Blog Page 23

யுவினா

இருவரும் நனைந்து இருந்தனர். கடற்கரையின் ஒரு ஓரமாக மூச்சிரைத்தபடி அமந்திருந்தனர். யுவினா டீ ஷர்ட் உம் மினி ஷோர்ட்சும் அணிந்திருந்தால். கடல் நீரில் அது மொத்தமாய் நனைந்து உடலோடு ஒட்டிகொண்டு இருந்தது. ஆகாஷின் ஆர்ம் கட்டில் “ கில் மீ” என்ற வாசகம் நீரில் நனைந்து கடும் சிகப்பாய் மாறி போய் இருந்தது.

யுவினாவின் வலது கையும் ஆகாஷின் இடது கையும் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்க இருவரும் கடலையே வெறித்து பார்த்துகொண்டு இருந்தனர். அமைதியாய் ஒரு வார்த்தையும் பேசாது அமர்ந்திருந்தனர்.
வேலைத்தளத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வருடாந்த சுற்றுலாவிற்கு வந்ததில் இருந்து இந்த மாதிரி எதாவது நடக்காதா என்று ஆகாஷ் எதிர் பார்த்து இருந்தான். ஒரு மாதிரியாக அது நடப்பதற்குள் மாலை ஆறு மணி ஆகி விட்டது.

யுவினா அந்த அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்த பெண். சேர்ந்ததில் இருந்து அவளுக்கு பெரும் போட்டி நிலவுகின்றது. பத்தொன்பது வயதே ஆன நிலையில் பார்ப்பதற்கு இருபத்தி ஐந்து வயது அழகியாக தோன்றுவாள். அவள் உயரமும், நீண்ட கூந்தலும், பேச்சுக்கு நடுவே அவள் வீசும் வசீகரமான சிரிப்பும், புதிது புதிதாக அவள் அணிந்து வரும் ஆடைகளாலும் பார்ப்பவரை கொள்ளையடிப்பாள். அலுவலகத்தின் தலைமை மனேஜரில் ஆரம்பித்து டீ கொண்டு வரும் ஆபிஸ் பாய் வரை எல்லோரும் அவளிடம் பேச துடித்தனர்.
ஆகாஷ் இப்போது தான் அந்த அலுவலகத்தில் தட்டு தடுமாறி நான்கு மாதங்களை முடித்திருக்கிறான். வேலையும், அதற்கு கிடைக்கும் அந்த சம்பளத்திலும் அவனுக்கு பெரிதாக ஈடுபாடு இருக்கவில்லை. இரண்டாவது வாரமே வேலையை விட்டு விலகும் எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டு விட்டது. ஆனால் ஒரு மாதிரியாக நான்கு மாதத்தை கடத்திவிட்டான். இப்போது யுவினா மட்டும் அவனது டீமில் வந்து சேர்ந்திருக்காவிட்டால் இந்த வாரமே வேலையை விட்டு நின்றிருக்க கூடும்.

அந்த சுற்றுலாவிற்கு முதல் நாள் வரை யுவினா ஆகாஷிடம் பெரிதாய் எந்த நகர்வும் காட்டியதில்லை. எப்போதாவது ஆகாஷின் டபுல் மீனிங் ஜோக்குகளுக்கு வாய்விட்டு சிரித்துவிடுவாள். ஆனாலும் நெருக்கம் காட்டியதில்லை. ஆகாஷ் அவனால் முடிந்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்தபடியே வந்தான். குறிப்பாக யுவினாவுக்கு சிஸ்டம் பற்றி பயிற்சி செய்து தரவேண்டிய பொழுதொன்றில் கொஞ்சம் அதிகமாக சிரிக்க வைத்தான் அவ்வளவு தான்.

அலுவலம் வந்தவுடன் அவள் வரவுக்காகவே கண்கள் காத்திருக்கும். ஒரு நாள் அணிந்து வந்த ஆடையை அவள் மறுநாள் அணியவில்லை என்று தோன்றும். இவ்வளவு உடைகள் அவள் எங்கே வைத்திருப்பாள் என்று யோசிப்பான். மதிய இடைவேளைகளுக்காக காத்திருப்பான். அவளுடன் அமர்ந்து சாப்பிடும் போது ஏதோ உள்ளுக்குள் கிலுகிலுப்பாக இருக்கும். ஒரு சில நாட்கள் அவளுடன் சேர்ந்து நடக்கும் வாய்ப்பு அமைந்தது. அவள் மேனி அவன் மீது மோதும் போது எல்லாம் சிறகு முளைத்த உணர்வு தான்.

அன்று சுற்றுலாவின் ஆரம்பத்தில் இருந்தே யுவினா ஆகாஷை பலமாக ஈர்த்தாள். கூடவே சில தொடுகை தீண்டல்களும் ஆங்காங்கே தொடர்ந்தது. குறிப்பாக ”பால் அட்டாக் கேம்” என்று ஒரு புதுவையான விளையாட்டு. அதை கண்டு பிடித்தவனை தெய்வம் என்று கூறும் படி அது ஆகாஷிக்கு வேலை செய்தது. ஒருவரை ஒருவர் ஓடவிடாது பிடித்து பிடித்து இழுத்து தண்ணீரில் தள்ள வேண்டும். அந்த நேரங்களில் இருவருக்குளும் கண்டபடி தொடுகைகள் ஏற்பட்டது. யுவினா எந்த மாற்றமும் காட்டாது விளையாட்டில் தீவிரம் காட்டினால். ஆனால் ஆகாஷ் அவள் மீது தீவிரம் காட்டினான். போட்டியின் முடிவில் ஆண்கள் பிரிவில் ஆகாஷும் பெண்கள் பிரிவில் யுவினாவும் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டது. இருவரையும் ஒன்றாக அழைத்து கைத்தட்டி பாராட்டினர்.

விளையாட்டுக்கு பின் மற்ற அலுவலக உறுப்பினர்கள் உடை மாற்றவென ரூமுக்கு சென்ற போது இவர்கள் இருவர் மட்டும் பேசிக்கொண்டே கடல் அழகாக காட்சி தந்த அந்த இடத்துக்கு வந்து அமர்ந்தார்கள். இருவரது கைகளும் இயல்பாய் பிணைந்திருந்தது.

ஆகாஷ் கைகளுக்கு இடையே இருந்த அந்த இணைப்பிலிருந்து அடுத்த கட்டம் நகரும் நோக்கில் யுவி பக்கம் திரும்பினான். அவளது சின்ன காதின் மேல் அவனுக்கு எப்போதும் ஒரு கிறக்கம் இருந்தது. முதல் கட்டமாய் தனது விரலால் காதின் மடல்களின் மேல் இருந்த கூந்தலை மெல்ல ஒதுக்கிவிட்டான். யுவியிடம் எந்த மாற்றமும் இல்லை. கண்டிப்பாக இது சம்மத்தின் அறிகுறிதான் என்பதை அறிவான் அவன்.
அவனது மனது நிலை கொள்ளவில்லை. முழு தைரியத்தையும் வரவழைத்து கொண்டு காதின் ஓராமய் அழுத்தாமல் ஒரு முத்தம் பதித்தான். நண்பன் விஷ்னு அடிக்கடி கொடுக்கும் அறிவுரை அது. பெண்கள் காதில் வீக் என்பான் அவன். யுவினா விஷயத்தில் அது பொய் போல தோன்றவில்லை.
அடுத்த காட்டமாக கழுத்து. யுவினாவின் உடலில் மெல்லிய அதிர்வலைகள் தோன்ற அப்படியே இதழ்களில் விழுந்தான். எது பற்றியும் யோசிக்காது மூர்க்கம் காட்டினான். நடு நடுவே சில மணல் துண்டுகள் கடிபட்டது கூட அவனுக்கு நன்றாக தான் இருந்தது. யுவினாவின் உஷ்னம் முழுதாக அவனுக்குள் ஊடுருவியது. அப்படியே தலை கிறுகிறுக்க கண்கள் சொக்கிப்போக பாதங்கள் மேலெழும்ப திடீர் என அவன் காதுகளுக்கு கைதட்டும் ஓசைகள் கேட்டன.

அலுவலக ஆடிடோரியத்தில் மனேஜர் யுவினா என்றொறு புதுப்பெண்ணை அறிமுகப்படுத்திய அந்த கண நேரத்தில் இத்தனை காட்சியும் அவன் கண் முன் நடந்து முடிந்தது. வைத்த கண் வாங்காமல் யுவினாவையே பார்த்தபடி கைதட்டிக்கொண்டு இருந்தான் ஆகாஷ்.

எழுத்து – மஹின் சுப்ரமணியம்

 

டைப்ஸ் ஆஃப் குடிகாரர்கள்

டைப் 1;

“எனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை”

இவர்களை குடிகாரர்கள் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவு ரகசியமாகவும் கட்டுப்பாட்டுடனும் குடிப்பவர்கள்.  குறிப்பாக குடும்பத்தாருக்கே இவர்கள் குடிப்பார்கள் என்று தெரியாது. மாதத்திற்கு ஒரு முறை, எப்போதோ, எங்கேயே, எந்த விதமான ரிஸ்க்கும் இல்லை என்று தெரிந்தால் மட்டுமே இவர்கள் களத்தில் இறங்குவார்கள். பெரும்பாலும் பியர் மட்டுமே குடிப்பார்கள். இவர்களை பொருத்தவரை இவர்கள் குடிக்கு அடிமை கிடையாது. இவர்கள் நினைத்தால் குடிப்பார்கள். குடித்துவிட்டு தூங்கிவிடும் சாதுக்கள்.

டைப் 2;

நான் குடிகாரன் கிடையாது

இவர்கள்  மாதத்துக்கு ஒரு முறையாவது குடிப்பவர்கள். ஆனால் தங்களை குடிகாரர்களோடு ஒப்பிட இடம் கொடுக்க மாட்டார்கள். குடியை ஒரு கொண்டாட்டமாக செய்பவர்கள். ஒரு சில மாதம் கூட தாக்கு பிடிப்பார்கள் ஆனால் குடித்துவிடுவார்கள். இவர்களையும் பெரும்பாலும் வீட்டுக்கு தெரியாது. ஒரு சில குடும்பங்களுக்கு தெரிந்தாலும் இவர்களால் தொல்லை இல்லை என்பதால் விட்டுவிடுவார்கள். ஆனால் தங்களை ஒரு குடிகாரன் என்று சொல்ல யாருக்கும் இடம் கொடுக்க மாட்டார்கள். பணம் அதிகமாக இருந்தால் மட்டுமே குடிக்க இறங்குபவர்கள்.

டைப் 3;

எப்போது குடிக்கலாம்?

இந்த டைப் குடிகாரர்கள் வாரத்துக்கு ஒரு முறை குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். குடிக்காமல் ஒரு மாதம் கடப்பதென்பது இவர்களை பொருத்தமட்டில் பெரிய விடயம் தான். பெரும்பாலும் நண்பர்களோ அல்லது சரக்கு சக பாடிகளோ கிடைக்காத பட்சத்தில் தனியாக குடிக்க இறங்கி விடுவார்கள். மதுபான பாட்டில்களும் அவை செய்யும் லீலைகளும் நன்கறிந்தவர்கள்.  எந்த பாட்டில் என்ன செய்யும் என்று கதை விடுவார்கள்.  எப்போது எங்கே குடிக்கலாம் என்று மூளை அமைதியாக திட்டமிட்டபடியே இருக்கும்.

டைப் 4;

Mr. குடிமகன்

குடிக்கவில்லை என்றால் கை நடுங்கும். அதிகமான நேரம் தனியாக தான் குடிப்பார்கள். சக பாடிகள் இருப்பது குறைவு. குடிக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவர்கள். பெரும்பாலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சோக கதை இருக்கும். மாத வருமானத்தில், குடி ஒரு பெரும் பகுதியை எடுத்துக்கொள்ளும். சமயங்களில் குடிப்பதற்காகவே  உழைப்பார்கள். பணம் இல்லாத நேரங்கள் எந்த நிலைக்கும் செல்ல கூடியவர்கள். பணக்காரர்களாக இருப்பின் சொத்தை அழிப்பவர்கள் இவர்கள் தான். இவர்கள் பகலில் கூட குடிக்கும் வழக்கம் உள்ளவர்கள். கண்ணில் எப்போதும் போதை தெரியும்.

டைப் 5;

Mr.90 ML

டீசன் குடிகார்கள். இவர்களும் மேலே சொன்னவர்களும் தினமும் குடிப்பவர்கள் தான். ஆனால் இந்த 90ml கமுக்கமானவர்கள். குடித்தவிடன் படுத்துவிடுவார்கள். பெரும்பாலும் மத்திய உயர் தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். வீட்டில் வைத்து தான் குடிப்பார்கள். நிம்மதியான தூக்கமே இவர்களின் எதிர்ப்பார்ப்பு. தினமும் ஒரு கட்டிங்கை போட்டு கவுந்துவிடுவார்கள். குறிப்பாக தினமும் 90ml குடிப்பது அரோக்கியம் என்று சொல்வார்கள்.

டைப் 6

நான் குடிகாரன் என்பதை நான் மட்டுமே அறிவேன்

விசித்திரமான குடிகாரர்கள். பெரும்பாலும் இவர்கள் குடிகாரர்கள் என்று யாரும் அறிய மாட்டார்கள். ஆனால் குடியில் சூரர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு என்று ஒரு நேரம், ஒரு காலம் இருக்கும் அப்போது தான் குடிப்பார்கள். எப்படியாவது இந்த பழக்கத்தில் இருந்து மீளவே விரும்புவார்கள். மனைவி மக்களிடம் குடிப்பதை நிருத்திவிட்டதாக பொய் கூட செல்லிவிடுவார்கள். என்ன செய்தாலும் குடியை விட முடியாமல் சிக்கி தவிப்பார்கள். ரகசிய குடிகாரர்கள்.

 

 

 

ஆசிரியத்துவம்

இவ் உலகில் வாழும் ஒவ்வொரு பிரஜையுடைய எதிர்கால வெளிச்சம் அவரவர் ஆசிரியர்களே. சிறந்த ஆசான் வாய்க்கப் பெறுமிடத்து சிறந்த வாழ்வே அமையும் என்பர். மனித குலம் எப்போது உருவானதோ அப்போதிலிருந்தே கற்றல் கற்பித்தலும் நிகழ் ஆரம்பித்து விட்டது. உலகில் எத்தனை தொழில்கள் இருந்தாலும் மற்றவர்களுக்கு அறிவு எனும் வெளிச்சத்தை கொடுக்கும் ஆசிரியர் சேவைக்கு தனியிடம் உண்டு. ஆசிரியத்துவம் என்னதான் தொழில்கள் என்ற வகைக்குள் அடங்கினாலும் அதனை சிறந்த சேவை என்றே கொள்ளமுடியும். “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று கூறுவார்கள். ஒரு சமுதாயம் அறிவார்ந்த சமுதாயமாக இருக்கின்றதென்றால் அதற்கு அர்ப்பணிப்பும் நல்லெண்ணமும் கொண்ட ஆசிரியர்கள் தான் காரணமாக இருக்க முடியும்.கல்வி என்பது இயற்கையாக எழும் வளர்ச்சியாகும். மாணவர்களின் இவ் வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் உந்து சக்தியை வளங்குகின்றார்கள்.

களிமண்ணாய் கிடந்த மாணவனை இணைத்து அவனுக்கு உரு கொடுத்து அவனை பக்குவப்படுத்தி இந்த உலகிற்கு நல்லதொரு குடிமகனாய் வழங்கும் பெருமை ஆசியருக்கே பொருந்தும். ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்வில் ஏதோ ஒரு ஆசிரியரை கட்டாயம் கொண்டிருப்பர், அது பாடசாலைகளில் கற்றலை போதிக்கும் ஆசானாக இருக்கட்டும், பெற்றோராக இருக்கட்டும், அனுபவம் தந்த பாடங்களாக இருக்கட்டும், படித்துணர்ந்த புத்தகமாக இருக்கட்டும், வாழும் வழியை காட்டும் வழிகாட்டியாகவும் அறிவை போதிக்கும் அகலாகவும் இருப்பவை யாவுமே ஆசிரியமே. ஒவ்வொரு குழந்தையின் திறமையைக் கண்டறிந்து அதில் அக்குழந்தையை சாதிக்க வைக்கும் சக்தி ஆசிரியர்களிடமே உண்டு.கல்வியறிவு இல்லாத ஒரு சமூகம் ஆக்கபூர்வமான சமூகமாக இருக்காது. பண்புகள், பழக்க வழக்கங்கள், நல்லறிவு, ஞானம் மற்றும் விழுமியங்கள் போன்றனவற்றை இச்சமூகத்துக்கு போதிப்பவர்கள் நல்லாசிரியர்களாகவே இருப்பார்கள். ஆசிரியப்பணியை அறப்பணி, தர்மப்பணி, வித்யாதானம் என்றெல்லாம் போற்றப்படுகிறது. ஏனெனில் உலகில் உருவாகும் அனைத்து தொழில்களுக்கும் ஏணியாக அமைவது ஆசிரியப்பணி ஆகும்.

இங்கு மாணவர்களுக்கு எழுத்தறிவைவும் எண்ணறிவையும் எதிர்கால ஏணியாகவும் திகழும் ஆசிரியர் என்ற அடிப்படையில் அணுகுகின்ற போது,  ஒவ்வொரு நாட்டின் எதிர்கால வளர்ச்சி அந்த நாட்டின் வகுப்பறையில் தான் உருவாக்கப்படுகிறது. ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உலகம் இன்றளவும் பல்துறை அறிஞர்களை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பது தான் ஆசிரியரின் சிறப்புகளில் மிகவும் பிரதானமாக உள்ளது. மேலும் மாணவ சமூகத்துக்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்று அனைத்தையும் ஒரு சேர கற்றுக்கொடுத்து அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, நாணயமானவனாக, அறிஞராக, மேதையாக சமூகத்தின் உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் உயரிய பொறுப்பு ஆசிரியரின் சிறப்பு. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இலங்கையில் அக்டோபர் 06ம் திகதி ஆசிரியர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய தொழில் துறையினரைக் காட்டிலும்; அதிகமான பொறுப்பும், முக்கியத்துவமும் வாய்ந்தவர்களாக இந்த ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.  பெற்றோர்கள் குழந்தையை உலகிற்கு தருகின்றனர் ஆனால் ஒரு நல்ல ஆசான் அந்த உலகையே குழந்தைக்கு வழங்குபவர்களாக காணப்படுகின்றனர். நான் உயிருடன் இருப்பதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கின்றேன். ஆனால் சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். எனும் அலெக்ஸாண்டரின் கருத்தும் அதனையே வெளிப்படுத்தி நிற்கின்றது. ஒரு பிள்ளை பிறந்ததிலிருந்து ஐந்து அல்லது ஆறு வயது வரைக்கும் பெற்றோரின் வழிகாட்டலில் வளர்கின்றனர் அதற்கடுத்ததாக பாடசாலைக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரைக்கும் அப் பிள்ளையை வழிநடாத்தும் ஒரு நபராக இவ் ஆசிரியரே விளங்குகின்றனர்.

கல்வியில் ஏற்படும் முன்னேற்றமானது ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது ஒரு நாட்டின் வளமான எதிர்காலம் அந்நாட்டின் சிறுவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியிலேயே தங்கியுள்ளது. கல்வியின் பண்புத் தரத்தில் ஆசிரியர் கொண்டுள்ள வகிபாகம் புறக்கணிக்க முடியாதளவு பிரதானமானது. இதற்கு ஆசிரியர் தனது வாண்மைத்துவ ஆற்றல்களை விருத்தி செய்தல் அவசியம். வாண்மை விருத்திக்கு கல்விப் புலன் குறித்த விரிவான அறிவும் முயற்சியும் இன்றியமையாதவை. பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறும் நோக்குடன் மாத்திரமே மாணவர்களை தயார் செய்தல் ஆசிரியருக்குரிய பணியன்று, மாறாக ஒவ்வொரு மாணவனும் அவரவருடைய வாழ்வில் சிறக்கவும் ஒழுக்கம் மிகுந்த பிரஜையாக வாழ்வும் வழிகாட்டுதலே. சமகால உலகில் எழுகின்ற புதிய சவால்களுக்கு முகம்கொடுக்கக் கூடிய அறிகைசார் ஆற்றல்களை, உயர் நிலைப்பட்ட சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் வளர்த்தெடுப்பது ஆசிரியர்களின் சமகாலக் கடமைகளில் பிரதானமானவை.

இவ்வாறு மகத்துவம் மிக்க ஆசிரிய பணியில் இன்றியமையாதது வகுப்பறைகளே. கற்றல் கற்பித்தல் நிகழும் இடமாக மட்டும் அல்லாமல் ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியில் முக்கிய இடம் வகிக்கும் தலைவர்களை உருவாக்குவதும் வகுப்பறையே. “நாட்டின் மிகச்சிறந்த அறிவு வகுப்பறையின் கடைசி இருக்கையில் இருக்கலாம் ” என்கின்றார் அப்துல் கலாம் அவர்கள். ஆக சிறந்த கற்றல் கற்பித்தலில் வகுப்பறை முகாமைத்துவம் இன்றியமையாதது. பல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும்  நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின்  தேவையற்ற  நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு அணுகுமுறையே வகுப்பறை முகாமைத்துவமாகும்.

வகுப்பறையானது நன்கு கட்டமைக்கப்பட்ட கற்றல் கவிநிலையை ஏற்படுத்துவதாகவும், தீய நடத்தைகளைக்  கட்டுப்படுத்தி, கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். சிறந்த பண்புகளை தம்முள் கொண்ட ஆசிரியர்கள் சிறந்த வினைத்திறனான மாணவ சமூதாயத்தை உருவாக்குவர். ஆகையால் ஆசிரியர்கள் மாற்றுத்திறனை ஏற்றுக்கொள்பவர்களாகவும், மாற்றத்தினை உருவாக்குபவர்களாகவும், தனது தொழிலை வளர்ச்சிநிலைக்கு கொண்டுசெல்பவராகவும், மாணவர்களிடையே நடுநிலை பங்கினை வகிப்பவராகவும், முன்மாதிரியானவராகவும் உளவியல் நுட்பம் அறிந்தவராகவும்,ஆலாசனை மற்றும் வழிகாட்டல் தன்மையுடன் புதியவற்றை படைக்கும் ஆற்றல் கொண்டவராகவும், மரபினையும் நவீனத்துவத்தினையும் பேணும் தன்மை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

ஒரு சமூகத்தின் இலட்சியங்களையும் விதிமுறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரமாக, ஒவ்வொரு சமூகத்திலும் இளைய தலைமுறையின் வளர்ச்சியைப் பாதிக்கும் நபர்கள் எப்போதும் இருக்கிறார்கள். இதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான இடைத்தொடர்பானது மிகவும் இன்றியமையாதது. ஆசிரியர்கள் பிள்ளைகளுடன் சகஜமாகவும், அன்பாகவும் பழகும் ஆற்றலைக் கொண்டிருத்தல் கட்டாயமானதாகும்.  ஆனால் இன்றைய நிலையில் அவ்வாறு எல்லோரும் நடந்து கொள்கின்றனரா என்றால் அது கேள்விக்குறியே. மாணவர்களுக்கும் கற்பிக்கும் போது ஆசிரியரும் குழந்தையாக மாற வேண்டும் அப்போதுதான்  கற்பித்தல் சிறப்படையும் அவ்வாறு இல்லாதவிடத்து இருவருக்குமான உறவு நிலையும் கற்பித்தலும் பாதிப்படைகின்றது. ஆசிரியர்கள் அறிவைப்போதிப்பவராக மட்டுமே நின்று விடாமல், மாணவருடனான உறவு நிலை, அன்னியோன்யத்தையும் ஆரோக்கியமாக பேணுதல் அவசியம் ஆகும்.

வகுப்பறையில் ஆசிரியருடைய வகிபாகம் என்று அணுகுகின்ற போது கற்பித்தல் செயன்முறையை நெறிப்படுத்துபவர் என்ற வகையில் ஆசிரியரின் பொறுப்புகள் அதிகாரங்கள் கடமைகள் ஒழுக்கம் ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியதே ஆசிரியர் வகிபாகமாகும். ஆசிரியர் வகிபாகம் வகுப்பறைக்கோ, பாடசாலைக்கோ வரையறுக்கப்பட்டதல்ல. வகுப்பறைக்கு வெளியேயும் பாடசாலைக்கு வெளியேயும் விரிவடைந்து செல்லும். மாணவரிடமும் பாடசாலைக்கு வெளியே பெற்றோர் மற்றும் சமுதாயத்தினரிடமும், ஏனைய ஆசிரியர்களுடனும், ஆசிரியர் அல்லாத வேறு அதிபர்களுடனும், குழுக்களுடனும் என்றவாறாக பல்வேறு சமூகக் குழுக்கள் மற்றும் சந்தர்ப்பங்களுடன் தொடர்புடைய பணிகள் இதில் அடங்கும். ஆசிரிய தொழிலானது வைத்திய தொழில், தாதித் தொழில் போன்ற மனிதர்களோடு ஒன்றிணைந்து வேலை செய்கின்ற தொழிலாக கருதப்படுகின்றது. ஆக கற்பித்தல் மட்டுமே ஆசிரியருடைய பணி அன்று.

அதிகாரத்தின் அடிப்படையிலும் அதிஉச்ச கட்டுப்பாட்டு விதிகளுடனும் கற்றல் கற்பித்தல் நிகழ்வதை ஆசிரியர்கள் தவிர்த்தல் வேண்டும். அனைத்து மாணவர்களும் ஓரே திறமையையோ, குணாதிசயங்களையோ கொண்டிருப்பதில்லை எனவே அவர்களுக்கான கற்பித்தல் முறைகளும் மாறுபடும் தேவைகள் ஏற்படலாம். சில மாணவர்களுக்கு கணித அறிவு அல்லாமல் இருக்கலாம் ஆயினும் கணணி அறிவு இருக்கலாம்,   விளையாட்டில் சிறந்து விளங்கும் ஒரு பிள்ளை கல்வியல் மந்தமாக இருக்கலாம்,  எனவே அவர்களுக்கு  ஏற்றால் போல் ஆசிரியர்கள் கற்பித்தல் முறைகளை கையாள்வது முக்கியமானது என்பதுடன் ஒவ்வொரு மாணவர்களுடைய இயலுமைகள் மற்றும் இயலாமைகளை கண்டறிதலும் அவசியம் ஆகும். இவ்வாறு செயற்படும் பட்சத்தில் வகுப்பறை செயற்பாடுகள் சிறப்படையும்.

இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் தத்தமது கற்றல் கற்பித்தலில் பெருமளவிலான சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. அவ்வகையில்  இலங்கையை பொறுத்த வரையிலும் வகுப்பறையில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் மிகப்பிரதான சவாலாக விசேட கவனிப்புக்கள் தேவைப்படும் மாணவர்களை அடையாளம் காணுதலே. ஆசிரியர்கள் விசேட தேவையுடைய மாணவர்களை இனங்காண வேண்டியது அவசியமாகும். ஆனால் ஆசிரியர்கள் விசேட தேவையுடைய மாணவர்களை முழுமையாக இனங்காண முடியாத நிலை காணப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் விசேட தேவையுடைய மாணவர்களை இனங்காண்பது தொடர்பான பயிற்சி, அனுபவங்கள் போதுமானதாக இன்மையே. பாடசாலையில் குறித்த வகுப்பில் விசேட தேவையுடைய மாணவர்கள் இருப்பார்களாயின் ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் பொறுப்புக்கூறும் நிலைக்கும் தள்ளப்படுகின்றார்கள்.வகுப்பறையில் இவ்வாறான மாணவர்களை இனங்காண்பது முக்கிய பிரச்சினையாக ஆசிரியர்களுக்கு உள்ளது. ஒரு மாணவன் சிறந்த தலைவராக உருவாக ஆசிரியர் எந்த அளவிற்கு காரணமாக இருக்கின்றாரோ அதே அளவிற்கு ஒரு மாணவனுடைய பிறழ்வான வெளிப்படுத்துகைகளுக்கும் ஆசிரியரே பொறுப்பாவார். ஆக மாணவ பராயத்திலேயே பிள்ளைகளுடைய தேவைகள், ஆளுமைகள் போன்றவற்றில் ஆசிரியர்கள் கூடிய கவனம் செலுத்துதல் அவசியம்.

அத்துடன் பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்களுக்கு வினைத்திறன் மிக்க கற்றலை போதிக்க போதிய வளங்கள் பெரும்பாலும் பற்றாக்குறையாக இருப்பதுடன். கல்விக்கலைத்திட்டமும் பெரும்பாலும் மாணவர்களுடைய நூற்கல்வியை மையப்படுத்தியும் பரீட்சையில் சித்தி பெறுதலை குறிக்கோளாக கொண்டிருத்தலும் ஆரோக்கியமானது அல்ல. அத்துடன் காலத்திற்கு ஏற்ற வகையில் ஆசிரியர்களும் தத்தமது அறிவை விருத்தி செய்து கொள்ள வேண்டும். உதாரணமாக தொழில்நுட்ப அறிவினை குறிப்பிட முடியும். ஆசிரியர் மற்றும் சமுகத்திற்கிடையான தொடர்பும் வலுவாக காணப்பட வேண்டும். சமூகத்தின் தற்கால மற்றும் எதிர்கால தேவைகளை அறிந்து அதற்கேற்ப கற்றலை வழங்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

இவை மட்டும் அல்லாமல் ஒரு மாணவனுடைய சமூகமயமாக்கல் முகவராக செயற்பட வேண்டிய தேவை ஆசிரியருக்கு உண்டு. இதற்கு ஆசிரியர்கள் சமூகத்தை நன்கறிந்தவர்களாக இருத்தல் அவசியம். சமூக தேவைகளுக்கு ஏற்கக்கூடிய கல்வித்திட்டம் ஒன்றை ஆசிரியர் மாணவர்களுக்கு அளித்தல் வேண்டும். அது தொடர்பான கற்பித்தல் முறைகள், தேவையான உபகரணங்களை தீமானிப்பதும் ஆசிரியரே ஆகும். ஆசிரியர் ஒரு பிள்ளையை தான்வாழும் சமுதாயத்திற்கு ஏற்புடையதாக மாற்றுகிறார். இங்கு சமூகத்தின் விழுமியங்களும் பெறுமானங்களும் கற்பிக்கப்படும் இவ்விடத்தில் ஆசிரியர் ஒரு முன்மாதிரியாக நடந்து கொள்ளல் இன்றியமையாதது.

ஆசிரியர்களான ஏணிகள் சில நேரங்களில் மிதிபடுவதில் வருத்தமில்லை. அந்த ஏணிகளில் ஏறி உயரே செல்லும் மாணவர்களைப் பார்த்து அவர்கள் பெருமை கொள்வதே சிறப்பு. தன்னை விட வளர்ந்து விட்டானே என்று பொறாமைப் படாமல் பெருமைப் படுபவர்கள் ஆசிரியர்களே. ஒரு மாணவனுடைய வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் முக்கிய பங்காற்றுவது ஆசிரியர்களே. இத்தகைய மகத்துவம் மிக்க ஆசிரியத்தொழிலை பெற்றோர்களும் சமூகத்தினரும் மதிப்பதுடன் மாணவர்களும் தத்தமது ஆசிரியர்களது மதிப்பினை உணர்தல் நன்று. இவை தவிர ஆசிரியர்களும் தமது பணியின் தேவை மற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன்படி தியாக நோக்குடன் பணிசெய்தல் ஆரோக்கியமானது. மனித வரலாற்றில் பிரிக்க முடியாத மனித சமுதாயத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். வாழ்க்கை என்ற பாடத்தை கற்பித்து மாணவர்களுக்கு ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். மாணவனுக்கு அன்னை போன்று அரவணைப்பு, தந்தை போன்று கண்டிப்பு தந்து நல்லறிவு ஊட்டி சமூகத்தில் நல்ல ஒரு குடிமகனாக மிளிரச் செய்ய வேண்டிய பொறுப்பு ஆசியர்களுக்கு உண்டு. மெழுகாய் தன்னை உருக்கி மாணவர்களுக்கு ஒளிமயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆசிரியர்களைப் போற்றுவோம்.

 

அத்யா: இலங்கையில் வளர்ந்து வரும் கண்கவர் வடிவமைப்பாளர்கள்.

மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் உன்னதமான வடிவினைக் கொண்ட அத்யா, ஓர் வளர்ந்து வரும் வீட்டில் அணியக் கூடிய நேர்த்தியான ஆடை பிராண்ட் ஆகும். இது உள்ளூர் நவ நாகரிக சந்தையில் மிக உயர் தரத்தில் நிலைத்து நிற்கிறது. அனைத்து வயதினரையும் பற்றி கரிசனை கொள்ளக்கூடிய இரு ஆளுமைகளினால் தனித்துவமான திறமைகளின் மூலம் 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து ஆடைகளும் ஒரே அளவுகளுடன், கண்ணை கவரும் விதத்தில் ஈடு இணையில்லா வகையில் ஆடைகள் நிர்மாணிக்கப்படுகின்றது.

சிறு வயது முதல் பல்கலைக்கழகம் வரை ஒன்றாகவே கற்ற வடிவமைப்பாளர்களான டியுமி பண்டித மற்றும் இஷாரா பெர்னாண்டோ ஆகிய தோழிகளால் மாறி வரும் வடிவமைப்புகளுக்கு ஏற்ப, பெண்களுக்கான வடிவமைப்புகள் இலக்கு வைத்து, இவ் நவநாகரீக ஆடை வடிவமைப்பை ஆரம்பித்துள்ளனர். ஆரம்பத்தில் அவர்கள் மேற்கொண்ட வடிவமைப்புக்களை நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு இடையில் விற்பனை செய்தனர். அது பிரபல்யம் அடைந்து, அவர்களது வடிவமைப்புகள் அதிகளவில் உடனடியாக விற்பனையாகி, வாடிக்கையாளர் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றது. தென் அரைக்கோளத்தில் வாழும்  நங்கையரின் கோடைகாலத்திற்கு ஏற்ற வகையில் அழகிய முறையில் சுகாதார முறையில், வடிவமைக்கப்பட்ட நவநாகரீக வடிவமைப்புகளை எங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓரே பார்வையில் அவதானிக்கலாம்.

எமது செயற்பாடுகளையும் ஆரோக்கியத்தையும் சமநிலைப்படுத்தும் சாதாரணமாக சமூகத்தின் வெளியிடங்களுக்கு அணியக் கூடிய ஆடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு அணியக்கூடிய சிறந்த ஆடைகளை அத்யாவின் மூலம் தெரிவு செய்து கொள்ளலாம். மேலும் இதமாக அணியும் பெல் பேண்ட்ஸ், பிரகாசமான குரொப் டாப்ஸ், பிளங்ஙின் சேட் போன்றவற்றை அத்யா ஆடையகத்தின் அறிமுகப் பகுதியிலேயே அவதானிக்கலாம். அதிகம் விற்பனையாகும் வர்ணங்கள் மெருகூட்டப்பட்ட ஜெக்ஸன் ப்லொக் மற்றும் கோடுகளுடன் கூடிய வென்டேஜ் கொமிக் போன்றன வெளியே அணிந்து செல்ல மிகப் பொருத்தமான ஆடைகளாகும்.

தனித்துவமாக குறிப்பிட்ட தீவில் வடிவமைக்கப்பட்ட அரைக் காலப் பகுதி சேகரிப்புக்களை கொள்வனவு செய்து கொள்ளலாம். எமது நாளாந்த வடிவமைப்புகளை எமது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இடங்களுடன் அவதானிக்கலாம்.

அழகான முறைகளில் பார் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அத்யா, உள்நாட்டு மக்களை மட்டுமன்றி தற்போது உலகளவில் அனைவரையும் தம் பக்கம் ஈர்த்துள்ளது. ஒரே  மாதிரியான வடிவமைப்புகளை பல நபர்கள் விரும்புவதால், ஒரு அவர்களின் உறுதிபாட்டின் அடிப்படையில், ஏமாற்றத்தை தவிர்ப்பதற்காக தேவையான அளவில் வடிவமைப்புகள் காணப்படுகிறது.

சிறந்த வடிவமைப்புகள் உயர் தரத்தில் உள்ளது. அத்தோடு கூட்டமாக இருக்கும் போது தனித்துவமாக காட்ட உதவுகிறது. ஆடைகளின் தன்மை, தரம் என்பன விலை ஈர்க்க கூடியவை. அலுவலகத்திற்கு அணியும் ஆடையில் இருந்து கடற்கரையோரத்தில் திட்டமிட்டு செல்லும் வரை அணியக் கூடிய அனைத்து ஆடைகளையும் சிறந்த முறையில் தெரிவு செய்யலாம்.

ஆரோக்கியமான ஜூஸ்; சுத்தமான சமையல்

ஆரோக்கியமான சாறு சுத்தம் செய்முறை. விலையில் ஒரு பகுதிக்கு புதிய பழச்சாறுகளை வீட்டில் தயாரிப்பது எப்படி. ஜூஸிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் ஆரோக்கிய நன்மைகளைக் கண்டறியவும்.

ஜூசிங் என்பது ஒரு சக்திவாய்ந்த தந்திரமாகும், இது விரைவாக வளர்ந்து வரும் மக்கள் விரைவாக உடல் எடையை குறைக்க, சரியான ஊட்டச்சத்தை பெற மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க உதவுகிறது.

ஜூசிங்கின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?
மாயோ கிளினிக்கின் கூற்றுப்படி, புதிதாக தயாரிக்கப்பட்ட பழச்சாறுகளை குடிப்பதன் மூலம், உங்கள் உடல் முழு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதை விட ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியும், மேலும் இது உங்கள் செரிமான அமைப்புக்கு ஃபைபர் வேலை செய்வதில் இருந்து ஓய்வு அளிக்கிறது. ஜூஸ் உங்கள் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உங்கள் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் எடை குறைக்க உதவும் என்று அவர்கள் கூறுகிறார்கள். புதிய சாறுகள் உங்களுக்கு ஆற்றல் மற்றும் தெளிவான மனதைத் தரும்.

ஜூசிங்கிற்கு என்ன பழங்கள் மற்றும் காய்கறிகள் பயன்படுத்த வேண்டும்?
கேரட், வெள்ளரிக்காய், செலரி, காலே, கீரை, பீட் மற்றும் ரோமெய்ன் ஆகியவை மிகவும் பிரபலமான காய்கறிகள். எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் சுண்ணாம்பு ஆகியவை பழச்சாற்றில் பயன்படுத்த மிகவும் பிரபலமான பழங்கள். மற்ற சேர்க்கைகள் புதிய இஞ்சி, வோக்கோசு, குளோரெல்லா மற்றும் மஞ்சள்.

ஜூஸ் க்ளீன்ஸில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

காலே– கலோரிகளில் மிகக் குறைவு, அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் கீல்வாதம் மற்றும் தன்னுடல் தாக்க நோய்களுக்கு உதவுகிறது.

கீரை – கீரையின் அழகு சுவையை மறைப்பது எவ்வளவு எளிது. இது லேசான சுவையாக இருந்தாலும், வைட்டமின்களால் நிரம்பியுள்ளது, புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, மேலும் இது கிரகத்தின் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும்.

வெள்ளரிக்காய் – இது 95% நீர் என்பதால், இது ஒரு நம்பமுடியாத நச்சு நீக்கி மற்றும் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவுகிறது.

எலுமிச்சை – உங்கள் சமையலறையில் சேமித்து வைக்கும் மிக முக்கியமான பொருட்களில் ஒன்று இது மிகவும் பயனுள்ள சுத்திகரிப்பு முகவர் மற்றும் கீரைகளின் கசப்பை குறைக்கிறது.

கேரட் – பீட்டா கரோட்டின், ஃபைபர், வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் நல்ல ஆதாரமாக அறியப்படுகிறது. கேரட் குறைந்த கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் மேம்பட்ட கண் ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

செலரி – கலோரிகள் குறைவாக இருப்பதால் அது பெரும்பாலும் தண்ணீர். இது குறைந்த கிளைசெமிக் உணவு மற்றும் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவற்றின் நல்ல ஆதாரமாகும்.

பீட் – உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், வீக்கத்தை எதிர்த்துப் போராடவும், நச்சுத்தன்மையை ஆதரிக்கவும் உதவும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

ஆப்பிள்கள் – “ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் மருத்துவரை விலக்குகிறது” என்பது நல்ல காரணத்திற்காக ஒரு பிரபலமான பழமொழி. வீக்கம் மற்றும் இதய ஆரோக்கியத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.

ஆரஞ்சு – வைட்டமின் சி அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மஞ்சள்-அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள்.

இஞ்சி – செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது

ஹண்டர் மரியதாஸ்

தன் பெயருக்கு முன்னால்  “ஹண்டர்” என்று அவர் சொன்ன போது நானும் ஏதோ மான், மறையை வேட்டையாடும் உள்ளூர் வேட்டைக்காரன் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர் ஒரு புதையல் வேட்டைக்காரன். அதுவும் விலை மதிப்பில்லாத பொக்கிஷங்களை தேடியலையும் புதையல் வேட்டையன்.

எங்கள் சந்திப்பு ஒரு விபத்து. அந்த சந்திப்பு நடந்து இருபது வருடங்கள் ஆன நிலையில் இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக தான் இருக்கிறது. சமயங்களில் அவர் கதையை என் குழந்தைகளுக்கு படுக்கை நேர கதையாக சொல்லுவேன். அவர்களும் கண்ணிமைக்காமல் கேட்டு ரசிப்பார்கள்.

நான் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். விடுமுறையின் போது நண்பர்கள் எல்லோரும் ஒரு  காட்டுப் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தோம். அப்போது நான் மட்டும் வழி தவறி எங்கேயோ கண்காணாத இடத்துக்கு வந்து விட்டேன். எப்படி திரும்பி போவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தேன்.

அந்த காட்டு வழிக்குள் வெகு நேரம் நடந்தேன். காட்டின் மத்திக்கு வந்ததை போல உணர்ந்தேன். எங்கு திரும்பினாலும் மரங்கள் மட்டும் தான் தெரிகிறது. பசி வயிற்றை கவ்வியது. தலை கிறு கிறு என்றது. கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்து கொண்டே வந்தேன். அப்போது தான் அவரை பார்த்தேன்.

நல்ல உயரமும், ஆஜானுபாகுவான உடல் தோற்றத்துடனும் கம்பீரமாக நின்றார். எப்படியும் நாற்பது வயது இருக்கலாம். வெள்ளை தாடியும் கருப்பு முடியும் அதை ஊர்ஜிதப் படுத்தியது. அவரை கண்டவுடன் அவர் தான் எனக்கு உதவ முடியும் என்று தோன்றியது.

அழாத குறையாக என் நிலையை எடுத்து சொன்னேன். அதற்கு அவர் இந்த காட்டை விட்டு நான் வெளியேற வேண்டும் என்றால் சுமார்  அரை நாளாவது நடக்க  வேண்டும் என்றார். அதுவும் வழிகாட்டி, வரைபடம் இருந்தால் தான் சாத்தியம் என்றான். நான் நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று பாவமாக கேட்டேன். அதற்கு அவர் நான் தேடி வந்ததை நெருங்கிவிட்டேன் எப்படியும் இரண்டு, மூன்று நாட்களில் அடைந்து விடுவேன் என்றார்.

அவர் எதை அப்படி சொல்கிறார் என்று ஆரம்பத்தில் எனக்கு தெரியவில்லை. இப்படியே இன்னும் கொஞ்ச தூரம் சென்றால் ஒரு சிறிய மலை வாழ் மக்களின் குடியிருப்பு வரும் அவர்களிடம் உதவி கேட்டால் உன்னை ஊருக்கே கொண்டு சென்றுவிடுவார்கள் என்றார். இப்போதைக்கு வேறு வழி தெரியவில்லை. அவருடனேயே நடந்தேன்.

தான் கடந்த மாதம் தான் அந்த மலை வாழ் மக்களை சென்று பார்த்துவிட்டு வந்ததாகவும், உதவி என்று வந்தால் அவர்கள் கண்டிப்பாக செய்வார்கள். ஆனால் ஏதாவது பித்தலாட்டம் செய்கிறோம் என்று அறிந்தால் தலையை கீரி விடுவார்கள் என்றார். வழி நெடுக அந்த மக்களை பற்றி கூறிக் கொண்டு வந்தார். அவர்கள் நரமாமிசம் தின்னும் ஆதிக்குடிகள் இப்போது கொஞ்சம் வளர்ச்சியடைந்து அதை எல்லாம் நிறுத்திக் கொண்டார்கள். ஆனால் முந்தைய மூர்க்கத்தனம் அவர்களிடம் இருக்கத்தான் செய்கிறது என்றார்.  வெளி உலகத்தின் இருந்து தள்ளியே வாழ்கிறார்கள் என்றார்.

என்னுடைய மனதில் அவர் ஆரம்பத்தில் எதையோ தேடிக்கொண்டு இருப்பதாக சொன்னாரே அது என்ன என்று கேட்க தோன்றியது. ஒரு வழியாக நானும் அதை கேட்டேன். அது ஒரு புதையல் அதை அடைய தான் இந்த பயணம் என்றார். எனக்கு இந்த முழு பயணமும் அவருடன் இருக்க தோன்றியது. கிடைக்கும் பங்கில் என்னுடைய பங்கு எடுத்துக் கொண்டு நல்ல வாழ்க்கை வாழ மனம் துடித்தது.

ஒரு வேலை என்னுடைய உதவி அவருக்கு தேவை போல. அது தான் என்னிடம் இவ்வளவு ரகசியமான விஷயங்கள் எல்லாம் சொல்கிறார் என்று நினைத்தேன். மெல்ல கேள்விகளால் அவரை துளைத்தேன். அவரும் என்னுடைய எல்லா கேள்விகளும் சளைக்காமலும்  மறைக்காமலும் பதிலளித்தார்.

அறியப்பட்டதாக, கட்டுக்கதைகள் இருக்கும் புதையல்களை தேடி செல்வது தான் என்னுடைய வேலை, அதற்காக தான் என்னுடைய வாழ்க்கையை நான் செலவிட்டு வருகிறேன் என்று அவர் சொல்ல அவரது சொத்து மதிப்பு என்னவாக இருக்கும் என்று என்னுடைய  எண்ணம் போனது.

அதையும் கேட்டபோது தான் எனக்கு அந்த ஆச்சரியமான பதில் கிடைத்தது. நான் தேடி எடுத்ததை விற்று பணம் பார்ப்பவன் அல்ல அவற்றை என் தேடலின் பரிசாக என்னுடை வைத்து அழகு பார்ப்பவன் என்றார்.

கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் அவரது இந்த விசித்திரமான இயல்பு என்னை அசர வைத்தது. வாழ்க்கையை வாழ தேவையான பணத்தை என்னால் தேடிக்கொள்ள முடியும். இந்த புதையல் வேட்டை என்பது என்னுடைய லட்சியம். இதில் தான் என் காலம் கழிகிறது. என்னை பிறருக்கு தெரியாது. தெரிந்தால் பிரச்சனை தான் வரும். இப்போது உனக்கு தெரியும் ஆனால் இன்று  போல நீ என்னை வேறு ஒரு நாள் பார்க்க மாட்டாய். என்னை பற்றி வெளியே சொன்னாலும் யாரும் உன்னை நம்புவார்களா என்பது சிரமம் என்று சிரித்தார்.

வியப்பாகவும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒரு நாள் அந்த மனிதனோடு நான் பயணித்தது எனக்கு வேறு விதமான வாழ்க்கையை காட்டியது. சரியாக மறுநாள் பிற்பகல் வேளை நாங்கள் அந்த மலை வாழ் மக்களின் குடியிருப்பு அடைந்தோம். அந்த இடத்தில் காட்டிக் கொடுத்துவிட்டு என்னிடம் இருந்து அவர் விடைப்பெற்றார். இதுவரை அவரும் என்னோடு அங்கே வரப்போகிறார் என்று எண்ணி இருந்தேன். ஆனால் அவர் என்னை மட்டும் தனியாக செல்லும் படி சொன்னார். நான் ஏன் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் என்னை மேலும் வியப்பில் ஆழ்த்தியது. அந்த மலை வாழ் மக்கள் சாபமாக நினைத்து வருடா வருடம் பலியிட்டு வரும் ஒரு விலைமதிப்பற்ற இரத்தினக்கல்லை தான் நான் இன்று இரவு யாருக்கும் தெரியாமல் அவர்களை தாண்டி சென்று அதை எடுத்துக் கொண்டு வரப் போவதாக சொன்னார். அவர் கண்களில் தெரிந்த நம்பிக்கை என்னை மிரள வைத்தது.

நான் பேசியவற்றை நீ அவர்களிடம் சொல்ல நோர்ந்தால் உன்னையும் சேர்த்து பிடித்துக் கொள்வார்கள். ஆகவே அமைதியாக உன்னுடைய தேவை முடித்துக்கொண்டு மூச்சு காட்டாமல் கிளம்பி விடு என செல்லமாக மிரட்டினார்.

அது தான் நான் அவரை கடைசியாக பார்த்தது. அதற்கு பிறகு நான் அந்த மலை வாழ் மக்களிடம் சென்று உதவி கேட்க, ஒரு வழிகாட்டியை என்னோடு அனுப்பி, என்னை பத்திரமாக அருகில் இருந்த நகரத்து கொண்டு வந்து சேர்த்தார்கள்.

ஹண்டர் மரியனேசனை அதற்கு பிறகு நான் காணவில்லை. அவர் இருப்பிடம் எங்கே? அன்று இரவு என்ன நடந்தது? அவர் இருக்கிறாரா இல்லையா? பொக்கிஷத்தை அடைந்தாரா இல்லையா? இப்படி எதுவும் எனக்கு தெரியாது.

எங்களுடைய அந்த ஒரு நாள் பயணத்தில் நான் பேர் ஆர்வத்தில் அவரிடம் நிறைய கேள்விகளை கேட்டேன். அதில் ஒரு கேள்விக்கு அவர் சொன்ன பதில் என்னை மிரள வைக்கிறது. இப்படி சேகரித்த பொக்கிஷங்களை உங்கள் கடைசி காலத்தில் என்ன செய்வீர்கள் என்று நான் கேட்டதற்கு என் மிச்ச வாழ்க்கையை எடுத்தவைகளை எடுத்த இடத்திலேயே வைக்க செலவிடுவேன் என்றார்.

ஹண்டர் மரியனேசன் இப்போது உயிருடன் இருந்தால் அதை செய்து முடித்திருக்க வேண்டும் அல்லது செய்துக்கொண்டு இருக்க கூடும் என்று நினைக்கிறேன்.

 

எழுத்து – மஹின் சுப்பிரமணியம்

 

 

தற்கால சிறுவர்கள் இழந்தவை என்னென்ன?

“குழல் இனிது யாழ் இனிது என்பர்
குழந்தைகளின் மழலை மொழி கேளாதார்…”

மழலைப்பருவம் மனதோடு உறையும் என்பர். ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் அவர்கள் மகிழ்ந்திருந்த கணங்களை கேட்டால் அது மழலைப்பருவமே என்பர். சிறுவர்கள் என்போர் மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதியினராகக் கருதப்படுகின்றனர். மனச்சுமைகளோ எண்ணக்குறைகளோ அல்லாத தூய்மையான பருவம். மழலைகள் சிறுவர்கள் என்றெண்ணும் போதே நம்முடைய சிந்தனைகள் எல்லாம் கடந்தகால நினைவலைகளை நோக்கி பயணிக்கின்றதல்லவா. ஆம் இத்தகைய பெறுமதிமிக்க சிறுவயது பராயம் இன்றைய சிறுவர்களுக்கு எவ்வாறுள்ளது என்று அணுகுவோமானால் முன்னைய காலத்து சிறாரது வாழ்க்கை நெறிமுறைகள் மற்றும் அனுபவங்களில் இருந்து முற்று முழுதும் வேறுபட்டதாகவே தற்கால சிறார்ப்பருவங்கள் நகர்கின்றன. அவ்வகையில் மூன்று வயது முதல் 16 வயது வரையான காலப்பகுதியை சிறார் பருவம் என்று குறிப்பிட இயலும்.

எமது முந்தைய தலைமுறை பேணி வந்த ஒழுக்க விழுமியங்கள் தற்போது எட்டாக்கனியாகி கொண்டிருப்பது ஒரு கசப்பான உண்மையாகும். ஆம் இன்றைய சிறுவர்களது கூடிவாழ்தல் மற்றும் ஆக்கபூர்வமான சிந்தைகளுக்கு மட்டுப்படுத்தும் விதமாகவே இன்றைய சமூக நடத்தைகள் மாற்றமடைந்து உள்ளது. காரணம் மிக துரிதமாக அதிகரித்து வரும் நவீனத்துவங்களும் தொழில்நுட்ப பார்வைகளுமே. இதன் பீடிப்பு மக்களது மனநிலைகள் மற்றும் வாழ்க்கை முறைகளையும் பாரியளவில் வியாபித்து மற்றது என கூறினால் ஆச்சரியம் ஏதுமில்லை. பெற்றோர்கள் தத்தமது பிள்ளைகள் கல்வி, விளையாட்டு, விஞ்ஞானம் என அனைத்திலும் மேலோங்க வேண்டும் என எதிர்பார்ப்பது ஆரோக்கியமானதே ஆயினும் இவற்றிற்கான அவர்கள் பிள்ளைகள் மீது பிரயோகிக்கும் பிரயத்தனங்களே பிறழ்வான விளைவுகளுக்கு வழிகோலுகின்றன. வெறுமனே பரீட்சை பெறுபேறுகளை மட்டுமே மையப்படுத்தி சிறுவர்களை முழுநேர கற்றல் கற்பித்தலில் ஈடுபட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறுவர்கள் அவர்களுடைய மழலைப்பிராயத்தை தொலைப்பவர்களாகவும் மகிழ்ந்திருக்க வேண்டிய காலங்களை இழப்பவர்களுமாகவே உள்ளனர்.

தற்காலகட்டத்திலும் பார்க்க கடந்த காலங்களில் சிறுவர்கள் சுந்திரமானவர்களாக சித்தரிக்கப்படுகின்றது. அத்துடன் கிராமிய விளையாட்டுகளில் திழைத்தவர்களாகவும் கலாச்சாரம் பண்பாடுகளில் முழுமையான ஈடுபாடு கொண்டவர்களாகவும் ஒழுக்க நெறிகளை பின்பற்றுபவர்களாகவும் இருந்தமையை காண முடிகிறது. காரணங்களை நோக்கினால் அக்காலகட்டத்தில் மக்களிடையேயான இடைத்தொடர்பானது நேரடித்தொடர்பாகவே காணப்பட்டது. இந் நிலையில் பொழுதுபோக்காக இருப்பினும் கலை கலாச்சாரமாக இருப்பினும் சம்பிரதாயங்களாக இருப்பினும் அனைத்தும் சுற்றத்துடன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டது. இந் நிலையில் மக்களிடையேயான இடைத்தொடர்புகள் மிகவும் வலுப்பெற்றதாக காணப்பட்டது.

இன்னும் ஆழமாக நோக்கினால் நாம் தொழில்நுட்ப உலகில் இருக்கின்றோம். இந் நிலையில் சிறுவர்கள் தொழில்நுட்ப சாதனங்களை கையாளுதல் மறுக்கப்பட முடியாததொன்றாக உள்ளது. இந் நிலையில் சிறுவர்கள் தமது வயதிற்கு தகாத பலவற்றை இள வயதிலேயே அறிய நேரிடுதல் அவர்களுடைய சிறுவர் பராயத்தை இழக்கச் செய்கிறது. இவை மட்டும் அல்லாமல் மைதானங்களில் நேரங்களை செலவிட வேண்டியவர்கள் கணித்திரையில் மூழ்கிக் கிடக்கின்றனர். தற்காலத்தில் எங்குபார்த்தாலும் இலத்திரனியல் ஊடகங்கள். தொலைக்காட்சி கணனி வீடியோ விளையாட்டு  டெப்  கையடக்க தொலைபேசி என பலவகையில் இலத்திரனியல் சாதகங்கள் நமது சிறுவர்களை ஆட்கொண்டுள்ளன. இவற்றில் சராசரியாக 7 மணித்தியாளங்களை நாள் ஒன்றிற்கு சிறுவர்கள் செலவிடுவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிறுவர்களுக்கு கல்வி முன்னிலைப்படுத்தப்பட்டாலும் பாடசாலை தவிர்ந்த மேலதிக கல்வி குறிப்பிடப்படுமளவிற்கு கட்டாயமானதாக இருக்கவில்லை. மாறாக பள்ளி தவிர்ந்த ஏனைய பொழுதுகளில் சிறுவர்கள் தத்தமது குடும்பத்தினருடனும் சகவயது குழுக்களுடனும் நேரத்தை செலவிட்டனர். குடும்பங்களுடன் நேரத்தை செலவிடக்கிடைக்கும் சந்தர்ப்பங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான உறவு வலுப்பெற்றதுடன் பரம்பரைகளுக்கிடையிலான புரிதலும் முனனிலைப்படும் வாய்ப்புக்கள் கிடைத்தன. பெரும்பாலான குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்கள் என்றபடியினால் பொதுச்சமூக வெளிக்கு தேவையான ஒற்றுமை, புரிதல், விட்டுக்கொடுப்பு, சகோதரத்துவம், உடைமை பேணல், நபர்களுக்கிடையிலான தொடர்பாடல், பெரியோரை கனம் பண்ணுதல் முதலான நெறிகளினை குடும்பங்களிலிருந்தே அனுபவ வாயிலாக பெற்றுக்கொண்டனர்.

இவை தவிர அக்காலத்து சிறுவர்கள் மிகவும் சுதந்திரமானவர்கள் என் குறிப்பிடுவதற்கு இன்னுமொரு பிரதான காரணமாக விளையாட்டுக்களை குறிப்பிட முடியும். அதாவது கிராமிய விளையாட்டுகளான கிளித்தட்டு, கிட்டிப்பொல், கெந்தி, ஆடும் வீடும், பம்பரம், கண்ணாமூச்சி, பட்டம் விடுதல், மண் விளையாட்டுக்கள் முதலான ஒன்றுகூடல் விளையாட்டுக்களையே அதிகளவில் விளையாடினர். ஆனால் இத்தகைய விளையாட்டுகளை வெறுமனே செவிவழியாகவும் படங்கள் மூலமாகவும் மட்டுமே இன்று அறியக்கூடியதாக உள்ளது. இன்றைய காலகட்டத்திலும் சிறுவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர் என்ற போதிலும் அது எவ்வளவு தூரம் அனைத்து சிறுவர்களையும் சென்றடைகிறது என்பது கேள்விக்குறியே. அது மட்டும் அல்லாமல் இன்று ஏராளமான சிறுவர்கள் வெறுமனே திரை/மென் விளையாட்டுகளிற்கே (வீடியோ கேம்ஸ்) அடிமையாகியுள்ளனர். தரமான பொழுதுபோக்கு ஊடகங்களில் சிறுவர்களும் கட்டிளம் பருவத்தினரும் ஈடுபடுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவு நாள் ஒன்றிற்கு ஒன்று முதல் இரண்டு மணித்தியாலங்களே ஆனாலும் இன்றைய சிறுவர்கள் நாள் முழுவதையும் இலத்திரனியல் சாதனங்களூடே கழிக்க விரும்புகிறார்கள்.

இன்றைய சிறுவர்கள் பாரியளவில் நாட்டம் செலுத்தும் வீடியோ கேம்கள் என்ற நிலைப்பாட்டை அணுகும் போது சிறுவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். சமூக மயமாக்கல் குறைவதோடு குடும்பத்தில் இருந்தும் தனிமைப்பட்டவர்களாகவே உள்ளனர். அத்துடன் சிறுவர்களது ஆக்கபூர்வ சிந்தனைகள் மழுங்கடிக்கப்படுவதுடன் புத்தாக்க முயற்சிகளும் அறிந்தோ அறியாமலோ மறுக்கப்படுகின்றன. பல மணி நேரத்தை வீடியோ கேம்களிலேயே நிறைய சிறுவர்கள் செலவிடுகிறார்கள். இதனால் அவர்களுடைய மனநலம் பாதிப்படைவதற்கான வாய்ப்புக்களும் அதிகரிக்கின்றன. அத்துடன் பிரமை உலகிலேயே சிறுவர்கள் உழல்கின்றதோடு வளர்கால மன இறுக்கத்திற்கும் உள்ளாகுகின்றனர். ஒரு இளைஞன் பிறழ்வான நடத்தை சார் கோலங்களை வெளிப்படுத்துகிறான் எனில் அவனுடைய மழலைப் பருவம் ஆரோக்கியமானதாக அமைந்திருக்கவில்லை என்பது பொதுவான பரவலான அணுகுதல். ஆக ஒவ்வொரு பெற்றோரும் தத்தமது சிறாரது மழலைப்பருவம் ஏன் இன்றியமையாதது என்றும் அம் மழலைப் பருவம் ஆரோக்கியமானதாக அமைய தவறும் பட்சத்தில் சிறாரது எதிர்காலம் பாதிப்புறும் என்பதை அறிந்திருத்தல் அவசியம்.

பெரும்பாலான வீடியோ கேம்களில் எவ்வித விழுமிய பண்புகளும் போதிக்கப்படுவதில்லை. மாறாக துன்புறுத்தல், சண்டைக்காட்சிகள், ஆயுதப்பிரயோகங்கள் போன்றவற்றையே வெளிக்காட்டுவதுடன், வெற்றி பெறுதல் மட்டுமே மகிழ்ச்சியை தரக்கூடியது எனும் மனப்பான்மையை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் தோல்விகளை ஏற்றுக்கொள்ளாத பண்பினராக சிறுவர்கள் வளர்கின்றனர். இவை மட்டும் அல்லாமல் சுயநல மனப்பான்மை, போட்டித்தன்மை, பொறாமை, விட்டுக்கொடுப்பின்மை போன்ற பிறழ்வான வெளிப்பாடுகளையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு அணுகும் போது சிறுவர்கள் தமது பொழுதுபோக்கிற்காக வீடியோ விளையாட்டுக்களை நாடுவதனால் ஆரோக்கியமான பல பல அம்சங்களை இழக்கின்றனர்.

இவை ஒருபுறம் இருக்க தற்காலத்தில் அதிகரித்து வரும் தொலைக்காட்சி மோகமும் சிறுவர்களை வெகுவாக பாதிக்கின்றது. அதிக அளவில் தொலைக்காட்சிகளில் நேரத்தை செலவிடும் பதின்ம வயது சிறுவர்களின் அறிவுத்திறன் மங்கும் என்று அதிர்ச்சி ஆய்வுத்தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அணுகினால் சிறுவர்கள் பெரிதும் நாட்டம் செலுத்துவதாக கார்டூன் நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. இவ்வாறான கார்டூன் நிகழ்ச்சிகளில் பல நல்விழுமியங்கள் கடத்தப்படுகின்ற போதிலும் அண்மையில் பரவலான வெறுமனே பொழுது போக்கிற்காக அர்த்தங்கள் ஏதுமற்ற வேடிக்கை கருத்துக்களே மையப்படுத்தப்படுகின்றன. இதனால் சிறுவர்கள் மாயைகள் மற்றும் வித்தைகளை வெகுவாக நம்புகையில் ஜதார்த்தங்கள் தாண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அத்துடன் பிற முக்கியமான செயல்களுள் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவை தவிர்ந்து முழுநேரமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொலைபேசி விளையாட்டுக்களில் தம்மை தொலைக்கின்றனர். இவை தொடர்பில் விரிவாக அணுகுகின்ற போது பெற்றோர்களும் பிள்ளைகள் தமது நேரங்களை இவ்வாறான செயல்களில் கழிக்க அனுமதிப்பது வருத்தத்திற்குரியது.  ஆக சிறுவர்களுடன் இணைந்து தொலைக்காட்சியை பார்ப்பதும் பயனளிப்பதாக அமையும். இதன்போது ஊடக வழிகாட்டல் ஒன்றை பெற்றோர்கள் வழங்க முடியும். விசேடமாக விளம்பரங்களின் உண்மைத்தன்மை தொடர்பாக அறிவூட்ட முடியும்.

தற்காலத்தில் சிறுவர்களுடைய வாசிப்பு பழக்கம் மற்றும் இயற்கையோடு ஒன்றித்து வாழ்தல் போன்றனவும் அருகிக்கொண்டே போகின்றது. இவற்றை சிறுவர்கள் நாடுவதற்கான வெளிகளும் குறைவடைகின்றமையே பிரதான காரணமாக உள்ளது. பாடநூல்கள் அனைத்தும் இலத்திரனியல் மயமாக்கப்பட்ட பின்பு கற்றல் கற்பித்தலில் ஆரம்பித்து அனைத்து துறைசார் அணுகுமுறைகளும் இலத்திரனியல் ஆக்கப்பட்ட நிலையில் புத்தக வாசிப்பென்பது கேள்விக்குறியே. அக்காலகட்டத்தில் இயற்கையோடு ஒன்றித்து சூழலை நேசித்த சிறுவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம் காட்டினர் ஆனால் இன்றோ சுற்றுச்சூழலை அவதானிக்கவும் அதனுடன் உலாவவுமே சிறுவர்களுக்கு நேரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

விழுமியம் என்பது தனிநபர்; சமூகம்; வாழ்க்கை என்பவற்றை வளப்படுத்தி அதனை அர்த்தமுள்ளதாக மாற்றும் குணநல பண்பாகும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் தனிமனித விழுமியங்களான அன்பு, தைரியம், ஒழுக்கம், அகிம்சை, அறம் செய்தல், சமாதானம், நேர்மை என இன்னும் பல மனித விழுமியங்கள் இருத்தல் அவசியமாகும். ஒரு குழந்தை பிறந்ததும் அக் குழந்தைக்கு விழுமியத்தை போதிப்பது அக் குழந்தையின் பெற்றோர் சுற்றுப்புறச்சூழல் இயற்கை நிகழ்வுகளுமாகும். முன்னைய காலகட்டங்களில் குடும்பம் மட்டும் அன்றி மத நிறுவனங்கள், சமூக நிகழ்வுகள், மன்றங்கள் என பரவலான சமூக நிறுவனங்கள் சிறுவர்களது வளர்ச்சியில் இன்றியமையாததான விழுமிய பண்புகளுக்கு இடமளித்து. ஆனால் இன்றைய நவீன உலகில் அனைத்து விடயங்களும் தொழிட்பத்தின் அதீத வளர்ச்சியினால் உள்ளம் கைக்குள் சுருங்கி விட்ட படியினால் சிறுவர்களுடைய சமூகவியல் சார்ந்த வெளிப்பாடுகளும் மிகவும் குறுகியதாகவே காணப்படுகின்றன.

அத்துடன் பரவலாக அணுகுகின்ற போது இன்றையை சிறுவர்களுக்கான வெளிகள் உலகத்தொடர்புகள் பரவலாக கிடைக்கின்ற போதிலும் அவர்களுடைய சமூகமயமாக்கலானது முன்னரை விட பின்தங்கியே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் விழுமிய பண்புகளிலும் இன்றைய சிறுவர்கள் பின்னிலையிலேயே காணப்படுகின்றன. குடும்பங்கள் தனித்துக் காணப்படும் சூழ்நிலையில் வேலைப்பழு, பொருளாதார சுமை, நாட்டின் அதிவேக நவீனத்துவ வளர்ச்சி போன்ற பலவற்றை காரணங்களாக குறிப்பிடினும்  பெற்றோர்கள் தத்தமது பிள்ளைகளது முழுச்செயற்பாட்டிலும் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம்.  பிள்ளைகள் எவ்வாறு வளர்க்கின்றனர், குறிப்பிட்ட வயதில் அவ்வயதிற்கு தேவையான அனைத்து அம்சங்களும் கிடைக்கின்றனவா என்பதை உறுதிசெய்தல் வேண்டும்.

புத்தகங்கள் பத்திரிகைகள் அச்சிடப்பட்ட மட்டை விளையாட்டுகளினால் இலத்திரனியல் சாதனங்களுக்கான நேரத்தை படிப்படியாக குறைத்து பிரதீடு செய்ய முடிவதுடன் சிறுவர்கள் இலத்திரனியல் மோகத்திற்கு அடிமையாவதையும் தவிர்க்க இயலும். அதிகப்படியான இலத்திரணியல் சாதணங்களின் பாவனையினால், அவதானம் செலுத்துவதில் பிரச்சினைகள் பாடசாலை கற்றல் பிரச்சினைகள் நித்திரை செய்தல் மற்றும் உணவருந்துதல் பிரச்சினைகள் உடல் பருமனடைதல் என்பன ஏற்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இளம் சிறுவர்கள் தமது காலத்தை வெளி விளையாட்டுக்களிலும் வாசிப்பதிலும் ஏனைய பொழுது போக்குகளிலும் தமது கற்பனை விளையாட்டுக்களிலும் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்கப்பட்டல் வேண்டும். சிசுக்களும் 2 வயதிற்கு குறைவான குழந்தைகளும் எந்தவையயான இலத்திரனியல் ஊடகங்களில் இருந்தும் தவிர்க்கப்படல் வேண்டும். இந்த வயது மட்டத்தினரிடையில் மூளை வளர்ச்சி மிக வேகமாக இடம்பெறுதனால் அவர்கள் திரையில் இருந்து அல்லாது சூழலில் இருந்தே நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இன்றைய சிறுவர்கள் தனிமை விரும்பிகளாகவே அறியப்படுகின்றனர். இதற்கு இவர்கள் சமூகமயமாக்கலுக்கு உட்படும் வாய்ப்புக்கள் நவீனத்துவம் காரணமாக மறுக்கப்படலும் குறிப்பிடத்தக்க காரணமாக உள்ளதென்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் கடந்த காலத்தவரது மழலைப்பருவ மகிழ்ந்திருத்தல்களை எல்லாம் இன்றைய குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக அல்லாமல் கிடைக்கச்செய்வதற்கு முயல்தலும் இன்றியமையாதது.  ஆக சிறுவர் பராயத்தின் செயல்களும் சிந்தனை வடிவங்களுமே நாட்டிற்கு நல்ல ஆரோக்கியமான பிரஜையை தரவல்லது. சிறுவர்கள் சிறுவர்களாக வளர வேண்டும் என்பதே அடிப்படையானது என்பதை அனைவரும் உணர்தலோடு கல்வி நிர்வாகங்களும் குடும்பங்களும் ஒவ்வொரு சிறாரது கல்வி விளையாட்டு பொழுதுபோக்கு உட்பட அனைத்து நகர்தலிலும் முழுமையான பங்கினை அளித்தல் அவசியம்.

சமூக வலைத்தளங்களின் தாக்கம் முற்றிலும் வேறுபட்ட பார்வையில்

எம் நாடானது மேலத்தேய நாடுகளை விட 30 வருடங்கள் பின் நோக்கி காணப்பட்டாலும் 2009 ஆண்டிற்குப் பிற்பாடான காலப்பகுதி தகவல் தொடர்பாடல், தொழில்நுட்ப ரீதியில் பாரிய வளர்ச்சியை அடைந்ததுள்ளது. Net Cafe சகாப்தம் முடிவுக்கு வந்து ஒவ்வொரு வீட்டிலும் இணைய இணைப்பு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளதை காணமுடிவதாக உள்ளது. தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலியமாக இருக்கும் Tinder போலவே அன்று Facebook ஒரு விம்பத்தை கொடுத்தாலும், தற்போது அது ஓர் முற்றிலும் வேறுபட்ட வடிவம் ஒன்றை எமக்குக் காட்டி வருகின்றது. வயது, இன பேதமின்றி அணைத்திட மக்களும் தங்களது அன்றாட சீவனோபாயங்களில் ஒன்றாக சமூக வலைத்தளங்களைக் கருதத் தொடங்கியுள்ளனர். அதேபோல் வளர்ந்து வரும் சந்ததியினரைத் தொழில் முனைவோராக மாற்றுவதிலும் ஊக்குவிப்பதிலும் பாறிய பங்களிப்பை அளித்து வருகின்றது என்பதை எவரினாலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு விசைக்கும் எதிர் விசை இருப்பது போல் சமூகவலைத்தள பாவனை மக்களிடையே எவ்வகையான எதிர் வினைகளையும் யதார்த்தத்தையும் கொண்டு அமைந்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

கருத்துச் சுதந்திரம் என்பது எமக்குக் கிடைக்கும் உரிமைகளுள் ஒன்றாகும். ஆம், நாம் நிச்சயமாக எமது கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமம் எமக்கு உண்டு. ஆனால் அதை மற்றொருவர் மீது எந்த அளவிற்குத் திணிக்கமுடியும் என்ற கேள்விக்கு சரியான வரைவிளக்கணம் எவரினாலும் கூற முடியாதுள்ளது. அதுபோலவே கருத்து உரிமம் என்ற பெயரில் ஒரு தனி நபர் மீது குற்றம் சுமத்துதல் அல்லது அவதூறு விளைவித்தல் என்பது இலங்கை சட்டத்திற்கு அமைய தண்டனைக்குரிய குற்றமாகும். Facebook மற்றும் Twitter போன்ற சமூக இணையதளங்கள் பொழுதுபோக்கு அம்சமாக அனைவரினது மனதில் நீங்கா இடம் பிடித்தாலும், காலப்போக்கில் அவை ‘தான் சொல்வது தான் சரி’ என்ற அடிப்படையில் அனைவரும் கருத்து தெரிவிக்கும் நூலாகவும் மெய் நிகர் செய்தி அறியும் கருவியாகவும் அமைந்துள்ளது.

தற்போதைய மக்கள் Negativity என்ற அம்சத்தில் சற்று கரிசனை காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக கொரோனாவின் பிற்பாடான காலப்பகுதி இறப்பு, நோய், வறுமை போன்ற காரணிகளின் சித்தரிப்பு சமூக வலைத்தளங்களில் அதிகமாகக் காணப்படுவதால் இவற்றில் இருந்து விலகி இருப்பதில் விருப்பம் காட்டிவருகின்றனர். இதனால் வயது முதிர்ந்த பெற்றோர்கள் நாட்டம் கூட புகைப்படம், காணொளி என்பவற்றை மையமாக வைத்து முற்று முழுக்க பொழுது போக்கிற்காக இயங்கும் Instagram, TikTok என்பதன் பக்கம் திரும்பி உள்ளதை எம்மால் காண முடிகிறது.

இலங்கையர்கள் என்ற அடிப்படையில் நாம் தோற்றுப்போன விடயங்களில் ஒன்று தான் இந்த வெறுப்பூட்டும் பேச்சு (Hate Speech) மற்றும் தூண்டும் சொற்பிரயோகங்கள் (Provoking) என்பனவாகும். இது தொடர்பிலான விழிப்புணர்வு மக்களிடையே போதுமானதாக இல்லை என்பது பலரின் கருத்தாக அமையப்பெற்றுள்ளது. இதனால் உலகில் அதிகளவான தடவை சமூக வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இலங்கை முன்வரிசையில் திகழ்கிறது என்பது வேதனை அளிக்கும் விடயமாகும். ஆகவே நாம் சமூக வலைத்தளங்களில் பிரயோகிக்கும் கருத்துக்களுக்கும் பதிவுகளுக்கும் நாம் பொறுப்பு மிக்க குடிமகன் என்ற அடிப்படையில் நடந்து கொள்வதோடு சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் முகமாக ஏதேனும் பதிவு காணப்பட்டால் அதனைப் பகிர்ந்து அதனை மேலும் விரிசலாக்கும் முகமாக மாற்றாமல் அவற்றை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும் செயல்முறைக்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

அது போலவே நாளுக்கு நாள் மக்களிடையே அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டாலும் அநேகமான கருத்துக்கள் ஓர் குறிப்பிட்ட நிறுவனத்தையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிக்கும் முகமாக அமையப்பெற்றுள்ளது என்பதைக் காண முடியுமாக உள்ளது. உண்மையான காரணத்திற்கு விமர்சிப்பது தவறன்று எனினும் விமர்சிப்பதற்கோ அல்லது கருத்து தெரிவிப்பதற்கு முன்பு வேறொருவர் பகிர்ந்ததன் நிமித்தம் பகிராமல் அதன் உண்மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை என்பவற்றைக் கருத்தில் கொண்டு பகிர்ந்தல் வரவேற்க்கத்தக்கது.

ஒருவர் மீது குற்றம் சுமத்துதல் இலகுவான காரணமாக அமையலாம். எனினும் அது போன்ற குற்றச்சாட்டு எமக்குச் சுமத்தப்பட்டால் அதன் அழுத்தத்தை எதிர் நோக்குதற்கு நாம் தயாராக உள்ளோமா என்பதோடு சுய விசாரணை செய்துகொள்வதோடு சமூக வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டதன் உண்மையான நோக்கத்தைக் கருத்தில்கொண்டு அதன் நன் விடயங்களை மாத்திரம் பார்ப்பதற்கும் பகிர்வதற்கும் முயல்வதோடு தேவையற்ற இனவிரிசல் பற்றும் கருத்துக்களில் இருந்து விலகி நடக்க முயல்வோம்.

பெரியவர்களுக்கு 10 ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறிப்புகள்.

பல்வேறு உணவுகளை உண்ணுங்கள். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் நிறைய உங்கள் உணவை அடிப்படையாகக் கொள்ளுங்கள். நிறைவற்ற கொழுப்பை நிறைவுற்றதாக மாற்றவும் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை அனுபவிக்கவும். உப்பு மற்றும் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்கவும் தவறாமல் சாப்பிடுங்கள்,  அளவைக் கட்டுப்படுத்தவும் நிறைய திரவங்களை குடிக்கவும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் நகருங்கள், அதை ஒரு பழக்கமாக்குங்கள்! இப்போதே துவக்கு! மேலும் படிப்படியாக மாறிக்கொண்டே இருங்கள்.

1. பலவகையான உணவுகளை உண்ணுங்கள் நல்ல ஆரோக்கியத்திற்கு, எங்களுக்கு 40க்கும் மேற்பட்ட வெவ்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவை, மேலும் எந்த ஒரு உணவும் அவற்றை வழங்க முடியாது. இது ஒரு உணவைப் பற்றியது அல்ல, காலப்போக்கில் ஒரு சீரான உணவுத் தேர்வைப் பற்றியது, அது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும்! அதிக கொழுப்புள்ள மதிய உணவுக்குப் பிறகு குறைந்த கொழுப்புள்ள இரவு உணவை உண்ணலாம்.

2. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் நிறைய உங்கள் உணவை அடிப்படையாகக் கொள்ளுங்கள் நம் உணவில் பாதி கலோரிகள் தானியங்கள், அரிசி, பாஸ்தா, உருளைக்கிழங்கு மற்றும் ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளிலிருந்து வர வேண்டும். ஒவ்வொரு உணவிலும் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சேர்ப்பது நல்லது. முழு தானிய ரொட்டி, பாஸ்தா மற்றும் தானியங்கள் போன்ற முழு தானிய உணவுகள் நம் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கும்.

3. நிறைவற்ற கொழுப்பைக் கொண்டு நிறைவுற்றதை மாற்றவும் நல்ல ஆரோக்கியத்திற்கும் உடலின் சரியான செயல்பாட்டிற்கும் கொழுப்புகள் முக்கியம். இருப்பினும், அதிகப்படியான அளவு நமது எடை மற்றும் இதய ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். பல்வேறு வகையான கொழுப்புகள் வெவ்வேறு ஆரோக்கிய விளைவுகளைக் கொண்டிருக்கின்றன, மேலும் இந்த குறிப்புகள் சில சமநிலையை சரியாக வைத்திருக்க உதவும்: நாம் மொத்த மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளை உட்கொள்வதை மட்டுப்படுத்த வேண்டும் (பெரும்பாலும் விலங்கு தோற்றம் கொண்ட உணவுகளிலிருந்து வரும்), மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்; லேபிள்களைப் படிப்பது ஆதாரங்களை அடையாளம் காண உதவுகிறது. வாரத்திற்கு 2-3 முறை மீன் சாப்பிடுவது, குறைந்தது ஒரு எண்ணெய் மீன் பரிமாறுவது, நிறைவுறா கொழுப்புகளை நாம் சரியாக உட்கொள்ள பங்களிக்கும். சமைக்கும் போது, ​​நாம் வறுக்காமல், கொதிக்க, நீராவி அல்லது சுட்டுக்கொள்ள வேண்டும், இறைச்சியின் கொழுப்புப் பகுதியை அகற்றவும், தாவர எண்ணெய்களைப் பயன்படுத்தவும்.

4. நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை அனுபவிக்கவும்

பழங்கள் மற்றும் காய்கறிகள் நமக்கு போதுமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து கொடுக்க மிக முக்கியமான உணவுகளில் ஒன்றாகும். நாம் ஒரு நாளைக்கு குறைந்தது 5 பரிமாணங்களை சாப்பிட முயற்சி செய்ய வேண்டும். உதாரணமாக, காலை உணவில் ஒரு கிளாஸ் புதிய பழச்சாறு, ஒருவேளை ஒரு ஆப்பிள் மற்றும் ஒரு துண்டு தர்பூசணி துண்டு, மற்றும் ஒவ்வொரு உணவிலும் பல்வேறு காய்கறிகளின் நல்ல பகுதி.

5. உப்பு மற்றும் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்கவும்

அதிக உப்பு உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும், மேலும் இருதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். உணவில் உப்பைக் குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன:

ஷாப்பிங் செய்யும் போது, ​​குறைந்த சோடியம் உள்ளடக்கம் கொண்ட பொருட்களை நாம் தேர்வு செய்யலாம்.

சமைக்கும் போது, ​​உப்பை மசாலாப் பொருட்களுடன் மாற்றலாம், பல்வேறு சுவைகள் மற்றும் சுவைகளை அதிகரிக்கும்.

சாப்பிடும் போது, ​​அது மேஜையில் உப்பு இல்லாமல் இருக்க உதவுகிறது, அல்லது குறைந்த பட்சம் சுவைக்கும் முன் உப்பு சேர்க்கக்கூடாது.

சர்க்கரை இனிப்பு மற்றும் கவர்ச்சியான சுவையை அளிக்கிறது, ஆனால் சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள் ஆற்றல் நிறைந்தவை, மேலும் அவ்வப்போது உபசரிப்பு என மிதமாக அனுபவிக்கப்படுகின்றன. நம் உணவுகள் மற்றும் பானங்களை இனிமையாக்குவதற்குப் பதிலாக நாம் பழங்களைப் பயன்படுத்தலாம்.

6. தவறாமல் சாப்பிடுங்கள், பகுதியின் அளவைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு உணவுகளை, தவறாமல், சரியான அளவில் சாப்பிடுவது ஆரோக்கியமான உணவிற்கான சிறந்த சூத்திரம். உணவை தவிர்ப்பது, குறிப்பாக காலை உணவு, கட்டுப்பாடற்ற பசிக்கு வழிவகுக்கும், பெரும்பாலும் உதவியற்ற அதிகப்படியான உணவுக்கு வழிவகுக்கும். உணவுக்கு இடையில் சிற்றுண்டி பசியைக் கட்டுப்படுத்த உதவும், ஆனால் சிற்றுண்டி சரியான உணவை மாற்றக்கூடாது. தின்பண்டங்களுக்கு, தயிர், ஒரு சில புதிய அல்லது உலர்ந்த பழங்கள் அல்லது காய்கறிகள் (கேரட் குச்சிகள் போன்றவை), உப்பு சேர்க்காத கொட்டைகள் அல்லது பாலாடைக்கட்டி கொண்ட ரொட்டியை நாம் தேர்வு செய்யலாம். பகுதியின் அளவிற்கு கவனம் செலுத்துவது அதிக கலோரிகளை உட்கொள்ளாமல் இருக்க உதவும், மேலும் நாம் அனுபவிக்கும் அனைத்து உணவுகளையும் அகற்றாமல் சாப்பிட அனுமதிக்கும். சரியான அளவு சமைப்பது அதிகமாக சாப்பிடாமல் இருப்பதை எளிதாக்குகிறது. சில நியாயமான பரிமாற்ற அளவுகள்: 100 கிராம் இறைச்சி; ஒரு நடுத்தர பழம்; அரை கப் மூல பாஸ்தா. சிறிய தட்டுகளைப் பயன்படுத்துவது சிறிய பரிமாணங்களுக்கு உதவுகிறது. தொகுப்பில் உள்ள கலோரி மதிப்புகளுடன் தொகுக்கப்பட்ட உணவுகள், பகுதி கட்டுப்பாட்டிற்கு உதவும். வெளியே சாப்பிட்டால், ஒரு பகுதியை நண்பருடன் பகிர்ந்து கொள்ளலாம். பக்கத்தின் மேல் 7. நிறைய திரவங்களை குடிக்கவும் பெரியவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 1.5 லிட்டர் திரவத்தை குடிக்க வேண்டும்! அல்லது அது மிகவும் சூடாக இருந்தால் அல்லது அவர்கள் உடல் சுறுசுறுப்பாக இருந்தால். நிச்சயமாக நீர் சிறந்த ஆதாரம், நாம் குழாய் அல்லது மினரல் வாட்டர், பளபளப்பான அல்லது பளபளப்பான, வெற்று அல்லது சுவையுடன் பயன்படுத்தலாம். பழச்சாறுகள், தேநீர், குளிர்பானங்கள், பால் மற்றும் இதர பானங்கள், எல்லாம் சரியாக இருக்கலாம் – அவ்வப்போது.

7. ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும்

நாம் ஒவ்வொருவருக்கும் சரியான எடை நமது பாலினம், உயரம், வயது மற்றும் மரபணுக்கள் போன்ற காரணிகளைப் பொறுத்தது. உடல் பருமன் மற்றும் அதிக எடையால் பாதிக்கப்படுவது நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

அதிகப்படியான உடல் கொழுப்பு நமக்குத் தேவையானதை விட அதிகமாக சாப்பிடுவதால் வருகிறது. கூடுதல் கலோரிகள் எந்த கலோரி ஊட்டச்சத்துக்களிலிருந்தும் வரலாம்-புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் அல்லது ஆல்கஹால், ஆனால் கொழுப்பு அதிக ஆற்றல் கொண்ட ஆற்றல் மூலமாகும். உடல் செயல்பாடு ஆற்றலைச் செலவழிக்க உதவுகிறது, மேலும் நம்மை நன்றாக உணர வைக்கிறது. செய்தி மிகவும் எளிமையானது: நாம் எடை அதிகரித்தால், நாம் குறைவாக சாப்பிட வேண்டும், மேலும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்!

பக்கத்தின் மேல்

8. நகர்த்துங்கள், அதை ஒரு பழக்கமாக்குங்கள்!

உடல் எடை அனைத்து உடல் பருமன் மற்றும் சுகாதார நிலைகளுக்கு மக்களுக்கு முக்கியம். இது கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது, இதயம் மற்றும் சுற்றோட்ட அமைப்புக்கு நல்லது, இது நமது தசை வெகுஜனத்தை பராமரிக்கிறது அல்லது அதிகரிக்கிறது, இது கவனம் செலுத்த உதவுகிறது, ஒட்டுமொத்த ஆரோக்கிய நல்வாழ்வை மேம்படுத்துகிறது. நகர்த்துவதற்கு நாங்கள் சிறந்த விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டியதில்லை! மிதமான உடல் செயல்பாடு வாரத்திற்கு 150 நிமிடங்கள் அறிவுறுத்தப்படுகிறது, மேலும் இது நம் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக எளிதாக மாறும். நாம் அனைவரும் முடியும்:

லிப்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள்,

 

9. இப்போது தொடங்குங்கள்! மேலும் படிப்படியாக மாறிக்கொண்டே இருங்கள்.

ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெரிய மாற்றங்களை விட படிப்படியாக நமது வாழ்க்கை முறையை மாற்றுவது எளிது. மூன்று நாட்களுக்கு, நாம் நாள் முழுவதும் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களை எழுதலாம், மேலும் நாம் செய்த இயக்கத்தின் அளவைக் குறித்துக்கொள்ளலாம். நாம் எங்கு மேம்படுத்த முடியும் என்பதைக் கண்டறிவது கடினம் அல்ல:

காலை உணவைத் தவிர்ப்பதா? ஒரு சிறிய கிண்ணம் மியூஸ்லி, ஒரு துண்டு ரொட்டி அல்லது பழம், அதை மெதுவாக நம் வழக்கத்தில் அறிமுகப்படுத்த உதவும்

மிகக் குறைவான பழங்கள் மற்றும் காய்கறிகள்? தொடங்குவதற்கு, நாம் ஒரு நாளைக்கு ஒரு கூடுதல் பகுதியை அறிமுகப்படுத்தலாம்.

கொழுப்பு அதிகம் பிடித்த பிடித்த உணவுகள்? அவற்றை திடீரென நீக்குவது மீண்டும் தீப்பிடித்து, பழைய பழக்கத்திற்கு நம்மை திரும்பச் செய்யும். அதற்கு பதிலாக நாம் குறைந்த கொழுப்பு விருப்பங்களை தேர்வு செய்யலாம், அவற்றை குறைவாகவும், சிறிய பகுதிகளிலும் சாப்பிடலாம்.

மிகவும் சிறிய செயல்பாடு? தினமும் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த முதல் நடவடிக்கையாக இருக்கலாம்.

Yasmin’s Cafe

இங்கு 16 வித்தியாசமான சுவைகளில் Ice Cream வகைகள் காணப்படுவதோடு, இவை அனைத்தும் பழமையான முறையிலேயே தயாரிக்கப்படுகின்றன. மேலும் இதற்குத் தேவைப்படும் சேர்வையுறுப்புகள் யாவும் புதிய மற்றும் வீடுகளின் உண்டாக்கப்படும் மூலப் பொருட்களை மாத்திரம் உபயோகித்து உண்டாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு விற்பனைக்கு இருக்கும் அனைத்து தின்பண்டங்களும் ஜெலடின் (Gelatin), நிற சேர்வைகள் (Added Colors) மற்றும் பாதுகாப்பு சேர்வைகள் (Preservatives) எதுவும் உள்ளடங்கப்படுவதில்லை என்பதோடு சீனி பயன்பாட்டிற்குப் பதிலாகக் கித்துள், வெல்லம் (Jaggery) மற்றும் தேன் என்பன பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவர்களின் பிரதான சேர்வை உறுப்புகளாகத் தேங்காய்ப் பால், பாதாம் பால் (Almond Milk) மற்றும் முந்திரி பால் (Cashew Milk) என்பன உபயோகப்படுகின்றன. அதேபோல் சைவ உணவு பிரியர்களின் முறைக்கு ஏற்றவாறே அனைத்து தின்பண்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை அறியத்தருகிறேன். ஆகவே எவராக இருப்பினும் உங்கள் இனிப்பு ஆசைக்கு இது ஓர் சிறந்த இடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Drinks

Caffe Mocha (LKR 350)
இவை அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டு வழங்கப்படுவதோடு நீங்கள் ஒரு Insta பிரியராக இருப்பின் நிச்சயமாக ஓர் நல்ல புகைப்படத்தை எடுக்க முடியுமாய் இது அமையும். மேலும் சுவை அடிப்படையில் கடுமையான அல்லது எளிதான சுவைக்கு இடைப்பட்ட வகையில் உங்கள் கோப்பி அவாவை நிவர்த்தி செய்யும்.

Caffe Latte (LKR 320)

கெபின் (Caffeine) மனநிலையை அடைய விருப்பப்படும் நபராக இருப்பின் இது ஓர் சிறந்த தேர்வாக அமையும். தேவைக்கேற்ற அளவு கோப்பி மற்றும் பால் கலக்கப்பட்டுள்ளதோடு சூடான நேரங்களில் தொண்டைக்கு மிக அருமை மிக்கதாக அமையும்.

Ice Creams

Fig and Honey (LKR 400)

இதை உண்ணும் போது நிச்சயமாக உங்களுக்குப் பள்ளிப் பருவம் மற்றும் கிராமப்புறம் என்பன ஞாபகத்திற்கு வரும். மேலும் இவை சரியான அளவீடுகளில் அத்தி (Fig) மற்றும் தேன் கலக்கப்பட்டுள்ளதால் ஒரு scoop உடன் மாத்திரம் நிறுத்திக்கொள்வது உங்களுக்கு மிகக் கடினமானதாக அமையும்.

Pistachio – Almond (LKR 400)

மெல்லுவதற்கு விரும்பும் பிரியர்களுக்குச் சிறந்த ஓர் தேர்வாக அமையும். மேலும் இவை Ice Cream இல் போதியளவு கலந்து உள்ளமையினால் கொடுக்கும் பணத்திற்கு நீதி வழங்கும்.

Chocolate and Almonds (LKR 400)

Chocolate சுவை பிரியர்கள் இல்லாத இடம் கிடையாது. அவர்களுக்கு இதுவே சிறந்த தேர்வு. மெல்லுவதற்கு மிக நன்றாக இருப்பதோடு தாகம் தீர்க்கும் பாணமாகவும் அமையும்.

Coffee Almond Fudge (LKR 400)

இருக்கும் தேர்வுகளில் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்று. அதில் வெளிவரும் கோப்பியின் வாசம் உங்களை மெய் சிலிர்க்க வைக்கும் என்பதோடு மெல்லுவதற்கு மிக உகந்ததாக அமையும்.

Salted Caramel (LKR 400)

Caramel சுவை ஒரு சில நிமிடங்கள் உங்களை மெய் சிலிர்க்க வைக்கும். உண்ணும்போது மிக மென்மையாக அமைவதோடு உங்களை வேறு கனவு உலகிற்கு அழைத்துச் செல்லும்.

Chocolate Fudge Brownie (LKR 300)

Brownie க்கும் Cakeக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி இரு புறம் இருக்க நிச்சயமாக இது Ice Cream ஆ அல்லது Brownie ஆ என்ற கேள்வி உங்களிடம் எதிரும். மேலும் இதன் சுவை உங்கள் நரம்புகளை ஒரு சில நிமிடங்கள் ஸ்தம்பிக்க வைக்கும் என்பதோடு Ice Cream தேர்வுகளில் மிகச் சிறந்த தேர்வாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

Vegan Vanilla Fudge Brownie (LKR 300)

சைவ Ice Cream வகைகள் நினைப்பது போல் சுவைமிக்கதாக இருப்பதில்லை என்று எவராவது கூறுவாராயின் அவரை இங்கு அழைத்து வருவது சாலச் சிறந்தது. மிக அருமையான சுவையைக் கொண்டுள்ள அதேவேளை Chocolate மற்றும் Vanilla சுவைகள் என்பன சிறந்து விகிதத்தில் கலக்கப்பட்டுள்ளன.

Tin Kiri (LKR 300)

எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் சற்று புது விதமான சுவை. நிச்சயமாக ஒரு புது வித உணர்வை இது வழங்கும்.

Rose Kulfi (LKR 300)

Rose water, Rose எண்ணெய், Rose மெழுகு என்ற அனைத்தையும் உள்ளடக்கியது போல் ஓர் சுவையைக் கொடுக்கும். மேலும் மெல்லுவதற்கு அவ்வப்போது பாதாம் போன்றன சுவைக்குத் துணையாக அமையும். உண்ட பின் நித்திரை உங்களை இரு கை கோற்று வரவழைக்கும்.

French Vanilla (LKR 300)

இது Vanilla பிரியர்களுக்கு மாத்திரமே. வழமைபோல் அளவான இனிப்புடன் நாவிற்கு உகந்ததாக அமையும்.

Milo (LKR 300)

Milo பிரியர்களுக்கு இதைவிடச் சிறந்த தேர்வு எதுவும் கிடையாது. நிச்சயமாக இது உங்களை ஏமாற்றம் அளிக்கப்போவதில்லை. Ice Cream உடன் சேர்த்து மேலாக Milo துகள்கள் தூவி தரப்படுவதைப் பார்க்கும் போது உங்கள் முகத்தில் ஒளி வட்டம் வீசும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

Decadent Chocolate (LKR 300)

மிகக் கடினமான Chocolate சுவையை இது கொண்டிருக்கும். நிறம் மற்றும் சுவை என்பன Chocolate என்பதற்கான பிரதிபலிப்பை இது வழங்கும்.

Praline and Creme (LKR 300)

இதில் கொட்டை வகைகள், முந்திரிகை, Vanilla மற்றும் பாதாம் என்பன நீங்கள் மெல்லுவதற்கு விரும்பும் நபராக இருப்பின் இதுவே உங்களின் சிறந்த தேர்வு.

Coconut Creme (LKR 300)

இதுவே Yasmin Cafe க்கு தனித்துவத்தை வழங்குகின்றது. நிச்சயமாக இது போல் சுவையை வேறு எவ்விடத்திலும் உங்களால் காண முடியாது.

Strawberry Sorbet (LKR 300)

பாலுடன் சேர்ந்த மிக Strawberry சுவையை இது வழங்கும். அதன் Sorbet இன் உள்ளடக்கம் இதனை ஏனைய Strawberry Ice Cream வகைகளிலிருந்து வேறு படுத்துகின்றது.

Lemon Sorbet (LKR 300)

Snow பந்தைப்போல் காட்சியளிக்கும். வெப்பமான நாட்களில் Mojito அருந்துவதற்கு நிகரான உணர்வை வழங்கும்.

Ice Cream Trifle (LKR 650)

Grapes, cherry மற்றும் ஒரு புது விதமான இனிப்பு கலவை இதன் சிறப்பம்சமாகும்.

Chocolate Eton Mess (LKR 650)

மேலே உள்ளதைப் போல் அல்லாது குறைந்த பழம் அதிக Chocolate. உண்ணுபதற்கு மிக அருமையும் என்பதோடு கொடுக்கும் பணத்திற்குச் சிறந்த ஓர் தேர்வு.

Cakes

Ribbon Cake (LKR 400)

மற்றைய Ribbon Cake போல் நிச்சயமாக இருக்காது. அளவான இனிப்பு மற்றும் ஓர் புது வகையான சுவையை இது கொண்டுள்ளது. நான் உண்ட சிறந்த Ribbon Cake களில் ஒன்று.

Perfect Chocolate Cake (LKR 450)

அதன் பெயரே அது எவ்வாறு அமைந்திருக்கும் என்பதற்கு உதாரணம். சற்று ஈர்ப்பதன் மிக்கதாக அமையப்பெற்றுள்ளதோடு Chocolate பிரியர்களை வேறு உலகிற்குக் கொண்டு செல்லப்போகிறது.

Coffee Cake (LKR 480)

நல்ல கோப்பி அனுபவத்தை இது உங்களுக்கு வழங்கும். அளவான இனிப்புடன் உங்கள் நா நரம்புகளை மகிழ்விக்கும்.

சூழல்

கண்ணிற்குக் குளிர்ச்சியான மனதிற்கு இதமான ஓர் அனுபவத்தை வழங்கும். Pastel வர்ணங்களைக் கொண்டு அமையப்பெற்றுள்ளதோடு இயற்கையான வெளிச்சத்தை இது கொண்டுள்ளது.

Tip : இவர்களுக்கு மாத்திரம் உரித்தான சுவைகளாகக் கருதப்படும் Coconut மற்றும் Rose Kulfi என்பதைத் தெரிவு செய்தல் வரவேற்கத்தக்கது. அதே போல் chocolate பிரியராக இருப்பின் அனைத்து வகைகளும் உங்களை மகிழ்விக்கும்.

இலங்கையில் சுற்றுலா செல்லக்கூடிய அழகிய 8 இடங்கள்.

  1. பம்பரகந்த நீர்வீழ்ச்சி (Bambarakanda Waterfalls) – கலுபான, பதுளை.

Nearest Hotel resort – Bambarakanda Holiday Resort
Address : G.Kulathunga, Bambarakanda Gardens, Bambaragala, Badulla, Sri Lanka, 90322
Contact No : 071 170 7692

  • கைட் தரப்படும்
  • கலுப்பானயில் இருந்து பம்பரகந்த வருவதற்கான போக்குவரத்து வசதி தரப்படும்.

இலங்கையின் உயரமான நீர்வீழ்ச்சி (863 அடிகள்) என்பதை பாடத்திட்டத்தில் எல்லோரும் படித்திருப்போம். அதை தாண்டி நாம் அறியாத ஒரு விடயம், பம்பரகந்த பார்ப்பவரை கொள்ளையடிக்கும் கனவு பிரதேசம். சுற்றிலும் நீண்டு வளர்ந்திருக்கும் “பைன்” மரக்காட்டுக்கு நடுவே இந்த நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. “லங்கா எல்ல”, “யாழ் தென்ன” போன்ற உப நீர்வீழ்ச்சி மற்றும் அழகிய சமவெளி, அடர்ந்த காடு, பைன் மர சுற்றம் என ஒரு பெரிய ரம்மியமான பரப்பை தன்னகத்தே வைத்துள்ளது. பம்பரகந்த செல்லுபவர்கள் அதற்கு மிக அருகில் இருக்கும் இந்த பிரதேசங்களையும் பார்த்துவிட்டு வருவது சிறப்பு. அத்தோடு நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் கூடாரம் அமைத்து தங்கும் வசதியும் உண்டு.

  1. டியலும நீர்வீழ்ச்சி (Diyaluma waterfalls) – கொஸ்லந்த, பதுளை

Nearest Hotel resort – Nature Hub Koslanda
Address : Yakada watta naulla koslanda, Badulla.
Contact No. 077 775 5177

  • போக்குவரத்து வசதி செய்து தரப்படும்
  • உணவு, தங்குமிடம் செய்து தரப்படும்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் இதுவும் ஒன்று. இந்த நீர்வீழ்ச்சியின் உச்சியில் இயற்கையாக அமைந்திருக்கும் குளம் போன்ற அமைப்பு பார்ப்பவரை இங்கே சுண்டி இழுக்கிறது. வளையம் வளையமாக இருக்கும் அந்த நீர் தேக்கம் உண்மையில் ஓர் உயரிய இரசனை இடம்  தான். மிக இலகுவாக இதன் உச்சத்திற்கு செல்ல வழி இருப்பதோடு போகும் வழியில் கூடாரம் போட்டு விற்பனையாகும் பிளேன் டீ மற்றும் கட்ட சம்பல் ரொட்டி மகத்தானது. இது இலங்கையின் இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

  1. ஹாவாகல – அடர கந்த, பெலிஹுல்லோய

Nearest Hotel resort – Hawagala Eco Resort
Address : Ihala Galagama Rd, Belihuloya 70140
Contact No :  071 036 8362

  • கைட் தரப்படும்
  • மூன்று வேளை உணவு

மிக கடுமையான மலையேற்றம். அதற்கு பிறகு நீங்கள் காணப்போவது சொர்க்கம். ஹாவாகல இலங்கையின் இயற்கை காதலர்களால் அதிகம் அறியப்படாத இடம். சப்ரகமுவ மாகாணம் மற்றும் மத்தியமாகாணத்தை எல்லையில் அமைந்திருக்கும் இந்த மலைத்தொடரானது காண அற்புதமான இடமாகும். அதன் உச்சியில் கூடாரம் அமைத்து தங்க இடம் இருப்பதோடு தாகம் தீர்க்க இயற்றையான நீர் ஊற்றும் காணப்படுகிறது. ஹாவாகலையின் உச்சியில் மேகங்கள் நம்மோடு உரசி செல்லும் அனுபவத்தை பெறலாம். எல்லாவற்றும் மேலாக இந்த மலையின் அடிவாரத்தில் இருக்கும் “சூட்டி” என்ற நாய் உங்களின் வழிகாட்டியாக மலைக்கு மேலே வரை வந்து வழி சொல்லும். இது இங்கு வருகை தருபவர்களை அதிகம் ஈர்த்த ஒரு அம்சம் ஆகும்.

  1. அல்கம, கேகால

Address : Algama. Kegalle Rd

  • கைட் தரப்படும்.
  • நீங்கள் நேரம் கழிக்க மரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள வீடு தரப்படும்.

கொழும்பில் இருந்து இரண்டு மணி நேர தொலைவில் இருக்க கூடிய மிகச்சிறந்த அட்வன்சர் இடம் என்று இதை சொல்லலாம். அந்த மலை உச்சியும் அதற்கு போகும் வழியும் அவ்வளவு அழகானது. கடினமான மலையேற்ற அனுபவத்தை அல்கம உங்களுக்கு தந்தாலும், அதன் மலை உச்சம் உங்களை ஆட்கொள்ள மறக்காது. அல்கம மலைக்கு மேலும் அடிவாரத்திலும், மலையின் உச்சியிலும், மரத்தின் மேலே அமைக்கப்பட்ட வீடுகள் இருக்கும். இது முற்றிலும் அழகான ஒரு  அனுபவத்தை தரும்.

  1. வங்கடிகல – கலுபான, பதுளை.

Nearest Hotel resort – Bambarakanda Holiday Resort
Address : G.Kulathunga, Bambarakanda Gardens, Bambarangala, Badulla, 90322
Contact No : 071 170 7692

  • கைட் தரப்படும்
  • கலுப்பானயில் இருந்து பம்பரகந்த வருவதற்கான போக்குவரத்து வசதி தரப்படும்.

இளைஞர்கள் அதிகமான கேம்பிங் செய்யப்படும் இடமாக மாறி வரும் இடம் தான் வங்கடிக. அழகிய பைன் மலையின் உச்சத்தில் அமைந்த ஒரு சமவெளி  இது. நாம் முன்னால் குறிப்பிட்ட பம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு எதிரே தான் இது அமைந்துள்ளது. இதன் மேல் இருந்து பார்க்கும் போது பம்பரகந்த உங்களின் காலடியில் காட்சியளிக்கும். முற்றிலும் ரம்மியமான இந்த இடம் பார்ப்பவர் மனதை கவர்ந்துவிடும். நிலைக்குத்தான பைன் மரக்காட்டை கடந்து இந்த உச்சியை நீங்கள் அடைகளில் கண்டிப்பாக அதன் சூழல் உங்களை பிரம்மிக்க வைக்கும்.

6. நீல கடற்கரை தீவு (Blue beach island) – நில்வல வீதி, நில்வல

Nearest Hotel resort – Blue Beach Paradise
Address : Hiriketiya, Dickwella, 81200 Hiriketiya, Sri Lanka
Contact No : 0778102557/ 0712958558.

  • ஆழ் கடல் பயணங்கள்
  • Bbq மெசின் தரப்படும்.

கரையில் இருந்து ஒரு மெல்லிய மணல் பாதை இந்த அழகிய குட்டித்தீவுக்கு நம்மை அழைத்து செல்கிறது. அதன் வழியே நடக்க்கும் போது இரு பக்கமும் இருந்து வரும் கடலலைகள் நம் காலை தொட்டு செல்லும். இது கரையில் இருந்து ஒரு ஐம்பது அடி தள்ளி  கடலில் அமைந்திருக்கும் சிறு குன்று. அதை சூழ உள்ள நீல நிற கடல் இந்த இந்த இடத்துக்கு “blue beach island” என்ற பெயரை தந்துள்ளது. தீவின் ஒரு பக்கமாக கூடாரம் அமைக்க முடிவதோடு ஆழ் கடல் பயணங்களும் இங்கே மேற்கொள்ளப்படுகிறது.

7. மாத்தள ரிவர்ஸ்டன் – ரிவர்ஸ்டன் பேஸ் கேம், மாத்தள

Nearest Hotel resort – Matala Reverstion Hotel
Address : No. 89 Malata Main Rd.
Contact No :  077 1465212

  • போக்குவரத்து வசதி செய்து தரப்படும்
  • உணவு வசதிகள் உண்டு

மினி உலக முடிவு, நீர் வீழ்ச்சிக்கு மேலான நீண்ட கயிற்று பாலம் என மிரள வைக்கும் அழகை கொண்ட இடம் இது. Mini world’s end என்று சொல்லப்படும் அந்த இடத்திற்கு போகும் நீண்ட வழி உங்களை ஆகாய மார்க்கமாக விண்ணுலகத்து அழைத்து செல்வதை போல அமைந்திருக்கும். ரம்மியமாகவும் அமைதியாகவும் நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்கள் என்றால் ரிவர்ஸ்டன் உங்களுக்கான இடம்.

  1. பொம்மிலிகந்த – கலுபான, பதுளை.

Nearest Hotel resort – Bambarakanda Holiday Resort
Address : G.Kulathunga, Bambarakanda Gardens, Bambarangala, Badulla, Sri Lanka, 90322
Contact No : 071 170 7692

  • கைட் தரப்படும்
  • கலுப்பானயில் இருந்து பம்பரகந்த வருவதற்கான போக்குவரத்து வசதி தரப்படும்.

இலங்கையின் பதின்மூன்றாவது பெரிய மலை. கடுனமான மலையேற்றம் செய்ய விரும்புபவர்கள் இதை முயன்று பார்க்கலாம். காளை மாட்டின் திமில் போல காட்சியளிப்பதால் தான் இதற்கு இந்த பெயர். மலை உச்சியில் இருக்கும் மிக நீண்ட சமவெளியில் மேகங்கள் உரசிக்கொண்டு செல்லும் அனுபவத்தை தரும். வங்கடிகல செல்லும் அதே பாதையின் ஊடாக இன்னும் பயணித்தால் கொம்மலிகந்த செல்லலாம். இந்த இடம் உங்கள் உடலுக்கும் உள்ளத்தும் முற்றிலும் புதுமை சேர்க்கும்.

Tayo Soap Bars

Tayo Soap Bars ஆனது சிறிய கொள்ளளவுகளில் Cold Process எனும் செயன் முறையை உபயோகித்து சேதன எண்ணெய்களை மாத்திரம் கொண்டு கைகளால் செய்யப்படுகின்றன. இவை உங்களது செல்லப் பிராணிகளை நுரைகளுடன் அழகுபடுத்துவதோடு தோலிற்குத் தேவையான சத்துக்களையும் இது வழங்குகின்றது. இவை இயற்கையில் கிடைக்கும் திரவியங்களை மாத்திரம் கொண்டு செய்யப்படுவதால் Cold Process செயல்முறையில் முறையாகப் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இவை பிராணிகளின் சருமத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு கிருமி நாசினிகளை மேலதிகமாக கொண்டு அமையப்பெற்றது அல்ல. இவை குறுகிய காலத்தில் அல்லாது சுமார் 18 மாதங்களின், விடா முயற்சியினாலும் 6 மாதங்கள் சோதனையின் பிற்பாடே இவை சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் இவை உங்கள் நாய்க் குட்டிகளுக்கு மட்டும் அல்லாது மனித பயன்பாட்டிற்கும் உகந்த வாரே தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவை 6 வகைகளில் காணப்படுவதோடு ஒவ்வொரு வகையும் வெவ்வேறான எண்ணெய்களை உபயோகித்த தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வகை சவர்க்காரம் ஆனது தேங்காய் எண்ணெய்யைப் பிரதான மூலப் பொருளாக வைத்து அமையப் பெற்றுள்ளதோடு இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயும், பட்டர் (Butter) உம் இதன் ஏனைய மூலப்பொருட்களாகத் திகழ்கின்றது. சேதன மூலப்பொருள்கள் (Organic Ingredients), பாரம்பரிய சவர்க்காரம் தயாரிக்கும் முறைமை மற்றும் கைகளால் செய்யப்படுகின்றமையால் ஏனைய சவர்க்காரங்களை விடச் சற்று வித்தியாசமான ஓர் பார்வையை இது கொண்டுள்ளது.

மேலும் இவை சூழலுக்கும் சருமத்திற்கும் தீங்கு விளைவிக்காத பதார்த்தங்களைக் கொண்டு அமையப்பெற்றவாறே இதன் உரையும் Beeswax Cloth இனை உபயோகித்துத் தயாரிக்கப்பட்டுள்ளது. Beeswax Cloth என்பது தேன் மெழுகுகளில் காணப்படும் ஒரு வகையான Cotton வகைகளில் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இவை சூழலுக்கு உகந்தவாறே தயாரிக்கப்பட்டுள்ளதோடு மீள் சுழற்சி நெறிமுறைக்கும் இது பங்களிப்பு செலுத்தி வருகின்றது. இவ்வகையான காரணிகளால் Tayo Soap Bars ஆனது அதன் தனித்துவமான பாணியைக் கொண்டுள்ளதோடு இலங்கையில் இது முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Tayo Bear சவர்க்காரங்களை நீங்கள் Tayo Bear Cafe மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு whoweare.lk வாயிலாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

இவை

– மேலதிக கார வகைகள், SLS, சல்பேட்டுகள், அல்கோஹால், பரபன் (Paraben), சோர்பேட் (Sorbate), சிலிகோன்ஸ் (Silicone) மற்றும் செயற்கை பாதுகாப்பு முறைகள் எதுவும் இதில் உள் அடங்கப்படவில்லை.
– இயற்கை மூலப் பொருட்களை மாத்திரம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
– 100% தாவர உள்ளடக்கங்களைக் கொண்டவை.
– சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத மற்றும் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடியவை.
– புத்தாக்கம் கொண்டது.
– பாம் எண்ணெய் (Palm Oil) அற்றது.
– நச்சுப் பதார்த்தம் அற்றது.

Tayo Bear Handmade Soap களின் வகைகள்

* Sea Salt and Cucumber

உள்ளடக்கங்கள் (Ingredients) – தேங்காய் எண்ணெய், கஸ்டர் எண்ணெய் (Castor Oil), ஆலிவ் எண்ணெய் (Olive Oil), வெள்ளரிக்காய் (Cucumber), தேன் மெழுகு மற்றும் கடும் கார நீர்.

* Milk Honey and Oat

உள்ளடக்கங்கள் (Ingredients) – தேங்காய் எண்ணெய், கஸ்டர் எண்ணெய் (Castor Oil), வெண்ணெய் (Shea Butter), பால், தேன், தேன் மெழுகு, பல்லரிசிப் பால் (Oats Milk) மற்றும் கடும் கார நீர்.

* Lemongrass and Sea Salt

உள்ளடக்கங்கள் (Ingredients) – தேங்காய் எண்ணெய், கஸ்டர் எண்ணெய் (Castor Oil), வெண்ணெய் (Shea Butter), எலுமிச்சைப் புல்(Fresh Lemon Grass), கடல் உப்பு (Sea Salt) மற்றும் கடும் கார நீர்.

* Strawberry and Coconut

உள்ளடக்கங்கள் (Ingredients) – தேங்காய் எண்ணெய், கஸ்டர் எண்ணெய் (Castor Oil), ஆலிவ் எண்ணெய் (Olive Oil), ஸ்ரோபெறி (Strawberry), தேங்காய் மற்றும் கடும் கார நீர்.

* Springtime Flowers and Shea Butter

உள்ளடக்கங்கள் (Ingredients) – தேங்காய் எண்ணெய், கஸ்டர் எண்ணெய் (Castor Oil), ஆலிவ் எண்ணெய் (Olive Oil), மலர் நீர் (Fresh Flower Water), வெண்ணெய் (Shea Butter) மற்றும் கடும் கார நீர்.

* Rose and Shea Butter

உள்ளடக்கங்கள் (Ingredients) – தேங்காய் எண்ணெய், கஸ்டர் எண்ணெய் (Castor Oil), ஆலிவ் எண்ணெய் (Olive Oil), ரோஸ் நீர் (Fresh Rose Water), வெண்ணெய் (Shea Butter) மற்றும் கடும் கார நீர்.

உங்கள் செல்லப் பிராணிகளுக்குச் சிறந்த, பாதுகாப்பான, சூழலுக்கு உகந்த சவர்க்காரம் தேவைப்படும் எனின் Tayo Bear Soap வகைகளே உங்களின் ஓரே தீர்வு. இன்றே நாடுங்கள்.

index.php