Blog Page 9

பனை ஓர் மிகப்பெரிய தொழில் துறையாக வளராமைக்கான பின்னணி என்ன?

அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் ஒன்றுதான் பனை மரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய மூத்த மொழி தமிழ்மொழி என நாம் பெருமை பட்டுக்கொள்வதற்கான முக்கிய சாட்சியாக விளங்குவது பனை ஓலைச் சுவடிகளிலிருந்து கிடைத்த வரலாற்றுத்தகவல்கள்தான். பனை மரம் தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது என்பதனை தொல்காப்பியம், திருக்குறள் திருவாசகம், தேவாரம், திவ்யபிரபந்தங்கள் உற்பட பல சங்க இலக்கியங்களிலும் காணக்கிடைக்கிறது.

பனை ஓலைகளில் எழுதப்பட்டதால்தான் இந்த இலக்கியங்களும் , தமிழ் எழுத்துக்களும் அழியாமல் தப்பிப்பிழைத்தன எனக்கூறினாலும் தகும். உலக நாகரீகங்களில், எழுதுவதற்காக ஆமை ஓடுகள் மற்றும் பல்வேறு விலங்குகளின் தோள்கள் பயன்படுத்தப்பட்டபோதிலும் தமிழர்கள்தான் இதனை எளிமைப்படுத்தி பனைஓலைகளில் எழுதத்தொடங்கினர். அச்சுக்கருவி கண்டுபிடிக்கப்படும்வரையில் இந்தமுறை தொடர்ந்ததென்றால் மிகையில்லை. திருக்குறளில் “பயன் மரம் ” என குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மரங்களில் பனை மரமும் ஓன்று.

ஒருகாலத்தில் ஐந்துவகை நிலங்களிலும் நிலத்திற்கு ஏற்றவாறு மக்கள் வாழ்ந்துவந்தனர். கடலும் கடல்சார்ந்த பிரதேசங்களிலும் வாழ்ந்துவந்த நெய்தல் நில மக்கள் தற்போது வாழ்வாதார மாற்றத்தினால் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட தற்போதெல்லாம் கடற்கரை என்பது பெரிய பெரிய பங்களாக்கள் சொகுசு தொடர்மாடிகள் போன்றவற்றை அமைத்துக்கொண்டு பணக்காரர்கள் வசிக்கக்கூடிய இடமாகவும், சுற்றுலாவிற்கான இடமாகவும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைக் கொண்ட இடமாகவும் மாறிவிட்டதென்றால் மிகையில்லை . இந்த மாற்றமென்பதும் பனையின் அழிவிற்கு ஓர் காரணம் ஏனெனில் தற்போதெல்லாம் கடற்கரைகளை அழகுபடுத்த அயல் தாவரங்களானா “பாம் ட்ரீக்களே” அதிகம் விரும்பப்படுகின்றன.

இதனால் காலங்காலமாக நம் கடற்கரைகளை தன்னுடைய சல்லி வேர்களால் பாதுகாத்து மண்ணரிப்பு கடல்கோள் போன்றவற்றை தடுத்து நிறுத்திய பனை மரங்கள் வேண்டப்படாத ஒன்றாகிப்போய்விட்டன. உண்மையில் ஆங்கிலேயரின் வருகையுடனேயே பனையின் அழிவும் ஆரம்பித்து விட்டன என்றுதான் கூறவேண்டும் சங்க காலம் தொட்டு தமிழர்களின் இனிப்பு சுவை என்கிறவொன்றிற்கு பயன்பட்டது. கருப்பங் கட்டி ” எனப்படும் பனங்கருப்பட்டியே.

ஆனால் வெள்ளை சர்க்கரை என்கிற உணவு ஆங்கிலேயரால் நம் சமூகத்தினுள் புகுத்தப்பட பனங்கருப்பட்டியின் பாவனை மெல்லமெல்ல அழித்தொழிக்கப்பட்டது. ஆனால் இன்றும் பல மேலைத்தேய நாடுகளில் பனங்கருப்பட்டி பனங்கல்கண்டு போன்றவற்றையே தமது உணவுப்பட்டியலில் வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எப்படி மிளகாயை நம்மிடம் தள்ளிவிட்டுவிட்டு ஆரோக்கியம் நிறைந்த மிளகை அபகரித்துக்கொண்டார்களோ அப்படிதான் இதுவும்.

கிராமப்புர பொருளாதாரத்தினை மேம்படுத்த பனைமரங்களை மீட்டெடுக்கவேண்டிய அவசியம் தற்போது நம்மிடம் உள்ளது. முன்பெல்லாம் , பாய்  விசிறி, பெட்டிகள், தூரிகைகள், பல அலங்காரப்பொருட்கள் போன்றவை இந்த பனைமரத்திலிருந்து உருவாக்கப்பட்டது, இது கிராமப்புறத்தில் உள்ள பலருக்கும் ஓர் வாழ்வாதாரமாகவும் இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் நிலைமை தலைகீழ் . பனைக்கென்று எந்த ஆராய்ச்சி நிலையமோ, அல்லது ஊக்குவிப்புகளோ இல்லை என்பது வருந்தத்தக்கது. சுமார் நூறு அடிகளுக்கு மேல் வளர்ந்துள்ள பனையில் ஏறுவதென்பது அவ்வளவு எளிதானதல்ல. இந்த தொழில் நவீனமயப்படுத்தப்படாமல் இன்னும் பாரம்பரிய முறையில் நகர்ந்துகொண்டிருப்பதும் பனைப்பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகவும் அமைகிறது.

உலகில் நூற்றி எட்டு நாடுகளில் பனை மரங்களும் அது சார்ந்த தொழிலும் முன்னிலை வகித்தாலும் தமிழகத்திலும் இலங்கையிலும் பனைத்தொழில் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு மாத்திரமே உரித்தானது இழிவானது என்கிற ஓர் எண்ணமும் நம் சமூகத்தில் இருப்பதால் அந்த தொழிலை செய்யும் பலரும் தமக்குப்பின் இந்த தொழிலை தம்முடைய வாரிசுகள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர் . இதுவும் பனையின் வீழ்ச்சிக்கான காரணம் .

இலங்கையைப்பொறுத்தவரையில் பனங்காடுகளை அதிகம் கொண்ட யாழில் பனையுடன் தொடர்புபட்ட பிரதான தொழில்கள் அனைத்துமே குறிப்பிட்ட சாதிக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல அத்தொழிலும் அச்சாதியும் குறைந்த சமூக அந்தஸ்த்து உள்ளதாக கருதவும் படுகிறது. பனை தொழில் படுத்துப்போவதற்கு இதுவும் ஓர் பிரதான காரணமெனலாம் .பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிவரையில் ஆண்டான் அடிமை முறைமையைக்கொண்டிருந்த யாழ்ப்பாணத்தில் அடிமை குடிமைகளையும் ஏனைய ஒதுக்கப்பட்ட அல்லது ஓரங்கட்டப்பட்ட சாதிப்பிரிவினரையும் பொருளாதாரத்தில் வளரவிடக்கூடாது என்பதற்காக பனை படு பொருட்களை தானும் அனுபவியாது பிறரும் அனுபவியாது தடுத்துவரும் ஒரு போக்கு உயர்சாதியினரிடம் நிலவி வந்தது.

பனங் காடுகள் உற்பட ஏராளமான காணிகள் தரிசு நிலங்களாக இருந்த காலப்பகுதியில் காணியில் தனி உடமையை நிலைநாட்டுவதற்கு இறுக்கமான சட்டங்கள் இருக்கவில்லை.இதன்படி அனைத்துக் காணிகளும் வெள்ளாளரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.கள்ளோ அல்லது கருப்பட்டியோ ஒரு விற்பனைப் பண்டமாக இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. சுருங்கச் சொல்வதானால் பனைக்கு ஒரு பணப்பெறுமானம் இருந்திருப்பதாகத் தெரியவில்லை. பனை சீவல், ஓலை வெட்டுதலழ, பனைமரம் பிளத்தல், சிலாகை அறுத்தல், பெட்டி கடகம் பொத்துதல் போன்ற தொழில்கள் கூலி எதுவும் இன்றி அடிமைகளைக்கொண்டே செய்யப்பட்டன. ஆகையால் இவ்விதம் பெறப்பட்ட பொருட்கள் ‘உயர்சாதியினருக்கு’ சொந்தமானதாகவே இருந்தன.

இவர்களே யாழ்ப்பாண எண்ணிக்கையில் பெரும்பான்மையானவர்கள் என்றபடியாலும், அடிமை குடிமைகள் சுதந்திரமாக எதையும் கொள்வனவு செய்யும் உரிமை அற்றிருந்தபடியாலும் இப்பொருட்கள் ஒரு விற்பனைப் பண்டமாக மாறவில்லை. இதனால் பனம்படு தொழில்களில் ஒரு வளர்ச்சி ஏற்படவில்லை என்றே கூறப்படுகின்றது .மேலும்  மிகக்குறுகியகால அவகாசத்துள் நிலம் தமது உரிமை என்பதை இலங்கைப் பிரஜைகள் ஆவண ஆதாரங்களுடன் நிரூபிக்கும்படியும் தவறும் பட்சத்தில் அதனை காணிகளும் அரசுடைமையாக்கப்படும் என்கிற பிரிதானியர்களின் சட்டரீதியிலான ஆணையினை ஆங்கில அறிவும் அதனுடன் அரசாங்க சட்டதிட்டங்களைப்பற்றிய புரிதலும் பெற்றிருந்த உடையார் மணியகாரர் முதலியார் குடும்பங்களாகிய மேட்டுக்குடியினர் காணிகள் தமது என்பதை நிரூபிப்பதற்கு அவசியமான சட்ட ஆவணங்களை குறுகிய கால இடைவெளிக்குள் தயாரிப்பதில் அபார வெற்றி பெற்றார்கள்.

படிப்பறிவில்லாத ஏனைய மக்களை ஏமாற்றி அவர்களின் பயன்பாட்டில் இருந்த காணிகளை தமதாக்கிக் கொண்டார்கள். பணத்தினை கடனாகக் கொடுப்பது பஞ்சத்திற்கு உணவு கொடுப்பது வெளிநாட்டுக் குடிவகை கொடுப்பது போன்ற இன்னும் பல வழிமுறைகளையும் பின்பற்றி அம்மக்களை ஏமாற்றி ஏகப்பட்ட பனங் காடுகளை தம் வசப்படுத்திக்கொண்டனர் . நிலக்கொள்ளையைத் தொடர்ந்து நிலமும் அதில் உள்ள பனை மரங்களும் பெரும் நில உடமையாளர்களின் சொத்தாக மாறுகிறது. குடியிருக்கவும்  அடிவளவாகப் பயன்படுத்தவும் பனம்பொருட்களை அனுபவிக்கவும் நில உடமையாளர்களின் அனுமதி பெறவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பனையின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.

பனை அடிமைப்படுத்தப்படுகிறது. பனை என்ற இயற்கைத் தாவரம் சமூக பொருளாதார அர்த்தத்தில் இயற்கைத்தாவரம் என்ற நிலையை இழந்தது அப்போதே ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினரும் பொருளாதார ரீதியில் கீழ் நிலையில் உள்ள ஏனைய சாதிப்பிரிவினரில் பெரும்பான்மையோடும் ஏதோ ஒரு வழியில் உயர்சாதி மேட்டுக்குடி நில உடமையாளர்களில் தங்கி நிற்க வேண்டிய சமூக பொருளாதார நிலமை தோற்றுவிக்கப்பட்டது.

“ஆமாம் சாமி” என கீழ்ப்படிபவர்களுக்கே பனங்காணியில் குடியிருக்கும் உரிமை மற்றும் பனம் பொருட்களை நுகரும் உரிமை இருந்தது. எதிர்ப்புக் காட்டினால் அவ்வளவுதான். சீவலுக்கு வழங்கப்பட்ட உரிமை இரத்துச் செய்யப்படும். ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினர் தமது மனித உரிமைகளுக்காகப் போராடினால் அந்தோ கதிதான்.

பனைமரம் என்பது நட்டதும் உடனடியாக பலன் தரக்கூடியதல்ல அதற்கு குறைந்தது இருபது தொடக்கம் இருபத்தைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும், ஆகவே இன்றைய தலைமுறையில் நட்டதும் குறைந்தது ஆறுமாதங்களில் பலன் தந்துவிடவேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் பனையின் வளர்ச்சியில் மக்கள் ஈடுபாடுகாட்டாமைக்கு ஓர் காரணம் எனலாம் . “கிணற்றைச் சுற்றி பத்து பனைமரம் நின்றால் இறுதிவரை அந்த கிணறு வற்றவே வற்றாது. அப்படி வற்றவிடாத அந்த பனைமரம் கழுத்து முறிந்து சாகிறது என்றால் அந்த நிலம் பாலை வனமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்” என்பது நம்மாழ்வார் கூற்று. ஒரு சமூகத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களைவைத்து அச்சமூகத்தை கணிப்பது “புழங்குபொருள் பண்பாடு ” எனப்படும்.

அந்தவகையில் தாலி முதல் பல்வேறு அன்றாட தேவைக்குரிய மற்றும் உணவு பொருட்கள்வரை பனையின் பயன்பாடு தொன்றுதொட்டு தமிழர்களோடு நெருங்கிய தொடர்புகொண்டது. (பனை ஓலையிலிருந்து செய்யப்பட்ட தாலி “தாலிப்பனை” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது இலக்கியங்களில்) பனை மரத்தினை தலவிருட்சமாக கொண்ட பல கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் மட்டுமன்றி இலங்கையிலும் பனையின் பெயரை அடிப்படையாகக்கொண்டு பல ஊர்களின் பெயர்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒற்றை பனைமரம் எண்ணூருக்கும் மேற்பட்ட மருத்துவ பயன்களைக்கொண்டது என விளக்குகிறது யாழ்ப்பாணத்தை சேர்ந்த தங்கத்தாத்தா என அழைக்கப்படும் சோம சுந்தரப்புலவர் எழுதிய “தாளவிலாசம்” எனும் இலக்கியம் .

மனிதர்கள் மட்டுமன்றி வௌவால்  புணுகுப்பூனை, மரநாய் , நாகணவாய் , மைனா  தூக்கணாங்குருவி, போன்ற உயிரினங்களும்கூட பனை மரத்தினை சார்ந்து வாழக்கூடியவை. அண்மைக்காலத்தில் இடம்பெற்றுவரும் பனை மரத்தின் அழிவு என்பது இந்த உயிரினங்களின் அழிவாகவும் பார்க்கப்படவேண்டியவொன்று . பூலோகத்தின் “கற்பகத்தரு” எனப்படும் பனைமரம் முழுமையாக வளர இருபது ஆண்டுகாலம் தேவைப்படும் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின்னரே ஒரு பனை ஆண் பனையா? பெண் பனையா என்பதை தெரிந்துகொள்ள முடியும். பெண் பனையினை “பருவப் பனை” என்றும் ஆண் பனையினை “அழுகுப்பனை” என்றும் குறிப்பிடுகின்றனர்.

சுமார் நூற்றி இருபது அடிவரை வளரக்கூடிய இம்மரங்களின் நுனி மு தல் அடிவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலன்களைத் தரக்கூடியது.”தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரி வார் ” என்பது திருக்குறள் ஆனால் , நமக்கெல்லாம் நம் மொழியைக் கட்டிக்காத்து அருளிய பனை மரத்தினை காக்க மறந்து நன்றி மறந்த இனமாக மாறிவிட்டோமா தமிழர்களாகிய நாம்?

நாளைய இலங்கையின் தலைவர்களை இன்றே உருவாக்குவோம்!


AIESEC தற்போது நாடளாவிய ரீதியில்  மிகப்பெரிய தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டமான ‘Amplifier 2022’ ஐ நடத்துகிறது. இது இளைஞர்களின் உள்ளார்ந்த தலைமைத்துவ பண்புகளை  ஆராய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது.

சர்வதேச ரீதியில் நடாத்தப்படும் பயிற்சிகள் மற்றும் தன்னார்வ வாய்ப்புகள் மூலம் இளைஞர்கள் தங்களின் தலைமைத்துவ திறனை மேம்படுத்துவதற்கான உலகளாவிய தளத்தின் ஒரு பகுதி இலங்கையின் AIESEC

110 க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கியுள்ள AIESEC, 1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. இது அரசு சார்பற்ற இலாப நோக்கமற்ற நிறுவனமாகும். இது முற்றுமுழுதாக இளைஞர்களுக்காக இளைஞர்களினால் நடத்தபடுகிறது. 

1995 ஆம் ஆண்டு AIESEC Sri Lanka வை தங்களுடைய அங்கீகாரம் பெற்ற உறுப்பு நாடாக AIESEC International அறிவித்தது. 

இது வெற்றிகரமாக ஈடுபட்டு, சிறந்த எதிர்காலத்திற்காக உலகை வடிவமைக்கும் வகையில் சிறந்த பிரதிபலனை எதிர்பார்த்து 

இந்நிலையில் மற்றுமொரு பாடநெறிக்கான ஆரம்ப நிகழ்வாகிய Amplifier 2022, கடந்த டிசம்பர் மாதம் 4 மற்றும் 6 ஆம் திகதிகளில் பாடசாலை கல்வியை முடித்தவர்கள் மற்றும் இளங்கலை பட்டதாரிகளின் பங்கேற்புடன் ஆரம்பமானது. 

குறித்த பாடநெறி ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. Amplifier 2022 முற்றுமுழுதாக இளைஞர்களின் முன்னேற்றத்தினையே நோக்கமாக கொண்டுள்ளது.

ஆரம்பநிகழ்வு – 04/12/2022


ஆரம்பநிகழ்வு – 06/12/2022

 

Amplifier 2022இன் பயிற்சி விபரங்கள், 

பயிற்சி 01 – டிசம்பர் 11, 2022

பயிற்சி 02 – டிசம்பர் 14, 2022

பயிற்சி பட்டறை – டிசம்பர் 18, 2022

மதிப்பீட்டு நாள் 01 – டிசம்பர் 21, 2022

மதிப்பீட்டு நாள் 02 – ஜனவரி 8, 2023

திறந்த விவாதம் மற்றும் விருது வழங்கும் விழா – ஜனவரி 15, 2023

 

முதலாவது பயிற்சியானது, இளைஞர்கள் தங்களின் மாறுபட்ட சிந்தனைகளின் ஊடாக சவால்களை எதிர்கொண்டு அனுபவங்களை பெறுவது தொடர்பில் நிகழும். 

 

இரண்டாவது பயிற்சி அமர்வு, சக உறுப்பினர்கள், சமூகம் மற்றும் பொது மக்களுக்கு ஒரு நல்ல தலைவராக குரல் கொடுக்க வழிவகுக்கும். இரண்டு கட்ட மதிப்பீடும் நிகழும். முதலில், தலைமைத்துவம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை முவைப்பர். இரண்டாவது தங்களுடைய எண்ணங்களை பிறருடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்வர். 

 

சமூகத்தில் நிலவும் பிரச்சனைக்கு தீர்வுகளை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் திறந்த விவாதப்போட்டியுடனும் அவர்களை அங்கீகரிப்பதற்கான விருது வழங்கும் விழாவுடனும் குறித்த பயிற்சி முடிவு பெரும். 

 

இந்நிகழ்ச்சி, நாளைய இலங்கையின் வலிமையான  தலைவர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகின்றோம். உலகப் பிரச்சினைகளில் பங்கெடுத்து அதனை தீர்ப்பது, தலைமைத்துவ மேம்பாடு மற்றும் கலாச்சார விழிப்புணர்வு ஆகியவற்றில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், AIESEC இல் சேரவும்!

 

திருமணங்களில் கண்டிஷன்கள் போடும் இன்றைய பெண்கள்!

“மணல் கயிறு” திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வரும் கதாநாயகனான S.V சேகர் தனக்கு வரப்போகும் மனைவி எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்ற கண்டிஷன்களுடன் கூடிய ஒரு பட்டியல் வைத்திருப்பார். இப்படி மணமகன்கள் கண்டிசன் பட்டியலோடு சுற்றிய காலம் மாறி இன்றோ மணப்பெண்கள் தனக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு கண்டிசன்களை அடுக்கத் தொடங்கியிருக்கின்றனர் என்றால் அது மிகையில்லை.

இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு முற்றிலும் மாறியிருக்கிறது. திருமண வலைத்தளங்கள் முதல் தனியார் மேட்ரிமோனியல் வரை எல்லா இடங்களிலும் ஆண்களின் ஜாதகங்கள் கொட்டிக்கிடக்க மணப்பெண்களின் தேவை எக்கச்சக்கம் என்று சொல்லப்படுகிறது. திருமணத்திற்க்கு தயாராக பெண்கள் இல்லாமலும் இல்லை அப்படியாயின் இதற்குக் காரணம்தான் என்ன? மணப்பெண்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துச் செல்ல பல்வேறுவகையான தனிப்பட்ட சமூக காரணங்கள் இருந்தபோதிலும் இன்றைய கட்டுரை ஒரு வித்தியாசமான விடயம்பற்றியே நோக்கவிருக்கிறது.

இன்றெல்லாம் பெண்கள் முன்வைக்கும் “டிமாண்டுகள்” முன்பைக்காட்டிலும் அதிகம். இன்றைய பெண்கள் தம்முடைய தேர்வுகளுள் மிகவும் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறார்கள். ஏனெனில் முன்பைப்போல ஓர் ஆணைச் சார்ந்திருக்கும் தேவை அனேக விடயங்களில் பெண்களுக்கில்லை. ஆண்களுக்கு இணையாகப் படிக்கிறார்கள் தொழில் புரிகிறார்கள் பொறுப்பான பதவிகளை வகிக்கிறார்கள் கைநிறைய சம்பளம் வாங்குகிறார்கள்.

தமக்கு என்ன தேவை என்ற தெளிவு இன்றைய பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. திருமண விடயத்தில் தமக்கு இப்படித்தான் அமைய வேண்டும் என்று முடிவு செய்து பெற்றோரிடமும் தரகர்களிடமும் “கன்டிஷன்களாக “ வெளிப்படுத்துகிறார்கள். இவர்தான் இனி நம் வாழ்க்கை இன்பமோ துன்பமோ எல்லாமும் இனி இவரோடுதான் என்று தன வாழ்க்கைத் துணையினை தன் பாதுகாப்பாக நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாக மாறிவிட்டதெனலாம்.

இன்றெல்லாம் தம்முடைய வாழ்க்கையில் “செக்கியூரிட்டி” என்ற ஒன்றை ஏற்படுத்திக்கொண்டுதான் பல பெண்கள் திருமணம் செய்துகொள்ளவே தீர்மானிக்கிறார்கள். நல்ல உத்தியோகம் படிப்பு,சொந்தத் தொழில் சொந்த வீடு என்று இந்த செக்கியூரிட்டி என்ற விடயம் அவரவர்க்கேற்ப மாறுபடுகிறது. பெரும்பாலான பெண்கள் திருமணத்தை தள்ளிப்போடச் சொல்லும் காரணமும் இந்த “செக்கியூரிட்டி” என்ற ஒன்றுதான் என்று சொல்லலாம் . மேலும் ஒரு பெண் தனக்கு இணையாகவோ , தன்னைவிட அதிகமாக படித்த தன்னைவிட அதிகம் சம்பளம் வாங்குகிற உயர் பதவி வகிக்கிற ஒரு ஆணையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதும் சகஜமாகியுள்ளது.

அதுமட்டுமன்றி ஒத்த சிந்தனை உள்ளவர்களாக இருப்பதும் அவசியம் என்று எதிர்பார்க்கவும் செய்கிறார்கள் தன்னுடைய திருமண வாழ்வில் தனக்கென்று ஒரு தனித்துவமான இடம் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றைய பெண்களிடம் அதிகம் . கணவனின் துணையாக அவன் நிழலில் காணாமல் போய்விடும் ஆபத்தை நினைத்து அச்சப்படுகிரவர்கள் ஏராளம். இரு உள்ளங்களின் கௌரவமான ஒப்பந்தம்தான் திருமணம் என்பதில் தெளிவாக இருக்கும் பெண்கள் கணவனாக வருபவன் எல்லாவிடயங்களிலுமே தம்மை அடக்கியாள முட்படுவானோ என்ற அச்சத்தில் யோசிப்பதும் கூட திருமணங்களை நொண்டிச் சாக்குச் சொல்லி தள்ளிப்போடவும் காரணமாகிறது.

தன்னைவிட ஓரிரண்டு வயது அதிகமான அல்லது சம வயதுடைய ஆண்களை பெண்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதும் இந்தக் காரணத்தால்தான். ஏனெனில் அதிக வயது இடைவெளி ஒரு ஆண் தன்னை கட்டுப்படுத்த ஆதிக்கம் செலுத்த அடிகோலும் என்ற எச்சரிக்கையுணர்வு.சரி திருமணத்துக்கு என் இவ்வளவு கண்டிசன்கள்? இதற்கான முக்கிய காரணம் பெண்களுக்கு இன்று ஏற்ப்பட்டிருக்கும் உலக அனுபவம் . பல பெண்கள் உணர்ச்சிவசப்பட்டோ பெற்றோர் வற்புறுத்தலாலோ திருமணம் செய்துகொண்டு மனக்குறையுடன் வாழ்வதை பார்க்கிறோம்.

ஒத்த சிந்தனை இல்லாமல் ஆதிக்க மனோபாவத்தை சகித்துக்கொள்ளாமல் விவாகரத்துவரை சென்றுவிட்டால் என்னாவது என்ற பயம் அடிமனதில் இருந்துகொண்டேயிருக்கும். இதனாலேயே தன்னுடைய “தேர்வு” சரியாக இருக்கவேண்டும் என்று நிறைய கவனம் எடுக்கிறார்கள். இந்த அதீத எச்சரிக்கையுணர்வே “கன்டிஷன்களாக” வெளிப்படுகின்றன என்பதுதான் உண்மை . சக அலுவலக தோழிகளின் அல்லது உறவுகளின் வாழ்க்கையில் ஏற்ப்படும் திருமணப் பிரச்சினைகளை சிக்கல்களைப் பார்த்தே திருமணத்தை தள்ளிப்போடும் அல்லது தவிர்க்கும் பெண்களும் இல்லாமல் இல்லை.

இங்கே இன்னுமோர் முக்கியமான விடயம்தனையும் குறிப்பிட விரும்புகிறேன் , பெண்களுக்கு திருமணம் போன்ற விடயங்களில் முடிவெடுக்கத் தெரியாது என்ற எண்ணம் இன்னுமே பல பெற்றோரிடம் இருந்துவருகிறது . பெண்களின் இதுபோன்ற கண்டிசன்கள், எதிர்பார்ப்புக்கள் வீண் குழப்பத்தினையே ஏற்ப்படுத்தும் என்ற கருத்து பெற்றோரிடம் இருக்கிறது. அவர்களைப் பொருத்தவரையில் பெண்களுக்கு விபரம் போதாது, தங்கள் மகள்கள் இன்னுமே சின்னக் குழந்தைகள்தான் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் யதார்த்தநிலை அப்படியல்ல.

பல பெண்கள் மிகத் துணிவுடன் தங்கள் கணவர்களை தேர்வு செய்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் சந்தோசமான வாழ்வு. இந்த சந்தோசத்துக்கு எதுவெல்லாம் இடையூறாக இருக்கப்போகிறது என்பதை யூகிக்கிரார்களோ அதையெல்லாம் ஆரம்பத்திலேயே தவிர்த்துக்கொள்ளவே முயட்சிக்கிறார்கள். இதுவும் காலமாற்றத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றே. சுய சிந்தனையும் தொலைநோக்கும் பார்வையும் எதிர்காலம் பற்றிய தெளிவுமே இந்த கண்டிசங்களின் பின்னிருக்கும் யதார்த்தம். இந்த மாற்றத்தினை மகன்களைப் பெற்றவர்கள் ஏற்றுக்கொண்டார்களோ இல்லையோ மகள்களைப் பெற்றவர்கள் புரிந்துகொண்ட தங்கள் பெண்களுக்கு உறுதுணையாக நிற்கிறார்கள்.

பெரும்பாலான பெற்றோர் தம்முடைய பெண்களையே சார்ந்திருக்கவேண்டிய சூழ்நிலையும் இந்த புரிந்துணர்வுக்கு காரணமாகவும் இருக்கலாம் .என்னதான் நேர்மையான சில கண்டிசன்களும்,எதிர்பார்ப்புக்களும் இருந்தாலுமே இதிலும் இழக்க வேண்டிய சில விடயங்கள் இல்லாமலும் இல்லை. தனிமையுணர்வு என்ற ஒன்றைத் தாண்டி பெண்ணைப் பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அப் பெற்றோர் 70 வயது தாண்டி உடல்நலக் குறைவால் அவதியுறும்போது பெற்றோரின் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்கவேண்டிய திருமணங்களை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாக தானே நடத்திக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது.

படிக்கவைத்து ஆளாக்கி நிம்மதி பெருமூச்சி விடவேண்டிய நேரத்தில் அறுபது வயதைக்கடந்த பெற்றோர் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளாகி உறவினர்களையும், நண்பர்களையும் ஒதுக்கி தனிமைப்பட்டு ஒருவித மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால் தம் பெற்றோர் நிம்மதியான வயோதிக வாழ்க்கையினை அனுபவிப்பதைக் கண்ணுறும் வாய்ப்பை இந்தப் பெண்கள் இழக்கின்றனர். உடல்வலு இருக்கும் காலத்திலேயே தங்கள் பேரக் குழந்தைகளையும் வளர்க்கும் பராமரிக்கும் நிலையினை எய்தவேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்த தாத்தா பாட்டிகளுக்கு தங்கள் மகள்களின் பிந்திய திருமணங்களால் தங்கள் பேரக் குழந்தைகளை தூக்கிக் கொஞ்சக்கூட வலு விழந்து போய் விடுகிறது.

பிந்திய திருமணம்.. தம்பதிகள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்களோ இல்லையோ , இருவரும் தனித்த பயணங்கள் மற்றும் வாழ்க்கை முறைமைகளை அனுபவிக்கிறார்களோ இல்லையோ, வயது ஏறுகிறதே என்ற பதட்டத்தில் அவசரஅவசரமாக முதல் குழந்தையை பெற்றுக்கொள்வார்கள், அதன்பின்? எங்கே  40 வயது தாண்டிவிட்டால் குழந்தைபிறப்பு தள்ளிப்போய்விடுமோ என்ற ஒருவித அச்சத்தில் மீண்டும் அவசரஅவசரமாக அடுத்த குழந்தை பற்றிய சித்தனை மனதுக்குள் ஓடத்துவங்கும்! இருவருமே சில தனிப்பட்ட சந்தோசங்களை இங்கே பறிகொடுக்க நேருவதுடன், உடல் ரீதியாகவும் பெண் பாதிக்கப்படுகிறாள் என்பதை இவ்விடத்தே கூறவேண்டும்.

அதுமட்டுமா? கருத்தரிக்கவேண்டிய வயது தாண்டிவிடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம்  மருத்துவர் பரிசோதனைகள் என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல்,செலவு என்று அதன்ப்பின்னரும் தொடரும் ஏராளமான துன்பங்கள்.ஆக காலமாற்றம் பெண்களின் மனதில் எதிர்பார்ப்புக்களையும், அந்த எதிர்பார்ப்புக்கள் கன்டிஷன்களையும் ஏற்ப்படுத்திவருவதை நாம் தவறு என்று எடுத்த எடுப்பில் கூறிவிட இயலாதுதான் என்றாலும் அந்த கண்டிஷன்கள் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்ப்படுத்திவிடாது எல்லாவற்றையுமே சமப்படுத்திக்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கிறோம் என்பதையும் இங்கே குறிப்பட விரும்புகிறேன்.

-ப்ரியா ராமநாதன்

ஆபரணங்கள் அணிவதன் அறிவியல் ரகசியம் இதுவா!

ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் ஆடைகளை பார்த்து பார்த்து வாங்குவதை போலவே தாம் அணியும் ஆபரணங்களையும் பார்த்து பார்த்து வாங்குவார்கள். அதிலும் பெண்களுக்கு தான் காதுக்கு,கழுத்துக்கு கையிற்கு,காலுக்கு,நெற்றிக்கு,இடுப்பிற்கு என எல்லா பாகங்களுக்கும் ஆபரணமணிவது என்பது தொன்று தொட்டு வருகின்ற பழக்கமாயிற்று. தற்கால ஆண்களும் கூட ஸ்டைலுக்காக ஆபரணங்களை தேடித் தேடி வாங்கி அணிகின்றனர். இப்படிப்பட்ட ஆபரணங்கள் அணிவது அழகுக்காக என்றாலும் அதில் பல ஆரோக்கியமான நலன்களுகம் அடங்கியிருக்கிறது. ஆபரணங்கள் அணிவதால் கிடைக்கப்பெறும் நன்மைகள் பற்றி இங்கு அறிந்து கொள்வோம்!

நெற்றிச்சுட்டி

பொதுவாக தலைமுடி ஆரம்பிக்கும் நெற்றிப் பகுதியில் அணியப்படுவது நெற்றிச் சுட்டியாகும். உச்சு வகுந்தெடுத்து அதன் நேர்கோட்டு வழியில் ஒற்றை நெற்றிச் சுட்டி நெற்றிக்கு பட்டு ஆடும் வகையில் நெற்றிச் சுட்டி இடுவது வழக்கம். திருமண பெண்கள் இரு பக்கத்திலும் காது வரை நீண்ட நெற்றிச் சுட்டி அணிந்து கொள்வது வழக்கம். முன் நெற்றியை அலங்கரிக்கும் இது போன்ற நெற்றிச் சுட்டிகள் உடல் வெப்பத்தை தணிக்க உதவுகிறது. குறிப்பாக தலைச் சூட்டை தணிக்க இது உதவுகிறது என்று நம்பப்படுகிறது.காதணிகள்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு அணிகலன் கம்மல்கள் தான். பிறந்த பெண்குழுந்தைக்கு இரு காதுகளையும் குத்துவது வழக்கம். அதே போல் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு ஒற்றை காது குத்துவதும் வழக்கம். தற்கால ஆண்கள் இரண்டு காதுகளையும் குத்திக்கொண்டு தம்மை ஸ்டைலாகவும், மாஸாகாவும் காட்டிக்கொள்கின்றனர்.அதிலும் குறிப்பாக ஒரு காதில் தொங்கட்டான்கள் அணிவது தற்கால இளம் ஆண்களுக்கு ஃபேஷனாக உள்ளது.
பெண்கள் தாம் அணியும் ஆடைக்கு ஏற்றவாறு டிசைன் டிசைனாக காதணிகளை அணிந்து கொள்வார்கள். ஜிமிக்கிகள், வளையங்கள், பாலிகள், தொங்கட்டான்கள், பொத்தான்கள் என விதம் விதமாக காதணிகள் சந்தையிலுள்ளது. இத்தகைய காதணிகள் நம் காதுகளுக்கு கவர்ச்சியூட்டுவதாக இருந்தாலும் அதில் ஒரு ஆரோக்கிய காரணம் உள்ளது. காதணிகள் காது மடலிலிருந்து செல்லும் நரம்பானது நம் உடலின் சிறுநீரகம்,மூளை மற்றும் கர்ப்பப்பை வாய் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளை இணைக்கின்றன.

இளம் வயதில் காது குத்தப்படுவதால் மூளை வளர்ச்சியானது மேம்படும் என்றும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. பெண்களின் மாதவிலக்கானது எவ்வித தடைகளுமின்றி சீர்பட நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. பழங்காலத்திலிருந்தே காதணிகள் அணிவது மரபாகியுள்ளது. இதனை சான்றுபடுத்தும் விதமாக காதணிகள் அணிவது உயிரணுக்கள் உற்பத்திக்கு உதவுகின்றதென வேத சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூக்குத்திகள்

மூக்குத்திகள் அணிவது பெண்களின் வழக்கம். முன்னைய காலங்களில் திருமணமான சுமங்கலிப் பெண்கள் அணிந்து கொள்ளும் முக்கிய ஆபரணங்களுல் முக்கியமான ஒன்று மூக்குத்தி. தற்போது இளம் பெண்களும் மூக்குத்தி அணிவதை ஃபேஷனாக கொண்டுள்ளனர். அதைவிட ஆண்களும் மூக்குத்திகள் அணிந்திருப்பதை அங்கங்கே நாம் காணக்கூடியதாக உள்ளது. மூக்குத்திகள் மூக்கை அலங்கரிப்பதற்காக மட்டுமன்றி ஆயுளையும் விருத்தியாக்குகின்றது. மூச்சு விடுவதைச் சீராக்குவதோடு, காக்காய் வலிப்பு ஏற்படாமல் தடுத்தல் மற்றும் இரத்த அழுத்தத்தை ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை ஏற்படாமல் தடுத்தல் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது என்று கூறப்படுகின்றது.

மாங்கல்யம்

சுமங்கலிப் பெண்ணுக்கு அடையாளம் மாங்கல்யம். மாங்கல்யம் ஏறுவது இறைவன் அமைத்த வரம் என்று கூறுவர். திருமணத்தின் போது மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டிய பின்பே திருமண பந்ததத்தில் இருவரும் இணைந்து கொண்டனர் என்பதற்கு சாட்சியாகிறது. இது காலம் காலமாக பின்பற்றபட்டு வரும் தமிழர் பண்பாடாகும். மாங்கல்யமானது மங்கலகரமானது என்பதால் தீய எண்ணங்களை அது அண்டவிடாது என்று கூறப்படுகிறது. ஒரு பெண்ணின் கழுத்தில் தொங்கும் தாலியானது இதயத்திற்கு மேலே இருப்பதால் அவை உடலின் இரத்த ஓட்டத்தை நெறிப்படுத்த உதவுகிறது. மாங்கல்யம் பெண்களின் இதயத்தை எந்நேரமும் உரசிக் கொண்டு இருப்பதால் இதயத்துடிப்பை சீராக்குகிறது.

வங்கிகள்

வங்கிகள் என்பது மேல் கையிலே அதாவது முழங்கைகளின் மேலே அணியப்படுவதே வங்கிகளாகும். இவை மேல் கை தசையை இறுக்கிப் பிடித்து அணியப்படுகின்றன. பொதுவாக திருமணத்தின் போதே பெண்கள் வங்கிகளை அணிந்து கொள்கின்றனர். சில பெண்கள் ஸ்டைலுக்காக ஒரு கையில் மட்டும் வெள்ளியில் வங்கிகள் அணிந்து கொள்கிறார்கள். தற்போது இவை நவீன நாகரிக நகைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. வங்கிகள் கைகளின் இரத்த ஓட்டத்திற்கு உதவுவதோடு உடலின் எதிர்ப்பு சக்தியை சரியான அளவில் உருவாக்குவதற்கும் உதவுகின்றது.

வளையல்கள்

கைநிறைய வளையல்கள் அணிவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. வெள்ளி,சில்வர், இரும்பு போன்று ஒற்றை வளையல்கள் அணிவது ஆண்களுக்கு பிடித்தமான ஒன்று. கையின் மணிக்கட்டில் உடலின் துடிப்பு விதத்தை கூட்டும் நரம்பு ஒன்று உள்ளது. கைகளில் வளையில்கள் அணிந்து கொள்வதன் மூலம் இந் நரம்பினூடாக இரத்த ஓட்டம் சீர்பட உதவுகிறது. வளையலின் ஓசை உடலிற்கும், மனதிற்கும் ஆரோக்கியத்தை தரும். வளையல் அணிவது உடல் ஆரோக்கியம், அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் அடையாளமாகவே கருதப்பட்டது. வளையல் ஓசை உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு அளித்து மன அழுத்தத்தை குறைப்பதாகவும் குறிப்பிடுகின்றன.

மோதிரங்கள்
ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான ஆபரணங்களில் மோதிரங்களும் ஒன்று. திருமணத்திலும் மோதிரம் என்பது ஒரு அடையாளமாகவே கருதப்படுகிறது. திருமணத்தில் மோதிரம் மாற்றி அணிந்து கொள்வது திருமணத்தை உறுதிப்படுத்தும் நிகழ்வாக அமைகிறது. அதிலும் தமிழ் முறைப்படி நடைபெறும் திருமணச் சடங்குகளில் குடத்தில் மோதிரமிட்டு மணமகனும்,மணமகளும் அதனை தேடி பெறுதல் போன்ற நிகழ்வுகளில் மோதிரங்கள் இன்றியமையாததாகும். நம் உடலிலுள்ள நரம்புகள் ஒன்றோடொன்று இணைந்தவையாகும். நம் கைவிரல்களில் மோதிர விரலென்றே ஒரு விரல் இருக்கிறது. நம் மோதிர விரலில் இருக்கும் நரம்பானது மூளை வழியாக இதயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த விரலில் மோதிரம் அணிவது இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. உடல் முழுவதற்கும் நன்மையளிக்கிறது.

ஒட்டியாணம்

இடுப்பிற்கு எடுப்பாக இருப்பது ஒட்டியணாங்கள் தான். பல வித வடிவங்களிலும்,வகைகளிலும் ஒட்டியாணங்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. திருமணக் கோலத்திலிருக்கும் பெண்கள் கட்டாயமாக ஒட்டியாணம் அணிந்து கொள்வார்கள். இதனை கர்தானி, கமர்பத் என்றும் அழைப்பார்கள். இடுப்பை அலங்கரிக்க பயன்படும் ஒட்டியாணங்கள் இடுப்பின் அமைப்பை அழகாக்குகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளியில் அணியப்படும் ஒட்டியாணங்கள் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் படிந்துள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுவதாகவும் கூறப்படுகிறது.

கொலுசுகள்

கொலுசுகள் பெண்கள் விரும்பி அணிவது அதன் சத்தத்திற்கு தான். தற்கால பெண்கள் ஒற்றைப் பட்டி போன்ற கொலுசுகளையும் அணிவார்கள். சிலசமயம் அதனை ஒரு காலில் மட்டும் அணிந்து கொள்கிறார்கள். பெரும்பாலும் வெள்ளியில் கொலுசுகள் அணிவது தான் முறை வழக்கமும் கூட. ஆனால் சிலர் தங்கத்தில் அணிகின்றனர். தங்கத்தில் கால் கொலுசு அணிவது அதன் பெறுமதியை அவமதிப்பது போன்றதாகும். இதனால் பயன் எதுவும் இல்லை. வெள்ளிக் கொலுசுகள் கணுக்கால்களில் அணியப்படும் போது நடக்கையில் ஒலியை உண்டாக்குகிறது. இவை நேர்மறையான எதிர்வலைகளை உருவாக்குகின்றன. வெள்ளியானது நல்லதொரு ஆற்றலை உடலுக்குள் கடத்துகின்றது. பெண்களுக்கு உணர்ச்சிகள் பெருவிரலில் இருந்து தொடங்கி குதிக்கால் நரம்பு வழியாக தலைக்கு ஏறுகிறது. எனவே பெண்கள் காலில் கொலுசு அணியும் போது, கொலுசானது குதிகால் நரம்பில் உரசிக் கொண்டே இருக்கும். இதனால் மூளைக்குச் செல்லும் உணர்ச்சி அலைகள் கட்டுப்படுத்தப்படுகின்றது

மெட்டி

அம்மி மிதித்து மெட்டி போடுவது திருமணத்தின் முக்கிய அங்கமாகும். தாலியைப் போலவே திருமணமான பெண்களின் மற்றுமொரு அடையாளம் மெட்டியாகும். மெட்டி கால் பாதத்தின் இரண்டாவது விரல்களிலே அணியப்படுகிறது. மெட்டியானது மாதவிடாய் சுழற்சியை வழக்கமானதாக்கி கருத்தரிக்கும் செயல்முறைக்கு உதவுகின்றது. திருமணமான ஆண்களும் காலில் மெட்டி போட்டுக் கொள்வார்கள். பெண்கள் திருமணமானால் அவர்கள் அணியும் தாலியிலே தெரிந்துவிடும் ஆனால் ஆண்களுக்கு அவ்வாறில்லை. ஆண்கள் தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை அறியத்தரவே கால்களில் மெட்டியணிந்து கொள்கின்றார்கள்

அடிமைமுறை என்பது எப்போது உருவாகியிருக்கும்?

உலக மக்களிடையே அடிமைத்தனம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் , அடிமைத்தனத்தால் சமுதாயத்தில் உண்டாகும் தாக்கங்களை எடுத்துரைக்கவும் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி சர்வதேச அடிமைகள் ஒழிப்புத் தினமாக கடைபிடிக்கப்படுகின்றது . 1949 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் திகதியன்று ஆள்கடத்தலை இல்லாமலாக்குதல் மற்றும் பிறர் விபச்சாரத்திற்கு உள்ளாக்கப்பட்டு சுரண்டப்படுவதை தடுக்கும் முகமாக உருவாக்கப்பட்ட உடன்படிக்கையினை ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டத்தினை குறிக்கும் முகமாக இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது ஆண்டுதோறும் “walk free foundation “எனும் அமைப்பால் உலக அடிமைத்தன குறியீடு (global slavery index) வெளியிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மனித குலம் தோன்றியபோது பொதுவுடமை சமூகமாக வாழ்ந்துவந்த அவன் எப்போது குழுகுழுவாகப் பிரிந்து வாழத்தொடங்கினானோ , அப்போதிருந்தே உணவுக்கான தேவையில் குழுக்களாக மோதிக்கொண்டான் . இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொள்வதில் போட்டி ஏற்பட்டபோது போட்டியில் தோற்ற ஆண்கள் கொல்லப்பட்டனர். அவர்களைச் சார்ந்த பெண்களை வெற்றி பெற்ற குழுவினர் கொண்டு சென்றனர். பின்னாளில் தோற்றவர்களை கொன்றுகுவிக்காது தங்களுக்கு வேலை செய்வதற்காகவும் பெண்களை பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளவும் வென்றவர்கள் வைத்துக்கொள்ள முற்பட்டதிலிருந்தே இந்த அடிமை முறை உருவாகியிருக்கலாம் . இந்த மனிதாபிமானமற்ற அடிமை முறை வரலாற்றுக் காலம் முதல் பல நாடுகளில் நடைமுறையில் இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் அடிமைகள் என்பவர்கள் மனிதநேயம் சிறிதும் இல்லாமல் அவர்களின் எஜமானர்களால் நடத்தப்பட்டனர்.

கல்வெட்டுகள் மூலம் அடிமை முறை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலே காணப்பட்டுள்ளது என தெரிய வந்திருக்கிறது. புராதன எகிப்தியர் போர்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப்படுத்தி இருக்கிறார்கள். அடிமைகள் முதலில் அரசகுடும்பத்துக்கு சொந்தமாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அடிமைகளை பரிசாக கொடுக்கலாம். இந்த அடிமைகளை கொண்டு கடுமையான வேலைகளை வாங்கிக்கொள்ளலாம்.

யூத இனம், எகிப்து, கிரேக்கம், அரேபியா, சீனாவிலும் அடிமைமுறை பெரும்பங்கு வகித்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் அடிமைகள் சந்தையில் விற்கப்பட்டனர். அடிமைக்குப் பிறந்தவர்களும் அடிமையே . பழங்காலத்தில் ஏதென்ஸில் 21,000 மனிதர்களும் அவர்களுக்கு சேவை செய்ய 4,00,000 அடிமைகளும் இருந்திருக்கிறார்கள்.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை அடிமைகள் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு பெயரில்லை, அவர்கள் திருமணம் கிடையாது. சொத்து இருந்தால் பறிமுதல் என பல கொடுமைகள் நடந்தேறி இருக்கின்றன.வசதி படைத்த கிரேக்கர்கள் பத்து, இருபது அடிமைகளை கூட வைத்திருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. கிரேக்க அடிமைகளுக்கு தமக்கு இஷ்டமான பெயரைக்கூட வைத்துக்கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டு , ஏஜமானர்களே தம்முடைய அடிமைகளுக்கான பெயர்களை வைத்திருக்கிறார்கள்.பண்டைய இந்தியாவில் ராஜாக்களும், வசதி படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கியுள்ளனர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது.

இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். அடிமைகள் மீது ஆடு, மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டன. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச் சின்னம், சிவன் கோவில் அடிமைகளுக்கு திரிசூலச் சின்னம், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னம் இடப்பட்டன.

மத்திய காலத்தில் அடிமை வியாபாரம் புதுப் பரிமாணம் எடுத்தது. ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி வணிகம் செய்திருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் பல இன மக்கள் வாழ்ந்தனர். இரு இனங்களுக்கிடையே போர் ஏற்பட்டு அதில் வென்றவர்கள், தோல்வி அடைந்தவர்களை ஆபிரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு அடிமையாக விற்றனர். அடிமை வியாபாரம் செய்து வந்தவர்கள் கொடுத்த பணத்திற்கு ஆசைப்பட்டு தன் இனத்தவர்களை பிடித்துக் கொடுத்தவர்களும் இருந்திருக்கிறார்கள்.அடிமை வியாபாரம் நடத்த மேற்கு ஆபிரிக்கக் கடற்கரையோரங்களில் சில கோட்டைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இவர்கள் அமெரிக்க நிலச்சுவான்தார்களுக்கு விற்கப்பட்டனர்.

இப்படி அடிமைகளாக விற்கப்பட்டவர்கள் வெள்ளையர் நிலங்களில் சம்பளம் எதுவும் இல்லாமல் உழைத்து தங்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபடாமலேயே வாழ்நாளை கழித்திருக்கிறார்கள். ஐரோப்பியர்கள், அடிமை முறையை ஓர் உற்பத்தி முறையாக உலக பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமாக மாற்றினார்கள். உலகிலிருந்த அனைத்து அடிமை முறைகளுடன் ஒப்பிடும் போது ஐரோப்பியர்களின் அடிமை முறை மிகவும் மோசமான முறையாக வர்ணிக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக அடிமை முறை தொடர்ந்திருக்கிறது. அடிமை முறையால் சுமார் 6 கோடி ஆபிரிக்கர்கள் கொல்லப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. பல கோடி அடிமைகள் சித்திரவதை, நோய், மன துயரத்தால் மரணத்தை தழுவி இருக்கிறார்கள்.

மதங்களும் மன்னர்களும் அடிமைகளை நல்ல முறையில் நடத்த கோரினாலும், 18- ம் நூற்றாண்டின் பின் பகுதியில்தான் அடிமைமுறையை மொத்தமாக ஒழித்து கட்டுவதற்கான குரல்கள் எழுந்தன. இவை முதலில் இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பிரசாரம் செய்யப்பட்டன. இவர் 1787-ல் ஆரம்பிக்கப்பட்ட அடிமை ஒழிப்பு குழுவின் முதல் தலைவர்.பிரெஞ்சு புரட்சியின் போது முதல் குடியரசு பிரகடனம் செய்யப்பட்ட பின், அடிமைமுறை தடை செய்யப்பட்டது. மாவீரன் நெப்பொலியன் தலைவராக ஆனவுடன், அடிமைதனத்தின் பல தடைகள் நீக்கப்பட்டன. 19- ம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறையை தடை செய்து ஒழித்தன.

20ம் நூற்றாண்டில், ஐ.நா. சபை, சர்வதேச தொழிலாளர் அமைப்பு போன்றவை, பழைய மற்றும் தற்கால அடிமைத்தனத்தை தடுப்பதற்கு பல சட்டங்களை இயற்றியுள்ளன. ஓரிரு நாடுகளை தவிர, எல்லா நாடுகளிலும் அடிமைமுறை வெளிப்படையாக தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் அடிமை முறை பூரணமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்வதற்கில்லை .குறிப்பாக, ஏழை தொழிலாளர்கள், பணக்கார முதலாளிகளிடம் அடகு வைக்கப்படுவது இன்றும் நடக்கிறது. இன்றும் உலகம் முழுக்க சுமார் 13 கோடி சிறுவர்கள் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இது அடிமை முறையின் நவீன வடிவமாக இருக்கிறது. வீட்டு பணிப்பெண்களும் இதில்தான் அடக்கம்.

நகம் வெட்டும் போது Be Careful!

மனித உறுப்புகளில் மிக முக்கியமான தொன்று நகங்கள். உடலுறுப்புகளில் ஏற்படும் நோய்களை காட்டும் அறிகுறியாக நகங்கள் செயற்படுகின்றன. நமது உடலிலுள்ள கெரட்டின் எனும் உடல் கழிவு நகங்களாக வளர்கின்றன. மனித உடலில் மிகவும் பலமானது நகங்கள் தான். நகங்களை பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். உடல் ஆரோக்கியத்தில் நகங்களின் பராமரிப்பும் இன்றியமையாத ஒன்றாகும். ஆகவே நகங்களை எப்போதும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். நகங்களை வெட்டுவது சுகாதாரமான ஒரு பழக்கவழக்கமாகும். இருந்தாலும் நகம் வெட்டுவதிலும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

நகங்களை வெட்டும் முன் அதனை மென்மைப்படுத்த வேண்டும். சிலர் குளித்துவிட்டு நகம் வெட்டுவதை பழக்கமாக வைத்திருப்பார்கள். சிலர் நகம் வெட்டிவிட்டு குளிப்பார்கள். உண்மையில் நகங்களை நீரில் நனைத்துவிட்டு வெட்டுவதுதான் நல்லது. வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் விரல்களை ஊறவைத்து விட்ட பின் நகங்களை வெட்டுவதால் நகங்கள் மென்மையாக்கப்படுவதோடு இலகுவாகவும் வெட்டலாம். ஒரு முனையிலிருந்து மற்ற முனையை நோக்கியவாறே நகங்களை வெட்டவேண்டும். இதனால் நகங்கள் வளரும் போது சீராக வளரும்.

சிலர் ஸ்டைலுக்காக வெவ்வேறு விதமாக நகங்களை வெட்டுவார்கள். இவ்வாறு வெட்டுவதால் நகங்கள் பலவீனமடையும். வளரும் நகங்கள் வெட்டும் முன்னே உடைந்துவிடும். கைவிரல் நகங்களை விட கால் விரல் நகங்களை வெட்டுவது கொஞ்சம் கடினம் தான். அப்போது உப்பு நீரில் ஊறவைத்து நகங்களை வெட்டலாம். அதாவது ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி உப்பைக் கரைத்துக்கொண்டு அந்தத் தண்ணீரில் கால் விரல்களை சுமார் பத்து நிமிடங்களுக்கு ஊற வைத்தபின் நகம் வெட்டினால் வெட்டுவதற்கு எளிதாக இருப்பதோடு நகத்திலுள்ள கிருமிகளும் அகற்றப்படும்.

நகங்களை ஒட்ட வெட்டக்கூடாது. அதாவது நகமும் சதையும் இணையும் பகுதியை ஒருபோதும் வெட்டக்கூடாது. காரணம் அந்த பகுதி தான் நகங்களின் வேர் பகுதியை பாதுகாப்பதோடு நோய் தொற்றுக்களிலிருந்தும் நகங்களை பாதுகாக்கின்றன. நகம் வெட்டும் போது தவறுதலாக காயம் ஏற்பட்டால் எண்ணெய் தடவவேண்டும். மருந்துகள் வாங்கி வைப்பதற்கு பதிலாக எண்ணெய் பூசுவதால் காயம் விரைவில் குணமடையும். வலியும் குறையும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையாவது நகங்களை வெட்ட வேண்டும்.

நகங்களை பிளேட் மற்றும் கத்திரிக்கோலைக் கொண்டு வெட்டக்கூடாது. நகங்களை வெட்டுவதற்காகவே நகவெட்டி பயன்படுகிறது. ஓரங்களில் உள்ள நகங்களை கவனமாக வெட்டவேண்டும். பெண்கள் நகங்களை வெட்டும்போது முக்கியமாக நகத்தின் இரு ஓரங்களிலும் சாய்வாக வெட்டுவார்கள். காரணம் அவ்வாறு வெட்டுவதால் நகம் வளரும் போது நேர்த்தியாகவும் அழகாகவும் வளரும் என்பதற்காக.நகம் வெட்டப் பயன்படுத்தும் நக வெட்டியை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். நகத்தை வெட்டும் முன்னரும் நகத்தை வெட்டிய பின்னரும் நகவெட்டியை நன்றாக கழுவி சுத்தப்படுத்தவேண்டும்.

ஒருவர் பயன்படுத்திய நகவெட்டியை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது. இதனால் நோய் தொற்றுகள் ஏற்படும். இருந்தாலும் இது நடைமுறைக்கு சாத்தியமில்லையென்றாலும் அனைவரும் பயன்படுத்தும் நக வெட்டியை சவர்க்காரம் அல்லது சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். இதனால் நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும். நகங்கள் கடிப்பது தவறான பழக்கமாகும். இதனால் ஆபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகவே நகங்களை வெட்டுவதே சாலச் சிறந்தது. நகம் வெட்டுவது சிறிய விடயம் என்று அலட்சியப்படுத்தாமல் நகங்கள் வெட்டுவதிலும் கவனமாக இருங்கள்

 

Mr. Poetu

நம்பிக்கைகள் இப்படியுமா?

ஒரு மன்னன் தன்னுடைய மந்திரியை அழைத்து “மந்திரி நான் நம் நாட்டு மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்!” என்று சொல்லி அனுப்பினார். மந்திரியும் உடனே ஒரு கழுதையைக் குளிப்பாட்டி அதை ஊரின் நாற் சந்தியில் எல்லோரது பார்வையிலும் படும்படி நிறுத்தி அதன் முன்னங் கால்களையும் பின்னங் கால்களையும் இறுகக் கட்டியபின் கழுதைக்கு சந்தனம் குங்குமம் பூசி, கற்பூர ஆராதை செய்து சாம்பிராணித் தூபமெல்லாம் போட்டபின் மன்னனை கழுதைக்கு அருகில் அழைத்தார்.

இதெல்லாம் எதற்கு என்று கேட்ட மன்னரிடம் நான் சொல்கிறபடி செய்யுங்கள் பிறகு காரணத்தை நீங்களாகவே அறிந்து கொள்வீர்கள் என்றார் மந்திரி. மன்னரும் மந்திரி சொன்னபடியே அந்தக் கழுதையை மூன்றுமுறை வலம் வந்து அதை வணங்கிவிட்டு அதன் மேலுள்ள ரோமங்களில் ஒன்றைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு அரண்மனையின் ஒரு ஓரமாய் நின்றுகொண்டு நடக்கபோவதை ஆவலோடு பார்க்கலானார். ராஜா செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவன் “ராஜாவே இப்படிச் செய்கிறார் என்றால் இதில் ஏதோ மகத்துவம் இருக்கிறது” என்று எண்ணி ராஜா செய்ததுபோலவே கழுதையை மூன்றுமுறை வலம்வந்து வணங்கி அதன் ரோமம் ஒன்றினைப் பிடுங்கிக்கொண்டான்.

இவனைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன் காரணம் வினவ ராஜா அப்படிச் செய்தது தெரியவரவே அவனும் அவனை பின்தொடர்ந்து பலரும் இப்படி தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிக்கவே நகர் முழுவதும் இந்தக் கதை பரவி வரிசை வரிசையாக மக்கள் வந்துநின்று அந்தக் கழுதையின் ரோமத்தினைப் பிடுங்கிச் செல்லத் தொடங்கினர்! கழுதை ரத்த வெள்ளத்தில் அலறித் துடிக்க ஆரம்பித்தது. அப்போதும் அவர்கள் விட்டபாடில்லை. மயங்கிச் சரிந்த கழுதையினை ரோமமே இல்லாத நிலையிலும் புரட்டிப் போட்டு ஒரு ரோமமாவது கிடைக்காதா என்ற நம்பிக்கையில் தேடிக்கொண்டிருந்தனர். கழுதையின் ரோமம் கிடைத்தவர்கள் எல்லோரும் மன நிம்மதியுடன் சென்றுகொண்டிருக்க வரிசையில் ரோமத்துக்காக காத்திருந்தவர்களின் முகத்தில் ஏமாற்றம் இவை எல்லாவற்றையும் அவதானித்துக்கொண்டிருந்த மன்னர் கூட்டத்தின் அருகில் வந்து இறுதியாக ரோமதினைப் பிடுங்கியவனிடம் “நீ ஏன் இப்படிச் செய்தாய்? என்று கேட்கவே அவனும் காரணம் தெரியாமல் விழித்துக்கொண்டு ”எல்லோரும் செய்தார்கள் அதனால் நானும் செய்தேன்” என்றான்.

கூட்டத்தில் நின்ற பலரும் இதே கருத்தினைச் சொல்ல வேறு சிலர் மன்னரைப் பார்த்து “நீங்கள் பிடுங்குனீர்கள் என்பதால் நாங்களும் பிடுங்கினோம்” என்றனர். இதைக்கேட்ட மன்னர் வாய்விட்டுச் சிரிக்க மந்திரி மன்னரைப் பார்த்து “நம் நாட்டு மக்களது அறிவு வளர்ச்சியைப் பார்த்தீர்களா மன்னா?” என்றார்!ஆமாம் இந்தக் கதையில் வருவதுபோல் ஏனென்று ஆராயாமல் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்று கண்மூடித்தனமாக செயல்படுபவர்களே நம்மில் அநேகர்.

நம்பிக்கை என்ற அச்சாணியில்தான் இந்த உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது . ஆனால் இந்த இயல்பான நம்பிக்கையினைத் தவிர சில பல முட்டாள்த்தனமான நம்பிக்கைகளில் மூழ்கி மனிதர்கள் தம்மீதும் சமூகம் மீதும் சேற்றை வாரி இறைத்துக்கொள்ளும் இழிநிலையும் இல்லாமல் இல்லை. பக்தி என்ற பெயரில் இடம்பெறும் போலித்தனமும் சம்பிரதாயம் என்ற பெயரில் இடம்பெறும் கேலிக் கூத்துக்களும் கையிருப்புக் கரைப்புக்களும் சொல்லில் அடங்கமாட்டாதவை! மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரினதும் மாறுபட்ட சிந்தனைகளுக்கு தடைவிதித்து இயலாமைக்குக் காரணம் கற்பித்து அதையே வாழ்கையாக்கிவிட உதவும் ஓர் விடயம்தான் “சோதிடம் ” என்றால் அது பொய்யில்லை!

மனித சமுதாயத்தினை ஆட்டிப் படைக்கும் பாரம்பரிய நம்பிக்கைகளில் முதலிடத்தைப் பிடிப்பது ஜோதிடம்தான். ஆண்டில் பாதிமாதங்கள் கெட்ட மாதங்கள்! இருக்கின்ற நல்ல மாதங்களில் கிழமை வாரியாகப் பார்க்கின் “நாள் செய்யும் பலன் நல்லோர்கூட செய்யமாட்டார்கள்” என்ற பழமொழிக்கு ஏற்ப ஞாயிறு கூடாது சனி அலி, செவ்வாய் வெறுவாய், வியாழன்? கள்ள வியாழன் கழுத்தறுக்கும் என்று வாரத்தில் ஏழு நாட்களில் நான்கு நாட்களை நல்ல காரியங்களைச் செய்யக்கூடாத கெட்ட நாட்களாக மாற்றிவிட்டார்கள். எஞ்சியிருப்பது திங்கள், புதன் , வெள்ளி என்ற மூன்று நாட்கள் மட்டுமே. இதிலும் “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்று புதன் கிழமைக்கு மட்டும் விசேட சலுகை!

ஆனாலும் எஞ்சிய இந்த மூன்று நாட்களையும்கூட முழுதாக ஏற்றுக்கொள்ளவியலாது . தேய்பிறை அமாவாசை, கரிநாள், ராகுகாலம், எம கண்டம், குளிக்கன், சூலம் என்று முழு நாளுமோ அல்லது ஒரு நாளின் சில பல மணித்தியாலங்களோ காவு கொள்ளப்படும். திருமணம் செய்துகொள்ளும் இருவருக்கு அறிவில் அழகில், குணத்தில், திறமையில், குடும்பப் பின்னணியில் பொருத்தம் இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் ஜாதகப் பொருத்தம் மட்டும் இருந்தேயாகவேண்டும். இந்த ஜாதகப் பொருத்தம் என்ற கருமாந்திரம் உள்ளே வந்துதான் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கல்யாணக் கனவுகளில் பென்னாம்பெரிய கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறது என்றால் அதுதான் உண்மை.

அதுவும் பத்துப் பொருத்தத்தொடு நிறுத்திக்கொள்ளாது செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், மாங்கல்ய தோஷம், பாவம் கூடவா ? குறையவா ? என்று ஏகப்பட்ட சிக்கல்கள். முப்பத்தைந்து வயதில் திருமணம் ஆகிறதோ இல்லையோ நன்றாக ஜாதகம் பார்த்துப் பழகிக்கொள்ளலாம் நாங்கள். இவ்வாரான நம்பிக்கைகளை வளர்த்து விடும் ஊடகங்களாக வானொலி, தொலைகாட்சி, பத்திரிகைகள் போன்றவையும் ஈடுபடுவதுதான் வேதனை. ” இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? ” என்ற தொனியில் பண்ணிரண்டு ராசிகளுக்குமான அன்றைய தினத்துக்குரிய பலனை ஒன்றை வரியிலாவது சொல்லத் தவறுவதில்லை இந்த ஊடகங்கள்.

ஜோதிடம் புத்தகங்களும் ஜோதிடப் பத்திரிகைகளும் முன்பைக்காட்டிலும் இந்த நவீன யுகத்திலேயே அதிகரித்திருக்கிறது என்றால் மிகையில்லை. மனிதர்களின் தலைவிதியினை கிரகங்கள் தீர்மானிக்கின்றனவா? என்ற கேள்விக்கு ஆம் என்று சொல்வதுதான் ஜோதிட சாத்திரம். ஆதிகால மனிதர்கள் கிரகங்களுக்கு அபரிதமான சக்தி இருப்பதாக நம்பினார்கள். கிரகங்கள் என்றால் என்ன? அவை எப்படி இடம்பெயர்கின்றன? என்பதற்க்கான அடிப்படை உண்மைகள் தெரியாத காரணத்தினால் அவர்கள் அப்படி நம்பினார்கள். ஆனால் இன்றைய அறிவியலின் தொழிநுட்ப வளர்ச்சி ஆதி மனிதர்களின் மனதுக்குள் இருந்த கேள்விகளுக்கு சந்தேகங்களுக்கு இன்று விடை கண்டுபிடித்துக் கொடுத்தபின்னும் அவர்கள் தங்களது தவறான நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டபாடில்லை.

மேலும் தவறான நம்பிக்கைகளில் அடுத்த இடத்தினை வகிப்பவைதான் “சகுன நம்பிக்கை “! பல்லி கத்தும்போது கைவிரலால் சுண்டுவது பூனை குறுக்கேபோனால் தண்ணீர் குடித்துவிட்டுப் போவது வெளியே போகும்போது விளக்குமார் துடைப்பம் கண்ணில் படாமல் போவது எங்கே போகிறாய் “? என்று கேட்டால் சில நிமிடங்கள் தாமதித்துப் போவது, ஊசியைக் கையில் கொடுக்ககூடாது, வாகன சாவியை கையில் வாங்கக்கூடாது, தும்மினால் யாரோ நினைக்கிறார்கள், புரை ஏறினால் யாரோ திட்டுகிறார்கள், விளக்கு வைத்தபின் உப்பு , பணம் போன்றவற்றை இரவல் கொடுக்ககூடாது என்று வரிசை கட்டி நிற்கின்றன

நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான நம்பிக்கைகள் (?!) சிலவற்றுக்கு காரணமும் சொல்லப்படும் பலவற்றுக்கு காரணமே தெரியாமல் மரபுவழி பின்பற்றப்படும். இந்த சகுன விவகாரத்தில் ஊர்வன பறப்பன, நடப்பன என்று எந்த ஒன்றுமே தப்பவில்லை எனலாம். மிகப்பெரிய அறிவாளிகளையும் , பலசாலிகளையும்கூட பயப்படும்படியாக செய்துவிடுகிறது இந்த சகுன நம்பிக்கை . பூனையைக் கண்டு எலி பயப்படலாம். மனிதன் பயப்படலாமா ? ஊர்வனவற்றுள் ஒன்றான பல்லியை அடிப்படையாகக் கொண்டு பல்லி விழும் பலன், பல்லி கத்தும் பலன் என்று பல்லியை “ஆரூடம் சொல்லும் ஜோதிடமானாகவே மக்கள் கருதுவதுதான் வேடிக்கை!

மனிதர்களின் எதிர்காலத்தினை மனிதர்களாலேயே அறிந்துகொள்ள இயலாதபோது சுவற்றில் ஒட்டியிருக்கும் பல்லியால் மட்டும் எப்படி? நம்முடைய வாழ்வுக்கும் பல்லிக்கும் என்ன சம்பந்தம்? நாய் ஊளையிடுவதைகூட நாம் விட்டுவைக்கவில்லை. வரப்போகும் ஏதோவொரு துர் சகுனத்தின் முன்னரிவிப்பாகவே நாயின் ஊளையிடுதலை எண்ணி அஞ்சுகிறோம். காகம் கரைந்தால் விருந்தாளி வரப்போகிறார்கள் ஆந்தை அலறினாள் அபசகுனம் என்று நமக்குத்தான் எத்தனை எத்தனை நம்பிக்கைகள்! இப்படி அஃறினைகளை சடப்பொருட்க்களை சகுனத்தடையாக்கிய மனிதர்கள் மனிதர்களில் சிலரையே சகுனத்தடையாகிக்கொண்டதுதான் எல்லாவற்றிற்கும் உச்சம்!

தாலி இழந்த பெண்கள் குழந்தை இல்லாதவர்கள் போன்றோரை அபசகுனமாக சமுதாயம் நோக்குகிற காரணத்தால் இவர்கள் சுப காரியங்களில் வெறுக்கப்படுவதோடு சில காரியங்கள் கைகூடாத பட்சத்தில் சமுதாயத்தின் பழிச் சொற்க்களையும் ஏற்க வேண்டியிருக்கிறது. கணவனை இழந்து அல்லது குழந்தைப் பேரில்லாது ஏற்கனவே துயரத்தோடு இருக்கும் இவர்களுக்கு “அபச குணத்தின் சின்னம் ” என்று முத்திரை குத்தப்பட்டு அடிப்படை உரிமை மறுக்கப்படுவது என்ன நியாயமோ.

சிக்கலான பிரச்சினை ஏதும் வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் “சாமிக்கு முன் பூப்போட்டு பார்த்தல்” என்ற நடைமுறை இன்றுவரை நிலவிவருகிறது. பூப்போட்டு பார்த்தல், குறி கேட்டல் போன்ற மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் பயங்கரமான ஓர் உளவியல் உண்டு என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அது என்னவென்றால் நம் எல்லோருக்கும் ஒரு அதிகாரி தேவைப்படுகிறார். ஒரு விசயத்தில் தீர்மானம் எடுக்கவியலாமல் தடுமாறும்போது பிறரின் தீர்மானதினையே எதிர்பார்த்து நிற்கிறோம். அந்த அடிப்படையிலேயே கடவுளே ஒரு நல்ல முடிவினைச் சொல்லட்டும் என்ற நம்பிக்கையில் அவரிடம் பூப்போட்டு பார்க்க கிளம்பிவிடுகிறோம்.

அட கீழைத்தேய நாடுகளில் மட்டும்தான் இப்படியான வினோதமான நம்பிக்கைகாளா? இல்லவேயில்லை உலக வல்லரசான அமெரிக்கர்களுக்கு இன்னுமே 13 என்ற எண் ஆகாமல்தான் இருக்கிறது. அதுவும் இந்தப் பதிமூன்றாம் திகதி ஒரு வெள்ளிக்கிழமையில் வந்துவிட்டால் அந்தோ பரிதாபம். ஏனெனில் ஏசுவைக் காட்டிக்கொடுக்க யூதாஸ் வாங்கியது 13 பொற்க்காசுகள். நோவா காலத்தில் வெள்ளம் வந்து உலகம் அழிந்துபோனதாய் சொல்லப்படுவது ஒரு பதின்மூன்றாம் திகதியில் வந்த வெள்ளிக்கிழமையில் ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாமும் ஏவாளும் துரத்தப்பட்டது ஒரு வெள்ளிக்கிழமை என்பதால்தான் இந்த 13ஆம் திகதியும் வெள்ளிக்கிழமையும் அங்கே படாதபாடு படுகிறது.

இன்னுமே அங்கே 13ஆவது மாடி இல்லாமலேயே கட்டிடங்கள் காட்டப்படுவதுடன் குடியிருப்புக்களில் 13ஆம் எண் வீடுகள் இருப்பதில்லையாம் . அதேபோல இத்தாலியருக்கு 17ஆம் எண் மரணத்தைக் குறிக்கும் கெட்ட எண்ணாம். உழைப்புக்கு பெயர்போன ஜப்பானியர்களுக்கு பாம்பின் தோலை சிறு துண்டுகளாக வெட்டி மணி பர்சுக்குள்ளும் பீரோவுக்குள்ளும் வைத்துக்கொண்டால் பணம் கொழிக்கும் என்ற நம்பிக்கை , முயலின் தோலையோ வாலையோ வீட்டுக்குள் வைத்துக்கொண்டால் எந்தவொரு காரியமும் வெற்றிபெறும் என்பது மெக்சிகொவினறது நம்பிக்கை நசுங்கிய பாத்திரத்தையோ உடைந்த கண்ணாடியையோ பயன்படுத்துவது அபசகுனம் என்பது ரஷ்யர்களின் நம்பிக்கை வெளியே கிளம்புகையில் காகத்தைக் கண்டால் அப்சட் ஆகிப்போவது கொரியர்களின் நம்பிக்கை , தேநீர் தயாரிக்கும்போது குவளைக்குள் முதலில் சீனியைப் போட்டால் செல்வம் சேரும் என்பது பிரேசில்காரர்களின் நம்பிக்கை.

என்ன இப்படியெல்லாமுமா நம்பிக்கைகள் இருக்ககூடும்? என்று நினைக்கத் தோன்றுகிறது இல்லையா? ஆம்.. மற்றவர்களது சில நம்பிக்கைகள் எப்படி எங்களுக்கு விசித்திரமானதாகவும் வினோதமானதாகவும் வேடிக்கையானதாகவும் இருக்கின்றதோ அப்படித்தான் நம்முடைய சில பல நம்பிக்கைகள் மற்றவர்களது பார்வைக்கு கேலிக்கூத்தானதாக இருக்ககூடும். நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையேயான வித்தியாசம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் என்று மாறுபடக்கூடியவை.

குறிப்பிட்ட சிலருக்கு / குறிப்பிட்ட சில சமூகத்துக்கு மூட நம்பிக்கையாகத் தோன்றும் விடயங்கள் மற்றும் சிலருக்கு மற்றுமொரு சமூகத்துக்கு அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்ககூடும். இவையெல்லாமே அவரவர் மரபுவழி ஏற்ப்பட்ட உளவியலேயொழிய வேறேதுமில்லை . இவற்றை நாம் விமர்சிப்பதுகூட எந்த அளவு நியாயமானது என்று எனக்குத் தெரியவில்லை. சில சமூக அல்லது மத நம்பிக்கைகள் அடிமைதனமாகவோ, உயிர் பாதிப்பினை உடற் பாதிப்பினை அல்லது மனப்பாதிப்பினை ஏற்படுத்திவிடுவதும் உண்டு . இவற்றை இல்லாமல் செய்ய நிச்சயம் குரல்கொடுக்கத்தான் வேண்டும்.

ஆனால் குரல் கொடுக்கிறேன் என்ற பேரில் , குறித்த சமூகத்தை அல்லது மனிதர்களை கிண்டல் செய்தோ , வன்மையாக கண்டித்தோ ஏதேனும் ஏடாகூடமாய் செய்துவிடுவோமாயின், அது நிச்சயம் அவர்களை ஒருபோதும் மாற்றியமைக்கப் போவதில்லை . ஏனெனில் , அது அவர்களுக்கு மேலும் வன்மைத்தினை கோபத்தை உண்டுபண்ணிவிடக்கூடும். அவர்களைப் பொருத்தவரையில் அவர்களாகவே புரிந்துகொண்டு கலாசார மறுமலர்ச்சியால் மீண்டால்தான் அதிலிருந்து அவர்களால் முற்றிலுமாக விடுபடமுடியும் என்பது என் கருத்து.

மேலும் இந்த நம்பிக்கைகள் கொடுக்கும் தாக்கங்களின் சாதக பாதகங்களைப் பொறுத்து அவை வேண்டியவையா? வேண்டாதவையா? அல்லது யாரையும் பாதிக்காதவரையில் இருந்துவிட்டுப் போகட்டும் என்ற வகையராவுக்குள் விட்டுவிடுவதா என்று முடிவெடுக்கவும் கூடும். ஏதோ ஒரு காரணத்துக்காக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்படும் இந்த நம்பிக்கைகளை இன்னுமே யாரெல்லாம் கட்டிக் காக்கிறார்கள் என்று பார்ப்போமாயின் ஊடகங்களை அடுத்து முன் நிற்பது என்னவோ மக்களை இயல்பாக சிந்திக்க விடாமல் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் மதங்களும் மதபோதகர்களுமே.

கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் பல முட்டாள்தனமான நம்பிக்கைகள் உரம் போட்டு வளர்க்கப்பட்டிருப்பதை மறுக்கவே முடியாது. மேலும் எதேச்சையாக நடக்கும் விடயங்களுக்கெல்லாம் காரணங்களை இட்டுக்கட்டி பணம்பறிக்கும் தொழிலாக மக்களின் பிரச்சினைகளை மாற்றிக்கொள்ளும் மந்திரவாதிகளும்/ சாமியார்களும்கூட இவ்வாறான முட்டாள்தனங்களுக்கு அடிகோலுவதுடன் அவற்றை மக்கள் மத்தியில் பரப்பியும் வருகின்றனர். அறிவியல் யுகம் உலகையே கணணிக்குள் சுருக்கிவிட்டாலும் அந்த அறிவியலால்கூட மனித சிந்தனையை இதுபோன்ற விடயங்களில் / நம்பிக்கைகளில் இன்னுமே முழுமையாக மாற்றிவிடமுடியவில்லை என்பதுதான் உண்மை.

கணனியில் ஜோதிடம், ஜாதகம், திருமணப் பொருத்தம் பார்ப்பது ராசிக்கல் வியாபாரம் என்று எல்லாவிதமான நம்பிக்கைகளும் கணினிக்குள்ளும் நுழைந்தாயிற்று! ஏதோவொரு கடவுளின் படத்தைப்போட்டு துண்டுப்பிரசுரமாக ‘இதை நூறு பிரதி எடுத்து குறிப்பிட்ட தினத்துக்குள் ,நூறுபேருக்கு கொடுத்து விடுங்கள் நல்லது நடக்கும் மீறினால் கொடூரமான துன்பத்துக்கு ஆளாவீர்கள்” என்ற அச்சுறுத்தலுடன் முன்பெல்லாம் பரப்பப்பட்ட காகிதத் துண்டுகள்இன்று கைத்தொலைபேசியில் குறுஞ்ச செய்திகள் வடிவிலும் கணினியில் ஷேரிங் வடிவிலும் முன்னேறிவிட்டன. இந்த நவீன தொழில் நுட்பங்கள் மனிதர்களின் வாழ்க்கையினை மேம்படுத்துவதட்குப் பதிலாக நம்முடைய சமூகத்தில் மூடத்தனங்களையும் அறிவியலுக்குப் புறம்பான விடயங்களையும் மக்கள் மனதில் விதைக்கப் பயன்பட்டுவருவதுதான் நம் சமூகத்தின் துரதிஷ்ட்டம்.

இவ்வாறான சில நம்பிக்கைகள் அரசாங்கத்தால் உத்தியோகப் பூர்வமாக நிராகரிக்கப்பட்டு சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் (விலங்குகளைப் பலி கொடுத்தல் போன்ற) பல நம்பிக்கைகள் அரசாங்கத்தாலும் உத்தியோகப் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்.

இன்றும்கூட நாம் சில கலாசார நிகழ்வுகளுக்கு சென்றால் அவதானிக்கக்கூடியதாக இருக்ககூடும் சில வயதானவர்கள் சில சடங்குகளை யோசித்து யோசித்து அரங்கேற்றிக் கொண்டிருப்பார்கள் அவர்களிடம் அவற்றுக்கான விளக்கங்களைக் கேட்டால் அநேகமாய் அவர்களுக்கே சரிவரச் சொல்லத் தெரிந்திருக்காது . “எங்கள் பாட்டிமார் அம்மாமார் செய்ததை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் அதை நாங்கள் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம் இதையே எதிர்காலத்தில் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள் ” என்ற ரீதியில் இவர்களது பதில் இருக்கும் . ஏன்? எதனால்? எதற்காக செய்கிறோம் ?என்ற எந்தவொரு உணர்வும் இல்லாமலேயே “காலம்காலமாய் செய்கிறோம் அதனால் அப்படியே தொடர்கிறோம் “ என்ற போக்குத்தானே வேரூன்றிக் கிடக்கிறது இங்கே ! நம்முடைய பாட்டிமார்கள் சிலருக்கு காலங்காலமாய் தம்முடைய மனதில் பதியவைத்துள்ள சில காரியங்களை செய்து முடித்தால்தான் அவர்களது மனம் நிறைவு பெரும் என்றவோர் நம்பிக்கை அவர்களுக்கு.

இதனாலேயே பல செயற்பாடுகளை நியாயப்படுத்தி நிறைவேற்றி விடுகின்றனர். இவர்களது மனம் கோணாமல் இருப்பத ற்க்காகவும் பெரியவர்கள் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்றும் நாமும் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம் . இதன் விளைவு நம்முடைய சமுதாயத்தில் அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் இவற்றையெல்லாம் சம்பிரதாயம் என்ற பெயரில் கடத்திக்கொண்டிருக்கிறோம் நாமும் ! இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் பின்னாளில் பரீட்சை வந்தால் மந்திரித்த கயிறுகளை கையில் கட்டிக்கொள்கிறார்கள் , கொள்ளிவாய்ப் பிசாசு இரவில் பிடித்துக்கொள்ளும் என்று அஞ்சுகிறார்கள் , பரிகார பூஜைகள் மூலம் எல்லாவிதமான பிழைகளும் , விபரீதங்களும் சரிசெய்யப்பட்டுவிடும் போன்ற மனோ நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றனர். சித்திரையில் பிறந்த பிள்ளை கூடாது ஆடியில் கருத்தங்கிய பிள்ளை கூடாது எட்டாம் என்னில் பிறந்த பிள்ளை ஆகாது என்றெல்லாம் சொல்லிச் சொல்லி வளர்த்தால் இவற்றைக் கேட்கும் அந்தப் பிள்ளைகளுக்கு வாழ்வில் தைரியம்தான் வருமா ? இப்படியான தேவையற்ற நம்பிக்கைகள் மூலம், வளரும் பிள்ளைகளின் மனதில் பயம் ,அவநம்பிக்கை அடிமைத்தனம் தைரியமின்மை போன்ற தாக்கங்களையே நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்வீர்களா?

வெறும் சடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதன் தத்துவங்களின் அடிப்படை உண்மைகளை சரியாக தெரிந்துகொண்டால் இவ்வாறான முட்டாள்தனமான நம்பிக்கைகள் பெருமளவு குறைந்துவிடக்கூடும் . இம்மாதிரியான நம்பிக்கைகள் எல்லாமும் எங்களுடைய நிம்மதியைக் கெடுக்ககூடியன . வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் சந்தோசமாகக் களிக்கப்படவேண்டியவை அல்லவா ? பின் ஏனிந்த போலியான நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எங்கள் மனதில் சலனத்தை உண்டு பண்ணிக்கொள்வானேன். இப்படி இல்லாத ஒன்றையும் சான்றில்லாத பல நம்பிக்கைகளையும் விதைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதானா ?

பகுத்தறிவில்லாமல் மூட நம்பிக்கைகளையும் வீணான சடங்கு சம்பிரதாயங்களையும் இனியும் புகுத்திக்கொண்டுதான் இருக்கப்போகிறோமா ? நம்முடைய எதிர்கால சந்ததிகளை குறுகிய சிந்தனை வட்டத்தில் வைத்து நமது அர்த்தமற்ற நம்பிக்கைகளையும் அனுபவங்களையும் திணித்து அவர்களது கற்பனை சிந்தனைத் திறன்களுக்கு வழிவிடாமல் முட்டுக்கட்டையாய் இருக்கப் போகிறோமா? குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பூச்சாண்டி பிடித்துக்கொள்வான் போன்ற மழுப்பலான பொய்யான தகவல்களை வழங்கித்தள்ளாமல் உண்மையான காரணங்களை எப்போது அவர்களுக்கு சொல்லி வளர்க்கப் போகிறோம்?

மூடத்தனமான விளக்கங்களையும் அச்சுறுத்தல்களையும் கொடுத்து பிள்ளைகளின் வாயையும் , சிந்தனையையும் சேர்த்தாற் போல் மூடிவிடாமல் அவர்களோடு சேர்ந்து நாமும் உண்மையான காரணங்களைத் தேடி எப்போது பயணடையப்போகிறோம்

யார் கடவுள்?

ஆதி அந்தமில்லை
அருவம் உருவமில்லை

உயிரும் உணர்வுமில்லை
பாச பந்தமில்லை.

ஏதும் சுயமாய் அமைவதில்லை
அனைத்திற்கும் முதல் உண்டு
எனில்
நீ இருக்கிறாய்
இருந்தும்..

எவ்வாறு நீ அமைந்தாய்?
ஏன் இவை அமைத்தாய்?

உடல் படைத்தாய்
உயிர் படைத்தாய்
ஊன் படைத்தாய்
உலகை படைத்தாய்

ஏன் படைத்தாய்?
உன் இச்சைக்கா?

உணர்ச்சிகள் கடந்த உனக்கு
மனிதன் ஆழ ஆசை ஏன்?

.

அது ஒரு புறம் ஒதுக்கி…
எங்களின் ஆராதனை
உன் செவிகளுக்கு எட்டுமா?

மதம் இனம் பெயர் கொண்டு
மனிதன் உனை ஆழ்வது தெரியுமா?

குண்டு வெடிக்கும் சப்தம்
அறிவாயா?
ஏழைகளின் கண்ணீர்
கண்டாயா?

மனிதன்…

தாவரம் கொன்று
விலங்கு கொன்று
மனிதம் கொன்று
சக மனிதன் கொன்று
ரசிப்பதை அறிவாயா?

உழைப்பவன்
உணர்ச்சிகள்
அறிவாயா?

விதைப்பவன்
மறிப்பதை
அறிவாயா?

மறித்தவர் எங்கு செல்வர்?
மரணத்தின் பின் வாழ்வு உண்டா?

என்னுள் இருக்கிறாயா?
அவனுள் இருக்கிறாயா?

நான் கடவுளா?
அவன் கடவுளா?

பிரபஞ்ச எல்லை காண
விஞ்ஞானம் தவிக்கிறது

உன்னை காண
மெய்யானம் தவிக்கிறது

ஏனிந்த தடுமாற்றம்
ஏனிந்த திருப்பம்

இறைவா…!

உனை எண்ணி எண்ணி
என்னுள் தவிக்கிறேன்
நான்

புதிருக்கு
பதில் தேடி
இருந்தும் நீ
புரியாத புதிர்.

ஆரா என்றால் என்ன?

நீங்கள் எப்போதாவது ஆழ்ந்த சிந்தனையின் ஈடுபட்டிருக்கும் போது அது தொடர்பான கருத்தை உங்களின் அருகில் இருந்த நபர் அல்லது நபர்கள் பேசியதுண்டா? அல்லது நீங்கள் ஒரு கருத்தை சொல்ல விளைந்த போது யாராயினும் உங்கள் அருகில் இருந்த நபர் தான் நினைத்த விடயத்தை தாங்கள் பேசியதாக உங்களிடம் சொல்லி வியந்ததுண்டா? சில வேளைகளில் அது தங்கள் ஆரா மூலம் கடத்தப்பட்டு தங்களின் அருகில் இருந்த நபரை அடைந்திருக்கலாம் அல்லது அருகிலிருந்த நபரின் உள்ளுணர்வுகள் உங்களை தாக்கி இருக்கலாம்.

அதனால் உங்களிருவருக்கிடையே ஒரு இனம் புரியாத இடைத்தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். ஒன்றும் புரியவில்லையா? இக்கட்டுரை மூலம் தங்கள் குழப்பத்தை தெளிவு செய்ய முனைகின்றோம்.

ஆரா என்றால் என்ன?

ஆரா பற்றி சரியான விஞ்ஞான ரீதியிலான வரைவிலக்கணங்கள் இல்லாத போதிலும், ஆன்மீக ரீதியாகவும் பல தத்துவ வியலாளர்கலினாலும், ஆன்மீக வாதிகளாலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.ஒரு மனிதனின் அதீத உள்ளுணர்வுகளும், சிந்தனைகளும், உள்ளக கருத்துக்களும் உடலிலிருந்து ஒரு சக்தி மாற்றமாக உமிழப்படுகின்றது. இவ்வாறு உமிழப்படும் அச்சக்தியானது அந்த மனிதன் உடலை சுற்றி ஒரு ஒளிவளையமாக உருவாகி அவனோடு பயணிக்கின்றது. இந்த அன்மாவின் அதீத சக்தியானது ஆரா என்று கருதப்படுகின்றது.

மனிதர்கள் என்ற வகையில் நம் உடலினுல் குறிப்பிடத்தக்க அளவிலான சிறு தொகையில் மின்சாரத்தினை உருவாக்கிக் கடத்தச் செய்கின்றது. அந்த மின்னோட்டத்தின் காரணமாக நம் உடலை சுற்றி ஒரு காந்தப்புலன் உருவாகின்றது. இவ்வாறு உருவாகும் மின் காந்தப்புலனே ஆரா என்றழைக்கப்படுகின்றது.
புராதன ஹிந்து மத நூல்களான வேதங்களின் படி ஆரா என்பது உடலில் பல்வேறு நிலைகளில் காணப்படும் ஆன்மீக சிந்தனைகள், உணர்வுகள், எண்ணங்கள், போன்றவற்றின் ஏழு அடுக்குகள் என்று நம்பப்படுகின்றது. இந்த ஏழு அடுக்குகள் ஒன்றையொன்று மனிதனின் உடல் ஆரோக்கியத்தின் பொருட்டு ஆதிக்கம் செலுத்திக் கொள்ளும் என்றும் நம்பப்படுகின்றது.

ஆரா பற்றிய விஞ்ஞானப் பார்வை..

ஆராப் பற்றி பல்வேறு அறிவியல் ரீதியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஆரா பற்றிய உண்மையுள்ள ஒரு முடிவுக்கு அறிவியல் இன்னும் வரவில்லை. இருந்த போதிலும் பல விஞ்ஞானிகள் ஆரா என்பது ஆன்மீகம் சார்ந்த பொருள் என்றும் அறிவியளுக்கு அப்பாற்பட்டதென்றும் கூறுகின்றனர். இருந்த போதிலும் பல விஞ்ஞானிகள் ஆரா பற்றிய கருத்துக்களை முற்றிலுமாக மறுக்கின்றனர்.

மேலும் ஆராய்கையில் எல்லா பொருட்களுக்கும் ஆற்றல் காணப்படுகின்றது அதனூடாகவே ஒவ்வொரு பொருளும் மற்றப்பொருளுடன் அதிர்வுகளை பரிமாற்றிக் கொள்கின்றது. இருந்த போதிலும் அந்த ஆற்றலால் ஆன்மாவினதோ பௌதீக உடலினதும் சிந்தனைகளை வெளிக்காட்ட முடியுமா என்பது தெளிவற்ற கேல்விகளையும் தெளிவற்ற பதில்களையுமே உருவாக்குகின்றது.

ஆராவை பார்க்க முடியுமா?

ஆராவை வெறுங்கண்ணாலும் பார்க்க முடியுமென்றபோதிலும் அது மிக மிக அரிதான ஒரு நிகழ்வாகும். இருந்த போதிலும் கதிர்வீச்சு போன்றவற்றை அவதானிக்கப் பயன்படுத்தப்படும் சில புகைப்படக் கருவிகளினாலும், ஆர போன்ற ஆன்மீக விடயங்களை அவதானிக்கப் பயன்படுத்தப்படும் பிரத்தியேக கமராக்கள் மூலமும் காணமுடியும்.

கிரிலியன் போட்டோகிரப்பி என்றழைக்கப்படும் விஷேட தொழிநுட்பத்தின் ஊடாக ஆரா மனித உடலை சுற்றி முட்டை வடிவில் இருப்பதை அவதானிக்க முடியும்.இந்த ஆராவின் நிலையானது மனிதனுக்கு மனிதன் வேறுப்படுவதுடன் மனதை ஒரு நிலை படுத்திய ஞானிகள் போன்றோரின் உடல்களில் அதிகமாக காணப்படுகின்றது.கடவுள்களாக வழிப்படும் கடவுள்களின் ஓவியங்களின் பின்னால் ஒளிவட்டம் போன்றவை வரையப்பட்டுள்ளது ஆராவாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.

ஆரா எவ்வாறு இருக்கும்?

நம் உடலை சுற்றி இருக்கும் ஆரா ஆனது நம்மை சுற்றி ஏழு நிறங்களில் இருக்கின்றது. ஒவ்வொரு நிறமும் ஒவ்வொறு உணர்ச்சியின் பிரத்தியேக வெளிப்பாடாக காணப்படுகின்றது.

• சிவப்பு – நிலையான மனநிலை, உற்சாகம், ஆற்றல்
• செம்மஞ்சள் – துணிவு, மிகுந்த சிந்தனை, அவதானம்
• மஞ்சள் – ஆக்கப்பூர்வம், ஓய்வு, நட்பு
• பச்சை – சமூகமயம், தொடர்பாடல்
• நீலம் – ஆன்மீகம், நிலையான சிந்தனை, உள்ளுணர்வு
• கரு நீலம் – ஆர்வம், கனிவு, ஆன்மீகம்
• ஊதா – சுதந்திரம், புத்திக் கூர்மை, அறிவு

உங்களின் ஆராவை உங்களால் பார்க்க முடியுமா?

மேற்குறிப்பிட்டவாறு விஷேட தொழிநுட்பக் கருவிகளால் அவற்றின் உதவியோடு உங்கள் ஆராவை நீங்கள் பார்க்கலாம்.வெறுங்கண்களால் உங்கள் ஆராவை பார்க்க வேண்டுமெனில் ஒரு வெள்ளை நிற தளத்தில் அதாவது உங்கள் கையின் பின்னால் வெள்ளை நிற பின்னனி இருக்கும் பட்சத்தில் அந்த பின்னனிக்கு முன்னால் உங்கள் கைய்யை நீட்டி உள்ளங்கையை சிறிது நேரத்துக்கு கூர்ந்து அவதானிக்கவும். பின் சிறிது நேரத்தில் உங்கள் கையை சுற்றிய வெற்றிடத்தில் விரல் இடுக்குப்போன்றவற்றில் ஒரு மெல்லிய சாம்பல் நிறத்தை ஒத்த ஒளி தோன்றும்.

இது உங்கள் ஆராவாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும் இதனை விஞ்ஞான ரீதியில் அனுகும் போது ஒளியியல் மாயை என்று கூறப்படுகின்றது.

ஆரா தாக்கம் செலுத்தும் விதம்!

ஆரா ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட மனிதனின் சிந்தனைகள் போன்ற உள்ளுணர்வுகள் ஒரு ஆற்றலாக உமிழப்படும் போது அவனை சுற்றி அது இருக்கின்றது. இதானால் குறிப்பிட்ட நபரோடு நெருங்கிய தொடர்பு அல்லது அருகாமையில் இருக்கும் போது சில வேளைகளில் ஆராவை உணர்கின்றோம் என்பது தெரியாமலேயே ஆரா உணரப்படுகின்றது.

எடுத்துக்காட்டாக சொன்னால் நீங்கள் உங்கள் ஆழ்மனதில் மனனம் செய்து கொண்டிருக்கும் அல்லது உங்கள் ஆழ்ந்த சிந்தனையில் ஓடிக்கொண்டருக்கும் பாடலை அருகிலிருக்கும் ஒருவர் பாடவோ அதை பற்றி பேசவோ செய்வதை அவதானித்திருக்கலாம். நீங்கள் மனம் தளர்ந்து இருக்கும் வேளைகளில் ஒரு குறிப்பிட்ட நபரின் இருப்பை தேடுவீர்கள் அல்லது அவரை நாடும் போது உங்களுள் இருந்த அந்த மன சோர்வுக்கு காரணாகளே இன்றி தற்காலிக தீர்வு கிடைக்கலாம். அது அவரின் உள் உணர்வுகள் நேர் கணியமாக இருந்திருந்தனாலாக இருக்கலாம்.

குறித்த நபரின் உணர்வுகள் மேன்மையாக இருந்ததனால் அவரது ஆராவும் மேன்மையானதாக இருந்து உங்களுக்குள் செல்வாக்கு செலுத்தி இருக்கலாம்.சில சமயங்களில் உங்களை சார்ந்த நபர் மனஅமைதி இல்லாமல் இருக்க நீங்களும் கவலையான ஒரு மனப்பன்மைக்கு உள்வாங்கப்பட்டிருப்பீர்கள். இந்த சந்தர்ப்பங்களை இன்னொருவரின் ஆரா உங்களுக்குல் தாக்கம் செலுத்தும் நிகழ்வாக கொள்ளலாம்.

புத்தரின் ஆரா!

கௌதம புத்தர் தன் வாழ்நாளில் பல தியானங்களின் மூலம் தனது மனதை ஒருநிலைப்படுத்தி சாதாரண மனிதர்களால் அடைய முடியாத ஒரு நிலையை அடைந்தவர் ஆவார். அத்தகைய ஒரு நிலையை அடைந்திருந்த கௌத்தமரது ஆராவானது பல கிலோமீட்டர்கள் கடந்து வியாபித்திருந்ததாகவும், அதானால் அவரின் அருகாமையை உணர்ந்த மக்களின் மனதும் அமைதி நிலையை அடைந்திருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

மேலும் இத்தகவலின் நம்பகத்தன்மை தெளிவாக இல்லாத போதிலும் புத்தரை சூழ இருந்த விலங்குகள் கூட ஆராவின் ஆதிக்கத்திற்கு உற்பட்டிருந்ததாகவும் மாமிச பட்சிகள் கூட அஹிம்சையாக நடந்ததாக பல ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன.

ஆராவும் அது தொடர்பான மோசடிகள் மற்றும் மூட நம்பிக்கைகளும்!

ஆரா தங்களது எதிர்கால வாழ்க்கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதிக்கம் செலுத்துவதுடன் ஆரா எனப்படுவது தங்களது முன் பிறவியின் வினை என்பது போன்ற பல்வேறு மூட நம்பிக்கைகள் சமூகத்தினிடை நிழவுகின்றது.

ஆரா மற்றும் ஆன்மீகம் என்ற பெயரில் எதிர்காலத்தை காட்டுவதாவும் ஆராவினை பெரிதாக்குதல் போன்ற பொய்யான கருத்துக்களை பரப்புவதுடன் மூலம் பெருமளவிலான பணமோசடிகள் செய்யப்பட்டு வருகின்றது.

 

-அன்புநாதன் ஹஜன்

22வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி!

உலகின் அதிகூடிய மக்களை ஈர்த்த  விளையாட்டாக அதிக இரசிகர்களை கொண்டுள்ள  கால்பந்தாட்ட திருவிழா பீபா தற்பாேது நடைபெற்று வருகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கால்பந்தாட்ட உலகக்கோப்பை போட்டி நடைபெறுகின்றது. அதன் தொடர்ச்சியாக 22வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் அராபிய தேசங்களில் ஒன்றான கத்தார் நாட்டில் யாவரினும் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெகு விமர்சையாக நடைபெறகிறது.2022 நவம்பர் 20ம் திகதி 22வது உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகள் கட்டார் நாட்டில் வெகு விமர்சையாக ஆரம்பமாகின. இப் போட்டிகள் டிசம்பர் 18 வரை நடக்கவிருக்கிறது. இது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு(FIFA – Fédération Internationale de Football Association) நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்துகின்ற ஒரு பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டியாகும். சரித்திரத்தின் முதன் முறையாக ஒரு அரபு நாடொன்றில இப்போட்டிகள் அதாவது கட்டார் நாட்டில் நடக்கிறது. இதில்,  பிபா உலகக்கோப்பை தொடர் முதன்முதலாக, மத்திய கிழக்கு நாட்டிலும், ஆசியாவில் இரண்டாவது முறையாகவும் நடைபெறுகிறது. 2002ஆம் ஆண்டில், ஜப்பான், தென்கொரியா நாடுகள் உலகக்கோப்பையை நடத்தியது. கத்தாரின் கடுமையான கோடை வெப்பம் காரணமாக, இந்த உலகக் கோப்பை நவம்பர் பிற்பகுதியில் இருந்து டிசம்பர் நடுப்பகுதி வரை நடைபெறுகிறது, இது மே, ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடைபெறாத முதல் போட்டியாக அமைந்துள்ளது

5 கூட்டமைப்புகளிலிருந்து 32 அணிகள் பங்குபற்றக்கூடியதாக 2022 போட்டிகள் நடைபெறுவதோடு 2026ம் ஆண்டு முதல் 48 அணிகளாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டிகள் சுமார் 8 குழுக்களுக்கு பிரித்து போட்டிகள் நடைபெறவிருக்கிறது. ஒரு குழுவில் மொத்தம் 4 அணிகள் இருக்கும். ஒரு அணி தனது குழுவில் இருக்கும் அணிகளோடு தலா 1 முறை மோதும். பின்னர் புள்ளிப்பட்டியலின் படி, குழுக்களில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அந்த சுற்றுக்கு மொத்தம் 16 அணிகள் தேர்வாகும். அதில், குழுக்கள் முறையில் போட்டிகள் முடிவு செய்யப்பட்டு, நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெறும்.பின்னர், காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி என தொடர் நிறைவுபெறும்.

கால்பந்து ரசிகர்களுக்கு என தனி கலாச்சாரம், பாரம்பரியம், கொண்டாட்ட முறைகள் உள்ள நிலையில், இஸ்லாமிய நாடான கத்தாரில் அவற்றில் பலவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண் ரசிகர்கள் உடல் முழுவதும் மறைக்கப்பட்ட ஆடைகளை மட்டுமே அணிந்துவர வேண்டும் எனவும், ஸ்லீவ்லெஸ் உடையோ அல்லது உடல் தெரியும் உடைகளுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், கால்பந்து ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான அணிகளின் விளையாட்டை பார்க்க ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த முறை உலகக்கோப்பையை பிரேசில், அர்ஜென்டீனா, பிரான்ஸ், உள்ளிட்ட அணிகள் மீது எதிர்பார்ப்பு இருந்தாலும். ஆர்ஜன்டீனாவுக்கு முதலாவது போட்டியிலே சவூதி அரேபியா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தது.அதுமட்டுமன்றி ஜேர்மனியை வீழ்த்தி ஜப்பான் முதலாவது போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.இது கால்பந்து உலகுக்கே மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.இந்த முறை புது அணி ஒன்று தான் கிண்ணத்தை வெல்வார்கள் என காற்பந்து இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த 2018ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடந்த உலகக்கோப்பையை பிரான்ஸ் கைப்பற்றியிருந்தது. கைலியன் இம்பாப்பே பிரான்ஸ் அணியின் துருப்புச்சீட்டாக விளங்குகிறார். பிரேசில் 5 முறையும், அர்ஜென்டீனா 1 முறையும் உலகக்கோப்பையை வென்றுள்ளன.

மறுமுனையில், கால்பந்தின் நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோருக்கு இதுவே கடைசி உலகக்கோப்பை தொடர் என்பதால் அவர்கள் மீதும் கவனம் அதிகமாகியுள்ளது. மெஸ்ஸி விளையாடியதில் இருந்து அர்ஜென்டினா உலகக்கோப்பையை வென்றதில்லை. தற்போது, அர்ஜென்டினா மிகவும் வலிமையாக உள்ள நிலையில், உலகக்கோப்பையுடன் மெஸ்ஸி விடைபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில், மொத்த பரிசுத்தொகை 440 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். அதாவது இறுதி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வழங்கப்பட்ட மொத்த பரிசுத்தொகையை விட 40மில்லியன் டாெலர்கள் அதிகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2022 fifa கால்பந்து உலக கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 42மில்லியன் டொலர்களும் பரிசு வழங்கப்படும். இறுதிப்போட்டியில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 30மில்லியன் டொலர்கள் வழங்கப்படுகிறது. மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு 27 மில்லியன் டொலர்களும் வழங்க உத்தேசிக்க பட்டுள்ளதோடு நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு 25மில்லியன் டொலர்களும் பரிசுத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கால் இறுதி சுற்றுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தல 17 மில்லியன் வீதமும் இரண்டாவது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா 13 மில்லியன் டொலர்கள் வீதமும் லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு 9 மில்லியன் டொலர்கள் வீதம் வழங்கப்படவுள்ளது.

 

பீபா உலகக்கிண்ணத்தில் இதுவரையில் 24 போட்டிகள்  முடிவடைந்துள்ளன.இதில் பெறும்பாலான ஆட்டங்கள் சமநிலையிலும், வெற்றி -தோல்வி நிலையிலும் என மிக விருவிருப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.இதில் உலகக் கிண்ணத்தை நடத்துகின்ற கத்தார் தேசிய உதைப்பந்தாட்ட அணி முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

 

ஆர்ஜன்டீனா, போர்த்துக்கல்,ஜேர்மனி ,பிரான்ஸ் ,ஸ்பெயின் முதலான அணிகள் கிண்ணத்தை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டாலும் சவூதி அரேபியா, ஜப்பான், ஈரான் என்பன வலுவான நிலையிலே இருக்கின்றனது.முன்கூட்டியே அனுமானம் செய்ய முடியாதவாரே இந்த உலகக்கிண்ண போட்டிகள் அமைந்துள்ளது எனலாம்.பீஃபா உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரில், “சீ“ குழுவின்  போட்டியில் சவூதி அரபேியா  வெற்றியீட்டியதனை கொண்டாடுவதற்காக சவூதி அரேபியாவில் பொதுவிடுமுறை கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.இந்தப் போட்டியில் சவுதி அரேபியா அணி 2 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் ஆர்ஜண்டீனா அணியை வீழ்த்தியது.இதற்கமைய, உலக கிண்ண கால்பந்து தொடரில் முதன்முறையாக ஆர்ஜண்டீனா அணி, சவுதி அரேபியாவிடம் தோல்வியடைந்ததது.

 

சவூதி அரேபியாவின் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, அதனைக் கொண்டாடும் வகையில் சவுதி அரேபியாவில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்த விடுமுறையானது பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.நடப்பு கால்பந்து உலக கோப்பை தொடரின் முதல் அதிர்ச்சி தோல்வியை அர்ஜென்டினா (Argentina) சந்தித்தது.

 

சவுதி அரேபியாவிற்கு (Saudi Arabia) எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா மண்ணை கவ்வியிருப்பதுதான் விளையாட்டு உலகில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம் ஆகும். லயோனல் மெஸ்ஸி (Lionel Messi) போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தும் கூட, அர்ஜென்டினாவால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. ஆட்டத்தின் 10வது நிமிடத்திலேயே லயோனல் மெஸ்ஸி அர்ஜென்டினாவிற்காக கோல் அடித்து விட்டார்தான். ஆனால் ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் சவுதி அரேபியா இதற்கு பதில் கோல் அடித்து சரிவில் இருந்து மீண்டது.

இந்த கோலை அடித்தவர் அல்-ஷெஹ்ரி (Al-Shehri). இந்த அதிர்ச்சியில் இருந்து அர்ஜென்டினா மீள்வதற்குள் சவுதி அரேபியா 2வது கோலையும் அடித்து விட்டது. சவுதி அரேபியாவின் அல்-டவ்சரி (Al-Dawsari) இந்த கோலை அடித்தார். முதல் கோல் அடிக்கப்பட்ட அடுத்த 5வது நிமிடத்திலேயே, அதாவது 53வது நிமிடத்திலேயே சவுதி அரேபியா 2வது கோலை போட்டது. இதற்கு பிறகு இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

 

எனவே இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை, சவுதி அரேபியா வீழ்த்தியது. அதே நேரத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா வீரர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. சவுதி அரேபியா செல்வ செழிப்பு மிக்க நாடு என்பதால், வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce Cars) கார்கள் பரிசாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

ரோல்ஸ் ராய்ஸ் காரானது  ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும்.   தற்போதைய நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரின் ஆரம்ப விலையே 8.99 கோடி ரூபாயாக உள்ளது.2022 பீபா கால்பந்து உலக கோப்பை  திருவிழா ஆரம்ப கட்டத்திலேயே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.பொறுத்திருந்து பார்ப்போம் எதிர்வரும் ஆட்டங்கள்  அட்டவணையில்  எவ்வாறு மாற்றத்ததை கொண்டு வரப்போகின்றது என்பதை.

 

அப்ரித் வஸீர்

ஏழைகளின் ஆப்பிளாக இருந்த தக்காளி!

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்பட்ட தக்காளியின் விலை சில மாதங்களுக்கு முன் இலங்கை ரூபாவின்படி 1300/=! ஏன் தக்காளியின் விலை இப்படி அடிக்கடி ஏறுகின்றது தடாலென சரிகின்றது? அது பற்றி பார்க்குமுன் தக்காளியின் பூர்வீகம் பற்றி கொஞ்சம் பார்க்கலாம். இன்றைய நம்முடைய உணவு பழக்கத்தில் சமையலில் பிரதான இடத்தை பிடிப்பது தக்காளி. தக்காளி இல்லாமல் சமையல் செய்யவேமுடியாது என்னும் நிலையில் இருக்கும் நம்முடைய சமுதாயத்திற்கு 16ஆம் நூற்றாண்டுவரையில் தக்காளி எனும் ஓன்று இருப்பதே தெரியாது. ஏனெனில் அது நம்முடைய கீழைத்தேய மண்சார்ந்த தாவரமல்ல. அதன் பிறப்பிடம் தென் அமேரிக்கா. தென் அமெரிக்க கண்டத்தின் பெரு, அர்ஜென்டினா பகுதிகளில்தான் முதன்முதலில் இது விளைந்ததாக கூறப்படுகின்றது.

காட்டுச்செடியாக இருந்த இந்த தாவரத்தினை கி.மு 500 ஆண்டுகளுக்கு முன்னமே அமெரிக்க பழங்குடிகள், மற்றும் மாயன் நாகரீகத்தினை சார்ந்தவர்கள் சாகுபடி செய்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென்னமெரிக்க மக்கள் தக்காளியினை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தியுள்ளனர். தக்காளியின் ஆங்கிலப்பெயரான “டொமேட்டோ” என்பதே தென்னமெரிக்க ஆஸ்டிக் பழங்குடியினரின் மொழியிலிருந்தே உருவானது.அவர்களது நொஹோட்டல் மொழியில் தக்காளியை “டோமேட்டல்” என அழைத்தமையே ஆங்கிலத்தில் மருவி டொமேட்டோ என உலகம் முழுவதும் பரவியுள்ளது.

1521 இல் மெக்ஸிக்கோவினை கைப்பற்றிய ஹெர்னன் கார்ட்ஸ் எனும் ஸ்பானிய தளபதியே தக்காளியை முதன்முதலில் ஐரோப்பா நோக்கி கொண்டுசென்றவர். அப்போதைய தக்காளி இப்போதுள்ளதைப்போன்று சிவப்பு நிறமுடையதாக இல்லாமல் மஞ்சள் நிறத்தில் பார்ப்பதற்கு ஆப்பிளை போல் இருந்தமையால் அதனை ” தங்க ஆப்பிள் ” என்று ஐரோப்பியர்கள் அழைத்தனர். எனினும் பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் தக்காளியை பார்த்தாலே அலறி அடித்து ஓட்டம்பிடித்தனர். காரணம் ஐரோப்பா முழுவதும் பிரபலமாகவிருந்த “பெல்லடோர்மா” எனும் விஷ செடியின் காய்களை தக்காளிப்பழங்கள் ஓத்திருந்தமையால் இதுவும் விஷத்தன்மை வாய்ந்ததாகத்தான் இருக்கும் எனக்கருதி பிரிட்டிஷார் தக்காளியினை தவிர்த்தனர்.

அதுமட்டுமல்லாது பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவொரு உணவும் முதன்முதலில் வேறு நாடுகளுக்கு பயணப்படும்போது அது அந்தந்த நாட்டிலுள்ள மேல்தட்டு மக்களால் மட்டுமே உண்ணப்படும் அளவிற்கு பெறுமதிவாய்ந்ததாக விலை அதிகமுடையதாக இருக்கும். அப்படி தக்காளியை உண்ட மேல்தட்டு மக்கள் பலர் திடீரென இறந்துபோனமையும் தக்காளி தள்ளிவைக்கப்பட்டமைக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஆனால் உண்மையில் அப்போதைய காலகட்டங்களில் மேல்தட்டு மக்கள் உணவு உண்ணும் தட்டுக்கள் மற்றும் கரண்டிகள் செய்யப்பட்டிருந்த உலோகம் தக்காளியின் அமிலத்துடன் இணைந்து புரிந்த ரசாயன மாற்றமே அவர்களது மரணங்களுக்கு உண்மையான காரணம்.

ஏனெனில் மரத்தாலான தட்டுக்களையும் கரண்டிகளையும் பயன்படுத்தி தக்காளியை உண்ட சாமான்ய மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் மேல்தட்டு மக்களால் தக்காளி நிராகரிக்கப்பட கீழ்த்தட்டு மக்கள் தம்முடைய உணவுத்தேவைக்கு தக்காளியை அதிகமாக பயன்படுத்திக்கொண்டனர். இதனாலேயே தக்காளியை “ஏழைகளின் ஆப்பிள்” என்று அழைக்கப்படும் சொல்லடை தோன்றியது. போர்துகீசியர்களால் தம்முடைய காலனித்துவ நாடுகளிலும் (16ஆம் நூற்றாண்டு) தக்காளி பயிரிடப்பட்டபோதே அது இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கும் பரவியது.

19 நூன்றாண்டில் இத்தாலிய உணவான பிட்சாவில் தக்காளி சேர்த்து செய்யப்பட்டால் இன்னும் சுவை அதிகரிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட தக்காளியின் தேவை மற்றும் அதன் கிராக்கி கிடுகிடுவென உயரத்தொடங்கியது. ஐரோப்பியர்களின் உணவுத்தேவைக்காக உலகம் முழுவதிலும் உள்ள அவர்களது காலனித்துவ நாடுகளில் தக்காளி சாகுபடி அதிகமாக்கப்பட்டது. “கெட்சப்” உருவாக்கப்பட்ட பின்னர் இதன் மவுசு மென்மேலும் அதிகமானது என்றால் மிகையில்லை.

பல நூற்றாண்டுகாலமாக சீனாவில் மீனிலிருந்து உருவாக்கப்பட்ட “கெட்ஸியாப்” எனும் ஒருவகை சோர்ஸ் உணவு ஐரோப்பாவிற்கு பயணப்பட்டபோது முள்ளங்கியைப் பயன்படுத்தி கெட்சப் எனும் பெயரில் தயாரிக்கப்பட்டது. 19 நூற்றாண்டின் மத்தியில் “ஹென்றி ஜே ஹெய்ன்ஸ்” என்பவரால் 1876 இல் தக்காளி கெட்சப் அறிமுகமானது. அதுவே இன்றுவரையில் கெட்சப் இண்டஸ்ட்ரியில் முடிசூடா மன்னனாக இருக்கக்கூடிய “ஹெய்ன்ஸ் கெட்சப்”! அமெரிக்காவில் மட்டுமே கிட்டத்தட்ட 98% மக்களால் கெட்சப் சரமாரியாக பயன்படுத்தப்படுகின்றதாம். இப்படி கெட்சப்பாக தக்காளி மாறத்தொடங்கியபின் அமெரிக்கர்களினதும் ஐரோப்பியர்களினதும் தக்காளித் தேவை இன்னும் அதிகமானது .

உண்மையில் தக்காளியை மரக்கறி வகையில் சேர்ப்பதா அல்லது பழவகையில் சேர்ப்பதா என்கிற விவாதம் இன்றுவரையில் உள்ளது. தாக்காளியை நாம் காய்கறியாக நோக்கினாலும் விஞ்ஞான ரீதியாக அது ஒரு பழம். அமெரிக்காவில் முன்பொருமுறை எல்லா பழங்களுக்கும் வரிவிலக்கு கொடுக்கப்பட தக்காளி சாகுபடியாளர்கள் தக்காளியும் ஒரு பழம்தான் அதற்கும் வரிவிலக்கு வேண்டுமென மனுத்தாக்கல் செய்யவே அமெரிக்க உச்சநீதிமன்றமோ எல்லோரும் அதிகப்படியாக நுகரும் தக்காளிக்கு வரிவிலக்களித்தால் அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதை உணர்ந்து தக்காளி ஒரு மரக்கறிதான் என தீர்ப்பளித்தது . இன்றும் சுமாராக பத்தாயிரம் வகைகளில் , மஞ்சள், சிவப்பு, பச்சை, கருப்பு என பற்பல நிறங்களில் தக்காளி இருக்கின்றது. இரண்டு வெவேறு ரக தக்காளிகளை ஒன்றிணைத்து ஒட்டுரகம் மூலமாக புதிய புதிய வையரா தக்காளிகள் உருவாக்கப்படுகின்றது.

இப்படித்தான் ஒரு காலத்தில் விஷமாக கருதப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட தக்காளி உலகம் முழுவதிலும் உள்ள சமையலறைகளின் தவிர்க்கவியலாத ஒன்றாகிப்போனது. தக்காளி இப்படி ஒரு காலகட்டத்தில் யாருக்குமே உதவாத ஒரு பொருளாக கருத்தப்பட்டதனால்தான் ஏதேனும் குழப்பங்களில் அல்லது மேடை நாடகங்களை பிடிக்கவில்லையாயின் குறிப்பிட்ட நபர்கள்மீது அழுகிய முட்டையுடன் தக்காளியை சேர்த்து அடிக்கும் பழக்கம் உருவானதாம். இதன் நீட்சியே இன்றுவரை ஸ்பெயினில் “லா டோமெட்டினோ” எனும் விழா வருடாவருடம் கொண்டாடப்படுகின்றதாம்.

ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்!

டிஜிட்டல் மயமாக்கலின் வேகம் மற்றும் அளவு அதிகமாக இருந்தபோதிலும் புற ஊதா கதிர்கள் மற்றும் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் காரணிகளின் வெளிப்பாடு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது. இது ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் உள் பிரச்சினைகளைத் தவிர பெரும்பாலும் ஹார்மோன்கள், மன அழுத்தம், அதிகப்படியான வியர்வை, சருமம் உருவாக்கம் போன்றவை ஏற்படுகின்றன. ஆண்களின் சருமம் தடிமனாகவும் எண்ணெயாகவும் மற்றும் பெண்களை விட அதிக வியர்வையை சுரக்கும் என்றாலும் அவை கடுமையான தோலால் ஆனவை அல்ல.

இரு பாலினங்களும் ஒரே பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது ஆண்களின் சீர்ப்படுத்தல் மற்றும் ஆரோக்கியத்தை சுற்றி மட்டும் ஏன் கட்டுக்கதைகள் உள்ளன? சரி, நேர்மையாக, நவீன வயதுடைய மனிதர்கள் தங்கள் முந்தைய தலைமுறையைப் போலல்லாமல், அவர்களின் தோற்றம், சுகாதாரம் மற்றும் சீர்ப்படுத்தல் குறித்து விழிப்புணர்வுடனும் விழிப்புடனும் உள்ளனர். ஆண்களின் அழகு மற்றும் ஆரோக்கியத் தேவைகளுக்கு உதவவும், சருமத்தை ஈரப்பதமாகவும், பொலிவாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும் சிறந்த குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

  • சுத்தம் செய்வது முதன்மையானது

நீண்ட நேரத்திற்கு பிறகு உங்கள் முகத்தையும் உடலையும் சுத்தப்படுத்துவது அசுத்தங்கள் மற்றும் அழுக்குகளை அகற்ற மிகவும் அவசியம். நீங்கள் லேசான பால் அல்லது நுரைக்கும் க்ளென்சரைப் பயன்படுத்தலாம். அதை உங்கள் தோலில் மெதுவாக தடவி, தண்ணீரில் கழுவலாம். மேலும், உங்கள் சருமத்தில் வாரத்திற்கு 2-3 முறை தோல் உரிவது அதிசயங்களைச் செய்யும். எலுமிச்சை மற்றும் யூகலிப்டஸ் போன்ற இயற்கை பொருட்களுடன் ஒரு ஸ்க்ரப் பயன்படுத்தவும். இது உங்கள் துளைகளை சுத்தம் செய்து மென்மையான சருமத்தை உங்களுக்கு வழங்கும்.

  • சீரம் (Serum) பயன்படுத்துங்கள்

முகத்தை சுத்தப்படுத்திய பிறகு, உங்கள் தோலின் துளைகள் திறந்திருக்கும் மற்றும் அதிகபட்ச ஊட்டச்சத்துக்களை உட்கொள்ளக் கூடியதாக இருக்கும். Anti Oxidantகளுடனான Vitamin C serum பயன்படுத்துவது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கி தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும். மேலும், இது Cologen அதிகரிக்கவும், உங்கள் சருமத்தின் அமைப்பை மேம்படுத்தவும், ஆரோக்கியமாகவும் அழகாகவும் தோற்றமளிக்க பொருத்தமானதாக இருக்கும்.

  • Sunscreen உபயோகிக்கவும்

புற ஊதா கதிர்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுக்கு எதிரான முதல் பாதுகாப்பு SPF 30 க்கு மேல் ஒரு நல்ல sunscreen ஆகும். எப்போதும் உங்கள் முகம், கழுத்து, கைகள் மற்றும் உதடுகளில் sunscreenஐ முழுமையாகப் பயன்படுத்துங்கள், ஏனெனில் தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்கள் வெயில், நிறமாற்றம் மற்றும் முன்கூட்டிய வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் பிறகு அல்லது முகத்தை கழுவிய பின் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.

  • நல்ல Moisturizer மூலம் உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருங்கள்

கோடை மற்றும் மழைக்காலங்களில் ஈரப்பதமாக்குவது அவசியமில்லை என்பது ஒரு பொதுவான கட்டுக்கதை. உண்மையில், பெரும்பாலான மக்கள் தங்கள் முகத்தை மீண்டும் மீண்டும் கழுவுவதன் மூலம் ஈரப்பதம் மற்றும் அதிகப்படியான வியர்வையை எதிர்த்துப் போராட முயற்சிக்கிறார்கள். சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதத்தைத் தக்கவைப்பது கடினமாக்குகிறது. உங்கள் சரும பராமரிப்பில் வழக்கமான, பாராபென் மற்றும் எஸ்எல்எஸ் இலவச மாய்ஸ்சரைசரைச் சேர்ப்பது சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை மீட்டெடுக்க உதவும். கூடுதலாக, சீரம் பிறகு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதால், சீரம் நல்லதாக இருக்கும். இதனால் சருமம் அனைத்து சத்துக்களையும் உட்கொள்ள எளிதாகிறது.

  • தோலின் தன்மைக்கு ஏற்ற தயாரிப்புகளை தேர்ந்தெடுக்கவும்

உங்கள் சருமத்திற்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். உங்கள் சருமம் வறண்ட மற்றும் உணர்திறன் உடையதாக இருந்தாலும் அல்லது முகப்பரு பாதிப்புக்குள்ளானாலும், அனைத்து தோல் வகைகளுக்கும் வெவ்வேறு தேவைகள் உள்ளன. முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமம் உள்ளவர்கள் வறண்ட மற்றும் பளபளப்பான சருமத்திற்கு தயாரிப்புகளை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இது நல்லதை விட அதிக சேதத்தை ஏற்படுத்தும். எப்போதும் 100% இயற்கையான அத்தியாவசிய எண்ணெய்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் ரசாயனம் இல்லாத தயாரிப்புகளைத் தேர்வு செய்யவும்.

அடுத்ததாக வீட்டிலேயே Facial செய்வது எப்படி என்று பார்க்கலாம். வேலைப்பளுமிக்க உங்களுக்கு இது முக்கியமானதாக இருக்கலாம்.

  • இயற்கை முறையில் வீட்டிலேயே பேஷியல் செய்வது எப்படி?

குறிப்பிட்டதொரு கால இடைவெளியில் தொடர்ந்து Facial செய்வது சிறந்த பெறுபேறுகளை தரும்.

Facial செய்யும்போது சருமத்தின் இறந்த செல்கள் நீக்கப்பட்டு, புத்துணர்வு கிடைக்கும்.

Facial இன் முதல் படி, cleansing ஆகும். ஒரு கோப்பையில் காய்ச்சாத சுத்தமான பாலை எடுத்துக்கொண்டு, அதில் பஞ்சை நனைத்து, முகத்தில் வட்டவடிவில் மசாஜ் செய்வது போன்று செய்யவும். இப்படி இரண்டு, மூன்று முறை முகம் முழுக்க மசாஜ் செய்தபடி அழுக்கை துடைத்து எடுக்கவும். தினமும் கூட பால் கொண்டு இப்படி க்ளென்ஸ் செய்யலாம். பாலில் Lactic அமிலம் இருப்பதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும்.

Cleansing செய்து நான்கு நிமிடங்களுக்குப் பிறகு Cotton துணியைக் கொண்டு முகத்தை ஒற்றி எடுக்கவும். பின் scrub செய்யவேண்டும். அதற்கு, சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றை எடுத்துக்கொள்ளவும். 2 டீஸ்பூன்  சர்க்கரையுடன் 2, 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் apply செய்த பின், மென்மையாக தேய்த்து மசாஜ் செய்வது போல scrub செய்யவும்.

#கவனிக்கவும்:… சர்க்கரை சருமத்தை பதம் பார்த்துவிடாமல் மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். கண்ணின் அடிப்பகுதியில் மசாஜ் செய்ய வேண்டாம். கழுத்துக்கும் சேர்த்து scrub செய்யலாம். Scrub செய்த பின்னர், மேலிருந்து கீழ்நோக்கித் துடைக்கவும்.

நன்றாகப் பழுத்த பப்பாளியை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பப்பாளியை முகம் முழுவதும், கண்ணுக்கு அடியில், கழுத்தில் என வட்டவடியில் மசாஜ் செய்வது போல apply செய்யவும். பின் கழுத்துப் பகுதியில் கீழிருந்து மேல்நோக்கி 20 முறை மசாஜ் செய்யவும். தாடைப் பகுதியில் 10 முதல் 20 முறை வரை மேல்நோக்கி மசாஜ் செய்யவும். கன்னம் பகுதியில் காதுவரை மசாஜ் செய்யவும். பின் மூக்கில் இரண்டு புறமும் விரல்களை வைத்து மசாஜ் செய்யவும். கண் பகுதிக்கு வட்ட வடிவில் நடுவிரல் கொண்டு மசாஜ் செய்யவும். பின், கண்களின் பக்கவாட்டுப் பகுதியான பொட்டுப் பகுதியில் விரல்களை வைத்து எடுக்கவும்.

அவ்வளவு தான்! வீட்டிலேயே facial முடிந்து விட்டது.

உங்கள் சருமம் பற்றி கவனம் செலுத்துங்கள் வாழ்க்கையை இரசனையுடன் கொண்டு செல்லுங்கள்!

-மிஹார்

index.php