Blog Page 36

கொழும்பிலுள்ள புத்தாண்டு விலைக்கழிவுகள்

இன்னும் சில நாட்களில் மலரவிருக்கும் தமிழ், சிங்கள சித்திரை வருடப்பிறப்பு, நம் எல்லோருக்கும் புத்தாடைகள், எம் உறவினர்களுக்கு வழங்கவிருக்கும் அன்பளிப்புகள் மற்றும் புதிய வருடத்தினை வரவேற்க தேவையான பொருட்களை வாங்குவதற்கான ஆர்வத்தினையும் நம் மனங்களில் விதைக்கிறது. ஏனைய நாட்களில் அதிக விலையில் விற்கப்படும் பொருட்கள் தமிழ், சிங்கள புதுவருட மலர்விற்கு முன் வரும் சில நாட்களுக்கு பல விலைக் கழிவுகளுடன் கொள்வனவுக்காக காட்சிப்படுத்தப்படுகின்றன. உங்களுக்கு கொழும்பில் எந்த கடைகளில் எவ்வாறான விலைக்கழிவுகள் மற்றும் அவை பற்றிய மேலதிக தகவல்களை அறிய வேண்டுமெனில் தொடர்ந்து வாசியுங்கள்.


The Design Collective (
த டிசைன் கலக்டிவ்)

இங்கு இரு நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்வதற்காக விலைக்கழிவுகளுடன் கொள்வனவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் 10ஆம் மற்றும் 11ஆம் திகதி காலை 10.00 மணி தொடக்கம் மாலை 7.00 மணி வரை இந்த விலைக்கழிவு தொடரும். இவர்களது கடையில் காணப்படும் அனைத்து ப்ராண்ட்களும் 40% விலைக்கழிவிலிருந்து ஆரம்பமாகும் வகையில் நாம் பெற்றுக் கொள்ள முடியும்.  இந்த விலைக்கழிவுகள் கொழும்பு 6 இல் உள்ள ஸ்ட்ராட்போர்ட் அவன்யூவில் (Stratford Avenue, Colombo 6) அமைந்துள்ள இவர்களது ஸ்டோரிலும் (flagship store), கொழும்பு 7இல் அமைந்துள்ள பட்டர் புடிக்கிலும் (Butter Boutique) இரு நாட்களுக்கு தொடரும். அத்தோடு மேலதிகமாக கொண்ட கவும், அதிரசம் மற்றும் முறுக்கு போன்ற பலகாரங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. எது எவ்வாறாக இருப்பினும் வீட்டிலிருந்தே தங்களது ஷொப்பிங்கினை தொடர விரும்பும் வாடிக்கையாளர்கள்  www.designcollectivestore.com என்ற இணையத்தளத்திற்கு பிரவேசியுங்கள்.

தொடர்புகளுக்கு: 0769421560
படவரி கணக்கு (Instagram): @thedesigncollectivestore


இவன்ட்ஸ் பை ஷெனாலி
(Events by Shenali)

கொழும்பு 7இல் உள்ள ப்ளவர் வீதியில் அமைந்துள்ள தி எம்பஸியில் (The Embazzy, 76/1, Flower Road, Colombo 7) ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி காலை 10.00 மணி தொடக்கம் மாலை 7.00 மணி வரை விலைக்கழிவுடன் கூடிய பொருட்கள் கொள்வனவுக்காக வைக்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கான பொருட்களிலிருந்து ஆபரணங்கள் வரை, பைகளிலிருந்து ஆடைகள் வரை காலணிகள், பழமை வாய்ந்த பொருட்கள், மளிகை சரக்குகள், புதிய பழச்சாறுகள், பேக் செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் என அனைத்தையுமே இந்த சேலில் பெற்றுக் கொள்ள முடியும். அனைவருக்கும் தேவையான பொருட்களை அங்கு பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இருக்கும்.

தொடர்புகளுக்கு:0713064709
படவரி கணக்கு (Instagram):@eventsbyshenali


பிரியோஸ் மார்க்கட் ப்ளேஸ்
(Brios Market Place)

முதல் தடவையாக இந்த தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பெலவத்த (Pelawatta) பொப்-அப் சேலினை (pop-up sale) அனுபவிக்கக் கூடியதாயுள்ளது. உள்நாட்டு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுடன் கூடியதாக இது முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.  உணவு, உடை மற்றும் அழகுசாதனப் பொருட்களென உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் தேவையான அனைத்தையுமே இங்கு பெற்றும் கொள்ளலாம். ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி காலை 10.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை த ப்ரியோஸ், ஃபியூஷன் கிட்சனிற்கு (the Brio, the fusion kitchen) வருகை தந்து வித்தியாசமான ஓர் ஷோப்பிங் அனுபவத்தை பெற்றிடுங்கள்.

தொடர்புகளுக்கு: 0112885881


ஜெஸா
(Jezza)

ஆடைகளை கொள்வனவு செய்ய வேண்டிய தேவையில் இருப்பவர்களுக்காக களுபோவிலையிலும், One Galle Face லும் (Level 2) உள்ள ஜெஸா ஸ்டோர்களில் குறிப்பிட்ட சில தெரிவுசெய்யப்பட்ட ஆடைகளுக்கு 50% விலைக்கழிவு நிர்ணயிக்கப்பட்டு, கொள்வனவுக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ், சிங்கள புத்தாண்டினை வரவேற்றிட புதிய நவீன நாகரிக ஆடைகளை அனைவரும் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் ஜெஸா ஸ்டோர்ஸ் உள்ளது. இந்த விலைக்கழிவு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி மட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு: 0773444602
படவரி கணக்கு (Instagram): @jezzafashion 


F.O.A

One Galle Face ல் அமைந்துள்ள இந்த ஸ்டோரில் பொதுவான ஆடைகள் பல உள்ளடங்கலாகிய F.O.A ஸ்டோரில், டெனிம் உட்பட பல ஆடைகள் 70% விலைக்கழிவுகளுடன் கொள்வனவுக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பினை தவறவிடாது இப்போதே விரைந்திடுங்கள்.

தொடர்புகளுக்கு: 0112332285
படவரி கணக்கு (Instagram): @f.o.a_clothing


பிக் டீல்ஸ்.
lk (Bigdeals.lk)

இலத்திரனியல் சாதனங்களுக்கு எங்கும் இல்லாத 65% வரையிலான விசேட விலைக்கழிவினை Bigdeals.lk நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.  இச் சலுகையானது ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்கும். மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள ஏதேனும் ஓர் வழியில் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்புகளுக்கு: 0115008008
படவரி கணக்கு (Instagram): @bigdealslk


பெவர்லி ஸ்ட்ரீட் (
Beverly Street)

இவர்களது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கார்ட் உரிமையாளர்களுக்கு சிறப்பு சலுகை உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். பெவர்லி ஸ்டீரீட் அனைவருக்குமான ஆடை ஆபரணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஏப்ரல் 11ஆம் திகதி வரை க்ரெடிட் மற்றும் டெபிட் கார்ட் உரிமையாளர்களுக்கு சிறப்பு சலுகை உண்டு. அத்தோடு 25000 இற்கும் மேற்பட்ட தெரிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு ராஜகிரிய கிளையில் 50% வரை விசேட விலைக்கழிவு.

தொடர்புகளுக்கு: 0112888688 0112564777
படவரி கணக்கு (Instagram): @beverlystreet


ஸிக் ஸாக் (
ZigZag)

ZigZag ஒன்லைன் ஷொப்பிங்கில் 50% வரை விலைக்கழிவு உண்டு. இந்த புத்தாண்டுக்கான தரமான ஆடைகளை பெற விரும்பும் பலருக்கு ZigZag ஓர் சிறந்த தேர்வாக இருக்கும்.

தொடர்புகளுக்கு: 0114339746
படவரி கணக்கு (Instagram): @zigzag.lk


அபான்ஸ் (
Abans)

எப்போதும் போல தமிழ், சிங்கள புத்தாண்டு கால விசேட சலுகைகளினை இம்முறையும் அபான்ஸ் நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர். குறிப்பாக வீட்டு பாவனைப் பொருட்களுக்கு சிறப்பான விசேட சலுகைகள் நம்ப முடியாத பல சலுகைத் திட்டங்கள் என பல உண்டு. இவர்களது ஒன்லைன் சேல் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வரை தொடரும். இங்கு 60% வரை விசேட விலைக்கழிவோடு 60 மாத கால கட்டுப்பண வசதி திட்டமும் உண்டு.

தொடர்புகளுக்கு: 0112112112
படவரி கணக்கு (Instagram): @abans_lk


ஸ்கெச்சர்ஸ் (
Skechers)

உங்களதும், உங்கள் அன்புக்குரியவர்களதும் மனங்களினை கவரக்கூடிய வகையிலான 50% வரை விலைக்கழிவு. இந்த விசேட சலுகையானது ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி வரை தொடரும். இன்றே Colombo City Centre, Race Course, Majestic City அல்லது Abans Elite களில் உள்ள ஸ்கெச்சர்ஸ் ஸ்டோர்ஸ்க்கு பிரவேசியுங்கள்.

தொடர்புகளுக்கு: 0718060606


செல்ஸியஸ் லக்ஸரியஸ் பெட்டிங்
(Celcius Luxurious Bedding)

இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையாகும். இந்தச் சலுகை ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரை தொடரும்.  18”x27” தலையணை உறையினை ரூபாய்1650 இற்கு பெற்றுக் கொள்ள முடியும். இந்தச் சலுகையினை தவறவிடாதீர்கள்.

தொடர்புகளுக்கு: 0114858859


சொப்ட் லொஜிக்.
lk (Softlogic.lk)

இது தமிழ், சிங்கள புத்தாண்டு பெருவிழாக்கான சலுகையென்றே கூற வேண்டும். 35% வரையிலான விலைக்கழிவுடன் 60 மாத 0% வட்டியுடனான கட்டுப்பண வசதியும் வழங்கப்படுகின்றது. இந்த சலுகையானது ஏப்ரல் 13ஆம் திகதி வரை தொடரும். ரூபாய் 300 மில்லியன் மதிப்புமிக்க பரிசுகளும் விசேட சலுகை திட்டங்களும் இவர்களது ஸ்டோர்களில் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

தொடர்புகளுக்கு: 0115128128


ஜியா மொதா (
Jia Moda)

மிகவும் சௌகரியமான மற்றும் பிறரின் பார்வைகளை உங்கள் வசம் திருப்பக் கூடிய வகையிலான ஆடைகளை One Galle Face ல் உள்ள ஜியா மொதாவின் மிகப் பெரிய விசேட சலுகையில் ரூபாய் 500லிருந்து பெற்றிடக் கூடிய ஓர் அரிய வாய்ப்பு இது.

தொடர்புகளுக்கு: 0115554150
படவரி கணக்கு (Instagram): @jiamoda


கூல் ப்ளனட் (
Cool Planet)

கூல் ப்ளனட் நிறுவனமானது தங்களது வாடிக்கையாளர்கள், க்ரெடிட் கார்ட் உரிமையாளர்கள் 20% வரையிலும் டெபிட் கார்ட் உரிமையாளர்கள் 10% வரையிலும் விலைக்கழிவினை பெற வேண்டும் என்பதற்காக, பல்வேறுபட்ட வங்கிகளுடன் தொடர்பினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட சலுகையானது ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி வரை தொடரும்.

தொடர்புகளுக்கு: 0112505190 (இசிபத்தான மாவத்தை கிளை)
படவரி கணக்கு (Instagram): @coolplanetsl


ஒடெல் (
Odel)

Mothercare, Toy Store, Davidoff, Wyos, Luv SL, B Iconic மற்றும் Aldo போன்ற ப்ராண்ட்களுக்கு  Odel ஸ்டோரில் 30% வரை விசேட விலைக்கழிவு.  இந்த சலுகையானது ஒன்லைனில் பெறக்கூடிய வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கார்ட் அடிப்படையிலான சலுகைக்கு அவர்களது ஸ்டோருக்கு பிரவேசியுங்கள்.

தொடர்புகளுக்கு: 0115128128
படவரி கணக்கு (Instagram): @odel.official

வீட்டிலிருந்தபடி கொவிட் தொற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள விரும்புபவர்கள் ஒன்லைன் ஷொப்பிங் மூலம் கொள்வனவு செய்துக் கொள்ளலாம். கடைகளுக்கு சென்று கொள்வனவு செய்ய விரும்புபவர்கள் கடைகளுக்கு செல்லும் போது கொவிட்-19 பாதுகாப்பு விதிகளான முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி போன்றவற்றை தவறாது பின்பற்றுங்கள்.

 

நோயற்ற உணவு முறைகள்

இன்று நாம் கை நிறைய வில்லைகள் அள்ளி கண்ணை மூடிக் கொண்டு விழுங்குகிறோம். சிறிய காய்ச்சல் என்றாலும் உடனே வைத்தியசாலை வாசல்களில் சென்று நிற்கிறோம். அன்று எம் முன்னோர் பெரிய பெரிய நோய்களுக்கு கூட மூலிகை சாறு எடுத்து குணப்படுத்தினர். உணவே மருந்து என வாழ்ந்து காட்டினர். ஆனால் இன்று மருந்தையே உணவாக மூன்று வேளையும் உட்கொள்கிறோம்.

இதோ.. உங்களுக்காக, நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்த சில உணவு முறைகள்,

தினமும் காலை ஒரு நெல்லிக்கனி உண்பதால் இளமையுடனும் புத்துணர்ச்சியுடனும் உடலினை பேண முடியும். நெல்லிக்கனி நரை முடி வளராமலும், இளநரையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

நம் இதயத்தை வலுப்படுத்துவதற்கு செம்பருத்தி பானம் சிறந்த ஒன்றாகும்.

வயதானவர்களுக்கு வரும் மூட்டு வலியை குறைப்பதற்கு தினம் சாப்பிடும் போது முடக்கத்தான் கீரை சேர்த்து சாப்பிடுவது சிறந்தது.

இருமல், மூக்கடைப்பு மற்றும் ஜலதோஷம் உள்ளவர்கள் சூடான நீரில் கற்பூரவள்ளி இலையினையிட்டு ஆவி பிடிப்பது நிவாரணம் தரும்.

தினம் பப்பாசிப்பழம் சாப்பிடுவதால் மூளை வலிமை பெறும்.

நீரிழிவு நோயுள்ளவர்கள் அரைக் கீரை சாப்பிட்டு வருவதால் நீரிழிவினை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும்.

வாய்ப்புண் மற்றும் குடற்புண் இருப்பவர்கள் ஏப்பம் விடும் போது துர்நாற்றம் வீசும். மணத்தக்காளி சாப்பிடுவதால் துர்நாற்றம் வீசாதிருக்கும்.

மாரடைப்பு உள்ளவர்களுக்கு மாதுளம் பழம் சிறந்த ஒன்றாகும்.

புற்று நோயுடையவர்கள் சீதாப்பழம் சாப்பிடுவதால் அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும்.

முகம் அழகான பொலிவு பெறுவதற்கு திராட்சைப்பழம் உதவுகிறது.

எம்மால் இயன்றவரை நோய்களிலிருந்து விடுதலை பெற இயற்கை முறையினைப் பின்பற்றி நலமுடன் வாழ்வோம்

IPL இல் இலங்கை வீரர்களின் நிலை என்ன?

IPL என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘இந்தியன் பிரிமியர் லீக்’, 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்று வரை கிரிக்கட் என்பது நாடுகளுக்கு இடையிலாக விளையாடப்படும் ஒரு போட்டியாகவே நம்பப்பட்டது. இருப்பினும் எப்போது தமது தேசிய வீரர்களை வெவ்வேறு Jersey களில் பார்க்க தொடங்கினார்களோ, அப்போதே இவை அனைத்தும் தேசியத்திற்கு அப்பாற்பட்ட வணிகம் ஒன்று உள்ளதென்பதை எம்மவர்களால் அறிந்துகொள்ள முடிகிறது. இந்த அணுகுமுறை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

– முதலாவதாக IPL இல் விளையாடுவதற்கு வீரர்களிடம் ஒப்புதல் கோரப்படும். அவர்களின் அனுமதியின் பின்னர் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டு பெயர்கள் முன்மொழியப்படும். குறிப்பிட்ட நபரை தனது அணியில் தக்கவைத்துக்கொள்வதற்காக அணி உரிமையாளர்களுக்கிடையே ஏலம் ஆரம்பிக்கப்படும். அதிக தொகையை முன் மொழிந்த அணிக்கு, குறித்த வீரர் விளையாடுவதற்கான வாய்ப்பினை பெறுவார்.

– ஆரம்பத்தில் வீரர்களின் சம்பளம் அமெரிக்க டொலர்களில் (USD) வழங்கப்பட்டது. 2012 இன் பின்னர் இந்திய ரூபாய்க்கு மாற்றம் பெற்றது.

– ஏலத்தில் நிர்ணயிக்கப்படும் விலை அவ் வீரரின் ஆண்டிற்கான சம்பளமாக கருதப்படும். தொடரின் எந்த ஒரு போட்டியிலும் விளையாட இடம் கிடைக்காத பட்சத்தில் கூட, நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் முழுமையாக வழங்கப்படும் என்பதே குறிப்பிடத்தக்கது.

– இதனைத்தவிர ஒரு வெளிநாட்டு விளையாட்டு வீரரை ஓர் அணி வாங்கும் பட்சத்தில், அந்த வெளிநாட்டு கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு அவ் வீரரின் சம்பளத்தொகையின் 20% வீதத்தினை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை வழங்கும்.

– சில அணி உரிமையாளர்கள் அவர்களால் கொள்வனவு செய்யப்பட்ட வீரரை ஏலத்திற்கு அனுப்பாமல் அடுத்து வரும் ஆண்டுகளுக்கு தனது அணியில் வைத்துக்கொள்வதற்கு Retain செய்யும் உரிமை அவர்களுக்கு உண்டு.

– வீரர் ஒருவரை Retain செய்யும் பட்சத்தில், அவ் வீரரின் முழுத்தொகையை அவ் ஆண்டிற்கான முதல் போட்டிக்கு முன்னரே செலுத்தவேண்டும். ஒரு சில சமயங்களில் தொகையின் 50% முதல் பயிற்சி முகாமிற்கு முன்னரும், மிகுதி 50% தொடரின் நடுப்பகுதியிலும் வழங்கப்படும். அநேகமான தருணங்களில் 15 – 60 – 20 ஆகிய விகிதங்களடிப்படையில் தொடருக்கு முன்னர் 15% வீதமும் இடையே 60% வீதமும் தொடரின் இறுதியில் 20% வழங்கப்படும். (இந் நிபந்தனைகள் அணிக்கு அணி, வீரர்க்கு வீரர் மாறுபடக்கூடும்.)

உலகை ஸ்தம்பிக்க வைத்த கொரோனா, இந்தியாவை மாத்திரம் விதிவிலக்காக கருதவில்லை. இன்று வரை இந்தியாவில் 11 மில்லியன் நபர்கள் தொற்றுக்குள்ளான போதிலும் இந்திய கிரிக்கட் சபை IPL ஐ இந்தியாவில் நடாத்துவதற்கான ஆயத்தங்களை செய்தது மட்டுமல்லாது, உலகின் மிகப்பெரிய கிரிக்கட் மைதானத்தையும் திறந்திருக்கிறது. மேலும் 2021 ஆம் ஆண்டிற்கான ஏல விற்பனை, பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகியது. கடந்த சில ஆண்டுகள் போலவே இலங்கை வீரர் யாரவது ஒருவர் அத்தி பூத்தாற்போல் தேர்வு செய்யப்படுவார்கள் என நம்பப்பட்டாலும், இவ் வருடத்தில் எவருமே தெரிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை முன்கூட்டியே ஊகித்த Lasith Malinga, ஏலத்திற்கு முன்னரே தனது ஓய்வை அறிவித்து தப்பிவிட்டார் என பரவலாக பேசப்பட்டது. இந்த ஏல விற்பனையில் அதிகூடிய விலைக்கு விற்கப்பட்ட நபராக தென் ஆபிரிக்கா நாட்டைச் சேர்ந்த Chris Morris விளங்கினார். இவரை Rajasthan Royals அணி 16.25 INR கோடிக்கு (இலங்கை மதிப்பில் 43.35 கோடிக்கு) விற்கப்பட்டார்.

2021 IPL இல் இலங்கை வீரர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமை தொடர்பில் இலங்கையின் முன்னாள் கிரிக்கட் தலைவரும், தற்போதைய Mumbai Indians அணியின் பிரதான பயிற்றுவிப்பாளருமான மஹேல ஜயவர்தன கூறுகையில், ‘இலங்கையின் பிரநிதித்துவம் உண்டு என்று நான் நம்புகிறேன். அதனால் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம்’ (IPL இல் மஹேல மற்றும் சங்கக்காரவின் தற்போதைய பங்களிப்பை கருத்தில் கொண்டு நகைச்சுவையாக சொல்லப்பட்டது). மேலும் கூறுகையில் ‘ஆம், சற்று ஏமாற்றமளிக்கின்றது. இங்கு விளையாடுவதென்பது சற்று கடினமானதோர் விடயம். வெளிநாட்டு வீரர்களுக்கு அண்ணளவாக 20 இடங்களே காணப்படுகின்றது. அதிலும் அதிகமாக வேகப்பந்து வீச்சாளர்களும் சகலதுறை ஆட்டக்காரர்களுமே உள்வாங்கப்படுகின்றனர். இவ் இடங்களை பூர்த்தி செய்யக்கூடிய இலங்கை வீரர்கள் குறைவாகவே காணப்படுகின்றனர். எனினும் சில வீரர்கள் எங்களுடைய ராடர்களில் இருந்தனர்’. மேலும் மஹேல கூறுகையில், ‘IPL என்பது உலகின் சிறந்த வீரர்களை தெரிவு செய்து போட்டியிடச்செய்யும் ஒரு போட்டித் தொடர். இது இலங்கை வீரர்களின் திறமையினை மேம்படுத்திக்கொள்ளவும் போட்டி மிகுந்த வீரர்களாக தங்களை உருவாக்கிக் கொள்ளவும் விடுக்கப்பட்ட ஓர் செய்தியாக கருத்திற் கொள்ளவேண்டும்.

கடந்த சில ஆண்டுகள் தவிர, 2008 ஆம் ஆண்டு தொடக்கம் IPL இல் இலங்கை வீரர்கள் சோபிப்பதற்கு என்றுமே தவறியதில்லை. IPL இல் அதிக விக்கட்டுக்களை எடுத்த பெருமை Lasith Malinga க்கு உரித்தாகும். மேலும் Kumar Sangakkara, Mahela Jayawardena மற்றும் Anjelo Mathews ஆகிய வீரர்கள் அணித்தலைவர்களாகவும் விளங்கியுள்ளதோடு, Sanath Jayasuriya, Thilakaratne Dilshan மற்றும் Muttiah Muralitharan ஆகியோர், பெருமளவு ஆதிக்கத்தினை தமது அணிகளில் செலுத்தி வந்துள்ளனர்.

இவ் ஆண்டிற்கான ஏலத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்களாக Kusal Perera, Thisara Perera, Kevin Kothigoda, Maheesh Theekshana, Vijayakanth Viyaskanth, Dushmantha Chameera, Wanindu Hasaranga, Dasun Shanaka மற்றும் Isuru Udana விளங்கினர். எனினும் அணி உரிமையாளர்கள் எவரும் இவ் வீரர்களை ஏலத்தில் வாங்க முன் வரவில்லை என்பது பெரும் வேதனை அளிக்கக்கூடிய ஒரு விடயமாகும்.

தற்போதைய இலங்கை வீரர்கள் IPL இல் தேர்வு பெறாவிட்டாலும், எம்முடைய முன்னாள் ஜாம்பவானாகிய குமார் சங்கக்கார Rajasthan Royals அணியின் புதிய இயக்குனராக தெரிவுசெய்யப்பட்டார். மேலும் அவர், ‘LPL மற்றும் இலங்கை குழாமில் பல சிறப்பு மிக்க வீரர்கள் உள்ளனர். எனினும் இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் போட்டித் தொடர் அட்டவணையில் உறுதியின்மை காரணமாக, அநேகமான அணி உரிமையாளர்கள் வீரர்களை கொள்வனவு செய்வதில் தயக்கம் காட்டினர். நிச்சயமாக வீரர்களின் திறன்களில் எவ்வித குறையும் இல்லை’ என கூறியிருந்தார்.

 

2024ல் ‘அனைவருக்கும் குடி நீர்’

இலங்கையின் தரவுகளின் அடிப்படையில் குடி நீர் வசதி உள்ளோரின் எண்ணிக்கை 94% விகிதமாகவும், மிகுதி 6% வீதமானோர் தனது குடி நீர் தேவையினை சுகாதரமற்ற பிளாஸ்டிக் பாத்திரங்களிலும், 2Km க்கு அதிகமான தூரத்தை நடந்து நீர் நிலைகளை தேடி பெற்றுக் கொள்வது மட்டுமல்லாது ஆறுகளிலும், நீரோடைகளிலும், பாதுகாப்பற்ற கிணறுகளிலும் பெற்றுக் கொள்வதாக WHO இனால் வெளியிடப்பட்ட ஒர் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார சுட்டெண்ணுக்கு அமைய 92% ஆனோர் சிறந்த சுகாதார பழக்கவழக்கத்தினை கடைப்பிடிப்பதாக அச் சுற்றறிக்கை கூறுகின்றது. இது ஏனைய தெற்காசிய நாடுகளை ஒப்பிடுகையில் முதன்மை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தேவைக்கு ஏற்ற நீர் வெகுவான அளவு மக்களுக்கு கிடைக்கப்பெறுவதனால் சுய சுகாதாரம் சிறந்த நிலையில் காணப்படுகின்றது. இதை ஊக்குவித்து நடைமுறைப்படுத்துவதற்காக பொது சுகாதார ஆய்வாளர்கள், பொது சுகாதார தாதிகள், மருத்துவ அதிகாரிகள் போன்றோர் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாடசாலை மட்டத்தில் பல பாடத்திட்டங்கள் மூலம், சுகாதாரம் மற்றும் நீரினை சிக்கனமாக பாவித்தல் தொடர்பான விழிப்புணர்வு சிறுவர்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றதென்பது வரவேற்கத்தக்க ஓர் விடயமாகும்.

Disaster Management Center (பேரழிவுச் செயலாட்சி நிலையம்) இன் தரவுளுக்கு அமைய இலங்கையின் 25 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டதோடு 337,000 க்கு அதிகமானோர் பல இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாகவும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட புள்ளிவிவரவியலின் அடிப்படையில் கூறப்படுகின்றது. இதில் அதிகமாக களுத்துறை, கேகாலை மற்றும் ரத்னபுர ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

எம் நாடு, பிரதானமாக இரு பருவப்பெயர்ச்சி மழை காலங்களில் தங்கி உள்ளது. முதலாவதாக தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை. இது பொதுவாக மேல் மற்றும் தென் மாகாணத்தில் மே மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை தாக்கம் செலுத்துகின்றதோடு ஏனைய மாதங்கள் கோடை மாதங்களாக கருதப்படுகின்றது. இரண்டாவதாக வட கிழக்குப் பருவப்பெயர்ச்சி மழை. கிழக்கு மற்றும் வட மாகாணத்தில் ஒக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இந்தப் பருவப்பெயர்ச்சி மழை காணப்படுவதோடு, ஏனைய மாதங்கள் கோடை மாதங்களானவை பயிர்ச் செய்கைக்கு உகந்த மாதங்களாக சித்தரிக்கப்டுகின்றது.

மூன்று காலநிலை மண்டலங்கள் உள்ளன. அதில் ஈர மண்டலத்தில் ஆண்டிற்கு 2000mm க்கும் அதிகமான மழைவீழ்ச்சியும் இடைநிலை மற்றும் உலர் மண்டலத்தில் முறையே 2000mm மற்றும் 1500mm மழைவீழ்ச்சியும் பதிவாகின்றது. இந்த காலநிலை வித்தியாசம் இலங்கை கொண்டுள்ள ஓர் தனித்துவமான விசேட அம்சமாகும். இலங்கையில் 103 ஆறுகள் உள்ளன. அதன் மொத்த நீளம் 4500Km கள் ஆகும். அதற்கு அப்பால் 169,941 ஹெக்டேர் கொள்ளளவுடைய நீர் தேக்கங்கள் உள்ளன. கிராமப்புரங்களில் 73% க்கு அதிகமான மக்கள் நிலத்தடி நீரையே தமது ஜீவனோபாயத்திற்கு பயன்படுத்துகின்றனர். இதன் கொள்ளளவு 7,800 மில்லியன் mm3 கள் ஆகும். இலங்கையில் அதிகமான மக்கள் வாழும் இரு பிரதேசங்களாக கருதப்படும் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கான குடி நீர், களனி கங்கையில் இருந்து சுத்திகரிக்கப்பட்டு எடுக்கப்படுகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.

போதுமான அளவு தரவுகள் இல்லாமையினால் நீரின் தரத்தினை கணித்தறிய முடியாதுள்ளது. எனினும் செம்மைபடுத்தப்படாத கழிவு நீர் முகாமைத்துவம் மற்றும் தொழிற்சாலைகளில் இரசாயனக் கழிவுகளின் வெளிவீச்சினால் நீர் நிலைகள் வெகுவாக மாசடைகின்றது. மேலும் மண் அகழ்வு, முறையற்ற கட்டிட நிர்மாணங்கள் போன்ற மனித செயற்பாடுகளினால், உவர் நீரின் பெருமானம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை ஓர் விழிப்புணர்வுக் கண்ணோட்டத்திற்கு கொண்டு வருவதற்காக ஆண்டு தோறும் மார்ச் மாதம் 22ஆம் திகதி உலக நீர் தினம் கொண்டாடப்படுகின்றது.

2024 இல் ‘அனைவருக்கும் குடி நீர்’ என தொனிப்பொருளில் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் செயற்திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு வரவு செலவு திட்டத்தில் அதிகளவான பணம் ஒதுக்கப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பெண்கள் தொடர்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய  7 விடயங்கள்

உலகில் உள்ள பெண்ணியவாதி எவருக்கும் முக்கியமான நாளாக விளங்குகின்ற தினம் தான் சர்வதேச மகளிர் தினம், இது ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த வருட மகளிர் தினத்தின் கருப்பொருளாக “கொவிட் 19 உலகில், தலைமைத்துவத்தில் பெண்கள் சமமான எதிர்காலத்தினை அடைதல்”. எது எவ்வாறாக இருப்பினும் கொவிட் 19  சிக்கல்களிலிருந்து தப்பிப்பதற்காக முயற்சிக்கும் போது, பெண் என்ற அடிப்படையில் நாம் எதிர்கொள்ளும் சவால்களும் சிக்கல்களும் மறுத்து புறக்கணிக்க முடியாத ஒன்றாகும். இதோ, நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மையான பாலின சமத்துவ பாதையை சிதைக்க கூடிய ஏழு சிக்கலான விடயங்கள்.

1) புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்கள், ஆடை தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் மற்றும் பெண் தோட்டத் தொழிலாளர்களின் சக்தி நிலை.

Image from http://www.adaderana.lk/news/68877/new-procedure-to-curb-irregular-migration-of-lankan-female-domestic-workers-to-oman

பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதன் மூலம் உலகளாவிய வளர்ச்சியில் 12 டிரில்லியன் சேர்க்கப்படலாம் என்று MGI அறிக்கை மதிப்பிட்டுள்ளது. இலங்கை 2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர்களைச் சேர்க்கும் திறனைக் கொண்டுள்ளது, இது தற்போதைய பொருளாதார வளர்ச்சிப் பாதையை சுமார் 14% அதிகரிக்கும். 2016 ஆம் ஆண்டின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) அறிக்கையின் படி, இலங்கையின் பெண் தொழிலாளர் பங்களிப்பு கடந்த 2 தசாப்தங்களில் 30% – 35% ஆக காணப்படுகின்றது. தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது மற்றும் தக்கவைத்துக்கொள்வதுடன் உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் அவர்கள் நடத்தப்படும் விதமும் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டிய மற்றொரு பிரச்சினையாகும்.

முக்கியமாக சுதந்திர வர்த்தக மண்டலம் (FTZ) தொழிலாளர்கள் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் போன்றோர், COVID-19 பரவுவதை தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்ட நாடளாவிய ஊரடங்கு உத்தரவுகளின் போது தங்கள் தனியார் தற்காலிக போர்டிங் வீடுகளில் பல நாட்கள் சிக்கித் தவித்தனர். பின்னர் அவர்கள் தமது மாதாந்த சம்பளத்தினை கூட பெற்றுக் கொள்ளாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் ஏற்றப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும், இலங்கையின் பொருளாதாரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து (நாட்டின் அந்நிய செலாவணி) பணம் பெறுவதை பெரிதும் நம்பியுள்ளது, மேலும் இந்த பணம் பெறுவதில் பெரும்பகுதி மத்திய கிழக்கில் பணிபுரியும் பெண் வீட்டுத் தொழிலாளர்களால் பெறப்படுகின்றது. துரதிர்ஷ்டவசமாக, இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது பற்றி சிறிதளவும் கவனம் செலுத்தப்படுவதில்லை.

2) வீடுகளில் முகங்கொடுக்க நேரிடும் வன்முறைகள்Image from https://www.nationalheraldindia.com/national/domestic-violence-tops-crime-against-women-in-2018-ncrb

2020 ஆம் ஆண்டில் 25 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஓர் அறிக்கையில், ஒட்டுமொத்தமாக இலங்கையில் நான்கில் ஒரு பங்கு அதாவது 24.9% சதவீதமான பெண்கள் தங்களது வாழ்க்கை துணையினால் உடல் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்துகிறது. இதற்கிடையில், ஒவ்வொரு ஐந்து பெண்களில் இருவர் அதாவது 39.8% உடல், பாலியல், உணர்ச்சி அல்லது பொருளாதார வன்முறை அல்லது அவர்களது துணைவரின் நடத்தைகளால் பாதிப்புக்குள்ளாகின்றனர். இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இருக்க மிக முக்கிய காரணம், இந்தப் பிரச்சனை தொடர்பாக இலங்கை சமுதாயத்தின் கண்ணோட்டம் மற்றும் அணுகுமுறையாகும். பலர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒரு பிரச்சனையாகவே பார்ப்பது கிடையாது. மேற்கூறிய அறிக்கையில் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட பாதி அதாவது 47.5% சதவீதமானோர் “ஆண்மகன் தான் பெரியவன் என்பதை வெளிப்படுத்த வேண்டும்” என்ற கூற்றுடன் உடன்படுகின்றனர். 46.5% சதவீதமானோர் “ஒரு நல்ல மனைவி தன் கணவனின் கருத்தில் உடன்பாடில்லை எனினும் அவருக்கு கீழ்படிய வேண்டும்.” என்ற கூற்றுடன் உடன்படுகின்றனர். ஐந்தில் இரண்டு பெண்கள் அதாவது 39.5% சதவீதமான பெண்கள், “உடலுறவு கொள்வதில் தங்களுக்கு உடன்பாடில்லாத நேரங்களில் கூட கணவர் விரும்புவாராயின் தாங்கள் உடலுறவு கொள்ள வேண்டும்.” என்ற கூற்றினை நம்புகின்றனர். மூன்றில் ஒரு பங்கினர் அதாவது 35.3% சதவீதமானோர் “ஆண்மகனொருவன் தனது மனைவியை அடிப்பானாயின் அதன் பின் தகுந்த காரணம் ஒன்றிருக்க வேண்டும்.” என்ற கூற்றினை நம்புகின்றனர்.

இந்த முடிவுகள், இலங்கையர்களது மனதில் ஆழப்பதிந்துள்ள பாலியல் தொடர்பாக உள்மயமாக்கப்பட்ட தவறான கருத்து மற்றும் ஆணாதிக்கம் பற்றிய கருத்துக்களை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. சிறு வயது முதல் பெண்கள், ஆண்கள் தான் உயர்ந்தவர்கள் என்றும் கணவனுக்கு கீழ்படிந்து நடப்பது ஓர் நல்ல மனைவிக்கான அடையாளம் என்றும் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றனர். இதனால் தனது வாழ்க்கை துணைவர் மற்றும் அவரது குடும்பத்தாரால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை குடும்ப வாழ்வில் இயல்பான ஒன்று என அவர்கள் நம்புகின்றனர். இந்த வன்முறைகளை அவர்கள் ஒரு பிரச்சனையாக பார்க்காத வரை, அவர்களுக்கும் அவர்களை சுற்றியுள்ள பெண்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. இது சகிப்புத்தன்மை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்வது போன்ற கலாசாரங்களுக்கு வழிவகுக்கின்றது. இதன் காரணமாக வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெரும்பாலான பெண்கள் பிறரின் உதவியை நாடுவதை விடுத்து அமைதியாக இருக்கின்றனர்.

மேலும், LGBTQI சமூகத்தில் LBTQ பெண்களுக்கு எதிரான வன்முறையின் சதவீதம் அதிகமாக காணப்படுகின்றது. இவர்கள் மீதான தவறான பாலியல் கண்ணோட்டத்தின் காரணமாக இவர்கள் பிறரை விட இரு மடங்கு அதிகமாக ஒதுக்கப்படுகின்றனர். இதன் பொருள் என்னவென்றால் வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் என்று வரும் போது இவர்கள் cis-gender, heterosexual பெண்களை விட மோசமான பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். வாழ்க்கை துணை மற்றும் வாழ்க்கை துணை அல்லாதவர்களிடமிருந்து எதிர்கொள்ளும் வன்முறைகளை தவிர, இவர்களது குடும்பத்தினரால் மாறுபட்ட அல்லது தூய்மையற்ற உணர்ச்சிகளாக கருதப்படும் உணர்ச்சிகளை சரி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் பாலின ரீதியான முறையில்லா திருமணங்கள் LBTQ பெண்களுக்கு எதிரான இன்னுமொரு வன்முறையாகும். இந்த பிரச்சினைக்கான ஆராய்ச்சி முடிவுகள் இல்லையென்றாலும் பெண்களுக்கு எதிரான பலதரப்பட்ட வன்முறைகளால் LBTQ பெண்களும் பாதிப்புக்குள்ளாவது தெளிவான உண்மையாகும்.

3) நுண் நிதியத்தின் ஆபத்துக்கள்

மைக்ரோ ஃபைனான்ஸ் (நுண் நிதியம்) போன்ற பெண்களை மேம்படுத்துவதற்கான அணுகுமுறைகள் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் நம்பத்தகாத திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தினை கொண்டுள்ள திட்டங்கள் பெரும்பாலும் பெண்ணுக்கு பேரழிவைத் தருகின்றன. “கோழிகள் முட்டையிடுவதற்கும் அவற்றை விற்று வருமானம் ஈட்டுவதற்கும் பல மாதங்கள் ஆகும். ஆனால் முதல் வாரத்திலிருந்தே நாங்கள் கடனை அடைக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுவரை கோழிகளுக்கும் நமக்கும் உணவளிக்க பணம் எங்கே கிடைக்கும்? ” என ஒரு பெண் விவசாயி விளக்குகிறார்.

இது போன்ற சூழ்நிலைகள், பல பெண்களை ஆரம்ப கடனை அடைக்க, மீண்டும் கடன் வாங்க வைக்கிறது. மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களால் வசூலிக்கப்படும் வட்டிக்கு 40% முதல் 220% வரை பணம் செலுத்துவது என்பது பெண்களால் முடியாத ஓர் காரியமாக உள்ளது. சந்தை வட்டி விகிதங்கள் 14% ஆகவும், கிரெடிட் கார்டு வட்டி விகிதம் கூட 28% ஆகவும் இருக்கும்போது, இத்தகைய உயர் வட்டி விகிதங்களை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

4) பாலியல் ரீதியான வன்முறைகள்

Image from https://ceylontoday.lk/news/yakkalamulla-pradeshiya-sabha-member-arrested-for-sexual-harassment

இலங்கையில் 90% சதவீதமான பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு முகங்கொடுக்கின்றனர், உலகளாவிய மதீப்பீட்டின் படி நோக்குவோமானால் மூன்றில் ஒரு பெண் எனக் கொள்ளலாம். இது தான் தெற்காசிய ரீதியிலான அதிக சதவீதமாகும். அத்தோடு 2013ஆம் ஆண்டு ஐ.நா.ஆய்வின்படி, இலங்கை ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒரு பெண்ணுக்கு எதிராக உடல் அல்லது பாலியல் வன்முறையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் 3% பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள் இலங்கையில் பாலியல் துன்புறுத்தலுக்கான அணுகுமுறைகள் நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு இயல்பாக்கப்பட்டுள்ளன என்பதற்கு ஓர் சான்றாகும். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு பொதுவான நாளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு திருப்பத்திலும், உடல்நலம் அல்லது சேவைகளை அணுகுவதில், வீட்டில், பணியிடத்தில், போக்குவரத்து அமைப்புகளில், சாலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றாள். இவற்றுக்கு எதிராக பெண்கள் முன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகப்படுத்த வேண்டும்.

இப்போது இது மிகவும் இயல்பாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள், ஏற்படும் பாதிப்புக்களுக்கு அஞ்சுவதனால் குறைவாக மதிப்பிடப்படுகின்றனர். பெண்கள் முன்னோக்கி வந்து வெளிப்படுத்தாமைக்கான காரணம் அவர்கள் மேலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் தான்.

5)  பெண்களின் அதிகார அணுகல்

வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்களின் முழுமையான பயனுள்ள பங்கேற்பு மற்றும் தலைமைத்துவம் அனைவருக்கும் முன்னேற்றத்தை அளிக்கிறது. ஆயினும்கூட, ஐ.நா பொதுச்செயலாளரின் சமீபத்திய அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதன்படி, பொது வாழ்க்கையிலும் முடிவெடுப்பதிலும் பெண்கள் குறைவாகவே பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறார்கள் என கூறுப்படுகிறது. 22 நாடுகளில் மாநில அல்லது அரசாங்கத் தலைவர்கள், தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 24.9% சதவீதமானோர் மட்டுமே பெண்கள். தற்போதைய முன்னேற்ற விகிதத்தில், அரசாங்கத் தலைவர்களிடையே பாலின சமத்துவம் ஏற்பட இன்னும் 130 ஆண்டுகள் ஆகும். முதல் ‘அரச பெண்மணி’ என்ற மிளிரக்கூடிய பட்டத்தை நம் நாடு வைத்திருந்தாலும், சராசரி இலங்கைப் பெண்ணின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடிய தவறான மற்றும் ஆழ்ந்த ஆணாதிக்கக் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் நாங்கள் இன்றும் மாற்றாது நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறோம்.  எங்கள் அரசாங்கத்தில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் இல்லை. தெற்காசிய நாடுகளில் அரசியலில் பெண்கள் பங்கேற்பதில் குறைவான சதவீதத்தை கொண்ட நாடாக இலங்கை உள்ளது. 2020 ஆம் ஆண்டில், இலங்கை நாடாளுமன்றத்தில் 225 சட்டமன்ற உறுப்பினர்களில் 12 பேர் – 5.3 சதவீதமானோர் மட்டுமே பெண்கள். மேலும், பாராளுமன்றத்திற்குள் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கான 193 நாடுகளில் 182வது இடத்தில் இலங்கை உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 52% சதவீதமானோராகவும் வாக்காளர்களில் 56% சதவீதமானோராகவும் பெண்கள் இருந்த போதிலும், அரசியலில் அவர்களது பங்களிப்பு என்று பார்க்கும் போது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

எங்கள் D.I.G பிம்ஷானியை நாம் மறந்துவிடாதபடி – செப்டம்பர் 21, 2020 அன்று, ஒரு பெண் காவல்துறை அதிகாரியை துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக உயர்த்த தேசிய காவல் ஆணையம் ஒப்புதல் அளித்தது. இந்த முடிவு டி.ஐ.ஜி பிம்ஷானி ஜாசின் அராச்சி நியமனம் செய்ய வழி வகுத்தது – நாட்டின் முதல் பெண் டி.ஐ.ஜி ஆக அவர் பெயர் எங்கள் அனைவர் மனதிலும் பொறிக்கப்பட்டது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு, டி.ஐ.ஜி பிம்ஷானி நியமிக்கப்படுவதை எதிர்த்து 32 மூத்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் (எஸ்.எஸ்.பி) கையெழுத்திட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தேதிகளை நிர்ணயித்தது. டி.ஐ.ஜி பிம்ஷானியின் நியமனம் பொலிஸ் பதவி உயர்வு நடைமுறைகளை மீறுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட சம்பவம் வெறுமனவே பிம்ஷானி மற்றும் ஆண் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு இடையிலானதல்ல. இந்த சம்பவமானது பொதுவாக நிறுவனங்களில் ஆட்சேர்பு மற்றும் பதவி உயர்வு கட்டமைப்புகளில் பெண்கள் ஓரங்கட்டப்படுவதற்கான ஒரு சான்றாகும்.

6) எம்.எம்.டி.ஏ மற்றும் திருமணச் சட்டங்களின் சர்ச்சை

எம்.எம்.டி.ஏ, ஆண்கள் குழுவால் தயாரிக்கப்பட்டு 1951 இல் ஆண்களின் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. அதன் இறுதி சீர்திருத்தமானது 1975ல் ஏற்படுத்தப்பட்டது. முஸ்லீம் பெண்கள் மற்றும் நட்பு நாடுகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.எம்.டி.ஏ-வில் சீர்திருத்தத்தை முன்னெடுத்து வருகின்றனர்.  அடுத்தடுத்த அரசாங்கங்கள் குறைந்தது ஐந்து வெவ்வேறு குழுக்களை நியமித்தன. ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.  நீதிபதி சலீம் மார்சூப் தலைமையிலான 2009 இல் நியமிக்கப்பட்ட கடைசி குழு, 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு முன்பு 9 ஆண்டுகள் ஆலோசனைகளை மேற்கொண்டது. ஜூலை 2019 இல், ஒரு இணக்க நடவடிக்கையில், சீர்திருத்தத்திற்கான 14 பரிந்துரைகளுக்கு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டனர். ஆனால் சீர்திருத்தத்தைத் தடுப்பதற்கான நகர்வுகள் மீண்டும் எழுந்தன. சீர்திருத்தங்கள் நடைபெறும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி நாட்டிற்கு திட்டவட்டமாக உறுதியளித்ததன் மூலம் இப்போது நாம் நேர்மறையான முன்னேற்றங்களைக் கொண்டுள்ளோம். ஆனால் புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த சட்டங்களும் கொள்கைகளும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ளவர்களை – குறிப்பாக கொவிட்-19 தொற்றுநோய் கால சூழ்நிலைகளின் போது எவ்வளவு திறம்பட பாதுகாக்கக் கூடியதாக இருக்கும்?

எம்.எம்.டி.ஏ- வின் சர்ச்சைக்குரிய அம்சம் என்னவென்றால், அது முஸ்லீம் திருமணங்களுக்கு குறைந்தபட்ச வயது எல்லை ஒன்றை குறிப்பிடவில்லை. எம்.எம்.டி.ஏ- வின் பிரிவு 23 கூறுகிறது, 12 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தையை ஒரு குவாசி நீதிபதியின் அங்கீகாரத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம். இது கடந்த பத்தாண்டுகளில், 18 வயதிற்கு உட்பட்டவர்கள் திருமணமானமை தொடர்பான நூற்றுக்கணக்கான வழக்குகளுக்கு வழிவகுத்தது. உதாரணமாக, 2011 மற்றும் 2016க்கு இடையில், அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 13-18 வயதுடையவர்கள் சம்பந்தப்பட்ட 870 திருமணங்கள் நிகழ்ந்தன. நிவாரணம் மற்றும் அவற்றின் உள்ளார்ந்த உரிமைகளுக்கான முன்னேற்றத்திற்கும் அணுகலுக்கும் இடையூறாக இருக்கக்கூடிய மேலும் ஒரு பிரச்சினை என்னவென்றால், குவாசி நீதிமன்ற நீதிபதிகளாக ஆண்கள் மட்டுமே காணப்படுகின்றமை.

பிப்ரவரி 2018 இல் ஐ.நா. சிறுவர் உரிமைகள் மாநாட்டிற்கான குழு (யு.என்.சி.ஆர்.சி) நாட்டிற்குள் சில சமூகங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக இருப்பதை எடுத்துரைத்தது. கட்டாய குழந்தை திருமணத்திற்கு பலியாகி வருவது முஸ்லிம் பெண்கள் மட்டுமல்ல, மற்ற சமூகங்களைச் சேர்ந்த சிறுமிகளும் கூட. குறிப்பாக வறுமையில் வாடும் குடும்பங்கள் பெரும்பாலும் தங்கள் மகள்களை திருமணம் செய்து கொடுக்க முயற்சிக்கின்றனர்.

7) பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து வெளிப்பாடு மற்றும் அறிவு இல்லாமை

பல ஆண்டுகளாக சுகாதாரத் துறையில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டாலும், பாகுபாடற்ற வாடிக்கையாளர் சார்ந்த பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை வழங்குவது என்பது இன்றும் சவாலாகவே உள்ளது. வயது, இயலாமை, பாலின அடையாளம், பாலியல் நோக்குநிலை, இனம், பொருளாதார நிலை, சமூக வர்க்கத் தடைகள் இந்த கவனிப்பை செயல்படுத்துவதற்கும் அணுகுவதற்கும் பெரும் சவால்களை ஏற்படுத்துகின்றன. இலங்கையிலுள்ள 50% சதவீதமான இளைஞர்கள் பாலியல் மற்றும் தங்களது இனப்பெருக்க சுகாதரம் தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட அறிவையே கொண்டுள்ளதாகவும் திருமணமான பெண்களில் 35% சதவீதமானோர் எந்தவொரு கருத்தடைகளையும் பயன்படுத்துவதில்லை எனவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன

பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதரம் தொடர்பான அறிவில்லாமையும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் எழுப்பாது இருப்பதும் நம் நாட்டின் அமைதி மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களது பங்கினை அளிப்பதை மட்டுப்படுத்துகிறது. தற்போதைய COVID-19 தொற்றுநோய், தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளையும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் பாகுபாட்டையும் அதிகப்படுத்தியுள்ளது. மேலும் SRH மற்றும் GBV தொடர்பான சேவைகளுக்கான அணுகல் அவர்களுக்கு மிகவும் தேவைப்படும்போது அதைப் பெறுவதில் சவால்களை எதிர்க்கொள்ள வழிவகுக்கிறது. பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பான சரியான விழிப்புணர்வு இல்லாமையால் வறுமை, இளம்பருவத்தில் கர்ப்பம் தரித்தல் போன்றவற்றால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்கள் வழிநடத்தும்போது, நாம் நேர்மறையான முடிவுகளைக் காண்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். COVID-19 தொற்றுநோய்க்கு மிகவும் திறமையான மற்றும் முன்மாதிரியான நடவடிக்கைகள் சில பெண்களால் முன்னெடுக்கப்பட்டன. பெண்கள், குறிப்பாக இளம் பெண்கள், எங்கள் தீவின் சமூக நீதி, காலநிலை மாற்றம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றுக்காக ஆன்லைனிலும் தெருக்களிலும் மாறுபட்ட மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இயக்கங்களில் முன்னணியில் உள்ளனர். எங்களை ஈர்க்கக்கூடிய பல பயணப்பாதைகள் இருந்த போதிலும் இன்றும் பெண்கள் இரண்டாந்தர குடிமக்களைப் போலவே நடத்தப்படுகின்றனர். எங்களுடன் வாழும் பிற பாலினர்க்கு வழங்கப்படும் அதே அளவான அங்கீகாரமோ உரிமைகளோ முறையாக வழங்கப்படுவதில்லை.

இன்று பெண்களை ஏற்றுக்கொள்வது மற்றும் அதிகாரம் அளிப்பதை ஊக்குவிக்கும் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களால் ஆக்கப்பட்ட உள்ளடக்கத்தின் வருகையை நாங்கள் காண்கிறோம். பாலின-சமமான எதிர்காலத்தை நோக்கி உண்மையிலேயே நிலையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டுமானால் இந்த பாசாங்குத்தனங்கள் முடிவுக்கு வர வேண்டும்.

இலங்கையில் கேனபிஸ் / மரிஜுவானா சட்டபூர்வமாக்கப்படுமா?


உலகளாவிய ரீதியில் கேனபிஸ்/மரிஜுவானா சட்டபூர்வமாக.அங்கீகரிக்கப்பட்டாலும்,
சில நாடுகளில் கேனபிஸ் சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கையில் 50000  கிலோ கிராமிற்கு மேற்பட்ட கேனபிஸ் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேவேளையில் வழமையாக 25000 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் இலங்கையின் சிறைச்சாலைக் கைதிகளின் மொத்த தொகையில் 60% போதைப் பொருள் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மரிஜுவானாவின் வரலாறு

இலங்கையில் ஆயுர்வேதம் என்பது மிகவும் பழமை வாய்ந்த, முக்கியத்துவம் மிக்க அங்கமாகும். இன்றைய காலகட்டத்தில் ஆயுர்வேத மருத்துவமானது பரவலாக முன்னெடுக்கப்படுகிறது. அதற்கமைவாக கேனபிஸ் தாவரமானது இம் மருத்துவத்துறையின் மூலகப் பொருட்களின் மிகவும் முக்கிய பங்காற்றுகிறது.

அதேவேளையில் இத் தாவரத்திற்கு வெவ்வேறு.பெயர்கள் சிங்கள மொழியிலும் சமஸ்கிருதத்திலும் வழங்கப்படுகின்றது. அதே வேளையில் மரிஜுவானா, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பாவனையில் காணப்பட்டதற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன. மேலும் பெங்கமுவெ நாளக தேரர் அவர்கள் புனித புத்தர் கூட பல்வேறு மருத்துவ நலன்களுக்காக உபயோகித்தார் என்று உறுதி செய்துள்ளார். அதேவேளையில் இக் கூற்றினை ஸ்தாபனத்தின் செயலாளர் Dr. Anil Jayaweera மற்றும் Dr. Sarath Kotteyawatte ஆகியோர் காப்புப் பிரதியிட்டுள்ளனர். எவ்வாறாயினும் கேனபிஸ் தாவரமானது மருத்துவ மூலப்பொருளாக  பல்வேறு நூற்றாண்டுகளாக உபயோகிக்கப்பட்டுள்ளது. ஆயினும் காலனித்துவ ஆட்சி.காலங்களிலே கேனபிஸ் தடை செய்யப்பட்டு, மேலத்தைய மருத்துவ பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டது. மேலத்தேய மருத்துவப் பொருட்களை  விருத்தி செய்யவே கேனபிஸ் போன்ற பாரம்பரிய மருத்துவப் பொருட்கள் தடை செய்யப்பட்டன.

இலங்கையை பொருத்த வரையில் கேனபிஸிற்கு மிகவும் பெருமதிக்க வரலாறு உண்டு. அதற்கமைவாக கேனபிஸ் தாவர பயிர்ச் செய்கையை சட்டபூர்வமாக்குதல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் இலங்கையில் இத் தருணத்தில் கேனபிஸ் பயிர் செய்கை நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



தற்போதைய சட்ட நிலவரக் கோர்வை
The Poisons, Opium and dangerous Drugs Act

போதைப் பொருள் தடுப்பு சட்டத்திற்கு அமைவாக எந்தவொரு நபரும் கேனபிஸ் வாங்குதல், விநியோகித்தல் மற்றும் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுதல், மேலும் கேனபிஸ் தாவரத்தினூடாக கஞ்சா உற்பத்தி போன்றவை இலங்கையில் சட்ட விரோதமாகக் கருதப்படுகிறது. ஆகவே கேனபிஸ் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதோ, அதன் தயாரிப்பில் பங்கு கொள்வதோ சட்ட விரோதமாகும். எனினும் மருத்துவ ரீதியாக இதன் பயிர்ச் செய்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

இலங்கையில் கடுமையான சட்டங்கள் இதற்கு எதிராக கடைப்பிடிக்கப்படுகிறது. 5 kg இற்கு குறைவாக ஒருவரிடம் மரிஜுவானா காணப்பட்டால், அது சிறு குற்றமாக கருத்தில் கொள்ளப்படும். இதற்காக சிறு அளவிலான தண்டப் பணமும் அதே வேளையில் குறுகிய கால சிறை தண்டனையும் வழங்கப்படும். அதேவேளையில் குறிப்பிடப்பட்ட அளவிற்கு மேலதிகமாக ஒருவரிடம் காணப்படுமாயின் அதிக தண்டப் பணமும் நீண்ட கால கடுஞ்சிறையும் வழங்கப்படும்.

மேலும் பாதுகாப்புச் செயலாளரின் நடவடிக்கையின் அடிப்படையில் 6000 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதுடன், ‘அண்ணளவாக இலங்கையின் போதைப் பொருள் பாவிப்போரின் எண்ணிக்கை  600,000 னை கடந்துள்ளது. இது இலங்கையின் மொத்த சனத் தொகையில் 2.5% ஆகும். அதேவேளையில் பெருமளவிலான நிலப்பகுதி சட்ட விரோத பயிர்ச் செய்கைக்காக பாவனையில் உள்ளது’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கேனபிஸ்/மரிஜுவானா  சட்டபூர்வமாக்கல் தொடர்பான தற்போதைய நிலவரம் மக்களில் ஒரு பங்கானோர்  சட்ட பூர்வமாக்கலில் பெரிதும் தமது ஆர்வத்தினை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அவர்களுடன் நடைபெற்ற விவாதத்தினூடாக, மருத்துவத்துறையின் விருத்திக்காக சட்டபூர்வமாக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இவ் விடயத்திற்காக பல்வேறு நபர்களின் முயற்சி தூண்டுதலாக அமைகின்றன. குறிப்பாக Bengamuwe Nalaka தேரர் Dr. Wasantha Weliange அதேவேளையில் பாரம்பரிய மருத்துவ ஸ்தாபனத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என பல்வேறு நபர்கள் ஊன்றுதலாக உள்ளனர். குறிப்பாக இந்தப் பயிர்ச் செய்கையின் இறுதிப்.பொருள் ஐக்கிய அமெரிக்காவிற்கு ஏற்றுமதி.செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சட்டபூர்வமாக்கலிற்கு எதிர் விவாதங்களும் காணப்படுகின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் மரிஜுவானா சட்டபூர்வாமாக அங்கீகரிக்கப்படுவதற்கு எதிராக உள்ளதாகவும், இதனை ஆதரிக்கும் நடவடிக்கைகளுக்கு  உயர்நீதிமன்றத்துடன் கலந்துரையாடி, தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கெள்ளப்படும் என தெரிவித்தார். எவ்வாறாயினும்  பிரதமர் தெரிவித்ததாக பிரத்தியேக குழுவொன்று அமைத்து,  பிரிவு 8  சட்ட இல 11, 1984 – தேசிய  போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் மரிஜுவானா/கேனபிஸ் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை ஆராய சிரேஷ்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் (COLOMBO OCT 7,2020)



ஏன் இலங்கையில் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்?

கேனபிஸ் சட்ட விரோதமாக இருந்தாலும் மருத்துவ நலன் வேண்டி.அங்கிகரிக்க வேண்டும். மரிஜுவானா இயற்கையில் பல்வேறு நலன் கொண்ட தாவரமாகும். மேலும் அவை நூற்றுக்கும் அதிகமான canabinoids எனும் இயற்கை இரசாயன பொருட்களை கொண்டுள்ளது மேலும் இவ் இராசயன பொருட்களின் மனிதனின் பல்வேறு நோய்களுக்கான நிவாரணியாக அமைகின்றன. அதேவேளையில் புற்றுநோயைக் கூட நிவர்த்தி செய்யும் வல்லமை இதில் உள்ளது.

அதேவேளையில் நவலோக நிறுவனம் Ceyoka health care and pharmaceutical ஆவுஸ்திரேலிய கேனபிஸ்/மரிஜுவானா உற்பத்தி நிறுவனத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. Ceyoka Health Care நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி W. S. Premakumara தெரிவித்தது, கேனபிஸ் ஆனது விபத்தினால் அல்லது சத்திர சிகிச்சையினால் ஏற்படும் வேதனைக்கான வலி நிவாரணி ஆகும். அதேவேளையில் புற்றுநோய் சிகிச்சையிலும் முக்கிய பங்காற்றும். அதேவேளையில் கேனபிஸ்ற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், இவை சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட மருந்தகங்களில் மாத்திரமே கிடைக்கும் என தெரிவித்தார்.

மேலும் உள்ளூர் ஆயுர்வேத மருத்துவத்துறையில் கேனபிஸ்ற்கு அதிகமான கேள்வி நிலவுவதாகவும், பல மருத்துவர்கள் மருத்துவத் தேவை வேண்டி உபயோகிக்கப்படும் கேனபிஸ் தனியார் பாவனைக்கு உகந்ததல்ல. மேலும் அவை பொலிஸாரினால் சட்ட நடவடிக்கை அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டவை. மேலும் இந்த பறிமுதல் செய்யப்பட்ட கேனபிஸ் 4-5 வருடங்கள் பழமை வாய்ந்தது எனவும் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மேலும் இறுதியாக கேனபிஸ் இல் அதிகமான மருத்துவ நலன்கள் உள்ளன. இவை இலங்கையில் அங்கீகரிக்கப்படுமாயின் இலங்கையின் மருத்துவத்துறைக்கு பெரும் ஊன்றுகோலாக விளங்கும்.

இது தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு எப்போதும் நாடி யுடன் இணைந்திருங்கள். கேனபிஸ் அங்கீகரிக்கப்படுவது தொடர்பான உங்கள் கருத்தினை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

ஆதி சிவனுக்கான இரவு – மகா சிவராத்திரி

சிவன் எனப்படும் சிவபெருமான்; மகாதேவா, மகாயோகி, பசுபதி, நடராசா, பைரவா, விஷ்வநாத், பாவா, போலேநாத் போன்ற பெயர்களுக்கும் உரித்துடையவராவார். தவிர சிவபெருமான், தமிழர்களின் ஆதி குடி எனவும் நம்பப்படுகிறார். இந்து சமயத்தில் பிரம்மா, விஷ்ணு  போன்ற பிரபல்யமான கடவுகள் இருப்பினும் அதி பிரபல்யமான கடவுளாக சிவபெருமான் விளங்குவதோடு, அதிக சக்திகள் கொண்ட கடவுளாகவும் கருதப்படுகின்றார். இந்து ஆலயங்களில் சிவபெருமானின் சன்னதி ஏனையவற்றை விட வேறுபட்டதாக காணப்படுவதோடு தனிமைப்படுத்தப்பட்ட சன்னதியாகவும் இருக்கும்.

அதிசக்தி வாய்ந்த அழிக்கும் திறன் கொண்ட கடவுளாக போற்றப்படும் சிவபெருமான், அறியாமையின் கடவுளாகவும் (God of Ignorance) சித்தரிக்கப்படுகிறார். இவர் அதிகமாக பனிமூட்டமிக்க பிரதேசமாக வர்ணிக்கப்படும் கைலாய மலைகளில் வாழ்வதாக கூறப்பட்டபோதிலும், அதற்கு அடுத்த படியாக சுடுகாட்டில் வாழ்வதாகவும் நம்பப்படுகிறது. மேலும் யோகக்கலை மற்றும் நடராசர் நடனத்தின் பிரதிபலிப்பாக சிவபெருமான் விளங்குவது யாவரும் அறிந்ததே. 

மகா சிவராத்திரி

அடுத்தபடியாக சிவனுக்குப் பிரியமுள்ள ராத்திரியாக விளங்கும் சிவராத்திரியை பற்றி நோக்குவோம். மகா சிவராத்திரி என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இது ஆண்டு தோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி திதி இரவில் கொண்டாடப்படும். சிவராத்திரி என்பதில் சிவன் என்ற சொல்லிற்கு  மங்களம், இன்பம் என பொருள் கொள்ளலாம். மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து  வரும் 14 ஆவது திதியன்று  சிவராத்திரி வருகின்றது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷ தினத்தை சிவராத்திரி தினமாக கடைப்பிடிக்கிறோம்.


மாசி மாதம் தேய்பிறை சதுர்தசி திதியில், அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே மகா சிவராத்திரி தினம் கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரியன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவனை பூஜை செய்பவர் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லா விதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளித்து அருள் புரிய அன்னையானவள் வேண்டிக் கொண்டாள். அதற்கு சிவபெருமானும் அருள் புரிந்தார். அந்த இரவே மகா சிவராத்திரி என வணங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

சிவனுக்கும் கஞ்சா புகைப்பதற்குமான தொடர்பினை நோக்குவோம்

தேவர்கள் மற்றும் அரக்கர்கள் பாற்கடலை கடைவதன் மூலம் அமிர்தம் எனப்படும் சாகா வரம் கொடுக்கும் ஓர் திரவியத்தினை (Nectar of  Immortality) கைவசப்படுத்திக்கொள்வதற்காக, வாசுகி என்ற பாம்பை வைத்து பாற்கடலை கடைந்து வந்தனர். அனைத்து அதீத சக்தியிலும் ஒரு கெடுதல் உள்ளதென்பது யாவரும் அறிந்ததே! அதனடிப்படையில் பாற்கடலைக் கடையும்போது அதிகளிவிலான நஞ்சு வெளிவரத் தொடங்கியது. இதைக் கண்டு பதட்டமுற்ற தேவர்களும் அரக்கர்களும் சிவபெருமானை நாடியுள்ளனர். சிவன் பாற்கடலிலிருந்து வெளிவந்த நஞ்சினை உட்கொண்டு நிலமையை சீர் செய்தார். இதனால் சிவனின் உடல் முழுவதும் நீல  நிறத்தில் மாறத்துவங்கியது.

‘ஆலகால விடம்’ எனப்படும் அதிசக்திவாய்ந்த நஞ்சினை அருந்திய சிவன், ‘நீல கண்டன்’, ‘விடமுண்ட கண்டன்’ என யாவராலும் போற்றப்படுகிறார். மேலும் இதைக் கண்டு வியந்த தேவர்களும் அரக்கர்களும், ஒரு துளியில் உலகை அழிக்கும் வல்லமை கொண்ட ஆலகால  நஞ்சினை சமனிலைப்படுத்த ‘பாங்க்’ எனப்படும் திரவியத்தை வழங்கினர். அத்திரவியத்தில் கஞ்சா உட்பட பல மூலிகைகள் கலக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. மேலும், கஞ்சா இலையினை புகைத்து நஞ்சின் சக்தியை சமப்படுத்திக் கொண்டதாகவும் பரவலாக  நம்பப்படுகிறது. இக் கதைகள் அனைத்தும் இந்து சமயத்தின் ஓர் நம்பிக்கையாகக் (Mythology) கருதப்படுவதோடு, வரலாறாக எங்கும் பதிவிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சிவபெருமான்  சித்த வைத்தியத்தின் தந்தையாக எல்லோராலும் வணங்கப்படுகிறார். 4000 வருட பழமை வாய்ந்த சித்த வைத்தியத்தில், கஞ்சாவின் பயன்பாடு பற்றி பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருப்பது  மட்டுமல்லாது, சுவர் சிற்பங்கள் மற்றும் ஓலைச் சுவடிகள் போன்றவற்றில்  அதிகளவாக கூறப்பட்டிருக்கிறது.

 

சிங்கராஜ மழைக்காடுகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

இது எப்போதும் கடல் போன்ற இருண்ட மேகங்களால் சூழப்பட்ட ஓர் வனப்பகுதியாகும். இது இலங்கையின் கடைசி தாழ்நில மழைக்காடாக அடையாளப்படுத்தப்படுகிறது. இது இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்திற்கு உகந்த மற்றும் பிரதான இடமாக திகழ்கிறது. இது 139 அரிய வகை தாவரங்கள் மற்றும் நாட்டின் பாதி பாலூட்டி வகைகளின் வாழ்விடமாக விளங்குகிறது. 1988இல் United Nations Educational, Scientific and Cultural Organisation (UNESCO), சிங்கராஜ வனத்தை உலக பாரம்பரியம் மிக்க தளமாக (World Heritage Site) அறிவித்தது.

UNESCO அமைப்பின் World Heritage வலைத்தளத்தில், 213 இயற்கை வளங்கள் உள்ளடங்கும், கிட்டத்தட்ட 96 நாடுகளைச் சேர்ந்த உலகின் பாரம்பரியம் மிக்க தளங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் மேலும் இரண்டு தளங்கள் இலங்கையில் இருப்பது பெருமைக்குரிய ஒன்றாகும். அவை முறையே ஹோர்ட்டன் சமவெளி தேசிய வனம் (Horton Plains), நக்கிள்ஸ் மலைத்தொகுதி (Knuckles Mountain Range) மற்றும் சிங்கராஜ மழைக்காடுளாகும்.

World Heritage List பட்டியலில் உள்ளடக்கப்பட குறிப்பிட்ட தளங்கள், உலகளாவிய மதிப்பினை கொண்டிருப்பதற்கான பத்து கட்டளை விதிகளில் குறைந்தபட்சம் ஒன்றையாவது கொண்டிருக்க வேண்டும்.
சிங்கராஜ வனமானது பின்வரும் கட்டளை விதிகளை சந்தித்ததன் காரணமாக உலகளாவிய மதிப்பினையுடைய தளமாக ஏற்கப்பட்டது. 

  1. தெரிவு செய்யப்படுவதற்கான கட்டளை விதி IX : இலங்கையின் வெப்பமண்டல மற்றும் ஈரப்பதமான பசுமை மாறாத வனங்களில் மிகுதியாக இருக்கும் வனமாக சிங்கராஜ வனம் காணப்படுகின்றது. கோண்டுவானா நிலப்பரப்பின் நினைவுச்சின்னமான தாவரங்கள் சில இருக்குமிடமாகவும், கண்டப்பெயர்ச்சி குறித்த அறிவியல் மற்றும் உயிரியல் சம்பந்தமான ஆய்வுகளினை மேற்கொள்வதற்கு சிறந்ததொரு தளமாகவும் விளங்குகிறது.
  2. தெரிவு செய்யப்படுவதற்கான கட்டளை விதி X : இது மலர்களின் பூர்வீக நிலமாக காணப்படுகின்றது. இங்கு நம் நாட்டிற்குரிய 139 வகை தாவர இனங்கள் காணப்படுவதோடு அவற்றுள் சில அரிதானவையாகவும் திகழ்கின்றன. 

இங்கு விலங்கினங்களும் அதிகம். நாட்டின் 50% மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் இங்கு காணப்படுகின்றன. இலங்கையை சேர்ந்த 20 உள்ளூர் பறவை இனங்களில், 19 பறவை இனங்கள் இந்த காட்டில் தான் வாழ்கின்றன. அதுமட்டுமல்லாது பயங்கரமான வன விலங்கினங்களான சிறுத்தை மற்றும் இலங்கையின் ஈரநில யானைகளின் வாழ்விடமாகவும் சிங்கராஜ வனம் காணப்படுகின்றது. 

மழைக்காட்டை பிரவேசித்தல் 

வருடம் முழுவதும் மழைவீழ்ச்சி காணப்படும் காடாக இருந்தாலும், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மற்றும் ஆகஸ்ட் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை மழைவீழ்ச்சி குறைவானதாகவே காணப்படும்.  நீங்கள் வனவிலங்குகளை பார்க்க விரும்புகிறீர்களாயின் காட்டின் வட பகுதியிலுள்ள பூங்கா வழியாக செல்லுங்கள். அந்தப் பகுதியில் தான் கிராம மக்களின் தலையீடு குறைவானதாக காணப்படும். காட்டுக்குள்ளிருக்கும் நீர்வீழ்ச்சியினை பார்வையிட, பிடதெனிய வழியே செல்வது பொருத்தமானதாக இருக்கும். சிங்கராஜ காட்டுக்குள் பயணிக்கும் போது அது பற்றிய தெளிவான அறிவினை உடைய ஓர் வழிகாட்டி ஒருவரை உங்களுடன் வைத்துக் கொள்வது நல்லது. பூங்காவின் வாயிலில் 600 ரூபாய்க்கு அவ்வாறான வழிகாட்டியை அழைத்துச் செல்ல முடியும். முதல் தடவை பயணமாயின், நம்மால் கண்டறிய முடியாத விலங்குகளை நன்கு பயிற்சி பெற்ற வழிகாட்டியின் உதவியுடன் கண்டறிய இலகுவாக இருக்கும். 

பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கான வழி நடை பாதையாகவே காணப்படுகின்றது. ஆகவே காட்டிற்குள் செல்பவர்கள் அட்டை மற்றும் நுளம்புகளை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். பூச்சி கடியிலிருந்து காக்கும் மருந்து (insect repellent) அல்லது உப்பினை உபயோகிப்பது, இவற்றின் தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள துணைபுரியும். நீங்கள் இங்கு காணப்படும் வெப்பநிலைக்கு ஏற்றவாறான உடை மற்றும் காலுறை அணிதல் சிறப்பானதாக அமையும். 

ஆராய வேண்டிய விடயங்கள்

இந்தக் காடு அதிகளவிலான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் பெரும்பான்மையானவை இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவை. இங்கு இலங்கையின் நீல மாக்பி, சிவப்பு முகம் கொண்ட மல்கோஹா மற்றும் பசுமை பில்ட் கூகல் போன்ற சில அரிய பறவைகளை பார்வையிடலாம். இந்தப் பறவைகளை தனித்துவமாக்குவது என்னவென்றால், ஆறு அல்லது அதற்கும் மேற்பட்ட பறவை இனங்கள்  தீவனத்தின்போது  ஒன்றாக இருக்கின்றன. இந்த நிகழ்வு மிகவும் அசாதாரணமானது மட்டுமன்றி பறவைகளை பார்வையிட வருபவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

சிங்கராஜ வனத்தில் அனைவரது மனதையும் கவர்ந்திழுக்கக் கூடிய ஓர் பகுதியென்றால் அது கிருவானா நீர்வீழ்ச்சி தான். இது இலங்கையின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்று. இங்கு நீங்கள் பிரவேசிக்க உள்ளீர்களாயின் இந்தப் பகுதி மிகவும் வழுவழுப்பான பகுதி என்பதை கவனத்திற் கொண்டு அதற்கேற்றவாறு செயற்படுங்கள்.

சற்று அருகில் கோட்டபோலா கிராமத்திற்கு நீர்மின்சாரம் உற்பத்திக்கு பயன்படும் கோட்டபோலா நீர்வீழ்ச்சியுள்ளது. இது அழகான ஓர் இடமாக இருந்த போதிலும் இதனை காட்டுக்குள் செல்லும் மக்கள் கண்டறிந்து பிரவேசிப்பது குறைவு.

இலங்கையின் பௌத்த மத கலாசாரத்தை வெளிப்படுத்தக் கூடிய நினைவுச் சின்னங்களும் சிங்கராஜா வனத்தில் காணப்படுகின்றன. டெனியாயவின் தென்மேற்கில் சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோலவெனிகம விகாரை அதற்கான ஓர் எடுத்துக்காட்டாகும். இந்த விகாரையின் கட்டமைப்பினை உற்று கவனிக்கும்போது, இது கண்டியில் உள்ள புனித தலதா நினைவுச் சின்னத்தினை ஒத்திருப்பதைக் காணலாம். சில ஆண்டுகளாக பல சிதைவுக்குள்ளான போதும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்து பார்வையிடும் தளமாகவே திகழ்கின்றது. மேலும் கோட்டாபோலாவின் தென்மேற்கே கெடபருவ ரஜ மகா விகாரை உள்ளது. 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த ஒரு இயற்கை குகைக்குள் கட்டப்பட்ட, பழங்கால பாறையினாலான விகாரையினை காண விரும்புகிறீர்களாயின் கெடபரு மலையின் உச்சிக்கு செல்லுங்கள். இப்பகுதி கண்களுக்கு விருந்தளிக்க கூடியதாக அமையும். இந்த விகாரையின் அழகிய சூழலில் புத்தரின் தங்க சிலை மற்றும் பல்வேறு அரிய மருத்துவ தாவரங்களோடு, சில பூர்வீக விலங்கினங்களும் உள்ளன.

இறுதி இரண்டு ஈரநில யானைகள்

சிங்கராஜ வனத்தைப் பற்றி சொல்லும் போது இங்கு கடைசியாக எஞ்சியிருக்கும் இரண்டு ஈரநில யானைகள் பற்றி குறிப்பிடுதல் அவசியமாகும். இந்த இரு யானைகளை, சில சர்ச்சைகளின் காரணமாக காட்டிலிருந்து அகற்ற முடிவு செய்துள்ளனர். யானைகள் “keystone species” என அழைக்கப்படுவதோடு அவை சுற்றுச்சூழல் மற்றும் அவற்றை சூழவுள்ள விலங்குகளின் ஆரோக்கியத்திற்கும் துணை நிற்கின்றன. யானைகளை காட்டில் இருந்து அகற்றினால், யுனெஸ்கோவானது (UNESCO), சிங்கராஜ காட்டினை World Heritage Site பட்டியலிலிருந்து நீக்கி விடுவதாக தெரிவித்துள்ளது. இந்த முக்கியமான பட்டியலில் இருப்பதனால் சிங்கராஜ காடு பெற்று வந்த சில நன்மைகளை, இழக்க நேரிடும் என அறியப்படுகிறது:

  1. அடையாளம் : UNESCO World Heritage Site பட்டியலில் இருப்பதனால் சிங்கராஜ வனமானது, உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட ஒன்றாக விளங்குகிறது. பட்டியலிடப்பட்ட இடத்தின் சிறப்பாக திகழும் அம்சங்களை அது எடுத்துக்காட்டுகிறது.
  1. நிதி : அந்தப் பட்டியலிலுள்ள இடங்களது பாதுகாப்பு மற்றும் நிலைப்பாட்டிற்கான நிதியுதவி உலகளாவிய ரீதியில் பெறப்படுகிறது.
  1. சுற்றுலாத் துறை : பட்டியலில் உள்ள இடங்கள் சர்வதேச கவனத்தைப் பெறுகின்றன. இதனால் சுற்றுலாத் துறை வருமானம் போன்ற பொருளாதார நன்மைகளையும் பெற முடிகிறது.
  1. போர்க்காலத்தில் பாதுகாப்பு : யுத்தத்தின் போது அழிவு அல்லது தவறான பயன்பாட்டிற்கு உட்படுத்துவதற்கு எதிராக ஜெனீவா உடன்படிக்கையின் கீழ் இந்த வனமானது தற்போது பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
  1. உலகளாவிய வளங்கள் மேலாண்மை திட்டங்கள் அணுகல் : ஆசியாவிலேயே இலங்கையில் தான் அதிகளவான யானைகள் காணப்படுகின்றன. பெருகி வரும் மக்கள் சனத்தொகை காரணமாக, வனவிலங்குகளின் வாழ்விடங்கள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகின்றன. இலங்கையில் ஆண்டொன்றுக்கு சுமார் 200 யானைகள் மற்றும் 50 மக்கள் இறப்பதை காணலாம். அத்தோடு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பயிர் மற்றும் சொத்து சேதங்கள் ஏற்படுகின்றது. இந்த தீவு கொண்டுள்ள வளங்களான பல்லுயிர் மற்றும் இயற்கை மூலதனங்களைப் பாதுகாப்பதனூடாக ஏற்படும் வளர்ச்சியை சமநிலைப்படுத்துவதற்கான தேவையை புறக்கணிக்கக் கூடாது.

இலங்கையின் வருங்கால சந்ததியினருக்கான நமது விலைமதிப்பற்ற பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எதிர்காலத்தில் அவர்களும் சிங்கராஜ போன்ற இடங்களுக்குச் சென்று, எம் நாட்டின் பொக்கிஷங்களை பார்வையிட்டு வியப்பில் ஆழ்ந்திடுவார்கள்.

Fox Resorts – யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் உங்கள் பகல் வேளை உணவினை உண்டு மகிழ சிறந்த இடமாக Fox resort அமையும். இந்த உணவகமானது யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பகுதியில் காங்கேசன்துறை வீதியில் அமையப் பெற்றுள்ளது. இவர்கள் விருந்தோம்பல் பண்பில் மேன்மையானவர்களாக திகழ்ந்தனர். கொவிட்-19ற்கான சுகாதார கட்டுப்பாடுகளினை முறையாக கடைப்பிடித்தனர். சமூக இடைவேளை மற்றும் அவர்களது உணவகப் பகுதி போன்ற அனைத்துமே மிகவும் நேர்த்தியாக காட்சியளித்தது.

இங்கு விலைமதிப்பில்லா யுத்த கால எச்சங்களான சில சுவர் எழுத்துக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சிறிய நீச்சல் தடாகம் மற்றும் அழகிய கண்கவர் பச்சை நிறத்தால் மூடப்பட்ட தோட்டம் மற்றும் மரத்தளபாடங்கள் என அழகிய ஓர் சூழலுடன் கூடியதாக காட்சியளித்தது. உங்கள் நண்பர்களுடன் ஒன்று கூடவும் விடுமுறை நாட்களை ரிலாக்ஸாக கழிக்கவும் சிறப்பான ஓர் இடமாக Fox resort அமையும்.

இலங்கை கறி சோறு (Traditional Sri Lankan Rice & Curry) – LKR 1200 – LKR1600

இங்கு நாங்கள் பகல் வேளை உணவுக்காக Chef – A Kitchen by Fox Resorts ல் பாரம்பரிய இலங்கை சோறு மற்றும் கறி (Traditional Sri Lankan Rice & Curry) உணவுத் தொகுதியினையும் சில ஈற்றுணவுகளையும் தெரிவு செய்தோம். இந்த உணவுத் தொகுதியில் சிவப்பரிசி சோறு பருப்பு கறி, வெண்டிக்காய் கறி, பீட்றூட் கத்தரிக்காய் கறி, வாழைக்காய் பொறியல் மற்றும் அப்பளம் என்ற பிரதான மெனுவுடன் சில அசைவ கறிகளும் பரிமாறப்பட்டன. இதே மெனு மஞ்சள் சோறுடனும் பரிமாறப்படுகிறது. 

இறால் கறி – LKR 880

பொதுவாக இலங்கையர்களான நமக்கும் இறாலிற்கும் தனி ஒரு பந்தம் உண்டு. இறால் வடை, இறால் பொறியல், இறா ல் சொதி, இறால் கறி என இறால் சேர்க்கப்பட்டு சமைக்கப்படும் உணவுகள் நமக்கு பிடித்த உணவில் முதன்மை இடத்தை தானாக பெற்று விடுகிறது. நாங்கள் எத்தனையோ இடங்களில் இறால் கறியினை சுவைத்துள்ளோம் ஆனாலும் இங்குள்ள இறால் கறி ஒரு தனிச்சுவை.

மீன் கறி – LKR 600

இதைப் பற்றி விளக்க வார்த்தைகளே இல்லை. எங்கள் குழுவினர் முந்திக் கொண்டு பங்கிட்டு சாப்பிட்ட கறி இது தான். இதில் மீனின் தசைப்பகுதியில் மசாலா நன்றாக இறங்கி ஊறிப் போயிருந்தது. அதனால் இதன் சுவை உச்சத்தை தொட்டது.

ராசவள்ளி கிழங்கு – LKR 550

இது எங்கள் ஒவ்வொருவரது மனதினை மட்டுமல்லாது கண்களையும் கவர்ந்திழுத்த ஈற்றுணவு.

வாய்ப்பண் – LKR 60 (per piece)

இது நிஜமாகவே எங்களுக்கு யாழ்ப்பாண மண்ணின் மணத்தினை உணரச் செய்த ஓர் உணவு. இதற்கு தொட்டு உண்பதற்கு சீனிப்பாகு இருந்திருந்தால் மேலும் சிறப்பானதாக இருந்திருக்குமென தோன்றியது.

சவ்வரிசி பாயாசம் – LKR 400

வெயிலில் அலைந்து திரிந்து வரும் நமக்கு நம் தாய்மார் செய்து தரும் பகல் உணவிற்கான ஈற்றுணவுகளில் இதுவும் ஒன்று. உண்மையில் அம்மா வீட்டில் செய்யும் சுவையும் அதே அன்புடனும் பரிமாறப்பட்டது.

லட்டு – LKR 75 (per piece)

சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் சிற்றுண்டி தான் லட்டு. ஒவ்வொரு லட்டு பிரியர்களும் இங்குள்ள லட்டினை சுவைக்க வேண்டும். இங்கு பரிமாறப்பட்ட லட்டில் இனிப்பும் மென்மையும் சிறப்பானதாக இருந்தது. இப்போதும் அதன் சுவை மனம் விட்டு பிரியாதுள்ளது.

Fox resort உணவகமானது கூகுளில் 4.6 star rate பெற்றுள்ளது. Booking.com மூலம் இவர்களது விடுதி பற்றிய மேலதிக தகவல்களை அறியலாம்.

இலங்கையின் முதல் பெண் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக மனுத் தாக்கல்

இலங்கையின் முதலாவது பெண் பிரதி பொலிஸ் மா அதிபராக (DIG) விளங்கும் பிம்ஷானி ஜாசின் ஆராச்சி அவர்களை பணிநீக்கம் செய்யக்கோறி உச்ச நீதி மன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந் நியமனத்தால் தங்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக மேற்கோள் காட்டி, முன்னாள் ஊடகப்பேச்சாளர் ருவன்குணசேகர உற்பட சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 32 பேரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, பெப்ரவரி மாதம் 16ம் திகதி முர்து பெர்னாண்டோ, சஞ்சீவ ஜயவர்தண மற்றும் அச்சலா வேங்கப்புலி ஆகிய நீதிபதிகளினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.

இந் நியமனம் பொலிஸ் மா அதிபர் (IGP) மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் வழங்கப்பட்ட போதிலும், ‘பெண்’ என்ற சொல்லை மாத்திரம் கருத்தில் கொண்டு நியமனங்கள் வழங்கும் ஒழுங்குமுறை இல்லை என்ற வாதம் எடுத்துரைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தண அவர்களினால் இந் நியமனத்திற்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு வழங்கப்பட்டது.

பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) பிம்ஷானி ஜாசின் ஆராச்சி அவர்கள், ருகுணு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், சிங்களம் மற்றும் புள்ளிவிவரவியல் துறைகளின் BA பட்டதாரியாவார். மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பான முதுநிலை பட்டதாரியுமாவார்.

இவர் 1997 ஆம் ஆண்டு ஆய்வாளராக(Inspector of Police) சேர்க்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு SSP பதவி உயர்வு பெற்றார். மேலும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக கட்டுபாட்டுப் பணியகத்தில் இயக்குனராக விளங்கியுள்ளார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) பிம்ஷானி சார்பில் ஆஜராகிய சட்டத்தரனி கிரிஷ்மல் வணிகசூரிய கூறுகையில் இம் மனுவின் முதலாவது மனுதாரியே பொலிஸ் சட்டப் பிரிவின் தலைவராக விளங்குவதால் போதுமான ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ் வழக்கிற்கு ஆட்சேபனை மனு வழங்க அவகாசம் கோரப்பட்டதை அடுத்து உச்ச நீதிமன்றத்தினால் 3 வாரத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்டதோடு, ஆட்சேபனை மனு வழங்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் எதிர் ஆட்சேபனை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் இவ் வழக்கின் அடுத்த தவணை மே மாதம் 18ம் திகதி உச்ச நீதிமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளது.

தனித்துவமான காதலர் தின பரிசு ஐடியாக்கள் – மற்றும் கிடைக்கும் இடங்கள்



காதலர் தினத்தை உங்கள் துணையோடு கழிப்பதை விட மகிழ்ச்சியான விடயம் இருக்க முடியாது! இருப்பினும், காதல் துணைக்கு தகுந்த ஒரு காதலர் தின பரிசினை தேர்வு செய்வது என்பது காதலர்களுக்கு மிகப்பெரிய சிக்கலாகவே இருக்கிறது. எது மாதிரியான பரிசுகளை தெரிவு செய்வது? நீங்கள் தெரிவு செய்யும் பரிசு  உங்கள் காதலருக்குப் பிடிக்குமா? அந்தப் பரிசு அவர்களின் தனிப்பயன்பாட்டுக்கு உகந்ததா அல்லது உங்கள் துணையின் மனதை கவரும் பரிசுகளை தேர்ந்தெடுப்பது எப்படி? என உங்களுக்குள் பல கேள்விகள் எழலாம். இதுபோன்ற குழப்பங்களுக்கு விடை தரும், கிரியேட்டிவ் எண்ணங்கள் சிலவற்றை கீழ்காணலாம்.  

1. Food Bouquets – உணவுக் கொத்துகள்


உணவு
பிடிக்காத ஆட்களே இருக்க முடியாது. பூக்கொத்துக்களை பரிசாக கொடுப்பதென்பது ஒரு பழைய பஞ்சாங்க முறையாகும். எனவே பூக்கொத்துகளுக்கு பதிலாக உணவுக்கொத்துகளை பரிசாக வழங்கலாம். அதாவது பூக்கள் எப்படி ஒன்றாக சேர்த்து, சுற்றிக் கட்டப்பட்டு ஒரு அடுக்கான கொத்தாக விற்கப்படுகிறதோ, அதேபோல உணவுகளை சேர்த்து ஒரு உணவுக் கொத்தாகக் கொடுக்கலாம். இதற்கு டோனட்ஸ், சிக்கன் நக்கெட்ஸ் போன்ற உணவுவகைகள் உகந்தைவையாகும்.

The Doughnuttery
இங்கு நாவுக்கு விருந்தளிக்கும் சுவையான டோனட்களை, உங்களது விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு பிடித்த டோனட்களை கொத்துக்களாக வடிவமைத்து வாங்கிக்கொள்ளவும் முடியும்.
Instagram: @the_doughnuttery
Facebook: The Doughnuttery

Doughnutty
உங்களுக்காக  அழகாக டோனட்களை கொத்தாக்க கோர்த்துத் தரும் மற்றொரு இடம்!
Instagram: @doughnutty._

Nuggs and Kisses
இதன் பெயரிலேயே தெளிவாக புரியும், இங்கு சிக்கன் நக்கெட்ஸ் மற்றும் ஃபிரென்ச் ஃபிரைஸ் ஆகியவற்றை கொத்துக்களாக வடிவமைத்து விற்பனை செய்கிறார்கள்.
Instagram: @nuggsandkisses.lk

Midnight Surprise
நீங்கள் நள்ளிரவு வேளையில் கூட உங்கள் துணையை சர்ப்ரைஸ் செய்து அசத்துவதற்கு உகந்த இடம் இது! உங்கள் தேவைக்கமைய மிட்நைட் சர்ப்ரைஸ் தங்கள் இடத்தை வடிவமைத்துக் கொள்வது மட்டுமல்லாமல், அழகான பரிசுப் பெட்டிகள், பலூன் ஹேம்பர்கள், கேக்குகள், பிரவுனி கொத்துகள் மற்றும் அழகான ஹார்ட் பிரேக்கர் ஸ்மாஷ் கேக்குகளையும் விற்பனை செய்கிறார்கள்.
Instagram: @midnight_surprise.lk
Facebook: Midnight Surprise
Contact Number: 072 800 6118

The Giftery
பரந்த அளவிலான பரிசுகளைக் கொண்ட மற்றொரு கடை. இங்கு கண்கவரும் பரிசுப் பெட்டிகள், பலூன் ஹேம்பர்கள், கேக்குகள், பிரவுனிகள், கேக் கொத்துக்கள் மற்றும் அழகான ஹார்ட் பிரேக்கர் ஸ்மாஷ் கேக்குகளுக்கு பெயர் பெற்றவை!
Instagram: @the.giftery__
Contact Number: 076 053 3738

Candy Cravings
இது கண்டியை மையமாகக் கொண்ட ஒரு ஆன்லைன் வர்த்தகம். கண்டி மற்றும் மாத்தளை இடைப்பட்ட பகுதிகளில் இவர்களது சேவையினைப் பெற்றுக் கொள்ளலாம். இங்கு டோனட் கொத்துக்களுடன், தனிப்பயனாக்கப்பட்ட கேக்குகள், பிரவுனிகள், கப்கேக்குகள் மற்றும் குக்கீகளும் கிடைக்கும்.
Instagram: @candy.cravings_kandy
Contact Number: 075 440 9000

The Bloom
இவர்களது ஸ்ட்ராபெரி கொத்துக்களுக்கு பிரபலமாக இருப்பதைத் தாண்டி, ப்ளூம் பூங்கொத்துகள், தனிப்பயனாக்கப்பட்ட கைத்தறி பரிசுகள், பிரவுனிகள் மற்றும் கேக்குகளுக்கும் சிறப்பான ஓரிடம்! இது நீர்கொழும்பை மையமாகக் கொண்டிருந்தாலும் தீவு முழுவதும் விநியோகத்தை உங்களுக்கு வழங்குகின்றது.
Instagram: @__thebloom__
Contact Number: 076 606 6501

Dessert Corner
இவர்களது பிரபலமான பிரவுனி கொத்துக்களை தாண்டி, மொனோகிராம் கேக்குகள் மற்றும் கேக் ஜாடிகள் மிகவும் பிரத்தியோகமானவை.
Instagram: @_dessert_corner_
Facebook: Dessert Corner
Contact Number: 072 050 7474
Pick-Up Location: Gothatuwa


2. Love Jars –
காதல் கலன்கள்

உங்கள் அன்புக்குரியவர்களிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த விடயங்கள், அவர்களின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் பாராட்டுக்களை, சிறுசிறு துண்டுகளில் எழுதிச் சேகரித்து, காதல் கலன்களிலிட்டு பரிசாக கொடுக்கலாம். இது வெறும் பரிசாக மட்டுமல்லாமல், மனதளவில் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும் சிறந்த வழியாக இருக்கும்.

Dazzling Crafts
காதல் ஜாடிகள் , வசீகரமான போத்தல்கள், நினைவுப் பெட்டகங்கள் போன்ற அனைத்து வகையான கைவினைப்பொருட்களிலும் நிபுணத்துவம் பெற்ற ஆன்லைன் ஸ்டோர் இது!
Instagram: @dazzling.crafts
Facebook: Dazzling Crafts
Contact Number: 077 586 5817

Craft House
அற்புதமான கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் மற்றொரு கடை. இங்கு காதல் கலன்கள், போலாரொய்டுகள் மற்றும் ட்ரீம் கேட்ச்சர்ஸ் எனப்படும் அலங்கார பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.
Instagram: @__crafts_house_
Contact Number: 078 512 6061

Rashi’s Craft Diaries
ராஷி தனது படைப்பாற்றலுக்கு பெரிதும் பிரபலமானவர் தனிப்பயனாக்கப்பட்ட பரிசு ஜாடிகள், புகைப்பட பிரேம்கள், ஸ்கிராப் ஆக்கப் புத்தகங்கள், நூற்கலை மற்றும் பல கைவினைப்பொருட்களை தயாரித்து வருகிறார்கள்.
Instagram: @craftsbyr.lk
Contact Number: 076 402 5834
Pick-Up Location: K C DeSilva Pura, Thimbirigaskatuwa, Negombo.

Dazzling Gifts of Love
இங்கிருக்கும் பரிசுப் பொருட்கள் பார்ப்பவரை சுண்டியிழுக்கும் கவர்ச்சிகரமானவை.  Moon lamps எனப்படும் நிலவு விளக்குகள் இங்கு பெயர்போனவை.
Instagram: @dazzling_gifts_of_love
Facebook: Dazzling_gifts_of_love
Contact Number: 075 480 5602

Craftastic LK
அழகான வாழ்த்து அட்டைகள், நூற்கலை, ஷடோ பெட்டகங்கள், டேட் பிரேம்கள், காதல் ஜாடிகள் போன்ற பல அற்புதமான கைவினைப் பொருட்களுக்கு இவர்களை நாடலாம்!
Instagram: @craftasticlk
Facebook: Craftastic_LK
Contact Number: 077 119 2532

Art Attack LK
ஆர்ட் அட்டாக், நூற்கலை மற்றும் வாழ்த்து அட்டைகள் முதல் தனிப்பயனாக்கப்பட்ட நினைவுப் பெட்டகங்களின்  அருமையான தேர்வுகள் வரை மிக ஆக்கபூர்வமான விஷயங்களை வழங்குகின்றன!
Instagram: @art_attack_lk
Contact Number: 076 523 4516
Pick-Up Location: Moratuwa

By.StarGirl
எளிமையான படைப்பாற்றலின் உறைவிடமாக இது அமைந்திருக்கிறது. அவர்கள் தங்கள் எளிய கலை தயாரிப்புகளுக்கு, படைப்பாற்றலின் மூலம் ஒரு மந்திர அழகை சேர்க்கிறார்கள்.
Instagram: @by.stargirl


3. Personalised Apple/Spotify frames – ஆப்பிள்/ ஸ்பாட்டிபை சட்டங்கள் (ஃப்ரேம்ஸ்)

உணர்வுகள் பெரும்பாலும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்க்கும் இடையில் உணர்வுப்பூர்வமான இணைப்பைக் காண்பிப்பதற்கான வாய்ப்பு இங்கே உங்கள் அன்புக்குரியவரோடு உங்கள் உணர்வை இணைக்கும் ஏதேனும் பாடலின் ஸ்க்ரீன் ஷாட்டினை, ஒரு புகைப்பட ஃபிரேம் போல பிரதியெடுத்து பரிசாக வழங்கி குஷிப்படுத்தலாம்

Anim8.lk (Pvt) Ltd
முன்மாதிரியான வாடிக்கையாளர் சேவை, முற்றிலும் அருமையான மற்றும் நம்பகமான அச்சு வேலைகளுக்கு பரவலாக அறியப்பட்ட அனீம்8 நிறுவனத்தில் உங்கள் தேவைக்கேற்ப டிசைன்களை அமைத்துக் கொள்ளலாம்.
Instagram: @anim8.lk
Facebook: Anim8.lk
Contact Number: 076 823 7271
Address: 237, Thimbirigasyaya Road, Colombo 05    

Printiin.lk
இவர்கள் அச்சிடுவதை தாண்டி, உங்கள் விருப்பத்திற்கேற்ப டிசைன்களை பிரத்தியேகமாக உருவாக்கித் தருகிறார்கள்.
Instagram: @printiin.lk
Contact Number: 077 273 8777

Comics.lk
இங்கு ஆடைகள், சுவரொட்டிகளிலிருந்து பொலராய்டுகள் மற்றும் தனிப்பயன்பாட்டு மடிக்கணினி உறைகள், தனிப்பயன்பாட்டு தொலைபேசி உறைகள்  வரை பல விஷயங்களை வழங்குகிறார்கள்! உங்கள் இசை சட்டத்தை உயிர்ப்பிக்க அவர்கள் நிச்சயமாக உங்களுக்கு உதவ  முடியும் !
Instagram: @comics.lk
Contact Number: 066 771 1686


4. Memory Box – நினைவுப் பெட்டகம் / நினைவுகளின் பெட்டகம்

நம்மில் பலபேர் பயங்கர செண்டிமென்ட் காரர்கள்! அன்புக்குரியவர்களின் நினைவாக தூசி, துரும்பு கிடைத்தால் கூட பாதுகாத்துக் கொள்வதில் வல்லவர்களுக்கு இந்த ஐடியா உகந்தது. உங்கள் அன்புக்குரியவர்கள் நினைவாக உங்களிடமிருக்கும் பொருட்களை சேகரித்து, அதனை அழகான நினைவுப் பெட்டகமாக பரிசளித்தால், அந்த நினைவுகளை மறுபடியும் மீட்டிப் பார்க்கும் ஒரு தருணமாக அது நிச்சயம் அமையும்.

Art Attack LK
நூற்கலைப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள் மற்றும் நினைவுப் பெட்டகங்களின் ஆக்கப்பூர்வமான பரிசுத் தெரிவுகளை இங்கே பெற்றுக்கொள்ளலாம்.
Instagram: @art_attack_lk
Contact Number: 076 523 4516
Pick-Up Location: Moratuwa

Kikasho by Twins
இது இரட்டையர்களால் நிர்வகிக்கப்படும் ஆன்லைன் வர்த்தகமாகும். இங்கு ஆடம்பர ரோஜா எனப்படும், Luxury Roses ஃபிரேம்கள் ரொம்பவும் பிரபலம். தவிர இவர்களிடம் அழகான தாவரங்கள், உங்கள் விருப்பத்துக்கேற்ற டிசைனில் நினைவுப் பெட்டகங்கள் மற்றும் க்யூட்டான சிறியளவிலான பரிசுகளும் கிடைக்கும்.
Instagram: @kikasho_by_twins
Facebook: Kikasho by Twins
Contact Number: 076 301 8611
Pickups: Maharagama, Panadura.

5. Polaroid Camera – ‘உறைகின்ற தருணங்கள்’ – பொலரொயிட் கேமரா

உங்கள் காதல் துணையோடு கடக்கும் ஒவ்வொரு அழகிய தருணத்தையும் உறைந்து போகச் செய்ய முடியும்! உடனுக்குடன் எடுத்த புகைப்படங்களை கக்கும் இந்தக் காமெராவோடு, உங்கள் காதல் பயணங்கள் ஒவ்வொன்றும் நினைவுப் பொக்கிஷமாக மாறிவிடும்.   

Urban.lk
Instagram: @urban.lk
Facebook: Urban.lk
Contact Number: 011 431 2516
Address: 16, Station Road, Colombo 4, 00400.   
CameraLK
Instagram: @cameralk_
Facebook: CameraLK Store      
Contact Number: 011 781 7870
Address:  263 High Level Rd, Colombo 00500
Majestic City Showroom: No 28, 3rd Floor Majestic City Colombo 04, 00400
CameraPro.lk.
Instagram: @camerapro.lk
Facebook: CameraPro Sri Lanka
Contact Number: 077 072 2200
Address: No 120/11A, Vidya Mawatha, Colombo 07.
Rae Electronics
Instagram: @rae_electronics
Facebook: Rae Electronics
Contact Number: 077 712 5056
Pick-Up Location: Negombo Road, JaEla.
Daraz
Instagram: @daraz.lk
Facebook: Daraz Online Shopping
Contact Number: 011 757 5600

 

வெற்றிலையில் இவ்வளவு விஷயம் இருக்கா?

‘அங்கே பார்! அவனுடைய வாயால ரத்தம் சொட்டிக்கொண்டு இருக்கு’ அது தான் என்னுடைய ரஷ்ய நண்பர் முதல் முதலில் வெற்றிலை மெல்லும் ஒருவரை பார்த்த முதல் தருணம். இவை அனைத்தும் காலிக்கு ரயிலில் சென்றுகொண்டு இருக்கும்போது நடந்தமையினால் அதை பற்றி ஆழமான சிந்தனை மனதில் ஓடத்துவங்கியது.

ஆதி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட இலங்கையில், அனைத்து விடயங்களுக்கும் ஒரு வகையான சுவாரஷ்யமான பின்னணி உண்டு, அதில் வெற்றிலை ஒரு விதிவிலக்கல்ல. சினிமாவில் சொல்வது போல் பெரும்பாலான இலங்கையர்களுக்கு வெற்றிலை மெல்லுதல் ‘அவங்க இரத்ததிலேயே ஊறிப்போன விடயம்’ என்று கூடச் சொல்லலாம். நாக தேவதையின் இராச்சியத்தில் வளர்க்கப்படும் தாவரமாக கருதப்படும் இத்தாவாரம், ஆதம் அடியவர்களின் உலகத்துக்கான வருகையின் பின், நாக உலகிலிருந்து இங்கு வரவழைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. மேலும் இவை நாகத்தின் பற்களினால் கௌவப்பட்டு கொண்டுவரப்பட்டதால் அவற்றின் காம்பு மற்றும் நுனிப்பகுதிகளில் விஷம் கலந்துள்ளதாக கருதி, மெல்லும் போது அவற்றை அகற்றி விடும் பழக்கத்தையும் எம்மவர்கள் கொண்டுள்ளனர்.

காமம்

முதன்முதலில் கேட்டபோது வேடிக்கையாக இருந்தது, ஆனால் இது காமத்தை தூண்டும் ஒரு சிறப்புப் பொருளாகவும் அறியப்படுகிறது. இதனால் தான் இந்து கலாச்சாரத்தில் புதுமணத் தம்பதியினர்களுக்கு வெற்றிலை தட்டு வழங்கி முதல் இரவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

வலி நிவாரணி

‘ஆதி காலத்துப் பெனடோல்’ ஆக வெற்றிலை விளங்கியுள்ளது. குறிப்பாக வெட்டுக்காயம், உராய்வு மற்றும் தேமல் ஏற்பட்ட இடங்களுக்கு வெற்றிலையை அரைத்துப் பூசும் பழக்கம் இங்கு இருந்துள்ளது. வலி நிவாரணியாக மட்டுமல்லாது உடைவு, சுழுக்கு போன்ற என்புடன் சம்பந்தப்பட்ட முறிவுகளுக்கும் வெற்றிலையை அரைத்து பூசுவதோடு, இலையை வைத்து சுற்றிக் கட்டும் வழிமுறையை இலங்கையில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் கூட கடைப்பிடித்திருக்கிறார்கள்.

அழகுசாதன பொருட்கள்

எங்களை சற்று ஆச்சரியப்படுத்திய ஓர் சிறப்பு. பெரும்பாலான அழகுசாதன பொருட்கள் வெற்றிலையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக பற்பசை மற்றும் சவர்க்காரம் போன்ற பொருட்கள் வெற்றிலையை மூலமாகக்கொண்டு செய்யப்படுகின்றன.

உற்சாகம்

கடைசியாக எம்மில் அதிகமானோர் வெற்றிலை மெல்லுவதற்கான காரணம், இதுவோர் உற்சாகம் வழங்கும் தாவரமாக விளங்குகின்றது. பொதுவாக வெற்றிலை பாக்குடன் உற்கொள்ளப்படுகின்றமையினால் அதிகளவான இரசாயனக்கலவையின் தாக்கத்தினால் புதியதோர் உற்சாகத்தோடு, நிம்மதியான, மகிழ்ச்சியான மனநிலையையும் கொடுக்கின்றது. சுருக்கமாக சொன்னால் ‘இதுல ஏதோ ஒரு கிக் இருக்கு’.

கசப்பான உண்மை

வெற்றிலை மெல்லுவதால் எவ்வகையான பாதிப்பும் கிடையாது என்பது விஞ்ஞானரீயாக நிரூபிக்கப்பட்ட ஒரு விடயமாகும். ஆயினும், வாய்புற்றுநோய் மாதிரியான நோய்கள் வெற்றிலையுடன் சேர்ந்து சுண்ணாம்பு மற்றும் பாக்கு உட்கொள்ளப்படுவதனால் ஏற்படும் பாரிய பிரதிபலன்களாகும். ஆகவே வெறுமனே வெற்றிலையை மட்டும் தனது தேவையின் அடிப்படையில் உற்கொள்வதனால் அதன் முழுமையான நன்மையை நாம் அடைந்து கொள்ளலாம்.

ரயில் பயணமும் ஒருமாதிரி நிறைவடைந்தது. ஹோட்டல் அறைக்குச் சென்றவுடன் விறுவிறுவென நடந்து, அங்கிருந்த சிகை அலங்கார பொருட்களைத் தேடி அதன் உள்ளடக்கத்தை பார்த்தோம்..

index.php