் அங்காங்கே Un sync ஆக செல்கின்றன காட்சிகள். பாடலில் காண்பிக்கப்படும் நடனக் காட்சிகளும் சில இடங்களில் பாடலுக்கு பொருந்தவில்லை. படத்தொகுப்பு மற்றும் காட்சியமைப்பில், எடிட்டர் மற்றும் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இந்த பாடலில் நடித்துள்ள இளைஞர்கள் சிறப்பாக நடித்திருந்தாலும், பாடலில் வரும் காட்சிகளுக்கு அவர்களது முகபாவனை குறைவாகவே காணப்படுகின்றது. எதிர்காலத்தில் சிறந்த படைப்புகளில் ஈடுபடுவதன் மூலம்  இவர்களது நடிப்பாற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும். மென்மேலும் பல படைப்புகளில் நடித்து, அவர்களது நடிப்பாற்றலை வளர்த்துக் கொள்ள நாடியின் வாழ்த்துகள்.

இலங்கையில் பல தமிழ் இசைக் கலைஞர்கள், Independent Artist ஆக தமது திறமைகளை உலகெங்கும் நிரூபித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் படைப்புகளை உலகிற்கு எடுத்துச் செல்ல, தற்கால சமூக வலைதளங்கள் மிகப்பெரிய தளமாக இருந்து வருகிறது. அந்த வகையில், “நாங்க பொடியன்மார்” என்ற இந்த பாடலை உருவாக்குவதற்கு அந்த team எடுத்துக்கொண்ட முயற்சியை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும்.

நாடி Verdict – 55/100
‘நாங்க பொடியன்மார்’ – சிறந்த முயற்சி
பாடல் Link – https://youtu.be/QKKuN7-CcfY

மூன்றாவது ‘லாக் டவுனில்’ எமக்கு பயன்படும் Apps, Website மற்றும் ஏனைய சேவைகள்

மக்கள் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் போதியளவு சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்காததால் கொரோனா மூன்றாம் அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. இது நிகழும் பட்சத்தில் அக் காலப்பகுதியில் மக்களுக்கு உபயோகப்படும் Mobile Apps, Website மற்றும் ஏனைய சேவைகள் பற்றியை ஓர் பார்வை இதோ,

சுகாதாரம் (Health)

Stay Safe Website – ஒவ்வொரு நாளும் நாம் எல்லோரும் கடந்து செல்லும் ஒரு Website. அதிகமான நிறுவனங்களில் உள் நுழையும் போது வாசல்களில் அந் நிலையங்களுக்கு உரித்தான Bar Code நுழைவாயில்களில் ஒட்டப்பட்டிருக்கும். இதனை Scan செய்து பதிவு செய்வதன் மூலம் எமது விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. கொரோனா தொற்றாளர் ஒருவர் அந் நிறுவனங்களுக்கு சென்று இருப்பார் எனின் Contact Tracing மூலம் அவர் சென்ற இடத்தை கண்டுபிடிப்பதோடு நோயாளியுடன் நேரடி தொடர்பு கொண்ட நபர்கள் தனிமை படுத்தலுக்கு உள்வாங்கப்படுவார்கள்.

Link : https://staysafe.gov.lk

eChanneling – doc.lk மற்றும் oDoc.lk , வைத்தியர்களை சந்திப்பதற்கான நியமனங்களை பெற்றுக்கொள்ளவும் அவர்களை காணொளி மூலம் தொடர்பு கொள்ளவும் வசதிகளை வழங்குகிறது. மேலும் PCR Test களை மேற்கொள்வற்கு, முன்பதிவு செய்வதற்கான வசதியும் உண்டு.

eChanneling link : https://www.echannelling.com/Echannelling/index
Doc990 link : https://www.doc.lk
oDoc link : https://www.odoc.life

1990 Hotline – நீங்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக சந்தேகிக்கப்படும் பட்சத்தில், பொதுப் போக்குவரத்து சேவைகளை நாடாமல் 1990 என்ற 24 மணி நேர இலவச Ambulance சேவையினூடாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்றடைய முடியும்.

1926 Hotline – கொரோனா பரவல் எமது அன்றாட வாழ்க்கையில் பாரியதோர் தாக்கத்தினை செலுத்தியுள்ளது. இதனால் அதிகமானோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால் தற்கொலை செய்திகள் அதிகளவாக பதிவு செய்யப்படுகின்றது. ஆகையால் இதனை தடுக்கும் நோக்கத்தில், எவருக்கும் தற்கொலை உணர்வுகள் ஏற்படுமாயின் 1926 என்ற இலக்கத்தினை தொடர்புகொண்டு இலவசமாக ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

MyMed Online Pharmacy – இவ் இணையத்தளத்தில் தனது Prescription ஐ Upload செய்து, தேவையான மருந்து வகைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Link : http://mymed.lk

செய்தி (News)

Ada Derana Tamil / Ada Derana 24 – இக் காலப்பகுதிகளில் அதிகளவான வதந்திகள் மற்றும் உறுதியற்ற செய்திகள் பரவக்கூடும். இதனால் மக்கள் அச்சமுற்று, அவசியமற்ற ஓர் பரபரப்பு நிலை உருவாக வாய்ப்புண்டு. உண்மையான செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு Derana News Alert சேவையினை Subscribe செய்வதன் மூலமும் App மற்றும் இணைய வழியினூடாக செய்திகளை இலவசமாக அறிந்து கொள்ள முடியும்.

Link : http://www.adaderana.lk

Epidemiology Unit Website –  நோயாளர் எண்ணிக்கை, நோயாளர்கள் அதிகமாக கண்டுபிடிக்கப்படும் பிரதேசம் போன்ற புள்ளிவிபரம் சார்ந்த செய்திகளை அறிந்து கொள்ளவும், அரசாங்கத்தினால் வெளியிடப்படும் கொரோனா தொடர்பான சுற்றறிக்கைகளை தெரிந்து கொள்ளவும் இது உதவும்.

Link : http://www.epid.gov.lk/web/index.php?lang=ta

போக்குவரத்து (Travel)

Uber மற்றும் PickMe – இச் சேவையினுடாக தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இதனால் சென்ற இடம், நேரம், காலம் போன்ற விபரங்கள் சேகரிக்கபடுவதனால் Contact Tracing பொறிமுறைக்கு அதிக பங்களிப்புச் செய்கின்றது.

Domex மற்றும் Pronto – உள்ளூர் மற்றும் வெளியூர் ஆகிய இடங்களுக்கிடையே பொதிகள் பரிமாற்றத்திற்கு இச் சேவைகளினை உபயோகித்துக்கொள்ள முடியும்.

Domex Link : https://www.domex.lk
Pronto Lanka Link : https://prontolanka.lk

கொள்வனவு (Purchasing)

Daraz – வெகுஜன சாதனங்கள் முதல் உணவுப் பொருட்களை வரை அனைத்து விதமான பொருட்களையும் Mobile App அல்லது இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

Keells, Glomark மற்றும் Placeme.lk – இந் நிறுவனங்களிடம் தங்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள், உணவு வகைகள் மற்றும் சுத்தம் செய்வதற்கான பொருட்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.

Keells Website : https://www.keellssuper.com/home
Glomark Website : https://glomark.lk
Placeme.lk Website : https://placeme.lk/#/

PickMe மற்றும் Uber உங்களது வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் நுகர்வு நிலையங்களில் இருந்து அத்தியவசிய பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை App இன் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும்.

கொடுப்பனவுகள் (Payments)

MyDialog, My Airtel, Mobitel Selfcare மற்றும் Hutch App – இவ் Mobile Application கள் மூலம் பணத்தை செலுத்தவும், கணக்கு விபரங்களை அறிந்து கொள்ளவும் வாடிக்கையாளர் சேவை வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Digital Online Banking – இத் தனியார் வங்கிச்சேவை வசதியினூடாக வங்கிகளில் பெறக்கூடிய ஏறத்தாழ அனைத்து சேவைகளையும் பெற்றுகொள்வதோடு கட்டணங்கள் செலுத்தவும், பணத்தினை பரிவர்த்தனை செய்துகொள்ளவும் முடியும்.

Frimi, Solo மற்றும் mCash – இது போன்ற கொடுப்பனவு App களினூடாக, எமது கொடுப்பனவுகளை சுலபமாக மேற்கொள்ள முடியும்.

விளையாட்டு (Gaming Apps)

முதலாம் Lock down இல் அதிகமானோரின் பொழுதுபோக்காக மாறிப்போன ஓர் விடயம் Gaming. சிறுவர் முதல் பெரியோர் வரை வயது வேறுபாடு இன்றி விளையாடி மகிழ்ந்தனர். அதே போல் மூன்றாம் Lock down வரும் பட்சத்தில் உதவியாக இருக்கக்கூடிய சில MobileGame Applications இதோ,

Among US
Ludo Club
PubG Mobile
CoD Mobile

 

நுவரெலியாவில் குடிப்பதற்கு சிறந்த இடங்கள்

பச்சை கம்பளம் விரித்தாற் போன்று இயற்கை அன்னை அள்ளித்தந்த கொள்ளை அழகால் பார்ப்பவர்களை கவர்ந்திழுத்து பரவசமூட்டும் இயல்பினை கொண்டது தான் நுவரெலியா. சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இடங்களில் நுவரெலியா மண்ணும் ஒன்று. அதே வேளையில் குதிரை சவாரி,  காடுகளுக்குள்ளே நடைபயணம் போன்ற, ஓய்வு நேரங்களை பயனுள்ள வகையில் செலவிட உகந்த தளமாகவும் இது விளங்குகிறது.மேலும் ஆசியாவிலேயே சிறந்த “golf” மைதானமும் இங்கு தான் காணப்படுகின்றது. இலங்கையில் இயற்கை அழகை ரசிப்பதற்கும், உங்கள் நேரங்களை உல்லாசமாக செலவிடவும் தகுந்த இடங்களை பட்டியலிட்டால், நுவரெலியாவே முதலிடம் பிடிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.  

The Pub

மிகவும் பழமை வாய்ந்ததும், நுவரெலியா நகரின் மத்திய பகுதியில் ஆங்கிலேய கால சாயலினை இன்றும் உணர்த்தும் வகையில் சுற்றுலா பயணிகளினதும் நுவரெலியா மக்களினதும்  தொடர் தேர்வாக அமையப் பெறுவதே இந்த “The Pub by lion”. இது நுவரெலியா மக்களால் “the go to place” எனப்படுகிறது. அதாவது, கட்டாயமாக போக வேண்டிய இடமென அழைக்கப்படுகிறது. அதேவேளையில் இங்கு பரிமாறப்படும் ஒரு குவளை பியர் குளிர்காலத்தையே மிஞ்சிவிடும் என வர்ணிக்கப்படுகிறது.

வியாபார நேரங்கள் – 11:00 am – 11:00 pm

முகவரி – No 20, Kandy Road, Nuwara Eliya.

தொலைபேசி.இல – 0522 235 788

The Thinking Cup

முழுமையாக மரப் பலகையினை கொண்டு நிறுவப்பட்ட The Thinking Cup, மிக முக்கியமாக மற்றைய அனைத்து மது அருந்தும் கூடங்களில் இருந்து வேறுபட்டே காட்சி தருகின்றது. இங்கு குளிரினை மறக்கடிக்கச் செய்கின்ற காபியும்(Coffee) கிடைக்கும். அதேவேளையில் ஒரு கோப்பை பியருடன், இங்கு நேரடியாக ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் இசையும் மனதினை மெய்மறக்க செய்யும்.

திறக்கப்படுவது – 5:00pm – 9:00pm (வரையறுக்கப்பட்ட வியாபார நேரங்கள்)

முகவரி – No 134 Badulla Road, Nuwara Eliya.

தொலைபேசி.இல – 0773 731 678

Instagram – thinkingcupnuwaraeliya

The Public Bar

காலனித்துவ ஆட்சிகால பாரம்பரியத்தை பிரதிபலிக்க கூடிய ஒரே பிரம்மாண்ட ஹோட்டலாக The Public Bar அமையப் பெற்றிருக்கிறது. இங்கு விற்பனை செய்யப்படும் மெனுவில் உள்ள உணவு மற்றும் குடிபானங்களின் விலை சற்று உயர்வாக இருந்தாலும், இவர்களின் ஹோட்டலின் சுற்றுப்புறத்திற்கும் இவர்களது இதய பூர்வ இன்முக சேவைக்கும் இணையாக எவரும் இந்த நுவரெலியா நகரில் இல்லையென கூறலாம்.

திறக்கப்படுவது – 11:00am – 10:00pm

முகவரி – No 5,The Grand Hotel Road, Nuwara Eliya.

தொலைபேசி.இல – 0522 222 882

The 19th Hole Pub

1970 களிலிருந்த ஆங்கிலேய pub களை போல் பிரதிபலிக்கக் கூடிய, நகரில் மிகவும் பிரபல்யமான தளமாக Glendower Hotel ன் ‘THE 19th HOLE PUB’ விளங்குகிறது. அதேவேளையில் பல்வேறு வகையான கொக்டெயல்ஸ் மற்றும் பியரும் இங்கு பரிமாறப்படுகிறது. மேலும் ரம்மியமான தென்றல் காற்றுடன் சங்கமித்து இனிமையான சூழலை உணர வைக்கும் தன்மை இத்தளத்தின் அடையாளமாக அமைகிறது. மேலும் இங்கு pool table காணப்படுவதும் ஒரு வித்தியாசமான சிறப்பம்சமாகும். இங்கு அமர்ந்து மது அருந்துவதை நினைத்துப் பார்த்தால், ‘ராஜபோதை’ என்ற சொல்தான் நினைவுக்கு வரும்.

வியாபார நேரங்கள் – 11:00am – 11:00pm
Happy Hours (ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்) – 11:00am – 02:00pm மற்றும் 05:30pm – 08:30pm

முகவரி – No 05, The Glendover Hotel, Grand Hotel Road, Nuwara Eliya.

தொலைபேசி.இல – 0522 222 501

The Rogue Elephant Bar

நுவரெலியாவின் மத்திய பகுதியில், உங்கள் உல்லாச நேரங்களை மிகவும் இனிமையாக செலவிட உகந்த இடமாக, Windsor Hotel ன் “ROGUE ELEPHANT BAR” அமையப் பெறுகிறது. இங்கு மிகவும் பழமைவாய்ந்த பெறுமதிமிக்க வைய்ன்களும், அதேவேளையில் மேலைத்தேய மற்றும் உள்ளூர் மது பானங்களும், மிகவும் சுவை மிக்க உணவுகளும் பரிமாறப்படுகின்றன.

வியாபார நேரங்கள் – 5:00pm – 09:00pm (வரையறுக்கப்பட்ட வியாபார நேரங்கள்)
முகவரி – No 2, Kandy Road, Nuwara Eliya.
தொலைபேசி.இல – 0522 222 554

Lake View Pub

நுவரெலியாவின் குதிரை பந்தய திடலின் ஊடாக Gregory ஏரியின் இயற்கை அழகை ரசிக்கக் கூடிய வகையில், Alpin Hotel உடன் இணைக்கப்பட்டதே இந்த “Lake View Pub” ஆகும். மேலும் இந்த pub இனை பொறுத்தவரையில் இங்கு அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். எனினும் இந்த ஹோட்டலின் அங்கத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இத் தளத்தில் காணப்படும் பழமை வாய்ந்த தளபாடங்கள் இந்த Pub ன் சிறப்பம்சமாகும்.

வியாபார நேரங்கள் – 12:00noon – 10:00pm

முகவரி – No 5 the Alpine Hotel, Hatton Hill Road, Nuwara Eliya

தொலைபேசி.இல – 0522 223 500

அல்லது – ஒரு மைல் துாரம் சென்று தங்களின் விருப்பத்திற்கேற்ப வெளி மதுபானங்களை உள்ளே எடுத்து வரலாம்.

Country House Restaurant at The Trevene Hotel

மிகவும் அமைதியான சூழலில் பழமை வாய்ந்த பயிர்ச்செய்கை பங்களா என்று வர்ணிக்கப்படுவதே Country House Restaurant at The Trevene Hotel ஆகும். பொதுவாக இதனை ‘Country House restaurant’ என்பார்கள். வாடிக்கையாளர்களின் தேர்வுகளிற்கேற்ப வீடுகளிலே செய்யப்படும் பீசாக்கள் (Pizza) அனைவராலும் இத் தளத்தின் அடையாளமாக சொல்லப்படுகிறது. மேலும் பல்வேறு வித்தியாசமான உணவு வகைகள் அவர்களின் மெனுவில் இடம் பெறுகின்றன. அதேவேளையில் தங்களது தேர்விற்கு ஏற்ப வெளி இடங்களில் இருந்தும் மது பானங்கள் எடுத்து வர அனுமதிக்கப்படுகின்றது.

வியாபார நேரங்கள் – 07:00am – 09:00pm (முன் பதிவுகளிற்கு கேற்ப)

முகவரி – No 1, Park Road, Nuwara Eliya.

தொலைபேசி.இல – 0722 304 220

Indian Summer Restaurant

ஹக்கல பூங்காவினது அழகையும் Gregory ஏரியின் காட்சிகளையும் ரசித்த படியே நுவரெலியா குளிரை மறந்து சூடான உணவுகளை சுவைக்க “Indian summer Resturant” சிறந்த இடமாக அமைந்துள்ளது. மேலும் அவர்களை அடையாளப்படுத்தும் உணவு வகைகளாக பிரியாணி மற்றும் தேநீருடன் சேர்ந்து பரிமாறப்படும் மதுபான வகைகளுக்கு இணையாக எதுவும் இல்லையென கூறலாம்.

வியாபார நேரங்கள் – 10:00am – 10:00pm

முகவரி – No 96, Mahagasthota, Badulla Road, Nuwara Eliya

தொலைபேசி இல – 0522 224 411

Hills Restaurant

நுவரெலியா நகரிலே பல்வேறு வகையான உணவு வகைகளை, அதாவது சைனீஸ்,இந்தியன், சிங்கபூரியன், மேலத்தேய மற்றும் உள்நாட்டு உணவு வகைளை உள்ளடக்கிய மெனுவினை கொண்ட ஒரே restaurant ஆக இது திகழ்கின்றது. பொதுவாகவே மிகவும் பரபரப்பாக இயங்கக் கூடிய தளமாக காணப்படுகிறது. ஆதலால் முன் கூட்டியே பதிவுகளை மேற்கொண்டு வருகை தந்தால் எந்தவித தடங்கலுமின்றி சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

வியாபார நேரங்கள் – 11:30am – 10:00pm

முகவரி – No 9, Lawson Street, Hilary Plaza, Nuwara Eliya.

தொலைபேசி.இல – 0705 666 666

Restaurant GURU

குளிர் காயும் விறகின் நெருப்புடன், நேரடி மெல்லிசை ஒலிக்க, மரத்தினாலான வீடமைப்பில் பல்வேறு உணவு வகைகளை இங்கு கிடைக்கப் பெற்றாலும், ஊர் மக்களால் ‘Kotthu’ விற்கான சிறந்த இடம் என கூறப்படுகிறது. மேலும் அந்த மெல்லிசைக்கேற்ப, மெய்மறக்கச் செய்யும் மதுவும் பரிமாறப்படுகிறது.

வியாபார நேரங்கள் -07:00am – 11:00pm
முகவரி – No. 203/1a, St. Andrew’s Drive, Nuwara Eliya.
தொலைபேசி.இல – 0773 586 284
Instagram – resturant _guru_ne

 

ரமழான் நோன்பு கால டிப்ஸ்

புனித ரமழான் மாதத்தில், முஸ்லிம்கள் விடியற்காலை முதல் சூரிய அஸ்தமனம் வரை தினமும் நோன்பு நோற்கிறார்கள். பாரம்பரியமாக சூரிய அஸ்தமனத்தின் போது உணவருந்தி, பசியாறி நோன்பினை முறிக்கிறார்கள். இதனை “இஃப்தார்” என்பார்கள். மீண்டும் ஸுஹூரில் (விடியற்காலையில்) சாப்பிட்டு நோன்பை ஆரம்பிப்பார்கள். இந்த நோன்பை பின்பற்றுவதன் மூலம் உடல் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். உதாரணமாக இரத்த அழுத்தம், கொழுப்பைக் குறைக்கவும் மற்றும் உடல் எடையைக் குறைக்கவும் இது உதவும்.

மாறாக, இஃப்தார் மற்றும் ஸுஹூரில் அளவுக்கதிகமாக உணவருந்துவது எடை அதிகரிப்பை ஏற்படுத்தும். சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம், தியாகம் மற்றும் பச்சாதாபம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதற்கான நேரமாக புனித ரமழான் மாதம் பெரும்பாலும் காணப்படுகிறது. உண்ணாவிரத நேரங்கள் நீடிக்க ஸுஹூரில் சரியான உணவுகளை உட்கொள்ளுங்கள். இஃப்தார் வரை நீடிக்க போதுமான ஆற்றலை உங்களுக்கு வழங்கும் ஒரு ஆரோக்கியமான உணவாக ஸுஹூர் உணவு இருக்க வேண்டும். அன்றைய நோன்பினை தக்க வைத்து கொள்வதற்காகவும் நோன்பு காலங்களில் உடல் சுகாதாரத்திற்கு ஏற்றாற்போன்ற சரியான முறையில் உணவை தெரிவு செய்து கொள்ளல் வேண்டும்.

மேலும் ரமழான் நோன்பை இலகுவாகக் கடப்பதற்கான டிப்ஸ்,


1. ஸுஹூரைக் கட்டாயம் தவிர்க்கக் கூடாது (விடியலுக்கு முந்தைய உணவு)

நோன்பு காலங்களில் ஸுஹுர் உண்ணுகின்ற பழக்கம் ஒரு சுன்னத் ஆகவே பார்க்கப்படுகிறது. ஒருவேளை தடையற்ற தூக்கம் ஸுஹுர் வேளைக்கு தடையாகக் காணப்பட்டாலும், தூக்கத்தைக் கலைத்து, ஸுஹுர் உட்கொள்வது முக்கியமான ஒன்றாகும். ஸுஹுரை தவிர்த்தலானது நோன்பில் கடினத்தன்மையை ஏற்படுத்தும். எனவே சரியான உணவு வகைகளை தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். நீண்ட நேரம் நோன்பு இருப்பதால், நீங்கள் பகலில் நீரிழப்பு மற்றும் சோர்வாக உணர வாய்ப்புள்ளது. மேலும், ஸுஹூரைத் தவிர்ப்பது இஃப்தாரின் போது அதிகமான உணவை உட்கொள்ள ஊக்குவிக்கிறது. இது ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பை ஏற்படுத்தும்.

2. இஃப்தார் வேளையில் அளவுக்கதிகமாக சாப்பிடக் கூடாது

இஃப்தார் வேளையில் அதிகமாக உணவை உட்கொள்வது உடலுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும். இந்த நேரத்தின் போது ஏராளமான தண்ணீரைக் குடிக்கவும், இயற்கையான கொழுப்புக்கு மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டுகள், காய்கறிகள், புரதங்கள் மற்றும் பால் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். உங்கள் உணவில் இந்த ஊட்டச்சத்துக்கள் இருப்பது உங்களை நீரேற்றம் மற்றும் நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதன் மூலம் உங்கள் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடும்.

3. ஸுஹூரின் போது (விடியலுக்கு முந்தைய உணவு), குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகளை உண்ணுவதில் கவனம் செலுத்துங்கள்

முழு தானிய உணவுகள், ஓட்ஸ், கம்பு, பார்லி, பழுப்பு அரிசி, குயினோவா, பெர்ரி, ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள். இந்த உணவுகள் இரத்த சர்க்கரையை அதிகரிக்காது. இது உங்கள் பசியைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

4. உடற்பயிற்சி

ரமழானைக் கடைப்பிடிக்கும் முஸ்லிம்கள் சுறுசுறுப்பாக இருப்பது கொஞ்சம் சவாலாக இருக்கும். ஆனால் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அதனால்தான் ரமழான் முழுவதும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது முக்கியம். ஆயினும் அதிக எடையை தூக்குவது அல்லது வெயிலில் பயிற்சி செய்வது போன்ற அதிக தீவிரம் கொண்ட பயிற்சிகளைத தவிர்க்கவும். ஆனால் இஃப்தாருக்குப் பிறகு மாலையில் இதைச் செய்ய முடியும்.

உங்களுக்கு கூன் இருக்கா ?

சிறு வயதிலேயே சிலருக்கு கூன் விழும் பிரச்சனை தொடங்கிவிடுகிறது. வயதாக வயதாக இந்த கூன் அதிகமாகி முதுகில் மலை போன்ற ஓர் அமைப்பினை அல்லது முதுகு மற்றும் கழுத்துப் பகுதிகள் வளைவானதாக தோற்றமளிக்க காரணமாகிவிடுகிறது. இது பிற்காலத்தில் பிறரின் கேலிக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளுவதோடு உடல் ரீதியான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

இவ்வாறு கூன் ஏற்படுவதற்கான காரணங்கள் பல உள்ளன. சிறு வயது முதலே குழந்தைகளுக்கு நேரே அமர பழக்கிடாது வளைந்து அமரும் பழகத்திற்கு இசைவாக்கமடைய அனுமதித்தல். குழந்தை நிமிர்ந்து அமரவோ நிற்கவோ சிரமப்படும் போது ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதித்தல் நல்லது. காசநோயால் பீடிக்கப்படும் போது முதுகெலும்பு பாதிப்புக்குள்ளாகும் போது அதன் இயல்பு நிலை மாறி கூன் விழுகிறது. வயதாகும் போது விட்டமின் D மற்றும் கல்சியம் ஆகியவை போதியளவு கிடைக்கப்பெறாமையால் எலும்பு வலிமை குறைந்து மெலிகிறது. இதனை osteoporosis என்பர். இந்நிலைமையிலும் கூன் விழுகிறது. இதனை போக்குவதற்கு சரியான சிகிச்சைகளையும், உடற்பயிற்சிகளிலும் ஈடுபடுதல் சிறந்த தீர்வாக அமையும். மேலும் சில எளிய தீர்வுகள்,

மல்லாந்து உறங்குதல்

வெந்நீரினால் ஒத்தடம் கொடுத்தல்

காலையில் சமனம் காலிட்டு இருபது நிமிடங்கள் முதுகு தண்டு வளையாமல் அமர்ந்து மூச்சு பயிற்சி செய்தல் குறைந்தது சாப்பிடும் போதாவது சமனம் இட்டு அமர்ந்து சாப்பிடுதல். தரையில் அமர முடியாதவர்கள் கதிரையில் அமரலாம். அதுவும் இயலாதவர்கள் 20 நிமிடங்கள் நடக்கலாம்.

பின்னால் முதுகு தண்டு வளையும் படியான ஆசனங்கள் மற்றும் பயிற்சிகளில் ஈடுபடல். பத்மாசனம், சித்தாசனம், சக்கராசனம் மற்றும் தனுராசனம் போன்ற முதுகெலும்பினை வலிமைப்படுத்தக் கூடிய ஆசனங்களை செய்தல்.

இவ்வாறான பயிற்சிகளால் முதுகு தண்டின் கூன் நீங்கி முதுகு நேராகும்.

2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலும் – தமிழக அரசியல் வரலாறும்

திராவிட கட்சிகளின் வருகைக்கு முன் தமிழ் நாட்டின் அரசியல் யுகம் இந்திய தேசிய காங்கிரஸின் (Indian National Congress) வசம் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து 20 ஆண்டுகள் தனது ஆதிக்கத்தினை செலுத்தி வந்த இந்திய தேசிய காங்கிரஸ், 1967ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுக்கொண்ட பாரிய வெற்றியைத் தொடர்ந்து தனது ஆதிக்கத்தினை இழந்தது. அன்று முதல் இன்று வரை தமிழ் நாட்டின் பிரதான கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) ஆகிய இரு கட்சிகள் மாத்திரம் ஆட்சியை தம் வசம் வைத்திருந்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிட கட்சியின் தோற்றம்

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பாரிய பங்கு வகித்த இந்திய தேசிய காங்கிரஸ் பிராமணரை மாத்திரம் மய்யம் கொண்டு தனது சேவையினை மேற்கொண்டு வந்ததோடு, திராவிடர்களுக்கு எதிரான இன ரீதியான அடக்கு முறை உத்திகளைக் கையாண்டு வந்தது. இவ் அடக்கு முறைக்கு எதிராக நீதிக் கட்சி (Justice Party) என்ற கட்சி செயல்பட தொடங்கியது. இக் கட்சியே காலப்போக்கில் திராவிட கழகம் (DK) என புத்தாக்கம் பெற்றது. மேலும் இக் கட்சியை நெறிப்படுத்திய தலைவராக பெரியார் E. V. ராமசாமி அவர்கள் விளங்கியதோடு மட்டுமல்லாது திராவிடர்களின் தந்தையாகவும் போற்றப்பட்டார். மேலும் இவர் பகுத்தறிவு, சுய மரியாதை, பெண்கள் உரிமை மற்றும் சாதி ஒழிப்பு போன்ற கொள்கைகளை மையமாக கொண்டு இயங்கி வந்தவராவர்.

அண்ணாவின் வருகையும் தேசிய காங்கிரஸின் வீழ்ச்சியும்

பெரியார் அவர்களின் தீவிர போராளியாக விளங்கிய C. N. அண்ணாதுறை அவர்கள், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றியதோடு மட்டுமல்லாது திராவிடர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கொள்கையில் அதி ஆர்வம் காட்டி வந்தார். இக் காலப்பகுதியிலேயே தேசிய காங்கிரஸின் செல்வாக்கு தென்னிந்தியாவில் அதிக தாக்கம் செலுத்தி வந்தது.

அண்ணாதுறை அவர்களின் அதி தீவிர அரசியல் ஈடுபாட்டினால் 1967 ஆம் ஆண்டு தேர்தலை வெற்றிகொண்டு தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்று, தேசிய காங்கிரஸின் ஆதிக்கத்திற்கு முற்றுகையிட்டார். இவரது காலத்திலேயே ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்று அழைக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் தென்னிந்திய மாகாணம் தமிழ் நாடு என பெயர் முகம் பெற்றது. 

எம்ம்ம்ம்ம்ம்ம் ஜி ஆர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சினிமாவில் நடித்து கதாநாயகன் வேடம் வகித்த எம். ஜி. ராமச்சந்திரன், தமிழ் நாட்டிற்கு சேவையாற்றி தமிழ் நாட்டின் கதாநாயகன் என்ற பெயரை முழங்கச் செய்தார். ‘புரட்சி அரசியல்’ என்பதற்கான வரைவிலக்கணத்தை  தனது தனித்துவமான பாணியில் செய்து காட்டி, மத்திய அரசை அதிரவைத்த பெருமை இவரையே சேரும். C. N. அண்ணாதுறை அவர்களின் மறைவை தொடர்ந்து தலைவராகிய M. கருணாநிதி, M. K. முத்து என்று அழைக்கப்படும் தனது மூத்த மகனை அரசியல் மற்றும் சினிமாத் துறையில் ஈடுபடச் செய்தார். அண்ணா அவர்களின் மறைவின் பின்னர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிதி மோசடி பற்றி வெகுவாக விமர்சித்த MGR கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இச் செயற்பாடே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (ADMK) என்ற கட்சி உருவாகியதன் பின்னணியாகும். இதுவே பிற்பாடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) என அழைக்கப்பட்டது. ஆளுமை, கட்சி, குலம், அரசியல் எல்லாவற்றிற்கும் அப்பால், மக்கள் மனதில் வேரோட்டம் பெற்ற நபராக வலம் வந்த MGR, 1987ல் இயற்கை எய்தினார்.

34 வருட சுழற்சி முறை அரசியல்

‘மக்களாலேயே நான்; மக்களுக்காகவே நான்’ என்றும் ‘துணிவிருந்தால் தூக்கமில்லை, துணிவில்லாதவனுக்கும் தூக்கம் இல்லை’ போன்ற வாசகத்தை கூறி, 1987 ஆண்டு MGR இன் மறைவைத் தொடர்ந்து சராசரியாக 34 வருடங்கள் தமிழ் நாட்டு மக்களின் இன்ப, துன்பங்கள் இரண்டிற்கும் காரணமாக விளங்கியவர்களாக கலைஞர் கருணாநிதி அவர்களும் புரட்சி தலைவி ஜெயலலிதாவுமாவர். இருவர் மீதும் நிதிக் குற்றச்சாட்டுகள் பல இருப்பினும், இருவருமே தமிழ் நாட்டு அரசியலின் பெரும் ஆளுமைகள் என்று  போற்றப்பட்டு, அரசியலுக்கும் அப்பால் மக்களின் நேசத்தை வென்ற தலைவர்களாகவும் விளங்கினார்கள்.

அரசியல் ஜாம்பவான்களின் மறைவும், புதிய அரசியல் கட்சிகளின் வருகையும்

2016 ஆம் ஆண்டு புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் இறப்பும், 2018 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்களின் இறப்பும் தமிழ் நாட்டு அரசியலில் பல வெற்றிடங்களை தோற்றுவித்தது மட்டுமல்லாது பல புதிய கட்சிகளின் வருகைக்கும் வழிவகுத்தது. ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து OPS, EPS, சசிகலா என பல போட்டி எழுந்தாலும், சின்னம்மா சசிகலாவின் முறையில்லா சொத்து குவிப்பு தீர்ப்பும், OPS இன் விட்டுகொடுப்பும் AIADMK கட்சியில் விரிசலை ஏற்படுத்தியது.

கலைஞர் கருணாநிதி, M. K. ஸ்டாலினை தனது அரசியல் வாரிசாக வளர்த்தமையினால் DMK கட்சியின் மற்ற புள்ளிகளிடம் கட்சி தலைவர் மோகம் இருக்கவில்லை. இது அக் கட்சிக்கு பாரியதோர் பிரதிபலனாக காணப்பட்டது. மேலும் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து ரஜினிகாந்தும் தமது அரசியல் பிரவேசத்தை அறிவித்தாலும், ரஜினிகாந்த போட்டியிடாமலே தனது ஓய்வை அறிவித்தது காமெடி. எனினும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் பிரவேசம் இரு பிரதான கட்சிகளுக்குமிடையே போட்டி மிகுந்த  சூழல் ஒன்றை உருவாக்கியுள்ளதென்பது குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும். 

தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் – 2021

இச் சட்டப்பேரவை 234 ஆசனங்களை கொண்டுள்ளது. 118 ஆசனங்களையோ அதற்கு பெரும்பான்மையான ஆசனத்திற்கு ஆதரவளிக்கும் கட்சி ஆட்சி அமைப்பதோடு கட்சியின் தலைவராக கருதப்படுபவர் முதலமைச்சராக பதவி ஏற்பார். Covid – 19 பரவலுக்கு மத்தியில் இத் தேர்தல் நடைபெற்று 71.79% வாக்களிப்பு வீதத்தை கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இத் தேர்தலுக்கு DMK, AIADMK, MNM, NTK, INC மற்றும் BJP ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. மேலும் தேர்தல் முடிவுகள் மே மாதம் 2ம் நாள் அறிவிக்கப்படும் என திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவை ஒரு புறம் இருக்க, தளபதி விஜய் சர்கார் படத்தில் விமானத்தில் வந்திறங்கி வாக்களிக்க சென்றாலும், நிஜ வாழ்க்கையில் தனது சைக்கிளில் வாக்களிக்க சென்று, வரும் வழியில் ரசிகர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினாரென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் அஜித் தேர்தல் வாக்குச் சாவடி அருகில், அவரின் அனுமதியின்றி புகைப்படம் எடுத்தவரின் தொலைபேசியை பறித்தெடுத்து, பின்னர் எச்சரித்து, தொலைபேசியை ஒப்படைத்தாரென்பதும் குறிப்பிடத்தக்கது.

 

புதுவருடப்பிறப்பு பாரம்பரியமும் கலாசாரமும்

ஒவ்வொரு வருடமும் என்ன தான் மேற்கத்தேய நாடுகளில் காணப்படும் ஆங்கில நாட்காட்டி முறைப்படி ஜனவரி மாதம் முதலாம் திகதி நமது உறவுகளுக்கு வாழ்த்துகள் கூறி புதிய வருடமென கொண்டாடினும் நம் நாட்டினர் அனைவரும் இணைந்து தத்தமது உறவுகளோடு கோலாகலமாக புதிய வருடப் பிறப்பென கொண்டாடுவது சித்திரை மாதத்தில் மலர்கின்ற தமிழ், சிங்கள புத்தாண்டு நாளினை தான். சிங்களவர்கள் இந்த நாளினை ‘அழுத் அவுறுது’ என அழைக்கின்றனர். அதாவது அழுத் என்றால் புதிய அவுறுது என்றால் வருடம் எனப் பொருள் கொள்கிறது. நம் நாட்டின் தமிழர்களும் சிங்களவர்களும் இன வேறுபாடின்றி இந்நாளில் கூடி விளையாடுதல், கலை கலாசார நிகழ்வுகளை ஒழுங்கு செய்தல் மற்றும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை கூறுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இந்நாளினை சில சிங்கள கிறிஸ்தவர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் கூட கொண்டாடுவது உண்டு. இனி தமிழ், சிங்கள புத்தாண்டு பற்றிய விரிவான சில தகவல்களை காண்போம்.

தமிழ், சிங்கள புத்தாண்டு காலம்

இந்த நாளில் சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கின்றது. இந் நாளானது அறுவடை காலங்களின் இறுதி கட்டத்திலேயே பெரும்பாலும் மலர்கின்றது. இந்நாளானது தமிழ் கால கணிப்பீட்டு முறையின் படியே கணிக்கப்படுகின்றது. இந்நாளில் மருத்து நீர் வைத்து குளித்தல், சமய நிகழ்வுகளுக்கான நேரம், கைவிசேட நேரம் போன்றவற்றோடு இந்நாளில் கடவுளுக்கு படைப்பதற்கான பலகாரங்கள் போன்றவற்றை சமைப்பதற்கான நேரம் முதற் கொண்டு பஞ்சாங்கம்   கொண்டு கணிக்கப்படுகின்றது. சிங்களவர்கள் பஞ்சாங்கம் என்ற சொல்லை ம் என்ற உச்சரிப்பின்றி பஞ்சாங்க என கூறுகின்றனர். எது எவ்வாறாயினும் தமிழ் கால கணிப்பீட்டின் முறைப்படியே இந்நாளிற்கான நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ், சிங்கள புத்தாண்டு கால நிகழ்வுகள்

தமிழ், சிங்கள புத்தாண்டு காலமானது சித்திரை மாதம் 14/15 ஆக காணப்பட்ட போதிலும் அந்நாளை வரவேற்பதற்கான செயற்பாடுகள் அதற்கு முன்னைய வாரத்திலிருந்தே தொடங்கி விடுகிறது. மக்கள் கூட்ட கூட்டமாக சந்தைகளிலும், ஆடை வாங்குவதற்காக கடைகளுக்கும் என சென்று குவிகின்றனர். இவ்வருடம் மக்கள்  ஷொப்பிங் செய்ய போகும் போது சமூக இடைவெளி, தனிமைபடுத்தல், கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் கடைகளுக்குள் பிரவேசிக்கும் போது தம்மைப் பற்றிய தகவல்களை எழுதுவது போன்றவற்றை தவறாமல் கடைபிடிக்கும் படி சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ், சிங்கள வருடப்பிறப்பு நிகழும் நாளிற்கு முன்பே  “எண்ணெய் தாச்சி வைக்கும் நேரம்” என பலகாரங்கள் செய்வதற்கான நல்ல நேரம் பார்க்கப்படுகிறது. தமிழ், சிங்கள புத்தாண்டன்று வருடம் பிறக்கும் நேரத்திற்கு முன் மருத்து நீர் வைத்து குளிப்பதற்கென குறிப்பிட்ட ஓர் நேரம் குறிக்கப்படுகிறது. அந்நேரத்தில் மருத்து நீர் வைத்து நீராடி வருடம் பிறக்கும் நேரத்தில் பட்டாசுகள் வெடித்து புதிய வருடத்தினை மக்கள் வரவேற்கின்றனர். அந்நாளில் பாற்சோறு சமைத்து இன்னும் பல பலகாரங்கள் வைத்து கடவுளை வழிபடுவதற்கென “புண்ணிய காலம்” என்ற ஓர் நேரம் பயன்படுத்தப்படுகின்றது. இதனை சிங்களவர்கள் “புண்ணிய கால” என அழைப்பர். இந்த காலத்திற்குள் சமய வழிபாடுகளை நிறைவு செய்ய வேண்டும். சிங்களவர்கள் இந்நேரத்தில் விகாரைகளுக்குச் சென்று ‘பன’ கேட்பது போல், இந்துக்கள் கோயில் பூஜைகளிலும் அல்லது வீடுகளில் பூஜை செய்து வழிபடுவது உண்டு. வியாபாரிகள் இந்நேரத்தில் கடைகளை திறந்து அதன் பின் மீண்டும் கடைகளை மூடுவர். அதன் பின் உறவினர்களது வீடுகளுக்கு நல்ல நேரம் பார்த்து சென்று வாழ்த்துகள் கூறி வீட்டின் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி கைவிசேடங்கள் பெறும் வழக்கம் காணப்படுகின்றது. அநேகமான சிறுவர்களுக்கு பிடித்த ஓர் நிகழ்வு இந்த கைவிசேடம் தான். அதே சமயம் தமிழர்களிடம் இல்லாத வழக்கமாக சிங்களப் பெண்கள் இந்நாளில் ஒன்று சேர்ந்து ‘றபான்’ தட்டுதலில் ஈடுபடுவர்.

தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாடும் விதமாக மக்கள் சிறிய சிறிய கூட்டங்களாக ஒன்று கூடி கலாசார விளையாட்டுகளை ஒழுங்கு செய்வர். இதற்கு கால எல்லை கிடையாது. தமிழ், சிங்கள புத்தாண்டின் நிறைவில் மக்கள் ஓரிரு நாட்கள் மேலதிகமாக விடுமுறை எடுத்து கொண்டு அதன் பின் பணிகளுக்கு திரும்புவர்.

தமிழ் கால கணிப்பீட்டில் 60 வெவ்வேறு வருடங்கள் காணப்படுகின்றது. அதனடிப்படையில் ஒவ்வொரு வருடத்தினையும் அந்த 60 வருடங்களின் பெயர் பட்டியல் முறைப்படியே அழைக்கின்றனர். அந்த பெயர்களின் பின் அவ்வருடம் எவ்வாறு அமையும் என்ற மறைவான குறிப்புகளும் சித்தர் பாடல்களில் காணப்படுகின்றன.

தமிழ், சிங்கள புத்தாண்டு விளையாட்டுக்கள்

தமிழ், சிங்கள புத்தாண்டை முதன்மையாக கொண்டு நடாத்தப்படும் விளையாட்டுகளில் தலையணையால் அடித்தல், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் அழகு குமாரி, குமாரன் போன்றவை உள்ளடங்கும். இவற்றை தவிர மேலதிகமாகவும் சில விளையாட்டுக்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. எது எவ்வாறு  இருப்பினும் இவ்வருடம் இந்த மாதிரியான சமூக ஒன்று கூடல்களின் போது மக்கள் முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியினை பேணுதல் போன்றவற்றை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன. அவுறுது குமாரி போட்டிகளின் போது குறிப்பிட்ட ஒரு நேரத்திற்கு மட்டும் முககவசத்தினை அகற்றுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கலை கலாசார நிகழ்வுகளின் போதும் மற்றும் வேறு நிகழ்வுகளின் போதும் 100 நபர்களுக்கு மேல் ஒன்று கூடல் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொவிட்-19 பரவுவதற்கான அபாயம் இந்நாட்களில் அதிகமாக காணப்படுவதே இதற்கான காரணமாகும். மக்கள் இவற்றை கடைப்பிடிக்க தவறும் பட்சத்தில் இலங்கையில் கொவிட்-19 இன் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகி விடும். அதுமட்டுமன்றி தனிமைப்படுத்தல் மற்றும் நோய் அறிகுறிகளுடன் உள்ளவர்கள் எந்த நிகழ்விலும் கலந்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள பலகாரங்கள்

தமிழ், சிங்கள புத்தாண்டிற்கென சில விசேட பலகாரங்கள் காணப்படுகின்றன. அவற்றில் முதன்மையானது பணியாரமும் பாசிப்பயறு உருண்டையும் தான். அவற்றை தவிர கொக்கிஸ், கெவுன், கொண்டை பணியாரம் போன்றவையும் அடங்கும். தமிழர்கள் இக்கொண்டாட்டத்தின் போது பணியாரத்தினையும் முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தினையும் முன்நிலைபடுத்துவது போலேவே சிங்களவர்களும் செயற்படுகின்றனர். இங்கு கொண்டை பணியாரம் எனப்படுவது தமிழர்கள் செய்யும் பணியாரத்தின் சுவையையே ஒத்திருக்கும் ஆனால் உருவத்தில் பெண்களின் கொண்டை போன்று காணப்படும்.

தமிழ், சிங்கள புத்தாண்டு ஆரம்பம் தொடக்கம் இன்று வரை இந்தப் பகுதி சற்று வேடிக்கையான ஓர் அனுபவத்தினை உங்களுக்கு பெற்று தரக்கூடும். ஏனெனில் நாம் இப்போது சித்திரை புதுவருட காலத்தின் ஆரம்பம் தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் நவீன நாகரிக வளர்ச்சி ஏற்படுத்தியுள்ள மாற்றத்தினை காணப் போகிறோம்.

ஆரம்ப காலங்களில் வீடுகளை சாணியிட்டு மெழுகு வாசலில் மஞ்சள் தெளித்து கோலமிட்டு சிறிய உயிர்களுக்கும் உணவு படைக்கும் வழக்கம் தினமும் கடைபிடிக்கப்பட்டு வந்த அன்றாட பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்தது. அதன் பின் வருடத்தில் ஒரு முறை வருடப்பிறப்பின் போது மட்டும் மேற்கொண்டனர். அதன் பின் வண்ணங்கள் கலந்து அரிசியல் கோலத்தினை நிரப்பினர். இன்றைய காலகட்டத்தில் இரசாயன கலவைகளை நீரில் கலந்து வீடுகளை தூய்மை செய்து கோலம் இடுவதற்கான காரணத்தை மறந்து ஸ்டிக்கர் கோலங்கள் வாங்கி ஒட்டி விடுகின்றனர். “என்ன இது? ” என வினவும் பெரியோர்களை  “மாவு கோலம் போடுறதெல்லாம் ஓல்ட் பேஷன்” என கூறுவது நியூ பேஷன் ஆகி விட்டது.

சித்திரை வருடப் பிறப்பின் போது மருத்து நீர் வைத்து விட்டு பாரம்பரிய முறைப்படி சீயக்காய் வைத்து நீராடுவது வழக்கம். இது உடலில் உள்ள உஷ்ணம் தணித்து உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதும் கூட ஆனால் இன்று பெயரிற்கு மருத்து நீரை தலையில் தெளித்து விட்டு இரசாயான சேர்வைகள் கொண்டு தயாரிக்கப்படும் ஷேம்புகளை பயன்படுத்தி குளிக்கின்றனர்.

வருடத்திற்கு ஒரு முறையாவது வீட்டில் உள்ள அனைவரும் இணைந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைகளை பிரித்துக் கொண்டு பலகாரங்கள் செய்யும் வழக்கமானது குடும்ப அங்கத்தவரிடையே ஒற்றுமையையும் அன்பையும் பலப்படுத்துகிறது. இன்று அனைவரும் கைகளில் மொபைல்களை வைத்து இரண்டு தட்டு தட்டி ஒன்லைன் ஓர்டர் செய்து பலகாரங்களை கொள்வனவு செய்கின்றனர்.

உறவுகளது வீடுகளுக்கு வருடத்தில் ஒரு முறையாவது சென்று அனைவரும் ஒன்றாக இருந்து மகிழ்ச்சியாக பொழுதை கழித்த காலங்களெல்லாம் இன்று வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் கூறும் போர்வைகளுக்குல் மறைந்து அழிந்து விட்டன.

சமூக கலாசார விளையாட்டுக்கள் எல்லாம் இன்று ஒன்லைன் விளையாட்டுக்களாக மாறி விட்டன. இதற்கு சிறந்த உதாரணம் தாயம் தான். உங்களில் பலருக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். சரி உங்களுக்கு புரியும் படியே கூறுகிறேன். உங்கள் அனைவருக்கும் பிடித்த லூடோ. பாரம்பரிய பெயர்களை மறந்து அப்களில் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

கைவிசேடம் வழக்கம் எல்லாம் இப்போது பேன்ங் டெபோசிட்களாக மாறி விட்டது. வெற்றிலைகள் எல்லாம் பேன்க் சிலிப்களாக மாறி விட்டன. காலம் ஓடும் வேகத்தில் அனைத்தும் மாறிக் கொண்டே வருகிறது. மாற்றங்கள் தவறல்லவே அந்த மாற்றங்கள் நம் பாரம்பரியங்களை முற்றிலுமாக நம்மிலிருந்து அழிக்கும் அளவிற்கு நாம் அனுமதிப்பது தான் தவறு. கடந்த வருடம் வீடுகளுள் இருந்து புதிய வருடத்தினை கொண்டாடிய நமக்கு காலம் இவ்வருடம் வெளியில் சென்று உறவுகளை சந்திக்கும் அளவிற்கு அமைத்து தந்துள்ளது. கொவிட்-19 பரவுதலை தடுக்க கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை கருத்திற் கொண்டு மொபைல்களை ஓரம் வைத்து விட்டு உண்மையான உலகில் முழுமையான ஓர் புதிய வருடத்தினை கொண்டாடுவோம். உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ், சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சருமத்திற்கு பாதகம் விளைவிக்கும் பொருட்கள்

“ஒரே நாள் இரவில் பளிச்சிடும் முகம்…! ஒரே நாளில் பருக்கள் மாயமாக மறைந்திடும்…!” என பரிந்துரைக்கப்படும் அழகு குறிப்புகளில் பயன்படுத்தப்படும் சில பொருட்கள் உண்மையில் நம் சருமத்திற்கு நன்மை தரக் கூடியதா? இதுவரை நாம் அன்றாடம் நம் முகத்திற்கு நன்மை தரும் என நாம் பயன்படுத்துபவை உண்மையில் நம் முகச் சருமத்தில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன? இந்த பதிவின் மூலம் நம் முகத்தின் சருமத்திற்கு நாம் பயன்படுத்தக் கூடாத, பாதகம் விளைவிக்க கூடிய பொருட்கள் பற்றி அறிவோம்.

சாதாரண சோப்

சாதாரண சோப்களினை தயாரிக்கும் போது sodium lauryl sulphate பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு anionic detergent வகையாகும். இதனால் நம் முகத்தின் சருமம் வரட்சியானதாகவும் கடினமானதாகவும் மாறுவதோடு சருமப் பிரச்சனைகளுக்கும் ஆளாகிறது.

பொடி மொய்ஸ்ச்ட்ரைய்சர் (Body moisturizer)


நம் முகத்தின் சருமம் எண்ணெய் தன்மையினை சுரக்ககூடிய சபேஸியஸ் சுரப்பிகளை (sebaceous glands) கொண்டுள்ளது. பொடி மொய்ஸ்ச்ட்ரைய்சரை (body moisturizer) முகத்தில் பயன்படுவதால் அச்சுரப்பிகள் தாக்கமடைந்து தமது சமநிலையினை இழக்கின்றன.

பற்பசை (Tooth paste)
சில அழகு குறிப்பு பற்றிய காணொளிகளில் பற்பசையினை பருக்களின் கரும்புள்ளிகளை மறைக்கும் தன்மையுடைய பொருளாக காட்சிப்படுத்துகின்றனர். உண்மையில் பற்பசையினை முகத்தில் பயன்படுத்துவது ஓர் சரியான செயலா இல்லை. பற்பசையினை முகத்தில் பயன்படுத்துவதால் சருமம் வரட்சியானதாகவும், சருமப் பிரச்சனைகளுக்கும் ஆளாவதோடு, தனது நிறத்தினையும் இழக்கிறது. ஏனெனில் சருமத்தின் சராசரி ph 5.5 ஆகவும் பற்பசையின் சராசரி ph 8 ஆகவும் காணப்படுகிறது.

தேசிக்காய்


தேசிக்காய் போன்ற சிட்ரிக் அமிலமுடைய (citrus) பொருட்களை முகத்தில் பூசி விட்டு வெளியில் செல்வதால் phytophotodermatitis எனப்படும் இரசாயான தாக்கத்திற்கு (chemical burn) சருமம் ஆளாகிறது. இது சருமத்தில் பல பாதக விளைவுகளை ஏற்படுத்துகிறது.

அல்கஹோல் (alcohol)
பொதுவாக ஸ்கின் டோனர் (skin toner), ஷேவிங் போம் (shaving foam) மற்றும் after shave lotion போன்றவற்றினை தயாரிக்கும் போது அல்கஹோல் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை முகத்தில் பூசும் போது குளிர்ச்சியான ஓர் உணர்வினை உணர முடிகிறது. இவற்றை முகத்தில் உபயோகிப்பதால் முகத்தில் காணப்படும் இயற்கையான எண்ணெய் தன்மை மற்றும் மிருதுவான தன்மை முற்றிலும் நீங்கி சருமம் வரட்சி தன்மையினை அடைகிறது.

வெந்நீர் (hot water)
என்றாவது ஓரிரு முறை ஸ்டீம் (steam facial) செய்வது சருமத்திற்கு நன்மை தரக் கூடியது ஆனால் அடிக்கடி வெந்நீர் கொண்டு சருமத்தினை சுத்தம் செய்வதால் சருமத்தின் மிருதுவான தன்மை இல்லாது போகிறது.

வெள்ளைப்பூண்டு
பச்சையாக பூண்டினை பருக்களின் மேல் வைக்கும் போது பருக்களின் அளவும், சிவப்பு நிறத் தன்மையும் குறைவதை காணமுடியும். பூண்டில் காணப்படும் அலிசின் (alicin) எனப்படும் பொருள் சருமத்திற்கு எவ்வளவு நன்மை தரக் கூடியதோ அதே சமயம் பாதக விளைவுகளையும் தரக் கூடியது. ஆகையால் பூண்டினை முகத்தில் பயன்படுத்தும் போது ஓர் குறிப்பிட்ட அளவினை மட்டும் பயன்படுத்துவது நன்மை தரும்.

இதுவரை மேற்கூறப்பட்ட பொருட்களை நீங்கள் உங்கள் சருமத்திற்கு பயன்படுத்தி வந்திருந்தால் இன்று முதல் அந்த பழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

index.php