Blog Page 7

குழந்தை இன்மை எனும் அவஸ்தை!

என்ன வீட்டில் ஏதாவது நல்ல செய்து உண்டா? 

திருமணமான சில மாதங்களிலிருந்தே பல ஜோடிகளைத் துரத்த ஆரம்பிக்கும் கேள்வி இது! இப்போதைக்கு குழந்தை வேண்டாமென கவலையின்றி அந்த ஜோடி இருந்தாலும்கூட “அவர்கள் சந்தோசமாக இல்லை” என்றே மொழி பெயர்த்துக்கொள்ளும் இந்த சமூகம். சிறுவயதுமுதல் பெண்கள் கேட்கும் ஒப்பீடுகள் எல்லாமுமே ஒன்றுமேயில்லை என்றாகிவிடும் ஒரு ஒப்பீடு உண்டென்றால் அது குழந்தையின்மை அல்லது குழந்தைபிறப்பு தள்ளிப்போகிறது எனும்போது உருவாக்குகின்ற ஒப்பீடுதான்.

அதனால் ஏற்படும் pressure/social pressure என்பது வார்த்தைகளால் சொல்லிமாளாதது என்பது அனுபவிப்போர்க்கு மட்டுமே புரியக்கூடியது. திருமணமாகி மூன்று தொடக்கம் ஆறு மாதங்கள்வரை பொறுத்திருக்கும் பெற்றோர் உற்றார் உறவினர்கள் என எல்லோருமே சுமார் ஒருவருடம் கழிந்ததும் “நல்ல செய்தி சொல்லவில்லை ” என்றால் மெதுவாக ஆரம்பிப்பார்கள். நம் பெற்றோர்களே ” எப்போ நல்ல செய்தி சொல்லப்போகிறாய் ? பார் உன் தோழியை உனக்கு பிறகு திருமணமாகி இப்போது முழுகாம இருக்கிறாளாம் ” என ஆரம்பிப்பதுண்டு.

அப்போதுதான் ஆரம்பிக்கும் ஒருவித டென்க்ஷன்! இதுபோன்ற கேள்விகளெல்லாம் முதலில் பெண்களை குறிவைத்தே எய்யப்படும். யாரும் ஆண்களை இப்படிக்கு கேற்பது அரிது. “நமக்கு ஏதோ பிரச்சினையோ அதனால்தான் கரு உருவாவதில்லையோ” என மெதுவாக ஒரு பயம் பெண்களிடம் எட்டிப்பார்க்க ஆரம்பிக்கும் இதுவே முதல் குழந்தையின்மை சமூக அழுத்தம் . பின்னர் இன்னும் ஆறு மாதங்கள் முயற்சித்தும் ஒன்றும் நடக்கவில்லையெனில் உடனே “கோவிலுக்கு நேர்த்தி வையுங்கள்” என ஆரம்பிப்பார்கள் சொந்தங்கள்.

போதாக்குறைக்கு இவையெல்லாம் சக்திவாய்ந்த தெய்வங்கள் கோவில்கள் என தம்பங்கிற்கு நேர்த்திக்கடன் வைக்க பல கோவில்களையும் தெய்வங்களையும் சேர்த்தே சிபாரிசு செய்வார்கள். இன்னும் பிரஷர் அதிகமாகும். இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டது இன்னும் குழந்தையில்லை என்றால் அடுத்து ட்ரீட்மெண்ட் என ஆரம்பிப்பார்கள்.

“ட்ரீட்மெண்ட் ” ஆம் இதுபோன்ற ஓர் ட்ரெஸ் பெண்களுக்கு வேறெதுவுமில்லை. IUI  IVF என்று எடுக்கும் ஒவ்வொன்றும் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையையும் தாண்டி, இதிலாவது பலன் கிடைக்குமா? இல்லை இதிலும் தோல்விதானா என்ற உளைச்சல் மனதளவிலும் உடலளவிலும் அவ்வளவு ஸ்ட்ரெஸ் கொடுக்கக்கூடியதாம்.

இன்றைய காலகட்டத்தில் ஒருவர் விடயத்தில் மற்றொருவர் அவ்வளவாய்த் தலையிடுவதில்லை இதனடிப்படையில் திருமண வாழ்க்கை என்பது அவரவர் தனிப்பட்ட விடையம் என்றபோதிலும் ஒரு குழந்தைகூட இல்லாத திருமணவாழ்க்கையினை வெற்றிகரமான வாழ்க்கையாக நம் சமூகம் அங்கீகரித்துக்கொள்கிறதா? குழந்தையில்லாத பெண்கள் மங்கள நிகழ்வில் கலந்துகொள்வது தடையாக இருந்த காலம் மெல்ல மாறியிருக்கிறது என்றாலும் இன்றும்கூட அவர்களை நாசுக்காக தவிர்க்கும் அல்லது அவர்களுக்கு பின்னால் பேசும் புறம்பேச்சுக்கள் முற்றாக ஒழிந்துவிடவில்லை என்பதுதான் யதார்த்தம். உடலில் எந்தக்குறைபாடும் இல்லாதபோதிலும் இதுபோன்ற ஸ்ட்ரெஸ்களே பல நேரங்களில் குறித்த பெண்களுக்கு எதிரியாக அமைந்துவிடும்.

குழந்தை வேண்டும் என்ற இந்த ஆர்வத்தினை பதற்றத்தினை மருத்துவத்துறையில் உள்ள சிலர் காசாக்கிப்பார்க்கும் சம்பவங்கள் இன்று பல மடங்காக அதிகரித்துவருகிறது என்றால் மிகையில்லை. தம்பதியரின் குறையை மிக அழகாகவும் புத்திசாலித்தனமாகவும், வியாபாரமாக்கிக்கொண்டிருக்கிறார்கள் இன்றைய பல மருத்துவ வியாபாரிகள் . நீங்கள் கேபிள் டிவி பாவனையாளர்களா? அப்படியாயின் ஒருநாளையில் எத்தனை அலைவரிசைகளில் எத்தனை தடவைகள் இந்த குழந்தையின்மை பற்றியும் அதற்க்கான சிகிச்சைகள் பற்றியும் கருத்தரிப்பு மையங்களை சிகிச்சை நிலையங்களை நடத்திவரும் மருத்துவர்கள் தங்களை பற்றியும் தங்கள் மருத்துவமனைகள் பற்றியும் கூச்சமேயின்றி விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதனை அவதானித்ததுண்டா?

இந்திய அலைவரிசைகளில்தான் இதுபோன்ற விளம்பரங்கள் அதிகம். எந்த அலைவரிசையை திருப்பினாலும் யாராவது ஒரு கைராசிக்கார (?!) டொக்டர் வந்து பேசிக்கொண்டிருப்பார். இதில் நாம் நூதனமாக அவதானிக்க வேண்டிய ஓன்று என்னவென்றால் இப்போதெல்லாம் மக்களுக்கு விழிப்புணர்வூட்டவேண்டிய மருத்துவம் குறித்த நிகழ்ச்சிகளெல்லாம் அநேகமாக மருந்துகள் பற்றியும் நோயின் தன்மை பற்றியும் கூறுவதைவிட குறிப்பிட்ட ஒரு மருத்துவர் பற்றிய புகழார (விளம்பர) நிகழ்ச்சியாகவே அமைந்திருக்கும்.

பேட்டி எடுப்பவர் பல நிமிடங்கள் மாறி மாறி மருத்துவரின் கைராசி பற்றியும் திறமைகள் பற்றியும் புகழ் பாடிக்கொண்டிருப்பார். தொலைக்காட்சிகளில் மட்டுமன்றி பத்திரிகைகள், வார இதழ்கள் எல்லாவற்றிலும் இதுபோன்ற விளம்பரங்கள் தொடர்வதைக்காணலாம்! கருப்பை சுத்திகரிப்பு ஆரம்பித்து விந்து உயிர் அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க மருந்து மாத்திரை சினைமுட்டைக்கரு என பல வழிகளில் தம்பதியர் பல லட்சங்களை செலவழிக்கவேண்டியுள்ளது.

மருத்துவத்தின் பிரகாரம் இவையாவும் அவசியமான குறைபாடுடையவர்கள் மேற்கொள்ளவேண்டிய சிகிச்சை முறைகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ,இந்த சிகிச்சைகளுக்கான கட்டணங்களும் அவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளுக்கும் அதிக விலைகொடுத்தாகவேண்டும். இவ்வகையான மருந்து மாத்திரைகளுக்கான உற்பத்தி செலவுக்கும் அதன் விற்பனை விலைக்கும் இடையேயான இடைவெளி மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளி . அந்த அளவுக்கு லாபம் பார்க்க விளைகின்றன மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்.

இன்றெல்லாம் ஆண்மைக்குறைவு குழந்தையின்மைக்கான சிகிச்சை என்ற பெயரில் போலி மருத்துவர் பலர் இருப்பதால் , சிகிச்சை பெற்றுக்கொள்ளப்போகும் மருத்துவமனை தரமானதா? சிகிச்சையளிக்கப்போகிறவர் தகுதி பெற்ற மருத்துவரான என்பதை மிக மிக அவதானமாக பரிசீலனை செய்துகொள்ளவது அவசியமானது.

சரி அப்படியே தரமான ஓர் மருத்துவமனையை சென்றடைந்துவிட்டாலும் ஒரே நாளில் பிரச்சினையை தீர்க்க மருத்துவர் ஒன்றும் கடவுளோ மேஜிக் மேனோ அல்ல என்பதையும் தம்பதியர் புரிந்துகொள்ள வேண்டும். கணவன் மனைவி இருவர்க்கும் என்ன பிரச்சினை என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு சிகிச்சைகளை தொடர்வதற்கு மருத்துவருக்கும் கொஞ்சம் அவகாசம் தேவை . மருத்துவர்மீது மொத்த அழுத்தத்தையும் திணித்துவிட்டு, இந்த சோதனை அடுத்து இன்னொருவரிடத்தில் மற்றொரு சோதனை, மற்றுமொரு மருத்துவமனை என ஓடிக்கொண்டே இருப்பதாலோ, பதற்றப்படுவதாலோ நாம் எதிர்பார்க்கின்ற பலன் கிடைக்கப்போவதில்லை. குழந்தை என்பது மிகவும் சந்தோசமான நம் வாழ்க்கையையே அர்த்தப்படுத்தப்போகும் அழகான விஷயம். அந்த நல்ல விசயதிற்காக கொஞ்சம் காத்திருந்தால் தவறில்லை அல்லவா?

எது எவ்வாறாயினும் , குழந்தைப் பேறு என்பது ஒரு பெண் கடந்து வரும் குறுகிய காலக்கட்டம் மட்டுமே. இயற்கை அந்த வாய்ப்பை அவளுக்கு தந்திருக்கிறது. வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே அது. அதுவே அவளுடைய முழுமையான வாழ்க்கையல்ல. அது சாத்தியப்படாததற்காக அவள் கூச்சப்படவோ எவ்வித அவதூறுகளுக்கும் மனம் புழுங்கவோ அவசியமேயில்லை!

கொழும்பில் உள்ள மெக்சிகன் உணவகங்கள்!

Ah Mexico. The land of tacos, burritos, and tequila! மெக்சிகன் உணவு அதன் தனித்துவமான சுவை மற்றும் சுவைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் அமைப்புகளின் காரணமாக பிரபலப்படுத்தப்படுகிறது. Taco Bell சில மெக்சிகன் உணவுகளுக்கு இலங்கையில் வெளிப்படையான விருப்பமாக இருந்தாலும், அந்த உண்மையான

Tex-Mex ஆசைகளை பூர்த்தி செய்ய இன்னும் சில விருப்பங்கள் உள்ளன. இந்த உணவகங்களில் சில மெக்சிகன் உணவை பிரத்தியேகமாக வழங்குகின்றன, மற்றவை சில அருமையான மெக்சிகன் உணவுகள் மற்றும் ஃபியூஷன் Tex-Mex உணவு வகைகளை வழங்குகின்றன.

கொழும்பில் உள்ள மெக்சிகன் உணவகங்களுக்கான வழிகாட்டியைக் கண்டறிய தொடர்ந்து படியுங்கள்!

EXCLUSIVELY MEXICAN

1. Taco Bell

கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய உணவுகள்: Soft Tacos, Chalupas, Burritos
விலை வரம்பு: LKR 600 – LKR 3,000
தொலைபேசி: 0112 738 738

முகவரி-
36, ஹோர்டன் பிளேஸ், கொழும்பு 07
89, காலி வீதி, தெஹிவளை-கல்கிசை
243, ஜயவர்தனபுர கோட்டே
137, ஹைலெவல் வீதி, நுகேகொட
343, ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய

திறந்திருக்கும் நேரம்: தினமும், காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை
டெலிவரி: நேரடி டெலிவரி மற்றும் Uber Eats மூலம் கிடைக்கும்
ஃபேஸ்புக்: @tacobellsrilanka
இன்ஸ்டாகிராம்: @tacobell.srilanka
இணையதளம்: https://www.tacobell.lk/

 

2. El Toro Loco

கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய உணவுகள்: Chicken Tinga
விலை வரம்பு: LKR 1,300 – LKR 3,000
தொலைபேசி: 0762 188 877
முகவரி: 442, ஆர் ஏ டி மெல் மாவத்தை, கொழும்பு 03

திறந்திருக்கும் நேரம்: திங்கள் – சனி, மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை
டெலிவரி: Uber Eats இல் கிடைக்கிறது
ஃபேஸ்புக்: @eltoro.loco.cmb
இன்ஸ்டாகிராம்: @eltoro.loco.cmb

 

3. Taco Shack

கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய உணவுகள்: Nashville Hot Crispy Tacos, Chocolate churros
விலை வரம்பு: LKR 1,200 – LKR 4,000
தொலைபேசி: 072 273 6 332
முகவரி: 35, D.S. Fonseka Road, கொழும்பு-05

திறந்திருக்கும் நேரம்: ஞாயிறு, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மற்றும் மாலை 5.30 முதல் இரவு 10.30 மணி வரை
டெலிவரி: Uber Eats இல் கிடைக்கிறது
ஃபேஸ்புக்: @Tacoshackcmb
இன்ஸ்டாகிராம்: @tacoshackcmb

 

4. Salsa Street

கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய உணவுகள்: Beef Burrito, Chicken Tacos
விலை வரம்பு: LKR 800 – LKR 3,000
தொலைபேசி: 0762 672 527
முகவரி: The Grove, 289, ஹைலெவல் வீதி, கொழும்பு 05

திறந்திருக்கும் நேரம்: தினமும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை
டெலிவரி: Uber Eats இல் கிடைக்கிறது
ஃபேஸ்புக்: @salsastreetlk
இன்ஸ்டாகிராம்: @salsastreetlk

 

5. King of the Mambo

கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய உணவுகள்: Beef Rib Tacos, Brochetas de Pollo
விலை வரம்பு: LKR 500 – LKR 5,000
தொலைபேசி: 0772 227 389
முகவரி: Galle Face Hotel, No. 02, Galle Face, கொழும்பு 03

திறந்திருக்கும் நேரம்: தினமும், மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரை
டெலிவரி: N/A
ஃபேஸ்புக்: @KingOfTheMamboColombo
இன்ஸ்டாகிராம்: @kingofthemambo
இணையதளம்: kingofthemambo.com

 

INCORPORATIVE MEXICAN

6. The Barnesbury

கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய உணவுகள்: Jalapeno Chilli Cheese Bites, Enchiladas
விலை வரம்பு: LKR 1,000 – LKR 3,000
தொலைபேசி: 0112 682 144
முகவரி: 91, பார்ன்ஸ் பிளேஸ், கொழும்பு 07

திறந்திருக்கும் நேரம்: தினமும், காலை 11 மணி முதல் 12 மணி வரை
டெலிவரி: நேரடி டெலிவரி மற்றும் Uber Eats மூலம் கிடைக்கும்
ஃபேஸ்புக்: @TheBarnesbury
இன்ஸ்டாகிராம்: @thebarnesbury
இணையதளம்: thebarnesbury.com

7. Crossroads Café and Restaurant

கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய உணவுகள்: Chicken Enchiladas, Chicken Fajitas
விலை வரம்பு: LKR 500 – LKR 3,000
தொலைபேசி: 0112 805 844
முகவரி: 292, நாவல வீதி, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே

திறந்திருக்கும் நேரம்: தினமும், காலை 6:30 மணி முதல் இரவு 10 மணி வரை
டெலிவரி: Uber Eats இல் கிடைக்கிறது
ஃபேஸ்புக்: @crossroadssrilanka
இன்ஸ்டாகிராம்: @crossroadscafe1
இணையதளம்: www.tastycaterers.lk

 

MEXICAN FUSION

8. Cricket Club Café

கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய உணவுகள்: Knott’s Nachos, McCullum’s Mexican Wrap, Boundary Beef
விலை வரம்பு: LKR 1,000 – LKR 5,000
தொலைபேசி: 0112 574 394
முகவரி: 12, Flower Road, கொழும்பு 03

திறந்திருக்கும் நேரம்: Daily, 10 am to 11 pm
டெலிவரி: Uber Eats இல் கிடைக்கிறது
இன்ஸ்டாகிராம்: @cricketclubcafe
இணையதளம்: thecricketclubcafeceylon.com

 

9.Playtrix Sports Bar and Café

கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய உணவுகள்: Giant Loaded Hot Dog
விலை வரம்பு: LKR 500 – LKR 3,000
தொலைபேசி: 0765 477 577
முகவரி: Colombo City Centre, Level 1 – 137, Sir James Pieris Mawatha, Colombo 02

திறந்திருக்கும் நேரம்: Daily, 10 am to 3:30 am
டெலிவரி: N/A
ஃபேஸ்புக்: @playtrix.club
இன்ஸ்டாகிராம்: @playtrixpub
இணையதளம்: playtrix.lk

பாம்புகள் பற்றிய புரிதலின் அவசியம்!

நம்மிடையே வினோதமான ஓர் பழக்கமுண்டு! பாம்புகளை தெய்வமாக வணங்குவோம் ஆனால் அதே பாம்பு வீட்டுக்குள்ளோ தோட்டத்தினுள்ளோ வந்துவிட்டால் அதை அடித்துக்கொல்வதற்கோ எரித்துக் கொல்வதற்கோ தயங்குவதேயில்லை! கொன்றுவிட்டு பிறகு செத்துப்போன பாம்பைப்பார்த்து பயந்துபோய் அதற்கு பூஜை செய்து பால் ஊற்றி புதைப்பதுமுண்டு சிலர். இது என்னவகையான மூட நம்பிக்கையென்பது புரியாத புதிரே! எனினும் பாம்புகள் பற்றிய முறையான புரிதல் இல்லாமல் இவ்வகையான மூட நம்பிக்கைகளை ஒழிக்கவே இயலாது இல்லையா ?

நம்மிடையே பாம்புகள் பற்றிய புணைவுகளுக்கும் புராணங்களுக்கும் பஞ்சமேயில்லை. உலகெங்கிலும் இதே நிலைதான். சிறுவயது முதல் தவறான பயங்கரமான கட்டுக்கதைகள், மிகைப்படுத்தப்பட்ட சம்பவங்கள், ஆன்மீக ரீதியிலான நம்பிக்கைகள் என்று புகட்டப்பட்டு வந்திருப்பதே பாம்புகள் பற்றிய அச்சத்திற்கு காரணம் எனலாம். அதுமட்டுமன்றி வர்த்தக நோக்கத்திற்காக அதி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சினிமாக்கள் மூலம் இதுபோன்ற பீதிகளை நிலைநிறுத்தி வருவதும் மக்கள் மனதில் இவ்வாறான நம்பிக்கைகள் எப்போதுமே அழியாது பாதுகாக்கப்படுகின்றது.

மக்களின் பொதுப்புத்தியில் கற்பிதங்களை உலவவிடுவதில் ஊடகங்களுக்கு பெரும் பங்குண்டு. அனகொண்டாவில் தொடங்கி நாகாத்தம்மன் படமெடுத்த இராமநாராயணம் வரை பாம்புகள் பற்றி கொஞ்சமும் புரிதல் இன்றியே படமெடுத்துள்ளனர் என்றால அதுதான் நிஜம். மனித இனத்தினைவிட மிக நீண்ட பாரம்பரியத்தினைக்கொண்ட பாம்பினங்கள் பற்றிய கட்டுக்கதைகளை உலவ விட்டதில் இராமநாராயணன் போன்றவர்கள் எடுத்த நாலாந்தர சினிமாக்களுக்கு முக்கிய பங்குண்டு .

பாம்புகள் பழிவாங்கும் பால் முட்டைகளை அருந்தும், தன்னை வணங்குவோர்க்கு உதவி செய்யும் என்றெல்லாம் கிராபிக் செய்து மக்களை மழுங்கடிக்கும் பண்டைய புராணங்களுக்கு இவர்கள் போன்ற இயக்குனர்கள் மெருகூட்டினர் என்றே கூறவேண்டும். ஏன் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் இல்லாதவர்களுக்குக்கூட இச்சாதாரி நாகங்கள் தொடர்பான தமிழ், ஹிந்தி திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் ஏதோ ஒருவிதத்தில் ஆர்வத்தினை தருகின்றதென்றே கூறவேண்டும்.

(நீயா, நானே வருவேன், அனகோண்டா, போன்ற திரைப்படங்களின் வசூல் வெற்றிகளும், நாகினி part1 /part2 /part3 / part4  நாகராணி போன்ற தொலைக்காட்சி தொடர்களின் TRB ரேட்டிங்குமே இதற்கு சான்று) அதுமட்டுமா இணையங்களில் உலவவிடப்படும் பல வீடியோக்கள் நம்மை மிரளவைத்து விடுகின்றன அவை முற்றிலும் பொய்யாக இருப்பினும்கூட . உதாரணத்திற்கு ஐந்து தலைகொண்ட நாகங்கள், சிவலிங்கத்தினை சுற்றிக்கொண்டு தெய்வீகமாக காட்டப்படும் நாகங்கள் என்பவை இவற்றுள் சில.

“பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் ” என்ற சொல்லாடல் உண்டு. அது உண்மைதான் எனினும் பழமொழிகளை மட்டுமன்றி பாம்புகள் பற்றின பல பொய்யான தகவல்களையும் நாமே உருவாக்கிவைத்திருக்கின்றோம் என்பதே யதார்த்தம்! நம்மிடையே உள்ள பாம்பு பற்றிய மூட நம்பிக்கைகளுள் ஒன்றுதான் அவை பால் குடிக்கும் என்ற அறிவியலுக்கு புறம்பான கருத்து. ஏனெனில் பாம்புகளுக்கு தலையின் முனையில் மூக்கு உள்ளது.

அதற்கு கீழேதான் பிளவுடைய நாக்குடன்கூடிய வாய் உள்ளது. பாம்பு பால் அருந்த வாயினை வைக்குமாயின் முதலில் மூக்குதான் பாலின் உள்ளே செல்லும் எனவே பாம்பு மூச்சடைத்து இறந்துதான் போகும். அதுமட்டுமா பாம்புகள் முட்டைகளை உறிஞ்சிக் குடிக்குமென்று பக்தர்கள் சொல்வதுண்டு ஆனால் அவற்றினால் எதையுமே உறிஞ்சிக்குடிக்கவோ கடித்து சாப்பிடவோ முடியாது. தன் உணவுகளான எலி, தவளை போன்றவற்றை எவ்வாறு அப்படியே விழுங்கி விடுகின்றதோ அப்படியே முட்டையினையும் விழுங்கிவிடும் சாரைப்பாம்பும் நாகபாம்புமே இணை சேரும் என்பதும் தவறான நம்பிக்கையே.

ஏனெனில் அவையிரண்டும் வெவ்வேறு வர்க்க பாம்புகள் . அவையிரண்டும் ஒருபோதும் இணைவதில்லை . மேலும் , நாகங்கள் மகுடி இசைக்கேற்ப படமெடுத்து ஆடும் என்பதும் தவறான எண்ணமே. ஏனெனில் பாம்புகளுக்கு புறச்செவி அமைப்போ , நடுக்காததமைப்போ இல்லை என்பதால் அவற்றால் ஒலி அலைகளை உணரவியலாது. ” மகுடி இசைக்கு மயங்கும் பாம்பு என்பது மிகப் பிரபலமான உவமை. ஆனால் அதற்கு கேற்கும் திறன் மிகக்குறைவு என்றபோதிலும் அதிர்வலைகளை உணரும் சக்தி உண்டு.

மேலும் சுற்றுப்புறத்தில் உள்ள வாசனைகளை உணரவே அவை நாக்கினை அடிக்கடி வெளியே நீட்டுகின்றனவாம். கொம்பேறிமூக்கன் என்கிற பாம்பு மனிதர்களை பழிவாங்க அவர்களை கடித்துகொல்வதோடு நில்லாது இறந்துபோனவர்களை சுடுகாடு வரை சென்றுபார்த்து உறுதிப் படுத்திக்கொள்ளும் என்கிற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களிடம் உண்டாம்.

உண்மையிலேயே கொம்பேறிமூக்கன் விஷமற்ற ஓர் சிறியவகைப் பாம்பினம். தவறான இந்த நம்பிக்கையினால் பார்த்த இடத்திலேயே இப்பாம்புகள் அடித்துக் கொல்லப்படுகின்றனவாம். பாம்புகள் பற்றிய பல கேள்விகள் நம்மிடையே இருக்கக்கூடும் . அவற்றுள் ஒன்றுதான் ” இச்சாதாரி நாகங்கள் ” என்பவை உண்மையானவையா என்பது ! நூறு வருடங்களுக்குமேல் வாழும் நாகங்களுக்கு மனித உருவெடுக்கும் ஷக்தி உண்டென்று நம்பப்படுகிறது , ஆனால் யதார்த்தத்தில் ஓர் பாம்பின் ஆயுள் காலமே வெறும் 20 _ 30 ஆண்டுகள் மாத்திரமே என்கிறபோது இச்சாதாரி என்ற விடயமும் இங்கே பொய்த்துவிடுகின்றதல்லவா ?

அடுத்தது நாகமாணிக்கம் ! இன்றைய தலைமுறையினராகிய நாம் நாகமாணிக்கம் பற்றி சினிமாக்கள் வாயிலாகவோ, அல்லது நமக்குத் தெரிந்த பெரியவர்கள் அவர்கள் கேள்விப்பட்டதாக சொன்ன கதைகளின் மூலமாகவோ அறிந்திருப்போம் . நாக பாம்புகள் மிகவும் வயதான காலத்தில் அதுவரை அது எந்தவோர் உயிரினத்தின் மீதும் விஷத்தினை பிரயோகிக்காதவிடத்து அந்த விடம் நாகமாணிக்கமாக உருவாகியிருக்கும் என்ற நம்பிக்கை இந்தியா போன்ற நாடுகளில் இன்றுவரையில் உள்ளது.

ஆனால் உண்மையில் நாகமாணிக்கம் என்பது நிரூபிக்கப்படாதவொன்று என்ற புரிதல் நமக்கு வேண்டும்! இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் உலக நாடுகளின் “வியாபார சந்தையாக” இருப்பதால் நாகமாணிக்கம் என்ற பெயரில் எண்ணற்ற கற்களை வைத்து பிசினஸ் செய்யப்படுகின்றதெனலாம்! நாகமாணிக்கம் என்பது உண்மையா என்கிற விவாதங்கள் இன்றுவரையில் நடைபெற்றுகொண்டேதான் இருக்கின்றன.

எண்ணற்ற புராணங்களிலும் இதிகாசங்களிலும்கூட இதைப்பற்றிய குறிப்பிகள் உள்ளன. ஆயினும் மர்மங்கள் சுவாரஸ்யமானவை நம்மை தேடலுக்கு உற்படுத்துபவை அந்த உந்துதலே நாகமாணிக்கம் என்றவோர் விடயத்தினையும் இன்றுவரையில் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றதெனலாம். உலகில் இதுவரையில் சுமார் மூவாயிரம் பாம்பினங்கள் வரையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் வெறும் அறுநூறு பாம்புகள் மாத்திரமே விஷம் கொண்டவையாம்!

மேலும் அவ்வாறான விஷப்பாம்புகடிகள் அனைத்துமே உயிரைக் கொல்வதில்லை, விஷப்பாம்புக் கடியின் பாதிப்பென்பது உடலினுள் செல்லும் விஷத்தின் அளவினைப்பொறுத்தே அமைகின்றது . உண்மையில் பாம்புக்கடியினால் ஏற்படும் பல மரணங்கள் விஷத்தினால் அல்ல கடிபட்ட அதிர்ச்சியினால் அல்லது பாம்புக்கடி பற்றிய பீதியினால் சம்பவிப்பவையே . குறிப்பாக பாம்பின் தீண்டலுக்கு உள்ளானவர் பதட்டப்படுவதனால் உடலில் இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்க விஷம் வேகமாக பரவி மரணத்தினை ஏற்படுத்திவிடுகின்றனவாம்.

பாம்புகளினால் மனிதர்களுக்கு ஏதேனும் நன்மையுண்டா ? வன உயிரியல் பாதுகாப்புச் சட்டத்தின்படி பாம்புகள் அனைத்தும் சட்டபூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இன்றி அதனை பிடிப்பதோ அடித்துக் கொல்லுவதோ தண்டனைக்குரிய குற்றம். ஏனெனில் மருத்துவ ரீதியில் பாம்புகள் மனிதர்க்கு பெரும் உதவி புரிகின்றவை எனலாம். புற்றுநோய் தெரபி, மற்றும் இருதய நோய்க்கான தெரபியாக சில வகையான பாம்புகளின் கடும் விஷம் பாவிக்கப்படுகிறது. நாகபாம்பு ,கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கட்டு விரியன் போன்ற இனவகைப் பாம்புகளின் விடம் பல ஆயிரங்களுக்கு விற்கப்படுகின்றது.

அதுமட்டுமன்றி பாம்புகளின் தோல் கைப்பை தயாரிக்க பயன்படுகின்றது . மேலும் வயல்களில் உள்ள எலிகளை உணவாகக் கொள்வதனால் மண்புழுக்கள் மட்டுமல்ல பாம்புகளும் விவசாயிகளின் தோழனே!இறுதியாக நாம் பார்க்கவேண்டிய முக்கியமானதோர் விடயமுண்டு “snake island”என அழைக்கப்படும் பாம்புகள் தீவு ! இந்த உலகில் மிகவும் ஆபத்தான, மனிதர்கள் நுழையவியலாத பல இடங்கள் உள்ளன  அவற்றில் ஒன்றுதான் அட்லான்டிக் கடற்பரப்பில் பிரேசிலில் உள்ள சாம்பாலோ என்கிற இந்தத் தீவு .

மர்மங்களும் ஏகப்பட்ட பொக்கிஷங்களும் நிறைந்ததாக சொல்லப்படும் இந்தத் தீவில் மிக மிக கொடிய விஷம்கொண்ட பல பாம்புகள் உற்பட சுமார் நான்காயிரம் பாம்புகள் வரையில் உண்டாம். இந்தத் தீவு பற்றித் தேடிப்பார்க்க விளையின் சுமார் பத்தாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லவேண்டும் . பிரேசிலின் நிலப்பரப்போடு ஒட்டியிருந்த இந்த நிலப்பகுதி கடல் மட்ட உயர்வினால், தாழ்ந்த பகுதி கடலினுள் மூழ்கிவிட மேட்டுப்பகுதி தீவாக தனித்து விடப்பட்டதாகவும் அவ்வாறு தனித்துவிடப்பட்ட பகுதியில் தங்கிவிட்ட பாம்புகளின் பகுதிதான் இவை எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

உலகிலேயே மிக மிக அதிகமான விஷத்தினைக்கொண்ட “golden lancehead “ போன்ற பாம்புகளின் மருத்துவ பலனுக்காக உள்ளூர் மீனவர்களாலும் , மற்றும் சிலரால் அப்பாம்புகள் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு கள்ளச் சந்தையில் சுமார் இருபது இலட்சம் ரூபாய்வரை விற்கப்படுவதானால் இதுபோன்ற பல அரியவகை பாம்பினங்களை அழிந்தொழிந்து விடாது பாதுகாக்கும் பொருட்டு 1970ஆம் ஆண்டு பிரேசில் அரசால் குறித்த இத் தீவினுள் மனிதர்கள் யாரும் நுழைவது தடை செய்யப்பட்டது.

ஒருகாலத்தில் இத்தீவில் மனிதர்களை குடியேற்ற எவ்வளவோ முயன்றும் பாம்புகளின் கூட்டம்கூட்டமான தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்கவியலாது போனதும் இவ்விடத்தே குறிப்பிட்டாக வேண்டும். அதுமட்டுமன்றி அத்தீவு பற்றிய ஏராளமான மர்மமான கட்டுக்கதைகளும் இன்றுவரையில் உலாவி வருகின்றன. எது எப்பப்படியோ திகிலூட்டும் பல்வேறு பேய்க்கதைகளை போன்றதுதான் பாம்புக்கதைகளும். கேட்பதற்கும் பார்ப்பதற்கும் சுவாரஸ்யமான இவை எந்த அளவுக்கு நிஜமானவை என்பதற்கில்லை.

சர்வதேச கல்வி தினம் இன்று!

சிறுவர்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கு தொழில் முயற்சிசார் பாடசாலைத் தோட்டங்களை அமைப்பதற்கு FAO ஊடாக அவுஸ்திரேலிய நிதியை 200இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் பெறவுள்ளன. கொழும்பு ஜனவரி 24 2023 – பாடசாலை சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதற்காக வடக்கு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் தொழில் முயற்சிசார் பாடசாலைத் தோட்டங்களை அமைப்பதற்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் ஊடாக அவுஸ்திரேலியிடமிருந்து 200இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் நிதியைப் பெறவுள்ளன.

தொழில்முயற்சி பாடசாலைத் தோட்டங்கள் திட்டமானது அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் 2.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் நிதியளிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படுகின்றது. இந்த திட்டமானது தற்போதைய பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான 100,000 இடைநிலைப் பாடசாலை மாணவர்களுக்கான கண்டுபிடிப்பு அடிப்படையிலான கற்றல் அணுகுமுறையை இந்தத் திட்டம் கொண்டுள்ளது அங்கு அவர்களுக்கு தங்கள் பாடசாலைத் தோட்டங்களில் சத்தான விளைபொருட்களின் ஆதாரங்களாக மாற்றும் திறனைப் பற்றிக் கற்றுக்கொடுக்கப்படும் இது மாறுபட்ட மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களுக்கு உதவுவதுடன் தொழில் முனைவோர் சிந்தனையை விவசாயத்தில் பயன்படுத்த உதவுகின்றது. உணவு பாதுகாப்பு ஊட்டச்சத்து, விவசாயம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் திறன்களை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று மாகாணங்களைச் சேர்ந்த 505 பாடசாலை ஆசிரியர்களுக்கு கண்டுபிடிப்பு அடிப்படையிலான கற்றல் முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.

பாடசாலை அதிகாரிகளுடன் இணைந்து திட்டத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் வழிசெலுத்தலை மேற்பார்வையிடும் ஒரு முக்கிய திட்ட பங்காளியாக செயல்பட ஒவ்வொரு பாடசாலையிலும் உள்ள விவசாயக் கழகத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும். இது தோட்டங்களில் இருந்து அறுவடைகளை விற்பனை செய்வதையும் மேற்பார்வையிடும் மேலும் தனியார் துறை நிறுவனங்கள் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளூர் சந்தைகள் அல்லது FAO மூலம் தேசிய பாடசாலை உணவுத் திட்டம் உள்ளிட்ட விற்பனை நிலையங்களுடன் இணைக்கப்பட்டு தோட்டங்களின் அறுவடைகள் வருமானம் ஈட்டுவதை உறுதிசெய்யும் அதன் மூலம் திட்ட காலத்திற்கு அப்பால் தோட்டங்களின் நிலைத்தன்மையை இது உறுதி செய்கின்றது.

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் தெரிவிக்கையில் ‘பாடசாலை தோட்டக்கலையானது குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், கற்றலுக்கும் உதவும். பாடசாலைத் தோட்டக்கலையில் மாணவர்களை ஈடுபடுத்துவதும், ஊட்டச்சத்தின் பயன்கள் குறித்து அவர்களுக்கு கற்பிப்பதும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும். குடும்பத்தின் உணவுப் பாதுகாப்பிற்காக உங்கள் உணவை உற்பத்தி செய்வதன் பெறுமதியை சுட்டிக்காட்டுவதற்கு இந்த நிகழ்ச்சி உதவுகின்றது’என்றார்.

‘அவுஸ்திரேலியா மக்களின் இந்த தாராளமான உதவியை நாங்கள் பாராட்டுகிறோம் இது பாடசாலை மாணவர்களிடையே உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த மற்றும் நிலையான பாடசாலை முதல் வீட்டிற்கு அறிவு பரிமாற்ற அணுகுமுறையை செயல்படுத்தியுள்ளது’ என்று இலங்கைக்கான FAO பிரதிநிதி விம்லேந்திர ஷரன் கூறினார் ‘பாடசாலைத் தோட்டங்கள் குழந்தைகள் சுறுசுறுப்பான கற்றலில் ஈடுபடுவதற்கு வளமான சூழலை வழங்குகிறது. உணவு நுகர்வுப் பழக்கவழக்கங்கள் மற்றும் புதிய விவசாயக் கருத்துகள் மீதான மனப்பான்மை மாற்றத்தைத் தூண்டும் வகையில் மாணவர்கள் மூலம் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், விரிவாக்கம் மூலம் சமூகங்களுக்கும் அறிவு பரிமாற்றப்படும்’ என அவர் மேலும் கூறினார்.

FAO ஆனது கல்வி அமைச்சு, விவசாயத் திணைக்களம், சுகாதார அமைச்சு மற்றும் ஊவா, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களின் தலைமைச் செயலகம் ஆகியவற்றுடன் இணைந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய நடைமுறைகள் மற்றும் ஊட்டச்சத்து குறித்து குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கற்பிக்கும்.

ஐ நா உணவு மற்றும் விவசாய தாபனம் (FAO) பற்றி
ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாயத் தாபனம் (FAO) பசியைத் தோற்கடிப்பதற்கான சர்வதேச முயற்சிகளை வழிநடத்துகிறது. இது நாடுகளுக்கு விவசாயம் வனவியல் மற்றும் கடற்றொழில் நடைமுறைகளை நவீனப்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவுவதுடன் அவற்றை மிகவும் பேண்தகு தன்மையானதாக ஆக்கி அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பையும் போசாக்கையும் உறுதி செய்கிறது.

உலகின் பெரும்பான்மையான ஏழைகள் மற்றும் பட்டினியில் உள்ள மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களை அபிவிருத்தி செய்வதில் FAO விசேட கவனம் செலுத்துகிறது. மேலும் தகவலுக்கு : www.fao.org அல்லது டுவிட்டர் ஊடாக :Twitter @FAOnews @FAOknowledge

மேலும் விவரங்களுக்கு தயவு செய்து தொடர்பு கொள்ளவும்

நலின் முனசிங்க, AFAOR(P), Nalin.Munasinghe@fao.org, Tel.: 94 773659058
தில்சானி டயஸ் , FAO/Colombo, Dilshani.Dias@fao.org, Tel. +94 77 015 242

 

குரூரமான உணவு அரசியலின் பின்னணி!

“உணவே மருந்து” எனும் பாரம்பரியத்தினைக்கொண்ட சமூகம் நம்முடையது. ஆனால்  தற்போது அந்த உணவே விஷமாகிக்கொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை. இதற்கு என்ன காரணம்? இதன் பின்னணியில் இருக்கும் உணவு அரசியல் என்ன? ” உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் “என்கிற வள்ளுவனின் வாக்குப்போல் உழவன் தலைநிமிர்ந்து நின்றகாலம்போய், உழவுத்தொழில் மழுங்கடிக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்டு வணிகத்தின் பின்னால் சுழன்றுகொண்டிருந்த நமக்கு தற்போதைய இலங்கையின் நிலை உணவு உற்பத்தி பற்றியெல்லாம் கொஞ்சம் சிந்திக்கத்தான் செய்திருக்கின்றது.

நம்முடைய நாட்டில் செயற்கையாக தயாரிக்கப்படும் உரங்களை நம்பியே தேயிலை உற்பட அனைத்து விவசாயமும் நடைபெறுகிறது . நாட்டின் மொத்த இறக்குமதியில் இந்த செயற்கை உரங்களின் இறக்குமதியும் பாரிய பங்களிப்பைச் செய்கிறதெனலாம். தற்போது ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையினால் எந்தெந்த இறக்குமதியிலெல்லாம் கை வைக்கலாம் என சிந்தித்த இலங்கை அரசு இந்த செயற்கை உரங்களின் இறக்குமதியிலும் கைவைத்தது.

“இயற்கை உரங்களை நம்பி இனி விவசாயம் செய்வோம்” எனும் கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது . இது நல்ல விடயம்தான். ஆனால் , அவசரமாக இது சாத்தியப்படுமா? ஏனெனில் அதுவொரு நீண்டகால திட்டமாக அமையவேண்டிய ஓர் செயன்முறை. தமிழ்த் திரைப்படங்களில் வரும் ஒரேயொரு பாடலிலேயே பணக்காரராக மாறும் பார்முலாவோ அல்லது ஒரே இரவில் நடந்துவிடும் மேஜிக்கோ அல்ல.

இயற்கை உரங்களை உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை இலங்கை அரசு முதலில் நடைமுறைப்படுத்தவேண்டும். அதன் உற்பத்தியாளர்களுக்கு மானியங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கவேண்டும். அதைவிடுத்து ஒரு நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த ஒரு சிஸ்டமான செயற்கை உரங்களை நம்பியே விவசாயம் செய்துபழகியபின் அதனை சடுதியாக தடைசெய்வதென்பது பதுக்கி வைத்தல், அதிக விலையேற்றம், விளைச்சலின்மை  விவசாயிகள் நட்டமடைதல் மற்றும் அவர்களின் கடன் சுமை என இனி விவசாயமே வேண்டாம் எனும் அளவிற்கு மனஉளைச்சல் உற்பட பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஓன்று.படிப்படியான மாற்றங்களை செயற்படுத்த முன்வருவதே ஒரு நல்ல ஆட்சியாளர்களின் அழகு ஆனால் தற்போது இவர்கள் போட்டிருக்கும் “சடன் பிரேக்” நாட்டின் விவசாயத்தை எந்த அளவிற்கு அதல பாதாளத்திற்கு கொண்டுசென்றதென்பதை வருட ஆரம்பத்தில் பார்த்தோமல்லவா?

நாட்டின் பொருளாதார பிரச்சினையினை மையப்படுத்தி நம் நாட்டின் ஆளும்கட்சி உறுப்பினரொருவர் இனி இலங்கை மக்கள் தம்முடைய ஒருவேளை உணவினை தியாகம்செய்துவிட்டு இரண்டுவேளைகள் மட்டுமே உணவு உண்ணவேண்டும் எனக்கூறிய கருத்து சமூகவலைதளமெங்கும் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது நினைவிருக்கலாம் . ஆட்சிக்கு வருபவர்கள் ஒரு சிறந்த வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்புவார்கள் என்கிற நம்பிக்கையிலேயே, ஒவ்வொரு குடிமகனும் வாக்களித்துக்கொண்டிருக்கின்றோம் . ஆனால், ஆட்சிக்குவந்தபின் அவர்கள் மக்களைப்பற்றி யோசிக்காமல் பொறுப்பற்ற ரீதியில் கூறும் கருத்துக்களும் எடுக்கும் முடிவுகளும் வாக்காளர்களை ஓர் அயர்ச்சி நிலைக்கு தள்ளிவிடுகின்றதெனலாம். ஒருவரது உணவை சுருக்கிக்கொள்ளவேண்டும் என யாரும் கட்டளையிடுவதென்பது ஒருவித அடிப்படை மனிதஉரிமை மீறலே என்னைப் பொறுத்தவரையில்.

பொருட்களுக்குத் தட்டுப்பாடா? அதற்கான மாற்றுத்தீர்வுகள் முன்மொழியப்படவேண்டும் . தட்டுப்பாட்டில் இருக்கும் உணவிற்கு பதிலாக வேறு உணவுகளை மாற்றீடாக பயன்படுத்துவது பற்றி அறிவுறுத்தல் , வீட்டுத்தோட்டங்கள் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுதல் போன்றவற்றை எடுத்துக்கூறலாம் . ஆனால் , எடுத்த எடுப்பில் இனி எல்லோரும் இரண்டுவேளைகள் மட்டும் உண்ணுங்கள் என ஒரு ஆட்சியாளர் கூறுவதென்பது பொறுப்பற்றசெயல். ஏற்கனவே இந்திய ஊடகங்கள் தங்களுடைய Trp ரேட்டிங் என்கிறவொன்றுக்காக இலங்கையில் கடும் பஞ்சம், மக்கள் எல்லோரும் நடுத்தெருவில் நிற்கிறார்கள் என அள்ளிவிட்டுக்கொண்டிருந்த நிலையில் உள்நாட்டுக்குள் ஒரு அமைச்சரின் இப்படியான கருத்துக்களும் வருமாயின் இலங்கையை நம்பி யாரும் முதலீடுகளை செய்யவதில் ஒரு தயக்கநிலை தடங்கள்நிலை ஏற்படக்கூடும் இல்லையா?

வளர்ந்த நாடுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் உணவு அரசியலை எப்படியெல்லாம் நம்மீது திணித்துவருகின்றன என்பது பற்றி சற்று தேடிப்பார்த்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியாக இருந்தன. இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த நிலையில் ஏராளமான எதிரி நாடுகளை தாக்கவைத்திருந்த வெடிபொருட்கள் “டன்” கணக்கில் மீதமாயினவாம் . அந்த வெடிபொருட்களையெல்லாம் என்ன செய்வது என அந்த நாடுகள் யோசித்துக்கொண்டிருந்தபோது அவற்றை பூச்சிக்கொல்லிகளாக பயன்படுத்தலாம் என அறிவியல் அறிஞர்கள் தெரிவித்ததையடுத்து , பூச்சிகளால் உணவு உற்பத்தி குறைவு பற்றி கவலையடைந்திருந்த ஆபிரிக்க மற்றும் கீழைத்தேய நாடுகளுக்கு, குப்பை என கழிக்கப்பட்டஇந்த வெடிபொருட்கள் உள் நுழைந்தன.

இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லர் பல லட்சம் மக்களை கொன்றுகுவிக்க பயன்படுத்திய ஓர் வேதியல் பொருளை தயாரித்துக்கொடுத்த ஜெர்மனியின் ஒரு பிரபலமான கெமிக்கல் நிறுவனம்தான் இன்றுவரையில் செயற்கை உரங்களை தயாரிப்பதில் முன்னோடி என்றால் இனி சொல்வதற்கென்ன இருக்கிறது ?

ஒரு காலத்திற்குமுன் அமேரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளில் மண்ணில் சத்தில்லாமல் விவசாயம் மேம்படாமல் இருக்கவே , என்ன செய்வதென்றறியாமல் கல்லறைகளில் இருக்கும் மனித எலும்புகளையெல்லாம் எடுத்து பொடியாக்கி அதனை உரமாக பயன்படுத்தினார்கள். பின் இந்த மனித எலும்புகளை வேட்டையாடுவதற்காகவே கல்லறை மயானங்களை வேட்டையாடினர் , இப்படி இவர்கள் எந்தெந்த நாட்டுக்குள்ளெல்லாம் நுழைந்து வேட்டையாடினார்களோ அந்தந்த நாடுகளின் மண் சத்து இல்லாமலாகி அங்கெல்லாம் விவசாயம் வீழ்ந்துவிட , மேலை நாடுகளில் விவசாயம் தப்பித்துக்கொண்டது .

பின்பு ஒரு அறிவியலாளர் பறவைகளின் எச்ச்சத்தில் நைட்ரஜன் இருக்கிறது அதை வைத்து விவசாயம் செய்யலாம் என கண்டறிந்தபோது ஆளாளுக்கு பறவை எச்சத்தினைத் தேடி பல தீவுகளையும் அடிமைப்படுத்திக்கொண்டன இந்த நாடுகள். இப்படி மேலைநாடுகளெல்லாம் தம் நாட்டு மண்ணையும் விவசாயத்தையும் ஏதொவொருவகையில் பேணிப்பாதுகாத்துக்கொள்ள , (அவர்கள் விற்கும் செயற்கை உரங்களை இறக்குமதி செய்துகொண்டு ) மூன்றாம் உலக நாடுகள் மட்டும் வல்லரசுகளினதும் பன்னாட்டு நிறுவனங்களினதும் சூழ்ச்சியில் சிக்குண்டு சின்னாபின்னமாகியுள்ளதென்றே கூறவேண்டும் .

விவசாயப்பொருட்கள்மீது தெளிக்கப்படும் பூச்சி மருந்துகள் எவ்வளவுதான் மழை பெய்தாலும் எவ்வளவுதான் கழுவியெடுத்தாலும் அந்த கிரிமிநாசினிகளின் எச்சங்கள் முழுதுமாக அகன்றுவிடுவதில்லை . காலப்போக்கில் கண்ணுக்குத் தெரியும் அளவில் அவை மாறிப்போயின . உதாரணம் நாம் உண்ணும் grapes போன்ற பழங்களில் படிந்திருக்கும் வெள்ளைநிறமான படிமம் பூச்சிக்கொல்லிகளின் எச்சம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்?

உலக நாடுகள் பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பையுணர்ந்து தடைவிதித்த நிலையில் நம்முடைய நாட்டில் “DTTA” என்கிற அபாயகரமான பூச்சிக்கொல்லி வீட்டைச் சுற்றியுள்ள எறும்புகளைக் கொல்லக்கூட சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் யதார்த்தம் . உண்மையில் , பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படும் உணவை உண்பவர்களின் நூறுபேரில் முப்பது பேருக்கு புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது . உணவும் உடல்நலமும் ஒன்றோடுஒன்று சேர்ந்தே இயங்கும் வாழ்வியலைகொண்ட நமது நாட்டில் இன்று உணவு தனியாகவும் ஆரோக்கியம் தனியாகவும் பிரிந்து வணிகம் செய்கிறது என்பதுதான் நிஜம் .

இப்படி பூச்சிக்கொல்லிகள் அதிகரிக்க உணவுக்குப் பின்னால் இருக்கும் நுண்அரசியலே காரணம் எனலாம் . முன்பெல்லாம் நெல் போன்ற பிரதான பயிர்களை பயிரிட்டதன்பின் விவசாயிகள் உபபயிர்கள் என்கிற பேரில் பருப்பு மற்றும் பயறு வகைகளை அதிகமாக பயிரிட்டனர். உண்மையில் அதன் பின்னிருக்கும் சூட்சமம் என்ன தெரியுமா ? இயற்கையாகவே காற்றில் இருக்கும் நைட்ரஜன் , பொஸ்பரஸ் போன்ற சத்துக்களை உறிஞ்சும் பருப்புவகை பயிர்கள் அவற்றை பூமியின் அடியில் சேமித்துவைக்கும்போது நிலம் அதற்குத்தேவையான தழைச்சத்தினை இயற்கையாகவே பெற்றுக்கொள்ளும்.

ஆனால் , இன்றோ நிலைமை தலைகீழ் ! இலங்கையில் தாராளமாக பருப்புவகைகளும் சிறு தானியங்களும் இறக்குமதி செய்யப்படுவதால் அதன் விளைவு ? பன்னாட்டு நிறுவனங்களால் விற்கப்படும் செயற்கை உரமான நைட்ரஜனை காசுகொடுத்து வாங்கி நிலத்தையும் பாழ் படுத்திக்கொண்டிருக்கின்றோம் . யூரியா என்கிற விஷத்தை உரம் என்கிற பெயரில் பலதலைமுறைகளாக விவசாயிகள் நம்பி பயன்படுத்திவந்தனர் .

இவ்வாறு ஒரு நாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அந்நாட்டின்மீது போர் தொடுத்துதான் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற நிலைமைமாறி உணவே பேராயுதம் என்கிற மோசமான ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது சர்வாதிகார நாடுகள் என்றால் மிகையில்லை . பெரியபெரிய பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க நம் மண்ணை நாமே விஷமாக்கிக்கொண்டிருக்கின்றோம் . உணவு மற்றும் மருத்துவ வணிகத்தின் லாப நோக்கத்தினால் உணவானது நஞ்சாகமாறி பல நோய்களையும் இயற்கை சீர்கேடுகளையும் உருவாக்கியுள்ளது. இந்தநிலையில் இயற்கை உணவினை நாடியும் இயற்கை விவசாயத்தை நாடியும் மக்கள் பயணப்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

நாய்கள் எப்படி செல்லப்பிராணிகளாக ஆகியது?

கற்கால மனிதன் முதல் கம்ப்யூட்டர் கால மனிதன் வரை மனித குலத்துடன் தொடர் உறவுகொண்ட விலங்கினம் எது என்றால் அது நாய்தான். வீட்டுச் செல்லப் பிராணிகளில் முதல்இடம்பெறும் நாய்கள் நன்றி உணர்ச்சிக்கு என்றென்றும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.

தன் எஜமானனையே எல்லாமுமாக நினைத்து வாலைக் குழைத்து வாஞ்சை காட்டும் நாய்கள் பற்றி கூறுவதாயின் நவீன மனிதர்களின் முன்னோடியான ஹோமோ சேப்பியன்ஸ் தமது பூர்விக நிலமான ஆபிரிக்காவினை விட்டு உலகெங்கிலும் பரந்துவாழ முற்பட்டபோது வேட்டையாடிகளான அவர்களது மிகப்பெரிய எதிரியாக இருந்த விலங்கினம்தான் கேனிஸ் லூப்பீஸ் எனப்படும் சாம்பல் நிற ஓநாய்கள் அதாவது இன்றைய நாய்களின் மூதாதைகள்.

வேட்டைக்கு காடுகளுக்குள் புகும் மனிதர்களை சரமாரியாக தாக்கிய சாம்பல் நிற ஓநாய்கள் நீண்டகால மனிதர்களின் எதிரியாகவே காணப்பட்டன. ஆனாலும் மனிதர்கள் போன்றே கூட்டம்கூட்டமாக வாழ்ந்துவந்த இந்த ஓநாய்களின் கூட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருந்த சில கட்டாக்காலி ஓநாய்கள் தமது உணவுத் தேவைக்காக மனிதர்களை சார்ந்துவாழ ஆரம்பித்தன.

மனிதர்கள் உண்டு மீந்துபோன எச்சங்கங்களை உணவாக மாற்றிக்கொள்ள ஆரம்பித்த இந்தகட்டாக்காலி ஓநாய்களுக்கு வேட்டையாடாது எளிதாக கிடைத்த  உணவுகளுக்காக மனித குடியிருப்புகளுக்கு அருகாமையில் வாழ ஆரம்பித்தன.மனித குடியிருப்புக்களில் கிடைத்த தீயின் வெம்மையும், உணவும் மேலும் மேலும் ஓநாய்களை மனித குழுக்களை நோக்கி ஈர்க்க தொடங்கவே தம்மை பின் தொடர்ந்த ஓநாய்களினுள் ஓரளவு அமைதியான இயல்புடையவற்றை தம்முடன் மிக அருகில் வைத்துக்கொண்டான் ஆதி மனிதன்.

தொடர்ந்து சீற்றம் குறைந்த ஓநாய்களை தம்முடன் வைதிருந்ததன் விளைவாக அவற்றின் அடுத்த சந்ததி மேலும் சீற்றம் குறைந்ததாக இருந்தது. தொடர்ந்து நடந்த இந்த செயற்பாடு ஓநாய்களை தங்களின் காட்டு மூதாதை ஓநாய்களிடமிருந்து தோற்ற அளவிலும், குணவியல்புகளிலும் வெகுவாக மாற்றியமைத்தது.

காலப்போக்கில் அவற்றின் உருவ அமைப்பில் வெகுவான மாற்றங்கள் உண்டாகலாயின. ஓநாய்களை காட்டிலும் இந்த நாய் மூதாதைகள் உருவத்தில் சிறியதாகவும் சிறிய மூக்கும், தாடையும், பற்களையும் கொண்டனவாகவும் மாறின. மேலும் அவற்றின் வால்கள் சுருளவும் , காது மடல்கள் மடியவும் ஆரம்பித்தன. தோல் மற்றும் மயிர் நிறமும் வெளிர் நிறம் கொண்டனவாக மாறின. இதற்கு காரணம் அவற்றின் அதிரினலின்எனும் ஹார்மோன் செறிவு குறைந்து வந்தமையே.

இந்த மாற்றங்கள் குடிமைப்படுத்தல் குறிகள் என வரையறுக்கப்படுகின்றன. மேலும் ஓநாய்கள் போலில்லாமல் நாய்கள் அதிகளவு எலும்பு போன்ற கடினமான உணவுகளை உட்கொண்டமையால், செரிமான அமைப்பிலும் கணிசமான மாற்றங்கள் உண்டாகின.மனித குடியேற்றங்கள் உலகம் முழுவதும் பரவிய காலங்களில் நாய்களும் மனிதருடன் உலகெங்கும் பரவின. அவை அங்கு வாழ்ந்து வந்த ஏனைய நாயினங்களுடனும், ஓநாய்களுடனும் கலந்து புதுவகை நாய்களை உருவாக்கியபோதே இன்றைய இதனை நாய்களின் வகையறாக்கள் உருவாகியதாக கூறப்படுகின்றது.

எனினும் நாய்களுக்கும் சாம்பல்நிற ஓநாய்களுக்குமான பொதுவான ஒரு மூதாதை 34,000 வருடங்களுக்கு முன்பிருந்து 9,000 வருடங்களுக்கு வாழ்ந்திருக்கிறது என்றும் அந்த விலங்கிலிருந்து இரண்டு பிரிவுகள் பரிணமித்ததாகவும் ஒன்று நாயாகவும் மற்றொன்று ஓநாயாகவும் பரிணாம வளர்ச்சி அடைந்ததாகவும் கூட அறிவியல் ரீதியில் கூறப்படுகின்றது.

நாய்களுடன் மனிதர்கள் பல விளையாட்டுகளை விளையாடுவதுண்டு. எவருமே விளையாடும் பொதுவான விளையாட்டு ஒன்று இருக்கிறது. ஒரு பொருளை தூரப் போட்டு அதை நாய் எடுத்து வரச் செய்யும் விளையாட்டு! இந்த விளையாட்டு, நாயை தம் கட்டளைக்கு பணிய வைப்பதற்கு மனிதகுலம் பயன்படுத்திய ஆரம்பகால பயிற்சியாக இருக்கலாம். அந்த பயிற்சியின் நினைவே மரபு ரீதியாக நமக்குள் தங்கி நீண்டு காரணமே இன்றி இன்றும் ஒரு நாயை கண்டதும் ஒரு பொருளை தூக்கி போட்டு எடுத்து வர கட்டளை இட வைப்பதாகவும் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“சூப்பர் மாம் ” எனும் கைவிலங்கு

நல்ல தாய் …!

ஒரு பெண் தான் ஒரு நல்ல தாய் என்பதை தனக்கும் தன் குடும்பத்திற்கும் இந்த சமூகத்திற்கும் உணர்த்துவதற்காக கொடுக்கும் விலை மிக அதிகமானது . அதற்காக தன் வாழ்நாள் முழுவதையும் செலவிடுகின்றாள். சரியாகச் சாப்பிடாமல் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் தூங்காமல் பிள்ளைகளுக்காக, பிள்ளைகளின் வளர்ச்சிக்காகவே தங்கள் நேரத்தைச் செலவிடும் தாய்மார்கள்தாம் இங்கே அதிகம். தம்பதிகள் இருவரும் இணைந்து குழந்தையை ஆசை ஆசையாக பெற்றெடுத்தாலும் அவர்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு பெண்கள் மீது மட்டுமே திணிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

பழங்கால சமூக பழக்க வழக்கங்களில் இருந்து நாம் எவ்வளவு முன்னேறி வந்திருந்தாலும் குழந்தை வளர்ப்பு விஷயத்தில் இன்றளவும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.உலகளவிலும் குழந்தைகளை வளர்ப்பது பெண்களுக்கு கொடுக்கப்பட்ட கடமையாகவே ஆண்களால் பார்க்கப்படுகிறது. பாலின சமத்துவம் அடிப்படை உரிமை என பேசினாலும் பெண்களுக்கான சம உரிமையையும், சமத்துவத்தையும் கொடுக்க இந்த சமூகம் தயாராக இல்லை . இதற்கு முக்கிய காரணம், சமூக அமைப்பில் ஆண் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சிறப்பு அந்தஸ்தும் பெண் குழந்தைகளின் மேல் சிறுவயது முதல் திணிக்கப்படும் கடமைகளும்தான் என்றால் மிகையாகாது

வீட்டு வேலை என்றால் பெண் குழந்தைகள் மட்டுமே செய்ய வேண்டும். ஆண் குழந்தைகளாக இருப்பவர்கள் தங்களின் துணிகளைக் கூட துவைத்துக்கொள்ள மாட்டார்கள், அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற சுதந்திரம் பிறப்பிலிருந்து வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு, அவர்களை குளிப்பாட்டுவது முதல் அன்றாடம் கவனித்து கொள்வது வரை முழுவதும் பெண்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பாக இருக்கிறது. குழந்தைகள் அழுதால் கூட நள்ளிரவில் பெண்கள் எழுந்து, தன் குழந்தையை சமாதானம் செய்து தூங்க வைக்க வேண்டும். எல்லா இடத்திலும் ஆண்கள் வெறும் பார்வையாளராக மட்டுமே அநேகமாக இருக்கிறார்கள் என்பது கவலைக்குரியதே .

தாய்மை, தியாகம் என்ற சொற்களில் மட்டுமே மனம் குளிர்ந்து போய் பெண்கள், பிள்ளை பெறுவதில் தொடங்கி குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி, சாதனைகள், குழந்தைகளின் எதிர்காலம் என ஓடிஓடி உழைத்தே தலை நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இதெல்லாம் அவர்களுக்குப் பிரச்சனை இல்லை. “உங்க பிள்ளை சுத்த தங்கம்”. “இப்படி ஒரு பிள்ளை பிறக்க நீங்க கொடுத்து வைத்திருக்கணும்” “உங்க பிள்ளை நீங்க வாங்கி வந்த வரம்” போன்ற ஓரிரு வாக்கியங்களைக் கேட்க வேண்டும் என்பதே அவர்கள் வாழ்நாள் தவம். அதைக் கேட்பதற்காகவே இங்கே தன் வாழ்நாள் முழுவதையும் பல பெண்கள் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த நவீன காலத்திலும்.இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை , இதெல்லாம் பெண்ணாய் பிறப்பெடுத்தவளின் கடமை அந்த கடமையிலிருந்து இம்மியளவேனும் விலகிவிடக்கூடாது என்கிற வகையில்தான் அன்று தொட்டு இன்றுவரை இந்த சமூகத்தில் பெண் நோக்கப்படுகின்றாள். “பிள்ளை இருக்கும் வீட்டில் தலை வாரக்கூட நேரமிருக்காது” என்கிற பழைய கருத்தாக்கம் இன்றுவரையில் உலவிக்கொண்டுதான் இருக்கிறது அதாவது பிள்ளைகள்தான் முக்கியம் இனி உனக்காக அல்ல அவர்களுக்காக வாழ்வதே மிகச் சிறந்த வாழ்க்கை ” என திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு அதிலிருந்து இம்மியளவேனும் பெண் நகர்ந்துவிடாதபடி இறுக கட்டப்பட்டுவிடுகிறாள்.

இந்த தூய்மையான தாய்மை போதையிலிருந்து ஒரு பெண் கொஞ்சமேனும் சுதாகரித்து தனக்காகவும் சிறிது நேரத்தை ஒதுக்க நினைப்பாளேயாயின் அவள் பயங்கர குற்றவுணர்விற்கு உள்ளாக்கப்படுவாள் என்பதே யதார்த்தம். இருபத்து நான்கு மணிநேரமும் குழந்தை பராமரிப்பு வீட்டு பராமரிப்பு என உழன்றுகொண்டேயிருக்கும் பெண் எப்போதாவது அழுத்தம் தாளாமல் வெடித்து குமுறும்போது அந்த நியாயம் எத்தனைபேரின் செவிகளுக்குள் ஏறக்கூடும்?

தெளிந்த அறிவுள்ள சமூகமாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது என சமூகம் உணர வேண்டும். குழந்தையை வளர்க்கும்போது, மனைவியின் பொறுப்பு என கணவர்கள் ஒதுங்கிக்கொள்ளாமல், என்னுடைய குழந்தை என்ற பொறுப்பை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு கவனித்து கொள்ள வேண்டும் என்பதே இங்கே பல இளம் தாய்மார்களது எதிர்பார்ப்பாக இருக்கின்றது ஏன் யுகம்தோறும் பல தாய்மார்களதும் எதிர்பார்ப்பும் இதுவாகத்தான் இருந்திருக்கக்கூடும். ஆனால் அவர்கள் அதை வாய்விட்டுக் கேட்கவில்லை என்பதுதான் உண்மை.

ஓர் குழந்தை வளரத் தொடங்கும் போதே, அம்மாவைப் பார்ப்பதற்கும் அப்பாவைப் பார்ப்பதற்கும் பெரிய வேறுபாடுகளை இயல்பாகவே கற்றுக் கொள்கிறது. அப்பா நல்ல உடைகளை அணிந்து கொண்டு வேலைக்குச் செல்கிறார். குடும்ப பொருளாதாரத்தைப் பார்த்துக் கொள்கிறார். அம்மா வீட்டு வேலைகளை மட்டும் செய்யக் கூடியவள். எப்போதும் வேலை செய்து கொண்டு,அழுக்கு நைட்டி உச்சிக்கொண்டை என வியர்வை நாற்றத்தோடு எஞ்சியதை உண்டு வாழக் கூடியவளாக குழந்தையின் மனதில் பதிகிறது இன்றும் அநேக இல்லங்களில் . இது மாறவேண்டும் .. இந்த மாற்றம் நிகழ பெண்கள் மட்டுமே குழந்தை வளர்ப்பில் வீட்டு பராமரிப்பில் காலந்தோறும் உழன்றுகொண்டிருக்க வேண்டும் என்கிற பார்வை மாறவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக “உனக்கு என்ன தெரியும் ?என்னதான் செய்கிறாயோ இவ்வளவு நேரமா?

வீட்டில் தானே இருக்கிறாய் அப்படியென்ன வேலை ?  போன்ற உச்சகட்ட எரிச்சல் வார்த்தைகளை கணவர்கள் கேட்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களும் தாயகத்து தமிழர்களும்!

புலம்பெயர் தமிழர்களானவர்கள் தற்போதைய சூழ்நிலையில் தாயகத் தமிழர்கள் இலங்கையில் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்? உண்மையில் அவர்களுக்கு என்னதான் தேவை? என்பதனை சரிவர புரிந்துகொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம். வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்க கட்சியை சேர்ந்த இத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருக்கின்றதென்றால் அதற்கான காரணம் பத்துப்பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்த மனோநிலையில் மக்கள் தற்போது இல்லை என்பதே இலங்கையில் தங்களது எதிர்காலத்தினை கொண்டுநடத்தப்போகின்ற அந்த மக்களது தேவை என்ன அமைதியான சுபீட்சமான ஓர் வாழ்க்கை!

புலம்பெயர்ந்தோர்  எப்படி இலங்கையின் நாட்டுநிலைமையை காரணம் காட்டி வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்து தம்முடைய சந்ததிகளுக்கு ஒரு நிம்மதியான சிறந்த வாழ்க்கைத்தரத்தினை பெற்றுக்கொடுக்கவேண்டும் என ஆசைப்படுகின்றார்களோ , நாளையே இலங்கையில் ஒரு யுத்தம் ஆரம்பித்தால் தமது பிள்ளைகளை அனுப்பி அவர்களது உயிர்கள் மாய்ந்துபோவதற்கு எப்படி விரும்பமாட்டார்களோ அதேபோலத்தான் இங்கிருக்கும் மக்களும்.

இந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் ஒருகாலத்தில் முற்றுமுழுதாக வெறுத்தொதுக்கப்பட்ட அரசாங்க கட்சிகளுக்கு கிட்டத்தட்ட 50% மக்கள் வாக்களிக்கின்ற நிலைமையில் தற்போது நாம் இருக்கின்றோம் . எனினும் முற்றுமுழுதாக யாரும் அரசாங்கத்திடம் சரணடையவில்லை என்பதால்தான் சட்டரீதியாகவும் , பாராளுமன்றம் வாயிலாகவும் , வன்முறை தவிர்த்த அகிம்சைரீதியாகவும் அவர்களுடனான போராட்டங்களை தொடர்ந்தவண்ணம் இருக்கின்றோம் .ஆனாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் இன்னுமே பல கைதுகள் தொடர்ந்தவண்ணம் இருப்பதால் எந்தவொரு சராசரி அப்பாவி இளைஞனும் தனது வாழ்க்கையை இழந்துவிடக்கூடாது என நினைப்பதில் தவறேதும் இல்லையே ?

புலம்பெயர்தமிழர்கள் பலரது பார்வையில் “யுத்தத்திற்கு பின்னரான வாழ்வியலில் இங்குள்ள தமிழர்கள் அநேகர் அரசாங்கத்தின் அடிவருடிகளாகிவிட்டார்கள் என்றும் , இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் அரசாங்கத்தையும் சிங்களவரையும் எதிர்த்துபோராடவேண்டும் என்பது போன்ற எண்ணமும் இருப்பது மாற்றிக்கொள்ளப்படவேண்டியவொன்று . அதுமட்டுமன்றி தாயகத்து தமிழர்கள் வெளிநாட்டுவாழ் தமிழர்களின் தயவினையே எல்லாவற்றுக்கும் எதிர்நோக்கியுள்ளனர் என்கிற பார்வையும் மாற்றமடையவேண்டியவொன்று . ஏனெனில் புலம்பெயர் சமூகத்தின் அடுத்த தலைமுறை பெரும்பாலும் தாயகத்தை மறந்துபோகும் என்பதுதான் யதார்த்தம் ( உண்மை சுடும் என்றாலும் சொல்லத்தான் வேண்டும் இல்லையா ?) அதுமட்டுமன்றி புலம்பெயர்ந்தவர்களில் நூற்றுக்கு எத்தனைபேர் .skil immigration என்ற அடிப்படையில் குடிபெயர்ந்திருக்கிறார்கள் ?

இவர்களுடைய தனித்திறமையை பாராட்டி எந்தவொரு நாடும் அவர்களை உள்வாங்கிக்கொள்ளவில்லை, எங்களுடைய நாட்டு நிலைமை , இங்கிருந்த மனிதவுரிமை மீறல்கள் , குடும்ப உறவுகளுக்கு நிகழ்ந்த பாதிப்புக்கள் என பல சம்பவங்களின் கோர்வையாகவே அவர்களுக்கு அங்குசென்று வாழக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதற்கான அடிப்படை காரணமே வடக்குகிழக்குவாழ் தமிழர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள்தான் . ஆக, இந்த அடிப்படையில்தான் புலம்பெயர்தமிழர்கள் தாயகத் தமிழர்களுக்கு ஏதேனும் உதவிகள் செய்யவேண்டும் என்கிற ஓர் சிறிய எதிர்பார்ப்பு , கடமை இருக்கிறதென அநேகர் சொல்வதற்கு காரணம். ஆனால் அந்த எதிர்பார்ப்பே இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகின்றதென்றால்?

இலங்கையின் பொருளாதாரம் இன்று அதலபாதாளத்தில் வீழ்ந்துகொண்டிருக்கின்ற நிலைமையிலும் வடக்குகிழக்கில் உள்ள எத்தனை வீதமான மக்கள் வெளிநாட்டு உதவியை நம்பியிருக்கின்றார்கள் என்றால் மிகமிக சொற்பமான அளவினரே . வெளிநாட்டில் இருந்து சொந்த மாமன் மச்சானுக்கு பணம் வருவதென்பது அது அவர்களது தனிப்பட்ட விடையம் . அவர்கள் நினைத்தால் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் விடலாம் ( வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்தனுப்பிய பணத்தில் இங்கே வெட்டியாக bike ஓடித்திரிகிறான் என்கிற புலம்பல் ஏற்றுக்கொள்ளமுடியாதவொன்று.

ஏனெனில் நீங்கள் அனுப்பியது உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருகேயொழிய ஒருவேளை உணவுக்கே அல்லாடும் ஏழைக் குடும்பத்திற்கு அல்லவே? பின்னெப்படி உங்கள் பணத்தில் இங்கே ஆடம்பரம் செய்கின்றோம் என உங்களால் கூறமுடிகிறது? உண்மையில் வெளிநாட்டில் உள்ளவர்களின் பணம் வராவிட்டாலும் இங்குள்ளவர்கள் ஏதொவொருவகையில் பிழைத்துக்கொள்வார்கள் . அவர்களிடம் படிப்பிருக்கின்றது  உழைப்பிற்கான திறமை இருக்கின்றது.கசக்கும் உண்மை என்ன தெரியுமா? இலங்கை மக்களினதும் , பலபேரின் தியாகத்தினாலும் உண்மையில் இன்று ஜாலியாக இருப்பது புலம்பேர் தமிழர்கள்தான்.

சேவை நோக்கத்திற்காக பணம் அனுப்புபவர்கள் தங்களது ஒரு ஆத்மதிருப்திக்காக செய்கின்றார்கள். ஆனாலும் யாரும் அதற்காக எங்கேயும் சென்று கையேந்திக்கொண்டு நிற்கவில்லை. எனினும் இந்த சேவை நோக்கத்திற்காக பணம் அனுப்புபவர்கள் மிக குறைந்த அளவினரே என்பது குறிப்பிடவேண்டியவொன்று . விடுதலைப்புலிகள் இருந்த காலப்பகுதியில் அவர்களது மிகப்பெரிய நிதிமூலமாக இருந்தது வெளிநாட்டுவாழ் தமிழர்களும், அவர்களோடு தொடர்புடைய அமைப்புக்கள், வர்த்தகங்கள் போன்றவையே.

இன்றும்கூட வெளிநாட்டில் அவர்கள் அப்படியேத்தானே இருக்கின்றார்கள்? அவர்கள் அந்த உதவிகளை இங்குள்ள அவசியம் உதவி தேவைப்படுவோருக்கு செய்யலாமே? நான் முன்பே சொன்னதுபோல் , வெளிநாட்டில் இருந்துவரும் அதிகமான உதவிகள் தங்களது சொந்த குடும்பத்திற்காகவும் , உறவினர்களுக்காகவும் சுயலாப முதலீடுகளுக்காகவுமே . இதைத்தவிர அவ்வப்போது சிறிய அளவில் ஏதேனும் காரணங்களுக்காக (வெள்ளம் , வறட்சி, சிலரது கல்வி நடவடிக்கைகள் மருத்துவ செலவுகள் ) உதவிகள் கிடைப்பதுண்டு.

உண்மையில் இந்த தாயக மக்களது இன்றைய தேவை என்ன ? பாரிய அளவில் முதலீடும் , அதை தொடர்ந்து பின்தங்கிய தமிழ் பிரதேசங்களில் தொழில் வளர்ச்சியும் . இதற்கு யதார்த்தமான ப்ராஜெக்ட் பிளான்கள் தயாரித்து பொறுப்புக்கூறலுடன்கூடிய ஊழலற்ற நம்பிக்கையான பொறிமுறையுடன்கூடிய செயல்திட்டம் போன்றவையே தேவை. சில புலம்பெயர்ந்த கும்பல்கள் அப்படியான முதலீடுகளுக்கு பணம் சேர்க்கின்றோம் எனக்கூறிக்கொண்டு அதை தாங்களே ஆட்டையை போட்ட சந்தர்ப்பங்கள் எங்களைவிட உங்களுக்கு அதிகமாக தெரிந்திருக்கக்கூடும் . இதனால் இந்த இரட்டைநிலை வியாபாரிகளை தவிர்த்து இனியேனும் உருப்படியாக ஏதேனும் செய்தால் நன்மைபயக்கும்.

திருச்சபை vs அறிஞர்கள்

கத்தோலிக்க மதகுருவாக இருந்த “pope john paul II” கடந்த இரண்டாயிரமாம் ஆண்டு
கூறியிருந்த வார்த்தைகளே அவை. ஆம் கத்தோலிக்க திருச்சபைகளின் ஒப்பற்ற தலைவர்களாக விளங்குகின்ற போப்பாண்டவர்கள் எடுத்த சர்ச்சைக்குரிய முடிவுகளும் அதனால் அந்த மதத்துக்குள் எழுந்த மாற்றங்களும் அந்த மதத்தினை இன்றுவரையில் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றதெனலாம். சிலுவைப்போரை தொடங்கிய “Pope urban ll “ தொடங்கி தற்போதைய pop francis வரை இந்த சர்ச்சைகள் நீடித்துக்கொண்டேதான் இருக்கின்றனவெனலாம்.

(ஏழு சிலுவைப்போர்களின் மூலம்) போர்களால் மதத்தை பரப்ப முடியாது என பாடம் கற்றது கலீலியோவை தண்டித்தபின்னர் பழமையைவிட்டு அறிவியலோடு பயணிக்கத்தொடங்கியமை புரட்சிக்குப்பின்னர் பைபிளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்தமை என கத்தோலிக்க கிறிஸ்தவம் ஒவ்வொரு நிகழ்விலும் அதற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டே வந்துள்ளது .

கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையில் ஏசு தனக்குப்பின் தனது சீடர்களை வழிநடத்தும் பொறுப்பினை முதன்மை சீடரான (பீட்டர்) பேதுருவிடம் ஒப்படைத்தார் . பேதுருவின் தலைமையில் கிறிஸ்தவம் கட்டமைக்கப்பட, கோபம் கொண்ட ரோம் பேரரசன் நீரோ , பேதுருவை தலைகீழாக சிலுவையில் அறைந்தும், மற்றுமொரு சீடரான paulஐ தலை துண்டித்தும் கொல்ல உத்தரவிட்டான் . பேதுரு கொல்லப்பட்ட இடத்தில்தான் கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப்பீடம் தற்போது கட்டமைக்கப்பட்டுள்ளது .

எனினும் எந்த பழமைவாதத்திற்கு எதிராக ஏசு, கிறிஸ்தவத்தை கட்டியெழுப்பினாரோ அதே பழமைவாதத்தில் ஊறித்திளைத்தது கிறிஸ்தவம் . போப்பாண்டவர்கள் தங்களை கடவுளின் நேரடிப்பிரதிநிதியாகவே பிரகடனப்படுத்தினர்.சுமார் 1500 ஆண்டுகள்வரை தொடர்ந்த இந்த பழமைவாத நம்பிக்கைகளின்மீது முதல் கல்லை எறிந்தவர் “நிக்கோலஸ் கொப்பனிக்கஸ்” 1543ல் மரணப்படுக்கையில் இருந்த அவர் பிரபஞ்சத்தின் மையம் சூரியன்தான் எனவும் பூமி உள்ளிட்ட கோள்கள்தான் சூரியனை சுற்றிவருகின்றன எனக்கூறிய புதிய கொள்கை, பைபிளின் சூரியன் மற்றும் பூமி பற்றிய கோற்பாடுகளை கேள்விக்குடுற்படுத்தியதை ஏற்க மறுத்தது உலகின் மிகப்பெரிய மதமான கத்தோலிக்கம். இதனையடுத்து 1600களில் இதே கொள்கையினை தூக்கிப்பிடித்தார் வானியல் ஆய்வாளர் புரூனோ. இத்தாலியை சேர்ந்த புரூனோ கத்தோலிக்க விதியை மீறியதாக திருச்சபையால் குற்றம்சாட்டப்பட்டு விசாரணைக்குள்ளானபோது “தான் கூறியது அனைத்தும் தவறு என சிலுவையைப்பிடித்து மன்னிப்புக்கேட்டால் அவரை விடுவித்துவிடுவதாக திருச்சபைகூற அதனை ஒப்புக்கொள்ளாத புரூனோ எரித்துக்கொல்லப்பட்டார் என்பது வரலாறு.

17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரபஞ்சத்தின் மையம் சூரியன்தான் எனும் கருத்து மீண்டும் பூதாகாரமானது “கலிலியோ” மூலம் . கொப்பனிக்கஸின் கருத்துக்களை உண்மை என நிரூபித்த கலீலியோவை வாழ்நாள் சிறைத்தண்டனை கொடுத்து திருச்சபை தண்டித்தபோது, நீண்ட போராட்டத்தின்பின் அந்த சிறைத்தண்டனை “மதத்திற்கு எதிராக எந்த ஆய்வினையும் செய்யக்கூடாது “என்கிற நிபந்தனையின்பேரில் வீட்டுக்காவலாக மாற்றப்பட்டது. “தான் உறுதியாக நம்பிய ஒன்றை , தன்னால் நிரூபிக்க முடிந்தவொன்றை இல்லை என்று கூறியதோடல்லாமல் அதற்கான தண்டனையையும் பெற்ற கலிலியோ, கண் பார்வையும் பறிக்கப்பட்டு தன்னுடைய எழுபத்தேழாவது வயதில் 1642 இல் இறந்துபோனார் . அன்று எந்த மதம் அவருடைய ஆய்வுகளை அழிக்க முற்பட்டதோ அந்த மதமே பின்னாளில் அவருக்காக மன்னிப்புக்கோரியதுடன் அவரது கோற்பாடுகளையும் ஏற்றுக்கொண்டது .

கலீலியோவிற்குப்பின் கத்தோலிக்க கோற்ப்பாடுகளை, போப்பாண்டவர்களின் அதிகாரங்களை கேள்விக்குள்ளாக்கியவர்களில் முதன்மையானவர் மார்ட்டின் லூதர். இவர்தான் கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளினால் புரட்டஸ்தாந்து எனும் மதம் உருவாக காரணமாக இருந்தவர் . பைபிளை லத்தீன் மொழியில்தான் படிக்க வேண்டும் , தேவாலயத்தில் மட்டுமே பைபிள் இருக்கவேண்டும்  அதனை பாதிரியார்கள் மட்டுமே வாசிக்கலாம், மக்களின் மொழியில் மொழிபெயர்க்கக்கூடாது, தேவாலயங்கள் மன்னர்களைவிடவும் உயர்வானது என்கிற கட்டுப்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்த பலரும் எரித்துக்கொல்லப்பட்டநிலையில் , இந்த சர்வாதிகாரங்களையெல்லாம் கடுமையாக எதிர்த்தவர் மார்ட்டின்.

திருச்சபை வழங்கிய மரண தண்டனையில் இருந்து நான்குமுறை அதிஷ்டவசமாக தப்பிய மார்ட்டின் லூதர், முதன்முறையாக ஜேர்மனிய மொழியில் பைபிளை மொழிபெயர்த்தமைக்கு கிட்டிய பெரும் வரவேற்பு கத்தோலிக்க போப்புகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது . மார்டினை கொல்ல எந்த கத்தோலிக்கம் உத்தரவிட்டதோ, அந்த கத்தோலிக்கமே மெல்ல மெல்ல மார்ட்டின் சொன்ன சீர்திருத்தங்களை செய்ய ஆரம்பித்தது . எந்த பைபிள் லத்தீன் தவிர வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டதோ அந்த பைபிள்தான் இன்று உலகிலேயே அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.

அதுமட்டுமன்றி மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என டாவின்சி சொன்னபோது அவருக்கும் எதிராக செயற்பட்டது வத்திக்கான் . காரணம் மனிதனை கடவுள் படைத்தார் என்பதுதான் பைபிளின் அடிப்படை . மனிதர்களின் முன்னோர்கள் கடவுளால் நேரடியாக படைக்கப்பட்டவர்கள் என்றும் அதற்கு எதிராக பேசுபவர்கள் பரிசுத்த வேதாகமத்திற்கு எதிரானவர்கள் என அறிவித்த கத்தோலிக்க பாதிரியார்கள், டார்வினை நாயைவிட கேவலமானவர் என விமர்சித்தனர் . ஆனால் 1996ம் ஆண்டு “டார்வின் கூற்று “ கிட்டத்தட்ட சரி என்பதுபோல் ஒப்புக்கொண்டது கத்தோலிக்கம் . இப்படி சீர்திருத்தங்களை எதிர்த்து போப்கள் செய்த வரலாற்று பிழைகளை நாளடைவில் சரிசெய்துகொண்டே வந்திருக்கிறது கத்தோலிக்கம்.

“Pop pius xll” ஹிட்லருக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கினார் என்கிற ஓர் குற்றச்சாட்டும் “hitlar’s pope the secret history of pius xll” (நூலாசிரியர் john cornwell)என்கிற நூலினூடாக முன்வைக்கப்பட்டிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது . லட்சக்கணக்கில் யூதர்கள் கொல்லப்பட்டபோது அதற்காக வாய் திறக்காமல் மௌனம் காத்த pius xll ஹிட்லர் ஆட்சியை பிடிக்கவும் மறைமுகமாக உதவினார் என குற்றம்சாட்டுகிறது இந்நூல் .

Pop pius xll ஆம் பயசுக்குப்பின்னர் அதிகம் சர்ச்சைகளில் சிக்கியவர் pop benedict XVI கத்தோலிக்க கிறிஸ்தவர்களாலேயே அதிகம் விமர்சிக்கப்பட்ட போப்பாண்டவர் இவரே . ஏனெனில் கத்தோலிக்கத்தை பொறுத்தவரை ஓரினச்சேர்க்கை , கருக்கலைப்பு , விவாகரத்து போன்றவை மதத்திற்கு எதிரானதாக கூறப்படுகிறது . கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் மிகப்பெரிய குற்றச்சாட்டாக எப்போதும் எழுப்பப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றவேண்டும் என எண்ணியவர் . பாதிரியார்கள் செய்யும் பாலியல் அத்துமீறல்களை கண்டித்ததோடு மட்டுமல்லாமல் பாதிரியார்களால் துஸ்பிரயோகத்திற்குள்ளான சிறுவர் சிறுமிகளிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோரியவர்.

திருச்சபையிலிருந்து தானாக ஓய்வு பெற்றுக்கொண்ட போப்பும் இவர்தான் . கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகள் பலவற்றையும் போப் பெனட்டிக் கேள்விக்குள்ளாக்கியமையும் அவர்மீது நெருக்குதல் பிரயோகிக்கப்பட்டு பதவிவிலக நிர்பந்திக்கப்பட்டார் எனவும் கூறப்படுகிறது . (ஆனால் Pop benedict ஓரினச்சேர்க்கையாளர் என்கிற குற்றசாட்டு தொடர்ந்துகொண்டேயிருந்தது ) டிசம்பர் 25ஆம் திகதியை ஏசுவின் பிறந்தநாளாக கொண்டாடினாலும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என தனது நூலில் (the sprit of the liturgy ) குறிப்பிட்டதுடன் ஏசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்பதையும் மறுத்தார் பெனட்டிக் . இப்படி தொடர்ந்தும் சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டிருந்த நிலையிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார் . ஆனால் தனது ராஜினாமாவிற்கான காரணத்தை மட்டும் கடைசிவரையில் வெளியிடவேயில்லை அவர் .

லத்தீனில் இருந்த பைபிளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்க ஒப்புக்கொண்டமை, உலகம் உருண்டை என ஏற்றுக்கொண்டமை விதவைகள் மறுமணத்தை ஏற்றுக்கொண்டமை என கத்தோலிக்கம் ஏற்றுக்கொண்ட மாற்றங்கள் அனைத்தும் பல சர்ச்சைகள் மற்றும் புரட்சிகள் மூலமாகவே ஏற்பட்டுள்ளது .அண்மைக்காலங்களில் பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்கிற குரல்களும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. எனினும் இந்த மாற்றம் நிகழுமா என கூற முடியாவிட்டாலும் மாற்றங்களுக்கான பாதையை நோக்கி கத்தோலிக்கம் பயணிக்கவேண்டியுள்ளது. காரணம் மாற்றங்களால் மட்டும்தான் கத்தோலிக்கம் உலகத்தில் இன்றுவரை மிகப்பெரிய மதமாக இருக்கிறது என்பதை வாத்திக்கானில் மன்னராக அமர்ந்துள்ள போப்பாண்டவர்களும் அதன் நிர்வாகிகளும் அறியாதவர்களல்லர்.

ஜெய ஜெய ஜெய ஜெயஹே Nadi Review!

மலையாளத்தில் வெளியாகும் பெரும்பாலான படங்கள், அன்றாட வாழ்க்கைக்கான பாடங்களாகத்தான் இருக்கும். குறிப்பாக, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அர்த்தபூர்வமாக பேசும் படங்கள் அடுத்தடுத்து மலையாளத்தில் வெளியாகி கவனத்தை ஈர்க்கும். அந்த வரிசையில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது, கடந்த அக்டோபர் மாத இறுதியில் வெளியான ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே!’ விபின் தாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் தர்ஷனா ராஜேந்திரன், பேசில் ஜோசப், அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சிறு வயதிலிருந்தே தனக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதை வெளிக்கொணர தடைவிதிக்கப்பட்ட நாயகி தர்சனா, பெண் எதற்க்காக படிக்க வேண்டும் ? என்கிற மனோநிலையில் உள்ள குடும்பத்தினரின் எதிர்ப்பையும் தாண்டி டிகிரி முடிக்க வேண்டும் என்ற கனவுடன் கல்லூரிக்குள் நுழைகிறார் . அங்கு பெண்ணியம் பேசித்திரியும் கல்லூரிப் பேராசிரியர் மீது காதல் ஏற்படுகிறது.

சிறுவயதில் இருந்தே வீட்டில் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்த நாயகிக்கு இவர் பேச்சு பிடித்துப் போகவேதான் காதலில் விழுகிறார். ஆனால் காதலிக்கத்தொடங்கியதும் தான், அவர் எப்படி பட்ட சைகோ என்பது தெரிகிறது. வெளியில் மட்டும் பெண்ணியம் பேசிக்கொண்டு தனது காதலியை அனைத்து விடயங்களிலும் கட்டுப்படுத்தி அடிமையாக வைத்திருக்க நினைக்கிறார் அந்த பேராசிரியர். ஒருகட்டத்தில் நாயகியின் மூக்கு உடையும் அளவிற்கு அடித்தும் விடுகின்றார். இது நாயகியின் வீட்டுக்கு தெரியவர உடனே வேறொருவருடன் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். மகளின் ஆசைகளை பற்றி துளியும் கவலை இல்லாத பெற்றோர், வாழ்க்கை முழுவதும் கூடவே வரும் துணையை மகளுக்கு பிடித்திருக்கிறதா என்று கேலாமல் அவசரஅவசரமாக திருமணம் செய்துவைத்துவிடுகின்றார்கள்.

திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு சென்றபிறகு மாப்பிள்ளை எவ்வளவு கோவக்காரர் என்றும் எப்படியான கட்டுப்பெட்டி என்றும் புரிந்துகொள்ளும் தர்சனா, தனது கணவரிடம் தினமும் அடி வாங்குகிறார். (தினமும் இடியாப்பம் மட்டுமே உண்ணும் கணவருக்கு வேறு உணவை ஆசையாக சமைத்து வைத்ததற்காக கூட அடி விழுகிறது. ஏனென்றால் அவர் இடியாப்பம் மட்டும்தான் திண்ணுவாராம் !!! ) மனைவி கணவனை எதிர்த்து பேசக்கூடாது, கணவனுக்கு பிடித்ததை மட்டும் தான் சமைக்க வேண்டும், அவரைக்கேட்காமல் எதையும் செய்யக்கூடாது போன்ற So Called விஷயங்களை நாயகியும் சந்திக்கிறார். பிறகு சிந்திக்கிறார். ஒருகட்டத்தில் கணவனை அடி வெளுத்துவிடுகிறார். இதனால் அதிர்ந்த நாயகனுக்கு பிறகு தான் தெரிகிறது, யூடியூப் பார்த்து நாயகி கராத்தே கற்றுக்கொண்டது.

“வீட்டிலேயே மாட்டிக்கொண்டோம் எங்களால் எதுவும் செய்ய முடிவதில்லை “ என்று புலம்பும் பெண்களுக்கு, ஒரு smart phone போதும் உங்களை நீங்கள் தற்காத்துக்கொள்ள என்றும், வெறும் சமையலையும், அழகுக் குறிப்பினையும் மட்டும்தான் ஒரு பெண் யூடூபில் பார்க்கவேண்டுமா என்ன? என்பதை அடித்துச் சொல்லிவிடுகிறார் இயக்குனர் போலும் . தனது மனைவியை தனக்கு அடிமையாக்க அடக்கி வைக்க ஒரு வழிமுறையை தேடும் கணவன், மனைவியை கர்ப்பமாக்கிவிட்டால் போதும் என்று முடிவு செய்வதில் பல ஆண்களின் மனவோட்டத்தை அம்பலப்படுத்துகிறது இத்திரைப்படம்.

கணவன் மனைவியை அடிப்பது என்பது மிகச் சாதாரணமான ஒரு விஷயமாக இச்சமூகத்தால் பார்க்கப்படுகிறது என்பதும் , அவள் திருப்பியடிக்க ஆரம்பித்தால் இந்த சமூகத்தின் மனநிலை மற்றும் கண்ணோட்டம் என்னவாக இருக்கும் என்பதும் மிகத் தத்துரூபமாக சொல்லப்பட்டிருக்கின்றது கதையில்.
நகைச்சுவை ஒரு சூத்திரம். அந்தச் சூத்திரத்தின் வழி பெண்களின் அகச்சிக்கலை இயல்பாக எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர். பெண்ணின் குணம் வீரம் என்பதை மறந்து போகக்கூடிய அளவிற்கு பெண்கள் மென்மையானவர்கள், பூப் போன்றவர்கள் என்று மனச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம். “அடிச்சுப்பாரு” என்று ஒரு பெண் துணிந்து சொல்லும் தைரியமும் சொல்ல முடியாத நெருக்கடிகளில் ஒரு பெண் தனியாக வாழ இயலும் என்று சொல்லும் துணிவும் ஆணைவிடப் பொருளாதாரத்தில் பெண்ணால் உயர்ந்து நிற்க இயலும் என்ற திடமும் படத்தைத் தாங்கி நிற்கின்றன.

கணவன் அடிப்பதை தந்தையிடம் சொல்லும் போது, அதனை காது கொடுத்து கூட கேட்க அவர் தயாராக இல்லை. இதெல்லாம் சகஜம் அட்ஜஸ் செய்துகொள் என்ற அட்வைஸ் தான் அம்மாவிடம் இருந்து கிடைக்கிறது. இப்படி பல மன உளைச்சல்களுக்கு நடுவே சிக்கித்தவிக்கும் நாயகி, ஒரு முடிவெடுக்கிறார். பெற்றோரும் வேண்டாம், கணவனும் வேண்டாம் சொந்த காலில் நிற்பேன் என்று வீட்டை விட்டு செல்கிறார். பாதியில் நிறுத்திய டிகிரியை தொடர்கிறார். பல போராட்டங்களுக்குப் பிறகு பிசினஸ் செய்யவும் தொடங்குகிறார்.

கிளைமேக்ஸ் காட்சியில் இரு நீதிமன்ற காட்சி வரும். அதில் பெண்களுக்கு தேவையான மூன்று விஷயங்கள் என்ன என்று நீதிபதி நாயகியின் கணவரிடம் கேட்க, அவர் பக்தி, ஒழுக்கம், வீட்டு வேலை செய்வது என சொல்லும் பதிலை கேட்டு, அதிர்ந்துபோன நீதிபதி அதே கேள்வியினை நாயகியிடம் கேற்க, அவள் அதற்கு சமத்துவம், நீதி, பெண் சுதந்திரம் என்கிறார். எக்காலத்துக்கும் பொருளாதாரமே பெண்ணுக்கு முக்கிய பலம் என்பதே படத்தின் அடிநாதம் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

கண்ணம்மா! Nadi Review

2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி Pon Manjula தாயாரிப்பில் KM Cine Dreams youtube தளத்தில் வெளியான பாடல் தான் ‘கண்ணம்மா’. இந்தப் பாடல், Siva Pathmayan இனால் இசையமைக்கப்பட்டு Ananthu இனால் பாடப்பட்டுள்ளது. இதற்க்கான வரிகள் Kuventhiran.K இனால் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான காட்சிகள் Jans Henry இன் DIRECTION இனால் படமாக்கி நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் Dilki Dissanayaka, Urelu Bakii மற்றும் Kuve ஆகியோரின் கச்சிதமான நடிப்பினால் அலங்கரிக்கப் பட்டுள்ளது.

பாடலின் ஆரம்பத்தில் யாருமில்லா தனிமையில் ஓர் ஓவியன் ஒருவன் தன் ஓவியத்தின் மீது சில வரிகளை எழுதி முடிப்பது போன்ற காட்சியோடு ஆரம்பமாகி, அதை தொடர்ந்து கடற்கரையில் ஓர் பார்வையில்லா கவிஞனின் கால் போன வழி பயணத்தோடு “கண்ணம்மா என் தோழி நீ…” என்ற அழகான வரிகளோடு மெல்ல மெல்ல கண்ணம்மாவிற்க்கும் கவிஞனுக்குமான பந்தத்தின் வர்ணனை பாடலின் வரிகளாக வளர்கிறது. ஒவ்வொரு வரிகளுமே கண்ணம்மா மீது இனம் புரியாத காதலையும் மதிப்பையும் உருவாக்கி விடும் அளவிற்கு ஆழமானதாக எழுதப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி கதாநாயகன் தனது தனிமையிலும் வீழ்ச்சியிலும் வாடி வருந்தும் போதெல்லாம் தலைகோதி ஆறுதல் சொல்லும் நிழலாக கண்ணம்மா என்ற காதாபாத்திரம் தோன்றி மறைகின்ற காட்சிகள், காதலில் உடலை தாண்டிய ஓர் ஆணின் எதிர்பார்ப்பினையும் ஏக்கதினையும் தெளிவுபடுத்தி இனம் புரியாத பரிதாப உணர்வொன்றை கதாநாயகன் மீது வளர செய்கிறது.

இந்த பாடலுக்கான காட்சிகள் ஒவ்வொன்றுமே, பாடலின் வரிகளுக்கு உணர்வினை சேர்த்து மெருகூட்டும் வகையில் கச்சிதமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பாடலின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ள கதாநாயகர்கள் இருவருமே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து உள்ளனர். படப்பிடிப்புக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட இடங்கள் முதல் VIDEO EDITING வரை அனைத்துமே முழு திருப்தியளிக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலினை கேட்டு முடித்த பின்பும் இன்னும் மனதில் மாறாமல் ஆழ பதிந்த வரிகள்!

“காணும் இடமெல்லாம் காட்சி பிழையானாய்!
நாளும் பொழுதெல்லாம் நீளும் நினைவானாய்!
கால நதி கரையில் கரைந்து போவேனோ?
காதல் உந்தன் உயிரில் கலந்து மீள்வேனோ?” பாடலின் மொத்த வலியினையும் கொத்தாக கொண்டு வந்து முன் நிறுத்தும் வரிகளாக மனதில் பதிந்து விட்டன. நீங்களும் இந்த பாடலை கேட்டு, உங்கள் மனதில் ஆழ பதிந்த வரிகளை எங்களுடன் கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

யாழின் சா”தீ”யம்

வேளாளர், பரதேசிகள், மடைப்பள்ளியர், மலையகத்தார், செட்டிகள், பிராமணர், சோனகர்,தனக்காரர்,குறவர்,பரம்பர்,சிவியார்,பள்ளிவிலி,செம்படவர்கடையர் பரவர்,ஒடாவி,சான்றார்,கன்னார்,தட்டார்,யானைக்காரச்சான்றார் கயிற்றுச்சான்றார், கரையார், முக்கியர், திமிலர், கோட்டைவாயில் நளவர், கோட்டைவாயிற் பள்ளர், மறவர்,பாணர், வேட்டைக்காரர்,வலையர், வர்ணகாரர், வண்ணார், தந்தகாரர், சாயக்காரர், தச்சர், சேணியர், கைக்கோளர், குயவர், கடையற்காரர், குடிப்பள்ளர், சாயவேர்ப்பள்ளர், தம்பேறு நளவர், தம்பேறுப்பள்ளர், குளிகாரப்பறையர், பறங்கி , அடிமைகொல்லர்,தவசிகள்,அம்பட்டர்,கோவியர்,தமிழ்வடசிறைநளவர் ,பள்ளர்,பறையர்,துரும்பர்,எண்ணெய்வணிகர்,சாயவேர்ப்பள்ளர், சாயவேர்ப்பறையர், அர்ச்கோயில் பறையர்.

என்ன இதெல்லாம் ? ஏதேனும் பழைய தமிழ்த் திரைப்படங்களின் பெயர்பட்டியலா ? என்றால் . அதுதான் இல்லை. மேற்கூறியவை 1790 களில் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்போது காணப்பட்ட சாதிகள் பற்றி “யாழ்ப்பாணச்சரித்திரம் “ (1912) என்கின்ற நூலில் அ.முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிட்டிருந்த சாதிகளின் பெயர்களே அவை. தெற்காசிய சமூகங்களின் சாதியத்தின் இருத்தல் பற்றிய பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையும் கூட சாதியத்திற்கான விதிவிலக்கல்ல என்று கூறப்படுகின்றது.

பண்டைய சமூகத்தின் எச்சமான இன்றைய சாதியம், நிலப்பிரபுத்துவத்தின் மறுவடிவமாகவே பார்க்கப்படுகின்றதெனலாம். நாகரீகத்தின் உச்சமும் பொருளாதார மேம்பாடும் அனைத்துக்கும் மேலாக சமத்துவக் கல்வியின் பரம்பலும் சாதியத்தை இல்லாமல் செய்துவிடும் என்கிற கருத்து உண்மையில் இன்றுவரையில் ஓர் கேள்விக்குறியாகவே உள்ளது . முப்பது வருடங்களுக்கு மேலான உள்நாட்டு யுத்தம் , அதனோடு தொடர்புடைய அகதிகளின் உருவாக்கம் , புலம்பெயர்வு என்பவைக்கூட இன்றுவரையில் சாதிய ஒழிப்பில் ஆக்கபூர்வமானதோர் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை என்றே கூறவேண்டும். உலகமயமாதலுக்கேற்றவாறு சாதியமும் தன்னை புதிய வடிவில் தகவமைத்துக்கொண்டே வருகின்றதென்பதுதான் யதார்த்தம்.

முழு இலங்கையிலும் ஏதோவொரு வடிவில் சாதியம் பார்க்கப்படுகின்றதுதான் என்றாலும், வடக்கிலும் கிழக்கிலும் (சிங்களவர்களைப்பொறுத்தவரையில் பௌத்த மதத்தின் முற்போக்குத்தன்மைகளை விட இந்துத்துவ சாதிய அடிப்படைகளையே கண்டியிலும் ) மிக மிக அதிகமாகவே பார்க்கப்படுகின்றதெனலாம் . உண்மையில் யாழ்ப்பாணத்தில் கிபி மூன்றாம் நூற்றாண்டுகளிலிருந்தே தமிழர்கள் வாழ்ந்துவந்துள்ளனர் என ஆராச்சிகள் குறிப்பிட்டாலும் , பதினோராம் நூற்றாண்டில் சோழர் மற்றும் பாண்டியர்களின் படையெடுப்புக்களின் பின்னரே இந்தியாவிலிருந்து வந்த குடியிருப்புக்களின் தொகை வடகிழக்குப் பகுதிகளில் அதிகரித்ததாக ஆய்வாளரான அரசரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் உயர்ந்தவர்களாக வேதங்களின் கூற்றுக்கள் மூலம் கருதப்படும் பிராமணர்களை விட யாழ்ப்பாணக் குடா நாட்டில் வேளாளர் சாதியினர் எவ்வாறு ஏனைய சாதியினரை அடிமைகளாக, தமது ஏவலாளர்களாக காலம் பூராகவும் வைத்திருக்கும் வழக்கத்தினை உருவாக்கினார்கள்? எப்போது யாழ்ப்பாணக் குடாநாட்டினை மையப்படுத்தி வேளாளர் சமூகத்தினர் முதன்மை பெறத் தொடங்கினார்கள்? என்கிற கேள்விகளுக்கான விடை இங்கிருந்தே உருவாகின்றன எனலாம்.

விவசாயத்தினை தொழிலாக கொண்ட வெள்ளாள சாதியினர் யாழ்ப்பாணத்தில் அதிகமாக குடியேறியபோது , இவர்களுக்கு சேவகம் செய்வதற்காக வேறுபல சாதியினரும் கொண்டுவரப்பட்டனர். அதனடிப்படையில் வெள்ளாளர்களின் கோவில்களில் பூசகர்களாக இருப்பதற்காக கொண்டுவரப்பட்ட பிராமணர்கள் இந்தியாவைப்போன்று அரசியல் சமூக பண்பாட்டு அதிகாரம் கொண்டவர்களாக இராது வெறுமனே வெள்ளாளர்களின் அர்ச்சகர்களாக மட்டுமே கொள்ளப்பட்டனர் . தேச வழமை சட்டம் என்கிற அடிப்படையில் ஆறுமுக நாவலர் போன்றோரால் மிகத் தந்திரமாக திட்டமிட்டு வளர்க்கப்பட்ட வெள்ளாள சாதியினரது ஆதிக்கமானது ஒவ்வொரு துறையிலும் மனித மாண்பை அக்காலகட்டத்தில் அதிகமாகவே பறித்திருந்ததெனலாம் .

கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கும் உரிமை கூட தடை செய்யப்பட்டது. (இதனடிப்படையிலேயே விடுதலைப்புலிகளின் காலத்திற்கு முன்புவரை கூட பிற மனிதர்களுக்கு சிரட்டையில் குடிநீர் வழங்கும் அநாகரீகம்கூட நடந்தேறியதெனலாம் ) தாழ்த்தப்பட்ட சாதிகளில் ஒருவரான துரும்பாக்கள், வெள்ளாளக் கண்களின் தூய்மையைக் கெடுக்கக் கூடாது என்பதற்காக பகலில் நடக்கத் விதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. மேலாதிக்கவாதியான வேளாளர்களின் மனதில் மட்டக்களப்புத் தமிழர்கள், தோட்டத் தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் கூட “மற்றவர்கள்” என்கிற இரண்டாம்தர பார்வையிலேயே அணுகப்பட்டனர்.

குடாநாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் தூய்மையையும் மேன்மையையும் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு வழிமுறையாக வேளாளர்கள் பிரிவினைவாதத்தின் மீது வெறித்தனமாக இருந்தனர். பிரிவினைவாத சித்தாந்தம் அவர்களின் வெள்ளாள மேலாதிக்க வட்டத்திலிருந்து தங்கள் சொந்த மக்களையே ஒதுக்கி வைப்பதில் தொடங்கியது. பிரிவினைவாதம் (இன்றும்கூட யாழ்பாணத்தமிழர்களின் வாயிலிருந்து “எங்கட, எங்கட “என்கிற சுயநலம் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது).

அவர்களின் நிலப்பிரபுத்துவ மற்றும் காலனித்துவ அதிகாரங்கள், சலுகைகள், பதவிகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பதற்கும் ஒரு வழிமுறையாக இருந்தது. தமிழ் தாழ்த்தப்பட்ட சாதியினராக கருத்தப்பட்டவர்களோ அல்லது தமிழ் மற்றும் தமிழ் அல்லாத வெளியாட்களோ வெள்ளாள உற்கட்டமைப்பின் புனிதத்தை மாசுபடுத்தும் எந்தவொரு ஊடுருவலும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டது( இன்றும்கூட சில கோவில்களுக்கான உள்நுழைவு மறுக்கப்படுகின்றமை அவதானிக்கப்படவேண்டியவொன்றே).

சில ஊடுருவல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆறுமுக நாவலரால் மறுசீரமைக்கப்பட்ட மதச்சார்பற்ற தேசவழமை சட்டமாக இருந்தாலும் சரி, சைவ சமயச் சட்டங்களாக இருந்தாலும் சரி, ஜாதி வெறியர்களான கத்தோலிக்க திருச்சபையினர்களாக இருந்தாலும் சரி முன் பீடங்கள் உயர் சாதியினருக்கும் கடைசி பீடங்கள் தாழ்ந்த சாதியினருக்கும் ஒதுக்கப்படும். ஆளும் அரசியல் சித்தாந்தம், சமூக ஒழுங்கின் அங்கீகரிக்கப்பட்ட மரபுகள் அனைத்தும் ஒன்றிணைந்து “மற்றவர்களை” (குறிப்பாக தீண்டத்தகாதவர்கள் / தலித்துகள்) வெள்ளால சொத்துக்கள், இந்து கோவில்கள், பள்ளிகள், கிணறுகள், பேருந்துகள் மற்றும் வாழ்வதற்கு தேவையான அனைத்து சமூக செயற்பாடுகளிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவே கருதப்பட்டனர்.

வேளாளர் கோரிக்கைகளுக்கு அடிபணியவில்லை என்றால், தாம் வேளாளர்களின் நிலங்களிலிருந்து வெளியேற்றப்படலாம், தொழில் உரிமைகள் மறுக்கப்படலாம் என்கிற அச்சத்தின் அடிப்படையிலேயே நீண்டகாலமாக வேளாளர்களின் அடிமைகள் போன்று மற்றைய சமூகங்கள் தம் வாழ்வியலை தொடர்ந்தன . தங்கள் நிலையை உயர்த்த முயற்சிக்கும் மற்றைய சாதியினர், வேளாளர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட குண்டர் கும்பலால் பாதிக்கப்பட்டும், குடிசைகளை எரித்தும், கிணறுகளை விஷமாக்கியும் பலியாக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

வெள்ளாளர் என்பது பிறப்பால் மட்டும் உருவானதல்ல , காலப்போக்கில் அகம்படியர் , செட்டி , தனக்காரர் போன்ற பல்வேறு ஆதிக்க சாதிகள் இணைந்து வெள்ளாளர் என்கிற ஓர் பரந்த சாத்தியப்பிரிவினுள் அடங்கினர் என்பதே உண்மை . வெள்ளாளர்களுக்குள்ளும் பல உப பிரிவுகள் இருப்பினும் தலித் மக்களுக்கெதிரான செயற்பாட்டில் ஒருங்கிணைந்து செயற்பட வெள்ளாளர் என்கிற பொது அடையாளம் மட்டுமே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.

இதனடிப்படையிலேயே 1929ஆம் ஆண்டு பாடசாலைகளில் இன, மத, சாதி, தேசிய வேறுபாடு காட்டாமல் எல்லாப் பிள்ளைகளுக்கும் சரியாசனம் கொடுக்கவேண்டுமென அரசு அறிவித்தபோது வெகுண்டெழுந்த வெள்ளாளர்கள் பதினைந்து பாடசாலைகளைத் தீக்கிரையாக்கினார்கள்.1930இல் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல்முறையாக தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது அவர்களுடன் வெள்ளாள மாணவர்களுக்கும் சமபோசனம் வழங்குவதை எதிர்த்து சேர் பொன்.இராமநாதன் கவர்னரிடம் முறையிட்டதுடன் , சாதிய ரீதியிலான பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தார். அத்துடன் சர்வஜன வாக்குரிமையானது தலித்துக்களுக்கும் படிப்பறிவற்றவர்களுக்கும் தலைமையை கைப்பற்ற வழிவகுக்கும் என்பதால் இந்த முறைமை ஆபத்தானது எனவே சகலருக்கும் வாக்குரிமை என்பது இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் கோரினார் . (சிங்களவர்கள் மட்டும்தான் தமிழாளுக்கு எதிரியா என்பதை இங்கே சற்று யோசிக்கவேண்டும்.

நாம் இன்றும்கூட “இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறா ” என்கிற கருத்தியலின் பின்னே மிக நூதனமான யாழ் ஆதிக்க சாதியினரின் நரித்தனம் மறைந்திருக்கின்றன என்பதே உண்மை . ‘’யாழ்பாணத்தில் நீங்கள் எவடம் ? “என கேற்கும் கேள்விகூட இடத்தினை வைத்து சாதியை கண்டுபிடிப்பதற்காகவே. மேலும் திருமணங்களில் மிக இறுக்கமாக சாதியத்தை கட்டிக்காப்பது , அடுத்தவர்களை எடை போடுவதற்காக சாதியை பயன்படுத்துவது, தங்களை மற்றவர்களைவிட உயர்ந்தவர்களாக பேணிக்கொள்வதற்காக சாதியை பயன்படுத்துவது போன்ற பண்புகள் இன்றுவரை இவர்களிடத்தே இருந்தாலும்கூட, இந்த நவீன காலத்தில் பொதுவெளியில் முன்னரைப்போல் சாதிப்பெருமை பேசினால் கிளம்பும் எதிர்ப்புக்களை சமாளிக்க கடினம் என்பதாலும்கூட தற்போதெல்லாம் சற்று அடக்கியே வாசிக்கிறார்கள் என்றுகூட சொல்லலாம் . சாதிய மனோநிலை இன்றுவரை இருந்தாலும் அதுபற்றி பேசுவதன் வீரியம் குறைந்திருக்கின்றதெனலாம்.

index.php