Blog Page 24

சிலோன் to ஸ்ரீ லங்கா

கடந்த ஒரு வாரமாக நான் இந்த ஏர்போர்ட்டில் தான் இருக்கிறேன். இங்கு தான் சாப்பிடுகிறேன், தூங்குகிறேன், நடை போடுகிறேன் மற்ற எல்லாம். என்னையும் என்னோடு அந்த விமானத்தில் வந்த மற்றவர்களையும் பார்க்கும் போதெல்லாம் ஏதோ வேற்றுகிரக வாசியை பார்ப்பதை போலவே பார்க்கிறார்கள்.

எங்களை என்று நான் சொல்வது மொத்தம் முப்பது பேரை. நாங்கள் கடத்தல் காரர்களோ அல்லது தீவிர வாதிகளோ இல்லை. இலங்கையில் இருந்து லண்டன் நோக்கி பயணப்பட்ட சாதாரண விமான பயணிகள். எங்கள் பயண பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புறப்பட்ட மூன்று மணி நேரத்தில் மீண்டும் இலங்கை விமான நிலையத்துக்கே திரும்பினோம்.

ஆனால் இந்த திருப்பம் பண்டாரநாயக்க விமான நிலையத்தையே பீதி அடைய வைத்துள்ளது. முழு உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதற்கு காரணம் நாங்கள் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன் மாநகரம் கிளம்பியது செப்டம்பர் 5, 1970.

கடந்த ஒரு வாரமாக நான் இந்த ஏர்போர்ட்டில் தான் இருக்கிறேன். இங்கு தான் சாப்பிடுகிறேன், தூங்குகிறேன், நடை போடுகிறேன் மற்ற எல்லாம். என்னையும் என்னோடு அந்த விமானத்தில் வந்த மற்றவர்களையும் பார்க்கும் போதெல்லாம் ஏதோ வேற்றுகிரக வாசியை பார்ப்பதை போலவே பார்க்கிறார்கள்.

ஐம்பத்தியொரு வருடங்கள் கழித்து வந்து இறங்கி இருக்கிறோம். என்னுடைய மனமே இதை இன்னும் ஏற்க மறுக்கிறது. பிறகு உங்களை மட்டும் நான் எப்படி நம்ப சொல்வது. அண்டத்தில் காணப்படுவதாக சொல்லப்படும் ஏதோ துளை தான் இதற்கு காரணமாம். ”வார்ம் ஹோல்” என்று சொல்கிறார்கள். பெரும்பாலும் அண்ட வெளியில் தோன்றும் அது மிக அரிதாக வானத்தில் தோன்றி இருக்கிறது. அப்போது பார்த்து அதில் சிக்கி கொண்டடிருக்கிறோம் .

இது விஞ்ஞானத்தின் வேலையா அல்லது ஏதும் துர் சக்தியின் வேலையா என்று தெரியவில்லை. அனால் நாங்கள் 1970ஐ சேர்ந்தவர்கள். அப்போது எனக்கு 18 வயது இப்போதும் அதே வயது தான். பார்க்க அப்படியே தான் இருக்கிறேன். அனால் என்னை தவிர அனைத்தும் மாறிவிட்டது.

நாங்கள் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த போது ஒரு இடத்தில் ஏதோ கடும் ஊதா நிறத்திலான ஒரு ஒளி எங்களை ஊடுருவி சென்றதை உணர்ந்தோம். ஒரு சில நொடிகள் தான் அதை பார்க்க கூடியதாக இருந்தது அனால் நிஜ வாழ்வில் 51 வருடங்கள் கடந்து விட்டன.

அந்த சில நிமிட பயணத்தை பற்றி கடந்த ஒரு வாரமாக எங்களை கேட்டு நச்சரித்து வருகிறார்கள். ஏதேதோ விஞ்ஞானிகள் ஏதேதோ பத்திரிக்கைகள் என கேள்வி கேட்டு துளைத்துவிட்டார்கள். எங்கள் ஒவ்வொருவரையும் ஏகப்பட்ட பரிசோதனைகளுக்கு உற்படுத்தினார்கள்.

இது ஒரு புறம் இருக்க எங்கள் உறவுகளை தேடும் பணியும் இன்னும் தொடர்கிறது. ஏன் என்றால் எழுபதுகளிலேயே நாங்கள் தொலைந்துவிட்டதாக அறிவிக்க பட்டுவிட்டது. நடு கடலில் விழுந்து மூழ்கி இருப்போம் என்று முடிவு கட்டிவிட்டார்களாம். யாரைக்கேட்டு செய்தார்களோ. அதனால் சரியான உறவுகளிடம் நாங்கள் ஒப்படைக்க படும் வரை இந்த விமானநிலையத்திலேயே எங்களுக்கு ஒரு இடம் கொடுத்துவிட்டார்கள்.

என்னால் இந்த காலமாற்றத்தை கூட ஏற்க முடியும் அனால் எம்.ஜி.ஆர் இறந்து விட்டார் என்பதை போலான செய்திகளை தான் தாங்கி கொள்ள முடியவில்லை.
அத்தோடு இந்த “ஸ்ரீ லங்கா” என்ற புதுப்பெயரும் பிடிக்கவில்லை. “சிலோன்”எவ்வளவோ மேல்.

என் குடும்பம் என்ன ஆனது என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. என் தாய் அறுபத்தி ஆறாம் ஆண்டு இறந்தார் . பிறகு சித்தி வந்தாள். அவளை நான் அடியோடு வெறுத்தேன். அவளை பார்க்கவே பிடிக்காது இருந்தேன். எனக்கு பெரிதாக அவள் ஏதும் தீங்கு செய்துவிடவில்லை, அனால் என்னை விட அவளுக்கு இரண்டு வயது தான் அதிகம். இந்த ஒரே காரணம் தான்.

சிலோனில் நிலைமை சரி இல்லை. யுத்தம் பெரிய நிலையை எட்டலாம் என்று என்னை என் தந்தை லண்டனில் பொருளியல் பட்டம் படிக்க அனுப்பினார். இப்போது நான் இங்கு நிற்கிறேன். எனக்கு பொருளியல் அறவே பிடிக்காது அத்தோடு வெளிநாட்டு பயணத்தையும் அடியோடு வெறுத்தேன். அப்பா என்னை அடித்து துவைத்து அனுப்பி வைத்தார். அனால் இப்போது இந்த அசம்பாவிதத்தால் நான் காப்பாற்ற பட்டதாகவே உணர்கிறேன். கொஞ்சம் நிம்மதியாக இருகிறது.

எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். என்னை எப்படியோ கண்டுபிடித்து விட்டான். நேற்று அவனோடு தொலைபேசியில் பேசினேன். நான் போக இருந்த லண்டனில் தான் இப்போது அவன் இருக்கிறான். இருவரும் ஏதேதோ பேசினோம் .
கடைசியாக அழைப்பை துண்டிக்கும் முன் அடுத்த மாதம் அவனுடைய 66வது வயது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடுகிறானாம் முடிந்தால் வந்துவிட்டு போக சொன்னான்.

நான் கூட பரவாயில்லை. விமானத்தில் எனக்கு பக்கத்து சீட்டு பாபு அண்ணா ரொம்ப பாவம். அவருடைய 2 வயது பெண் குழந்தைக்கு இப்போது அவரை விட வயது அதிகமாம்.இன்னும் 28 பேர் இருக்கிரார்கள். ஒவ்வருவர்க்கும் ஒவ்வொரு கதை.

நான் 51 வருடங்களை இழந்து விட்டேனா அல்லது கடந்து விட்டேனா என்று புரியவில்லை, எதுவாக இருந்தால் தான் என்ன எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்லவேண்டும் என்று நினைத்துகொண்டு விமானநிலையத்தில் எங்களுக்கு ஒதுக்கபட்ட இடத்தில் இருக்கும் ஒரு கதிரையில் அமர்ந்தேன்.

எனது தோல் பையிக்குள் கையை விட்டு துழாவினான், பயணத்தின் போது வாங்கி வைத்த மாரி பிஸ்கட் இருந்தது. எடுத்து திகதி பார்த்தேன் ” Best before 20 Dec 1980 ” என்று அச்சிடபட்டு இருந்தது. ருசி பார்த்தேன் கெடாமல் நன்றாக இருந்தது. ஆனால் வந்திறங்கியது செப்டம்பர் 20, 2021.

ஐம்பத்தியொரு வருடங்கள் கழித்து வந்து இறங்கி இருக்கிறோம். என்னுடைய மனமே இதை இன்னும் ஏற்க மறுக்கிறது. பிறகு உங்களை மட்டும் நான் எப்படி நம்ப சொல்வது. அண்டத்தில் காணப்படுவதாக சொல்லப்படும் ஏதோ துளை தான் இதற்கு காரணமாம். ”வார்ம் ஹோல்” என்று சொல்கிறார்கள். பெரும்பாலும் அண்ட வெளியில் தோன்றும் அது, மிக அரிதாக வானத்தில் தோன்றி இருக்கிறது. அப்போது பார்த்து அதில் சிக்கி கொண்டடிருக்கிறோம் .

இது விஞ்ஞானத்தின் வேலையா அல்லது ஏதும் துர் சக்தியின் வேலையா என்று தெரியவில்லை. ஆனால் நாங்கள் 1970ஐ சேர்ந்தவர்கள். அப்போது எனக்கு 18 வயது இப்போதும் அதே வயது தான். பார்க்க அப்படியே தான் இருக்கிறேன். ஆனால் என்னை தவிர அனைத்தும் மாறிவிட்டது.

நாங்கள் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த போது ஒரு இடத்தில் ஏதோ கடும் ஊதா நிறத்திலான ஒரு ஒளி எங்களை ஊடுருவி சென்றதை உணர்ந்தோம். ஒரு சில நொடிகள் தான் அதை பார்க்க கூடியதாக இருந்தது. ஆனால் நிஜ வாழ்வில் 51 வருடங்கள் கடந்து விட்டன.

அந்த சில நிமிட பயணத்தை பற்றி கடந்த ஒரு வாரமாக எங்களை கேட்டு நச்சரித்து வருகிறார்கள். ஏதேதோ விஞ்ஞானிகள், ஏதேதோ பத்திரிக்கைகள் என கேள்வி கேட்டு துளைத்துவிட்டார்கள். எங்கள் ஒவ்வொருவரையும் ஏகப்பட்ட பரிசோதனைகளுக்கு உற்படுத்தினார்கள்.

இது ஒரு புறம் இருக்க எங்கள் உறவுகளை தேடும் பணியும் இன்னும் தொடர்கிறது. ஏன் என்றால் எழுபதுகளிலேயே நாங்கள் தொலைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. நடு கடலில் விழுந்து மூழ்கி இருப்போம் என்று முடிவு கட்டிவிட்டார்களாம். யாரைக்கேட்டு செய்தார்களோ?. அதனால் சரியான உறவுகளிடம் நாங்கள் ஒப்படைக்கப்படும் வரை இந்த விமானநிலையத்திலேயே எங்களுக்கு ஒரு இடம் கொடுத்துவிட்டார்கள்.

என்னால் இந்த காலமாற்றத்தை கூட ஏற்க முடியும். ஆனால் எம்.ஜி.ஆர் இறந்து விட்டார் என்பதை போலான செய்திகளை தான் தாங்கி கொள்ள முடியவில்லை.
அத்தோடு இந்த “ஸ்ரீ லங்கா” என்ற புதுப்பெயரும் பிடிக்கவில்லை. “சிலோன்”எவ்வளவோ மேல்.

என் குடும்பம் என்ன ஆனது என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. என் தாய் அறுபத்தி ஆறாம் ஆண்டு இறந்தார் . பிறகு சித்தி வந்தாள். அவளை நான் அடியோடு வெறுத்தேன். அவளை பார்க்கவே பிடிக்காது இருந்தேன். எனக்கு பெரிதாக அவள் ஏதும் தீங்கு செய்துவிடவில்லை, ஆனால் என்னை விட அவளுக்கு இரண்டு வயது தான் அதிகம். இந்த ஒரே காரணம் தான்.

சிலோனில் நிலைமை சரி இல்லை. யுத்தம் பெரிய நிலையை எட்டலாம் என்று என்னை என் தந்தை லண்டனில் பொருளியல் பட்டம் படிக்க அனுப்பினார். இப்போது நான் இங்கு நிற்கிறேன். எனக்கு பொருளியல் அறவே பிடிக்காது அத்தோடு வெளிநாட்டு பயணத்தையும் அடியோடு வெறுத்தேன். அப்பா என்னை அடித்து துவைத்து அனுப்பி வைத்தார். அனால் இப்போது இந்த அசம்பாவிதத்தால் நான் காப்பாற்ற பட்டதாகவே உணர்கிறேன். கொஞ்சம் நிம்மதியாக இருகிறது.

எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். என்னை எப்படியோ கண்டுபிடித்து விட்டான். நேற்று அவனோடு தொலைபேசியில் பேசினேன். நான் போக இருந்த லண்டனில் தான் இப்போது அவன் இருக்கிறான். இருவரும் ஏதேதோ பேசினோம் .
கடைசியாக அழைப்பை துண்டிக்கும் முன் அடுத்த மாதம் அவனுடைய 66வது வயது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடுகிறானாம். முடிந்தால் வந்துவிட்டு போக சொன்னான்.

நான் கூட பரவாயில்லை. விமானத்தில் எனக்கு பக்கத்து சீட்டு பாபு அண்ணா ரொம்ப பாவம். அவருடைய 2 வயது பெண் குழந்தைக்கு இப்போது அவரை விட வயது அதிகமாம். இன்னும் 28 பேர் இருக்கிரார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை.

நான் 51 வருடங்களை இழந்து விட்டேனா அல்லது கடந்து விட்டேனா என்று புரியவில்லை, எதுவாக இருந்தால் தான் என்ன எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்லவேண்டும் என்று நினைத்துகொண்டு விமானநிலையத்தில் எங்களுக்கு ஒதுக்கபட்ட இடத்தில் இருக்கும் ஒரு கதிரையில் அமர்ந்தேன்.

எனது தோல் பையிக்குள் கையை விட்டு துழாவினான், பயணத்தின் போது வாங்கி வைத்த மாரி பிஸ்கட் இருந்தது. எடுத்து திகதி பார்த்தேன் ” Best before 20 Dec 1980 ” என்று அச்சிடபட்டு இருந்தது. ருசி பார்த்தேன். கெடாமல் நன்றாக இருந்தது.

 

எழுத்து – மஹின் சுப்பிரமணியம்

Intermittent fasting

முன்னைய காலத்தைப் போல் அல்லாது தற்போதைய மக்கள் சுகாதாரம் மிக்க வாழ்க்கை முறை ஒன்றை நடாத்திச் செல்வதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். Organic Foods முதல் Sugar Less Tea வரை, மறுமுனையில் நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள Jogging Track, Fitness center என்று தங்கள் உடலை, ஆரோக்கியமாக வைப்பதில் கவனம் செலுத்துகின்றனர் என்பதை நாள்தோறும் காணக்கூடியதாய் உள்ளது. இக் கலாச்சாரம் மேலத்தேய நாடுகளில் 30 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றினாலும் இலங்கையில் தற்போது தான் இதன் முக்கியத்துவம் மக்கள் மத்தியில் உணரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எமது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நாம் உட்கொள்ளும் உணவு இன்றியமையாத காரணியாக அமைந்துள்ளது என்பது யாவரும் அறிந்த விடயமே. இதை ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த, தெரிந்து கொண்ட முறைக்கேற்ப தத்தமது வாழ்க்கை முறையில் அதனைப் பரீட்சித்து வெற்றியும் கண்டுள்ளனர். அவ்வாறே சமீபத்தில் புரியாத புதிராக ஒளிர்வெடுத்து மேற்கத்திய நாடுகளில் அதிகம் பிரபல்யமிக்கதாக கருதப்படும் Intermittent Fasting தொடர்பான ஓர் பார்வை.

முதலாவதாக Intermittent என்றால் இடைப்பட்ட அல்லது விட்டு விட்டு நிகழ்கின்ற செயலைக் குறிக்கும். அவ்வாறே Intermittent Fasting என்ற பதத்தைக் கருதும்போது விட்டு விட்டு அல்லது குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் நோன்பு / உணவருந்தாது இருப்பதே இதன் விளக்கமாகும். இதைப் பல நபர்கள் பல விதிகளுக்கு அமைய தங்களது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி வருகின்ற அதேவேளை இது தான் சிறந்தமுறை என்று எவரினாலும் வரைவிளக்கணப்படுத்த முடியாததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகமான மக்கள் இதனை 16:8 என்ற அடிப்படையில் கடைப்பிடித்து வருகின்றனர். அதாவது 24 மணி நேர கால இடைவெளியில், 16 மணித்தியாலங்கள் உணவருந்தாது நோன்பு இருக்கும் அதேவேளை 8 மணித்தியால இடைவெளியில் தங்களது உணவு தேவைகளை அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். அதே தருணத்தில் 18:6 மற்றும் 20:4 அடிப்படையிலும் மேலும் சிலர் 36:12 என்றும் தங்களது உடல் நிறை, கொழுப்புச் சதவீதம், வாழ்க்கை முறை போன்றவற்றிற்கு அமைய நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பில் 1.5 வருடங்களில் 50 இராத்தல், அதாவது சுமார் 23Kg இடையினை குறைத்த அமெரிக்காவின் பிரபல்யமான பத்திரிகையாளரான Megyn Keli கூறுகையில் ‘ஆரம்பக் காலங்களில் பசி உணர்வு ஏற்படுவது மிகவும் சாதாரணம். முதல் இரண்டு வாரங்கள் மிகவும் கடினமானதாக அமையும். எனினும் நீங்கள் இதனைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு விருப்பப்படும் நபராக இருப்பின் 3 வாரங்களுக்கு இதனை நடைமுறைப்படுத்திப்பாருங்கள். நிச்சயமாக உங்களால் அதன் மாற்றத்தை உணர முடியும்’ என்று ஊக்குவிக்குமுகமாக பல கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார்.

பலர் பொதுவாகக் கேட்கும் கேள்விகளில் ஒன்றுதான் உணவு அருந்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள காலப்பகுதிகளில் நாங்கள் விரும்பும் உணவு வகைகளை உண்ண முடியுமா என்பது தான். நிச்சயமாக முடியும் என்பதே இதில் வெற்றி பெற்ற பலரின் கருத்தாக அமைந்துள்ளது. எனினும் அதற்காக அளவுக்கு மீறி எந்த உணவும் உட்கொள்ளுதல் ஆகாது. இருப்பினும் நிச்சயமாக உங்களுக்குப் பிடித்த ருசித்த உணவுகளை உண்ணுவுதற்கு அவகாசம் வழங்கப்படும். அதே தருணத்தில் நாம் தெரிவு செய்யும் உணவு வகைகளை உணவுக் கூம்பகத்திற்கு அமைய முன்னுரிமை வழங்கி தேர்வு செய்து உட்கொள்ளும் பட்சத்தில் அதிக பிரதிபலனை உங்களால் காணக்கூடியதாய் இருக்கும். மேலும் இக் காலப்பகுதிகளில் நீர் மற்றும் நீர் சார்ந்த பாணங்கள் அருந்துவதில் எந்த கட்டுப்பாடும் வரையறுக்கப்பட மாட்டாது. இருப்பினும் கலோரிகள் குறைவாக உள்ள Black Coffee, Black Tea மற்றும் சில வகையான Juiceகளை மாத்திரமே உங்களால் அருந்த முடியும். மேலும் சீனி சேர்க்காதவாறு உட்கொள்ளவேண்டும் என்பது Intermittent Fasting இல் மிகக் கடினமான நிபந்தனைகளில் ஒன்றாகும்.

ஆசிய நாட்டைச் சேர்ந்த மக்கள் கார்போஹைட்ரேட் அடங்கிய சோறு, ரொட்டி மற்றும் பாண் வகைகளையே அதிகமாக உட்கொள்கின்றனர். நாம் உட்கொள்ளும் கார்போஹைட்றேட்கள் (Carbohydrates) குளுகோஸ்களால் (Glucose) மாற்றம் அடைந்து உடலிற்குத் தேவையான சக்தியினை வழங்குகின்றது. மேலதிகமாக உட்கொள்ளப்படும் கார்போஹைட்றேட்கள் (Carbohydrates) கிளைகோஜன் (Glycogen) வடிவத்திலும் மேலும் சில கொழுப்பாகவும் எமது உடலில் சேமிக்கப்படுகின்றன. இதனாலேயே அதிக பருமன் கொண்ட உடல் பாவத்தினை எம்மால் உணர முடிகிறது. இவ் வகையான உடல் நிலை கொண்டர்வகள் இவ் Intermittent Fasting இனை கடைப்பிடிக்கும் பட்சத்தில் உடலிற்குத் தேவையான சக்தியினை எமது உடலில் மேலதிகமாக சேமிக்கப்பட்டு இருக்கும் கிளைகொஜன் (Glycogen) மற்றும் கொழுப்புகள் எதிர் எதிர்வினையினால் மீண்டும் குளுகோஸ் (Glucose) ஆக மாற்றம் அடைந்து சக்தியினை வழங்குகின்றது. இவ் இரசாயன செயற்பாடுகள் நடைபெறுவதற்கு ஆகக் குறைந்தது 8 – 12 மணித்தியாலங்கள் தேவைப்படுவதனால் Intermittent Fasting உடல் பருமனை நேர்த்தியாக வைத்திருப்பதற்குச் சிறந்த முறையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இது இருதய நோய்கள், உயர் குருதி அழுத்தம், சக்கர வியாதி போன்ற நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதைச் சிலர் வாரத்தில் 7 நாட்களிலும் மேலும் சிலர் ஒன்று விட்ட நாட்களிலும் நடைமுறைப்படுத்திவருகின்றனர். கடினமாக இருக்கும் பட்சத்தில் வாரத்தில் இரு தடவையாவது இப் பழக்கத்தை நடைமுறைப்படுத்துவது வரவேற்கத்தக்கதாகும். எனினும் இக் கட்டுப்பாடுகள் அனைத்தும் தத்தமது உடல்நிலையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுவதால் வைத்தியர் அல்லது உணவியல் நிபுணர்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்ற பின்பு ஆரம்பிப்பது பாதுகாப்பு மிக்க வழிமுறையாக கருதப்படுகிறது.

இரவில் பணியாற்றும் பெண்களுக்கான தற்பாதுகாப்புகள்

இன்றைய நவீன காலகட்டத்தில் Labour market  விரைவான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளன, அதே நேரத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வருமான வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை வாழ்க்கை முறைகளை மாற்றுகின்றன. பாரம்பரியமாக, பெரும்பாலான ஊழியர்கள் காலை முதல் மாலை வரை வழக்கமான வேலை நேரத்தை வேலை செய்து, தங்கள் குடும்பத்துடன் இருக்க வீட்டிற்கு சென்றனர். ஆனால், வாழ்க்கை முறையினுடைய மாற்றங்களால் மக்கள் வீட்டில் அதிக நேரம் செலவிடுவதில்லை. சேவைகளை வழங்க வணிகங்கள் தாமதமாக திறந்திருப்பதால், இத்தகைய நடத்தை தொழிலாளர் சந்தைகளில் ஊடுருவி வருகிறது. ஆண்களுக்கான தொழிலாளர் பங்கேற்பு விகிதங்கள் ஏற்கனவே மிகவும் அதிகமாக இருப்பதால், நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்ப பெண்களை அதிகளவில் எதிர்பார்க்கின்றனர். எனினும், இது எளிதாக இல்லை. பல்வேறு முயற்சிகள் இருந்தபோதிலும், பெண் தொழிலாளர் பங்கேற்பு கடந்த பல தசாப்தங்களாக  மாறாமல் மற்றும் 40% க்கும் குறைவாகவே உள்ளது. இருந்தாலும், பெண்களும்  இன்றைய கால கட்டத்தில் வேலைக்கு செல்லவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பொதுவாகவே பெண்கள் பகல் நேர வேலைகளுக்கே அதிகமாகச் செல்கின்றனர். அதனையே அதிகமாக தேர்ந்து எடுக்கின்றனர். ஆனால் இரவு நேர வேலைக்குச் செல்வது அத்தியாவசியமான ஒன்றாகும்.

எனவே சில பெண்கள் கண்டிப்பாக இரவு வேலைக்கு செல்ல நேரிடுகின்றனர். அவ்வாறு தனியாக வேலைத்தளங்களுக்கு செல்லும் போதோ அல்லது வேலைத்தளங்களில் இருக்கும் போதோ அவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படலாம், பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு என்ன என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை கீழே பார்ப்போம்.

  • தற்காப்புக் கலைகள் கற்றுக் கொள்ளல்.

தனியாக வேலையில் இருக்கின்ற, தனியாக வேலைக்கு செல்கின்ற பெண்கள் போன்ற அனைத்து வயதுடைய பெண்களும் கற்றுக்கொள்ள வேண்டிய கலைகளில் மிக முக்கியமானது தற்காப்புக் கலை. இன்றைய சூழலில் பெண்கள் தங்களை தற்பாதுகாத்துக் கொள்வதற்கு தற்காப்புக் கலை பயில்வது அத்தியாவசியமாகும். Labour market இல் தற்போது தொழில் துறையில் பெண்களின் வேலைவாய்ப்பு வீதம் தற்போது அதிகரித்து வருகின்றது. பெண்களுக்கான பாதுகாப்பு என்பது இன்றளவும் குறைந்தளவிலேயே இருக்கின்றது. இதனால் பெண்கள் இரவு நேரங்களில் வேலை செய்வதற்கோ, தனது வெவ்வேறு கடமைகளை செய்வதற்கோ கட்டாயம் தற்காப்புக் கலை பயில்வது என்பது இன்றியமையாதது ஒன்றாகும். இதனால் பெண்களுக்கு தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் ஒரு நிலையைக் கொடுக்கின்றது. பொதுவாக கராத்தே போன்ற தற்காப்பு கலையினை கற்றுக் கொள்வது பெண்களுக்கு பாதுகாப்பு எனலாம்.

  • அவசர  தகவல் தொடர்பு

பெண்கள் வேலை செய்யும் இடங்களில் அவர்கள் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க, அதாவது பாலியல் தொந்தரவு போன்ற  பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடுவார். அந்த நேரத்தில் அவசரமாக காவல் துறைகளுக்கு அறிவிப்பதினூடாக ஏற்பட இருக்கின்ற இது போன்ற பிரச்சினைகளை தீர்க்கலாம். இவ்வாறு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தலின் மூலம், பெண்களுக்கு குற்றம், பிரச்சினைகள் செய்பவர்களுடைய நடவடிக்கலைகளைத் தடுக்கலாம்.   பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழல் உருவாகின்றது.

  • துணையுடன் பணிபுரிதல்

இதில் பெண்கள் வேலையில் இருக்கும் இடங்களில் அதிகமாக ஆண்கள் இருக்கலாம்.  எனவே அவர்கள் அந்த வேலையில் அதிக பெண்கள் இருக்கின்ற இடங்களில் தன்னுடைய வேலையினை மாற்றிக்கொள்வது சிறந்ததாகும். இந்த முறை சில நேரங்களில் ஆண்களிடமிருந்து வரும் தொல்லைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க உதவும்.

  • பிரயாணிக்கின்ற வாகனம் தொடர்பான தகவல்களை வழங்குதல்.

சில நேரங்களில் பெண்கள் அவசரமாக வாகனங்களில் போக வேண்டியிருக்கும். எனவே Pick Me, Uber taxi போன்ற வாகனங்களில் தனியாக செல்லும் போது நம்பிக்கையான நபருக்கு செல்கின்ற வாகன எண், driver உடைய தொலைபேசி இலக்கம் மற்றும் location போன்றவற்றினை குடும்பத்தில் தெரிந்தவருடன் share செய்யலாம். இது போன்ற விடயங்களை பகிர்ந்து கொள்ளுவதால் பயத்துடனோ, சந்தேகத்துடனோ போக வேண்டிய தேவை இல்லை. தற்பாதுகாப்புக்காக இவ்வாறும் செய்துகொள்ளலாம்.

  • பெண்களுடன் வாகனங்களில் செல்லல்.

இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் போது துணைக்காக இன்னொரு பெண்ணுடனோ அல்லது சில நேரங்களில் taxi ஓட்டுநர்களான பெண்களும் இருப்பார்கள். அவ்வாறாக பெண் ஓட்டுநர்களுடன் செல்வது அல்லது துணைக்காக மற்றும் பாதுகாப்புக்காக வேறு பெண்ணுடன்  பெண்களுக்கு பாதுகாப்பினை ஏற்படுத்தும். ஒரு நம்பிக்கையுடன் இரவு நேரத்தில் பயணிக்கலாம்.

மேற்கூறிய வழிகளில் பெண்கள் இரவு நேரங்களில் வேலையில் இருக்கின்ற போதோ செல்கின்ற போதோ கடைபிடித்துக்கொண்டால், பெண்களுக்கு வர இருக்கின்ற அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் பெண்களுக்கு பாதுகாப்பு பெற்றுக் கொள்ளலாம்.

இலங்கையின் அரசியலில் பெண்களின் வகிபாகம்

இன்றைய காலகட்டத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவம் என்ற கருத்து பகிர்வை பரவலாக அனைத்து துறைகளிலும் அவதானிக்கூடியவாறு உள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையை எடுத்து நோக்கினால் பெண்களுடைய பங்கு பற்றுதல்கள் முன்னரை விட கல்வி தொழில் உட்பட அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகின்றமையை காணமுடிகிறது. அத்துடன் உலகளாவிய ரீதியில் பெண்களின் அரசியல் பங்கேற்பு தற்போது அனைத்து நாடுகளிலும் மாற்றங்களை கொண்டு வருவதாக அமைகிறது. தங்கள் சார்பாகப் பேசவும் தங்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தவும் பெண்கள் தங்கள் வாக்குரிமையைச் சரியான விதத்தில் பயன்படுத்தவும் தொடங்கியிருக்கின்றனர். உலகளவிலான பாராளுமன்றங்களில் பெண்களுடைய வகிபாகம் தொடர்பாக  ‘இண்டர் பார்லிமெண்டரி யூனியன்’ ஆய்வறிக்கையில் 1995ம் ஆண்டளவில்  11.3% ஆக இருந்த பெண்களின் பங்குபற்றல் 2020ஆம் ஆண்டில் 24.9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக பொலிவியா, ஆஸ்திரியா, ஸ்வீடன், பின்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், நியூசிலாந்து ,பிரான்ஸ் போன்ற நாடுகளில் இம்மாற்றத்தை கணிசமானளவு அவதானிக்க கூடியவாறு உள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசியலில் பெண்களுடைய ஆர்வம் மற்றும் பங்குபற்றுதல்கள் தொடர்பில் நோக்க வேண்டியது இன்றியமையாதது. உலக தர வரிசையில் பெண்களது அரசியல் பங்குபெறல் கணிப்பீட்டின் படி நூற்றி எழுபத்தி ஏழாவது இடத்தில் இலங்கை உள்ளது. இலங்கையில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அழுத்தங்களை வழங்க வேண்டுமாக இருந்தால், சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்கள் எந்தளவுக்கு அவசியமானவையோ, அதே போல் தான், பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமானது.

இதுவரை பெண் அதிபர் ஒருவரைக்கூடக் காணாத அமெரிக்க வரலாற்றில் துணை அதிபருக்கான தேர்தல் களத்தில் பிரஜைகளின் ஏகபோக வரவேற்பைப் பெற்ற கமலா ஹாரிஸ், பிரான்ஸில் அண்மையில் நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில், 577 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு, 223 பெண்கள் தெரிவாகியிருக்கின்றமை, ஐக்கிய இராச்சியத்திலும் அண்மையில் நடந்த தேர்தலில், 208 பெண்கள் தெரிவாகியிருந்தனர். 650 ஆசனங்களைக் கொண்ட ஐக்கிய இராச்சிய கீழவையில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் தெரிவாகின்றமை, இதுவே முதற்தடவையாக இருக்கின்றமை, உலகளாவிய ரீதியில் அரசியல் துறையில் பெண்களுக்கான மாற்றங்களை நோக்கிய சான்றாக இருக்கின்ற போது இலங்கை அரசியலில் பெண்களுக்கான வகிபாகம் சாத்தியமற்றது என்ற எண்ணப்பாங்கு அர்த்தமற்றது.

இலங்கையின் மொத்த சனத்தொகையானது ஏறத்தாழ 21 மில்லியன் ஆகும். நாட்டின் சனத்தொகையில் பாதிக்கு மேல்(52%) பெண்களாகவே காணப்படுகின்றனர். அதாவது, சுமார் 10.5 மில்லியன் பேர். அதேபோல் வாக்களிப்பு வீதத்திலும் 50% அதிகமான சதவீதம் பெண்கள் மத்தியிலே இருக்கிறது. வாக்களிப்பில் கூடிய செல்வாக்கு கொண்டவர்கள் பெண்களாக இருக்கிறார்கள். ஆயினும் அரசியல் களத்தில் பெண்களோ சிறுபான்மையினராக இருக்கும் நிலையே நிலவுகின்றது. ஆனால் எம்மால் வெறுமனே 13 நாடாளுமன்ற உறுப்பினர்களையே பெண்களாக தெரிவுசெய்ய முடிகின்றது என்பது கவலைக்குரியது. பல ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்கும் முன், இலங்கையில் 1931 ஆம் ஆண்டிலேயே ஆணும் பெண்ணும் சமமான வாக்குரிமை இலங்கையில் பெற்றனர். ஆனாலும் சம வாக்குரிமை பெற்று இற்றைக்கு எட்டு தசாப்தங்களை கடந்த நிலையிலும் இன்னும் இலங்கையின் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது மற்றைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது.  உலகின் முதலாவது பெண் பிரதமரும், ஜனாதிபதியும் இலங்கை சேர்ந்த பெண்களே என்ற பெருமை கொண்ட ஒரு நாடான இலங்கையில் இன்று அரசியலில் பெண்களினது வகுபாக பின்னடைவு தொடர்பில் பேசிக்கொண்டிருப்பது வருத்தத்திற்குரியதே.

இலங்கையின் தேர்தல் அறிக்கையை ஆராயும் போது பெண்களுக்கான பிரதிநிதித்துவ விகிதாசாரத்தில் பாரிய குறைபாடு நிலவுகின்றதென்பது புலப்படுகின்றது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பெண்கள் அரசியலில் ஈடுபடுகின்ற வீதம் குறைவாகவே இருக்கின்றது. ஆண்களால் பெண்களைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியாதா? அல்லது ஆண்களால் பெண்களுக்கான தேவைகளையும் பிரச்சினைகளையும் அரச அளவில் எடுத்துச் செல்லவும் தீர்வு பெற்றுத்தரவும் இயலாதா என்ற வினா எழுப்பப்படும் போது, இதுவரை கால அரசியல் வாழ்க்கையில், பெண்களின் பிரச்சினைகள் சரிவரக் கொண்டு செல்லப்படவில்லை என்பதே உண்மையானது. அத்துடன் இன்று வரை ஒரு மத்திய தர குடும்பப் பெண்ணுக்கோ அல்லது வருமானம் குறைந்த வறுமைப்பின்னணியை கொண்ட பெண்ணுக்கோ அரசியல் என்பது தொலைதூர வெளிச்சமாகவே இருக்கின்றது.

அரச தலையீடூகளில் பெண்களை அதிகளவில் உட்சேர்த்துக் கொள்ளும் சமூகம் பெரும்பாலும் குறைந்தளவு வன்முறையையும் அதிகளவிலான சகிப்புத் தன்மையையும் கொண்டிருக்கும்.  ஆனாலும் சமூதாய அளவில் அரசியலில் ஈடுபட எத்தனிக்கும் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய ஆதரவு, அங்கீகாரம் அவர்களுக்கு கிடைக்குமாறு இருக்கின்றதா என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது. பல்கலைக்கழக மன்றங்களிலும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களிலும் பெண்களுடைய தலைமைப்பதவிப் பங்களிப்பு ஆக்கபூர்வமானதாகவும் உயர்வாகவும் இருக்கின்றது. ஆயினும், அரசியல் என்று எடுத்துக் கொள்ளும் போது பெண்கள் தலைமை பொறுப்புக்களை ஏற்கவும் பின்னிக்கின்றனர்.   இலங்கையில் பதியப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகள் 76 இலும் இரண்டு அல்லது ஒரு கட்சிகளில் தான் பெண்களின் பங்களிப்பு ஓரளவுக்கேனும் குறிப்பிடக்கூடியவாறு இருக்கின்றது. அத்துடன் அரசியல் பிரச்சாரத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடிய காரணிகளில் பிரதானமாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றது.கடந்த தேர்தல்களின் போது ஆண், பெண்களின் சமூக வலைத்தள பாவனையை ஒப்பிடுகின்ற போது பெண்களின் சமூக வலைத்தள பாவனை மிகக் குறைவாகவே இருக்கிறது.

இலங்கை தேர்தல் ஆணையகத்தின் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பான கருத்துப்படி இலங்கை கைச்சாத்திட்டுள்ள பெண்களுக்கு எதிரான அனைத்து பாரபட்சங்ளையும் அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்தின் மூலம் பெண்களின் சமமான அரசியல் பங்கேற்பு மற்றும் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டது. அவ்வகையில் இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டதிட்ட முறைகளுக்கு அமைய பெண்களுக்கும், ஆண்களுக்கும் சமமான சந்தர்ப்பம் மற்றும் உரிமைகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் இன்றுவரை பெண்கள் இரண்டாம் நிலைப் பிரஜைகளாகவே அணுகப்படுகின்றனர் என்று அறியப்படுகிறது. தந்தைவழி சமுதாயத்தினுள் ஆண்களை மட்டும் முன்னிலைப்படுத்திய சிந்தனைகள் மற்றும் தீர்மானங்களுக்கிடையில் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் கிடைப்பதில்லையென்ற கருத்து நிலவுவதையும் அவதானிக்க முடிகின்றது. அரசியல் பங்களிப்பு எனும் சொல் மிகப்பரந்த பொருளுடையது. இச்சொல் ஓட்டுரிமையை மட்டும் குறிப்பதன்று. ஆனால் அதேவேளை முடிவெடுக்கும் நடவடிக்கைகள், அரசியல் செயல்பாடுகள், அரசியல் விழிப்புணர்வு ஆகிய இன்னும் பலவற்றைக் குறிப்பதாகும்.

இவ்வாறாக இலங்கையின் அரசியலில் பெண்களுடைய பங்குபற்றுதல்கள் தொடர்பில் ஆராய்ந்தால் தற்போது மக்கள் பிரதிநிதிகள் நிறுவனங்களில் பெண்கள் பிரதிநிதித்துவமானது இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றத்தில்  5.8% ஆகவும் மாகண சபைகளில் – 0 % ஆகவும் , உள்ளூர் அதிகார சபைகளில் – 1.9% காணப்படுகின்றமை வருத்தத்திற்குரியது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் பெண்களுக்கான ஒதுக்கீடுகள் இருக்கின்ற போதிலும் பல தரப்பட்ட பிற காரணிகளின் செல்வாக்கினால் அவை பெண்களால் நிரப்பப்படுவதில்லை அல்லது நிரப்ப முடிவதில்லை. ஆதலால் அரசியல் அடிப்படையில் பெண்களை வலுவூட்டலும் அரசியலில் பங்குபற்றுதல் தொடர்பான விளக்கங்களை பெண்கள் பெறுதலும் அவசியம் ஆகும்.

அதன் பொருட்டு உள்ளூரதிகார சபைத் தேர்தல்களின் சட்டத் திருத்தம், உள்ளூரதிகார சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம், அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் முகவர்கள், பெண் தொழிற்படுனர்கள் ஆகியோரை அறிவுறுத்தும் நிகழ்சித் திட்டங்கள் தேர்தல் ஆணைக்குழுவினால நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் சனநாயகத்தின் அடிப்படை அம்சங்கள், சர்வசன வாக்குரிமை மற்றும் உள்ளூரதிகார சபைகள் தேர்தல் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக நாடு பூராகவும் பரந்து வாழ்கின்ற பெண் தொழிற்படுனர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களூடாக தேர்தல்கள் செயன்முறைகள், சனநாயகம், சர்வஜன வாக்குரிமை மற்றும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் சட்டத் திருத்தம் தொடர்பாகவும் பெண்களின் அரசியல் பங்கேற்பு தொடர்பாகவும் பெண்களை அறிவுறுத்தும் செயலமர்வுகள் அணுகப்படுகின்றன. அத்துடன் இத்தகைய செயலமர்வுகளில் உள்ளூர் அதிகார சபை பிரதிநிதித்துவத்துக்காக பெண்களுக்காக 25% ஒதுக்கீடு மற்றும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பான சமூக பிரச்சினைகள் கலந்துரையாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக 2017ம் ஆண்டின் 16ம் இலக்க சட்டத்தின் மூலம் உள்ளூராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்படுள்ளது. இந்த முறை பெண்களை அரசியலில் உள்ளீர்க்கும் முகமாக கொண்டு வரப்பட்ட உந்துதல் ஆகும். இம்முறை மூலம் ஒவ்வொரு தேர்தல் வட்டாரத்திற்கும் வேட்பாளர்களில் குறைந்தது 10 சதவீதமானவர்கள் கட்டாயமாக பெண்களாக இருத்தல் வேண்டும். ஆகவே இம்முறை கிட்டத்தட்ட 2000க்கும் அதிகமான பெண்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமூலம் அரசியலுள் உள்வாங்கப்படுவர். இதில் வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால் பெரும்பாலான கட்சிகளிடம் வேட்பாளர்களின் பட்டியலை பூர்த்தி செய்வதற்கான ஆளுமைகளுடன் திறமையான பெண்கள் இல்லை என்பதே. அதிக பெண்களை உள் வாங்குவதன் மூலம் நல்லிணக்கமும், சமாதானமும் உண்மையான சமூக அபிவிருத்தியும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணமும் விரைவில் பெற்றுக் கொள்ள வழி சமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .

கடந்த கால அவதானிப்பின் படி பெரும்பாலான கட்சிகள் வெறுமனே 25% சதவீத பங்குபற்றலில் பெண்கள் இடம்பெற வேண்டும் என்பதை மட்டும் கருத்திற் கொண்டு பெண்களது பெயர்களை பட்டியலில் முழுமைப்படுத்தி இருந்தனர். 25% சதவீதமான பெண்களைத் தெரிவுசெய்வதை விட, தகுதிமிக்க அதிகளவிலான பெண்களைத் தெரிவுசெய்து, மாகாணசபை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கான தேர்தலில் பெண்களில் முன்னேற்றத்துக்கான முதலாவது படியாக, இந்தத் தேர்தலைப் பயன்படுத்த முடியுமெனும் விழிப்புணர்வை முதலில் அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.  குறிப்பாக அரசியல் துறையில் பெண்களை வலுவூட்டுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகுமெனவும், அதிலிருந்து குறிப்பிடத்தக்க பயன்கள் கிடைப்பதில்லையெனவும் ஆய்வறிக்கைகள் மூலம் தெரியவருகின்றது.

இலங்கையின் அரசியலில், பெண்களை உள்நுழைப்பதற்கான சிறந்த திட்டம் அல்லது ஏற்பாடாக இவ் உள்ளூராட்சி சபைத் தேர்தலே அமைகின்றது அதனை ஆக்கபூர்வமானதாக பயன்படுத்தி உச்ச பயன் அடைய பெண்கள் முயல வேண்டும்.  அரசியல் புரிவதற்கு தகுதியான பெண்கள் இல்லை என்றும்  பெண்கள் முன்வருவதற்கு பின்னிக்கின்றார்கள் என்பதற்கு பதிலாக பெண்களுக்காக பெண்களது அரசியல் தலையீடூ உருவாக வேண்டும், இச்சமூகம் அதனை உருவாக்க வேண்டும். இங்கு பெருமளவிலான பெண்கள் அரசியலில் நுழைய விருப்பங்கள் தெரிவிக்கின்ற போதிலும் குடும்ப மற்றும் சமூக காரணங்கள், குடும்ப பொறுப்புக்கள், பிறழ்வான விமர்சனங்கள் அவர்களிற்கு முரணாக அமைகின்றது.

ஆக பெண்கள் அரசியலில் ஈடுபட குடும்ப அளவிலும் சமூக அளவிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டியது அவசியம் ஆகும். ஆயினும் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர்தான் பெண்களால் அரசியலுக்குள் நுழைய இயலும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்படுதல் ஆரோக்கியமானது அல்ல. மாற்றங்களை உருவாக்க முதலில் பெண்கள் மாற வேண்டும். சவால்களை ஏற்றுக்கொண்ட அரசியல் பிரவேசத்தின் மூலம் சமூக எண்ணக்கருக்களை மாற்ற இயலும். அத்துடன் அரசியல் அமைப்புக்களும் பெண்களுக்கான உரிய அங்கீகாரத்தையும் முக்கியத்துவத்தையும் அளித்தல் அவசியம். பெண்கள் அரசியலில் பாதுகாப்பு மற்றும் போதிய ஆதரவினை கட்சிகள் உறுதி செய்தல் அவசியம். மாற்றங்களை உருவாக்க வேண்டும் எனில் முதலில் மாற்றங்களுக்கான கருத்துக்களிற்கு செயல்வடிவம் கொடுத்தல் அவசியம். ஆக பெண்களுடைய அரசியல் ரீதியான பிரவேசத்தை ஊக்குவிப்பதோடு உறுதுணையளிக்கும் சமூகச் சங்கிலிகளை வலுப்படுத்துவோம்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்லுணவுகள்

ஆரோக்கியம் பற்றி பேச தொடங்குகையிலேயே நமது உணவு பொருட்கள் மீது கவனம் செலுத்துவது முக்கியமாகிறது. ஏனெனில் உண்ணும் உணவே பிற்காலத்தில் உடல் நலத்திற் க்கு பாதகமாக அமைகிறது. ஆசைக்கேற்ப உணவு உட்கொள்வது தவறல்ல. ஆனால் அதில் சற்று சத்துணவும் சேர்த்துக்கொள்ள வேண்டியது நாம் நமது உடல்நலத்தில் காட்டும் அக்கறை ஆகும்.

அதிக போஷாக்கு நிறைந்த மரக்கறி வகைகள் சில,

கீரை -spinach
இனிப்பு உருளைக்கிழங்கு – sweet potatoes
ப்ரோக்கோலி –  broccoli
பீட்ரூட் -beetroot
காலே -kale
பச்சை பீன்ஸ் –  green beans

கீரை
பசலைக் கீரைகளில் கீரை ஒரு சூப்பர் ஸ்டார். இந்த குறைந்த கலோரி உணவு உங்கள் உடலுக்கு பல வழிகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து – கிருமிகளுக்கு எதிரான உங்கள் உடலின் பாதுகாப்பு – உங்கள் இதயத்திற்கு உதவுவது வரை, அதன் நன்மைகள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.

பூட்ஸ் நீரேற்றம்.
நீர் குடிப்பது மற்றும் பிற பானங்கள் மட்டுமே நீரேற்றத்திற்கு ஒரே வழி என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த இலக்கை அடைய உணவு உங்களுக்கு உதவும். கீரை என்பது கிட்டத்தட்ட அனைத்து நீரும் கொண்ட ஒரு காய்கறி. கூடுதல் H2O க்கு நாள் முழுவதும் உங்கள் உணவு மற்றும் சிற்றுண்டிகளில் சேர்க்கவும்.

லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகியவை கீரையில் உள்ள கரோட்டினாய்டுகள் ஆகும். அவை நீண்டகால கண் நிலைகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன. உதாரணமாக, வைட்டமின் சி போல, அவை உங்கள் கண்புரை வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன. கீரையிலிருந்து வைட்டமின் ஏ கிடைக்கும். இது நல்ல பார்வைக்கு உதவுகிறது.

இனிப்பு உருளைக்கிழங்கு
இனிப்பு உருளைக்கிழங்கு இனிப்பு, மாவுச்சத்துள்ள வேர் காய்கறிகளாகும். அவை உலகளவில் வளர்க்கப்படுகின்றன.  அவை பல்வேறு அளவுகள் மற்றும் வண்ணங்களில் வருகின்றன – ஆரஞ்சு, வெள்ளை மற்றும் ஊதா உட்பட – மற்றும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஃபைபர் நிறைந்தவை.

ஒரு கப் (200 கிராம்) தோலுடன் வேகவைத்த இனிப்பு உருளைக்கிழங்கு வழங்குகிறது.

கலோரிகள்: 180
கார்போஹைட்ரேட்: 41.4 கிராம்
புரதம்: 4 கிராம்
கொழுப்பு: 0.3 கிராம்
நார்ச்சத்து: 6.6 கிராம்
வைட்டமின் ஏ: 769%
தினசரி மதிப்பு (DV)
வைட்டமின் சி: டிவியின் 65%
மாங்கனீசு: 50% டி.வி
வைட்டமின் பி 6: டிவியின் 29%
பொட்டாசியம்: டிவியின் 27%
பாந்தோத்தேனிக் அமிலம்: 18% டி.வி
காப்பர்: 16% டி.வி
நியாசின்: டிவியின் 15%
கூடுதலாக, இனிப்பு உருளைக்கிழங்கு – குறிப்பாக ஆரஞ்சு மற்றும் ஊதா வகைகள் – உங்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

ஃப்ரீ ரேடிக்கல்கள் நிலையற்ற மூலக்கூறுகள் ஆகும். அவை டிஎன்ஏவை சேதப்படுத்தும் மற்றும் வீக்கத்தை தூண்டும்.

ஃப்ரீ ரேடிக்கல் சேதம் புற்றுநோய், இதய நோய் மற்றும் முதுமை போன்ற நாள்பட்ட நோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

ப்ரோக்கோலி –
ப்ரோக்கோலி ஒரு பச்சை மரமாகும், இது ஒரு சிறிய மரத்தை தெளிவில்லாமல் ஒத்திருக்கிறது. இது பிராசிகா ஒலரேசியா எனப்படும் தாவர இனங்களுக்கு சொந்தமானது. இது முட்டைக்கோஸ், பிரஸ்ஸல்ஸ் முளைகள், காலே மற்றும் காலிஃபிளவர் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது – அனைத்து சமையல் தாவரங்களும் கூட்டாக சிலுவை காய்கறிகள் என்று குறிப்பிடப்படுகின்றன.

ப்ரோக்கோலியில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன:

  • காலபிரீஸ் ப்ரோக்கோலி
  • முளைக்கும் ப்ரோக்கோலி
  • ஊதா காலிஃபிளவர்
    ப்ரோக்கோலி என்பது வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஊட்டச்சத்து சக்தியாகும்.

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பயோஆக்டிவ் கலவைகள் நிரம்பியுள்ளன
ப்ரோக்கோலியின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று ஊட்டச்சத்து உள்ளடக்கம். இது பரந்த அளவிலான வைட்டமின்கள், தாதுக்கள், நார் மற்றும் பிற பயோஆக்டிவ் சேர்மங்களால் நிரம்பியுள்ளது.

ஒரு கப் (91 கிராம்) மூல ப்ரோக்கோலி

கார்போஹைட்ரேட்: 6 கிராம்
புரதம்: 2.6 கிராம்
கொழுப்பு: 0.3 கிராம்
ஃபைபர்: 2.4 கிராம்
வைட்டமின் சி: ஆர்டிஐயில் 135%
வைட்டமின் ஏ: ஆர்டிஐயில் 11%
வைட்டமின் கே: ஆர்டிஐயில் 116%
வைட்டமின் பி 9 (ஃபோலேட்): ஆர்டிஐயில் 14%
பொட்டாசியம்: RDI இன் 8%
பாஸ்பரஸ்: RDI இன் 6%
செலினியம்: ஆர்டிஐயின் 3%
ப்ரோக்கோலியை சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம் – இரண்டும் முற்றிலும் ஆரோக்கியமானவை ஆனால் வெவ்வேறு ஊட்டச்சத்து விவரங்களை வழங்குகின்றன.

கொதித்தல், மைக்ரோவேவ், ஸ்டைர்-ஃப்ரைங் மற்றும் ஸ்டீமிங் போன்ற பல்வேறு சமையல் முறைகள், காய்கறிகளின் ஊட்டச்சத்து கலவையை மாற்றுகின்றன, குறிப்பாக வைட்டமின் சி, அத்துடன் கரையக்கூடிய புரதம் மற்றும் சர்க்கரை. ஸ்டீமிங் குறைவான எதிர்மறை விளைவுகளைக் கொண்டுள்ளது

பீட்ரூட் –
பீட்ரூட் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
பீட்ரூட் இதய செயலிழப்பு மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு உதவும்
பீட்ரூட் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய உதவும்
பீட்ரூட் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராட உதவுகிறது
பீட்ரூட் உங்கள் எலும்புகளை பலப்படுத்துகிறது
பீட் கீரைகள் மற்றும் பீட் வேர்கள் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகும்
பீட்ரூட் ஆரோக்கியமான கர்ப்பத்தை ஊக்குவிக்கும்
பீட்ரூட் ஆரோக்கியமான கல்லீரலை பராமரிக்கிறது

காலே –
வைட்டமின் ஏ (கண் மற்றும் எலும்பு ஆரோக்கியம் மற்றும் வலுவான நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமானது), வைட்டமின் சி (குளிர் மற்றும் நாள்பட்ட நோய் தடுப்புக்கு உதவுகிறது) மற்றும் வைட்டமின் கே (இரத்தம் உறைதல் மற்றும் எலும்பு கட்டமைப்பிற்கு நல்லது)
ஃபோலேட், B வைட்டமின் மூளை வளர்ச்சிக்கு முக்கியமாகும்

பச்சை பீன்ஸ் –
அவற்றில் குறைந்த கலோரி இருந்தாலும், பச்சை பீன்ஸ் பல முக்கியமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது, அவை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. பருப்பு வகைகளில் வைட்டமின் சி, ஃபிளாவோனால்ஸ், குர்செடின் மற்றும் கேம்ஃபெரோல் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன, இது உயிரணு சேதத்தை குறைக்க உதவுகிறது மற்றும் சில உடல்நலக் கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

கொழும்பில் கொத்து

உணவு என்பது நவரசமும் நாவில் நடனமாடி சமிபாட்டு தொகுதியில் சமாதி ஆகவேண்டும் என்ற உணவு பிரியனின் கருத்துக்கு ஏற்ப இலங்கையர் என்ற வகையில் நமது தேசிய உணவு அரிசிச் சோறா அல்லது சிக்கன் கொத்து ரொட்டியா என்று  எவரேனும் வினவினால்,  இது hypothetical question என்ற பதில் பெரும்பாலும் வரும் ஏனெனில் கொத்துரொட்டி என்பது நமது உணவு என்ற உணர்வுடன் சங்கமித்து புத நாவில் நிலை கொண்டுவிட்டது. ஆம், இன்று மிகக் குறைந்த விலையே 550 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கின்றது. இத்தகைய நிலையினை நோக்கி இந்த கொத்துரொட்டி மாற காரணம் அதன் சுவை நமது இலங்கையர் மத்தியில் இடம் பிடித்ததே ஆகும்.

கொத்து ரொட்டியின் பிறப்பிடம் இலங்கை என்ற ரீதியில் கொழும்பில் கொத்து ரொட்டியை சுவைக்கக் கூடிய முக்கிய ஐந்து இடங்களைப் பற்றி நாம் பார்க்க போகிறோம்.

MACHAN RESTAURANT
கடுவளையில் அமையப்பெற்றிருக்கும் மச்சான் ரெஸ்டாரண்டில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவாக அமைவது wok chicken kothu ஆகும். அதாவது வழமையாகவே கொத்து செய்யும் முறையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு உணவு செய்யும் முறையைக் கொண்டு இது இடம்பெறுகின்றது. பொதுவாகவே சிலரிடம் kothu வின் சுவை எவ்வாறு அமையும்  என்று கேட்டால் நிச்சயமாக கொத்து மாஸ்டர் அடுப்பு கல்லில் கொத்துவதில் தான் உள்ளது என்று கூறுவார்கள். ஆயினும் இங்கு கொத்து தயாரிக்கும் முறையானது தாட்சியில்  அமையப் பெறுகின்றது.
எனினும் வழமையான கொத்தின் சுவைக்கு ஈடாகவே இதன் சுவையும் இடம்பெறுகின்றது. ஒரு மாலை நேரத்தில் காரசாரமாக ஒரு உணவு உட்கொள்ள வேண்டும் எனில் நிச்சயமாக நீங்கள் இங்கு Wok Chicken kothu இனை try செய்து பார்க்கலாம்.

No 27,New kandy rd Bandarawaththa, Kaduwela 10640
0112 489 992

THE CHEF CEYLON

ஒரு ஜூஸி வகையிலான கொத்து இனை சுவைக்க உகந்த இடம் என்று இந்த ரெஸ்டூரண்ட்டை பரிந்துரைக்கலாம். இங்கு உள்ள சிக்கன் கொத்துவின் சிக்கன் சுவை, நாவில் பரபரவென்று உணர்வினை ஏற்படுத்தியது. ஆம், அதன் சுவையினை லேயர் லேயராக சுவைக்கக் கூடிய பாக்கியம் எனக்கு கிட்டியது. நிச்சயமாக கொடுக்கின்ற காசுக்கு மிகவும் worth ஆன கொத்தாக இது இடம்பெறுகின்றது. அதேவேளையில் இங்கு உள்ள சிக்கன் சீஸ் கொத்து மற்றும் சிக்கன் சீஸ் மசாலா கொத்து  வகைகளை ஒரு வார்த்தையில் விவரிக்க வேண்டுமாயின்.. “Vera level  ” என்று கூறலாம்.

324 Colombo – Galle Main Rd, Colombo 06
0112 360 356

KOTTU LABS

கொழும்பு நகரில் கொத்துக்கு என்று பெயர் போன இடமாக இந்த ரெஸ்டூரண்ட் கூறலாம். மேலும் இங்கு அதிகளவிலான combo offerகள் வழங்கப்படும். பெரும்பாலான இடங்களை விட இங்கு பரிமாறப்படும் கொத்து ரொட்டி சற்று கனமாகவே காணப்படும். எனினும் இந்த கொத்து ரொட்டியின் உள்ளீடுகளின்  காரணமாக வேறு ரகத்திலான சுவையினை சுவைக்கக் கூடிய சந்தர்ப்பம் எமக்கு கிட்டுகிறது.

31, D. M. Colombage Mawatha, Nawala Rd, Nugegoda 10250
077 668 0000

THE CHARIOT – BAMBALAPITIYA

மிக அண்மையில் நீங்கள் சுவைத்த ஒரு வித்தியாசமான கொத்துரொட்டி என்ன? என்ற கேள்வியை எவரேனும் வினவினால் நிச்சயமாக எனது பதில் chariot இன் Chicken kothu தான். நிச்சயமாக சிலர் கூறுவதை நாம் கேட்டு இருக்கலாம் “ஏதோ இவன் பன்றான் யா”. அந்த வாக்கியத்திற்கு ஒரே உதாரணம் இவர்களின் சிக்கன் கொத்து. தான் இதுவரை எனது நாவு அந்த சிக்கன் கொத்தின் சுவை இலக்கணத்தை புரியாமல் தவிக்கின்றது என்றே கூறலாம்.

0117 777 770

DINDIGUL THALAPAKKATI

பிரியாணிக்கு உலகளவில் பெயர் போன இடத்தில் வித்தியாசமாக நாம் கொத்துரொட்டி சுவைத்து பார்க்க முயற்சி செய்தோம். எனினும் இந்த முயற்சி தவறா சரியா என்ற அச்சம் ஆரம்பத்தில் இருந்த போதும், இறுதியில் வித்தியாசமான இலங்கையில் இந்த ஸ்டைலில் நான் எங்குமே கொத்துரொட்டியினை சுவைக்கவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. அதேவேளையில் முற்றிலும் இலங்கையிலிருந்து மாறுபட்ட ஒரு கொத்துரொட்டியாக தலப்பாகட்டி இன் கொத்தினை கூறலாம். ஒரு முறை சுவைத்துப் பார்க்க, நிச்சயமாக முயற்சித்துப் பார்க்கலாம்.

No 8 De Fonseka Pl, Colombo 00400
0114 878 787

இன்று கடலை விடப் பெரிதாக உணவு வகைகள் உலகில் காணப்பட்ட போதும் இலங்கையர்கள் என்ற ரீதியில் எமது நாவிலிருந்து ஒரு போதும் இந்த கொத்து ரொட்டியின் சுவை யினை யாராலும் மறக்க முடியாது

காலங்கள் மாற மாற koththu ரொட்டியும் Chesse Kottu, cheese masala, chilli cheese masala, chicken palandi, beef kothu, mutton kothu, egg Kottu, prawn Kottu, crab Kottu என்று மெருகேற்றிக் கொண்டே செல்லும்.

உலகில் தலைசிறந்த கடற்கரைகளுள் ஒன்றான தங்கல்லை கடற்கரை.

தங்கல்ல கடற்கரை இலங்கையில் தென் பாகத்தில் அழகிய நீல நிற நீருடன், பனை மரங்கள் சூழ வெள்ளை நிற மணலுடன் மனதைக் கவரக்கூடிய வடிவில் அமைந்துள்ளது. தங்கல்ல ஒரு மீன்பிடி கிராமமாகும். தங்கல்ல கடற்கரையை சூழ அமைந்துள்ள முல்கிரிகல குகை விகாரை, கலமெடியா பறவைகள் சரணாலயம், கடல் ஆமைகளை அவதானிக்கக்கூடிய ரெகாவ, உம்மான ஊது துளை (இலங்கையிலுள்ள ஒரே ஒரு ஊது துளை, உலகில் இரண்டாவது பெரிய ஊது துளை) போன்றன உள்நாட்டு உல்லாச பணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு உல்லாச பயணிகளையும் கவர்கின்றது. இக்கடற்கரையை விட அழகான கடற்கரையொன்றை இலங்கையில் வேறெங்கும் அவதானிக்க முடியாது என்றே கூற வேண்டும்.

Big 7 Travelயினால் (பெரிய 7 பயணங்கள்) மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலின் படி, உலகிலுள்ள மிகச் சிறந்த கடற்கரைகளில் ஒன்றாக தங்கல்ல கடற்கரை தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு சர்வதேச தரத்திலான உணவு, தங்குமிடம், பயண அனுபவம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் வருகை தர வேண்டியதோர் இடமே தங்கல்ல கடற்கரையாகும்.

அழகான வெள்ளை நிற மணல் மனதிற்கு அமைதியளிக்கிறது. நீர் சறுக்கல் பிரியர்களுக்கு சுமுகமாக சுற்றாடல் காணப்படுன்கிறது. கடல் வாழ் உயிரினங்களுக்கு அதிகம் விரும்புவர்களுக்கு வித்தியாசமான உயிரின பல்வகைமை மற்றும் கடல் ஆமைகளை அவதானிக்கலாம். ” பனை மரங்கள் அமையப் பெற்ற சூழலில் தூய மணலுடன் இணைந்த வகையில் இந்து சமுத்திர நீருடன் கலந்த அமைப்பில் தங்கல்ல கடற்கரை அமைந்துள்ளது. நீண்ட கடற்கரையில், சூரிய ஒளியில் இதமான அமைப்பில் அமைதியான முறையில் அமைந்துள்ளது. ஆயினும் நீச்சல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. நீர் சறுக்கலில் ஈடுபடும் வீரர்கள் அலைகளுடன் மோதலாம்” என பெரிய 7 பயணங்கள் (Big 7 Travel) தெரிவிக்கின்றது. மனதுக்கு இதமான அமைதியான கடற்கரைக்கு செல்ல விரும்பினால் இக் கடற்கரைக்கு செல்லலாம். அத்தோடு இது குறித்து எமக்கு மிக அண்மையிலேயே அமைந்துள்ளது.

மிகச்சிறந்த 50 கடற்கரைகள் பற்றிய தரப் பட்டியல்

இப்பட்டியல் உலக அளவில் தெரிவு செய்யப்பட்ட கடற்கரைகளை ப. அழகான கடற்கரைகளில் தெரிவு செய்வதற்கான வழிகாட்டியாக இப்பட்டியல் அமையும். நீங்கள் ஓர் கடற்கரை விரும்பியாக இருந்தாலோ அல்லது தேனிலவை அழகான முறையில் கழிக்க திட்டமிட்டுவோராக இருந்தாலோ அல்லது அடுத்த விடுமுறையை முறையாக திட்டமிட்டு கழிக்க விரும்பினாலோ இப்பட்டியல் உங்களுக்கு பெரிதும் உதவும். இச் சிறந்த கடற்கரைகள் பற்றிய பட்டியல் உலகெங்கும் உள்ள மிகச்சிறந்த கடற்கரைகள், பிரபல்யமான கடற்கரைகள் மற்றும் மறைவாக அமைந்துள்ள கடற்கரைகள், பஹாமாஸில் உள்ள வெப்பமண்டல வெள்ளைமணல் முதல் ஐஸ்லாந்தில் உள்ள கருப்பு மணல் வரை அனைத்து தகவல்களையும் எமக்குத் தருகின்றது என பெரிய 7 பயணங்கள்(Big 7 Travel) தெரிவிக்கின்றது.

உத்தியோகபூர்வமான ப்ளாக் மற்றும் ஊடக மூலம் முழுமையாக (உயர் தரங்களுடன் தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வோர் கடற்கரைகளும்) தெரிவு செய்யப்பட்ட நீல கொடியின் தர அடிப்படையில் கடற்கரைகள் பெரிய 7 பயணங்களின் பதிப்புக் குழுவின் மூலம்(Big 7 Travel) தெரிவு செய்யப்பட்டு பின்னூட்டல் வழங்கப்பட்டுள்ளன.

இது எவ்வாறு இலங்கையின் சுற்றுலாத் துறையில் தாக்கம் செலுத்துகின்றது?

இலங்கையின் மூன்றாவது மிகப் பெரும் வருமானம் சுற்றுலாத்துறையின் மூலமே வருடாந்தம் தீட்டப்படுகிறது ஈட்டப்படுகிறது. அத்தோடு தங்கல்ல கடற்கரை சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பிரதான சுற்றுலாத் தளமாக உள்ளது. 2021-ம் ஆண்டுக்கான சிறந்த கடற்கரைகளை தர வரிசையில் இலங்கையில் உள்ள தங்கல்ல கடற்கரையும் தரப்படுத்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகளாவிய ரீதியில் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும். ” இலங்கையின் அழகான இடங்கள் (தங்கல்ல கடற்கரை) போன்றன உலகளாவிய அளவில் பிரபல்யம் அடையும்போது, அதிகளவான உல்லாசப் பயணிகளை ஈர்க்க முடிவுடன், சமூகத்தில் நிறைய தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்க முடியும். இலங்கையில் உள்ள சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்வதுடன் மூலம் இயற்கையாகவே நிலையான அபிவிருத்தியை உருவாக்க முடிவதுடன் இணையில்லா உணர்வை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பரிசளிக்க முடியும்” என பெரிய 7 பயணங்கள் (Big 7 Travel) தெரிவிக்கின்றன.

தங்கல்ல கடற்கரை இருந்து 205 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. காரில் பயணம் செய்யும்போது கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே செல்கின்றது. இலங்கையின் அழகையும் கவர்ச்சியான வரலாற்றையும் உள்ளடக்கிய தங்காலை சென்று அனைவரும் பார்வையிட வேண்டும். இதுக்கு முன்னாடி செல்லாதவர்கள் அனைவரும் கட்டாயம் சென்று பார்வையிட வேண்டிய ஓர் இடமே தங்காலை கடற்கரை கடற்கரையாகும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களும் தொடரும் போராட்டங்களும்.

உலகின் எந்தவொரு மனிதனும் தன்னுடைய தேவைகளுக்காக மட்டும் அல்லாமல் தன்னைச் சார்ந்தோரது தேவைகளுக்காகவும் தன்னுடைய உழைப்பினை செலவிடுவதற்கு நிர்பந்திக்கப்படுகின்றான். ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் பொறுப்புக்கள் எனும் சுமை பொதுவானதே எனினும் ஒருசிலருக்கு மட்டும் இவை விதிவிலக்கு என்பதோடு பெரும்பாலான மனிதர்கள் ஏதோவொரு வகையிலான உழைத்தலிலேயே வாழ்நாளை செலவிடுகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கான ஊதியம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் உறுதிசெய்யப்படுதல் மிகவும் இன்றியமையாதது.

இலங்கையை எடுத்துக்கொண்டால் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் தொழிலாளர் சார்ந்த பிரச்சனைகள் பரவலாக இருக்கின்ற போதிலும் பெருந்தோட்ட தொழிலாளிகளுடைய பிரச்சினைகள் எத்தனையோ ஆண்டுகளாக பேசப்படுகின்ற போதிலும் இன்றுவரை முறையான தீர்வுகள் கிடைக்கப்பெறாமலேயே உள்ளன.  பிரித்தானியர்களின் தேவைக்காக இந்தியாவில் இருந்து கூலித் தொழிலாளர்களாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மலையக மக்கள் இன்று இலங்கையில் இருநூற்றாண்டு வரலாற்றுக்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர். மலையக மக்களின் அடிப்படை பொருளாதரம் என்பது பெருந்தோட்டத்துறை பொருளாதாரமாகும். மலையக மக்களே பெருந்தோட்ட பொருளாதாரத்தை உருவாக்கியவர்கள் என்றும் நோக்க இயலும். மலையக மக்கள் வரலாற்று ரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஒரே தடவையில் வர்க்க ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை என்பவற்றை புறரீதியாக எதிர் நோக்குகின்றனர். மலையகத்  தமிழர்கள் எனும் அடையாளம் அவர்கள் இந்தியர் என்ற  அந்நிய உணர்வை அவர்களிடத்தும் ஏனைய இலங்கை வாழும் மக்களிடத்திலும் ஏற்படுத்துவதாக இருக்கின்ற நிலை இன்னமும் தொடர்கின்றமை கவலைக்குரியதாகும்.

மலையகம் என்றவுடன் பச்சைப்பசேலெனக் காட்சி தரும் மலைகளும் தேயிலைச் செடிகளமே நம் நினைவிற்கு வரும். ஆயினும் அங்கு எத்தனையாயிரம் தொழிலாளர்களின் இரத்தமும், வேர்வையும் பொதிந்துபோய்க் கிடக்கின்றன என்பதை எவரும் அறிவதில்லை. எமது நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாகவும், முதுகெலும்பாகவும் பார்க்கப்படும் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாகியும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதென்பது வெறும் கனவாகவே காணப்படுகிறது. அவ்வாறானதொரு துர்பாக்கிய நிலை இன்றுவரை தொடர்ந்துகொண்டுள்ளது.  இவர்களது கடின உழைப்புக்கு வழங்கும் ஊதியம் இவர்களது உணவுக்கே போதாத நிலையில், பொருளாதார ரீதியில் மிகவும் பின்னடைவில் உள்ளவர்களாக, தமது உரிமைகளை கேட்டும் பெறும் அல்லது தமது உரிமைகளே என்ன என்று தெரியாத நிலையில் அதிகமானோர் வாழ்கின்றனர். மலையக மக்களின் பிரச்சினைக்கான தீர்வு உடனடியாக கிடைக்காவிடினும் சர்வதேச மயப்படுத்தலின் ஊடாக உலக நாடுகளின் நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தி இதனை செய்து கொள்ள முடியும். பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் ஆதரவு, அழுத்தம் என்பன மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

இவ்வாறாக இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளிகள் எனும் பதத்தினுள் மலையக மக்களே பெரிதும் உள்ளடக்கப்படுகின்றனர். ஆக மலையக மக்களின் பிரச்சனைகளை உற்றுநோக்கினால் வீடு மற்றும் காணி உள்ளிட்ட பல அடிப்படை பிரச்சனைகள் முதலிய பல்வேறான பிரச்சினைகளை வரிசைப்படுத்த முடியும். முதலில் வரலாற்றளவில் பெருந்தோட்ட மக்கள் அல்லது மலையக மக்கள் என்பதனால் நாம் விளங்கிக்கொள்வது யாது என அணுகுகின்ற போது, 1820 – 1840 காலப்பகுதியில் இந்தியாவின் தென்மாநிலத்தில் வரட்சி, காலநிலை, நோய்த்தொற்றுகள், தொழில்பாதிப்புக்கள், சமூக கட்டமைப்பு மற்றும் அடக்குமுறைகள் முதலான பெருமளவிலான பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் ஏற்பட்ட போது, இச்சூழலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள், அங்குவாழ்ந்த அப்பாவி மக்களை கூலித்தொழிலாளர்களாக இலங்கைக்கு அழைத்துவந்தனர். மிலேச்சத்தனமான முதலாளித்துவமும் கம்பனிகளின் ஏகாதிபத்தியமும் இவர்களுடைய உழைப்பினை சுடண்டுவதுடன் மட்டும் அல்லாமல் அவர்களுடைய அடிப்படை தேவைகளையும் கூட கேள்விக்குள்ளாக்குகின்றன.

இவ்வாறு இங்கு குடியேறிய மக்கள் தேயிலை, இறப்பர் முதலிய பெருந்தோட்ட செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1998 ஆம் ஆண்டு தொடக்கம் கூட்டு ஒப்பந்த முறைமையே தீர்மானித்துவருகிறது. அதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முதலாளிமார் சம்மேளனம் மற்றும் மூன்று தொழிற்சங்கங்களும் இணைந்து கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவது வழமையாக இருக்கின்றது. இவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் அவர்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட போதுமானதாக இருக்கின்றதா என வினவினால் நிச்சயமாக இல்லை. இலங்கையின் பொருளாதாரத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது பெருந்தோட்ட செய்கையாக இருக்கின்ற போதிலும் அத்தொழிலில் ஈடுபடும் மக்கள் காலம் காலமாக அல்லலுறுவதாகவும் பல்வகைப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாகவுமே அமைகின்றது.

தொடர்ச்சியாக பேசுபொருளாகிவரும் இச்சம்பளப் பிரச்சனையை கூட்டு ஒப்பந்த முறைக்கு முன் மற்றும் பின் என்று பிரித்து ஆழமாகப் பார்த்தால் கூட்டு ஒப்பந்த முறை உருவாக்கப்பட முன்னரும், கூட்டு ஒப்பந்த முறை உருவாக்கப்பட்ட பின்னரும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காத நிலையில் சிறியளவிலான சம்பள அதிகரிப்பை கூட தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தே பெற்றுக்கொண்டனர் என்பதை புரிந்துகொள்ள முடியும். இம் மக்களின் பிரச்சினைகள் அநேகமாக உள்ளன.  இந்நிலையில் இப் பிரச்சினைகள் சர்வதேசமயப்படுத்தப்படவில்லை என்றும் தேசியப் பிரச்சினைகள் எனும் வரையறைக்குள் உள்வாங்கப்படவில்லை எனும் கருத்துக்கள் பலவும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மலையக மக்களின் பிரச்சினைகள் பலவும் தொடர்ந்தும் தீர்க்­கப்படாத நிலையிலேயே காணப்படுவதாகவும் அறியப்படுகிறது. எனினும் மலையக மக்களின் பிரச்சினைகள் சர்வதேசத்துக்கு போகவில்லை. எனினும் சர்வதேச மயப்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. மலையக மக்களின் பிரச்சினைகள் இன்று உள்நாட்டில் அடிக்கடி வலியுறுத்தப்படுகின்றன.

மலையக தொழில்முறைமை கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படை என்றபடியினால், அதன் பிரகாரம், 300 நாட்கள் வருடத்திற்கு வேலை வழங்கப்பட வேண்டும். சம்பள நிர்ணய சபையினால், சம்பளத்தை மாத்திரமே நிர்ணயிக்க முடியும் என்பதுடன், வேலை நாட்களை அவர்களினால் நிர்ணயிக்க முடியாது. இவ்வாறான நிலையில், தற்போது வேலை நாட்களை தீர்மானிப்பதில் பிரச்சினை எழுந்துள்ளதாக அறிய முடிகின்றது. மலையக மக்களது சம்பள பிரச்சினை தொடர்பில் ஆராய்கின்ற போது சம்பள உயர்வு தொடர்பில்  தொடர்சியாக ஏமாற்றத்திற்கு உள்ளாகிவரும் தோட்டத் தொழிலாளர்கள் விலைவாசி உயர்வை சமாளிக்கமுடியாது மிகுந்த நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். அரசின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில், 2013 ஆம் ஆண்டில் 4 பேரைக்கொண்ட குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் தமது தேவைகளை பூர்த்தி செய்ய 47,600 ரூபாய் தேவைப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சொற்பமான வரையறையற்ற 620 ரூபாய் அவர்களுக்கு பெரும்சவாலே. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தமானது புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் 2015 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்தத்தின் போது தினக்கூலி 1000 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் எனும் தொனி உரக்க ஒலித்தது.

ஆயினும், மலையக மக்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கைச்சாத்திடப்பட வேண்டிய புதிய கூட்டு ஒப்பந்தம் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டது. அத்துடன் இத்தொழிலாளர்களது கோரிக்கைகளுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் புறக்கணிப்புக்களும் இருக்கவே செய்தன. இந்நிலையில் 2016 செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் 1000 ரூபாய் சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் 23 நாட்கள் போராட்டங்களை முன்னெடுத்த அழுத்தத்தை தொடர்ந்து 2016 ஒக்டோபர் 18 ஆம் திகதி வெறுமனே 110 ரூபாய் அதிகரிப்புடன், 730 ரூபாய் தினக்கூலியாக அறிவிக்கப்பட்டு புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. ஆயினும் அனேகமான தோட்டப் பகுதிகளில் குறித்த 730 ரூபாய் சம்பளமானது அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் அடிப்படைச் சம்பளமான 500 ரூபாயும் அதற்கு மேலதிகமான கொடுப்பனவும் மாத்திரமே தொழிலாளர்களுக்கு கிடைக்கிறது என்பது நிதர்சனம். அதேபோல், நாள் ஒன்றிற்கு பதினெட்டு கிலோ கிராம் தேயிலைக் கொழுந்து பறித்தால் மட்டுமே முழுமையான சம்பளம் வழங்கப்படும். அத்துடன் 18 கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்கப்படாத சந்தர்ப்பத்தில் மேலதிக கொடுப்பனவான 140 ரூபாய் தரப்படுவதில்லை என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயினும் இவர்களுடைய போராட்டங்களும் கோரிக்கைகளும் தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டே இருந்தன. கூட்டு ஒப்பந்தத்தின் படி, 1000 ரூபா சம்பளத்தை வழங்க கம்பனிகள் நிராகரித்து வந்த சந்தர்ப்பத்தில், பிரச்னைக்கான தீர்வை பெற்றுக்கொள்வதற்காக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தொழில் அமைச்சின் ஊடாக, சம்பள நிர்ணய சபையை நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவை தவிர தேயிலைக் கொழுந்து பறிக்கும்போது பல பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. குளவிக்கொட்டுக்கும், அட்டைக்கடிக்கும் இலக்காகும் தொழிலாளர்கள் வைத்தியசாலை செல்ல வேண்டிய தேவைகள் அதிகம் காணப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சம்பள இழப்பேற்படுகிறது. அத்துடன் அடிக்கடி ஏற்படும் தொற்று/ தொற்றா நோய்கள் மிகவும் குறைவான வதிவிட வசதிகள், போக்குவரத்து இடர்கள் என்பவற்றோடு, விலைவாசி அதிகரிப்பின் காரணமாக குடும்பம் ஒன்றின் ஒருநேர உணவிற்கு மாத்திரம் குறைந்தது 400 ரூபாய் வரையில் செலவாகும் நிலையில் குறித்த 730 ரூபாயானது போதுமானதாக அமைந்துவிட வாய்ப்பில்லை.

இதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பள பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க பல்வேறு தரப்பினர், பல்வேறு வகையிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். நூவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவ, சாமிமலை, நோர்வூட், நானு ஓயா, டிக்கோய போன்ற பிரதேசங்களின் பல்வேறு தோட்டங்களை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் பரவலாக  எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொழிலாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட 1000 ரூபா சம்பளக் கோரிக்கையை ஏனைய கட்சிகளும், தொழிலாளர்களும் ஏற்றுக்கொண்டமையினால் குறித்த கோரிக்கை வலுப்பெற்றிருந்தது. இந்த நிலையில், சம்பள நிர்ணய சபையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு கம்பனிகள் தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், வாக்கெடுப்பின் மூலம் மலையக மக்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை வழங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தை எதிர்த்து, சுமார் 180திற்கும் அதிகமான எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையிலும் கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி தோட்டத்தொழிலாளர்களுடை ஒரு நாள் கூலி 1000.00ஆக உயர்த்தப்பட்டது. இவ்வாறாக தொடர்ச்சியான ஆறு வருட போராட்டங்களின் பின்னரே அவர்கள் இத்தகைய தீர்வினை பெற முடிந்தது. இவ்வாறாக குறைந்த பட்ச நாளாந்த சம்பளமாக 900 ரூபாவும், வரவு செலவுத்திட்ட சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாவுமாக நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாகவுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அன்மையக் காலங்களில் மலையகத் தமிழர்களும் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தும் மற்றும் பல்வேறு வணிகங்களில் தம்மை ஈடுபடுத்தி வருவதனாலும் முன்னேற்றமான சூழல் உருவாகி வருகின்றது. அடிப்படை ஊதியப்பிரச்சனை காலம்காலமாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. நாட்டின் விலைவாசி அதிகரிப்பு மற்றும் சமூக தேவைகளுக்கேற்ப காலத்திற்கும் வேதம் தொடர்பில் அரசிற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தோட்டத்தொழிலாளர்கள் தத்தமது முன்னேற்றத்திற்கு கல்வியின் மூலம் சமுதாய கட்டமைப்பினை உயர்த்துவதற்கு முயற்சிகள் எடுத்தல் நன்று. இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கியமான அம்சமாக பெருந்தோட்ட செய்கைகள் காணப்படுகின்ற போது தொழிலாளர் நலன் குறித்த அரசின் கண்ணோட்டமும் மாற்றமடைய வேண்டும். இனி வரும் தலைமுறைகள் சம்பளத்திற்கோ அல்லது தத்தமது பிற உரிமைகளுக்கோ பல ஆண்டுகள் காத்திருத்தல் எனும் அவல நிலை அடியோடு மறைய கல்வியே பிரதான சக்தி என்பதை உணர்தலோடு அரசியல் கட்சிகளும் பெருந்தோட்ட கம்பெனிகளும் தத்தமது அணுகுமுறைகளை மக்கள் சார்பாக வகுத்துக்கொள்ளுதல் நன்று.

மாயம் செய்யும் “மைக்”

மைக் மோகனுக்கு அந்த பெயர் வந்ததற்கான காரணம் எனக்கு ஓரளவு தெரியும். அது பொருத்தமான பெயர் தான், ஆனால் என்னை கேட்டால் இந்த மனோகர் பயலுக்கு தான் அந்த  அடை மொழி வரவேண்டும் என்று கூறுவேன்.

மனோகரை போல மனிதர்களை உலகம் அறியாது. அல்லது அறியாத வரை நல்லது. எனக்கு தெரிந்து நான் படும் பாடு போதாதா? மனோகரின் சிறுவயது முதல் அவர் கேட்டு ரசித்த விசித்திரமான கற்பனை கதைகளை உண்மையாக்கி பார்க்கவேண்டும் என்ற கிறுக்குத்தனம் தான் நடந்த இத்தனை குளறுபடிக்கும் காரணம்.

அடிப்படையில் மனோகர் ஒரு விஞ்ஞானி. அவர் எப்படிப்பட்ட விஞ்ஞானி என்பதில் தான் சிக்கல் இருக்கிறது. விஞ்ஞானத்தையும், மாயாஜாலத்தையும் கலந்து புதுவகை கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த முடியும் என்பது தான் அவரது நம்பிக்கை. நிரூபித்தும் காட்டிவிட்டார். இதற்காக அவருடைய வாழ்க்கையில் பாதி காலத்தை செலவிட்டு இருக்கிறார்.

முதலில் அவருக்கும் எனக்குமான தொடர்பை சொல்லிவிடுகிறேன். அது தான் முறையாக இருக்கும். மனோகர் தான் என்னுடைய தந்தை. என் பெயர் கதிர். என்னதான் அந்த மனிதர் என்னுடைய தந்தையாக இருந்தாலும் அவர் செய்யும் காரியங்களால் நான் படும் அவஸ்தை தான் என்னை இந்த அளவு விரக்தியடைய வைத்துள்ளது.

இந்த கிறுக்குத்தனம் எல்லாம் என்னுடைய பாட்டா, பூட்டா மூலம் வந்தது. ஆமாம் எங்கள் பரம்பரையை சேர்ந்தவர்கள் அந்த காலத்தில் மாயாஜாலங்களிலும், பில்லி சூனியங்களிலும் கைதேர்ந்தவர்கள். நாங்கள் பரம்பரையாக இதை செய்து வருகிறோம். ஆனால் இதை எல்லாம் வெளியில் காட்டிக்கொள்வது இல்லை. எல்லோரையும் போல சாதாரணமாக தான் திரிவோம். எங்கள் பரம்பரை சட்டத்தின் படி நாங்கள் இப்படிப்பட்டவர்கள் என்பது எங்களை அல்லாத வெளி நபர்களுக்கு தெரியக்கூடாது. எங்களுக்கு என்று ஒரு ரகசிய கல்விமுறை, சட்டமுறை எல்லாம் இருக்கிறது. அதை மிக தீவிரமாக ஆராய்ந்து கற்ற என்னுடைய தந்தை, அதாவது மனோகர் அதை நவீன விஞ்ஞானத்துடன் கலந்து புதிய வகை ஒன்றை கண்டு பிடித்துவிட்டார். அப்படி  அவர் கண்டு பிடித்தவற்றை சரிப்பார்த்துவிட்டு அவரே அழித்துவிடுவது அவரது வழக்கம். ஏனென்றால் அவை சமூகத்துக்கு சந்தேகமின்றி ஆபத்தானவை. ஏன் எனக்கே அவ்வப்போது அவற்றில் எதையாவாது ஒன்றை உருவி பணம் பார்க்கலாம் என்ற எண்ணம் வராமல் இல்லை. அப்படி செய்தால் நான் பரம்பரையின் சாபத்துக்கு ஆளாவேன். என் உடம்பில் உள்ள இரத்தம் உறைந்து கொடூரமான முறையில் எனக்கு மரணம் நிகழும் என்பது ஐதீகம். எதற்கு வம்பு இந்த இன்ஜினியர் தொழிலே எனக்கு ஒரு சாபம் போல தான் உள்ளது. எனக்கும் எதோ இரண்டு மூன்று மாய மந்திரங்கள் தெரியும். ஆனால் அப்பா போல நான் பாண்டித்தியம் பெற்றவன் கிடையாது.

கூடுவிட்டு கூடு பாய்வது, மனிதனின் ரகசியங்களை எடுக்கும் எக்ரே-மிஷின், விதைத்ததுமே மரமாகும் விதை, எதிர்காலம் காட்டும் மாயக்கண்ணாடி, பார்ப்பவர் கண்களில் இருந்து நம்மை மறைக்கும் அதிசய பொடி  இப்படி அவர் கண்டு பிடித்து அழித்ததை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இப்போது அவர்  கண்டுபிடித்திருப்பது ஒரு வித்தியாசமான பொருள். அது ஒரு “மைக்”. ஆனால் அது எல்லாவற்றுக்கும் மேலாக இருக்கிறது.

அப்படி இதன் அதிசயிக்க வைக்கும் ஆக்கத்திறன் என்ன என்று கேட்டால்; அந்த மைக்கை தொட்டு பேசும் ஒருவரால் உண்மையை தவிர வேறு ஒன்றும் பேச முடியாது. ஆமாம் அது யாராக இருந்தாலும் சரி அவர் அந்த மைக்கை பிடித்து பேச ஆரம்பிக்கையில் அவரது அடிமனதில் இருக்க கூடிய உண்மை மட்டுமே வெளிப்படும். சத்தியமாக எந்த காரணத்தால் தூண்டப்பட்டு இப்படி ஒரு கண்டுபிடிப்பை அவர் நிகழ்த்தினார் என்று தெரியவில்லை. நான் சொல்லும் இந்த மைக்கின் இயல்பு கேட்பதற்கு வேண்டுமானால் உங்களுக்கு சாதாரணமாக தெரியலாம். ஆனால் அதன் விளைவு சர்வ நாசமானது.

அப்பா எதை கண்டு பிடித்தாலும் அதை என்னை வைத்து தான் சோதிப்பார். அவரின் பரிசோதனை எலி நான் தான். அன்றும் அந்த மைக்கை கொண்டு வந்து என்னிடம் தான் கொடுத்தார். அதை கண்டுபிடிக்க சுமார் ஆறுமாதங்கள் வரை தேவைப்பட்டதாக பெருமிதம் பொங்க சொன்னார். ஆனால் அதன் வில்லங்கம் என்ன என்று என்னிடம் சொல்லில்லை. என் அறைக்கு வந்து அதை என் கையில் கொடுத்து அதைப்பிடித்தபடி அவரைப்பற்றி ஏதாவது பேச சொன்னார். ஆரம்பத்தில் அது மின்சாரம் இல்லாமல் இயங்கும் மைக் போல என்று தான் நான் நினைத்தேன். அவர் கேட்டது போலவே அவரை பற்றி பேச ஆரம்பித்தேன். அவரது திறமைகளையும் அவரது சாதனைகளையும் எனக்கு அவர் மேல் இருக்கும் மரியாதையையும் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தேன். ஆனால் மெல்ல மெல்ல என்னை அறியாமல் அப்பா பற்றிய என்னுடைய ஆழ்மன எண்ணங்கள் வார்த்தைகளாக வெளிவந்தது.

அப்பா அவரது காலம் முழுவதும் வீட்டை கவனிக்காது ஆராய்ச்சி கூடத்திலேயே நேரம் கழித்ததைப் பற்றியும், சிறுவயது முதல் என்னுடனும், தங்கையுடனும் அவர் அன்பாக நேரம் செலவளித்தது இல்லை என்றும், அம்மாவையும் அவர் பெரிதாக கவனித்தது இல்லை  என்றும் சொன்னேன். ஏதாவது கண்டு பிடிப்பை ஆராய வேண்டும் என்றால் மட்டும் தான் என் அறைக்கே அவர் வருவார் என்று என்னுடைய ஆழ்மன குமுறல்களை அடுக்கிக்கொண்டே போனேன். என்னையும் அறியாமல் அத்தனையும் பேசிமுடிய அந்த மைக்கை கீழே வைத்தேன். அப்பா தலைகுனிந்திருந்தார். எப்போதும் அவரது கண்டுபிடிப்புகள் வெற்றி பெற்றால் ஆனந்தக்கூத்தாடுவார். இன்று ஒன்றும் பேசாமல் அறையைவிட்டு சென்றுவிட்டார். நானும் அவரிடம் எதுவும் கேட்கவில்லை.

எங்களின் இந்த விஷப்பரீட்சை எதையும் என் தங்கை ஷைலா அறிந்திருக்கவில்லை. அன்று அவள் தோழி சுஸ்மிதாவின் ”வெடிங் ரிசப்ஷன்”. ஒரு வாரமாகவே வீட்டில் இந்த கல்யாண கதை தான். ஏதோ அவளுக்கே கல்யாணம் என்பது போல அலட்டிக்கொண்டாள். ஷைலாவின் நண்பர் குழுவில் இது தான் முதல் கல்யாணமாம். பத்தாத குறைக்கு அவளது தோழிகள் வேறு. மருதாணி சடங்கில் இருந்து கல்யாணம் வரை,  தோடு முதல் காலணி வரை என்ன என்ன அணிய வேண்டும் என்று எங்கள் வீட்டில் தான் கடையை விரித்தார்கள்.  இரவு பகலாக உழைத்தார்கள். வீட்டில் சீனியும் பாலும் அவர்களுக்கு டீ போடுவதிலேயே முடிந்துபோனது. அவர்கள் வந்தாலே வீட்டைவிட்டு நைசாக நழுவி விடுவேன்.

அன்று அப்பா கண்டு பிடித்த ”மைக்” என் அறையில் தான் இருந்தது. வழக்கமாக அழித்துவிடு என்று சொல்லிவிட்டுப் போவார். அன்று அந்த மைக் செய்த விளைவினால் அப்படியே சென்றுவிட்டார். அவர் சென்றபின் நானும் ஒரு அவசர வேலையாக வெளியே சென்றுவிட்டேன். ஆரம்பத்தில் இருந்தே இந்த கல்யாண விஷயத்தில் ஷைலா என்னிடம் கேட்டு வந்த  உதவிகள் எதையும் நான் பொருட்படுத்தவே இல்லை. அவள் தோழி சுஸ்மிதாவை எனக்கு பிடிக்காது என்பதும் அதற்கு காரணம். அன்றும்  ஏதோ ஒரு உதவி தேடி  என் அறைக்கு ஷைலா வர அவள் கண்களில் அந்த மைக் சிக்கியது. பார்க்க ஒரு தினுசாக இருந்த அந்த மைக்கை எதற்கும் தேவைப்படும் என்று கொண்டு சென்றுவிட்டாள். இத்தனைக்கும் ஹாலுக்கு மைக் மற்றும் ஸ்பீக்கர் செட்டப் வரும் என்பது அவளுக்கு தெரியும். என் தங்கை பொதுவாக நூற்றிப்பத்து புள்ளிக்கு படிப்பவள்.

மாலையில் நான் வீடு  திரும்ப, மைக் அங்கு இல்லை. அவளும் இல்லை. எனக்கு பகீர் என்றது. மைக் வெளியில் சென்றவிடயம் மட்டும் அவர் அறிந்தால் நான் செத்தேன். நல்லவேளையாக அப்பா வீட்டில் இருக்கவில்லை. அம்மாவிடம் கேட்டதற்கு அவர் எங்கோ வெளியில் போய் இருப்பதாக சொன்னார்கள். விஷயம் தெரிந்ததும் வண்டியை கிளப்பியபடி ஒரே பாய்ச்சலாக ரிஷப்ஷன் ஹாலுக்கு வந்து சேர்ந்தேன்.

அதற்குள் அத்தனையும் கைமிஞ்சி சென்றுவிட்டது. இவ்வளவு பெரிய விபரீதம் நடக்கும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. நான் மண்டபத்துக்கு நுழையும் போது கிட்டதட்ட மண்டபம் வெறிச்சோடி இருந்தது. ஆங்காங்கே ஒரு சில கும்பல் தென்பட்டது. அவர்களும் புறப்பட தயாராகி இருந்தார்கள். அந்த இடமே சூன்யமாக காட்சியளித்தது.

சுமார் முப்பது நிமிடங்களுக்கு முன் அங்கு நடந்தது என்னவென்றால்…….,

ரிசப்ஷன் முடிந்து எல்லோரும் ஆட்டம், பாட்டம் என்று சுற்றிக்கொண்டு இருக்க அந்த திருமண ஜோடியின் நண்பர்கள் மணமகன் மணமகளை வாழ்த்தி உரையாற்ற ஆயத்தமானார்கள். அப்போது மணமகள் பக்கம் இருந்த நண்பன் ஒருவன் என் அப்பாவின் கண்டுபிடிப்பை கையில் எடுத்திருக்கிறான். நன்றாக தான் ஆரம்பித்து இருக்கிறான். ஆனால் பேச்சு  மெல்ல மெல்ல மாறியது.
”மைக்”  தன் சில்மிஷத்தை தொடங்கியது. அந்த உற்ற நண்பனை உணர்ச்சிவசப்பட வைத்த மைக் அவன் ஆழ்மனதை அவிழ்த்துவிட்டது. அவனுக்கும் மணமகள் சுஸ்மித்தாவிற்கும் சில மாதங்களின் முன் வரை இருந்த தொடர்பை ஒன்றுவிடாமல் விபரித்தான். சென்ற வருடம் அவன் அவளுடன் நுவரெலியா சென்றது வரை எல்லாவற்றையும் கூறி பேச்சாற்றியிருக்கிறான். அது தான் இந்த அசம்பாவிதத்துக்கு காரணம். இது எல்லாம் மாப்பிள்ளைக்கு தெரியும். ஆனால் இருவீட்டாருக்கு எப்படி தெரியும்? மாப்பிள்ளை வீட்டார் ஒரு பக்கமும் பெண் வீட்டார் ஒரு பக்கமும் வெளியேறியது தான் மிச்சம். தலையில் கை வைத்தவாறு என் தங்கை கதை  சொன்னதை  கேட்கும் போது அந்த மாப்பிள்ளை மீது கொஞ்சம் பாவமாக தான் இருந்தது.

சரி ஆனது ஆச்சு. அந்த மைக்கால் என்ன செய்ய முடியும் என்பதை அறிய இந்த சின்ன உதாரணமே போதும். நாம் வந்த வேலையை கவனிப்போம் என மைக்கை தேட ஆரம்பித்தேன். அப்போது தான் அது ஏற்கனவே ஸ்பீக்கர் செட்டப் கொண்டு வந்தவர்களின் மைக்கோடு சென்றுவிட்டது என்பது தெரிந்தது. இது என்னடா மைக்குக்கு  வந்த சோதனை என அலசி ஆராய்ந்து அந்த மைக் செட் சொந்தக்காரரின் மொபைல் இலக்கத்தை வாங்கி பேசினேன். அந்த மைக் அன்று இரவு நடக்க போகும் ஆளுங்கட்சியின் கூட்டத்திற்கு சென்றிருப்பதாக சென்னார். குறைந்தது இரண்டாயிரம் பேராவது கூடும் மிகப்பெரிய நிகழ்ச்சி அது. போனை கட் செய்தேன். நடக்க போகும் விளைவுகள் என் கண் முன்னே வெளிச்சமிட்டது. ஒரு நிமிடம் தாமதிக்காது வண்டியை ”சர்ர்ர்” என்று கிளப்பிக்கொண்டு அந்த இடத்தை நோக்கி சீறிப்பாய்ந்தேன்.

எழுத்து – மஹின் சுப்பிரமணியம்

உடலிலுள்ள நிறமியை நீக்குதல் (Removing Dark Spots)

வீட்டிலேயே ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கு சிகிச்சையளிக்க பல வழிகள் உள்ளன. நாம் இங்கே பகிர்ந்துகொள்ளும் பல தீர்வுகள் பழமையானவை என்றாலும், அவற்றின் முக்கிய பொருட்கள் தோல் நிறமியில் வேலை செய்வதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

#ஆப்பிள் சாறு வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகரில் அசிட்டிக் அமிலம் உள்ளது, இது ஆராய்ச்சி நிறமூட்டலை வெளிச்சமாக்குகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

இந்த தீர்வைப் பயன்படுத்த:

ஒரு பாத்திரத்தில் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தண்ணீரை சம பாகங்களாக இணைக்கவும்.
உங்கள் இருண்ட புள்ளிகளுக்கு தடவி இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் விடவும்.
வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி துவைக்கலாம்.
நீங்கள் விரும்பும் முடிவுகளை அடைய தினமும் இரண்டு முறை செய்யவும்.

#சிவப்பு வெங்காயம்
சிவப்பு வெங்காயம் (அல்லியம் செபா) சாறு சில வணிகரீதியாக கிடைக்கக்கூடிய தோல் மற்றும் வடு-ஒளிரும் கிரீம்களில் ஒரு மூலப்பொருள். சிவப்பு வெங்காயத்தின் உலர்ந்த தோல் சருமத்தை திறம்பட ஒளிரச் செய்யும் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. அல்லியம் செபாவைக் கொண்ட ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கான கிரீம்களைப் பார்த்து, இயக்கியபடி பயன்படுத்தவும்.

#கிரீன் டீ சாறு
கிரீன் டீ சாறு சருமத்தில் பயன்படுத்தப்படும்போது ஒரு டிபிஜிமென்ட் விளைவைக் கொண்டிருக்கலாம் என்று ஆராய்ச்சி நம்பகமான ஆதாரம் காட்டுகிறது. ஒளிரும் விளைவுக்கு இருண்ட புள்ளிகளுக்கு பச்சை தேயிலை பைகளைப் பயன்படுத்த சில வலைத்தளங்கள் பரிந்துரைக்கின்றன.

நீங்கள் முயற்சி செய்ய விரும்பினால், இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

ஒரு கிரீன் டீ பையை வேகவைத்த தண்ணீரில் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
தண்ணீரிலிருந்து தேநீர் பையை அகற்றி குளிர்ந்து விடவும்.
தேயிலைப் பையை உங்கள் கருமையான புள்ளிகளில் தேய்க்கவும்.
நீங்கள் முடிவுகளைப் பெறும் வரை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யவும்.

#அதிமதுரம் சாறு (licorice)
லைகோரைஸ் சாற்றில் மெலஸ்மா மற்றும் சூரிய ஒளியால் ஏற்படும் ஹைப்பர் பிக்மென்டேஷனை ஒளிரச் செய்யக்கூடிய செயலில் உள்ள பொருட்கள் உள்ளன. லைகோரைஸ் சாறு கொண்ட மேற்பூச்சு கிரீம்கள் அழகுசாதனப் பொருட்கள் கடைகளில் கிடைக்கின்றன. பேக்கேஜிங் மீது இயக்கியபடி பயன்படுத்தவும்.

#தக்காளி

தக்காளி சன்ஸ்கிரீனுக்கு மாற்றாக இல்லை, ஆனால் பழத்தில் உள்ள லைகோபீன் ஒரு புகைப்பட-பாதுகாப்பு விளைவைக் கொண்டிருக்கலாம். தக்காளி சாப்பிடுவதால் நம்பகமான மூலத்திற்கு UV ஒளி தூண்டப்பட்ட எரித்மா அல்லது வெயிலில் இருந்து சில பாதுகாப்பு கிடைக்கும்.
தக்காளி சூரியன் சேதமடையும் அபாயத்தைக் குறைக்கும் அதே வேளையில், சன் பர்ன்ஸ் மற்றும் தோல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீனை எப்போதும் பயன்படுத்துங்கள். சில நேரங்களில் “இயற்கை” சன்ஸ்கிரீன்கள் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும்.

 

  • தோல் நிறமிக்கு என்ன காரணம்?
    சரும நிறமிழப்புக்கு சூரிய பாதிப்பு மிகவும் பொதுவான காரணம் மற்றும் பொதுவாக சூரிய ஒளியில் அடிக்கடி வெளிப்படும் உடலின் பாகங்களை பாதிக்கிறது.

சூரிய புள்ளிகள், கல்லீரல் புள்ளிகள் அல்லது சூரிய லென்டிஜின்கள் என்றும் அழைக்கப்படுகின்றன, அவை மிகவும் பொதுவானவை. யார் வேண்டுமானாலும் சூரியப் புள்ளிகளைப் பெறலாம், ஆனால் அவை அழகான தோல் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகம் காணப்படுகின்றன.

அவை சூரிய ஒளியின் பின்னர் தோலில் உருவாகும் தட்டையான பழுப்பு நிற புள்ளிகள் (இதன் போது, ​​புற ஊதா கதிர்வீச்சு மெலனோசைட்டுகள் எனப்படும் நிறமி தோல் செல்கள் பெருக காரணமாகிறது).

அவை வடிவத்திலும் அளவிலும் வேறுபடுகின்றன மற்றும் பொதுவாக உங்கள் முகம், தோள்கள், முன்கைகள் மற்றும் உங்கள் கைகளின் பின்புறம் போன்ற சூரிய ஒளியில் உங்கள் உடலின் பகுதிகளில் ஏற்படும்.

உண்மையான சூரிய புள்ளிகள் பாதிப்பில்லாதவை மற்றும் புற்றுநோயற்றவை ஆனால் ஒப்பனை நோக்கங்களுக்காக சிகிச்சையளிக்கப்படலாம்.

உங்கள் முகத்தில் உள்ள சூரிய புள்ளிகளை எவ்வாறு அகற்றுவது
உங்கள் முகத்தில் சூரியப் புள்ளிகளின் தோற்றத்தை அகற்றவோ அல்லது குறைக்கவோ பல வீட்டில் மற்றும் தொழில்முறை நடைமுறைகள் உள்ளன.

வீட்டில் சிகிச்சை,
உங்கள் முகத்தில் உள்ள சூரியப் புள்ளிகளை மங்கச் செய்ய அல்லது அகற்ற உதவும் சில வீட்டு சிகிச்சைகள் பின்வருமாறு:

#கற்றாழை
கற்றாழை செடிகளில் காணப்படும் செயலில் உள்ள சேர்மங்களான கற்றாழை நம்பகமான மூலமும் கற்றாழையும் சூரிய புள்ளிகளையும் மற்ற ஹைப்பர் பிக்மென்டேஷனையும் ஒளிரச் செய்யும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

#வைட்டமின் சி
இந்த இயற்கையான ஆன்டிஆக்ஸிடன்ட் உங்கள் சருமத்திற்கும் சூரியனுக்கும் வரும்போது பல நன்மைகளைக் கொண்டுள்ளது. மேற்பூச்சு எல்-அஸ்கார்பிக் அமிலம் உங்கள் தோலை UVA மற்றும் UVB கதிர்களிடமிருந்து பாதுகாக்கிறது, கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது, மேலும் கருமையான புள்ளிகளை ஒளிரச் செய்வதில் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

#வைட்டமின் ஈ 
வைட்டமின் ஈ நம்பகமான மூலமும், வைட்டமின் ஈ சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வதும், சூரிய சேதத்திலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம், குறிப்பாக வைட்டமின் சி உடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது, ​​வைட்டமின் ஈ எண்ணெயைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்திற்கு இன்னும் அதிக நன்மைகளை வழங்குகிறது சூரியன் சேதம் மற்றும் சூரிய புள்ளிகளை ஒளிரச் செய்ய உதவும்.

இலங்கை ஓர் தாராண்மைவாத நாடா? அல்லது சமவுடமை நாடா?

உலகை ஆட்சியை செய்யும் இரு பெரும் கொள்கையே தாராண்மைவாதம் (முதலாளித்துவம்) மற்றும் சமதர்ம (பொதுவுடமை, சோசலிசம்) கொள்கைகளாகும். முதலாளித்துவம் என்பது, உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஓர் பொருளியல் முறைமையாகும். இக்கொள்கை ஐரோப்பாவில் 18ம் நூற்றாண்டிலேயே அறிமுகமாகியது. ஜோன் லொக், டேவிட் ரிக்கார்டோ, அடம் ஸ்மித், போன்ற பழம்பெரும் தாராண்மை வாதிகள் இதனை அறிமுகப்படுத்துவதில் முன் நின்றனர். அத்துடன் இம்முறையில், முதலீடு, விநியோகம், வருமானம், உற்பத்தி, பொருள்களின் விலை குறித்தல், சேவைகள் என்பன சந்தைப் பொருளாதாரத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன. இதில், மூலதனப் பொருட்கள், கூலி, நிலம் மற்றும் பணம் ஆகியவற்றில் வணிகத்தில் ஈடுபடுவதற்கான தனிப்பட்டவர்களினதும், சட்ட அடிப்படையில் நபர்களாகச் செயற்படும் தனிப்பட்டவர்களைக் கொண்ட குழுக்களினதும், உரிமைகளுடன் தொடர்புபடுகின்றன.

  • விவசாய முதலாளித்துவம்
  • வியாபாரத்துவம்
  • தொழில்துறை முதலாளித்துவம்
  • நவீன முதலாளித்துவம்

இவையே முதலாளித்துவ பிரதான வகைகளாகும். ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஜேர்மன், இங்கிலாந்து, தென் கொரியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தற்காலத்திலும் முதலாளித்துவக் கொள்கையை பின்பற்றப்பட்டு வருகிறது.

சமதர்ம கொள்கை என்பது வர்க்கமற்ற சமுதாயத்தை அமைப்பதை நோக்காகக் கொண்ட ஓர் பொருளாதார முறையாகும். இக்கொள்கை பெரும்பாலும் முதலாளித்துவ வாதிகளின் குறைபாடுகளை தீர்ப்பதற்காக உலகில் முன்வைக்கப்பட்ட ஓர் கொள்கையாகும். முதலுக்கு மேல் வரும் வருமானத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இக் கொள்கையின் பிரதான நோக்கமாகும். அத்தோடு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு ஒழிய வேண்டும்.  ஜேர்மனியை சேர்ந்த   கார்ள் மாக்சினால் (1818-1883) இக்கொள்கை வித்திடப்பட்டது. சோவியத் யூனியனின் தோல்வியோடு இக்கொள்கை பெரிதும் தன் தன்னளவில் இழப்பை எதிர் எதிர்கொண்டது. ஆயினும் தற்காலத்திலும் சீனா, கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளில் இன்றும் பொதுவுடமைக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.

பல்லின, பன்மொழி, பல் கலாசாரத்தை பின்பற்றும் மக்களைக் கொண்டது இலங்கை நாடாகும். இலங்கை சிறு தீவாக இருப்பினும் முதலாளித்துவம் மற்றும் சமதர்ம கொள்கைகள் ஆகிய இரண்டுமே சம அளவில் ஆட்சியில் பின்பற்றப்படுகிறது. இதனாலேயே 1972ஆம் ஆண்டின் குடியரசு யாப்பின் படி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் சக்தியை தீர்மானிக்கும் 1946 ஆம் ஆண்டு டி. எஸ். சேனாநாயக்கவின் தலைமையின் கீழ் ஓர் தளர்ச்சியான கூட்டாக உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி, பிரித்தானியாவில் வளர்ச்சி அடைந்த, ஜனநாயகமே இலங்கை அரசியலுக்கு பொருத்தமானது என்றும், பிரித்தானியாவை சேர்ந்த அரசியல் ஸ்தாபனங்கள் இலங்கைக்கு உகந்தது எனவும் வாதிட்டார். இதனால் அவர்கள்  தாராண்மை கொள்கைவாதிகளாகவே வரலாற்றில் இடம்பெற்று வருகின்றனர். இதனால் இவர்களது ஆட்சியில் தாராண்மை ஜனநாயகக் கொள்கைகளே பெரும்பாலும் பிரதிபலிக்கப்படுகிறது.

இலங்கையின் ஆட்சியை தீர்மானிக்கும் அடுத்து பெரும் கட்சியே இலங்கை சுதந்திர கட்சியாகும். இக்கட்சி 1951 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவினால் அறிமுகம் செய்யப்பட்டது. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க அவர்கள், இந்திய பிரதமர் ஜவஹர் லால் நேருவுடன் மிக நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளார். அணிசேரா கொள்கையை இலங்கையில் பின்பற்றுமாறு பிரித்தானியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி இலங்கையில் முகாமிட்டிருந்த இங்கிலாந்து கடற்படை இங்கிருந்து அகற்றினார். அத்தோடு கம்யூனிச நாடுகளுடன் இராஜதந்திர தொடர்புகளை பேணியும் வந்துள்ளார். இதனால் கட்சியின் பிரதான கொள்கையாக சோசலிசக் கொள்கை காணப்படுகின்றது.

இவ்வாறாக இலங்கையின் ஆட்சியை தீர்மானிக்கும் இவ்விரு கட்சிகளும் இவ்விரு கொள்கைகளில் இருப்பதனால் ஆட்சி மாற்றங்களின் போது, இக்கட்சியின் கொள்கையே நாட்டின் ஆட்சியில் பிரதிபலிக்கக்கூடிய தன்மையை நாம் அவதானிக்கலாம். அத்தோடு இக்காலகட்டத்தில் தொழில்நுட்பம், உதவி, அரசியல், பொருளாதாரம், போன்ற பல காரணங்களினால் இவர்களது கொள்கைகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு காலத்திற்கேற்ற வகையில் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றது.

அனைவரும் அறிந்திராத பஞ்சகர்ம சிகிச்சை.

ஆயுர்வேதம் என்பது இயற்கையுடன் சார்ந்த ஒரு விஞ்ஞான முறையாகும். அத்தோடு உலகின் மிகப் பழமை வாய்ந்த ஒரு மருத்துவ கலை ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை இச்சிகிச்சை முறை கொண்டிருக்கின்றது. இம்மருத்துவ முறை உடல், உள, மனநிலையை சமநிலையாக பேணுகின்றது. இம்மருத்துவ முறை, இறைவனே மனிதனுக்கு பரிமாறிய மருத்துவ முறை எனவும் பலரால் நம்பப்படுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலைப் பலப்படுத்தி, உணவை முறையான வகையில் சமிபாடடையச் செய்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஓர் ஆயுர்வேத முறையே பஞ்சகர்ம மருத்துவ முறையாகும். ‘பஞ்ச’ என்பது ஐந்தைக் குறிக்கப் பயன்படுகிறது, ‘கர்ம’ என்பது கருமங்களை குறிக்கின்றது. ஐந்து கருமங்களை பின்பற்றி உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்றும் ஓர் பாரம்பரிய மருத்துவ முறையே ”பஞ்சகர்ம மருத்துவ முறை” எனப்படுகிறது. சாதாரணமாக வாதம், பித்தம், கபம் இவற்றின் சமநிலையில் ஏற்படும் மாற்றத்தினாலேயே உடல் ஆரோக்கியத்தில் பங்கம் ஏற்படுகிறது. அந்த வகையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறையே பஞ்சகரும மருத்துவ முறையாகும். இம்மருத்துவ முறை தலையிலிருந்து உள்ளங்கால் வரையான கழிவுகளை வெளியேற்றும் சிகிச்சை முறைகளாகும். இதில் சுமார் ஐவகை மருத்துவ சிகிச்சை முறைகள்  கையாளப்படுகின்றது. கீழ்வருமாறு:

1. விரேச்சனம்(வயிற்றை சுத்தப்படுத்தல்)

வயிற்றிலிருக்கும் உஷ்ணம், பித்தம் அதிகரிக்கும் போது இச்சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கழுத்திற்கு கீழே தொப்புளுக்கும் மேலே உள்ள இடைப்பட்ட பகுதியின் அசுத்த அடைப்புகள் நீக்கப்படும். இதற்கு எண்ணெய், லேகியம், கசாயங்கள் போன்றவை ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ப தெரிவுசெய்து வழங்கப்பட்டு, கழிவுகள் பேதியின் மூலம் வெளியேற்றப்படும்.

2. வமனம் (வாந்தி எடுக்கச் செய்தல்)

இது அனைவருக்கும் பரிட்சயமான ஒரு சிகிச்சை அணுகு முறையாகும். சருமம் தொடர்பான வியாதிகள், மலட்டுத்தன்மை, மனநோய் போன்ற வியாதிகளுக்கு இச்சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது.
அதிகளவான கபத்தை விருத்தி செய்வதற்கு அதிகளவு உளுந்தாலான உணவுகள், சிகிச்சைக்கு முதல்நாள் வழங்கப்படும். அடுத்த நாள் காலை உணவு சமிபாடு அடைந்த பின்னர்,   அதிகளவான பால் வழங்கப்படும். அதன்பின்னர் வாந்தியை தூண்டக்கூடிய சில கசாயங்கள் வழங்கப்படும். பின்னர் நோயாளியின் உடம்பில் இருந்து அதிகளவான கபம் வெளியேறும் வரை வாந்தி எடுக்கச் செய்து சிகிச்சை அளிக்கப்படும்.

3. நஷ்யம் (மூலிகை மருந்தை மூக்கு வழியாக அனுப்புதல்)

பொதுவாக ஓர் ஊக்கமூட்டும் சிகிச்சையாக நஷ்யம் சிகிச்சை காணப்படுகிறது. மூலிகைச்சாறு, முகத்தில் எண்ணெய் தடவி (steaming) மூக்கே சற்று உயர்த்தி வைத்து ஒவ்வொருவருடைய உடல்வாகைக்கு ஏற்ப மூலிகைச்சாறு, எண்ணெய் போன்றவற்றை மூக்கில் இட்டு கபத்தை எச்சில் வழியே வெளியேறும் அல்லது தொண்டை வழியே உள்ளே செல்ல  இச்சிகிச்சை முறையில் அனுமதிக்கப்படும். தலையில் காணப்படும் கபம், முகவாதம் போன்ற வாதம் சார்ந்த பிரச்சினைகளை சுமுகமாக இச்சிகிச்சை மூலம் தீர்க்க முடியும்.

4. கஷாய வஸ்தி (மூலிகையால் உருவாக்கப்பட்ட கஷாயத்தை மலத்துவாரம் வழியாக குடலுக்குள் செலுத்துதல்)

வஸ்தி என்றால் குடல் என பொருள்படும். உடம்பில் வாதம் அதிகமாக காணப்படும் சந்தர்ப்பங்களில் இச்சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகின்றது. நரம்பு சார்ந்த நோய்கள், என்பு சார்ந்த நோய்கள் மற்றும் எந்த மருந்துக்கும் அடங்காத வியாதிகள் கஷாய வஸ்தியின்  மூலம் சுகமாகப்படுகிறது.

5. இரத்த மோக்ஷனம் (அசுத்த ரத்தத்தை உடலில் இருந்து வெளியேற்றுதல்) 

உடனடி நிவாரணம் அளிக்கும் முறையாக இச்சிகிச்சை முறை காணப்படுகின்றது. இரத்தக் குழாய்களில் இருக்கும் அசுத்தங்களை அப்புறப்படுத்தும் முறையே இரத்த மோக்ஷன சிகிச்சை முறையாகும். இதற்கு அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. கண் சம்பந்தப்பட்ட நோய்கள், நாள அடைப்புகள், சரும வியாதிகள் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இதற்கென நச்சு அற்ற நீர் வாழ் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப தேவையான இடத்தில் அட்டைகளை வைத்து ரத்தத்தை உறிஞ்சி எடுக்க செய்வர். 1 முதல் 1 1/2 மணித்தியாலங்களின் பின்னர் அந்த அட்டைகள் இரத்தம் உறிஞ்சிய இடத்தில் தேனும் மஞ்சள் சூரணமும் வைத்து இரத்தப் போக்கை நிறுத்துவர்.

பஞ்சகர்மா சிகிச்சை முறையானது சத்திரசிகிச்சை போன்ற ஒரு சிகிச்சை முறையாகும். இது உடலுக்கு வெளியே மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் இதில் மருந்து பாவனைகள் வெகு குறைவு. உடலுக்கு பொருத்தமற்ற ஏதேனும் விஷயம் உள்ளேறி விட்டால், அதனை தானே வெளியேற்ற உடல் முயற்சிக்கும். வயிற்றுப்போக்கு, வாந்தியும் குமட்டலும் ஏற்படும் இதுவே பஞ்சகர்மா சிகிச்சை முறையிலும் பயன்படுத்தப்படுகின்றது. இதுமட்டுமன்றி பஞ்சகர்மா சிகிச்சை முறையை மேற்கொள்ள முன்னர் நோயாளிகளை தயார்படுத்துவது அவசியமானதாகும்.

சிகிச்சைக்கு முன்னர் எண்ணை தேய்த்து மசாஜ் செய்யப்படும். தலை, முகம், மூட்டுகள் என்பவற்றிற்கு என்னை பூசப்படும். இவ்வாறு செய்யப்படுவதால் உடலில் தேங்கியிருக்கும் அசுத்தங்கள் கரைந்து இலகு பெறத் தொடங்குகிறது. இந்த அசுத்தங்கள் பிரதான நாளங்களுக்குள் சென்று அங்கிருக்கும் அடைப்புகளை வெளியேற்றும். இவ்வாறே பஞ்சகர்மா சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது.

index.php