Blog Page 34

உங்கள் மாதாந்த மளிகை செலவுகளை கட்டுப்படுத்த 10 டிப்ஸ்

நாம் அனைவருமே நமக்கு பிடித்த பல விடயங்களை செய்வதற்கு தேவையான அதிகமான பணம் நம்மிடம் இருக்க வேண்டும் என ஆசைப் படுகிறோம் ஆனால் நம்மில் நிலையான மாத வருமானமாக பெறும் பலருக்கு ‘அதிக பணம்’ என்ற வார்த்தை வெறும் கனவாகவே இருந்து வருகிறது. உண்மையில் தோழர்களே அதிகமான பணத்தினை சேமிப்பது என்பது அவ்வளவு கடினமான காரியமல்ல. நாம் மனம் வைத்து செயற்பட்டால் நம்மால் அதிகளவான பணத்தினை சேமிக்க முடியும். அதற்கான ஒரு எளிய வழி ஒன்று உள்ளது. அதாவது, நாம் மாதாந்தம் எமது தேவைகளுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக செலவிடும் பணத்தை குறைப்பது தான்.

பொதுவாக நாம் சம்பாதிக்கும் பணத்தில் 30% இற்கும் அதிகமான பங்கு பணம், வீட்டிற்கு தேவையான சில்லறை பொருட்கள் அதாவது உணவினை தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக செலவிடப்படுகிறது. நாம் எமது வீட்டுக்கு தேவையான சில்லறை பொருட்களை கொள்வனவு செய்யும் போது நமக்கு தெரிந்தோ தெரியாமலோ, சிலவேளைகளில் நம்மையும் அறியாமலேயே அதிகளவான பணத்தினை வீணே செலவிடுகிறோம். அதனால் நாம் இனி கொள்வனவு செய்யும் போது சில எளிய மற்றும் கண்டிப்பான வழிகளை கையாண்டு கொள்வனவு செய்வோமேயானால் அதிகளவான பணத்தினை சேகரிக்க முயற்சி செய்ய முடியும்.

1. சில்லறை பொருட்களுக்கென பட்ஜெட் ஒன்றினை தி்ட்டமிடல்.

மாதாந்தம் வீட்டிற்கு தேவையான பொருட்களுக்கான பட்ஜெட் ஒன்றினை தயாரித்து சிறப்பாக பேணுவதன் மூலம் எவ்வாறு வாழ்க்கையை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வது என நமக்கு நன்றாக தெரியும். அதேப் போல் மாதாந்தம் வீட்டிற்கு தேவையான சில்லறை பொருட்களையும் பட்ஜெட் ஒன்றின் அடிப்படையில் கொள்வனவு செய்வதன் மூலம் மேலதிகமாக செலவிடப்படும் பணத்தினை சேமித்துக் கொள்ள முடியும். அவ்வாறு சேமிக்கப்படும் பணத்தினை ஷாப்பிங், ட்ராவலிங் மற்றும் ஏனைய பொழுதுபோக்கு விடயங்களுக்கென உபயோகிக்க முடியும்.

2. சில்லறை பொருட்களை வாங்குவதற்கு முன்பு தேவையான பொருட்களை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.

ஷாப்பிங் செல்வதற்கு முன்பு தேவையான பொருட்களை பட்டியலிடும் போது நமக்கு குறிப்பிட்ட காலத்திற்கு தேவையான பொருட்களின் அளவு மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் ஒவ்வொருவரது விருப்பு வெறுப்பு ஆகியவற்றையும் கணித்துக் கொள்ளவைத்து அவசியமாகிறது. பட்டியலிட்ட பின் கண்களில் படும் தேவையற்ற எதையும் கொள்வனவு செய்யாதிருப்பதில் கவனமாக இருங்கள்.

3. அடிக்கடி ஷாப்பிங் செய்வதை தவிர்த்தல்.

வீட்டிற்கு தேவையான சில்லறை பொருட்களை வாங்குவதற்கு மாதத்திற்கு நான்கு தடவைகள் ஷாப்பிங் சென்றால் போதுமானது. அதனால் ஒவ்வொரு வார இறுதியிலும் ஷாப்பிங் செய்வதை உறுதியான பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

4. சில்லறை கடைகளிலிருந்து சில்லறை பொருட்களை கொள்வனவு செய்வதை தவிர்த்தல்.

இது நம்மில் பலர் ‘கோட்டை விடும்’ சந்தர்ப்பம் தான். வீட்டுக்கு மிக அருகிலிருக்கும் சில்லறைக் கடைகளில் மாதாந்த அல்லது வாராந்த பொருட்களை வாங்குவது. சாதாரணமாக நமது வீடுகளுக்கு அருகாமையிலிருக்கும் சில்லறை கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை அதிகமானதாக இருக்கும். இதனால் எமது பட்ஜெட்டில் சிக்கல்கள் ஏற்படக் கூடும். சில்லறை பொருட்களை சந்தை, wholesale shopகள் அல்லது சூப்பர் மார்க்கெட்களில் கொள்வனவு செய்வதன் மூலம் குறைவான பணத்தில் அதிகமான பொருட்களை வாங்க முடிகிறது.

5. ஓர் குறிப்பிட்ட அலகின் விலையை கருத்திற் கொள்ளல். (Unit Price)

நம் அனைவர் மனதிலும் “பெரியவை எப்போதும் சிறப்பானவை” என்ற கூற்று ஆழ விதைக்கப்பட்டுள்ளது. அக் கூற்று எல்லா காலம் மற்றும் சூழ்நிலைக்கு பொருந்துவதில்லை. நாம் எப்போதும் எமக்கு குறிப்பிட்ட காலத்திற்கு தேவையான பொருட்களை மட்டுமே வாங்கினால் போதுமானது. உதாரணமாக ஒரு வாரத்திற்கான சில்லறை பொருட்களை கொள்வனவு செய்யும் பட்டியலில் கரட் இருக்குமேயானால் நாம் வாரத்தில் எத்தனை தடவைகள் கரட் சமைக்கப் போகிறோமோ அதற்கு ஏற்றவாறு கொள்வனவு செய்தல் சிறப்பானது. ஏனெனில் நாம் தினமும் கரட் சாப்பிட போவதில்லை. அதனால் அதற்கும் மேலதிகமான அளவு கரட்டினை கொள்வனவு செய்யும் போது பணம் விரயமாகிறது. நீங்கள் லேபல் செய்து உறைகளில் விற்கப்படும் பொதிகளை கொள்வனவு செய்வீர்களாயின் அச்சமயத்தில் பெரிய பொதிகளை தேர்ந்தெடுங்கள் ஏனெனில் பெரும்பாலான கம்பனிகள் அதிக அளவினை உடைய பொருட்களை குறைந்த விலையில் விற்பனைக்காக வைக்கின்றனர்.

6. பல்வேறு வகையான தயாரிப்பு பொருட்களை சிறிய சிறிய அளவுகளில் கொள்வனவு செய்தல்.

இவ்வாறு சிறு சிறு பொருட்களாக கொள்வனவு செய்வதால் அதிக விலை உடைய பொருட்களிலிருந்து குறைந்த விலை உடைய பொருட்கள் வரை எமக்கு பிடித்த பல பொருட்களை கொள்வனவு செய்துக் கொள்ள உதவுகிறது.

7. ஸ்டோர் ப்ராண்டுகளை கொள்வனவு செய்தல்.

மற்றைய ப்ராண்ட் பொருட்களை விட ஸ்டோர் ப்ராண்ட் பொருட்கள் மலிவான விலையில் பெறக் கூடியவை. மலிவான விலையில் கிடைக்கின்றன என்பதனால் இவை குறைவான தரத்தினை கொண்டவை என பயப்பட வேண்டாம். இவை மலிவான விலையில் விற்கப்பட காரணம் எந்தவித விளம்பர செலவுகள் மற்றும் ரிடேயில் மார்ஜின் சேர்க்கப்படாமை தான்.

8. பெயரிடப்பட்ட (Labelled) தயாரிப்புகளுடன், பெயரிடப்படாத தயாரிப்புகளின்(Unlabeled) விலையினை ஒப்பிடுதல்.

பெயரிடப்படாத அதாவது லேபில்கள் அற்ற அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை போன்ற சில்லறை பொருட்களை மலிவான விலையில் கொள்வனவு செய்துக் கொள்ள முடியும். அவ்வாறிருந்த போதும், தரத்தினை கருத்திற் கொண்டு நாம் லேபில் செய்யப்பட்டவற்றை கொள்வனவு செய்ய முனைகிறோம். ஆனால் சூப்பர் மார்க்கெட்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பெயரிடப்படாத சில்லறை பொருட்களின் தரமானது சிறப்பான முறையில் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

9. சலுகையில் (Offer) உள்ள பொருட்களை கொள்வனவு செய்தல்.

வங்கி சலுகை, க்ரெடிட் கார்ட் சலுகை, டெபிட் கார்ட் சலுகை அல்லது சாதாரண சலுகை என எந்தவித சலுகையாக இருப்பினும், சலுகைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். குறிப்பாக வார இறுதியில் விற்கப்படும் புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சி வகைகள் போன்றவற்றுக்கு சிறப்பான க்ரெடிட் கார்ட் சலுகைகள் கிடைக்கும்.

10. தேவையற்ற பொருட்களை கொள்வனவு செய்வதை தவிர்த்தல்.

சூப்பர் மார்க்கெட்களில் காணப்படும் உங்களுக்கு தேவையற்ற பொருட்களை கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் பணத்தை வீண்விரயம் செய்வதற்காகவே வகுக்கப்பட்டிருக்கும் ஒரு பொறி. கெஷியர்க்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை வாங்கும் முன் ஒன்றிற்கு இரு தடவைகள் சிந்தித்து அதன் பின் கொள்வனவு செய்யுங்கள்.

இந்த எளிய வழிகளை முயற்சித்து அதன் மூலம் நீங்கள் பெறும் அனுபவத்தினை எங்களுடன் கமன்ட் பொக்ஸில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

GOD IN LOVE – குறுந்திரைப்படம் – நாடி Review

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு தடவையேனும் காதல் என்ற ஊருக்குள் பயணித்திருப்பான். பொதுவாகவே காதல் என சொன்னதும் நம் நினைவிற்கு வரும் விம்பம் ஆண், பெண் இருவருக்கும் இடையில் மலரும் ஓர் உணர்வு என்ற காட்சி தான். சில சமயங்களில் நமது பார்வை தவறானதாக கூட இருக்கலாம். பார்க்கும் கோணம் மாறினால் அனைத்துமே மாறும் என்ற வரிகளுக்கேற்ப காதலைப் பற்றிய வித்தியாசமான கண்ணோட்டத்தில் உருவாக்கப்பட்ட குறுந் திரைப்படம் தான் GOD IN LOVE. இந்த குறுந் திரைப்படத்தின் தலைப்பினை கேட்டதும் “ஒரு வேளை கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான காதல் கதையாக இருக்குமோ? இல்லை காதலில் இருக்கும் புனிதத்துவம் பற்றியதோ?” என்ற பல கேள்விகளை என் மனதுள் எழுப்பியது. இத்தனை கேள்விகளுடனும் இந்த குறும்படத்தினை பார்க்க ஆரம்பித்தேன்.

கடந்த காதலர் தினமான பெப்ரவரி மாதம் 14ஆம் திகதியன்று YouTube தளத்தில், Abishek Palraj அவர்களின் இயக்கத்தில் உருவான GOD IN LOVE குறுந்திரைப்படம் வெளியானது. இதில் Sathiya Priya Ratnasamy மற்றும் Chocos நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான ஔிப்பதிவினை Dineshanth Thaventhiran மற்றும் Abishek Palraj இருவரும் செய்திருக்கிறார்கள். இந்த குறுந்திரைப்படத்திற்கான எடிட்டிங் வேலைகள் அனைத்தும் Abishek Palraj இனால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த குறுந்திரைப்படத்தினை Muraletharan Veerappan, Sivalingam saravanabavan மற்றும் Poorikco ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

குறுந்திரைப்படத்தின் ஆரம்பத்தில் married life (from “up”/ score) இலிருந்து ஒரு இசை ஒலிக்கும். அந்த இசை இப்படத்தை பார்ப்பவர்கள் மனதில் ஓர் மேற்கத்தேய திரைப்படத்தை பார்க்கும் உணர்வினை ஏற்படுத்துகிறது. கதாநாயகன் “எழுந்திரு ஜோன்” என கூறுவது, பார்வையாளர்களை மயக்க முற்படும் மேற்கத்தேய உணர்விலிருந்து எழுப்புதற்கான குரலாகவே ஒலிக்கின்றது.

என்ன தான் படம் முழுவதும் கதாநாயகனின் குரல் ஒலித்தாலும், பார்வையாளர்களது கண்ணை கவரும் முதல் விம்பம் கதாநாயகியினுடையது தான். கதாநாயகி காலை எழுந்தது முதல் வெளியில் புறப்பட்டு செல்லும் நேரம் வரையிலான அவளது ஒவ்வொரு நடவடிக்கையும் விபரித்து வர்ணிப்பதில் தான் படம் நகர்ந்து செல்கிறது. கதாநாயகி குளித்து விட்டு கூந்தல் துவட்டும் போது இளையராஜாவின் ‘என் இனிய பொன் நிலாவே…’ -க்கு ஏற்றவாறு கூந்தல் அசையும் காட்சிகள், மிகவும் அழகாக ஔிப்பதிவு செய்யப்பட்டு எடிட் செய்யப்பட்டுள்ளன. கதாநாயகியாக, ஏற்கனவே மக்களுக்கு பரீட்சியமான சத்யப்ரியாவின் தேர்வு கச்சிதம். ஒவ்வொரு அசைவும், இயல்பும் நேர்த்தியும்..

கதாநாயகனின் குரலை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும் நமக்கு, அவ்வப்போது கதாநாயகனின் வயது மற்றும் தோற்றம் பற்றிக் கணிக்க தூண்டும் வகையில் வசனங்கள் அமைந்திருக்கிறது. உதாரணமாக, கதாநாயகி தன்னை தினமும் கொஞ்சுவதாகவும் சாப்பாடு ஊட்டி விடுவதாகவும் கதாநாயகனின் வசனங்கள் அமையும் போது “ஒரு வேளை சின்ன பையன் யாரும் தான் இப்படி பேசுறானோ?” என்ற எண்ணத்தினை உருவாக்கி விடுகிறது. இறுதியில் எவரும் எதிர்ப்பாராத திருப்பமாக கதாநாயகனின் காட்சி அமைந்திருக்கிறது. அதிர்ச்சி ஒரு பக்கம் புன்னகை ஒரு பக்கம் என கதாநாயகனை ரசித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் இந்த கதாநாயகனை எந்தப் பெண்ணுக்கும் பார்த்தவுடன் பிடித்து விடும். இதில் முக்கியமான குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், அன்றும் இன்றும் என்றும் பெண்களுக்கு பிடித்த மாதிரி, கறுப்பான, களையான நாயகன்.

இந்த குறுந்திரைப்படத்தில், பின்னணி Voice Over இல் கேட்கும் கதாநாயகனின் குரல் மிக இயல்பானது. எனினும் சில இடங்களில் பின்னணி குரலில் ஒரு தெளிவின்மையை உணரக்கூடியதாக இருக்கிறது. இதனால் படத்தின் வசனங்களை மிக அவதானமாக, செவிசாய்த்து கவனிக்க வேண்டிய கட்டாய சிரமத்திற்கு உள்ளாவது போன்ற ஓர் உணர்வு அவ்வப்போது ஏற்படுகிறது. வண்ணமயமான தரமான காட்சியமைப்போடு, அட்டகாசமான ஒளிப்பதிவில், மிக சிறப்பாக அமைந்திருக்கும் இக் குறும்படத்தின் ஒலியமைப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் வழமையாக வெளிவரும் இலங்கை படைப்புகளுக்கிடையே, இந்த ‘GOD IN LOVE’ ஒரு வித்தியாசமான காதல்.

Abishek Palraj இன் இந்த GOD IN LOVE குறுந்திரைப்படம், 7th Goa Film festival, Stand Alone Film Festival and Awards – Los Angeles 2021, The Cut Film Series – USA 2021, URUVATTI International Film Festival – India, ஆகியவற்றில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க முக்கியமான விடயமாகும்.
நாடி Verdict – 72/100
‘GOD IN LOVE’ – அழகு
குறும்பட Link – https://youtu.be/r0w5Fe4Opcs

இலங்கையின் உள்நாட்டுப் பறவையினங்கள்

பெரிய மற்றும் சிறிய என பல் வகையான உயிரினங்கள் வாழ்கின்ற சரணாலயமாக இலங்கை தீவு விளங்குகின்றது. இங்கு காணப்படும் 492 பல் வகை உயிரினங்களில், 34 இனங்கள் உள்நாட்டு வகைகளாகும். இந்த பதிவின் ஊடாக நம் நாட்டிற்கு உரிய அரிதான மற்றும் உங்களில் பலர் அறிந்திராத சில பறவை இனங்கள் பற்றி அறிவோம்.

செரண்டிப் ஸ்காப்ஸ் ஆந்தை (Serendib Scops Owl)

சமீபத்தில், அதாவது 2001ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கிதுல்கல காட்டிலிருந்து வந்த பூ-ஓ (poo-oo) என ஒலித்த ஓசையினை கொண்டு ஓர் பிரபலமான பறவைகள் சரணாலயத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது. இது உண்மையான ஆந்தைகள் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் சிறிய ஆந்தை இனமாகும். இதனை பெரும்பாலும் ஈர மண்டல பகுதிகளில் காணலாம்.

இலங்கை ஜங்கிள்ஃபோல் (Sri Lankan junglefowl)

இலங்கை ஜங்கிள்ஃபோலின் ஆண் இனமானது இலங்கையின் தேசிய அடையாளமாக திகழ்கின்றது. இந்த பறவை இனத்தினை ஈர மற்றும் வெப்பமான இரு மண்டலங்களிலும் காண முடியும். உதாரணமாக யால, கித்துல்கல மற்றும் சிங்கராஜ போன்ற பகுதிகளில் காணக்கூடியதாக இருக்கும். இதன் பெண் இனமானது நிறத்தில் மங்கலானதாகவும் குறிப்பிட்ட ஓர் வளர்ச்சியுடையதாகவும் இருக்கும்.

இலங்கை பச்சை புறா (Sri Lankan green pigeon)

பிரகாசமான கண்களின் கவனத்தை ஈர்க்க கூடிய மஞ்சள் மற்றும் ஆலிவ் பச்சை நிறமும், இருண்ட நிறங்களாலான இறக்கைகளும், நீலநிற கண்களும் கொண்ட ஓர் அழகிய புறா இதுவாகும். இது புத்திசாலித்தனமாக செயற்படக் கூடிய பறவையாகும். இதனை வனப்பகுதிகளில் ஈரமான சூழலில் காணலாம்.

இலங்கை தொங்கும் கிளி (Sri Lankan hanging parrot)

இதனை இலங்கை லோரிகீட் எனவும் அழைக்கின்றனர். இந்த கிளியானது, தனது வலுவான கால்களை பயன்படுத்தி மரக்கிளைகளில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும். இது 13 சென்றிமீற்றர் நீளமும், பிரகாசமான பச்சை நிற உடலும் தலையில் சிறிய சிவப்பு நிற இணைப்பும் கொண்டிருப்பதனால் ஈரமண்டல காட்டு பகுதிகளில் இலகுவாக மறைந்து வாழ்கின்றது. இது நம் நாட்டிலுள்ள சாதாரண கிளிகளை விடவும் தனித்துவமானதாக விளங்குகின்றது.

இலங்கை நீல மாக்பி (Sri Lankan blue magpie)

ஈரமண்டல மலைப் பிரதேசங்களில் கட்டுப்படுத்தப்பட்ட அதே சமயம், இலங்கையில் மட்டும் காணக்கூடியதாக உள்ள அரிதான பறவை இனமாகும். இது காக்கை குடும்பத்தினை சேர்ந்ததாகும். நாம் எமது தோட்டப்பகுதியில் காணக்கூடியதாக உள்ள “மாக்பி” வகையானது உண்மையான மாக்பி வகையை சேர்ந்தவையல்ல. இது ராபின் மற்றும் ஓரியண்டல் ஃப்ளைகாட்சரின் இனத்தை சேர்ந்ததாகும். இது அரிதாகவே பறக்கின்றது. இதன் தோற்றமானது நல்ல நீல நிறம், பழுப்பு தலை மற்றும் சிவப்பு நிற கண்கள் என மிகவும் அழகானதாக இருக்கும். இது ஏனைய பறவைகளின் ஒலியினை கொண்டு அவற்றை பின்பற்றி செல்லும் திறன் உடையது. 1980 மற்றும் 1990களில் வெளியான 10 சென்ட் முத்திரையில் இந்த மாக்பியின் உருவம் இடம்பெற்றது.

இலங்கை சாம்பல் ஹார்ன்பில் (Sri Lankan grey hornbill)

இது வறண்ட மண்டல பிரதேசங்களில் வாழ்கின்றது. இது மரங்களின் துளைகளில் கூடு கட்டி வாழும் தன்மை கொண்டது. ஆண் பறவையானது கூட்டின் வாயிலில் பெண்ணிற்கு உணவு வழங்கவும் சுவாசிக்கவும் சிறு பகுதியை விட்டு விட்டு, பிற பகுதிகளை மண் மற்றும் பிற பொருட்களால் அடைத்து கதவிடுகிறது. இது மலபார் பைட் ஹார்ன்பில்லினை விடவும் உருவத்தில் சிறியதாகவும் மெலிந்தும் காணப்படும். இதன் சொண்டில் தனித்துவமாக எலும்புகள் போன்ற தன்மை காணப்படும்.

சிவப்பு முகம் கொண்ட மல்கோஹா (Red-faced malkoha)

இது ஈர மற்றும் வெப்ப மண்டல பிரதேசங்களில் காணக்கூடிய ஓர் பறவையாகும். கொக்கு இனத்தின் ஓர் பிரிவாக இருந்த போதும் இதனை எளிதில் கண்டறிய முடிவதில்லை. இதன் பெயர் இதன் முகத்திலுள்ள சிவப்பு நிறத்தினால் வந்தது தான்.

சிவப்பு நிறமுள்ள ப்ளேம்பக் (Red-rumped flameback)

பிரகாசமான சிவப்பு நிற இறக்கைகள், கருப்பு நிற தலை மற்றும் சிவப்பு நிற சொண்டு என தன்னகத்தே கொண்டிருக்கும் ஓர் பெரிய பறவையாகும். இந்த பறவை புத்திசாலித்தனமாக செயற்படக் கூடியது. இதனை ஈர மண்டல பிரதேசங்களில் காணலாம். கொழும்பு நகரில் உள்ள சிலரது வீட்டுத் தோட்டங்களுக்குக் கூட இவை அவ்வப்போது வந்து செல்வதுண்டு.

மங்கலான நீல ஃப்ளைகாட்சர் (Dull-blue flycatcher)

இந்த சிறிய மங்கலான நீலப்பறவை, இலங்கையில் 2010 இல் வெளியான 50 ரூபாய் தாளில் இடம்பெற்றது. இதனை பெரும்பாலும் ஈர மண்டல பிரதேசமான மத்திய மாகாணத்தில் காண முடியும். இதன் முட்டைகள் இளஞ் சிவப்பானதாகவும் பழுப்பு நிற புள்ளிகளுடனும் தோற்றமளிக்கும்.

இலங்கை மரப்புறா (Sri Lankan wood pigeon)

பெரிய மற்றும் திடகாத்திரமான உடற்கட்டமைப்பைக் கொண்ட அழகான ரெகல் தோற்றமுடைய புறா இதுவாகும். இது இலங்கையின் 25 சென்ட் தபால் முத்திரையில் இடம்பெற்றுள்ளது. இதனை பெரும்பாலும் தாவரங்கள் அதிகமுள்ள நிலப்பரப்பு அல்லது காடுகளில் காண முடியும். ஈர மண்டல பிரதேசத்தில் வாழும் இப்பறவையினை ஹார்டன் சமவெளியில் அதிகமாக காண முடியும். இதில் ஆண், பெண் என இரண்டுமே அழகாக தோற்றமளிக்கும்.

இலங்கையின் ஈர மண்டலத்திலிருந்து, மேற்கு பகுதி சுற்றி மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் வரை பல இடங்கள் உள்ளன. சிங்கராஜ வனத்தில் மட்டும் ஏறத்தாழ பத்தொன்பது உள்நாட்டு உயிரினங்கள் வாழ்கின்றன. இங்குள்ள புவியியல் தனித்துவமானது. மேலும் அடர்த்தியான, ஈரப்பதமான வெப்பமண்டல காடுகள் என பல பிரதேச பகுதிகளை இலங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு உயிரினங்கள் பல இவற்றுள் மறைந்து தம்மை பாதுகாத்தபடி தமது வாழ்க்கையினை தொடர்கின்றன. இலங்கையில் காணப்படும் அரிதான உள்நாட்டு உயிரினங்கள் அனைத்துமே, அழிவு நிலையினை நோக்கிச் செல்லவில்லை. உதாரணமாக இலங்கையில் அவிஃபாவுனாக்கள் மிகவும் நலமாக தமது வாழ்வினை தடையின்றி தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் இவ்வினத்தின் மீதான ஐ.யூ.சி இனது கவனயீர்ப்புக்கு அவசியமில்லை, எனக் கூறுமளவிற்கு நலமுடன் உள்ளன. இது இவ்வாறிருக்க மனிதர்களின் ஆக்கிரமிப்பினால் தமது இரவு நேர வாழ்வினை நிம்மதியாக தொடர முடியாத நிலைக்கு செரண்டிப் ஸ்காப்ஸ் ஆந்தை இனம் தள்ளப்பட்டுள்ளது. அதே போல் இலங்கை நீல மாக்பி மற்றும் இலங்கை மரப்புறா ஆகிய இனங்களும் தமது வாழ்வினை தொடர முடியாது தவிக்கின்றன.

இலங்கையில் புறாக்கள், கிளிகள் முதல் மாக்பீஸ் மற்றும் அரிதான இரவு நேர பறவைகளான ஜங்கிள்ஃபோல் மற்றும் ஆந்தைகள் என பல்லுயிரினங்கள் காணப்படுகின்றன. இலங்கையில் உள்ள முப்பத்து நான்கு பறவையினங்களும் தமது உடல், அளவு மற்றும் வாழ்க்கை முறை என வெவ்வேறு விதத்தில் தனித்துவமானதாக திகழ்கின்றன.

கொழும்பில் இஃப்தார் சிறப்பு மெனு கிடைக்கும் உணவகங்கள்

நாம் அனைவரும் புனித ரமழான் மாதத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ரமழான் மாதமானது பிராத்தனை, பிரதிபலிப்பு மற்றும் சுய ஒழுக்கம் ஆகிய நற்பண்புகளை எம்முள் அதிகரிக்கக் கூடிய ஓர் புனித மாதமாகும். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு மற்றும் தண்ணீர் இரண்டையும் தவிர்ப்பது வழக்கம். பொதுவாக முஸ்லிம் சகோதரர்கள் தமது ரமழான் விரதத்தினை சூரிய அஸ்தமனத்தின் போது முடிப்பர் (இஃப்தார்). நீங்கள் விரதத்தினை முடிக்கும் நேரத்தில் சிறப்பான உணவினை அதற்கேற்ற விலையில் சுவைத்திடக் கூடிய சில உணவகங்களின் பட்டியலினை இப்பதிவில் காணலாம்.

முஸ்லிம் சகோதரர்கள் தமது விரத்தினை முடிக்கும் போது பேரிச்சம் பழம் சாப்பிட்டு முடிப்பது வழக்கம். “என்ன? அவ்வளவு நேரம் எதுவுமே உண்ணாமல் பேரிச்சம் பழத்தினை உண்டு விரத்தினை முடிப்பார்களா?” என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம், இருப்பினும் விரதம் முடிப்பதற்காக பேரிச்சம் பழத்தினை உண்பதில் பல நன்மைகள் உண்டு என உங்களுக்கு தெரியுமா? பேரிச்சம் பழத்தில் உடலுக்கு தேவையான சர்க்கரை, நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் விற்றமின்கள் காணப்படுகிறது. இதனால் குருதியில் உள்ள குளுக்கோஸின் அளவு மற்றும் உடலின் பலத்தினை மீள நிரப்பி பழைய நிலைக்கு திருப்ப உதவுகிறது. இது இவ்வாறிருக்க நம் இலங்கை மற்றும் சகோதர நாடான தென்னிந்தியாவில் வாழும் முஸ்லிம் சகோதரர்கள் பேரிச்சம் பழத்திற்கு பதிலாக வேறொரு உணவை கொண்டு விரதம் முடிப்பதுண்டு. இது நம்மில் பலருக்கு பிடித்த உணவு எனவும் கூறலாம். அது தான் கஞ்சி. அனைவருக்கும் விளங்கும் படி கூற வேண்டுமேயானால் ‘நோன்புக் கஞ்சி’. இது அரிசி, பயறு மற்றும் இறைச்சி துண்டுகளை கொண்டு தயாரிக்கப்படுகின்றது. இதில் லேசான மசாலத் தன்மையினை உணர முடியும். இந்த கஞ்சி உடலுக்கு சக்தியை மீட்டு தருவதோடு எளிதில் ஜீரணமாகிறது. இந்த இரண்டு உணவுகளுமே இஃப்தாருக்கான உணவுகள் தான்.

சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதத்தின் பின் நீங்கள் உங்களுக்கான உணவினை தெரிவு செய்து விரதத்தினை முடிக்க சிறந்த சில உணவகங்களை நாங்கள் தேடி தெரிந்து பட்டியலிட்டுள்ளோம். இந்த உணவக பட்டியலை தயாரிக்கும் போது தற்போதுள்ள கோவிட்-19 நோய் பரவல் சூழ்நிலையை கருத்திற் கொண்டு உங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்துள்ளோம். நீங்கள் அனைவரும் வீட்டிலிருந்த படி பாதுகாப்பாக உணவினை உண்ணக் கூடிய வகையில் டெலிவரி மற்றும் டேக்-ஹவே உள்ள உணவகங்களை தெரிந்து பட்டியலிட்டுள்ளோம்.

கொழும்பு ரமதா ஹொட்டல் (Ramada Hotel Colombo)

இந்த ஆண்டு ரமழானை முன்னிட்டு ரமதா ஹொட்டலில் இஃப்தார் உணவுப் பொதிகள் அவர்களது மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இஃப்தார் பொதியில், பேரிச்சம் பழங்கள், கஞ்சி மற்றும் சிறறுண்டிகள் (சமோசா, ரோல்ஸ், சாக்லேட் எக்லர் போன்றவை) காணப்படும். இந்த பெக்கில் மேலதிகமாக அரபு உணவு வகைகளான அடுக்கு ரொட்டி மற்றும் பக்லாவா என்ற உணவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பொதி இருவருக்கு போதுமானது. நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது வாழ்க்கை துணை என, யாருடன் வேண்டுமென்றாலும் இந்த பொதியினை பகிர்ந்து கொள்ளலாம். இந்த பொதிகள் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

விலை: இப்தார் பொதிகள் – இருவருக்கு ரூபாய் 2,550
பிற பகுதிகள்: ரூபாய்500 – ரூபாய் 3,950
தொலைபேசி: 0766 645 507/0114 794 399
Instagram: https://www.instagram.com/ramadacolombo/
முகவரி: 30, சர் மொஹமட் மக்கன் மார்க்கர் மாவத்தை, கொழும்பு 03.

மிட்ஸிஸ் டெலிகேசிஸ் (Mitsi’s Delicacies)

2021 இற்கான மிட்ஸியின் இஃப்தார் மெனுவில் சிறப்பான இஃப்தார் பொதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இஃப்தார் பெக்குகளில் சாதாரண இஃப்தார் பெக், சேவரி இஃப்தார் பெக், லக்சரி இஃப்தார் பெக் மற்றும் BBQ இஃப்தார் பெக் என நான்கு வகைகள் காணப்படுகின்றது. இத்துடன் நீங்கள் வீட்டுச் சுவையில் செய்யப்பட்ட சொசேஜஸ், கோஃப்டாஸ் மற்றும் கெபாப் ஆகிவற்றையும் பெவரேஜஸ் மெனுவிலிருந்து ஃபலூடா, ஸ்ப்ரைட் அல்லது ஏதாவது ஒரு மொஜிட்டோவினை தேர்ந்து, உங்கள் நாவிற்கு விருந்தளியுங்கள். உங்களது எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றமாக மாறாதிருக்க மாலை 4 மணிக்கு முதல் ஓர்டர் செய்யுங்கள்.

விலை: இஃப்தார் பெக் – ஒருவருக்கு ரூபாய் 600
சேவரி இஃப்தார் பெக் – ஒருவருக்கு ரூபாய் 1,200
லக்சரி இஃப்தார் பெக் – ஒருவருக்கு ரூபாய் 2,000
BBQ இஃப்தார் பெக் – ஒருவருக்கு ரூபாய் 2,500
தொலைபேசி : 0777 163 090
Instagram: https://www.instagram.com/mitsisdelicacies/
முகவரி: 34 ஏ, பாகடல்லே ஆர்.டி, கொழும்பு 03.

அரேபியன் க்நைட்ஸ் (Arabian Knights)

மத்திய கிழக்கு உணவு வகைகளுக்கு பெயர் போன அரேபிய நைட்ஸ்யின் 2021 இற்கான இஃப்தார் மெனுவில் வியப்பூட்டும் அளவிலான உணவுகள் என ஏதுமில்லை. இங்கு மாட்டிறைச்சி சம்போசெக், ஃபாலாஃபெல்ஸ், ஹம்முஸ், மினி ஷவர்மாக்கள், கிரில்ஸ் மற்றும் இனிப்பு சுவையிலான முஹலபியா எனப்படும் டெசர்ட் (பொதுவாக ரோஜா அல்லது ஆரஞ்சு நீரினால் தயாரிக்கப்படும் ஒரு மில்க் புடிங்) போன்ற பாரம்பரிய மத்திய கிழக்கு உணவுகள் இவர்களது மெனுவில் காணப்படுகின்றன. இவற்றை தினசரி மாலை 6 மணி வரை நாம் டேக் ஹவே அல்லது டெலிவரி மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

விலை: ஒருவருக்கு ரூபாய் 1,590
தொலைபேசி: 0112 301 031
Instagram: https://www.instagram.com/arabianknights_lk/
முகவரி: 377, காலி வீதி, கொழும்பு 03.

சேம்பர்ஸ் கொழும்பு – அட் பார்க் ஸ்ட்ரீட் மீயூ (Chambers Colombo – at Park Street Mews)

சேம்பர்ஸ் பலராலும் நன்கு அறியப்பட்ட மற்றுமொரு அரபு உணவகமாகும். இவர்கள் சிறப்பான மத்திய கிழக்கு உணவு வகைகளுடன் இந்த இஃப்தாரினை நிரப்ப தயாராக உள்ளனர். ஹரிசா ஹம்முஸ் முதல் சீஸ் சம்போசெக் மற்றும் மட்டன் முசாகன் ரோல்ஸ் வரையும் அரபு ரொட்டி மற்றும் தபூலே (சாலட்) போன்றவற்றுடனும் இந்த இஃப்தாரில் பரிமாற தயாராக உள்ளனர்.

இவற்றை இருவர் மற்றும் நால்வர் உண்ணக் கூடிய வகையில் பெற்றுக் கொள்ள முடியும். அவர்களது மெனு பற்றிய போதுமான தகவல்களை உங்களுக்கு அளித்துள்ளோம் என நம்புகிறோம். இன்றே உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் இணைந்து இந்த மெனுவினை அனுபத்திடுங்கள். ஊபர் ஈட்ஸ் மற்றும் பிக் மீ மூலமாகவும் அல்லது டேக்-ஹவே மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். மாலை 5.30 மணிக்குள் உங்களது ஓர்டர்களை பதிவு செய்ய மறவாதீர்கள்.

விலை: இருவருக்கு ரூபாய் 2,600
நால்வருக்கு ரூபாய் 4,900
தொலைபேசி: 0772 100 009
Instagram: https://www.instagram.com/chamberscolombo/
முகவரி: 48 டி, பார்க் ஸ்ட்ரீட், கொழும்பு 02.

கஃபே நுகா (Café Nuga)

கஃபே நுகா பல புதிய உணவு வகைகளுடன் இந்த இஃப்தாரை மேலும் சிறப்பானதாக மாற்ற தயாராக உள்ளது. ஒரு குறிப்பிட்டளவு பிறீமியம் டேட்ஸ், ஃபெட்டவுஷ் சாலட், பிட்டர் ப்ரெட், ஹம்முஸ் ஹரிரா (பயறு, தக்காளி, சிக் பீஸ் மற்றும் வெர்மிசில்லி கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகையான சூப்) மற்றும் குனாஃபா போன்ற மத்திய கிழக்கு உணவு வகைகள் சில சேர்த்து பரிமாறப்படுகின்றன. தாவரங்களை கொண்டு தயாரிக்கப்படுவதாக இருப்பினும் சரி மாமிசத்தினை கொண்டு தயாரிக்கப்படுவதாக இருப்பினும் சரி, உணவின் freshness மாறாத விதத்தில் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணிக்கு பின் இவற்றை பெற்றுக் கொள்ளலாம்.

விலை: ஒரு போர்ஷன் ரூபாய் 980
தொலைபேசி: 077 344 5377
Instagram: https://www.instagram.com/cafe_nuga/
முகவரி: 69 ஏ, கிறீன் பாத், கொழும்பு.

பெப்பர்மின்ட் கஃபே (Peppermint Café)

இந்த இஃப்தாருக்கு பெப்பர்மின்ட் கஃபேயில் நான்கு விதமான சன்ட்விச்கள் (மாட்டிறைச்சி, கிறிஸ்பி சிக்கன், முட்டை மற்றும் மயோ, கறி சிக்கன்), ஐஸ்கிறீமுடனான வஃபல், ஐஸ்கிறீமுடனான ஃபலூடா, பாரம்பரிய நோன்பு கஞ்சி மற்றும் பேரீச்சம் பழங்கள் போன்றவை உள்ளடங்கலாக பரிமாறப்படுகின்றது. இது ஒரு முழுமையான ஆரோக்கியமான இஃப்தார் உணவாக விளங்குகிறது. இவை முழு நேரமும் பெற்றுக் கொள்ள கூடிய வகையில் உள்ளன.

விலை: ஒருவருக்கு ரூபாய் 1,200
தொலைபேசி: 0756 320 420
Instagram: https://www.instagram.com/peppermintcafe_srilanka/
முகவரி: 76, விஜேரமா மாவத்தை, கொழும்பு 07.

ஸ்ட்ரீட் பர்கர் (Street Burger)

ஸ்ட்ரீட் பர்கரின் மூன்று பேரீச்சம் பழங்கள், மாட்டிறைச்சி அல்லது சிக்கன் கூப்பர்ஸ் பர்கர், 2 கிறிஸ்பி சிக்கன் ரிப்பல் ஸ்ட்ரைப்ஸ், ஃப்ரைட் பூண்டு ரொட்டி, ஃப்ரைஸ், இரண்டு சொசேஜஸ், பெவரேஜ் மற்றும் தண்ணீர் ஆகியன உண்மையில் அந்த விலைக்கு ஏற்ற மதிப்பினை கொண்டுள்ளன. துரித உணவில் அதிக நாட்டம் உள்ளவர்களுக்கு இந்த பெக் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

குறிப்பு: பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே.

விலை: டேக்-ஹவேக்கு ஒருவருக்கு ரூபாய் 990
Ubereats இல் ஒருவருக்கு 1,290
தொலைபேசி: 0112 595 559/0777 887 777/0777 179 179
Instagram: https://www.instagram.com/streetburgersl/
முகவரி: 34, ரம்யா வீதி, கொழும்பு 04.

இன்டல்ஜ் டெசர்ட் கோ (Indulge Desserts Co)

கொழும்பில் பெல்ஜியம் சாக்லேட்டில் நிபுணத்துவம் பெற்ற உணவகமொன்று இஃப்தார் பெக்கினை வழங்கினால்? உங்களில் யாராவது வேண்டாமென சொல்வீர்களா என்ன?. அவ்வாறாக இன்டல்ஜ் டெசர்ட் கோ உணவகத்திலிருந்து இந்த ரமழானிற்கான ‘இஃப்தர் இன்டல்ஜென்ஸ்’ என இரண்டு பெக்குகளை கொண்ட செட்டினை மெனுவில் சேர்த்துள்ளனர். ஒவ்வொரு பெக்கிலும் பேரிச்சம் பழங்கள், தண்ணீர், கஞ்சி, சமோசாக்கள் மற்றும் தாகத்தை தணிக்க கூடிய ரெட் சில்லர் மற்றும் மின்ட் லெமனேட் ஆகியவை அடங்குகின்றன. அத்துடன் சாக்லெட் ப்ரௌனி டிப் ட்ரீட்டும் அடங்கும். உங்கள் இஃப்தாரினை இனிமையானதாகவும் எளிமையானதாகவும் மாற்ற விரும்பினால், இந்த பெக்குகள் உங்களின் சிறந்த தேர்வாக அமையும்.

விலை: பெக்கேஜ் 01 – ஒருவருக்கு ரூபாய் 850
பெக்கேஜ் 02 – ஒருவருக்கு ரூபாய் 1,800
தொலைபேசி: 0117 682 314/0117 460 008
Instagram: https://www.instagram.com/indulgedessertslk/
முகவரி;
29/5, ஸ்ட்ராட்போர்டு அவென்யூ, கொழும்பு 06.
14, மரைன் டிரைவ், கொழும்பு 03.

ப்ளெட்டர் மீ (Platter Me)

இந்த இஃப்தாரிற்கென நால்வர் உண்ணக் கூடிய நான்கு பெக்குகளில் ஒவ்வொன்றிலும் பழங்கள், நட்ஸ் மற்றும் ஃப்பின்கர் ஃப்புட்ஸ் உள்ளடங்கலான பெக்குகளை மெனுவில் சேர்த்துள்ளனர். இந்த பெக்கில் ஸ்ட்ரோபரி, திராட்சை, பாதாம், முந்திரி, பேரிச்சம் பழங்கள், பீட்டா ப்ரெட் ஸ்ட்ரைப்ஸ், ஹம்முஸ், சீஸ் மற்றும் ஒலிவ், ஒரு சில்லி கார்லிக் டிப், ஐந்து முட்டை போட்ஸ், மினி சன்ட்விச்கள் மற்றும் டோஸ்ட்டுகள் ஆகியன உள்ளடங்கும். இது ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான இஃப்தார் பெக்காகும். எது எவ்வாறாக இருப்பினும் நீங்கள் ஒரு நாளிற்கு முன் ஓர்டர்களை பதிவு செய்ய வேண்டும்.

விலை: நால்வருக்கு ரூபாய் 3,950
தொலைபேசி: 0759 304 812
Instagram: https://www.instagram.com/platterme23/
முகவரி: பால்மைரா அவென்யூ, கொழும்பு 03.

ISSO

ISSO இல் உள்ள இஃப்தார் மெனுவில் இரண்டு மீன் பெட்டிஸ், இவர்களது சிக்னேச்சர் உணவான ‘பிஸ்ஸோ’ வடை, ஸ்பிரிங் ரோல்ஸ் மற்றும் ISSO டோஸ்ட் ஸ்நெக்ஸ் ஆகியவை உள்ளடங்குகின்றன. அவர்கள் எதைச் செய்தாலும் சிறப்பாக செய்யக் கூடியவர்கள் என்பது நாம் அறிந்ததே. கடலுணவு மற்றும் இறால் பிரியர்களுக்கு இந்த இஃப்தார் மென சிறப்பான ஓர் தேர்வாக அமையும். அதுமட்டுமன்றி ரமழான் மாதத்தை முன்னிட்டு மாலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இலவசமாக கஞ்சி வழங்குகின்றனர்.

விலை: ஒரு தட்டுக்கு ரூபாய் 1,000
தொலைபேசி: 0117 770 300
Instagram: https://www.instagram.com/prawncrazy/
முகவரி: 53, ஆனந்த குமாரசாமி மாவத்தை, கிறீன் பாத், கொழும்பு 07.

டொனர் என்ட் ட்ரம் (Doner and Durum)

பெரிய, வலுவான, சுவை நிறைந்த இறைச்சி மற்றும் சாஸ்கள், மத்திய தரைக் கடல் உணவகங்களுக்கே உரிய தனித்துவமான காரணிகளாகும். இவர்களது இஃப்தார் மெனுவானது மாலை 4.30 மணிக்கு பின் பெறக் கூடியதாக உள்ளது. இந்த மெனுவில் பேரிச்சம் பழங்கள், கஞ்சி, ஹம்முஸ், ரொட்டி ஆகியவற்றுடன் சிக்னேச்சர் உணவான சிக்கன் கெபாப் மற்றும் சிக்கன் போரேக் ஆகியவையும் உள்ளடங்கும். இந்த மெனு உங்கள் நாவிற்கு விருந்தளித்து புதியதொரு அனுபவத்தை பெற்றுத் தரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இங்கு நீங்கள் முன் கூட்டியே ஓர்டர்களை பதிவு செய்துக் கொள்ள முடியும்.

விலை: ஒருவருக்கு ரூபாய் 1,200
தொலைபேசி: 0779 977 993
Instagram: https://www.instagram.com/whatisdoner/
முகவரி: 128, திம்பிரிகஸாய வீதி, ஆஃப் ஜவட்டா வீதி, கொழும்பு 05.

இந்தியன் சம்மர் (Indian Summer)

இந்தியன் சம்மர் இந்திய கருப்பொருளுடன் கூடிய இஃப்தார் மெனுவினை தன்னகத்தே கொண்டுள்ளது. இதனை நீங்கள் வீட்டிலோ, வேலைத் தளத்திலோ அல்லது பயணிக்கும் தருவாயிலும் கூட அனுபவிக்க முடியும். இந்த மெனுவானது அவர்களது கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள இரு கிளைகளிலும் கிடைக்கப் பெறுகின்றன. இவர்களது இஃப்தார் மெனுவில் இரண்டு மட்டன் சமோசாக்கள், சிக்கன் லோலிபப்ஸ், கஞ்சி மற்றும் பேரிச்சம் பழங்களுடன் போடடொ வடை (potato dumplings) மற்றும் குலாப் ஜாமுன் ஆகிய ஸ்ட்ரீட் ஃப்புட்ஸ் வகைகளும் உள்ளடங்குகின்றன.

விலை: டேக்-ஹவேயில் ஒருவருக்கு ரூபாய் 700
UberEats இல் ஒருவருக்கு ரூபாய் 800
தொலைபேசி: 0112 662 112
Instagram: https://www.instagram.com/indiansummerlk/
முகவரி: 42, ஹார்டன் பிளேஸ், கொழும்பு 07.

பேக்ட் கொழும்பு (BAKED Colombo)

இந்த சிறிய உணகத்தில் இஃப்தாரினை முன்னிட்டு, ஏதாவது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சேவரி, இனிப்பு வகை மற்றும் பானங்கள் அடங்கலாக ஐந்து வகையான பெக்குகள் காணப்படுகின்றது. அதனடிப்படையில் சேவரிகளில் பர்க்கர், சப் மெரின், பானினிஸ் ஆகியவையும் இனிப்பு வகைகளில் சாக்லெட் ப்ரொஃப்பிட்ரோல்ஸ், எக்லயர்ஸ், டோனட்ஸ் மற்றும் குக்கீஸ் ஆகியவையும் பானங்களில் லைம், அன்னாசி மற்றும் பெஷன் ஆகியவையும் அடங்குகின்றன. முன் கூட்டியே ஓர்டர் செய்யும் முறையும் காணப்படுகின்றது.

விலை: ஒருவருக்கு ரூபாய் 890 முதல் ரூபாய் 990 வரை.
தொலைபேசி: 0777 154 454/0112 582 030
Instagram: https://www.instagram.com/bakedcolombo/
முகவரி: 37 ஏ, எலிபங்க் வீதி, கொழும்பு 05.

டீ அவென்யூ (Tea Avenue)

டீ அவென்யூ ஒரு சிங்கிள் ஒப்ஷனாகும். இங்கு மூன்று விதமான இஃப்தார் மெனுக்கள் காணப்படுகின்றன. அவையாவன சிக்கன் கஞ்சி, தேனினால் சுவையூட்டப்பட்ட கோழி மற்றும் மாஷ்ட் உருளைக்கிழங்கு, பேரிச்சம் பழங்கள் மற்றும் சாக்லேட் சிப் குக்கீ ஆகியனவாகும். இவை மிகவும் எளிமையான மெனுக்களாகும். மாலை 4 மணி முதல் டீ அவென்யூவின் எந்தவொரு கிளையிலும் இவற்றை டேக்-ஹவே அல்லது டெலிவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

விலை: ஒருவருக்கு ரூபாய் 1,490
தொலைபேசி: 0773 367 879
Instagram: https://www.instagram.com/teaavenue1936/
முகவரி: 4, ஜாவத்த வீதி, கொழும்பு 05.

பாண் பாண் (Paan Paan)

இந்த 2021 இஃப்தாரை சிறப்பாக மாற்றுவதாக பாண் பாண் உணவகத்தின் மூன்று காலையுணவு பொதிகள் விளங்குகின்றன. இவை A, B மற்றும் C என அடையாளப்படுத்தப்படுகின்றன. இந்த பெக்குகள் ஒவ்வொன்றிலும் மூன்று செட் சேவரிகள், ஒரு இனிப்பு வகை, ஒரு பகுதி கஞ்சி மற்றும் பேரிச்சம் பழங்கள் ஆகியன உள்ளடங்குகின்றன. சைவ மற்றும் அசைவ சைனிஸ் ரோல்ஸ், பஃப்ஸ், பெட்டிஸ், பைஸ், சமோசா, எக்லயர்ஸ் மற்றும் ப்ரொபிட்டரோல்ஸ் ஆகிய உணவுகள் பெக்குகளுக்கு ஏற்ற வகையில் மாறி மாறி இடம் பிடிக்கின்றன. ஒவ்வொரு நாளிற்கும் ஏற்றவாறு பெக்குகளில் மாற்றம் நிகழும். தினமும் மாலை 4 மணிக்கு பின் எந்தவொரு பாண் பாண் கிளைகளிலும் நீங்கள் இந்த பெக்குகளை டேக்-ஹவே மற்றும் டெலிவரி மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

விலை: ஒரு பொக்ஸுக்கு ரூபாய் 450 (ஊபர் ஈட்ஸ் மற்றும் பிக் மீ ஆகியவற்றில் உணவின் விலை வேறுபடுகின்றது)
தொலைபேசி: 0117 500 226/0770 500 020
Instagram: https://www.instagram.com/paanpaanlk/
முகவரி: 84, லோரென்ஸ் வீதி, கொழும்பு 04.

கொழும்பு சாய்வாலா (Colombo Chaiwala)

கொழும்பில் உள்ள ஹொட் சில் ஸ்பொட் இது தான். இந்த ரமழானை முன்னிட்டு டேக்-ஹவே மூலம் பெற்றுக் கொள்ளக் கூடிய இஃப்தார் உணவுகள் காணப்படுகின்றது. உதாரணமாக மாட்டிறைச்சி மற்றும் பஞ்சாபி சமோசாக்கள் உடன் இன்னுமொரு புதிய உணவொன்று இஃப்தாரினை சிறப்பிப்பதற்காக மெனுவில் சேர்க்கப்படுகிறது. இவை அனைத்தையும் ஒரு கப் சூடான சாய்யுடன் உண்ணும் போது அது ஓர் புது விதமான அனுபவத்தினை பெற்றுத் தருகிறது.

விலை: ஒரு Item ரூபாய் 100 முதல் ரூபாய் 250
தொலைபேசி: 0769 665 638
Instagram: https://www.instagram.com/colombochaiwala/
முகவரி: 12, லில்லி அவென்யூ, வெள்ளவத்தை.

டைனெர்ஸ் லோன்ச் (Diner’s Lounge)

எளிமையான மற்றும் நம்மில் பலரது பட்ஜெட்க்கு ஏற்ற வகையிலான இஃப்தார் பெக்குகள் இவர்களது மெனுக்களில் காணப்படுகின்றன. இதில் கஞ்சி, சில சேவரி வகைகள் மற்றும் பானங்கள் ஆகியன உள்ளடங்கும். இங்கு இந்திய, அரபு மற்றும் இன்டர்கான்டினென்டல் போன்ற குஸின்களுக்கு உரிய சுவையில் இந்த உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை டேக்-ஹவே மூலம் பெற்றுக் கொள்ளலாம். மாலை 5 மணிக்கு முதல் உங்களது ஓர்டர்களை பதிவு செய்யுங்கள்.

விலை: ஒருவருக்கு ரூபாய் 425
தொலைபேசி: 011 255 9344
Instagram: https://www.instagram.com/dinerslounge.lk/
முகவரி: 18 ஏ, பல்மைரா அவென்யூ, கொழும்பு 03.

சனாஸ் (Chana’s)

சனாஸ் ஒரு புகழ்பெற்ற வட இந்திய உணவகம். இவர்கள் தங்களது மெனுக்களில் ஷவர்மாஸ், டிக்காஸ், கெபாப்ஸ், சமோசாக்கள் மற்றும் ஸ்பிரிங் ரோல்ஸ் போன்ற பல வகையான உணவுகளை பரிமாறி, உங்கள் இஃப்தாரை முழுமை செய்வதற்கு தயாராக உள்ளனர். இந்த உணவுகள் அனைத்துமே இந்திய பாரம்பரிய சுவையால் முழுமை பெற்றிருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

விலை: ஒரு Item ரூபாய் 45 முதல் ரூபாய் 480 வரை.
தொலைபேசி: 0117 939 788/0775 133 655
Instagram: https://www.instagram.com/chanas.lk/
முகவரி: 54, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை, கொழும்பு 06.

பின்க் ப்ளெட்டர் (Pink Platter)

இந்த ரமழான் காலத்திற்கென மூன்று இஃப்தார் மெனுக்களை அறிமுகம் செய்துள்ளனர். அவையாவன கஞ்சி மற்றும் பேரிச்சம் பழம் கொண்ட ஓர் மெனு, சமோசா, பிட்சா, பெட்டிஸ், ரோல்ஸ் மற்றும் பேஸ்ட்ரிகள் கொண்ட ஓர் மெனு, ப்ரௌனி, கப் கேக்ஸ் மற்றும் பால் டொபி போன்ற இனிப்பு வகைகளை கொண்ட மெனு என்பனவாகும். உங்களுக்கு வேண்டுமென்றால் குளிரூட்டப்பட்ட சோர்ட் ஈட்ஸ்களையும் தெரிவு செய்யலாம். இவையனைத்துமே டெலிவரி செய்வதற்கு தயாராக உள்ளன. நண்பகல் 12 மணிக்கு முதல் உங்களது ஓர்டர்களை பதிவு செய்ய தவறாதீர்கள்.

விலை: ஒரு பெக் ரூபாய் 550
தொலைபேசி: 0778 755 455
Instagram: https://www.instagram.com/pinkplatter.sl/
முகவரி: கோயில் வீதி, கலுபோவில, தெஹிவளை.

க்ரேவ்ஸ் கஃபே (CRAVES Café)

பைஸ் முதல் பேஸ்ட்ரிகள் வரை, ஸ்டஃப்ட் பன்கள் முதல் பிட்சாக்கள் வரை, எக்லயர்ஸ் முதல் சீஸ் கேக்ஸ் வரையான சுவையான இனிப்பு பண்டங்களை கொண்டு உங்கள் இஃப்தாருக்கு இனிமை சேர்க்கவுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய உணவொன்றை அறிமுகம் செய்வதோடு அடுத்த நாளிற்கான உணவை முதல் நாளே ஓர்டர் செய்யும் முறையினையும் கையாள்கின்றனர்.

விலை: ஒரு Item ரூபாய் 100 முதல் ரூபாய் 200 வரை.
தொலைபேசி: 0777 116 651
Instagram: https://www.instagram.com/craves.cafe/
முகவரி: 38, க்ளென் அபர் பிளேஸ், கொழும்பு 04.

இந்த 2021ஆம் ஆண்டின் ரமழானிற்கான சிறப்பான இஃப்தார் மெனுக்களை உங்களுக்கு கையளித்து விட்டதாக நம்புகின்றோம். நம்மால் முடிந்தவரை சமூக இடைவெளியை பின்பற்றி இந்த ரமழானை சிறப்பான முறையில் கொண்டாடுவோம். இந்த பட்டியலில் உள்ள உணவக மெனுக்கள் உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறோம். நீங்கள் இந்த உணவகங்களுக்கு சென்று சுவைத்த அனுபவங்களையும் நாங்கள் பதிவிட தவறியவற்றையும் கமன்ட் பொக்ஸில் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

அன்னையர் தின பரிசு ஐடியாக்கள் மற்றும் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்

அன்பு, அக்கறை, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடியுமாக இருந்தால் அது தாயினிடத்தே மட்டுமே ஆகும். அன்னையை கொளரவிப்பதற்கு நாளொன்று அவசியமில்லை என்பதே உண்மை. எனினும் தாயார் தினத்தன்று தாயை மகிழ்விக்கும் நோக்கில் Gift கொடுப்பதற்கு பலர் முன் வருவர். அவ்வகையான நபர்களுக்கு எங்களால் பரிந்துரைக்கக் கூடிய சிறந்த Gift வகைகளும் அவற்றை பெறக்கூடிய சில இடங்களும் இதோ,

Customised Gift Box

தாயுக்கு தனித்துவமான Gift கொடுப்பதற்கு விரும்பும் நபராக இருந்தால் இதுவே உங்களுக்கான சிறந்த சில இடங்கள். விருப்பத்திற்கு அமைய பொருட்களை தெரிவு செய்து கொள்ளவதோடு, Budget க்குள் செய்து கொள்ள முடியும்.

Alohomora


சிக்கல் இல்லாமல் தனது சேவைகளை முடித்துகொள்வதற்கு தேர்ச்சி பெற்ற ஓர் இடம். அழகு மற்றும் கலை அம்சத்தோடு அனைத்து விதமான பண்டிகைகளுக்கும் தேவையான பொருட்களை இங்கு பெற்றுக்கொள்ள முடியும். தொனிப்பொருளிற்கு அமைய உங்களது Gift இனை வடிவமைத்துகொள்ள வேண்டும் எனின் இதுவே உங்களுக்கான சிறந்த இடம்.

Instagram : @alohomora.lk

Robed


Robed வகையான Gift Item களை இங்கு பெற்றுக்கொள்ள முடியும். Robed என்பது வீடுகளில் குறைவான Budget இல் மனதை கவரும் கைவினைகளோடு பெண்களால் செய்யப்படும் பொதிகளாகும். அன்னையர் தினத்திற்கு உரித்தான மாதிரிகளை அவர்களது Instagram Highlights களில் பார்க்க முடியும்.

Contact No : 0777 965 383
Instagram : @robedsl

The Mugshot.lk


Mugs, T- Shirt, Frames, Notebooks மற்றும் Candles போன்ற பரிசுகளை இங்கு பெற்றுகொள்வதோடு அதற்கு உரித்தாகும் Gift Box ஐயும் வடிவமைத்துக்கொள்ள முடியும். அம்மாவுக்கு தனித்துவமான பரிசுப்பொதி தேடுபவராக இருப்பின் இதுவே உங்களுக்கான இடம்.

Contact No : 077 4477 689
Instagram : @the_mugshotlk

Boxalate


அனைத்து சந்தர்பங்களிற்கு உரித்தாகும் பரிசுப் பொருட்களை இங்கு பெற்றுக்கொள்ள முடியும். அழகும் அன்பும் கலந்த சேவையுடன் உங்களுக்கு உரித்தாகும் பொருட்களுக்கு இதுவே உரிய இடம்.

Contact No : 077 5806 688
Instagram : @boxalate.lk

Lush Line


Lush Line என்பது, கலையுடன் கைவினையை கலந்த Mugs, Notebooks, AquaBottles மற்றும் Frames களை இங்கு பெற்றுக்கொள்ள முடியும். அன்னையர் தினத்திற்கு தனியாக பரிசுப்பொதி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளனர். ஆகவே அவர்களது Instagram page இனை அடிக்கடி பார்த்துக்கொள்ளவும்.

Contact No : 077 6300 762
Instagram : @lush_linesl

மணமூட்டப்பட்ட Candle வகைகள்

சிறிது புதுமை கொண்ட Gift Item, ஆனால் இவ்வகையான Item கள் தான் Trending இல் உள்ளது என்பதே உண்மை. எவ்வகையாக இருப்பினும் அன்னைக்கு பிடிக்கும், நறுமணத்தை வீசும் Candles வகைகளை கொடுப்பது ஓரளவிற்கு workout ஆகும் என நம்புவோம்.

Candle Amore


தேவைக்கு ஏற்ற படி உங்களது பொதியினை வடிவமைத்துக்கொள்ள முடியும். Candle Tins, Matte மற்றும் cement candles, Bubble மற்றும் shell candles அல்லது ceramic candles போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியும். இவர்களின் பிரத்தியேகமான candle களாக Peppermint Swirl Candies மற்றும் Hot Apple Pie காணப்படுகின்றது.

Contact No : 077 6737 123
Instagram : @camdleamore.lk

Candle House Ceylon


கையினால் செய்யக்கூடிய மெழுகு வர்த்திகள் செய்வதில் இவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு உரித்தான Candles வகைகளோடு தமது விருப்பத்திற்கு அமைய மெழுகுவர்த்திகளை Customize செய்து கொள்ள முடியும்.

Contact No : 077 5732 381
Instagram : @candlehouseceylon

Star drop Candles


பல வர்ணங்கள் கொண்டு பார்ப்பதற்கு மிக அழகான தோற்றமளிக்கும் இவ் Candles வகைகள், இவர்களது label களும் அழகாக தோற்றமளிப்பதோடு மரப்பலகை பெட்டிகளையும் பெற்றுக்கொள்ளலாம். Heart வடிவிலான மெழுகுவர்த்திகள் தேவை எனின் இதுவே உகந்த இடம்.

Contact Number : 077 1315 253
Instagram : @stardropcandles

CandleCo.Sl


உங்களின் தேவைக்கு ஏற்றபடி 4 படிகளில் candle களை செய்துகொள்ள முடியும். முதலாவதாக பாத்திரத்தினையும், பின்னர் அளவினையும், அடுத்ததாக நறுமணத்தினையும் இறுதியாக முன் பணம் ஒன்றை செலுத்தி Order இனை confirm செய்து கொள்ளவும். 4 – 5 நாள்களில் தங்களது வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்க்கப்படும்.

Contact Number : 077 4765 991
Instagram : @candleco.sl

Birthstone/customised Necklace

ஆபரணங்கள் எப்பொழுதும் பெண்களின் அழகை அதிகரிக்கும் கருவியாகவே கருதப்படுகின்றது. ஆகவே பெண்மைக்கு மகுடம் சேர்க்கும் தாய்மார்களுக்கு இதை விட சிறப்பான பரிசினை தேடுவது மிக கடினம்.

Stoned Jewelry


தங்களது தாயினுடைய Birthstone என்னவென்று தெரியாதிருப்பினும் பரவாயில்லை இவர்கள் உங்களுக்கு அது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்கத்தயார். இங்கு Birthstone சார்ந்த ஆபரணங்கள் மட்டுமல்லாது Engraved Pendant, Letter Pendant மற்றும் 22K தங்கம் பொருந்திய வெள்ளி ஆபரணங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

Instagram : @stonedjewelry_

Silver Bling


Birthstone Necklace மற்றும் பெயர் பொறிக்கப்பட்ட Necklace வகைகள் தயாரிப்பதில் பிரபல்யமானவர்கள். பெயர் ‘Silver Bling’ என்று இருப்பினும் இவர்கள் Gold, Silver, Platinum ஆகிய அனைத்து உலோகங்களிலும் கைவினை கொண்டு செய்யக்கூடியவர்கள்.

Instagram : @silver_bling.lk

Ceylon Silver


கைவினை கொண்டு செய்யப்பட கூடிய ஓர் இடம். தனித்துவமான ஆபரணங்களை எதிர்பார்க்கும் நபராக நீங்கள் இருப்பின், இந்த இடம் ஓர் சிறந்த Suggestion. மேலதிக தகவல்களுக்கு அவர்களது Instagram feed இனை அணுகவும்.

Contact Number : 077 2438 311
Instagram : @ceylon_silver

Customized Plants

என்னுடைய தாயைப்போல் தாவரத்தை விரும்பும் நபராக இருப்பின், இதை விட சிறப்பான Gift எதுவும் இருக்க முடியாது. இதோ அது சார்ந்த Gift களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடம்.

Pretty Plant Pots


தாவரம் சார்ந்த பொருட்கள், கண்ணுக்கு எப்போழுதும் குளிர்ச்சியாக இருப்பதோடு உடம்பை துடிப்புடையதாக மாற்றுகின்றது. தங்களின் விருப்பப்படி தாவரப்பொத்திகளை வடிவமைத்துக்கொள்வதோடு Aloevera முதல் Snakeplants வரை அனைத்து விதமான தாவரங்களையும் இங்கு பெற்றுக்கொள்ளலாம்.

Contact Number : 077 8787 456
Instagram : @prettyplantpotslk

Buds ‘N’ Plants


மூன்று தடவை இவர்களின் பொருளை வாங்கியதன் அடிப்படையில் கூறுகின்றேன், இங்கே வாங்குவதால் நீங்கள் ஒரு போதும் மனம் வருந்தப் போவதில்லை. அது மட்டுமல்லாது மூலிகை தாவரங்களை விரும்பும் அம்மாவாக இருப்பின் இதுவே உங்களுக்கான ஒரே இடம்.

Contact Number : 077 8787 456
Instagram : @budsnplants

BUD Lifestyles & Co


கொழும்பை மையமாகக்கொண்டு இயங்கி வரும் ஓர் இடம். தேவைக்கு ஏற்றபடி நிறம், வடிவம், அளவு போன்றவற்றை தெரிவு செய்து கொடுத்து மனதிற்கு இதமான பொருட்களை பெற்றுக்கொள்ளவும்.

Contact Number : 0777 324 123
Instagram : @budlifestyles.co

Adult Coloring Book

எம்மில் எத்தனை பேருக்கு வயதானவர்களுக்கு இப்படி ஒரு விடயம் உள்ளதென்பது தெரியும்? ஆம்! வயதானோருக்கான நிறம் தீட்டும் புத்தங்கள். பார்ப்பதற்கு சற்று வேடிக்கையாக இருந்தாலும் வயது வந்தோர் தங்களது நேரத்தை செலவு செய்வதற்கு சிறந்ததொரு பொழுதுபோக்கு.

Chapters
இலக்கம் 40/1, ஜோசப் வீதி, கொழும்பு 04. என்ற இடத்தில் இயங்கி வருகின்றது. இங்கு பல வகையான Coloring Books இனை பெற்றுக்கொள்வதோடு, நிறம் தீட்டும் பென்சில் வகைகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ளலாம்.

Contact Number : 011 5 679 495

Art World


அதிகளவிலான பொருட்கள் இருப்பதால், இப் புத்தகத்திற்கு பதிலாக வெறொரு Gift இனை தெரிவு செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆகவே போன விடயத்தை மாத்திரம் எடுத்துவிட்டு வரவும்.

Contact Number : 075 5968 789
Instagram : @artworld.lk

Bookholics.lk


அவர்களின் Kaleidoscope புத்தகங்களிற்கு நான் பரம விசிறி. Art Therapy, Peace & Calm Colouring மற்றும் Colouring க்கு தேவைப்படும் Designs களையும் பெற்றுக்கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு அவர்களின் Instagram Page ஐ நாடவும்.

Contact Number : 0777 728 737
Instagram : @bookholicssl

வகைப்படுத்தப்பட்ட தேநீர்

என் அம்மா உட்பட பலருக்கு, தேநீர் என்றால் உயிர். ஆகவே மிக அரிதான தேநீர் வகைகளை பெற்று சுவைக்க வைப்பது அவர்களை சந்தோஷப்படுத்தும் என நம்புகிறேன்.

Heladiv
பரவலான பரிசு வகைகளை கொண்டுள்ளது. Chamber வடிவில் மரப்பலகையால் செய்யப்பட்ட பரிசுகள் முதல், உருளை வடிவம் கொண்ட கிண்ணம் வரை  கண்களை கவரும் பல பொதிகளை காணலாம். Morroco Mint என்ற புதுவகை Flavour இனை வாங்கிப்பார்க்கவும்.!

Contact Number : 011 4427 600

Dilmah Ceylon Tea


இலங்கை வாழ் மக்களில், Dilmah இன் மகிமை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. Dilmah Gourmet, Green Tea, Organic and Boutique Teas மற்றும் Herbal Infusion போன்ற வகைகள் உங்கள் அம்மாவை சந்தோஷப்படுத்தும் என நம்புகிறேன்.

Contact Number : 011 4822 000
Instagram : @dilmahceylontea

Zesta Ceylon Tea


சுவைக்கு பிரபல்யமான ஓர் தேநீர் வகை. மரப்பலகையால் செய்யப்பட்ட பொதி மிக பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.
மேலும் Golden Tin மற்றும் Connoisseur Jars என்ற கிண்ணம், கண்ணை மயக்கும் பொருளாக இருக்கும்.

Contact Number : 011 4 702 400
Instagram : @zestaceylontea

Printed Canvas

பொதுவாக அதிகமானோர் கொடுக்கும் ஒரு Gift Item. ஆனால் எப்பொழுதும் இதுக்கு ஓர் கிராக்கி உண்டு. சமீபத்தில் எடுத்த புகைப்படம் இல்லாமல் பழைய புகைப்படம் ஒன்றை எடுப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக இருக்கும்.

Anim8


கொழும்பில் இந்த இடத்தை தெரியாதவர்கள் மிக அரிது. அண்மையில் Printed Canvas ஒன்றை கொள்வனவு செய்தேன். உண்மையாகவே கவரும் வண்ணமே காட்சியளித்தது . சிறந்த Quality இல் தேவைப்படின் Anim8 ஐ நாடுவது சிறந்தது. ஒருபோதும் உங்களுக்கு ஏமாற்றம் தரப்போவதில்லை.

Contact Number : 011 7390 600

Nine Hearts Colour Lab
அனைத்து விதமான size களிலும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். Canvas Print மட்டுமல்லாது Canvas Painting மூலமும் பெற்றுக்கொள்ள முடியும். அம்மாவின் Passport Size புகைப்படம் ஒன்றை பெருப்பிக்க வேண்டும் எனின், இதுவே உங்களுக்கான ஒரே இடம்.

Contact Number : 011 2588 722

Softwave
இவர்களது Canvas Print இற்கு, அடிக்கு 200 ரூபாய் அறவிடப்படுகிறது. தேவைக்கு ஏற்றபடி வடிவங்களை மாற்றி அமைக்கவும் முடியும்.

Contact Number : 011 250 2295

என்னால் முடிந்த அளவு அனைத்து விதமான Gift Item களையும், அவற்றை பெறக்கூடிய இடத்தினையும் கூறியுள்ளேன் என நம்புகிறேன். பாசத்திற்கு முன்னால் எல்லாமே தவிடுபொடி என்று கூறுவார்கள். பரிசுகள் கொடுக்க விட்டாலும் பரவாயில்லை அன்பில் எப்பொழுதிலும் குறை வைத்து விடாதீர்கள்.

மே தின வரலாறும் – ஆரம்பகாலத்தில் இலங்கையில் நிகழ்ந்த உழைப்பாளர் புரட்சியும்..

மே 1ம் திகதி, பலர் இதனை மே தினமாகவும், தொழிலாளர் தினமாகவும் ஓர் விடுமுறை நாளாக கொண்டாடி வருகின்றோம். எனினும் இதன் பின்னனியில் பல தொழிலாளர்களுடைய செல்வம், இரத்தம், உயிர் போன்றவை இழக்கப்பட்டுள்ளது என்பது எம்மில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கக்கூடும். இக் கட்டுரையின் மூலம் தொழிலாளர் தினம் உருவானதன் பின்னணியையும், தொழிலாளர் வர்கத்தினரால் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மாற்றங்கள் பற்றியும் நோக்குவோம்.

தற்போதைய உலகில், நாடுகளுக்கு இடையிலான மேலாதிக்க மோகம் நாளுக்கு நாள் வலுப்பெற்ற வண்ணமே உள்ளது. அநேகமான வல்லரசு நாடுகள், தனக்கு எதிரான நாடுகளை ஸ்திரமின்மை ஆக்குவதையே குறிக்கோளாக வைத்து இயங்கி வரும். அதே வேளை பொருளாதாரத்தடை விதிப்பதிலும் மும்முரம் காட்டி வருகின்றது. மனிதனின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக தோன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகள், மக்களை அழிவுகரமான பாதைக்கு கூட்டிச் செல்கின்றது என்பது வேதனை தரக்கூடிய விடயமாகும். இவ்வகையான முதலாளித்துவ செயற்பாடுகளினால் தொழிலாளர் வர்க்கத்தினரே அதிகம் பாதிப்படைந்தனர் என்பது யாவரும் அறிந்த ஓர் உண்மை. இச் சவால்களை எதிர்கொள்வதற்கு தொழிலாளர்களிடையே ஒற்றுமை என்பது ஓர் மிக முக்கியமான அம்சமாக விளங்குகின்றது.

19ம் நூற்றாண்டில் பெரும் தத்துவ மேதையாக விளங்கிய கார்ல் மார்க்ஸ் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஆதரவாக பல தத்துவங்களை எடுத்துரைத்தார். அத்தத்துவங்ளையே இடது சாரி கோட்பாடுகள் என்றும், அக் கோட்பாடுகளை பின்பற்றும் நாடுகளை கொம்யூனிஸ்ட் நாடுகள் என்றும் வரைவிலக்கணப் படுத்தப்படுகின்றது. மனித உழைப்பின்றி இந்த உலகில் எதுவுமே நிகழ முடியாது. இந்த உலகில் அனைத்தும் இயற்கையாக தோற்றுவிக்கப்பட்டவைகளாகும். மனிதர்கள் வாழ்வதற்கும், இன்பம் – துன்பம் என்பவற்றை உணர்வதற்கும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் காரணமாக அமைந்தது, மனித உழைப்பே ஆகும். இவ் ‘உழைப்பு’ மனிதர்களை அடிமைப்படுத்தும் விலங்காக மாற்றமடைய வைத்துள்ளது என்பது, அக் காலப்பகுதிகளில் வெகுவாக விமர்சிக்கப்பட்ட விடயமாகும். “உலகத் தொழிலாளர்களே உங்கள் உழைப்பு எனும் பெரும் மூலதனத்தைக் கொடுத்து, அதற்குப் பிரதிபலனாக உங்களுடைய உரிமைகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்கள். நீங்கள் இழப்பதற்கு கைவிலங்கைத் தவிர வேறொன்றும் இல்லை. அதே நேரம் நீங்கள் ஒன்றிணைந்தால், ஓர் பொன்னுலகம் எதிர்காலத்தில் சாத்தியப்படும்’’ என்று அறிவித்தவர் மார்க்ஸ்.

இதனைத் தொடர்ந்து முதலாளித்துவத்திற்கு எதிராக பல கிளர்ச்சிகள் அறிமுகமாக தொடங்கின. இதனடிப்படையில் 1986ஆம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்கள் மாத்திரமே வேலை செய்ய முடியும் என்ற கோஷத்துடன், ஐக்கிய அமெரிக்கவில் Hay Market Square என்ற இடத்தில் 40,000 க்கு அதிகமான தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து வீதிக்கு வந்தனர். இப் போரட்டத்தின் 3ம் நாள் இறுதியில், இனந்தெரியாத கூட்டத்தினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதல், தொழிலாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பாரியதோர் கலவரம் ஒன்றுக்கு வித்திட்டது. இதன் இறுதியில் 11 தொழிலாளர்கள் இறந்ததுடன் பலர் படுகாயமடைந்தனர். உலக வரலாற்றில் Hay Market Square விவகாரம் போன்றதொறு நிகழ்வொன்று தொழிலாளர் வர்கத்தினருக்கு ஆதரவாக இதுவரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே 1989 ஆண்டு முதல் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகின்றது.

இலங்கையின் ஆரம்ப காலத்தில் மேலைத்தேய நாடுகளின் ஆதிக்கத்தினால் முதலாளித்துவ கோட்பாடுகள் அதிகம் பின்பற்றப்பட்டாலும், தொழிலாளர் வர்க்கத்திற்கு சார்பான நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன. இலங்கையின் முதலாவது மே தின ஊர்வலம், 1927ம் ஆண்டு தொழில் சங்க தலைவரான குணசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் ஆண்கள் கோடிட்ட சிவப்பு பெனியன்கள் மற்றும் வெள்ளை சாரன் அணிந்ததாகவும் பெண்கள் சிவப்பு நிற ஜாக்கட் அணிந்து, மேள தாள நடனத்துடன் தற்போதைய Price Park முதல் Galle Face Green மைதானம் வரை நடைப்பெற்றதாக சித்தரிக்கப்படுகின்றது. இதுவே 1956 ஆம் ஆண்டு S. W. R. D. பண்டாரநாயக்க பிரதம மந்திரி காலத்தில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

1891 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி பிறந்த A. E. குணசிங்க, தொழிலாளர் வர்க்கத்திற்கு பாரிய சேவை செய்ததுள்ளார். இவரின் காலப்பகுதியிலேயே புகையிரத வேலைநிறுத்தம் மற்றும் துறைமுக வேலைநிறுத்தம் போன்ற வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. அநேக வேலைநிறுத்தங்கள் தோல்வியில் முடிந்தாலும் ஆங்கிலேயருக்கு எதிராக முக்கியமான சில வேலைநிறுத்தங்களை வென்றுள்ளார் என்பதோடு, இவரே இலங்கையின் தொழிலாளர் இயக்கங்களின் தந்தையாக அறியப்படுகிறார்.

இலங்கையில் ஆரம்ப காலத்தில் தொழிலாளர் வர்க்கத்தை மையமாகக் கொண்ட மே தின ஊர்வலங்கள் நடத்தப்பட்டாலும், தற்போதைய காலப்பகுதியில் அரசியல் செல்வாக்கினை காண்பிக்கும் மேடையாக மாற்றம் பெற்றுள்ளதோடு, அரைப் போத்தல் மதுபாணத்திற்கும், 1000 ரூபாய் பணத்திற்கும் கட்சிகளுக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டமாக எம் மக்கள் மாறியுள்ளனர் என்பது வேதனை அழிக்கின்றது. முதலாளித்துவம், சம உடமை போன்ற கோட்பாடுகளை புறந்தள்ளிவிட்டு, கூட்டுறவுகள் மூலம் நாட்டை ஒன்றுபடுத்தி சிறந்ததோர் எதிர்காலத்திற்கு நான், நீ, என எல்லோரும் ஒன்றுபடுவோம்.

சங்கடஹர சதுர்த்தி விரதம்

பிரபஞ்சத்தை தன்னுள் அடக்கியாளும் பேழை வயிறும், நம்பி வந்தோரை கை விடாது காத்து நிற்கும் துதிக்கையுடன், நான்கு விதமான பொருளுரைக்கும் நான்கு கரங்களதும் கொண்டு தியாகத்தின் ஆழம் தனை உலகிற்கு உரைத்திடும் தந்தம் தெரிய, புன்முறுவல் செய்த படி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரியும் அன்பின் வடிவமே விநாயகர். கணங்களின் அதிபதியாக நிற்பதனால் கணபதி எனவும் சிறு பிள்ளைகள் மீது அதீத அன்பு கொண்ட தெய்வம் என்பதால் பிள்ளையார் எனவும் விக்கினங்களை தீர்ப்பதால் விக்னேஸ்வரர் எனவும் பல நாமங்களால் போற்றப்படும் விநாயகரை வழிபட உகந்த நாள் தான் சங்கடஹர சதுர்த்தி.

ஒவ்வொரு மாதமும் இரு சதுர்த்தி விரதங்கள் வருகின்றன. ஆனால் இதில் சங்கடஹர சதுர்த்தி விரதமே விநாயகரை வழிபடுவதற்கான சிறப்பான நாளாகும். சங்கடஹர சதுர்த்தி என்ற சொல்லானது சங்கட + ஹர + சதுர்த்தி என பிரிபடும். இதில் சங்கட என்ற சொல் துன்பங்களையும் ஹர என்ற சொல் அழித்தலையும் சதுர்த்தி என்ற சொல் அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாளையும் குறிக்கின்றது (இங்கு சங்கடஹர சதுர்த்தி பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாளில் தான் அனுஷ்டிக்கப்படுகிறது). அதாவது சங்கடங்களை தீர்க்கும் சதுர்த்தி நாளே சங்கடஹர சதுர்த்தியாகும். இந்நாளினை பற்றி இன்னும் விரிவான தகவல்கள் இதோ,

சங்கடஹர சதுர்த்தி விரத நியதிகள்

*முதன் முதலில் விரதமிருக்க விரும்புபவர்கள் ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாளான சங்கடஹர சதுர்த்தியன்று தங்களது முதலாவது விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அதன் பின் பதினொரு சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து முடிக்க வேண்டும்.

* எல்லா விரதங்களை போலவே இந்நாளிலும் அதிகாலை எழுந்து நம்மை சுற்றியுள்ள வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மை செய்து குளித்து விட்டு சாமியறையினையும் சுத்தம் செய்து விளக்கேற்றி விரத நாளை தொடங்க வேண்டும்.

*விநாயகரை வழிபடும் போது அறுகம்புல் அல்லது வன்னி இலைகளை கொண்டு பூஜித்து அவருக்கு பிடித்த மோதகம், கொளுக்கட்டை என எதாவது ஒரு உணவினை நெய்வேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். இவற்றுள் எதையும் படைக்க இயலாதவர்கள் ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் அறுகம்புல் இட்டு விநாயகருக்கு படைக்கலாம்.

*விநாயகரை வழிபடும் போது சங்கடஹர சதுர்த்திக்குரிய காயத்திரி மந்திரமான,
“ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்திஹி ப்ரசோதயாத்” என உச்சரித்தபடி அல்லது விநாயகர் துதி பாடல்கள் பாடி வழிபட வேண்டும்.

*சங்கடஹர சதுர்த்தியன்று காலையிலிருந்து மாலை வரை உணவு உண்ணாது விரதமிருக்க வேண்டும்.

*மாலையில் கோயிலில் நடக்கும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

*கோயிலுக்கு சென்று விநாயகரை வழிபடும் போது அவரை 11 முறை வலம் வர வேண்டும்.

*முதலாவது விரத நாளன்று 11 நெய் விளக்குகள் ஏற்ற வேண்டும். அடுத்தடுத்து வரும் சதுர்த்தியில் ஒவ்வொரு விளக்காக 11,10,9… குறைத்து கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்வதால் எமது சங்கடங்களும் குறைந்துக் கொண்டே வரும் என்பது ஐதீகம். நம்மில் பலர் விளக்கேற்றும் போது எண்ணெய் ஊற்றி திரி போட்ட பின்பு தான் சந்தன குங்குமம் கொண்டு விளக்கினை அலங்கரிக்கின்றோம் ஆனால் உண்மையில், சந்தன குங்குமம் வைத்து எண்ணெய் ஊற்றிய பின்பே விளக்கில் திரியிட வேண்டும்.

*கோயிலுக்கு சென்று வீட்டிற்கு வந்த பின் பச்சரிசி, வெல்லத்தூள் மற்றும் ஒரு வாழைப்பழம் கலந்து பிசைந்து வீட்டில் உள்ள பசுவிற்கோ அல்லது தெருவில் உள்ள பசுவிற்கோ அதனை கொடுத்து வணங்க வேண்டும். இவ்வாறு செய்தல், சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் நற்பலன்களை அதிகரிக்கும்.

*இறுதியாக நெய்வேத்தியம் படைத்து தூபம் காட்டி விநாயகரை வணங்கி பால், பழம் சாப்பிட்டு விரதத்தினை முடித்து கொள்ளலாம்.

இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தினை அனுஷ்டித்து பல தேவர்களும் முனிவர்களும் கூட அருள் பெற்றுள்ளனர். அவ்வாறாக சங்கடஹர சதுர்த்தி விரதம் பற்றி புராணங்கள் கூறும் கதைகள்,

*அங்காரகன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பயனாக நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரக பதவியை அடைந்தான். அதனால் தான் செவ்வாய்க்கிழமை வருகின்ற சங்கடஹர சதுர்த்தி விசேடமானதாக கருதப்படுகிறது.

*தமயந்தி இவ்விரதமிருந்து நளனை அடைந்தாள்.

*விநாயகரின் உருவத்தை கண்டு கேலி செய்த சந்திரன் விநாயகரின் சாபத்திற்கு ஆளானான். அந்த சாபத்திலிருந்து சந்திரன் விமோசனம் பெற்ற நாளும் இந்நாளே ஆகும்.

*நான்காம் பிறையினை பார்த்தமையால் ஸ்ரீ கிருஷ்ணபிரான் அபவாதத்திற்கு ஆளானார். அதன் பின் இவ்விரத்தை அனுஷ்டித்தே அதிலிருந்து மீண்டு வந்தார்.

*சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையை பற்றி முருகப் பெருமான் முனிவர் ஒருவருக்கு எடுத்துரைத்தார்.

*வனவாசத்தின் போது பஞ்ச பாண்டவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் இவ்விரதம் பற்றி எடுத்துரைக்க அவர்கள் அதனை முறையே அனுஷ்டித்து தமது நாட்டை மீண்டும் அடைந்தனர்.

*இந்திரன் மற்றும் இராவணன் ஆகியோரும் இவ்விரதத்தை அனுஷ்டித்து பயன் பெற்றுள்ளனர்.

சங்கடஹர சதுர்த்தி விரதமிருப்பதனால் ஏற்படும் பயன்கள்

*உடலில் உள்ள நோய்கள் குணமாகி, உடல் வலுப் பெறும். நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

*கலக்கமான புத்தி மாறி தெளிவான அறிவும், கல்வி நடவடிக்கைகளில் சிறப்பாகவும் மிளிர முடியும்.

*வாழ்வில் உள்ள துன்பங்கள் தானே அகன்று விடும்.

*சாதிப்பதற்கு தடையாக நிற்கும் தடைகள் இல்லாமல் போகும்.

*இதுவரை வாழ்வில் பெற்ற சாபங்கள் நீங்கும்.

*எந்த துறையிலும் சிறப்பாக செயற்பட முடியும்.

*நினைத்த காரியங்கள் கைகூடும்.

*திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும்.

*சனி தோஷத்தால் ஏற்படும் தாக்கம் குறையும்.

*எந்த செயலை செய்தாலும் வெற்றி உண்டாகும்.

*வாழ்க்கை துணையை பிரிந்து வாழ்பவர்கள் மீண்டும் வாழ்க்கை துணையுடன் இணைவர்.

இவ்வாறாக பல பலன்களை பெற்றுத் தரும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தினை முறையே அனுஷ்டித்து விநாயகரின் அருளைப் பெறுவோம்.

கொழும்பில் மெக்ஸிகன் உணவு கிடைக்கும் இடங்கள்

மெக்ஸிகோவானது டகோஸ், பர்ரிடோஸ் மற்றும் டெக்கீலாவின் நிலம். மெக்ஸிகன் உணவு தனித்துவமான சுவை கொண்டிருப்பதனால் பிரபலமாக காணப்படுகிறது. சில மெக்ஸிகன் உணவகங்கள் இலங்கையில் காணப்பட்டபோதிலும் அந்த உண்மையான டெக்ஸ்-மெக்ஸ் ருசியை பூர்த்தி செய்ய இன்னும் சில விடயங்கள் உள்ளன. இந்த உணவகங்களில் சில, உண்மையான மெக்ஸிகன் சுவையை பிரத்தியேகமாக பூர்த்தி செய்கின்றன. மற்ற உணவகங்களும் சில அருமையான மெக்ஸிகன் உணவுகள் மற்றும் டெக்ஸ்-மெக்ஸ் உணவு வகைகளை வழங்குகின்றன. எனவே, பிரத்தியேக மெக்ஸிகன் உணவகங்கள் மற்றும் சில மெக்ஸிகன் உணவுகளை வழங்கும் விரிவான மெனுக்கள் கொண்ட உணவகங்கள் மற்றும் டெக்ஸ்-மெக்ஸ் சார்ந்த உணவுகளை வழங்கும் உணவகங்கள் பிரித்துப் பார்க்கலாம்.

பிரத்தியேகமான மெக்ஸிகன் உணவகங்கள்

டகோ பெல் (Taco Bell)

டகோ பெல்- நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையில் நிறுவப்பட்டது. அப்போதிருந்தே மூன்று கிளைகளை (ஹோர்டன் பிளேஸ், மரைன் டிரைவ் மற்றும் கல்கிசை) திறந்து, தரமான சேவையினை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். இன்றுவரை, எனக்கு எப்போதாவது மிருதுவான, மென்மையான சீஸ் சாப்பிட வேண்டுமென தோன்றினால், டகோ பெல்லிலிருந்து உணவைத் தேர்வு செய்கிறேன். பொதுவாக டகோ பெல்லில் எல்லா உணவின் மேலும் சீஸ் சேர்க்கிறார்கள்.

36, ஹார்டன் பிளேஸ், கொழும்பு 7
திறக்கும் நேரம் – காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை

3, 32 8 வது லேன், கொழும்பு 3
திறக்கும் நேரம் – காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை

89, காலி வீதி, தெஹிவல – கல்கிஸ்ஸ
திறக்கும் நேரம் – காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை

டகோ கெட் (Taco Cat)

டகோ கெட், வண்ணமயமான மற்றும் இன்ஸ்டாகிராம் படவரியில் பதிவிடக்கூடிய கண்களுக்கு கவர்ச்சிகரமான உணவை வழங்குகிறது. சில சுவையான டெக்ஸ்-மெக்ஸை உட்கொள்ள உங்களுக்கு ஆர்வமிருந்தால், டகோ கெட் அதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த புதுமைகள் நிறைந்த உணவகம், பிளாக் கேட் கஃபேயை அண்மித்திருக்கிறது. இங்கு ஹலால் மற்றும் தாவர உணவுகளையும் பரிமாறுகிறார்கள். உங்கள் உணவில் தேவையான, புரதம், சாலடுகள் மற்றும் சாஸ் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் சொந்த மெக்சிகன் விருந்தை விருப்பப்படி தேர்வு செய்யலாம்.

11, விஜேராம மாவத்தை, கொழும்பு 7
திறக்கும் நேரம் – மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை (திங்கள் கிழமைகளில் மூடப்படும்)

கிங் ஆஃப் தி மம்போ (King of The Mambo)

கோல் ஃபேஸ் ஹோட்டலில் அமைந்துள்ள கிங் ஆஃப் தி மம்போ அதன் ஹேப்பி ஹவர் சலுகைகள் மற்றும் லேடீஸ் நைட்ஸ் நிகழ்வுகளால் புகழ்பெற்றது. இது அற்புதமான, அழகான சுற்றுப்புறத்தைக் கொண்டுள்ளதுடன், பல சுவையான உணவுகளையும் பரிமாறுகிறது. மேலும் நம்பமுடியாத மெக்சிகன் உணவு வகைகளுக்கும் இந்த இடம் பெயர்போனது! அவர்களின் பீஃப் ரிப் டகோஸ் (Beef Rib Tacos), எம்மை வெகுவாகக் கவர்ந்த ஒன்றாகும். நீங்கள் அதை விரும்புவீர்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்! அனால் ஏன் நீங்கள் இங்கு கண்டிப்பாக வர வேண்டும்? எனக் கேட்டால், இவர்களின் தனித்துவமான கருப்பொருள் கொண்ட, கண்ணாடிகளில் ஊற்றப்பட்ட காக்டெய்ல்கள் அலாதியானவை. டெகிலாவின் தூறல்கள் நிறைந்த, உண்மையான மெக்ஸிகன் அனுபவத்திற்கு, பிளாக் மம்போ உங்களை கூட்டிச்செல்லும்.

கோல் ஃபேஸ் ஹோட்டல், 2, காலி வீதி, கொழும்பு 3
திறக்கும் நேரம் – மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை

ஒருங்கிணைந்த மெக்ஸிகன் உணவகங்கள்

தி பார்ன்ஸ்பரி (The Barnesbury)

கட்டாயம் சுவைக்க வேண்டிய டிஷ் : என்சிலதாஸ் (Enchiladas)

பிரத்தியேகமாக மெக்ஸிகன் உணவகம் இல்லையென்றாலும், பார்ன்ஸ்பரி அற்புதமான, மென்மையான என்சிலாதாஸை வழங்குகிறது. கனகச்சிதமாக சமைக்கப்படும் இந்த என்சிலாதாஸ்கள், கோழி மற்றும் கிரீமியான மீன் என இரண்டு சுவைகளில் கிடைக்கின்றது. இந்த டிஷ் மீது இடப்படும் அதிக மசாலா, நாவூறும் சுவையைத் தருகிறது.

91, பார்ன்ஸ் பிளேஸ், கொழும்பு 7
திறக்கும் நேரம் – காலை 7 மணி முதல் 12 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழன் வரை), காலை 7 மணி முதல் 1 மணி வரை (வெள்ளி மற்றும் சனிக்கிழமை)

க்ரொஸ்ரோட் கஃபே அன்ட் ரெஸ்டோரன்ட் (Crossroads Café and Restaurant)

சுவைக்க வேண்டிய டிஷ் – சிக்கன் ஃபாஜிதாஸ் மற்றும் சிக்கன் என்சிலதாஸ் (Chicken Fajitas and Chicken Enchiladas)

ஒரு சுவையான கேடரர்ஸ் ஸ்தாபனம். க்ரொஸ்ரோட்ஸ் கஃபே மற்றும் உணவகம் ஒரு பரந்த மெனுவைக் கொண்டுள்ளது, இதனால் நீங்கள் தேர்வுக்கு குழப்பமடைய வாய்ப்பிருக்கிறது. அத்தகைய மெனுவில் மிகவும் முக்கியமாக பரிந்துரைக்கப்பட்ட இரண்டு உருப்படிகள் உள்ளன: சிக்கன் ஃபாஜிதாஸ் மற்றும் சிக்கன் என்சிலதாஸ். குவாக்காமோல், பீன்ஸ் மற்றும் புளிப்பு கிரீம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு மாபெரும் டோர்ட்டில்லாவில் மூடப்பட்ட கோழியின் வறுத்த கீற்றுகள் அடங்கும் டிஷ் ஒன்று. மற்றையது மொஸெரெல்லா சீஸ், மெக்ஸிகன் சல்சா மற்றும் தக்காளி சாறு ஆகியவற்றைக் கொண்டு வறுக்கப்பட்ட கோழிகளைக் கொண்டது. உங்கள் வாயில் இன்னும் தண்ணீர் ஊறுகிறதா? மலிவு விலையில் சீஸி மெக்ஸிகன் உணவுகளை இங்கு நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்!

292, நாவல வீதி, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை.
திறக்கும் நேரம் – காலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை

மெக்ஸிகன் பியூஷன்

ஸலாட் மாப்ஸ் (Salad Maps)

ஸ்டார் மெக்சிகன் டிஷ் – மெக்சிகன் டகோ சாலட்

இது ஒரு குறிப்பிட்ட வகை உணவுடன், குறிப்பிட்ட பொருள்களை ஒன்றிணைத்து சாலட் முறையில் உணவு பரிமாறுமிடம். சாலட் மாப்ஸ், நாடு சார்ந்த “உலகின் சாலட்களை” வழங்குகிறது. அதிலொன்றுதான் மெக்ஸிகோ. அவர்களின் மெக்ஸிகன் டகோ சாலட் கட்டாயம் சுவைக்க வேண்டிய விருந்தாகும். இது டோர்ட்டில்லா சிப்ஸ், மூன்று வகையான சீஸ், பெரி பெரி சிக்கன், கீரை, இனிப்பு சோளம், பீன்ஸ், பெல் பெப்பர்ஸ், செர்ரி தக்காளி மற்றும் மெக்ஸிகன் டிரஸ்ஸிங் ஆகியவற்றை உள்ளடக்கியது! நாம் இன்னும் சொல்ல வேண்டுமா? அவற்றை நீங்கள் Pick Me மற்றும் Uber Eats மூலம் ஓர்டர் செய்து கொள்ளலாம்.

திறக்கும் நேரம் – காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை (திங்கள் முதல் சனி வரை)

கிரிக்கெட் கிளப் கஃபே (Cricket Club Café)

ஸ்டார் மெக்ஸிகன் டிஷ் – மெக்கல்லமின் மெக்ஸிகன் ரொட்டி மற்றும் பவுண்டரி பீஃப் அல்லது சிக்கன் நாச்சோஸ். (McCullum’s Mexican Wrap and Boundary Beef or Chicken Nachos)

கிரிக்கெட் கிளப் கஃபே ஏராளமான கிரிக்கெட் சார்ந்த உணவுகளை வழங்குகிறது. இங்கு பாவிக்கும் மசாலாவின் சுவை அலாதியானது. மெக்கல்லமின் மெக்ஸிகன் ரொட்டி, உங்கள் ரூபாய்க்கு மதிப்புள்ள ஒரு திருப்தியான உணவாகும். பவுண்டரி பீஃப் மற்றும் சிக்கன் நாச்சோஸ் ஆகியவை டெக்ஸ்-மெக்ஸ் உணவாகவும், இன்னொருவருடன் பகிர்ந்து உண்ணக்கூடிய கொள்ளளவுடையதாகவும் காணப்படுகிறது. மாட்டிறைச்சி அல்லது கோழியைத் தேர்வுசெய்துகொள்ளலாம்.

12, fபிலவர்ஸ் வீதி, கொழும்பு 7
திறக்கும் நேரம் – காலை 7.30 முதல் இரவு 11.30 வரை

பிலேய்ட்ரிக்ஸ் ஸ்போர்ட்ஸ் பார் அன்ட் கஃபே (Playtrix Sports Bar and Café)

ஸ்டார் மெக்ஸிகன் டிஷ் – ஃபுள் ஹவுஸ் மெக்ஸிகன் ஹாட்-டோக்

உணவருந்த எனக்கு பிடித்த இடங்களில் ஒன்றான பிளேய்ட்ரிக்ஸ் ஸ்போர்ட்ஸ் பார், ரூபாய்க்கு மதிப்புள்ள சேவையை வழங்குகிறது. 12 அங்குல நீளமுள்ள மெக்ஸிகன் ஹாட்-டோக், அமெரிக்க மற்றும் மெக்ஸிகனின் சரியான கலவையாகும். நொறுக்கப்பட்ட நாச்சோஸ், ஜலபெனோஸ், வறுத்த வெங்காயம், பூண்டு மற்றும் உருக்கிய சீஸ் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட இந்த கால் நீள பன், ஒரு முழுமையான விருந்தாகும்! நீங்கள் சி.சி.சி.க்கு போகும்போது மெக்ஸிகன் உணவை விரும்பினால், பிளேய்ட்ரிக்ஸை நாடவும். ‘சில்லாக’ ஒரு பீர் குடித்துக்கொண்டே, உணவினை சுவைத்திடலாம்.

லெவல் 1, கொழும்பு சிட்டி சென்டர், 137, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கொழும்பு 2

24 மணி நேரம் திறந்திருக்கும்!

இதோ உங்கள் மெக்ஸிகானோவைப் பெறக்கூடிய இடங்களின் பட்டியல்! உங்கள் தேர்வுகளை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

 

ஆண்கள், பெண்களிடம் எதிர்பார்க்கும் 10 விடயங்கள்

ஒரு பெண்ணின் மனதை புரிந்துக் கொள்வது எவ்வளவு கடினமோ அது போலவே ஓர் ஆணின் மனதை புரிந்து கொள்வதும். அதிலும் ஆண்களுக்கு செயல்திறன் அதிகமானதாகவும் மொழித்திறன் பெண்களை விட குறைவானதாகவுமே காணப்படுகின்றது. ஒரு ஆண் தான் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் தன் மீது தவறான எண்ணம் தோன்றி விடக் கூடாதென தீர ஆலோசித்து அதன் பின்னே கூறுகிறான். ஒரு ஆணின் உள் மன எண்ணங்களை அவனுடன் இருக்கும் நண்பர்கள் மற்றும் மனைவி போன்ற நெருங்கிய உறவுகள் கூட அறிந்திருப்பதில்லை. இவ்வாறு ஆண் சொல்லாமலே பெண்களிடம் எதிர்பார்க்கும் 10 விடயங்கள் பற்றி இந்த பகுதியில் நாம் காணலாம்.

01.அவனுக்கான அங்கீகாரம்

ஒரு குடும்பத்திற்காக அதிகபட்சம் உழைப்பது ஆண் தான். உங்கள் வாழ்வில் நீங்கள் துரத்திக் கொண்டிருக்கும் கனவுகளுக்கு பக்கபலமாகவும், உதவிகரமாகவும் இருப்பதும் ஆண் தான். இவ்வாறாக தனது பங்கினை சிறப்பான முறையில் செலுத்தி வரும் ஆணுக்கு அதற்கான அங்கீகாரம் எளிதில் கிடைப்பதில்லை. அவன் இதனை உங்களிடம் கூறாது இருப்பினும் தனக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என உள் மனதில் எதிர்ப்பார்ப்பவனாகவே ஆண் இருக்கிறான் ஆகவே ஆணிற்கான அங்கீகாரத்தை உங்களால் முடிந்த வரை வழங்க முயற்சியுங்கள். இது அவனது செயல்கள் மேலும் சிறப்பாகவும், அவனுக்குள் சுயமதிப்பு வளரவும், உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கவும் உதவும்.

02.அவன் காயப்பட்டு இருக்கும் போது

உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதர்களுமே எதாவது ஒரு சமயத்தில் ஒரு தவறினை செய்து விடுகின்றனர். இதற்கு ஆண் ஒன்றும் விதிவிலக்கல்ல. அவ்வாறாக ஆண் தவறு செய்யும் போதும், மனதளவில் காயமுற்று இருக்கும் போதும் அவனது தவறை சுட்டிகாட்டி மேலும் காயப்படுத்தாது, அவனது காயங்களுக்கு மருந்திடுபவையாக உங்களின் வார்த்தைகள் அமைய வேண்டும். இதையே ஆணும் எதிர்ப்பார்க்கிறான். இவ்வாறு செய்யும் போது அவன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும், அதே தவறை மீண்டும் செய்யாதிருக்கவும் உதவுகிறது.

03.தனிமையை நாடும் போது

நம்மில் பலர் அதிக கோபத்திற்கு ஆளாகும் போதும் எதாவது ஓர் விடயத்தில் குழப்பத்தில் இருக்கும் போதும் தனிமையை நாடுகின்றோம். சில சமயங்களில் எவராலும் தர முடியாத நல்ல ஓர் முடிவினை தனிமை இனங்காணச் செய்கிறது. சிலர் கோபம் குறைந்து பழைய நிலைக்கு திரும்பவும் தனிமையே உதவுகிறது. இவ்வாறு ஆண் எப்போதாவது தனிமையை நாட விரும்பும் போது அவனை தனிமையில் இருக்க விடுங்கள். அது அவனுக்கு அவனை இனங்காண பெரிதும் உதவும்.

04.அழகும் அறிவும்

பொதுவாக ஆண்கள் அழகும் அறிவும் கலந்த பெண்களையே எதிர்ப்பார்க்கின்றனர். இதில் அழகு என்பது முக்கியத்துவம் வகிக்கிறது. என்ன தான் அழகு முக்கியமல்ல என ஆண் கூறினாலும் அவன் கண்களுக்கு முதலில் புலப்படுவதும், அவன் அதிகமாக எதிர்பார்ப்பதும் அழகு தான். உங்களை நீங்களே அழகு செய்வதில் அவதானமாக இருங்கள். உங்கள் உடை, நடை, பாவனை என ஒவ்வொரு விடயத்திலும் அழகு சேர்க்க மறவாதீர்கள்.

05.மன்னிப்பு கேட்டல்

நாம், தவறு நம்முடையதாகவே இருந்தாலும் மன்னிப்பு கேட்பது ஏதோ கௌரவ குறைச்சலை ஏற்படுத்துவதாக உணர்கிறோம். ஆண்களுக்கு தவறு தன்னுடையதாக இருக்கும் போது மன்னிப்பு கேட்கும் பெண்களை மிகவும் பிடிக்கும். அதனால் மன்னிப்பு கேட்க வேண்டிய தருணங்களில் மன்னிப்பு கேளுங்கள்.

06.புகழ்ச்சி

ஆணுக்கு தன்னை யாராவது புகழ மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பு இருந்துக் கொண்டே இருக்கும். அவன் ஏதாவது ஒரு பணியை அல்லது செயலொன்றை சிறப்பாக செய்யும் போதும், நல்ல சிந்தனைகளை உங்களுக்கு ஆலோசிக்கும் போதும் அவனை புகழ்ந்து தள்ளுங்கள். இது ஆணுக்கு உங்கள் மீதான அன்பினை அதிகரிக்கச் செய்யும்.

07.அவனது நண்பர்களுடன் நேரம் கழித்தல்

ஆண் தனது நண்பர்களுடன் நேரம் செலவிடுவதை விரும்புகிறான். ஏனெனில் உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள முடியாத பல விடயங்களை அவன் தனது நண்பர்களுடன் தான் பகிர்ந்துக் கொள்கிறான். அதனால் ஆண் தனது நண்பர்களுடன் நேரம் செலவிட விரும்பும் போது அதனை தடை செய்யாதீர்கள். அதற்கு அனுமதி வழங்குங்கள்.

08.அவனை கையாளும் போது..

ஆணின் தோற்றத்தை பாராட்டும் நபர்கள் அவனது வாழ்வில் மிகவும் குறைவு தான். அவனது தோற்றத்தை அடிக்கடி பாராட்டுங்கள். எந்த உடையில் அவன் அழகாக இருப்பான், என்னென்ன மாற்றங்கள் அவனுக்கு தேவைப்படுகின்றன என்பதனை பற்றி அவனுக்கு ஆலோசியுங்கள். இதனால் அவனது தோற்றம் பற்றி அவனுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மை நீங்கி விடுகிறது. அவன் பணி இடங்கள் விட்டு வீடு திரும்பும் போதும், அவனது வாழ்வில் சோர்ந்து உங்கள் மடி சாயும் போதும், குழந்தையாக பராமரியுங்கள். அவன் தலை வருடி அன்பான வார்த்தைகளை பேசுங்கள். உங்கள் அன்பால் அவன் முழுமை பெறுவதால், உங்களை விட்டு பிரிவதற்கான வாய்ப்பும் குறைவாகி உறவு நீடித்து நிலைக்கிறது.

09.தனித்துவம்

ஆண்களுக்கு எப்போதும் தனித்துவமான குணாதிசயங்களோடு இருக்கும் பெண்களை மிகவும் பிடிக்கும். தனக்கான சவால்களை தானே எதிர்கொண்டு, எவரையும் சார்ந்திராது நடந்து கொள்ளும் பெண்கள் மீது ஆண்களுக்கு ஓர் இனம் புரியாத ஈர்ப்பு உருவாகுகிறது.

10.வார்த்தைகள்

ஆண் உங்களுக்காக செய்யும் செயல்களுக்கு நன்றி கூறுங்கள். எப்போதும் அவன் தான் முக்கியம் எனவும், அவன் தான் உங்கள் வாழ்நாளின் தேவை எனவும் அவனிடம் மனந்திறந்து கூறுங்கள். இவ்வாறான வார்த்தைகளே ஆண் உங்களிடம் எதிர்ப்பார்ப்பவை ஆகும்.

மேற்கூறப்பட்ட 10 விடயங்களுமே ஓர் ஆண், பெண்ணிடம் எதிர்பார்த்தும் வெளிச் சொல்லாமல் இருப்பவை. இது போன்ற விடயங்களை மனந்திறந்து பேசுவதும், மேற்கூறியபடி நடந்துகொள்ள முயற்சித்தலும் ஒரு ஆணோடு நெருங்கிப் பழகுவதற்கும், அவனை புரிந்து கொள்வதற்கும் பெரிது உதவியாக இருக்கும்.

 

கொழும்பில் செல்லப்பிராணிகளை அழைத்துப் போகக்கூடிய உணவகங்கள்

நம்மில் பலர், நாம் வளர்க்கும் விலங்குகள் மீது அதீத அன்பும் அக்கறையும் கொண்டவர்களாக இருக்கிறோம். இதனால் நாம் வெளியில் செல்லும் போது எங்களுடைய செல்லப் பிராணிகளையும் எங்களுடன் அழைத்து செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றோம். இனிமேல் கொழும்பில் உங்கள் செல்லப் பிராணிகளையும் அழைத்துப் போகக் கூடிய வகையிலான உணவகங்களை தேடுவதில் கவலை வேண்டாம். உங்களுக்காக நாங்கள் எங்களது குழுவினருடன் இணைந்து கொழும்பிலுள்ள செல்லப்பிராணிகளை உடன் அழைத்துச் செல்லக் கூடிய கபே, உணவகங்கள் சிலவற்றின் பட்டியலை தயாரித்துள்ளோம்.

டயோ பியர் (Tayo Bear)

2019ஆம் ஆண்டு கிரிகோரியன் வீதியில் டயோ பியர் திறக்கப்பட்டது. இது நாய் பிரியர்களுக்கும் நாய்களினை வளர்க்கும் உரிமையாளர்களுக்கும் சிறந்ததொரு அனுபவத்தினை பெற்றுத்தரக் கூடிய இடமாகும். இங்கு இரண்டு வெவ்வேறு மெனுக்களின் மூலம் ஆரோக்கியமான உணவுகள் பரிமாறப்படுகின்றன. டயோ பியர் பற்றிய மேலதிகமானவற்றை @tayobear எனும் அவர்களின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் காணலாம்.

திறந்து வைக்கப்படும் நேரம் : காலை 10.30மணி முதல் இரவு 9.30மணி வரை (வியாழக்கிழமை ஓய்வு நாளாகும்)

தொலைபேசி : 0771 992 907

 

பெப்பர்மின்ட் கபே (Peppermint Cafe)

முதன் முதலில் கொழும்பு 7இல் திறக்கப்பட்ட 24 மணி நேர கபே இதுவாகும். நாங்கள் பட்டியல் படுத்தியுள்ள கபேக்களில் செல்லப்பிராணிகள் மீதான நட்பு ரீதியான ஓர் பிணைப்பினை கொண்டுள்ள சிறந்த கபே இதுவே. இங்கு மனிதர்களுடைய வயிற்றினை நிரப்புவதற்கென சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் இருப்பது போலவே செல்லப்பிராணிகளுக்கெனவும் தனி மெனுவே உண்டு.

24 மணி நேரமும் திறந்திருக்கும்.

தொலைபேசி : 0756 320 420

 

ப்ளஸ் நைன் ப்ஹோர் (Plus Nine Four)

கொழும்பு நகரிலுள்ள செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்லக் கூடிய மற்றுமொரு கபே தான் ப்ளஸ் நைன் ப்ஹோர். இது 2018ஆம் ஆண்டு மே மாதம் கபே கும்பூவின் (Cafe Kumbuk) சிஸ்டர் கபே ஆக திறக்கப்பட்டது. இங்கு சிறப்பான உள்நாட்டு உணவுகளை ருசிக்க முடியும். இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள உள்ளக மற்றும் புறத்தோற்றமானது நமது செல்லப்பிராணிகளை மிகவும் சௌகரியமாக உணர வைக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

திறந்து வைக்கப்படும் நேரம் : காலை 9மணி முதல் மாலை 5மணி வரை (திங்கள் – ஞாயிறு)

தொலைபேசி : 0112 554 225

 

சுகர் பீச் (Sugar Beach)

நாவூற வைக்கக் கூடிய உணவுகள், அற்புதமான கொக்டைய்ல் மற்றும் சிறப்பான சேவை ஆகியவற்றுடன் கடலின் அழகை பார்த்த படி ஓர் பொழுதினை கழிக்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் உங்கள் அன்புக்குரிய செல்லப்பிராணிகளுடன் பொழுதினை கழிக்க கூடியதாகயிருந்தால்? இவ்வாறாக தங்களது செல்லப்பிராணிகளை கடற்கரையோரம் வாக்கிங் கூட்டிக் கொண்டு சென்று உணவு உண்ண விரும்பும் பலருக்கும் சுகர் பீச் ஒரு சிறந்த தேர்வு.

Open hours: காலை 10மணி முதல் நள்ளிரவு 12மணி வரை (திங்கள் – வெள்ளி), காலை 9மணி முதல் நள்ளிரவு 12மணி வரை (சனி– ஞாயிறு)

தொலைபேசி : 0117 035 135

 

ப்ளெக் கெட் கபே (Black Cat Cafe)

இவர்கள் உங்களது செல்லப்பிராணிகளை உணவகத்திற்கு வெளியில் மட்டுமென அனுமதிக்கும் போது கூட இவர்கள் செல்லப் பிராணிகள் மீதான நட்பு ரீதியான கபே ஆகவே கருதப்படுகின்றனர். இங்கு ஒரு கப் காபி மற்றும் நீங்கள் தெரிவு செய்யும் ஒரு ஜோடி சன்ட்விச் வகை சிறப்பான முறையில் பரிமாறுவதோடு அதை நீங்கள் உங்கள் செல்லப்பிராணிகள் பக்கத்திலிருந்தே ருசிப்பதையும் உறுதி செய்கின்றனர்.

Open hours: காலை 8மணி முதல் இரவு 10மணி வரை (திங்கள் – ஞாயிறு)

தொலைபேசி : 0112 675 111

ஸ்பின்னர் கபே (Spinner Cafe)

இதுவும் செல்லப்பிராணிகள் மீதான நட்பு ரீதியான கபேக்களில் ஒன்றாகும். இங்குள்ள புறப்பகுதியானது நீங்கள் உங்கள் செல்லப்பிராணியுடன் சௌகரியமாக மற்றும் சிறப்பாக பொழுதை கழிக்க சிறந்த தேர்வாகயிருக்கும்.

திறந்து வைக்கப்படும் நேரம் : 6மணி முதல் இரவு 10மணி வரை (திங்கள் – ஞாயிறு)

தொலைபேசி : 0768 716 266

 

கபே ஷோஷயில் (Cafe Sociale)

செல்லப்பிராணிகளை மனதில் வைத்து தங்களது உணவுப் பட்டியலினை தயாரிக்கும் கபேக்களில் இதுவும் ஒன்றாகும்.

திறந்து வைக்கப்படும் நேரம் : காலை 8மணி முதல் இரவு 10மணி வரை (திங்கள்– ஞாயிறு)

தொலைபேசி : 0774 445 788

மேற்கூறப்பட்ட ஒவ்வொன்றும் செல்லப்பிராணிகள் மீதான நட்பு ரீதியான கபேக்களாகும். எங்களுடைய இந்த ரௌன்ட் அப் முடிவுகள் உங்களுக்கும் உங்கள் செல்லப்பிராணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

‘ஷ்ரிம்ப் டாட்டீஸ் பார்’ – Shrimp Daddy’s Bar

இஸ்ஸோ (Isso), அவர்களது தளத்தின் மேற்பகுதியில் புதிதாக ஒரு பார் பகுதியினை அமைத்துள்ளனர். இலங்கையின் கொக்டெயில்கள் அடங்கிய ஓர் சிறப்பான பட்டியலினை இவர்கள் ஒழுங்கமைத்துள்ளனர். இங்கு நாங்கள் சென்றிருந்த போது அவர்களது பட்டியலில் உள்ள சிக்னேச்சர் கொக்டையில் வகைகளில் ஒவ்வொன்றிலும் ஒன்றை ஓர்டர் செய்தோம்.

இவை ஒவ்வொன்றினதும் விலை 990 ரூபாய் ஆகும். நீங்கள் இந்த கொக்டையில்களில், இலங்கை அராக்கினை மேலதிக உள்ளீடாக சேர்க்கும் போது சாதாரண விலையிலிருந்து 1490 ரூபாயாக மாற்றமடைகிறது.

ஹிரிகெட்டிய (Hiriketiya)

இந்த கொக்டையிலில் அல்கஹோல் மற்றும் பழச்சாறு ஆகிய இரண்டும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருந்தன. இந்த முழு கொக்டையிலும் சிட்ரஸ் பழ சுவையை கொண்டிருந்தது. இதன் மேல் காணப்பட்ட தேங்காய் மற்றும் ஜின்னின் சுவை முதல் சிப்பிலேயே உங்கள் நாவிற்கு புதியதொரு அனுபவத்தை பெற்றுத் தரும். இது வெறும் ஒரேஞ்ச் ப்ளேவர் மட்டுமன்றி வெனிலா மற்றும் எலுமிச்சை சாறு என உங்கள் நாவிற்கு விருந்தளிக்க கூடியதாகும்.

கொள்ளுப்பிட்டிய (Kollupitiya)

பட்டியலில் காணப்பட்ட இனிப்பான ஓர் கொக்டைலாக இது இருந்தது. இதில் நடுநிலையில் சிட்ரஸ் இருந்த போதும் ஒவ்வொரு சிப்பிலும் தேனின் சுவையினை அனுபவிக்க முடிந்தது.

யால (Yala)

வாயூற வைக்கும் கொக்டையிலில் அம்பரெல்லா அச்சாறு! இந்த கொக்டையிலில் ஒரு சிறப்பான ஸ்நெக் ப்ளேவரினை உருவாக்க ஆனைக்கொய்யா சேர்க்கப்பட்டிருந்தது. இதனை கொக்டைல் என சொல்வதை விட சிற்றுண்டி என்றே சொல்ல வேண்டும். இதன் விளிம்பைச் சுற்றி தூவப்பட்டிருந்த உப்பு மற்றும் மிளகின் சுவை சட்டென தலை முதல் கால்களை தொட்டு விட்டு வரும்.

திகன (Digana)

இது ஸ்ட்ரோங்கான சிட்ரஸ் சுவையினை கொண்டிருந்ததோடு இதன் விளிம்பில் உப்பு மற்றும் மிளகு தூவப்பட்டிருந்தது. இதில் இருந்த ஒவ்வொன்றும், ஒன்றுடனொன்று சேர்ந்து தந்த சுவை சிறப்பானதாக இருந்தது. பெண்களது இரவு நேர நைட் அவுட் இன்ஸ்டகிராம் புகைப்படத்திற்கு இது பொருத்தமானதாக இருக்கும்.

அறுகம் பே (Arugam Bay)

இந்த கொக்டைலை தயாரிக்கும் போது நான் பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென க்ளாஸில் முட்டையின் வெண்கருவினை இட்டனர். இதைக் கண்டவுடன் முதலில் திடுக்கிட்டு அதிர்ந்து போனேன். எனக்கு பிறரை பற்றி தெரியாது ஆனால் எனக்கு என்னுடைய உணவு சரியாக சமைக்கப்பட வேண்டும். இந்த கொக்டைல் முதலில் பெரிதாக ஓர் அனுபவத்தை பெற்றுத் தராது. ஆனால் குடித்து முடித்ததும் ஓர் கசப்பான உணர்வினை நாவில் விட்டுச் செல்கிறது. இதில் முட்டை வெண்கருவானது, மேற்பரப்பில் இருக்கும் நுரையின் செறிவினை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அதற்கான காரணம் இந்த கொக்டையிலை குடிக்கும் போது, அது புதியதொரு சுவையினை ஏற்படுத்துவதற்காகவே. இது ஸ்டைலிஷ்ஷான, சிங்கிள், ஸ்குயார் சன்க் ஐஸுடன் பரிமாறப்படுகிறது. இதனை ஒரே கதியில், வேகமாக குடித்து டவுன் செய்வது சிறப்பானது.

வெலிகம (Weligama)

இது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும்! புளிப்பு சுவையை விரும்பி உட்கொள்பவர்களுக்கு இது ஓர் சிறந்த தேர்வாகும். இதிலுள்ள பெஷன் பழம், கொக்டையிலின் செறிவினை அதிகரிப்பதோடு, இதிலுள்ள துளசி இலைகள் ஒரு வகையான பாரம்பரிய சுவையினை உணரச் செய்கிறது. இதன் ஒவ்வொரு சிப்பிலும் இதனை அனுபவிக்க முடியும்.

உனவட்டுன (Unawatuna)

இந்த கொக்டைல் பெரிதாக என்னை ஈர்க்கவில்லை. என்ன தான் இது இஸ்ஸோவின் சிக்னேச்சர் கொக்டைய்ல்களில் ஒன்றாக இருந்தாலும், இந்த கொக்டையிலில் கலவைகள் ஒன்றுடன் ஒன்று அதிகமாக கலந்ததாக உணர்கிறேன். இதன் சுவையினை அதிகரிக்க இன்னும் எதாவது ப்ளேவர்களை மேலதிகமாக சேர்த்தால் சிறப்பானதாக இருக்கும்.

தம்புள்ள (Dambulla)

இந்த கொக்டையிலினை குடிக்கும் போது ஒரு கடலோரத் தீவுகளில் (tropical island) இருக்கும் உணர்வு தோன்றுகிறது. இங்கு சூரியனும் மணலும் கடலும் தான் மிஸ்ஸிங்.  இந்த கொக்டைலுக்கு ஏன் ஏதாவது ஒரு கடற்கரை நகர்ப்பகுதிகளின் பெயர் வைக்கப்படவில்லை என தெரியவில்லை. இதில் உள்ள அன்னாசிப்பழச் சுவை, தேங்காயின் அரை இனிப்புச் சுவை மற்றும் அராக்கின் தோராயமான சுவை அனைத்துமே கலந்து சிறப்பான ஓர் அனுபவத்தை பெற்றுத் தருகிறது. நாங்கள் ருசித்த கொக்டைல்களில் இது தான் சிறப்பானது

சுற்றுப்புறம் (Ambiance)

கீழ்தளத்தில் காணப்படும் பிரகாசமான அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. Shrimp Daddy’s பகுதியானது, மங்கலான விளக்குகள் மற்றும் அழகான க்ரானைட் பாரினை கொண்டுள்ளது. அத்துடன் அழகான இருக்கை அமைப்பும் வௌிப்புற பகுதியும் (outdoor area) கொண்டுள்ளது. இது வெறும் ஆரம்ப நிலை தான். இவர்களது வருங்கால வளர்ச்சியினை காண நாங்கள் மிகவும் ஆவலாக உள்ளோம்.

குறிப்பு – யாலவினை (Yala) முயற்சியுங்கள் – ‘சும்மா தெ(வெ)றியா இருக்கும்’.

 

 

இலங்கையில் அருகி வரும் வாசிப்பின் முக்கியத்துவம்

11ம் நூற்றாண்டில் ‘முறுசாக்கி சிகிபு’ என்ற ஜப்பானிய பெண்மணியினால் ‘The tale of Genji’ என்ற நூல் உலகின் முதலாவது நாவலாக கருதப்படுகின்றது. அன்று முதல் வாசித்தல் என்ற பண்பு, மக்களின் வாழ்வியலில் நீங்கா இடம் பிடித்துள்ளது. புத்தகம் வாசித்தல் என்பது ஓர் மனிதனிடம் இருக்கக்கூடிய சிறந்த பண்புகளில் ஒன்றாகும். இப் பழக்கம் மக்களிடையே குறைவாகவே காணப்படுகின்றபோதிலும், அதிகமான மக்களுக்கு புத்தகமே சிறந்த நண்பனாக சித்தரிக்கப்படுகிறது. ஆகவே இக் கட்டுரையில் புத்தகம் வாசிக்கும் பண்புகளை கண்டறிவதோடு, அதற்கு தாக்கம் செலுத்துகின்ற காரணிகளைப் பற்றி சற்று நோக்குவோம்.

இலங்கையை பொருத்தளவில் ‘வாசிப்பு’ என்ற பதத்தினூடாகத்தான் கல்வி மக்களிடையே கூர்ப்படைந்தது என்பது யாவரும் அறிந்த விடயமாகும். ஆதி கால மக்கள் பகுத்தறிவற்ற மக்களாகவே விளங்கினர். நகரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தொடர்ந்து, மக்கள் அதிகமாக நகரம் சார் நாட்டம் கொண்டனர். எனினும் நகரங்கள்; பதாகைகள், குறியீடுகள், இலக்கங்களைக் கொண்ட பொறிமுறையை அடிப்படையாகக்கொண்டு விளங்கியதால், மக்கள் அதனை வாசித்து, கிரகித்து செயல்படும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை. கற்றால் மாத்திரமே நகரங்ளில் தமது அன்றாட வாழ்க்கையை நிறைவேற்ற முடியும் என்ற சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதனடிப்படையில் மக்கள் கல்வியின் பால் ஈர்க்கப்பட்டு பல கல்விமான்கள் உருவாகத்தொடங்கினர். இதனடிப்படையில் இலங்கையின் தற்போதைய கல்வி கற்றோர் விகிதம் 91.9% என்பது, உண்மையிலே பெருமை கொள்ளக்கூடிய ஓர் விடயமாகும்.

இலங்கையின் பொக்கிஷங்களாக புராதன நூலகங்கள் எப்போதும் விளங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண நூலகம் தெற்காசியாவின் மிகப்பெரிய, முக்கிய நூலகமாக இன்றுவரை கருதப்படுகின்றது. மறுமலர்ச்சி காலங்களில் உலகின் வர்த்தக மற்றும் கல்வி சார் தலைநகரமாக விளங்கிய கொன்ஸ்டான்டிநோபிள் வெளியிடப்பட்ட பல அறிவியல் புத்தங்கள் யாழ் நூலகத்தில் இருந்தாக பல சான்றுகள் உள்ளன. எனினும் 1981ம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந் நூலகம் எரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வாசிப்பதன் மூலம் புரிந்துகொள்ளுதல் மற்றும் பகுப்பாய்வு திறன்கள் வெகுவாக மேம்படுவதோடு, கற்பனைகள் மூலம் எமது மனதின் நினைவக மையங்கள் தூண்டப்படுகின்றது. இதன் மூலம் எமது ஞாபக சக்தி கூர்மையாக்கப்படுவதோடு எமது மனநிலை சமநிலைப்படுத்துகின்றது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல் சில சந்தர்ப்பங்களில் அதிகளவான புத்தக வாசிப்பு பல நபர்களின் மனநிலையை பாதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய விஞ்ஞான யுகத்தின் ஆதிக்கம் காரணமாக, பல மாற்றுப் பொழுதுபோக்குகளால் மக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் Smart Phone இன் வருகையினால் Games, Videos மற்றும் Messaging Apps ஆகிய துறைகள் பால் திசை திருப்பப்பட்டுள்ளனர். மேலும் தற்போதைய விலைவாசியின் காரணமாக புத்தகம் வெளியிடுவதற்கோ அல்லது புத்தங்களை வாங்கி வாசிப்பதற்கோ யாரும் முயற்சி எடுப்பது மிகவும் குறைவாக காணப்படுகின்றது. எனினும் ஆண்டுதோறும் நடைபெறும் கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு பாரியதோர் வரைவேற்பு உள்ளதென்பது யாவரும் அறிந்ததே.

2005ம் ஆண்டு, சான்றுகளை அடிப்படையாகக்கொண்டு 2ம் தர கல்வியின் முடிவில் ஓர் மாணவன் வாசிப்பு, எழுதுதல், புரிதல் ஆகிய திறன்களை கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும், 2017ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுவர்களின் வாசிப்புத் திறனை கணிக்கும் முகமாக மாணவர்களிடம் மேற்கொண்ட கேள்விகளில், 84.2%க்கும் அதிகமான சிறார்கள் 1 புள்ளியையேனும் பெறவில்லை என்பது வேதனை அளிக்கக்கூடிய விடயமாகும்.

index.php