2010 இல் வெளியிடப்பட்ட றோயல் கல்லூரியின் இணையத்தளமானது முழுமையாக பாடசாலை மாணவர்களைக் கொண்டு இன்றை காலத்திற்கேற்ப மீள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் கல்லூரியின் மீது கொண்டுள்ள பற்றுதலும் அன்பும் தான் இத்தகைய ஒரு முயற்சியில் வெற்றி பெறுவதற்கான காரணம் என்று கல்லூரியின் அதிபர் M.V.S.Gunathilake தெரிவித்தார்.
நாட்டின் நிலவக்கூடிய COVID-19 அசாதாரண சூழ்நிலையை முன்னிட்டு
சமூகமானது “work from home” கலாச்சாரத்தை நோக்கி நகர்வதை அவதானித்த கல்லூரியின் 2021 இற்கான மாணவ தலைவ ஒன்றியத்தின் தொழில்நுட்ப குழு, இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக கல்லூரியின் செயல்பாடுகளை இலகுவாக்க இணையதளத்தை மீள் வடிவமைக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தனர்.
அதேவேளையில்அதற்கான முதற்கட்ட வடிவமைப்பினை 2021 பிப்ரவரி மாதத்தில் நிறைவு செய்த குழு, ஏப்ரல் மாத முடிவில் இணையதளத்தை முழுமையாக வடிவமைத்தனர். 9000 மாணவர்கள், முப்பத்தி ஐந்து விளையாட்டுக்கள், 50 சங்கங்கள் மற்றும் கழகங்கள். இத்தனை உள்ளடக்கங்களை கொண்ட ஒரு கல்லூரிக்கு இணையதளத்தை அமைப்பது என்பது ஒரு இலகுவான காரியமல்ல. எனினும் மாணவர்கள் முழுமூச்சாக நின்று இந்த செயற்திட்டத்தை மிகவும் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளமை என்பது குறிப்பிடதக்கதோர் விடயமாகும்.
இச் செயற்திட்டத்தின் சிறப்பம்சமாக கருதப்படுவது யாதெனில் இத்தகைய ஒரு இணையதளத்தை முழுமையாக பாடசாலை மாணவர்களின் முயற்சியை கொண்டு வடிவகை்கப்பட்டதாகும். அதேவேளையில இவ் இணையதள செயற்திட்டமானது எந்தவித செலவினங்களும் இன்றி உருவாக்கப்பட்டது என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அதேவேளையில் 1931 ஆம் ஆண்டு பாடசாலையில் இருந்த 20 மாணவர்களை கொண்டு “The History of Royal College” நூல் எழுதப்பட்டது. அதனை நினைவூட்டும் வண்ணமாக இந்த இணையதளம் மாணவர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு பழைய பாரம்பரியத்தை மீண்டும் ஞாபகம் ஊட்டும் வகையில் இவ் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
அதே வேளையில் இன்றைய கால மாணவர்களை மிகவும் கவரும் வண்ணத்தில் இணையதளமானது அமையப்பெற்றுள்ளது. மேலும் அனைவரும் இலகுவாக உபயோகிக்கும் வகையில் இதன் தெரிவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அனைவரிடத்திலும் இந்த இணையத்தளமானது ஒழுங்காக அறிமுகம் செய்ய முடியாத நிலை ஒன்று உள்ளது. எனினும், இணையதளத்தில் புள்ளி விவர அடிப்படையில் கணிசமான இணையதள நெரிசல் நிலவுவதை அவதானிக்க முடிகிறது. இது போன்ற விடயங்கள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இத்தகையதோர் இணையதளத்திற்கு கிடைத்திருக்கும் சாதகமான அடையாளமாகும். அதேவேளையில் இந்த செயற்திட்டம் ஆனது பாடசாலைக்கு உள்ளேயும், அதேவேளையில் அகில இலங்கை ரீதியில் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே கல்லூரியின் ஒரே எதிர்பார்ப்பாக அமைகின்றது.
இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட இவர், சிறுவயதிலேயே தகவல் தொடர்பாடல் துறையில் கால் பதித்து, அதில் வெற்றியும் கண்டு புலம் பெயர் தமிழர்களின் ஜாம்பவான் என்ற போற்றலுக்கும் சொந்தக்காரரான அல்லி ராஜா சுபாஸ்கரண் தொடர்பிலான ஓர் பார்வை இதோ,
1972ம் ஆண்டு இலங்கையில் பிறந்த சுபாஸ்கரன் அவர்கள் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை, அவரை பிரான்ஸ் நாட்டிற்கு குடும்பம் சகிதம் படகும் மூலம் தப்பிப்பதற்கு காரணகர்த்தாவாக மாற்றி இருந்தது. தஞ்சம் கோரி அகதியாக இருந்த ஆரம்ப காலப்பகுதிகளில் உணவகம் ஒன்றில் உணவு பரிமாறும் நபராகப் பணிபுரிந்தார். இந் நிலப்பகுதிகளிலேயே ஐரோப்பாவில் கையடக்கத் தொலைபேசிகளின் வருகை வலுப்பெறத்தொடங்கியது. அலைப்பேசிகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளதென்பதை முன்கூட்டியே அறிந்த இவர் அவ்வர்த்தகத்தில் மும்முறமாக ஈடுபடத் தொடங்கினார். சிம் அட்டைகள் மற்றும் மீள் நிரப்பும் அட்டைகள் விற்கும் முகவராக இத்துறையில் தடம் பதித்து அதன் நுட்ப வழிமுறைகளை இனங்கண்ட சுபாஸ்கரன் அவர்கள், இன உறவுகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தகவல் தொடர்பாடல் மூலம் அனைவரையும் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தனது வர்த்தகத்தை மேலும் விஸ்தரித்தார். வெறுமனே தகவல் தொடர்பாடல் துறையில் மாத்திரம் நின்று விடாது சுகாதாரம், மருத்துவம், பொழுதுபோக்கு, சுற்றுலாத்துறை மற்றும் ஊடகம் என்று பல துரைகளில் உயர் தரமான சேவைகளை வழங்கி உலகளாவிய ரீதியில் 23 நாடுகளில் 15 மில்லியனுக்கும் அதிகமான கொள்வனவாளர்களை அவரது சேவை பார் ஈர்க்கச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு வயது முதலே திரைத்துறையில் ஈர்க்கம் கொண்ட அல்லி ராஜா சுபாஸ்கரன் அவர்கள் ஈழத்துப் போர் முடிவுற்றதைத் தொடர்ந்து தென் ஆசியா பக்கம் எத்துறையிலாவது சாதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வலம் வந்தார். இதனைத்தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு Lyca Production என்ற நிறுவனத்தை ஸ்தாபித்து, நடிகர்விஜய் நடித்த கத்தி படத்தின் தயாரிப்பாளராகத் தென் இந்தியாவில் அறிமுகமாகினார். இத் திரைப்படத்திற்கு எதிராக எழுப்பப்பட்ட அனைத்து சர்ச்சைகளையும் எதிர்கொண்டு அத் திரைப்படத்தின் வருவாய் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது ‘இது என்னுடைய இரண்டு நாள் வருமானம், நான் என்னுடைய தனிப்பட்ட ஆசைக்காகத்தான் படம் தயாரித்தேன்’ எனக்கூறி பலரின் வாயை மௌன மாக்க வைத்தார் என்பது நெகிழ்வூட்டக்கூடிய விடயமாகும்.
தனது 46வது வயதில் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டும் Lyca நிறுவனத்தின் அதிபதியாகிய சுபாஸ்கரன் அவர்கள் இருந்த அதே வேளை, இந்தியாவின் விலை உயர்ந்த படம் தயாரித்த பெருமையையும் அவரே ஈட்டிச்சென்றார். இந்தியா ரூபா படி சுமார் 573 கோடி (இலங்கை ரூபா படி ஏறத்தாள 1500 கோடி) செலவில் சங்கர் அவர்களின் திரைக்கதையில் ஏ. ஆர். ரகுமான் அவர்களின் இசையில் ரஜனிகாந்த மற்றும் பொலிவூட் நட்சத்திரமான அக்ஷய் குமார் அவர்களின் நடிப்பில் எந்திரன் 2.0 திரைப்படம் வெளிவந்தது. மிகப் பிரம்மாண்டமான பொருட் செலவில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டாலும் அதன் முதல் நாளிலேயே 117.34 கோடி இந்திய ரூபாய்களை வசூலித்து சாதனை படைத்து பலரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
தான் முளைக்கத் தானே விதையாகி, இன்று ஆலமரமாய் உயர்ந்த நிற்கும் சுபாஸ்கரன் அவர்கள் எவ்வாறு பேரும் புகழும் பெற்றாரோ அவ்வாறே அவருக்கு எதிரான விமர்சனங்களும் அவ்வாறே எழுந்த வண்ணம் உள்ளது. வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டு இருக்கும் தீவிரவாத குழு ஒன்றின் பணமே இவரிடம் காணப்படும் செல்வம் எனவும், Tamil Rockers இணையத்தளத்திற்குப் பின் நின்று வழி நடத்துபவர் இவரே என்றும் பரவலாக இவர் மேல் குற்றம் சாட்டப்படுகின்றது. எனினும் நான் உருவாக்கிய செல்வம் அனைத்தும் என் முயற்ச்சியினாலையே என்று சொல்லாமல் சாதித்துக் காட்டி அனைவருக்கும் முன்மாதிரியாக வலம் வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சர்வதேச தொழில்முனைவோருக்கான விருது’ மற்றும் ‘சமூக தொழில்முனைவோருக்கான விருது’ போன்ற விருதுகளுக்கு சொந்தக்காரனாகத் திகழும் அதே வேளை, அவரின் வெற்றிக்குத் துணையாக இருந்த தாயின் பாசம் ஏனைய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவரின் தாயின் பெயராகிய ஞானம் என்ற பெயரில் Gnanam Trust என்பதை ஆரம்பித்து உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம் எனச் சகலவசதிகளையும் 7 கண்டங்களிலும் தனது சேவையினை ஆற்றி நேசக்கரம் நீட்டி வருகிறார் என்பது எம்மில் எத்தனைப்பேருக்குத் தெரியும்?
வெளிநாட்டில் சிறுவர்கள் மூவர் இணைந்து பந்து விளையாடும் ரம்யமான சூழலுடன் படம் ஆரம்பமாகிறது. சிறுவர்கள் விளையாடும் பந்தானது ஓர் ஓரமாக செல்கிறது, அதனை பணக்கார இளைஞன் அவதானிக்கிறான். அவ் அவதானிப்பதிலிருந்து நினைவு மீட்டப்பட்டு, படம் ஆரம்பிக்கிறது.
பந்தொன்றை வாங்குவதை தீராத வேட்கையாக கொண்ட ஆசையை அடிப்படையாகக் கொண்டு உண்மைச் சம்பவத்தின் பிரதிபலிப்பாகவே, இப்படம் அமைகிறது. யாழ்ப்பாண கிராம சூழலின் மண் வாசனையுடன் கலந்து யாழ்ப்பாண பேச்சு வழக்கில், வறுமையின் கோரப்பிடியில் வாழும் அண்ணன், தம்பியை மையமாகக் கொண்டே படம் சூழல்கிறது. பந்து எனும் பெயருக்கேற்ப பந்தாய் சுழன்று, இலங்கையின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் சிறுவர்களது ஆசையை அபரிதமாய், அழகாய், ஆழமாய் முன்வைக்கிறது.
பாடசாலை செல்லும் போது, தினமும் அம்மா கொடுக்கும் கைப்பணத்தை, தம்பி பந்து ஒன்றை வாங்குவதற்காக சேமித்து வருகிறான். தினமும் பாடசாலை சென்று வருகின்ற வழியில் அமைந்திருக்கின்ற ஒரு கடையில் பந்தின் விலையை தம்பி விசாரித்து வருகிறான். அப்பந்தின் விலை ரூபாய் 85/= என்கிறார் கடைக்காரர். இதன் மூலம் தீரா வேட்கையை அழகான முறையில் விவரித்துள்ளார் கதாசிரியர்களான மதி. சதாவும் யாழ் நிலவன் ஷாம்சனும்,
ஒருவழியாக அவன் ஆசைப்பட்ட 85/=ரூபாய் பந்தை வாங்குவதற்கு தேவையான பணத்தை சேகரித்து, கொண்டு வந்து கொடுத்து பந்தை வாங்க முயற்சிக்கிறான், கடைக்காரர் பந்தின் விலை 90/= ரூபாய் என்கிறார். வழமையாக ஒவ்வொரு படத்திலும் எடுத்துக்காட்டப்படும் நிகழ்வாக தெரிந்தாலும், இலங்கையின் நாளாந்த செலவினத்தையும், பொருட்களின் விலை ஏற்றத்தையும், ஆசைப்படும் பொருளை வாங்க எத்தனிக்கும் ஒவ்வோர் சிறுவர்களது நிலையையும் எடுத்துக்காட்டி தனித்துத் தனித்துவமாய் சமூகப் பிரச்சினையை தெளிவாக, எளிமையாக தெரிவிக்கிறது எனலாம்.
இறுதியில் அவனது சேமிப்பு அவனது அண்ணனுக்கு அன்பளிப்பாக வழங்கப்படுகிறது. இறுதியில் அவனது ஆசை எந்த அளவில் நிறைவேறுகிறது என்பது என்பதை மீதிக்கதை சுருக்கமாகவும் மிக அழகாகவும் விளக்குகிறது. சூழலின் மிதமான அம்சங்களோடு, பொருந்திச் செல்கிறது இசை. அது மட்டுமன்றி, அவ்வப்போது இது இலங்கையில் எடுக்கப்பட்ட படமா என ஒளிப்பதிவு மற்றும் படப்பிடிப்பு அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கின்றது. பந்து, பந்து போன்றே சுழன்று காட்சி மாற்றங்களை தத்ரூபமாய் எடுத்துக்காட்டுகின்றது. அவ் இளைஞன் பெரியவனாகி அச்சம்பவத்தை நினைவூட்டுவது சுவாரஸ்யம் கலந்த யதார்த்தமாய் அமைகிறது.
ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தை அல்லது வேறேதாவது விழாக்களை பலூன்கள் இல்லாமல் கொண்டாடுவது சரியாகுமா? என்னை நீங்கள் அந்த பார்ட்டி தொடர்பாக கேட்டால் நிச்சியமாக அது ஒரு மந்தகாரமான விவகாரம் என்றே சொல்வேன். இது குறித்து நீங்கள் என்னுடன் விவாதிக்க முடியாது. ஏனெனில் இது முற்றிலும் உண்மை. அது ஐந்து வயது குழந்தையின் பிறந்த நாள் என்றாலும், ஒரு ஸ்வீட் 16 கொண்டாட்டம் என்றாலும் பலூன்கள் இல்லாமல் அது ஒரு கொண்டாட்டமே இல்லை. சில கொண்டாட்டங்களில் ஹீலியம் பலூன்களும் பயன்படுத்தப்படுகின்றன. கொழும்பில் அவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களில் நாங்கள் கீழே குறிப்பிட்டுள்ளோம்.
Arpico Supercenter (Hyde Park Corner)நீங்கள் பொதுவாக ஹீலியம் பலூன்களை எங்கே பெற்றுக் கொள்ளலாம் என ஒரு இலங்கையரிடம் கேட்டால், பெரும் பாலும் அது ஹைட் பார்க்கில் அமைந்துள்ள ஆப்பிக்கோ சூப்பர் சென்டரை தான் குறிப்பிடுவார்கள். ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக உங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படைப் பொருட்களையும் அவர்களுடைய பார்ட்டி கோர்னரிலிருந்து வழங்குகின்றனர். எனவே இது எந்த தொந்தரவும் இல்லாமல் போகக்கூடிய ஒரு இடமாக இருக்கும் !தொடர்பு கொள்ள – 0114 734 725
2. Balloon Corner
பலூன் கோர்னரானது பலூன்களுக்கு நன்கு அறியப்பட்ட இடங்களில் ஒன்றாகும். அவர்கள் நாங்கள் விரும்புகின்ற மாதிரியான பலூன்களை அச்சிடுகின்றனர். மேலும் உங்கள் பிறந்த நாளுக்காக பிரமாண்டமான எண்ணைக் கொண்டு confett நிரப்பப்படுகிறது.
தொடர்பு கொள்ள – 077 734 3026
Jolly Balloons
பலூன்கள் இல்லாமல் ஒரு பார்ட்டியைக் கொண்டாடுவதும் இல்லை என்று நான் கூறுகின்ற போது இந்த ஜாலி பலூன்கள் இடமும் என்னுடன் உடன்படுகின்றன! பிறந்த நாள் முதல் திருமணத்திற்கு மற்றும் புதிதாக பிறந்த குழந்தையின் பிறந்த நாள் வரை ஒவ்வொரு நிகழ்வுக்காகவும் இங்கே பலூன் கிடைக்கிறது. நீங்கள் ஒன்லைன் மூலமாக உங்கள் ஓடரை வைத்துக்கொள்ள முடியும். 0765540000 என்ற எண்ணுக்கு அவர்களுக்கு ஒரு அழைப்பினை கொடுப்பதால் அல்லது அவர்களுக்கு whatsapp பண்ணுவதால் விலைப்பட்டியலை பெற்றுக்கொள்ள முடியும் .
தொடர்பு கொள்ள – 076 554 0000 / 077 376 0161
Ovin Gases
பலூன் வாயு, பலூன் வாயு உபகரணங்கள் மற்றும் உட்பாகங்கள் உட்பட பலூன்களுக்கு வரும் போது அது தொடர்பாக உங்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களுக்கும் அவர்கள் அணுகியுள்ளனர். அவர்கள் கொழும்பில் கூடுதலான ஆதரவு , ஆலோசனை மற்றும் விநியோக சேவையினுடைய சிறந்த ஒரு dealஐ உங்களுக்கு வழங்குகின்றனர்.
பலூன்களின் விலையானது பலூன்களின் வகை , பலூன்களின் அளவு , அது அச்சிடப்பட்டதா அல்லது சாதாரணமாக இருக்கிறதா என்பது பொறுத்தே தங்கி இருக்கின்றன. இன்னும் கூடுதலான தகவல்கள் இது தொடர்பாக அறிய வேண்டுமெனில் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள – 011 275 1405
Kids Jump 4 Joy
மற்றோரு புகழ்ப்பெற்ற இடங்களில் ஒன்று தான் Kids Jump 4 Joy. உங்களது அனைத்து அலங்காரமான நிகழ்ச்சிகளின் தேவைக்கும் இது சரியான இடமாக அமைகிறது. மேலும் aunties மற்றும் uncles சொல்வது போல் , அவர்களுக்கு சில “சுவாரசியமான gadgematics , மற்றும் LED பலூன்கள் , லூட் bags மற்றும் pinatas கூட இங்குள்ளன. எனவே நீங்கள் அவர்களை அழைப்பதன் மூலம் அவர்களை தொடர்புகொள்ளலாம் . அல்லது உங்களது booking ஐ ஒன்லைனில் இலகுவாக செய்து கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள- 077 048 8667
Jiggles Store
Jiggles நிகழ்வு, நிகழ்வைத் திட்டமிடல், தான் விரும்பியதை பெற்றுக்கொள்ள மற்றும் பிரதானமான விருந்துகள் வழங்கல் மற்றும் அலங்காரம் ஆயவற்றைச் செய்கிறது. அத்துடன் உங்களுடைய நிகழ்வுக்காக சில அருமையான பொழுது போக்குத் தொகுப்புக்களை கொண்டுள்ளது. அவர்களின் இன்ஸ்டெக்ராமில் நாங்கள் பார்த்தவற்றிலிருந்து அவை நல்ல பின்னணிகளைக் கொண்டு இருக்கின்றன. மேலும் உங்களுடைய எண், லெட்டர் மற்றும் சாதாரண ஹீலியம் பலூன்களின் தேவைகளை வழங்க முடியும். உங்களுக்கு ஏதேனும் விசாரிக்க வேண்டுமாக இருந்தால் அவர்களுக்கு ஒரு அழைப்பைக் கொடுங்கள்.
தொடர்பு கொள்ள- 077 956 8890 / 011 494 9733
The Party Station
பார்ட்டி ஸ்டேஷனில் பலூன்கள் மட்டுமல்ல அவர்களிடம் பொருட்களும் இருக்கின்றது. Bubble machines, ஸ்மோக்கி மற்றும் fog machines, strobe lights, costumes, glow sticks போன்ற பொருட்களும் கூட அவர்களிடம் இருக்கின்றது. உங்களுக்கு மறக்க முடியாத நிகழ்வை நடத்த உங்களுக்கு தேவைப்படும்.
தொடர்பு கொள்ள- 011 753 7770
Party Avenue Sri Lanka
ஹீலியத்துடன் ஊதுகின்ற அனைத்து வகையான பலூன்களை தெஹிவளையில் அமைந்துள்ள பார்ட்டி அவென்யுவில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஹீலியம் ஊதப்படுகின்ற பலூன்களின் எந்த மேலதிகமான ஸ்டைலிங் ஆனது எதாவது ஹீலியம் வாங்குவதுடனும் ஒரு பாராட்டு அடிப்படையில் வழங்கப்படுகின்றது. அவர்களின் கடையில் foil letter மற்றும் பலூன்களும் கிடைக்கின்றன. எனவே நீங்கள் உங்கள் ஸ்டைலில் party ஐ கொண்டாடலாம்.
இப்போது அந்த பலூன்களுடன் fun எடுக்கலாம்!
தொடர்பு கொள்ள- 077 766 4865
Twinkles and Tassels
இரண்டு சகோதரிகள் போலான Twinkles மற்றும் Tassels எந்த சந்தர்ப்பத்திற்கும் ஏற்றது போல் ஸ்டைலான மற்றும் தனித்துவமான பலூன்களை உங்களுக்கு கொண்டுவருகிறது! கொழும்பு 05இல், லேயர்ட் சாலையில் அமைந்துள்ளது. உங்கள் நிகழ்வினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பலூன் installationஐ அவர்கள் நிர்வகிக்கிறார்கள்.
ஸ்ரீதர் பிச்சையப்பா தன் வாழ்நாளில் உழைத்து தன் திறமையினால் முன்னிலைக்கு வந்தவர். இவர் சிறுவயதிலே தன் திறமைகளை பன்முகப்படுத்திக் கொண்டவர். அத்தோடு அழகான குரல் வளமும் கொண்டவர். ஸ்ரீதர் பிச்சையப்பா ஒரு சிறந்த பாடகர் , எழுத்தாளர், இயக்குனர் மற்றும் பாடலாசிரியரும் கூட. இவர் கலைத்துறையில் தனக்கென்று தனியான ஒரு முக்கிய இடத்தினை வைத்துக் கொண்டவர். இவர் இலங்கையின் ஒவ்வொருவரினதும் மனதில் பதிந்த சிறந்த கலைத் துறையினர்.
டி . வி பிச்சையப்பாவின் மகனான இவர் 1962 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். இவர் தனது சிறு வயதிலே நாடகங்களில் பங்கு வகிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். பின்பு 1975ஆம் ஆண்டு இவர் வானொலியின் “சிறுவர் மலர் ” நிகழ்ச்சியினூடாக சிறுவர் நாடகங்களில் பிரபல்யமானார். இதன் பின்பே கலைத் துறையை நோக்கி பிரவேசித்தார்.
இவர் பன்முக ஆற்றல் கொண்டவர் என்பதை எல்லோரும் அறிந்ததே. இவர் தனது வாழ் நாளில் ஓவியர், நடிகர், பாடகர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் போன்ற சிறந்த திறமைகளை இவரிடத்தில் கொண்டிருந்ததால் இவர் “பல்கலைத் தென்றல்” என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். மேலும் இவருடைய பாடும் திறமையால் மக்களுடைய மனதைக் கவர்ந்தவர் ஆவர்.
இவர் முதலாவதாக ” உறவுகள்” என்ற நாடகத்தின் மூலமாகவே ஒரு நடிகராக உருவாகினார். பின்னர் இவர் நிறைய மேடை நாடகங்களில் நடித்தார். இவர் நடித்த நாடகங்களில் பிரபல்யமானவை இயக்குனர் சுஹைர் அமீத் அவர்களின் “தோட்டத்து ராணி பலதீஸ் உம்மா லடீஸ்”, வீரமணியின் “ஊசியும் நூலும் ” போன்றவை இவர் நடித்த நாடகங்களில் மிகவும் பிரபல்யமானவை மற்றும் சிறந்தவைகளாகும்.
இவர் ஒரு கவிஞராக, பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் தந்த கவிதைகள் மிகவும் பிரபல்யமானவை. மேலும் நகைச்சுவை உணர்வு கொண்டு பேசுவதிலும் திறமையானவர். இவர் தொலைக்காட்சித் தொடர்களில் சிங்களத் திரைப்படங்களிழும் நடித்திருக்கிறார். இவருடை பாடல்கள் மற்றும் கவிதைகள் சமூகம் சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவே இருந்தன.
அதே போல் ஓவியம் வரைவதிலும் திறமைகொண்டவர் இவர். நவீன ஓவியம் வரைவதில் கொழும்பு மாவட்டத்தில் அவர் முன்னோடியாகவே திகழ்ந்தார். எனவே இவருடைய நவீன ஓவியங்கள் எல்லோருடைய வரவேற்பையும் பெற்றது.
இவ்வாறு கலைத்துறையில் முன்னணியில் நின்ற ஸ்ரீதர் பிச்சையப்பா கிழக்கு மாகாண கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது குண்டு வெடிப்பில் சிக்கி ஒரு கண்ணை இழந்தார். பின்பு 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி இறையடி சேர்ந்தார். எனவே இவர் இல்லாவிடினும் இவருடைய பல்கலைத் திறமைகளைக் கொண்ட இவருடைய திறமைகள் இன்னும் மக்கள் மனதில் அழியாத நினைவாக இருந்து கொண்டு இருக்கின்றன.
கிரீஸ் நாட்டின் ஒலிம்பியோ நகரமே ஒலிம்பிக் போட்டிகளின் பூர்வீகமாகும். அங்குதான் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகின. அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளில் போர்க்கலை, போர்வீரர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு ஆரம்ப கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன ஆயுதங்களோடு வேகமாக ஓடுதல், ஈட்டி ஏறிதல், மல்யுத்தம் செய்தல், தேர் ஓட்டுதல் பொருட்களுடன் நீண்ட தூரம் தாவிக் குதித்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே அக்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன. அவைகள் பிற்காலத்தில் விளையாட்டுப் போட்டிகள் ஆகவும் மாற்றமடைந்தன.
கி. பி 425 ஆம் ஆண்டில் ஒலிம்பியா நகரில் நடத்தப்பட்ட பழங்காலத்து ஒலிம்பிக் பற்றி பார்க்கையில்; ஆரம்ப கால ஒலிம்பிக் போட்டிகள் 5 நாட்கள் கொண்ட திருவிழாவாக காணப்பட்டன. அவற்றில் முதலாம் நாள்- சட்டதிட்டங்களை மதிக்கும் விழாவாகவும், இரண்டாம் நாள்- தட்டு எறிதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டம், மல்யுத்தம் போன்ற நடைபெறும். மூன்றாம் நாள்- கடவுளை வழிபடுவதாகவும், நான்காம் நாள்- ஏனைய போட்டிகள் இடம்பெறுவதாகவும், ஐந்தாம் நாளான இறுதி நாளில் வெற்றிக் கொண்டாட்டமாகவும் இந்த போட்டிகள் நடைபெற்றன.
அக்காலத்தில் நடைபெற்ற போட்டிகளை பார்க்கையில் ;
ஈட்டி எறியும் போட்டி
இப் போட்டியானது நீண்ட தூரம் வீசுவதற்கு ஏற்ப ஈட்டியில் தோல் கயிறு இணைக்கப்பட்டிருக்கும். மேலும் உலோக கூர்முனை இல்லாத ஈட்டிகள் பயன் படுத்தப்படும்.
தட்டெரியும் போட்டி
கண்டறியும் போட்டியானது 6 கிலோ கிராம் எடையுள்ள கல் அல்லது இரும்பை தூக்கி எறிய வேண்டும். இப்போட்டி கையெரி ஆயுத திறனை சோதிக்கும் போட்டியாக அன்றைய காலத்தில் கருதப்பட்டது. மேலும் உடல் முழுக்க ஆலிவ் எண்ணெய் தடவிக் கொண்டு வெள்ளை நிற மண்ணை பூசிக் கொண்டு தான் அக்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். அக்காலத்தில் ஆடைகள் எதுவும் அணிவது கிடையாது.
400 மீட்டர் ஓட்டப்பந்தயம்
போர்க்களத்தில் வேகமாக ஓடுபவர்களை அடையாளம் காணும் போட்டியாக இது அமைந்தது. போர் கேடயம், தலை கவசம், கால் கவசம் அணிந்து ஓட வேண்டும் என்பதே கட்டாயமாக அமைந்தது.
நீளம் தாண்டுதல்
இப் போட்டியானது இரும்புப் பொருள் அல்லது கல்லோடு ஆகிய பாரமான பொருட்களை கொண்டு ஓடிச் சென்று நீளம் தாண்ட வேண்டும். இலைக்கு தொடுவதற்கு முன் கனமான பொருட்களை வீசிவிட வேண்டும். இப்போட்டியில் கனமான பொருட்கள் பயன்படுத்துவதற்கான காரணம் :கனமான பொருளைவைத்துகொண்டு நீளம் தாண்டுவதால் அதிக தூரம் தாண்டி முடியும் என்பதனால் ஆகும்.
பாங்க்ரத்தான் போட்டி
இப் போட்டியானது குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகிய இரண்டையும் கலந்து தற்காப்பு போட்டியாக நடத்தப்பட்டது.
6. குத்துச்சண்டை
இப்போட்டி கையில் துணிகளை கட்டிக்கொண்டு எதிராளியை தாக்குவதாக அமைந்தன.
மல்யுத்தப் போட்டி
மல்யுத்தப் போட்டி எதிர் போட்டியாளரின் தோள்பட்டை அல்லது இடுப்பு தரையில் படும்படி ஆக்ரோஷமாக சண்டை இடுவதாக அமைந்தது.
ஓட்டப் பந்தயம்
ஆரம்பகால ஓட்டப் பந்தயங்களில் 200 மீட்டர் 400 மீட்டர் 2,400 மீட்டர் என பலவகையான ஓட்டப்பந்தயம் ஆக நடாத்தப்பட்டன.
9. தேர் பந்தயம்
ஆபத்தான அதேசமயம் பிரபலமான பந்தயம் இது. பந்தயத்தில் தேர் ஓட்டிகள் வென்றாலும் பரிசு தேரின் உரிமையாளருக்கே வழங்கப்பட்டது.
இவ்வாறான போட்டிகளும் இவ்வாறான விதிமுறைகளுமே ஆரம்ப கால ஒலிம்பிக் போட்டிகளில் காணப்பட்டன. மேலும் நடுவர்களை பொறுத்த அளவில் போட்டிகளில் ஏமாற்றுக்காரர்கள் கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த முறையில் சவுக்கடி வழங்குவதற்காக சிறந்த பயிற்சிகளை பெற்றவர்களாகவும் காணப்பட்டார்கள். இறுதியில் போட்டியில் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது போட்டி வெற்றி மகுடங்கள் ஆனதே வெற்றி பெற்றவருக்கு ஆலிவ் இலைகள் கிரீடமாக கௌரவமாகவும் அணியப்பட்டு அதனோடு பரிசும் வழங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் வெற்றி பெற்றவருக்கு பரிசாக 500 திர்ஹம் கிரேக்க பணமும் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆரம்ப கால ஒலிம்பிக் போட்டியில் முதலிடம் பெற்ற நபருக்கு மட்டுமே பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்பது விசேடமாக குறிப்பிட தக்கது. அதுமாத்திரமல்லாமல் வெற்றியாளருக்கு வழங்கப்படும் பரிசானது அந்நாட்டில் ஒரு நபரின் 15வருட சம்பளத்திற்கு சமனானதாகும் கருதப்பட்டது.
இவ்வாறே ஆரம்பகால ஒலிம்பிக் போட்டிகள் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மட்டுமல்லாது ஆசிய நாடுகளிலும் கூட பெருந்தொற்று வெகுவாகப் பரவியிருக்கும் சூழ்நிலையில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்த துஷ்பிரயோகங்களை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்காக பெரும்பாலும் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களும் பெண்களுக்கான நிறுவனங்களும்தான் போராடி வருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பல தசாப்த காலமாக சிறுவர்களுக்கு எதிராக ஏராளமான பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த வருடத்தில் ஆறு மாத காலப்பகுதியில் தேசிய சிறுவர் அதிகார சபைக்கு 4000 இற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றாக கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்ட அல்லது கொல்லப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்படும் 16 வயதுச் சிறுமி ஹிஷாலினியின் விவகாரமும் அடங்குகின்றது. இவர் உயிரிழந்த நாளிலிருந்து அவருடைய வைத்திய அறிக்கை வெளிவரும் வரை எந்த ஒரு அரசியல்வாதியும்; நீதி கேட்பதற்காக வீதிக்கு இறங்கியிருக்கவில்லை. இதுவரை காலமும் வன்முறைக்கு, உரிமை மீறல்களுக்கு உள்ளான பெண்களுக்கு, சிறுமிகளுக்கு ஆதரவாக நீதிக்காக குரல்கொடுக்காத மதவாதமும் பிரதேசவாதமும் கொண்ட அரசியல்வாதிகள் வைத்திய அறிக்கையில் சிறுமி ஹிஷாலினி பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டதன் பின்னர் வீதியில் இறங்கிப்போராடி வருவதோடு ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள்.
ஆனாலும்; ஆணாதிக்க சிந்தைனைகளைக் கொண்ட அரசியல்வாதிகளுக்கும் மதவாதம் மற்றும் இனவாதம் பேசுபவர்களும் இவ்வாறான பாலியல் துஷ்பிரயோகங்கள் அனைத்தும் செய்திகளாகவும் தகவலாகவுமே இருந்துள்ளதை எங்களால் கடந்த காலங்களில் அவதானிக்க முடிந்தது. ஹிஷாலினிக்காக குரல் எழுப்பும் இவர்கள் அவருக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு எந்த முயற்சியையும் எடுத்திருக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் மீதுள்ள கோபத்தையும் முஸ்லிம் சமூகத்தின் மீதுள்ள தங்களது காழ்ப்புணர்வினையுமே வெளிக்காட்டி வருகின்றார்கள். பொதுவெளியில் தங்களது வன்முறையான கருத்துக்களை பதிவேற்றுவதன் ஊடாக சமூகத்தில் வன்முறைகளைத் தோற்றுவித்து இலங்கையில் மதவாதம் எனும் நெருப்பை மூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் புதிய ஜனநாயக மக்கள் முன்னனிக் கட்சியின் தலைவருமான நடராஜா ரவிகுமாரைக் அடிக்கோடிட்டு குறிப்பிட வேண்டும்.
நடராஜா ரவிகுமார் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோருவதாகக் கூறிகொண்டு இலங்கையில் 90 வீதமான முஸ்லிம் பெண்கள் அபாயாவையும் புர்காவையும் அணிந்துகொண்டு; விபசாரத்தில் (பாலியல் தொழிலில்) ஈடுபடுகிறார்கள் என்றும் போதைப் பொருட்களைக் கடத்துகிறார்கள் என்றும் பாரளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் மனைவி, சகோதரிகள் மற்றும் அவருடைய குடும்பத்தில் உள்ள அனைத்துப் பெண்களும்; விபசாரத் தொழிலில் (பாலியல் தொழிலில்) ஈடுபடுபவர்கள் என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறான சொற்பிரயோகமானது பாலியல் வன்முறைகளைப் செய்கின்ற குற்றவாளிகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் பிழை செய்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கவும் பாலியல் வல்லுறவினைச் செய்துவிட்டு சத்தம் இல்லாமல் இருக்கும் ஆண்களைக் காப்பாற்றுவதற்கும் எத்தனிக்கும் ஒரு செயலாகும் (எய்தவன் இருக்க அம்பை நோகுவது போன்ற செயல்). அல்லது ஒரு பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என நினைத்துக் கொண்டு 90 வீதமான பெண்களை அவமானப்படுத்தும் குறித்த இனவாதப் வெறுப்புப் பேச்சினை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
அத்துடன் முஸ்லிம் பெண்களை உடல் சார்ந்தும் உடை சார்ந்தும் இழிவாக சமூக ஊடகங்களில் இவ்வாறு விமர்சிப்பதை முஸ்லிம் மதத்தலைவர்கள், அவர்கள் சார்ந்த அமைப்புகள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் போன்றோர் கேள்விக்குட்படுத்தாமல் மௌனம் காப்பது ஏன்? சிறுமி ஹிஷாலினியின் இறப்பை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பெண்களை எந்தளவுக்கு இழிவு படுத்துகின்றார்கள் என்பதை சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் சில ஆணாதிக்க சிந்தனை கொண்ட ஆண்களும் சமூகத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் சிறுமியை துஸ்பிரயோகம் அல்லது பாலியல் துஸ்பிரயோகம் செய்த அந்த ஆணைப் பற்றியும் அந்தப்பிள்ளை வாழ்ந்த வறுமையான சூழலின் நிலைமை பற்றியும் கவனத்தில் கொள்ளாமல் சிறுமி ஹிஷாலினி மற்றும் அவரது தாய் உட்பட ஏனைய பெண்களையும்; பொது வெளியில் மிகவும்; அருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்து வருகின்றார்கள்.
பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்காக நீதி கேட்டு ஆண்களும் அரசியல்வாதிகளும் வீதிக்கு இறங்கும்போது பெண்ணிலைவாதிகளாகிய நாங்கள் பொதுவாக இரண்டு முக்கியமான விடயங்களை அவதானித்திருக்கிறோம். முதலாவது எங்களுடைய சமூகங்களில் பெண்கள் அல்லது சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு நீதி கோராமல் மறைத்து விடுவதாகும். இரண்டாவது சிங்களவர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் அல்லது தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் என்று வரும்போது மாத்திரம் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். இதில் இனவாதமே அவர்களது தெரிவாகவும் நோக்கமாகவும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.
மேலும், மதம் என்பது ஒவ்வொருவரும் பாரம்பரியமாகவும் உணர்வுபூர்வமாகவும் பின்பற்றி வரும் உரிமை என்பதை நாம் யாவரும் அறிவோம். அவ்வாறான இஸ்லாம் மதத்தையும் முஹம்மது நபி அவர்களையும் இழிவாகக் கொச்சை படுத்தி உலக முஸ்லீம்கள் அனைவருமே உணர்வு ரீதியாக வேதனைப்படும் அளவுக்கு ஒருவர் எழுதிய பதிவை காரைதீவு பிரதேசபை தவிசாளரான கிருஸ்ணப்பிள்ளை ஜெயசிறில் அவர்கள் ஏனையவர்களுக்கும் பகிர்ந்தும் விருப்பு செய்தும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பழிவாங்குவதாக நினைத்து ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பழிவாங்குவதாக நடந்து கொள்வது ஒட்டுமொத்தமான இனவாத அரசியல் ஆகும்.
தொடர்ச்சியாக பெரும்பான்மை அரசியல்வாதிகள் சிறுபான்மை சமூகத்தினரை பிரித்தாளும் நியதியை இந்த செயற்பாடு உணர்த்துகிறது. இந்த இனவாத செயற்பாட்டின் பின்னணியில் இருப்பவர்கள் அத தெரன மற்றும் ஹிரு போன்ற ஊடகங்கள் என்பதுடன் சமூக ஊடகங்களில் உள்ள இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்தவென உருவாக்கப்பட்ட விசைப்பலகை வீரர்களும்தான் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் எங்களது கால்கள் தேயும் அளவுக்கு பெண்களையும் பிள்ளைகளையும் ஒவ்வொரு நீதிமன்றமாக கொண்டு செல்லும் போது இவர்கள் எங்கே இருந்தார்கள்? சிறுமி ஹிஷாலினியின் நீதிக்கான போராட்டத்திற்கு ஏன் இந்த குறிப்பிட்ட ஆண்கள் தலைமை தாங்க வேண்டும்?
குறிப்பாக எப்போதும் பெண்களை பகடைக்காய்களாக வைத்துக்கொண்டு தங்களது அரசியல் காய் நகர்த்தல்களை செய்யும் ஒருசில அரசியல்வாதிகள் மற்றும் அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்களது வீட்டில் உள்ள பெண்களையும் பிள்ளைகளையும் சற்றுத் திரும்பிப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனைய பெண்கள் மீது கற்களை எறிந்து காயம் ஏற்படுத்துவதற்கு முன் உங்களுடைய வீடுகளிலும் பெண்கள், சிறுவர்கள் இருக்கின்றார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தங்களது ஆணாதிக்க அரசியலைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பெண்களைப் பாவித்துக் கொண்டிருந்த அரசியல்வாதிகள் இப்போது சிறுமிகளைப் பாவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இப்படியான கீழ்த்தரமான எண்ணங்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்பவர்களை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் பெண்களாகிய நாங்கள் இனிவரும் காலங்களில் யாருக்கு வாக்களிக்கப் போகின்றோம் என்பது குறித்து சிந்தித்து முடிவெடுப்பது முக்கியமாகும். ஏனென்றால் பெண்களையும் சிறுவர்களையும் தொடர்ச்சியாக அவமதிப்பதும் தங்களது இருப்புக்களைத் தக்க வைப்பதற்காக அவர்களை பாவித்துவிட்டு தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிய பின்னர,; இவர்களுக்கான நீதி தூக்கி வீசப்படுவதும் வழமையான விடமாக இருக்கின்றது. இந்த ஆணாதிக்க அரசியல் எமக்கொரு பாடம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. எனவே நாட்டின் பெரும்பாண்மையினராக வாழும் பெண்கள் இனியேனும் அரசியல் சார்ந்து தங்களது கண்களைத் திறக்க வேண்டும். பெண்கள் செயற்பாடுகளில் ஈடுபடும்போது எமது சமூகத்தின் அரசியலையும் கட்டாயம் கருத்திற்கொள்ள வேண்டும்.
எனவே தமிழ், முஸ்லிம் பெண்களாகிய நாம் அனைவரும் பின்வரும் கோரிக்கைகளை பகிரங்கமாக முன்வைக்கின்றோம்.
1. பாதிக்கப்பட்ட ஹிஷாலினிக்கு நீதி வேண்டும்.
2. அதற்கான சட்ட நடவடிக்கைகளும் துரிதப்படுத்த வேண்டும்.
3. இனவாதம், மத வாதம் என்பவற்றுடன் பெண்களையும் சிறுமிகளையும் இழிவுபடுத்தும் ஊடகங்களை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதகதியில் அமுல் படுத்த வேண்டும்.
4. இவ்வாறு இனவாதமாக மற்றும் பால்நிலைக் கூருணுர்வு இல்லாமல் கருத்து தெரிவிக்கும் நபர்களுக்கு எதிராக அனைவரும் இணைந்து குரல் கொடுப்பதுடன் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு (வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்; பெண்ணுரிமை சார்ந்து செயற்படும் 09 பெண்கள் அமைப்புகளின் கூட்டமைப்பு)
உலகின் வாழும் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்களே. இவர்கள் தமக்குள் எந்தவொரு பால் இன மத நிற வேறுபாடுகளுமின்றி அவர்களுக்கான உரிமைகளை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டிருக்கின்றனர். உலகளாவிய ரீதியில் சிறுவர்கள் அனுபவிக்கும் சகல அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளையும் இலங்கையில் உள்ள சகல சிறுவர்களும் அனுபவிக்கக் கூடியவாறான உரிமைகளும் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பாக பாலியல் வல்லுறவுகளிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, சித்திரவதை குரூரமாக நடத்துதல் மற்றும் வன்முறையான தண்டனைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் உரிமை, சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்குமான உரிமை என்பன சர்வதேச ரீதியில் சிறுவர்களுக்குரிய உரிமைகளாகுமென அறியப்படுகிறது.
இன்றைய உலகம் எதிர்நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன்றாக சிறுவர் துஷ்பிரயோகம் விளங்குகின்றது. வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் போன்ற அனைத்து உலக நாடுகள் முழுவதிலும் காணப்படும் பிரச்சினையாக இருந்தாலும் கூட வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் அது ஒரு பாரிய பிரச்சினையாக அமைகின்றது .இன்று சமூகமொன்றின் பாரிய சமூகப் பிரச்சினையாகக் காணப்படும் சிறுவர் துஷ்பிரயோகம் இல்லாமல் செய்யப்படும் போது சிறுவர் உரிமையை பாதுகாக்க முடியும் என்பது திண்ணம்.
ஆயினும் உலகளாவிய அளவில் 1.7 பில்லியன் அளவிலான சிறுவர்கள் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்கின்றனர். 2012 முதல் 2020 வரையிலான காலப் பகுதியில் இலங்கையில் மட்டுமே 5891 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளது மட்டும் அல்லாமல் இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் 21.9 சதவீதத்தினால் அதிகரித்து வருவதாக யுனிசெப் நடத்திய அண்மைய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அடிப்படையாக பெற்றோரின் பாதுகாப்பையும் அரவணைப்பையும் பெறுவதற்கு சிறுவர்களுக்கு உரிமை உள்ள அதேவேளை பெற்றோரிடமிருந்து தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமையும் சிறுவர்களுக்கு உண்டு. ஆனால் தத்தமது உரிமைகள் மீறப்படுவதனைக் கூட அறியப்படாதவர்களாகவே பெரும்பாலான சிறுவர்கள் இருக்கின்றமை கவலைக்குரியது. அத்தோடு சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல்,போதைக்கு அடிமையாக்கல், பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்றவற்றில் ஈடுபடுபவது அதிகபட்ச தண்டனைக்குரிய குற்றமாகும் . குடும்பமே சிறுவர்களுக்கான கவசம் என்றாகுகின்ற போதிலும் குடும்பத்தில் அன்பற்ற, ஆதரவற்ற, பாதுகாப்பற்ற நிலையில் வாழும் போது அச்சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகக்கூடிய அதிகமான சந்தர்ப்பங்கள் உருவாக்குகின்றன.
சிறுவர் துஷ்பிரயோகம் என்று நோக்குகின்ற போது நான்கு வகையில் அணுகக்கூடியவாறு அமைகின்றது. உடல் ரீதியான துஷ்பிரயோகம், உளவியல் ரீதியிலான துஷ்பிரயோகம், புறக்கணிப்பு ரீதியிலான துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகமாகும், இவை பெரும்பாலும் பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள், ஆசிரியர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களாலேயே அடிக்கடி நிகழ்கிறமை வருத்தத்திற்குரியது.ஒரு சிறுவனுக்குரிய உடை, உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை தேவைகள் இல்லாதபோது அல்லது கிடைக்காதபோது அவன் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றானென்பதை அனைவரும் உணர்தல் அவசியம்.
இலங்கையைப் பொறுத்தவரையிலும் இளம் சிறுவர்கள் மீதான குடும்ப வன்முறைகளே அதிகரித்து காணப்படுகின்றன. இதற்கு சமூக கட்டமைப்புகள் மற்றும் அணுகுமுறைகளும் ஒரு பிரதான காரணமாக அமைகின்றது. குழந்தைகளை அடித்தல் உடல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொள்ளல் பிள்ளைகளை குடும்ப வேலைகளில் ஈடுபடுத்திக்கொள்ளல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், அவர்களுடைய விருப்பங்கள் புறக்கணிக்கப்படுதல் என்பனவாறாக நாற்பது வீதமான சிறுவர்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகுகின்ற அதேவேளை பல தகவல்கள் அறியப்படாதவாறாகவே உள்ளன. இவை மட்டும் அல்லாமல் பெரியவர்களுடைய கோபங்கள் விரக்திகளை குழந்தைகள் மீது காட்டும் வகையிலான செயற்பாடுகளை பெரியவர்கள் வெளிப்படுத்துதல் கண்டிக்கத்தக்கது. இவ்வாறான சூழலில் வளரும் குழந்தை தன்னுடைய அடுத்த தலைமுறைக்கும் அதையே பிரயோகிக்கும் போது குழந்தைகள் மீதான குடும்ப வன்முறை குடும்ப அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிறழ்வான சங்கிலித் தொடராக தொடர்கின்றது.
இலங்கையில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் காலத்திற்கு காலம் அதிகரிப்பதை காணக்கூடியவாறு உள்ளது. இவை பெரிதும் சிறுவர்களாலும் அறியப்படுவதில்லை. இதேவேளை குழந்தை தொழிலாளராக உரிமைகள் மறுக்கப்படும் குழந்தைகளில் சுமார் 10 ஆயிரம் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இவை தவிர அதிர்ச்சி தரும் விடயம் என்னவென்றால் “safe the children” அமைப்பின் கணிப்புப்படி குறிப்பாக 15 அல்லது 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 80%மானோர் அறியாமை காரணமாக தாமாக விரும்பியும் இவ்வாறான துஷ்பிரயோகங்களிற்கு உள்ளாவதே. பாலியல் ரீதியான தெளிவின்மை மற்றும் போதிய அறிவின்மையை குற்றவியலாளர்கள் பயன்படுத்திக்கொள்ளுதல் வருத்தத்திற்குரியது.
இவ்வாறான சிறுவர்களது அறியாமை அவர்களுடைய எதிர்காலத்தில் பெரிதும் தாக்கம் செலுத்துகின்றது. ஆக இலங்கையின் பாடத்திட்டங்களில் பாலியல் கல்வி அவசியம் என பல அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் தத்தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இவை மட்டுமன்றி பெரிதும் சிறுவர்களது பாலியல் ரீதியான சுரண்டல்கள் அவர்களது நெருங்கிய உறவினர்களாலேயே இடம்பெறுவதால் பல சந்தர்ப்பங்களில் சிறுவர்களை பாதுகாக்கவும் அவர்களுக்கான நியாயங்களை பெறுவதில் பங்கேற்க வேண்டிய பெற்றோர் மற்றும் குடும்ப அங்கத்தவர்களே குற்றங்களை வெளிப்படுத்த பின்னிற்கின்றனர். இவ்வாறான நிலைக்கு இலங்கை சமுதாயக் கட்டமைப்பும் பிரதான காரணமாகவும் அமைகிறது. அதாவது பாதிப்புற்ற நபர் குழந்தையோ பெரியவரோ அவரையே குற்றவாளியாக அணுகப்படுதல் கவலைக்குரியது.
இவை தவிர இலங்கையில் 10 முதல் 14 வயதெல்லை வரையுள்ள ஏறத்தாழ 35 ஆயிரம் சிறுவர்கள் கடைகள், பண்ணைகள், மீன்பிடி மற்றும் கைத்தொழில் நிலையங்களில் வேலை செய்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. இக் கணக்கெடுப்பில் குடும்ப பரம்பரை தொழில்களில் ஈடுபடும் சிறுவர்களும் அடங்குவர்.
சிறுவர் துஷ்பிரயோகங்கள் நலிவுற்ற குடும்பங்களில்தான் அதிகம் இடம்பெறுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். அதாவது குடும்பத்தவரால், பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகள், குடும்ப பொருளாதார வருமான பிரச்சினைகளுக்காக வெளிநாடு செல்லும் பெற்றோரின் பிள்ளைகள், பெண்தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளே அதிகளவில் பாலியல், உடலியல். உளவியல் ரீதியான கொடுமைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு ஆளாகுகின்றனர் என்று சிறுவர் உரிமைகள் தொடர்பாக செயற்படும் பல்வேறான அமைப்புக்கள் சுட்டிக் காட்டுகின்றன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிகள் என்று நோக்குகின்ற போது,சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுத்தலும் அவ்வாறான துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்ற பிள்ளைகளை பாதுகாத்தல் மற்றும் சிகிச்சையளித்தல் பற்றிய தேசிய கொள்கையொன்றை ஆக்குவதற்கு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல். மட்டும் அல்லாமல் அனைத்து விதமான சிறுவர் துஷ்பிரயோகங்களுடனும் தொடர்புடைய சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதை ஒழுங்குபடுத்துதல், மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய அனைத்து புலன் விசாரணைகளையூம் குற்றவியல் வழக்குகள் சம்பந்தமான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையூம் ஒழுங்குபடுத்துதல், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உட்பட அனைத்து விதமான சிறுவர் துஷ்பிரயோகங்களையூம் வெளிக்கொணர்வதற்கும் தடுப்பதற்கும் வெளிநாட்டு அரசாங்கங்கங்களுடனும் சர்வதேச அமைப்புகளுடனும் இணைந்து பணியாற் றுதலும் தகவல்களை பரிமாறிக்கொள்ளுதலுமாக பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் இன்றுவரை சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் குறைவதாக தகவல் இல்லை.
இலங்கையில் 92% மானோர் கல்வியறிவு பெற்றவர்களாக குறிப்பிடப்படுகிற போதிலும் சிறுவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல் என்பது ஆரோக்கியமானதன்று. இதிலும் இன்றளவில் சிறுவர்கள் இணையவழி கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்த விளைகையில் இணையவழி துஷ்பிரயோகளிற்கும் உள்ளாகுகின்றனர். இவை குறித்த போதிய விழிப்புணர்வு பெற்றோர்கள் அறிய்ப்படாத போதிலும் இன்றைய நிலவரப்படி அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களிற்கு இவை வழிகோலும் அதேவேளை சிறுவர்கள் பிறழ்வான வழியில் திசைதிருப்பப்படவும் செய்கின்றனர்.
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் சிறுவர் துன்புறுத்தல்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது என்று நோக்குகின்ற போது இலங்கை சட்டங்கள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் வலுவானதாக இருக்கின்ற போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறுபட்ட சிக்கல்கள் காணப்படுகின்றன. அத்தோடு சிறுவர் தொடர்பிலான வழக்குகள் தீர்வினை அணுகுவதற்கு 08 தொடக்கம் 10 வருடங்கள் வரை நீடிக்கப்படுகின்றன. இச் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவரும் குற்றஞ்சாட்டப்பட்டவரும் பல்வேறு வகையான உள மற்றும் உடல் ரீதியான இயலாமை மற்றும் மாற்றங்களிற்கு உட்படுன்றனர்.மற்றும் யாழ்ப்பாணம் பத்தரமுல்ல ஆகிய நீதிமன்றங்களில் சிறுவர் தொடர்பான வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இங்கும் சிறுவர் குற்றச்செயல்களே பெரிதும் விசாரிக்கப்படுகின்றது.
சிறுவர்களுடைய செயற்பாடுகளில் அவர்களுடைய பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸ் நிலையங்களில் கூட தனித்துவமான பயிற்றுவிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குறிப்பாக சிறுவர்கள் பராமரிப்பு மற்றும் பெண்களுடைய விவகாரங்களுக்கான பிரத்தியேக பெண் பொலிஸ் அதிகாரிகளை நியமித்து இருக்கிறார்கள். இவ்வாறான ஏற்பாடுகள் வரவேற்கத்தக்கதே. அத்துடன் சிறுவர்கள் பற்றிய பிற அணுகுமுறையில் ஏனைய வளர்முக நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் செயற்பாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளமையை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் இலங்கையின் சட்டதிட்டங்கள் சிறப்பாக உள்ளது. ஆயினும் நாட்டின் பொருளாதார நிலைப்பாட்டின் காரணமாக அண்மித்த காலங்களில் சிறுவர்கள் தொடர்பிலான செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய ரீதியில் அணுகுகிற போது சிறுவர் உரிமைகளை பாதுகாக்கவென்று ஐக்கிய நாடுகள் சபை பல்வேறான வேலைத்திட்டங்களை உலகளவில் முன்னெடுத்து வருகின்றமை யாவரும் அறிந்ததே. அந்தவகையில் “Unicef, Save the children, Global Children, Children international” போன்ற சர்வதேச நிறுவனங்கள் சிறுவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றன. யுத்தங்கள், தீவிரவாத தாக்குதல்கள், அனர்த்தங்கள் போன்றவற்றால் பாதிக்கபட்ட சிறுவர்களுக்காக இந்த நிதியங்கள் அர்ப்பணிப்புடன் செயல்ப்பட்டு வருகின்றதோடு பல்வேறான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் சிறுவர் ஊக்குவிப்பு செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றன.
உடல், உள, உணர்ச்சி மற்றும் புறக்கணிப்பு ரீதியிலான சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு சமூகங்களின் பொறுப்பற்ற தன்மை, மற்றும் நம்பிக்கைகள், கட்டமைப்புக்கள், குடும்ப பொருளாதார சிக்கல், பெற்றோரின் பராமரிப்பு போதாமை, சுகாதாரம் தொடர்பான இடர்பாடுகள், கல்வியில் தெளிவின்மை, போதைவஸ்து பிரச்சினை, கோபம் மற்றும் வெறுப்பு, தாழ்வு மனப்பான்மை சார்ந்த உளவியல் பிறழ்வுகள் மற்றும் யதார்த்தமற்ற எதிர்பார்ப்புக்கள், தவறான வழிகாட்டல் ஆகியவை மூலம் சிறுவர்களது முன்னேற்றத்தில் தடைகள் அதிகரிக்கின்றன. இதனைத் தடுப்பதற்கு மக்கள் விழிப்புணர்ச்சி பெறுவதுடன் இதனை தத்தமது பொறுப்புணர்வோடும் செயற்படுதல் வேண்டும். சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்ட முறைகள், அவற்றை கையாளும் நெறிகள் போன்றவற்றை சமுதாயத்தின் ஒவ்வொரு தனிநபரும் அறிந்திருத்தல் கட்டாயமாகும்.
சிறுவர்களில் வெற்றிகரமான ஆளுமை அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுதல் காலத்தின் தேவையாக உள்ளது. எதிர்கால உலகின் சவால்களை வெற்றிகொள்ளக்கூடிய நற்பண்பும், அறிவும் நிறைந்த பலம்மிக்க எதிர்கால தலைமுறையை கட்டியெழுப்ப சமூக அளவிலான நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை முன்னெடுத்தல் நன்று.
நானும் எனது நண்பர்களும் எங்களுக்கு கொரியன் நாடகங்கள் பிடிக்கும் என பிறரிடம் கூறும் போது “அவர்களுக்கு சிங்கியான கண்கள் தானே?” என்ற கேள்வியையும் “ஏன் உங்களுக்கு அதை விட வேறெந்த சிறப்பான நாடகங்களும் கண்களுக்கு தென்படவில்லையா?” என்ற கேள்வியையுமே பிறரிடமிருந்து பெறுகிறோம். இந்த மாதிரியான சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை தீர்ப்பதற்காகவே இலங்கையர்கள் ஏன் கொரியன் நாடகங்களை பார்க்க வேண்டும் என்ற இந்த பதிவினை எழுதுகிறேன்.
1.குறுகிய கால எல்லை
பொதுவாக இலங்கை தொலைகாட்சிகளால் ஔிபரப்பப்படும் நாடகங்கள் குறைந்தது 200 எபிசோட்களாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. அதுவும் நாடகத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் மகன், பேரன் என அவரது தலைமுறையே அடுத்தடுத்த எபிசோட்களை பொறுப்பேற்று நடிக்க வந்து விடுகின்றனர். நீங்களும் பொறுமையாக காத்திருந்து நாடகத்தின் முடிவிற்காக ஏங்க நேரிடுகிறது. சரி அப்படியே காத்திருந்து நாடகத்தின் இறுதி வரை வந்தாலும் கதாநாயகன் குத்துபட்டு இறக்கும் போது திரையினை கருப்பு நிறமாக மாற்றி விடுகின்றனர். அதற்கு பிறகு கதாநாயகனுக்கு என்ன நேர்ந்தது என்பதை பார்ப்பதற்காக மேலும் ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டும். இதை எல்லாம் எழுதும் போதே எனக்கு பெருமூச்சு வருகிறது. ஆனால் கொரியன் நாடகங்களில் இந்த மாதிரியான எந்த ஒரு சிக்கலும் இல்லை. இடைவெளி இல்லாத 16இலிருந்து 20 எபிசோட்களோடு நாடகம் முடிந்து விடுகிறது. கதாநாயகன், கதைகளம் என அனைத்துமே சிறப்பான முறையில் அமையப் பெற்றிருக்கும். உங்களை திகைப்பில் மூழ்கடிக்கக் கூடிய பல திருப்பங்களும் சுவாரஷ்யமான கதாபாத்திரங்களும் என அனைத்தும் அடங்கிய ஓர் நல்ல அனுபவத்தினை பெற்றுத் தரக் கூடிய ஓர் மந்திர ஜாலமாகவே கொரியன் நாடகங்கள் திகழ்கின்றன.
சீஸி காதல்
பொதுவாக காதல் திரைப்படங்களில் காட்டப்படும் காதல் காட்சிகளை ஒரு முறை நினைத்துப் பாருங்கள். ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கின்றனர் ஆனால் சந்தித்த அந்த நாளிலேயே அவர்கள் படுக்கை வரை செல்வதில்லை. அவ்வளவு தான். இதே காட்சிகளையே மாறி மாறி ஒவ்வொரு திரைப்படத்திலும் காட்டுகின்றனர். நீங்கள் வித்தியாசமான மற்றும் அழகான காதல் காட்சிகளை பார்ப்பதற்காக ஏங்கிக் கொண்டு இருக்கும் நபராக இருப்பின் கொரியன் நாடகங்களை பார்ப்பது சிறந்த ஓர் தெரிவாக இருக்கும். அது ஏனெனில் அழகான டேட்டிங்ஸ், மெய்சிலிர்க்க வைக்கும் காதல் காட்சிகள், நம்பிக்கையூட்டக் கூடிய காதல் வசனங்கள் மற்றும் சீஸியான ரொமான்ஸ் காட்சிகள் என உங்கள் இதயத்தை காதலால் கதகதப்பாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு பெக்காகவே கொரியன் நாடகங்களில் காதல் என்ற உணர்வு வடிவமைக்கப்படுகிறது.
நடிகர்கள்
இது ஒரு ஏற்கக் கூடிய காரணம் என்று தெரியும். எது எவ்வாறாக இருப்பினும் கொரியன் நாடக நடிகர்கள் நடமாடும் கலையம்சம் மிக்க ஓவியங்கள். அந்த கண்கள், கன்னத்தின் அமைப்புகள் எல்லாம் இதயத்தினை திருடக் கூடியவை (அவர்கள் தமது உடலில் அங்கு இங்கு என பிளாஸ்திக் சர்ஜரி செய்வதால் இப்போது என்ன ஆகிவிடப் போகிறது? எப்படியிருந்தாலும் அது PERFECTION தானே). இதில் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் இவர்களுக்கு வயதாகுவது தெரிவதே இல்லை. பெண்களே கூகுளுக்கு சென்று பை ரெயின் என்ற பெயரினை டைப் செய்து தேடிப் பாருங்கள் (இலங்கையை கவர்ந்திழுத்த புல் ஹவுஸ் நாடகத்தில் வரும் பூ சிறுவன்). இந்த பெயரினை தேடிப் பார்ப்பதனூடாக 2004 இலிருந்து இப்போது வரை அவருக்கு வயதாகவில்லை என்பதை புரிந்துக் கொள்வீர்கள். இவர்கள் வெறும் அழகினால் மட்டுமன்றி அவர்களது ஆடல், பாடல் மற்றும் மொடலிங் திறமைகளாலும் உங்களை தன்வசப்படுத்தக் கூடியவர்கள். உண்மையாகவே இவர்களை பிடிக்காமல் போவதற்கு என்ன தான் காரணம் இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை.
புதிய கலாச்சாரம் ஒன்றை அனுபவிக்கலாம்
அமெரிக்க திரைப்படங்களினூடாக அமெரிக்கர்களின் துரித உணவு சாப்பிடும் வழக்கம் மற்றும் சிறிதளவு இன ரீதியான பிரிவுகள் போன்றவை அவர்களது கலாச்சாரத்தில் இருப்பதை எம்மால் அறிந்துக் கொள்ள முடிகிறது. சரி! இப்போது நாம் வேறொரு புதிய கலாச்சாரத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய நேரமிது. அதுவும் ஃபேஷன், பொப் இசை மற்றும் சாம்சங் மீதான தீராத அன்புடைய சுவாரஸ்யமான கொரியன் கலாச்சாரம். இவர்களது கலாச்சாரத்தில் உலகளாவிய ரீதியில் அனைவரையும் ஈர்க்கக் கூடிய பாகமான உணவினை பற்றியும் அறிந்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு கொரியன் நாடகத்திலும் குறைந்தது ஐந்து உணவு வேளைகள் காட்சிகளாக்கப்படுகின்றன. சாப்பாட்டு பிரியர்களே வாயில் எச்சிலூறிய படி கொரியன் நாடக எபிசோட்களை நீ்ங்கள் பார்த்து ரசிக்க வேண்டிய நேரமிது.
வாழ்க்கை தத்துவங்கள்
நாம் இதுவரை பார்த்த காரணங்கள் அனைத்தையும் விட கொரியன் நாடகங்களை பார்க்க வேண்டும் என்பதற்கான முக்கிய காரணமாக இங்கு காட்சிப்படுத்தப்படும் வாழ்க்கை தத்துவங்கள் காணப்படுகின்றன. காதல், நட்பு, பள்ளி மற்றும் அரசியல் போன்றவற்றை பற்றி, நாம் வாழ்க்கையில் தெரிந்துக் கொள்ளக் கூடிய தத்துவங்களை கொரியன் நாடகங்கள் சிறப்பான முறையில் காட்சிகளாக்குகின்றன. உதாரணமாக கோட் ஒஃப் ஸ்டடி என்ற கொரியன் நாடகமானது பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவே எடுக்கப்பட்ட ஓர் நாடகமாகும் மற்றும் கிங் 2 ஹார்ட்ஸ் என்ற நாடகம் அளவுக்கடங்காத அன்பினை சித்தரிப்பதாகவும் வட-தென் கொரியாவினை ஒன்றாக இணைக்கும் தேசிய கனவினை சித்தரிப்பதாகவும் எடுக்கப்பட்ட ஓர் நாடகமாகும். நீங்கள் அனைவரும் நினைப்பதுப் போல் கொரியன் நாடகங்கள் வெறும் காதல் மற்றும் நட்பினை சித்தரிப்பவை கிடையாது மாறாக மக்களுக்கு தேவையான வாழ்க்கை தத்துவங்களை அழகாக எடுத்துக் காட்டக் கூடியவையாகவும் விளங்குகின்றன.
“நீங்கள் தினசரி பிரச்சினைகளை அமைதியான முறையில் கையாள விரும்பினால், கொரியன் நாடகங்களைப் பாருங்கள். அவை பெரிதும் துணை புரியும்”
– திருனி ஜி.(இலங்கை)
“கொரியன் நாடகங்கள் உங்களை கதகதப்பாகவும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ளக் கூடியவை. மன அழுத்தத்தில் இருக்கும் நம் அனைவருக்குமே கொரியன் நாடகங்கள் அவசயமாகும்”
நவிந்தி டபிள்யூ.(இலங்கை)
“கொரியன் நாடகங்கள் எனது நாட்டின் வரலாற்றை ஆக்கபூர்வமான மற்றும் சுவாரஸ்யமான வழியில் காட்சிப்படுத்துகின்றன. உண்மையில் இது போன்று வேறேதுவும் இல்லை. இலங்கையர்கள் ஒரு முறையாவது கொரியன் நாடகங்களை பார்க்க வேண்டும். நீங்கள் அதற்காக வருத்தப்பட வேண்டிய நிலை வராது”
சியோங் யூன் ஜோ. (தென் கொரியா)
“உண்மையான உலகிலிருந்து தப்பிக்க வைப்பவையாக கொரியன் நாடகங்கள் திகழ்கின்றன. உண்னமயான உலகிலிருந்து நாம் அனைவருமே ஒரு முறையாவது தப்பிக்க வேண்டும் என்பது கடவுளுக்கும் தெரியும்”
ஓவினி பி. (இலங்கை)
சரி இப்போது நீங்கள் ஏன் கொரியன் நாடகங்களை பார்க்க முயற்சிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் உங்களிடம் உள்ளது. கொரியன் நாடகத்தின் மொழி மற்றும் நடிகர்களின் கண்களைப் பற்றி கேலி பேசி வாழ்பவர்களின் பேச்சினை எல்லாம் கேட்காது நீங்களாக ஒரு முறை முயற்சித்து பார்த்து முடிவெடுங்கள்.
முன்பிருந்தே கொழும்பில் இருந்து வரும் சுகர் பர்கர் உங்கள் நாவிற்கு விருந்தளிப்பதற்காக தற்போது பல புதிய விடயங்களை உள்ளடக்கி தமது மெனுவினை புதுப்பித்துள்ளது. இவர்களது இந்த புதிய மெனுவினை ஊபர் ஈட்ஸிலும் காணலாம். மௌன்ட், கொழும்பு 03, கொழும்பு 04, கொழும்பு 05, கொழும்பு 06, கொழும்பு 07 மற்றும் கொழும்பு 08 ஆகிய பகுதிகளில் இருப்பவர்களுக்கு ஊபர் ஈட்ஸினூடாக பெற்றுக் கொள்ள முடியும். சுகர் பர்கரினர் உணவு தயாரிப்பு என வரும் போது தரத்திற்கு முதலிடம் அளிக்கின்றனர். இவர்களது உணவின் அளவும் எதிர்ப்பார்ப்பதை விட அதிகமானதாகவே இருக்கிறது.
பான வகைகள்
வெனிலா – ரூபாய் 500
இந்த வெனிலா மில்க் ஷேக் நிஜமாகவே மிகவும் க்றீமியாகவும் மில்கியாகவும் இருந்தது. இதை குடிக்கும் போது உருகிய ஜஸ்கிறீமினை சுவைத்த அனுபவம் நினைவிற்கு வந்தது அதனால் இதில் ஐஸ்கிறீமும் சேர்க்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.
ஸ்ட்ரோபரி – ரூபாய் 500
இது மிகவும் இனிப்பாகவும் ப்ரூட்டியாகவும் இருந்தது. இதனை குடிக்கும் போது ஸ்ட்ரோபரி ஐஸ் கிறீம் குடிப்பது போல் இருந்தது. பர்கருடன் குடிப்பதற்கு இது ஒரு சிறந்த பான வகையாகும்.
டபுள் சொக்கலேட் – ரூபாய் 550
இந்த பானம் கண்டிப்பாக சிறியவர் பெரியவர் என அனைவருக்குமே பிடிக்கும் ஏனெனில் இந்த மில்க் ஷேக் மிகவும் க்றீமியாகவும் சொக்கலேட்டியாகவும் இருந்தது. இதன் இனிப்பு தன்னை ஒரு ஈற்றுணவை (dessert) சாப்பிட்ட திருப்தியை தந்தது.
குக்கீஸ் மற்றும் க்றீம் – ரூபாய் 500
இது மற்றைய பானங்களை விட திக்கானதாக இருந்தது. இதில் நிறைய குக்கீஸ் சேர்த்து அரைக்கப்பட்டுள்ளது. இதனை குடிக்கும் போது க்ரன்சியான ஒரு சுவையையும் அனுபவிக்க முடியும்.
ஐஸ்ட் கோபி
ப்ளெக் – ரூபாய் 350
ஒரு ஸ்ட்ரோங்கான கோபி அல்லது ஒரு புத்துணர்ச்சியை பெற விரும்புபவர்களுக்கு இந்த பானம் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த காபி கோடை காலத்திற்கு சிறந்தது.
ட்ரெடிஷனல் – ரூபாய் 400
இந்த காபி சற்று அதிகமாக பால் சேர்க்கப்பட்டதாக இருந்தது. அதற்கென இது ஒன்றும் மோசமான ஐஸ் காபி கிடையாது ஆனால் மெனுவில் மற்றைய சிறப்பான தெரிவுகள் இருக்கும் போது இதற்காக ரூபாய் 400 செலவிட நான் விரும்பவில்லை.
மொச்சா – ரூபாய் 500
இந்த மொச்சா பானமானது டார்க் சொக்கலேட்டின் சுவையினை கொண்டுள்ளது. அதிகமாக காபி விரும்பாத அதே சமயம் மில்க்ஷேக் போன்ற இனிப்பான சுவையினை விரும்புபவர்களுக்கு இந்த பானம் சிறந்த தீர்வாக இருக்கும்.
வியட்னமிஸ் – ரூபாய் 500
இது இரண்டு லேயர் கொண்ட பானமான வியட்னமிஸ் ஒரு அற்புதமான சுவையினை கொண்டுள்ளது. இதன் மேற்பகுதியில் கன்டஸ்டன் மில்க்குடன் ஐஸ் ப்ளெக் காபி உள்ளது. இந்த ஐஸ் காபியானது ஒரு பாரம்பரிய ஐஸ் காபிக்கு ஒப்பானதாக இருந்தது.
சால்டட் கெரமில் – ரூபாய் 550
அனைத்து மில்க் ஷேக்களிலும் பார்க்க இது கெரமில்லுடன் ஒரு அருமையான இனிப்பினையும் மில்க்கியான சுவையினையும் கொண்டிருந்தது. சால்டட் கெரமில்லில் இனிப்பின் மிகையான தன்மை சற்று இல்லாதது போலிருந்தது.
Appetizers
உங்களது பர்கர் அல்லது ஹொட்டோக்குடன் மேலதிகமான தெரிவுகளினை சேர்த்து கொள்வதற்கான நான்கு தெரிவுகள் காணப்படுகின்றன.
ப்ரன்ச் ப்ரைஸ் – ரூபாய் 350 / பெரியது ரூபாய் 500
பொதுவாக நீங்கள் பர்கருடன் ப்ரைஸ்களை சேர்த்துக் கொள்வது வழக்கம். இந்த ப்ரைகள் சரியான பதத்தில் தயாரிக்கப்படுவதோடு தேவையான அளவு பரிமாறப்படுகின்றன.
கரட் ப்ரைஸ் – ரூபாய் 350 / பெரியது ரூபாய் 500
இது தனித்துவமான மற்றும் புதிய ஒன்றாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் ஆரம்பத்தில் இதை நாங்கள் ஸ்வீட் பொட்டேட்டோ என நினைத்தோம். இது சைட் ப்ரைஸுக்கான ஒரு ஆரோக்கியமான தேர்வாகும். நாங்கள் இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் சுவைத்து உண்டோம்.
ஜன்கில் ப்ரைஸ் (ஸ்வீட் பொட்டேட்டோ) – ரூபாய் 250 / பெரியது ரூபாய் 400
இது திக்காக வெட்டப்பட்டு தயாரிக்கப்பட்டிருந்த போதும் க்ரிஸ்ப்பியாக இருந்தது. இதில் ஒரு சிறிய பகுதியே ஒரு நல்ல ஸ்நெக்காக இருக்க போதுமானது. நன்றாக தயாரிக்கப்பட்டுருந்ததோடு இதன் உட்பகுதி மென்மையானதாக இருந்தது. இவை சூடாறிய பின்னும் நொந்து வளையாது அதே வடிவமைப்புடன் காணப்பட்டது.
ஒனியன் ரிங்ஸ் – ரூபாய் 350
போட்டிகளேதுமே இல்லாமல் அனைத்திலும் இது எங்களுக்கு விருப்பமானதெனும் இடத்தினை பிடித்தது. ஸ்வீட்டாகவும், க்ரன்ச்சியாகவும், தனித்துவமான சேர்வையும் என இந்த ஒனியன் ரிங்ஸ் முழுமையானதாகவும் சிறப்பான சுவையுடனும் இருந்தது. நாங்கள் இது வரை சுவைத்த ஒனியன் ரிங்ஸ் அதிகமாக சமைக்கப்பட்டதாகவும் அல்லது போதுமானளவு சமைக்கப்படாதவையாகவுமே இருந்துள்ளன ஆனால் இந்த ஒனியன் ரிங்ஸ் வெளியில் க்ரிப்ஸியாக இருந்ததோடு முழுமையான ஒன்றாக இருந்தது.
பிரதானமானவை
நாங்கள் இவர்களது பத்து பர்கர் வகைகளையும் இரண்டு ஹொட் டோக்குகளையும் முயற்சித்து ஒரு உணவின் சொர்க்கத்திற்கே சென்று வந்தோம். புதுப்பிக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் சிறந்த சேர்க்கைகள் என சுகர் பர்கர் அனைவருக்கும் ஏதோ ஒன்றை தன்னகத்தே வைத்துள்ளது.
ஸ்மோக்கி ப்ளுஸ் (மாட்டிறைச்சி) – ரூபாய் 900
இதில் இருந்த திக்கான மாட்டிறைச்சி பெட்டியானது சுவையாகவும் மீ்ட்டியாகவும் ஜீஸியாகவும் இருந்தது. இது ஸ்மோக்கி பர்பிக்யூ சாஸ் சேர்க்கப்பட்டதோடு பெக்கனால் டாப்பிங் செய்யப்பட்டிருந்தது. இத்தோடு தக்காளி, வெங்காயம் மற்றும் சலாதோடு மொறு மொறுப்பான தன்மையினை சேர்க்கக் கூடிய கூறுகளும் என முழுமைப்படுத்தப் பட்டிருந்தது. இது பர்பிக்யூவினை அதிகம் விரும்புபவர்களுக்கு உகந்த தேர்வாக இருக்கும்.
நியூ யோர்க்கர் – ரூபாய் 800
இதில் பெப்பரோனி, மொசரல்லா, சௌடிட் வெங்காயம், மரினரா சாஸ் மற்றும் காலான் என உள்ளடங்கிய தனித்துவமான ஒரு ப்ளேவராக இது இருந்தது. இந்த பர்கர் ஏதோ இதனுள் பிட்சா இருப்பது போன்ற உணர்வினை தந்தது. நான் இதில் மேலதிகமான மொசரல்லா மற்றம் மெரினா சேர்த்து சாஸுடன் சாப்பிட்டது நிஜமாகவே நன்றாக இருந்தது. நீங்கள் உங்கள் பர்கரில் காலான் இருப்பதை விரும்புவீர்களானால் இந்த பர்கர் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இதன் ஒவ்வொரு கடியிலும் காலான் மற்றும் பெப்பரோனியோடு சேர்ந்த சௌட்டி வெங்காயம் சிறப்பான ஒரு அனுபவத்தை பெற்றுத் தரக் கூடியது.
க்ளப் ட்ரொபிகனா – ரூபாய் 900
இந்த க்ளப் ட்ரொபிகனா பர்கரினுள் க்ரில் செய்யப்பட்ட அன்னாசித் துண்டுகள் வைக்கப்படுகின்றன. நீங்கள் இதனை முயற்சிக்காது ஒதுக்கி விட வேண்டாம். க்ரில் செய்யப்பட்ட அன்னாசி பர்கரில் இனிப்பான தன்மையினை சேர்ப்பதோடு காரமான ஐயோலி சாஸுடன் சிறப்பாக சேர்கிறது. இதன் மேலே சேர்க்கப்பட்டிருந்த பெகோன் உப்பு தன்மையினை தருவதோடு இதிலிருந்த மாட்டிறைச்சி பெட்டியானது மென்மையானதாகவும் ஜீஸியானதாகவும் இருந்தது. இது ஒரு ட்ரொபிகல் சைட்டில் இருக்கின்ற உணர்வினை தருகிறது.
த க்ளாசிக் – ரூபாய் 650
இந்த பர்கரில் அனைத்தும் இருந்தது. இதன் சிக்கன் பெட்டியானது திக்காகவும் ஜீஸியாகவும் நல்ல ப்ளேவருடனும் இருந்தது. முழுமையான ஒரு சுவையினை தரக்கூடிய வகையில் வெளியே கெரமலைஸும் உள்ளே க்ரில் சுவையினை தரக்கூடிய பெட்டியும் என காணப்பட்டது. சார்கார்ட், கெர்கின்ஸ், கெட்சப் மற்றும் மஸ்டர்ட் ஆகியவற்றை கொண்டு டொப்பிங் செய்யப்பட்டுள்ளது. ஒரு தொகை கூறுகள் இனிப்பிற்காக சேர்க்கப்பட்டுள்ளது. மிகையான தன்மையில்லாதவாறு ப்ன்க் மற்றும் பொல்ட்னஸ் இந்த பர்கரில் உள்ளது.
மச்சோ நச்சோ – ரூபாய் 850
இந்த பர்கர் எங்களுடைய மனங்களை அவ்வளவாக கவரவில்லை. இதிலிருந்த நச்சோ டொப்பிங்ஸான சல்ஸா, ஒலிவ்ஸ், பிக்கில்ட் ஜலபெனோஸ், சீஸ் மற்றும் டொர்டில்லா சிப்ஸின் கொம்பினேஷன் அனைவருக்கும் பொருந்தாது. டொர்ட்டில்லா சிப்ஸ் தனியாக சுவைக்க சிறந்தது ஆனால் பர்கருடன் சுவைக்கும் போது அது ஒரு மோசமான அனுபவத்தை கொடுத்தது. இந்த பர்கரின் கொம்பினேஷன் எங்களுக்கு பெரிதாக பிடிக்கவில்லை. அனைவரும் சுவைக்க கூடிய வகையில் புதுப்பிக்கப்பட்ட சேர்வைகளுடன் வெகு விரைவில் மாற்றம் செய்வார்கள் என நம்புகிறோம்.
எக்ஸோடிக் லெம்ப் – ரூபாய் 1350
இதிலிருந்த லெம்ப் பெட்டியானது மற்றைய எல்லாவற்றையும் விட தனித்து நின்றது. இதிலிருந்த க்யூமின் மற்றும் கொரியன்டர் மற்றும் லெம்ப் அனைத்தும் சேர்ந்து மென்மையாகவும் ஜீஸியாகவும் இருந்தமை உண்மையான மெடிடெரனியன் உணர்வினை தந்தது. இதில் எதுவுமே மிகையாக இருக்கவில்லை. இதிலிருந்த பெட்டியானது 90% சதவீதம் லெம்புடன் சில வெங்காயம், கரட் மற்றும் மசாலா சேர்வைகள் என சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ட்ஸாட்ஸிக் எனப்படும் யோகர்ட் உடன் வெள்ளரிக்காய் மற்றும் ஹர்ப் சாஸ் கொண்டு தயாரிக்கப்பட்டமை கொண்டு டொப்பிங் செய்யப்பட்டமை இன்னும் பிரமாதமாக இருந்தது.
ஹிப்பி க்ரெப் – ரூபாய் 1100
இந்த பர்கரில் நண்டு கேக்கானது அதாவது நண்டு பெட்டியானது காரமான சேர்வைகளினால் டொப்பிங் செய்யப்பட்டு ப்ரஷ்ஷாகவும் டேங்கி ஸ்லௌவாகவும் என வித்தியாசமானதாக கேட்பதிற்கு இருந்தாலும் இதன் சுவை அற்புதமாக இருந்தது. நீங்கள் ஒரு கடலுணவு பிரியராக இருந்தால் கண்டிப்பாக இது ஒரு சிறந்த தேர்வாகவும். மற்றைய நண்டு பெட்டிகளானது 60% உருளைக்கிழங்கு மற்றும் பிற சேர்வைகளே காணப்படும் ஆனால் இங்கு உள்ள நண்டு பெட்டியானது முழுதும் நண்டின் தசைகளால் தயாரிக்கப்பட்டு சுவையாகவும் ஜீஸியாகவும் இருந்தது. அதே சமயம் வெளியில் க்ரிஸ்ப்பியாகவும் காணப்பட்டது. இதிலிருந்த கஜுன் சாஸ் அனைத்திலும் ஒரு வகையான ஸ்மோக்கினஸ் சேர்ப்பதோடு காரத்துடன் நன்றாக சேர்ந்தது. அதே சமயம் இந்த பர்கரில் புதிய தன்மையும் மேலதிகமான க்ரன்ச்சியான தன்மையும் சேர்த்தது.
வெஜி ஐ அம் – ரூபாய் 550
உண்மையில் சிறந்த ஒரு சைவ பர்கர் இது தான். இது வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் இருந்தது. இதன் பெட்டியில் மரக்கறிகளின் கலவையினை காணக்கூடியதாக இருந்தது. நாட்டில் பொதுவாக காணப்படும் இந்திய உருளைக் கிழங்கு பெட்டி மற்றும் ஃபலஃபல் ஆகியவற்றிலிருந்து விலகி தனித்து நின்றது. இதில் ஸவீட்டான க்ரில்ட் வெங்காயம் மற்றும் புதிய தக்காளி, லட்யூஸ் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளமை பர்கரை புதியதாக காட்சிப்படுத்தியது.
ப்ரிஸ்க்கி பர்ட் – ரூபாய் 850
நாஷ்வில் சிக்கனை முன்னோடியாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பர்கரிலுள்ள சிக்கள் உள்ளே ஜீஸியான தன்மையையும் பர்கரின் வெளியே மொறுமொறுப்பாகவும் இருந்தது. இதிலிருந்த ஸ்மோக்கியான சூடு உங்கள் நாவிற்கு பொருத்தமானதாக இருக்கும். இதிலுள்ள ஸ்ரிரச்சா மயோ காரத்தினையும் டேங்கியானது க்றீமியான தன்மையினையும் பர்கரில் சேர்க்கிறது. அத்தோடு புதிய லட்யூஸ் மற்றும் பிக்கிள்ஸ் பர்கரினை முழுமைப்படுத்துகிறது.
த பிக் டேடி – ரூபாய் 1250
இதன் பெயரிற்கு ஏற்றவாறே இந்த பர்கரும் இருந்தது. இது நிஜமாகவே அற்புதமானது. நீங்கள் அதிகம் சாப்பிடுபவராக இருந்தால் இது உங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். எங்களுக்கு பரிமாறப்பட்டதில் ஒரு சிக்கன் பெட்டி மற்றும் மாட்டிறைச்சி பெட்டி இருந்தது. இதில் மற்றையவற்றில் உள்ளது போல் பிக்கிள், தக்காளி, லட்யூஸ் மற்றும் வெங்காயம் காணப்பட்டதோடு மேலதிகமாக பெகோன் மற்றும் பொறித்த முட்டையும் இருந்தது.
சுகர் டோக் – ரூபாய் 550
நகரத்திலுள்ள மற்றைய ஹொட் டோக்கிலிருந்து இந்த ஹொட் டோக் தனித்திருந்தது. சார்க்ராட் முதல் மஸ்டர்ட் வரை என அனைத்தும் சேர்ந்த ஒரு நல்ல ப்ளேவரை இந்த ஹொட் டோக் கொண்டிருந்தது. இது நிஜமாகவே பெரிதாகவும் முழுமையானதாகவும் இருந்ததோடு ஒவ்வொரு பைட்டிலும் சிறப்பான ஒரு சுவையினையும் திருப்தியினையும் உணர முடிந்தது.
மன்ஹடன் டோக் – ரூபாய் 550
இந்த ஹொட் டோக் சீஸ், மஸ்டர்ட், கெட்சப், கெரமலைஸ்ட் வெங்காயம் மற்றும் பிக்கிள்ஸ் என முழுமைப்படுத்தப் பட்டிருந்தது. இது பிரபலமான மன்ஹடன் ஸ்டைல் ஹொட் டோக்கின் மற்றைய ஒரு வர்ஷனாக பிரதிபலிக்கிறது. இதிலுள்ள இனிப்பான கெரமலைஸ்ட் வெங்காயம் மற்றும் கெட்சப் ஆகியன மஸ்டர் மற்றும் பிக்கிள்ஸுடன் இணைந்து சிறப்பான ஒரு சுவையினை பெலன்ஸ் செய்ய உதவுகிறது.
பொதுவாக ‘வேலுப்பிள்ளை’ என்றாலே எமது சிந்தனைகள் வேறொரு நபர் நிமிர்த்தம் செல்வது சாதாரணம். ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் நல்வாழ்விற்காகவும் உண்மையாகவே குரல் கொடுத்து அதில் வெற்றியும் கண்ட ‘தந்தை செல்வா’ எனத் தமிழ் – சிங்கள மக்கள் இரு தரப்பினரிடமும் நன்மதிப்பை வென்ற S. J. வேலுப்பிள்ளை செல்வநாயகம் தொடர்பான பார்வை இதோ.
இருள் படிந்த ஈழத்து வானில் உதய சூரியனாய் ஒளி வழங்கிய தந்தை செல்வா அவர்கள் மலேசியா நாட்டில் இல்போ என்ற நகரில் 1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட வேலுப்பிள்ளை தம்பதியினருக்குப் பிறந்தார். மூன்று புத்திரர்களையும் ஓர் தங்கையையும் கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளையாக விளங்கிய செல்வநாயகம் அவர்கள், சிறுவயதிலேயே மலேசியா நாட்டில் விளங்கிய அரச குடும்ப சிறார்களுக்கும், செல்வந்த குடும்பத்தைச் சார்ந்த சிறார்களுக்கும் மட்டுமே கல்வி என்ற அடக்கு முறைக்குப் பலியானார். அதனைத் தொடர்ந்து 4 வயது பாலகனாக இலங்கை வந்த செல்வநாயகம் அவர்கள், ஆரம்பக் கல்வியை தெல்லிபலை அமெரிக்க மிஷனரி கல்லூரியிலும் யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரியிலும் பயின்றார். உயர்தர கல்வி நிமித்தம் தென் இலங்கை நோக்கிப் பயணித்த இவர் கல்கிஸ்ஸ புனித பரிதோமாவின் கல்லூரியில் தனது இறுதி பாடசாலை கல்வியைப் பூர்த்தி செய்தார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் 1918 ஆண்டு தனது விஞ்ஞான தொடர்பிலான பட்டப்படிப்பை முடித்த பின் கல்கிஸ்ஸை பரிதோமாவின் கல்லூரியிலேயே ஆசிரியராக பணிபுரிந்தார். தனது சுகயீனமுற்றிருந்த சகோதரனைப் பார்க்கும் முகமாக விண்ணப்பிக்கப்பட்ட விடுமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில் தன் உரிமை மீண்டும் பறிக்கப்பட்ட களைப்பில், தான் கடமையாற்றிய ஆசிரியர் தொழிலையே இராஜினாமா செய்து விட்டு சகோதரரைப் பார்க்கச் சென்றார். பின்னர் கொழும்பு வெஸ்லி கல்லூரியில் பிரதான விஞ்ஞான ஆசிரியராக பணியை ஆரம்பித்த இவர், பிற்காலத்தில் எவ்வாறு தமிழ் பேசும் மக்களின் தன்நிகரிலா தலைவன் என்று போற்றப்பட்டாரோ அவ்வாறே நல்லாசிரியர் என்ற புகழுக்கும் சொந்தக்காரர் ஆனார். இவர் ஆசிரியராக உலா வந்த காலப்பகுதியில் வெஸ்லி கல்லூரி மாணவர்கள் இவரின் நடை, உடை, பாவனையைப் பின்பற்றியது மட்டுமல்லாது அவரைப்போலவே நடு உச்சியில் தலை வாரும் பழக்கத்தைக் கடைப்பிடித்தனர் என்பது நெகிழ்வூட்டும் விடயமாகும்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தனது கற்பித்தல் தொழிலிலிருந்த நிலையிலேயே சட்டக்கல்லூரிக்குள் நுழைந்து, சிவில் சட்ட வல்லுநராக 1924 ஆம் ஆண்டு வெளியேறினார். அத்துறையிலும் முதிர்ச்சி பெற்ற வல்லுநராக விளங்கிய அவருக்காக உச்சநீதிமன்றத்தில் கடமையாற்றும் பொறுப்பு இரு தடவைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில் சிரேஷ்ட சட்டத்தரணியாக வலம் வந்த இவர், பிரதம நீதியரசர் பதவி வகித்த நெவில் சமரகோண் மற்றும் சுப்பைய்யா சரவணந்தா ஆகிய நபர்கள் இவரது இளையவராக பணிபுரிந்தவர்கள் என்பதோடு, முன்னாள் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவின் தந்தையான எட்மண்ட் விக்ரமசிங்கவும் இவரது பாசறையில் பயிற்சி பெற்றவர்களில் ஒருவர் என்பதன் மூலம் அவரின் சட்ட மகிமை எந்த அளவு உச்சத்திலிருந்திருக்கும் என்பதை கணிக்கக் கூடியதாயிருக்கும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்கமுடியாத, தவிர்க்கமுடியாத மிகப்பெரும் அரசியல் ஆளுமையாக வலம் வந்து ஈழத்துக் காந்தி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்களுடன் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். வெறுமனே வடக்கு கிழக்கு தமிழ் மக்களை மாத்திரம் கருத்தில் கொள்ளாது, இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட மலையக மக்களையும், தமிழ் பேசும் முஸ்லிம் இனத்தவர்களையும் அவரது அரசியல் பாவையில் இணைத்துக்கொண்டு தனது தொண்டு அனைத்தையும் அவர்களோடு இணைந்து, அவர்களுக்காகவும் ஆற்றி வந்தார். ஆரம்பத்தில் கூட்டாட்சி மூலமாகவே இன அடக்குமுறைக்கு ஓர் தீர்வு காண முடியும் என வெகுவாக நம்பிய செல்வநாயகம் ஐயா, காலப்போக்கில் அவரது அரசியல் சகோதரனாகத் திகழ்ந்த ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவி, தமிழ் மக்களின் உரிமைக்கு மாற்றீடாக எப்போதும் கருதமுடியாது என்று வலியுறுத்தி, அவருடன் இருந்து விலகி இலங்கையின் முதலாவது இனத்துவக் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சியை ஸ்தாபித்தார். பல போராட்டங்கள் நிகழ்த்தியும் அதற்கான தீர்வு எட்டப்படாத நிலையில் களைப்புற்ற செல்வநாயகம் அவர்கள், தனி நாடு என்ற கோட்பாட்டை வழிமொழிந்தார். ஆரம்ப காலத்தில் சமஷ்டி முறைமைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு மிகவும் குறைவாகவே காணப்பட்டதோடு அவரின் அரசியல் யூகங்கள் வீழ்வுறும் வண்ணமே இருந்தது. எனினும் 1956ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தனி சிங்கள சட்டத்தை எதிர்த்துப் பல சத்தியாகிரக போராட்டங்களை நடாத்தி, அன்றைய அதிபதியாக விளங்கிய பண்டாரநாயக்க அவர்களுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி தமிழ் மக்களின் உரிமைகளை ஓரளவுக்கு வென்றெடுத்தார். அதன் பின்னர் ஈழத்துத் தமிழர் வரலாற்றில் தன்னிகரில்லாத தலைவராகவும், ஈழத்துப் பெரியார் எனவும் அனைவராலும் போற்றப்பட்டார்.
“தமிழ் இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு கிறிஸ்தவர் தலைமை தாங்குவதா?” போன்ற இனவாத கேள்விகள், தான் பிரதிநிதித்துவப்படுத்திய இனத்திலேயே எழத் தொடங்கியதால் சற்று சோர்வுற்றாலும் தமிழ் மக்கள் அமைதியாகவும் தனது இடங்களில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஓர் சத்தியாகிரகியாக இறுதிவரை வாழ்ந்தார். அஹிம்சாவாதியான தந்தை செல்வாவின் வாழ்நாள் வெற்றியாக திகழும், செல்வா – பண்டா ஒப்பந்தமோ அல்லது செல்வா – டட்லி ஒப்பந்தங்கள் போன்ற ஒப்பந்தங்கள், அவருக்குப் பின் அமுல்படுத்தப்பட்டிருந்தால் கோடிக்கணக்கான பொருள் சேதங்களையோ, ஆயிரக்கணக்கான உயிர்ச் சேதங்களையோ அல்லது நாடு என்ற ரீதியில் 30 வருடம் பின் நோக்கி நகர்ந்ததைத் தவிர்த்து இருக்க முடியும் என்பதே பலரால் ஏற்றுக்கொள்ளமுடியாத உண்மையாகும். இவர் தனது 79 வயதில் ‘இனி கடவுள் தான் தமிழ் பேசும் மக்களைக் காப்பாற்றவேண்டும்’ என்று கூறி இறைவனடி சேர்ந்தார்.
உங்களுடைய முன்னால் காதலருடனான அனைத்து வகையான பிணைப்பினையும் முற்றிலும் துண்டித்து விட வேண்டும்.
இது முடிந்து விட்டது.
“இனி நண்பர்களாக இருப்போம்” என நீங்கள் உங்கள் முன்னால் காதலரிடம் கூறுவது உண்மையில் உங்களை நீங்களே மோசமான நிலைக்கு தள்ளுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கு சமம் என்றே கூற வேண்டும். நீங்கள் உண்மையாகவே ஒருவரை காதலித்திருந்தால் நிச்சயமாக உங்களால் அவருடன் நண்பராக இருக்க முடியாது. ஏன் உங்கள் இருவருக்கும் இடையிலிருந்த காதல் என்ற உறவு முற்றாக முறிந்திருந்தாலும் கூட நண்பராக தொடர்வது கடினமான விடயம் தான்.
இவ்வாறான மோசமான முடிவினை முன்னால் காதலர்கள் எடுக்க காரணம் தமக்குள்ளிருக்கும் பிரிவின் வலிக்கு மெல்ல மருந்திடவும் ஒருவருக்கு ஒருவர் அவர்களது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதனை தெரிந்து கொள்வதற்காகவும் தான்.
ஆனால், உண்மையில் நீங்கள் அந்த வலியிலிருந்து வெளியே வந்து முன்னோக்கிச் செல்ல விரும்பினால் அவர்களை சந்திப்பதை முற்றாக நிறுத்துங்கள். உங்களுடைய சமூக வலைத் தளங்களிலிருந்து அவர்களை நீக்கி ப்ளொக் செய்யுங்கள். உங்கள் இருவருக்கும் இடையில் பொதுவாக இருக்கும் நட்பு வட்டாரத்திடம் உங்களுடைய முன்னால் காதலர் பற்றிய எந்தவொரு தகவலையும் பரிமாற வேண்டாம் என கூறுங்கள்.
சில சமயங்களில் உங்கள் முன்னால் காதலருடன் வேலைப் பார்ப்பது, படிப்பது மற்றும் வேறு சில ஒன்றாக செய்ய வேண்டிய வேலைகள் இருப்பின் அவர்களுடனான உறவை முற்றாக துண்டிப்பது சற்று கடினம் தான். இதற்கு சிறந்த ஓர் வழி என்னவென்றால் நீங்கள் எந்த ஒரு விடயத்திற்காகவும் அவர்களை தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு அவர்களை புறக்கணியுங்கள். இவ்வாறு செய்வதன் நோக்கம் அவர்களை உங்கள் வாழ்விலிருந்து முழுதாக நீக்க வேண்டும் என்பது தான்.
2. நினைவுகளை அழியுங்கள்.
நீங்கள் இருவரும் காதலித்த போது பகிர்ந்துக் கொண்ட பரிசுகள், கார்ட்கள், கடிதங்கள், குறுஞ் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் என ஒன்று விடாமல் அனைத்தையும் அழித்து விடுங்கள்.
ஒரு வேளை நீங்கள் இருவரும் காதலித்தமைக்கான சாட்சிகள் பின்பு எப்போதாவது தேவைப்படும் என எண்ணினால் அவற்றை நீங்கள் அடிக்கடி நோட்டமிடாத எதாவது ஒரு இடத்திலோ, ஒன்லைன் எப்பிலோ அல்லது நண்பர்களிடம் கொடுத்தோ பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி அவற்றை பார்த்து பழைய நினைவுகளை நீங்கள் மீட்டிப் பார்க்காத படி உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ளுங்கள்.
3. காதல் காப்பாளர்களாக செயற்பட முனைபவர்களை தள்ளி வையுங்கள்.
உங்களது சில நண்பர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் உங்கள் இருவரையும் வலியில் வாடி துடிக்கும் நிலையில் பார்க்க முடியாத காரணத்தினால் உங்களை சேர்த்து வைப்பதற்கான காப்பாளராக மாறி விடுவார்கள். உங்கள் இருவரிடமும் “தங்கச்சி! அவன் நல்ல பையன்மா” மற்றும் “மச்சான் உனக்கு என்ன பைத்தியமா?” போன்ற வசனங்களை பேச தொடங்குவார்கள்.
அவர்களது அறிவுரைகள் உங்களுக்கு சிறப்பானது இல்லை என தெரிந்தால் அவர்கள் சொல்வதை கேட்ப்பதை நிறுத்தி அவர்களிடம் “இதில் குறுக்கிட வேண்டாம்” என தெளிவாக கூறுங்கள். இப்போது அவர்களுக்கு அது தூக்கி வாறி போடுவது போலிருந்தாலும் நாளடைவில் உண்மை நிலை என்ன என்பதை அவர்கள் தாமாக அறிவார்கள். ஒரு வேளை உங்கள் இருவருக்கும் பொதுவாக இருக்கும் நண்பர்களால் உங்களது உள ஆரோக்கியம் சிதைவுக்குள்ளாவதை நீங்கள் உணர்ந்தால் தயவு செய்து அவர்களுடனான உறவினை துண்டித்துக் கொள்ளுங்கள்.
4. தவிர்த்துக் கொள்ளுங்கள்.
சில நாட்களுக்கு,
நீங்கள் இருவரும் விரும்பி சென்ற இடங்களிற்கு போவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் இருவரும் திரும்ப திரும்ப விரும்பி பார்த்த திரைப்படங்களை பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
நினைவுகளை மீட்டெடுக்கக் கூடிய பாடல்களை கேட்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். (உலகில் ஆயிரம் பாடல்கள் உண்டு அதனால் பழைய பாடல்களை முற்றாக அழித்து விடுங்கள். உங்களால் அந்த பழைய பாடல்களையே அழிக்க முடியவில்லை என்றால் எவ்வாறு உங்களது முன்னால் காதலை எவ்வாறு உங்கள் மனதிலிருந்து அழிப்பீர்கள்? ஒரு விடயம் ஞாபகத்தில் இருக்கட்டும் எப்போதுமே ஒன்றை இடம் மாற்றுவதற்கென புதிய சிறப்பான விடயங்கள் உலகில் உண்டு. நான் சொன்னது பாடலை…)
உங்கள் முன்னால் காதலர் உபயோகித்த வாசணைத் திரவியங்களை வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
5. உங்களது முன்னால் காதலரை நோட்டமிடாதீர்கள்.
நீங்கள் அவர்களை யாருக்கும் தெரியாமல் பின் தொடர்வதாகட்டும், உங்கள் நண்பர்கள் மூலம் அவர்களை பற்றிய தகவல்களை கேட்ப்பதாகட்டும், அவர்களது சமூக வலைத் தளங்களை நோட்டமிடுவதாகட்டும் அல்லது அவர்களது வட்ஸ் அப் செயலியின் கடைசியாக வந்து சென்ற நேரத்தினை தேடுவதாகட்டும் இதில் எதாவது ஒரு செயலை நீங்கள் தொடர்ந்துக் கொண்டிருந்தாலும் தயவு செய்து நிறுத்துங்கள். ஒரு வேளை நீங்கள் இவ்வாறான செயல்களுக்கு பழக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அதனை முடிந்தளவு குறைத்துக் கொள்ள வேண்டிய நேரமிது. அவர்களைப் பற்றி தேடுவதில் எந்த அளவிற்கு நீங்கள் அக்கறையற்றவர்களாக இருக்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் முற்றாக வெளி வந்து விடுவீர்கள்.
6. உங்களது உணர்ச்சிகளை பகுப்பாய்வு செய்யுங்கள்.
அதிகமாக சிந்திக்கிறீர்களா? நீங்கள் சில நாட்கள், வாரங்கள் ஏன் இன்னும் சொல்லப் போனால் சில மாதங்கள் கூட குழப்பத்தில் இருக்க கூடும். அவ்வளவு சீக்கிரம் வெளி வர முடியாது தான் ஆனால் சரியான முயற்சிகளை செய்வதன் மூலம் கண்டிப்பாக அவற்றை கடந்து வர முடியும். இவ்வுலகில் ஆயிரம் கணக்கானவர்கள் இது போன்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு அதன் பின் அவற்றை அழகாக கடந்து வந்தவர்கள் தான். உங்களாலும் முடியும் ஆனால் முதலில் நன்றாக மனம் விட்டு அழுங்கள் அதன் பின் உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் உங்கள் இன்னலை பகிருங்கள்.
உங்களுடைய உணர்ச்சிகளை அடக்கி வைக்காதீர்கள். அதனால் எதுவும் நடக்க போவதில்லை ஆனால் நன்றாக அழுவதன் மூலம் உங்களுடைய மனதிலுள்ள பாரத்தினை குறைத்துக் கொள்ள முடியும். அதற்கு பின் உங்களுடைய முன்னால் காதலர் உங்களுக்கு வேண்டுமா? இல்லை இதிலிருந்து வெளி வந்து முன்னோக்கிச் செல்லப் போகிறீர்களா? என்ற இரண்டில் ஒன்றை முடிவு செய்யுங்கள். அதன் பின் தான் உங்களை நீங்களே சரி செய்வதற்கான வேலைகளில் இறங்க முடியும்.
உங்களுக்குள் உள்ள உணர்ச்சியினை வகைப்படுத்தி கண்டறியுங்கள் – காதலில் ஏற்பட்ட பிரிவினால் உருவான கொந்தளிப்பா? உங்களுடைய எதிர்காலம் பற்றிய பயமா? அல்லது உங்களுக்கு ஏற்பட்ட துரோகத்தினால் துளிர் விட்ட கோபமா? இவற்றுள் எது என்பதை முதலில் பிரித்து கண்டறியுங்கள். அப்போது தான் உங்களுக்குள் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களிலிருந்து வெளிவர முடியும்.
7. மாற்றங்கள்! மாற்றங்கள்! மாற்றங்கள்!
உங்களுடைய தற்போதைய நிலையினை மறு மதிப்பீடு செய்துப் பாருங்கள். உங்களுடைய காதல் உறவு முறிந்துப் போனமை ஏதோ உங்கள் முழு உலகமுமே முடிந்து விட்டது போன்றிருக்கும் ஆனால் அது உண்மையல்லவே. உங்களது வாழ்வின் மற்றைய விடயங்களை மேம்படுத்துவதன் ஊடாக உங்களால் இந்நிலையை மாற்றிக் கொள்ள முடியும்.
மனம் – எல்லாம் போய் விட்டது என கூறினாலும் அனைத்துமே மனதில் இருக்கும். உங்களது பலவீனம் என்ன என்பதனை கண்டறியுங்கள். உங்களுக்கு முடிவெடுப்பது பயத்தினை உண்டாக்குகிறதா? நீங்கள் நம்பிக்கையற்றவராக உள்ளீர்களா? அப்படியென்றால் நல்ல புத்தகங்களை வாசியுங்கள், ஊக்கமளிக்க கூடிய காணொளிகளை பாருங்கள் மற்றும் இதே சூழ்நிலைகளை கடந்து வந்தவர்களுடன் கலந்துரையாடி அவர்களை பலப்படுத்திய காரணிகளை பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்.
உடல் – இது உங்களை நீங்களே செதுக்கி கொள்வதற்கான நேரம். நல்ல ஆரோக்கியமான உணவு கட்டுப்பாட்டினை மேற்கொள்ளுங்கள், உடலை ஆரோக்கியமாக பேணுவதற்கான சில பயிற்சிகளில் ஈடுபடுங்கள். உங்களது புறத்தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் காதலின் முறிவால் உங்களுக்குள் குறைந்துப் போன தன்நம்பிக்கையினை அதிகரிக்கும். உங்களது முன்னால் காதலரை பற்றி வீட்டினுள்ளிருந்து சிந்திப்பதை விடுத்து வெளியே சென்று இப்போது பரபரப்பாக பேசப்படும் ஸ்டைல்கள் பற்றி தேடுங்கள்.
சமூகம் – நீங்கள் நினைப்பதை விட உலகில் பார்ப்பதற்கு எவ்வளவோ உண்டு. புதிய மக்களை சந்தியுங்கள். புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்களன. உங்களது சிறிய உலகத்தை விட்டு வெளியே வந்து புதிய விடயங்களை பற்றி அறிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் கடந்து வந்த அந்த ரணங்கள் மீண்டும் புதிய நபர்களை நம்ப முடியாத ஓர் மனநிலைக்கு உங்களை தள்ளக் கூடும் ஆனாலும் உங்களது முன்னால் காதலரைக் கொண்டு அனைவரையும் ஒட்டு மொத்தமாக கணிப்பது என்பது தவறான விடயம். நம்பிக்கை என்ற ஒன்று இல்லாமல் மற்றவர்களுடன் இணைவது என்பது கடினம்.
8. உள பயிற்சி.
எதிர்மறையான சிந்தனைகளை வளர்ப்பதை நிறுத்துங்கள். நிகழ்ந்த கசப்பான அந்த தருணத்தை எண்ணி ஏன்? எதற்கு? என்ற கேள்விகளுள் மூழ்குவதை தவிருங்கள். இவை உங்களை மேலும் மேலும் துன்ப சக்கரத்தில் சுழல விடும். உங்களது மனமும் எதிர்மறையான எண்ணங்களில் மூழ்குவதை சௌகரியமாக உணரத் தொடங்கும் அதனால் அவற்றை விரட்டி அடியுங்கள். உங்களுடைய மனதினை நேர்மறையான எண்ணங்கள் துளிர் விடும் இடமாக மாற்றுவதற்கான பயிற்சிகளை அளியுங்கள். சில சமயம் இது பெறும் சவாலாக மாறலாம் எனவே அவற்றை சிறப்பான முறையில் சொல்லித் தரக்கூடியவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
இன்றும் கவுன்சிலிங் மற்றும் தெரபி போன்ற சொற்களுக்கு இலங்கையர்கள் அஞ்சுகிறார்கள். பிறர் என்ன நினைப்பார்களோ என்ற அச்சத்தினால் ஏன் உங்களை நீங்களே சிதைத்துக் கொள்ளப் போகிறீர்கள். உள ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டறியாது இருப்பது தான் தவறே தவிர கண்டறிவது அல்லவே. எது எவ்வாறாக இருப்பினும் அது உங்கள் தனிப்பட்ட முடிவு.
ஆசியாவில் வாழும் ஆண்கள் “இது மிகவும் கடினமாக உள்ளது” மற்றும் ஒரு பெண்ணின் நினைவுகளிலிருந்து வெளி வருவதற்காக சிகிச்சையினை பெற்று வருவது என்பதை பிறர் அறியும் பட்சத்தில் கேலியாக சிரிக்க தொடங்குகின்றனர். அவர்களது கையில் மதுபானம் கொடுத்து குடித்து மறக்குமாரு அறிவுரை வழங்கப்படுகிறது. பிறர் சிரிப்பார்கள் கேலி பேசுவார்கள் என்பதற்காக எல்லாம் உங்களுக்கு சரியானவற்றை செய்வதை நிறுத்தாதீர்கள். உங்களுக்கு இது சரியான முடிவு என தெரிந்தால் அதனை நோக்கிச் செல்லுங்கள். இங்கு எவருமே “ஐயோ பாவம்” என பரிதாப மழை பொழிவதை தாண்டி எதுவும் செய்யப் போவதில்லை. அதனால் அந்த பரிதாப நிலையிலிருந்து உங்களை நீங்களே வெளியே கொண்டு வாருங்கள்.
9. ஒன்றை விட்டு இன்னொன்றிற்கு தாவ வேண்டாம்.
ஒரு உறவு முறிந்தவுடன் இன்னொரு உறவுக்குள் தாவ வேண்டாம். உங்களது காயங்கள் ஆறுவதற்கு நேரம் தேவை. உங்களை நீங்களே பராமறித்து மெருகூட்டுவதற்கான நேரம் தேவை. உடனே இன்னொரு உறவுக்குள் தாவிக் குதிப்பது நிரந்தர தீர்வாகாது. அத்தோடு அந்த உறவு தற்காலிக வெற்றிட நிரப்புதலாகவே இருக்குமே தவிர நிலையானதாக இருக்காது. இது மேலும் உங்களை வேதனைப்படுத்தி வருத்தும் எனவே புதிதாக இன்னொரு உறவுக்குள் போகும் முன் பழைய காயங்களிலிருந்து முழுதாக வெளியே வாருங்கள்.
10. புதிய முன்னுரிமைகள்.
உங்களுடைய நேரத்தினை புதிய பொழுது போக்கு, செயல்கள் மற்றும் உங்களுடைய பேஷனிற்காக ஒதுக்குங்கள். உங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக நேரத்தினை செலவிடுங்கள். உங்களை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் முன்னோக்கி நகர்த்திச் செல்லுங்கள். சுயமாக எதாவது செய்யுங்கள். உங்களது வழக்கம் மற்றும் விதிகளை தகர்த்தெறியுங்கள். இது உங்களது வாழ்வை முன்பிருந்ததை விட சுவாரஸ்யமானதாக மாற்றும். நீங்களும் உங்களது வாழ்வு எவ்வளவு அழகானது என்பதை உணர்வீர்கள்.
வாழ்க்கை அழகானது! நீங்கள் எப்போது மீண்டும் சந்தோஷமான மனநிலைக்கு திரும்புவீர்கள் என என்னால் குறிப்பிட்டு கூற முடியாது. சில நாட்களாகலாம், சில வாரங்களாகலாம், சில மாதங்களாகலாம், சில வருடங்களாகலாம் ஏன் அதற்கு மேலும் ஆகலாம் ஆனால் நீங்கள் விரைவில் சந்தோஷமான மனநிலைக்கு திரும்பி விடுவீர்கள்.