Blog Page 22

இலங்கையில் வாழ்வது எப்படி? நீங்களும் சர்வைவர்தான்.

கொரோனா, ஊரடங்கு, பயணக்கட்டுபாடு, பொருட்கள் தட்டுபாடு, விலையுயர்வு இவையெல்லாம் இலங்கைக்கு ஒன்றும் புதிதில்லை. நாளுக்கு நாள் பொருட்கள் விலையேற்றம், தட்டுபாடு என்றெல்லாம் தகவல்கள் வெளியாகிவர மக்கள் இலங்கையில் வாழவே பீதியடைகின்றனர். இவ் இக்கட்டான சூழ்நிலையில் எப்படி வாழ்க்கை நடத்துவது என்று சிலருக்கு குழப்பம். அதிலும் உஷாரானவர்கள் தம் பெட்டி படுக்கைகள் எல்லாம் கட்டிக்கொண்டு நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் செல்கின்றனர். அப்படி செல்பவர்கள் பிழைத்துக்கொள்கின்றனர். அப்படியென்றால் நம் நிலைமை? இது போன்ற நிலைமைகளுக்கு காரணம் யார்?
ஓட்டு போட்ட நாங்களா? வெற்றி பெற்ற அரசாங்கமா? அல்லது இந்த ஒட்டுமொத்த சமுதாயமா? இதைக் கேட்டவுடன் சிலருக்கு மனக்குமுறல்களும் தோன்றும். இலங்கையின் நிலை தான் என்ன? இதை கேட்கும் போது எனக்கு ஒரு மீம் (meme) நினைவிற்கு வருகிறது.

“கொரோனா வந்ததால்
பள்ளியில்லை, படிப்பில்லை,
படித்தபின் வேலையில்லை,
வேலையிருந்தால் சம்பளமில்லை,
சம்பளம் கிடைத்தால் கையில் காசில்லை,
காசிருந்தும் வாங்க பொருளில்லை,
சமைக்க கேஸ் இல்லை,
கறிக்கு மஞ்சள் இல்லை,
சமையலுக்கு அரிசி இல்லை,
சாப்பிட வழியில்லை,
தேநீர் அருந்த பால்மா இல்லை,
தேவையிருந்தும் பெற்றோல் இல்லை,
பெற்றோல் வாங்க டொலர் இல்லை,
கடன் கேட்க நாடுகளுமில்லை,
நம் நாட்டுக்கே கடன் தொல்லை
என்னடா ஆச்சு நம்ம நாட்டுக்கு?
நாட்ட சிங்கப்பூராக்குவனு நெனச்சி ஓட்டு போட்டா கடைசியில சிங்கிள் டீக்கு கூட வழியில்லாம ஆக்கிபுட்டிங்களே..”

கேட்கவே சிரிப்பாக இருந்தாலும் சிந்திக்கவேண்டிய விடயம்தான். அபிவிருத்தியடைந்து வரும் நாடாக உருமாறி வரும் நம் நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகளால் மக்கள் மனமுடைந்துபோகின்றனர். ஏறி வரும் விலைவாசி காரணமாக செய்வதறியாது தடுமாறுகின்றனர். வரவு குறையவே செலவு அதிகரிக்கிறது. போக போக விலைவாசியும் ஏறிக்கொண்டே போகிறது. இதற்கு தீர்வு தான் என்ன? என்பதை பற்றி யோசிப்போம். இத்தகைய சூழ்நிலைகளில் இலங்கையில் எவ்வாறு வாழ்வது என்பது பற்றி அறிந்துகொள்ளவேண்டும். இதில் அரசாங்கத்தின் மீதோ சமுதாயத்தின் மீதோ யார் மீதும் பழிபோட்டும் நடக்கப்போவதொன்றுமில்லை. இவற்றை நன்கு அறிந்துகொண்டு தேவைக்கேற்ப நாம் நம்மை மாற்றிக்கொள்வதே சிறந்தது. உதாரணத்திற்கு பால்மா இல்லையென்றால் ப்ளேன்டீ அல்லது க்ரீன் டீ அல்லது இம்யுனிடி டீ இவற்றை அருந்தப்பழகுங்கள். ஒருபுறம் இவை உடலுக்கு ஆரோக்கியத்தையளித்து மறுபுறம் இந்த பால்மா பிரச்சனைக்கும் உங்களுக்கு தீர்வாக அமையும். பெற்றோல் தட்டுபாடு இருப்பதன் காரணமாக நீங்கள் முடிந்தவரையில் பொதுபோக்குவரத்து வசதியை பயன்படுத்துவது உங்கள் பயணத்தையும் இலகுவாக்கும். பணத்தையும் மிச்சப்படுத்தும். இப்போது அனைத்து வீடுகளிலும் இருக்கும் பிரச்சளை கேஸ் பிரச்சனை. லீற்றருக்கு ஆயிரம் கணக்கில் விலை எகிறிக்கொண்டு போகிறது. கேஸ் தீர்ந்தால் என்ன வீடுகளில் வேறு அடுப்புகளே இல்லையா? கேஸ் விலை குறையும் வரை மண்ணெண்ணெய் அடுப்பு, விறகடுப்பு, மின்சார அடுப்பு போன்றவற்றை பயன்படுத்தலாம்.

இன்று பலர் படித்துவிட்டு வேலையில்லா பட்டதாரிகளாகவே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். வேலை தேடி அலைந்தே பலருக்கு பாதி முடியும் பழுத்துவிட்டிருக்கும். வேலையில்லாமல் வாழ்வை எவ்வாறு கொண்டுசெல்வது. இதில் சிலர் சாமர்த்தியசாலிகள் வீட்டிலிருந்து சிறு சிறு சொந்ததொழில்கள் செய்கின்றனர். இதன் மூலம் வேலைகிடைக்கும் வரை அவர்களுக்கு வீட்டிலிருந்தே வருமானம் கிடைக்கிறது. Freelancer ஆக சிலர் வேலை செய்கின்றனர். ஊரடங்கு காலத்திலும் கூட அவர்களால் வருமானமீட்டமுடியும். இதுபோன்று நீங்களும் முயற்சிக்கலாம். இப்பொழுதெல்லாம் வெளிநாடு செல்ல எக்கச்செக்கமான விசாக்கள் குவிகின்றன. இங்கு இருப்பதைவிட இங்கு படித்துவிட்டு வெளிநாடுகளுக்குச்சென்று குடியேறுவதில் நிறைய பேர் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படியே எல்லோரும் வெளிநாடுகளுக்குச் சென்றால் நம் நாட்டு நிலை என்ன? இங்கிருந்துகொண்டே நம் அறிவுத்திறமையும் தூரநோக்கு சிந்தனையும் கொண்டு நாட்டை சிறந்தமுறையில் கட்டியெழுப்பவேண்டும். கல்வி கற்று அதன் யுத்திகளை நம் நாட்டிலும் பயன்படுத்தவேண்டும். இலங்கையில் ரசிக்கக்கூடிய, அனுபவித்து மகிழக்கூடிய விடயங்கள் எண்ணிலடங்கா. அவற்றை பற்றி அறியாததால் தான் இப்படி சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ எனும் உயர்ந்த கூற்று உணர்த்தும் உண்மைபோல மாற்றத்தை எதிர்ப்பார்த்து காத்திருப்போம்
நாளை நமக்காக
நம் நாட்டின் தலைமுறைக்காக..!

கொழும்பிலுள்ள Buffet – 2021

ஒரு  இலங்கையரிடம் உங்கள் வாழ்க்கையில் பிடித்த மற்றும் ரசித்த விடயங்கள் என்னவென்று கேட்டால் உணவு, சரக்குவகைகள், பைலா பாடல்கள் என்ற வெளிப்படையான பதில்கள் சட்டென்று கிடைத்துவிடும். எவ்வித கலக்கமுமின்றி இவை மூன்றும் வரிசைப்படுத்தப்படுகின்றது.

இயற்கையின் மூலமே உயிரினங்கள் காலை உணவு முதல் இரவு உணவு வரை அதிகபட்ச உணவை நுகர்கின்றன. அவற்றுள் காலை சிற்றுண்டிகள், மாலைநேர தின்பண்டங்கள் மற்றும் இனிப்புகள் அனைத்தும் உள்ளடங்கும். வித விதமான உணவுவகைகளை தேர்வு செய்து அதிகளவில் உட்கொள்ளவேண்டும் என்ற எமது மனப்பான்மைக்கு ஏற்றாற் போல் இலங்கையில் உருவாக்கப்படும் புஃபேக்கள்(BUFFET) மிகவும் பிரபலமானவை.

உங்கள் சிறந்த வாழ்க்கையை சுவாரஸ்யமாக அனுபவித்திடவும் புதுவித சுவைகளை ருசித்திடவும் உங்கள் வாழ்க்கை வழிகாட்டியாக திகழும் நாடியிலிருந்து, கொழும்பில் பிரசித்தி பெற்ற சிறந்த புஃபேக்கள் (BUFFET)என்ற பட்டியலை தொகுத்து வழங்க முடிவு செய்துள்ளோம். கீழே உள்ள பட்டியலிலிருந்து உங்களுக்கு பிடித்தவற்றை அல்லது நீங்கள் அனுபவித்த சிறந்த புஃபே (BUFFET)அனுபவத்தை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!

ஹாபர் கோர்ட் எட் கிங்ஸ்பெரி கொழும்பு (harbour Court at the Kingsbury Colombo) 

மது அருந்துவதற்கும், உணவருந்துவதற்கும் மிகச்சிறந்த இடங்களில் ஒன்று கிங்ஸ்பரி ஹோட்டல். இதற்கு சிறந்த எடுத்துகாட்டு அங்குள்ள ஹாபர் கோர்ட். வருகைத் தந்திருக்கும் விருந்தினர்களுக்கு முன்னால் புதிதாக சமைத்த உணவுகளை திரையரங்கு போல் காட்சிப்படுத்தி விருந்துண்ணலை புதியதொரு மறக்கமுடியாத அனுபவத்திற்கு இட்டுச்செல்கிறது.

பல்வேறு விதமான உணவு வகைகளுடன் கூடிய சர்வதேச புஃபே (BUFFET) போன்று நவீன மற்றும் அதிநவீன வடிவமைப்பில் ஒழுங்கு செய்து பார்ப்பவர் மனதை மகிழ்வித்து கண்களை கவர்ந்து வாயில் எச்சில் ஊறச்செய்வதையே ஹாபர் கோர்ட் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சர்வதேச இரவு உணவு: LKR 3,900 (திங்கள்-ஞாயிறு)

ஞாயிறு ப்ரஞ்ச்(காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்டது): LKR 7,200 (with unlimited bubbly), LKR 4,500 (without bubbly)

தொலைபேசி: 077108772

தி லகூன் எட் சினமன் க்ரேன்ட் (The Lagoon at Cinnamon Grand)

மிகவும் நுணுக்கமாக பலவிதமான பாணிகளில் சமைக்கப்பட்ட கடல் உணவுகளை சுவைக்கும் வாய்ப்பை யாரும் தவறவிடுவதில்லை. அவர்களின் ஆசிய உணவு வகைகளும் ஏனைய கண்டங்களின் சுவையான ஆகாரங்களும் உங்கள் சுவையரும்புகளைத் தூண்டும்.

சுவைமிக்க கடலுணவுகளை உண்ணும் அனுபவத்தைப் பெற்றிட அதிநவீனமாய் வடிவமைக்கப்பட்ட உட்புறத்தோற்றத்தோடு காட்சியளிக்கும் தி லகூனுனை ஒரு தடவையேனும் பார்வையிடுங்கள்.

மதிய உணவு: LKR 3,500 (ஞாயிறு மட்டும்)

தொலைபேசி: 0112 497 371

குறிப்பு: தி லகூனில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே புஃபே (BUFFET) உள்ளது, வாரத்தின் ஏனைய நாட்களில் அவர்களின் வழக்கமான மதிய உணவு மற்றும் இரவு உணவு தயாரிப்பிலிருந்து தேவையான உணவை ஆர்டர் செய்யலாம்.

ஃபிரான்ஸோ எட் வோட்டர்ஸ் எட்ஜ் (Pranzo at Waters Edge)

இத்தாலிய உணவுகளை ருசித்துப் பார்க்க விருப்பமுடையவரா நீங்கள்?. அப்போது நிச்சயம் ஒரு தடவை ஃபிரான்ஸோக்கு சென்று முயற்சித்துப் பாருங்கள். பத்தரமுல்லை பிரதேசத்திலுள்ள தியவன்னா ஓயாவின் நீர்நிலையில்  அமைந்துள்ள இது உண்மையான இத்தாலிய சுவையனுபவத்தை உங்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இங்குள்ள சுவையான பாஸ்தா மற்றும் பீஸ்ஸா உணவுவகைகள் நாக்கிற்கும் பார்வைக்கும் நிச்சயம் விருந்தளிக்கும். வாட்டர்ஸ் எட்ஜ் அதன் நேர்த்தியான சேவை மூலமும் வசதியான மற்றும் கவர்ச்சிகரமான உட்புற தோற்றத்தையும் கொண்டமைந்து எப்போதும் மிகவும் ருசியான சமையக்கலையை கொண்டிருப்பதை உணர்த்துகின்றது. எனவே அடுத்தமுறை உங்கள் அன்புக்குரியவர்களை ஒரு சுவையான இத்தாலிய உணவகத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பினால், எங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

ப்ரஞ்ச்(காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்டது): LKR 3950 (ஞாயிற்றுக்கிழமைகளில்)

தொலைபேசி: 0112 863 863

கார்ட்டன்ஸ் ஆர்க் (Garton’s Ark) 

மது மற்றும் உணவருந்துவதற்கான ஒரு புதிய வழியை அனுபவித்து மகிழ்ந்திட கார்டன் ஆர்க்கிற்கு வாருங்கள். நாவலயில் அமைந்துள்ள நகர்ப்புற குளிர்நிலப் பூங்காவை அண்மித்திருக்கும் தியவன்னா ஓயாவின் அமைதியான நீரில் நீங்கள் பயணிக்கும் போது, சர்வதேச உணவு வகைகளுடன் பலவிதமான ருசியான உணவுகளை வழங்கி உங்கள் சுவை மொட்டுகளை கவர்ந்திழுப்பதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அதிநவீன வடிவமைப்புகளுடன்

அதிநவீன உட்புற தோற்றத்தோடு வடிவமைக்கப்பட்ட இடத்தில் நேரடி பொழுதுபோக்கு அம்சங்களோடு இணைந்து கவர்ச்சியான இசையோடு  கார்டன் ஆர்க் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மறக்க முடியாத ஒரு விருந்துண்ணல் அனுபவத்தை வழங்கும்.

இரவு உணவு: LKR 2,500 (செவ்வாய்)

இரவு உணவு: LKR 3,200 (வெள்ளி – சனிக்கிழமை)

தொலைபேசி: 0112 818 633

க்ரேஸ் கிச்சன் எட் ஹில்டன்  (Graze Kitchen at Hilton)

வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் அற்புதமான உள்ளுர் மற்றும் சர்வதேச உணவு வகைகளை ருசித்திட ஹில்டனில் உள்ள புஃபே  (BUFFET) ஒரு புதுமையான மற்றும் சுவாரஸ்யமான அனுபவத்தை பெற்றுத்தரும் என்பது உறுதி.உங்களது வெறித்தனமான பசியைத் தீர்த்திடும்  சுவை மிகுந்த புதிய கடல் உணவுகள் மற்றும் இறைச்சிகள் போன்ற நீங்கள் விரும்பும் உணவுகளை வழங்கிவருகிறது ஹில்டனில் உள்ள கிரேஸ் கிச்சன.;

உயர் தேநீர்: LKR 3,288 (சனிக்கிழமை, போயா நாட்கள் மற்றும் வணிக விடுமுறை நாட்கள்)

இரவு உணவு: LKR 4,388 (with mocktails), LKR 4,888 (with cocktails)

தொலைபேசி: 0112 492 492

நுக கம எட் சினமன் க்ரேன்ட் (Nuga Gama at Cinnamon Grand)

நுக கம அல்லது ஆலமர கிராமம் என்பது ஒரு தனித்துவமான இலங்கை உணவகமாகும். இது 200 ஆண்டுகளுக்கும் பழமையான ஆலமரத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய சாயலுடன் அமைந்த குடிசைகள், பாரம்பரியமாக உடையணிந்த பணியாளர்களின் சேவையேடு வாரத்தின் எல்லா நாட்களிலும் சுவையான இலங்கையுணவு புஃபே(BUFFET) ஐ வழங்கிவருகிறது. வார நாட்களில் இரவு உணவு புஃபே(BUFFET) சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

இரவு உணவு: LKR 2,890 (வியாழன், வெள்ளி மற்றும் சனி)

தொலைபேசி: 0112 497 468

தி டைனிங்  ரூம் எட் சினமன் லேக்சைட் (The Dining Room at Cinnamon Lakeside)

மற்ற உணவகங்களைப் போலவே , சினமன் லேக்சைட் உள்ளூர் புஃபே(BUFFET)யும் பல உணவகங்களுக்கு போட்டியாளராக உள்ளது. புஃபே(BUFFET) உணவகமான தி டைனிங் ரூமில் பன்முகத்தன்மையை விரும்புவோருக்கும் விருந்தினர்களுக்கும் சுவையான இறைச்சிகள், வாயில் எச்சில் ஊறவைக்கும் இனிப்பு வகைகள் மற்றும் சர்வதேச உணவு வகைகளையும் வழங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க பெய்ரா ஏரியின் ஓரத்தில் ஒரு இனிமையான உலாவை நீங்கள் மேற்கொள்ளும் போது இரவு உணவிற்கு முன்னரே உங்கள் பசியை அதிகரிக்கும்.

மதிய உணவு: LKR 3,100 (திங்கள் – ஞாயிறு)

இரவு உணவு: LKR 3,500 (திங்கள் – ஞாயிறு)

தொலைபேசி: 0112 491 930

க்ரேன்ட் ஒரியன்டல் ஹொட்டல் (Grand Oriental Hotel)

கொழும்பு துறைமுகத்தின் பிரமிக்க வைக்கும் கடற்கரை காட்சிகளுடன், கிராண்ட் ஓரியண்டல் ஹொட்டலில் உள்ள ஹார்பர் அறை ஒரு ராஜாவுக்கு வழங்கப்படும் விருந்துபசார சூழலைக் கொண்டிருக்கும். அதற்கேற்றாற் போலவே பிரத்தியேகமான உணவுவகைகளும் அடங்கியிருக்கும்.

எந்தவொரு இடையூறுமில்லாமல் மகிழ்ச்சியைத் தேடுபவர்களுக்கு மனதையும், நாவையும் கவரும் வகை இறைச்சிகள் மற்றும் பிரம்மாண்ட உணவுகளையும் ருசிக்க விரும்பும் அனைவருக்கும் இவ் ஹோட்டல் ஒரு சிறந்த தேர்வாகும்.

இரவு உணவு: LKR 2,750 (வெள்ளி – சனிக்கிழமை)

தொலைபேசி: 0112 320 320

AYU at Movenpick

சர்வதேச சொகுசு ஹொட்டல் போன்றதொரு சிறந்த அனுபவத்தை வழங்குவதில்

AYU at Movenpickஇன் யுலுரு உணவகம் உறுதி செய்கிறது. தற்கால உணவுகளால் ஈர்க்கப்பட்டு அதன் வடிவமைப்பு மற்றும் அமைப்பையும் ஏற்று நாள் முழுவதும் வித வித  உணவுகளை இவ் உணவகம்  வழங்குகிறது. இந்த புஃபேவை (BUFFET); தொடங்குவதற்கு முன், நீங்கள் ஒரு உணவைத் தவிர்க்க வேண்டும் அல்லது இரண்டு முறை உணவைத் தவிர்க்க வேண்டும் அல்லது 5m ஓட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்று இவ்  எழுத்தாளர் பரிந்துரை செய்கிறார். வெறித்தனமான பசியின்மை. இல்லையெனில் அவர்கள் பரிமாறும் கரத்திலிருந்து  இனிப்பு வரை அனைத்தையும் நீங்கள் சுவைப்பதை உறுதிசெய்யும்.கடல் உணவு பிரியர்கள், கடல் உணவு புஃபேயில் (BUFFET) தங்களுக்கு பிடித்த  சிறந்தவற்றை தெரிவு செய்வது  உறுதி. மேலும் சன்டே ஃபேமிலி லஞ்ச் புஃபே (BUFFET) பத்து சமையல் நிலையங்களுடன்  உங்களின் உணவுத் தரத்தை உயர்த்தும் அற்புதமான விருந்தை வழங்குகின்றது.

கடலுணவுடனான இரவுணவு: LKR 3,750 (சனிக்கிழமை).

குடும்ப மதிய உணவு: LKR 3,350 (ஞாயிறு).

வரம்பற்ற பானத்தொகுப்பு: LKR 4,100

தொலைபேசி: 0117 450 450

ஃப்ளோ எட் ஹில்டன் கொழும்பு ரெசிடன்ஸ் (Flow at Hilton Colombo Residences)

உலகம் முழுவதிலுமிருந்து அற்புதமான உணவு வகைகளை வழங்கும், ஃப்ளோ எட் ஹில்டன் கொழும்பு ரெசிடென்ஸ் ஒரு முழுமையான விருந்துபசாரமாகும். அதன் விருந்தினர்களுக்கு தனிப்பட்ட உணவுப் பகுதிகள் மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மெனுவையும் வழங்குகிறது, இந்த உணவகம் ஒவ்வொரு விசேட நிகழ்விற்கும்  பொருத்தமான  இடமாகும். அதன் நன்கு தயாரிக்கப்பட்ட புஃபே(BUFFET) கட்டணங்களில் ஏதேனும் ஒன்றைப் பார்வையிடுவதை கூட  நீங்கள் தவறிவிடுவீர்கள்.

காலை உணவு: LKR 2,150 (திங்கள் – ஞாயிறு)

மதிய உணவு: LKR 2,800 (வியாழன் – வெள்ளி)

இரவு உணவு: LKR 3,150 (வெள்ளிக்கிழமை – இத்தாலிய உணவு வகைகள்), சனிக்கிழமை (சர்வதேச உணவு வகைகள்)

தொலைபேசி: 0115 344 644

போர்ட்ஸ் ஒஃப் கோல் எட் தாஜ்சமுத்ரா (Ports of Call at Taj Samudra)

கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா அதன் போர்ட்ஸ் ஒஃப் கோல் உணவகத்தில்,  எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறது. அதன் சர்வதேச புஃபே(BUFFET) நிச்சயமாக உங்களுக்கு ஏமாற்றமளிக்காது.  ஏனெனில்  விருந்தினர்கள் இறைச்சிகள், சாலட்டுகள் மற்றும் நீங்கள் நினைக்கும் எல்லாமே நன்கு  பராமரிப்பு செய்யப்படுகின்றன. நீங்கள் அனைத்து திரவங்களையும் தவிர்த்துவிட்டு, உங்கள் உணவை வேகமாக்கி, அவற்றின் முழு அளவிலான வாயில் எச்சில் ஊறவைக்கும் உணவு வகைகளை ஒரு முறை  முயற்சி செய்து பாருங்கள்.  ஒரு விருந்துக்கு  மதிப்புள்ள விருந்தாக வெள்ளிக்கிழமை இரவு புஃபேவை(BUFFET) உணவகம் பரிந்துரைக்கிறது!

இரவு உணவு: LKR 3,750 (திங்கள் – ஞாயிறு)

ஞாயிறு ப்ருஞ்ச்: LKR 4,200 (வழக்கமானது), LKR 4,900 (வரம்பற்ற பீர்), LKR 6,000 (அன்லிமிடெட் ஸ்பார்க்லிங்), LKR 5,700 (150 மில்லி ஜின்)

தொலைபேசி: 0112 446 622

கலதாரியின் காஃபி ஷொப் (Coffee Shop at Galadari)

ருசியான புஃபேக்களை (BUFFET)வழங்கும் உணவகத்திற்கு காஃபி ஷாப் என்றதொரு குழப்பமான பெயராக இருந்தாலும், நீங்கள் கலதாரியில் உணவருந்த விரும்பினால், அங்குதான் செல்ல வேண்டும்! உணவகம் ஒரு லா கார்டே மெனுவைக் கொண்டுள்ளது, மேலும் ஆல்-அவுட் விருந்துக்கு சற்று குறைவான இடவசதி உள்ளவர்களுக்கான அற்புதமான ஆசிய சிறப்பு உணவுகள் பிரத்திகேயமாக உள்ளன.

மதிய உணவு: LKR 2,220 (சனி – ஞாயிறு)

இரவு உணவு: LKR 3,060 (திங்கள் – வெள்ளி)

தொலைபேசி: 0112 544 544

த  கார்டெனியா  காஃபி ஷொப், ரமடா கொழும்பு(The Gardenia Coffee Shop, Ramada Colombo)

காஃபி ஷொப் கட்டணத்தை விட அதிகமான சலுகைகளை வழங்கும் கார்டேனியா என்பது ரமடா கொழும்பின் புஃபே (BUFFET)உணவகமாகும், இது  பரட்டா மற்றும் சிக்கன் கறி போன்ற அதிரடி உணவுகளைக் கொண்டுள்ளது. அவர்கள் இலங்கை உணவு வகைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மற்றும் ஷிஷா சேவையைப் பற்றி மிகவும் ஆர்வமாகவும் உள்ளனர்.

இரவு உணவு: LKR 3,200 (வெள்ளிக்கிழமைகளில்)

தொலைபேசி: 0112 422 001

சன்டே  கார்வேரி எட் சியர்ஸ் சினமன்  கிராண்ட்(Sunday Carvery at Cheers, Cinnamon Grand)

சன்டே  கார்வேரி எட் சியர்ஸ் சினமன்  கிராண்ட் இறைச்சிகளை சமைப்பதை ஸ்டைலாக செய்கிறது. வறுத்த இறைச்சியின் மென்மையான வெட்டுக்கள், புதிதாகப் பதப்படுத்தப்பட்ட பல்வேறு காய்கறிகள், யார்க்ஷயர் புடிங் மற்றும் ஒரு உயரமான கிளாஸ் பானம் போன்றவை சண்டே கார்வேரியின் சிறப்பம்சங்களில் சிலவற்றாகும். நீங்கள் இறைச்சி பிரியர்கள் என்றால் இது உங்களுக்கு  ஏற்ற உணவகமாகும்.

மதிய உணவு: LKR 3,200 (திங்கள் – சனி)

ப்ரன்ச்: LKR 4,500 (ஞாயிறு)

ஜெட்விங் கொழும்பு 07 (Jetwing Colombo 07)

கொழும்பில் நீங்கள் ருசிக்கக்கூடிய மிகச்சிறந்த உணவு மற்றும் பானங்கள் சிலவற்றிற்கு உங்களை வரவேற்கும் புதுப்பாணியில் கொழும்பு 07 ஜெட்விங் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் சுவை மொட்டுகளை  மகிழ்விக்கும் சிறந்த இனிப்புகள், காரங்கள் மற்றும் பானங்களையும் தயாரித்து வழங்குகிறது.

ஹாப்பர் நைட் புஃபே(Hopper night Buffet:): LKR 1,200

உயர் தேநீர்: LKR 1,200

சென்டரல் ரெஸ்டூயுரன்ட்  – ஷங்ரி-லா கொழும்பு(Central Restaurant – Shangri-La Colombo)

உலகளாவிய உணவுத் தேடலை நீங்கள் அனுபவிக்கக்கூடிய வலுவான சுவைகளுடன் கூடிய சர்வதேச புஃபேவை (BUFFET)இவ் உணவகம் வழங்குகிறது. சென்ட்ரல் உணவகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள நேர்த்தியான மலர் அலங்காரம் மற்றும் முற்பகுதி நீர்ப்பாசனம் தரும் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும்   கண்களுக்கும் விருந்தளித்து  அன்னத்திற்கும் ஒரு விருந்தளிக்கிறது.

மதிய உணவு: 4,600 (சனிக்கிழமைகளில்)

டின்னர் புஃபே(BUFFET): 4,600 (புதன் – ஞாயிறு)

ஞாயிறு ப்ரன்ச்: LKR 4,750

தொலைபேசி: 0117 888 288

ப்ளேட்ஸ் எட் சினமன் க்ரான்ட் (Plates at Cinnamon Grand)

இவ் உணவகம்  உங்களை  பல  நாட்டு சுவைகளையும் பல சமையல் அனுபவத்திற்கும் உங்களை கொண்டுச் செல்கிறது. ப்ளேட்ஸில், பல சர்வதேச உணவுகளை நீங்கள் அனுபவிக்கும் போது, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய இனிமையான தருணமும் ஒற்றுமையையும்  ஏற்படுகிறது.

மதிய உணவு புஃபே: LKR 3,300 (திங்கள் – சனி)

இரவு உணவு புஃபே: 4,000 ரூபாய் (திங்கள் – சனி)

ஞாயிறு ப்ரன்ச்: 4,500 ரூபாய்

தொலைபேசி:0112 497 361

Dexter | Universal Boy Friend | Short Film

ஒரு இளம் ஆணும் பெண்ணும் முதன் முறையாக ஒரு உணவகத்தில் சந்தித்துக் கொள்கின்றனர்.  அந்த இளைஞன் அந்த பெண்ணுக்கு ஒரு வருடகாலமாகப் பரிசுப்பொருட்களை அனுப்பி அவளை வியப்பில் ஆழ்த்தி வந்திருக்கிறான்.  ஒரு வழியாக இன்று தான் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்கின்றனர்.

அந்த பெண்ணுக்கு அவனைப் பற்றி எதுவும் தெரியாது இருக்க அந்த இளைஞன் அவனைப் பற்றி சொல்லும் விஷயத்தை கேட்டு அந்த பெண் அதிர்ச்சிக்குள்ளாகிறாள். அவன்  யார்? எங்கிருந்து வந்தவன்? அவள் அந்த பெண்ணிடம் என்ன சொன்னான்? அந்த பெண் அவனை ஏற்றுக்கொண்டாளா இல்லையா ? என்பது தான் மீதிக் கதை.

கதையின் பலமாக திரைக்கதையில் கையாளப்பட்டுள்ள திகில் காட்சிகளை சொல்லலாம்.  ஒரு பக்கம் காதலர்களின் சந்திப்பு  காட்டப்பட்டுக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் காட்டப்படும் அந்த வேற்றுகிரக வாசியின் காட்சிகள் எல்லாம் ஒரு வித திகில் உணர்வை ஏற்படுத்துகின்றன. அவன் யார்? என்ன நடக்கிறது என்ற கேள்வி படத்தின் இறுதி வரை பார்வையாளர்களிடம் இருந்துக் கொண்டே இருக்கிறது. குறைவான வசனங்களுடன் இரவு ஒளியில் அந்த காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டு உள்ளது பாராட்டத்தக்கது.

இது வித்தியசாமான முயற்சி என்ற போதும் கதையில் கூடுதல் தெளிவும், அழுத்தமும் இருந்திருந்தால் இன்னும் சுவாரஷ்யமாக இருந்திருக்கும்.   அத்தோடு கதையை சொல்ல இன்னும் குறைவான நேரத்தை எடுத்துக்கொண்டிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என தொழிநுட்பத்திலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. படத்தின் டப்பிங் மேலும் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.

தனது அடுத்த குறும்படத்தை மேலும் திறப்பாக செய்ய இயக்குனர் இலங்கோ பிரகலாதன் மற்றும் அவரது குழுவிற்கு வாழ்த்துக்கள்.

 

நாடி Verdict – 55/100

Video Link – https://youtu.be/DM44FW9CKJM

தனிப்பட்ட டிரஸ்ஸிங் சென்சின் உண்மைகள் மற்றும் தந்திரங்கள்

அனைவர் மனதிலுமே தோன்றும் ஓர் எண்ணம் தான் “அவர் பார்க்க கவர்ச்சிகரமாக உள்ளார் அவர் அணிந்திருக்கும் ஆடை, ஆபரணங்கள், தோற்றம், சிகை அலங்காரம் போன்ற குறிப்பிட்ட சில செயற்கை தோற்றங்கள் மிகவும் கவரும் விதமாக உள்ளது” என்பதே.

இவ்வெண்ணம் ஆண் பெண் இருபாலருக்கும் சாதாரணமாக தோன்ற கூடியவையே.
இந்த எண்ணம் மூலம் அது யோசனையாக மாறி “நான் அந்தளவில் அழகாக இல்லை எனக்கு பல விடையங்கள் பொருந்தவில்லை நான் சற்று மந்த நிலையிலேயே காட்சி அளிக்கிறேன்? ” என உங்கள் மனதைரியம் பாதிக்க படலாம்.

உண்மை அதுவல்ல. யாரென்றாலும் புது விதமாகவும் கவரும் வகையிலும் தோற்றமளிக்க முடியும். சில தந்திரங்கள் மற்றும் குறிப்புகள் மற்றுமே தேவை.

முதல் படியாக.. ஆடைகளை எடுத்துக்கொண்டால், உங்கள் நிறத்தின் அடிப்படையிலோ அல்லது உடல் பருமன், வடிவம், போன்றவற்றின் அடிப்படையிலோ
ஆடை அணிய அவசியம் இல்லை. மாற்றத்தை கொண்டு வாருங்கள்! எந்த ஒரு உடையுமே உங்கள் மனதை பிடிக்க வைக்க வேண்டுமே ஒழிய கருத்துக்களையோ கொள்கை அடிப்படையிலோ இருப்பது முக்கியமில்லை.

நமக்கு இது பொருந்தாது என பிறர் சொல்லி பொருட்படுத்தாமல் தங்கள் மனதுக்கே அவ்வாறு தோன்றும் வரையில் உங்கள் நிறம், வடிவம், பருமன் போன்றவற்றை கவனித்து ஆடை அணியாதீர்கள்.

ஆடை கொள்வனவு செய்யும் பொழுதேல்லாம் முன்பை விட வித்தியாசமான ஆடையை தேர்வு செய்யுங்கள்.ஒரே வழக்கமான ஆடை வகையில் இருந்து வெளிப்பட விதமாக தேர்வு செய்யுங்கள். அனைத்து நிற ஆடைகளையும் முயற்சி செய்து பாருங்கள்.நிறத்திலிருந்து வெட்கப்பட வேண்டாம். சாதாரண(casual wear) உடையாக இருந்தாலும் சரி அல்லது (formal wear) இருந்தாலும் சரி, கொஞ்சம் வண்ணத்தில் ஈடுபடுங்கள். “பெரும்பாலான ஆண்கள் அநியாயமாக அதைப் பற்றி பயப்படுகிறார்கள் – அவர்கள் கடற்படை அல்லது சாம்பல் இல்லாத எதையும் அணிய மறுக்கிறார்கள் .

இறுக்கமான ஆடை அல்லது பாகி ஆடைகள் இரண்டையுமே முயற்சி செய்யுங்கள்.
திருவிழாக்கள் அல்லது தனி பட்ட நிகழ்வுகளுக்கோ செல்லும் பொழுது, சிறு வகையிலாவது வித்தியாசத்தை உங்கள் ஆடை மற்றும் ஆபரணங்களில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு மாற்றம் காணுவதன் மூலம் நீங்கள் தனித்துவமாக காட்சியளிப்பது மட்டுமின்றி உங்களுக்கு பல வித ஆடை முறைகள் பொருந்துகின்றது என்பதை நீங்களே உணர்ந்துக்கொள்வீர்கள். அவை மிக பெரிய மனதைரியத்தை தரும்.

அது போல முத்திரையிடப்பட்ட (பிராண்டட்) ஆடைகள் மட்டுமே பெருமை, அழகு என கருதுவது முற்றிலும் பிழை. பல நேரத்தில் பிராண்டட் அல்லாத சாதாரண விலை அல்லது விலை குறைந்த ஆடையாக கூட இருக்கட்டும். அவை கூட பொலிவை அளிக்கும். உங்களை சாதாரணமாகவும் வசீகரமாகவும் தோற்றமளிக்கலாம்.

இருப்பினும் சில ஆபரணங்களில் தாங்கள் செலவு செய்வது தவறல்ல. Shoe, watches கிளாஸ்ஸஸ் ( glasses) போன்றவற்றில் தரம் நிறைந்தவற்றை தேர்ந்து எடுப்பதில் சேதாரம் காரணமாக வீண் செலவை குறைக்கலாம்.

ஒரு வாட்ச்சில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்!

“ஒரு கடிகாரம் ஒரு கலைப்பொருளைப் போன்றது, கடிகாரங்கள் தனிப்பட்டவை, ஆனால் நீங்கள் நடைமுறையில் இருக்க வேண்டும். இருப்பினும், ஒரு கடிகாரம் இன்னும் உங்களுக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். உங்கள் மணிக்கட்டுடன் ஒப்பிடும்போது அளவு மற்றும் ஆழத்தின் அடிப்படையில் இது வசதியாகவும் சரியாகவும் இருக்க வேண்டும்.

கண்ணாடிகளைத் தவிர்க்க வேண்டாம்!
உங்களுக்கான சரியான கண்ணாடியைக் கண்டுபிடிக்க நேரத்தைச் செலவிடுங்கள். “அடுத்த மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு ஒரு ஜோடியைத் தேர்ந்தெடுக்க மக்கள் சராசரியாக ஏழு நிமிடங்கள் செலவிடுகிறார்கள். மோசமான தேர்வு மற்றும் மோசமான பொருத்தம் காரணமாக பலர் தங்கள் கண்ணாடிகளை வெறுக்க கற்றுக்கொள்கிறார்கள். உங்கள் முகத்தின் வடிவத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, உங்கள் புருவ வடிவத்துடனான பிரேம்களின்(frames) தொடர்பின் மேல் வரியைக் கருத்தில் கொண்டு, நீங்கள் நன்றாக உணருவதை வாங்கவும். மலிவான பிரேம்களை வாங்குவதிலும், விலையுயர்ந்த லென்ஸ்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதிலும் எந்தப் பயனும் இல்லை.

தித்திக்கும் தீபாவளி..!

இந்து மதத்தின் பழமையான பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அதாவது வாழ்வில் இருளை நீக்கி ஒளிப்பிரகாசத்தை கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இப் பண்டிகை இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படுவதோடு இலங்கை, நேபாளம், லண்டன் என தமிழ் மக்கள் வாழும் பல நாடுகளிலும வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளிக் கொண்டாடப்படுவதற்கான நோக்கமாக பல காரணங்களை புராணக்கதைகள் கூறுகின்றன. அதில் சிலவற்றை பார்ப்போம்.

ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த அந் நாளை மக்கள் கொண்டாடிய நாளாகவும், இராமயணத்தில் இராமபிரான் இராவணனை அழித்துவிட்டு அயோத்திக்கு வரும்போது அங்கிருந்த மக்கள் தீபமேற்றி வரவேற்ற நாளாகவும், கந்த புராணத்தில் சிவபெருமான் சக்தியை தன் அங்கத்தில் பாதியாய் ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவெடுத்த நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது என்ற பல இதிகாச கதைகள் உள்ளன.

அதிகாலையில் துயில் விட்டெழுந்து, எண்ணெய்க் குளியல் செய்து புத்தாடைகள் அணிந்து ஆலயவழிபாடு செய்து இனிப்புகளையும் பலகாரங்களையும் அயல்வீட்டாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்து தீபாவளியை கொண்டாடுகின்றனர் மக்கள். இதில் முக்கியமாக வீட்டு முற்றங்களில் தீபங்களை வரிசையாக ஏற்றி தீபாவளியை கொண்டாடும் நிகழ்வும் இடம்பெறும். புதிதாகத் திருமணமாகிய தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளி, தலைதீபாவளி என்று அழைக்கப்படுகிறது.

மக்கள் மனதிலுள்ள தீயவை எல்லாம் அகன்று, நன்மை விளைந்து உலக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ பிரார்த்தித்து இவ் வருட தீபாவளியை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்திடுவோம்.

அனைவருக்கும் நாடியின் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துகள்..!

ஜூலியின் கொலை

ஜூலி இரத்த வெள்ளத்தில் கிடந்ததை முதலில் பார்த்தது பார்த்தீபன் தான். அவள் முதுகில் குத்தப்பட்டு செங்குத்தாக நின்றுக்கொண்டிருந்த கத்தியை பார்த்ததும் அவனது முதுகு தண்டு ஜில்லிட்டது. அலறி அடித்துக்கொண்டு அவளது அறையில் இருந்து வெளியே வந்தான்.

அவனால் எதையுமே சிந்திக்க முடியவில்லை. அந்த வீட்டில் அவர்களோடு தங்கி இருந்த மற்ற நண்பர்களுக்கு கால் அடித்தான். வரன், கல்பனா, ஆதில் ஆகிய யாருமே காலை எடுக்கவில்லை. ஜூலியின் காதலன் ரொஷானின் நம்பர் கூட அவனிடம் இருந்தது ஆனால் அவன் அந்த முயற்சியில் இறங்கவில்லை.

அந்த வீட்டுக்குள்ளே இருக்கவே அவனுக்கு பயமாக இருந்தது. வீட்டை விட்டு வெளியே வந்தான். நேரம் மாலை ஆறு மணியை எட்டி இருக்க கண்டியின் அந்த பிரதேசத்தை சுற்றி குளிர் மெல்ல அதிகரித்துக்கொண்டு இருந்தது. ஏன் என்று தெரியாமல் பார்த்தியின் கண்கள் கலங்கின. ஜூலியின் அந்த உடல் அவனது நினைவுகளில் வந்துக்கொண்டே இருந்தது.

ஜூலி ஒரு யூ டியூப் பிரபலம். அடிப்படையில் அவள் ஒரு மாடல். அவளது அழகிலும் கவர்ச்சியான உடையிலும் பார்க்கும் இளைஞர்களை கொள்ளையடித்திருந்தாள். இலங்கையின் பல்வேறு இடங்களுக்கு சென்று அந்த இடத்தின் உணவு வகைகளை உண்டு அதை தனது யூ டியூப் சானலில் பதிவிடுவது தான் அவளது வேலை. அவள் சாப்பிடும் உணவை தாண்டி அவளை பார்க்க என ஒரு கூட்டம் அவளது சேனலில் அலை மோதியது.

இந்த முறை கண்டியின் உணவு பழக்கங்களையும் அங்கிருக்கும் சிறந்த உணவு விடுதிகளில் உண்டு அதை வீடியோவாக பதிவு செய்யவும் அவள் வந்திருந்தாள். கண்டியில் இந்த வீடு ஒரு ரம்மியமான இடத்தில் அமைந்திருந்தது. ஏற்கனவே அதில் மற்றவர்கள் ஒவ்வொரு அறையை வாடகைக்கு எடுத்திருக்க கடைசியாக தான் ஜூலி அங்கு குடி வந்தாள். அதுவும் இரண்டு மாத ஒப்பந்தத்தில் வந்திருந்தாள்.

அவளை தவிர அங்கு மூன்று ஆண்களும் கல்பனா என்ற ஒரு பெண்ணும் மட்டும் தான் இருந்தார்கள். ஜுலியை தவிர மற்ற எல்லோரும் ஆறு மாதத்திற்கு அதிகமாகவே அங்கு வசித்து வருகின்றனர். ஜுலி  அங்கு வருவதற்கு முன்னாலே அவளை மற்ற மூன்று ஆண்களுக்கும் தெரிந்திருந்தது. ஒரு யூ டியூப் பிரபலத்துடன் தங்க போகும் மகிழ்ச்சியில் தான் எல்லோரும் இருந்தார்கள். ஆனால் அவள் வந்த இரண்டு வாரத்திலேயே ரொஷான் என்ற கேமரா மேனுடன் சுத்த ஆரம்பித்தது மற்ற மூவருக்கும் அதிர்ச்சியளித்தது. அவளிடம் இருக்கும் ஷூக்களின் எண்ணிக்கையை விட அவளது போய் பிரண்டுகளின் எண்ணிக்கை அதிகம் என்று அவளே விளையாட்டாக சொல்லுவாள்.

கண்டிப்பாக இது கொலை தான். நன்றாக நடு முதுகில் கத்தி குத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் பார்த்தீபனின் குழப்பம் என்னவென்றால் ஜுலி அன்று  காலையிலேயே வீட்டை காலி செய்து விட்டு எல்லோரிடமும் விடைப்பெற்றுவிட்டு அவர்கள் கண் முன்னால் தான் கண்டி புகையிரத நிலையத்து கிளம்பினாள். காலையில் அவர்கள் வேலைக்கு போகும் முன் கிளம்பிய ஜுலி எப்படி மாலையில் பிணமாக கிடக்கிறாள்.

அங்கிருந்த சி சி டி வி அவனது நினைவுக்கு வந்தது. அதை எடுத்து பார்த்தால் எல்லாம் தெரிந்துவிடும் ஆனால் மறுபடி அந்த வீட்டுக்குள் நிழையும் அளவு அவனுக்கு சக்தி இருக்கவில்லை. சிந்தித்துக்கொண்டு இருக்கும் போதே கல்பனாவிடம் இருந்து கால் வந்தது. அவளிடம் விசயத்தை சொன்னான் பார்த்தீபன்.

பார்த்தீபன் ஏதோ விளையாடுவதாக நினைத்தாள் அவள். வீடு வரும் வரை அவள் நம்பவே இல்லை. பார்த்தி அவளை ஜுலியின் அறை வரை சென்று காட்டியபோது தான் அவள் நம்பினாள். அங்கு தான் பார்த்திக்கு ஒரு விடயம் உறுத்தியது. இந்த இரண்டு மாதத்தில் ஜுலியோடு அதிகம் நெருங்கி பழகியது கல்பனா தான். இருவரும் ஒரு சில இரவுகள் கூட ஒன்றாக ஒரு அறையில் உறங்கி இருக்கின்றனர். ஆனால் தனது தோழி இப்படி குத்துப்பட்டு கிடப்பதை பார்த்தும் அவளிடம் இருந்து ஒரு துளி கண்ணீர் வராதது சந்தேகமாக இருந்தது அவனுக்கு.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே வீட்டுக்கதவை திறந்து ஆதில் உள்ளே வந்தான். அந்த வீட்டின் பிரதான சாவி ஒவ்வொருவரிடமும் இருந்தது. ஆதில் உள்ளே நுழைந்த உடனேயே அங்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை தெரிந்துக்கொண்டான். அவனுக்கும் ஜுலியின் நிலை காட்டப்பட்டது.  கலங்கி போய் நின்றான் அவன்.  போலீசுக்கு சொல்லிவிடலாம் என்றாள் கல்பனா ஆனால் ஆதில் சற்று தயங்கினான். இதனால் அவன் அடுத்த வாரம்  செல்ல இருக்கும் அவனது வெளிநாட்டு பயணம் தடைப்படும் என்று வருந்தினான்.

வருண் மட்டும் தான் பாக்கி அவனும் வந்தவுடன் அவனிடமும் தெரிவித்துவிட்டு போலிஸ் போக தீர்மானித்தார்கள். ஆனால் மூவருக்கும் ஒரு விடயம் சந்தேகிக்கும் படியாக இருந்தது. அந்த வீட்டுல் எப்போது நேரத்துக்கு வருபவன் வரன் தான். எப்போதும் ஐந்து மணிக்கு எல்லாம் வந்து விடுவான். ஆனால் இன்று அவனை காணவில்லை. மொபைலும் ” சுவிச் ஆப்” என்று வந்தது.

திடீர் என கல்பனாவிற்கு ஒரு யோசனை வந்தது. ஜுலி தான் என்ன செய்தாலும் எங்கு சென்றாலும் அதை சமூக தளங்களில் பதிவிடுவது வழக்கம் அப்படி இன்று காலை அவள் புறப்பட்டு சென்றதையும் அவள் பதிவிட்டு இருக்கலாம் என்று தோன்றியது. ஜுலியின் யூ டியூப், வாட்சப், இண்டகிராம் என எல்லாம் அலசப்பட்டதில் மேலும் குழப்பம் தான் அவர்களுக்கு மிஞ்சியது.

இன்று காலையில் அவள் கொழும்புக்கு திரும்புவதாக இண்டகிராமில் பதிவிட்டு இருக்கிறாள், அதுவும் கண்டி புகையிர நிலையத்தில்  வைத்து பதிவிட்டு இருக்கிறாள். காலை பத்து மணிக்கு புகையிரநிலையத்தில் இருந்த ஜுலி பிறகு எப்படி இங்கே செத்து கிடக்க முடியும். மூவருமாக அவளது அறைக்கு சென்றார்கள். எதிலும் கை வைக்காதபடி அறையை ஆராய்ந்தனர். ஜுலி அறையை காலி செய்து விட்டு எப்படி கிளம்பினாளோ  அப்படியே தான் அறை இருந்தது.

ஆதில் நொந்துக்கொண்டான்.  வீட்டு உரிமையாளர் இப்படி ஒரு பெண்ணை அழைத்து வர போவதாக சொன்ன போதே நான் சென்னேன். இது போன்ற பெண்களால் பிரச்சனைகள் வரலாம் என்று என் பேச்சை அவர் கேட்கவே இல்லை. அதிக பணம் கிடைக்கும் காரணத்துக்காக இவளை உள்ளே விட்டார். எனக்கென்னமோ இவளது காதலன் ரொஷான் மீது தான் சந்தேகமாக இருக்கிறது. இவள் இடத்துக்கு இடம் ஒரு காதலனை மாற்றுவதால் அவன் கோபமடைந்து இவளை போட்டு தள்ளி இருப்பான் என்றான்.கல்பனாவும் அவன் செல்வது தான் சரியாக இருக்கும் என்று கூறினாள்.

கார்லிங் பெல் சத்தம் கேட்டது.

வருண் வீட்டின் முன்னே நின்றுக்கொண்டு இருந்தான். அவன் பார்க்க கலைப்பாகவும் கையில் சீராப்புடனும் இருந்தான். எல்லோரும் அவனை ஒரு மாதிரியாக பார்த்தனர். ”சின்ன எக்சிடண்ட் பிரண்ட்ஸ் வர வழியில ஒரு ஆட்டோ காரன் மோதிட்டான். பாக்கெட்ல இருந்த கீயும் எங்கயோ மிஸ் ஆகிவிட்டது” என்று சொல்லி முடிய பார்த்திபன் பாய்ந்தான். ஏன் இப்படி பண்ணினாய் ஜு லி உனக்கு என்ன செய்தாள் என்று கத்தினான்.

வருண் முழித்தான்.

அவனாக தான் இருக்கும் என்று  முடிவுடனேயே எல்லோரும் பேசினார்கள். நடந்ததை சொன்னார்கள். வருண் பேச்சற்று கிடந்தான். பார்த்தீபன் மேலும் பாய்ந்தான் ஜு லி அங்கு வந்து சேர்ந்த ஒரு மாதத்தில் வருண் ஜு லியிடம் கொஞ்சம் சில்மிஷமாக நடந்துக்கொள்ள முயற்சி செய்தான். அவள் ஆரம்பத்தில் இருந்தே வருனிடம் தள்ளியே பழகினாள். அந்த ஆத்திரத்தில் அவளை கொலை செய்துவிட்டு இப்போது எல்லோரும் வந்த பிறகு வீட்டுக்குள் நுழைகிறான் என்றான் அவன். வருனுக்கு கோபம் தலைக்கேறியது. உண்மையில் நான் ஒரு விபத்தை சந்தித்துவிட்டு தான் வந்திருக்கிறேன் அவ்வளவு சந்தேகம் என்றால் போலீசை கூப்பிடலாம். சி சி டி வி கேமராவை பார்க்கலாம் என்றான் அவன்.

உடனடியாக சி சி டி வி யை ஆராய சென்ற அவர்களுக்கு மற்றுமொரு குழப்பமும் காத்திருந்தது. சி சி டி வி யின் வயர் துண்டிக்கப்பட்டு இருந்தது. இத்தனை நாள் ஒழுங்காக ஓடிக்கொண்டு இருந்த சி சி டி வி எப்படி இன்று கழட்டிவிடப்பட்டு இருக்க முடியும். கண்டிப்பாக இது ஒரு திட்டமிட்ட கொலை என்று முடிவெடுத்தனர். தங்களுக்குள் ஒருவர் மீது ஒருவர் கொண்ட சந்தேகங்களை பேச ஆரம்பித்தனர். சண்டை வெடித்தது.

எல்லோரும் மாறி மாறி ஒருவரைஒருவர் சாடிக்கொண்டு இருக்கும் போது அவர்கள் எதிர்ப்பாராத ஒரு சம்பவம் அங்கு நடந்தேறியது.  அவர்களின் முன்னால்  ஜுலி இரத்தம் தோய்ந்த ஆடையோடு வந்து நின்றாள்.

எல்லோரும் பேச்சற்று பேயை பார்ப்பதை போல பார்த்தார்கள்.

ஜுலி மிகவும் சோர்வாகவும் வருத்தத்துடனும் பேசினாள் ”என்னை யாரும் கொல்லவில்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன். “இட்ஸ் ஜெஸ்ட் அ பிரேக்” போகும் முன்னால் உங்களோடு ஒரு விளையாட்டு விளையாட தீர்மானித்தேன். நான் சொல்ல இருப்பது  இன்றைய இரவு ரயிலில் தான்.” என்றாள்.

எல்லோரும் பேச்சற்று அமைதியாக இருந்தனர்.

ஹாலிலும் அறையில் கேமராவை மறைத்து வைத்தேன். நான் இப்படி கிடந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பார்த்தேன். இந்த வீடியோவை நான் என் பக்கத்தில் பதிவிட்டால் கண்டிப்பாக அது மிகப்பெரிய அளவில் பகிரப்படும். ஆனால் அத்தோடு சேர்ந்து எனக்கு இவ்வளவு போலியான நண்பர்கள் இருந்திருப்பதும் தெரியவரும். அதனால் நான் இதை எங்கேயும் பதிவிட போவதில்லை. உண்மையில் நான் உங்களை நேசித்து தான் பழகினேன். இனி ஒரு போதும் மீண்டும் உங்களை பார்க்க நான் விரும்பவில்லை. என்று கூறிவிட்டு அவளது அறைக்கு சென்று உடையை மாற்றிவிட்டு பெட்டிப்படுக்கையோடு “குட் பை” என்று சொல்லிவிட்டு திரும்பிப்பார்க்காமல் நடந்தாள்.

P.S.மஹின்

TRANCE 2018 (உரு) – நாடி Review

யுத்தத்தில் காணாமல் போன தனது மகன் திரும்பி வருவான் என காத்திருக்கிறாள் தாய். அந்த ஏக்கத்தால் நாளுக்கு நாள் அவளது உடலும் மனமும் மோசமாகிக்கொண்டே வருகிறது. அவளது இந்த நிலையினை நினைத்து வருந்தும் மகளும், கணவனும் அவளை எப்படியாவது நல்ல நிலமைக்கு கொண்டு வர துடிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஒரு நாள் மகனிடம் இருந்து செய்தி வருகிறது. அது என்ன செய்தி? காணாமல் போன மகன் திருப்பி கிடைத்தானா? அந்த குடும்பத்தின் நிலை என்ன ஆனது என்பதை சொல்லும் உணர்ச்சிபூர்வமான குறும்படம் தான் உரு.

படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவிக்கொண்டே இருக்கிறது. எதாவது அவதூறு நடந்துவிடுமோ என்ற எண்ணம் படம் நெடுகிலும் காணப்பட்டுக்கொண்டே வருகிறது. அது மெல்ல மெல்ல அதிகரித்து படத்தின் இறுதியில் மொத்தமாக நம்மை மையம் கொள்கிறது.

திரைக்கதை மெல்ல ஆரம்பித்து பிறகு மெல்ல மெல்ல தீவிரத்தன்மையை அடைகிறது. காட்சியின் உண்மைத்தன்மை கதை மாந்தர்களின் யாதார்த்தம் என்பன முதல் காட்சியில் இருந்தே நம்மை கதையோடு பிணைத்துவிடுகிறது. காணாமல் போன மகனான ஆதிக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்ற எண்ணமும் பயமும் அவனது தாயை போலவே நம்மையும் பற்றிக்கொள்கிறது. இருபது நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இந்த  குறும்படம் ஒரு வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறது என்பது தான் உண்மை.

படத்தின் நடுவில் ஒரு காட்சி. உறவுகளை தொலைத்த மக்கள் ஒரு மரத்தடியில் ஒன்று கூடி அங்கு சாமியாடும் மனிதரிடம் ஒவ்வொருவராக சென்று தொலைந்த  அந்த உறவுகளை பற்றி தெரிந்து கொள்ள படும் பாடு காட்டப்படும். சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள அந்த இடம் யுத்த காலத்தில் உறவுகளை தொலைத்த ஒவ்வொருவரின் மனநிலையையும் நம் முன்னால் கொண்டு வருகிறது.

படத்தின் மிகப்பெரிய வழு அதன் கதாப்பாத்திரங்கள் தான். ஒவ்வொருவரும் நாம் பார்த்து கடந்து வந்த நம்முடைய மக்களாக இருக்கின்றனர். அவர்களது முகமே இந்த கதையின் தீவிரத்தன்மையை நமக்குள் பதிய வைக்கிறது. எடுத்துக்கொண்டுள்ள கதாப்பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளனர். இவ்வளவு அனுபவமிக்க, யதார்த்தமான நடிப்பை அவர்களிடம் இருந்து பெற்றிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

படத்திற்கு வலுசேர்த்த இன்னுமொரு விடயாமக அதன் தொழிநுட்பத்தை குறிப்பிடலாம். பின்னணி இசை, டப்பிங், கலர், சத்த கோர்ப்புகள் (sound effect), ஒளிப்பதிவு என அனைத்து துறையுமே பார்த்து பார்த்து கச்சிதமாக செய்யப்பட்டு இருக்கிறது. அதில் குறிப்பாக  இசையும் ஒளிப்பதிவும் தனிச்சிறப்பு.

ஒளிப்பதிவும் இரவிலும் பகலிலும் ஒளி கையாளப்பட்டுள்ளவிதம் படத்தை மேலும் யதார்த்தமாக்கியுள்ளது. இசை தேவையான இடங்களில் மிரட்டியுள்ளது எனலாம், அத்தோடு நமது மண்சார்ந்த வாத்தியங்களை கொண்டு பின்னணி இசையை அமைத்திருப்பது சிறப்பு.

யுத்தம் எண்ணிலடங்கா உணர்ச்சிகளையும்,  கதைகளையும் நம்மிடம் விட்டுச்சென்றுள்ளது. அவற்றை நாம் தான் படமாக்க வேண்டும், ஆவணப்படுத்த வேண்டும். இந்த குறும்படம் அதை சிறப்பாக செய்துள்ளது. இயக்குனரிடம் இருந்து வெகு விரைவில் ஒரு முழுநேர திரைப்படத்தை எதிர்ப்பார்க்கிறோம்.  ஞானதாஸ் காசினாதர் மற்றும் அவரது படக்குழுக்கு வாழ்த்துக்கள்.

நாடி Verdict – 90/100

Video Link – https://youtu.be/M-1iB1R5ly4

பத்தாவது படியில்

இதே படிகளில் நான்கு கால் பாச்சலில் ஏறி இருக்கிறேன். இப்போது பத்து படிகளுக்கு மேல் ஏற முடியவில்லை. வெறும் இருபத்தி நான்கு வயதுக்குள் முதுமை வந்துவிட்டதை போல ஒரு உணர்வை இந்த படிகள் இப்போது எனக்கு ஏற்படுத்துகின்றது.

இந்த பள்ளியில் ஒன்பது பத்து வருடங்கள் ஆகி விட்டன. இது எங்கள் பள்ளியின் என்பதாவது ஆண்டு விழா. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் வந்திருக்கிறேன். பள்ளிக்கு மீண்டும் வருவதும், அங்கு சுற்றி திரிவதும் ஒரு அலாதியான உணர்வு.

மெல்ல மெல்ல கூட்டம் வந்துக்கொண்டு இருந்தது. வருவதாக சொன்ன என் நண்பர்கள் யாரையும் காணவில்லை. பள்ளியின் மைதானத்துக்கு பின் பக்கம், பிரதான மண்டபத்துக்கு செல்லும் வழியில் நடந்தேன். சுற்றிலும் மரங்கள் சூழ இருக்கும் அழகிய இடம் அது. அங்கு தான் அந்த படி இருக்கிறது. மிக பழைமையான சிதிலமடைந்தபடி. அதன் ஓரங்களிலும், நடுவிலும் வெடிப்புக்களில் புற்கள் வளர்ந்து காணப்படும். பள்ளி காலத்தில் இந்த படியை நான் துள்ளி குதித்து கடப்பேன். இப்போது என்ன வென்றால் பத்தாவது படிக்கே மூச்சு வாங்குகின்றது.

அப்போது தான் அது நடந்தது. எனக்கு அருகில் இரண்டு ஆடவர்கள் அந்தபடி வழியாக இறங்கிக்கொண்டு இருந்தார்கள். அதில் ஒருவன் என்னை பார்த்ததும் கொஞ்சம் உற்று நோக்கிவிட்டு, “அமுதன் அண்ணா நீங்களா?” என்றான்.

கொஞ்சமும் அடையாளம் தெரியாத முகங்கள். பெரிய தாடியும், பறந்த தேகமுமாக பிரம்மாண்டமாக காட்சியளித்தனர். அவர்களோ தங்களின் பெயர்களை சொல்லி அறிமுகப்படுத்தும் வரை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. அரவிந்தன், மனோகர் இருவரும் நான் சொன்ற பள்ளி “வேனில்” என்னோடு வந்தவர்கள். என்னைவிட மூன்று வயது குறைந்தவர்கள். நாங்கள் முழு காற்சட்டை அணிந்த போது அவர்கள் அரைக் காற்சட்டையோடு குஞ்சு குழுவான்களை போல இருப்பார்கள். இப்போது என்னவென்றால் பார்க்க என்னை விட பெரியவர்களை போல தோற்றமளிக்கிறார்கள்.

அவர்களை பார்த்தது மகிழ்ச்சியளித்தது. என்னுடைய பள்ளி வாழ்க்கையில் “வேன்” பயணங்கள் மறக்க முடியாதவை. வீடு செல்ல இருக்கும் அந்த நாற்பத்தைந்து நிமிடமும் ரணகளமாக இருக்கும். கடைசி இரண்டு சீட்டிலும்  ஆண்கள் இருக்க, முதல் இரண்டு சீட்டிலும் வேறு கல்லூரியின் பெண்கள் இருப்பார்கள். அப்படி பழக்கமானவர்கள் தான் இவர்கள்.

பாதி படியில் நின்றபடியே பேசிக்கொண்டு இருந்தோம். பிரதான மண்டபத்தில் ஏதோ நிகழ்ச்சி நடந்துக்கொண்டு இருப்பதாகவும் அங்கிருந்து தான் வருவதாகவும் சென்னார்கள். அத்தோடு சேர்த்து இன்னொரு விஷயத்தையும் சொன்னார்கள்..

“உங்க ஆளு உஷாவை பார்த்தோம், இன்னும் அப்படியே இருக்காங்க” என்றான் அரவிந்தன்.

பள்ளி படித்த காலத்தில் இருந்த அதே நக்கல் தொனி அவனிடம் அப்படியே இருந்தது.

நல்ல கரு விழியும், அடர்ந்த கூந்தலும், நல்ல உயரமுமாய் பார்க்க பெரிய பெண்ணைப்போல இருப்பாள் உஷா. அவள் மீது ஒரு முறையாவது பார்வை திரும்பும் படியான அழகி. என்னை விட ஒரு வயது கூடிய பெண் என்றாலும் அவள் அழகை நான் ரசிக்காமல் இருந்தது இல்லை.

பள்ளி படிக்கும் போது அவள் மீது ஏராளமான பேருக்கு காதல் இருந்தது. என்னிடமே சிலர் காதல் கடிதங்களை கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள். அப்படி அவளுக்கு வரும் கடிதங்களை வேனில் வைத்து எல்லோர் முன்னிலையிலும் சத்தமாக படித்து சிரிப்பது எங்கள் வழக்கம். அப்படி நான் செய்ததை அறிந்த அவளது முரட்டு காதலர்களில் ஒருவன்; ஒரு முறை என் நடு மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்தான். அழுதபடி வேனுக்கு வந்த என் தலையை தடவி கொடுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள் உஷா. அந்த உணர்வு எனக்கு வித்தியாசமாக இருந்தது.

வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவில் எதையாவது மிச்சம் பிடித்து வேனுக்கு கொண்டு வருவாள். அப்படி கொண்டு வருவதையும் என்னிடம் கொடுத்து தான் பிறருக்கு பிரித்துக்கொடுக்க சொல்வாள். அவளது ஆசை தம்பி நான். அதற்கு பிறகு தான் இவர்கள் எல்லாம்.

பத்தாவது படிக்கும் போது நான் வேறு பள்ளிக்கு மாறியதால் அந்த வேனில் இருந்து மாற்றம் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நேரம் வேனில் எனக்காக உஷா மட்டும் தான் அழுதாள். அவள் அப்படி அழுவாள் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. இப்போது இவர்கள் இப்படி பேசுவதற்கு காரணம் அவள் என் மீது காட்டிய அந்த நெருக்கம் தான்.

தொடர்ந்து அவளை பற்றியே பேசிக்கொண்டு இருந்தார்கள். நான் பள்ளி மாறியதோடு உஷாவை பற்றி மறந்துவிட்டேன். இப்போது தான் எல்லாம் நினைவுக்கு வருகிறது. அந்த வேன் வாழ்க்கை ஒரு மறக்க முடியாத காலம் தான். எனக்கு நினைவில் உள்ளவர்களை பற்றி எல்லாம் கேட்டேன். சில பல  நினைவுகளின் மீட்டல்கள் நடந்தது. விடைபெறும் நேரம் வரும் போது அரவிந்தன் அதை சொன்னான்.

“கடைசி வரையிலும் உஷாக்கா உங்களின் மீதிருந்த காதலை சொல்லவே இல்லையே”

அவன் சென்னதை கேட்டு ஸ்தம்பித்தேன். அவனை துருவினேன். என்ன சொல்கிறான் என்று தெளிவாக கேட்டேன். அவன் சொன்னது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

உஷாவிற்கு என் மேல் காதல் இருந்ததாகவும் அதை சொல்ல இருந்த தடைகளால் அவள் அதை மறைந்து வந்தாள் என்றும் சொன்னான். எனக்கு ஒரு நிமிடம் உஷாவின் முகமும் அவளது வசீகரமான அந்த சிரிப்பும் வந்து போனது. உண்மையில் அவள் அழகை பற்றி கொஞ்சம் குறைத்து தான் சொல்லிவிட்டேன். பார்ப்பவரை ஈர்க்கும் அழகி அவள். அவள் என் மீது காட்டிய அத்தனை நெருக்கத்தின் பின்னாலும் அவளது சொல்ல முடியாத காதல் இருந்திருப்பது இப்போது தான் புரிகிறது.

உண்மையின் என் காதல் வாழ்க்கையை பற்றி நான் உங்களிடம் வெளிப்படையாக சொல்லியாக வேண்டும். சொல்ல ஒன்றும் இல்லாத வெறுமையான இடம் அது. பள்ளி படிக்கும் போது மிக  தீவிரமாக ஒரு பெண்ணை காதலித்தேன். கடைசி வரை அது ஒரு பக்க காதலாகவே இருந்துவிட்டது. அதனால் தான் என் கண்களுக்கு உஷா தெரியாமல் இருந்துவிட்டாள் போலும். அதற்கு பிறகு நான் சென்ற வேலைத் தளங்களிலும் எனக்கு அப்படி சம்பவம் அமையவில்லை. வீட்டில் பெண் பார்க்கும் நிலையைக்கு வந்து விடுமோ என்ற பயம் வேறு. எனக்குள் காதலுக்கான ஏக்கம் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. சில பல எண்ணங்கள் என்னை ஊடுருவியது. உஷாவிற்கு இப்போது எண்ணை பிடிக்க வாய்ப்புக்கள் குறைவு தான். இந்த காலப்பகுதிக்குள் கண்டிப்பாக அவள் வாழ்க்கையில் யாரவது ஒரு ஆண் வந்திருக்க கூடும், அப்படி இல்லாமல் அவள் இன்னும் என்னை போல இருந்தாள். என் மீதான அந்த காதல் மறுபடி தோற்றம் பெற்றாள். எண்ண ஓட்டங்கள் என்னுள் வெடித்து சிதரின.

ஒரு வேலை இது எங்கள் பள்ளியின் என்பதாவது விழாவாக மட்டும் இல்லாமல் என் வாழ்க்கைக்கான தொடக்க விழாவாகவும் இருக்கலாம். மனதுக்குள் ஏதோ ஒரு உணர்ச்சி எனக்கு பரவச நிலையை தந்தது.

எது எப்படி இருந்தாலும் என்னை காதலித்த முதலும் கடைசியுமான பெண் அவள் தான். அவளை சந்தித்தே ஆகவேண்டும்.

அவர்களிடம் இருந்து விடைப்பெற வேண்டும். அதற்கான பேச்சை வளர்த்தேன். விடைப்பெறும் முன் மீண்டும் அவள் பிரதான மண்டபத்தில் தானே இருக்கிறாள் என்று கேட்டு உறுதி செய்துக்கொண்டேன். அவனும் அங்கு தான் பார்த்தேன் என்றான் ஆனால் அத்தோடு சேர்ந்து கூடுதலாக ஒரு தகவலை சொன்னான். இரண்டாம் தரத்தில் படிக்கும் உஷாவின் மகனின் மேடைப்பேச்சு முடிந்ததும் அவள் கிளம்பிவிடுவதாக சொன்னதாக கூறி விரைவாக சென்று பார்க்கும்படி சொல்லி மறைந்தான்.

மீதம் இருக்கும் பத்து படிகளும் முன்பை விட கடினமாக இருந்தது கடக்க.!

 

 

இலங்கையில் முஸ்லிம் திருமணச் சட்டம்

சட்ட ஒளி, சட்டம் தொடர்பான தெளிவுபடுத்தலை வழங்குகின்ற ஒரு மும்மொழி சட்டக் கலந்துரையாடல் தொடராகும். இலத்தின் மொழி பழமொழி சட்டத்தினுடைய அறியாமை ஒரு மன்னிப்பாகாது என்பதாகும். இலங்கையின் சட்ட மாணவர்களின் சங்கத்தினுடைய ப்ரோ போனோ குழு எங்களுடைய நாட்டில் சட்டங்கள் விளக்குவதை இலகுபடுத்துவதன் மூலம் பொதுமக்களை அறிவூட்ட முயற்சி செய்கிறது. ஆறாவது கலந்துரையாடல் நிகழ்ச்சி, “திருமணச் சட்டங்கள்” தொடர்பில் கவனம் செலுத்துகிறது.

இந்தக் கலந்துரையாடல் சட்டத்தரணி மய்ஸா அஸார் அவர்களால் வழங்கியதாகும்.

01. எப்போது ஒரு நபருக்கு முஸ்லிம் சட்டம் பிரயோகிக்கப்படும்?

இஸ்லாத்தை பின்பற்றுகின்ற ஒரு நபர் முஸ்லிமாகும். இச்சட்டமானது இலங்கையினுடைய வசிப்பிடத்தைக் கொண்ட முஸ்லிம்களின் திருமணங்கள், விவாகரத்துக்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய விடயங்களுக்கு மாத்திரம் பிரயோகிக்கப்படும் என முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தின் பிரிவு இரண்டு கூறுகின்றது. ஒரு முஸ்லிம் பிறப்பில் ஒரு முஸ்லிமாக அல்லது மதம் மாறியவராக இருக்க முடியும்.

02. திருமணம் என வருகின்ற போது எந்த நியதிச் சட்டம் பிரயோகிக்கப்படும்?

1951ம் ஆண்டின் இலக்கம் 13 முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டமாகும் மற்றும் இது அவ்வப்போது திருத்தப்பட்டிருக்கின்றது.

03. இஸ்லாத்தில் நபி(ஸல்) அவர்களால் வழங்கப்பட்ட திருமணச் சட்டங்களினை திருமண விவாகரத்துச் சட்டம் பிரதிபலிக்கின்றதா?

ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஆம். ஷரிஆ சட்டத்தின் கீழ் திருமணம் வலிதானதாக இருப்பதற்கு ஐந்து தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.

(i). திறந்தவர்கள் திருமணம் செய்வதற்கான தகைமை அல்லது திருமணமானவராக இருப்பதற்கான தகைமை இருக்க வேண்டும்.

(ii). திறந்தவர்கள் திருமணம் செய்வதற்கு உடன்பட்டிருக்க வேண்டும். கொடைமுனைவு மற்றும்  கொடை ஏற்பு என்பன காணப்பட்டிருக்க வேண்டும்.

(iii). திருமணத்திற்கான ஒழுங்குமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்.

(iv). திருமணம் செய்வதற்கு சட்டரீதியான தடைகள் காணக்கூடாது.

(v). மஹர் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

முஸ்லிம் திருமணத்தினுடைய வலிதான தன்மையானது பதிவு செய்தல் அல்லது பதிவு செய்யாமையில் தங்கியில்லை என முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டம் பிரிவு 16 கூறுகின்றது. இது அந்த திருமணத்திற்குரிய திறந்தவர்களின் பிரிவினர்  ஆளப்படுகின்ற முஸ்லிம் சட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்பட வேண்டும்.

உண்மையான முஸ்லிம் சட்டத்துடன் முரண்படுகின்ற ஏற்பாடுகள் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் காணப்படுகின்றன. உதாரணமாக பலதாரமண உரிமையினை செயற்படுதல் மற்றும் தலாக் செயன்முறை. பலதாரமணத்தினை செயற்படுத்துவதற்காக ஷரிஆவின் மூலம் வலியுறுத்தப்பட்ட நிபந்தனைகளை இச்சட்டத்தில் உள்ளடக்குவது கட்டாயமானதாக இருக்கின்றது. விவாகரத்து தொடர்பாக முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டத்தில் உள்ளடக்கப்படிருக்கின்ற ஏற்பாடுகள் கூட ஒரு தீவிர சமூகப் பிரச்சினையாக உருவாகின்ற தலாக் நிகழ்வுகளின் அதிகரிப்பு என்ற பிண்னணியில் கவனமாக  கருத்திலெடுக்கப்பட வேண்டியிருக்கின்றது.

  1. முஸ்லிம் திருமண விவாகரத்து சட்டத்தில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது இல்லை. ஆனால் பருவமடையும் வயதினை மதமானது வலியுறுத்துகின்றது. ஆனால் முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டத்தில் அவள் 12 வயதிற்கு உட்பட்டவளாக இருந்தால் காழி சம்மதம் கொடுப்பதற்கு அனுமதி வழங்குகின்றது. இது ஒரு துல்லியமான சட்டம் முஸ்லிம்களின் திருமணத்தை நிர்வகிக்க வேண்டியிருக்கின்றது என்பதன் பிரதிபலிப்பா?

முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டத்தில்  திருமணத்திற்கான ஒரு ஆகக்குறைந்த வயதினைக் குறிப்பிடவில்லை. முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டத்தில் வயதுடன் தொடர்புடைய ஒரே ஏற்பாடு பிரிவு 23 ஆகும். இது பெண் வசிக்கின்ற பிரதேசத்திற்கான காழியினுடைய விசாரணையின் பின்னர் திருமணப் பதிவிற்கு அனுமதியளிப்பது அவசியமாக கருதப்பட்டால் அன்றி ஒரு பன்னிரண்டு வயதினை அடையாத ஒரு முஸ்லிம் பெண்ணிணால் எந்தவித திருமண ஒப்பந்தத்தினுடைய பதிவு இடம்பெறுவதைத் தடுக்கின்றது.

ஷரிஆ சட்டமானது திருமணத்திற்கான ஒரு குறைந்தபட்ச வயதினை குறிப்பிடவில்லை ஆனால் திருமண வயதினுடைய எண்ணக்கரு ஷரிஆ மற்றும் பிக்குற்கு அறியப்படாத ஒன்றில்லை. குர்ஆனில் பருவயதிற்கு அல்லது திருமண வயதிற்கு மற்றும் அவர்களுடைய செயலுக்கான பொறுப்பினை எடுக்கக்கூடிய அல்லது அவர்களுடைய சொந்த விவகாரங்களை சமாளிக்கக்கூடிய வயது தொடர்பில் வெளிப்படையான குறிப்பு இருக்கின்றது. இரண்டு எண்ணக்கருக்கள் காணப்படுகின்றன.

1)திருமண வயது அல்லது பருவவயது
2) அவர்களுடைய செயலுக்கான பொறுப்பினை எடுக்கக்கூடிய அல்லது அவர்களுடைய சொந்த விவகாரங்களை சமாளிக்கக்கூடிய வயது.

பருவமடைதல் என்பது உடலில் தகுதி மற்றும் ஒரு நபருக்கு பாலியல் ஆசைகள் தோன்றுகின்ற காலப்பகுதியினைக் குறிக்கின்றது. இது உறவு தொடர்பான எண்ணக்கருவாகும். உடலியல் தகைமை ஒரு திருமணத்தினுடைய பொறுப்பக்களை கையாள்வதற்கான போதுமானதாக இல்லை என இஸ்லாமிய சட்டவாளர்கள் தீர்மானிக்கின்றார்கள் மற்றும் எவ்வாறாயினும் சட்டரீதியில் வலிதான தீர்மானம் (தத்துணிவிற்கான வயது) சமமான முக்கியத்துவமுடையதாகும்.

திருமணத்திற்கான வயதினை அடைதல்  தத்துணிவிற்கான வயதினை அடைதல் (நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளை மதிப்பிடுவதற்கான விவேகம்) மற்றும் திருமணத்திற்கான வயதினை அடைதல் (பருவமடைதல்) என்பனவற்றின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் அண்மைய கடந்த காலங்களில் இடம்பெற்றிருக்கின்ற துஷ்பிரயோக பிரச்சினை காரணமாக இலங்கையினுடைய முஸ்லிம்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதினை ஸ்தாபிக்க வேண்டிய அவசிய தேவைப்பாடு காணப்படுகின்றது.

5. அபயசுந்தர எதிர் அபசுந்தர வழக்கில் என்ன இடம்பெற்றது என நாங்கள் கலந்துரையாட முடியுமா?

பொது திருமண சட்டத்தின் கீழ் கிறிஸ்தோபர் அபயசுந்தர நடாலி அபயசுந்தரவிற்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். அவருக்கு காந்தி எதிரிசிங்கவுடன் உறவு இருந்தது மற்றும் அவருடைய மனைவிக்கெதிராக விவாகரத்து வழக்கொன்றை ஸ்தாபித்தார். இவ்வழக்கானது மாவட்ட நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. கிறிஸ்தோபர் மற்றும் காந்தி ஆகியோர் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்கள் மற்றும் இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் திருமணத்தை செய்தனர். அவருடைய முதல் மனைவி பலதாரமணத்திற்காக அவருக்கெதிராக வழக்கொன்றினை தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றமானது பொது திருமண கட்டளைச் சட்டம் ஒருதார மணத்தினை மாத்திரம் அங்கீகரிக்கின்றது மற்றும் கிறிஸ்தோபர் பொது திருமண கட்டளைச்சட்டம் தொடர்பாகக் காணப்படுகின்ற பொறுப்புக்கள் மற்றும் நியதிச் சட்டக்கட்டுப்பாடுகள் வழங்குகின்ற ஒரு நிலைமை எற்பட்டது. அவர் திருமண ஒப்பந்தந்தத்தினுடைய நியதிச்சட்டக் கட்டுப்பாடுயினை ஒரு தலைபட்ச இஸ்லாத்திற்கு மதம் மாறுவதன் மூலம் அவராகவே குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாது.

பொதுச் சட்டத்தின் கீழ் திருமணம் ஒப்பந்தம் செய்திருக்கின்ற நபர் அந்த திருமணத்தை முடிவுறுத்தாமல் ஒரு ஒருதலைபட்சமான மதமாற்றம் செய்யமுடியாது மற்றும் முஸ்லிம் சட்டத்தின் கீழ் இரண்டாம் திருமண ஒப்பந்தத்தினை மேற்கொள்ள முடியாது.

6 .ஒரு முஸ்லிம் திருமணம் வலிதான திருமணமாக இருப்பதற்கு சீதனம் ஒரு சட்டதேவைப்பாடா? (மஹர் மற்றும் சீதனம்)

முஸ்லிம் சட்டத்தின் படி, சீதனமென்பது மஹர் எனக் குறிப்பிடப்படுகின்றது. பொதுச் சட்டத்தின் கீழ் சீதனமென நாங்கள் அறிகின்ற எண்ணக்கரு முஸ்லிம் சட்டத்திற்கு அந்நியமானதாகும். ஷரிஆ சட்டத்தின் படி, சீதனம் அல்லது மஹர் திருமணத்தின் போது மணமகளுக்கு மணமகனால் வழங்கப்படுகின்ற  கொடுப்பனவு எனக் குறிப்பிடப்படுகின்றது.  திறத்தவர்கள் பரஸ்பர சம்மதத்தின் மூலம் மஹரின் அளவினைத் தீர்மானிக்க முடியும். மஹர் அல்லது சீதனமென்பது மணமகளினுடைய உரிமையாகும்.

எனினும், மஹரினை வழங்குவதற்கான கட்டுப்பாடு உடன்படிக்கையின் மூலம் வெளிப்படையாக விலக்க முடியாது அப்படியென்றால் சீதனத்தினுடைய அளவு தொடர்பில் உடன்பட முடியாது அதாவது, ஒரு பெண் அவளுடைய கல்வி, அவளுடைய சமூக அந்தஸ்து, நல்லொழுக்கம், புரிந்துணர்வு, செல்வம், அவளுடைய அழகு என்பன கருத்திலெடுத்து ஒரு சரியான சீதனத்திற்கு உரித்துடையவளாக இருக்கின்றார.;

மஹர் உடனடியாக அல்லது தாமதமாக இருக்கலாம். உடனடியாக வழங்கப்படும் மஹர் திருமணம் இடம்பெறும் நேரத்தில் உடனடியாக கொடுக்கலாம் மற்றும் கோரிக்கையின் போது வழங்கப்படமுடியும் மற்றும் பதிவாளர் திருமணப்பதிவில் பதிவு செய்யமுடியும். மஹரானது தாமதமாக இருக்கும் போது அவள்  ஒரு பெண் அவள் சீதனத்தை பெற்றுக்கொள்ளும் வரையில்  இல்லற வாழ்க்கையில் நுழைவதை தடுக்க முடியும்.

7. ஒரு பொது சட்டத்திற்கு உட்பட்ட ஒருவர் முஸ்லிம் சட்டத்தின் கீழ் திரும்பவும் திருமணம் செய்து கொள்ள முடியுமா?

பொதுச் சட்டத்தின் கீழ்  திருமண ஒப்பந்ததினை மேற்கொண்ட ஒரு நபர் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து ஒரு விவாகரத்தினை பெறாமல் ஒரு தலைபட்சமான மதமாற்றத்தினை மேற்கொள்வதன் மூலம் முஸ்லிம் சட்டத்தின் கீழ் ஒரு இரண்டாம் திருமண ஒப்பந்தத்தினை மேற்கொள்ள  முடியாது. அதன்பிறகு அவர் முஸ்லிம் சட்டத்திற்கு மாறி மற்றும் பின்னர் இரண்டாம் திருமண ஒப்பந்தத்தினை செய்யலாம்.

8. முஸ்லிம் திருமணத்தின் கீழ் மணமகளினுடைய சம்மதம் பலப்பிரயோகத்தினால் பெறப்பட்டிருந்தால் அந்ததத் திருமணமானது முஸ்லிம் சட்டத்தின் கீழ் வலிதானதாக இருக்குமா?

ஆம்,ஏனென்றால் வலி மணமகனினுடைய சார்பில் சம்மதத்தின் தொடர்பாடல் செய்திருப்பார். திருமணத்தின் போது வலியினுடைய சம்மதம் மணமகனினுடைய சம்மதமாகக் கருதப்படுகின்றது. அவசியமான ஆதாரங்களினை வழங்கி அவளுடைய விருப்புக்கெதிராக ஒப்பந்தமான மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. எனக்கூறி பின்னைய  தினத்தில் திருமண ஒப்பந்தித்தினை நிராகரிப்பதற்கான உரிமை மணமகளுக்குக் காணப்படுகின்றது.

9. முஸ்லிம் சட்டத்தின் கீழ் ஒரு முஸ்லிம் ஆண் எத்தனை தடவைகள் திருமணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றார்? மற்றும் ஒரு முஸ்லிம் பெண் எத்தனை தடவைகள் திருமணம் செய்ய முடியும் ?

ஒரு ஆண் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நான்கிற்கு மேற்படாத எத்தனை மனைவிகளையும் திருமணம் செய்ய முடியும் ஆனால் பெண் ஒரே சமயத்தில் ஒரு கணவனை மாத்திரம் கொண்டிருக்க முடியும். அவள் அவளுடைய கணவன் இறந்ந பின்னர் இத்தா சடங்கை நிறைவேற்றிய பின்னர் அல்லது ஒரு வலிதான விவாகரத்தினைப் பெற்றுக் கொண்டிருந்தால் ஒரு இரண்டாவது திருமண ஒப்பந்தினைக் செய்ய முடியும்.

ஒரு முஸ்லிம் ஆண், பல மனைவிகளைத் திருமணம் செய்வதற்கான உரிமை வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன முக்கியமான எச்சரிக்கையாக இருக்கின்றன்றதென்றால் ஆணுக்கு நீதியாக நடக்க முடியாதிருந்தால் அவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் நான்கு மனைவிகளை திருமணம் செய்தல் ஒரு வரையறுக்கப்பட்டதாகும் மற்றம் அது உரிமையல்ல.

 

நபிகள் நாயகம் – பிறந்த நாள்

உலகம் தோன்றிய காலம் தொட்டு மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இறைவன் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். ஒவ்வொரு இறைத்தூதரும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காகவும் ஓரிறைக்கொள்கையை நிலை நிறுத்துவதற்காகவும் பல இன்னல்களை அனுபவித்ததோடு பல தியாகங்களையும் செய்தனர். அப்பணியினை செவ்வனே செய்தும் காட்டினர். இறைவன் ஒருவனே அவன் அல்லாஹ் மட்டுமே என்ற அடிநாதத்தில் அசைக்க முடியாதவர்களாக அவர்கள் ஒவ்வொருவரும் விளங்கினர். இவ்வாரு ஒவ்வொரு கால கட்டத்திலும் ஓரிரைக்கொள்கையின் தூய்மை மாசு படும் போதெல்லாம் அதனை பரிசுத்தப்படுத்த இறைவன் ஒவ்வொரு சமூகத்திற்கும் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். அவ்வாறே அகிலத்தாருக்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப் பட்டவரே எமது கோமான் முஹம்மத் ஸல் அவர்கள்.

மக்கத்து மண்ணிலே இறைவனின் கட்டளைக்கு இணங்க அமைக்கப்பட்ட கஃபா எனும் புனித ஆலயத்தை சுற்றி இஸ்மாயீல் அலை அவர்களுடைய சந்ததிகள் தமது குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டனர். காலப்போக்கில் அவர்களுடைய சந்ததியினர் கஃபாவை அண்மிய பகுதிகளில் மட்டும் வாழ முடியாத அளவு பல்கிப்பெருகினர். இதனால் கஃபா அமைந்துள்ள பகுதிகளிலிருந்து வேறு பகுதிகளுக்கு சென்று அம்மக்கள் குடியேரினர். அவ்வாறு செல்பவர்கள் கஃபாவினுடைய கற்களை கொண்டு சென்று ஆராதனை செய்யத் தொடங்கினர். மேலும் அம்மக்களிடையே இணைவைக்கும் பழக்கமும் தொற்றிக் கொண்டது. இப்படி படிப்படியாக இறைவன் ஒருவனே என்கின்ற உண்மை மக்கள் மனங்களில் இருந்து மறையத் தொடங்கியது. இவ்வாறே அவ் அரேபிய மக்களிடையே ஜாஹிலிய்யத் என்கின்ற அறியாமை தொற்றிக் கொண்டது. இதனாலே அக்காலம் ஜாஹிலியாக் (அறியாமை) காலம் என அழைக்கப்பட்டது.

இருப்பினும் அம் மக்களுள் இப்ராஹிமிய வழிபாடுகளின் தூய்மையைப் பேணி வந்த சிலர் இருக்கத்தான் செய்தனர். அவர்கள் ‘ஹனீப்கள்’ என்று அழைக்கப்பட்டனர். மக்களை நன்நெறிப்படுத்த இறைத்தூதர் ஒருவர் தேவை என்பதனை அவர்கள் உணர்ந்திருந்தனர்.

இவை இவ்வாறு இருக்க, ஸஹ்ரா குலத்து தலைவர் வஹ்ப் என்பவரின் மகளான ஆமினா அன்னையாருக்கும் குறைஷிக் குலத் தலைவரான அப்துல் முத்தலிபினுடைய அருமைப் புதல்வர் அப்துல்லாஹ்வுக்கும் கி.பி 569 ஆம் ஆண்டு திருமணம் நடந்தேரியது. சில காலங்களிலே ஆமினா அம்மையார் கருவுற்றார். அன்னார் கருவுற்றிருந்த வேலையில் “தன் மக்களின் எஜமானனை நீர் உமது கர்ப்பத்தில் சுமந்திருக்கிறீர். குழந்தை பிறந்ததும் கூறுவீராக: ‘தீங்கிழைப்போர் அனைவரினதும் தீங்கிலிருந்தும் பாதுகாப்பாக ஒரே இறைவனது பொறுப்பிலேயே இவரை விடுகிறேன்.’ அத்தோடு குழந்தைக்கு முஹம்மத் எனப்பெயர் சூட்டுவீராக.” என்ற ஒரு அசரீரி கேட்டது. இதன் பின் கி.பி 571ஆம் ஆண்டு ரபிஉல் அவ்வல் மாதம் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகில் அவதரித்தார்கள். குழந்தை பிறக்கும் முன்னமே அப்துல்லாஹ் அவர்கள் மரணித்து விட்டார்கள். தன் கனவரின் மரணத்திற்குப் பின்னர் ஆமினா நாயகி அவர்களுக்கு இருந்த ஒரே ஆருதல் தன் மகன் முஹம்மத்(ஸல்) அவர்கள் மட்டுமே.

பிறந்த சில காலங்களில் ஆண் குழந்தைகளை பாலைவனத்துக்கு அனுப்பி வைக்கும் வழக்கம் அராபியரிடையே காணப்பட்டது. பால் குடி மறப்பதற்காகவும் வேறு சில காரணங்களுக்காகவும் குழந்தைகளை செவிலித் தாய்மாரிடம் ஒப்படைத்து விடுவர். அவ்வாரே முஹம்மத் (ஸல்) அவர்களும் ஹலீமா என்கின்ற பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். சிறுவர் தன்னுடன் இருந்த காலமெல்லாம் பல அதிசயங்களை அவர்களால் காணக்கூடியதாக இருந்தது. சில காலங்களுக்குப் பின் மீண்டும் சிறுவர் தன் தாயாரான ஆமினாவிடமே ஒப்படைக்கப்பட்டார்கள். சிறுவயது முதலே நபியவர்கள் நற்குணங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்தார்கள்.
சிறிது காலத்தில் தனது ஆறாவது வயதில் தாயையும் இழந்து நபியவர்கள் அநாதையாகவே தன் பாட்டனார் அப்துல் முத்தலிபின் பொறுப்பில் விடப்பட்டார்கள். ஆமினாவும் அப்துல் முத்தலிபும் சிறுவருக்கு மகத்தானதொரு எதிர்காலம் இருப்பதை அறிந்திருந்தனர். பின்னர் தன் பாட்டனார் அப்துல் முத்தலிபும் இறந்து விடவே தனது சிறிய தந்தை அபூதாலிபின் பொறுப்பின் கீழ் சிறுவர் வந்தார். தனது சிறிய தந்தை ஏழையாக இருந்ததால் தனது வாழ்வாதாரத்திற்காக சுயமாக சம்பாதிக்க வேண்டிய நிலை சிறு வயதிலேயே நபியவர்களுக்கு ஏற்பட்டது. நபியவர்கள் தனது ஒன்பது வயதில் (சிலர் பன்னிரண்டு என்றும் சொல்வர்) ஒரு வர்த்தகக்குழுவுடன் சிரியா வரை சென்றிருந்த வேலையில் போஸ்திராஸ்க்கு அருகில் ஒரு மடத்தில் அக்குழு இளைப்பார நின்றது. அப்போது அங்கு வாழ்ந்து வந்த பஹீரா எனும் கிறிஸ்தவ மதகுரு சிறுவருடன் நடத்திய கலந்துரையாடலின் மூலம் அவர் ஒரு இறைத்தூதர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். மேலும் அபூதாலிபிடம் “உமது சகோதரனது மகனுக்கு மகத்தானதொரு எதிர்காலம் இருக்கின்றது.” என்பதையும் உறுதிப்படுத்தினார்.

நபியவர்கள் தனது 25ஆவது வயதில் கதீஜா பிராட்டியாரை மணம் முடித்தார்கள். கதீஜா நாயகி அவர்கள் திருமணம் முடித்த நாள் தொட்டு நபியவர்களுடைய அனைத்து காரியங்களுக்கும் பக்க பலமாக இருந்தார்கள். ஆரம்ப காலம் தொட்டே அராபிய மக்களிடையே இருந்த அறியாமையை நினைத்து பெரிதும் மனம் உடைந்தவராக நபியவர்கள் காணப்பட்டார்கள். அதனால் மன நிம்மதிக்காக ஹிராக்குகைக்கு தியானத்தில் ஈடுபடுவதற்காக செல்வார்கள். இந்நிலை தொடரவே, தனது 40ஆவது வயதில் ரமழான் மாதத்தில் ஓர் இரவு வேளையில் நபியவர்களுக்கு தூதுத்துவம் கிடைத்தது. இக்ரஃ – “ஓதுவீராக படைத்த உமது இறைவனில் பெயரால்” என ஆரம்பிக்கும் (குர்ஆனிலே அத்தியாயம் 96இலுள்ள 1-5 வரையான வசனங்கள்) 5 இறைவசனங்கள் நபியவர்களுக்கு அருளப்பட்டன. ஹிராக்குகையில் தான் கண்ட காட்சிகளினால் அச்சம் கொண்ட நபியவர்களை கதீஜா நாயகி அவர்கள் வரகாஃ பின் நவ்பல் என்பவரிடம் அழைத்துச் செல்லவே அவர் நபியவர்களுக்கு தூதுத்துவம் கிடைத்திருப்பதையும் அதனால் வருங்காலத்தில் நிறைய இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டார். ஆரம்பத்தில் கதீஜா நாயகி , அபூபக்கர்(ரழி) உட்பட ஒரு சிலரே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமையால் அவர்கள் பல இன்னல்களையும் அனுபவித்தனர். இருப்பினும் அவர்கள் தம் கொள்கையிலிருந்து விடுபடவில்லை. அதேவேலை இஸ்லாம் அடிமைகளை அதிகமாக தம் வசம் ஈர்த்துக்கொண்டிருந்தது. நபியவர்கள் தம் தூதினை மக்கத்து மக்களிடையே எடுத்தியம்பிய போது அன்னாரது குடும்பத்திலிருந்தே முதல் எதிர்ப்பு தோன்றியது. மனமுடைந்து போயிருந்த நபியவர்கள் அச்சமூகத்திடையே பல அநியாயங்களுக்கு ஆளானார்கள். இருப்பினும் தன் தூதுத்துவத்தை எத்தி வைக்கவென தாயிஃப் நகருக்குச் சென்றார். சென்ற இடங்களிலெல்லாம் கல்லடிகளுக்கும் சொல்லடிகளுக்கும் ஆளாயினர். ஆரம்ப காலங்களில் உண்மையாளர், நம்பிக்கைக்குறியவர் என்றெல்லாம் போற்றப்பட்ட நபியவர்கள் தனது தூதுத்துவத்தை எத்தி வைக்க முயற்சித்த போதெல்லாம் பொய்யர், கவிஞர், ஏமாற்றுக்காரர், சூனியக்காரர் மற்றும் பைத்தியக்காரர் என்றெல்லாம் இழிவு படுத்தப்பட்டார்கள். ஆயினும் தம் கொள்கையிலிருந்து நபியவர்களை இம்மியளவும் எதிரிகளால் அசைக்க முடியவில்லை.

இந்நிலை தொடரவே யத்ரிபிலிருந்து வந்த சில மக்கள் நபியவர்களின் போதனைகளைக் கேட்டு இஸ்லாத்தில் நுழைந்ததோடு தம் தேசத்திலும் இத்தூய மார்க்கத்தினைப் பரப்பினர்.
தனது சொந்த மண்ணில் கிடைடக்காத வரவேற்பும் மரியாதையும் யத்ரிப் மண்ணில் நபியவர்களுக்கு கிடைத்தது. மக்காவில் நபியவர்களும் அன்னாரின் வழி நடப்போரும் அடைந்து வந்த துன்பங்கள் ஏராளம். எனவே நபிகளார் தம்மை பினபற்றி நடக்கும் இறைநம்பிக்கைளயாளரகளை யத்ரிப் நோக்கி புலம் பெயருமாறு ஊக்குவித்தார்கள். அதன் பின் நபியவர்களும் இறைவனின் கட்டளைப்படி யத்ரிபுக்கு ஹிஜ்ரத் (குடிபெயர்ந்தார்) சென்றார்கள். அன்று முதல் அந்த யத்ரிப் நகரம் ‘மதீனத்துன் நபி’ (நபியினுடைய நகரம்) என அழைக்கப்பட்டது. அங்கு சென்றவுடன் மதீனத்து மண்ணிலே நபியவர்கள் மஸ்ஜிதுந் நபவியைக் கட்டினார்கள். அங்கு ஒரு தூய்மையான ஆட்சிையை நிலை நாட்டினார்கள்.

நபியவர்களுடைய நற்குணங்களும் இரக்க குணமும் உயரிய பண்புகளும் குர்ஆன்வழியிலான அன்னாரது வாழ்வும் பல கல் நெஞ்சங்களையும் கரைத்து கனிகளாக்கின. நபியவர்களைக் கொலை செய்வதாக சபதமிட்ட உள்ளங்களெல்லாம் அன்னாரின் உண்மை நிலை கண்டு சன்மார்க்கத்தைப் பேணி நடந்தன. மனதில் வன்மமும் பகையுணர்வும் கொண்டு மது ,மாது ,கொலை, கொல்லை, விபச்சாரம் என எதுவெல்லாம் பெரும்பாவங்களாகக் கருதப்பட்டனவோ அவற்றையெல்லாம் சர்வ சாதாரணமாக செய்து வந்த காட்டுமிராண்டித் தனமான உள்ளங்களை ஒரு பட்டப்பெயர் சொல்வதைக் கூட மகா பாவமாக கருத வைத்து , அரக்க குணம் கொண்ட மனிதர்களை உத்தமர்களாக மாற்றிக் காட்டிய மாண்பு கண்மணிகளாரையே சாரும். தம் எதிரிகளையும் மன்னித்து விடும் அவர்களது சிந்தை எதிரிகள் மனதிலும் வியத்தகு மாற்றங்களை உண்டு பன்னின. அதனால் அவர்கள் இஸ்லாத்தை தழுவவும் செய்தனர். இதனை பின்வருமாறு அல்குர்ஆன் விளக்குகிறது. ‘மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த, மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்’. (68:4)

மேலும் நபிகளாருடைய வாழ்வு மனித குலத்திற்கு ஒரு முன்மாதிரியாகவே அமைந்திருந்தது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இதனை ‘’நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.’’ ( 33:21) என ஆல்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
அரசியல், குடும்ப வாழ்வு, பொதுவாழ்வு என எல்லா நிலையிலும் அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவே அன்னாரது வாழ்க்கை அமையப்பெற்றிருந்தது. முஹம்மத் நபி(ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் இறைவனின் கட்டளைப்படியே அமைந்திருந்தன. எந்நிலையிலும் தன் சமூகத்தாரைப் பற்றியே தவிர தனக்கென எதையும் எதிர்பாராத தூய்மையான உள்ளத்தினைக் கொண்டவராகவே நபியவர்கள் விளங்கினார்கள். மேலும் அன்னார் எந்நிலையிலும் நீதி வழுவா ஆட்சியாளராகவே விளங்கினார்கள். “தனது மகள் பாத்திமா (ரழி) அவர்கள் தவறு செய்தாலும் நான் அவரை கண்டிப்பேன்.” என்று கூறிய அன்னாரது வார்த்தைகளிலிருந்து அவர்கள் எந்த அளவு நீதி தவறாத ஒரு ஆட்சியாளர் என்பதை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
அவர்களுடைய தலைமைத்துவம் மக்கள் மனதை ஈர்கக்கூடிய வகையில் அமையப்பெற்றிருந்தது.

மதீனாவிர் அமைதியானதொரு ஆட்சி நிலவிய போதிலும் நபியவர்களின் ஆட்சியை சீர்குழைத்துஅன்னாரை அழித்து விட வேண்டுமென மக்கத்து எதிரிகளும் மதீனாவின் நயவஞசகர்கள் சிலரும் முயற்சி செய்து வந்தனர். ஆயினும் அவ்வாரான சூழ்ச்சிகளையும் எதிரிகளின் தாக்குதல்களையும் முறியடித்து மக்காவை வெற்றி கொண்டார்கள். தனக்கு பாரிய இன்னல்களைக் கொடுத்த மக்கத்து மக்களின் முன் வெற்றி வாகை சூடிக்கொண்டு நின்ற போதிலும், தம்மை எதிர்த்து நின்றவர்கள் மீது எந்தவொரு பழிவாங்கள் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கினார்கள். அன்னாரது பெருந்தன்மையைக் கண்டு பெரும்பாலான மக்கா வாசிகள் இஸ்லாத்தினுள் நுழைந்தார்கள். கர்வம் கொண்டவர்களாகவும் இறைவனுக்கு
இணைவைத்தும் வந்த மக்களை ஒரே இறைவனை வணங்க வைத்து அரேபிய தீபகட்பம் முழுவதிலும இஸ்லாமிய ஆட்சியினை நிறுவினார்கள்.

இவ்வாறானதொரு தூய சமூகத்தை உருவாக்கிய நம் கண்மணிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜுக்குப் பின் தனது 63ஆவது வயதிலே இவ்வுலகை விட்டு இறைவனடி சேர்ந்தார்கள். (நிச்சயமாக நாம் அனைவரும் இறைவனிடமே மீளவிருக்கிறோம்.)
அன்று தொடக்கம் இன்று வரை முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடைய பெயரைக் கேட்கும் போதெல்லாம் சஞ்சரிக்கும் நெஞ்சங்களெல்லாம் சாந்தியடைந்து கொண்டிருக்கின்றன.

சப்ரைஸ்

பீட்டரை தவிர வண்டியில் மற்ற எல்லோரும் தூங்கி வழிந்து கொண்டு இருந்தார்கள். வண்டியோட்டிக் கொண்டிருந்த நிமலின் கண்கள் கூட மூடியது. அதை கண்ட  பீட்டர் பீதியில் அவனிடம் எதையெதையோ போலியாக பேசிக்கொண்டு வந்தான். அவன் வீட்டில் வளராத பூனையை பற்றி கேட்டான், அவனது ஐ போன் டென் என்ன மாடல் என்று கேட்டான், அவன் எடை எந்த வயதில் நூறை தொட்டது என்று பேச்சு கொடுத்தான். பின்னால் ப்ரீத்தி, கவி, ஷைலா மூவரும் ஒருவர் மீது ஒருவர் புரண்டு தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.

வீவீல்ல்ல்ல்..!

ஓடிக்கொண்டு இருக்கும் வண்டிக்குள் இருந்து பிரேக் போட்டதை போன்ற சத்தம். நிஜமாகவே பிரேக்கை மிதித்து இருவரும் பின்னால் பார்த்தனர். ஷைலா காட்டுத்தனமாக கத்தினால், அவளது கண்கள் மேலே மேலே சென்றது, உடல் துடித்தது. அவள் அருகே இருந்த ப்ரீத்தியும், கவியும் திடுக்கிட்டு எழுந்தனர். ஷைலா எழுத்து காருக்கு பின்னால் ஓடினால். அவள் பின்னால் ப்ரீத்தியும் சொன்றாள். “வேக்..வேக்” என்று வாந்தி எடுக்கும் சத்தம் மட்டும் தான் கேட்டது பீட்டருக்கு.

ஒரு  மாரியாக அவளை காருக்கு அழைத்து வந்து உட்கார வைத்தனர்.  ப்ரீத்தியிடம் என்ன ஆனது என்று கேட்டான். தெரியவில்லை “புட் பாய்சனாக” இருக்கலாம், ஆனால் இதற்கு மேல்  அவளால் நகர முடியாது. இரவாகிக்கொண்டு இருக்கிறது. அருகில் எங்காவது விடுதி இருந்தால் இந்த இரவு மட்டும் தங்கி விட்டு போக முடியுமா என்று தயங்கியபடி கேட்டாள். பீட்டர் முழித்தான்.

ஆரம்பத்தில் இந்த பயணம் ஒரு இரவு தங்கிவிட்டு மறுநாள் திரும்பி வரும் பயணமாக தான் இருந்தது. அதற்கு காரணம் விடிந்தால் பீட்டரின் 22வது பிறந்த நாள். அவர்கள் ஐவருமே ஒரு அலுவலகத்தில் தான் வேலைப்பார்க்கிறார்கள்.  அந்த நண்பர் குழுவில் ஏதாவது ஒரு பிறந்த நாளை இப்படி வெளியில் நண்பர்களோடு கொண்டாட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது பீட்டரின் பிறந்த நாள் அன்று கை கூடி வந்தது ஆனால் அவர்கள் சென்றிருந்த மாத்தர கடற்கரை ஓட்டலின் சுற்று வட்டாரத்தில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டதால் அவர்கள் திட்டத்தை மாற்றிக்கொண்டு மாலை நேரமாக கிளம்பிவிட்டார்கள். இப்போது மறுபடி இரவு தங்கியாகவேண்டிய சூழ்நிலை.

கவியும் பீட்டரும் மொபைலில் அருகில் ஏதும் அறை இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தார்கள்.  நீண்ட நேரமாக தேடியும் எந்த  அறையும் கிடைக்கவில்லை. காருக்குள் முனங்கியபடி படுத்துக்கிடந்த ஷைலாவை பார்க்க பாவமாக இருந்தது.

திடீர் என்று பீட்டருக்கு ஏதோ நினைவு வந்தது. அவனது பள்ளி நண்பன் திரு இந்த சுற்று வட்டாரத்தில் தான் வசிக்கிறான் அவனிடம் கேட்டால் உதவி கிடைக்கும் என்று மொபைலில் அவனை அழைத்தான். திருவிடம் நடந்ததை சொல்லி ஒரு இரவு மட்டும் தங்க இடம் வேண்டும் என்று உதவி கேட்டான். இருவரும் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டு இருந்ததை பார்க்க அறை கிடைத்துவிட்டதை போல தான் இருந்தது கவிக்கு.

பீட்டர் திரும்பி வந்தான். ஷைலாவின் நிலையை பார்த்தான். அவள் ப்ரீத்தி மடியில் படுத்து முனங்கியபடி இருந்தாள். கவியும் நிமலும் அவன்  என்ன சொல்ல போகிறான் என்பதை போல ஆர்வமாக இருந்தனர். பீட்டர் பயப்பட ஒன்றும் இல்லை அருகில் தான் நண்பனின் கெஸ்ட் அவுஸ் ஒன்று இருக்கிறது, இன்று இரவு மட்டும் அங்கு தங்கிவிட்டு காலையில் புறப்பட்டுவிடலாம் என்று கூறி, ப்ரீத்தியை மெல்ல தொட்டு, “கொஞ்சம் பொறுத்துக்கொள் போய் சேர்ந்துவிடலாம்” என்றான். ப்ரீத்தி வித்தியாசமான ஒலி எழுப்பினாள்.

திரு சென்ன முகவரியின் படி அந்த இடம் பக்கமாக தான் இருந்தது. சொல்லப்போனால் அவர்கள் சென்றிருந்த ஓட்டலைவிட இந்த இடம் ரம்மியமாக இருந்தது. நீண்ட முற்றம். நிறைந்த செடி கொடிகள், “வாலி பால்” விளையாட இடம். வீட்டுக்கு பின்னால் நீச்சல் தடாகம். இந்த அவசர நிலையில் இது மிகப்பெரிய உதவியாகவே பட்டது. அவர்கள் வீட்டை நெருங்கும் போது திரு அங்கே நின்றுக்கொண்டு இருந்தான்.  இவனுக்கு இப்படி ஒரு வீடா என்று தோன்றும் படியான உருவம். கேட்டை திறந்து உள்ளே சென்றனர். ஷைலா எழுந்து நடக்க மறுத்துவிட்ட படியால் நால்வருமாக சேர்ந்து அவளை தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்று படுக்க வைத்தார்கள்.

திரு, பீட்டரை அழைத்து தனியாக ஏதோ பேசிக்கொண்டு இருந்தான். அவன் விடைப்பெற்று செல்லும் போது காலையில் தாமதித்துவிடாதே என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினான்.

ஷைலாவை பார்த்துக்கொண்டு ப்ரீத்தி அவளுடன் அதே அறையில் இருந்தாள், பீட்டர், கவி, நிமல் மற்ற அறையை எடுத்துக் கொண்டனர். பீட்டர் நேரம் தாமதிக்காமல் எல்லோருக்கும் இரவு உணவு வாங்கி வந்து விட வேண்டும் என நிமலை அழைத்தான். நிமலுக்கு மட்டும் தான் வண்டி ஓட்ட தெரியும் என்பதால் அவன் நொந்துக்கொண்டே பீட்டரோடு புறப்பட்டான்.

வீடு அமைதியானது. அந்த இடம் ஒரு தனியார் இடம் என்பதால் கடும் நிசப்தமாக இருந்தது. மெல்ல ஷைலாவின் உருமல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தது. கவி அவனது அறையில் இருந்து மெல்ல வெளியே வந்தான். பீட்டர் சென்றுவிட்டதை உறுதி படுத்திக்கொண்டான். அடுத்து அதே போல ப்ரீத்தி வெளியே வந்தாள். அதை தொடர்ந்து ஷைலாவும் வெளியே வந்தாள். ஷைலா நல்ல திடமாக இயல்பாக இருந்தாள். முகம் மலர்ச்சியாக, பிரகாசமாக இருந்தது. மூவரும் ஒருவர் ஒருவரை பார்த்து சிரித்துக்கொண்டார்கள்.

இவ்வளவு நேரமாக அரங்கேறியது எல்லாம் நாடகம் தான். பீட்டரின் இந்த பிறந்த நாளை அவன் மறக்க முடியாத ஒரு நாளாக, அவனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதத்திலும் கொண்டாவது தான் அவர்களது திட்டம். பீட்டர் அவனது அலுவலகத்தில் வேலை செய்யும் ஜெனிபர்க்கு கடந்த வாரம் தனது காதலை தெரிவித்திருந்தான். ஆனால் ஜெனி அவளது பதிலை சொல்லாமல் பொறுமையாக இருந்தாள். அவனுடைய பிறந்த நாளில் தன்னுடைய சம்மதத்தை சொல்ல போவதாக அவள் ப்ரீத்திக்கும் ஷைலாக்கும் சொல்ல, இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி திட்டம் உருவானது.

மாத்தரையில் அவர்கள் இருந்த ஓட்டலில் அதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளும் அவர்கள் செய்து தான் வைத்திருந்தார்கள். ஆனால் வெள்ள எச்சரிக்கையால் எல்லோரையும் வெளியேறும் படி சென்னதில் திட்டம் குளறுபடியானது.

இரவு பன்னிரெண்டு மணி நெருங்கும் போது அவர்கள் இருக்கும் இடத்துக்கு ஜெனி பிறந்த நாள் கேக்கோடு வருவதாக பேசி வைத்திருந்தார்கள். அந்த திட்டத்தை வெற்றிபெறச் செய்யவே எல்லோருமாக சேர்ந்து இந்த நாடகத்தை அரங்கேற்றினார்கள்.

ஜெனிக்கு கால் செய்து பேசினார்கள். இப்போது வந்திருக்கும் இந்த புது வீட்டின் முகவரியை ஜெனிக்கு அனுப்பினார்கள். எல்லாம் தயாராக இருந்தது. மூவருமாக திட்டத்தை மறுபடி சரி பார்த்தனர். இப்போது மணி இரவு எட்டு சரியாக பத்து மணி போல எல்லோரும் படுக்கைக்கு போய்விட வேண்டும்.  பதினொன்று முப்பது போல ஜெனி இந்த வீட்டுக்கு அருகில் அவளது நண்பனோடு வந்துவிடுவாள். சத்தம் எழுப்பாமல் எல்லோரும் வெளியே சென்று அவளை அழைத்துக்கொண்டு வந்து சரியாக பன்னிரெண்டு மணிக்கு பீட்டரை எழுப்பி அவன் முகத்தில் பேராச்சரியத்தை உண்டாக்க வேண்டும். எந்த பிரச்சனையும் இல்லாமல் திட்டம் சரியாக இருந்தது. ஆனால் ஷைலாவின் மிதமிஞ்சிய நடிப்பு தான், பீட்டர் கண்டு பிடித்துவிடுவானோ என்று என்னை  பயம் கொள்ள வைத்தது என்று கவி கூறினான். அதை ஏற்க மறுத்தாள் ஷைலா.

பீட்டரும் நிமலும் திரும்பி வந்த போது நேரம் இரவு ஒன்பதை தொட்டிருந்தது. கார் சத்தம் கேட்டதும் ஷைலா சென்று படுத்துக்கொண்டாள். பீட்டர் இரவு உணவை கொண்டு வந்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு ப்ரீத்தியிடம் இப்போது ஷைலாவிற்கு எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவள் கொஞ்சம் பரவாயில்லை. நன்றாக தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என்று சமாளித்தாள்.

பீட்டர் அலுவலக லாப்டப்பை திறந்து வேலை பார்க்க ஆரம்பித்தான். கவியும் நிமலும் அங்கிருந்த ஒரு சொகுசு கட்டிலில் படுத்தபடி மொபைலை நோண்டிக்கொண்டு இருந்தனர். பீட்டர் எங்கு வந்தாலும் அலுவலக லாப்பை எடுத்துக்கொண்டு வந்து ஆபிஸ் வேலைகளை பார்ப்பது எப்போதும் எரிச்சலை உண்டுபண்ணுவதாக இருக்கும். நிமல் கடிந்துக்கொண்டான். அதை தூக்கி வைத்துவிட்டு காருக்குள் ஒரு சரக்கு பாட்டில் இருக்கிறது அதை கொண்டு வா திறக்கலாம் என்றான். இருவரும் அவனை ஒரு மாதிரியாக பார்த்தனர்.  காலை வரை இங்கே தானே இருக்க போகிறோம். கொண்டு வா என்றான். கவியும் பீட்டரும் இப்போது இந்த சரக்கு வேண்டாம் என்றே நினைத்தனர். நிமலுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவனே சென்று எடுத்து வந்தான். பீட்டரின் லாப்டாப்பை எடுத்துக்கொண்டு சென்று ப்ரீத்தியின் அறையில் கொடுத்து,0” அவன் கேட்டால் கொடுக்காதே” என்று செல்லிவிட்டு வந்தான். ப்ரீத்தி அவன் கையில் இருக்கும் பாட்டிலை பார்த்து திடுக்கிட்டாள்  “ஏய் இப்போ ஏன் இதெல்லாம்” என்று பாய்ந்தாள். அதெல்லாம் ஒன்றும் ஆகாது பிளான் சரியாக நடக்கும் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றான்.

நேரம் சென்றுக்கொண்டு இருந்தது. ப்ரீத்தி எல்லாம் சரியாக நடக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தாள். அடிக்கடி நேரத்தை பார்த்தாள். இரவு பதினொரு மணியை நெருங்கும் போது ஷைலாவும் ப்ரீத்தியும் இரவு பார்ட்டிக்கு தயாராகினர். சற்று தள்ளி பீட்டரின் அறையில் நிலமை கொஞ்சம் மோசமாக இருந்தது. எப்போது குடித்தாலும் அசராமல் இருக்கும் நிமல் மட்டையாகியிருந்தான். பீட்டர் கொஞ்சமாக குடித்துவிட்டு அமைதியாக பாடல் கேட்டபடி இருந்தான். நிமலின்  நிலை பற்றி ப்ரீத்திக்கு தெரியவந்தால் தன்னை என்ன செய்வாளோ என்ற என்னத்தோடு கவி மனதுக்குள் புலம்பிக்கொண்டு இருந்தான்.

“பீர்ர்ர்ர்ர்”

போதையில்  இருந்த  நிமல் நீர்யானையை போல  வாயை விரித்து பீட்டர் மீது வாந்தி எடுத்தான், சரிந்து நிலத்தில் விழுந்தான். இருவருமாக அவனை மிக சிரமப்பட்டு தூக்கி கட்டிலில் போட்டனர். அறையை உடனடியாக சுத்தம் செய்தனர். கவி நேரத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான். மணி பதினொன்று முப்பதை நெருங்கிக்கொண்டு இருந்தது. பீட்டர் அணிந்திருந்த ஆடையிலேயே நிலத்தை சுத்தம் செய்துவிட்டு அந்த துணியை எரிய வீட்டுக்கு வெளியே வர பீட்டர் அந்த அறைக்குள் இருந்த குளியலறைக்குள் நுழைந்தான். வெளியே வந்த கவி அங்கே நல்ல அலங்காரத்தோடு நின்றுக்கொண்டு இருந்த ப்ரீத்தியையும் ஷைலாவையும் பார்த்தான். அவர்கள் எவ்வளவு நேரம் உனக்காக காத்திருப்பது. ஜெனி வந்துவிட்டாள். வா அவளை அழைத்துக் கொண்டு வரலாம் என வீட்டின் முன்னால் சென்றனர். கவி நடத்ததை சொல்லாமல் சமாளித்துக்கொண்டு அவர்களோடு நடந்தான்.

பீட்டர் ஒரேடியாக சின்ன குளியலை போட்டுவிட்டு வெளியே வந்தான் அவனது மொபைலை பார்த்த போது அதில் திருவிடம் இருந்து சுமார் இருபது மிஸ்ட் கால் இருந்தது. நேரமும் பன்னிரெண்டை தொட்டிருந்தது. திரு பிறந்த நாளுக்கு வாழ்த்த தான் எடுத்திருக்கிறான் என எண்ணி பீட்டர் அவனுக்கு கால் செய்தான். திரு போனை எடுத்ததுமே மூச்சு விடாமல் பேசினான். அவன் பேசி முடிய பீட்டர் ஓக்கே என்று  சொல்லிவிட்டு பேய் அரைந்தது போல நின்றான். அதற்குள் வெளியே ஹாலில் ஜெனியை அழைத்து கையில் கேக்கோடு ப்ரீத்தி மற்றும் ஷைலா நிற்க, கவி பீட்டரை அழைக்க உள்ளே வந்தான் .பீட்டர் ஜெனியை பார்க்கும் முன்னரே அதிர்ச்சியில் உரைந்து போய் இருப்பது அவனுக்கு விசித்திரமாக இருந்தது. கவி அவனிடம் வந்து ”வெளிய வந்து பாரு மச்சா உனக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு” என்று  கூறி அழைக்க பீட்டர் அதுவரை அவர்களிடம் மறைத்த ஒரு விடயத்தை சொன்னான்.

அந்த வீடு திருவின் வீடு கிடையாது. அவனது பராமரிப்பில் இருக்கும் ஒரு கெஸ்ட் அவுஸ். அதன் உரிமையாளர் பயங்கர கராரான பேர்வழி. முன்னால் மிலிட்டரி வீரர். அவர் எப்போதாவது தான் அந்த வீட்டுக்கு வருவார். அதுவும் சில நாட்களுக்கு முன்னாலே சொல்லிவிட்டு வருவார். அந்த தைரியத்தில் தான் திரு அவர்களுக்கு வீடு கொடுத்தான். ஆனால் இப்போது அந்த மனிதர் முன்னரிவிப்பு இன்றி  வீடு நோக்கி வந்துக்கொண்டு இருப்பதாகவும், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறிவிடும் படியும், இல்லை என்றால் என் உயிரை வாங்கிவிடுவான் என்று கதறினான்.

பீட்டர் சொன்னதை கேட்ட கவிக்கும் பேச்சில்லை. உடனடியாக வீட்டை விட்டு புறப்படுவது முடியாத காரியம். நிமலுக்கு மட்டும் தான் வண்டியோட்ட தெரியும் அவனும் இப்போது இல்லை. இத்தனை பெண்களோடு சில ஆண்களை அதுவும் குடிபோதையில் இருக்கும் ஆண்களை பார்த்தால் வீட்டு உரிமையாளன் என்ன செய்வான் என்று நினைத்து பேச்சற்று போயினர்.

பீட்டர் அறையை விட்டு வெளியே வர அங்கே ஜெனி கண்ணை பறிக்கும் அழகோடு கையில் கேக்கோடு நின்றுக்கொண்டு இருந்தாள். அவர்கள் பக்கத்தில் நடந்துக்கொண்டிருப்பது பற்றி ஒன்றும் தெரியாமல் ப்ரீத்தியும், ஷைலாவும்  வாய் நிறைந்த புன்னகையோடு நின்றுக்கொண்டு “சப்ரைஸ்” என்று கத்தினர். அதே நேரத்தில் வீட்டு முற்றத்தில் ஒரு ஜீப் வண்டி நுழையும் சத்தமும் அவர்களின் காதில் கேட்டது.

 

திருமணம் தொடர்பான பொது சட்டம்

“சட்டம் ஒரு வெளிச்சம்” என்பது சட்டத்தை புரிய வைப்பதற்கான மூன்று மொழிகளில் ஆன ஒரு சட்டபூர்வ உரையாடல் தொகுப்பாகும். லத்தின் மொழியின் படி “ignorantia legis neminem excusat” அதாவது சட்டத்தை அறியாமை, மன்னிக்க முடியாதது. இலங்கை சட்ட மாணவர் சங்கத் துடைய Pro bono குழு, சட்டத்தை இலகுவாக்கி பொது மக்களிடம் கொண்டு செல்லும் பணியை எமது நாட்டில் மேற்கொள்கிறது. இந்த ஆறாவது கலந்துரையாடல் திருமண சட்டங்கள் தொடர்பாக  தனியாரின் உரிமைகள் மற்றும் கடமைகள் விளக்குகிறது.

கீழ்வரும் உரையாடல், வெறிட்டஸ் அக்காடாடேமியாவின் தலைவரும், லண்டன் பல்கலைக்கழக  LLB பட்டதாரியான திரு. நிஷால் கெஹேனாவுடன் நடைபெறுகிறது.

  1.  சட்டப்படி திருமணம் என்பது யாது?

வெவ்வேறுபட்ட திருமணங்களுக்கு உரிய சட்டங்கள் யாவை?

திருமணம் என்பது ஒரு சுதந்திரப் பெண்ணும் ஆணும் பரஸ்பர ஈடுபாட்டுடன் இணைந்து கணவன் மனைவியாக வாழ சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட இணைப்பு உடன்படிக்கை ஆகும்.

இலங்கை திருமண பொதுச் சட்டம் ஆனது ரோமன் டச்சு சட்டம் மற்றும் ஆங்கில சட்டத்தின் செல்வாக்கைப் பெற்றுள்ளது. திருமணப்பதிவு சட்டமூலம்  ( MRO) இலக்கம் 19, 1907 ஆனது பொதுச் சட்டத்தின் கீழான திருமணம் தொடர்பான சட்டங்களை விளக்குகிறது. வெவ்வேறுபட்ட மத இனங்களைச் சார்ந்த தனிப்பட்ட மக்களுக்கு இடையிலான திருமணங்களுக்கு சட்டமூலம் செல்லுபடியாகும். இருப்பினும் கண்டிய சிங்கள மக்கள் தங்கள் திருமண சட்டங்களை நிர்வகிக்க பொதுச் சட்டம் அல்லது கண்டிய சட்டத்தை தேர்ந்தெடுக்க முடியும். மேலும் இச்சட்ட மூலமானது முஸ்லிம் சமூகத்தின் திருமண உடன்படிக்கைகளை நிர்வகிக்க பயன்படுத்தப் படுவதில்லை. மாறாக இஸ்லாமிய சட்டத்தின்படி அவை நிர்வகிக்கப்படுகின்றன.

 

2. செல்லுபடியாகும் திருமணங்களின் வகைகள் யாவை?

பதிவு செய்யப்பட்ட திருமணம்

திருமண பொதுச் சட்டத்தின் (MRO) முன்னுரையின் படியும் இஸ்லாம் மதத்தை பின்பற்றாத எல்லா குடிமக்களும் MRO சட்டத்தின்படி திருமண பதிவில் இணைய முடியும்.

திருமண பதிவானது பிரிவு 23 தொடக்கம் 36 வரையிலான சட்டத்தின் ஊடாக படிப்படியாக நடைபெறும். பின் MRO வின் பிரிவு 26 சட்டத்தின்படி திருமண சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு  MRO இன் கீழ் திருமணம் செல்லுபடியானதாக அறிவிக்கப்படும்.

பிரிவு 23(1)- பத்து நாட்களுக்கு இலங்கையில் வசித்துள்ளதை உறுதிப்படுத்த இருவரில் ஒருவர் தாம் குடியிருந்த பிரதேசத்தின் பதிவாளருக்கு அறிவித்தல் வழங்க வேண்டும்.

பிரிவு 23(2)- இருவரும் வெவ்வேறு பிரதேசத்தை சேர்ந்தவர் ஆகின் பதிவாளருக்கு அறிவிக்க வேண்டும்.

பிரிவு 23(3)- இருவரில் ஒருவர் இலங்கைப் பிரஜை அல்லாவிடின் மற்றவர் பதிவாளருக்கு அறிவிக்கவேண்டும்.

பிரிவு 23(4)- தம்பதி இருவரும் இலங்கைப் பிரஜை இல்லாவிடின் பதிவாளருக்கு அறிவிப்பதுடன் இருவரும் குறைந்தபட்சம் நான்கு நாட்களாவது திருமணத்துக்கு முன் இலங்கையில் தங்கியிருக்க வேண்டும்.

பிரிவு 25 – அறிவித்தல்களை பெற்றோரின் பின்பு பதிவாளர் திருமணம் தொடர்பான தகவல்களை திருமண பதிவு புத்தகத்தில் பதிவு ஏற்றுவார். இது திருமண அறிவித்தலை பிரசுரம் செய்வதாக அமைவதுடன் பதிவாளர் பிரிவு 26 படி திருமண சான்றிதழை வழங்குவார்.

பாரம்பரிய திருமணம் (Customary marriage)

பாரம்பரிய கலாசாரத்தின் ஊடாகவும் விழுமியங்கள் ஊடாகவும் மேற்கொள்ளப்படும் திருமணங்களை நீதிமன்றம் ஏற்கின்றன. ஒரு பாரம்பரிய திருமணத்திற்குரிய அனைத்து முக்கிய சடங்குகளும் நடைபெறும் போது நாட்டின் சட்டங்களுக்கு அப்பால் அத்திருமணம் செல்லுபடியானதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

 

3. திருமணத்தை பதிவு செய்வது ஒரு அத்தியாவசியத் தேவையா?

சட்டத்தின்படி திருமணத்தை பதிவு செய்தல் அத்தியாவசியமானது அல்ல. இருப்பினும் திருமண பதிவேட்டில் பதிவு செய்தல் திருமணத்திற்கு சிறந்த ஆதாரமாக அமையும். திருமண புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ளும். ( பிரிவு 41 MRO )

Cohabitation அதாவது தம்பதிகள் இணைந்து வாழ்வதற்கும் பாரம்பரிய திருமண முறைக்கும் இடையிலான சட்ட ரீதியான வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இருப்பினும் பல்வேறு இன ங்களுக்கு உரிய பாரம்பரிய சம்பிரதாயங்களும் பழக்க வழக்கங்களாலும் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய திருமணமானது சட்டரீதியாக பதிவு மேற்கொள்ளப்படாவிட்டாலும் ஒரு செல்லுபடியான திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

 

4. யார் யார் திருமண பந்தத்தில் இணைய முடியும்?  வயது,தகுதி, தடை செய்யப்பட்ட உறவுமுறைகள்

1995 இன் முன்பு பிரிவு 15 இன் படி ஆண்களுக்கு 16 வயதாகவும் பெண்களுக்கு 12 வயதாகவும் திருமண வயது காணப்பட்டது. பின்பு 1995 இலக்கம் 18 டின் படி, திருமண பந்தத்தில் இணைய தம்பதியில் இருவரும் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என திருத்தி அமைக்கப்பட்டது. இச்சட்டமானது (தியாகராஜா v குருக்கள் (1923 25 NLR 69) என்ற வழக்கின் படி உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வழக்கில் 11 வருடம் ஒரு மாதம் வயது நிரம்பிய சிறுமி திருமண பந்தத்தில் இணைக்கப்பட்டார். இருப்பினும் இத்திருமணம் செல்லுபடியாகாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ( (குணரத்தினம்v பதிவாளர் நாயகம்)

பிரிவு 16 MRO, தடை செய்யப்பட்ட திருமண இணைப்புகளை பின்வருமாறு விளக்குகிறது.

  • தம்பதியில் இருவரில் ஒருவர் நேரடி வாரிசாக அமைதல்.
  • சகோதரி சகோதரனுக்கு இடையிலான உறவு ( பாதி ரத்தம் அல்லது முழு ரத்த சொந்தம் )
  • பெற்றோருக்கும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் இடையிலான உறவு.

பிரிவு 18 படி தம்பதியில் இருவரில் ஒருவராவது ஏற்கனவே திருமண பந்தத்தில் இணைந்து, சட்டப்படி அந்த திருமணம் செல்லுபடியற்றது என நிரூபிக்கும் வரை பிரித்தோரு நபருடன் திருமணம் செல்லுபடியற்றது ஆகும். இது ( கேடியாராசி v கேடியாராசி மற்றும் பலர் 2004 3 SLR 116) என்ற வழக்கின் படி உறுதிப்படுத்தப்படுகிறது.

MRO இன் பிரிவு 17 படி, மேற்குறிப்பிட்ட தடைசெய்யப்பட்ட உறவு முறைகளில் திருமணம் மேற்கொண்டால் அல்லது இணைந்து வாழ்தல் நடவடிக்கையில் ஈடுபட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். தண்டனையாக சிறைவாசம் அல்லது கடுங்காவல் தண்டனை ஒரு வருடத்திற்கு குறையாமல் வழங்கப்படும்.

 

5. இணைந்து வாழ்தல் (cohabitation) என்பது யாது?

அதாவது இரு நபர்கள் நண்பர்களாலும் உறவினர்களாலும் கணவன்-மனைவியாக வாழ்வதாக அடையாளம் காணப்படும் நிலை இணைந்து வாழ்தல் எனப்படும். பாதிக்கப்படும் வரை இந்த உறவு பிறரின் அனுமானத்தில் தங்கியுள்ளது. Habit ( பழக்கம் ) என்பது இருவர் குறித்த காலப்பகுதியில் கணவன் மனைவியாக இணைந்து வாழ்வதைக் குறிக்கும். Repute ( நற்பெயர் ) என்பது இருவர் சமூகத்தில் திருமண தம்பதியாக ஏற்றுகொள்ளப் படுதலைக் குறிக்கும்.

ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக இணைந்து வாழும்போது திருமணத்தின் விளைவாக தம்பதி இணைந்து வாழ்வதாகவே சட்டம் எடுத்துக்கொள்ளும். இன்நிலை விபச்சாரம் அல்ல என்ற நிலையில் சட்டம் அவர்களை தம்பதியாக ஏர்கும்.

Habit, repute நிலையாக இணைந்து வாழும் உறவு நிலை வெறும் அனுமானத்தின் மூலம் செல்லுபடியான திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மாறாக அவர்கள் தம்பதியாக வாழ்வதற்கான போதுமான ஆதாரங்கள் எடுத்துக் காட்டப்பட வேண்டும். இணைந்து வாழும் உறவு நிலைக்கு எதிர்வாதமாக இருவரும் சட்டரீதியான திருமணத்தில் இணையாமையும், விபச்சாரம் ரீதியான உறவில் ஈடுபடுவதற்கான சந்தேகத்தையும் ஏற்படுத்தும்.

வழக்கு ( பெருநாண்டோ V டேபேரா ) இன்படி தம்பதி இருவரும் இணைந்து வாழும் நிலையில் மரணமடைந்து விட்டனர். தம்பதிக்கு இடையே யான எந்தவித சட்ட ரீதியான திருமண பதிவு இல்லாவிடினும், தம்பதியின் நடவடிக்கை மற்றும் இருவருக்கும் இடையிலான புரிந்துணர்வு காரணமாக நீதிமன்றம்  தம்பதியின் Habit மற்றும் Repute உறவு நிலையை திருமணமாக ஏற்றுக்கொண்டது.

கண்டியின் சட்டத்தின்படி Habit மற்றும் Repute உறவு நிலைக்கான அனுமானங்கள் செல்லுபடியாவதில்லை. கண்டியின் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டமூலத்தின் படி (KMDA) திருமணத்தை பதிவு செய்தல் கட்டாயமானதாகும். MRO அல்லது KMDA இன் படி பதிவு செய்யப்படாத எந்த திருமணமும் செல்லுபடியான திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

 

6. Customary Marriage ( பாரம்பரிய திருமணம்) என்பது யாது?

பாரம்பரிய திருமணம் என்பது ஒரு நாட்டால் அங்கீகரிக்கப்பட்டு பாரம்பரிய வழக்கங்கள் மற்றும் சடங்குகளுக்கு ஏற்ப நடத்தப்படும் திருமணமாகும். MRO இல் இது தொடர்பான சட்ட ரீதியான பிரிவுகள் காணப்பட்டாலும் பல தரவுகள் வழக்குகளின் மூலம் நிரூபிக்க படுகின்றன. பாரம்பரிய திருமணம் ஆனது குறித்து இன மத பிரதேச மக்களிடம் காணப்படும் சடங்கு முறை மூலம் நடத்தப்படுகின்றது.

பாரம்பரிய திருமணம் ஆனது, Customary laws ( வழக்கச் சட்டம் ) அடிப்படையில் நிர்வகிக்கப்படுகின்றது. கண்டிய மக்கள்  KMDA ஆலும், முஸ்லிம் மக்கள் MMDA ஆலும், யாழ்ப்பாண தமிழர், தேசவழமைச் சட்டத்தின் ஆலும் நிர்வகிக்கப்படுகின்றனர். இவை தவிர்ந்த மற்ற இன மக்கள்  MRO மூலம் திருமண பந்தத்தில் இணைய முடியும்.

 

7. இலங்கையில் காணப்படும் வெவ்வேறுபட்ட  சட்டங்கள் யாவை?

குறித்த தம்பதி மேற்குறிப்பிட்ட இனப் பிரிவுகளை சேர்ந்தவராக உள்ள நிலையில் வழக்கு சட்டங்களின்படி அவர்களின் திருமணம் நடைபெறும். இல்லாவிடின் குறித்து தம்பதி  MRO சட்டத்தின் மூலம் திருமணத்தில் இணைவர்.

உதாரணமாக கண்டியர்களின் KMDA சட்டமானது கண்டியர்களை KMDA அல்லது MRO சட்டத்தின் மூலம் திருமணத்தை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இருப்பினும் திருமணம் நிச்சயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்  என்பதில் உறுதியாக உள்ளது.

 

8. ஒரு நபர் எந்த சட்டத்தின் மூலம் திருமணத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதை தெரிவு செய்ய முடியுமா?

குறித்த நபரின் வளமை சட்டமானது அதற்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் பிற வழமைச் சட்டம் அல்லாத சட்டத்தின்கீழ் திருமணத்தை பதிவு செய்ய முடியும். பொதுவாக தம்பதியில் ஒருவர் மற்றவரின் வளமை சட்டத்திற்கு உட்படாத நிலையில் குறித்த தம்பதி தமது திருமணத்தை நிர்வகிக்கும் சட்டத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது..

கண்டியன் திருமணம்

9. நாம் கண்டியின் சட்டங்கள் பற்றி உரையாடலாமா? தம்பதியில் இருவரும் கண்டியராக இருக்கவேண்டுமா?

முகவுரை இன் படி KMDA சட்டமானது கண்டியர்களின் திருமணம் மற்றும் விவாகரத்தை நிர்வகிக்கிறது. 1850 காலகட்டத்தில் கண்டி மாகாணத்தில் வசித்து வந்த மக்களையும் குறித்த வம்சாவளியில் தொடர்ந்து வரும் தனி நபர்களையும் KMDA நிர்வகிக்கிறது.

முக்கியமாக தம்பதியில் இருவரும்  கண்டியராக அமையும்போது மட்டுமே KMDA மூலம் அவர்கள் திருமணத்தை நிர்வகிக்க முடியும். இருப்பினும் கண்டிய சட்டத்தின்படி திருமண தம்பதியினர்  KMDA அல்லது MRO இன் படி தங்கள் திருமணத்தை பதிவு செய்ய முடியும்.

 

10. கண்டியின் சட்டத்தில் பதிவு செய்தல் கட்டாயமானதா?

பிரிவு 3 (1) (a), இன் படி கண்டியின் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு நபரது திருமணமானது புனிதமானதும், KMDA அல்லது MRO இன் படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மற்றும் பிரிவு 3  (1)(b), இன் படி பதிவு செய்யப்படாததும் புனித அற்றதும்  ஆன  திருமணம் செல்லுபடியற்றதாக அமையும்.

இதன்படி கண்டியன் சட்டத்தின்படி திருமணத்தை பதிவு செய்தல் கட்டாயமானது. MRO இன் படி திருமணத்தை பதிவு செய்தாலும் கண்டியர்கள் KMDA சட்டத்தின் வரம்புக்கு உட்பட்ட இருப்பர்.

 

11. ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யும் முறையானது இன்னும் கண்டியன் சட்டத்தில் உள்ளதா?

பலதார உடமை( polygamy)மற்றும் பல பதிகள் உடமை( polyandry)கண்டியன் சட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. அவ்வாறு ஏற்படின் அது பலர் திருமணம்( bigamy) ஆக கருதப்பட்டு குற்றவியல் சட்டத்தின்படி தண்டனை வழங்கப்படும்.

12. ஒரு கண்டியன், கண்டியன் சட்டத்தை விடுத்து பொதுச் சட்டத்தின் மூலம் திருமணத்தை மேற்கொள்ள முடியுமா?

முடியும். குறித்த கண்டிய தம்பதி தங்கள் திருமணத்தை பொதுச் சட்டத்தின் மூலம் பதிவு செய்வதன் மூலம் அவர்களின் திருமணம் மற்றும் விவாகரத்து ரீதியான தரவுகள் MRO சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும்.

 

குறித்த சட்டங்கள் எதிர்கால முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு சட்டமன்றத்தினால் மாற்றமடயலாம்.

ஸியிநாத் சாகிர்

Pro bono செயலாளர் 2020-2021

மொழிபெயர்ப்பு,

கிருத்திஷா மதிவண்ணன்

தன்னார்வ எழுத்தாளர் Pro bono கமிட்டி.

 

முழுமையான உரையாடல் இலங்கை சட்ட மாணவர்கள் சங்க youtube பக்கத்தில் மூன்று மொழிகளிலும் காணக் கிடைக்கும்.

index.php