இக் கூற்றுடன் பல விடயங்கள் தொடர்புபட்டுள்ளது. நாங்கள் ஆண்களாக இருந்தால் எதை வெளிப்படையாக செய்ய இயலாது எனச் சொல்கிறோமோ அதனை செய்யச் சொல்லுவார்கள். (பி.எஸ் என்று முன்பிருந்த மக்களை அழைத்தார் என யோன்ஸ் ஸ்மேஷின் சிங்கல் எனும் தரம் வாய்ந்த படைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது).
இரண்டாவது சூசகமான காரணம் யாதெனில், பெரும்பாலும் இவ்வகை கோடுகள், ஒரு பெண்ணின் வாழ்நாள் முழுவதிலும் பாரபட்சமான மற்றும் பாலியல் ரீதியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதோடு ஒரே வகையான தன்மைகளை நிலைநிறுத்துகின்றன. ஒரே ஒரு விடயம் மாத்திரமே, ஆண்களைப் போன்று பெண்களால் செய்ய முடியாது. அது எவ்விடயம் என யூகித்திருப்பீர்கள் அது தான் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து நிற்கும் நிலை. இது மட்டுமே ஆண்களைப் போன்று பெண்களால் செய்ய முடியாத ஓர் விடயம்.
02. உன்னால் சமைக்க முடியுமா?
ம்ம்ம், எனக்கு தேவைதானா?
ஒரு பெண் (அல்லது பையன்) வெளியில் அழகான அமைப்பில், ருசியான வகையில் உணவை தயாரிப்பாராயின் அவர் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். சமையற்கலை ஓர் ஆற்றல், ஏனையோருக்கு தெரியவில்லை என வெட்கப்பட வேண்டும். நிச்சயமாக, மில்லியன் கணக்கான இலங்கையர்கள், பல்கலைக்கழக கல்விக்காக வெளியேறும் போது (மஞ்சள் சோறும் கோழிக்கறியையும் இனி உண்ண முடியாது என) காய்ந்த மெகியை உண்டு உயிர் வாழ்வதென்பது நம்மிடையே ஏறக்குறைய அவசியமாகிவிட்டது.
உங்களின் திருமணத்திற்கு எவ்வளவு பொருட்கள் உள்ளது என்பதனை ஒருபோதும் சமையல் தீர்மானிக்காது. எவ்வளவு பெறுமதியான உணவை உணவு மேசையில் பரிமாறுகிறீர்கள் என்பதனையே சமையல் தீர்மானிக்கும்.
03. பெண்கள் அப்படி இருக்கும்போது………. ஆண்கள் விரும்புவதில்லை.
பெண்கள் ஒரு அரியவகை தங்கம். ஏனெனில் பெண்ணாய் இருக்கின்றவள் எப்பொழுதும் ஆண்களை ஈர்க்கும் வண்ணமாகவா செயற்பட வேண்டும்?
அரிசி மற்றும் கறியை சமைக்கும் முறை விருப்பமில்லையா? அல்லது ஒரு வாரமாக, முயற்சி செய்து இவ்வுடையில் உன்னை சந்திக்க வந்தது தவறா? ஆண், போகிறான்.
ஆண்களின் ஆசைகளுக்கு இணங்க வேண்டும் என்ற இவ்வெரிச்சலூட்டும் கருத்து. ஒருவேளை இரண்டு விஷயங்களில் ஒன்றிலிருந்து உருவாகிறது. கடினமான ஆண் உரிமைகள் மற்றும் எங்கும் நிறைந்த கொலம்போ ஆண்டி மேனியா. திருமணம் செய்து கொள்வது பற்றி பேசும் ஒரு பெண் எவ்வளவு தூரம் சென்றாலும் அல்லது அவள் அடைந்து கொள்கிறாராளா என்பதில் தங்கி நிற்பதை தெளிவுபடுத்துகிறது. ஒரு பெண்ணுடைய பெறுமதி, ஒரு ஆணை அல்லது ஆண் தோழனை அடைந்து கொள்வதிலேயே கணிக்கப்படுகிறது.
பெண்கள் எவரையும் நோகடிக்காமல் தாம் விரும்புவதை செய்ய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
04. எப்பொழுது மகளே திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்?
திருமண வீட்டில் ஏன் மூத்தோர் திருமணம் செய்துகொள்வதை உடனடித் தேவையாக கருதுகின்றனர்? ஒரு தடவை திருமணம் இடம்பெறுவதை போதுமானதாக கருதுவதில்லையா?
இளமை, அழகு, கருத்தரித்தல் போன்றவை எம் கலாசாரத்துடன் ஒன்றிணைந்துள்ளது. இதனாலே பெண்கள் அவசரமாக திருமணம் செய்ய வேண்டும் என சமூகத்தில் பொதுவான கருத்தியல் நிலவுகின்றது. விலைமதிப்பற்ற தங்கள் பெருமதியான மகளை குடும்ப நிகழ்வுகளின்போது மூத்தோர் காண சிரமப்படுகிறார்கள். கணவன் அல்லது குழந்தை இல்லாமல் மூத்தோர் நாட்களை கடந்து செல்கிறார்கள். இதுபோன்ற காரணங்களால் நீங்கள் விரும்பாத ஒன்றை அவர்கள் விரும்புகிறார்கள்.
காதல் இல்லாத திருமணங்களில் இணைவதை விட பொறுமையுடன் இருப்பது சிறந்தது. இவையெல்லாம் உங்கள் பாட்டி அவரது வாழ்நாளில் உங்கள் திருமணத்தை காண வேண்டும் எனும் ஆசையாகும். இதனாலே திருமணம் என்பது சரியான தேர்வாக அமைகிறது.
05. அவசரமாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், புது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்.
வேகமாக எழுச்சி பெறும் பெண்ணியல் யுகத்தில், நோக்கம் கருத்துப் பரிமாறல் போன்றன எவ்வித சந்தேகமும் இன்றி சிறியதோர் இடத்தை தன்னகப்படுத்தியுள்ளது. வீட்டில் தங்கி இருத்தல், முழுநேர தாயாய் இருத்தல் போன்றனவே நேர்மையான தேவைகளாய் உள்ளது. இது எல்லா இள யுவதிகளுக்கும் சரியானதாக அமையாது. இவை போன்ற காரணங்களினாலே குடும்பம் போன்று மகிழ்ச்சி தரக்கூடிய வேறு ஒரு நிறுவனம் கிடையாது என்கிறோம். ஒரு தன்னிச்சையான சமூகத்திற்கு பொருந்தும்படி உங்களை கட்டாயப்படுத்துவதோடு இவற்றை மேற்கொள்ள எவருக்கும் நேரம் இருப்பதில்லை என்பதே இங்குள்ள உண்மையான சோகமாகும்.
06. ஏன் கோபப்படுத்துகிறீர்கள்? நீங்கள் உங்கள் காலத்தில் இருக்கிறீர்கள்……
எந்தவொரு பெண்ணையும் ஒரு கொலைகார ஆத்திரத்திற்கு தூண்டுவதற்கான எளிதான வழியாக இது அமைந்துள்ளது. ஏனெனில் எரிச்சலை வெளிப்படுத்துவது அவ்வளவு இயல்பானதல்ல, மேலும் மாதவிடாய் சுழற்சிகளால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வின் விளைவினால் மட்டுமா முடியும்?
கரண்டி என் காலில் விழுந்தபின் நான் கத்துவது முற்றிலும் நியாயமற்றது என்று நான் சொல்கிறேன். நகைச்சுவைகளைத் தவிர்த்து, PMS வாதத்தை ஓரங்கட்டவும் திசைதிருப்பவும்.
நிராகரிப்பு: இக்கட்டுரை நகைச்சுவையான நோக்கத்துடன் இயற்றப்பட்டது, இது யாரையும் புண்படுத்தவோ அல்லது குறிப்பாக ஆண்களைத் தூண்டுவதற்காகவோ அல்ல இருப்பினும், இவ்வகை வரிகளை வழக்கமாக கைவிடுகிறவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அந்த முட்டாள்தனம். நிறுத்துங்கள்.
1. இது, சுய இன்பத்தில் (Masturbate) ஈடுபடுகிறோம் என்று அறியாமலே சுமார் 15 நிமிடங்கள் Facebook ஐ scroll செய்த வண்ணம் நடப்பது.
2. இணையதளத்தில் கடல் நுரை போல் பல கோடி கணக்கான ஆபாச வீடியோக்கள் கிடக்கின்றன. வீடியோக்கள் எவ்வளவு பெரிதோ சிறிதோ என்பது Matter கிடையாது. அந்த Video இன் Thumbnail ஒரு மனிதனை பார்க்க வைக்கும் இயலுமை படைத்தது. சில வேளைகளில் அரை மணித்தியாலம் செலவு செய்து தேடினாலும் Satisfy ஆகும் Video கிடைப்பது கடினம். அப்படி கிடைத்துவிட்டால் 45 நொடிகளில் தேடியதற்கான தேவை இலகுவில் முடிந்து விடும்.
3. அருகில் கரைப்பான் பூச்சி போனால் கூட யாரோ வருவது போல் தோனும். ஒரு வேளை திருடனா இருக்குமோ அல்லது அம்மா திடீர் என்று வந்துவிடுவாங்களோ என்ற பயத்துடன் சுயமைதுனம் செய்வது தற்போதைய இளைஞர்களுக்கு பெரிய Adventure. அது போலவே சரியான சந்தர்ப்பத்தில் யாராச்சும் ஒருவர் குறுக்கிட்டு காரியத்தை தவிடுபொடியாக்கும் சந்தர்ப்பங்களும் அதிகம்.
4. பொதுவாக கணணி உபயோகிக்கும் போது வரும் பிரச்சனை. பொதுவாக தமக்கு வளமான கையினை சுய இன்பத்திற்கு உபயோகிப்பதனால், மற்றைய கையை Website இனை மாற்றுவதற்கு பயன்படுத்துவோம். எனினும் சில சிக்கலான சந்தர்பங்களில் வளம் இல்லாத கை பாவனை, Tab Close பண்ண முடியாமல் Page இனை Refresh செய்த சம்பவங்களும் உண்டு. என்னதான் Dominant இல்லாத கையினால் சுய இன்பம் கண்டாலும், Dominant கையினால் செய்யும் போது கிடைக்கும் Flow மிகையாகாது.
5. ஒன்றுக்கு இரண்டு தடவை Mute இல் இருக்கின்றதா Headphone முறையாக பொருத்தப்பட்டிருக்கா என்று Double check செய்து கொண்டிருப்பார்கள். கூட்டமாக இருக்கும்போது இவ்வகையான சத்தம் கேட்டால் எவனோ அசிங்கமான Forward message அனுப்பி இருக்கான் என்று சமாளிச்சிடலாம். ஆனால் குறிப்பாக தனியாக இருக்கும் போது கேட்டுவிட்டால் நாம் இதை தான் பார்க்கின்றோம் என்று Confirm செய்து விடுவார்கள். ஆகவே Audio விடயத்தில் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
6. குறைவான நபர்களே இதனை உபயோகிப்பார்கள். Lotion போடுவதா இல்லையா என்று யோசித்தே தன்னைத்தானே Confuse பண்ணிக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் ஏதாவது Lubricant உபயோகித்து கிடைக்கும் இன்பம் எல்லாவற்றையும் மிஞ்சிவிடும் என்று பலரால் கூறப்படுகின்றது.
7. சில பேர் Browse History முதல் Cache Memory வரை அனைத்துயும் Delete செய்து விட்டு, நேற்று பிறந்த பாலகன் போல் எந்த தடையங்களையும் வைத்திருக்க மாட்டார்கள். ஆனால் சிலர் Folder போல்டராக பல GB வீடியோக்களை மிகவும் பகிரங்கமாக Download செய்து வைத்து இருப்பார்கள். மிக பிடித்த Video ஆக இருந்தால் தேவைபடும்போது கண்டுபிடிக்க முடியாது என்று Bookmark இல் கூட Save செய்துகொள்வார்கள்.
8. சரியான தருணங்களில் Tissue தேடி களைப்புறுவதே அதிகம். அப்படி கிடைக்காவிட்டால் துணி அல்லது கை மட்டுமே உதவியாக அமையும். அதிகமாக காற்றிலே பறக்க வைக்கும் சந்தர்பங்களே அதிகம்.
9. என்ன நடந்தது என்று அறியாமலே நித்திரையின்போது விந்து வெளிவரும் சந்தர்பங்களும் உண்டு. சில பேருக்கு ஆபாச கனவின் உச்சத்தில் வெளி வரும். ஆனால் பலரிற்கு அந்த Luck கூட கிடைப்பதில்லை.
10. பொதுவாக கழிவறையில் நடக்கும் அசம்பாவிதங்கள். வேற எங்கேயும் பறந்து விட கூடாது என்பதற்காக, மட்டுப்படுத்தப்பட்ட முறையில் Awkward ஆன Position இல் முயல்தல் கூட வெகுவாக நடந்தேறும்.
வயது முதிர்ந்து வரும் மக்களின் விபரங்கள் காட்சிப்படுத்தப்படும் சுயவிபரக் கோவையின் ஓர் பட்டியலாக இந்த வயதான மக்களின் சனத்தொகை இடம் பெறுகிறது. கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகள் வயதான மக்களின் சனத்தொகை வேகமாக உயர்ந்து வரும் நாடுகளாக உள்ளன. இலங்கை பிராந்தியமானது அதன் மக்கள் தொகையின் மிக உயர்ந்த சராசரி வயதினை அறிக்கையிட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில், பல வீட்டு உறுப்பினர்கள் நாட்டில் நிலையான சரிவைக் கண்டனர். 2016 இற்கான வரவு செலவு அறிக்கையின் படி, 1985 ஆம் ஆண்டில் 5.1 அளவைப் பதிவு செய்த சராசரி குடும்பம் இப்போது 3.8 ஆகக் குறைந்துள்ளது. கூடுதலான உலகளாவிய சுகாதார வசதிகள் மற்றும் வலுவான குழந்தை நோய்த்தடுப்பு திட்டங்கள் போன்ற சமூகத்தின் ஆரோக்கியத்திற்கான திட்டங்களினால் சமீபத்திய ஆண்டுகளில் இலங்கையரின் ஆயுட்காலம் அதிகரிப்பதாக அறிய கிடைத்துள்ளது. 2021 இல் இலங்கையரின் ஆயுட்காலம் 77.22 ஆண்டுகளாக பதிவாகியுள்ளது.
எனவே, இலங்கை நாடானது தலைமுறை எண்ணிக்கையில் ஒரு பொருத்தமின்மையை சந்தித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வுபெறும் மக்கள்தொகையின் சதவீதம் தொழிலாளர் தொகுப்பில் நுழையும் மக்கள்தொகையை விட அதிகமாக உள்ளது. அத்தோடு குறைந்து வரும் பிறப்பு வீதமும் நாட்டினரின் அதிக ஆயுட்காலத்தில் பல விளைவுகளைத் ஏற்படுத்துகிறது. மேலும் எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சியின் பல தாக்கங்களை இந் நிகழ்வு ஏற்படுத்தக் கூடும். கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அமலா டி சில்வா, குடிமக்களில் அதிகரித்து வரும் இந்த வயதான மக்கள் தொகை உள்ளூர் நிலப்பரப்பிற்கு எவ்வாறு பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
தொழிலாளர் சந்தைகளை மாற்றுவது – பொருளாதார கொந்தளிப்பு
பொருளாதார வளர்ச்சி என்பது அதன் உழைக்கும் மக்கள் தொகையின் வயதை மட்டுமே சார்ந்தது அல்ல. எனினும் கடந்த 50 ஆண்டுகளில் கிழக்கு ஆசியாவின் வளர்ச்சிக்கும் அதன் உழைக்கும் வயது மக்கள்தொகையின் ஏற்றத்திற்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சி ஒன்று காட்டுகிறது. மக்கள் தொகை வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒருவர் அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட சாராசரி வயது குழுவினரை (முதியவர்கள் மற்றும் குழந்தைகள்) சாராதாவர்களாக இருக்கின்றனர். எது எவ்வாறாக இருப்பினும் இலங்கையில் மக்கள் தொகைக்கான வயதெல்லைகள் சரியாக வகுக்கப்படவில்லை என்பது கவலைக்குரியதே. இதனால் பொருளாதார ரீதியான பிரச்சனைகள் எழுகின்றன. இலங்கை நாடு ஏற்கனவே தொழிலாளர்கள் மற்றும் இன்னும் பல விடயங்களில் பற்றாக்குறையினை சந்தித்து வருகின்றது.
பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பவர் ஒரு நாட்டின் அரசாங்கத்தின் உழைக்கும் மக்கள் தொகை சார்ந்து இருக்கும் நிலையை (முதியவர்கள் மற்றும் குழந்தைகள்) கடக்கும் போது பெறப்பட்டும் ஈவுத்தொகையிலிருந்து வருகிறது என்று மக்கள்தொகை வல்லுநர்கள் விளக்கினர். இருப்பினும், இலங்கையின் எண்கள் திருப்திகரமான விகிதத்தைக் காட்டவில்லை, இது பொருளாதார தாக்கங்களுக்கான கவலைகளை எழுப்புகிறது. தற்போது, நாட்டிலுள்ள தொழிலாளர் மற்றும் இன்னும் சில திறன்களில்லாமையினால் விலையுயர்ந்த தொழிநுட்பங்களிற்கும் வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை நியமிக்க வேண்டிய நிலையும் உருவாகிறது.
இத்தோடு ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் தொழிலாளர்களின் உற்பத்தித்திறனும் முக்கிய பங்கு வகிக்கிறது. இலங்கையின் உழைக்கும் மக்கள்தொகை வயதில், அதன் உற்பத்தி திறனிற்கு தேவையான வலுவான உடல் மற்றும் அறிவாற்றல் இல்லாமை தொடர்புடைய சவால்கள் உற்பத்தி திறனில் சரிவை காட்டுகின்றன. மேலும், வீடுகளில் காணப்படும் அதிக எண்ணிக்கையிலான சார்புடையவர்கள் அதாவது முதியர்கள் மற்றும் குழந்தைகள் பொது சுகாதாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்துவதால் அவர்களின் உடல்நலம் மற்றும் நலனுக்கான செலவினங்கள் அதிகரிக்கும். இது, முதலீடுகளுக்கு கிடைக்கும் பொது நிதியைக் குறைக்கிறது.
யுனிவர்சல் ஓய்வூதிய திட்டங்கள் – இலங்கைக்கு சேர்கிறாத அல்லது தவறுகிறதா?
உலகளாவிய ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் பல்வேறு மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் போன்ற பெரிய பொருளாதார மாதிரிகள் ஆகியவற்றைப் பார்த்தால், இலங்கை இத்தகைய முயற்சிகளால் பயனடைகிறது என்பது தெளிவாகிறது. எவ்வாறாயினும், நாட்டின் தொழிலாளர் புள்ளிவிவரங்கள் இன்றும் கூட வேலைக்குச் சேர்ந்தவர்களில் 67% முறைசாரா துறையைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டுகின்றன, அங்கு EPF / ETF திட்டங்கள் போன்ற அடிப்படை சட்டங்கள் நடைமுறையில் இல்லை. இவற்றை முதலில் குறிப்பிட்டு அவற்றிற்கான திட்டங்களை அறிமுகப்படுத்தும் போது அதன் மோசமான பட்ஜெட் சூழ்நிலையின் விளைவாக நாடு சவாலுக்குள்ளாகிறது.
அது மட்டுமல்லாது இலங்கையின் முழுமையான வயது ஸ்பெக்ட்ரத்தை பாதிக்கும் ஆரம்பகால திட்டமிடல் மற்றும் கடுமையான கொள்கை மாற்றங்கள் மூலம் எழும் பொருளாதார தாக்கங்கள் தவிர்க்கப்படலாம் என்று பேராசிரியர் அமலா நம்புகிறார். தற்போது, இலங்கையின் பெண் தொழிலாளர்கள் நாட்டின் வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் 33% மட்டுமே பங்களிக்கின்றனர். நாட்டின் தொழிலாளர் சக்தியில் பெண்களின் அதிக பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம், மக்கள் தொகையில் பணிபுரியும் ஆண் உறுப்பினர்களைச் சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைக்க முடியும்.
மேலும், நாட்டில் பணிபுரியும் வயதை 70 ஆண்டுகளாக நீட்டிப்பது தனிநபர்கள் ஓய்வூதியத்திற்காக அதிக சேமிக்கவும், வேலை செய்யும் குழந்தைகளின் சார்புநிலையை குறைக்கவும் உதவும். இருப்பினும் இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயற்படுத்தப்பட வேண்டும் – பகுதிநேர வேலைகள் போன்ற வாய்ப்புகளை ஆராய்வது மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்காக வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற வசதிகள் வழங்கப்பட வேண்டும். அத்தோடு திறமையான மற்றும் பணிபுரியும் மூத்த மக்கள்தொகைக்கான செவிப்புலன் கருவிகள் மற்றும் இயக்க கருவிகள் போன்ற புதிய தேவைகளும் வேலை செய்யும் வயதில் ஏற்படும் மாற்றங்களுக்கு முன்னர் கவனிக்கப்பட வேண்டும்.
வயதான மக்களுக்கான சுகாதார மற்றும் நல்வாழ்வு திட்டம்
உலகெங்கிலும் உள்ள மூத்த குடிமக்கள் மத்தியில் மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கான காரணங்களாக புறக்கணிப்பு, அன்புக்குரியவர்களின் இழப்பைக் கையாள்வது மற்றும் கடந்த ஆண்டுகளில் இருந்து வெறுமையின் உணர்வுகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை தவிர, அல்சைமர் மற்றும் புற்றுநோய்கள் போன்ற நீண்டகால நிலைமைகளும் வயதானவர்களுக்கு மனச்சோர்வு மற்றும் மன ஆரோக்கியத்தினை பெரிதும் பாதிக்கின்றன. எனவே இலங்கையின் வயதான மக்களுக்கான நோய்த்தடுப்பு சிகிச்சை மற்றும் மூத்த குடிமக்கள் உளவியல் போன்ற துறைகள் உருவாக வேண்டும். இது தவிர, முதியோரின் இயக்கத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் பிசியோதெரபி வசதிகளும் நாட்டில் அதிகரிக்கப்பட வேண்டும்.
இன்று, இலங்கையில் தொற்றுநோயற்ற நோய்களுக்கான (என்.சி.டி) சிகிச்சை நீண்ட கால பராமரிப்பு சேவைகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் விளைவாக, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 50% க்கும் (படுக்கை நோய்கள்) அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளாக உள்ளனர். ஆகையால், வயதான மக்கள் தொகை அதிகரிக்கும் போது, இது இலங்கையில் உள்ள மருத்துவமனைதகளில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் ஆரம்பகால தலையீட்டின் கொள்கைகளின் தேவையை அதிகரிக்கிறது. சுகாதார வல்லுநர்கள் தங்கள் 30 மற்றும் 40 வயதிற்குட்பட்ட குடிமக்களுக்காக வாதிட்டனர், அவர்களின் ஆரோக்கியத்தை இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், மேலும் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். இந்த வயதினரிடமிருந்து தொடங்குவதன் மூலம், இளைய தலைமுறையினரும் பயனடையக்கூடும் என்றும் அடுத்த ஆண்டுகளில் ஒட்டுமொத்த ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவார்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
ஒரு நல்ல எதிர்காலத்திற்கு இப்போதே மாற்றம் தேவை
இலங்கையில் 2050 ஆம் ஆண்டளவில் 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களின் எண்ணிக்கை 14% முதல் 25% வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதற்கான தேவைகளாக இப்போது ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகள், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வயதானவர்களுக்கு பயனளிக்கும் புதிய தொழில்நுட்பங்கள் எனபன காணப்படுகின்றன. நாம் ஒரு அநாதாரவான தேசமாக வயதாகும்போது வெறுமனவே வேடிக்கைப் பார்க்கப் போகிறோமா அல்லது நம் நாட்டின் எதிர்காலத்தின் மீதான சுமையை குறைக்க தேவையான மாற்றங்களைச் செய்யப் போகிறோமா?
Covid-19 வைரஸ் ஆனது நோய் என்ற போர்வைக்கு அப்பால் பசி, துன்பம், தனிமை, வறுமை போன்றன ‘தனக்கும் நேர்ந்து விடுமோ?’ எனப் பலரைச் சிந்திக்க வைத்துள்ளது. பயணக்கட்டுபாடு இருந்தால் என்ன இல்லாவிடினும் என்ன Online Grocery, வீட்டில் இருந்தவாறே வேலை, மாத இறுதியில் சம்பளம் என சொகுசான வாழ்க்கைமுறைக்கு பழகிவிட்டனர். இதன் தாக்கம் உண்மையாகவே புறக்கோட்டையில் நாள் கூலி செய்யும் தொழிலாளருக்கும், Galle Face இல் இறால் வடை விற்று தனது நாளாந்த வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் மக்களின் வயிற்றிலேயே அடித்துள்ளது. இவ்வாறு அவதியுறும் மக்களுக்கு உதவும் கரமாக அமைந்து இருக்கும் குறுநிதி மற்றும் மைக்ரோ நிதி (Micro Finance) தொடர்பான பார்வை இதோ,
இச் செயற்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெரும் நபர்களுக்கு வளங்களைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் மூலதனத்தை அமைத்துக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்றை நிறுவுதல் ஆகும். இது 1970 ஆம் ஆண்டுகளில் வறுமையை ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதோடு, குறுங்கடன் (Micro Loan), குறுஞ்சேமிப்பு (Micro Savings) மற்றும் குறுங்காப்புறுதி (Micro Insurance) போன்ற வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் மூலம் எதிர்காலத்தில் தன்நிறைவுப் பொருளாதாரம் ஒன்றை உருவாக்க முடியும் என்பதே இதன் மற்றொரு நோக்கமாக அமைந்தது.
ஏனைய ஆசிய நாடுகளை ஒப்பிடுகையில் இலங்கை சிறு நாடாக அமையப்பெற்றுள்ளதுடன், வளர்ந்து வரும் நாடாகவே திகழ்ந்து வருகின்றது. 21.8 மில்லியன் சனத்தொகையை கொண்டுள்ள எம் நாட்டில் 81.42% வீதமானோர் கிராமப்புறங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். 26 வருடகால யுத்தம், 2004 ஆம் ஆண்டு 38,000 பேரைக் காவுகொண்ட ஆழிப்பேரலை, தற்போது எம்மை துவம்சம் செய்யும் Covid-19 என்று அனைத்து கொடூரங்களும் இலங்கையின் பாமர மக்களையே வெகுவாக பாதித்துள்ளது.
இலங்கை மற்றும் ஏனைய வசதி குறைந்த நாடுகள் இக் குறுநிதி (Micro Finance) சேவையினை முறைசார்ந்த துறை(Formal Sector) எனவும் முறையில்லா துறை எனவும் (Informal Sector) வகைப்படுத்தியுள்ளனர். அதனடிப்படையில் முறைசார்ந்த துறையில் வர்த்தக வங்கிகள், பிராந்திய அபிவிருத்தி வங்கிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் (NGO) பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றன. அதுபோலவே நண்பர்கள், உறவினர்கள், முதலாளி, முதலீட்டாளர்கள் மற்றும் தனவந்தர்கள் மூலம் கிடைக்கும் நிதிசார் உதவிகள் முறையில்லா துறை என்றும் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவர திணைக்களத்தினால் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் சனத்தொகை 6.7% எனவும், குடும்பங்கள் என்ற அடிப்படையில் 5.3% எனவும் மேற்கோள்காட்டியுள்ளது. ஏனைய நாடுகளை விடப் பெண்கள் அதிகம் கொண்ட எம் நாட்டில் பெண்களே இக் குறுநிதி சேவை மூலம் அதிக பயன் பெறுகின்றனர் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறு நிதி (Micro Finance) சேவையின் வரலாறு
இதன் பின்னணி மிகவும் நீண்ட வரலாற்றைக்கொண்டுள்ளதுடன் ஆங்கிலேயக்காலணி காலப்பகுதி தொடக்கம் நடைமுறையிலிருந்து வருகின்றது. குறு நிதி துறையை வளர்த்த பெருமை 20ஆம் நூற்றாண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ‘சீட்டு’ முறைமையே சாறும். இதன் மூலமாகவே பாமர மக்கள் சேமிப்பு மற்றும் மூலதனத்தை உருவாக்கும் படிமுறைக்கு உள்வாங்கப்பட்டனர். 1980களில் குறைந்த வருமானம் படைத்தவர்கள் நிமிர்த்தம் ஆரம்பிக்கப்பட்ட ‘ஜனசவிய’ (பொருள் ‘மக்களின் சக்தியாகும்’) செயற்திட்டம், காலப்போக்கில் ‘சமுர்த்தி’ ஆக மறு உருவம் பெற்றது. இக் குறு நிதி சேவை இலங்கை மக்களைத் தற்கொலை மற்றும் வறுமையிலிருந்து பாதுகாத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2005 ஆண்டு தொடக்கம் 2009 காலப்பகுதியில் நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் குறுநிதி வழங்கும் நிறுவனங்களின் வளர்ச்சி வெகுவாக அதிகரித்துள்ளது என்பதைக் காணக்கூடியதாக உள்ளது. எனினும் கடன் தொகை குறைவாக இருப்பதுடன் இச் சலுகைகளை பெறுவதிலும் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
2016ம் ஆண்டு 06ம் இலக்க குறுநிதி சட்டம்
குறுநிதி நிறுவனங்களைப் பதிவு செய்வதில் பல இன்னல்கள் இருந்தாலும் 2016ம் ஆண்டு 06ம் இலக்க குறுநிதி சட்டம் ஜூலை மாதம் 15ம் திகதி 2016 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்டதால் இவ் அனைத்துக்கும் ஒரு விடிவு காலம் அமைந்தது. இதன் மூலம் நிறுவனங்களை உரிமம் செய்தல், ஒழுங்கு முறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை செய்யும் அதிகாரங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் இவை உரிமம் பெறப்பட்ட குறு நிதி கொம்பனிகளாக அழைக்கப்படுவதுடன் மத்திய வங்கியின் கண்காணிப்பில் இயங்கி வருகின்றன.
இலங்கையில் நடைமுறையில் இருக்கும் குறுநிதி சார்ந்த வழிமுறைகள்
கிராமிய வங்கிகள்
இவ் வங்கி முறையில் ‘அனைத்து சமுதாயமும் ஒரு அலகு’ என்ற தொணிப்பொருளில் இயங்கிவருகின்றது. இவை முறையாகவும் (Formal) அறை முறையாகவும் (Semi Formal) தங்களது வசதி/மூலதனத்திற்கு அமையஇயங்கி வருகின்றது. மக்களின் சேமிப்பு வங்கியாக இருப்பதோடு அவசரத்திற்குச் சிறு கடன் பெரும் நண்பனாக உதவிக் கரம் நீட்டி வருகின்றது.
கராம்மின் வங்கி (Grameen Bank) முறைமை
பேராசிரியர் மொஹம்மட் யூனுஸ் என்பவரினால் பங்களாதேஷ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இக் குறுநிதி நிறுவனம், துணை ஈடு அற்ற (Non Collateral) முறைமையை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.
குழு அடிப்படையிலான கடன் வசதி
ASA முறைக்கு அமையத் தனி நபர் அல்லாது, 25 – 30 நபர்களை மையமாக வைத்து கடன் வழங்கும்செயன்முறைமை
தனி நபர் கடன் வசதி
நேரடியாகக் கடன் கொடுப்பவரிடம் இருந்து பணம் பெரும் செயன் முறையை இது குறிக்கும்.
சுய உதவிக் குழு (Self Help Group) SHG’s
10 தொடக்கம் 20 பெண்மணிகளைக் கொண்டுள்ளதுடன் தங்களுக்குத் தேவையான சேமிப்பு மற்றும் கடன்தேவைகளைக் குழுவிற்குள்ளேயே பூர்த்தி செய்துகொள்வார்கள்.
கடன் சங்கங்கள் (Credit Unions) மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் (Cooperatives)
தனி நபர் உந்துதல், சுய உதவி நிதி நிறுவனம்.
சீட்டு
மிகவும் பிரபலியமான வழக்க முறைமை. ஒவ்வொரு மாதமும் அனைவரினதும் பங்களிப்புடனும் பெரியதொரு தொகை சேமிக்கப்படும். இவ்வாறு சேமிக்கப்பட்ட பணம் ஒவ்வொரு மாதம் ஒருவர் வீதம் சுழற்சி முறையில், பெரும் தொகையாக வழங்கப்படும்.
இலங்கையின் மத்திய வங்கியினால் பட்டியல் படுத்தப்பட்ட குறுநிதி கம்பனிகளின் விபரங்கள் இதோ https://www.cbsl.gov.lk/en/authorized-financial-institutions/licensed-microfinance-companies.
கொவிட் பரவலின் தாக்கத்தினால் மக்களின் துயர் நீக்கம் செய்யும் நோக்கத்தில் பல குறுநிதி நிறுவனங்கள்உருவாகத்தொடங்கியுள்ளன. இவற்றை முறையாக நெறிமுகப்படுத்தி ஒழுங்குமுறை படுத்தமுடியுமென்றால் இலங்கையை வறுமையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தக் கட்டுரையானது, ‘சட்ட ஒளி’ எனும் தொனிப்பொருளில் பொது மக்களுக்கு அறிவூட்டும் வகையில் சட்டத்தரணிகளின் பங்கேற்புடன் நடாத்தப்படும் மும்மொழிச் சட்டக் கலந்துரையாடலைத் தழுவியதாகும். இது இலங்கை சட்ட மாணவர்கள் சங்கத்தின் ப்ரோ போனோ குழுவினால் ஏற்பாடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாலின அடிப்படையிலான வன்முறை பற்றிய இந்தக் கலந்துரையாடலுக்கான குழுவானது பின்வரும் சட்டத்தரணிகளை உள்ளடக்கியிருந்தது – திரு.ஆரிதவிக்ரமசிங்க – சட்டத்தரணி மற்றும் ஐ ப்ரோ போனோவின் முகாமையாளர். இவர் ஓரின மற்றும் இருபால் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மற்றும் திருநர்கள் முதலானோர் நீதியை அணுகும் வகையில் இந்நிறுவனத்திற்கு தலைமை தாங்குகிறார் என்பதுடன், பன்முகத்தன்மை மற்றும் உள்வாங்கல் முதலான விடயங்களின் முன்னோடி ஆர்வலருமாவார். ஆரித பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் குறிப்பாக ஓரின மற்றும் இருபால் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மற்றும் திருநர்கள் ஆகியோரின் உரிமைகளுட்பட, சர்வதேச ரீதியாக மனித உரிமைகளை ஊக்குவிக்கும் பல முயற்சிகளுக்கும் ப்ரோ போனோ செயற்திட்டங்களுக்கும் தலைமை தாங்குகிறார். திருமதி.வாசனா கன்னங்கர – சட்டத்தரணி மற்றும் சிறுவர் பாதுகாப்புப் படையின் சட்ட அதிகாரி, சுவஸ்திகா அருலிங்கம் – சட்டத்தரணி மற்றும் சட்டப் பாதுகாப்பு ஆணைக்குழுவின் வடக்கு மற்றும் கிழக்கிற்கான செயற்திட்ட உதவிப் பிரிவின் முன்னாள் செயற்திட்ட முகாமையாளர் போன்றோராவர்.
பாலின அடிப்படையிலான வன்முறை என்றால் என்ன? அதன் வகைகள் எவை? அது எவ்வாறான இடங்களில் இடம்பெறுகின்றது?
ஆரித – பாலின அடிப்படையிலான வன்முறை எனும் பாதமானது சார்பற்றதோர் பதமாகும்; இது ஒருவருக்கெதிராக இழைக்கப்படும் உடல் ரீதியான மற்றும் உள ரீதியான வன்முறையினைக் குறிக்கும். பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறை மிகவும் அதிகமாக உள்ளது. அண்மைய அரசாங்க ஆய்வொன்றின்படி 1/5 பெண்கள் உடல் ரீதியாக மற்றும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோராவர். பொதுப் போக்குவரத்தினைப் பயன்படுத்தும் 95% வீதமான பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகின்றனர் என ஒரு UNFPA அறிக்கை கூறுகின்றது.
நீண்ட காலமாக, ஆண்கள் குற்றவாளி எனும் தமது நிலையினை நிராகரித்து வந்த போதும் தற்போது அந்நிலையிலிருக்கும் அவர்கள், இனங்காணப்பட்டு வெளியரங்கப்படுத்தப்படுகின்றனர். தரவுகளை நோக்குகையில் பொதுப் போக்குவரத்தின் போது 95% வீதமான பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகின்றனர் எனில் ஆண்களே இவ்வாறான வன்முறைகளுக்கு பொறுப்பாக உள்ளனர். நாம் ஓர் பாலினம் என்ற வகையில் இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டுமென்பதுடன் இதற்கு நாம் பதில் கூறவும் வேண்டும். போதுமான பொறுப்புணர்வு இது தொடர்பில் காணப்படுவதில்லை. கற்பழிப்பை ஓர் உதாரணமாகக் கொண்டால், கடந்த ஆண்டு இலங்கையில் ஒரு நபர் மட்டுமே கற்பழிப்பிற்காக சட்ட ரீதியாக தண்டிக்கப்பட்டுள்ளார் என்பதுடன் இது கற்பழிப்பு தொடர்பான சுமார் 6,000 வழக்குகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தரவாகும்.
சுவஸ்திகா – பாலின அடிப்படையிலான வன்முறையானது வேலைத்தளங்களிலோ பொது இடங்களிலோ இடம்பெறலாம். வன்முறை உடல், பாலியல் மற்றும் உள ரீதியாக இடம் பெறலாம். பெண் பிள்ளைகளுக்கு பொதுவாக அளிக்கப்படும் அறிவுரை யாதெனில், ”இரவில் வெளியே செல்ல வேண்டாம், அது பாதுகாப்பானது அல்ல” என்பதாகும். எனினும், பெண்கள் தமது குடும்பஸ்தர்களாலும் நெருங்கிய துணைகளாலும் வன்முறைக்குட்படுத்தப்படுகின்றனர் என்பதனை நாம் இனங்காணத் தவறுகின்றோம். இது பற்றி வெளிப்படையாக பேசப்படுவதில்லை. மேலும் தொழிலை இழக்க நேரிடும் என்னும் பயத்தால் தமக்கு நேரிடும் வன்முறைகள் தொடர்பில் பெண்கள் முறையிடுவதில்லை. என்னுடைய கருத்து யாதெனில் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகளவு மறைவான இடங்களிலேயே இடம்பெற வாய்ப்புள்ளது.
ஆரித – வன்முறையானது உடல், உள மற்றும் பொருளாதார ரீதியானதாக இருக்கலாம். இது ஒரு நபர் இன்னொருவர் மீது செலுத்தக்கூடிய கட்டுப்பாட்டில் தங்கியுள்ளது.
உடல் ரீதியான வன்முறை
ஒரு தொடுகையானது வாழ்நாள் முழுவதும் தொடரும் பயத்தினை ஏற்படுத்துமாயின் அது உடல் ரீதியான வன்முறைக்கு சமமானதாகும். வாசனா அவர்கள் கூறுவது யாதெனில், இது ஒருவர் மீதான அதிகாரத்தினை பிரயோகிப்பதனை குறிக்கும் செயலேயாகும் என்பதுடன் இது ஒரு திருமணமான தம்பதியிடையிலும், ஒரு ஆண் ஒரு பெண்ணை பாலியல் உறவுக்கு பலவந்தப்படுத்தும் போது திருமணத்துக்கு புறம்பேயும் இடம்பெறுகின்றது. பெண்களுக்கு பாதுகாப்பான முறையில் பாலியல் உறவில் ஈடுபட உரிமை உண்டு. இந்த உரிமையை ஒருவர் மறுக்கும் போது, அது பாலியல் வன்முறைக்கு சமமாக கருதப்படுகின்றது.
உளரீதியானவன்முறை
இவை உள ரீதியான பாதிப்பினை அல்லது துன்பத்தினை ஏற்படுத்தும் நிகழ்வுகளின் தொகுப்பாகும். இது நடத்தை மற்றும் வார்த்தை ரீதியான துன்புறுத்தலாகும் என்பதுடன் இவை வழக்கமாக நீண்ட காலமாக இடம்பெறுபவையாகும்.
பாதிக்கப்பட்டவர் மிகக் கூடுதலான அளவில் பாதுகாப்பற்ற தன்மையை உணர்வதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றார். பாதிக்கப்பட்டவர் உணர்வு ரீதியான களைப்படைந்தும் துஷ்பிரயோகத்துக்கும் வன்முறைக்கும் உட்படுத்தப்பட்டும் காணப்படுவார். உங்கள் துணையிடம் கத்திப்பேசுதல், மோசமான வார்த்தைப் பிரயோகத்தினை அவமதிக்கும் முறைகளிலொன்றாய் பயன்படுத்தல், உங்கள் துணையை மிரட்டுதல் என்பன உள ரீதியான துஷ்பியோகத்தின் வடிவங்களாகும்.
பொருளாதாரரீதியானதுஷ்பிரயோகம்
வணிக கணக்குகளை தடுத்து நிறுத்துவதன் மூலமும், பணம் பெற்றுக்கொள்வதை நிறுத்துவதன் மூலமும் பொருளாதார மூலங்களை கட்டுப்படுத்துதல்.
யார்வன்முறையைமேற்கொள்ளலாம்?
ஆரித – ஆய்வில் பங்கெடுத்த சில பெண்கள் தாம் சிகிச்சைக்கு உட்டபடுத்தப்பட வேண்டுமென நினைத்தனர் என்பதுடன் அது துஷ்பிரயோகத்தின் ஒரு வடிவமென கருதியிருக்கவில்லை. எதோ ஓர் தவறு இருக்கிறதென்பதை அவர்கள் யோசிக்கவில்லை. ஆணாதிக்க முறை மிகவும் வலுவானது என்பதனுடன், பெண்கள் இதன் அங்கமாக உள்ளனர். இந்தக் கருத்தை அகற்ற சிறிது காலம் எடுக்கும். ஆனால் இது, பெண்கள் ஆண்களுடன் இணைந்து வழிநடத்த வேண்டிய ஒரு போராட்டமாகும்.
சுவஸ்திகா – ஒரு நபர் ஒரு குழந்தையாக வன்முறையை அனுபவிக்கும் போது, அவர்கள் பெரியவர்களைப் போலவே நடந்துகொள்ள முனைகின்றனர். இது “தலைமுறை ரீதியான வன்முறை” என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், இது வன்முறை காரணமாக மட்டும் இடம்பெறுவதில்லை. குழந்தைகள் சமூகக் கருத்துக்களால் பாதிக்கப்படுகையில், அவர்கள் பெண்கள் மற்றும் ஓரின, இருபால் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், திருநர்கள் உள்ளடங்கலான எல்.ஜி.பி. டி.க்யூ. சமூகத்தினரையும் குறிவைத்து வன்முறையை ஏற்படுத்தும் பெரியவர்களாக மாறுகிறார்கள்.
ஆரித – பகிடிவத்தை செய்தல் மற்றும் துன்புறுத்தல் பாலின அடிப்படையிலான வன்முறையின் ஒரு பகுதியாகும். யாராவது பகிடிவதைப்படுத்தப்படுகையில், அவர்களின் உள மற்றும் உடல் நலன் தொடர்பாக அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். பகிடிவத்தையானது எதிர் பாலினருக்கே எதிராக மேற்கொள்ளப்படும் போது அது பாலின அடிப்படையிலான வன்முறையின் கீழ் வரும்.
ஆரித – பெண்களால் ஆண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் பெண்ணின் அதிகாரம் மேலோங்கி இருக்கும் சந்தர்பத்திலோ, ஓர் ஆண் குழந்தை பற்றிய பொறுப்பு பெண்ணொருவருக்கு இருக்கும் பட்சத்திலோ இடம்பெறுகின்றது. ஆண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநேக வன்முறைகள் பிறிதொரு ஆணால் அவர்களுக்கு இழைக்கப்படுபவையாகவே உள்ளது. இது தொடர்பில் சமூகரீதியாக முகம்கொடுக்கவேண்டிய சங்கடத்தால் பெரும்பாலான ஆண்கள் இவ்வாறான விடயங்களை வெளியரங்கப்படுத்துவதில்லை. எமக்கெதிராக பாரதூரமான குற்றச்செயலொன்று இழைக்கப்ப்பட்டுள்ளதென ஏற்றுக்கொள்வது ஓர் பெண்மைத் தன்மையான விடயமென சிந்திக்க வழிப்படுத்தப்படுகின்றோம். இதில் நிறைய அவமானங்கள் உள்ளன என்றும் ஓர் ஆண் போன்று கடினத்தன்மையுடன் இருக்க வேண்டுமெனச் சொல்லப்படுகிறோம். இவ்வாறான மிலேச்சத்தனமான ஆண்மை சார்ந்த கருத்துக்களால் நாம் பாதிக்கப்படும் போது அது பற்றி நாம் கதைக்காமல் இருக்க முற்படுவதுடன், துரதிஷ்டவசமாக நாங்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களாக மாறுகின்றோம்.
சுவஸ்திகா – ஆண்கள் மற்றைய ஆண்களை அவர்களது ஆண்மையை அவமதிப்பதன் மூலம் பகிடிவத்தைக்குள்ளாக்குவதை நாம் காண்கிறோம். இது சிறுவர்கள் எதிர்கொள்ளும் வன்முறையின் ஒரு வடிவமாகும். நாம் பொதுவாக ஆண்கள் தாம் பெண்களால் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக முறையிடுவதனை நாம் கேள்விப்படுவதில்லை. இதற்கான காரணம் எம்மை சூழ இருக்கும் இவ்வாறான விடயங்கள் தொடர்பாக வேரூன்றி இருக்கும் கலாச்சார ரீதியான குறுகிய சித்தாந்தமாகும். கற்பழிப்பானது ஆண்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட முடியுமென ஓர் ஊகிப்பு உள்ளது என்பதுடன் இது இன்றைய எமது சட்டங்களினூடாகவும் பிரதிபலிக்கப்படுகின்றது. ஆதலால், ஆண்கள் இவ்வாறன விடயங்களை வெளிப்படுத்துவது தொடர்பில் முன்வருவதில்லை.
ஆரித – பாடசாலைக் கல்வி. பாடசாலை மூலமாகவோ உறவுகளுக்கூடாகவோ அல்லது கல்வியினூடாகவவோ நாம் பாலியல் கல்வியைப் பெறவில்லை என்பதனை நாம் யாவரும் அறிந்திருக்கிறோம். ‘சம்மதம்’ என்றால் என்ன என்பதனை நாம் அறிந்திருக்கிறோம். அநேக ஆண்களும் பெண்களும் ‘இணக்கம்’ எனும் பதத்தின் அர்த்தத்தினை அறியாதிருக்கின்றனர். பல சிறுவர்கள் ஆபாச இணையத்தளங்களினூடாகவே உறவுகளைப் பற்றி அறிந்து கொள்வதுடன் அநேக ஆபாச தளங்கள் வன்முறையை உள்ளடக்கியவையாகவும் காணப்படுகின்றன. ஆனால் உண்மையில் அவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்வது ஓர் கற்பனையான விடயத்துடனேயே. சம்மதம் பற்றியோ அல்லது ஒழுக்கமான உறவுமுறைகளைப் பற்றியோ எதுவும் கற்பிக்கப்படாத ஓர் சிறு பிள்ளை இவற்றை சாதாரண பாலியல் மற்றும் பாலினம் சார்த்த விடயமாக நோக்குகின்றமையானது, அவர்கள் தமது துணையுடன் நடந்து கொள்ளும் விதத்தில் தாக்கம் செலுத்துகின்றது.
கல்வி அறிவின்மை பெண்களுக்கெதிரான வன்முறையை நிலைபெறச் செய்கின்றது.
ஆரித – அவை ஒன்றல்ல. சூழல்கள் வேறு. பாலின அடிப்படையிலான வன்முறை எங்கும் நடக்கலாம். இது பஸ்ஸிலோ, கடற்கரையிலோ நடக்கலாம். வீட்டு வன்முறையானது ஒரு தனிப்பட்ட உறவுக்குள் ஒரு தனிப்பட்ட இடத்தில் நடக்கின்றது. இது வீட்டில் இடம்பெற வேண்டுமென்றில்லை. ஆனால் அது நெருங்கிய துணைகளுக்கிடையே நடக்கின்றது.
ஓர் சட்டத்தரணி என்ற வகையில் நான் கூறுவது யாதெனில், நீங்கள் இது தொடர்பாக முறைப்பாடு செய்ய வேண்டும் என்பதாகும். எனினும், ஒவ்வொருவரதும் சூழ்நிலைகள் வித்தியாசமானவை என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பில் நமக்கு அனுதாபம் செலுத்தக்கூடிய பொலிஸாரும் தேவை. ஏனெனில், பெண்கள் இவ்வாறான முறைபாடுகளுடன் பொலிஸாரிடம் சென்று திருப்பி அனுப்பப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக பொலிஸார் பிரச்சனையை தீர்க்க துஷ்பிரயோகத்திற்கு உட்படும் துணையை மத்தியஸ்தப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கிறார்கள். குடும்ப வன்முறையின் எவ்வடிவமும் குற்றமாகும். அவ்வாறானதோர் விடயம் நெருங்கிய நபர்களிடையே நடைபெறுகின்றமையானது அதன் குற்றத் தன்மையை குறைக்காது.
இலங்கையின் ஓரின மற்றும் இருபால் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மற்றும் திருநர்கள் முதலானோர் உள்ளடங்கலான எல்.ஜி.பி.டி.கியூ சமூகத்தினர் பற்றி சற்றுக் கூற முடியுமா?
ஆரித – சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் 25 மாவட்டங்களிலும் ஒரே காரணியின் அடிப்படையில் ஓர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் படி எல்.ஜி.பி.டி. கியூ சமூகத்தில் 70% வீதமானோர் யாதேனுமொருவிதத்தில் வன்முறையை அனுபவித்ததாகவும் 50% வீதமானோருக்கு வேலை மறுக்கப்பட்டதாகவும் இது காட்டுகிறது. எல்.ஜி.பி.டி. கியூ மக்கள் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளால் கட்டாய குத மற்றும் யோனி பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக ஐப்ரோபோனோவுடன் பணிபுரியும் வழக்கறிஞர்கள் அம்பலப்படுத்தினர்.
இந்தசிக்கலுக்கானசட்டக்கட்டமைப்புஎன்ன?
வாசனா – முதலில் நீங்கள் அருகிலுள்ள பொலிஸ் அலுவலகத்தில் புகார் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் 119 என்ற ஹாட்லைனை அழைக்கலாம். அல்லது பொலிஸ் தலைமை அலுவலகத்தை 0112 421111 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். வீட்டு வன்முறைக்கு என்று பிரத்தியேக தொலைபேசி இலக்கம் ஒன்றுள்ளது, 1938 ஆகும்.
நாம் இன்று ஓர் இலத்திரனியல் உலகிலேயே வாழ்கின்றோம். இணையத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகளைப் பற்றி விரிவாகக் கூற முடியுமா?
ஆரித – நாம் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் நீதி அமைச்சுடன் இணைந்து சைபர் பகிடிவதைகளுக்கு எதிராக போராடுவதுடன் சைபர் பகிடிவதைகளை குற்றச் செயலாக்குவதற்கும் ஆபாசத்தள மற்றும் இணையத்தின் வாயிலாக தொந்தரவு செய்தல் ஆகியன தொடர்பிலும் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றோம். ஸ்மார்ட் போன் பாவனையின் பெருக்கத்தின் விளைவாக இது ஓர் பிரச்சனையாய் மாறியுள்ளது. பாடசாலை மைதானங்களில் இடம்பெற்ற பகிடிவதைகள் தற்போது சமூக வலைதளங்களில் ஒருவரை அவதூறாகப் பேசுதல், அவமரியாதையான சொற்களால் அழைத்தல், வன்முறை மிக்க அல்லது வெட்கப்படுத்தும் குறுஞ்செய்திகளை அனுப்புதல் போன்ற விடயங்களை இன்று நாம் காண்கின்றோம். இன்று பல பாலியல் ரீதியான வன்முறைகள் சமூக வலைதளங்களில் இடம்பெறுவதனைக் காண்கின்றோம். இன்று பாடசாலை மாணவிகளின் நிர்வாணப் படங்களைப் பகிரும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களாலான கும்பல்கள் இயங்குவதனைக் காண்கின்றோம்.
இவர்கள் பாடசாலை செல்லும் சிறுமிகளை உறவு கொள்வதற்கு தூண்டி அவர்களது நிர்வாணப்படங்களை அனுப்புமாறு மிரட்டுகிறார்கள். பாலியல் ரீதியான வேண்டுகோள்களை இம்மாணவிகள் நிறைவேற்றாதவிடத்து, அவை பாலியல் வன்முறையின் ஒரு தொடர் நிகழ்வாக அமைந்துவிடுவதுடன் மிரட்டிச் செய்யப்படும் ஆபாச நடவடிக்கைகளாகவும் மாறுகின்றன. துரதிஷ்டவசமாக, நாம் எமது சிறுவர்களுக்கு ஸ்மார்ட் போன்களின் நன்மை தீமைகளை எடுத்துரைக்காது அவற்றை கொடுத்துவிடுகின்றோம்.
இணை-ஆசிரியர்கள்: ஸீநத் சாகிர், அஞ்சலி உடவத்த மற்றும் ஷாலோமி தாசன் (இலங்கை சட்ட மாணவர்கள் சங்கத்தின் ப்ரோ போனோ மன்றம்)
யாழ்ப்பாண மண்ணின் அளப்பெரும் சொத்துக்களாகவும், தனிச் சிறப்பு அம்சமாகவும் திகழ்பவையே பனைமரங்கள் ஆகும். கூடுதலாக வடபகுதியின் தீவகப் பகுதியில் அதிகளவு பனைவளங்கள் காணப்படுகின்றது. ஆகவே தான் “ நாற்புறமும் பனை சுழும் யாழ்ப்பாணம் ..” என்று சின்ன தம்பிப் புலவரால் சித்தரிக்கப்படுகின்றது. அள்ள அள்ளக் குறையாத வளங்களையும், ஒப்பில்லாத நன்மைகளையும் மனிதர்களுக்கு அளிப்பதாலேதான் பனைமரங்கள் “பூலோக கற்பக விருட்சம்” என்று அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு பனை மரம் தரும் வளங்கள் எல்லையில்லாதவை. அடி தொடக்கம் முடிவரை பனையின் வளங்கள் சிறப்பு மிக்கவை. பனையின் ஓலை தொடக்கம் வேர் வரை பயன்மிக்கது.
தற்காலத்தில் குறைந்தளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவுள்ள போதிலும் ஆரம்ப காலத்தில் அதாவது பண்டைய காலங்களில் வீட்டின் கூரை வேய்வதற்கு பனையின் ஓலைகளே பயன்பட்டன. வெயில் காலத்தில் குளிர்ச்சியையும் மழை காலங்களில் சூட்டையும் வழங்கி மனிதர்களைக் காப்பாற்றின. எனினும் கல் வீடுகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்ட இக்காலத்தில் கூட பனையின் பங்கு இன்றியமையாதது. ஓட்டினாலான வீட்டுக் கூரை அமைப்பதற்கு பனை மரத்தின் தண்டாகிய கிராய் மரங்களே அதிகம் இன்றுவரை பயன்படுத்தப்படுகின்றது. தற்காலத்தில் பனை ஓலையைக் கொண்டு பாய் பின்னுதல் மற்றும் அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து, வடிவமைத்து, விற்பனை செய்யப்படுகின்றது. அத்தோடு விற்பனைக் கூடங்களை அமைத்து நாட்டின் உற்பத்திகள் ஏற்றுமதி பொருட்களாகவும் வெளிநாடுகளுக்கு விநியோகிக்கப்படுவது மூலம் நம் நாட்டின் அபிவிருத்தியிலும் பனைசார் உற்பத்திகள் பங்கு வகிக்கின்றன.
அதுமட்டுமின்றி பனை மரத்திலிருந்து கள்ளு, பதநீர், கருப்பட்டி, கருவெல்லம், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு போன்ற உணவுப் பொருட்களும் கிடைக்கப்பெறுகின்றன. இதுபோன்ற அளவிடமுடியாத பயன்களையும் வளங்களையும் கொண்டிருப்பதால்தான் பனைமரங்கள் “பூலோகக் கற்பக விருட்சம்” என்று சிறப்பித்துக் கூறப்பட்டன. பனைமரம் தனது வானளாவு ஓங்கிய உயரத்தைப் போலவே தனது பயனிலும் உயர்ந்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. நம் முன்னோர்களின் வாழ்வில் இப் பனைமரங்கள் அதிகளவில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. ஆகையால் தான் நம் முன்னோர்கள் அதிக ஆயுளுடன் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
பனைமரத்தின் ஓலை வேலி அமைப்பதற்கும் மிகவும் ஏற்றது. பனை மரத்தின் வேராகிய கிழங்கும் மிகவும் சிறந்தது. பனைமரங்கள் காக்கப்பட வேண்டிய அளவு அளப்பரும் சொத்துக்களாகும். பனைமரத்திலிருந்து கிடைக்கப்பெறுகின்றன “நுங்கு” கோடை காலங்களில் ஏற்படும் உடல் உஷ்ணமாதல், உடல் வறட்சி, நா வறட்சி போன்றவற்றை நீக்கி உடலைப் புத்துணர்வுள்ளதாகவும், உடலை உற்சாகமுள்ளதாகவும் மாற்றவல்லது.
பனைமரத்திலிருந்து கிடைக்கப்பெறும் பனைவெல்லம், கருப்பட்டி என்பன சீனியை விடவும் சிறப்பு வாய்ந்தவை. இவை இனிப்புள்ள பதார்த்தமாகவுள்ள உள்ளபோதிலும் மருத்துவ குணம் வாய்ந்தவை ஆகும். மகப்பேற்றுத் தாய்மார்கள், சர்க்கரைநோய், கொலஸ்ட்ரேல் போன்றா இத்யாதி நோய்களால் அவதியுறுவோருக்கு இப்பனை வெல்லமானது அருமருந்தாகப் பயன்படும். பனையிலிருந்து கிடைக்கப்பெறும் பனங்கள்ளு உடலுக்கு புத்துணர்வும் அளித்து உடலைக் குளிர்விக்க வல்லது.
பனம் பழத்தைப் பிழிந்து பாகு எடுத்துச் செய்யப்படுகின்ற “பனங்காய் பணியாரம்” தின்னத் தின்னத் தெவிட்டாத தேன் சுவை மிக்கதாகும். இதனை விருப்பியுண்ணாத மக்களே இல்லை எனலாம். நம் நாட்டில் மட்டுமின்றி தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் இப் பனங்காய் பணியாரம் விரும்பி உண்ணப்படுகின்றன. பனங்களின் பாகிலிருந்து தயாரிக்கப்படுகின்ற பனங்காய்ப் பனாட்டும் சிறப்பு வாய்ந்ததும், சுவை மிக்கதும், நீண்ட நாள் பாவனைக்கு உகந்ததுமாகும்.
பனம்பழத்தின் சுவைக்கும், அதன் தன்மைக்கும் ஏற்பவே பனம் பழமானது “தேம் படு பனை” என்று பண்டைய இலக்கியங்களிலே சிறப்பிக்கபடுகின்றன. இத்தகைய சிறப்புகளையும் ஒப்பற்ற நன்மைகளையும் தரக்கூடிய இப் பனைமரங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவையே ஆகும். பனைமரத்தின் பயன்பாடுகள் அளப்பரியவை. பனை மரங்கள் நம் மண்ணுக்குரிய சிறப்பு மிக்கவை. அவற்றை நாம் அழியாமல் பாதுகாத்துப் பயனடைவோம்.
சூரியன் ஒருபோதும் சலசலப்பை ஏற்படுத்தாது. இக்காலத்தில் ஓய்வெடுக்க நேரம் எடுத்துக்கொள்வது, நீங்கள் தாங்க வேண்டிய நிலையான மன அழுத்தத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்வது, மற்றும் கவனத்துடன் பழகுவது மிக முக்கியமானதாகும். யோகா, நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறபடி, உடல் தோரணங்கள், சுவாச நுட்பங்கள் மற்றும் தியானம் ஆகியவற்றை இணைக்கும் ஒருவித உடல் மற்றும் மனப்பயிற்சியாகும்.
கவனமுள்ள வாழ்க்கைக்கு ஒரு படி மேலே செல்ல நீங்கள் ஆர்வமாக இருந்தால் கவலைப்படாதீர்கள், ஏனென்றால் கொழும்பில் உள்ள யோகா ஸ்டுடியோக்கள் மற்றும் வகுப்புகளின் பட்டியலை நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஏனென்றால் நீங்கள் ஓய்வெடுக்கவும், மனதை ஆசுவாசப்படுத்தவும், உங்களை நீங்கள் அறியவும் இவை நிச்சயம் உதவும்.
பிராணா லவுஞ்ச் ( Prana Lounge)
கொழும்பு 7, ஹார்டன் பிளேஸில் அமைந்துள்ள பிராணா லவுஞ்ச், தளர்வு, சுய கண்டுபிடிப்பு மற்றும் குணப்படுத்துதல் ஆகியவற்றுக்கு வரும் அனைவருக்கும் ஒரு அனுபவத்தை வழங்குகிறது. தொடக்க, இடைநிலை மற்றும் நிபுணர் வேட்பாளர்கள், உடல்நலம் தொடர்பான சிகிச்சைகள், பிற நிகழ்வுகள் மற்றும் பட்டறைகளுக்கு நடத்தப்படும். யோகா மற்றும் தியான வகுப்புகள் மூலம் குணப்படுத்துவதற்கான நல்வாழ்வு மற்றும் சிகிச்சை முறைகளை அவர்கள் வழங்குகிறார்கள். ஹோமியோபதி, ரெய்கி, பிசியோதெரபி, ஆயுர்வேதம் மற்றும் குத்தூசி மருத்துவம் போன்ற பல்வேறு சமகால சுகாதார நடைமுறைகளை வழங்கும் ஒரு மருத்துவமனை அவர்களிடம் உள்ளது. மேலும் தகவல் மற்றும் விசாரணைகளுக்கு நீங்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்:
கொழும்பு 5, ஹெவலொக் சாலையில் அமைந்துள்ள ஓம் நிலையம் எந்தவொரு தனிநபருக்கும் பொருந்தக்கூடிய, யோகாவின் வெவ்வேறு பாணிகளைக் கற்பிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது; இங்கு தொடக்க, இடைநிலை, குழந்தை அல்லது கர்ப்பிணித் தாயாக இருந்தாலும் சரி. உங்கள் தேவைகள், நீங்கள் வசதியாக இருக்கும் நிலை மற்றும் யோகாவை ஒரு பயிற்சியாக மாற்றுவதன் மூலம் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் உங்களுக்கு மிகவும் பொருத்தமான வகுப்பைக் கண்டுபிடிக்க அவை உங்களுக்கு உதவக்கூடும். மேலதிக விசாரணைகள் மற்றும் தகவல்களுக்கு நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ளலாம்:
3. நந்தா ஸ்ரீ ஹத யோகா நிறுவனம் (Nanda Sri Hatha Yoga Institute)
நுகெகொடவின் கொஹுவல பகுதியில் அமைந்துள்ள, ஹத யோகாவில் நிபுணத்துவம் பெற்ற குரு நந்தா சிரிவர்தன அவர்களின் நிலையமே இது. ஆரம்ப, இடைத்தரகர்கள் மற்றும் அனுபவமுள்ள பயிற்சியாளர்களுக்கு வகுப்புகளை நடத்துகிறார். நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், நீண்ட ஆயுளுக்கும், ஒட்டுமொத்த மகிழ்ச்சி, அமைதி, உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றில் பங்களிப்பு செய்கிறார். மனநலம், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி மற்றும் முதுகெலும்பு பிரச்சினைகள் போன்ற தினசரி நாம் எதிர்கொள்ளும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகளை ஹத யோகா பயிற்சி மூலம் தணிக்கவும் குரு நந்தா சிரிவர்தன உதவுகிறார் . மேலும் விசாரணைகள் மற்றும் தகவல்களுக்கு அவர்களை தொடர்பு கொள்ளவும்:
கொழும்பு 5, ஜாவத்தை அவென்யூவில் உள்ள பாடி பார் யோகா, இருதய எதிர்ப்பு-பயிற்சி மற்றும் நடனம் மூலம் உடற்திறனை ஊக்குவிக்கும் ஒரு ஸ்டுடியோ ஆகும். வருடாந்தம் மற்றும் இரண்டாண்டு, காலாண்டு, மாதாந்திர மற்றும் வாராந்திர வரையிலான உங்கள் தேவைகளுக்கு ஏற்ப வெவ்வேறு உறுப்பினர் கால அளவை நீங்கள் தேர்வு செய்யலாம். யோகா பயிற்சி செய்யும் போது நீங்கள் பலவிதமான பயிற்சிகளை முயற்சிக்க விரும்பினால், பாடி பார் உங்களுக்கான இடமாக இருக்கலாம். எந்தவொரு விசாரணைகள் அல்லது கூடுதல் தகவல்களுக்கும் அவர்களை தொடர்பு கொள்ளவும்:
வலைத்தளம்: https://www.bodybar.lk
தொலைபேசி: 011 250 5462
இன்ஸ்டாகிராம்: @bodybar.lk
பேஸ்புக்: Body Bar
தெஹிவளையில் அமைந்திருக்கும் யோகா ஆரோக்கிய மையத்தை திரு. அனந்தரவி மற்றும் திருமதி ஏ.நதிபா ஆகியோர் இணைந்து செயற்படுத்துகிறார்கள். இக்கலையில் மேஸ்ட்ரோக்கள் இவ்விருவரும். அவர்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பயிற்றுனர்கள். அவர்கள் யோகாவின் வெவ்வேறு பாணிகளைக் கற்பிக்கும் வகுப்புகளை நடத்துகிறார்கள், மேலும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உங்களுக்கு ஏற்றவாறு தனிப்பயனாக்கப்பட்ட அட்டவணைகளையும் நடைமுறைகளையும் உருவாக்கலாம். உங்களில் வீட்டில் யோகா பயிற்சி செய்ய விரும்புவோருக்கு, அவர்கள் வீட்டு வருகைகளையும் நடத்துகிறார்கள். மேலும் தகவல் அல்லது விசாரணைகளுக்கு அவர்களை தொடர்பு கொள்ளவும்:
கொழும்பு 3, ரிட்ஜ்வே பிளேஸில் அமைந்துள்ள அஷ்டாங்க யோகா நிலையம் மக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக யோகாவை ஒரு பயிற்சியாக மாற்ற உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெவ்வேறு வயதுக்குட்பட்டவர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வெவ்வேறு வகையான மற்றும் யோகா பாணியை அவர்கள் கற்பிக்கிறார்கள், மேலும் ஒவ்வொருவரும் யோகாவை ஒரு பயிற்சியாக மாற்ற விரும்புவர். அவர்கள் சிகிச்சை யோகாவையும் கற்பிக்கிறார்கள், இது தியானத்துடன் பின்னிப் பிணைந்திருக்கும் மிகவும் கவனமுள்ள யோகாசனத்தை ஊக்குவிக்கிறது. மேலும் தகவல் மற்றும் விசாரணைகளுக்கு நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ளலாம்:
கொழும்பில் மிகவும் பிரபலமான யோகா ஆசிரியர்களில் ஒருவரான ஆரோன் விக்ரமசேகர ஒவ்வொரு வாரமும் மலர் சாலையில் அமைந்துள்ள டி அண்ட் ஏ ஃபிட்னெஸில் யோகா வகுப்புகளை நடத்துகிறார். டி & ஏ ஃபிட்னஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொரு வகுப்பிற்கும் வாராந்திர அட்டவணைகளை அவை வெளியிடப்படுகின்றன. மேலும் நீங்கள் பங்கேற்க அமர்வுகள் முன்பதிவு செய்யப்பட வேண்டும். ஆரோன் உருமாறும் யோகா பின்வாங்கல்களையும் நடத்துகிறார். அங்கு நீங்கள் ஒரு நாள் கொழும்பின் புறநகரில் உள்ள மிகவும் அமைதியான நகரத்திற்குச் சென்று, யோகாவின் வெவ்வேறு பாணிகளைப் பயிற்சி செய்யும்போது அந்த நாளை நினைவாற்றலுக்காக அர்ப்பணிப்பீர்கள். மேலும் தகவல் மற்றும் விசாரணைகளுக்கு அவர்களை தொடர்பு கொள்ளவும்:
வலைத்தளம்: https://aaronwik.com
தொலைபேசி: 077 685 9992
இன்ஸ்டாகிராம்: @aaron_wick or @tafitnesslk
8. Babaji’s Kriya Yoga
பாபாஜியின் கிரியா யோகா என்பது சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆசிரமமாகும். இது கொட்டாஞ்சேனை, கொழும்பு 13 இல் அமைந்துள்ளது. பண்டைய இந்திய யோகாசனங்களை கொழும்பு மக்களின் இதயத்திற்கு கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். மன அழுத்தத்தை நிர்வகிக்க மக்களுக்கு உதவுவதற்காகவும், அவர்களின் பிற திட்டங்கள் மேம்படுத்தவும் இவர்கள் முயலுகிறார்கள். மக்களின் ஒட்டுமொத்த உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வே இவர்களது குறிக்கோள். மேலதிக விசாரணைகள் மற்றும் தகவல்களுக்கு, அவர்களை தொடர்பு கொள்ளவும்:
ஆன்னி ஒரு சான்றளிக்கப்பட்ட யின் யோகா பயிற்றுவிப்பாளராக உள்ளார். அவர் யோகா ஆர்வலர்களுக்கு இலவச பயிற்சித் திட்டங்களை நடத்துகிறார். அவர்கள் சான்றளிக்கப்பட்டப் பின் யின் யோகா ஆசிரியர்களாக மாறலாம். அவரின் இலவச நிரல்களை வலைத்தளத்தின் மூலம் நீங்கள் பார்க்கலாம் அல்லது மேலதிக தகவல்களுக்கும் விசாரணைகளுக்கும் இன்ஸ்டாகிராம் வழியாக அவரை தொடர்பு கொள்ளலாம்:
கொழும்பில் நன்கு அறியப்பட்ட யோகா பயிற்றுவிப்பாளரான அனோஜா வீரசிங்க, அபினா யோகா ஆசிரமத்தில் வகுப்புகளை நடத்துகிறார். ஆரம்ப நாட்களில், இடைத்தரகர்கள் மற்றும் மேம்பட்ட மாணவர்களை வெவ்வேறு நாட்களில் மையமாகக் கொண்டு வகுப்புக்களை நடத்துகிறார். அவர் சிவானந்தா அபினா யோகா குருகுலா என்ற பேஸ்புக் பக்கத்தை நடத்தி வருகிறார். அங்கு அவர் நடத்தும் யோகா வகுப்புகள் தொடர்பான அனைத்து புதுப்பிப்புகளையும் இடுகிறார். மேலும் அவர் வீட்டில் பயிற்சி செய்ய ஆர்வமுள்ள அனைவருக்கும் வழக்கமான வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றுகிறார். நீங்கள் அவருடைய நிரல்களைப் பார்த்து, மேலும் தகவலுக்கு அவரை தொடர்பு கொள்ளலாம்:
எல்லாமே இப்போது உங்களிடம் இருக்கிறது! மேலே குறிப்பிட்டுள்ள யோகா வகுப்புகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் முயற்சித்தால், கீழேயுள்ள கருத்துகளில் உங்கள் நினைவாற்றல் பயணம் மற்றும் அனுபவங்களைப் பகிரவும் . மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள்!
இலங்கை நாடானது பல்சுவை கொண்ட மக்களை கொண்டுள்ளது. அது போலவே பல வித குணாதிசயங்கள் மிகுந்த பெண்மணிகளை உருவாக்கிய நாடு என்று கூறுவதற்கு நான் பெருமைப்படுகிறேன். “நான் எந்த Categoryக்கு உள்ளே வரப்போகிறேனோ” என்று நினைத்து Scroll செய்ய முயல்வது புரிகிறது. அலட்டிக்கொள்ளாமல் நேரடியாக Listஇற்கு சென்றிடுவோம்.
1. கவர்ச்சிக்கன்னி
பொதுவாக இவர்களுக்கு இரண்டாயிரம் – மூவாயிரம் Followers க்கு மேல் இருக்கும். அனைத்து சமூக வலைத்தளங்களிலும் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர்கள். தனது Snapchat இல் Bed Coffee முதல் Night Dress வரை அனைத்தையும் சுடச்சுட Snap களாக பார்க்க அனைவருக்கும் அனுப்பிவிடுவார். நண்பர் கூட்டத்தில் தான் தனியாக விளங்கவேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்துக்கொள்வார்கள். அதைவிட, Skinny dress என்ற போர்வையில் மிக ஒடுங்கிய உடையில் Gym களில் காட்டும் அலப்பறைகள் மிக அதிகம். ஆனால் அவர்களை அறிந்தோருக்கும் அறியாதோருக்கும் கண்களுக்கு குளிர்ச்சியாக இருப்பதால் எதிர்த்து பேசுவதென்னமோ மிக அறிது.
2. அன்புள்ள சகோதரி
தனது முதல் சந்திப்பில் அல்லது கலந்துரையாடலில் தனது குடும்பத்தில் ஒரு அங்கத்தவராக தத்து எடுத்துகொள்வார்கள். கவலையான சந்தர்பங்களில் தோழியாக, சோர்வுற்று இருக்கும் நிலைமைகளில் ஊக்கமளிக்கும் பேச்சாளராக, தனது கஷ்டங்களை பகிர்ந்துகொள்ளும் நண்பியாகவும் வலம்வருவார்கள். குறிப்பாக உடைந்த இதயங்களை குணப்படுத்தும் சூழ்நிலைகளில் சரி- தவறு கூறும் நீதிபதியாகவும் அனைத்து வேதங்களை அறிந்த வேந்தராகவும் உதவி கரம் நீட்டுவார்கள்.
3. புத்தகப் பூச்சி
எப்பொழுதும் புத்தகமும் கையுமாக இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் செல்லப்பிள்ளையாக கருதப்படுவார்கள். தனது இலட்சியத்தை அடைவதில் மிக மும்முரமாக ஈடுபடுவார்கள். “நீ இதை படிக்கவில்லையா?” என்று Exam அன்று காலை கடுப்பேற்றும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். பொதுவாக இவர்கள் சமூகத்தோடு இணைந்திருக்கும் சந்தர்பம் மிகவும் குறைவு என்பதால் கூட்டமாக இருக்கும் வேலைகளில் பொட்டி பாம்பாக அடங்கி இருப்பார்.
4. பாரம்பரிய அம்மாக்களின் பிள்ளை
சற்று பாவமான பிள்ளைகள். தன்னிச்சையாக தங்களது பிள்ளைகளை எதற்கும் விடமாட்டார்கள். பிரத்தியேக வகுப்பு முடிந்தவுடன் அம்மாக்கள் பிள்ளைகளை கையோடு வீட்டிற்கு கூட்டிச் சென்றுவிடுவார்கள். பிள்ளைக்கு ஆண் நண்பர்களின் நட்பு இருக்கக்கூடாது என்பதற்காக வீட்டிற்குள்ளும் காவல் அதிகாரி போல் நோட்டம் இட்டவாரே இருப்பர். பொதுவாக இப்பிள்ளைகளுக்கு கையடக்க தொலைபேசி இருக்காது. அம்மாவின் தொலைபேசியிலேயே அனைத்தையும் செய்து முடித்து விடுவார்கள்.
5. நான் நானாகத்தான் இருக்கிறேன்
எதற்கும் அஞ்சாத, யார் என்ன சொன்னாலும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தன்னிச்சையாக இருக்கும் பெண்மணிகள். இவர்களை சமூகத்தில் கண்டறிவது மிகவும் கடினம். நாட்டு நடப்பு, வதந்திகள், குடும்ப விபரங்கள் போன்ற அனைத்து விடயங்களையும் இவர்களிடம் இருந்து அறிந்து கொள்ளலாம். தெரிந்தோ தெரியாமலோ பேசும் போது ஒர் இரண்டு வார்த்தைகள் ஆங்கிலத்தில் இழுத்துவிடுவார்கள். மணப்பெண் தேவை என்றால் இந்த Category இல் பார்ப்பது சால சிறந்தது.
6. MakeUp/அலங்கார சிணுங்கிகள்
“ஐயோ இந்த உடுப்பில் நான் குண்டாக விளங்குறேனா?” என பக்கத்தில் இருக்கும் அனைவரையும் கேள்வி கேட்டு இம்சை செய்யும் Department. “போன வருஷம் பார்த்த நம்ம குமுதாவா இது?” என்று கேள்வி கேட்கும் அளவிற்கு கிலோ கணக்கில் Makeup போட்டு எலிஸபத் மகாராணிக்கே Tough குடுக்கும் நோக்கில் ஆடை அணிகலன்கள் அணிந்து வருவார்கள். நிலத்துக்கு அடிக்கும் வெள்ளை சுண்ணாம்பு போல அடிப்பாங்க பாருங்க ஒரு Lipstick ! !
Paaah ! ! Chance eh இல்ல, அவ்வளவு கோரம்.
7. கூத்தாடும் குடும்ப குத்து விளக்குகள்
ஊரில் இருக்கும் ரமேஷ் முதல் அஜய் வரை எல்லோரையும் தெரிந்து இருக்கும். ஒரு பார்வையிலேயே அனைவரையும் தன் பக்கம் இழுத்து வைப்பவர்கள். இவர்களுக்கு குடி என்று வந்துட்டால் போதும். இரவு பகல் பார்க்காமல் பஜனை பண்ணும் கூட்டம். குடித்து மட்டை ஆகுவது இலகுவில் நடக்காது, அப்படி நடந்துவிட்டால் இவர்களை வீட்டுக்கு கொண்டு சேர்ப்பவர்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள்.
8. வாழ்க்கை ஒரு நாடகம்
இவர்கள் போன்றவர்கள் சமூகத்தில் கொஞ்சம் அதிகமாகவே இனங்காணப்படுகிறார்கள். எதற்கும் துக்கம், சோர்வு அனைவரும் நம்மை ஏமாற்றுவதற்காகவே இருக்கிறார்கள் என தீவிரமாக நம்புபவர்கள். பொய் சொல்ல கூடாது; அமைதியான Type தான் ஆனால் சண்டை என்று வந்துவிட்டால் அடிச்சுக்கவே முடியாது. செல்லப்பிராணிகள் என்றால் அதிக பிரியம். மிக நெருக்கமான நண்பிகளிடம் மாத்திரம் விஷயங்களை பகிர்ந்துகொள்வார்கள்.
9. சிங்கப்பெண்ணே
“Boys க்கு விருப்பம் என்றால் அவங்க தானே முதல்ல Text பண்ணனும்…”
என்று முற்றிலும் சிரிப்பு வார மாதிரி counter அடிக்கும் எஜமானிகள். மிகவும் தைரியமான, நினைத்ததை செவ்வணே செய்யும் பழக்கம் கொண்டவர்கள். இவர்களும் தனது இலட்சியங்களை அடைவதில் தீவிரமாக காட்டுவார்கள். பேச்சாற்றல் மிக்கவர்கள், எவ்விதமான சூழ்நிலைகளிலும் தன்னிச்சையாக முடிவெடுத்து வென்றவர்கள். ஒருவரின் மனதுக்குள் புகுந்து விட்டாலோ என்ற அறிவதற்கு முன்னே Tata காண்பிக்கும் இயல்பு கொண்டவர்கள்.
10. அதி புத்திசாலி
தவறுகள் நடக்கும் போது அதை சுட்டிக்காட்டி நேர் வழிப்படுத்தும் கரம் படைத்தவர்கள். இது சரி! இது தவறு! என்று எமக்கு அடிக்கடி ஞாபகப்படுத்தும் வல்லமை கொண்டவர்கள். அனைவருக்கும் இப்படியானதொரு காதலியோ, நண்பியோ, சகோதரியோ கட்டாயம் இருக்க வேண்டும். இப்படி இருந்து விட்டால் தன் பாதை தவறி செல்வது மிகவும் அறிது.
இவை நான் வகைப்படுத்திய முறை. நிச்சயமாக அனைத்து வகைகளிலும் கண்டறியப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட நபராகக் கூட நீங்கள் இருக்ககூடும். இவை அனைத்தும் ஒர் தனிப்பட்ட கருத்து என்பதால் யாரினது மனதையும் புன் படுத்துவதற்காக அமையப்பெற்றது அல்ல.
ஓர் அழகான பிரகாசமான கோடை காலத்தில் உங்கள் துணைவருடன் பூங்காவில் நடந்து செல்லும் போது யாரோ ஓர் ஜோடி பேசி சிரித்தபடி தங்களது சிறிய உலகினை ஓர் நீலநிற துணியால் (ஆண் குழந்தை) சுற்றி அலங்கரித்து கொண்டு வருவதை காண்கிறீர்கள். அப்போது நீங்கள் உடனே அந்த குழந்தையின் அருகில் சென்று அது மீண்டும் உங்களைப் பார்த்து சிரிக்கும் என்ற நம்பிக்கையில் சிரிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நினைத்ததற்கு மாறாக அந்த குழந்தை உங்களை சில விநாடிகள் முறைத்துப் பார்த்து கோபப்படுவதை அவதானித்து ஆச்சரியப்பட்டதுண்டா? இந்த குழந்தைகளின் மனதில் அப்படி என்ன தான் ஓடிக்கொண்டிருக்கிறது? இவர்கள் வெறுமனவே சாப்பிட்டு, மலம் கழித்து, உறங்கி, அடிக்கடி சிணுங்குவதேன்? இவ்வாறாக குழப்பமடைந்ததுண்டா? இதோ குழந்தைகளின் சில முகப்பாவனைகளை கொண்டு அவர்கள் மனதில் அப்படி என்ன தான் ஓடிக் கொண்டிருக்கிறது என நாங்கள் கணித்தவை.
“சம்திங்-அப்-மை-ஸ்லீவ்” என்ற முகபாவனை.
இந்த முகபாவனை என்ன கூறுகிறது என்றால் “நான் எனது சிறிய விளையாட்டுப் பொருளை குளியல் தொட்டிக்குள் வைத்துவிட்டு வந்தது அம்மாக்கு தெரியாது. பரவாயில்லை அவர் எப்படியும் கண்டுபிடிப்பார்.”
“இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை நிறுத்துங்கள்” என்ற முகபாவனை.
இந்த முகபாவனையை உங்கள் குழந்தை உங்களைப் பார்த்து செய்யும் போது “தயவு செய்து இப்படி பேசுவதை இப்போதே நிறுத்துங்கள்! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் இப்படி பேசுவது எரிச்சலாக உள்ளது. என்னாலும் இப்படி பேச முடியும். இது ஒரு மோசமான செயல். உங்களது வேலைகளை பாருங்கள் அல்லது இப்படி பொது இடங்களில் என் மானத்தை வாங்குவதை நிறுத்துங்கள். என் நண்பர்கள் இதையெல்லாம் கேட்டால் என்னை என்னவென்று நினைப்பார்கள்?” என கூற முற்படுகிறார்கள் என்று அர்த்தம்.
“ஓ-ஆமாம்” என்ற முகம்.
நீங்கள் ஸ்பாக்களுக்கு சென்று மசாஜ் சேவையினை பெறும் போது “ஹா… ஆமாம்… அங்கு தான்” என நீங்கள் கூறும் போது உங்களுள் அப்போதிருக்கும் அந்த உணர்வு எவ்வாறானது என்பது நினைவிருக்கிறதா? அதே உணர்வினை நீங்கள் குழந்தைகளின் முதுகினை தடவிக் கொடுக்கும் போதும் அல்லது நல்ல உணவு, பாலினை அவர்கள் குடித்து முடிக்கும் போதும் உணர்கிறார்கள். அவ்வாறான தருணங்களில் இந்த முகபாவனையினை செய்கிறார்கள்.
“say-whaaaaaa/ என்ன…….?” என்ற முகபாவனை.
குழந்தைகள் “எனக்கு இந்த உலகத்துல டா-டா-டா மற்றும் பா-பாக் தவிர வேறேதும் தெரியாதுனு நினைச்சிங்களா?” என நினைக்கும் போதும் வீட்டில் துர்நாற்றம் வீச செய்வதற்காக அம்மாவிடம் திட்டு வாங்க முடியாத அப்பா குழந்தையை குற்றம் சாட்டும் போது கேள்வி கேட்பது போல் அவர்கள் “say-whaaaaaa” என்ற முகபாவனையினை செய்கின்றனர்.
“ஓ-மறுபடியுமா-வேண்டாம்” என்ற முகபாவனை.
உங்கள் குழந்தையை பார்ப்பதற்காக உறவினர்களில் யாராவது ஒருவராவது அடிக்கடி வருவார். அப்போது அவர்கள் குழந்தையின் மொழியினை அறிய முயற்சிப்பார்கள். அவ்வாறாக அவர்கள் அறிந்தவற்றை மீண்டும் மீண்டும் முயற்சிக்கும் போது குழந்தையானது எரிச்சலான ஓர் மனநிலைக்கு ஆளாகி “அன்றைக்கு நீங்கள் இப்படி பண்ணப்ப சிரிச்சதுக்காக அடிக்கடி இப்படி பண்ண வேண்டாம். என்னால முடியல. இதுக்கு மேல இந்த முகத்த பார்க்க முடியாது” என எண்ணி முகபாவனை பயனளிக்காத போது சத்தமிட்டு அழுது விடுகிறது.
புதிதாக பிறந்த வாத்து போன்ற முகபாவனை.
சில தாய்மார்கள் தொலைப்பேசியில் மூழ்கி கிடப்பவர்களாகவும் செல்பி எடுப்பதில் அதிகம் நாட்டம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவ்வாறாக தாய்மார் தொலைபேசிகளை பார்த்து செய்யும் பாவனையை குழந்தைகள் தாமும் முயற்சித்து “அம்மா எப்போதும் தொலைபேசியை பார்த்து இவ்வாறு செய்கிறார். நானும் இப்போது சரியாக செய்கிறேனா? இல்லை அது வேறேதும் முகபாவனையா?” என எண்ணிக் கொள்வார்கள்.
முற்றிலும் விரக்தியானது போன்ற முகபாவனை.
நீங்கள் யாராவது நண்பர் அல்லது உறவினர் வீட்டுக்கு சென்று அங்கு அதிகபடியான நேரத்தினை செலவிடும் போது உங்களது குழந்தை சலிப்படைந்து “அம்மா… போதும்! இப்போதாவது வீட்டுக்கு செல்லலாமா? எனக்கு வெறுப்பாக இருக்கிறது. சலித்து விட்டேன். அம்மா… கொஞ்சம் பால் கொடுங்கள்.” என எண்ணிய படி இந்த முகபாவனையினை செய்கிறார்கள்.
அழகாக கெஞ்சுவது போன்ற முகபாவனை.
நீங்கள் எப்போதாவது குழந்தைகளிடம் “உங்களுக்கு பிடித்தவர் யார்?” என கேட்கும் வீடீயோக்களை யூடியூபில் பார்த்ததுண்டா? அப்போது இது தான் உங்கள் குழந்தைகளின் முகபாவனையாக இருக்கும். இது “ஆனால் அப்பா குதிரை வண்டி வாங்கித் தாறேன் என சொன்னாரே!” என இருவரில் ஒருவரை தேர்வு செய்ய முடியாமல் எண்ணி தவிக்கும் போது அல்லது “அம்மா… நான் இப்ப தான் பால் குடிச்சேன் ஆனால் எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும்.” என கேட்க எண்ணும் போதும் இந்த முகபாவனையினை குழந்தைகள் செய்கிறார்கள்.
மானிடராய் பிறந்த யாவருமே அவருடைய வாழ்க்கை பயணங்களை முழுமையாக, சீராக, சுதந்திரமாக, வண்ணமயமாக வாழ பிறந்தவர்களே. இனம், மதம், மொழி, பால்நிலைகள், கலாசாரம் என அனைத்தையும் தாண்டி, மனிதமென்ற ஒன்று மட்டுமே மகத்துவமானது. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருடைய வாழ்க்கையிலும் தனித்துவமான விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், தீர்மானமெடுத்தல் தொடர்பான சிந்தனைகள் போன்றவை பெறுமதியானவை. ஆக மனிதராய் பிறந்த யாவருமே தத்தமது வாழ்வை கொண்டாட பிறந்தவர்களே. ஆனால் நாமோ மனிதருக்குள் பல்வேறு பிரிவினைகளை திணித்தபடி மனிதமதை மறந்தே போகின்றோம். ஆணென்றும், பெண்ணென்றும், அடையாளம் ஏதேன்றும் ஏராளம் விதிமுறைகளென இச் சமூக அரங்கில் வகுத்துள்ளமை வருத்தத்திற்குரியது.
தொடர்ந்து இத்தகைய பால் ரீதியான அடையாளங்கள் பலரது வாழ்வில் பாரியளவில் செல்வாக்கு செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. இதிலும் குறிப்பாக LGBTQIA+ (குயர்/திருநர்) தொடர்பான மாற்றுக் கருத்துகளும், வெறுப்புணர்வுகளும், புறக்கணிப்புக்களும் உலகளாவிய ரீதியில் இன்றளவிலும் போதிய விழிப்புணர்வு பெறாத விடயமாகவே காணப்படுகின்றமை கவலைக்குரியது. குறிப்பாக இலங்கையை எடுத்துக் கொண்டால், எமது தமிழ்ச் சமூகத்தில் குயர் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டிய தேவைகள் இருக்கும் அதேவேளை, அவர்களுக்கான அங்கீகாரங்களையும் சமூக அரங்கில் பெறவேண்டிய வழிவகைகளை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் தேவை என உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
இதற்காக முதலில் திருநர் பற்றிய பூரண தெளிவை நோக்க வேண்டியது நன்று. அதன்படி பரவலாக ஆண் மற்றும் பெண் பாலினங்களே பெருமளவு அறியப்பட்ட பாலினங்களாகவும், எதிர்பாலினர் மீதான பாலுணர்வுகளை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் காணப்படுகின்ற போதிலும், முற்காலம் தொட்டே குயர் எனப்படும் பாலினத்தவர்கள் சரிவர அறியப்படாதவர்களாகவே உள்ளனர். ஆனால் இன்று ஆண் மற்றும் பெண் எனப்படும் சிறிய வட்டத்தையும் தாண்டி LGBTQIA+ என பாலினங்கள் பலவகைப்பட்டதாக அடையாளப்படுத்தப்படுகிறது. அதில் ஒரு பெண் இன்னொரு பெண் மீது ஈர்ப்பு கொள்ளுதல் (Lesbian), ஒரு ஆண் இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு கொள்ளுதல் (Gay), இருபாலினத்தவர் மீதும் ஒருவர் நாட்டம் செலுத்துதல் (Bisexual), மூன்றாம் பாலினம் என குறிப்பிடப்படும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள், அதாவது பிறப்பின் போது அறியப்பட்ட பால்நிலையிலிருந்து வளரும் காலத்தில் இன்னொரு பாலினத்தவராக உணர்தலை குறிப்பிடுவர். அத்துடன் பிறப்பின் அடிப்படையில் பால்நிலை கூறப்பட இயலாதவிடத்து மருத்துவ கருத்தின்படி பால்நிலை தீர்மானிக்கப்படுதலும் குழந்தை தான் வளரும் காலத்தில் தன்னை வேறு ஒரு பாலினமாகவும் அடையாளம் காணலாமெனும் இடத்தில் இடையிலிங்கம் (inter sex) என்றும் குறிப்பிடுவர். இவை தவிர LGBTQI நிலைகளை சேர்ந்த அனைவரையும் குயர் என்பர். இவர்களது தேவைகள், பிரச்சினைகள், குறைகள் சார்ந்து செயற்படுகின்ற செயற்பாடுகளை குயர் கண்ணோட்டம் என குறிப்பிடுவர். எவ்வாறாயினும் பாலின அடையாளம் ஒவ்வொருவருடைய அக உணர்வுகளுடன் தொடர்புடையவை.
இவ்வாறான பாலின வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு இன்றளவிலும் உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் திட்டமிடப்பட்டோ அல்லது திட்டமிடப்படாமலோ, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரச்சினைகள் மற்றும் புறக்கணிப்புகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. உதாரணமாக ஏதேனும் ஒரு கொள்கை அனைவருக்கும் பொதுவானதாக தோன்றினாலும் அவை எல்லோரையும் உள்ளடக்க கூடியதாக இல்லாமல் பாலின அடையாளங்கள் கொண்டு உரிமைகளை மறுப்பதாகவும் இருக்கவே செய்கின்றன.
இதில் காணப்படும் முதலாவது சிக்கலாக குயர் சமூகத்தவர், தத்தமது சுயம் பற்றிய தெளிவையும் அடையாளங்களையும் குடும்ப அளவில் முன்வைப்பதே. இலங்கையை எடுத்து கொண்டால் குடும்ப சூழல் அவர்களுக்கு மிகவும் முரணான கொள்கைகளையும் சிக்கல் மிகுந்த எண்ணப்பாங்குகளையும் கொண்டதாகவே காணப்படுகிறது. ஒரு தனி நபர் தனது பாலின அடையாளம் இதுதானென்றும் இவ்வாறுதான் நான் என்னை உணர்கின்றேன் என்றும் முன்வைப்பதற்கான வெளியினை பெறுவதே சவாலாக உள்ளது.
குடும்பத்தவர்கள் மத்தியில் தன்னுடைய பாலின மாற்றங்கள் மற்றும் ஈடுபாடுகள் குறித்து தெரியப்படுத்தும் போது பெரும்பாலான குடும்பங்களில் இருந்து அவர்கள் தனித்து விடப்படுகின்றனர். இன்னும் சில குடும்பங்கள் பாலின அடையாளங்களை மறைத்து வற்புறுத்தி முடங்கிய நிலையில் வைத்திருக்க முயல்கின்றன. குடும்ப கௌரவம், அந்தஸ்து என்ற யதார்த்த நிலைகள் தாண்டிய நியாயமற்ற காரணங்கள் முன்னிலை படுத்தப்படுகின்றன. பாலின மாற்றங்களிற்குள் இத்தகைய புறக் காரணங்கள் எங்கிருந்து வந்தது என்பதே சமூக அரங்கில் கேட்க வேண்டிய முதல் கேள்வியாக உள்ளது.
இவ்வாறாக குடும்ப பிற்போக்கு சிந்தனைகளையும் தாண்டி அவைகளை உடைத்து வெளிவரும் குறித்த நபர்கள், தங்களின் அடையாளங்களை சமூக அரங்கில் முன்வைக்கும் போது அவர்களது உரிமைகள் மறுக்கப்படுவது மட்டுமல்லாமல் கல்வி, தொழில்வாய்ப்பு தளங்கள் என அனைத்து இடங்களிலும் மனிதத்துவம் என்பதை மறந்து பாலினப் பாகுபாடு மேலோங்கி நிற்கிறது. இவை தவிர குடும்பத்தையும் தாண்டி வெளியே வரும் போது, தனித்து விடப்படுகையில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. பாலியல் ரீதியான சுரண்டல்கள், பொருளாதார நெருக்கடிகள், கல்வி மறுப்பு, வேலை வாய்ப்புகள் தர மறுப்பு, உணர்வுரீதியான சுரண்டல்கள், கேலிகள், விலக்கி வைக்கப்படுதல் முதலிய பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை விரும்பியோ விரும்பாமலோ ஏற்படுத்தப்படுகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை, பாலின மாற்றங்கள் தொடர்பாக சேவையாற்றும் நிறுவனங்கள் அமைப்புகள் இருக்கின்ற போதிலும் குடும்பத்தை தாண்டி வெளிவருபவர்களுக்கு இவை தொடர்பான போதிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. அத்துடன் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூலமாக இலங்கையில் மேற்கொண்ட ஆய்வின்படி பெரும்பாலோனோர் பாலியல் ரீதியாகவும் உடலுள ரீதியாகவும் துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அரைவாசிக்கு மேற்பட்டோர் எந்தவொரு காரணங்கள் இன்றியும் பொலீஸ் விசாரணைக்கு உட்பட்டு இருக்கின்றனர் அதுமட்டுமல்லாது பொலிஸ் விசாரணைகளின் போது உடல் உள ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டும் இருக்கின்றனர்.
இவ்வாறான பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கம் தற்போது கவனம் செலுத்த தொடங்கி இருப்பினும், சமூக அளவில் பால்நிலை அடிப்படையிலான பாகுபாடு மற்றும் பாரபட்சம் காட்டும் பழக்கங்கள் இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்தல் அவசியம். இவை மட்டுமல்லாது மருத்துவ சிகிச்சைகளை நாடும்போதும், தேவையேற்படும் பட்சத்தில் பொலிஸ் முறைப்பாடுகளை மேற்கொள்ளும் போதும், தொழில் வாய்ப்புக்களிற்கான நேர்காணல்களை எதிர்கொள்ளும் போதும் கூட இவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. அதாவது அநாவசியமாக தனிப்பட்ட தேவையற்ற கேள்விகளை கேட்டல், மன நோயாளிகளாக சித்தரிக்கப்படுதல், சில மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முன்வராமலிருத்தல், அநாவசிய வினாக்களிற்கு பதிலளிக்க தவறும் பட்சத்தில் மேலும் உளரீதியாக துன்புறுத்தப்படல், தேவைகள் புறக்கணிக்கப்படுதல், காத்திருக்க வைத்தல் போன்ற பல துன்பங்களை எதிர்கொள்கின்றனர். தற்கால காவற்துறை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டால் மனிதராக பிறந்த அனைவருக்கும் சம உரிமைகளென்றே கூறப்படுகிறது. அதன்படி இலங்கையில் குற்றங்கள் நிரூபிக்கப்படும் வரை ஒருவரை குற்றவாளியாக பாவிக்க இயலாதென்றும், நியாயமான பொது விசாரணைக்கு மட்டுமே உட்படுத்தப்பட வேண்டுமென்றும் மனித உரிமைகள் சாசனம் குறிப்பிடுகையில், விசாரணைகளின் போது பால்நிலை அடையாள பாகுபாடுகள் நன்றல்ல.
ஒரு நாட்டில் சுதந்திரமாக நடமாடும் உரிமை, உயிர் உரிமை, சுதந்திரம், தனிநபர் பாதுகாப்பு, அடிமைத்தன விடுதலை, சொத்துக்களை சொந்தமாக்கிக்கொள்ளும் உரிமை, சுயதீர்மானம், சமூக பாதுகாப்பு உரிமை, கல்வி கற்கும் உரிமை, தொழிலுரிமை முதலிய பல அடிப்படை உரிமைகள் அனைவருக்கும் பொதுவானவை எனும் போது, அவற்றை பால்நிலை வேறுபாடுகளை முன்னிறுத்தி புறக்கணிக்கணித்தல் ஆரோக்கியமன்று.
மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு, 2016 ஆம் ஆண்டளவில் ஒருவரின் சட்டபூர்வமாக பால்நிலையை மாற்றிக் கொள்வதற்கான ஒரு தெளிவான வழி இலங்கையில் கடினம் என்றும், விரும்பும் பெயர் மற்றும் பால்நிலை என்பவற்றை பிரதிபலிக்கக்கூடிய உத்தியோகபூர்வ அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பெறுவதற்கு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிடுகிறது. ஆயினும் பிற்பாடு தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சின் கருத்துப்படி குயர் அமைப்பினர் தொடர்பான மருத்துவரின் பரிசோதனை பிற்பாடு பால்நிலை மாற்றங்களை ஆவணங்களில் கொண்டுவரும் நடைமுறைகள் கைகொள்ளப்படும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆயினும் கல்வி பெறுதல், தொழில் வாய்ப்புக்களில் இணைதல், திறமைகளிற்கான அங்கீகாரத்தை பெறுதல் போன்ற நன்மைகளை மிகவும் சொற்பமானோரே பெறுகின்றனர்.
திருநங்கைகள், திருநம்பிகள் என்று சமூகத்திலிருந்து பிரித்து நோக்குவதிலும் பார்க்க சமூக அளவிலும் தனிநபர் கருத்துக்களவிலும் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி செய்யவேண்டும். பால் நிலை மாற்றங்கள், அடையாளங்கள் என்பதையும் தாண்டி மனிதர்களை மனிதர்களாக பாவிக்க வேண்டும். அனைவரும் உயிர் வாழ்கிறோம். அனைவரும் சுவாசிக்கின்றோம். அனைவருக்கும் கனவுகள் கற்பனைகள் உண்டு. அனைவரும் நம் திறமைகளை வெளிக்காட்டும் அங்கீகாரமே விரும்புகின்றோம். அனைவருக்கும் பொதுவாகவே இந்த இயற்கையும் இந்த பிரபஞ்சமும் தரப்பட்டிருக்கிறது. இதில் ஆயிரமாயிரம் வேற்றுமைகள் ஏனோ? நம் நட்பு வட்டங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருத்தல் நன்று. எந்தெந்த சந்தர்ப்பங்களில் அடையாளங்களை காரணங்களாக சித்தரித்து மனிதர்களை புறக்கணிக்கின்றோமோ, அந்தந்த இடங்களில் மனிதத்தன்மையிலிருந்து நம்மை நாமே தாழ்த்திக் கொள்கின்றோம். குயர்/திருநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கான தீர்வுகள் என்று நோக்கின், சமூகத்தவரளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள், குறித்த குயர்/திருநர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் என்று அணுக இயலும்.
முதலாவதாக குடும்ப அளவில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும். பெற்றோர் சகோதரர்கள் என குடும்பம், குறிப்பிட்ட குழந்தையின் உடலுள மாற்றங்களை ஏற்றுக் கொள்வதோடு அதற்கான ஆதரவு, பாதுகாப்பு, அரவணைப்பு, தன்னம்பிக்கை முதலியவற்றை தரவேண்டும். சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பமே குழந்தைகளிற்கு பாதுகாப்பான அரணாகும். இவ்வகையில் குறிப்பிட்ட குழந்தைகளை தனிமையில் விடாது, புறக்கணிக்காது ஒரு தனிமனிதனுக்கு அவசியமான கல்வி மற்றும் அனைத்து உரிமைகளையும் கிடைக்கச்செய்யுமிடத்து புறத்தாக்கம் நிச்சயமாக குறிப்பிட்டளவில் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு.
அத்தோடு நாம் ஒரு தொழில் வழங்குனராக இருப்பின், பால் அடையாளங்களை கருத்திற்கொண்டு புறக்கணிக்காமல் திறமைகளிற்கு வாய்ப்பளிக்க முயற்சிகள் செய்ய வேண்டும். அத்தோடு நாம் பாரபட்சங்களின்றி தொழில் மற்றும் கல்வி வழிகாட்டல்களை வழங்குதல் நன்று. ஒரு ஆரோக்கியமான சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டுமெனில் இத்தகைய பால்நிலை ரீதியான மாற்றங்களையும் பிற்போக்கான மன ஓட்டங்களையும் மாற்றமடையச் செய்வதோடு, ஏனைய குயர்/திருநர்களது எதிர்கால பயணத்திற்கு நட்புமிக்க உந்துதல்களை அளிக்கவும் முன்வருதல் நன்று.
குறிப்பாக இலங்கையில் குயர்/திருநர்கள் கல்வியை பெறுவதில் பின்னிப்பதற்கும் தயக்கம் காட்டுவதற்கும் இச்சமூகத்தின் விமர்சனங்களும் கல்வி நிறுவனங்களிற்குள்ளே முகங்கொடுக்க வேண்டி இருக்கின்ற கேலி கிண்டல்கள், புறக்கணிப்புகள், பாரபட்சம் முதலியவை முக்கிய காரணங்களாக அமைகின்றன. ஆக, கல்வி கற்றலிற்கான தளங்களினை வழங்குவதோடு மட்டும் இத்தகைய பிரச்சனைகள் முற்றுப்பெறுவதென்பது கடினம். மாறாக ஒவ்வொரு தனிநபரும் அவரவர் எண்ணங்களிலும் செயல்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
ஒரு குழந்தையின் உடலுள மாற்றங்களை சமூகம் ஏற்றுக்கொள்ள எத்தனிக்கும் போது, அது நிச்சயமாக குறிப்பிட்ட குழந்தையின் வளர்ச்சிக்கு உரமாக அமையும். குடும்ப அளவிலும் குறிப்பிட்ட குழந்தை தொடர்பான புரிதல் என்பது மிக மிக அவசியமானதொன்று. அத்துடன் குடும்பமும் இணைந்து சமூக அரங்கில் மாற்றங்களை உருவாக்க முயல்தல் வேண்டும். இலங்கையை பொறுத்தவரையிலும் யாவருக்கும் சம உரிமை என்பது பேச்சளவிலும், சார்பு எழுத்தளவிலும் மட்டும் நின்றுவிடாது நடைமுறையில் கொண்டுவர, பாலின வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்தல் வேண்டும். சிறிய அளவில் மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயமாக பெரிய அளவிலான மாற்றங்களிற்கு வித்திடும்.
இவ்வாறான சமூகத்தில் திண்ணையில் பல்லாண்டுகளாக பரவச் செய்து கிடக்கும் இவ்வாறான உணர்வுகளையும் புறக்கணிப்புகளையும் இல்லாதொழிப்பதில் குயர்/திருநர்களிற்கு முக்கிய பங்குண்டு. தம்மை பற்றிய புரிதல்கள் மற்றும் தெளிவினை பெற்றுக் கொள்வதோடு, தம்மைச் சுற்றி இருப்பவர்களிற்கு அவை தொடர்பான புரிதலை புகட்ட முயற்சி செய்தல் நன்று. வாய்வழி கருத்துப் பரிமாற்றங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறத்தவறும் பட்சத்தில் ஆரோக்கியமானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் பல ஊடகங்களை பயன்படுத்திக்கொள்ள இயலும். அவை கட்டுரைகளாகவோ கவிதைகளாகவோ பாடல்களாகவோ புகைப்படங்களாகவோ சமூக வலைதளங்களாகவோ அமையலாம். இதன் மூலம் தமக்கான சுயமரியாதை தளத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
அடையாளங்களை மறைத்துக் கொள்ள முயல்வது அவர்களது சுயங்களை அவர்களே திருடுவதற்கு சமமாகும். அது இயல்பான நடத்தைகளையும் திறமைகளையும் கூட இல்லாமல் செய்யும். ஆக தனிநபர் உடல் அடையாளங்களை மறைத்து கொள்வதை விடுத்து, அங்கீகாரம் முன்வருதல் வேண்டும். இதன் மூலம் “நாம் வித்தியாசமானவர்கள்” என்ற எண்ணக்கருவில் இருந்து விடுபட இயலும். சமூகப் புறக்கணிப்புகளை எதிர்கொள்வதற்கு கல்வியும் ஆளுமைகளும் சிறந்த ஆயுதங்கள். சமூகத்தினை மாற்ற முயற்சி செய்யும்போது விமர்சனங்களை கருத்திற் கொண்டு பின்னிற்றல் நன்றல்ல. சமூக விமர்சனங்களையும் புறக்கணிப்புகளையும் பெரும் சவாலாக ஏற்றுக்கொண்டு, கல்வி மற்றும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ளுதலோடு, மற்றங்களிற்காக முயல்தல் நன்று. இதன்மூலம் சமூகத்தின் கருத்துகளிலும் நம்பிக்கைகளிலும் அணுகுமுறைகளிலும் நிச்சயமாக மாற்றங்களை கொண்டு வர இயலும்.
ஒரு தனிமனிதன் தன்பாலின மாற்றங்களை உணரும் தருணத்தில் சமூக வலைதளங்கள் மூலமாகவும் ஏனைய அமைப்புக்களின் மூலமாகவும் விரிவான புரிதல்களை பெற்றுக்கொள்ள இயலும். அமைப்புகள் என்று நோக்கினால் இலங்கையில் EQUAL ground (மனித உரிமைகள் மற்றும் LGBTQ சமூகம் சார்ந்த அமைப்பு), Gay rights (NGO), Jaffna transgender Network முதலிய பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சுகாதாரத் திணைக்களம், மனித உரிமைகள் ஆணையகம் முதலிய அரச நிறுவனங்களையும் நாட இயலும்.
ஆக ஆரோக்கியமான இலங்கையின் எதிர்கால தலைமுறையை கட்டியெழுப்புதல் என்பது இன்றைய மாற்றங்களிலேயே தங்கி இருக்கின்றது. பால்நிலை அடையாளங்களை முன்னிலைப்படுத்துவதை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்து மாற்றங்களிற்கான பாதையை நோக்கி நகர்தல் தனிநபர் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், மொத்த சமுதாய வளர்ச்சிக்கும் பெரும் பங்களிக்குமென்பதில் ஐயமில்லை.
எழுத்து – டினோஜா நவரட்ணராஜா (காரைநகர்)
இக்கட்டுரை ‘ஒன்றிணைந்த சுயமரியாதை வானவில் பெருமிதம் 2021’ -ஐ முன்னிட்டு, யாழ் திருநர் வலையமைப்பினால் (Jaffna Transgender Network) நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் முதலிடம் பெற்றதாகும்.
நாம் அனைவரும் விரும்பியோ! விரும்பாமலோ! இலவச கல்வி முறைமை மூலம் பல பலன்களை பெற்றுள்ளோம் என்பதில் பெருமிதம் கொள்ளுதல் வேண்டும். இலங்கையை பொருத்தளவில் ‘வாசிப்பு’ என்ற பதத்தினூடாகத்தான் கல்வி மக்களிடையே கூர்ப்படைந்தது. ஆதி கால மக்கள் பகுத்தறிவற்ற மக்களாகவே விளங்கினர். நகரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தொடர்ந்து, மக்கள் அதிகமாக நகரம் சார் நாட்டம் கொண்டனர். எனினும் நகரங்கள்; பதாகைகள், குறியீடுகள், இலக்கங்களைக் கொண்ட பொறிமுறையை அடிப்படையாகக் கொண்டு விளங்கியதால், மக்கள் அதனை வாசித்து, கிரகித்து செயல்படும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை. கற்றால் மாத்திரமே நகரங்களில் தமது அன்றாட வாழ்க்கையை நிறைவேற்ற முடியும் என்ற சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதனடிப்படையில் மக்கள் கல்வியின் பால் ஈர்க்கப்பட்டு பல கல்விமான்கள் உருவாகத்தொடங்கினர்.
மக்களின் கல்வி அறிவை மேம்படுத்தும் செயற்திட்டங்கள் இன்று நேற்று நெறிமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள் அல்ல. இது போர்த்துக்கேயர் – ஒல்லாந்தர் காலம் முதல் ஆரம்பிக்கப்பட்ட முயற்சிகளாகும். இதில் பிரித்தானியர்களின் மிஷனரிப் பாடசாலை முறைமை இலங்கையின் கல்வி விருத்திக்கு பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளது. எமது முப்பாட்டர்கள் காலத்தில் பாடசாலைக்கு மாணவர்கள் சமூகமளிக்காதவிடத்து, அவர்களை தேடிப்பிடித்து பாடசாலைக்கு அழைத்து வரும் சம்பிரதாயம் இலங்கையில் இருந்தது என்பது எம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? மேலும் C. W. W. கன்னங்கர அவர்களினால் 1945ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இலவசக் கல்வி முறைமை, இலங்கை கல்வி வரலாற்றின் திருப்புமுனை எனலாம்.
இது போன்ற முயற்சிகளினால் 40 ஆண்டுகளில் இலங்கையின் பாடசாலைகளின் எண்ணிக்கை 50% அதிகரித்ததோடு, மாணவர்களின் எண்ணிக்கை 300% உயர்வடைந்தது. தற்போது கூட தெற்காசியவில் கல்வி அறிவு அதிகம் மிகுந்த நாடுகளில் இலங்கை 92% பெற்று முதலிடம் வகிக்கின்றது. மேலும் 1968 ஆம் ஆண்டு, 1000 சிறுவர்களில் 74 பேர் இறந்ததுடன், 2017ஆம் ஆண்டு அதே சிறுவர் இறப்பு எண்ணிக்கை 8 ஆக குறைவடைந்துள்ளது. இப்புள்ளி விபரம் இலங்கையின் கல்வி மட்டத்தின் வெளிப்பாடு என்றே தோன்றுகிறது.
பெண் சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ள இவ் உலகில், இலங்கையில் மேற்படிப்பு அதிகம் கற்பது தற்காலத்தில் பெண்களே ஆகும். மேலும் சாதாரண தர பரீட்சையில் 90%க்கு அதிகமானோர் சித்தியடைவதோடு, நேரடியாக உயர் தரத்திற்கு உயர்வும் பெறுகின்றனர். மேலும் இவர்கள் தேசிய பல்கலைக்கழகம் நுழையும் பட்சத்தில், இவர்களின் அன்றாட செலவிற்கு ‘மஹா பொல’ என்ற புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது. இதைத் தவிர முதலாம் தரம் முதல் பட்டப்படிப்பு முடியும் வரை அனைத்தும் இலவசமாக கிடைக்கும் நாட்டில், அதனை பயனுள்ள வகையில் மாற்றிகொள்வது எமது கட்டாய கடமையாகும். இலங்கையின் கல்வி முறைமை பரீட்சையை மையமாக கொண்டு விளங்குவதனால், மாணவரிடையே போட்டி மிகுந்த மனப்பாங்கை இது உருவாக்குகின்றது. மேலும் பரீட்சை மோகம் கொண்ட கல்வி முறைமை, சிறார்கள் பலரை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது பெட்டிக் கடைகளுக்கு அடுத்த படியாக பட்டப்படிப்பு வழங்கும் தனியார் நிறுவனங்களே அதிகமாக காணப்படுகின்றது. பத்திரிகை முதல் முகப்புத்தகம் வரை எதை திறந்தாலும் பட்டப்படிப்பு தொடர்பான மண்டைசலவையே நடைபெறுகின்றது. இது போன்ற தனியார் கல்வி நிறுவனங்களின் வருகையை இரு திசைகளிலும் விவாதிக்கலாம். எனினும் கல்வியின் தரம் பாதிப்புக்குள்ளாகும் வகையில் தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுமாயின், அதற்கு எவரும் கண்டிப்பாக உடன்படப் போவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடொன்றின் பொருளாதாரத்தை விட, கல்வியையே இக் கொரோனா பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்பதே நிகழ்காலத்தில் பலரின் கருத்தாக திகழ்கிறது. 20 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சுமார் ஒன்றரை வருடத்துக்கும் மேலாக, Online மெய்நிகர் கற்பித்தலையே கற்று வருகின்றனர். ஆசிரியர்கள் காய்கறி வெட்டிக் கொண்டே கற்பிப்பதும், மாணவர்கள் Mute செய்துவிட்டு Game விளையாடுவதையும், ஒரு New Normal ஆக எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் Google Form இல் பரீட்சை நடத்துவதை நகைச்சுவையாகவே நாம் பார்க்கின்றோம். இவை எல்லாவற்றிற்கும் அப்பால் அனைத்து மாணவர்களுக்கும் இணைய வசதி இருக்குமா? ஒரு மொபைல் அல்லது கணனி இருக்கும் வீட்டில் இரண்டுக்கு மேற்பட்ட சிறார்கள் இருக்கும் பட்சத்தில், இருவரும் எவ்வாறு கல்வி கற்க முடியும்? போன்ற கேள்விகள், இன்னும் விடையில்லாக் கேள்விகளாகவே விளங்குகின்றன. பல இடங்களில் பல குறைபாடுகள் இருப்பினும், இலங்கையின் கல்வி முறைமை தனித்துவமானது, பல கல்விமான்களை உருவாக்கியது என்பதை நாம் அனைவரும் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இக் கல்வி முறைமையில் நாமும் ஒரு பங்காய் விளங்கி, பொறுப்பு வாய்ந்த ஓர் குடிமகனாக மாற முயற்சிப்போம் ! ! !
நீங்கள் கொழும்பில் வசிக்கும் நபரெனின் கண்டிப்பாக உங்கள் வாழ்நாளில் அதிக தடவைகள் முச்சக்கர வண்டியில் (Tuk Tuk) பயணித்திருப்பீர்கள். இது வரை நீங்கள் பயணித்த ஒவ்வொரு முச்சக்கர வண்டி ஓட்டுநரும் ஒவ்வொரு மாதிரியானவர்களாக இருந்திருப்பார்கள். இவ்வாறாக கவனமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு முச்சக்கர வண்டி ஓட்டுநர்களின் வகைகளை ஐந்தாக பிரித்து பட்டியலிட்டுள்ளோம். நீங்கள் கொழும்பில் வசிப்பவர்களாக இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் நீங்கள் கொழும்பிற்கு வருகை தரும் போது கீழுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஓட்டுநர்களில் எவரேனும் ஒருவரையாவது கண்டிப்பாக சந்திப்பீர்கள்.
குழப்பத்தில் இருப்பவர்
குறிப்பிட்டுள்ள வசனத்திற்கு ஏற்றது போலவே இந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் குழப்பத்துடனேயே இருப்பார். இன்னும் சொல்லப் போனால் அவர் எங்கு உள்ளார் என்பது பற்றிய தெளிவு கூட அவருக்கு சிலவேளைகளில் இருக்காது. இந்த வகையினை சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுநரை Pick Me அல்லது Uber போன்ற செயலிகளின் மூலம் நீங்கள் அழைக்க நேரிடும் போது, அவர் அளவுக்கதிகமான தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி, “நீங்கள் எங்கு உள்ளீரகள்?” என விசாரிப்பார். இன்னும் மோசமான நிலை என்னவெனில் நீங்கள் ஆப் இல் குறிப்பிட்டுள்ள லொகேஷன் சரியாக இருந்த போதும் கூட அவர் உங்கள் இடத்தினை கண்டறிய சிரமப்படுவார். நீங்களும் அவர் வருவார் வருவார் என தொலைபேசியில் உங்கள் லொகேஷனை தவிர மற்றைய இடமெல்லாம் சுற்றி வரும் அனிமேட் செய்யப்பட்ட அவரது நகர்வுகளை பார்த்த படி காத்திருப்பீர்கள். அப்படியே பல மணி நேரம் சென்ற பிறகு ஒரு வழியாக அவர் உங்கள் இடத்தினை வந்தடைவார். இப்போது எல்லாம் சரியாகி விட்டது என நினைக்கும் உங்களுக்காகவே அவர் இன்னொரு ஆச்சரியத்தை வைத்திருப்பார். அந்த ஆச்சரியம், செல்லும் பாதையின் ஒவ்வொரு திருப்பு முனையிலும் வெளிவரும் அந்த ஆச்சரியம் வேறொன்றுமில்லை! “வலது பக்கமா?” “இடது பக்கமா?” என்ற கேள்விகள் தான். அந்த மாதிரியான முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுடன் பயணிக்கும் அனுபவம் உங்களை சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்காவிடினும், பின்பு நினைத்து சிரிக்கும் அளவிலான ஓர் அனுபவத்தை கண்டிப்பாக பெற்று தரும்.
2. குறுக்கு வழிகள் தெரிந்தவர்
இந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தங்களது ஆழ்மனதிலிருந்து டிராபிக்கினை வெறுப்பவர்கள். உங்களுக்கு புரியும் படி தெளிவாக விளக்குகிறேன். இந்த வகையை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதிகளுடனான பயணம் எவ்வாறு ஆரம்பமாகுமெனில் முதலில் நீங்கள் கூறும் வழிகளினை நன்கு கேட்டு அவ்வழியிலேயே வண்டியினை செலுத்துவார். ஆனால் இடையில் டிராபிக்கில் மாட்டிக் கொள்ள நேர்ந்தவுடன் பொறுமை இழந்தவராக, தனக்கு தெரிந்த ஓர் குறுக்கு வழியினை கூறி அதன் வழி செல்ல உங்களை சம்மதிக்க வைக்க முயற்சிப்பார். நீங்கள் உங்கள் வழமையான சாலையில் செல்ல வேண்டும் என்ற உறுதி உள்ளவராக இருந்தால் வேண்டாம் என மறுப்பீர்கள். ஒரு வேளை உங்களுக்கு அந்தப் பாதை புதியது அல்லது உங்களுக்கு சாலை பற்றிய சரியான விளக்கமில்லையெனில் ‘சரி’ என ஒப்புக் கொள்வீர்கள். இதில் ஓர் சிக்கலும் உண்டு. சிலவேளைகளில் துரதிஷ்டவசமாக அந்த குறுக்குப் பாதை வழி பாதியில் முடிவடைந்து, நீங்கள் மாட்டிக் கொள்ளக் கூடும். அதனால் உங்கள் பயணக் கட்டணம் இரட்டிப்பாக நேரிடும். அதிர்ஷ்டவசமாக நீங்கள் குறுக்கு வழியில் நன்கு தேர்ச்சி பெற்ற ஓர் முச்சக்கர வண்டி ஓட்டுநருடன் பயணிக்க நேர்ந்தால் உங்கள் பயணம் சிறப்பானதாகவும் அமைய வாய்ப்புகளுண்டு!
3. அதிவேகமாக செல்பவர்
இந்த வகையை சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு அவர் கொழும்பு சாலைகளில் இருக்கிறார், மில்லியன் கணக்கான மக்கள் உற்சாகப்படுத்தும், ஆரவாரப்படுத்தும் ஒரு பந்தயத்தில் அல்ல என்பது தெரியாது! இவர்களது முச்சக்கர வண்டிக்குள் ஏறிய நேரம் தொட்டு நீங்கள் உங்கள் இறுதிச் சடங்கு பற்றிய கற்பனைக்குள் ஆழந்து விடுவீர்கள். ஏனெனில் உங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு உலகிலுள்ள கடவுளை எல்லாம் பிரார்த்திக்கும் அளவிலான உயிர் பயத்தின் உச்சத்தில் இருப்பீர்கள். உங்களது வாழ்வில் மரண பயம் என்றால் என்ன என்பதை இந்த வகையை சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் ரொம்பவும் சிம்பிளாகவே காட்டிவிடுவார்கள். சாலையில் வாகனங்கள் ஒன்றையொன்று ஒட்டி நெரிசலாக காணப்படினும், இவர்கள் வளைத்து வளைத்து வண்டியை ஓட்டுவார்கள். இந்த பயணத்தில் உச்சக்கட்ட பயத்தினை தருவது அவர்களது சட்டென்ற திருப்புதல்களும், வண்டியை சரித்து வேகமாக ஓட்டுவதும் தான். இன்னும் சொல்லப் போனால் உங்களுக்கு நெருக்கமானவர்களிடம், குறிப்பாக குடும்பத்தினரிடம் அவர்களை நீங்கள் எந்தளவு நேசிக்கிறீர்கள் என்பதனை கூறியுள்ளீர்களா? என கூட சிந்தித்து பார்ப்பீர்கள்.. ஏனென்றால் இனி அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்ற முடிவிற்கு வருமளவிற்கு அவர் உங்களை தள்ளி விடுவார். இந்த பயணத்தில் நீங்கள் உயிர் தப்பி கடந்து விட்டீர்களாயின் நீங்கள் எதிர்ப்பார்த்ததை விட முன்னரே நீங்கள் சேர வேண்டிய இடத்தினை சேர்வீர்கள். எங்கேயாவது அவசரமாக பயணிக்க வேண்டுமெனில் இந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் கண்டிப்பாக பக்கபலமாக இருப்பார்.
4. மீட்டரின்றி ஓட்டுபவர்
தூரத்திலிருந்து பார்க்கும் போது மற்றைய மீட்டர் டெக்ஸிகள் போலவே இதில் மீட்டர் டெக்ஸி என்ற எழுத்து அல்லது போர்ட் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் வண்டிக்குள் நுழையும் போது பழுதான மீட்டர் அல்லது பயணத்தின் பாதி வழியில் தானாக மீட்டர் செயலிழந்திருக்கும். நீங்கள் வண்டியை விட்டு இறங்கும் போது அவரிடம் மீட்டரின் நிலை பற்றி வினவும் போது அவர் அதற்கு பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போவார். அதன் பின் அதிகமான பணத்தினை வாடகையாக கேட்பார். நீங்கள் அவசரமாக செல்ல வேண்டியிருக்கும் போது அவர் கேட்கும் பணத்தை வாதிடாமல் கொடுத்து விடுவீர்கள். அவ்வாறு இல்லையெனில் வாதிட்டு கட்டணத்தை மாற்ற வாய்ப்புண்டு. எது எவ்வாறாக இருப்பினும் நீங்கள் பயணிக்கும் முன்னும் பயணித்தின் போதும் மீட்டர் மீது ஓர் கண்ணை வைத்துக் கொள்வது நல்லது.
5. கண்ணியமான ஓட்டுநர் மற்றும் சரியான நேரத்திற்கு வருபவர்
நாம் எப்போதாவது ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநரை புகழ்ந்து பேசியிருப்போம். எப்போதும் மறக்க முடியாத படியான கண்ணியத்துடனும் நேரத்தியிடனும் செயற்பட்டு அவர் எம் மனதில் இடம் பிடித்திருப்பார். இந்த வகையை சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், பணிவுடன் உரையாடல்களை மேற்கொள்வார்கள். சரியான வேகத்தில் மென்மையாக வண்டியை செலுத்துவார்கள். வழியை மாற்றி செல்லும் முன் எம்மிடம் அனுமதி கேட்பார்கள். செயலி மூலமாகவோ அல்லது அவர்களை வேறுவகையில் தொடர்பு கொண்டோ நாம் பயணத்திற்கு அழைத்திருந்தால் சரியான நேரத்திற்கு வருவார்கள். நேர தாமதமானாலும் சண்டை பிடிக்காது எமக்காக காத்திருப்பார்கள். இவர்களுடன் நாமும், கண்ணியமாகவும் பணிவாகவும் செயற்படுவதை அடிக்கடி உறுதி செய்யும் அளவிற்கு நல்ல மற்றும் நம்பிக்கையான ஓர் பயணமாக அமைத்து தருகிறார்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலிகளெனின் உங்கள் வீட்டிற்கு அருகிலேயே இவ்வாறான முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் இருக்கக்கூடும்.
இந்த வகைகளில் குறைந்தது மூன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை நீங்கள் சந்தித்திருந்தால், வாழ்த்துக்கள்! நீங்கள் இப்போது ஒரு அனுபவமிக்க Tuk Tuk பயணிகள். இப்போது குறுக்கு வழி பாதை மற்றும் மீட்டர் அற்ற வாகனங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது பற்றி அறிந்திருப்பீர்கள். உங்களுக்கு எங்காவது அவசரமாக செல்ல வேண்டுமெனின் வேகமான ஓட்டுநரை நாடுங்கள். ஆனால் வண்டிக்குள் ஏறும் முன் திகிலூட்டும் பயணமொன்றிற்காக உங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டே நுழையுங்கள்.