Blog Page 17

தமிழ் சீரியல் மொக்கைகள்!

ஒரே கதையை பல கோணங்களில் வேறு வேறு பெயர்களில், எவ்வளவு நீளமாக கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு நீளமாக கொண்டு செல்லும் பெருமை நம் தமிழ் டெலி ட்ராமாக்களையே சேரும். இதற்கெல்லாம் காரணம் யாரு? மொக்கையாக இருந்தாலும் வாயை பிளந்து கொண்டு டிவிக்குள் கண்களை வைத்து பார்க்கும் நம் வீட்டார் தான். சிலர் இந்த டெலி ட்ராமக்களை பார்ப்பதற்காகவே அலார்ம் வைப்பதும் உண்டு. நம் விவேக் சொல்வது போல் “இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்குர வரைக்கும் யாராலயும் நம் டெலி ட்ராமாக்களை அசைக்கவே முடியாது!”. சரி ட்ராமாவை இழுத்து இழுத்து எடுப்பதை கூட பல்லைக் கடித்து சகித்துக் கொள்ளலாம் ஆனால் அந்த கதையில் மன்னிக்கவும் தொடர் கதையில்… கலாசாரம் என்ற பெயரில் நம் டிரெக்டரும் ஸ்க்ரிப் ரைட்டரும் சேர்ந்து பண்ற அலப்பறைகள் இருக்கே… ஐயய்யயோ… தாங்க முடியலடா சாமி. “அப்டி என்ன தான் பண்ணி இருக்காங்கனு கொஞ்சம் அலசி பார்த்தால்… என்ன தான் பண்ணல?” என்றவாறு இருக்கிறது இவர்களது போலியான கலாசார அலப்பறைகள். அவ்வாறான சில டெலி ட்ராமாக்களும் அதன் அலப்பறைகளும்,

தென்றல் வந்து என்னை தொடும் 

பெண் விடுதலை, பெண் உரிமை என்றெல்லாம் எவன் குரல் கொடுத்தால் நமக்கு என்ன? நமக்கு கன்டன்ட் தான் முக்கியம் என சுற்றி திரியும் டிரெக்டர்களில் இவரும் ஒருவராக இருப்பார் போல. ஹீரோயின் அமெரிக்காக்கு சென்று படித்தவராம் ஆனால் கட்டாயத்தின் பெயரில் கட்டப்பட்ட தாலிக்காக அடாவடியான ரௌடியின் பின் சுற்றி சுற்றி வருவாராம். படித்த பெண்ணாக இருந்தால் அந்த கல்யாணத்திற்கு எதிராக கேஸ் போட்டிருக்க வேண்டும். அதை விடுத்து பாரம்பரியம் என்ற பெயரில் முட்டாள் தனமான செயல்களுக்கு ஜால்ரா போடுபவராக இருக்கிறார் நம் படித்த முட்டளான ஹீரோயின். ஹீரோயினை என்ன சொல்லி என்ன மாறப் போகிறது? எல்லாம் இந்த கதையை எழுதியவரை சொல்ல வேண்டும்.

பாக்கியலட்சுமி 

இந்த சீரியல் குடும்பத் தலைவிகளின் பெருமை சொல்லும் சீரியலாம். நான் சொல்லவில்லை இந்த கதையின் ப்ரோமோவில் சொன்னார்கள். எனக்கு என்னவோ ஏற்கனவே புருஷனுக்கு அடிமையாக வாழும் இல்லத்தரசிகளை மேலும் அடிமையாக்குவது போல்தான் தெரிகிறது.

” பாக்கியா பாக்கியா பாக்கியா

I don’t like it

I avoid

But

பாக்கியா Likes me

I can’t avoid” என்பது தான் பாக்கியத்தின் புருஷனின் முழுநேர மைன்ட் வாய்ஸாக இருக்கும். இதில் சிரிப்பு என்னவென்றால் இவருக்கு அவருடைய ex-lover மீது ஒரு கண்ணு வேறு. சரி பாக்கியத்தை தான் பிடிக்கவில்லையே விவாகரத்து வாங்கலாமே? அதுவும் இல்லை. எதுக்கு எடுத்தாலும் எடுத்து எரிந்து விழுவதும் முடக்குவதும்தான் புருஷனின் வேலை. இதில் வெட்கம் கெட்ட செய்தி என்னவென்றால் இளைய மகனுக்கு அப்பனின் ஆட்டம் தெரியும் ஆனாலும் பொய்க்கு மிரட்டி விட்டு இருப்பான். பாக்கியத்தின் மாமனாருக்கும் தெரிய வருகிறது ஆனால் சீரியல் இழுத்து ஓட்டனும் அல்லவா அதனால் அவறை தள்ளி விட்டு மயக்கமாகி விடுவார். அந்த கிழவன் அன்றைக்கே மகனையும் அவன் லவ்வரையும் சேர்த்து வைத்திருந்தால் இவ்வளவு பிரச்சனை இல்லை.

மௌனராகம் 

விஜய் டிவியில் ஒரு சீரியலை எடுத்து விட்டு அப்படியே விட்டு விட மாட்டார்கள். பார்ட் 1, பார்ட் 2 என எடுக்க தொடங்கி விடுவார்கள். இந்த மௌனராகமும் அப்படி தான். என்ன பார்ட் 1 இல் இருந்த ஹீரோயின் தந்தையை தேடுவார் பார்ட் 2 இல் வளர்ந்து தந்தையுடன் சேர்வாரா இல்லையா என இழுக்கிறார்கள்.  அடுத்து பார்ட் 3 என எடுத்து தாத்தாவை தேடும் பேத்திகளை களம் இறக்கினாலும் ஆச்சர்யம் இல்லை. இது என்ன வகை ராகம் என்றே புரியவில்லை. இப்படி இழுப்பட்டுக் கொண்டே போகிறது.

பாரதி கண்ணம்மா 

“அடஅடடா…” என ஆரம்பத்தில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பாரதி கண்ணம்மா சீரியல் இப்போது “அடச்சே போங்கடா…” என சலிப்பினை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அழகை வைத்து மாமியாரும் மருமகளும் சேருவார்களா? கண்ணம்மாவின் மனது புரியுமா? என சீரியலை இழுக்க ஆரம்பித்தவர்களுக்கு “எவ்வளவு காலம் தான் இப்டியே இழுக்றது புருஷன் பொண்டாட்டியா பிரிச்சுட்டா?” என ஐடியா வந்திருக்கும் போல உடனே பிரித்து விட்டார்கள். பாரதி டாக்டராம் ஆனால் அவனுக்கு ஆண்மை தன்மை இருக்கிறதா இல்லையா என்பது அவனுக்கே தெரியாதாம். பொண்டாட்டி மீது சந்தேகம் வர வைத்து பிரித்து விட்டார்கள். அதன் பின் மாமியார் வீட்டை விட்டு பையோடு புறப்பட்ட கண்ணம்மா நடந்தார்… நடந்தார்… கால் வலித்தும் தரை தேய்ந்தும் நடந்தார்… கண்ணம்மாவை நடக்க வைத்தே பல நாட்கள் ஓட்டி விட்டார்கள். அதன் பின் கண்ணம்மாவிற்கு பாரதியே பிரசவம் பார்க்கிறான் ஆனால் இன்னொரு குழந்தை இருப்பது டாக்டருக்கே தெரியாதாம். ஒரு வேலை பாரதி பிட் அடிச்சு பாஸ் ஆன டாக்டரா இருப்பாரோ? அது சரி கண்ணம்மாவிற்கே இரண்டு பிள்ளைகளை பிரசவித்தது தெரியாதாமே..! என்னத்த சொல்ல!?

சரி குழந்தை பிறந்தவுடன் டி .என் .ஏ டெஸ்ட் எடுக்கலாமே. நம்ம டாக்டர் தான் பிட் அடிச்ச டாக்டராச்சே! அதால அவர் “நோ மீன்ஸ் நோ” என்று சுற்றிக் கொண்டிருப்பார். இத்தனைக்கும் காரணம் வில்லி. பாரதியின் பெஸ்ட்டு ப்ரெண்டாம். எல்லா வீட்டிலும் போல் பாரதியின் ப்ரெண்ட்டு என வீட்டாருக்கு தெரியும் ஆனால் பாரதிக்கு தெரியாது. அவளும் டாக்டர் ஆனால் பைத்தியமாக சுத்திக் கொண்டிருப்பாள். பாரதி மீது. “பைத்தியமா இவனுங்க!?” என தலையினை பிய்த்துக் கொள்ள தோன்றும். முதலில் மாமியாரும் மருமகளும் சேர்வார்களா? என தொடங்கி அதன் பின் பாரதியும் கண்ணம்மாவும் சேர்வார்களா? என நீண்டு இப்போது தந்தையும் பிள்ளையும் சேர்வார்களா என இழுபட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் யாரெல்லாம் சேர்க்கலாமா வேணாமா என்கிற திட்டத்துடன் டிரெக்டர் சுத்தி கொண்டிருக்கிறாரோ…!?

ஈரமான ரோஜாவே 02

இந்த சீரியலில் கலாசாரம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட சீன்களை நினைத்து பார்த்தாலே சிரிப்பு தான் வரும். சீன் அறுந்த பழசு. மணமகள் காணவில்லை. அந்த பெண்ணை தேடுவோம் என்ற அறிவில்லை. உடனே மணமகளின் தங்கை (ஹீரோயின்) காலில் விழுந்து அவளை கட்டாய திருமணம் பண்ணி விட்டனர் கேட்டால் குடும்ப கௌரவமாம். “என்ன தான்டா பிரச்சன உங்களுக்கு? பூமர் பண்ணி கொண்டு இருக்கிங்க? பிடிக்காதவன் என்றாலும் முகூர்த்த நேரத்திற்குள்ள கல்யாணம் பண்ணி வைக்றது தான் குடும்ப கௌரவமா?” என முற்போக்கு சிந்தனை உடையவர்களை கடுப்பாக்குகின்ற வகையிலான வசனங்களை ஹீரோயின் தந்தை பேசுவார். சரியாக தாலி கட்டும் போது ஹீரோ காணமல் போன மணமகளுடன் வருவார். அப்போதாவது தாலியை கழற்றி மாற்றி திருமணம் செய்து வைத்திருக்கலாம் ஆனால் “நோ… நோ… வாய்ப்பில்ல ராஜா!” என்றவாறு ஹீரோயின் பூமர் பாட்டி வசனங்கள் டெலிவரி செய்வார். அது என்னவோ தாலி கட்டினால் அந்த பெண் அடிமை மாதிரியும் வேறு வழியே இல்லை என்ற மாதிரியும் பேசுவது. இந்த மாதிரியாக பிடிக்காதவர்கள் எனினும் தாலி கட்டினால் வாழதான் வேண்டும் எனவும் குடும்ப கௌரவம் எனவும் கட்டாயப்படுத்துவதால் தான் பாக்கியலட்சுமியின் புருஷன் போல் முன்னால் காதலர்களோடு சேர பல முயற்சிக்கிறார்கள்.

இது போதாதற்கு காணாமல் போன மணமகளுக்கும் ஹீரோக்கும் கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள். ஒரு தவறை சரி செய்ய இன்னொரு தவறு. இந்த மாதிரி சீரியல் எடுக்குற வரைக்கும் சமூகத்தை மாற்றவே முடியாது.

ராஜா ராணி 02

எல்லா சீரியலிலும் ப்ர்ஸ்ட் நைட் சீனுக்கான எல்லா அலங்காரமும் செய்து விடுவார்கள் ஆனால் ஹீரோவும் ஹீரோயினும் தனித் தனியே தூங்குவார்கள். “இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடோன்லயே இருக்கலாமே!?” என உங்களுக்கு இருக்கும் அதே டவுட் தான் எனக்கும். இப்படி இவர்கள் தனித் தனியே தூங்க காரணம் என்னவென ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் லட்சியம் நிறைவேற வேண்டுமாம் அதனால் குழந்தை ஏதும் வந்து விட்டால் லட்சியம் தடை ஆகிவிடுமாம். என்ன ஒரு அழகான காரணம். குழந்தை வேண்டாம் என்றால் condom பயன்படுத்தலாமே! எதற்கு இப்படி சீன் க்ரியேட் பண்ண வேண்டும். அது சரி தமிழ் சீரியல் தானே. அப்படி எல்லாம் பேச மாட்டார்கள். அது தவறு. அதெல்லாம் பெட் ரூமோடு இருக்க வேண்டிய பேச்சு. அது தான் கலாசாரம். அவர்களும் அவர்களது போலியான சாயங்களும்.

தமிழும் சரஸ்வதியும் 

இதில் ஹீரோயின் எட்டு வருடமாக +2 எழுதுவார். அப்போது அவளுடைய தந்தை எவ்வளவு செலவு செய்திருப்பார். எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்திருப்பார். இத்தனைக்கும் அவளுடைய அப்பா ஒரு ஆசிரியர். வருடம் வருடம் ரிசல்ட்ஸ் சொல்லியே அவருக்கு வெறுத்துப் போயிருக்கும் ஆனால் அப்போது எல்லாம் பாஸ் ஆகாத ஹீரோயின் ஒன்பதாவது அடெம்பில் பாஸ் ஆகுகிறார். அதற்கு காரணம் புருஷனுக்கு அவமானமாம். அதனால் தானாம். அப்படியென்றால் எட்டு வருடமாக ஹீரோயினின் அப்பா எதிர்கொண்டது…!? சரி அப்படியாவது புருஷனுக்காக பாஸ் ஆகினார் என்று பெருமை கொள்ளலாம்.

இதே சீரியலில் வில்லிக்கும் ஹீரோயினுக்கும் இன்னொரு சபதம் வருகிறது. அதை கேட்டாலே சிரிப்பு தான் வரும். ஹீரோயின் கிட்சனுக்குள் போவாரா இல்லையா என்பதுதான் அந்த சபதம். அவரவர் பெண்களை அடுப்பங்கறையிலிருந்து வெளிக் கொண்டரவும் கரண்டி பிடிக்கும் கையில் பேனையினை கொடுக்கவும் படாத பாடுபட்டால், இவர்கள் சீரியல் என்ற பெயரில் கிட்சனுக்குள் போவதே பெருமை என சீன் வைத்து விடுகிறார்கள்.

எதிர் நீச்சல்

கல்யாணம் என்றாலே பெரும் கொண்டாட்டம் தான். அதற்காக மணபெண் ஆடுவதும் அவளுடைய தோழிகள் சேர்ந்து ஆடுவதும் வழக்கம். அவ்வாறாக ஆடிக் கொண்டு வருபவர்களை பார்த்து நம்முடைய பூமருக்கெல்லாம் பூமராக விளங்கும் அன்கிள் கலாசாரம் என்ற பெயரில் ஒரு லெக்சர் எடுப்பார். அத்தோடு நிறுத்த மாட்டார். போட்டோ சூட் செய்பவர்களையும் திட்டி தீர்ப்பார். நம் முற்போக்கு சிந்தனையுடைய இளைஞர்களை கொந்தளிக்க வைப்பதாக அவருடைய பேச்சு இருக்கும்.

அவரை பொறுத்தவரை கல்யாணம் என்றால் இலவு வீடு போல் அமைதியாக வந்து அமைதியாக தாலி கட்டி… அட இதை மறந்து விட்டேன். அந்த தாலி கட்டும் போது வீடியோ பண்ணுவதை கூட கலாசார சீர்கேடு என சொல்வார் பாருங்கள். எங்க போயிட்டு இதெல்லாம் சொல்ல?  அந்த அன்கிள் அவ்வளவு பேசும் போது எல்லாரையும் அமைதியாக வைத்திருப்பது போன்ற டிரெக்டரின் ஸ்க்ரிப்ட், ஏதோ அவர் சொல்வதெல்லாம் சரி என திணிப்பது போல் அமைந்துள்ளது. உண்மையில் இந்த மாதிரியான பூமர் கரெக்டர்கள் நடுவில் ஹீரோயின் எப்படி வாழப் போகிறார் என்பது எதிர் நீச்சல் போடுவதற்கு சமம் தான்.

ரோஜா

நவீன பிளாஸ்திக் சர்ஜரி எல்லாம் தோற்று போகும் அளவிற்கு இந்த சீரியலில் ஒரு சீன் இருக்கும். அதாவது ரோஜா போன்றே இன்னொரு விபத்துக்குள்ளான பெண்ணை மாற்றுவது. அதற்காக ஒரு மாஸ்க், அதை மாஸ்க் என்றும் சொல்ல முடியாது. ஏதோ சிலை போன்று அசைக்க முடியாத மூலப்பொருளால் ஆன முகம் ஒன்றை பொருத்துவது போல காண்பித்து அதை ரோஜா போன்றே காட்டுவார்கள் பாருங்கள்… “ஏன்டா உங்களுக்கு மனசாட்சியே இல்லையாடா!?” என பொங்கி எழ வைக்கும்.

அந்த காட்சி மட்டுமல்ல ரோஜா நாடகத்தின் முழு ஸ்க்ரிப்ட்டுமே க்ரின்ச் தான். “அர்ஜூன் சார்! அர்ஜூன் சார்!” என ரோஜா கூப்பிடுவதை கேட்டு கேட்டு காதில் இருந்து இரத்தமே வந்து விட்டது. அக்ரிமன்ட் கல்யாணமாம் ஆனால் அது லவ்வாக மாறுதாம். பேசாம நம்ம 90’s கிட்சும் இப்டி ஏதும் ட்ரை பண்ணுங்கப்பா! ரோஜாவை விட இதில் வந்த வில்லி அதை விட கிரின்ச். பாவம் எப்ப எங்க தலையில் அடி பட்டதோ, தனியாகவே டயலோக் டெலிவரி பண்ணி கொண்டு சுற்றினாள்.

இவர்கள் இருவரை விட கிரின்சுக்கெல்லாம் கிரின்ச் அந்த கடவுள்தான். ஆமாம்! ஒரு முறை வில்லியின் சதியால் பாழாக்கப்பட்ட பலகாரங்களுக்கு பதிலாக புதிய பலகாரங்களை சுடும் போது கடவுளும் வந்து உதவுவது போல் காட்சி இருக்கும். கஷ்டபட்டு அடுப்பில் வேகுவதை விட சுடக்கு போட்டு பலகாரத்தை வர வைத்திருக்கலாமே! பாவம் ஐடியா இல்லாத கடவுள்.

செம்பருத்தி

விஜய் டிவிக்கு சின்னய்யா என்றால் Zee தமிழுக்கு ஒரு பெரியய்யா. அட எல்லாம் ஒரே ஸ்க்ரிப்ட்தான் ஆங்காங்க சின்ன சின்ன கரெக்ஷன் பண்ணிட்டு டைட்டில் மாற்றிக் கொள்ள வேண்டியது. விஜய் டிவியின் ஸ்க்ரிப்ட்டில் பார்ட் 1 பார்ட் 2 என ஹிந்தி நாடகங்களை கொபி அடித்தாவது ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணி விடுவார்கள். ஆனால் Zee தமிழ் அப்படி கிடையாது. கதாபாத்திரங்களை நாம் சாகும் வரை எங்களோடு ட்ராவல் பண்ண வைக்கும் லட்சியவாதிகள். அதற்கு சான்று இந்த செம்பருத்தி. இதையும் பார்த்து விட்டு உணர்ச்சி பூர்வமாக பொங்கி எழுபவர்களும் உண்டு. அவர்களை பார்த்தால் தான் பரிதாபமாக இருக்கிறது.

யாரடி நீ மோகினி

எப்போதும் ஒரு ஆணிற்காக இரு பெண்கள் முட்டி மோதி கொள்வதை ஸ்க்ரிப்ட்டாக செய்வது ஒரு வழக்கம். இத்தனைக்கு ஹீரோ செம்மையா இருப்பாரானு கேட்டால், அவ்வளவு எல்லாம் சொல்றதுக்கு இல்லை. நல்லவரானு கேட்டால், ஆமா நல்லவர் தான். சிங்கிளானு கேட்டால், சிங்கிள் தான் ஆனால் ஒரு குழந்தைக்கு அப்பா! அவருக்காக இரண்டு பெண்கள் தன்னை தானே அழித்துக் கொள்ளும் அளவிற்கு அடித்துக் கொள்வார்கள். எனக்கு புரியல! ஏன் இதுவே கல்யாணம் ஆகி ஒரு பிள்ளையோடு விதவை ஆன பெண்ணிற்காக இரண்டு ஆண்கள் அடித்துக் கொள்வது போல் ஸ்க்ரிப்ட் எழுதலாமே! அது எப்டி? அப்டி எழுதினால் நம்முடைய பூமர்கள் பார்க்காது என்ற பயம். இதில் வரும் பேய் கூட தன் கணவனுக்கு மாமா வேலை பார்க்கும் கண்கொள்ளா காட்சி இருக்கே! அட அட என்ன ஒரு கேவலம்!

இதில் உள்ள வில்லி திட்டமிட்டு தானே செத்துப் போய் மண்ணுக்குள் புதைத்த பிறகும் உயிரோடு தீரும்பி வருவது போன்ற காட்சி எல்லாம் கூட இருக்கும். அதிலும் முத்து மாமா முத்து மாமா என்று பின்னாலேயே பின்னாலேயே சுற்றும் ஹீரோயின் அவளுக்கு போட்டியாக முத்து மாமா என்று அழையும் வில்லி என்று ஒரே ஜாலிதான். முத்து மாமாவை இமோஷனல் பிளக்மெயில் செய்யும் வில்லி அதுக்கு உண்மையாக பயப்படும் ஹீரோ இந்த சீரியல் முழுக்க க்ரின்ச்சுதான்.

இது போதாதென்று சாமி ஆடுதல், சாமிக்கு நேத்தி கடன் செய்தல், சாமி சாமி சாமியோ சாமி! அதற்கு உசுப்பேற்றும் விதமாக பில்லி, சூனியம், செய்வினை மற்றும் கட்டுக்கள் வேறு! ஆயிரம் பகுத்தறிவாளர்கள் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்தவே முடியாதுடா யப்பா!

சுந்தரி

விஜய் டிவிக்கு ஒரு கண்ணம்மா என்றால் நம்ம சன் டிவிக்கு ஒரு சுந்தரி. கறுப்பு என்ற நிறத்தை சமூகத்திற்கு கீழ் தரப்பட்ட நிறமாக காட்டக் கூடாது என்ற லட்சியத்தோடு தான் சீரியல் எடுக்க வந்திருப்பார்கள் ஆனால் அதன் பின் மற்றைய சீரியல் ரைட்டர்களின் காற்று பட்டு விடும் போலிருக்கிறது. ஏனெனில் போக போக ஸ்க்ரிப்ட்டில் பல பூமர்களும் க்ரின்ச்சுகளும் வந்து சேர்ந்து விடும்.

தனது கணவனுக்கு இரண்டாவது திருமணமானது தெரிந்தவுடன் சுந்தரி விவாகரத்து செய்திருக்க வேண்டும். அல்லது ஊரை கூட்டி முகத்திரையை கிழிக்க வேண்டும். இரண்டுமே இல்லாமல் டயலோக் டெலிவரி பண்ணி கொண்டிருப்பாள். தனக்கு சுந்தரியை பிடிக்கவில்லை என்றால் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்க வேண்டும். அதை ஹீரோ செய்ய மாட்டார். இதில் என்ன பெரிய ட்விஸ்ட் என்றால் சுந்தரிக்கும் கார்த்திக்கும் கல்யாணமான விடயம் அனுவிற்கு தெரியாதாம். ஏன்டா! எந்த காலத்துல இருக்கிங்க? இந்த சீரியலில் பொருத்தமாக இருப்பது ஹீரோவின் பெயர் மட்டும்தான். டிக் டாக்கின் திவ்யா கார்த்திக்கின் பின் இந்த பெயர் சரியாக பொருந்துவது சுந்தரியின் கார்த்திக்கு தான்!

முதலில் இந்த தமிழ் சீரியல் டிரெக்டர்களையும் ஸ்க்ரிப்ட் ரைட்டர்களையும் கூப்பிட்டு ஒரு கவுன்ஸ்லிங் கொடுக்க வேண்டும். பெண் உரிமை பற்றியும் கலாசாரம் பற்றியும் சமூகத்திற்கு தேவையான விடயங்கள் பற்றியும் சமூகத்திற்கு தேவையற்றவை பற்றியும் அறிவு புகட்ட வேண்டும். சீரியல் எடுக்க வேண்டும் என்பதற்காக சென்டிமென்ட் என்ற பெயரில் பழைய முட்டாள் தனமான வழக்கங்களையும் நம்பிக்கையையும் சமூகத்தில் திணித்து சீர்குலைக்காமல், முற்போக்கான சீரியல்களை எடுக்க வேண்டியதன் அவசியம் பற்றி அறிவுறுத்த வேண்டும். எந்த படைப்பும் நல்ல மாற்றத்தையும் புதிய சிந்தனையையும் உருவாக்க வேண்டுமே தவிர மூடதனங்களை வளர வைப்பதாகவும் ஊக்குவிப்பதாகவும் இருக்க கூடாது. நீங்கள் பார்த்த சீரியலின் மொக்க சீன்களை எங்களுடன் கமன்ட் பொக்ஸில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

மனிதி

‘சிலோன்கார்’ – Nadi Review

அறிவரசன் எழுதி-இசையமைத்து- பாடி- இயக்கி- அறிவினால் புதிதாக தொடங்கப்பட்ட‘ அம்பஸ்ஸ’ இசைக்குழுவின் இசையுடன் மே 18 அன்று வெளிவந்து சிறந்த வரவேற்பை பெற்றிருந்த பாடல் ‘ சிலோன்கார்’.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியையும் போராட்டங்களையும் மையப்படுத்தி, இலங்கைக்கு பிரத்தியேகமான பைலா இசைதொனியில் இப்பாடல் வெளிவந்திருந்தது.

சாதிய அடக்குமுறை, பெண்விடுதலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலை போன்றவற்றை வலியுறுத்தி, பாடல்களை இயக்கிக் கொண்டிருக்கும் இசைப் புரட்சியாளர் அறிவு இப்பாடலிலும் இலங்கையின் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தின் நிலை, போராட வேண்டியதன் அவசியம் போன்றவற்றுடன் தற்போதய அரசியலின் கறுப்புப் பக்கத்தையும் விமர்சித்து வரிகளை எழுதி இருந்தார்.

கிறிஸ் ஜேசன்,கெவின் ஜேசன், சத்தியன் மூவரும் கிட்டார் இசைக்க, சுகுமாரன் இசை ஒழுங்கமைப்பு செய்திருந்த சிலோன்கார்  பாடல் காட்சியை கார்த்திக் ராஜா கருப்புசாமி ஒளித்தொகுப்பு செய்திருந்தார்.

பாடல் வரிகளூடாக பெரும்புரட்சி செய்யவேண்டும் என பணித்தால். ‘அவ்ளோ தானா’ என்று இருமாப்போடு எழுத்தில் அனல் கரக்கும் அறிவு, இந்தப்பாடலிலும் எழுத்தின் மூலம் அனல் தெறிக்க விட்டிருக்கிறார்.

தவிர, இசை வடிவமைப்பிற்காய் சுகுமாரனுக்கு ஒரு பெரிய கைதட்டல்.கூடவே ஒலித் தயாரிப்பாளர் ஹரியையும் பாராட்ட வேண்டியத் தேவை இருக்கின்றது.

 அம்பஸ்ஸ இசைக்குழுவின் தொடர் வெளியீடுகளில் இன்னுமொரு புரட்சிப்பாடலாய் அமைந்திருக்கும் சிலோங்காருக்கு பைலா பாணி அவ்வளவாய் கைகொடுக்க வில்லையோ என்று தோன்றாமலில்லை. பாடலில் வரிகளின் சூட்டை இன்னும் ஒருப் படி இசை எடுத்து சென்றிருந்தால் மென்மேலும் அற்புதமான ஒரு பாடல் நமக்கு வாய்த்திருக்கும்.

ஹஜன் அன்புநாதன்

“நாம வாழணுமா சாகணுமா சொல்லுங்க!” – நாடி Review

சமீபத்தில் YouTube தளத்தில் வெளியான பாடல் தான் “நாம வாழணுமா சாகணுமா சொல்லுங்க!” என்ற பாடலாகும். இது வெறும் பாடலின் தலைப்பல்ல. நம் நாட்டு மக்களின் தற்போதைய கேள்வி. அனைவர் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கும் பெரும் கேள்வி.

சாதனை தமிழா தயாரிப்பில் வெளியான இந்த பாடலிற்கான வரிகளை இலங்கை நாட்டை சேர்ந்த கவிஞரான Ashmin எழுதியுள்ளார். நம் நாட்டினை சேர்ந்த ஒருவரே எழுதியமையாலோ என்னவோ பாடலின் வரிகள் கண்களில் நீர்துளிகளை வர வைக்கும் அளவிற்கு ஆழமாக உள்ளன. இந்த பாடலானது Shameel.J இனால் இசையமைக்கப்பட்டு TR இனால் பாடப்பட்டு TR NEW TV எனும் YouTube தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு S.Sakthivel இனாலும் இதற்கான எடிட்டிங் BIJU.V.Don Bosco இனாலும் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலின் இறுதியில் ரம்புக்கன சாலை மறியல் போராட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி உயிரிழந்த சமிந்த லக்ஷான் அவர்களுக்கு இப்பாடலை சமர்ப்பிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பாடலில் அவர்களால் முடிந்தவரை நம் நாட்டின் அவல நிலையினை உள்ளடக்கியுள்ளனர். பாடலின் ஆரம்பத்தில் “நாம வாழணுமா சாகணுமா சொல்லுங்க கவர்ன்மன்ட் சொல்லுங்க!” என்ற வரிகள் தான் ஹைலைட். இப்பாடலினை எழுதியவர் நாட்டில் ஒரு புறம் வீழ்ச்சி அடைந்து கொண்டே செல்லும் பொருளாதாரம், இன்னொரு புறம் எழுச்சி அடைந்து கொண்டே செல்லும் போராட்டம், இடைக்கிடையில் நாட்டில் நிலவும் பற்றாக்குறை பொருட்களின் பட்டியல். யாராவது உதவ மாட்டார்களா என ஏங்கி தவிக்கும் அழுகுரல், எதிர்காலமே இல்லை என்ற நிலையில் நிற்கும் இளைஞர்களின் நிலையோடு மக்கள் போராட்டத்தின் போது முன் வைக்கும் கோரிக்கைள் பற்றியும் குறிப்பிட மறக்கவில்லை.

இலங்கையின் நிலை பற்றி அறியாதவர்கள் நான்கு நிமிடத்தில் தெரிந்துக் கொள்ள விரும்பினால், இந்த ஒரு பாடல் போதுமானது. இப்பாடலில் இடம் பெற்றுள்ள,
“நாடு சோமலியா ஆகும் முன்ன
முறிக்க வாடா முள்ள”
“தறுதல போகலனா
நாலு சாத்து சாத்துங்க” என்ற வரிகள் தற்போதைய அரசாங்கத்திடம் உரிமை கோரி போராடி நிற்கும் மக்கள் மனதில் வன்முறையை விதைப்பதாக எனக்கு தோன்றுகிறது. அந்த வரிகளுக்கு பதிலாக மக்கள் மனதில் அமைதியாக போராடுவதற்கான மனவலிமையை விதைக்க கூடிய வரிகளை சேர்த்து இருக்கலாம் என்பது என் கருத்து.

பாடலின் வரிகளும் பாடலின் இசையும் ஒன்றோடு ஒன்று நன்றாக பொருந்தியுள்ளது. பாடலை பாடிய TR மற்றும் மற்றைய பாடகர்கள் அனைவருமே சிறப்பாகவே பாடியிருந்தனர். பாடலுக்கான படபிடிப்பு சிம்பிள்ளாக இருந்தது. அதற்கான எடிட்டிங் அவ்வளவு திருப்தி அளிப்பதாக இருக்கவில்லை. நாம் நமது நண்பர்களுடைய பிறந்த நாளைக்கு புகைபடங்களும் வீடியோக்களும் வைத்து எடிட் செய்து ப்ல்டர் போடுவது போல் இருந்தது. சில சில குறைகள் இருந்தாலும் அந்த குறைகள் பெரிதாக தெரியாதளவிற்கு பாடலின் நிறைகள் அமைந்துள்ளன. நீங்களும் பாடலை கேட்டு விட்டு உங்களது கருத்தினை எங்களுடன் கமன்ட் பொக்ஸில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சுவரோவியங்களால் ஒன்றிணையும் பெண்கள்

சமீபத்தில் கொழும்பின் இரு இடங்களில், பெண்கள் தமக்குள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடனும் துணையாகவும் இருக்க வேண்டும் என்பதை பிரதிபலிக்கும் வகையிலான சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த சுவரோவியங்கள் உள்நாட்டு ஓவியர்களால் மட்டுமன்றி இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்த பெண் ஓவியர்களாலும் இணைந்து வரையப்பட்டுள்ளமை குறிப்பிடதக்க விடயமாகும். “we are from here” எனும் கருப்பொருளில் ஸ்லேவ் ஐலேண்டில் உள்ள ரியோ சினிமா கட்டிட சுவரிலும், “sisterhood initiative” எனும் கருப்பொருளில் கொழும்பு 02 இல் உள்ள இரட்சிப்பு இராணுவ அமைப்பின் கட்டிட சுவரிலும் வரையப்பட்டுள்ளன. இந்த இரு ஓவியங்களும் 5 நாட்களில் முழுமைபடுத்தப்பட்டமை அதன் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.இந்த ஓவியங்களுக்கான அவசியம் என்ன? பல தரப்பட்ட கலாச்சாரங்களை தன்னகத்தே கொண்ட நம் சமுதாயத்தில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்ற வகையில் அவர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுதலோடு அவர்களுக்கான கனவுகள் தடை செய்யப்படுதலும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதில் அதிகமாக பாதிக்கப்படுவதும் தனக்கான அநீதிகளுக்கு குரல் கொடுக்க முடியாமல் முடங்கி போவதும் பெண்கள் தான். பெண்களுக்கான இந்நிலை மாற வேண்டுமென்றால் அனைத்து விதமான பிரிவினைகளையும் தாண்டி, பெண்கள் தமக்குள் ஒருவருக்கொருவர் உறுதுணையாக நிற்க வேண்டும். இந்த கருப்பொருளினை பெண்கள் மனதில் ஆழப்பதிக்கும் விதமாகவே கொழும்பில் இரு சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன.

“sisterhood initiative” எனும் கருப்பொருளில் கொழும்பு 02 இல் உள்ள இரட்சிப்பு இராணுவ அமைப்பின் கட்டிட சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியமானது இலங்கையில் உள்ள முஸ்லிம் பெண்கள் தன்நம்பிக்கையையும் ஒற்றுமை மீதான நம்பிக்கையையும் விதைப்பதற்காக எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகின்றது. இந்த ஓவியத்தில் இரு பெண்கள் வெவ்வேறு திசையினை பார்த்தபடி தமது கைகளை இறுக்க பிடித்துக் கொண்டு நிற்கும் நிலையானது, எந்த சமூக வகைப்படுத்தலினாலும் கனவுகளினாலும் பெண்கள் வெவ்வேறாக பிரிக்கப்பட்டாலும் ஒருவருக்கொருவர் பக்கபலமாக நிற்க வேண்டும் என்பதை உறுதிபடுத்துகிறது. இந்த ஓவியத்தினை பார்க்கும் போது மனதில் எழுகின்ற உணர்ச்சியினை வகைப்படுத்தி கூறி விட முடியாதபடி உணர்வு பூர்வமாக வரையப்பட்டுள்ளது.

“we are from here” எனும் கருப்பொருளில் ஸ்லேவ் ஐலேண்டில் உள்ள ரியோ சினிமா கட்டிட சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியமானது பலதரப்பட்ட கலாச்சாரத்தினை உடைய பெண்களை ஒரே வட்டத்திற்குள் கொண்டு வந்து, அவர்கள் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதாக அமைந்துள்ளது. இந்த ஓவியம் தான் இவை இரண்டிலும் பெரிய ஓவியமாகும். இந்த ஓவியத்தினை பார்க்கும் போது மனதுள் நம்மை அறியாமலேயே புது தைரியத்தினை பிரசவிக்கும்.

இந்த சுவரோவியங்களில் பங்களிப்பதற்கான வாய்ப்பு உள்நாட்டு பெண்களுக்கும் கொடுக்கப்பட்டமை குறிப்பிடதக்க விடயமாகும். இந்த இரு ஓவியங்களையும் பார்க்கும் எந்த பெண்ணின் மனதிலும் தன்நம்பிக்கையும் தைரியமும் ஒற்றுமையும் வலுப்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள்

அன்றாட நிகழ்வுகளையும் தகவல்களையும் திரட்டி, தொகுத்து நாளிதழ்கள், தொலைக்காட்சி, வானொலி போன்ற பல்வேறு ஊடகங்கள் வாயிலாக செய்தியின் தன்மையில் மாற்றுதல்களை ஏற்படுத்தாது வதந்திகளையும், பொய்களையும் தவிர்த்து உணமைத் தகவல்களை பொதுமக்களிடையே கொண்டுசேர்க்கும் முயற்சியினை ஊடகவியல் என்று சுருக்கமாக வரைவிலக்கணப் படுத்தலாம்.

இவ்வாறுத் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் ஊடகவியலாளர்களின் பங்கு அளப்பரியது. புதிய தகவல்களையும், உண்மைச் செய்திகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களின் நேர்மையான தொண்டுகளையும், ஊழல்களையும் திரையிட்டுக் காட்ட வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமையாகும்.

பக்கச்சார்பற்று இவ்வாறு வெளிச்சத்துக்கு நடப்பினை கொண்டுவரும் பிரயத்தனத்தில் ஊடகவியலாளர்கள் சந்திக்க நேர்வது ஒன்றிரன்று அச்சுறுத்தல்கள் அல்ல. இதில் பல அச்சுறுத்தல்கள் அரசத் தரப்பிலிருந்து அரங்கேறுவதுதான் ஜனநாயகத்தின் அவல நிலையையும், சோசலிச நாட்டில் ஊடக சுதந்திரத்தின் நிதர்சனத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. அவ்வாறு சமூக சேவைக்காய் படுகொலைச் செய்யப்பட்டு உயிர்நீத்த இலங்கையின் முக்கிய தமிழ் ஊடகவியலாளர்களையும், சமூகவியளாலர்களகளையும் அவர்களுக்கு நேர்ந்த அநீதிகளையும் குறித்து நோக்கலாம்.

ஐயாதுரை நடேசன்

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராக இருந்த இவர் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளராகவும், நெல்லை நடேசன் என்ற பெயரில் பத்தி எழுத்தாளராகவும், சக்தி தொலைக்காட்சியின் செய்தி நிருபராகவும் மற்றும் லண்டலின் இயங்கி வரும் ஐ.பி.சி நிறுவனத்தின் இலங்கை நிருபராகவும் பணியாற்றி வந்தார்.

ஐயாதுறை நடேசன் அவர்களுக்குச் சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமை அவரின் ஊடகவியல் ஆளுமையை எடுத்துக் காட்டுகின்றது.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் தன் ஐம்பதாவது வயதில் 2004.5.31 ஆம் தினத்தன்று, காலை வேலைக்குச் சென்றிருந்த போது மட்டக்களப்பில் சில ஆயுத தாரிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டார். இந்த படுகொலைக்குப் பொறுப்பான குற்றவாளிகள் இன்று வரையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
கொல்லப்படுவதற்கு முன்னர் நடேசன் அவர்கள் அரசின் நடவடிக்கைகளையும், பாதுகாப்புப் படைகளையும் விமர்சித்திருந்தமையால் 17.06.2001 அன்று கைது செய்யப்பட்டு மிரட்டப் பட்டிருந்தார்.

பால நடராஜ ஐயர்

சின்ன பாலா என்று அழைக்கப்படும் கந்தசாமி பாலநடராஜ ஐயர் அவர்கள் இலங்கையின் மூத்த சமூகவியலாளரும், எழுத்தாளரும், கவிஞருமாவார். அவர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினராகவும் இருந்திருந்தார். பாலா அவர்கள் தினமுரசு என்ற வார இதழில் பணியாற்றி வந்ததுடன் தினகரன் வார இதழிலும் பணியாற்றினார்.

இவர் விடுதலைப் புலிகளின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீள் விமர்சித்து விமர்சித்து வந்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளடங்களாக தமிழ் அரசியல் குழுக்களுடன் இணைந்து பணியாற்றி வந்தார்.

47 வயதைத் தொட்டிருந்த ஐயர் அவர்கள் வீடு திரும்பும் வேளையில் 16.08.2004 அன்று கொழும்பு வெள்ளவத்தையில் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் மோட்டர் சைக்கிளில் வந்த இரு நபர்களால் நெஞ்சிலும் முகத்திலும் சுடப்பட்டு படு கொலை செய்யப்பட்டார்.

தர்மரட்னம் சிவராம்

கொழும்பு பம்பலபிட்டி காவல் நிலையத்திற்கு முன்னர் அடையாளம் தெரியாத நான்கு நபர்களால் வெள்ளை வான் ஒன்றின் மூலம் கடத்தி செல்லப்பட்டு 25.04.2005 படுகொலை செய்யப்பட்டிருந்தார். மூத்த தமிழ் ஊடகவியலாளரான தர்மரட்னம் சிவராம் எனப்படும் தர்கி சிவராம் இவர் ஆவார்.

தர்மரட்னம் சிவராம் அவர்கள் `தமிழ் நெட்` பத்திரிகையின் முன்னனி அரசியல் விமர்சகராகவும், டைலி மிரர் ஆங்கில இதழின் எழுத்தாளராகவும், வீரகேசரி பத்திரிகையின் எழுத்தாளராகவும் பணியாற்றி வந்துள்ள இவர் முன்னால் போராளியுமாவார். `தெ ஐலண்ட்` பத்திரிகையில் தராகி என்ற புனைபெயரில் கட்டுரைகள் எழுதி வந்தமையும் குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதுவதை நிறுத்திக் கொண்டார்.

அரசியல், பாதுகாப்பு போன்ற விடயங்களை வலியுறுத்தி வெளிவந்த இவரது கட்டுரைகள் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. 24.04.2005 அன்று வீரகேசரி வார இதழில் ‘எரிக் சொல்ஹெய்மின் வருகைகளும் தமிழ்த் தேசியத்தின் நெருக்கடிகளும்” என்ற கட்டுரை சிவராம் அவர்களின் இறுதி கட்டுரை ஆகும். பம்பலப்பிட்டியில் கடத்திச் செல்லப்பட்டிருந்த சிவராம் அவர்களின் உடல் படுகொலை செய்யப்பட்டு பாராளுமன்ற கட்டத்தின் பின்பக்கத்தில் வீசப் பட்டிருந்ததாக தமிழ்நெட் தெரிவித்திருந்தது.

இசைவிழி செம்பியன்

வானொலி கலைஞரும், அறிவிப்பாளருமான இசைவிழி செம்பியன் அவர்கள் தமிழீழம் வானொலி மையமான புலிகளின் குரல் நிலையத்தின் மீதான இலங்கை வான் படையினரின் குண்டுத்தாக்குத்தலின் போது மரணமடைந்தார்.

மயில்வாகனம் நிமலராஜன்

1990களில் பி.பி.சியின் இலங்கை செய்தியாளராகவும், வீரகேசரி பத்திரிகையின் எழுத்தாளராகவும், மேலும் சில சிங்கள பத்திரிகைகளின் நிருபராகவும் செயற்பட்டார். யாழ் பிரதேசங்களில் நிகழ்ந்தேரிய சம்பவங்களை வெளியுலகிற்குக் காட்டிய மிக முக்கியமான ஊடகவியலாளராக நிர்மல ராஜ அவர்கள் திகழ்ந்தார்.

12.09.2000 அன்று இராணுவத்தின் அதி பாதுகாப்பு வளயத்தினுள் ஆயுத தாரிகளால் தன் வீட்டில் வைத்துக் கொல்ல பபட்டார். இவரது கொலைச் சம்பவமானது மிகவும் கொடூரமாய் அமைந்திருந்தது. இவரை கொலைசெய்ததன் பின்னர் வீட்டினுள் கை குண்டு வீசப்பட்டு நிர்மல ராஜானின் தந்தையைக் கத்தியால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். தாய் லில்லி மயில்வாகனமும் தன் அக்காவின் மகனும் தாக்குதலில் படு காயம் அடைந்திருந்தனர்.

பரணிரூபசிங்கம் தேவக்குமார்

யாழ்ப்பாணத்தில் சுயமாக இயங்கிவந்த அலைவரிசையொன்றின் நிருபராகவும், நியூஸ் பர்ஸ்ட் செய்தித் தொகுப்பாளராகவும் செயற்பட்டு வந்த தேவக்குமார் அவர்கள் 28.08.2008 இல் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத சில நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர் நண்பனான மகேந்திரன் வரதனும் தக்குதலில் கொல்லப்பட்டார்.

புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி

இலங்கையின் முக்கிய பதிப்பகங்களில் எழுத்தாளரும், குரல் அலைவரிசையின் நேரலை செய்தியாளராகவும் ஈழானந்தம் பத்திரிகையின் முக்கிய எழுத்தாளருமாகச் செயற்பட்ட புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்கள் இலங்கை பீரங்கி தடுப்பு பிரிவினரால் கொல்லப்பட்டார். இவர் மனம் பிட்டியில் பிறந்து வளர்ந்து பிற்காலங்களில் விடுதலைப் புலியினர் வசப்பட்ட இடங்களுக்குப் பயணம் செய்து செய்திகளைத் தொகுத்து வழங்கினார்.

ரேலங்கி செல்வராஜா

20 வருடங்களுக்கு மேலாக ஊடக ஒலிபரப்பாளராகவும், திரைப்பட நடிகையாகவும் இருந்த ரேலங்கி செல்வராஜா அவர்கள் புலிகளை விமர்சித்து ஒலிபரப்புகளை மேற்கொண்டு நடாத்திச் சென்றார். இவர் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்திலும் பணியாற்றி இருந்ததுடன் `இதய வீணை` எனும் நிகழ்ச்சியில் புலிகளை விமர்சித்தார்.

01.09.2005 அன்று செல்வராஜா அவர்களும் அவரது கணவரான சின்னதுரை அவர்களும் தலைநகர் கொழும்பில் வணிக நிலையமொன்றில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்டனர். அவரது கணவர் முன்னால் போராளியும் தமிழர் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும் ஆவார். அதே நாளில் மூத்த அரசியல் வாதி லக்ஷ்மன் கதிர்காம நாதரும் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த மூன்று தோடர் கொலை சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்ட போதும் அதை அவர்கள் மறுத்திருந்தனர்.

ஷோபா (இசைப்பிரியா)

இசைப்பிரியா என்று எல்லோராலும் அறியப்படுகின்ற ஷோபனா தமிழீல விடுதலைப் புலிகளின் ஊடகத் துறையில் பெரும்பங்காற்றிய ஊடகவியலாளர் ஆவார். ஒளிவீச்சு என்ற ஒளி சஞ்சிகையினை நடாத்தி சென்றதோடு , நிதர்சனம் என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், செய்தித் தொகுப்பாளராகவும் கடமையாற்றினார். கூடவே பல குறும்படங்களிலும் நடித்துள்ள இவர் இசைக்குயில் என்று புலிகளினால் அழைக்கப்பட்டார்.

தமிழீல படைத்தளபதி ஒருவரை மணந்த இவர் இலங்கை உள்நாட்டுப் போர் உச்சம் பெற்றிருந்த 2009 காலகட்டங்களில் தன் நோய்வாய்பட்ட மகள் அகல்யாவைச் சரியான மருத்துவ வசதிகளின்றி பறிகொடுத்திருந்தார்.

இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப்புலிகள் வசமிருந்த இடங்களை கைப்பற்றிய பின்னர் இசைப்பிரியா மற்றும் பல முன்னாள் போராளிகளை சுட்டுக்கொலை செய்தது. இசை பிரிய இராணுவத்தினரால் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. மனித நேயமற்ற முறையில் இசைப்பிரியாவை நிர்வாணப்படுத்திக் கொலை செய்த காட்சிகளை அம்பலப்படுத்தி மிகவும் மோசமாக நடந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இவரின் வாழ்க்கை வரலாற்றையொட்டி திரைப்படமும் வெளிவந்திருந்து. இலங்கையின் போர்க்குற்றங்களில் இதுவும் அடங்குகின்றது

சுப்ரமணியம் சுகிர்தராஜன்

சுடரொளி பத்திரிகையின் முக்கிய எழுத்தாளரான சுப்ரமனியம் சுகிர்த ராஜன் திருகோணமலை துப்பாக்கி தாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கையில் நிலவிய போர்ச்சூழலில் பல்வேறு செய்தி நிறுவனங்களுக்குச் செய்திகளை வழங்கி வந்தார். இவர் வீரகேசரி பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளை எழுதிவந்தார். எஸ்.எஸ்.ஆர்.மனோ, ரஹ்மான், ஈழவன் என்ற புனைபெயர்களில் கட்டுரைகளை எழுதினார்.
24.01.2006 இல் திருகோணமலை ஆளுநர் செயலகத்திற்கு முன்னர் சுட்டுக்கொள்ளப்பட்டார். மாணவர்கள் சிலரின் கொலைவழக்கு தொடர்பாக நிழற்பட ஆதாரங்களை வெளியிட்டிருந்தார். இந்த கொலை தொடர்பில் எத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படவில்லை.

இவர்கள் தவிர்த்து பரணிரூபசிங்கம் தேவகுமார், ரஷ்மி மொஹொமட், தர்மலிங்கம், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சுரெஷ் லிபின்யோ போன்ற சிறுபான்மை ஊடகவியலாளர்களும் லசந்த விஜெதுங்க போன்ற சிங்களஊடகவியலாளர்களும் மர்மமான முறையிலும் மனித நேயமற்ற வகையிலும் கொல்லப்பட்டுள்ளார்கள். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற போதிலும் இங்கே ஊடக சுதந்திரம் கூட கேள்விக்குறியாகவே உள்ளது. இலங்கையில் ஊடக சுதந்திரத்தை நிலை நட்ட ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரா வேண்டும்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்பக் கூடிய முக்கிய துறைகள்

இதுவரை வரலாறு காணாத அளவு பாரியளவிலான பொருளாதார நெறுக்கடிக்கும், உள்நாட்டு பூசல்களுக்கும் முகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது இன்று இலங்கை அரசு. பெரும்பாலும் இறக்குமதிகளை நம்பியே நகரும் தீவுநாடான இலங்கை, டொலரின் கையிருப்பின்றி அத்தியாவசிய பொருட்தேவைகளைக் கூட நிவர்த்தி செய்ய முடியாது நிரம்பலை விஞ்சிய கேள்விப் பொருளாதார சக்கரத்தோடு நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் மூழ்கும் கப்பலின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்கு பதில் மேழும் பல துவாரங்களை தோண்டுவதாகவே அமைந்திருந்தது அரசின் கடந்த கால காய் நகர்த்தல்கள். இச்சிக்கலை தீர்ப்பதற்கு  மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டுத் தலைமையும் பொருளாதார நிபுனர்களும் தலைகளை பிய்த்துக்கொண்டிருக்க, நிவாரணங்களுக்காக  நட்பு நாடுகளிடம் கரமெய்தியும், சர்வதேச நாணய நிதியத்திடம் பண உதவிகளையும் கோறி நாடியிருக்கிறது இலங்கை. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதற்காக வங்கி வட்டி வீதத்தை அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போதயை பொருளாதார இறுக்கத்திற்கு அரசின் நெடுங்கால நடவடிக்கைகளே ஏதுவாக இருந்திருக்கிறது. குறிப்பாக முறையான வளப் பயன்பாடின்மை. எதிர்கால பயன்பாட்டிட்கான துள்ளியமான வியூகங்கள் இன்மை. கடந்தகால கடன் கொள்கைகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொரோனா தொற்றென்று தொடர்ந்து சறுக்கத்தொடங்கிய பொருளாதாரம் ரசிய யுக்ரைன் போரின் பின்பு கழுத்துமுறியும் நிலைக்கு தள்ளப் பட்டு மூச்சிலுத்து விடுவதற்கேனும் அவகாசம் இல்லாமல் தினறிக்கொன்டிறுக்கிறது இலங்கை.

பண்டைய இலங்கையை நோக்கி காலப்பயணமொன்றை மேற்கொள்ளமுடியுமேயானால் முற்றிலும் வேறுபட்ட தன்னிறைவான, தழும்பிய உற்பத்திப்பண்டங்களை ஏற்றுமதி செய்த தானியக் களஞ்சியமாய் அமைந்திருந்த விவசாய நாடொன்றை காணக்கூடியதாக இருக்கும். ஆனால் இன்று சிலரின் அரசியல் அபிலாஷைகளுக்காகவும், மறைமுகமான அந்நிய ஆதிக்கங்களினாகலும் வாழ்ந்துக் கெட்தென்ற கூற்றுக்கு பேருதாரணமாய் திகழ்கிறது பண்டைய பற்பம்.

இன்றும் இப்பொருளாதார பின்னடைவை தளர்த்து, இலங்கை பெருமூச்சுவிடத் துவங்கியப் பின் தேசத்தை மீழ் கட்டியெழுப்பவும் பெரும்பான்மையான துறைகளில் தன்னிறைவான நாடாகவும்; அந்நிய முதலீடுகளை ஏற்படுத்திக் கொள்ளவும்; ஆசியாவின் ஐஷ்வர்யமாக இலங்கையை நம்மால்  உருவாக்க முடியுமென்பதில் இட்டுக்கட்டும் வார்த்தைகளுக்கு ஒருபோதும் இடம் இல்லை. அவ்வாறு மேம்படுத்தக்கூடிய கையிருப்பிலுள்ள சில துறைகளையும் அவற்றை மேம்படுத்த அரசினால் ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய வழிமுறைகள் சிலவற்றையும் நோக்கலாம்.

விவசாயத் துறை

தொழிநுட்ப வளர்ச்சியில் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் போதும் இலங்கை விவசாய நாடென்பதில் மாற்றுக்கருத்தில்லை. கடந்த காலங்களில் விவசாயம் மற்றும் விவசாயம் சார் துறைகள் சார்ந்து தவறான தீர்வுகளை எடுத்தமையும் இன்றைய பொருளாதார நெறுக்கடியில், நேராடியாகவும் மறைமுகமாகவும்  பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

குறிப்பாக டொலரின் இருப்பை தக்கவைப்பதற்காக கரிம இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளப்போவதாய் அசேதன பசளைக் கொள்வனவை தடை செய்த அரசாங்கத்தின் திடீர் வர்த்தமானியால் விவசாயிகளும் விவசாயமும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டதிலிருந்தே பிள்ளையார் சுழியிட்டு வெடிக்கத்தொடங்கிற்று பொருளாதார நெறுக்கடி.

விவசாயத்தில் முன்னிலை வகிக்கும் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட கரிம விவசாயத்திற்கு முற்றாக மாறுவதற்கான சாத்தியப் பாடுகளுக்களைத் தேடிக்கொண்டிருக்கும் போது எந்தவித முன்னறிவிப்புகளும் இன்றி தேசத்தின் விவசாயத்தை முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாற்றப்போவதாய் இரசாயன பசளை இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானம் முற்றிலுமோர் பகிடியாய் அமைந்திருந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு பேரளவில் பங்கு வகிக்கும் விவசாயத்திற்கு அரசு  தங்கள் கவனத்தை அவ்வளவாய் ஒதுக்காதது நாண வேண்டிய ஒரு விடயமாகத்தான் நான் கருதுகின்றேன்.

இலங்கையின் விவசாயத்தை பொறுத்த வரையில் பெரும்பாலும் நுகர்வு விவசாயமே மேற்கொள்ளப்படுகின்றது. அதாவது ஏற்றுமதி செய்வதற்கான   வர்த்தக விவசாயமாய் அன்றி, நாட்டின் நுகர்வுத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான (நுகர்வு) விவசாயமாய் இருக்கின்றது. இருந்த போதிலும் நாட்டின் சுயதேவைகளுக்காக நம்மால் உற்பத்தி செய்யக்கூடிய சில அடிப்படை உணவு பதார்த்தங்களும் கூட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும். குறிப்பாக சிறு அளவிலான அரிசி மற்றும் பேரளவிலான தானியங்கள் இறக்குமதியையே சார்ந்திருக்கின்றது. கடந்த வருடம் அரிசிக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காய் 6000 மெற்றிக் டொன் அளவிலான அரிசியை  பகிஸ்தானிடம் இருந்து கொள்வனவு செய்திருந்து குறிப்பிடத்தக்கது.

நெற்பயிர்ச்செய்கையிலும் தானிய ஊற்பத்தியிலும் தன்னிறைவாயிருந்த பண்டய இலங்கையின் புராதன பயிர்செய்கை மேலைத்தேய வருகையின் பின்னர் வர்த்தக பயிர்ச்செய்கைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டமையால் விவசாய நடவடிக்கைகளில் புராதன பயிர்ச் செய்கை வீழ்ச்சியடைந்ததோடு பல்வேறு பிரச்சினைகளும் அதனூடாகத் தோற்றம் பெற்றன. சுதந்திரத்திற்கு பின்னர் அத்தகைய பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை தீர்த்து வைப்பதற்காக அரசாங்கம் எடுத்த முடிவுகள் அனைத்தும் பாதகமாகவே அமைய விவசாயம் மேலும் வீழ்ச்சிக்காண தொடங்கியது.

கடந்த 10 அண்டுகளில் மாத்திரம் 55% வீத விவசாய நிலங்கள் கைவிடப்பட்டுள்ளதாக தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்நிலைக்கு விவசாயம் தள்ளப்பட்டிருப்பதற்கு எத்தனையோ காரணங்களை முன்வைக்க முடியும்.அதிலும் குறிப்பாக – விவசாயிகளுக்கான உரிய சமூக மதிப்பினை பெற்றுக்கொள்ள முடியாமை; விவசாய சலுகைகள் வழங்கப்படாமை; தரமான தாய்த் தாவரங்களையோ விதைகளையோ குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்ள முடியாதிருத்தல்; நோய் தாக்கங்கள்; முறையான நீர்ப்பாசன திட்டங்கள் இன்மை, விவசாயிகளை ஊக்கப்படுத்தவோ பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவோ அரசு தரப்பிலான விஸ்தரிக்கபட்ட வழிகாட்டிகளின் பற்றாக்குறை; சந்தைப்படுத்தலில் ஏற்படும் சிரமம்; உரிய நிர்ணய விலையினை அறுவடைக்கு பெற்றுக்கொள்ள முடியாமை; உரம் பசளைகளை பெற்றுக்கொள்ள முடியாதிருத்தல்; விவசாய கடபன் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாதிருத்தல் போன்ற காரணிகளை விவசய பின்னடைவுக்கான முக்கிய காரணிகளாக முன்வைக்கலாம்.

பாரியளவு விவசாயம் சில முன்னனி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்ற போதும் உணவுத்தேவைக்கான கேள்விக்கான நிரம்பலில் பெரும்பங்காக இருப்பது சிறு அளவிலான விவசாயத்தை மேற்கொள்ளக் கூடிய கிராமத்து விவசாயிகளே. இவர்களின் வாழ்வாதாரம் இன்றுவரை ஒரு மேம்பட்ட நிலைநோக்கி நகராமையாலும் விவசாய உற்பத்திகளால் பெற்றுக்கொள்ளக் கூடிய லாபம் தங்கள் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்ய போதாமையினாலும் விவசாயத்தை கைவிட வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்படுகின்றனர். குறிப்பாக இத்தகைய விவசாய கிராமங்களையொட்டி சுத்தமான குடிநீர் வசதிகள் கூட இன்றளவிலும் அமைத்துக் கொடுக்கப் படாமை பாரியபிரச்சனையாகும்.

பயிர் செய்கைக்காக பயன்படுத்தப்படும் இரசாயன பசளைகளில் சில ( யூரியா ) நூற்றுக்கு சுமார் 62% விகிதமளவில் மண்ணினால் உறிஞ்ச முடியாது கரைந்து அருகிலிருக்கும் நீர்நிலை நிலைகளில் சேருகின்றன. இந்த பிரச்சினையை தீர்க்க பல்வேறு உத்திகள் பிற நாடுகளில் கையாளப்படுகின்ற போதிலும் இலங்கையில் இது குறித்து விவசாயிகளை விழிப்புணர்த்தவோ தீர்வுகளை மேற்கொள்ளவோ அரசாங்கம் இன்றளவிலும் எந்தவொறு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதில் கசக்கும் உண்மை என்னவென்றால் அவ்வாறு வீணாவது தெரியாமல் மேலும் உரமிட்டும் விளைச்சல் கிடைக்காததை எண்ணி வானம் பார்ப்பதுண்டு பல விவசயிகள். மேலும் பயிருக்குறிய pH மட்டத்தை பற்றியோ அல்லது pH மட்டமென்றால் என்னெவென்பது பற்றியோக் கூட போதிய கல்வி இல்லாது மண்ணின் தன்மை அறியாமல் பயிர் செய்வதால் பேரளவிலான விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கவோ விவசாயக் கல்வியை வழங்கவோ அரச நிறுவனங்கள் அவ்வளவாய் பிரயத்தனங்களை மேற்கொள்வதில்லை.

சந்தைகளில் அரச அனுமதி பெற்றுள்ளதாய் சந்தைப்படுத்தப்படும் பல வகையான விதைகள் மற்றும் தாய் தாவர பாகங்கள் இருந்த போதிலும் அவற்றில் தரமான – முளைத்திறன் கொண்ட பீசங்களை பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். அவ்வாறு தேர்ந்தெடுத்த பின்பும் அவற்றை கொள்வனவு செய்ய பாரிய அளவிலான பணத்தை செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு உற்படுத்த பட்டுள்ளனர். இத்தோடு நின்று விடுவதில்லை அவ்வாறு பெற்றுக்கொண்ட விதைகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளவாறு விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில், வியாபாரிகளை வினவும் போது ஹைபிரிட் விதை, இந்நிலத்திற்கிது பொருந்தாதென்று சாக்குகள் சொல்லி அலைக்களிக்கும் சம்பவங்களை நம்மால் காண முடிகின்றது. இதனால் இப்பிரதேசத்திற்கு இந்த வகை பொருந்துமென்று அரசு பரிசீலனைகளை மேற்கொண்டு தேர்ந்தெடுத்த வணிகர்களுக்கு அனுமதியளித்து விற்பனை செய்ய நடவடிக்கைகளை மேற்ற்கொள்ள வேண்டும். மேலும் சந்தையில் காணப்படுகின்ற விதைகளில் பெரும்பாலானவ வெளிநாட்டு இறக்குமதிகளாகவே உள்ளன. இதற்கு மாற்றாக அரச நிறுவனமொன்றினாலோ அரச அனுமதி பெற்ற தனியாரினாலோ குறித்த தரமான பீசங்கள் உற்பத்தி செய்யப்படும் போது உள்ளூர் விவசாயிகளினால் குறைந்த விலைக்கு அவற்றை பெற்றுக் கொள்ள முடிவதுடன் வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுக்க முடியும். மேலும் இறக்குமதிக்காக ஒதுக்கப்படும் பணத்தினை குறித்த தயாரிப்புக்கு பயன்படுத்த முடிவதுடன், மிகை உற்பத்திகளை ஏற்றுமதி செய்யவும் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

கடந்த காலங்களில் சோளப்பயிர்களை தாக்கும் பீடைப்புழுவின் ஆதிக்கம் கட்டுப் பாட்டைக் கடந்து பெருமச்சுருத்தலாய் அமைதிருந்தை நாமனைவரும் அறிந்திருந்தோம். இவாறான நிலைமையில் குறித்த நோய்க்காரணியினை கண்டறியவும் நோய் நிவாரணங்களை கூடிய விரைவில் பெற்றுத்தருவதற்கும் ஆராய்ச்சி நிறுவனங்களை நேர்த்தியாகவும் வெகுவாக செயற்படுமளவிலும் நடாத்தி செல்ல வேண்டும். விவசாயிகளிடம் இவ்வாறான நிலைமைகளின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நோய் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வை கருத்தரங்குகள் போன்றவற்றின் ஊடாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சீரான நீரோட்டங்களை கொண்ட நதிகளையும், பொய்க்காத பருவ மழையையும், சுமார் 12,000 வாவிகள் உள்ளடங்களாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான நீர்நிலைகளையும், 272 நீர்வீழ்சிகளை உள்ளடக்கிய 12 பிரதான நதிகளையும் கொண்டு பண்டைகாலந்தொட்டே நீர்பாசனத்தில் மேம்பட்டு விளங்கி உலகிற்று வாவிகள் சார் நீர் பாசன தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய இலங்கையில் இன்று விவசாயத்திகோ குடிநீருக்கோ கைத்தொழில் செயற்பாடுகளுக்கோ போதியளவு நீர் இல்லாது அவஸ்தை படும் சந்தர்ப்பங்களை செய்திகளூடாகவும் தரவுகளினூடாகவும் படிக்க நேரிடும் போது வாய் பொத்தி நகைக்கத் தோன்றுவது இயல்பான நிலை தான். கிட்த்தட்ட 5,583 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மொரகஹகந்த அணைக்கட்டு போன்ற பாரிய அளவு நீர் பாசன திட்டங்கள் செயட்படுத்த பட்டாலும், அவற்றின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட லாபமோ அனுகூலமோ கிடைக்க பெறூகின்றதா அல்லது கிடைக்கப் பெறுமா என வினவினால் இல்லை என்பது தான் பதில். இந்த மொரகஹகந்த திட்டத்தித்தின் ஊடாக லாபமோ வருமானமோ கிடைக்க வேண்டுமென்றால் குறித்த அணைகட்டு வருத்தில் 11 முறையாவது நிரம்பவேண்டும் ஆனால் மாறாக வருத்தில் இரண்டு முறைகள் மாத்திரமே அணைக்கட்டு நிரம்புவதாகவும், இதனை நிரப்புவதற்காக மேலும் நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு பிரயோசனமற்ற வகையில் நிதி ஒதுக்கிடுவதாகவும் மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் அனுர குமார திஸானாயக்க அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தார். இவ்வாறாக செலவிடும் நிதியினை புராதன இலங்கையின் வாவிகளையும் காலவாய்களியும் புணரமைக்க ஒதுக்கும் பட்சத்தில் அவற்றின் மூலம் பாரிய அளவிலான நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

வருடத்தில் ஒரு குறித்த அறுவடைக்கு பெரிய லாபத்தை பெற்றுக்கொள்கின்ற விவசாயிகள் அதே ஆண்டில் அதே பயிர் மீதான இரண்டாம் அறுவடையில் அளப்பரிய நட்டத்தை ஈட்டுவது உலகில் வேறெங்கிலும் இல்லாத வண்ணம் இலங்கையில் காணப்படுகின்றது. இதை நிவர்த்தி செய்வதற்கான எந்த ஒரு நடவடிக்கைகளுக்கும் உற்பத்திகளுக்கான நிர்ணய விலைகளை பெற்றுத்தருவதற்கும் இன்று வரையில் அரசாங்கம் பெரிய அளவில் முன்வரவில்லை. உதாரணமாக இலங்கையில் வெங்காய பயிர்ச்செய்கையில் ஈடுபடும் பிரதான இடங்களாக யாழ் மற்றும் ஹம்பந்தொட்டை சார் பிரதேசங்களை குறிப்பிடலாம். இந்த பிரதேசங்களில் முறையான திட்டங்க்ளை உருவாக்கி முன்னறிவிப்புக்களோடு இந்த போகத்தில் இந்த பிரதேசத்தில் (யாழ்) மாத்திரம் வெங்காய உற்பத்தியை மேற்கொள்ளவும், மற்ற பிரதேசத்தில் (ஹம்பாந்தோட்டை) மாற்றுப் பயிரை பயிர்செய்கையை மேற்கொள்ளவும் , மற்ற போகத்தில் அதை சுழற்சி முறையின் மூலம் நடாத்தி செல்லவும் முடிகின்ற போது நிர்ணய விலையை குறித்த உற்பத்திக்கு பெற்றுக்கொடுக்க முடிவதோடு, அறுவடையை வீணாகாது தடுக்கவும் முடியும். அதாவது சில சந்தர்ப்பங்களில் மிகை உற்பத்திகளுக்கும் சில சந்தர்ப்பங்களில் குறை உற்பத்திகளுக்கும் முகம் கொடுக்க நேரிடுவதால் நிர்ணய விலையை பெற்றுக்கொள்வதில் சிரமங்களுக்கு உற்பட வேண்டியுள்ளது. மிகை உற்பத்தியின் போது தேவைக்கதிக உற்பத்திகள் களஞ்சிப்படுத்த முடியாமல் வீணாவதும், குறை உற்பத்தியின் போது நுகர்வுக்காக இறக்குமதி செய்யவும் நேரிடுகின்றது.

அறுவடையின் பின்னர் சந்தைப்படுத்தப்படும் உற்பத்திகளில் 35% விகிதமளவிலான உற்பத்திகள் இடைத்தரகர் ஊடாக விவசாயியினிடமிருந்து வியாபாரிக்கு செல்ல எடுக்கும் நேரத்திலும் அதற்கு பின்பான விநியோக நடவடிக்கையின் போதும் வீணாகுவதாய் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த 35%> விகிதமளவிலான பண்டங்களை களஞ்சியப்படுத்தவோ, வீணாவதை தடுக்கவோ போதுமான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.கூடவே இடைத்தரகர் முறையை ஒழிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை பெற்றுத்தரவும் முடியும். வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து பண்டங்களை பெற்றுக்கொள்லும் விலையை விட நுகர்வோருக்கு அவற்றை விநியோகிக்கும் போது மிகவும் அதிகமான விலைக்கு விற்கப்படுவதால் நுகர்வோருக்கும் விவசாயிகளுக்குமிடையிலான லாபத்தை விட வியாபாரிகளின் லாபம் அதிக அளவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த கால அவசர தீர்மானங்கள் போலல்லாது விவசாயிகளுக்கு கிடைக்கப்பறும் உரங்களையும் அவ்ற்றிற்கான மானியங்களையும் சிறந்த முறையில் பெற்றுத்தருவதோடு, நாமனைவரும் சுகாதாரமான நச்சுத்தன்மையற்ற உணவினை நுகர வேண்டும் அதற்கு கரிம விவசாயம் உறுதுஇணையாய் அமையும். இருப்பினும் படிப்படியாக கரிம விவசாயத்திற்கு மாறுவதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதோடு இரசாயன பசளைகளுக்கு மாற்றாக சேதன பசளைகளை குறைந்த விலையில் பெற்றுத்தரவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில், வங்கித்துறையானது விவசாயத்திற்காக 10 சதவீத கடன் ஒதுக்கீட்டை மேற்கொள்ள வேண்டும். மேலும் வங்கித்துறையும், இலங்கை மத்தியவங்கியும் பெருநகரப்பகுதிகளில்  திறக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட வங்கிகளுக்குமான இரண்டு கிளைகளை விவசாயம் சார் கிராமப்பகுதிகளில் நடாத்தி செல்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது விவசாயிகளுக்கு அதனூடாக பெருமளவிலான அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை

517,00 சதுர கிலோ மீட்டர் பிரத்தியேக பொருளாதார வலயத்தையும்; 21,500 ச.கி.மீ கடல் நீர் ஏரிகள்,கழிமுகங்கள் மற்றும் உள்ளூர் நீர் நிலைகளையும்; 5,200 ச.கி.மீ ஆளவிலான செயற்கை நீர் நிலைகளையும் கொண்டிருக்கிறது இலங்கையின் நீர் வளம். அண்மைய 75 ஆண்டுகளாய் பாரியளவு வளர்ச்சிக்கண்டு வரும் இலங்கையின் மீன்பிடியானது சுமார் 200 ஆண்டுப் பழமையான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. கடற்கரையோர மீன்வளர்ப்பு 1980ஆம் ஆண்டு காலகட்டங்களில் இறால் வளர்ப்புடன் ஆரம்பமானதுடன், கடல் நீர் வளர்ப்பு 2010இன் பின்ன அண்மைக்கலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. துரித அபிவிருத்திக் கண்டுவரும் மீன்பிடித் துறையின் வளர்ச்சியானது மொத்த உள்ளாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்காமலில்லை.

2020 ஆம் ஆண்டு 215மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதியினை ஈட்டித்தந்ததுடன் 2021ஆம் ஆண்டு 318 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வளர்ச்சிக்கண்டிருந்து. பண அறவீட்டின் மூலமல்லாது நோக்குமிட்ததில் 2020ஆம் ஆண்டு 56.176மெற்றிக் டொன்னாக இருந்த ஏற்றுமதி 2021ஆம் ஆண்டு சுமார் 44% விகித்தால் அதிகரித்து 85.809 மெற்றிக் டொன்களாக இருந்தது.

இருந்த போதிலும் உள்நாட்டு தேவைக்கான முக்கிய புரதமாய் அமைகின்ற மீன்களில் 35% விகிதமானவை வெளிநாட்டிலிருந்தே கொள்வனவு செய்யப்படுகின்றது.  பொதி செய்ய்பட்ட றின் மீன்கள் ( canned fish ) முற்றிலுமாக வெளிநாடுகளிலிருந்தே கொள்வனவு செய்யப்படுகிறது.

நேராகவோ மறைமுகமாகவோ நாட்டின் வேலைவாய்ப்பில் 4% இற்கு மேலாக பங்காற்றும் இத்துறையோடிணைந்து நம்பி தங்கள் வாழ்வாதாரங்களை மேற்கொள்ளும் குடும்பங்கள் பலவற்றின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதுகொள்வதற்கான சாத்தியப்பாடுகாள் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. அதிக லாபத்தை பெற்றுக்கொள்ள முடிகின்ற போதிலும். முதலாலிகளிம் வியாபாரிகளும் பெற்றுக்கொள்ளும் அளவிற்கு அடிமட்ட ஊழியர்களின் வருமானம் இருப்பதில்லை.

மேலும் இவ்வாறான அடிமட்ட ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதன் மூலம் இன்னும் அதிக உழைப்பினையும் பெறுபேருகாளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும்  மேம்பட்ட தொழிநுட்பங்கள் இலங்கையை பொறுத்த வறையில் அரிதாவே காணப்படுகின்றது. இவ்வாறான தொழிநுட்பம் சார் உபகரணங்களையும் கருவிகளையும் இறாக்குமதி செய்து மீனவர்களுக்கு பெற்றுத்தரும் போது அதிகளவிலான அறுவடைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மீன் பிடித்தற்கு பின்னான தர இழைப்பை  குறைக்கவும் அதிகாரித்த பெறுமானத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பனிக்கட்டி தொழிற்சாலைகளையும். களஞ்சிய சாலைகளையும் நிறுவுவதாலும் தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம் கழிவுகளை குறைத்துக் கொள்ளவும் தரமான பாண்டங்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் முடிவதோடு தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். களஞ்சியசாலைகள் விஸ்தரிக்கப்படும் பட்சத்தில் போமலின் போன்ற தீமை விளைவிக்கும் பதார்த்தங்களிலிருந்தும் விடுபட முடியும்.

நன்னீர் மீன்வளர்ப்பு மற்றும் அழங்கார மீன் வளர்ப்பும் தற்காலத்தில் வெகு வளர்ச்சி கண்டு வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அழங்கார மீன்வளர்ப்பு மற்றும் அது சார் துறைகளில் ( aquascaping) இலங்கை இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதனால் அது தொடர்பன விடயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளையும் கற்கை நெறிகளையும் கொண்டுவர முடியும்.

சட்டவிரோத மீன்பிடிப்பினால் எதிர்கால மீன் வளம் அருகி வருவதாலும், பவளப்பாறைகள் மற்றும் அருகி வரும் மீனினங்களுக்கு அச்சுறுத்தலாக அமைவதாலும் அது தொடர்பாக கடுமையான சட்டங்களை அமுல் படுத்தவும் செயற்படுத்தவும் முன்வறுவதோடு இந்திய தமிழகத்திலெல்லம் அதிக லாபமீட்டற் பொறுட்டு வளர்ண்து வரும் கடல் நீர் மீன் வளர்ப்புகளை ஊக்கப்படுத்துவதால் அதிக பொருளாதார நன்மைகளை ஈட்ட முடியும்.

சுற்றுலாத்துறை

பூகோல ரீதியில் தனித்துvaமான அமைப்போடு வெளிநாட்டவரின் கவனத்தை ஈர்க்கும் இலங்கை 2019 இற்கு முன்னர் 2மில்லியனுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை பதிவு செய்திருந்ததோடு 6 மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் கவனத்தையும் பெற்றிருந்தது.

மொத்த உள்பநாட்டு உற்பத்தியில் (GDP) 12% சதவீத பங்கை சுற்றுலாத்துறை மற்றும் அது சார்ந்தவைகள் பூர்த்தி செய்கின்றன. அதாவது கிட்த்தட்ட 11 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிளான நிதியினை சுற்றுலாத்துறை பெற்றுத்தருகின்றது. நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் 5.9% இனை சுற்றுலாத்துறை பெற்றுக்கொடுத்திருக்கின்றது.

நாட்டின் வாளர்ச்சிக்கு இவ்வாறு பாரிய பங்காற்றும் சுற்றுலாத்துறை 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு சரிவடைய தொடங்கியதுடன் தொடர்ந்து வந்த கொவிட் தொற்றின் பின்னர் அதிகளவில் வீழ்ச்சிக்காணத் தொடங்கியது. கூடவே ரசிய-யுக்ரைன் யுத்தமும் வீழ்ச்சிக்கு மறைமுகமாக பங்கு வகிக்கின்றது. இவ்வாறு அபிவிருத்தியின் முதுகென்பாகவும், அந்நிய செலவானிகளையும் டொலரினையும் பெருமளவில் நாட்டினுல் கொண்டு சேர்க்கும் சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியோடு கூடவே சுற்றுலாத்துறை சார்ந்த அந்நிய முதலீடுகளும் பின்வாங்க, அடிவாங்கத்தொடங்கிற்று இலங்கை பொருளாதாரம்.

மீண்டும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தியின் மீது ஆளமாய்ச் சென்று அவதானம் செலுத்த வேண்டும்.

தொடர் அனர்த்தங்களினாலும் போராட்டங்கள் நிலவுவதாலும் பொருளாதர நெறுக்கடியினாலும் இலங்கை மீதான நம்பகத்தன்மை மற்றும் எண்ணப்பாடுகள் சர்வதேச அரங்கில் எதிர்மறையாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. முதலில் நாட்டின் சமாதானத்தை நிலை நிறுத்தி கரைந்துக் கொண்டிருக்கும் நம்பகத்தன்மையிலும் சமாதனத்தினதும் இஸ்தீர தன்மையினை நிலைநாட்ட வேண்டிய தேவை அல்லது பொறுப்பு அத்தனை இலங்கையர் கையிலும் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.

பல சந்தர்பங்களில் சுகாதாரமன உணவுகளை பெற்றுக்கொள்ள முடியாதிருத்தல், வெளிநாட்டு பார்வையாளர்கலுக்கான அனுமதி கட்டணங்கள் அதிகமாக அறவிடப்படுகின்றமை, சீரமைக்கப்படாத பாதைகள், சுற்றுலாத்துறை சார் மோசடிகள், வழிகாட்டிகளுக்கான பற்றாக்குறை  போன்றவற்றில் பல இடையூறுகள் காணப்படுகின்றன.

நெடுநீளப்பயணங்களை பயணிகள் மேற்கொள்ளும் போது சிற்றுண்டி அல்லது பிரதான உணவுத்தேவையானது அத்தியாவசஇயமான ஒன்றாகும். தங்கள் தேவைகளை பூர்த்திசெய்துக்கொள்ள ஊடகங்களைத்தேடும் போது ஒரு தரமான உணவகத்தை தேடி அடைவதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுகின்றது. அவ்வாறு பாதையோரங்களில் அரிதான சில உணவகங்கங்களை நாடும் போதும் அவற்றில் பெருமபாலானவை லாபங்களை நோக்காக கொண்டு சுகாதார நெறிமுறைகளை பின்பற்றுவது கிடையாது. இவ்வறான நிலைகளில் அரச சுகாதார உத்தியோகஸ்தர்களின் துணையோடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கூடவே புகையிரதங்களில் சிற்றுண்டி சாலைகள் முறையாக பேணப்படாததை கண்ணுற்றிருக்கிறேன். பேருந்து பயணங்களின் போது தேனீர் இடைவேளைக்காக சாரதிகளினதும் நடத்துநர்களினதும் தனிப்பட்ட தேவைப்பூர்த்திக்காக அடிப்படை உணவு பாதுகாப்புகாளைக் கூட பேணாத உணவகங்களில் பேருந்துகள் தரிக்கப்படுவதுண்டு.

பெரும்பாலான சுற்றுலாத்தலங்களில் பார்வையாளருக்கான பற்றுச்சீட்டோ, கட்டணங்களோ அறவிடப்படுகின்றது. இவ்வாறு அறவிடும் போது பொதுவாக சுயதேசிகளுக்கு குறைவாகவும்  வெளிநாட்டவர்க்கு அதிகமாகவும் அறவிடப்படுவதுண்டு. இருந்த போதிலும் சில சந்தர்ப்பங்களில் சில இடங்களில் வெளிநாட்டவர்க்கென அறவிடப்படும் கட்டணத்தொகைகாள் மிக அதிகமாக காணப்படுகின்றது. இதனால் அதிகளவிலான பணத்தினை செலவளிக்க வேண்டியிருக்கின்றது.

பல இடங்களில் சுற்றுலா தலங்களுக்கு பிரயாங்களை மேற்கொள்ளும் போது சீரற்ற பாதைகளில் பயணிக்க நேரிடுவதால் குறித்தப் பயணம் கடுமையாக  அமைந்து விடுகின்றது. குறிப்பாக மலைநாட்டு பிரதேசங்களின் இயற்கை அழகின் பால் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஈர்க்கப்படுகின்ற போதும் குறிப்பிட்ட இடத்தினை அடைவதற்கான சீரான பாதைகள் இல்லாததால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. இவ்வாறான பாதைகளை சீரமைத்துக்கொடுப்பதன் மூலம் அதிகலவிலான பிரயாணிகளை தக்க வைத்துக் கொள்ள முடிவதோடு அப்பிரதேச மக்களுக்கும் அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

ஒழுங்கமைக்கப்பட்ட கழிவகற்றல் முறைகளோ உரிய இடங்களில் குப்பைத்தொட்டிகளையோ காட்சிப்படுத்தாத போது சூழல் மாசடைவை தடுக்கமுடியாமல் போகின்றது. இதனால் அவ்விடத்தின் பிரத்தியேக எழில்  கெடுவதுடன் துர்நாற்றம் மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது. ஆகவே சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இத்தகைய இடங்களை சுத்தமாக பேணுதல் அபிவிருத்திக்கு வழிவகுக்கும்.

சுற்றலா வழிகாட்டிகளுக்கான கற்கை நெறிகளை ஏற்படுத்திக்கொடுத்து வேலைவாய்ப்புகளை விஸ்தரிக்கலாம். இதனூடாக வழிகாட்டிகளுக்கென அதிக பணம் ஒதுக்கவேண்டிய தேவையிலிருந்து சுற்றுலா பிரயாணிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

மேலும் வெளிநாட்டவர்களிடம் பொய்யான வகையில் பண்ட விலையை அதிகரித்து முதல் பறித்தல், முச்சக்கர வாகனங்கள்,டக்சிகளுக்கு அதிகளவான கட்டணங்களை அறவிடுதல், பாலியல் தொள்ளைகளுக்கு உற்படுத்துதல், கொள்ளைகள் போன்ற குற்ற செயல்களை முற்றிலும் ஒழிக்க முற்பட வேண்டும்.

போக்குவரத்து மற்றும் பாதை அபிவிருத்தி

எந்தவொரு துறையை மேம்படுத்தவும் அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லவும் பாதைகளும் போக்குவரத்தும் பொருளாதார சக்கரத்தின் அச்சாணிகளாய் அமைகின்றன. எந்தவொரு மூலப்பொருளை கொண்டு செல்வதற்கும் முடிவு பொருட்காளை விநியோகிப்பதற்கும் போக்குவரத்து முக்கிய பங்காற்றுகின்றது.

இலங்கையை பொருத்த மட்டில் தரை, வான், நீர் மூலமான மார்கங்களின் ஊடாக போக்குவரத்து நடைபெறுகின்ற போதிலும் தரைவழி போக்குவரத்தானது அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. 12,537.247கி.மீ அளவிலான A,B,C பெருந்தெருக்களை கொண்டுள்ளதோடு 312.586கி.மீ நீளமான அதிவேக பாதையை RDA பொறுப்பேற்று நடாத்தி பராமரித்து செல்கிறது. கூடவே பொது வாகன பயன்பாட்டில் புகையிரத போக்குவரத்தும் பிரதானமாக தொழிற்படுவதுடன் புகையிரத திணைக்கலத்தின் கீழ் இது இயங்குகின்றது.

பாரிய அளவிலான பாதை அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்கின்ற போதிலும் பல கிராமங்களில் குன்றும் குழியுமாக இருக்கும் பாதைகளையும் நம்மால் காணமுடிகின்றது.

போக்குவரத்துத் துறையில் கட்டியெழுப்ப வேண்டிய விடயங்களை பற்றிப் பேசும் போது, பொது வாகன போக்குவரத்தை இன்னும் முடியுமான அளவு மேம்படுத்தல் வேண்டும். குறிப்பாக சிறந்த தரத்திலான, நம்பகத்தன்மையுடன், சௌகரியமாய் பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வகையில் பொது போக்குவரத்தை உருவாக்கிக் கொள்வதன் மூலம் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும். கூடவே இன்றய பூதமாய் உருமாறி நிற்கும் எரிபொருள் பிரச்சனைக்கு கனிசமான அளவு தீர்வு கிடைக்கும். இதன் போது எரிபொருள் கொள்வனவிற்கான பணத்தை சேமிக்க முடிவதுடன் சூழலையும் பாதுகாக்க முடியும்.

முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு குறைந்த வட்டிக் கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து நாங்கு சக்கர வாகனங்களுக்கு மாற்றிக்கொள்ள உற்சாகம் அளிப்பதன் மூலம். அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி வீதி விபத்துக்களையும் குறைத்துக் கொள்ள முடியும்.

பெருந்தோட்டபயிர் செய்கை மற்றும் கைத்தொழில்

மேலைத்தேயர்களின் வருகையின் பின்னர் அறிமுப்படுத்தப்பட்டு வெகுவாக வளர்ச்சிக்காண தொடங்கியதே பெருந்தோட்ட பயிர்செய்கையும் அது சார் உற்பத்திகளும். வர்த்தக ரீதியில் அதிக லாபம்  ஈட்டித்தரும் துறைகளில் பெருந்தோட்டப்பயிர்ச்கெய்கையின் பங்கு முக்கியமானது.

பிரதானமாக தேயிலை, ரப்பர், தென்னை, கரும்பு போன்ற பயிர்களை உற்பத்தி செய்வதுடன் இவை பெரும்பாலும் வர்த்தக பயிர்களாகவே இருக்கின்றன. சர்வதேச ரீதியில் தனக்கென தனி அடையாளத்தோடு தேயிலை ஏற்றுமதியில் இலங்கை 3ஆம் இடத்தை வகிப்பது குறிப்பிடதக்கது.

ஆகவே பொருந்தோட்ட துறை சார் மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலமும் முடிபு பொறுட்களின் தரத்தை அதிகரிக்கலாம். குறிப்பாக அத்தியாவசிய தேவைகளை கூட நிரைவேற்றிக் கொள்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கும் மலையக தேயிலை தோட்ட தொழிளலர்களின் நிலை வறுத்தமளிக்கின்றது.

வேலை வாய்ப்புகளின்றி இருக்கும் எத்தனையோ இளைஞயர்களுக்கும், நாட்டின் பிற பிரஜைகளுக்கும் சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக முறையான கற்கைநெறிகளையும் கல்வியையும் வழங்குவதன் மூலம் கைத்தொழில் சார் வேலைவாய்ப்புகளையும் உற்பத்திகளையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஆகவே இத்தகைய செயற்பாடுகளை கட்டமைத்து செய்ற்படுத்துவதன் மூலமாக தன்னிறைவான சுபீட்சமான நாளைய இலங்கையை நம்மால் கட்டியெழுப்ப முடியும். எனினும் அரசு தரப்பில் மாத்திரமல்லாது பொதுமக்களின் இணக்கப்பாடும் நாட்டை கட்டியெழுப்புவதில் உறுதுணையாக அமையும்.

ஹஜன் அன்புநாதன்

Gulabi Run | Restaurant Review

டெஸி ட்விஸ்ட் உடனான கொழும்பின் வீதிகடை

கடந்த சில வருடங்களாக கொழும்பில் புதிய பல நல்ல மெனுக்களுடன் வீதிகடைகள் உருவாகி வருகின்றன. அவ்வாறான வீதிகடை பட்டியலுள் அடங்க கூடிய வகையில் மெரின் ட்ரைவ் மற்றும் ப்ராங் ப்ஃபோர்ட் ப்ளேஸ் சந்திக்கும் இடத்தில் “டெஸி இட்டாலியன்” என்ற நோக்குடன் பெண் ஒருவரால் நடத்தப்படும் கடை தான் குலாபி ரன் ஆகும். பார்ப்பதற்கே கண் கவரும் அலங்காரங்களுடனான இக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தமது வாகனங்களை தரிப்பதற்கான இடவசதியும் உண்டு. அதனால் நாங்கள் ஆறுதலாக மெனுவில் இருந்த பல டிஷ்களை முயற்சி செய்ய முடிந்தது.

பாணி பூரி (ரூபாய் 350) [4/5]

அவர்களது பாணி பூரியை வைத்தே அவர்களுடைய உணவகத்தினை பற்றி கூற முடியும். உண்மையிலேயே சுவை மற்றும் அளவு என இரண்டிலுமே அவர்களது பாணி பூரி குறை கூற முடியாத அளவிற்கு இருந்தது. இந்த டிஷ் நீங்கள் பிறருடன் பகிர்ந்து கொள்ள கூடிய ஓர் டிஷ்ஷாகும் ஆனால் நான் யாருடனும் பகிர்ந்து கொள்ள போவதில்லை. சேவரி மற்றும் ஸ்வீட்னஸ் இரண்டையும் ஒருங்கே சுவைக்க விரும்பினால் இவர்களது பாணி பூரியை முயற்சியுங்கள்.

தாஹி பூரி (ரூபாய் 350) [5/5]

இந்த டிஷ் வெளிநாடுகளில் பிரபலமான ஒன்று. முன்பு குறிப்பிட்டிருந்த பாணி பூரியை போலவே இதுவும் அதே வகையான ப்ளேவர்களால் ஆனது தான் ஆனால் கன்டிமன்ட்டின் ஹர்பல் நோட்ஸினை சற்று அதிகமாக முன்நிலைபடுத்துவதாக இருந்தது. இது தனது ப்ளேவர் மற்றும் புத்துணர்வு ஊட்டல் மூலமாக மனதில் இடம்பிடித்து விடும். இனி நான் வேலையிலிருந்து வீட்டுக்கு செல்லும் போது இதில் ஒரு பெக்கினை வாங்கி செல்ல உள்ளேன்.

ரஸ்மலாய் (ரூபாய் 250) [4/5]

குலாபியில் உள்ள உணவுகளில் ரஸ்மலாய் பற்றி விளக்குவது சற்று சிக்கலான ஒன்று ஆனால் இது இனிப்பு பிரியர்களுக்கான ஒன்று. இது தனது இனிப்பு மற்றும் ப்ளேவரில் சிறப்பாக விளங்குகிறது. இது ஓர் ஆடம்பரமான உணவு ஏனெனில் இதில் பிஸ்தா இடம்பெற்றிருந்தது.

மட்கா குல்பி (LKR 250) [5/5]

இதன் தோற்றம் மிகவும் க்யூட்டான ஒன்றாக இருந்தது. மாலை 5மணியளவில் கொழும்பு எவ்வளவு பரபரப்பான மற்றும் சூடான சூழலில் இருக்கும் என்பது நமக்கு தெரியும். இந்த நேரத்தில் என்னை கூல் செய்யும் டிஷ்ஷாக இது மாறியது. இதனுடைய சுவை, தோற்றம் என இரண்டுமே இந்திய வீதி உணவகங்கள் பற்றிய எனது எதிர்பார்ப்பினை திருப்தி செய்தது. மாலை 4மணியளவில் மெரின் ட்ரைவ் பக்கம் நீங்கள் செல்வீர்களாயின் இந்த டிஷ்ஷினை கண்டிப்பாக முயற்சியுங்கள்.

செவ்வியான் (LKR 250) [3/5]

ப்ளேவர் அதிகமாகவுள்ள உணவினை நீங்கள் விரும்பாதவர்களாயின் இதோ உங்களுக்கான டிஷ். இதில் அதிகமான வெனிலா சுவை இருந்தது. இது என்னுடைய ப்ஃவரிட் டிஷ் அல்ல ஆனால் நீங்கள் வேண்டுமானால் முயற்சித்து பார்க்கலாம்.

மும்பை பிட்ஸா (LKR 450) [5/5]

டெஸி இட்டாலியன் ப்ஃஷன் என்ற வார்த்தையை கேட்டதிலிருந்து நான் எதிர்ப்பார்த்திருந்த டிஷ். இது நாம் சாதாரணமாக சாப்பிடும் பிட்ஸா போல கிடையாது ஆகையால் தின் மற்றும் க்ரஸ்ட்டினை எதிர்ப்பார்க்க வேண்டாம். இதன் மாவின் அமைப்பு மிக மெருதுவாக இருந்தது. இதன் டொப்பிங்ஸ் எதிர்ப்பாராத விதமாக ஸ்பைஸியாக இருந்தது. நீங்கள் முழு உணவாகவோ ஸ்நெக்காகவோ உண்ண விரும்பினால் இது சரியான தேர்வாக இருக்கும். நாம் வழமையாக சாப்பிடும் பிட்ஸா போல் இல்லாவிட்டாலும் இது சுவையாக தான் இருந்தது.

ஜிகர்தண்டா தூத் (LKR 300) [3/5]

இந்த பெயர் மிகவும் பிரபலாமானது ஆனால் எனக்கு பெரிதாக பிடிக்கவில்லை. என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மட்கா குல்ஃபி உடன் ஒப்பிடும் போது இது இரண்டாவது தான். ஏனெனில் இது பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்டிருந்தது.

வெளித்தோற்றம்

சூரிய கதிர் ஔிகள் பட்டு தெரிக்கும் பின்க் நிற தள்ளு வண்டி தான் இந்த உணவகம். நீங்கள் பல மணி நேர வேலைப்பளுவிற்கு பின் வீடு திரும்பும் போது ரிலாக்ஸாக உட்கார்ந்து சாப்பிடவும் வீட்டிற்கு பெக் செய்து கொண்டு போகவும் சிறந்த ஓர் தெரிவாக குலாபி ரன் இருக்கும். இங்கு வேலை செய்வோர் மற்றும் உரிமையாளர் என இருவருமே மிகவும் நட்பான சேவையினை வழங்கியமை இவர்களது உணவிற்கு தனி சுவையினை தேடி தருகிறது.

குறிப்பு: நீங்கள் இங்கு செல்லும் போது கண்டிப்பாக குல்ஃபியினை ட்ரை செய்யுங்கள்.

‘அம்மா எனக்கொரு டவுட்’ – Song Review

இந்து சமுத்திரத்தின் முத்து என பிரபலமடைந்திருந்த நம் நாடானது இன்று போராட்டங்களின் களமாக மாறி நிற்கிறது. தினமும் எங்காவது ஓர் இடத்தில் போராட்டம் இடம் பெற்ற செய்தி காதினை வந்து சேர்கிறது. இவ்வாறான பதற்றமான சூழ்நிலையினை பற்றி தேடி அறிய நினைக்கும் நபர்களுக்கு விளக்கம் கொடுக்கும் பாடலாக Sam Dill Ruckshan இன் ‘அம்மா எனக்கொரு டவுட்’ என்ற பாடல் அமைந்துள்ளது. இப்பாடலிற்கான எழுத்து மற்றும் இசை என இரண்டுமே Sam Dill Ruckshan தான். ஆமாம் நீங்கள் நினைப்பது சரி! இது ஒரு தனி மனித படைப்பு.

ஆரம்பத்தில் விமர்சனம் செய்வதற்காக எனக்கு இப்பாடலின் லின்க் அனுப்பப்பட்ட போது முன்பு கேட்ட ‘கலையாத கனவே’ என்ற பாடல் போல் தான் இதுவும் இருக்கும் என நினைத்து லின்க்கினை க்ளிக் செய்தேன் ஆனால் இந்த பாடல் என் எதிர்ப்பார்ப்பினை முற்றாக தகர்த்தெறிவது போல் இருந்தது. வாழ்க்கையிலும் சரி வேலையிலும் சரி நாம் எதிர்ப்பார்ப்பது எங்கு நடக்கிறது! நாம் தான் நடப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். சரி சொந்த கதை வேண்டாம் பாட்லின் கதைக்கு செல்வோம்.

இந்த பாடல் 2நிமிடங்கள் மற்றும் 10 செக்கன் நீளமானது. சில பாடல்களை கேட்கும் போது “என்ன அதுக்குள்ள முடிஞ்சா?” என்ற எண்ணம் பிறக்குமல்லவா அது போல் தான் எனக்கும் தோன்றியது. இதன் நோக்கம் தற்போதைய சூழலை விளக்குவதாகும். அதற்காக எழுதப்பட்ட வரிகள் சிந்தனையை தூண்டுவதாகவும் மொடர்ன் இளைஞர்களை ஈர்க்க கூடியதாகவும் அமைந்துள்ளது. இதன் இசை அதன் வரிகளுக்கு பொருத்தமானதாகவும் இடைக்கு இடையில் வருகின்ற சத்தங்கள் பாடலை மேலும் மெருகூட்டுவதாகவும் உள்ளது. சில பாடல்கள் நன்றாக இருந்தால் வீடியோ சொதப்பலாக இருக்கும் ஆனால் இவரது சிம்பிளான வீடியோ எடிட்டிங் பாடலுக்கு புது பொலிவினை பெற்றுக் கொடுத்துள்ளது. எல்லாமே நேர்த்தியாக உள்ள இந்த ‘அம்மா எனக்கொரு டவுட்’ பாடலில் எனக்கு ஒரு டவுட் உள்ளது. இந்த பாடலின் இடையில் “நோ பேட் வர்ட்ஸ்” என கூறியிருப்பார். அந்த பேட் வர்ட் என்ன? என்பது தான் என்னுடைய டவுட்.

ரமழான் காலத்தில் கொழும்பில் பெற்றுக் கொள்ளக் கூடிய இப்தார் சலுகைகளுக்கான வழிகாட்டி

பிரார்த்தனை, பிரதிபலிப்பு மற்றும் சுய ஒழுக்கம் போன்ற முக்கிய தனிச்சிறப்புகளுடன் புனித ரமழான் மாதம் நம்மீது வந்துவிட்டது. ரமழானின் மிகத் தெளிவான அம்சம் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு மற்றும் பானங்களைத் தவிர்ப்பதாகும், ஆனால் இது எந்த வகையிலும் ஆனால் இதை எந்த அடிப்படையிலும் பின்னடைவை ஏற்படுத்தாது! உலகளாவிய ரீதியில் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு விடயம் இருக்குமாக இருந்தால் – அது இப்தார் ஆகும். இப்தார் என்பது முஸ்லிம்கள் தினசரி ரமழான் நோன்பை சூரிய அஸ்தமனத்துடன் முடித்துக் கொள்ள உட்கொள்ளும் உணவாகும் – இந்நேரம் உணவகங்கள் மற்றும் பிற உணவகங்கள் பலவிதமான உணவுகளுடன் சில அருமையான பருவகால மெனுக்களை வழங்குவதற்கு சிறந்த நேரமாகும்.

வேடிக்கையான விடயம்: உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் பேரீச்சம்பழத்துடன் ரமலானில் நோன்பு திறக்கும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர். பேரிச்சம்பழத்தில் சர்க்கரை, நார்ச்சத்து, தாதுப் பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் காணப்படுவதோடு  எளிதில் ஜீரணமாகக்கூடியதாகும் இந்த பண்புக்கூறுகள் அவற்றை சக்தி மற்றும் ஊட்டச்சத்துக்களை விரைவாக பெறக் கூடிய மூலமாக ஆக்குகின்றன – உடலின் இழந்த சக்தியை மீளப் பெறவும், உடலின் இரத்த குளுக்கோஸ் அளவை விரைவாக இயல்பு நிலைக்குத் திருப்ப உதவவும் சிறந்தது. இலங்கை முஸ்லீம்களும் தென்னிந்தியாவில் உள்ளவர்களும் கான்ஜி’ அல்லது, பொதுவாக அறியப்படும் ‘கஞ்சி’ எனும் மற்றொரு முக்கிய உணவுப் பொருளைக் நோன்பு துறப்பதற்கு  உட்கொள்கின்றனர்‘. இது அரிசி மற்றும் பிற பருப்புகளையும், சில சமயங்களில் இறைச்சித் துண்டுகளையும் கொண்ட லேசாக மசாலா கலந்து சமைக்கப்பட்ட கஞ்சியாகும். இது சத்தானது மற்றும் ஜீரணிக்க எளிதானதாகும். இவை இரண்டும் கொழும்பு முழுவதும் உள்ள இப்தார் மெனுக்களில் பரவலாக காணப்படும்.

இப்தார் என்பது அனைவராலும் அனுபவிக்க கூடிய ஒன்றாகும்  – எனவே இபதாருக்கு அல்லது சாதாரணமாக சில சுவையான விருந்துகளை வழங்கக் கூடிய இடங்களை இங்கே பார்க்கலாம்!

Ramada Hotel Colomboஇந்த ஆண்டு ரமதாவில் நடைபெறும் ரமழானில் பேரீச்சம்பழம், கஞ்சி மற்றும் சிற்றுண்டிகள் (Samosa, Rolls, Chocolate Eclairs போன்றவை) மற்றும் முஸ்லிம்/அரேபிய உணவு வகைகளான அடுக்கு ரொட்டி மற்றும் பக்லாவா போன்ற தரமான உணவுகளை இப்தார் பொதிகள் உள்ளன. இஃப்தார் பொதிகள் இரண்டு தெரிவுகளில் வருகின்றன, மேலும் ஒவ்வொரு பொதியும் இரண்டு நபர்களுக்கு போதுமானது, இது எந்த வகையான ஜோடிகளுக்கும் – அது நண்பர்களாக இருந்தாலும் சரி, பங்காளர்களாக இருந்தாலும் சரி. ​​இப்தார் பொதிகளுக்கான முன்பதிவை 3 மணி நேரத்திற்கு முன்னதாக வழங்க வேண்டும், மேலும் பஃபே மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

ரூ3950 (ஒரு இப்தார் பொதி)

ரூ. 4300 (ஒரு நபருக்கு பஃபே)

Instagram: https://www.instagram.com/ramadacolombo/

தொடர்புக்கு: 011 242 2001

முகவரி: 30, சர் மொஹமட் மக்கான் மார்க்கர் மாவத்தை, கொழும்பு 03

Mitsi’s Delicacies

2022 ஆம் ஆண்டிற்கான மிட்சியின் இப்தார் பொதிகள் 5 வகைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பொதியிலும் பேரீச்சம் பழம், கஞ்சி மற்றும் மிட்ஸியின் பிரபலமற்ற BBQ தட்டு காணப்படுவதோடு, ஒவ்வொரு பொதியிலும் மேலதிகமாக பொருட்களும் காணப்படும்.

விலை:

தொகுப்பு 1 (2 பேருக்கு) – ரூ 5500

தொகுப்பு 2 (2 பேருக்கு) – ரூ. 6000

தொகுப்பு 3 (4 பேருக்கு) – ரூ. 9000

 தொகுப்பு 4 (6 பேருக்கு) – ரூ. 12000

தொகுப்பு 5 (8 பேருக்கு) – ரூ. 9000 முதல் (24 மணிநேரத்திற்கு முன் முன்பதிவு செய்யவும்)

தொகுப்பு 4 (12 பேருக்கு) – ரூ. 17000 (24 மணிநேரத்திற்கு முன் முன்பதிவு செய்யவும்)

தொடர்புக்கு: 077 716 3090

Instagram: https://www.instagram.com/mitsisdelicacy/

இணையத்தளம் – https://mitsis.lk/shop/

முகவரி: 34A, Bagatalle Rd, Colombo 03

Arabian Knights

மத்திய கிழக்கு உணவு வகைகளுக்கு பெயர் பெற்ற Arabian Knightsன் இப்தார் மெனு ஆச்சரியப்படுவதற்கில்லை. Beef Samboshek, Falafel, ஹம்முஸ், Mini Shawarma, Grills மற்றும் இனிப்பு Muhalabhiya (பொதுவாக ரோஸ் அல்லது ஆரஞ்ச சுவை கொண்ட ஒரு இனிப்பு பால் புட்டிங்) ஆகியவை இந்த பாரம்பரிய மத்திய கிழக்கு/மொராக்கோ உணவுப் பட்டியலில் உள்ள சில பொருட்கள் ஆகும். தினமும் பெற்றுக் கொள்ள அல்லது விநியோகத்திற்கு நேரம் மாலை 5.30 – இரவு 7.30. காணப்படும்.

விலை: ஒரு நபருக்கு 2915 ரூபாய்

தொடர்புக்கு: 011 230 1031

Instagram: https://www.instagram.com/arabianknights_lk/

முகவரி: 377, காலி வீதி, கொழும்பு 03

Chambers Colombo (at Park Street Mews)

சேம்பர்ஸ் மற்றொரு நன்கறியப்பட்ட அரபு உணவகமாகும், மேலும் அவர்கள் மத்திய கிழக்கு உத்திகளை இந்த ரமலானில் தங்கள் கவர்ச்சியான இப்தார் உணவுப் பட்டியலுடன் எங்கள் வீடுகளுக்குள் கொண்டு வருகிறார்கள். ஹரிஸ்ஸா ஹம்முஸ் முதல் சீஸ் சம்போசெக் மற்றும் மட்டன் முசாக்கன் ரோல்ஸ் வரை, அரபு ரொட்டி மற்றும் தபூலே (சாலட்) போன்ற மேலதிக உணவுப் பொருட்களுடன் பரிமாறப்படுகிறது- இவை அனைத்தையும் இங்கு பெறலாம்.

அவை இரண்டு மற்றும் நான்கு பகுதிகளாக கிடைக்கின்றன- நாங்கள் உங்களுக்கு போதுமான நம்பிக்கையை அளித்துள்ளோம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்- எனவே நீங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சென்று உண்டு மகிழுங்கள்.  மாலை 5.30 மணி வரை முன் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும், மேலும் UberEats/Pickme Food வழியாக பெற்றுக் கொள்ளவோ, நேரடி விநியோகம் மூலமோ பெற்றுக் கொள்ளலாம். (இங்கு விலைகள் மாறுபடலாம்).

விலை: LKR

தொடர்புக்கு: 0772 100 009

Instagram: https://www.instagram.com/chamberscolombo/

முகவரி: 48 டி, பார்க் ஸ்ட்ரீட், கொழும்பு 2

Nuga Rosmead 

Nuga Rosmead ஆர்கானிக் கட்டணம் மற்றும் மண்ணில் இருந்து கிண்ணத்திற்கு எனும் அணுகுமுறையில் கவனம் செலுத்துவது அவர்களின் ரமலான் இப்தார் பட்டியலில் பிரதிபலிக்கிறது. ஒரு நிரப்பப்பட்ட உயர் ரக பேரீச்சம் பழம்,  fatoush salad, pita ரொட்டி மற்றும் Hammus, Harira (பருப்பு, தக்காளி, கொண்டைக்கடலை மற்றும் சேமியாவுடன் கூடிய சூப்) மற்றும் குனாஃபா ஆகியவை இவர்கள் வழங்கும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சில உணவுப் பொருட்கள் – இவை அனைத்தும் சிறந்த உள்ளடக்கங்களை  மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன, அது தாவர அடிப்படையிலான அல்லது இறைச்சி அடிப்படையிலானதாக எதுவாயினும். தினமும் மாலை 4 மணிக்கு பிறகு பெறக் கூடியதாக இருக்கும்.

விலை: LKR

தொடர்புக்கு: 077 344 5377

Instagram: https://www.instagram.com/cafe_nuga/

முகவரி: 69A, Green Path, கொழும்பு

Peppermint Café  

பெப்பர்மின்ட் Cafeல் இப்தாருக்கு, எங்களிடம் சாண்ட்விச் (நான்கு அறுசுவை சுவைகள்- pulled மாட்டிறைச்சி, மிருதுவான கோழி, முட்டை மற்றும் மயோ, அல்லது கறி கோழி), பாரம்பரிய கஞ்சி தவிர ஐஸ்கிரீமுடன் Waffle மற்றும்  Faluda. , பேரீச்சம் பழம் மற்றும் சமோசாக்கள். தொகுப்பு ஆரோக்கியமானது, முழுமையான இப்தார் உணவை வழங்குகிறது மற்றும் நாள் முழுவதும் கிடைக்கும்.

தொடர்புக்கு: 0756 320 420

Instagram: https://www.instagram.com/peppermintcafe_srilanka/

முகவரி: 76, விஜேராம மாவத்தை, கொழும்பு 7

Street Burger

Street Burgerன் மூன்று பேரீச்சம் பழம், தெரிவு செய்யப்பட்ட பானம்,  அல்லது nitrous chicken, 2 துண்டுகள் மிருதுவான chicken ripple strips mini toast செய்யப்பட்ட பனிஸ், fries மற்றும் 500 மிலி தண்ணீர் பாட்டில் ஆகியவை உண்மையிலேயே all in one பொதி ஆகும். இப்தார் செய்வது பற்றி பேசுங்கள்! துரித உணவுக்கான பசியின் போது இப்போது நீங்கள் கவலைப்படத் தேவையில்லை – ஏனென்றால் இந்த சிறந்த சலுகை உங்களுக்கு தேவையானதை வழங்கும்.

குறிப்பு: தினமும் மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை செல்லுபடியாகும்.

விலை: பெற்றுச் செல்ல ஒரு நபருக்கு 1500 ரூபாய்

             Ubereats இல் ஒரு நபருக்கு LKR 1900

தொடர்புக்கு: 0112 595 559 / 0777 887 777 / 0777 179 179

Instagram: https://www.instagram.com/streetburgersl/

முகவரி: 34, ரம்யா வீதி, கொழும்பு 4

899, கோட்டே வீதி, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே

293, காலி வீதி, கல்கிசை

Platter Me 

Platter Me ன் வழக்கத்திற்கு மாறான இஃப்தார் 2-3 நபர்களுக்கான புதிய மற்றும் கவர்ச்சிகரமான  தட்டில், ஸ்ட்ராபெர்ரிகள், திராட்சைகள், பேரீச்சம்பழங்கள், கடலை வகைகள்,  4 tuna sandwiches, 4 chicken wraps, 4 vegetable samosas, 4 egg boats மற்றும் 500 மிலி  பழச்சாறுபோன்றவை பொதி செய்யப்பட்டிருக்கும். இந்த தட்டு சந்தேகத்திற்கு இடமின்றி ஆரோக்கியமான தேர்வுகள் மற்றும் சுவையான தன்மையை கொண்டிருக்கும். இருப்பினும், ஒரு நாள் முன்னதாக முன்பதிவு செய்யப்பட வேண்டும்.

விலை: 2-3 பேருக்கு ரூ. 3,900

தொடர்புக்கு: 075 930 4812

Instagram: https://www.instagram.com/platterme23/

Indian Summer

இந்த உணவகம், நீங்கள் வீட்டில் இருந்தாலும், வேலையில் இருந்தாலும் அல்லது பயணத்தில் இருந்தாலும் நீங்கள் அனுபவிக்கக்கூடிய இந்திய சுவையிலான இப்தார் உணவை வழங்குகிறது.

இந்த பொதிகள் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய இரு பகுதிகளிலும் உள்ள அவர்களது விற்பனை நிலையங்களில் கிடைக்கின்றன, மேலும் கோழி இறைச்சி வடை, bajiya, மரக்கறி சமோசா, chicken lollipop, chicken kathi roll மற்றும் வழக்கமான பேரீச்சம்பழங்கள் மற்றும் கஞ்சி போன்ற உணவுப் பொருட்களும் அடங்கும்.

விலை: ஒரு நபருக்கு ரூ 1499

தொடர்புக்கு: 011 266 2112

Instagram: https://www.instagram.com/indiansummerlk/

முகவரி: 42, ஹோர்டன் பிளேஸ், கொழும்பு 7

Tea Avenue Jawatta Road – Haven’t decided if they will be doing

Tea Avenue மூன்று-உணவு வகைகளுடன் ஒழுங்கு செய்யப்பட்ட இப்தார் பொதியில் சிக்கன் கஞ்சியை ஸ்டார்ட்டராகவும், தேன் மெருகூட்டப்பட்ட கோழியுடன் மசித்த உருளைக்கிழங்கை முக்கியமாகவும், மற்றும் பேரீச்சம் பழம் மற்றும் chocolate chip cookieஐ dessertஆகவும் வைத்துள்ளது. எளிமையானது என்றாலும், இதனை அவர்களின் எந்த ஒரு கிளையிலும் மாலை 4 மணி முதல் நேரடியாகவோ அல்லது விநியோக சேவைகள் மூலமோ பெற்றுக் கொள்ள கூடியதாக இருக்கும்.

விலை: ஒரு நபருக்கு ரூ. 1,490

தொடர்புக்கு: 0773 367 879

Instagram: https://www.instagram.com/teaavenue1936/

முகவரி: 4, ஜவத்த வீதி, கொழும்பு 5

Paan Paan

Paan Paan இந்த ஆண்டு அவர்களது 3 வகையான புதிய உணவு வகைகளுடன் இப்தாரை எளிமையானதாக மாற்றப் போகிறது: இவை A, B மற்றும் C ஆகும். ஒவ்வொரு ஒழுங்கு செய்யப்பட்ட பொதியிலும் மூன்று உணவுகள் காணப்படும், ஒரு இனிப்பு, ஒரு பகுதி கஞ்சி மற்றும் பேரிச்சம்பழம் இருக்கும். Veg மற்றும் non-veg Chinese rolls, puffs, patties, pies, samosas, eclairs and profiteroles ஆகியவற்றுக்கு இடையே உணவுகள் மாறுபடும், ஒவ்வொரு பொதியும் மாறி மாறி ஒவ்வொரு நாட்களில் கிடைக்கும். தினமும் மாலை 4 மணிக்குப் பிறகு எந்த  Paan Paanன் உணவகத்திலிருந்தும் நேரடியாக/விநியோக சேவைகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.  மேலும் உங்கள் அருகில் உள்ள உணவகத்தை அழைத்து முன்பதிவு செய்யலாம்.

விலை: ஒரு பெட்டிக்கு ரூ. 570 (UberEats மற்றும் Pickme Food மூலம் விநியோக விலை மாறுபடும்)

தொடர்புக்கு: 011 750 0226

Instagram: https://www.instagram.com/paanpaanlk/

முகவரி: 84, லோரன்ஸ் வீதி, கொழும்பு 4

இணையதளம் – http://www.paanpaan.com

Chana’s

Chana’s ஒரு புகழ்பெற்ற வட இந்திய உணவகமாகும், மேலும் அவர்கள் இந்த ரமலானில் தங்கள் இப்தார் தேர்வின் மூலம் அனைத்து தடைகளையும் முறியடித்துள்ளனர் chicken satay sticks, kebabs, சமோசா மற்றும் tandoori chicken போன்ற பலவகையான அறுசுவை உணவுகளிலிருந்து  நீங்கள் தேர்வு செய்யலாம்; மற்றும் பொரித்த மற்றும் பொரிக்காத உணவு வகைகளையும் கூட தேர்வு செய்யலாம். அனைத்து உணவுகளும் அவை பிரபலமான இந்திய சுவைகளால் நிரம்பியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விலை: 85 ரூபாய்க்கு மேல்

தொடர்புக்கு: 011 793 9788

Instagram: https://www.instagram.com/chanas.lk/

முகவரி: 54, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை, கொழும்பு 6

Flip Burgers

இப்தாருக்காக burgerகளுக்கு ஏங்குகிறீர்களா?, ஆனால் எங்கு வாங்கலாம் என்று தெரியவில்லையா? மேலும் தேட வேண்டாம், flip burgers நீங்கள் கவர்ந்துள்ளீர்கள். அவர்களின் தொகுப்புகளில் ஒற்றை, இரட்டை மற்றும் குடும்ப விருப்பங்கள் அடங்கும். வாடிக்கையாளர்கள் பலவிதமான பர்கர்கள், பொரியல்கள் மற்றும் பானங்களில் ஒரு கிண்ணம் கஞ்சி மற்றும் ஓரிரு பேரீச்சம்பழங்களுடன் செல்ல தேர்வு செய்யலாம். மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை ஆர்டர் செய்யலாம்.

விலை: LKR 2797 (சிங்கிள் பேக்)

 LKR 5594 (டபுள் பேக்)

 LKR 11188 (குடும்பப் பொதி)

தொடர்புக்கு: 077 907 4686

Instagram: https://www.instagram.com/flipburgerslk/

முகவரி: 31, பெரஹெர மாவத்தை, கொழும்பு-03

360 by Coco Veranda

கோகோ உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் எண்ணற்ற சுவைகளை உள்ளடக்கியது, இருப்பினும் ஒரு தனித்துவமான இலங்கைச் சுவையுடன். ரமழானுக்கு, அவர்கள் வழக்கமான உணவு வகைகளை விட முற்றிலும் மாறுபட்ட உணவு வகைகளை அறிமுகம் செய்கின்றனர். அவர்களின் இப்தார் பேக்குகளில் 3 சிக்கன் அல்லது மட்டன் சமோசா மற்றும் கஞ்சி மற்றும் ஒரு பாட்டில் தண்ணீர் மற்றும் பேரிச்சம்பழம் ஆகியவை அடங்கும்.

விலை: ரூ 1000 (சிக்கன் சமோசா பேக்)

LKR 1300 (மட்டன் சமோசா பேக்)

தொடர்புக்கு: 011 266 2678

Instagram: https://www.instagram.com/360bycocoveranda/

முகவரி: 32, வார்ட் பிளேஸ், கொழும்பு-07

Marine Grill

Marine Grill கற்பனை செய்ய முடியாத எண்ணிக்கையிலான அறுசுவை விருந்துகளை உள்ளடக்கிய வாயில் எச்சில் ஊறும் வகையிலான இப்தார் பஃபேவை  முன்வைக்கிறது. பஃபே மாலை 6 முதல் 8 மணி வரை பல்வேறு பண்டிகை உணவுகளை பரிமாறுகிறது.

விலை: ரூ 2999 (திங்கள் முதல் வியாழன் வரை)

LKR 3799 (வெள்ளி முதல் ஞாயிறு வரை, போயா விடுமுறை நாட்கள்)

தொடர்புக்கு : 011 236 4727/ 077 730 0686

Instagram: https://www.instagram.com/marinegrill/

முகவரி: 25, நிலைய வீதி, கொழும்பு – 06

Mandarina Colombo

இந்த ரமழான் காலத்தில்,  Mandarina ஒரு இப்தார் பேக் மற்றும் பபே இரண்டையும் அறிமுகம் செய்ய கூடுதல் முயற்சி எடுக்கின்றது. அவர்களின் இப்தார் பேக்குகளில் பேரீச்சம்பழம், கோழி கஞ்சி, ஒரு சிறிய மீன் பனிஸ், ஒரு மாட்டிறைச்சி சமோசா, ஒரு மீன் கட்லெட், ஒரு இறால் spring roll மற்றும் வட்டிலப்பம் ஆகியவை தாராளமாக பரிமாறப்படுகின்றன. மறுபுறம் பஃபே அரபு உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் உணவுகளைக் கொண்டிருக்கிறது.

விலை: LKR 1900 (இப்தார் பேக்)

 LKR 3500 (இப்தார் பஃபே)

தொடர்புக்கு : 070 336 7119/ 070 258 3523/ 070 336 7122

(முன்பதிவுகளுக்கு)

Instagram: https://www.instagram.com/mandarinacolombo/

முகவரி: 453, மரைன் டிரைவ், கொழும்பு-03

Movenpick Hotel Colombo

Movenpick தினந்தோறும் ஏராளமான சுவையான உணவு வகைகளை வெளியிடுகிறது, மேலும் ரமழான் காலப் பகுதியில் அவர்கள் இதை நிச்சயமாக சிறப்பாக மேற்கொள்வார்கள். அவர்களின் இப்தார் பஃபே நிச்சயமாக வருபவர்களை மகிழ்விக்க கூடியதாகவும் குடும்பத்துடன் சென்று அனுபவிக்க கூடியதாகவும் இருக்கும். பஃபே தினமும் மாலை 6 மணி முதல் திறக்கப்படும்.

விலை: LKR 5500 (வார நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்)

LKR 5900 (சனிக்கிழமைகளில்)

தொடர்புக்கு : 011 745 0450

Instagram: https://www.instagram.com/movenpickcmb/

முகவரி: 24, அனகாரிக தர்மபால மாவத்தை, கொழும்பு-03

Cinnamon Grand Colombo

Cinnamon Grand Colombo ஆனது பிரதானமான பேரீச்சம்பழங்கள், சிற்றுண்டிகள் மற்றும் பழச்சாறுகள் அடங்கிய சிறப்பு இப்தார் பட்டியலுடன் ஒரு பெரிய பஃபேவைத் திறக்கிறது. இந்த ஆடம்பரமான விருந்து உண்மையிலேயே வித்தியாசமான ஒன்றாகும். பஃபே மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

விலை: ஒரு நபருக்கு ரூ 5200

தொடர்புக்கு : 011 249 7377

Instagram: https://www.instagram.com/cinnamongrandcolombo/

முகவரி: 77, காலி வீதி, கொழும்பு-03

போராட்டங்களை முடக்கும் பொலிஸாரின் அராஜகம்!

இலங்கையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும் காலங்காலமாக நாட்டில் இடம்பெற்று வரும் ஊழலுக்கு எதிராக நீதி கோரியும் மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளார்கள். காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்திற்காக இரவு பகல் பாராது போராடி வருகின்றார்கள்.

நாட்டு மக்களின் ஆர்ப்பாட்டம் காலி முகத்தில் மற்றும் கொழும்பு எல்லைக்குள் மாத்திரம் விரவியிருந்த நிலையில் புதிய மின் வலு மற்றும் சக்தி அமைச்சராக காஞ்சன ஜயசேகர நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த மக்கள் கடந்த செவ்வாய்க் கிழமை அன்று றம்புக்கண காலி திகன குருணாகல் மற்றும் மாவனெல்லை போன்ற பிரதேசங்களில் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

றம்புக்கண பகுதியில் இருந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் புகையிரதப் பாதையினை சுமார் 15 மணித்தியாலங்களுக்கும் மேலாக மறித்து வைத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் அல்லாத வெளிப்பிரதேசங்களில் இருந்து வந்த மக்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர். பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்துள்ளதுடன் துப்பாக்கிச் சூடும் மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சரவதேச அளவில் பெரும் கண்டணங்களுக்கு உள்ளாகியுள்ள இந்த விடயம் பொலிஸார் மீது அதிருப்தியை உருவாக்கியுள்ளது. மக்களின் அமைதிப்போராட்டத்தை சீர்குழைப்பதற்கு என காலி முகத்திடல் உட்பட பல்வேறு பிரதேசங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவான குழுக்கள் செயற்படுவதாகவும் இராணுவத்திலிருந்து ஒரு குழு இதற்காக செயற்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். என்றபோதிலும் இராணுவ ஊடகப் பிரிவு இதனை மறுத்துள்ளது. மேலும் றம்புக்கண விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பலப்பிரயோகம் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களை நாங்கள் அடக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.

இலங்கையில் பொலிஸார் இவ்வாறு அசமந்தப் போக்குடன் பொறுப்பில்லாமல் மக்களின் உயிருடன் விளையாடுவது இது முதல் தடவை கிடையாது. போராடும் மக்கள் பொலிஸாருக்கு மறியாதையினையே செய்கிறார்கள். உணவு பாணங்களை கொடுக்கிறார்கள் ரோஜாப் பூக்களை பரிசாக கொடுக்கிறார்கள். ஆனால் பொலிஸார் தமது துப்பாக்கியிலிருந்த தோட்டாக்களைதான் போராடும் மக்களுக்கு கொடுத்துள்ளார்கள்.

றம்புக்கணயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்ததாகவே பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தெரிவித்துள்ளார். 30,000 லீற்றர் எரிபொருளைக் கொண்ட பௌசருக்கு ஒரு குழுவினர் தீ வைப்பதைத் தடுப்பதற்காக பொலிஸார் குறைந்தபட்ச பலத்தை கையாண்டதாக பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்படக்கூடிய பாரிய சேதங்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

றம்புக்கணயில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் போது பொலிசார் அதிக பலத்தை பயன்படுத்தினார்களா என்பதை அறிய பொலிஸ் தலைமையக மட்ட விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்துள்ளது.

‘வெளிப்படைத்தன்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் போராட்டக்காரர்களினை கருத்தில் கொண்டு பொலிஸ் துறையும் ஆயுதப்படைகளும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘ஜனவரி 2022 வரை எங்களால் செய்யப்பட்ட முந்தைய எச்சரிக்கைகள் அதிகாரிகளால் கவனிக்கப்படாமல் போனது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. இந்நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க எமது உறுப்பினர்கள் தொடர்ந்தும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள்’ என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை கூறுகின்றது. சம்பவம் இடம்பெற்ற அடுத்த நாள் கேகாலை நீதிமன்றத்தில் நாடெங்கிலுமுள்ள பெருமளவான சட்டத்தரணிகள் நீதி கோரி ஒன்றுகூடியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரின் அராஜகத்தை எதிர்த்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு றம்புக்கணயில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது. அத்துடன் சர்வதேச தலைவர்கள் பொலிஸாரின் பொறுப்பற்ற செயலுக்கு கண்டனங்களை வெளியிட்டுள்ளார்கள்.

இது தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் கவலை தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் ஆர்வலர்களான ஜுலி சங் மற்றும் டேவிட் கின்னன் ஆகியோரும் றம்புக்கண சம்பவத்திற்கு கண்டனங்களை வெளியிட்டுள்ளார்கள்.

‘பட்டினியுடனும் விரக்தியுடனும் வந்த ஒரு மனிதர் இறந்து விட்டார். ஏனென்றால் அந்த மனிதரை பாதுகாக்க எங்களிடம் மனிதநேயம் இல்லை. கோடாபய ராஜபக்ஷ அவர்களே இந்த நாட்டின் கண்ணீருக்கு அப்பால் உங்களையும் உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது’ என றம்புக்கண சம்பவம் குறித்து எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தன டுவிடர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

முன்னாள் கிரிகெட் வீரர் மஹல ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில் ‘மக்கள் பொதுச் சொத்துக்களை சேதம் செய்தாலோ வன்முறைகளில் ஈடுபட்டாலே அவர்களை கைது செய்யலாமே தவிர துப்பாக்கியால் சுட முடியாது. இதுதான் ஜனநாயகமா? இதுதான் சட்டத்தின் பூமியா?’ என்று இலங்கை பொலிஸாரிடம் வினவியிருந்தார்.

இந்நிலையில் றம்புக்கண பிரதேசத்தில் அண்மையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு தொடர்பில் கேகாலை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பி’ அறிக்கையை மாற்றியமைத்ததாக றம்புக்கண பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

றம்புக்கண பொலிஸார் சம்பவம் தொடர்பான உண்மைகளை ‘ஏ.ஆர்’ அறிக்கை மூலம் சமர்ப்பித்திருந்த போதிலும், நீதவான் ‘பி’ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

‘பி’ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, டிபெக்ஸைப் பயன்படுத்தி அறிக்கையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததை நீதவான் அவதானித்தார்.

போராட்டக்காரர்கள் சார்பில் ஆஜரான பல சட்டத்தரணிகளும் ‘பி’ அறிக்கையின் மாற்றங்களை குறிப்பிட்டு நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். அறிக்கையை மாற்றியமைத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இதையடுத்து, இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றதன் பின்னர், இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறும் கேகாலை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை செவ்வாய்க்கிழமை றம்புக்கணயில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சாட்சியங்களின் வாக்குமூலங்கள் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. றம்புக்கணயில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நீதவான் விசாரணையின் போதே இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போராட்டத்தின் போது தீ வைத்து எரிக்கப்பட்ட முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவத்திற்கு சாட்சியாக முன்னோக்கிச் சென்றுள்ளதாக மௌபிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று வாகனத்திற்கு தீ வைப்பதை நேரில் பார்த்ததாக சாரதி தெரிவித்துள்ளார். நீதவான் முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் அதிகாரிகளை அடையாளம் காண முன்வந்த மற்றொரு சாட்சி சாட்சியமளிக்க மறுத்துவிட்டார். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் அதிகாரிகளை தன்னால் அடையாளம் காண முடியும் என்று அந்த நபர் முன்பு கூறியிருந்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் றம்புக்கண பொலிஸில் இணைக்கப்படாத அதிகாரிகளும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும், வாக்குமூலத்தைத் தொடர்ந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் அவர் சாட்சியமளிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் றம்புக்கண சம்பவத்தின் போது எரிபொருள் பௌசருக்கு தீ வைக்க முயற்சித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளியன்று இரவு பின்னவலயில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார். விசாரணையின் போது, போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸ் துறைக்கு அறிவுறுத்தவில்லை என்று ஐஜிபி ஆணையத்தில் தெரிவித்தார்.

றம்புக்கண துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில் அறிக்கையை கையளித்துள்ளது. நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, சம்பவத்தின் போது நான்கு ரி-56 துப்பாக்கிகள் மற்றும் 35 தோட்டாக்கள் பொலிஸாரால் பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

றம்புக்கணயில் நிலைமையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சி.டபிள்யூ.சி.தர்மரத்ன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன ஆகியோர் பணிப்புரை விடுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட போராட்டக்காரர் சமிந்த லக்ஷனின் வீட்டுக்கு அருகாமையில் போராட்டம் ஒன்றும் இடம்பெற்று வருகின்றது. அவரது இறுதிக் கிரியைகள் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

அஹ்ஸன் அப்தர்

‘போராளி’ – Nadi Review

இலங்கையின் தற்போதைய சூழல் பற்றியும் அன்றாடம் வாழ்வில் அடிக்கடி நிகழ்கின்ற அநீதியான செயல்களை பற்றியும் விளக்கும் பாடலாக வெளியாகியுள்ள பாடல் தான் Vidushan இன் ‘போராளி’ என்ற பாடல். இந்த பாடலினை Vidushan எழுதி அவரே பாடியுள்ளார். இந்த பாடலுக்கான முயற்சிக்காக அவரை பாராட்டியே ஆக வேண்டும்.

இந்த பாடலை பற்றி விமர்சிப்பதற்கான லின்க் எனக்கு நேற்று அனுப்பபட்டது ஆனாலும் இன்று காலை தான் அந்த லின்க்கினை திறந்து பார்த்தேன். எல்லா ரெப்பர்களும் போலவே அவருக்கான அறிமுகம் கொடுக்கப்பட்டு அதன் பின் பாடல்,
“சுமைகளும் இன்னும் தீரவில்லை…” என ஆரம்பமாகிறது. இதை கேட்கும் போது அவ்வளவு திருப்தி இருக்கவில்லை ஆனாலும் அடுத்து தொடர்ந்து வந்த,
“நான் எழுதும் வரிகள் எல்லாம் வாழ்க்கையோட பாடம்…” என்ற வரிகள் மற்றும் இசை பாடலை கேட்க ஆர்வத்தினை தூண்டியது. அதே ஆர்வத்தோடு பாடலை கேட்டுக் கொண்டிருக்கையில் இடைக்கிடையில் “சுமைகளும் இன்னும் தீரவில்லை…” என்ற வரிகள் தோன்றி அதன் இசையானது சிறிது அதிருப்தியை தந்தாலும் மற்றைய வரிகளும் இசையும் அந்த அதிருப்தியை ஈடு செய்து விட்டன.

இந்த பாடலுக்கான காணொளியில் Vidushan ஐ சுற்றியே கேமரா வைக்கப்பட்டிருந்தது. ஒரு வேளை பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு நிகழ்வுகளை காணொளியாக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து. நீங்கள் இப்போது “அதுக்கு காசு நீயா தருவ?” என கேட்கலாம். நியாயமான கேள்வி தான் அவ்வாறு பட்ஜெட் இல்லையென்றால் எளிமையான அனிமேஷன் ஏதேனும் முயற்சி செய்திருக்கலாம். அதற்கும் பட்ஜெட் இல்லையென்றால் பாடலின் வரிகளை லிரிக்காக செய்து காணொளியோடு இணைத்திருக்கலாம் ஏனெனில் பாடலின் வரிகளை சட்டென கண்டுபிடிக்க முடியாதபடி சற்று சிக்கலாக இருந்தது. காட்சிகள் அல்லது லிரிக் இணைத்திருந்தால் பார்ப்பவர்களிடையே பாடல் ஆழமாக பதியும் என்பது என்னுடைய கருத்து.

இந்த பாடலில் இறுதியாக இடம் பெற்ற,
“வலைகள் அறுந்தும் சிலந்தி தற்கொலை செய்யாது.” என்ற வரி எனக்கு மிக பிடித்த வரியாக மாறிவிட்டது. இந்த வரியினை டைப் செய்யும் போது மூன்று தடவைகள் அந்த இடத்தினை ரிவைன் பண்ணி கேட்டு விட்டு தான் டைப் செய்கிறேன். இப்போது என் காதில் கோளாறு என்று கூட சொல்வார்கள். பரவாயில்லை! அப்படியே இருக்கட்டும். என்னைப் போல் காதில் கோளாறு உள்ளவர்கள் விளங்கி கொள்வதற்காக சரி அடுத்த பாடலின் காணொளியில் லிரிக்கை இணையுங்கள். எனக்கு இந்த பாடலின் இசையினை கேட்கும் போது ஹிப் ஹொப் தமிழா ஆதியின் “இறைவா எனக்கொரு எனக்கொரு வரம் தா” பாடல் புத்திக்குள் எட்டிப் பார்த்து விட்டு செல்கிறது. எனக்கு மட்டும் தான் அவ்வாறு தோன்றுகிறதா இல்லை உங்களுக்கும் அவ்வாறு தோன்றுகிறதா என கமன்ட் பொக்ஸில் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Link: https://bit.ly/3JnOhVw

 

உங்கள் நாவரும்புகளுக்கு சுவையேற்ற Area 56 – Restaurant Review

உங்கள் விருப்பங்கள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் நிறைவேறிட!

கொழும்பு வெள்ளவத்தையின் பரபரப்பான தெருவின் மருங்கில் அமைந்துள்ள Supun Arcade கட்டிடத்தின் 9வது மாடியில் Area 56 உணவகம் அமைந்துள்ளது. விதம் விதமாக தயாரிக்கப்பட்ட பலவகையான உணவுகளை ஒரே இடத்தில் வழங்கி வருவதால் ‘அனைத்திற்கும் வல்லது’ என்று அறியப்படுகிறது. பலவிதமான அறுசுவைகளையும் நீங்கள் அனுபவித்து மகிழும் வாய்ப்பை Area 56 உணவகம் பெற்றுத்தருகிறது. அவர்களின் தனித்துவமான உணவுகளில் சில நம்மை ஈர்த்ததென்றே கூறவேண்டும். மெய்மறந்து ருசிக்க வைக்கும் அந்த உணவுகளைப் பற்றி உங்களுக்கும் அறியத்தர ஆர்வமாகவுள்ளோம்.

ஆரம்பம்

Pepper and Mustard Beef (ரூபாய் 1000)

காரமான உணவுகளை அதிகம் விரும்பாத ஒருவராக கூறுவதாயின் (காரசார கடுகுணவு பிரியர்களே! தயவு செய்து எனக்காக வராதீர்கள்). உண்மையிலேயே இந்த உணவு ருசிப்பதற்கு இனிமையாக இருந்தது. அதிலும் இதுவரை அனுபவித்திராத சுவையை பெற்றுத்தருகிறது. பதமாக சமைக்கப்பட்ட இறைச்சியுடன் சேர்ந்து மிளகு, மசாலா மற்றும் கடுகு நிறைந்த காரசார கலவையானது சொர்க்கத்திற்கே அழைத்துச்செல்கிறது. பிரதான உணவை உண்ணத் தூண்டிடும் இவ் ஆரம்ப உணவானது உண்மையிலேயே சரியான தெரிவாகும்.

Grilled Prawns (ரூபாய் 1100)

கடல் உணவு பிரியர்களா நீங்கள்! அப்படியென்றால் நிச்சயம் இந்த உணவை நீங்கள் பெரிதும் விரும்புவீர்கள். தரமாக சமைக்கப்பட்ட இறால்கள் நாவூறச்செய்வதோடு அதனிலிருந்து வெளிவரும் ஆவியொடு எழும் வாசணையானது மூக்கைத் துளைக்கிறது. வினிகிரெட் சுவையின் அடிப்படையில் இவ்வுணவு அமைந்திருந்தது. இருப்பினும் சுவையைச் சற்று அதிகரிக்க அவர்கள் ணுiபெ ஐச் சேர்த்தால், இந்த உணவு எளிதிலேயே அனைவருக்கும் பிடித்ததாக மாற்றியிருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். எது எவ்வாறாயினும் நிச்சயம் இவ்வுணவை முயற்சிக்கவேண்டும்!
பிரதான உணவுகள்

Mutton Pizza (ரூபாய் 2200)

இது எனது தனிப்பட்ட விருப்பத்தெரிவாக இருந்தது. அதாவது அதன் முதற் கடியிலேயே என் முதல் காதல் ஏற்பட்டது என்று நான் கூறும்போதே நம்புங்கள் அதன் சுவை எவ்வாறு இருக்குமென்று. முதற் கடியிலேயே என் சுவை அரும்புகள் கவர்ந்திழுக்கப்பட்டதால் முழு பீட்சாவையும் நானே உண்டு முடிக்க வேண்டும் என்று தோன்றியது. இது வழக்கமாக நீங்கள் உண்ணும் இத்தாலிய பீட்சா அல்ல. அதற்கும் மாறாக ஆரோக்கியமான இலங்கை சுவையுடன் கூடிய பீட்சா உணவு அனுபவத்தை ஏற்படுத்துகிறது. இது மிகவும் பிடித்திருக்கிறது. நமக்கு போதுமான அளவு கிடைக்காத கறி சுவையானது சீஸ் உடன் நன்றாக கலந்த சுவையோடு கிடைக்கின்றது. இந்த பீட்சா எண்ணெயற்றதாக இருக்கும். அதிலும் ஏனைய சுவைகளை பின்போடுமளவிற்கு பிரதானமான ஆட்டிறைச்சியின் சுவை அனைவரையும் கவர்கின்றது. இதனை ஒருமுறையாவது முயற்சிக்கவில்லையென்றால் நிச்சயமாக நீங்கள் ஒரு சுவையான பீட்சாவை தவறவிடுவீர்கள்!

Pad Thai (ரூபாய் 1100)

காரமான உணவை விரும்பும் இலங்கையருக்கு இந்த உணவு உண்மையில் ஒரு விருந்தாகும். காரசாரமான மசாலாப் பொருட்களைச் சேர்த்து மென்மையாக சமைக்கப்பட்ட நூடுல்ஸ் மற்றும் சுவையான இறால்களின் இணைப்பானது ஒட்டுமொத்த உணவினதும் சுவையை சிறப்பாக மாற்றியமைத்துள்ளது. இவ் உணவு நிச்சயம் உங்கள் இதயத்தைத் திருடும். இருப்பினும் ஒரு உண்மையான பேட் தாய் உணவுகளில் பொதுவாக சேர்க்கப்படும் இனிப்பு, உப்பு மற்றும் வேர்க்கடலை சுவைகளும் இவ்வுணவில் சேர்க்கப்பட்டிருந்தால் நிச்சயமாக இவ் உணவு அனைவரினதும் பாராட்டை வென்றிருக்கும் என்று நான் உணர்கிறேன். இந்த உணவை ஒருபோதும் முயற்சிக்காமல் இருப்பதற்கு இதனை காரணம் காட்டாதீர்கள். ஒரு முறையாவது இவர்களின் பேட் தாய் உணவை சுவைத்து பாருங்கள்.

Butter Chicken (ரூபாய்1200)

மசாலா உணவுப் பிரியர்களாக சுற்றித்திரியும் ஒவ்வொரு இலங்கையருக்கும் மேலும் மேலும் காதலைத் தூண்டும் மற்றொரு உணவு இதுவாகும். பாஸ்மதி சோறுடன் பரிமாறப்படுகிறது இந்த பட்டர் சிக்கன். என் பார்வைக்கு இவை இரண்டும் மிகச் சரியான பொருத்தமாக இருந்தது.

காரசாரமான, க்றீமியான, வெண்ணெய் மற்றும் பால் போன்ற தன்மையில் அமைந்த பட்டர் சிக்கன் கறியானது மறக்கமுடியாத சுவையை அனுபவிக்க வைக்கிறது. பாஸ்மதி சோறுடன் இந்த பட்டர் சிக்கன் கறியும் சேர்ந்து சுவையை இன்னும் இன்னும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த உணவின் ஒவ்வொரு கடியையும் நாங்கள் முழுமையாக அனுபவித்தோம்!

இனிப்பு வகைகள்

Fruit Salad with Ice Cream (ரூபாய்500)

வெண்ணிலா ஐஸ்கிரீமுடன் கூடிய இலங்கையின் All time favourite எனப்படும் ப்ரூட் சாலட்டைப் பற்றி யாரும் தெரியாமலிருக்கமுடியாது. புதிய பழங்களோடு க்றீமியான ஐஸ்கிரீமும் கலந்த ப்ரூட் சாலட்டை உண்ணும்போது உண்மையில் நீங்கள் முழுமையாக புத்துணர்ச்சியடைகின்றீர்கள். நிறைவாக உண்ட விருந்தின் இறுதியாக உண்ணும் ப்ரூட் சாலட் வித் ஐஸ்க்ரீம் உங்கள் விருந்து அனுபவத்தை முழுமைப்பெறச் செய்து உங்கள் மனதை நிறைவடையச்செய்கிறது.
உணவக அமைப்பு

இவ் உணவகம் மேல்மாடிப் பகுதி அதாவது பேல்கனியில் அமைந்துள்ளதால் கொழும்பு நகரத்தின் அற்புதமான சுற்றுப்புறச்சூழல் காட்சியுடன் உங்களுக்குப் பிடித்தமான உணவை உண்ணும்போது மறக்கமுடியாதவொரு விருந்து அனுபவமாக அமைகிறது. மனதை மயக்கும் மாலைவேளையில் உங்களை வருடிச் செல்லும் இதமான குளிர் காற்றுக்கு மத்தியில் மன நிம்மதியாக ஓய்வெடுக்கவும் இது ஏற்ற இடமாகும். இங்கு பணிபுரியும் ஊழியர் மிகவும் நட்புறவாகவும், திறமையாகவும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குகின்றனர். நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் ரம்மியமான சூழலையும், மறக்கமுடியாத சுவைகளை வழங்கும் உணவுகளையும் ஒரு முறை அனுபவித்திட மீண்டும் இவ் உணவகத்திற்கு செல்ல நாம் தயங்கமாட்டோம்.

உதவிக்குறிப்பு: நிச்சயம் மட்டன் பீட்சாவை தெரிவு செய்யுங்கள். வேறு குழப்பம் தேவையில்லை!

index.php